Search the Community
Showing results for tags 'சு.குணா'.
-
https://irruppu.com/2022/11/01/முல்லைத்தீவு-பூனைத்தொடு/ கடற்புலிகளின் முல்லைத்தீவு பூனைத்தொடுவாயில் அமைந்திருந்த கடற்கண்காணிப்புத் தளம் அப்போது வெற்றிலைக்கேணி மற்றும் கட்டைக்காடு இராணுவ கூட்டுதளத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக அமைந்தது. இதனை அழித்தொழிக்க சிங்களப்படை பல முயற்சிகள் மேற்கொண்ட போதிலும் அவை வெற்றிபெறவில்லை. இருந்தும் சிங்களக் கடற்படை விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதியில் கடல்வழி மூலம் தரையிறங்கி தாக்குவற்காக அமெரிக்காவில் கடற்பயிற்சி பெற்று நாடுதிரும்பிய சிங்களக் கடற்படையை வைத்து சிறப்புப் படகு படை (Special Boat Squadron ) ஒன்றை உருவாக்கி அதன் முதலாவது தாக்குதலாக சிங்களக் கடற்படை முல்லைத்தீவு பூனைத்தொடுவாய் கடற்புலிகளின் கடற்கண்காணிப்புத்தளத்தை தெரிவு செய்தது. அதற்கமைவாக 20.10.1996 அன்று காலை வெற்றிலைக்கேணி முகாமிலிருந்து ஆட்லறி மற்றும் மோட்டார் சூட்டாதரவுடனும் கடற்படை மற்றும் விமானப்படையின் பலமான சூட்டாதரவு வழங்க தனது கன்னித்தரையிறக்கத்தை மேற்கொண்டது. இச் சிறப்புக் கடற்படை மீது கண்காணிப்புத்தளப் பாதுகாப்பிற்காக நின்ற கடற்புலிகளின் தரைத்தாக்குதற் படையணியான சூட்டி படையணியினர் சிங்களப்படைகளின் செறிவான தாக்குதலுக்கும் மத்தியில் ஒரு வீரம்செறிந்த மின்னல்வேக முறியடிப்புத் தாக்குதலை மேற்கொண்டனர். இவ்வெற்றிகர முறியடிப்புத்தாக்குதலில் இரண்டு படகு மூழ்கடிக்கப்பட்டதுடன் பல கடற்படையினர் கொல்லப்பட்டனர் , பல நவீனரக ஆயுதங்களும் கைப்பற்றப்படன. இத் தாக்குதலிலிலேயே கடற்புலிகளால் இலகுவாகக் கையாளக்கூடிய அதி நவீன ஒட்டோ டொங்கான் முதன்முதலாகக் கைப்பற்றப்பட்டது. இந்த வெற்றிகர முறிப்புத்தாக்குதலில் நாற்பத்தியிரண்டு போராளிகள் பங்கேற்றனர். இத் தக்குதலில் மூன்று போராளிகள் வீரச்சாவடைந்தனர். இத்தாக்குதலில் அப்போதைய சூட்டி படையணித் தளபதி களத்தை வழிநடாத்த அனைத்து நடவடிக்கைளையும் ஒருங்கினைத்து கடற்புலிகளின் சிறப்புத் தளபதி சூசை அவர்கள் வழிநடாத்தியிருந்தார். பல கற்பனைகளோடும் தொடர்ந்து கடல்வழிமூலம் தரையிறங்கி விடுதலைப்புலிகளுக்கு தொல்லை கொடுக்கலாம் என நினைத்த சிங்கள தலைமைக்கும் கடற்புலிகளின் தரைத்தாக்குதற் படையணியான லெப். கேணல் சூட்டி படையணிப் போராளிகள் கொடுத்த தக்க பதிலடியால் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் இனிமேல் தரையிறங்கித் தாக்க முடியாது என்பதால் சிங்களத்தின் சிறப்புப் படையணியும் கலைக்கப்பட்டது. இத்தாக்குதலில் பங்குபற்றியவரின் உறுதுணையுடன், எழுத்துருவாக்கம், சு,குணா,
-
சர்வதேசக் கடற்பரப்பில் தமிழீழத்திற்கு பலம் சேர்க்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த எமது கப்பல்களில் ஒன்றை 10.03.1999 அன்று காலை இந்தியக் கடற்படை பின் தொடர்ந்தது. இதனை கப்பலிருந்தவர்கள் அவதானித்து இத்தகவலை தமிழீழத்திற்க்கும் சர்வதேசத்தில் இருந்த சர்வதேசப் பொறுப்பாளருக்கும் தெரியப்படுத்தினர். அவர்களும் ஆலோசனைகளை வழங்கிக் கொண்டிருந்தனர். இந்திய கடற்படையோ சரணடையும்படி தொலைத்தொடர்புக்கருவியூடாக அச்சுறித்துக் கொண்டேயிருந்தது மட்டுமில்லாமல் இடைக்கிடையே துப்பாக்கிச்சூடும் கப்பலுக்கு அண்மையாக நடாத்திக்கொணடிருந்தனர். சரணடைவது விடுதலைப் புலிகளின் மரபல்ல அதுமட்டுமன்றி இயக்கத்தின் மூத்த உறுப்பினர்கள் மற்றும் போராளிகள் தரையிலும் கடலிலும் எதிரிசரணடையச் சொன்னபோது எப்படிச் செய்து காட்டினார்களோ அதற்கமைவாக செய்ய வேண்டிய சூழல் கப்பலிலிருந்தவர்களுக்கு ஏற்பட்டது . ஆனால் இக்கப்பலில் பொதுமக்களும் இருந்தார்கள். கிட்டண்ணாவின் கப்பலிலிருந்தவர்களை கிட்டண்ணாவின் கட்டளைக்கேற்ப போராளிகளால் கடலுக்குள் தள்ளிவிட்டு அவர்களை இந்தியக் கடற்படையினர் மீட்டெடுத்தனர். ஆனால் இக்கப்பலில் இருந்த மக்கள் தாங்கள் கப்பலிலிருந்து குதிக்கமாட்டோம் என விடாப்பிடியாக இருந்தார்கள். தவிர இக்கப்பலில் கூடுதலான போராளிகளும் இக்கப்பலில் இருந்ததால் கப்பலிலிருந்தவர்களில் சில கடற்கரும்புலிகளும் இருந்தார்கள். அக்கடற்கரும்புலிவீரர்கள் ஒரு திட்டத்தை முன்வைத்தார்கள். அத்திட்டமானது தாங்கள் கப்பலை தொடர்ந்து செலுத்துவதென்றும் இந்தியக்கடற்படையினர் நெருங்கிவந்து எம்மைக் பிடிக்க முயற்சித்தால் விடுதலைப் புலிகளின் மரபிற்கினங்க நாங்கள் கப்பலையும் அழித்து எங்களையும் அழிப்போமெனக் கூறி கப்பலிலிருந்தவர்களை கப்பலிலிருந்த றபர் படகின் மூலம் வெளியேற்றுவதுமாகும். இத்திட்டம் சர்வதேசப் பொறுப்பாளருக்குத் தெரியப்படுத்தப்பட்டது. அதற்கமைவாக மூன்று கடற்கரும்புலிகள் கப்பலில் இருக்க முயற்சித்தபோதும் சர்வதேசப் பொறுப்பாளரின் கடும்முயற்சியின் பின் இரண்டு பேராக்கப்பட்டனர். அவ்விருவரும் நீண்ட காலமாக ஒன்றாக இவ் விடுதலைப் போராட்டத்தில் பயணித்தவர்களான கடற்கரும்புலி மேஜர் நவநீதன், கப்டன் தோழன். அக்கடற்கரும்புலிகளின் திட்டத்திற்கமைவாக 10.03.1999 அன்று இரவு கப்பலிலிருந்தவர்கள் வெளியேறிய சிறிது நேரத்தில் கப்பலைக் கைப்பற்ற இந்தியக் கடற்படை முயற்சித்த போது கப்பலைத் தகர்த்து தங்களையும் ஆகுதியாக்கிக் கொண்டனர். ஏனையவர்களை இரண்டு நாட்களின் பின்னர் அமைப்பின் வேறொரு கப்பலால் மீட்கப்பட்டனர். எழுத்துருவாக்கம்.சு.குணா.
-
22.04.1987 அன்று விடுதலைப்புலிகளால் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்ட யாழ்மாவட்டம் காங்கேசன்துறை பகுதியில் அமைந்திருந்த காபர்வியூ தங்கக(விடுதி)படைமுகாம் மீதான தாக்குதல் ஒரு பார்வை. யாழ்மாவட்டம் காங்கேசன்துறை பகுதியில் இருந்த துறைமுகமானது காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலைக்குத் தேவையான பொருட்களை கடல்வழிமூலம் கொண்டுவருவதற்காக அமைக்கப்பட்டது.முதலாம் ஈழப்போர் ஆரம்பிக்கப்பட்டவுடன் பெரும்பாலும் படையினருக்குத்தேவையான பொருட்களை கொண்டுவருவதற்காகப் பயண்படுத்தப்பட்டதுடன் .துறைமுகப்பகுதிக்கு சீமெந்துத் தொழிற்சாலைக்கு தேவையான பொருட்களை எடுத்துவர மற்றும் சீமெந்துகளை கொழும்புக்கு அனுப்பும்வகையில் பாரவூர்திகளில் செல்லுபவர்களிடம் தங்ககவிடுதிகளில் உள்ள படையினரும் துறைமுகப்பாதுகாப்பிற்காக அமைக்கப்பட்ட காவலரனில் உள்ள படையினரும் பல்வேறு தொந்தரவுகளில் ஈடுபட்டனர். இப்படையினர் மீது ஒருதாக்குதல் நடாத்தவேண்டிய நிலைக்கு விடுதலைப்புலிகள் தள்ளப்பட்டனர். அதற்கமைவாக அப்போதைய யாழ்மாவட்டத்தளபதி ராதா அவர்களினால் துரிதகதியில் வேவுத்தரவுகள் மேற்கொள்ளப்பட்டன. அவ்வேவுத்தரவுகளை தலைவர் அவர்களிடம் கொடுத்தார்.தளபதி ராதா அவர்கள். வேவுத்தரவுகளை பார்த்து அதன் சாதக பாதக நிலைகளை தளபதி ராதா அவர்களிடம் கூறியதோடு மட்டுமல்லாமல் தனது மெய்பாதுகாப்பாளர்களில் பெரும்பாலானவர்களை இத்தாக்குதலுக்கு அனுப்பிவைத்ததுடன் இத்தாக்குதலுக்கான பயிற்சிகளை வடமராட்சியில் நடாத்தும்படி தளபதி ராதா அவர்களிடம் கூறிப்பிட்டார் தலைவர் அவர்கள்.அதற்கமைவாக பயிற்சிகள் வடமராட்சியில் நடைபெற்றன பயிற்சிகளை தலைவர் அவர்கள் பார்வையிட்டதுடன் ஆலோசனைகளையும் வழங்கினார். பயிற்சிகள் நிறைவுபெற்று தாக்குதலுக்கான திட்டம் தளபதி ராதா அவர்களினால் விளங்கப்படுத்தப்பட்டன. அதற்கமைவாக இரண்டு பாரவூர்தியில் சென்று திகைப்பூட்டும் தாக்குதலை நடாத்திவிட்டு திரும்பிவருவதே திட்டமாகும் .ஒரு பாரவூர்தியில் சொர்ணம் (சொா்ணம் அவர்கள் அந்தக்காலப்பகுதியில் தலைவர் அவர்களின் பாதுகாப்புப் பிரிவிற்க்கு இரண்டாவது பொறுப்பாளாரக இருந்தார். இவரே பிரிகேடியர் சொர்ணம் ஆவார் வீரச்சாவு 15.05.2009) அவர்கள் தலைமையில் செல்லும் போராளிகள படையினர் தங்கும் தங்ககம் (விடுதி)மீது தாக்குதல் நடாத்துவார்கள் .அதேசமயம் மற்றுமொரு பாரவூர்தியில் கப்டன் ஐயா தலைமையில் செல்லும் போராளிகள் காவலரன்கள் மீது தாக்குதல் நடாத்துவார்கள் . அதற்கமைவாக 22.04.1987 அன்று இரவு 10.00 மணியளவில் ஆரம்பித்த இத்தாக்குதல் குறிப்பிட்ட நிமிடத்திற்க்குள் காவலரன்கள் முழுமையான கைப்பற்றப்பட்டதுடன் அக்காவலரனில் உள்ள ஆயுதங்களும் கைப்பற்ப்பட்டன .அதே சமயம் கண்காணிப்புகோபுரத்திலிருந்த படையினர் இவர்கள்மீது தாக்குதல் நடாத்த இதைக் கவனித்த சுபன்(மன்னார் மாவட்டச் சிறப்புத்தளபதி வீரச்சாவு.25.09.1992 ) இன்னொரு போராளியிடம் கூற அவரோ படையினரிடமிருந்து கைப்பற்றிய ஆர்.பி.ஐி எடுத்து கண்காணிப்புக்கோபுரத்தின் மீது குறிதவறாமல் தாக்குதல் மேற்கொள்ள கண்காணிப்புக்கோபுரம் தகர்த்தெறியப்பட்டது. அன்று அப்போராளி அக்கண்காணிப்புக்கோபுரத்தின் மீது மேற்கொண்டதாக்குதல் தவறினால் நிலைமை மோசமாகியிருக்கும். இன்னொரு காவலரனில் போராளிக்கும் படையினருக்கும் கைகலப்பில் படையனரைக் கொன்றான். அப்போராளி இப்படியான பல்வேறு சாகசங்களையும் நிகழத்திய வெற்றிகரத்தாக்குதலில் பன்னிரன்டிற்க்கும் மேற்பட்ட படையினர் கொல்லபபட்டதுடன் அதி நவீன ஆயதங்களும் கைப்பற்ப்பட்ட இவ்வெற்றிகரத்தாக்குதலில் ஆறு போராளிகள் வீரச்சாவடைந்தனர். இவ் வெற்றிகரகொமாண்டோத்தாக்குதலை அப்போதைய யாழ்மாவட்டத் தளபதி ராதா அவர்கள் காங்கேசன்துறையிலிருந்து வழிநடாத்தினார். இச்சம்பவமானது அக்களமுனையில் களமாடியவரின் உள்ளத்திலிருந்து. எழுத்துருவாக்கம்…சு.குணா. இச்சமரில் வீரச்சாவடைந்தவர்கள் விபரம் வருமாறு. கப்டன் பவான் (ஐயா) பொன்னம்பலம் யோககுமார் சுதுமலை தெற்கு, மானிப்பாய், யாழ்ப்பாணம். லெப்டினன்ட் கிர்மானி சிலுவைராசா ஜோன்சன் பேட்டன் குருநகர், யாழ்ப்பாணம். 2ம் லெப்டினன்ட் குணம் மு.யோகேந்திரன் உப்புக்குளம், மன்னார். 2ம் லெப்டினன்ட் குலம் மு.யோகேந்திரன் பள்ளிமுனை, உப்புக்குளம், மன்னார் வீரவேங்கை தாஸ் கஸ்பார் சூசைதாசன் நிலாச்சேனை, உயிலங்குளம், மன்னார். வீரவேங்கை சுவர்ணன் பொன்னையா சிறிபோஸ் சிறுவிளான், இளவாலை, யாழ்ப்பாணம். For more images: http://irruppu.com/2021/04/21/காங்கேசன்துறை-பகுதியில்/
