Jump to content

Search the Community

Showing results for tags 'கடற்படை'.

  • Search By Tags

    Type tags separated by commas.
  • Search By Author

Content Type


Forums

  • யாழ் இனிது [வருக வருக]
    • யாழ் அரிச்சுவடி
    • யாழ் முரசம்
    • யாழ் உறவோசை
  • செம்பாலை [செய்திக்களம்]
    • ஊர்ப் புதினம்
    • உலக நடப்பு
    • நிகழ்வும் அகழ்வும்
    • தமிழகச் செய்திகள்
    • அயலகச் செய்திகள்
    • அரசியல் அலசல்
    • செய்தி திரட்டி
  • படுமலைபாலை [தமிழ்க்களம்]
    • துளித் துளியாய்
    • எங்கள் மண்
    • வாழும் புலம்
    • பொங்கு தமிழ்
    • தமிழும் நயமும்
    • உறவாடும் ஊடகம்
    • மாவீரர் நினைவு
  • செவ்வழிப்பாலை [ஆக்கற்களம்]
    • இலக்கியமும் இசையும்
    • கவிதைப் பூங்காடு
    • கதை கதையாம்
    • வேரும் விழுதும்
    • தென்னங்கீற்று
    • நூற்றோட்டம்
    • கவிதைக் களம்
    • கதைக் களம்
  • அரும்பாலை [இளைப்பாறுங்களம்]
    • சமூகவலை உலகம்
    • வண்ணத் திரை
    • சிரிப்போம் சிறப்போம்
    • விளையாட்டுத் திடல்
    • இனிய பொழுது
  • கோடிப்பாலை [அறிவியற்களம்]
    • கருவிகள் வளாகம்
    • தகவல் வலை உலகம்
    • அறிவியல் தொழில்நுட்பம்
    • சுற்றமும் சூழலும்
  • விளரிப்பாலை [சிந்தனைக்களம்]
    • வாணிப உலகம்
    • மெய்யெனப் படுவது
    • சமூகச் சாளரம்
    • பேசாப் பொருள்
  • மேற்செம்பாலை [சிறப்புக்களம்]
    • நாவூற வாயூற
    • நலமோடு நாம் வாழ
    • நிகழ்தல் அறிதல்
    • வாழிய வாழியவே
    • துயர் பகிர்வோம்
    • தேடலும் தெளிவும்
  • யாழ் உறவுகள்
    • யாழ் 26 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 25 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 24 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 23 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 22 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 21 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 20 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 19 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் ஆடுகளம்
    • யாழ் திரைகடலோடி
    • யாழ் தரவிறக்கம்
  • யாழ் களஞ்சியம்
    • புதிய கருத்துக்கள்
    • முன்னைய களம் 1
    • முன்னைய களம் 2
    • COVID-19: Coronavirus - பாதுகாப்பு வழிமுறைகள் மற்றும் ஆலோசனைகள்
    • பெட்டகம்
  • ஒலிப்பதிவுகள்
  • Newsbot - Public club's Topics
  • தமிழரசு's வரவேற்பு
  • தமிழரசு's வயிறு குலுங்க சிரிக்க..
  • தமிழரசு's என்றும் கேட்க்கக்கூடிய பாடல்கள்
  • தமிழரசு's நாபயிற்சி
  • தமிழரசு's படித்ததில் பிடித்தது
  • தமிழரசு's மறக்க முடியாத காட்சி
  • தமிழரசு's பனங்காய்ப் பணியாரத்தால் தமிழருக்குள் என்ன நிகழ்ந்தது தெரியுமா?
  • தமிழ்நாடு குழுமம்'s குழுமம் வரவேற்பு
  • தமிழ்நாடு குழுமம்'s காணொளிகள்
  • தமிழ்நாடு குழுமம்'s கணணி
  • தமிழ்நாடு குழுமம்'s பாடல்கள்
  • தமிழ்நாடு குழுமம்'s கட்டமைப்பு
  • தமிழ்நாடு குழுமம்'s மீனாட்சி கோயில்
  • தமிழ்நாடு குழுமம்'s நினைவலைகள்
  • தமிழ்நாடு குழுமம்'s ரசித்தவை
  • தமிழ்நாடு குழுமம்'s தொழிற்நுட்பம்
  • தமிழ்நாடு குழுமம்'s செய்தி / துணுக்கு
  • தமிழ்நாடு குழுமம்'s நகைச்சு வை
  • தமிழ்நாடு குழுமம்'s புகைப்படங்கள்
  • தமிழ்நாடு குழுமம்'s நற்சிந்தனை
  • தமிழ்நாடு குழுமம்'s தமிழ்
  • தமிழ்நாடு குழுமம்'s சுற்றுலா
  • தமிழ்நாடு குழுமம்'s பேசும் படம்
  • தமிழ்நாடு குழுமம்'s வாழ்த்துக்கள்
  • தமிழ்நாடு குழுமம்'s ஒலிப்பேழை
  • தமிழ்நாடு குழுமம்'s கொரானா
  • தமிழ்நாடு குழுமம்'s விநோதம்
  • தமிழ்நாடு குழுமம்'s பரிச்சார்த்த முயற்சி
  • தமிழ்நாடு குழுமம்'s அஞ்சலிகள்
  • "இலையான்" அடிப்போர் சங்கம்.'s சங்கத்தின் திறப்பு விழா.
  • "இலையான்" அடிப்போர் சங்கம்.'s அந்தநாள், ஞாபகம் வந்ததே....!
  • வலைப்போக்கன் கிருபன்'s என்றும் இனிய பாடல்கள்
  • வலைப்போக்கன் கிருபன்'s உலக சினிமா
  • வலைப்போக்கன் கிருபன்'s புத்தக அலுமாரி
  • வலைப்போக்கன் கிருபன்'s பலதும் பத்தும்
  • வலைப்போக்கன் கிருபன்'s செயற்கை நுண்ணறிவு உருவாக்கி
  • Ahal Media Network's Topics

