Search the Community
Showing results for tags 'தமிழீழப் படைத்துறை'.
-
"தோற்றிடேல், மீறித் தோற்றிடினும் வரலாறின்றி மரியேல்!" -நன்னிச் சோழன் எழுதருகை(warning): இங்குள்ள செய்திகள் யார் மனதையும் புண்படுத்துவதற்காக எழுதப்படவில்லை. இவை தமிழினத்தின் வரலாற்றை ஆவணப்படுத்தும் முகமாகவே எழுதப்பட்டுள்ளன என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்…! தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் படைதுறைக் கிளையானது உலகின் அங்கீகரிக்கப்பட்ட நாட்டிடம் இருக்கும் மரபுவழிப்படை போன்று முப்படைகளையும் கொண்டிருந்ததது. அம்முப்படைகளுடன் சேர்த்து முற்றிலும் புதிதாக ஓர் படையையும் கொண்டிருந்தனர். அதுதான் தற்கொடைப்படை, அதாவது கரும்புலிகள் என்று அவர்கள் மொழியில். இவைதான் அவர்களிடம் இருந்த தமிழர்களின் புதுமைக்கால நாற்படைகள் ஆகும். அவை மொத்தமாக, தரைப்புலிகள் வான்புலிகள் கடற்புலிகள் கரும்புலிகள் இத்துடன் வேவுப்புலிகள் என்னும் ஐந்தாம் படையையும் அவர்கள் வைத்திருந்தனர் . இவர்கள் ஒரு அங்கீகரிக்கப்பட்ட நாடல்லாமல் நடைமுறையரசாக(de-facto) செயற்பட்டதால் 'படைவீரர்கள்' எனாமல் போராளிகள் எனப்பட்டனர். எண்ணிக்கை: 2008 திசம்பர்: 14 ஆ சொச்சம் (மக்கள்படை நீங்கலாக) - சிறப்பு அறிக்கைப்பகுதி போராளியின் வாக்குமூலம் 2009 மே முதற்கிழமை: 10 ஆ சொச்சம் (மக்கள்படை நீங்கலாக) - சிறப்பு அறிக்கைப்பகுதி போராளியின் வாக்குமூலம் வீரச்சாவு = ~26,500 (2009 மே-18 வரை களமாடி மடிந்தோர்… ) காயமடைந்தோர்: 2009 சனவரி - மே முதற்கிழமை: ~4000 ஆ (மக்கள்படை நீங்கலாக) - சிறப்பு அறிக்கைப்பகுதி போராளியின் வாக்குமூலம் ஆயுதம் மௌனித்து சிங்களத்திடம் சென்றபிறகு அங்கு சரணடைந்த தவிபு உறுப்பினர்கள் : 11,644 இவ்வியக்கத்தினரின், பழைய பெயர்: புதிய தமிழ்ப் புலிகள் (1972 இல் 'மாமனிதர்' இராசரத்தினம் அவர்களால் முன்மொழியப்பட்ட ஆலோசனையான "தாமிரபரணி புதிய புலிகள்" என்ற பெயரிலிருந்து எடுக்கப்பட்டு சூட்டப்பட்டது) புதிய பெயர்: தமிழீழ விடுதலைப் புலிகள்- தவிபு - (5-5-1976 இல் இருந்து) புலிகள் - இவர்களின் இயக்கத்தின் பெயரின் இறுதியில் உள்ள 'புலிகள்' என்ற பன்மையால் பலரால் தொடர்ந்து சுட்டப்படுகின்றனர். பட்டப்பெயர்கள்: இயக்கம் - இப்பெயர் கூலிப்படைகளாகச் செயல்பட்ட மாற்று இயக்கங்கள் ஒழிக்கப்பட்ட பின்னர் மக்களால் புலிகளைக் குறிக்கப் பயன்பட்டது