-
கப்டன் மாயவன் செபஸ்ரியான்பிள்ளை சிவகுமார். பிறப்பு: 13.09.1975 வீரச்சாவு . 18.05.1995 சம்பவம். பலாலியிலிருந்து தொண்டமனாறு நோக்கி முன்னேறிய இலங்கைப் இராணுவத்துடனான நேரடிச் சமரின் போது.வீரச்சாவு . 1991ம் ஆண்டு பிற்பகுதியில் அமைப்பில் இணைந்த மாயவன் அடிப்படை இராணுவப் பயிற்சியை முடித்து யாழ்மாவட்டத் தாக்குதலனியில் இணைக்கப்படுகிறான்.அங்கு களப் பயிற்சிகளையும் களஅனுபவங்களையும் பெற்று தனது திறமைகளை வளர்த்துக்கொள்கிறான்.யாழ் மாவட்டத்தில் நடைபெற்ற அநேகமான சமர்களில் தனது திறமையைக்காட்டினான். சக போராளிகளிடத்தில் அன்பாக பழகுவதுடன் தனக்குத் தெரிந்தவைகளை சக போராளிகளுக்கு அவர்களுக்கு விளங்கும் வகையில் சொல்லிக்கொடுத்து அவர்களையும் முன்னேற்றியவன் . முகாமில் நடந்த கலைநிகழ்வுகளிலும் சரி விளையாட்டுகளிலும் பயிற்சிகளிலும் அனைவருக்கும் முன்மாதிரியாக செயற்பட்டவன்.காயமடைந்து மருத்துவமனையிலிருந்து முகாமிற்கு வரும்போராளிகளுக்கான சகல வேலைகளிலும் முன்மாதிரியாக செயற்பட்டவன். மணலாறு மண்கிண்டிமலை இராணுவமுகாம் தகர்ப்பிலும் பங்குபற்றினான். இத்தாக்குதலுக்குப் பழிதீர்க்குமுகமாக விமானப்படையினரால் யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ளப்பட்ட விமானத்தாக்குதலில் பாடசாலை சென்ற இவனது சகோதரி உட்பட்ட பாடசாலை மாணவர்கள் கொல்லப்பட்டனர். 1994 ம் ஆண்டு காலப்பகுதியில் கனரக ஆயுதப் பயிற்சியாளனாக நியமிக்கப்பட்டு அங்கு தனது திறமையான செயற்ப்பாட்டைக் காட்டி போராளிகளின் வளர்ச்சியில் பெரும் பங்காற்றியவன்.பல சமர்களில் பங்கேற்று அச் சமர்களின் அனுபவங்களை நகைச்சுவையோடு சக போராளிகளுக்கு சொல்லிக் கொடுத்தவன். அன்று பலாலியிலிருந்து இராணுவம் முன்னேறுவதாக எமது முகாமுக்கு அறிவிக்கப்பட்டது.உடனடியாக அணிகள் தயார்படுத்தப்பட்டு களமுனைக்குச் சென்றன அவ் அணிகளுடன் சென்ற மாயவன் களமுனைத்தகவல்களுடன் வருவானென எதிர்பார்த்த வேளையில் தான் தொலைத்தொடர்புக்கருவியூடாக அச் சோகச் செய்தி எம்மை வந்தடைந்து. முன்னேறிய இராணுவத்தினருடனான மோதலில் வீரச்சாவடைந்தான். இவனால் அக்காலப்பகுதியில் உருவாக்கப்பட்ட போராளிகள் இறுதிவரை போராடினார்கள். எழுத்துருவாக்கம்..சு.குணா. http://irruppu.com/2021/05/18/கப்டன்-மாயவன்/
-
மேஐர் தசரதன் சந்திரன் சுபாகரன் வீரச்சாவு 29.06.2001 1992 ம் ஆண்டு தன்னை விடுதலைப் புலிகளமைப்பில் இணைத்துக் கொண்ட தசா ஆரம்ப இராணுவப் பயிற்சியை முடித்துக்கொண்டு கடற்புலிகளின் படைத்துறைப் பள்ளிக்கு சென்று அங்கே பல்வேறு பயிற்சித் திட்டங்கள் மற்றும் வகுப்புகளில் இணைந்து கொணடு மிகுந்த ஆர்வத்துடன் கற்றான். தொடர்ந்து மேஐர் போர்க் அவர்களுடன் சிலகாலம் நின்ற தசா அங்கே இயந்திரவியல் சம்பந்தமாக படித்துக்கொண்டு அங்கிருந்த சர்வசேத்திலிருந்து வந்த படகுகளைப் பராமரித்து அதற்கான பாதுகாப்புப் பணிகளிலும் ஈடுபட்டான். போர்க் வீரச்சாவடைய லெப்.கேணல் மலரவனுடன் பொறியியற்துறையில் சிலகாலம் பங்குபற்றி அங்கே வெடிமருந்துகள் சம்பந்தமாக கற்றதுடன் படகுகளுக்கு ஆயுதங்கள் பூட்டுவது சம்பந்தமான தனக்கான தேடல்மூலம் நிறையவே கற்றுக் கொண்டான்.தொடர்ந்து மாவீரரான லெப் கேணல் திருவடி அவர்களுடன் இணைந்து தென் தமிழீழ விநியோக நடவடிக்கையில் பெரும் பங்காற்றிய தசா அதன் பின்னர் லெப் கேணல் அண்ணாச்சியுடன் இணைந்து சாளையில் படகுகளை தேவைகளுக்கேற்ப இடங்களுக்கு மாற்றுவது படகுக்காவிகளைப் பராமரிப்பதுடன் அக்காலப்பகுதியில் தமிழீழத்திற்க்குப் பலம் சேர்க்கின்ற பணிகளில் படகுச் சாரதியாகச் சிறப்புத்தளபதியின் அனுமதியுடன் செவ்வனவே பங்காற்றினான். தொடர்ந்து கனரக ஆயுதப் பயிற்சி பெற்று பலகடற்சமர்களில் ஐம்பது கலிபர் துப்பாக்கியோடு பங்காற்றினான்.ஐம்பது கலிபரின் சிறந்த சூட்டாளனுமாவான். இந்தநேரத்தில் தான் இந்தியா விநியோகத்திற்காகவும் அதற்கான பாதுகாப்புப் பணிகளுக்காகவும் ஒருதொகைப் போராளிகள் மன்னாருக்குச் சென்றபோது அங்கு சென்ற தசா அப்பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கையில்.இவனது திறமையான செயற்பாடுகளைக் கவனித்த கடற்புலிகளின் முதலாவது தளபதியாகவிருந்த கங்கைஅமரன் அவர்களின் மெய்ப் பாதுகாவலனாகவும் அவரின் வாகனச் சாரதியாகவும் இணைத்துக்கொள்கிறார் . அப்பணியில் இருக்கையில் பணி நிமித்தமாக சென்றுகொணடிருக்கையில் 29.06.2001 அன்று கிளிநொச்சி ஆனைவிழுந்தான் பகுதியில் ஆழஊடுருவும் படையினரின் கிளைமோர்த் தாக்குதலில் தளபதி லெப் கேணல் கங்கைஅமரன் அவர்களுடன் வீரச்சாவடைகிறான். எழுத்துருவாக்கம்..சு.குணா http://irruppu.com/2021/06/29/மேஐர்-தசரதன்-20ம்-ஆண்டு-வீர/
-
http://irruppu.com/2021/06/29/தரையிறங்கிய-சிறப்புப்பட/ June 29, 2021 1990.06 .மாதம் நடுப்பகுதியில் இரண்டாம்கட்ட ஈழப்போர் ஆரம்பமாகியதும் இலங்கை அரசஇயந்திரம் முழுப்படைப்பலத்தையும தமிழீழமக்களுக்கெதிராக முழுவீச்சுடன் செயற்பட்டுக்கொண்டிருந்தது. இவைகளுக்கெதிராக விடுதலைப்புலிகளும் கடுமையாக போரிட்டுக்கொண்டிருந்தனர்.அந்தவகையில் பொதுமக்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக அமைந்த இலங்கை இராணுவமுகாம்களில ஒன்றான திருகோணமலை மாவட்டம் முதூர் நகர் பகுதியில் அமைந்திருந்த இராணுவமுகாமும் ஒன்றாகும்.இம்முகாமில் ஐம்பதிற்க்கும் மேற்பட்ட இலங்கை இராணுவத்தினர் இருந்தனர்.இதை இரண்டாம்கட்ட ஈழப்போர் ஆரம்பித்ததும் விடுதலைப்புலிகள் தங்களது முற்றுகைக்குள் கொண்டுவந்தனர்.இம்முகாம் கப்டன்.பேனாட் அவர்கள் மற்றும் மேஐர்.பவான் அவர்கள் தலைமையிலான போராளிகள் இலங்கைப்படைகளை வெளியேறாத வண்ணம் ஒருமுற்றுகைக்குள் வைத்திருந்தனர்.இப்படைமுகாமில் உள்ளவர்களுக்கு ஆதரவாகவும் இம்முகாமில் உள்ளவர்களை மீட்பதற்காகவும்.பல்வேறு கடல்வழிமூலம் தரையிறக்க முயற்சிகளை இலங்கைஇராணுவம் மேற்கொண்டது. இருந்தாலும் விடுதலைப்புலிவீரர்களின் கடுமையான தாக்குதலுக்கு ஈடுகொடுக்கமுடியாமல் அம்முயற்சிகளிலிருந்து பின்வாங்கியது இலங்கை முப்படைகள்.இருந்தாலும் 14.06.1990 அன்று இரவு திருகோணமலைமாவட்டம் முற்றுகைக்குள்ன முகாமிலிருந்து சுமார் ஆறுகிலேமீற்றர் தூரத்திலிலுள்ள இலக்கந்தை என்னுமிடத்தில் நள்ளிரவில் இங்கைஇராணுவத்தின் அதிசிறப்புப்காட்டுபபயிற்சி பெற்ற எண்பத்திமூன்று பேரைக்கொணட சிறப்பு அணிகளை தரையிறக்கியது. தரையிறங்கிய படைகள் மெதுமெதுவாக முதூர் நகர் பகுதியில் விடுதலைப்புலிகளால் முற்றுகைக்குட்பட்ட இராணுவமுகாமை நோக்கி நகர்ந்து வந்தனர் .இப்படை நகர்வை விடுதலைப்புலிகளின் வேவுவீரர்கள் அப்பகுதிக் பொறுப்பாளாரான பேனாட் அவர்களுக்குத் தெரிவித்தனர். பேனாட் அவர்களோ அணிகளை ஒருங்கினைத்து விடுதலைப்புலிகளுக்குச் சாதகமான பகுதியான கட்டைப்பறிச்சான் பாலத்திற்க்கு அண்மையாக வழிமறித்து ஒருபாரிய வீராவேசத்துடன் இருந்த சிறிய அணிகளையும் ஒருங்கினைத்து தாக்கினார்கள்.இச்சமர் 15.06.1990 அன்று காலை ஒன்பதுமணியளவிலிருந்து மாலை மூன்றுமணிவரை நீடித்தது.இத்தீரமிகு தாக்குதலில் தரையிறங்கிய சிறப்புப்படையணிகளில் நாற்பதிற்க்கும் மேற்பட்டபடையினர் கொல்லப்பட்டதுடன் அவர்களது ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டன.எஞ்சிய படையினரை கலைத்துச் சென்ற விடுதலைப் புலிகள் மீது விமானப்படையினரின் மூர்கத்தனமான தாக்குதல் நடாத்தி பாதுகாப்பு வழங்க கடற்படையினரின் படகுகளில் ஏறி தப்பியோடினர். இவ்வீரம் செறிந்த சமரில் மேஐர்.பவான் வீரச்சாவு.(03.07.1990.)அவர்கள் கப்டன் .குட்டி அவர்கள்.வீரச்சாவு.(17.06.1990) மேஐர்.வெற்றிச்செல்வன்.அவர்கள்.வீரச்சாவு. (09.06.1992)மேஐர் .வினோத்.அவர்கள்.(வீரச்சாவு. லெப்.நிமால்.அவர்கள்.வீரச்சாவு.(30.06.1991.). ஆகியோர். தலைமையிலான அணிகள் இச்சமரில் தத்தம் பகுதிகளை இராணுவம் வந்துவிடக்கூடாது என்கிற நிலையில் தலைவனை மனதில் நிலைநிறுத்தி கடுமையாகப் போரிட்டு இவ்வெற்றிகர நடவடிக்கைக்கு மேலும் வலுச்சேர்த்தார்கள்.இவ்வெற்றிகர தாக்குதலில் வீரவேங்கை ஜெகன் அவர்கள் வீரவேங்கை .டங்கா அவர்கள் வீரச்சாவடைந்தார்.இவ்வெற்றிகர நடவடிக்கைகளை கப்டன்.பேனாட் அவர்கள். (வீரச்சாவு.01.09.1990)செவ்வனவே வழிநாடாத்தியிருந்தார்.இத்தாக்குதல்களில் வீரமிக்க போராளிகள் சுமார் அறுபதுபேர்கள் தான் இருந்தார்கள். எப்படைவரினும் எமது வீரச்சாவடைந்த உடலைத் தாண்டிதான் வரவேண்டும் என்ற ஒவ்வொரு போரளியின் உணர்வாலேதான் இவ்வெற்றி தலைநர்ப்போராளிகளுக்குச்சாத்தியமாகிற்று. எழுத்துருவாக்கம்…சு.குணா. கப்டன் பேனாட் காளிக்குட்டி இரத்தினசபாபதி புதுக்குடியிருப்பு, தம்பலகாமம், திருகோணமலை.