Calendars

  • நாட்காட்டி
  • மாவீரர் நினைவு

Blogs

  • மோகன்'s Blog
  • தூயவன்'s Blog
  • Mathan's Blog
  • seelan's Blog
  • கறுப்பி's Blog
  • lucky007's Blog
  • சந்தோஷ் பக்கங்கள்
  • தூயாவின் வலைப்பூ
  • vijivenki's Blog
  • sindi's Blog
  • சந்தியா's Blog
  • இரசிகை-இரசித்தவை
  • arunan reyjivnal's Blog
  • இலக்கியன்`s
  • PSIVARAJAKSM's Blog
  • blogs_blog_18
  • sujani's Blog
  • Iraivan's Blog
  • Thinava's Blog
  • குட்டியின் கோட்டை
  • வல்வை மைந்தன்
  • vishal's Blog
  • kural's Blog
  • KULAKADDAN's Blog
  • குறும்பன் வாழும் குகை
  • Thamilnitha's Blog
  • அடர் அவை :):):)
  • டுபுக்கு's Blog
  • வானவில்'s Blog
  • NASAMAPOVAN's Blog
  • சுட்டியின் பெட்டி இலக்கம் 1
  • vikadakavi's Blog
  • ravinthiran's Blog
  • Tamizhvaanam's Blog
  • hirusy
  • neervai baruki's Blog
  • இனியவள்'s Blog
  • senthu's Blog
  • tamil_gajen's Blog
  • சின்னப்பரின் பக்கம்
  • ADANKA THAMILAN's Blog
  • வல்வை சகாறாவின் இணையப்பெட்டி
  • Tamil Cine's Blog
  • harikalan's Blog
  • antony's Blog
  • mugiloli's Blog
  • Kavallur Kanmani's Blog
  • jeganco's Blog
  • Waren's Blog
  • "வா" சகி 's Blog
  • nishanthan's Blog
  • semmari's Blog
  • Akkaraayan's Blog
  • தமிழில் ஒரு சமையல் வலைப்பதிவு
  • தீபன்'s Blog
  • தமிழ் இளையோர் அமைப்பு
  • மாயன்'s Blog
  • Thumpalayan's Blog
  • mullaiyangan's Blog
  • NAMBY's Blog
  • பரதேசி's Blog
  • thamilkirukkan's Blog
  • Vakthaa.tv
  • colombotamil's Blog
  • மசாலா மசாலா
  • muththuran
  • கிருபா's Blog
  • நந்தவனம்
  • தமிழர் பூங்கா
  • TAMIL NEWS
  • dass
  • puthijavan's Blog
  • AtoZ Blog
  • Vani Mohan's Blog
  • mullaiiyangan's Blog
  • mullaiman's Blog
  • மல்லிகை வாசம்
  • karu's Blog
  • saromama's Blog
  • tamil92's Blog
  • athirvu
  • melbkamal's Blog
  • nedukkalapoovan's Blog
  • Loshan's Blog
  • ஜீவநதி
  • எல்லாளன்'s Blog
  • kanbro's Blog
  • nillamathy's Blog
  • Vimalendra's Blog
  • Narathar70's Blog
  • யாழ்நிலவன்'s Blog
  • நிரூஜாவின் வலைப்பதிவு
  • cyber's Blog
  • varnesh's Blog
  • yazh's Blog
  • MAHINDA RAJAPAKSA's Blog
  • விசரன்'s Blog
  • tamil paithiyam's Blog
  • TamilForce-1's Blog
  • பருத்தியன்
  • aklmg2008's Blog
  • newmank
  • ilankavi's Blog
  • இனியவன் கனடா's Blog
  • muthamil78
  • ரகசியா சுகி's Blog
  • tamileela tamilan's Blog
  • சுஜி's Blog
  • மசாலா மசாலா
  • Anthony's Blog
  • Gunda's Blog
  • izhaiyon's Blog
  • TamilEelamboy's Blog
  • sathia's Blog
  • லோமன்
  • kobi's Blog
  • kaalaan's Blog
  • sathiri's Blog
  • Voice Blog
  • தமிழ் செய்தி மையம் மும்பை
  • ஜீவா's Blog
  • தீபம்'s Blog
  • Iraivan's Blog
  • பிறேம்'s Blog
  • mullaikathir.blogspot.com
  • ஸ்ரீ பார்சி காங்கிரஸ் = ஸ்ரீ லங்கா = தமிழ் ஜெனோசைட்
  • sam.s' Blog
  • வாழ்ந்தால் உண்மையாய் வாழவேண்டும் இலலையேல் வாழதிருப்பதுமேல்
  • வாழ்ந்தால் உண்மையாய் வாழவேண்டும் இலலையேல் வாழதிருப்பதுமேல்
  • sam.s' Blog
  • தயா's Blog
  • தயா's Blog
  • ஏராழன்'s Blog
  • Small Point's Blog
  • Rudran's Blog
  • ulagathamilargale.blogpsot.com
  • ramathevan's Blog
  • Alternative's Blog
  • Alternative's Blog
  • அ…ஆ…புரிந்துவிட்டது…. கற்றது கைமண் அளவு…
  • ஜீவா's Blog
  • மொழி's Blog
  • cawthaman's Blog
  • ilankavi's Blog
  • ilankavi's Blog
  • கனடா போக்குவரத்து
  • வேலிகள் தொலைத்த ஒரு படலையின் கதை!
  • nirubhaa's Blog
  • nirubhaa's Blog
  • தமிழரசு's Blog
  • akathy's Blog
  • அறிவிலி's Blog
  • மல்லிகை வாசம்'s Blog
  • வல்வை சகாறா's Blog
  • விவசாயி இணையம்
  • அருள் மொழி இசைவழுதி's Blog
  • ஈழப்போரில் தமிழரால் பாவிக்கப்பட்டவை's படிமங்கள்
  • ஈழப்போரில் தமிழரால் பாவிக்கப்பட்டவை's ஆவணங்கள்
  • ஈழப்போரில் தமிழரால் பாவிக்கப்பட்டவை's சிறப்பு ஆவணங்கள்
  • ஈழப்போரில் தமிழரால் பாவிக்கப்பட்டவை's ஆவணக்கட்டுகள்
  • ஈழப்போரில் தமிழரால் பாவிக்கப்பட்டவை's திரட்டுகள்
  • Home Appliances Spot's Home Appliances

Find results in...

Find results that contain...


Date Created

  • Start

    End


Last Updated

  • Start

    End


Filter by number of...