ஆகும். கொம்பனி - படையின் ஒரு அலகான கொம்பனியை, Company என்று ஆங்கிலத்தில் புலிகள் அழைத்தனர். அதனால் புலிகளிற்கும் இதுவே பெயரானது. சிங்களப் படையினருக்கு புரியாது இருக்க புலிகளின் புலனாய்வுத்துறையினரும் மக்களுக்கு தங்களை அடையாளம் காட்ட இந்தப் பெயரை பயன்படுத்தினர். ஆகையால் இது மக்கள் மத்தியில் பரவலாக இருந்தது. புலிப்படை - வீரத்தின் பெயரால் ஒட்டுமொத்த தமிழர் சேனையையும் குறிக்க அமைந்த பெயர். பயத்தால் பட்டப்பெயர்: பீரங்கி - இது 2008 ஆம் ஆண்டிற்குப் பின்னரான காலத்தில் 'கட்டாய ஆட்சேர்ப்பு' காரணமாக இளைஞர்களால் புலிகளை சுட்டப் பயன்பட்டது ஆகும்.. (அவர்களின் ஓர் குறும்படத்தில் இருந்து இப் பற்றியத்தை எடுத்தேன்) செல்லப்பெயர்: பெடியள்- புலிகள் இயக்கத்தின் தொடக்க காலத்தில் ஆண்களே இருந்ததால் மக்களால் பெடியள் என்று அழைக்கப்பட்டு அதுவே இவர்களை இறுதி வரையும் சுட்டலாயிற்று. உலகத்தால் வழங்கப்பட்ட அடைமொழி: Tamil Tigers - இவர்களின் இயக்கத்தின் பெயரின் இறுதியில் உள்ள 'புலிகள்' என்பதன் ஒருமையான 'புலி' என்பதையும், அவர்தம் இனம் தமிழர்களாகவும் இருந்ததால் இரண்டையும் ஒன்றிணைத்து 'தமிழ்ப்புலி' என்று அழைக்கப்படலாயினர். இவ்வாறு ஈழத்தினில் வழங்கப்பட்டது மிக அரிதாகும். சரி இனி ஒவ்வொரு கிளையிலுமிருந்த பிரிவுகளைப் பார்ப்போம். இப்புலனங்களை சில கட்டுரைகள் மூலமாகவும் விடுதலைப் புலிகளால் வெளியிடப்பெற்ற ஒரு சில புத்தகங்களின் துணைகொண்டும் தேடியெடுத்து தொகுத்து பதிவிட்டிருக்கிறேன். வாசித்து அறிந்து கொள்ளவும்… நிரந்தரப்படை (ஆ & பெ): தரைப்புலிகள் (தரைப்படை):- சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி (இதுவே முதலாவது மரபுவழிப் படையணியாகும். இதில் வட தமிழீழத்தைச் சேர்ந்த போராளிகள் இடம்பெற்றிருந்தனர் | உருவாக்கப்பட்டது: 1991.04.10 | தரிப்பிடம்: வட தமிழீழம். தேவைக்கேற்ப சில கொம்பனிகள் தென் தமிழீழத்தை நோக்கியும் நகர்த்தப்பட்டது| எண்ணிக்கை: 1000–2000 (2008) வான்காப்பு அணி கனவகை ஆயுதப்பிரிவு சிறப்பு உந்துகணை செலுத்திப்பிரிவு சாள்ஸ் அன்ரனி வேவு அணி பாலா மோட்டார் அணி இராகசீலம் இசைக்குழு ஜெயந்தன் படையணி (இதில் மட்டக்களப்பு-அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த ஆண் போராளிகள் இடம்பெற்றிருந்தனர்.) | உருவாக்கப்பட்டது: 1993.05.03 | தரிப்பிடம்: மட்டு-அம்பாறை. சில கொம்பனிகள் வட