-
மண்டைதீவுச் சமரின் பின் அச்சமரில் பங்கு பற்றிய போராளிகளைச் சந்தித்த தலைவர் அவர்கள் எதிரி ஒரு பெரும் தாக்குதலுக்குத் தயாராகுகிறான்.அதற்க்குத் தயாராக இருக்கும்படியும் அதற்கான ஆலோசனைகள் பலவற்றை போராளிகளிடத்தில் கூறினார். அதற்கமைவாக வலிகாமம் பகுதியிலுள்ள மாதகல் திருவடிநிலையில் பதினைந்துபேர் கொண்ட சிறு அணி நிலை கொள்ள வேவு அணிகள் முன்னே தமது வேவுத்தகவல்களைச் சேகரித்தன .09.07.1995 அன்று காலை எதிரி பலத்த எறிகணைத்தாக்குதல் மற்றும் விமானத்தாக்குதல்களை நடாத்தியவாறு பாரியதொரு முன்னேற்ற நடவடிக்கையை திருவடிநிலை கடற்கரையோரப் பிரதேசம் நோக்கி ஆரம்பித்தான் . அங்குநின்ற அணிகள் சிறுசிறு தாக்குதல்களை நடாத்தி பின்வாங்கின. இவ் அணிகளுடன் மேலதிகமாக மூத்த தளபதி பானு அவர்களின் தலைமையில் மேஐர் பசிலன் அதிகாரிகள் பயிற்சிக்கல்லூரி அணிகளும் இன்னும் பல அணிகளும் அராலியில் ஒரு அரண் அமைத்து எதிரியின் முன்னேற்றத்தை தடுத்தனர்.ஆனால் 12.07.1995 அன்று அணிகள் பின்னால் எடுக்கப்பட்டதுடன் அனைத்து அணிகளும் மருதனார்மடப் பாடசாலையில் ஒருங்கினைத்து மூத்த தளபதி பொட்டு அவர்கள் தலைமையில் ஒரு பெரும் தாக்குதலுக்கான திட்டம் விளங்கப்படுத்தப்பட்டதுடன் http://irruppu.com/wp-content/uploads/2021/07/IMG-7d8d9dc474fd390ee1a25386a8036ea6-V.jpg எதிரியின் முன்னேறிப்பாய்ச்சல் இராணுவ நடவடிக்கையால் மக்கள் படுகின்ற இன்னல்களைப் பற்றி குறிப்பிட்ட மூத்த தளபதி பொட்டு அவர்கள் இராணுவம் கைப்பற்றிய பிரதேசங்களை பலப்படுத்துவதற்க்கு முன் தாக்குதல் நடாத்த வேண்டுமெனவும்.அணிகள் பிரிக்கப்பட்டு அளவெட்டி பகுதிக்கு மூத்த தளபதி பானு அவர்களும் உதவியாக( 18.10.1995 அன்று சூரியக்கதிர் இராணுவ நடவடிக்கைக்கு எதிரான சமரில் வீரச்சாவடைந்த லெப் கேணல் சங்கர் அவர்களும் நியமிக்கப்பட்டனர்) .14.07.1995 அன்று அதிகாலை சண்டை ஆரம்பமாகிய சில நிமிடங்களில் முன்னரன்கள் கைப்பற்றப்பட்டு அணிகள் முன்னேறிச் சென்று அருணோதயாப் பாடசாலை உட்பட்ட பெரும்பிரதேசம் எமது பூரண கட்டுப்பாட்டிற்குள் வந்தன.அன்றைய தினம் மதியம் எமதணிகளுடன் மேலதிகமாக மட்டு.அம்பாறைப் படையணிகள் இணைக்கப்பட்டு மாசியப்பிட்டி பகுதியில் தொடர்ந்து சண்டை நடைபெற்றுக்கொண்டிருந்த பகுதிக்கு இவ் அணிகள் அனுப்ப்பட்டு அங்கு நின்ற அணிகளுடன் இணைந்து சண்டையிட்டு அவ்விடங்களும் கைப்பற்றப்பட்டன. http://irruppu.com/wp-content/uploads/2021/07/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D1.jpg இவ் வெற்றிகர இராணுவ நடவடிக்கையை தலைவர் அவர்களின் ஆலோசனையுடன் மூத்த தளபதி பொட்டு அவர்கள் வழி நடாத்தினார்.இந் நடவடிக்கையில் பெருமளவு படையினர் கொல்லப்பட்டு பெருமளவு ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டு ஒரு புக்காரா விமானமும் சுட்டு வீழ்த்தப்பட்டது.படையினரால் வன்வளைப்புச் செய்யப்பட்ட பிரதேசங்களும் வெற்றிகரமாக மீட்கப்பட்டது்.இந் நடவடிக்கையில் எழுபது போராளிகள் வீரச்சாவடைந்தனர். எழுத்துருவாக்கம்..சு.குணா. http://irruppu.com/2021/07/14/முன்னேறிப்பாய்ச்சலும்-ப/
-
தமிழீழத்தின் இதயபூமியான மணலாற்றில் காலம்காலமாக அங்கு வாழ்ந்து வந்த தமிழ்மக்களை மிருகத்தனமாக தாக்கி விரட்டி விட்டு அங்கே சிங்கள அரசின் திட்டமிட்ட சிங்கள குடியேற்றத்திற்கான ஏற்பாடுகளை இலங்கை இராணுவம் துரிதகதியில் மேற்கொண்டு வந்தது.அதே நேரம் இத்திட்டமிட்ட சிங்களக் குடியேற்றத்திற்க்கு பாதுகாப்பு வழங்குவதற்காக இலங்கை இராணுவத்தின் காவலரன்களும் துரிதமாக அமைக்கப்பட்டன. இத்தகவல்களை மணலாற்று வேவுஅணிகள் தளபதிகளான அன்பு அவர்கள் மற்றும் வீமன் அவர்களுக்குத் தெரியப்படுத்தினார்கள்.இத்தளபதிகளோ எமது தலைவர் அவர்களுக்குத் தெரியப்படுத்தினார்கள்.வடக்கு கிழக்கு தமிழர்களின் மாகாணங்களைப் பிரிப்பதற்காகவும் தமிழர்களின் தொடர் நிலப்பரப்பினைச் சிதைப்பதற்காகவுமே இத்திட்டமிட்ட சிங்களக்குடியேற்றத்திட்டம் அமைக்கப்படுவதாகவும் இவைகளுக்குப்பாதுகாப்பு வழங்கும் காவலரன்களைத் தாக்கி அழிக்க உத்தரவிட்டதோடு அதற்கான ஆலோசனைகளையும் வழங்கி இத்தாக்குதலில் குடியேற்றப்பட்ட சிங்களமக்களுக்கு எந்தவித சேதமும் ஏற்படக்கூடாது என்று கூறி தளபதிகளை வழியனுப்பி வைத்தார். தலைவர் அவர்கள்.வேவு அணிகள் கொடுத்ததரவுகளின் அடிப்படையில் தலைவர் அவர்கள் நல்லதொரு தாக்குதற்த்திட்டத்தைக் கொடுத்தார்.அதற்கமைவாக இருநூறுபேர்கொண்ட ஆண் பெண் போராளிகளைக் கொண்ட அணிகள் பிரிக்கப்பட்டு கடுமையான பயிற்சிகள் வழங்கப்பட்டன பயிற்சிகள் நிறைவுபெற்று தாக்குதல் திட்டம் கமல் முகாமில் சிறப்புத் தளபதி அன்பு அவர்களால் விளங்கப்படுத்தப்பட்டது. (அத்துடன் களத்தை வழிநடத்துகிற தளபதி வீமன் அவர்களுக்கு சிறப்புத்தளபதி அன்பு அவர்கள் தெளிவான ஒருவிடயத்தைக் கூறினார்.தமிழர்தாயகப்பிரதேசத்தின் மணலாற்றின் முக்கியத்துவத்தை ஆழமாகவிளங்கப்படுத்தி அதனைப் பாதுகாக்கும் பொறுப்பை எமது தலைவர் அவர்கள் எங்களிடம் ஒப்படைத்திருக்கிறார்.எனவே எமது மக்களின் தாயகப்பரப்பு துண்டாடப்படாமல் இருக்க என்ன விலைகொடுத்தாலும் இக்காவலரன்களை அழிக்கவேண்டும். ஏனெனில் இக்காவலரன்களை அழிக்காமல் விட்டால் திட்டமிட்ட சிங்களக்குடியேற்றத்தை தடுக்கவும் முடியாது என்பதற்காகவே அவர் கடும்தொணியில் இவ்விடயத்தைக்கூறினார்.ஒவ்வொருபோராளியும் இவ்விடயத்திலிலுள்ள அர்த்தத்தைப் புரிந்து கொண்டு இக்காவலரன்களை அழிக்கவேண்டுமென மனதில் உறுதிபூண்டார்கள்.) திட்டத்தின்படி திட்டமிட்ட சிங்களக்குடியேற்றத்திட்டத்திற்க்கு பாதுகாப்பாக அமைக்கப்பட்ட அனைத்துக் காவலரன்களை அதாவது இருபத்திஐந்திற்க்கும் மேற்பட்டகாவலரண்கள். தாக்கியழிப்பதே திட்டமாகும். திட்டத்திற்கமைவாக 02.03.1992 அன்று இரவு வேவு அணிகள் பெருஙகாடுகளுக்கூடாக மிகவும் தாக்குதல் அணிகளை மிகவும இரகசியமாக நகர்த்தி 03.03.1992 அன்று அதிகாலை சுமார் ஒருமணியளவில் எதிரியின் தாக்கவேண்டிய காவலரன்களுக்கு அண்மையாகக் கூட்டிச்சென்று விட்டனர். தாக்குல் அன்றைய தினம் அதிகாலை இரண்டு மணியளவில் ஆரம்பாமானது தாக்குதல் ஆரம்பித்த குறுகிய நேரத்தில் அனைத்துக் காவலரன்களும் விடுதலைப்புலிவீரர்களின் பூரணகட்டுப்பாட்டிற்க்குள் வந்தது.கைப்பற்றப்பட்ட அனைத்துக் காவலரன்களையும் அழித்துவிட்டு கைப்பற்றப்பட்ட ஆயுதங்களுடன் புலிகள் தளம் திரும்பினர். இவ்வெற்றிகரத்தாக்குதலை களத்தில் தளபதி வீமன் அவர்களும் உதவியாக லெப்.கேணல்.கஐந்திரன் அவர்களும்(வீரச்சாவு..30.12.2006) வழிநடாத்த அனைத்து நடவடிக்கைகளையும் ஒருங்கினைத்து முல்லை மணலாறு மாவட்டச் சிறப்புத் தளபதி லெப்.கேணல். அன்பு அவர்கள் வீரச்சாவு.(12.11.1993) செவ்வனவே வழிநடாத்தியிருந்தார். இத்தாக்குதலுக்கான வேவுத்தகவல்களை சேகரித்துத் தந்ததுடன் தாக்குதல் அணிகளையும் களத்திற்க்குள் குறிப்பிட்டநேரத்திற்க்குள் நகர்த்தி சண்டையிலும் பங்காற்றி பின்னாளில் வீரச்சாவடைந்த லெப்.கேணல் .இளம்புலி அவர்களையும் நினைவுகூருகின்றோம். இவ்வெற்றிகரத்தாக்குதலில் களத்தை வழிநடாத்திய தளபதி மேஐர்.வீமன் அவர்கள் வீரச்சாவடைந்தார். எழுத்துருவாக்கம்..சு.குணா. http://irruppu.com/2021/08/15/திட்டமிட்ட-சிங்களக்-குடி/
-
நீண்டகாலமாக மன்னாரிலிருந்து ஆழ்கடலில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுக்கொண்டிருந்த தமிழ்மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படயினர் தொடர்ச்சியான தாக்குதலை மேற்கொண்டுவந்தனர். அதுமட்டுமல்லாது கடற்புலிகளின் இந்திய விநியோகத்திற்க்கும் இக்கடற்படையினர் பெரும் அச்சுறுத்தலாகவும் இருந்தனர். இருந்தாலும் கடற்புலிகளும் இக்கடற்படையினர் மீது பல தாக்குதல் முயற்சிகளை மேற்கொண்டனர்.ஆனாலும் அவைகளும் வெற்றியளிக்கவில்லை.மாற்றுத்திட்டமொன்றின் மூலம் தான் தாக்குதல் நடத்தலாம் அதுவென்ன என்கிற எண்ணமே போராளிகளிடமும் தளபதிகளிடமும் இருந்தது. இப்பிரச்சனைகள் அனைத்தும் எமது தலைவர் அவர்களின் கவனத்திற்க்கு கொண்டுவந்தனர் தளபதிகளான சூசை அவர்களும் தளபதி பிருந்தன் மாஸ்ரர் அவர்களும் இவ் அனைத்து விடயங்களையும் அக்களநிலவரங்களையும கேட்டறிந்து தீவிரமாக ஆராய்ந்த எமது தலைவர் அவர்கள். மீனவர்கள மீதுதானே தாக்குதல் நடத்துகிறார்கள் என்றால் அதற்கேற்றாற்போல ஒரு நல்லதொரு தாக்குதற்திட்டம் எமது தலைவர் அவர்களால் கொடுக்கப்பட்டது.அதற்கமைவாக ஒரு ரோலர் கொள்வனவு செய்து அவ்ரோலரில் வெடிமருந்துகள் பொருத்தப்பட்டு மூன்று கடற்கரும்புலிகள் செல்வார்கள் . அவர்கள் சாதரண மீன்பிடி ரோலரைப்போல மீன்பிடியில் ஈடுபடுவார்கள் .இலங்கைக்கடற்படையினர் தமது வழமையான தாக்குதலை அப்பாவி மீனவர்கள் மீது நடாத்தலாம் என எண்ணி ரோலருக்கு மிக அண்மையாக வரும்போது இக்கடற்கரும்புலிகள் மீன்களைக் கொடுப்பது போல பாவனைசெய்து வரும் இலங்கைக் கடற்படையின் டோறாப்பீரங்கிக்கலம் மீது தாக்குதல் நடாத்துவார்கள் இதுவே அத்தாக்குதற் திட்டமாகும். திட்டத்திற்கமைவாக நீண்ட கடலனுபவம் கொண்ட கடற்கரும்புலிவீரர்கள் தெரிவுசெய்யப்பட்டனர். தாக்குதற் திட்டத்திற்கமைவாக 2000 ஆண்டு. மூன்றாம் மாதம் முற்பகுதியில் இக்கடற்கரும்புலிவீரர்கள் தமது இலக்கை அதாவது மக்களுக்கு பாரிய அழிவுகளை கொடுத்துககொண்டிருந்த இலங்கைக்கடற்படையினரின் கலத்தை அழிப்பதற்கான தங்களது பயணத்தை ஆரம்பித்தார்கள்.கடுமையான காற்று சீரற்ற காலநிலை இவைகளுக்கும் மத்தியில் தங்களது இலக்கை நோக்கி இக்கடற்கரும்புலிவீரர்கள் சென்றார்கள்.கிட்டத்தட்ட ஒருவாரமாக அக்கடலில் தங்களது இலக்கிற்க்காக அலைந்து திரிந்தார்கள் . இறுதியாக 12.03.2000 அன்று அதிகாலை இவர்களது ரோலரை அண்மித்த இலங்கைக்கடற்படையினர் இவர்களை விரட்டி மீன்களைப்பறித்து இவர்களை தாக்கமுற்பட்டபோது அவ் அதிவேகடோறாப்படகுமீது தாக்குதல் நடாத்தி மன்னார் கடலிலே தமிழ் மீனவர்களின் வாழ்வாதாரத்திற்காக ஒரு புதியவரலாற்றை எழுதிச்சென்றார்கள் இக்கடற்கரும்புலிவீரர்கள். http://irruppu.com/wp-content/uploads/2021/08/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF-%E2%80%A6%E0%AE%AE%E0%AF%87%E0%AE%90%E0%AE%B0%E0%AF%8D.%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-840x473.jpg அதுவரை தமிழ் மீனவர்களுக்கு இலங்கைக் கடற்படையினரால் இருந்த தொந்தரவும் நீங்கியது.மீண்டும் தமிழ்மீனவர்கள் மீது கைவைத்தால் இப்படியான தாக்குதல் நடக்குமென்பதால் இலங்கைக்கடற்படையினரும் தமிழ்மீனவர்கள் மீது தாக்குதலை நடத்தாமல் ஒதுங்கிக்கொண்டனர். இத்தீரமிகு தாக்குதலில் ஒரு டோறாப்படகு பாரியசேதமடைந்ததுடன் பலகடற்படைபடையினர் கொல்லப்பட்டதுடன் பலகடற்படையினர் படுகாயமடைந்தனர். இத்தீரமிகு தாக்குதலை எமது தலைவர் அவர்களின் திட்டத்திற்கமைவாக கடற்புலிகளின் அப்போதைய தளபதி பிருந்தன் மாஸ்ரர் அவர்கள் செவ்வனவே வழிநடாத்தியிருந்தார். இவ்வீரமிகு தாக்குதலில் வீரச்சாவடைந்த கடற்கரும்புலிகளான… கடற்கரும்புலி …மேஐர்.பரதன். கடறகரும்புலி…மேஐர்.மதன். கடற்கரும்புலி..கப்டன்.தினேஸ். எழுத்துருவாக்கம்…சு.குணா http://irruppu.com/2021/08/10/ஆழ்கடல்-தமிழ்-மீனவர்களின/
