Search the Community
Showing results for tags 'சு.குணா.'.
-
எழுத்துருவாக்கம்..சு.குணா சிறிலங்கா கடற்படையின் அதி உச்சப் பாதுகாப்புகடற்படைத்தளத்தினுள்; ஊடுருவி கடற்படையினர் மீதும், கட்டளைக் கப்பல் எடித்தாராவையும் மூழ்கடித்து ஆயத விநியோகத்திற்கு பாரிய சேதத்தை ஏற்படுத்திய கடற்கரும்புலிகள், கடற்புலிகள். இலங்கைப் படைகளால் யாழ்க்குடாநாட்டை முழுமையாகக் கைப்பற்றும் நோக்கோடு ஆரம்பிக்கப்பட்ட இராணுவநடவடிக்கையான முன்னேறிப்பாய்ச்சலும் அதற்கெதிரான தலைவர் அவர்களின் நேரடி நெறிப்படுத்தலில் விடுதலைப்புலிகளால் தீடிரென மேற்கொள்ளப்பட்ட அதிரடித்தாக்குதலான புலிப்பாய்ச்சலும் யாவருமறிந்ததே .இப்படை நடவடிக்கையின் வழங்கள் மையம் எது அதற்கென்ன செய்யவேண்டும் என்பதை தீவிரமாக ஆராய்ந்த தலைவர் அவர்கள்.இது சம்பந்தமான மேலதிக தகவல்களையும் கடற்புலிகளிடம் கேட்டறிந்து அதற்கமைவாக ஒரு சிறந்த தாக்குதற் திட்டம் அதாவது கடற்புலிகளின் நீரடிநீச்சல் பிரிவு மற்றும் கடற்கரும்புலிகளணி கடற்தாக்குதற் படையணிகள் இணைக்கப்பட்டு கடற்புலிகளிடம் தலைவர் அவர்களால் கொடுக்கப்பட்டது. அதற்கமைவாக காங்கேசன்துறை துறைமுகத்தில் படையினருக்குத் தேவையான பொருட்களை இறக்கிக்கொண்டிருக்கும் கடற்படைக்கலங்கள் மீது கடற்புலிகளின் நீரடிநீச்சல் கடற் கரும்புலிகள் தாக்குதல் நடாத்தும் சமநேரத்தில் கடற்புலிகளின் கடற்தாக்குதல் படையணிகளான லெப் கேணல் சாள்ஸ் படையணியும் லெப்.கேணல் நளாயினி படையணியும் கடற்கரும்புலிகள் அணியும் கடற்புலிகளின் கடற்தாக்குதற் தளபதி லெப்.கேணல் நரேஸ் மற்றும் கடற்புலிகள் மகளிர் படைப்பிரிவுத் தளபதி லெப்.கேணல் மாதவி தலைமையில் (லெப்.கேணல் குணேஸ் லெப்.கேணல் நிமல் லெப்.கேணல் இரும்பொறை லெப்.கேணல் சதீஸ் லெப்.கேணல் நாவரசன் மேஐர் விசும்பன் இவர்கள் வெவ்வேறு கடற்சமரில் பின்னாளில் வீரச்சாவடைந்தனர்.) தலைமையிலான படகுகள் சென்று ஏனைய கடற்படைக்கலங்கள் மீது தாக்குதல் நடாத்தி ஒரு பாரிய சேதத்தை ஏற்படுத்துவது எனத் திட்டமிடப்பட்டது. அதற்கேற்ப 1995.07.16 அன்று நள்ளிரவு நீரடிநீச்சல் கடற்கரும்புலிகளான மேஐர் தங்கன் அவர்களும் மேஐர் நியுட்டன் அவர்களும் காங்கேசன்துறை துறைமுகத்தில் படையினருக்குத்தேவையான பொருட்களை இறக்கிக் கொண்டிருந்த கப்பலான எடித்தாராக் கட்டளைக்கப்பல் மீது கப்பலின் அடிப்பகுதியில் குண்டைபொருத்தி வெடிக்கவைத்து காங்கேசன்துறை துறைமுகத்தில் ஒரு வரலாற்றை எழுதிச்சென்றனர். என்ன நடந்ததென்று கடற்படையினர் திகைத்து நின்ற சமநேரத்தில் இலங்கைக் கடற்படையின் உச்ச விழிப்புடன் இருந்த காங்கேசன்துறை துறைமுக பாதுகாப்பு வேலியை மிகவிரைவாக ஊடுருவிச்சென்ற கடற்புலிகளின் சண்டைப்படகுகள் துறைமுகப்பாதுகாப்புப் பணியிலிருந்த கடற்படையினர் மீது ஒரு மூர்க்கத்தனமான திகைப்புத் தாக்குதலைத் தொடுத்தனர்.