தமிழீழத்திற்கும் அனுப்பப்படும். | எண்ணிக்கை: 500-1000 (2008) கனவகை ஆயுதப் பிரிவு பொதுநோக்கு இயந்திரத் துப்பாக்கி அணி (இது இயந்திர சுடுகலன்களுக்கான அணியாகும். எல்லாப் படையணிகள் கீழும் இது இயங்கியது) விசாலகன் சிறப்புப் படையணி | உருவாக்கப்பட்டது: 1991-1994 | தரிப்பிடம்: வாகரைக் கோட்டம் வினோதன் படையணி | உருவாக்கப்பட்டது: ~1996 | தரிப்பிடம்: குடும்பிமலைக் கோட்டம் மாலதி படையணி | தரிப்பிடம்: வட தமிழீழம் | எண்ணிக்கை: 500-750 | உருவாக்கப்பட்டது: சூரியக்கதிர் -1 எதிர்ச்சமரின் முடிவில். மாலதி படையணியானது அதற்கு முன்னர் மகளிர் படையணி என்னும் பெயரில் செயல்பட்டு வந்தது. கனவகை ஆயுதப்பிரிவு சிறப்பு அதிரடிப்படை சிறப்பு உந்துகணை செலுத்திப்பிரிவு ஸப்தமி கலைக்கூடம் (ஒலிப்பதிவுக் கூடம்) அன்பரசி படையணி | தரிப்பிடம்: மட்டு-அம்பாறை | எண்ணிக்கை: 250-750 | உருவாக்கப்பட்டது: சூரியக்கதிர் -1 எதிர்ச்சமரின் முடிவில். அன்பரசி படையணியானது அதற்கு முன்னர் மட்டு-அம்பாறை மகளிர் படையணி என்னும் பெயரில் செயற்பட்டு வந்தது. வான்காப்பு அணி கனவகை ஆயுதப்பிரிவு சோதியா படையணி | உருவாக்கப்பட்டது : 14.07.1996 | தரிப்பிடம்: வட தமிழீழம் | எண்ணிக்கை: 500 - 750 கனவகை ஆயுதப்பிரிவு மதனா படையணி | உருவாக்கப்பட்டது: 1997 | தரிப்பிடம்: மட்டு-அம்பாறை | எண்ணிக்கை: 250-750 கனவகை ஆயுதப்பிரிவு திலகா படையணி | தரிப்பிடம்: திருகோணமலை இளங்கோ படையணி | தரிப்பிடம்: திருகோணமலை . இதன் கட்டளையாளர் 'விமல்' என்பவர் ஆவார். பூநகரி படையணி (2007 - 2008 இறுதிவரை) (ஆ&பெ) சிறப்பு அதிரடிப்படை வேவு அணி கிட்டு பீரங்கிப் படையணி(ஆ&பெ) | உருவாக்கப்பட்டது : 1995 முன்னிலை நோக்குநர் அணி ஜோன்சன் மோட்டார் படையணி(ஆ&பெ) | தரிப்பிடம்: மட்டு-அம்பாறை முன்னிலை நோக்குநர் அணி குட்டிசிறி மோட்டார் படையணி(ஆ&பெ) | தரிப்பிடம்: வட தமிழீழம் முன்னிலை நோக்குநர் அணி பசீலன் மோட்டார் பிரிவு (தமிழீழத்தில் பெயர் சூட்டப்பட்ட முதலாவது சேணேவி(artillery) படைத்துறை பிரிவு) மாருதியன் படையணி | தரிப்பிடம்: மட்டு-அம்பாறை ரிம் 1.5 விசேட படையணி | தரிப்பிடம்: மட்டு-அம்பாறை இப்படையணியின் போராளிகள், இதன் கட்டளையாளரும் 2004இல் வஞ்சகனாய் மாறியவனுமான 'றொபேட்' ஆல் நேரடியாகவே பயிற்றுவிக்கப்பட்டு வளர்க்கப்பட்டதால் 'ரிம் 1.5 சொந்த விசேட