-
1993 ம் ஆண்டு காலப்பகுதியில் இலங்கைக் கடற்படையினர், வடமராட்சிப்பகுதியில் கஸ்ரத்தின் மத்தியில் கடற்தொழிலில் ஈடுபடுகின்ற மீனவர்கள் மீது சுட்டும் வெட்டியும் அவர்களின் படகுகளை மூழ்கடித்தும் ஒரு மிலேச்சத்தனமான தாக்குதல்களை அதுவும் கரையிலிருந்து நான்கு கடல்மைல் தூரத்திற்குள் வந்து மேற்கொண்டிருந்தனர். இதனைக் கடற்புலிகள் தலைவர் அவர்களுக்குத் தெரியப்படுத்தினார்கள். தலைவர் அவர்களோ எங்களிடம் அதற்கேற்ற ஆயுதம் இல்லை நீங்கள் அக் கடற்படையினர் மீது தாக்குதல் நடாத்தி அவர்களிடமிருந்து ஆயுதங்களைக் கைப்பற்றி அவர்களுக்கெதிராகப் பயன்படுத்தும்படியும் அதற்கான ஆலோசனைகளையும் வழங்கி அதற்கான பொறுப்பை தளபதி லெப் கேணல் சாள்ஸ் ( வீரச்சாவு 11.06.1993 ) அவர்களிடம் ஒப்படைத்தார். அதற்கமைவாக சாள்ஸ் அவர்கள் இதற்கான முயற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தவேளையில் கிளாலி கடல்நீரேரியில் மக்கள் போக்குவரத்துப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவேளையில் இலங்கைக் கடற்படையினருடனான நேரடிமோதலில் வீரச்சாவடைந்தார். தளபதி சாள்ஸ் அவர்களின் இழப்பிற்க்குப் பழிவாங்கும் முகமாக ஒரு தாக்குதலை நடாத்துவற்காக இச் சந்தர்ப்பத்தையும் கடற்புலிகள் ஆக்ரோசத்துடனும் அதேவேளை நிதானத்துடனும் செயற்பட்டனர். அதற்கமைவாக கடற்கரும்புலிகளான மேஐர் புகழரசனும் கப்டன் மணியரசனும் தேர்வுசெய்யப்பட்டு அதற்கான பயிற்சிகள் சிறப்புத் தளபதி சூசை அவர்களின் மேற்பார்வையில் நடைபெற்று திட்டம் விளங்கப்படுத்தப்பட்டது .திட்டத்தின்படி மீனவர்களது படகைப்போல படகொன்றைக் கொள்வனவு செய்து அதற்குள் வெடிமருந்து நிரப்பப்பட்டு அதற்குமேல் வலைகள் போடப்பட்டு இவர்கள் மீன்பிடித்தொழிலில் ஈடுபடுவார்கள். கடற்படையினர் இவர்களது படகை அணைத்து ஒருவரை தமது கடற்படைப்படகில் ஏறச்சொல்வார்கள் அச்சமயம் மணியரசன் ஏறமுற்பட புகழரசன் வெடிக்கவைப்பார். வெடிக்கவைத்தவுடன் இன்பருட்டிப் பகுதியில் நிலைகொண்டிருந்த சண்டைப்படகுகள் வேகமாகச் சென்று அவ்டோறாப்படகை கைப்பற்றுவார்கள்- இதுவே திட்டமாக இருந்தது. 29.08.1993 அன்று திட்டத்தின்படி பருத்தித்துறைக் கடற்பரப்பில் கடற்கரும்புலிகள் டோறாப்படகை மோதி வெடித்தனர்.சண்டைப்படகுகள் வேகமாகச் சென்று டோறாவைக் கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். அந்தநேரத்தில் போதிய வசதியின்மையால் அம்முயற்சி பலனலிக்காமல் போக கடற்புலிகள் அவ்டோறாப்படகிலிருந்த ஆயுதங்கள் மற்றும் முக்கிய பொருட்கள் அனைத்தையும் எடுத்துவிட்டு அவ்டோறாவை மூழ்கடித்தார்கள். இத்தாக்குதலுக்காக இக்கடற்கரும்புலிகள் பட்டகஸ்ரம் கொஞ்ச நஞ்சமல்ல ஒவ்வொருநாளும் இரவிலிருந்து மதியம் வரை வல்வெட்டித்துறையிலிருந்து மணற்காடுவரை இலக்கைத்தேடி ஓடுவார்கள் .பின்னர் இலக்குக்கிடைகாமல் திரும்புவார்கள் .இதுமாதக்கணக்கில் இடம்பெற்றது இருந்தாலும் இவர்கள் இலக்குக்கிடைக்கும் வரை தெளிவாகவும் உறுதியாகவும் இருந்து இலக்கின் மீது தமது உயிராயுதத்தால் மோதி விடுதலைப்போராட்டத்திற்க்கு பலம் சேர்த்தார்கள்.இதுவே கடற்கரும்புலித்தாக்குதலில் முதலாவதாக மூழ்கடிக்கப்பட்ட டோறாப்படகாகும். இவ்வெற்றிகத் தாக்குதலில் கடற்கரும்புலி மேஐர்.புகழரசன். கடற்கரும்புலி கப்டன் மணியரசன். ஆகியோர் வீரச்சாவடைந்தனர். இவ்வெற்றிகரத் தாக்குதலை கடற்புலிகளின் சிறப்புத் தளபதி சூசை அவர்கள் வழி நடாத்தினார்கள். தலைவர் அவர்கள் குறிப்பட்டபடி கடற்கரும்புலிகளின் உயிராயுதத்தால் மீட்கப்பட்ட ஆயூதங்கள் கடற்புலிகளின் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவியதுவும், அதன் பின் நடைபெற்ற கடற்சமரில் இத்தாக்குதலில் கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் முன்னனி ஆயுதங்களாக சண்டைகளின் திருப்புமுனையாக அமைந்தது என்று கூறினால் அதுமிகையாது. எழுத்துருவாக்கம்..சு.குணா. http://irruppu.com/2021/08/30/கடற்கரும்புலிகளினால்-மு/
-
உலக வல்லரசுகள் இலங்கைக்கு வழங்கிய செய்மதித் தகவல்களின் அடிப்படையில் 10.09.2007 அன்று இலங்கையிலிருந்து ஆயிரத்து ஐநூறு கடல் (1500NM ) மைல்களுக்கப்பால் அதாவது சர்வதேசக் கடற்பரப்பில் தமிழீழத்திற்க்குப் பலம் சேர்க்கின்ற நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த விடுதலைப் புலிகளின் இரு வணிகக் கப்பல்களும் அவைகளுக்கு எரிபொருள் வழங்குவதற்காக வந்த எண்ணெய்க் கப்பலும் தமது வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வேளையில் கடற்படையின் கப்பல் வருவதை (எந்த நாட்டுக் கடற்படையென்று அவருக்குத் தெரியாது ) http://irruppu.com/wp-content/uploads/2021/09/%E0%AE%B2%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D.-%E0%AE%95%E0%AF%87%E0%AE%A3%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D.jpg அவதானித்த வணிகக் கப்பலொன்றின் தலைவரான எழில்வேந்தன் கப்பல்களை பிரிந்து வெவ்வேறு திசைகளில் செல்லப் பணித்ததுடன் இத்தகவல்களை தமிழீழத்திலுள்ள கட்டளை மையத்திற்க்கும் அறிவித்தார். மூன்று கப்பல்களும் வெவ்வேறு திசைகளில் பயணித்துக் கொண்டிருக்கும் போது முறையே மதியம் ஒருமணியளவில் லெப்.கேணல் சோபிதன் தலைமையிலான வணிகக் கப்பலும் லெப் கேணல் செம்பகச்செல்வன் தலைமையிலான எண்ணெய்க்கப்பலும் தாக்குதலுக்குள்ளாகி மூழ்கின .இச்சம்பவத்தில் அதிலிருந்த போராளிகளும் இயக்க மரபிற்கிணங்க சயனைற் அருந்தி கடலிலே காவியமானார்கள். மூன்றாவது வணிகக்கப்பலான லெப் கேணல் எழில்வேந்தனது கப்பலை நோக்கி வந்த கடற்படையினர் மீது கப்பலிலிருந்த மோட்டாரை பயன்படுத்தி கடற்படையினர் மீது தாக்குதல் நாடாத்த கடற்படையின் கப்பலுக்கருகில் வீழ்ந்த எறிகணையால் சற்று நிலைகுலைந்த கடற்படையினர், கிட்டநெருங்காமல் தொலைவிலிலிருந்தே தாக்குதலை தொடர்ந்தனர் . இருந்தாலும் இவர்களும் தாக்குதல்களை தொடர்ந்து நாடத்தியவாறு ஓடிக்கொண்டிருந்தனர். ஒரு கட்டத்தில் அதாவது அடுத்தநாள் அதிகாலை மூன்றுமணியளவில் கடற்படைக்கப்பலின் பாரிய குண்டுத் தாக்குதலொன்று இவர்களது கப்பலின் அடிப்பகுதியில் தாக்க கப்பல் கடலிலே மூழ்கியது. இந்த இடைப்பட்ட நேரத்தில் இவர்களது தியாகமும் வீரமும் கற்பனை செய்யக்கூட முடியாது. இக்கப்பலிலிருந்தவர்களில் பெரும்பாலானவர்களுக்கு சயனைற் இல்லாதிருந்ததால் அங்கிருந்த மருத்துவப் போராளியான லெப் கேணல் தமிழ்மாறன் இருமருந்துகளைக் கலந்து நஞ்சாக்கி ஊசியில் ஏற்றி சயனைற் இல்லாதிருந்தவர்களுக் கொடுத்தார். http://irruppu.com/wp-content/uploads/2021/09/%E0%AE%B2%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D.-%E0%AE%95%E0%AF%87%E0%AE%A3%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9C%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D.jpg அடுத்தது லெப்.கேணல் வேங்கை மற்றும் லெப் கேணல் திருவருள் தரையில் மட்டுமே பயன்படுத்தும் 120mm மோட்டரை கப்பலில் வெல்டிங் பண்ணி நிலைப்படுத்திக்கொடுக்க சகபோராளிகள் அம்மோட்டாரின் மூலம் கடற்படைக்கெதிராக தாக்குதல் நடாத்தினார்கள் . இதற்கிடையில் மேஐர் தமிழ்நம்பி, கப்டன் அருணன் கப்பலின் ஒருபகுதியை எரித்தபோது அத்தீயை அணைத்து கொண்டிருக்கும் சமநேரத்திலும் அத்தீக்குள்ளாலும் சகபோராளிகள் மோட்டார் எறிகணைகளை எடுத்து வந்து கடற்படைகெதிராக தாக்குல் நடாத்தினார்கள் இறுதிவரை மிகவும் மூர்க்கத்தோடும் உறுதியோடு களமாடி 11.09.2007 அன்று கடலிலே புதியதொரு வரலாற்றை படைத்துச் சென்றார்கள். எழுத்துருவாக்கம்.சு.குணா. http://irruppu.com/2021/09/11/120mm-மோட்டரை-கப்பலில்-பயன்பட/
-