Joined

  • Start

    End


Group


AIM


MSN


Website URL


ICQ


Yahoo


Jabber


Skype


Location


Interests

  1. 'நம் வரலாற்றை நாமே எழுதுவோம்' ------------------------ நோக்கம் & பொறுப்புத்துறப்பு: இதற்குள் பதிவிடப்பட்டுள்ள தகவல்கள் யாவும் ஈழத்தீவில் காலங்காலமாக சிங்களவரால் தமிழர்களுக்கு ஏற்படுத்தப்பட்டுவரும் இறந்தகால வரலாறு தொடர்பான சிக்கல்களுக்கு எதிர்கால தமிழீழ தலைமுறைகளும் முகங்கொடுக்கக் கூடாது என்பதற்காக அவர்கள் தமது வரலாற்றை அறிய அ கற்க வேண்டும் என்ற நன்னோக்கிலேயன்றி எந்நாட்டின் இறையாண்மைக்கும் குந்தகமோ பங்கமோ விளைவிப்பதற்காகவோ அல்லது பயங்கரவாத செயல்கள் என்று வரையறுக்கப்பட்ட செயல்களை அந்நாட்டில் தூண்டிவிடுவதற்காகவோ அன்று; குறிப்பாக பதிவிடுபவர் வாழும் நாடு சார்ந்து. இதை வாசிப்பதால் யாரேனும் அவ்வாறு தொழிற்படுவாராயின் அன்னாரிற்கும் பதிவுகள் மற்றும் பதிவிடுபவரிற்கும் எத்தொடர்பும் இல்லை என்பதை இதனால் உறுதியளிக்கிறேன். எழுதருகை: ஈழத்தமிழ் வலைத்தளங்களுக்கே உரித்தான படிமங்கள் மேல் தம் பெயரை எழுதும் மலத்திலும் கீழான செயலை செய்துவிடாதீர்கள், மலத்திலும் கீழானவர்களே. இவை உங்கள் வீட்டுச் சொத்தல்ல, தமிழீழத்தின் சொத்துக்களே! என்னிடம் இருக்கின்ற கடற்புலிகளின் நிழற்படங்கள் (Photos) & படிமங்கள் (Images) & திரைப்பிடிப்புகள் (screenshots) அத்துணையையும் இங்கே இணைத்துவிடுகிறேன். விரும்பியவர்கள் பயன்படுத்துங்கள்; சேமித்துக்கொள்ளுங்கள். கடற்புலிகளின் முதன்மைத் தாக்குதல் கடற்கலங்கள் பற்றித் தெரிந்தால் எனக்கும் அது பற்றிய தகவல் கொடுத்துதவுங்கள்... வெறும் கடற்கலப் பெயர் மட்டுமே எதிர்பார்கிறேன். வேறேதும் இல்லை. பெயர் தவிர அறிந்தோரிடம் நானேதும் யாசிக்கவில்லை. என்னைத் கொடர்பு கொள்ள யாழிலோ இல்லை கோராவிலோ(https://www.quora.com/profile/நன்னிச்-சோழன்-Nanni-Chozhan) அணுகுங்கள். நானெழுதிய வேவ் ரைடர் கலங்கள் தொடர்பான ஒரு ஆவணம் "பதிவிடப்பட்டிருக்கும் தகவலில் சரி தவறுகள் வரவேற்கப்படுகின்றன" புலிகள் காலத்து தமிழீழக் கடற்படையான கடற்புலிகளின் இலச்சினை:- இதே போன்று இன்னும் பல ஆவணங்களைக் காண கீழே சொடுக்கவும்:
  2. "தோற்றிடேல், மீறித் தோற்றிடினும் வரலாறின்றி மரியேல்!" -நன்னிச் சோழன் எழுதருகை(warning): இங்குள்ள செய்திகள் யார் மனதையும் புண்படுத்துவதற்காக எழுதப்படவில்லை. இவை தமிழினத்தின் வரலாற்றை ஆவணப்படுத்தும் முகமாகவே எழுதப்பட்டுள்ளன என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்…! ஓகஸ்ட் 29, 1995 அன்று 'ஐரிஸ் மோனா' பொறியில் சிக்கி புலிகளின் தகரிச் சூட்டில் தீப்பிடித்த டோறாவை அன்று காலையில் கைப்பற்றி கரைக்கு கட்டியிழுத்துவரும் கடற்புலிகளின் வோட்டர் ஜெட் படகு "... வல்வையில் முதன்முதல் எடித்தாராவை வல்லவர் கடற்புலி இடித்தார் இவை வண்டியில் போனது சக்கையடி, வந்த பகைப்படை புக்கையடி!" --> போர்க்கால இலக்கியப் பாடல் இவை தமிழீழத் தேசப்பாடகர்களில் ஒருவரான அமரர் எஸ்.ஜி. சாந்தன் அவர்களால் கரும்புலிகள் பற்றிப் பாடப்பட்ட போரிலக்கியப் பாடலொன்றின் வரிகளின் நடுவிலுள்ள கடற்புலிகளால் மேற்கொள்ளப்பட்ட முதலாவது கடற்கரும்புலித் தாக்குதலையும் சிங்களக் கடற்படையின் கலமொன்று முதன்முதலில் சேதமானதையும் குறித்த வரிகளாகும். கடற்புலிகளால் 1990 ஆம் ஆண்டு தொட்டு சிங்களக் கடற்படையின் பல்வேறு கடற்கலங்கள் கைப்பற்றப்பட்டும் சேதமாக்கப்பட்டும் மூழ்கடிக்கப்பட்டும் வந்தன என்பது பலரும் அறிந்த ஒன்று. இத்திரட்டான ஆவணத்தில் தமிழீழ விடுதலைக்காக நடந்த ஈழப்போரின் காலத்தில் தமிழீழக் கடற்பரப்பிலும் சிறிலங்காக் கடற்பரப்பிலும் சிங்களக் கடற்படையுடன் தமிழீழ நடைமுறையரசின் கடற்படையான கடற்புலிகள் மிண்டிய போது பகைவர் தரப்பில் சேதப்பட்ட, மூழ்கடிக்கப்பட்ட மற்றும் அவர்களிடமிருந்து கடற்புலிகளால் கைப்பற்றப்பட்ட கடற்கலங்கள் பற்றியும் மோதல்களின் நிகழ்வு விரிப்பும் அதனால் இரு அடிபாட்டுக் கன்னைகளின் ஆளணியினரில் ஏற்பட்ட காயங்கள் மற்றும் உயிரிழப்புகள் ஆகியவற்றையும் ஆவணப்படுத்தியிருக்கிறேன், தமிழர் தரப்புத் தகவல்களாக. இவ்வாவணத்தில் 1991ம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 19ம் நாள் வரை, அதாவது “கடற்புறா” அணி “விடுதலைப்புலிகளின் கடற்புலிகள்” என்ற பெயரோடு தமிழீழக் கடற்படையாகப் பரிணாமம் பெற்றது வரை (கடற்புலிகள் மகளிர் பிரிவு 1992.03.01 அன்று தோற்றம் பெற்றது), கடலில் நடைபெற்ற சமர்கள் எல்லாம் கடற்புறா என்ற பெயரின் கீழ் பதிவிடப்பட்டுள்ளன. 