Search the Community
Showing results for tags 'கல்லறைகளுக்கு மேல் மலசலகூடம்'.
-
மாவீர செல்வங்கள் உறங்கும் கல்லறையை உடைத்து எறிந்து விட்டு முளைத்த பிரபா சூப்பர் மார்க்கெட் கட்டிய அவுஸ்திரேலியத் தமிழன் முல்லைத்தீவு மாவட்டத்தின் அளம்பில் எனும் பகுதியில் அமைந்துள்ள துயிலும் இல்லம். இங்கும் வரலாறுகள் இன்னும் உறங்கிக் கொண்டிருக்கின்றன. ஆனால் இன்று தமிழ் மக்களின் விடிவிற்காய் போராடி உறங்கிக் கொண்டிருக்கும் அந்த மாவீரர் துயிலுமல்லத்தில் மாவீரர் செல்வங்களின் உறக்கத்தை கெடுத்து அந்த இடத்தில் வர்த்தக நிலையம் ஒன்று அமைந்திருக்கின்றது. ஏன் என்றால் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள அளம்பில் பகுதியில் அமைந்துள்ள துயிலுமில்லம் முற்றுமுழுதாக அழிக்கப்பட்டு தற்போது அதில் முல்லைத்தீவினை சேர்ந்த தனி நபர் ஒருவர் ஒரு (super market) வர்த்தக நிலையத்தினை ஆரம்பித்திருக்கின்றார். உறவுகளே! தாய்மண் விடுதலைக்காக தம் உயிரை தியாகம் செய்த மாவீரர்கள் கல்லறையில் உறங்கிக் கொண்டிருந்தார்கள். கிட்டத்தட்ட 147 மாவீரச் செல்வங்கள் உறங்குகின்றனர். அதில் சக போராளிகள், மாவீரர்களின் பெற்றோர், உற்றார் உறவினர்கள் கண்ணீர் மல்க மாவீரர்நாள் பாடல் ஒலிக்க இரத்தம் சொட்ட சொட்ட விதைக்கப்பட்டவர்கள் 74 மாவீரர்களும், நினைவில் கற்கள் 73 மொத்தம் 147. ஆனால் இன்று பணத்தின் மேல் உள்ள மோகத்தினால் முல்லைத்தீவு வண்ணாங்குளம் பகுதியை சேர்ந்தவர் தற்பொழுது அவுஸ்ரேலியாவில் வசித்து வருபவருமாகிய அன்ரனி ஜெயராசா பிரபாகரன் என்பவரால் அந்த துயிலுமில்லத்தில் ஒரு வர்த்தக நிலையத்தினை உருவாக்கியுள்ளார். எமது வீரர்களின் கல்லறை கீழே, வர்த்தக நிலையம் மேலே! 'விதைக்கப்பட்ட மாவீரர் ஒருவரின் என்புக்கூட்டுத் தொகுதி வெளியில் தெரிகிறது' இத் துயிலும் இல்லம் இலங்கை இராணுவத்தினால் அழிக்கப்பட்ட பின்னரும் அத்திவாரத்துடன் இருந்த அந்த துயிலுமில்லத்தை பணம் கொடுத்து வாங்கி இன்று பிரபா வர்த்தக நிலையமாக (PRABHA SUPER MARKET) மாற்றப்பட்டுள்ளது. எமது விடுதலைக்காக போராடி உயிர் தியாகம் செய்த எமது உறவுகள் உறங்கிக் கொண்டிருக்கும் கல்லறையில் இன்று வெளிநாட்டு பணம் அதில் கட்டிடமாக எழுந்து நிற்கின்றது. ( இலங்கை இராணுவத்தினர் இத் துயிலுமில்லத்தை அழித்தனர், அது ஒரு இனவெறி, ஆனால் தன் சொந்த மண்ணில் பிறந்த தன் இன மக்களின் விடுதலைக்காக போராடிய தனது உறவுகள் விதைக்கப்பட்ட நிலத்தினை வாங்கி வர்த்தக நிலையம் அமைத்து வீரச்சாவடைந்த எமது உறவுகளை அங்கே நிம்மதியாக உறங்கவிடவில்லை. இது ஒரு பணவெறியின் வேலை என்றுதான் சொல்ல வேண்டும். தம்பி பிரபாகரன் புரிந்துகொள்ளுங்கள். உங்கள் பணவெறி எம் இனத்தின் புதைகுழியாக மாறிவிட்டது. உங்கள் குடும்பம் இன்னும் அந்த அளம்பில் பிரதேசத்தில் வசிக்கின்றனர். உங்கள் கண்முன்னே எல்லாம் நடக்கின்றது. சொல்லப்போனால் இந்த வருடம் மாவீரர்நாள் அன்றும் அங்கே தமது உறவுகளை விதைத்த இடத்திற்கு வருகை தந்த எம் உறவுகள் நீங்கள் ஆக்கிரமித்த துயிலும் இல்லம் முன்பாக அதாவது தற்பொழுது இந்த பிரபா வர்த்தக நிலையம் முன்பாக வீதியோரமாக நின்று கண்ணீரோடு விளக்கேற்றி அஞ்சலி செலுத்தினர். உங்களுக்கு இரக்கம் இருந்தால், உங்கள் மனதில் ஈரம் இருந்தால் எங்களது மாவீரர்கள் 25000 மேற்பட்ட மாவீரர்கள் தமது உயிர்களை தியாகம் செய்து இந்த மண் விடுதலைக்காக போராடியவர்களில் இந்த அளம்பில் பிரதேசத்தில் உள்ள துயிலும் இல்ல மாவீரர்களின் உறக்கத்தினை கெடுத்து நீங்கள் இன்னும் எவ்வளவு பணம் சம்பாதிக்க போகின்றீர்கள்? நீங்கள் ஒரு மனசாட்சி உள்ள தமிழனாக இருந்தால் உங்கள் மனைவி, உங்கள் பிள்ளைகள், உங்கள் எதிர்கால சந்ததிகள் செழிப்பாக வாழ்வதற்காக தயவுசெய்து இந்த இடத்தினை விடுங்கள் இந்த கட்டிடத்தினை அகற்றிவிட்டு துயிலும் இல்லமாக விடுங்கள். உங்களுக்கு அதற்குரிய பெறுமதியினை இந்த மக்கள் தருவார்கள். இந்த இடத்தினை மீட்பதற்காக 2015 இல் இருந்து உங்களுடன் பேசி வருகின்றார்கள். ஆனால் உங்கள் கட்டிடத்தின் வளர்ச்சியோ ஒவ்வொரு வருடமும் கட்டிடம் இன்னும் மென்மேலும் உயர்ந்து கொண்டுதான் செல்கின்றது. கீழே மாவீரர் வித்துடல். புரிந்துகொள்ளுங்கள். அன்பான உறவுகளே! ஒரு விடத்தை மட்டும் கூறிக்கொள்ள விரும்புகின்றேன். இன்று விடுதலைப் போராட்டம் அழிந்துவிட்டது, விடுதலைப்புலிகள் மரணித்துவிட்டார்கள். கல்லறையாக இருந்தாலென்ன, மாவீரர் துயிலும் இல்லமாக இருந்தாலென்ன எங்கள் சொர்க்கவாசல் என நினைக்கும் உங்களுக்கு கூறுகின்றேன். எங்களுக்கு காலம் வரும் நிச்சயமாக வரும். பூமிப் பந்து சுழன்றுகொண்டுதான் இருக்கின்றது. தமிழீழ அரசாங்கம் மலரும். அன்று இந்த வர்த்தக நிலையம் முழுமையாக அகற்றப்படும். தமிழீழ அரசாங்கம் அகற்றும். அதற்கு முன் நீங்களே அகற்றுவீர்களாக இருந்தால் உங்கள் பெருமை பேசப்படும். தம்பி பிரபாகரன் அவர்களே விடுங்கள், எங்கள் தாயக மாவீரர்களை நிம்மதியாக உறங்கவிடுங்கள். உண்ண உணவின்றி, நீரின்றி, உறக்கமின்றி எமது விடுதலைக்காக போராடியவர்களை இப்போதாவது நிம்மதியாக உறங்கவிடுங்கள். அந்த நிலத்தினை விட்டு வெளியேறுங்கள் என்று கூறிக்கொண்டு வேதனையோடு விடைபெறுகின்றேன். 'தமிழீழ நடைமுறையரசின் காலத்தில்' நன்றி. இந்த நிலத்தினை வாங்கியவரது தொலைபேசி இலக்கத்தினை கீழே குறிப்பிடுகின்றேன். உங்களால் முடிந்தால் அவரினை தொடர்பு கொண்டு அந்த இடத்தினைவிட்டு வெளியேற சொல்லுங்கள். பெயர் :- அன்ரனி ஜெயராசா பிரபாகரன். தொலைபேசி இல :- 0061410729077 source: https://punithapoomi.com/2022/12/120511/