பலவேகய 02 சிங்களத்தின் ஆக்கிரமிப்பு நடவடிக்கை முடிவுற்றதும். யாழ்மாவட்டத்திலிருந்த நான்கு கோட்டங்களிலிருந்தும் யாழ் மாவட்டத் தாக்குதலணியலிருந்தும் போராளிகள் ஒன்றாக்கப்பட்டு ஒரு பயிற்சித் திட்டத்திற்க்கென அணிகள் பிரிக்கப்பட்டு வெவ்வேறு இடங்களுக்கு அனுப்பப்பட்டு அங்கு சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி, கடற்புலிகளின் தாக்குதலணி, மகளிர் அணிகளுமாக கடும் பயிற்சி இலகுவான சண்டை என்ற தலைவர் அவர்களின் சிந்தனைக்கேற்ப கடுமையான பயிற்சிகள் அளிக்கப்படன.இப் பயிற்சிகள் தளபதி பால்ராஜ் அவர்களின் நேரடிக் கண்காணிப்பில் தலைவரின் ஆலோசனைக்கு அமைவாக இடம்பெற்றன. 30.09.1992 அன்று தளபதி பால்ராஜ் அவர்கள் தாக்குதலிற்கான திட்டம் விளங்கப்படுத்தப்படுக் கொண்டிருந்த வேளையில்.தளபதி தமிழ்ச்செல்வன் அவர்கள் வந்து தளபதி பால்ராஜ் அவர்களுடன்தனிமையில் கதைத்த பின்னர் தாக்குதல் திட்டம் தற்காலிகமாக கைவிடப்படுவதாகவும் யாழ்மாவட்டத் தாக்குதலனிப் போராளிகளில் ஒரு தொகுதி அணி உடனடியாக வெளிக்கிடுமாறும் பணிக்கப்பட்டது. (அன்றைய விளங்கப்படுத்தப்பட்ட திட்டத்தில் அறுபத்தியிரண்டு காவலரனை தாக்கி அழிப்பதே திட்டமாக இருந்து.) அதற்கமைவாக புறப்பட்ட அவ் அணிகள் 01.10.1992 அன்று கட்டைக்காட்டு முகாம் தாக்குதல்களில் ஏனைய படையணிகளுடன் இணைந்து அவ் வெற்றிகரத் தாக்குதலில் பங்குபற்றியது.அதன் பின்னர் பயிற்சிகள் தொடர்ந்தன.ஆனால் இம்முறை தாக்கி அழிக்கப்படவேண்டிய காவலரன்களின் தொகை 150 ஆக்கப்பட்டது. ( இதுவே தமிழீழத்தில் முதலாவதாக மேற்கொள்ளப்பட்ட கூடுதலான காவலரன் அழிப்பாகும்.)அதற்கேற்ற மாதிரி பயிற்சிகள் வழங்கப்பட்டது.தாக்குதலுக்கான நாளும் வந்தது.தாக்குதல் திட்டம் தளபதி பால்ராஜ் அவர்களால் விளங்கப்படுத்தப்பட்டது.இத் திட்டத்தின்படி 150 காவலரன்களைக் தாக்கி கைப்பற்றி வைத்திருந்து விட்டு பின்வாங்குவதாகவே இருந்து. 23.11.1992 அணிகள் காவலரனை நோக்கி நகர்ந்து கொண்டிருந்த வேளையில் எதிரியின் கண்ணிவெடி ஒன்று போராளி ஒருவரின் காலில் வெடித்தது அருகிலிருந்த போராளி ஓடிச் சென்று அப் போராளியின் வாயைப்பொத்த அப்போராளியோ நான் கத்த மாட்டன் நீங்கள் நகருங்கள் என்றான். அன்று அப்போராளியின் அர்ப்பணிப்பு தன்னால் இச் சண்டையில் ஏதும் தவறு நடந்து விடக்கூடாது என்பதற்காக தனது வேதனையை சகித்துக்கொண்ட விதம் சக போராளிகளுக்குள் இச் சண்டையை வெற்றி கொள்வதிலேயே இருந்து. 24.11.1992 அன்று அதிகாலை சண்டை ஆரம்பமானது .சண்டை தொடங்கிய குறிப்பிட்ட நேரத்திலேயே காவலரன் தாக்குதலனியின் முழுக்கட்டுப்பாட்டில் காவலரன்கள் கொண்டுவரப்பட்டன. இச்சமரில் கனரக ஆயுதம் ஒன்று (37MM) நிலப்படுத்தப்பட்டிருந்தது. ஆனால் சென்றவர்களுக்குத் எவ்வாறு இயக்குவதோ அல்லது எவ்வாறு கழட்டுவதென்றோ தெரியாது தகவல் கட்டளைமையத்திற்க்கு தெரியப்படுத்தப்பட்டது.ஆயுத நிபுணர்களுள் ஒருவரான தளபதி கடாபி அவர்கள் வருகிறார் என்றதும் போராளிகளுக்கு உற்சாகம் மேலிட்டது. ஏனெனில் எப்படியாகிலும் அவ் ஆயுதத்தை கைப்பற்றிவிடலாமென்று. அந்த காலத்தில் அவர் ஆயுதங்களை கையாள்வதிலும் மற்றும் புதிய ஆயுதங்களை கையாள்வதில் ஒரு வித்தகராக இருந்தார். இருந்தாலும் அவர் கடுமையாக முயற்சித்தும் எதிரியானவன் அவ் ஆயுதத்தை பலமா நிலப்படுத்தப்பட்டதாலும் நேரம் குறைவான காரணத்தாலும் அவ் ஆயுதம் தகர்க்கப்பட்டது. இச் சண்டையில் பின்வாங்கவும் என்று கைபேசியில் சொல்லமுடியாது .ஏனெனில் எதிரி ஒட்டுக் கேட்பான் அதனால் பரிபாசையில் பலாலி விமானத்தளம் நோக்கி முன்னேறவும் என அறிவிக்கப்பட்டது. அதை ஒட்டுக்கேட்ட படையினர் மூர்க்கத்தனமாக எறிகணைகளை ஏவிக்கொண்டிருந்தான். இச் சமயத்தில் மகளிர் அணியினரின் பக்கமாக பின்வாங்குவதில் பிரச்சனை ஏற்பட்டது .இதை அவதானித்த தளபதி குணா அவர்கள் உடனடியாக தானே களத்தில் இறங்கி அணிகளையும், வீரச்சாவடைந்த வித்துடல்களையும், காயமடைந்த போராளிகளையும்.கொண்டு வந்து சேர்த்தார். இச் சமரில் அவருடைய பங்களிப்பு என்பது ஒருவரியில் கூறிவிடவோ அல்லது எழுதி விடவோ முடியாது. அன்று அவர் களத்திற்க்கு சென்றிருக்காவிடில் நிலைமையை கற்பனைகூட செய்யமுடியாது. இப்படியாக பல்வேறு அர்ப்பணிப்புகள் நிறைந்த இச் சமரில் ஈழப்போா் 01,02லும் இந்திய இராணுவத்துடனான பல் வேறு இடங்களில் பல்வேறு சமர்களில் பங்குபற்றிய கப்டன் வீமன், அவர்களும் மேஜர் டொச்சன் அவர்கள் உட்பட ஐம்பத்தியெட்டுப் போராளிகள் இச் சமரில் வீரச்சாவடைந்தனர். இச் சமரிலேயே தான் கள விசாரணை முதன் முதலாக ஆரம்பிக்கப்பட்டது. இவ்வெற்றிகரச் சமரை தளபதி பால்ராஜ் அவர்கள் செவ்வனவே வழிநடாத்தினார். எழுத்துருவாக்கம்…சு.குணா. http://irruppu.com/2021/11/24/24-11-1992-அன்று-விடுதலைப்-புலிகள/
-
30.10.2001 அன்று யாழ்ப்பாணம் பருத்தித்துறைக் கடற்பரப்பில் இலங்கைக் கடற்படையின் எரிபொருள் வழங்கற் கப்பல்மீதான (துன்கிந்த) தாக்குதல் . ஐனாதிபதி சந்திரிக்காவின் ஆட்சிக் காலத்தில் 22.04.2000 ஆம் ஆண்டு ஆனையிறவுப் படைத்தளம் விடுதலைப்புலிகளால் கைப்பற்றப்பட்ட பிற்பாடு மாவீரர்களின் தியாகத்தால் சிங்களப்படைகளால் கைப்பற்றப்பட்ட பெருமளவு தமிழர்களின் பாரம்பரிய நிலப்பரப்புக்கள் மீட்க்ப்பட்டன .(சுமார் இருபது கடல்மைல் கரையோரப் பிரதேசங்களும் உள்ளடக்கம். ) அந்தவகையில் விடுதலைப்புலிகளின் கடற்புலிகளின் ராடர் நிலையமும் யாழ் குடாரப்புக்கரையோரத்தில் அமைக்கப்பட்டு கடற்கண்கானிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். அதுமட்டுமல்லாமல் கடற்புலிகளும் யாழ்குடாவில் நிலைகொண்டிருந்த சிங்களப்டைகளுக்காக திருகோணமலையிலிருந்து செல்லும் விநியோகக் கப்பல்கள் மீதும் அவ்வப்போது தாக்குதல்களை மேற்கொண்டனர். இவ் சிங்களக் கடற்படையின் விநியோகக் கப்பல்களுக்குப் பாதுகாப்பு வழங்கும் கடற்படையின் பெரும்பாலான டோறாப்படகுகள் கூட திருகோணமலை சிங்களக் கடற்படைத் தளத்திலிருந்து வந்து பாதுகாப்பு வழங்கி விட்டு திரும்பவும் திருகோணமலைக்குச் சென்றுவிடுவர். ஆனால் பெருமளவு கரையோரப்பிரதேசங்களும் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் வந்ததால் விடுதலைப்புலிகளின் தாக்குதலைச் சமாளிக்கவேண்டுமாயின் காங்கேசந்துறை சிங்களக்கடற்படைத்தளத்தில் பலடோறாக்களை நிறுத்தவேண்டிய கட்டாயம் சிங்களக்கடற்படைக்கு ஏற்பட்டது. ஆகவே இச்சிங்களக்கடற்படைக்கு எரிபொருள் வழங்கள் மேற்கொள்வதற்கென துன்கிந்த என்கிற எரிபொருள்தாங்கிக் கப்பல் பயண்படுத்தப்பட்டது. இத்தகவல் விடுதலைப்புலிகளின் இலங்கை அரசபடையினரின் தகவல்களை இடைமறித்து ஒட்டுக்கேட்கும் லெப்.கேணல். ஐஸ்ரின்.அணியினரால் சிறப்புத்தளபதி சூசை அவர்களிடம் கொடுக்கப்பட்டது. அதற்கமைவாக இத்தகவல்களை தேசியத்தலைவர் அவர்களிடம் கொடுத்தார் சிறப்புத்தளபதி சூசை அவர்கள். இக்கப்பலைத் தாக்குவதற்கான முக்கியத்துவத்தையும் அனுமதியையும் கொடுத்ததோடு மட்டுமல்லாமால் அதற்கான நல்லதொரு திட்டத்தையும் கொடுத்து ஒரு தாக்குதல் ஒரு தடவைதான் பிழைவரவேணடும் இரண்டாம் முறையும் பிழைவரக்கூடாது என்று தெளிவாகக்கூறினார் தேசியத்தலைவர் அவர்கள்.(முதலில் விட்ட சில தவறுகளால் .) அதற்கமைவாக 30.10.2001 அன்று திருகோணமலையிலிருந்து காங்கேசன்துறை துறைமுகம் நோக்கி சென்றுகொண்டிருந்த துன்கிந்த என்கிற எரிபொருள் தாங்கிக்கப்பலுக்குப் பாதுகாப்பு வழங்கிய சிங்களக்கடற்படையின் டோறாப்படகுகள் மற்றும் பீரங்கிப்படகுகள் மீது லெப். கேணல் . சலீம், லெப்.கேணல். சுடர்ணன். மற்றும் தளபதி.சிறீராம் ஆகியோர் தலைமையிலான சண்டைப்படகுகள் வழிமறிக்க யாழ் .பருத்தித்துறைக் கரையிலிருந்து உயர சுமார் முப்பத்தியெட்டுக்கடல்மைலில் சென்றுகொண்டிருந்த துன்கிந்த எரிபொருள் கப்பல்மீது அதிகாலை ஒருமணியளவில் கடற்கரும்புலிகள் தமது படகிலிருந்த ஆயுதங்காளால் தாக்கி நிற்பாட்டினார்கள். தொடர்ந்து கப்பலின் பின்பகுதியில் கடற்கரும்புலி மேஐர். கஸ்தூரி மற்றும் கடற்கரும்புலி கப்டன் கனியின்பன் ஆகியோர் தமது கரும்புலிப் படகால் மோதி வெடித்தனர். தொடர்ந்து கடற்கரும்புலி மேஐர் . கடலரசன். மற்றும் கடற்கரும்புலி கப்டன்.கேசவி ஆகியோர் தமது கரும்புலிப்படகால் கப்பலின் முன்பக்கத்தில் மோதி கப்பலை மூழ்கடித்து கடலிலே காவியமானார்கள். இத்தீரமிகுத்தாக்குதலை கடற்புலிகளின் பிரதான தளமான சாளைத் தளத்தின் ராடர் நிலையப் பொறுப்பாளர் சிறப்புத்தளபதி சூசை அவர்களின் ஆலோசனையுடன் குடாரப்பு ராடர் நிலையத்திலிருந்து செவ்வனவே வழிநடாத்தியிருந்தார். ஒருதடவை விட்ட பிழையை அடுத்த தடவை விடக்கூடாது என்ற தேசியத்தலைவர் அவர்களின் சிந்தனையையும் செவ்வனவே செய்த திருப்தியுடன் கடற்கரும்புலிகள் கடலிலே காவியமானார்கள். இவ் வெற்றிகரத் தாக்குதலில் வீரச்சாவடைந்த கடற்கரும்புலிகளான.. மேஐர் . கடலரசன். மேஐர்.கஸ்தூரி. கப்டன். அன்புமலர். கப்டன். கனியின்பன். இக்களத்தை கடலிலே கடற்சண்டைப்படகை வழிநடாத்தி பின்னர் வீரச்சாவடைந்த.. லெப். கேணல். சலீம்.( கலாத்தன்.)வீரச்சாவு. 10.03.2009. லெப்.கேணல். சுடர்ணன்.வீரச்சாவு.10.03.2003. தளபதி. சிறிராம். வீரச்சாவு.முள்ளிவாய்க்கால் இறுதிச்சமரில். ஆகியோரையும் இந்நாளில் நினைவுகூருகின்றோம். அன்று இக்களத்தில் களமாடியவர்களின் உள்ளத்திலிருந்து…. எழுத்துருவாக்கம்… சு.குணா. திகதி.30.11.2022. http://irruppu.com/2022/11/30/துன்கிந்த-கப்பல்-மீதான-த/
-