'கடற்புலிகள்' என்ற பிடாரச்சொல்லானது 1986 நவம்பரிற்கு முன்னரே பாவனையிலிருந்தது குறிப்பிடத்தக்கது (நவம்பர், குரல் 11, விடுதலைப்புலிகள் இதழ்).. சிறிலங்காவின் வான்படையிடமிருந்த மூன்று அவ்ரோ வழங்கல் வானூர்திகளில் இரண்டு 1995 ஆம் ஆண்டு ஏப்பிரல் 28 மற்றும் 29ம் திகதிகளில் அடுத்தடுத்து தொடர்ச்சியாக சுட்டு வீழ்த்தப்பட்டன. இதனால் யாழில் வன்வளைப்பிற்காக நிலைகொண்டுள்ள சிறிலங்கா படைத்துறைக்கு வான்வழி வழங்கல் செய்யும் திறன் வெகுவாகக் குறைக்கப்பட்டது. இந்த அடியால் யாழிற்கு வான்வழி வழங்கல் இனிமேல் நடைபெறாது என்று அப்போதைய சிறிலங்கா அதிபர் சந்திரிக்கா அம்மையார் தலைமையிலான அரசு அறிவிப்பு வெளியிட்டது. இவ்வான்வழி வழங்கல் பாதை நிறுத்தப்பட்டதன் விளைவாக யாழ்ப்பாணத்திற்கான சிறிலங்காவின் வழங்கல் பாதையானது கடல் வழியாகவே மேற்கொள்ளப்பட்டு வந்தது. கடலில் மக்களின் பயன்பாட்டிற்கும் இடருதவிப் பொருட்களைக் கொணர்வதற்குமென யாழ் மாவட்ட அரச அதிபரால் அமர்த்தப்பட்ட கப்பல்கள் எல்லாம் படையினரால் கையகப்படுத்தப்பட்டு அவற்றில் இடருதவிப்பொருட்கள் என்ற பெயரில் படைக்கலன்களும் போர்த்தளவாடங்களும் யாழிற்கு கொணர்ப்படுவது வாடிக்கையானது (உதயன்: 24/10/1995). ஆகையால் 1996 ஆம் ஆண்டு விடுதலைப்புலிகளின் மத்திய குழு உறுப்பினர்களில் ஒருவரான லோரன்ஸ் திலகர் அவர்கள், சிறிலங்கா படைத்துறையின் வழங்கல் பாதையை சிறிலங்காவின் நிலப்பரப்பிற்கு உள்ளேயும் வெளியேயும் புலிகள் குறிவைப்பார்கள் என்று பறைந்தார் (தமிழ்நெற்: Tigers target sea bridge, 11/07/1997). மேலும், "தமிழ் ஆட்புல கடற்பரப்பில் - வெளிநாட்டிற்குச் சொந்தமான அல்லது மறுவளமானது - சிறிலங்கா படைத்துறையுடன் தொடர்புடைய செயற்பாடுகளில் மிண்டும் எந்தவொரு கடற்கலமும் முறையான படைத்துறை இலக்குகளாக கருதப்படும் என புலிகள் ஏற்கனவே எழுதருகையிட்டுள்ளனர்." என்றார். எனவே யாழிற்கான கடல்வழி வழங்கலை அறவே துண்டிப்பதற்காக 1997 ஜூலை 15 அன்று விடுதலைப் புலிகள் யாழ்ப்பாணக் குடாநாட்டிற்கு பொருட்களை எடுத்துச் செல்லும் அனைத்து வணிகக் கப்பல்களும் முறையான படைய இலக்குகளாகக் கருதப்படும் என்று அறிவித்ததோடு “மக்களுக்கான உணவு மற்றும் தேவைகளை வழங்குகிறோம் என்ற போர்வையில் யாழ்ப்பாணத்திற்கு போர்த் தளவாடங்களை சிறிலங்கா படைத்துறை அனுப்புகிறது” - உதயன்: 17/07/1997 என்றும் குற்றம் சாட்டினர். எவ்வாறெயினும் 1996 ஆம் ஆண்டு முதலே புலிகள் வழங்கல் கப்பல்களைக் குறிவைத்துத் தாக்கத் தொடங்கிவிட்டனர். மேலும், 2006ம் ஆண்டு ஓகஸ்ட் 11ம் திகதி முதல் சிங்கள அரசால் மூடப்பட்ட ஏ9 வீதி வழியே முன்னர் யாழிற்கு எடுத்துச் செல்லப்பட்ட உணவுப்பொருட்கள் பின்னர் கடல் வழியாக எடுத்துச் செல்லப்படுமென்று - 12 ஆயிரம் தொன் உணவுப்பொருட்களாம் - சிறிலாங்கா அரசு பரப்புரை செய்தது. இவ்வீதி மூடப்பட்டதற்கான காரணமாக சிங்கள அரசு கூறிய சாட்டுகளில் ஒன்று புலிகளின் யாழ் மீதான (விடுவிப்புப்) படையெடுப்பு தொடங்கியதால் - ஓகஸ்ட் 11ம் திகதி - என்பதாகும். ஆனால் அது தொடங்கிய கையோடு அதையே சாட்டாக வைத்து மூடிவிட்டு படையெடுப்பு கைவிடப்பட்ட பின்னரும் - ஓகஸ்ட் 19ம் திகதி மட்டில் - மூடல் நீடித்தது என்பது குறிப்பிடத்தக்கது. கடல்வழியே உணவுப்பொருட்களும் மக்களின் கடல் போக்குவரவும் என்ற போர்வையின் கீழ் சில பொதுமக்களோடு கப்பல்களில் சிங்களப் படைகளுக்கான படைக்கலன்கள், போர்த்தளவாடங்கள் மற்றும் படையினரே திருமலையிலிருந்து யாழிற்கும் யாழிலிருந்து திருமலைக்குமென மெய்யில் கொண்டு செல்லப்படுகின்றனர் என்று பொதுமக்கள் வழங்கிய நேரடி சாட்சியங்களின் அடிப்படையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அப்போதைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டாகக் கையெழுத்திட்டு ஓர் அறிக்கையினை வெளியிட்டிருந்தனர் (உதயன்: 21/02/2007) என்பது குறிப்பிடத்தக்கது. அவ்வாறு 1996 அம் ஆண்டு முதல் உண்மைக்குப் புறம்பான போர்வையின் கீழ் பயணித்த போது கடற்புலிகளால் குறிவைக்கப்பட்ட மற்றும் அதனால் அழிபட்ட சில கப்பல்களையும் கைப்பற்றப்பட்டு பின்னர் ஒப்படைக்கப்பட்டவற்றையும் இங்கு ஆவணப்படுத்தியுள்ளேன். ஆவணத்தை வாசகர் வாசிக்கத் தொடங்கு முன்னர் இன்னுமொன்றையும் குறிப்பிட விரும்புகிறேன். பொதுவாக ஈழப்போர்க் காலத்தில் பாதுகாப்புச் சிக்கலாலும் தமது ஆளணி எண்ணிக்கையினை