படையணி' என்றும், இதன் தாக்குதல் திறனால் "அமெரிக்கன் படை" என்றும் மட்டக்களப்பைச் சார்ந்தோரால் அழைக்கப்படுவதுண்டு. கிழக்கில் தரித்திருந்த ஓர் உந்துகணை செலுத்திப் படையணி. இப்படையணி தனக்கென இலச்சினை எல்லாம் கொண்டிருந்தது. ஆனால் இதன் பெயரை அறிய முடியவில்லை! வண்ணாளன் உந்துருளி படையணி | தரிப்பிடம்: மட்டு-அம்பாறை 4.1 படையணி (ஆ&பெ) (மீளச் சேர்ந்தோருக்கானது) 2.3 படையணி 1.9 படையணி சந்தோசம் படையணி (மூன்றாம் ஈழப்போரில் மட்டுமே இயங்கியது) ராதா வான்காப்புப் படையணி | (2000/11 ஆம் ஆண்டு வரை இவர்கள் இம்ரான் - பாண்டியனின் ஓர் உறுப்பாக 'ராதா விமான எதிர்ப்பு அணி' என்ற பெயரில் செயல்பட்டு வந்தனர். 2002 இல் தனிப் படையணியாக உதயம் கண்டது. இதன் கீழ் 18 பிரிவுகள் செயற்பட்டன) ஜேசுதாஸ் தாக்குதல் அணி (தலைவரின் மெய்க்காவலர்கள். இதன் கீழ் பல்வேறு தேவைகளுக்கென பல நிர்வாகப் பிரிவுகள் இருந்தன. யேசு அணி என்றும் அழைக்கப்படுவதுண்டு) ராதா புலனாய்வு அணி கௌதமன் புலனாய்வு அணி சிறப்பு அணி (கனவகை படைக்கலன் இயக்குனர்கள்) வான் எதிர்ப்பு ஏவுகணை அணி வான் கண்காணிப்பு அணி உள்ளகப் படப்பிடிப்பு படைக்கல பாதுகாப்பு அணி இம்ரான்-பாண்டியன் படையணி (1–10–1992ஆம் ஆண்டு நடைபெற்ற யாழ்.கட்டைக்காட்டு தாக்குதலின் போதுதான் இவர்களின் பெயர் அலுவல்சாராக அறிவிக்கப்பட்டது. இதன் கீழ் 9 பிரிவுகள் செயற்பட்டன. படையணியாகத் தொடங்கப்படு முன் சைவர் {0} பிரிவு என்ற பெயரில் இயங்கியது. ) சூரன் கவச அணி பதுங்கித் தாக்குதல் அணிகள் சங்கர் ஆழ ஊடுருவித்தாக்கும் அணி படைக்காவலர் அணி செம்பியன் வேவு அணி சிறப்பு உந்துருளி படையணி | எண்ணிக்கை: 150> அதிவேக உந்துருளி சிறப்பு அணி குறிசூட்டுப்பிரிவு (ஆ&பெ) மயூரன் குறிசூட்டுப்பிரிவு செண்பகம் குறிசூட்டுப்பிரிவு - (செண்பகம் என்ற குறிசூட்டுத் துமுக்கியைப் பயன்படுத்துவோர்) விக்ரர் கவச எதிர்ப்புப் படையணி (1997 இன் முற்பாதியில் உருவாக்கப்பட்டது. இப்படையணியின் உந்துகணை சூட்டாளரிற்கு RPG Commando என்னும் அடைமொழி வழங்கப்பட்டிருந்தது. இப்படையணியின் வீரர்கள் 1997 இற்கு முன்னர் ராங்கி எதிர்ப்பு அணி என்ற 04- 1992 இல் உருவாக்கப்பட்ட அணியில் பணியாற்றியோர் ஆவர்.) (ஆ&பெ) பொன்னம்மான் கண்ணிவெடிப்பிரிவு (பெ) | 1999.04.28 இல் உருவாக்கப்பட்டது சிறப்பு கண்ணிவெடிப்பிரிவு நீலன் துணைப்படை(ஆ) தமிழீழ தேசிய துணைப்படை (ஆ&பெ) | இவர்கள் 1991 வைகாசியில் இருந்து ஆடி 1992 வரை 'எல்லைக் கிராமப் பாதுகாப்புப் படை' என்ற