தமிழீழ விடுதலைப்போராட்ட வரலாற்றிலே கடற்புலிகளின் கடல்விநியோகமானது மிகவும் முக்கியம் வாய்ந்ததொன்றாகும். சர்வதேசக்கடற்பரப்பிலே வரும் எமது கப்பல்களில் இருந்து பொருட்களை கரையே கொண்டுவரும் மிக முக்கியமானதும், ஆபத்து நிறைந்ததுமான, இவ் விநியோகத்தினை கடற்புலிகள் மிகவும் வீரத்துடனும், விவேகத்துடனும் செய்வார்கள். சிங்களக்கடற்படை வந்துவிடடால் வீரத்துடன் சமர்செய்தபடியே, கரையேபொருட்களை பாதுகாப்பாகக் கொண்டுபோய்ச்சேர்ப்பர். சிலவேளைகளில் காலநிலைசீரின்மையால் கடுங்கொந்தளிப்பான அலைகளின்மத்தியிலும், சுழன்றடிக்கும் காற்றின் போதும், விவேகத்துடன் அதனை எதிர் கொள்வார்கள். கடற்புலிகள் அடையும் துன்பத்தினை வெறும் வார்த்தைகளில் எழுதிவிடமுடியாது.எவ்வித துன்பத்தையும் தமிழீழ விடியலுக்காக சாதாரணமாக ஏற்றுக்கொண்டு, சத்தியவேள்வியில் வித்தாகிய மாவீரர்கள் கடலில் மறைந்தாலும், மக்கள் மனங்களில் என்றும் நிறைந்திருப்பார்கள். 26.06.2000 அன்று கடற்படையின் பாரிய கடற்கண்காணிப்புக்கு மத்தியில் இடம்பெற்ற உகண கப்பல் மீதான கடற்கரும்புலித் தாக்குதல் .சர்வதேச விநியோக நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் கப்பல் மற்றும் படகு சந்தித்து பொருட்கள் மாற்றுமிடத்திற்கு (முல்லைத்தீவிலிருந்து கிட்டத்தட்ட எழுபத்தைந்து கடல்மைல் உயர) அண்ணளவான தூரத்தால் கடற்புலிகளின் தாக்குதலுக்கு அஞ்சியும் கடற்புலிகளின் ஆழ்கடல் விநியோகத்தைக் கட்டுப்படுத்தவும், திருகோணமலையிலிருந்து யாழ்ப்பாணத்திற்கான விநியோக நடவடிக்கையில் கடற்படையின் பாரிய கப்பல்களான சக்தி, லங்காமுடித்த, உகண கப்பல்களும், தரையிறங்குக் கலங்களும், இவைகளுக்கு உதவியாக அதிவேக டோறாப் படகுகளும், அடிக்கடி ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அதுமட்டுமல்லாமல் பத்துக் கடல்மைல் தொடக்கம் அறுபது கடல்மைல் தூரத்தைக் கண்காணிப்பதற்காக அதிவேகடோறாப் படகுகளும் அறுபது கடல்மைல்களுக்கப்பால் கண்காணிப்பதற்காக வீரயா மற்றும் ஆழ்கடல் கலங்களும், ஈடுபடுத்தப்பட்டன. கடற்புலிகளால் மேற்கொள்ளப்பட்ட ஆழ்கடல் விநியோகத்தை இல்லாமல் செய்வதற்காக, கடற்படையினரால் வர்ணகீர கடல் கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதனால் ஆழ்கடல் விநியோகம் பாதிக்கப்பட்டது. இதனைக் கருத்திலெடுத்த தலைவர் அவர்கள் கடற்புலிகளுக்கு அக் கடற்படை விநியோக அணி மீது தாக்குதல் நடாத்தி கடற்புலிகளின் ஆழ்கடல் விநியோக நடவடிக்யைத் தொடருமாறும், அதற்கான தாக்குதல் திட்டத்தையும் கொடுத்தது மட்டுமன்றிசில ஆலோசனைகளையும் கொடுத்தார். அதற்கமைவாக கடற்புலிகளின் கட்டளை அதிகாரிகளான லெப்.கேணல் ரஞ்சன். லெப்.கேணல் பழனி. மேஐர் ஆழியன் ஆகியோரின் தலைமையிலான சண்டைப்படகுகளும் இரண்டு கடற்கரும்புலிப் படகுகளும் சென்று ஆழ்கடலால் இராணுவத் தளபாடங்கள் மற்றும் படையினருக்குத் தேவையான பொருட்களுடன் வரும் கப்பலை இம்மூன்று சண்டைப்படகுகளால் தாக்கி வழியமைத்துக் கொடுக்க கரும்புலிப்படகுகளால் தாக்கி கப்பலை மூழ்கடிப்பதாகும். அதேநேரம் மேலதிகமாக வரும் கடற்படையினரை வழிமறித்து மறிப்புச்சமரை தொடுப்பதற்காக லெப்.கேணல் பகலவன் தலைமையிலான ஒரு தொகுதி சண்டைப் படகுகளும் இவர்களுக்கு உதவியாக கரும்புலிப்படகுகளும் நிலைகெண்டன. இவ்வளவு கண்காணிப்புக்களுக்கு மத்தியிலும் கடுமையான தென்மேற்க்குப் பருவக்காற்றுக்குள்ளும் இந்தத் தடைகளை உடைத்து தமிழீழத்திற்க்கு பலம் சேர்க்கின்ற நடவடிக்கைகளைத் தொடரவேண்டும் என்கிற நோக்கோடும் 25.06.2000 அன்று மாலை ரஞ்சன், பழனி, ஆழியன் ஆகியோர் தலைமையிலான சண்டைப்படகுகளும் கடற்கரும்புலிகளான சூரன் மற்றும் நல்லப்பன் தலைமையிலான கடற்கரும்புலிப்படகுகளும் சென்று முல்லைத்தீவுக்கு உயர அறுபது கடல்மைல் தூரத்தில் நிற்க - அந்தநேரத்தில் திருகோணமலையிலிருந்து கடற்படையின் விநியோகத் தொடரணி வருவதாக இப்படகுகளுக்கு அறிவிக்க தயார்நிலையிலிருந்த படகுகள் சீரற்ற காலநிலை மற்றும் கடும் காற்றிற்க்கும் மத்தியில் ஒருவாறு கப்பலை இணங்கண்டு அக்கப்பலைப் பின்தொடர்ந்த (26.06.2000 அன்று அதிகாலை) பழனி கப்பலின் மீது தாக்குதலைத் தொடுத்து வழியமைத்துக் கொடுக்க சூரனின் கரும்புலிப்படகு கப்பலின் மீது மோதியது. இம்மோதலால் கப்பல் நிலைகுலைய கப்பலிலிருந்து செறிவான தாக்குதல் நடாத்தியவண்ணமிருக்க பழனி, ரஞ்சன் மற்றும் ஆழியனது படகால் தாக்குதலை தொடுத்து வழியமைத்துக் கொடுக்க நல்லப்பனது கரும்புலிப்படகு கப்பல் மீது மோத கப்பல் வெடித்துச் சிதறி மூழ்கியது. இவ்வெற்றிகரத் தாக்குதலில் லெப் கேணல்.ஞானக்குமார், மேஐர் .சூரன், மேஐர். நல்லப்பன், மேஐர். சந்தனா, கப்டன் .இளமதி, கப்டன்.பாமினி ஆகிய கடற்கரும்புலிகள் கடலிலே காவியமானார்கள். இவ் வெற்றிகரத் தாக்குதலுக்குப்பின் சிங்களக்கடற்படையானது ஆழ்கடலிலும், கடற்புலிகளின் தாக்குதலைச் சமாளிக்க முடியாமல் திகைத்து நின்றனர். இந் நிலையினை எதிரிக்கு ஏற்படுத்தி கடலின் மடியில்.நிறைந்திருக்கும் எங்கள் வீரக்கடற்கரும்புலிகள், எங்களின் நினைவிலும் நிறைந்திருப்பார்கள். எழுத்துருவாக்கம்….சு.குணா. http://irruppu.com/wp-content/uploads/2023/06/கடற்புலிகளின்.jpg http://irruppu.com/2023/06/26/ஆழ்கடலில்-களமமைத்து-சிங-2/
-
1994ம் ஆண்டு மாவீரர் வாரத்தில் தீவகம் முழுவதையும் கைப்பற்ற ஒரு நடவடிக்கை எம்மால் மேற்கொள்ளப்பட்டது. அதற்கமைவாக பெருமளவில் படையணிகளை ஒன்று திரட்டி கடும் பயிற்சிகள் கொடுக்கப்பட்டு தலைவரின் ஆலோசனையும் நிறைவுபெற்று திட்டங்கள் விளங்கப்படுத்தப்பட்டது. இந்நடவடிககையின் தரைத் தாக்குதலணியை மூத்த தளபதி பானு அவர்கள் வழிநடத்த கடல் நடவடிக்கையை கடற்புலிகளின் சிறப்புத் தளபதி சூசை அவர்கள் வழி நடத்த இவைகளை ஒருங்கமைத்து தலைவர் வழிநடத்துவார். ஆனால் இறுதி நேரத்தில் வேவுத்தரவின் பிரகாரம் லெப் கேணல் கில்மன் அவர்களின் பெரியதொரு அணி செல்லவேண்டிய பாதையில் இரு காவலரணை தீடிரென இராணுவம் அமைத்ததாலும் இன்னும் சிலவேவுத்தரவுகளினாலும் இத்தாக்குதல் இடைநிறுத்தப்பட்டது. இத்தாக்குதல் பற்றி அணிகளுடன் கதைத்த தளபதி பால்ராஐ் அவர்கள், உள்ளுக்கு பானு அண்ணை தான் வருவார். நான் தெலைத்தொடர்புக் கருவியூடாக கதைத்தால் நீங்கள் நினையுங்கோ அண்ணைதான் கதைக்கிறார் என்றார். அதன் பின்னர் சிலகாலம் பயிற்சிகளில் ஈடுபட்ட எமதணிகள் 1995ம் ஆண்டு போர் நிறுத்த காலத்தில் அவரவர் மாவட்டங்களுக்குச் சென்றன . போர் நிறுத்தம் முடிந்தவுடன் மீண்டும்அவ் அணிகள் ஒன்றாக்கப்பட்டு மூத்த தளபதி பானு மூத்த தளபதி சொர்ணம் தலமையில் பளை எனுமிடத்தில் பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இப்பயிற்சிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில் ஒருநாள் நாங்கள் மதிய உணவு சாப்பிட்ட பின்னர் பயிற்சிக்காக பயிற்சியிடத்திற்க்கு புறப்பட்ட வேளையில் ஒரு வாகனம் வந்ததைக் கவனித்த சொர்ணமண்ணை வாகனத்தருகே சென்றார். அங்கே தலைவரைக் கண்டவுடன் ”அண்ணை கதைக்க ஒழுங்குபடுத்தட்டா?” எனக் கேட்க தலைவரோ “ஒரே கதைக்கிறது தான் விடு பயிற்சி பார்க்க” எனக் கூறிவிட்டு பயிற்சியிடத்திற்க்குச் சென்று பயற்சிகளைப் பார்வையிட்டு சில ஆலோசனைகளையும் வழங்கினார். சிலவாரங்கள் பயிற்சிகள் நடைபெற்றன அதன் பின்னர் தாக்குதலிற்கான திட்டம் விளங்கப்படுத்தப்பட்டு தாக்குதல் நடைபெற்றது. இத் தாக்குதலில் ஈடுபடுகின்ற போராளிகளை 27.06.1995 அன்றிரவு கடற்புலிகள் செவ்வனவே மண்டைதீவூக்குள் தரையிறக்கினர். 28.06.1995 அன்று அதிகாலை இத்தாக்குதல் ஆரம்பித்தது. குறிப்பிட்ட நேரத்திற்க்குள் முகாம் விடுதலைப்புலிகளிடம் வீழ்ந்தது. இத்தாக்குதலை, உள்நடவடிக்கைகளை மூத்த தளபதி பானு அவர்கள் உள்ளேயிருந்து வழி நாடாத்த கடல் நடவடிக்கைகளை கடற்புலிகளின் சிறப்புத்தளபதி சூசை அவர்கள் வழிநடாத்த இவையிரண்டையும் மூத்த தளபதி சொர்ணம் அவர்கள் தலைவரின் ஆலோசனையுடன் வழிநடாத்தினார். இச்சமரில் மக்களின் பங்களிப்பும் மிகவும் அளப்பரியது. இச்சமர் முடந்தவுடன் அச் சண்டையில் பங்குபற்றிய அணிகளைச் சந்தித்த தலைவர் அவர்கள் அணிகளைப் பாராட்டியதுடன் தவறு செய்தவர்களை கண்டிக்கத் தவறவும் இல்லை. தமிழீழத்தில் இதுவரை இடம்பெற்ற சமர்களில் ஆயுத மற்றும் கூடிய இராணுவத்தை குறைந்த இழப்புகளுடன் இச்சமர் இடம் பெற்றதாகவும் தலைவர் குறிப்பிட்டார். – எழுத்துருவாக்கம் சு.குணா. http://irruppu.com/2022/06/27/மண்டைதீவுச்-சமர்-எவ்வாறு/
-
யாழ்ப்பாணம் கோட்டைமுகாமிலிருந்து முன்னேறிய இராணுவத்தினர் யாழ்தொலைத்தொடர்பு நிலையத்தில் முகாமிட்டனர் . அவ்வாறு முகாமிட்ட படையினர் அப்பகுதி மக்கள் மீது மிருகத்தனமான தாக்குதலை தொடர்ந்து நடாத்திக்கொண்டுவந்தனர்.{அதாவது மோட்டார் மற்றும் இலகுரக ஆயுதங்களைக் கொண்டு} இத்தகவல்களை தளபதி கிட்டண்ணா அவர்கள் தலைவர் அவர்களின் கவனத்திற்க்குக் கொண்டுவந்தார் . அத்துடன் இம்முகாம் சம்பந்தமான வேவுத்தகவல்களையும் கொடுத்தார். இவைகள் அனைத்தையும் தீவிரமாக ஆராய்ந்த தலைவர் அவர்கள் உடனடியாக இம்மினிமுகாமை தாக்கியழித்து மக்களைப்பாதுகாக்குமாறு பணித்ததுடன் யாழ்மாவட்ட தாக்குலனிகளுடன் மேலதிகமாக மன்னார் மாவட்ட தக்குதலனியையும் இத்தாக்குதலுக்கப் பயன்படுத்தமாறும் அத்துடன் தனது மெய்பாதுகாப்பாளர்கள் சிலரையும் அனுப்பிவைத்தார். அதற்கமைவாக இம்மினிமகாமைதாக்கியழிப்பதற்கான திட்டத்தை தளபதி கிட்டண்ணா அவர்கள் விளங்கப்படுத்தி இத்தாக்குதலுக்கான முக்கியத்துவத்தையும் தாக்குதலனிகளுக்குத் தெளிவுபடுத்தினார் .அதற்கமைவாக தாக்குலனிகள் 06.03.1987 அன்று அதிகாலை யாழ்தொலைத்தொடர்பு நிலைய மினிமுகாம்மீது தளபதி கிட்டண்ணா விளங்கப்படுத்திய தாக்குதற் திட்டத்திற்கமைவாக ஒரு அதிவேக மின்னல் தாக்குதலை மேற்கொண்டனர் . குறிப்பிட்ட நிமிடத் தாக்குதலின் பின் மினிமுகாம் விடுதலைப்புலிகளின் பூரண கட்டுப்பாட்டின் கீழ்வந்தது .இவ்வெற்றிகர மினிமுகாம் தாக்குலில் பல படையினர் கொல்லப்பட்டும் எட்டுப்படையினர் விடுதலைப்புலிகளிடம் சரணடைந்தனர். மற்றும் பல அதிநவீன ஆயுதங்களும் வெடிபொருட்களும் விடுதலைப்புலிகளால் கைப்பற்றப்பட்டன. இத்தாக்குதலில் ஐம்பது போராளிகள் பங்குபற்றியிருந்தனர்.இத்தாக்குதல் மூலம் பொதுமக்களுக்குப் பேரழிவை ஏற்படுத்திய முகாம் முற்றுமுழுதாக கைப்பற்றி தொடர்ந்தும் தமது முழுக்கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தனர்.இவ்வெற்றிகரத் தாக்குதலை தளபதி கிட்டண்ணா செவ்வனவே வழிநடாத்தியிருந்தார். கிட்டண்ணாவிற்க்கு உதவியாக அப்போதைய மன்னார் மாவட்டத் தளபதி ராதா அண்ணா அவர்களும் செவ்வனவே செயற்பட்டிருந்தார். இவ்வெற்றிகரத்தாக்குதலில் மூன்று போராளிகள் வீரச்சாவடைந்தனர் . அவர்களின்.. விபரம் வருமாறு. கப்டன். நிக்சன். 2ம் லெப். அசோக். வீரவேங்கை.ரதன் ஆகியோர் வீரச்சாவடைந்தனர். -எழுத்துருவாக்கம். சு.குணா.