சண்டை ஆரம்பித்த சிறிதுநேரத்தில் இக்கடற்சமரை கடலில் வழிநடாத்திய லெப்.கேணல் நரேஸ் அவர்கள் வீரச்சாவடைய லெப் கேணல் குணேஸ் அவர்கள் களத்தை தலைமையேற்று தொடர்ந்து வழிநடாத்தினார். மூன்று மணிநேரம் நீடித்த இப்பெரும் கடற்சமர் கடற்படைக்கு ஆள் ஆயுத வழங்கலகளுக்கு பாரிய இழப்பை ஏற்படுத்திவிட்டு தலைவர் அவர்கள் கொடுத்த திட்டத்திற்க்கு கடற்புலிகளும் கடற்கரும்புலிகளும் செயல்வடிவம் கொடுத்தனர்.இவ்வெற்றிகரகடற்சமரை கடற்புலிகளின் பிரதான ராடர் (கதுவி) நிலையமான கப்டன் அலன் முகாமில் தலைவர் அவர்கள் அருகிருந்து சிறப்புத்தளபதி சூசை அவர்களும் தளபதி கங்கைஅமரன் அவர்களும் துணைத் தளபதி பிருந்தன் மாஸ்ரர் அவர்களும் தலைவர் அவர்களின் ஆலோசனைப்படி வழிநடாத்தியிருந்தார்கள். இவ் எடித்தாராக் கட்டளைக் கப்பலானது 10.07.1990 கடற்கரும்புலிகளின் தாக்குதலுக்கு இலக்காகி பாரிய சேதத்திற்க்குள்ளானது .கடற்கரும்புலிகளின் தாக்குதலுக்குள்ளான எந்தவொருகப்பலும் தமிழீழக் கடற்பரப்பில் உலாவக்கூடாது என்ற தலைவர் அவர்களின் சொல்லுக்கு மதிப்பளித்து கடற்கரும்புலிவீரர்கள் இக்கப்பலை மூழ்கடித்து காவியமானார்கள். இக்கடற்சமரில் வீரகாவியமானவர்கள் விபரம்: கடற்கரும்புலி மேஜர் தங்கம் (வீரய்யா மயில்வாகனம் – பதுளை – சிறிலங்கா) கடற்கரும்புலி மேஜர் செந்தாளன் (நியூட்டன்) (பிரான்சில் டக்ளஸ் – குருநகர், யாழ்ப்பாணம்) கடற்கரும்புலி கப்டன் தமிழினி (சிவப்பிரகாசம் கனிமொழி – வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்) கடற்புலி லெப்.கேணல் சந்திரன் (நரேஸ்) (சிவராஜசிங்கம் நவராஜன் – திருகோணமலை) கடற்புலி லெப்.கேணல் மாதவி (திருநாவுக்கரசு கலைச்செல்வி – இன்பருட்டி, யாழ்ப்பாணம்) கடற்புலி கப்டன் வில்வன் (ஏரம்பமுர்த்தி ஜீவானந்தன் – பெரியபோரதிவு, மட்டக்களப்பு) கடற்புலி கப்டன் கமலம் (குழந்தைவேல் சிறரஞ்சினி – காரைநகர், யாழ்ப்பாணம்) கடற்புலி கப்டன் தாயகி (மகாலிங்கம் ரஞ்சினிதேவி – யாழ்ப்பாணம்) கடற்புலி லெப்டினன்ட் பூமதி (கனகரட்ணம் சாந்தனி – வல்வெட்டிதுறை, யாழ்ப்பாணம்) கடற்புலி லெப்டினன்ட் தவமலர் (துரைசிங்கம் கேமாவதி – மானிப்பாய், யாழ்ப்பாணம்) கடற்புலி லெப்டினன்ட் சோபிதா (தர்மலிங்கம் மாலதி – பருத்தித்துறை, யாழ்ப்பாணம்) கடற்புலி 2ம் லெப்டினன்ட் நித்தியா (மாரிமுத்து மஞ்சுளா – மாங்குளம், முல்லைத்தீவு) கடற்புலி 2ம் லெப்டினன்ட் அருள்மதி (வெற்றிவேலாயுதம் விஜந்திரராணி – யாழ்ப்பாணம்) கடற்புலி 2ம் லெப்டினன்ட் நதியரசி (செல்வராசா சாந்தவதனி – முள்ளிவாய்க்கால், முல்லைத்தீவு) தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த வீரவேங்கைகளை இன்றைய நாளில் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூருகிறோம். இப்பதிவானது அன்று இக்களமுனையில் களமாடி இன்று பல்வேறு திசைகளில் உள்ளவர்களின் நினைவழியா நிகழ்விலிருந்து…..
