Search the Community
Showing results for tags 'சண்முகலிங்கம் செந்தூரன்'.
-
தம்பாப்பிள்ளை மகேஸ்வரன் அவர்கள் 25/06/1955ம் திகதி புங்குடுதீவில் பிறந்தார் தனது .யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் பயின்ற காலத்தில் அந்த பாடசாலையின் கால்பந்தாட்ட அணியில் விளையாடியவர். பின்னர் இரசாயனவியல் துறையில் university of London ல் பட்டம் பெற்றார். ஈழ போரட்டத்தில் தோன்றிய இயக்கங்களில் ஒன்றான தமிழீழ இராணுவத்தை தோற்றிவித்தவர். தம்பாப்பிள்ளை மகேஸ்வரன் அவர்கள் பனாங்கொட இராணுவ முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பொழுது அங்கிருந்து தப்பியோடினர் இதனால் இவரை பனாங்கொட மகேஸ்வரன் என்றும் அழைத்தனர். இன்னொரு சந்தர்ப்பத்தில் பனாங்கொட மகேஸ்வரன் கைது செய்யப்பட்டு வெலிக்கட சிறையில் இருந்த பொழுது ஜூலை கலவரம் இடம்பெற்றது இக்கலவரத்தில் குட்டிமணி, தங்கத்துரை ஜெகன் உட்பட பல போராளிகள் கொல்லப்பட்டனர். அச்சம்வத்தின் பின்னர் டக்ளஸ் தேவனாந்தா, பரந்தன் ராஜன், பனாங்கொட மகேஸ்வரன் போன்ற போரளிகள் மட்டக்களப்பு சிறைக்கு மாற்றப்பட்டனர் . பின்னாளில் மட்டக்களப்பு சிறையுடைப்பின் பொழுது வாவி வழியாக ஒரு படகில் காளி சுப்பிரமணியம் ஆகிய தமிழீழ இராணுவ போராளிகளுடன் தப்பிச் செல்ல முற்பட்ட வேளை வாவியை நோக்கி ஓடிய வரதனும், அழகிரியும் தம்மையும் அழைத்துச் செல்லும்மாறு கேட்டனர். படகில் அவர்களோடு தப்பிச் சென்றனர். ஈழ விடுதலை இயக்கங்கள் இயக்க செயற்பாட்டுக்காக நிதியை பெற்றுக்கொள்வதற்காக வங்கி கொள்ளையில் ஈடுபட்ட வேளை தம்பாப்பிள்ளை மகேஸ்வரன் 1984இல் மட்டக்களப்பில் காத்தான்குடி மக்கள் வங்கியை கொள்ளை இட்டார். கொள்ளைபோன நகைகளும், பணமும் மூன்று கோடி ரூபாய்களுக்கு மேல் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டது. இலங்கையில் நடைபெற்ற மிகப் பாரிய வங்கிக்கொள்ளை என்ற பெயரையும் அந்த நடவடிக்கை சம்பாதித்துக் கொண்டார் தம்பாப்பிள்ளை மகேஸ்வரன் அவர்கள். இதே வேளை தமிழ் நாட்டில் இருந்த தம்பாப்பிள்ளை மகேஸ்வரனுக்கு பயங்கரமான திட்டம் ஒன்று மூளையில் உதித்தது. சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்திலிருந்து கொழும்பு வரும் “ஏர் லங்கா”விமானத்தில் ஒரு குண்டை வைத்துவிடவேண்டும. குறித் நேரத்தில் வெடிக்கும் அந்தக் குண்டு, விமானம் கொழும்பு விமான நிலையத்தில் தரையிறங்கி, பயணிகள் வெளியேறிய பின்னர் வெடிக்கும். திட்டத்தை நிறைவேற்ற மீனம்பாக்கம் விமானநிலையத்தில் பணிபுரிந்த சிலரது உதவியும் பெறப்பட்டது. ஏர் லங்காவில் பணியாற்றிய இந்தியாவை சேர்ந்த இருவரை கைக்குள் போட்டுக்கொண்டார்கள. பயணிகளின் பொதிகளோடு குண்டு வைக்கப்பட்ட சூட்கேசையும் சேர்த்துவிடவேண்டும். பொதுகளோடு பொதியாக அது விமானத்தில் கொழும்பு போய்ச சேர்ந்துவிடும். திட்டமிட்டபடி 1984 ஆகஸ்ட் இரண்டாம் திகதி சென்னை விமான நிலையத்திற்கு சூட்கேசில் குண்டு சென்றது. பொதிகளோடு பொதியாக