பகைவர் எடைபோடக்கூடும் என்பதாலும் தவிபு எந்தவொரு சமரிலும் தம் தரப்பில் காயப்பட்டோரின் எண்ணிக்கையினை அறிவித்ததில்லை. ஆகையால் கடற்சமர்களிலும் கடற்புலிகள் தரப்பில் காயப்பட்ட போராளிகளின் விரிப்பானது அறியப்பெறவில்லை. இதே போன்று கடற்சமர்களில் கடற்புலிகளின் படகுகள் (வழங்கல் வண்டிகளாயினும் சரி, சண்டைவண்டிகளாயினும் சரி) ஏதேனும் மூழ்கடிக்கப்பட்டால் அது தொடர்பான தமிழர் தரப்பின் தகவல்கள் எங்கேனும் பெறக்கூடியவாறு உள்ளது. அவ்வாறு 1995 ஆம் ஆண்டின் இறுதிவரை மூழ்கடிக்கப்பட்ட கடற்புலிகளின் படகுகள் பற்றிய தகவல் முற்றாக எடுத்துவிட்டேன். ஆனால் அதற்குப் பிந்தைய காலத்தியவையில் சிலதே கிடைக்கப்பெற்றுள்ளன. அதிலும் தமிழரின் கட்டளையாளர்களோ அல்லது முக்கியமானவர்களோ வீரச்சாவடைந்திருந்தால் மட்டுமே கிடைக்கப்பெறுகிறது. வீரச்சாவுகள் நிகழாமல் மூழ்கடிக்கப்பட்ட எந்தவிதமான படகுகள் பற்றிய செய்தியும் கிடைக்கப்பெறவில்லை. சிறு குறிப்புக்கூட இல்லை. கடற்கரும்புலிகள் பயன்படுத்தப்பட்ட கடற்சமர்களின் போது கடற்புலிகளின் வண்டிகள் (கடற்புலிகளின் படகுகள் வண்டிகள் என்றே அழைக்கப்படும்) ஏதேனும் சிங்களக் கடற்படையால் மூழ்கடிக்கப்பட்டிருப்பின் அது தொடர்பான தகவல் ‘உயிராயுதம்’ நிகழ்படங்கள் மூலம் அறியக்கூடியதாக உள்ளது; அதாவது கடற்புலிகளே தம் இழப்பினை அறிவித்துள்ளனர். ஆனால் அவ்வாறான கடற்சமர்களின் போதுகூட சேதப்பட்ட படகுகளின் விரிப்பு அங்குகூட அறிவிக்கப்பட்டதில்லை. தமிழர் தரப்பில் சேதப்பட்ட அ மூழ்கடிக்கப்பட்ட படகுகளின் எண்ணிக்கையை சிங்களப் படைத்தரப்புச் செய்திகள் யாவும் நம்பவியலாத அளவிற்கு அள்ளுகொள்ளையாக ஏற்றிக் காட்டியுள்ளன, குறிப்பாக 2006ம் ஆண்டில் பல தடவைகள்; 14 படகுகளை தாம் ஒரே கடற்சமரில் மூழ்கடித்ததாக சிறிலங்கா தேசிய ஊடகமொன்று 10/11/2006 (உதயன் வழியாக) அன்று செய்திவெளியிட்டது இவற்றில் குறிப்பிடத்தக்கது ஆகும். இதுபோன்ற சிங்களப் படைத்துறையின் ஊதிப் பெருப்பிக்கப்பட்ட அனைத்துத் தகவலைப் பற்றி பரவலறியான சிங்களச் சார்புக் கொழும்புப் படையப் பகுப்பாய்வாளர் திரு. இக்பால் அத்தாஸ் அவர்கள் பம்பலாகப் பின்வருமாறு கூறியிருந்தார். "கடந்த காலத்தில், பாதுகாப்பு அமைச்சின் நடவடிக்கைத் தலைமையகம் அதிகமான பகை இழப்புகளை வெளியிட்டதாக அறியப்படுகிறது. இந்தப் புள்ளி விரிப்புகளைச் சேர்த்தால், பிரிவினைவாதப் போரின் முழுக் காலத்திலுமானதை, அது புலிகளின் ஆளணி வலுவை விட அதிகமாக இருப்பதோடு மட்டுமல்லாது யாழ்ப்பாணக் குடாநாட்டின் மக்கள் தொகையில் கணிசமான பகுதியையும் கொண்டிருக்கும் என்ற கருத்துக்குறிப்புகளுக்கு அடியெடுத்துக் கொடுத்தது." - சன்டே ரைம்ஸ், மார்ச் 30, 1997 (Navy's moment of glory in Mullaitivu seas) ஆகவே சிங்களக் கடற்படைக்கு இழப்புக்கள் ஏற்பட்ட கடற்சமர்களின் போது மூழ்கடிக்கப்பட்ட கடற்புலிகளின் வண்டிகள் பற்றிய தகவலை - என்னால் உறுதிப்படுத்தப்பட்டவை - மட்டுமே இவ்வாவணத்தில் வெளியிட்டுள்ளேன். எதிர்காலத்தில் மேலும் கிடக்குமாயின் இவ்வாவணத்தில் இற்றைப்படுத்துகிறேன் (update). இல்லையேல் அதை தனியான ஒரு ஆவணமாக வெளியிட முயற்சிக்கிறேன். ******
  3. "தோற்றிடேல், மீறித் தோற்றிடினும் வரலாறின்றி மரியேல்!" -நன்னிச் சோழன் எழுதருகை(warning): இங்குள்ள செய்திகள் யார் மனதையும் புண்படுத்துவதற்காக எழுதப்படவில்லை. இவை தமிழினத்தின் வரலாற்றை ஆவணப்படுத்தும் முகமாகவே எழுதப்பட்டுள்ளன என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்…! எல்லா(hello)... வணக்கம்... இன்றைக்கு நாங்கள் பார்க்கப்போவது விடுதலைப் புலிகளின் கடற்புலிகளின் நீர்மூழ்கிகள் பற்றியே. கடற்புலிகளிடம் இருந்தவை உண்மையில் நீர்மூழ்கிகள் தானா? இதற்கு இரு விடையுமே உண்டு. ஆம், இல்லை.. புலிகளால் கட்டப்பட்டவையில் பெரும்பாலானவை மெய்யான நீர்மூழ்கிகள் அல்ல. ஆனால் அவை மெச்சத்தக்க தாழ் தோற்றுருவ கலங்கள்(low profile vessels), மாந்த ஏவரிகள் (human torpedoes ), அரை நீர்மூழ்கிகள்(semi-submarines) மற்றும் ஒற்றை நீரடி வளிவழங்கி நீர்மூழ்கிகள் (one snorkel submarine) ஆகும்... இவற்றினை புலிகள் போரில் கையாண்டிருந்தார்களா என்பது உறுதியாகத் தெரியவில்லை.. ஆனால் புலிகள் இவற்றைப் பயன்படுத்தி பொருட்களை தருவித்திருந்தனர் என்பது மட்டும் உறுதி. 