-
எழுத்துருவாக்கம்..சு.குணா. ஜெயசிக்குறு இராணுவ நடவடிக்கையின் தாக்கத்தால் 1998ம் ஆண்டில் விடுதலைப் புலிகளமைப்பில் இணைந்து கொண்டவர்களில் ஒருவனாக இணைந்தவன் தான் தமிழ்முரசு. கரும்புலி லெப் கேணல் சுபேசன் அவர்கள் நினைவாக அவரது பெயரைச் சுமந்த பயிற்சி முகாமான சுபேசன் 02ல் பயிற்சி முடித்து கடற்புலிகளனியில் இணைக்கப்பட்டு மாவீரரான லெப் கேணல் தமிழன் அவர்கள் தலைமையில் செம்மலையில் கடற்புலிகளின் அதிகாரிகள் பயிற்சிக் கல்லூரியில் பயிற்சிகள் பெற்று பயிற்சிகள் முடிவடைந்ததும். விடுதலைப் புலிகளால் மேறகொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கையான ஒயாத அலைகள் மூன்றில் பங்குபற்றி தனது முதலாவது சமரில் மிகவும் திறம்பட செயற்பட்ட தமிழ்முரசு.அதன் பின்னர் தமிழீழத்திற்க்கு பலம் சேர்க்கின்ற பணிகளுக்காக சாளைக்கு வந்தவன். விநியோக நடவடிக்கையில் தான், அதிகாரிகள் பயிற்சிக் கல்லூரியில் கற்றவைகளில் ஒன்றான இயந்திரப் பொறியியலாலராகச் சென்றுவந்தான்.(அத்தோடு இவன் வீட்டில் இருக்கும்போதே பொறியியல்துறை சம்பந்தமான வேலைகளைச் செய்திருந்தான்). அவ் வேளையில் வெளிநாட்டிலிருந்து படகு வருவதால் அப்படகை கொண்டு வருவதற்காக கப்பலுக்குச் சென்றவன் அங்கே கப்பலின் இயந்திரப் பகுதியில் வேலையும் செய்தான். இவனது இயந்திரங்கள் மீதான ஆர்வம் அவைகளைக் கையாள்கிற விதம் என்பவற்றைக் கவனித்த அக்கப்பலின் கப்டனான பின்னர் மாவீரரான கடற்கரும்புலி லெப் கேணல் பெத்தா அவர்கள் இவனுடன் கதைத்தபோது தான் இவன் ஏற்கனவே டீசல் இயந்திரங்கள் சம்பந்தமாக பூரண அறிவைபெற்றிருப்பது தெரியவர பெத்தா அவர்கள் அப்போதைய டீசல் இயந்திரப் பொறுப்பாளரான மாவீரரான லெப் கேணல் சதீஸ் அவர்களிடம் இவனைப் பற்றிக் கூற, சதீஸ் அவர்கள் சிறப்புத் தளபதியின் அனுமதியுடன் இவனை டீசல் இயந்திரப் பிரிவிற்க்குள் சேர்த்துக் கொண்டார்.அதனைத் தொடர்ந்து டீசல் இயந்திரத்துறைக்குச் சென்றவன்.அங்கே சதீஸ் அவர்களுடன் இணைந்து பல்வேறு பணிகளைச் செய்து வர 02.11.2000 அன்று ஆழ்கடல் விநியோகப் பணியின் போது வீரச்சாவடைந்த லெப் கேணல் சதீஸ் அவர்களின் இடத்திற்க்கு தமிழ்முரசு சிறப்புத்தளபதி சூசை அவர்களால் நியமிக்கப்பட்டான். தொடர்ந்து புதிய போராளிகளுக்கும் கடற்கரும்புலிகளுக்கும் பயிற்சிகள் வழங்கி அவர்களையும் தனக்கு நிகராக வளர்த்தெடுத்தான். முல்லைத்தீவுக் கடற்பரப்பிலிருந்து மேற்கொள்ளப்ட்ட விநியோகம் நிறுத்தப்பட்டு