Search the Community
Showing results for tags 'சிறீ இந்திரகுமார்'.
-
சில மறைமுகக் கரும்புலிகளின் வரலாறுகள் எழுத்தாளர்: சிறீ இந்திரகுமார் மூலம்: விடுதலைப் புலிகள் இதழ் (04.09.08) எழுத்துணரியாக்கம்: தமிழ்நாதம், 12 செப். 2008 (http://www.tamilnaatham.com/articles/2008/sep/special/sriindrakumar20080912.htm) எப்படி இவர்களுக்கு முகங்களில்லையோ, முகவரிகளில்லையோ, அதே போலத்தான் எத்தகைய அறிவாலும், எத்தகைய ஞானத்தாலும் கணிப்பீடு செய்யக்கூடிய வகையில் இவர்களது உள்ளகமும் இல்லை. இங்கே எமுதப்பட்டுள்ளவை எல்லாம் இவர்களோடிணைந்த சில சம்பவங்கள் மட்டுமே. அந்தச் சம்பவங்களினூடு, உங்களால் முடிந்தால் அவர்களது மனவுணர்வுகளை மதிப்பீடு செய்து கொள்ளுங்கள்; அவர்களின் சிந்தனைப் போக்கின் தன்மைகளை உய்த்தறிந்து கொள்ளுங்கள். தனிமனித அபிலாசைகளுக்கு அப்பால் – சுயத்தின் சிறைகளை உடைத்துக் கொண்டு அவர்களது சிந்தனையோட்டம் விரிந்தபொழுது – ஈடினையற்ற தேசபக்தியுடன், தமதுடலோடு தமதுயிரோடு ~தம்மையே தியாகம் செய்யத் துணிந்தவர்கள் அவர்கள். ஓயாத எரிமலையாக சதா குமுறிக்கொண்டிருந்த நெஞ்சுக்குள் ஆற்ற முடியாத தாகமாக எழுந்து கொண்டிருந்த சுதந்திர வேட்கையைத் தணிக்க எதுவும் செய்யவும், எங்கேயும் செய்யவும் தயாரான நெஞ்சுரத்தோடு அவர்கள் பயணம் போனார்கள். ஒரு மாறுபாடான – முற்றிலும் எதிர்மாறான தள நிலைமைக்குள் நின்று அவர்கள் எவ்விதமாக இவற்றைச் சாதித்திருப்பார்கள் என்பதை, ஆற அமர இருந்து, உள்ளத்தைத் திறந்து சிந்தித்துப் பாருங்கள்.நெஞ்சு புல்லரிக்கும்; உயிர் வேர்க்கும். அவர்கள் – கண்களுக்கு முன்னால் விரிந்து கிடந்த இன்றைய ~நவீன நாகரிகத்தின் தாலாட்டில் தான் உறங்கினார்கள்;. புலிகளின் ஒழுக்க வாழ்வின் உயரிய மரபை மீறிவிடச் செய்யும் சூழ்நிலைக்குள் தான் உலாவந்தார்கள்; இவற்றுக்குள் வாழ்ந்தும் – எதற்கும் அசையாத இரும்பு மனிதர்களாக நெருப்பைக் காவித்திரிய எப்படி அவர்களால் முடிந்தது? வெளிப்படையாக – அந்த உல்லாச வாழ்வோடு கலந்து சீவித்த போதும், உள்ளுக்குள் – இதய அறைகளின் சுவர்களுக்குள் – தாயக விடுதலையின் வேட்கையை மட்டுமே சுமந்து கொண்டு, பகைவனின் அத்திவாரங்களைக் குறிவைத்துத் தேடி அலையும் அபூர்வமான நெஞ்சுரம் எங்கிருந்து இவர்களுக்குள் புகுந்தது? பகைவனின் இலக்கை அழிக்கும் தன் நோக்கினை அடைவதற்காக, தன்னையழிக்கவும் துணிந்த இந்த அதிசய மனவுணர்வை எப்படி