2008இல் நடத்தப்பட்ட ஓர் கரும்புலித் தாக்குதலில் தாழ் தோற்றுருவ கலங்கள் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது… நான் இங்கே நீர்மூழ்கி என்று பலர் கண்டு குழம்பும் புலிகளின் கலங்களைப் பற்றி மட்டுமே எழுதியுள்ளேன்; படங்களை இணைத்துள்ளேன்.. ஏனைய கலங்களைப் பற்றி ஒன்றும் எழுதவில்லை! சரி, முதலில் ஆம் என்ற செப்புதலுக்கான புலனங்களைப் பார்ப்போம். நீர்மூழ்கிகள் (submarine): பொதுவாக மெய்யான நீர்மூழ்கிகள் என்பவை அரை-நீர்மூழ்கிகள் மற்றும் தாழ் தோற்றுருவ கலங்களை விட கட்டுவது, பராமரிப்பது மற்றும் பணியாற்றுவது மிகவும் கடினம். எதிரொலிக்கருவி(sonar) மற்றும் ஏவரிகள்(torpedoes) உதவியின்றி அவைகளின் தந்திரோபாய நன்மைகளும் மிகவும் குறைவாகவே உள்ளன, எனவே கடற்புலிகள் அவற்றைக் கட்டுவதில் பெரியளவில் ஆர்வம் காட்டியதாகத் தெரியவில்லை. ஆகவேதான் அவர்கள் ஒப்பீட்டளவில் சில நீர்மூழ்கிகளைக் கட்டினார்கள், அவை குறைந்தபட்சம் ஒரு நீரடி வளிவழங்கியாவது (snorkel) மேற்பரப்பை எட்டி முழுமையாக நீரில் மூழ்கும் திறன் கொண்டதாக இருந்தது. ஆனாலும் அவர்கள் 2 மெய்யான இயங்குநிலை நீர்மூழ்கிகளைக் கட்டியிருந்தார்கள். அத்தோடு மேலும் மூன்று நீர்மூழ்கிகளும் கிடைக்கப்பெற்றது.. ஆனால் அது இயங்குநிலை நீர்மூழ்கியா என்பதைப் பற்றிய புலனங்கள் ஏதும் எனக்கு கிடைக்கப்பெறவில்லை.. புலிகளால் கட்டப்பட்டுக் கொண்டிருந்த ஏனைய இரண்டு பெரிய வகை நீர்மூழ்கிகளும் போர் இறுதிக்கட்டத்தை நெருங்கியதால் முடிக்கப்படாமல் விடப்பட்டிருந்தன, இதனால் அவற்றின் இறுதிவடிவம் எவ்வாறு இருந்திருக்க முடியும் என்பதை எம்மால் ஊகிக்க முடியவில்லை.. போர் இன்னும் கொஞ்ச நாட்கள் நீடித்திருக்குமானால் புலிகளின் இந்தப் புதிய நீரடி போரியல் முறையையும் நாம் அறிந்திருக்கலாம். 1) &2) கீழே உள்ள இரு மெய்யான நீர்மூழ்கிகளும் தாய்லாந்தில் இருந்த புலிகளின் கடற்தளத்தில் இருந்து கைப்பற்றப்பட்டதாகும். இதில் ஒருவர் மட்டுமே பயணிக்க (travel) முடியும். ஆகையால் இது இராணுவ வேலைகளுக்கு பயன்படுத்தப்பட இயலாது. ஆனால் இவையே புலிகளால் பின்னாளில் கட்டப்பட்ட நீர்மூழ்கிகள் போன்ற மெச்சத்தக்க கலங்களின் கட்டுமானத்திற்கு வித்திட்டவையாகும். 'தாய்லாந்தில் இருந்த புலிகளின் கடற்தளத்தில் இருந்து கைப்பற்றப்பட்ட நீர்மூழ்கிகள் ' 'மேலே pink நிறத்தில் உள்ள நீர்மூழ்கியின் உட்புறம்' 'தாய்லாந்தில் இருந்த புலிகளின் கடற்தளம்' 3) இரும்பாலான இந்நீர்மூழ்கி ஆனது டிசம்பர் மாதம் 1995 ஆம் வல்வெட்டித்துறையில் வைத்து சிறிலங்கா தரைப்படையினரால் கைப்பற்றப்பட்டது .. இதில் 1 ஆள் மட்டுமே பயணிக்கலாம். இது கடலிலே இறக்கப்பட்டதில்லை என்று சிங்களம் கூறுகிறது. ஆனால் கடற்புலிகளின் செயல்பாடுகள் பற்றி துப்பில்லாத (அந்தக்காலத்தில்) சிங்களம் இவ்வாறு கூறுவது நம்பவியலாது கூற்று. எனவே இது இறக்கப்பட்டதா இல்லையா என்பது அறியில்லாத விடயம் ஆகும். அளவு (அடியில்): 18.7 x 3.5 X 4.5 'மேற்கண்டதின் பின் புறம்' 4) புலிகளால் இது வரைக்கும் முழுமையாக் கட்டப்பட்ட ஒரே ஒரு நீர்மூழ்கி: புலிகளால் கட்டப்பட்ட முதல் செயல்படும் மெய்யான நீரில் மூழ்கக்கூடியவற்றில் ஒன்று. இது ஓராள் பயணிக்கக் கூடிய நீர்மூழ்கியாகும். இது மின்கலம் மூலம் இயக்கப்பட்டது. (இதைத் தவிர வேறு ஏதேனும் முற்றாக கட்டிமுடிக்கப்பட்ட நிலையில் நீர்மூழ்கிகள் இருந்தனவா என்பது தெரியவில்லை) 'உயர் பின்பக்க பார்வை' 5)பெப். 27 . 2009 அன்று சிறிலங்காத் தரைப்படைகளால் கைப்பற்றப்பட்ட மற்றுமொரு நீர்மூழ்கி. இந்தச் செய்தியை யூரியூப்பில் இருந்து எடுத்தேன். 'கடற்கலத்தின் முன்பக்கம்' | படிமப்புரவு: இப்படம் என்னால் தொகுக்கப்பட்டது ஆகும்.. 3 படங்களை ஒன்றிணைத்தே இப்படத்தினை உருவாக்கினேன்.. தலைப்பகுதி தலைப்பகுதி தலைப்பகுதி 'பக்கவாட்டுப் பகுதியில் அந்த இராணுவ அதிகாரி ஏதோ ஒன்றினைபற்றிச் சுழற்றிக்கொண்டு இருக்கிறார்' பின்பக்கம் பின்பக்கம் 'பின்பகுதி.. அருகில் உடைந்து விழுந்திருப்பது தான் நீங்கள் மேலே கண்ட அந்த திட்டுப்போன்ற பகுதி' 'சுழலி' 'சுக்கான் உடன் கூடிய சுழலி' 6) கீழ்க்கண்ட நீர்மூழ்கி எலும்புக்கூடானது பாதியே முற்றாக கட்டி முடிக்கப்பட்டிருந்தது. இது முற்றிலும் கட்டி முடிக்கப்படாமையால் இது பற்றிய புலனங்கள் ஒன்றும் கிடைக்கபெறவில்லை.. ஆனால் இதில் உள்ள பெருமளவான உலத்தப்பட்ட (welded) எஃகு பட்டைகளை(steel plates) வைத்துப் பார்க்கும் போது இதனால் அதிக அளவு ஆழம் செல்ல முடியாது. இது முற்றிலும் முடிக்கப்படாமையால் இது எவ்வாறு இருந்திருக்கும் என்று அறுதியிட்டு கூற இயலாது. ஆனால் இது கட்டி முடிக்கப்பட்டிருந்தால் இதுவே புலிகளின் முதலாவது பெரிய முழுஇயக்கம் கொண்ட நீர்மூழ்கி ஆகியிருக்கும் என்பதில் ஐயமில்லை... அவ்வளவு சிறப்பாக இதன் எஃகு பட்டைகள் உலத்தப்பட்டிருந்தன. நீளம்: 30அடி (10m) இக்கலத்தால் 1360 kg வெடிமருந்தினைக் காவிச்செல்ல இயலும் என்று கணிக்கப்பட்டுள்ளது. 