-
1991 ம் ஆண்டின் பிற்பகுதியில் பல்கலைக்கழக மாணவர்கள் ஒரு தொகையினர் ஒன்றாக வந்து அமைப்பில் இணைந்து கொண்டனர் .அவ் அணிகளில் ரொபேட்சனாக வந்தவன் தான் ஈழவன் .அவர்களை ஒன்றாக யாழ் நகரின் புறநகர்ப் பகுதியில் ஒரு பயிற்சிமுகாம் அமைக்கப்பட்டு பயிற்சிகள் வழங்கப்பட்டு பயிற்சிகள் முடிவடைந்தவுடன் .யாழ் மாவட்டத் தாக்குதலனியில் இணைக்கப்பட்டு மேலதிக பயிற்சிகள் வழங்கப்பட்டுக் கொண்டிருந்த வேளையில் தான் .எதிரியின் பலவேகய 02 இராணுவ நடவடிக்கை எதிரான மறிப்புச் சமரில் பங்குபற்ற சந்தர்ப்பம் சிலருக்குக் கிடைத்தது .அதில் ஒருவனாக ஈழவனும் பங்கு பற்றினான்.இச் சமரில் இவன் தனது திறமையான செயற்பாட்டால் போராளிகள் பொறுப்பாளர்கள் மத்தியில் ஒருநல்ல சண்டைக்காரணாக இணங்காணப்பட்டான் இம் மறிப்புச் சமரின் இரண்டாம் நாளில் இவனது நண்பணான லெப்ரினன் சர்மா வீரச்சாவடைகிறான்.இச் சமரின் இவனது திறமையான செயற்பாட்டை அவதானித்த பொறுப்பாளர்.இவனை கனரக ஆயுதப்பிரிவிற்க்கு அனுப்புகிறார்..அங்குபயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வேளையில் 150 காவலரன் மீதான தாக்குதலிற்கான அணிகள் பிரிக்கப்படும் போது இவனது அணியும் தேர்வு செய்யப்பட்டு அச்சமரில் பங்குபற்றியது.அதனைத் தொடர்ந்து யாழ் மாவட்டத்தில் நடைபெற்ற இராணுவத்தின் முன்னேற்றத்துக்கு எதிரான பெரும்பாலான சமர்களில் பங்குகொண்ட ஈழவன்.மணலாறு மண்கிண்டிமலை இராணுவ முகாம் தாக்குதலிலும் பங்காற்றினான்.அதன் பின்னர் வலிந்த தாக்குதல் ஒன்றிற்கு பயிற்சிக்காக அணிகள் பிரிக்கப்பட்டு பயிற்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கையில் இராணுவத்தின் யாழ்தேவி இராணுவ நடவடிக்கைக்கு எதிரான முறியடிப்புச் சமரிலும் தனது அணியுடன் மிகவும் திறம்படசண்டையிட்டான்.சண்டைமுடிந்தவுடன் பழையபடி பயிற்சிகள் தொடர்ந்தன .அவர்கள் எடுத்த பயிற்சிக்கான அந்த நாளும் வந்தது அதுதான் பூநகரி கூட்டுப்படைத்தளம் மீதான தாக்குதல் அத்தாக்குதலிலும் பங்காற்றினான்.இதற்கிடையில் தன்னை கரும்புலிகளனிக்கு தன்னை இணைத்துக் கொள்ளுமாறு தலைவர் அவர்களுக்கு அடிக்கடி கடிதம் எழுதிக் கொண்டிருந்தான்.அதற்கான பதிலும் வர யாழ்மாவட்டத் தாக்குதலனியிலிருந்து கரும்புலிகள் அணிக்குச் சென்றான்.அதன் பின் சூரியக்கதிர் இராணுவ நடவடிக்கைக்கு பின் புலமாக இயங்கும் வழங்கல் மற்றும் கனரக ஆயுதங்கள் மற்றும் கட்டளைமையங்கள்.மீது தாக்குதல் நடாத்தி எதிரியின் முன்னேற்ற நடவடிக்கையை திசைதிருப்புத்தாக்குதலை நடாத்துவதற்க்கு தலைவர் அவர்களால் கரும்புலிகளுக்கு வழங்கப்படுகிறது .கரும்புலிகளை இராணுவப் பிரதேசத்திற்குள் அனுப்பும் பொறுப்பு மூத்த தளபதி பானு அவர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது.அதற்கமைவாக அளவெட்டியில் அமைந்திருந்த காவலரன்களை தாக்கி அழித்து கரும்புலிகளை இராணுவப் பிரதேசங்களுக்கு அனுப்பினார்கள்.அங்கு சென்றவர்கள்.இவர்கள் உள் நுழைந்ததை அறிந்ததால் இராணுவம் பின் தொடர்ந்து சென்றதாலும் ஏற்பட்ட மோதலில் இராணுவத்திற்க்கு பாரியதொரு தாக்குதலைத் தொடுத்து போராடி வீரச்சாவடைகின்றனர். இருப்பினும் இராணுவம் தனது இராணுவ நடவடிக்கையை தற்காலிகமாக இடைநிறுத்தி தனது பிரதேசங்களில் தேடுதல் நடாத்தினான் .இவர்களது இம் முயற்சி முழுமையாக வெற்றி பெறாவிடினும் இவர்களது தியாகத்தால் இயக்கம் இராணுவ முன்னேற்றத்திற்க்கு எதிராக தமது நிலைகளை பலப்படுத்துவதற்க்கும் அணிகளை மீளொளுங்கு செய்வதற்க்கும். காலஅவகாசத்தை வழங்கியது.இத்தீரமிகு வெற்றிகரத் தாக்குதலில் கரும்புலி கப்டன் ஈழவன் உட்பட்ட பதினொரு கரும்புலிகள் வீரச்சாவடைகின்றனர். எழுத்துருவாக்கம்...சு.குணா. http://irruppu.com/2021/01/31/கரும்புலி-கப்டன்-ஈழவன்-ஈ/
-
http://irruppu.com/2022/08/27/ஒரு-தளபதியின்-வீரச்சாவிற/ 27.08.1992 மாதகலில் காவியமான மேலாளர்கள் பயிற்சிக் கல்லூரியின் பொறுப்பாளர்(சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதி) லெப்.கேணல் ராஜன் அண்ணா உட்பட்ட ஒன்பது மாவீர்களின் 30ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும் எதிரியால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் வீரச்சாவடைந்த தளபதி லெப்.கேணல் ராஜன் உள்ளிட்ட போராளிகளின் வீரச்சாவிற்க்கு பதிலாக பதிலடித் தாக்குதல் ஒன்றை நடத்தும்படி தலைவர் அவர்களால் தளபதி சொர்ணம் அவர்களுக்கு கூறப்பட்டது. ( உண்மையிலேயே காவலரனையோ முகாம்களையோ தாக்குவதாயின் அதற்கான வேவுத்தகவல்களை திரட்டி தலைவர் அவர்களிடம் கூறி அவர் அதன் சாதக பாதக நிலமையை உற்று நோக்கி அதற்கான ஆலோசனையும் வழங்கி அதன் பின்னர் அணிகளை ஒன்றாக்கி அதே போல காவலரனையோ முகாமையோ மாதிரி செய்து கடுமையான வேகமான பயிற்சிகள் முடித்து தாக்குதல் திட்டம் விளங்கப்படுத்தப்பட்டு அதன் பின்பே தாக்குதல் நடக்கும். ) அந்த நேரத்தில் வேவு பார்த்து தாக்குதல் நடத்துவதென்பது இலகுவானதொன்றல்ல. மாதக்கணக்கில் அல்லது வருடக்கணக்கில் கூடச் செல்லலாம் அதுவும் ஒரு தளபதியின் வீரச்சாவுக்குப் பழிவாங்குவதென்பதென்றால் உடனடியாக தாக்குதல் நடத்த வேண்டும். அதுவும் குறிப்பிட்டளவு படையினரைக் கொல்லவேண்டும். இவையிரண்டும் இல்லாவிடில் அது பழிவாங்குத் தாக்குதல் ஆகாது. அதுவும் பல்வேறு சமர்க்களங்களில் பங்குபற்றிய ஒருவீரன் கிட்டண்ணா யாழ்மாவட்டத் தளபதியாகவிருந்த காலத்திலிருந்து பல் வேறு சமரக்களங்களில் தனது திறமையான செயற்பாட்டால் போராளிகளின் மனதில் இடம் பிடித்த ஒருவீரன். பல் வேறு இடங்களில் பல்வேறு களங்களை வழிநாடாத்திய ஒரு தளபதியின் வீரச்சாவிற்கு பழிவாங்குவதென்றால். அதுவும் ஒரு நாளுக்குள் இச் சமர் இடம்பெற்றது. வேவு பார்க்கத் தொடங்கிய குறிப்பிட்ட நாட்களுக்குள் அவ் வேவுத்தகவல்களின் அடிப்படையில் இத்தளபதியின் வீரச்சாவிற்குப் பதிலடியாக ஒரு தாக்குதல் நடாத்துவதற்கான இடம் தெரிவு செய்யப்பட்டது. அதுதான் வெற்றிலைக்கேணி பெரிய மண்டலாய். வழமையான பயிற்சியில் ஈடுபட்ட போராளிகள் அவசரஅவசரமாக இயக்கச்சியில் ஒன்றாக்கப்பட்டு தாக்குதல் பற்றியும் அதன் முக்கியம் பற்றியும் தளபதி சொர்ணம் அவர்களால் போரளிகளுக்கு விளங்கப்படுத்தப்பட்டது.தாக்குதல் திட்டம் விளங்கப்படுத்தப்பட்டதோடு மட்டுமல்லாது அணிகளுடன் தாக்கவேண்டிய காவலரன்களுக்கு மிக அண்மையில் வந்து காவலரன் களையும் காட்டி தாக்குதலையும் வழிநடாத்தினார். தளபதி ராஜன் அவர்கள் வீரச்சாவடைந்து இருபத்திநான்குமணிநேரத்தில் அதாவது 28.08.1992ல் இடம் பெற்ற இப் பழிவாங்கு வெற்றிகரத்தாக்குதலில் நான்கு போராளிகள் வீரச்சாவடைந்தனர். எழுத்துருவாக்கம்….சு.குணா.