அவர்கள் பெற்றார்கள்? தாயகத்துக்காகச் செய்யப்படும் உயிர் அர்ப்பணிப்புகளில் ஏற்றத்தாழ்வுகள் கிடையாது என்பது தான் உண்மை. ஆனாலும், இங்கென்றால் – வெடி அதிரும் கடைசி நொடிப்பொழுது வரை – பரிபூரணமான ஒரு ~போர்ச் சூழ்நிலை அந்த வீரனது மனநிலையை அதே உறுதிப்பாட்டோடு பேணிக்கொண்டேயிருக்கும். ஆனால் அங்கு……….? அது முற்றிலுமே தலைகீழான ஒரு தளநிலைமை. மானிட இயல்புணர்வுகளைத் தூண்டி – அவற்றுக்குத் தீனிபோட்டு – சுய கட்டுப்பாட்டை இழக்கச் செய்து – மன உறுதிப்பாட்டைச் சிதைத்து விடக்கூடிய உல்லாசத்தின் மடி அது. அதில் படுத்துறங்கி – பகை தேடி, வேவு பார்த்து, ஒழுங்கமைத்து, குறி வைத்து வெடிபொருத்திப் புறப்பட்டு, மனிதக்குண்டாகி………. எல்லாவற்றையும் தானே செய்வதோடு – பகையழிக்கும் போது தனையழிக்கும் போதும் கூட – தன்பெயர் மறைத்துப் புகழ் வெறுக்கின்ற தற்கொடை, ஒரு அதியுயர் பரிமாணத்தை உடையது. உயிர் அர்ப்பணத்தில் அது உன்னதமானது ஈடு இணை அற்றது. இந்த வியப்புமிகு தியாக உணர்வை இவர்களுக்கு ஊட்டியது எது? இவையெல்லாம் – அந்த ~நிழல் வீரர்களினது பன்முகப்பட்ட தோற்றப்பாட்டின் ஓரிரு பக்கங்கள் மட்டுமே. சொல்லப்படாத பக்கங்கள் நிறைய உண்டு; அவை எழுத முடியாத காவியங்கள்;; அவர்கள் முழுமையாக எழுதப்படும் போது – படிக்கின்றவர்கள் விறைத்துப் போவார்கள்;; ஆன்மா உறைந்து சிலையாவார்கள். எப்படி அவர்கள் எதிரியின் உச்சந்தலையில் கூடாரமடித்தார்கள்……….? கூடாரமடித்து – அவனது மண்டை ஓட்டைத் துளையிட்டு அவர்கள் உள்ளே நுழைந்தது எப்படி……….? நுழைந்து – அவனது மூளையின் பிரிவுகளையல்லவா அவர்கள் குறிவைத்தார்கள். அது எப்படி……….? எவ்விதமாக இவையெல்லாம் சாத்தியமானது……….? எத்தகைய மதிநுட்பத்தோடு நகர்வுகளை மேற்கொண்டு, இந்த அதியுயர் இராணுவ சாதனைகளை அவர்கள் படைத்திருப்பார்கள்……….? இந்த விவேகத்தையும் புத்திக்கூர்மையையும் இவர்களுக்கு ஊட்டி, அவர்களை நெறிப்படுத்தி வளர்த்தது எது? உண்மையிலேயே இவையெல்லாம் மேனி சிலிர்க்கச் செய்யும் விந்தைகளே தான்; நம்புதற்கரிய அற்புதங்கள் தான்! மன ஒருமைப்பாட்டோடு தங்களைத் தாங்களே வழிப்படுத்தி, எங்கள் இயக்கத்தின் உயரிய விழுமியங்களைக் காத்த அந்தப் புனிதர்கள்; தான் அழியப்போகும் கடைசிப்பொழுதுகளிலும் நிதானத்துடனும் விவேகத்துடனும் செயலாற்றி, பகைவனின் இலக்குகளை அழிப்பதில் மட்டுமே குறியாக இருந்த அந்தக் கரும்புலிகள்; ~முகத்தை மறைத்து, புகழை வெறுத்து, மனித தியாகத்தின் இமயத்தைத் தொட்டுவிட்ட பிரபாகரனின் குழந்தைகள்………. இனிப் படியுங்கள்