7) மற்றொரு நீர்மூழ்கியின் கட்டி முடிக்கப்படாத எலும்புக்கூடு. சிங்களப் படைகளால் கைப்பற்றப்பட்டவைகளிலே இதுதான் மிகப்பெரியது ஆகும். நீளம்: 360 அடி உயரம் : 10 அடி 8 ) கடற்புலிகளால் பாதியிலேயே விட்டுவிடப்பட்ட மற்றுமோர் நீர்மூழ்கிக்கான உதிரிப்பாகங்கள். சரி,இனி இல்லை என்ற செப்புதலுக்கான புலனங்களைப் பார்ப்போம். மேலே நான் கூறியதைப் போல நீர்முழ்கிகள் கட்டுவது அவ்வளவு இலகு இல்லை என்பதைத் தெரிந்து கொண்ட புலிகள் அவற்றிற்கு ஈடாக இவற்றினைக் கட்டினார்கள். தாழ் தோற்றுருவக் கலம் (low profile vessel): தாழ் தோற்றுருவ கலங்கள் நீரில் மிகக் தாழ்வாக ஓட வடிவமைக்கப்பட்டுள்ளன, கிட்டத்தட்ட முழு கலக்கூடும் (hull) நீரில் மூழ்கியுள்ளன, ஆனால் மேல்தளம் மட்டும் மேற்பரப்புக்கு மேலே தெரியும். இதன்மூலம் கதுவீகளின் கண்ணில் மண்ணைத் தூவுவதுடன் அவற்றைக் கண்டறிவதையும் கடினமாக்குகிறது. மேலும் இதனைச் சுடுவதும் கடினமான காரியம் ஆகும். இருப்பினும் இவ்வகைக் கலங்கள் வேகத்தில் கொஞ்சம் குறைவே. இது 2 வெளியிணைப்பு மின்னோடியைக் கொண்டது! வட்டு வரைக்குமான உயரம் : 5.0' - 5.3' 1) ஊடுருவி 2006-01 'இந்த இரண்டு கொளுக்கிகள் போன்று இருப்பவைக்கு முன்னால்த்தான் கதுவீ (radar) பொருத்தப்படிருந்தது' 'படத்தின், முன்புறத்தில் திறந்த நிலையில் இருக்கும் அறையினுள்தான் மீகாமன் இருப்பார்….. பின்புறத்தினுள் தெரியும் அந்த இரு அறைகளுக்குள்தான் பண்டங்கள் வைக்கப்படும்' 'மீகாமன் அறையினுள் இறங்கி நிற்கும் ஓர் சிறீலங்காத் தரைப்படை வீரன்' 'கலத்தின் பின்புறத்தின் மேற்பகுதி' 'கலத்தின் பின்பகுதி' மேற்கண்ட கடற்கலனின் முழு நிகழ்படத்தினையும் காண: 2) இது தான் புலிகளின் முதலாவது தாழ் தோற்றுருவக் கலனாக இருந்திருக்கக்கூடும் என்று நினைக்கிறேன். 3) மிக நொவ்வு கலத்தின்(VSP) மேலோட்டு(hull) வடிவம் கொண்ட ஓர் தாழ் தோற்றுருவ கலம்.. இதுதான் கடற்புலிகளால் கட்டப்பட்டதிலேயே மிகவும் சீரிய மேம்படுத்தப்பட்ட வடிவம் கொண்ட தா.தோ.க ஆகும். பார்த்துப் பார்த்து செதுக்கியிருகிறார்கள்! இது உள்ளிணைப்பு மின்னோடியைக் (inboard motor) கொண்டது! படிமப்புரவு :H I Sutton மேற்கண்ட கலனின் பல்வேறுபக்க தோற்றங்கள்: 'பின்பகுதி' 4) 27 டிசம்பர் 2008 அன்று முல்லைக் கடலில் சிங்களக் கடற்படையால் மூழ்கடிக்கப்பட்ட கடற்புலிகளின் தாழ் தோற்றுருவக் கடற்கலம். (கீழுள்ள படிமங்கள் யாவும் சிங்கள கதுவீயில் தெரிபவையே... முழு நிகழ்படம் ) 'கலத்தின் முழுத் தோற்றம்' 'ஓட்டியிடம் இரு பொந்து போன்று தெரிவதை நோக்குக' 'அணியம்' தாழ் தோற்றுருவ மிக நொவ்வு கலம் (low profile very slender vessel): 1) 2) நீளம்: 30 அடி அரை நீர்மூழ்கிகள் (semi submarine) : நீரில் பாதியளவு மூழ்கக்கூடிய / கிட்டத்தட்ட முற்றிலும் நீரில் மூழ்கும் கலங்களே இந்த அரை நீர்மூழ்கிகள் ஆகும். இருப்பினும், செலுத்தறை(cock pit), காற்று உட்கொள்ளல் (air intakes) மற்றும் இயந்திர புறம்போக்கி(engine exhaust) பொதுவாக மேற்பரப்புக்கு மேலே இருக்கும். இவை ‘நீரடி வளிவழங்கி நீர்மூழ்கி’ (snorkel submarine) என்றும் அழைக்கப்படுகின்றன. இக்கலங்களை எதிரொலிக்கருவி மூலமோ இல்லை கதுவீ மூலமோ கண்டறிவது கடினமாகும். கீழே நீங்கள் பார்ப்பவை அனைத்தும் எஃகால் ஆனவை 1) நீளம்: 7.3m அகலம்: 1.2m உயரம் : 5.6' - 6' இதற்குள் ஓரிருக்கை மட்டுமே இருந்தது 'ஓட்டியிருக்கை' 2) கோகுகலன்-45 2008 கீழ்க்கண்ட வகை நீர்மூழ்கியில் கதுவீ(radar) பூட்டப்படிருந்தது.. அத்துடன் உள்ளே ஒட்சியன் குடுவையும் இருந்தது. இதால் 15 பேர் வரை காவிச்செல்ல இயலும். இந்தக் கலம் ஆனது சரளையுடன்(ballast) வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் செலுத்துநெறிக்கு(navigation) உதவ ஒரு புவி நிலை காட்டியையும் கொண்டிருந்தது. நீளம்: 47 அடி அகலம்: 8 அடி உயரம் : 7 அடி வளி வழங்கியின் உயரம் உயரம் : 6' - 6.2- இதற்கான ஆற்றல் வழங்குவது உந்தியுடன் கூடிய உள்ளிருக்கும் பொறியாகும். பொறியின் ஆற்றல்: 400–800 HP 'முன்பக்கத்திலிருந்து சத்தார் பார்வை' 'மேற்புறத் தோற்றம்' 'முன்புறத் தோற்றம்' 'உட்புறத் தோற்றங்கள்' 'ஓட்டியிடம் & steering wheel' எப்படி ஓட்டுவார்கள் என்று விளக்குகிறார் ஓர் சிங்களத் தரைப்படை வீரர்' 'பின்பகுதி (தெரிவது சுழலி ); அருகில் சிங்கள இராணுவ வீரர்கள் உள்ளனர்.' 