மன்னார் கடற்பரப்பிற்க்கு மாற்றப்பட்டபோது அவ் விநியோகம் முற்றிலுமாக மாறுபட்டிருந்தது அதாவது ரோலரில் சென்று கப்பலிலிருந்து பொருட்களை தமிழீழத்திற்க்கு கொண்டுவருவதாகும். ரோலர் டீசல் இயந்திரமாதலால் டீசல் இயந்திரப் பொறியியலாலராக தமிழ்முரசுவிடம் பயிற்சி பெற்ற அணியினரே சென்று வந்தனர். அத்தோடு கொழும்பில் டீசல் இயந்திரத்தைக் கொள்வனவு செய்து இராணுவப் பிரதேசத்தில் அவ் இயந்திரங்களைப் பிரித்து அவ் இயந்திரங்களை புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் படகின் மூலம் கொண்டு வந்து இவ்விநியோகத்திற்க்கு வலுச்சேர்த்தான். நீர்மூழ்கிக் கப்பல் தயாரிக்கும் முயற்சியிலும் முழுமையாக பங்காற்றினான். இப்படியாக அணைத்துப் பணிகளிலும் சிறந்து விளங்கிய தமிழ்முரசை 2005ம் ஆண்டின் முற்பகுதியில் அழைத்த தலைவர் அவர்கள் தனது பாராட்டையும் தெரிவித்தார். ரோலரில் வெடிமருந்து இணைக்கப்பட்டு இருக்கும் விநியோக நடவடிக்கையில் ஈடுபட்டு கொண்டிருக்கும்போது சிறிலங்காக் கடற்படையினர் இடையூறு விளைவித்தால் இரகசியத்தைக் காப்பதற்காக இயக்க மரபிற்கிணங்க அவ்ரோலரைத் தகர்ப்பார்கள். இவ் விநியோக நடவடிக்கையை கடற்கரும்புலிகளே பெரும்பாலும் செய்து வந்தனர்.அந்தவகையில் கப்பலுக்குச் சென்ற ரோலரின் இயந்திரம் பழுதானதால் அவ் ரோலருக்கு புதிய இயந்திரத்தைக் கொண்டு சென்று கப்பலின் உதவியோடு மாற்றச் செல்லும்போது தான்தமிழ்முரசுவின் ரோலரை மன்னார் கற்பிட்டிக் கடற்பரப்பில் 23.03.2006 அன்று சிறிலங்காக் கடற்படையினர் சோதனை செய்ய முற்பட்ட வேளையில் மிகவும் அருகாமையில் வந்த டோராப் படகுடன் தங்களது ரோலரை வெடிக்கவைத்து அவ் டோராவையும் தாக்கி அழித்து வீரச்சாவடைகின்றார்கள். தமிழ்முரசுவைப் பொறுத்தளவில் இவன் கடற்கரும்புலி அல்ல இருந்தாலும் அவ் ரோலரை தகர்க்கும் முயற்சியில் முற்று முழுதாக தன்னை அர்பணித்தவன் விநியோக நடவடிக்கைக்கு எந்தவித இடையூறும் நிகழக்கூடாது என்று உறுதியாக நின்றவன். இயக்க மரபிற்கிணங்க தங்களையும் அழித்து கடற்படையினரையும் அழித்து கற்பிட்டிக்கடற்பரப்பில் கடலோடு சங்கமமானார்கள். எத்தனையோ போராளிகளை வளர்த்து விட்டவன். தலைமையின் சிந்தனைக்கேற்ப செயற்பட்டவன் . சிறப்புத் தளபதியின் வேகத்திற்ககேற்ப ஈடுகொடுத்த ஒருவீரன். நிலைமையறிந்து செயற்பட்ட ஒரு வீரன் போரளிகளோடு பழகுகிற விதம் இப்படியான ஒரு உன்னத போராளியை 23.03.2006 இழந்து விட்டோம்.