-
1993.11.11 அன்று பூநகரி கூட்டுத்தளம் மீதான விடுதலைப் புலிகளின் தவளை பாய்ச்சல் இராணுவநடவடிக்கையின் மாவீரர்களின் தியாகத்தின் மூலம் கைப்பற்றப்பட்ட நீரூந்து விசைப் படகுகளை ஆழ்கடல் சண்டைக்கேற்றவாறு மாற்றியமைத்து நடாத்தப்பட்ட வெற்றித் தாக்குதல். யாழ்குடாநாடு முழுவதையும் தனது ஆக்கிரமிப்புக்குள் கொண்டுவர சிங்கள அரசு மேற்கொண்ட பாரிய இராணுவ நடவடிக்கையான முன்னேறிப்பாய்ச்சல் விடுதலைப் புலிகளின் வெற்றிகர இராணுவ நடவடிக்கையான புலிப்பாய்ச்சல் மூலம் முறியடித்திருந்தனர். அதன் பின் பாரியதொரு இராணுவ நடவடிக்கைக்கு சிங்கள அரசு தயாராகிக்கொண்டிருந்தது. இதற்கு தேவையான பொருட்கள் மற்றும் ஆளணிகளை இலங்கைக் கடற்படையினர் திருகோணமலையிலிருந்து கடல்வழிமூலம் காங்கேசன்துறை துறைமுகத்திற்க்கு நகர்த்திக்கொண்டிருந்தனர். கடற்படையின் இக்கடல்வழி வநியோகம் மீது தாக்குதல் நடாத்துமாறு தலைவர் அவர்கள் கடற்புலிகளுக்குப் பணித்திருந்தார். அதற்கமைவாக கடற்படையின் கடல்நடவடிக்கைகள் துணைத்தளபதி பிருந்தன் மாஸ்ரரின் தலைமையிலான அணி கொடுத்த தகவல்களின் அடிப்படையில் அந்தக் காலப்பகுதியில் கடற்புலிகளின் கடற்சண்டைப் படகுகள் வடமராட்சியில் நிலைகொண்டிருந்தன. அச்சண்டைப்படகுகள் கடல்வழிமூலம் முள்ளிவாயக்கால் வந்து காத்திருந்தது. பிருந்தன் மாஸ்ரரின் தகவல்களின் பிரகாரம் கடற்படையின் விநியோகத் தொடரணி முல்லைத்தீவிலிருந்து வெற்றிலைக்கேணி வரையான பகுதிகளில் கரையிலிருந்து குறிப்பிட்டளவு உயரத்தாலும் அதன்பின் கரையிலிருந்து கூடுதலான உயரத்தாலும் செல்வது வழமையாகும். முல்லைத்தீவுப் பகுதியில் தான் தாக்குதல் நடாத்த திட்டமிடப்பட்டிருந்தனர். இத்தாக்குதலில் ஒரு புதிய உத்தியும் செய்யவிருந்தனர். அதாவது கடற்படையின் கப்பலை சண்டைப் படகால் தாக்கி நிப்பாட்ட கடற்புலிகளின் தளபதி கங்கைஅமரன் அவர்களிடம் நீரடிநீச்சல் பயிற்சி பெற்ற வீரர்கள் நீருக்கடியால் சென்று கப்பலின் அடிப்பகுதியில் வெடிகுண்டுகளை பொருத்தி கப்பலை மூழ்கடிப்பார்கள். இதுவே திட்டமாக இருந்தது. இத்திட்டத்தின் அடிப்படையில் 02.10.1995 அன்று லெப்.கேணல் தன்ராஐ், லெப் கேணல் இளநிலா மற்றும் கடற்புலிகளின் துணைத் தளபதி பிருந்தன் மாஸ்ரர் ஆகியோர் தலைமையிலான சண்டைப் படகுகளும் கடற்கரும்புலிகளான மேஐர் அருமை, கப்டன் தணிகை ஆகியோரை உள்ளடக்கிய கரும்புலிப்படகுமாக திருகோணமலையிலிருந்து வந்து கொண்டிருந்த கடற்படையின் விநியோகத் தொடரணியை இலக்கு வைத்தபோது அவைகளுக்குப் பாதுகாப்பாக வந்த டோறாப்படகுகள் மீது லெப் கேணல் இளநிலா தலைமையிலான படகுகள் தாக்குதலை மேற்கொள்ள மற்றப் படகுகள் ரணகஐ தரையிறங்கு கலம் மீது தாக்குதலை மேற்கொண்டனர். லெப் கேணல் தன்ராஐ் மற்றும் பிருந்தன் மாஸ்ரரின் படகுகள் தாக்கி வழியமைத்துக் கொடுக்க கடற்கரும்புலி மேஐர் அருமை கப்டன் தணிகை ஆகியோர் ரணகஐ தரையிறங்குக்கலம் மீது அதன் பின்பகுதியில் தங்களது கரும்புலிப்படகால் மோதி வெடித்தனர். ஆனாலும் கப்பல் தப்பியது. இந் நிலையில் திடீரென கடலில் ஏற்பட்ட காலநிலைமாற்றத்தால் நீரடி நீச்சல்பிரிவுப் போராளிகளையும் அனுப்பமுடியாமல் போனது. இருந்தாலும் கடற்சண்டை தொடர்ந்தது. ஆறு மணித்தியாலயம் நடந்த இக்கடற்சமரில் 18 படையினர் கொல்லப்பட்டனர். ஐம்பத்திநான்கு பேர் காயமடைந்தனர். இவ்வெற்றிகர கடற்சமரை கடற்புலிகளின் முதலாவது துணைத்தளபதியும் கடற்புலிகளின் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றியவருமான பிருந்தன் மாஸ்ரர் அவர்கள் கடலிலிருந்து செவ்வனவே வழிநடாத்தியிருந்தார். இவரே இத்தாக்குதலுக்கான தகவல்களையும் புதிய யுக்திகளையும் தலைவர் அவர்கள் மற்றும் சிறப்புத்தளபதி சூசை அவர்களுடனும் கலந்தாலோசித்து செய்திருந்தார். இவ்வெற்றிகர கடற்சமரில் இரண்டு கடற்கரும்புலிகள் உட்பட ஐந்து போராளிகள் வீரச்சாவடைந்தனர். http://irruppu.com/2021/10/02/விநியோகத்-தொடரணி-மீதான-க/
-
http://irruppu.com/2021/05/02/அபித-கடற்படைக்-கட்டளை-கப/ எழுத்துருவாக்கம்..சு.குணா. வடமராட்சிக் கடற்பகுதியில் நிலைகொண்டு கடற்தொழிலில் ஈடுபடும் மக்கள் மீது தாக்குதல் நடாத்தி அதாவது சுட்டும் வெட்டியும் கொன்றும் மக்களது வாழ்விடங்கள் நோக்கி அடிக்கடி தாக்குல்களை நடாத்தியும் அம்மக்களை இடம்பெயரச் செய்தும் இப்படியான பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்ட கடற்படையினரின் கடற்கலங்களுக்கு கட்டளைகள் வழங்கியும் விடுதலைப் புலிகளின் இந்தியா தமிழீழத்திற்கான விநியோகங்களுக்கு பெரும் சவாலாக இருந்த அபித என்ற கடற்படைக் கட்டளைக் கப்பல் மீது தாக்குதல் நடாத்தி அக்கப்பலை அப்புறப்படுத்துமாறு தலைவர் அவர்களால் அப்போதைய விடுதலைப்புலிகளின் கடல் நடவடிக்கை அணியான கடற்புறா அணிக்குக் கட்டளை வழங்கப்பட்டதுடன். அதற்கான ஆலோசனையும் வழங்கியதோடு மட்டுமல்லாமல் தனது மெய்பாதுகாப்பணிகளையும் அனுப்பிவைத்தார் .அதற்கமைவாக கடற்புறாவில் கடமையாற்றிக்கொண்டிருந்த கடற்கரும்புலியான ெஐயந்தன் அவர்களும் ஏற்கனவே கடலனுபவம் கொண்டிருந்த கடற்கரும்புலியான சிதம்பரம் அவர்களும் கடற்கரும்புலியாகச்சென்று அக்கட்டளைக்கப்பலைத் தாக்குவதென்றும் தீர்மாணிக்கப்பட்டது.அதற்கமைவாக 04.05.1991 அன்றிரவு தளபதி சாள்ஸ் /புலேந்திரன் (வீரச்சாவு 11.06.1993)அவர்கள் தலைமையிலான சண்டைப் படகுகள் மற்றக் கடற்படைக்கலங்கல் மீது தாக்குதல் நடாத்தி கரும்புலிப்படகின் பிரதான இலக்கான அபித கட்டளைக் கண்காணிப்புக்கப்பலுக்கு அருகில் அழைத்து சென்று விட்டனர்.அதற்கமைவாக கடற்கரும்புலி கப்டன் ெஐயந்தன் கடற்கரும்புலி கப்டன் சிதம்பரம் ஆகியோர் தங்களது படகால் அபித கட்டளைக் கண்காணிப்புக்கப்பல் மீது மோதி வெடித்தனர். ஆயினும் அக்கப்பல் பாரிய சேதமேற்பட்டு கப்பல் வடமராட்சிக் கடற்பகுதியிலிருந்து அகன்றது.இது கடற்கரும்புலிகளின் இரண்டாவது தாக்குதலென்பதால் போதிய அநுபவமின்மை காரணத்தாலும் போதிய வெடிமருந்துகளற்ற காலமென்பதாலும் இக்கப்பலை மூழ்கடிக்க முடியாவிட்டாலும் இவைகளில் பட்ட அநுபவத்தால்த்தான் பிற்பட்ட தாக்குதலில் பல வெற்றிகளைத் தேடித்தந்தது.இவ்வெற்றிகரத் தாக்குதலை கடலில் சாள்ஸ் அவர்கள் வழிநடாத்த இவ் அனைத்து நடவடிக்கைகளையும் அப்போதைய கடற்புறாப் பொறுப்பாளரான தளபதி சங்கர் தாத்தா அவர்களின் துணையுடன் தளபதி பிருந்தன் மாஸ்ரர் அவர்களும் தளபதி கங்கைஅமரன் அவர்களும் வழிநடாத்தினார்கள்.இந்த நடவடிக்கையில் அப்போதைய வடமராட்சிப் பொறுப்பாளரான தளபதி சூசை அவர்களும் தளபதி கடாபிஅவர்களும் தளபதி டேவிட்(வீரச்சாவு 09.06.1991) அவர்களும் தங்களது முழுப் பங்களிப்பையும் வழங்கினார்கள்.
-
எழுத்துருவாக்கம்..சு.குணா 1990ம் ஆண்டு இரண்டாங்கட்ட ஈழப்போர் ஆரம்பித்த காலப்பகுதியில் விடுதலைப்புலிகளால் இராணுவத்திற்கெதிரான தாக்குதல்கள் வலுப்பெறத்தொடங்கியிருந்தன.ஒவ்வொரு படையணியினரும் தத்தமக்கு வழங்கப்பட்ட இடங்களை இராணுவ ஆக்கிரமிப்பிலிருந்து மீட்பதற்க்குக் கடுமையாகப் போரிட்டுக் கொண்டிருந்தனர். அதேசமயம் மேலதிக பகுதிகளைக் கைப்பற்றமுனைந்த இராணுவத்தினரின் முயற்சிகளுக்கெதிராக முறியடிப்புச்சமர்களையும் நடாத்திக்கொண்டிருந்தனர்.அத்துடன் கடற்புறா அணியினர் அவர்களுக்குத் தேவையான பொருட்கள் பலவற்றைத் தாய்த் தமிழகத்திலிருந்து கடல்வழிமூலம் தமிழீழத்திற்குக் கொண்டுவந்து கொண்டிருந்தனர்.அதுமட்டுமல்லாது பெருங்காயமடைந்தவர்களை இங்கிருந்து தமிழகத்திற்கு அனுப்பிச் சிகிச்சைகளையும் மேற்கொண்டு வந்தனர். இது இவ்வாறிருக்க ,இரண்டாம் கட்ட ஈழப்போர் ஆரம்பித்தவுடன் கடல்வலயத்தடைச் சட்டம் போடப்பட்டதாலும் கடற்படையின் பாரியகட்டளைக் கப்பலான எடித்தாராவை வல்வெட்டித்துறைக் கடற்பரப்பில் கடற்படையினர் கொண்டுவந்து நிறுத்தியதாலும் இக்கடல்வழி விநியோகத்திற்குப் பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டிருந்தது.இவ்விடயங்கள் தலைவர் அவர்களுக்குத் தெரியப்படுத்தப்பட்டது .இதனைக் கருத்திலெடுத்த தலைவர் அவர்கள் அக்கப்பலை வேகமாக அப்புறப்படுத்தி விநியோக நடவடிக்கையைத் தொடரவேண்டித் தானே நேரடியாகச் செயலில் இறங்கினார். தலைவர் அவர்களின் தெலைநோக்குச் சிந்தனைக்கமைவாகத் அவரது பாதுகாப்புப் பிரிவிலிருந்து கடற்புறா அணிக்குக் காந்தரூபன் அவர்களை அனுப்பினார்.ஏற்கனவே, பெரிதாக எதையாவது சாதிக்கவேண்டும் என்று சகபோரளிகளுக்குச் சொல்லிக்கொண்டும் அதற்கான நடவடிக்கைகளில்ஈடுபட்டுக் கொண்டுமிருந்தவன்தான் காந்தரூபன்.தலைவர் அவர்களுடன் மணலாற்றுக் காட்டில் நின்ற சமயம் தனது ஆரம்பகால நினைவுகளைக் கூறித் தலைவர் அவர்களிடம் அனுமதிபெற்றுத் தன்னை கரும்புலிகளணியில் இணைத்திருந்தான் காந்தருபன். கொலின்ஸும் மணலாற்றுக் காட்டில் தலைவர் அவர்களின் பாதுகாப்பணியில் இருந்து செயற்பட்டு கொண்டிருந்த வேளையில் தலைவர் அவர்களிடம் நேரடியாக கேட்டுத் தன்னை கரும்புலிகளணியில் இணைத்துக்கொண்டிருந்தான்.இவர்களுடன் வடமராட்சி அணியிலிருந்து ஏற்கனவே கரும்புலிகளிணியில் தன்னை இணைத்திருந்த வினோத்தும் எடித்தாராவைத் தாக்கியழிப்பதற்கான கடும்பயிற்சிகளை மேற்கொண்டனர். தாக்குதலுக்கான திட்டம் விளங்கப்படுத்தப்பட்டது . அத்திட்டத்தின் அடிப்படையில் 10.07.1990 அன்று தளபதி லெப்.கேணல் டேவிற் ( வீரச்சாவு 09.06.1991) தளபதி லெப் கேணல் அருச்சுனா (வீரச்சாவு 16.12.1997), கப்டன் தினேஸ் ( வீரச்சாவு 12.08.1991) ஆகியோர் தலைமையிலான படகுகள் எடித்தாரக் கட்டளைக்கப்பலுக்குப் பாதுகாப்பாக நின்ற கடற்படைக் கலங்கள்மீது தாக்குதலைத் தொடுத்து திசைதிருப்பக் கடற்கரும்புலிகளான மேஜர்.காந்தரூபன், கப்டன் கொலின்ஸ்,கப்டன் வினோத் மூவரும் இணைந்து வெடிமருந்தேற்றியபடகால் எடித்தாராக் கட்டளைக்கப்பல்மீது மோதி வெடித்துத் தம்மை ஆகுதியாக்கிக்கொண்டனர். கப்பல் பாரிய சேதத்திற்குள்ளானது. முதலாவதாக நிகழ்த்தப்பெற்ற இவ்வெற்றிகரக்கடற்கரும்புலித்தாக்குதலைத் தளபதி டேவிற் அவர்கள் கடலில் வழிநடாத்த தலைவர் அவர்கள் வல்வெட்டித்துறைக் கடற்புறாத் தளத்திலிருந்து நெறிப்படுத்திக் கட்டளைகளை வழங்கத், தளபதி பிருந்தன் மாஸ்ரர் அவர்களும் தளபதி லெப் கேணல்.சாள்ஸ் வீரச்சாவு (11.06.1993) அவர்களும் தலைவர் அவர்கள் அருகிலிருந்து அக்கட்டளைகளுக்குச் செயல்வடிவம் தந்தனர். இந்நடவடிக்கைக்கான மேலதிக வேலைத்திட்டங்களை கப்டன் மோகன் மேத்திரி (வீரச்சாவு 02.09.1990) அவர்கள் தலைமையிலான அணி செவ்வனவே செய்துகொடுத்திருந்தது. அவ்வேளை தலைவர் அவர்கள் கடற்புலிகளுக்கு ஒரு தகவலைத் தெளிவாகக்கூறினார். அதாவது “கடற்கரும்புலிகளின் தாக்குதலிற் சேதமான கடற்கலங்கள் மீண்டும் கடலில் செல்லக்கூடாது” என்பதே அது. அதற்கேற்ப 16.07.1995 அன்று கடற்கரும்புலிகளான மேஜர் தங்கன்,மேஜர் நியூட்டன், கப்டன் தமிழினி ஆகியோர் காங்கேசன்துறைத் துறைமுகத்திற்குள் ஊடுருவி எடித்தாராக்கப்பலை மூழ்கடித்துத் தலைவர் அவர்களின் சொல்லுக்குச் செயல்வடிவம் தந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது