Search the Community
Showing results for tags 'சட்ஜிபிடி'.
-
வணக்கம் யாழ் வாசகர்கள், உறுப்பினர்கள், பொறுப்பு சார்ந்தோர் அனைவருக்கும்! 🙏🏾🙏🏾🙏🏾 அகவை 25இல் கால் பதிக்கும் யாழ் இணையத்திற்கு/கருத்துக்களத்திற்கு வாழ்த்துக்கள்! 💐💐💐 யாழ் இணையத்தின் தோற்றுவிப்பாளர் மதிப்புக்குரிய திரு. மோகன், பங்காளர்கள், இருபத்து ஐந்து வருட காலத்தில் முழுமையாகவோ, பகுதியாகவோ, நேரடியாகவோ, மறைமுகமாகவோஒன்றாக பயணித்தவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்! 👏🏾👏🏾👏🏾 “சட்ஜிபிடி” (ChatGpt) எனும் செயற்கை நுண்ணறிவை அடித்தளமாக வைத்து இயங்கும் ஒரு தொழில்நுட்ப வசதி அண்மைக்காலத்தில் பொதுமக்கள் பாவனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. 👍🏾👍🏾👍🏾 நீங்களும் இந்த வசதியை/சேவையை பயன்படுத்தக்கூடும். உங்களைப் போலவே நானும் சட்ஜிபிடியுடன் பல்வேறு விடயங்கள் பற்றி உரையாடியுள்ளேன், இதன் வீச்சுக்களை புரிந்துகொள்ள முயற்சித்துள்ளேன். 🤝🏾 சட்ஜிபிடியுடனான எனது எண்ணங்களை, அனுபவங்களை உங்களுடன் அவ்வப்போது பகிர்கின்றேன். அதேபோலவே நீங்களும் உங்கள் கருத்துக்களை கூறுங்கள்.. ✌🏾 📍📍📍 முன்பு ஒரு காலத்தில் எங்கள் ஆட்களிடம் ஒரு தகவலை அறிவது என்றால் சம்மந்தமில்லாத பத்து விசயங்கள் பற்றி அலுக்க அலுக்கபேசி, கடைசியில் சுத்திவளைச்சு அறியப்படவேண்டிய விசயத்துக்குள் செல்லவேண்டும். என்று சமூக ஊடகம் வந்ததோஅன்று தொடக்கம் காலம் தலை கீழாகிவிட்டது. இப்போதெல்லாம் ஒரு தேடற்பொறியில் ஒருஆள் பெயரை எழுதி ஒரு தட்டி தட்டி விட்டால் அவர் பற்றிய எல்லா வண்டவாளமும்: நல்லது, கெட்டது, நடந்தது, நடக்கக்கூடாதது எல்லாவற்றையுமே பெரும்பாலான சந்தர்ப்பங்களில் அறியக்கூடியதாக உள்ளது. தமதுபதினொரு வயசு பிள்ளையின் சாமத்தியவீட்டை யூரிரியூப்பில் நேரடி ஒளிபரப்பு செய்த காட்சிகள் தொடக்கம் முருகண்டியில் நின்று சோடா குடித்தது வரை அண்ணை கந்தசாமியின் சரித்திரம் ஒளி, ஒலியுடன் இணையத்தில் காண்பிக்கப்படுகின்றது. இந்த வகையில் புதிய அறிமுகமான சட்ஜிபிடி பற்றி பார்த்தால்இரண்டு விதமான ஆபத்துக்கள் தெரிகின்றன. ஒன்று:சட்ஜிபிடி ஒரு போதை போல நம்மை தனக்கு அடிமையாக்கக்கூடும். இந்த செயற்பாடு வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல மெதுமெதுவாக நடைபெறும். நாம் அதிக நேரத்தை செலவளிப்பதும் பலவிதமான தேவைகளுக்கு எமது சொந்த ஆற்றலை, சிந்தனையை பயன்படுத்தாது சட்ஜிபிடியிடம் தங்கி வாழவேண்டிய நிலை நடைபெறலாம்/ஏற்படுத்தப்படலாம்/ஏற்படலாம். மற்றையது: நாம் நமது அந்தரங்க விடயங்களை சட்ஜிபிடியுடன் பகிர்ந்துகொள்வது, நமது உள்ளக்கிடக்கைகளை சட்ஜிபிடிக்கு தெரிவிப்பது, நமது உள் அரங்கை சட்ஜிபிடியிடம் காண்பிப்பது தனிமனிதன் எனும் அளவில் நமக்கு மிகவும் ஆபத்தானது. இவ்வளவு காலமும் சோசல் மீடியா எனப்படுபவை எமது புற/வெளி தகவல்களைத்தான் பெறுகின்றன/சேகரிக்கின்றன. பிரைவசி/privacy எல்லாம் எவ்வளவு தூரம் ஒவ்வொரு சமூக ஊடக நிறுவனமும் பேணுகின்றது என்பது கேள்விக்குறி. இப்போது சட்ஜிபிடி போன்ற செயற்கை நுண்ணறிவு பொறி மூலம் வெளியார்/நிறுவனங்கள் எமது அந்தரங்க உலகினை அறியக்கூடிய, எட்டிப்பார்க்கக்கூடிய வாய்ப்பு/ஆபத்துக்கள் உள்ளன. கிடைக்கின்ற எமது தகவல்களை சட்ஜிபிடி உரிமையாளர்கள்/நிறுவனத்தினர்/ஆய்வாளர்கள் எப்படி பயன்படுத்துவார்கள் என்பது வேறு விடயம். அது வர்த்தக நோக்கத்திற்கோ அல்லது உளவறிதலுக்கோ கூட பயன்படுத்தப்படலாம். ஆனால், எமக்குள் ஊடுறுவல் நடக்கின்றது என்பது யதார்த்தம். எனவே, சமூக ஊடகங்கள் விடயத்திலும் சரி சட்ஜிபிடி விடயத்திலும் சரி எமது தனிப்பட்ட தகவல்களை பாதுகாக்கவும், எமது நேரத்தை, ஆற்றல்களை, தனித்துவத்தை காப்பாற்றவும் நாம் கவனம் செலுத்த வேண்டும். 🙏🏾🙏🏾🙏🏾 தொடரும்..