'சுழலி ' 3) கோகுகல்ன்-24 2008 இக்கலமானது கோகுலன்-45 ஐ விடச் சிறியது. நீளம்: 5.4 m அகலம்: 1.5 m 4) நீளம் : 8m உயரம் : 4.2' 'மேற்கண்ட நான்கு புகைப்படங்களும் ஓட்டுநர் இருக்கும் உள்ளிடம் தொடர்பானவை' 5) புதைக்கப்பட்ட நிலையில் கைப்பற்றப்பட்ட பிறிதொன்று: இனி நீங்கள் கீழே பார்ப்பவை அனைத்தும் கண்ணாடியிழைகளால் (fibre glass) ஆனவை 6) இதில் ஒருவர் மட்டுமே செலவாகலாம்(travel). 'உட்புறத் தோற்றம்' 7) கோகுலன்-2 நீளம்: 4.30m அகலம்: 1.20m உயரம்:1.18m இது 1993 ஆம் ஆண்டு மகாபலிபுரத்தில் இந்திய காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டது. 'மேற்கண்ட கடற்புலிகளின் அரை நீர்மூழ்கியானது கோயம்புத்தூரில் கண்காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது' 8 ) சதீஸ் கீழ்க்கண்ட அரை நீர்மூழ்கி மூலம் புலிகள் பண்டங்களைத் தருவித்திருக்கலாம என்று நம்பப்படுகிறது. இதால் 10 தொன் அளவிலான பொருட்களை காவ இயலும். 'முன்னிருந்து சத்தார் பார்வை' 'மேலிருந்த பார்வை' 'பின்னிருந்து சத்தார் பார்வை' 'பக்கவாட்டுப் பார்வை' 'நடுப்பகுதியை கீழிருந்து மேனோகிய பார்வை' 'பின்பகுதிப் பார்வை' 9) கீழ்க்கண்ட அரை நீர்மூழ்கி மூலம் புலிகள் பண்டங்களைத் தருவித்திருக்கலாம என்று நம்பப்டுகிறது. இதால் 5 தொன் அளவிலான பொருட்களை காவ இயலும். இது இரண்டு பகுதிகளாக கட்டப்பட்டு பின்னர் ஒட்டப்பட்டுளது, முக்கிய சேரல் கிடைமட்டமாக பக்கங்களில் தெரிகிறது இயங்கும். நீளம் : 25.5 அடி உயரம் : 5 அடி அகலம் : 9.5 அடி 'மேற்கண்டதின் பின் புறம்' 'மேற்கண்டதின் நீரடி வளி வழங்கி(snorkel)' அடைக்கப்பட்ட மாந்த ஏவரிகள் (enclosed human torpedoes): முதலில் மாந்த ஏவரிகளை விளக்குகிறேன்.. இதில் புலிகளிடம் பல வகைகள் இருந்தாலும் பார்ப்பதற்கு நீர்மூழ்கிகள் போல இருப்பவைப் பற்றி மட்டும் இங்கே கொடுக்கிறேன். இவை கடற்புலிகளிடம் இருந்த அலைமேற் செலவாகும் கரும்புலிகளால் உருவோட்டப்படும்(sail) கலங்களைப் போல இவை நீரடியில் உருவோட்டப்படும் ஏவரிகள் ஆகும். இது ஒரு கைடென்(kaiten) வகுப்பு ஏவரியாகும். இதில் ஒருவர் மட்டுமே செலவாகலாம். 'உள்ளிருந்து முன்னோக்கிய பார்வை' 'உட்பகுதி' 2) இது ஒரு கைரென்(kaiten) வகுப்பு ஏவரியாகும். இதில் ஒருவர் மட்டுமே செலவாகலாம் தாழ் தோற்றுரு அடைக்கப்பட்ட மாந்த ஏவரி(low profile enclosed human torpedo): 1) இதில் ஒருவர் மட்டுமே செலவாகலாம் 'பின்பகுதி' 2) MS 380 இதில் ஒருவர் மட்டுமே பயணிக்கலாம் படத்தில் முன்னால் உள்ளதுதான் தாழ் தோற்றுருவ மாந்த ஏவரி. 3) இடது புறத்தில் உள்ளது தாழ் தோற்றுருவ மிக நொவ்வு கலமொன்றின் மாதிரி ஆகும்ம் (Low profile Very slender vessel); வலப்புறத்தில் உள்ளதுதான் தாழ் தோற்றுருவ மாந்த ஏவரி ஒன்றின் மாதிரி ஆகும். மேலுள்ள மாதிரியின் முழுக் கலம் கூடுதல் செய்திகள்: உசாத்துணை : H I Sutton - சில தகவல்களை இங்கிருந்து தழுவியே எழுதியுள்ளேன். Sundayobserver.lk - Sri Lanka Colombo Dockyard - Wikipedia Cedric-class patrol boat - Wikipedia Sea Tigers of the LTTE | Richard Pendavingh Very Slender Vessel - Wikipedia ltte wepons dossier படிமப்புரவு ஒரு சில படங்கள் என்னுடைய கணினியின் துணைகொண்டு வடிவமைக்கப்பட்டது H I Sutton - Covert Shores http://quora.com Sri Lanka Brief All You Need to Know BEFORE You Go - Updated 2020 (Trincomalee, Sri Lanka) - Tripadvisor (Tamil Tigers Deserted Homemade Submarine Yard Sri Lanka: Operational Mini Submarine of LTTE Found Vanni and Nilaveli, Sri Lanka Flickr FIRST EVER LTTE OPERATIONAL SUBMARINE TAKEN OUT FROM VELLAMULLIVAIKKAL SEA Getty Images Emerging Out Of The Shadows Flickr Sri Lanka: Interesting LTTE Boats Captured This is what they used. The LTTE of Sri Lanka - One of the worlds most brutal terrorist groups. Sri Lanka Army Captures Boat Building Facility of Terrorists Explore Sri Lanka Twitter. It's what's happening. ReviewGuru Steemit ரூபபாகிணி தொலைக்காட்சி https://www.jvpnews.com/srilanka/04/198644 ஆக்கம் & வெளியீடு நன்னிச் சோழன்
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.