சூட்கேஸ் வைக்கப்பட்டு, விமானத்தில் ஏற்றப்படத் தயாரானது. சுங்க அதிகாரிகளில் ஒருவருக்கு அந்த சூட்கேசில் சந்தேகம் வந்துவிட்டது. சூட்கேசை எடுத்து, அது யாருடையது என்று பயணிகளிடம் விசாரித்தார். வந்தது ஆசை, அந்த சுங்க அதிகாரி சூட்கேசை தூக்கிக்கொண்டு தனது அறைக்குச் சென்றார். அவர் நினைத்திருந்தால் உடனடியாகவே சூட்கேசை திறந்து பரிசோதித்திருக்கலாம். செய்யவில்லை. அதற்கு காரணம் இருந்தது. “சூட்கேசுக்குள் கடத்தல் தங்கம்தான் இருக்க வேண்டும். பாரமாக வேறு இருக்கிறது. மெல்ல அமுக்கிக் கொண்டால் என்ன?" என்று அந்த அதிகாரிக்கு ஆசை வந்துவிட்டது. தனது காலடியில் மேசைக்கு கீழே சூட்கேசை பத்திரமாக வைத்துக்கொண்டார். சூட்கேஸ் கைமாறிவிட்டது. விமானத்தில் ஏற்றப்படவில்லை. சென்னை விமான நிலையத்துக்குள் வெடித்துவிடப்போகிறது என்று தமிழ் ஈழ இராணுவ உறுப்பினர்களுக்கு விளங்கிவிட்டது. பயணிகள் அனுப்ப வந்த பார்வையாளர்கள் போல் நின்று அனைத்தையும் அவர்கள் கவனித்துக்கொண்டிருந்தார்கள். விமான நிலையத்தை விட்டு வெளியே ஓடி, பொதுத் தொலைபேசி ஒன்றில் இருந்து விமான நிலையத்தோடு தொடர்பு கொண்டனர். “விமான நிலையத்தில் ஒரு சூட்கேசுக்குள் குண்டு இருக்கிறது. உடனே அப்புறப்படுத்துங்கள்” என்று தொலைபேசியில் தகவல் சொன்னார்கள். “ தங்கத்தை கடத்த முற்பட்டவாகள் தான் கயிறு விடுகிறார்கள்” என்று நினைத்து சுங்க அதிகாரி அலச்சியமாக இருந்துவிட்டார். மறுபடியும் தொலைபேசியில் தகவல் சொன்னார்கள். “அனாமதேய மிரட்டல், வழக்கமான ஏமாற்று” என்று நினைத்து பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் தம்பாட்டில் இருந்துவிட்டனர். மூன்றாவது தடவை சூட்கேசின் நிறத்தையும் கூறி தகவல் சொல்லப்பட்டது. சந்தேகம். தகவல் அறிந்த சுங்க அதிகாரிக்கும்“உண்மையாக இருக்குமோ? என்று சந்தேகம் வந்துவிட்டது. ஊழியர் ஒருவரை அழைத்து சூட்கேசை வெளியே கொண்டு செல்லுமாறு பணித்தார். சூட்கேசோடு ஊழியர் செல்ல, சுங்க அதிகாரியும், பாதுகாப்பு உத்தியோகத்தர்களும் கூடவே சென்றனர். விமான நிலைய கட்டிடத்தைவிட்டு அவாகள் வெளியேற முன்னர் குண்டுவெடிப்பு நிகழ்ந்து விட்டது. இலங்கையர் உட்பட முப்பதுக்கு மேட்பட்டோர் பலியானார்கள். நூறுபேர்வரை காயமடைந்தனர். இந்த தாக்குதல் எதிர்பார்த்தது போல் வெற்றி பெற்றிருந்தால் அன்று பனாங்கொட மகேஸ்வரன் விடுதலை இயக்கங்களின் மத்தியில் ஹீரோவாக பார்க்க பட்டிருப்பார். இங்கு ஏற்பட்ட இழுபறி தமிழீழ இராணுவம் என்ற இயக்கத்தை கொள்கை அற்ற இயக்கம் என்ற விமர்சனங்களை பெற வழிவகுத்தது. இதே வேளை தமது இயக்கத்திற்கு ஏற்பட்ட பழியை துடைக்க திட்டம் ஒன்றை தீட்டினார் மகேஸ்வரன். செப்படம்பர் மாதம் 23 ஆம் திகதி 1985 நல்லிரவு 12மணியளவில் கிளிநொச்சி பொலிஸ்- இராணுவ கூட்டு முகாம் முன்பாக ஒரு லொறி வந்து நின்றது. லெறியைச் செலுத்தியவர் இறங்கி ஓடிவிட்டார். லெறியில் வெடி மருந்து நிரப்பப்பட்டிருந்த்து. சாரதி இறங்கிச் சென்றதும் லொறி வெடிக்க வைக்கப்பட்டது.பாரிய சத்தத்தோடு லொறி வெடித்தபோது பொலிஸ் நிலைய கட்டிடங்கள் சேதமாகின. பொலிஸ் நிலையத்திலும், அதனைச்சுற்றியுள்ள பகுதிகளிலும் தீப்பிடித்துக்கொண்டது. லொறியில் பெற்றோல், டீசல் நிரப்பிய பீப்பாய்களும் வைக்கப்பட்டிருந்தமையால் குண்டு வெடிப்போடு அவையும் பற்றியெரியத் தொடங்கின. அதே வேளையில் பொலிஸ் நிலையம் மீது குண்டு தாக்குதலும் நடத்தப்பட்டது. தாக்குதல் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது பெற்றோல் நிரப்பப்பட்ட பவுசர் ஒன்று வந்து பொலிஸ் நிலையம் முன்பாக நின்றது. அதிலிருந்தும் சாரதி இறங்கி ஓடிவிட்டார். பவுசரை வெடிக்க வைக்க முயன்றார்கள். பவுசர் வெடிக்கவில்லை. பொலிஸ்- இராணுவ கூட்டுப்படை நிலையத்துக்கு அருகேதான் பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் குதம் இருந்தது. பவுச்சர் வெடித்திருந்தால் அந்தப் பெற்றோல் குதமும் பற்றியெரிந்திருக்கும். நகரெங்கும் பலத்த சேதம் ஏற்பட்டிருக்கும். பவுசரை வெடிக்க வைத்து பெற்றோல் குதத்தையும் நாசம் செய்வதே தாக்குதல் நடவடிக்கையின் நோக்கங்களில் ஒன்றாக இருந்த்து. ஆனால் பவுசர் வெடிக்கவில்லை. அதனையடுத்து மீண்டும் மோட்டார் ஷெல் தாக்குதல் தொடர்ந்தது. பொலிஸ் நிலையத்திலிருந்து பொலிசார் தப்பிச் சென்றதால் பலத்த உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டன. தாக்குதல் நடைபெற்றபோது கிளிநொச்சி பொலிஸ், இராணு கூட்டு முகாமில் 57 இராணுவ வீர்ர்களும், 39 பொலிசாரும் ஒரு உயரதிகாரியும் இருந்தனர். தாக்குதலில் ஒன்பது பேர் காயமடைந்தனர். அதில் நான்கு பேர் காயமடைந்தனர். அதில் நான்கு பேர் இராணுவ வீர்ர்கள். நான்கு பேர் பொலிஸ்கார்ர்கள். ஒருவர் அதிகாரி. தாக்குதல் நடவடிக்கைக்கு தமிழீழ இராணுவம் (TEA)உரிமை கோரியது. தம்பாபிள்ளை மகேஸ்வரன்தான் லொறியில் வெடி மருந்து நிரப்பியும், எரி பொருள்களை வைத்தும் வெடிக்கவைக்கும் தெழில்நுட்ப நேரடியாக்க் கவனித்தார். இலண்டனில் கற்றுகொண்ட தெழில் நுட்ப அறிவை பயன்படுத்தி பார்த்தார், தம்பாபிள்ளை மகேஸ்வரன் (பனாகொடை மகேஸ்வரன்) முதன்முதலில் வெடிமருந்து நிரப்பிய லொறியை பயன்படுத்தி நடத்தப்பட்ட தாக்குதலும் அதுதான். இந்த தாக்குதல் உத்தியை பின்னர் புலிகள் கரும்புலி தாக்குதலாக வடிவமைத்து நெல்லியடியில் முதன் முதலில் பயன்படுத்தினர். இதே போல் தம்பாப்பிள்ளை மகேஸ்வரன் மாலை தீவில் ஒரு தீவை விலைக்கு வாங்கி பின்தளமாக பயன்படுத்த முடிவு செய்தார். அந்த நேரம் plote மாலை தீவை கைப்பற்ற எடுத்த முயற்சி தோல்வி அடைந்ததால் இந்த திட்டம் வைவிடப்பட்டது. இதைவேளை ஆபிரிக்கா நாடு ஒன்றின் பின் தளம் அமைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது அந்த முயற்சி பயனளிக்கவில்லை. 1986 ம் ஆண்டு நவம்பர் காலப்பகுதியில் விடுதலைபுலிகள் Eprlf அமைப்பை தடை செய்த பின்னர் தமிழீழ இராணுவமும் தடை செய்யப்பட்டது. இப்பொழுது சில உறுப்பினகள் விடுதலை புலிகளோடு இணைந்து கொள்கின்றனர். எனையோர் இயக்கத்தை விட்டு வெளியேறினர். சண்முகலிங்கம் செந்தூரன்