பெயரால் அழைக்கப்பட்டனர். உந்துகணை செலுத்தி பிரிவு பொதுநோக்கு இயந்திரத் துப்பாக்கி அணி என தரைப்புலிகளின் அடிபாட்டு உருவாக்கங்கள் மிடுக்குடன் நடந்தன. இவற்றில் 1-9, 4.1, 2.3 ஆகிய படையணிகள் தேவைக்கேற்ப உருவாக்கப்பட்டு அதன் பின் கலைக்கப்பட்டவையாகும். இவற்றோடு மகளிர் படையணிகள் யாவும் ஒன்றிணைக்கப்பட்டு 'மகளிர் பேரவை' என்ற அமைப்பும் தோற்றுவிக்கப்பட்டிருந்தது. பெண் போராளிகளின் பரிணமிப்பு: 1984ல் "சுதந்திரப் பறவைகள்" பின் "மகளிர் அமைப்பு" பின் 1990ல் "மகளிர் படையணி & மட்டு-அம்பாறை மகளிர் படையணி" பேந்து 'சூரியகதிர்' ஒன்றின் முடிவில் "மாலதி படையணி" மற்றும் "அன்பரசி படையணி" களாக பரிணமித்து பின் பற்பல சண்டை உருவாக்கங்களாகி வீறுநடை போட்டனர். மேலும், புலிகள் தாங்களாக தங்கள் நிருவாகப் பகுதிகளுக்குள் உருவாக்கியிருந்த துறைகளில் ஒவ்வொரு துறையும் தத்தம் பணியாளர்களைத் தனித்தனி தாக்குதலணியாக உருவாக்கி களமுனைகளிற்கு சுழற்சி முறையில் பணிக்கனுப்பியது: அத்தாக்குதலணிகள் ஆவன, அரசியல்துறை தாக்குதலணி புலனாய்வுத்துறை தாக்குதலணி நிதித்துறை தாக்குதலணி காவல்துறை தாக்குதலணி சிறுத்தைப்படை (அதிரடிப்படை):- 1992 நடுப்பகுதியில் தொடங்கப்பட்டு ஒன்றரை ஆண்டுகால பயிற்சியை முடித்து 1994இல் முதல் பாட்டம் (batch) வெளியேறியது. இப்படை 2005 ஆம் ஆண்டு கலைக்கப்பட்டு, பெண் போராளிகள் மாலதி படையணி, சோதியா படையணி மற்றும் மருத்துவப் பிரிவுடன் இணைக்கப்பட்ட அதேவேளையில் ஆண் போராளிகள் இம்ரான்-பாண்டியன் படையணியுடன் இணைக்கப்பட்டார்கள். 2006இல் மீண்டும் இம்ரான்-பாண்டியன் படையணியின் கீழ் உருவாக்கப்பட்ட்டு தொழிற்பட்டது. தரைச்சிறுத்தை அணி (ஆ&பெ) காட்டுச்சிறுத்தை அணி (ஆ&பெ) கடற்சிறுத்தை அணி (ஆ&பெ) வேவுப்புலிகள் (வேவுப் பிரிவு):- இவ்வேவுப் பணியில் சில வேளைகளில் கரும்புலிகளும் ஈடுபடுத்தப்படுவதுண்டு. இது படையப் புலனாய்வுப் பிரிவின் கீழ் தொழிற்பட்டது. முகிலன் நீண்டதூர விசேட வேவு அணி (LRRP) வரைபடப்பிரிவு (மாதிரிகள் அமைக்கும் அணி , தொலைத்தொடர்பு பரிபாசை தாள்கள் விளைவிக்கும் அணி) விடுதலைப்புலிகளின் கடற்புலிகள் :- “கடற்புறா “ என்ற சிறு அணி இந்திய-தமிழீழ கடல்வழி நகர்வுகளைக்காக உருவாக்கப்பட்டது. அது பின்பு தமிழீழக் கடற்பரப்புகளின் பாதுகாப்புக்காகவும் அவற்றில் நடவடிக்கைகளுக்குமாக 1990 ஆம் ஆண்டு மரபுவழிப் படைத்துறைக் கிளைகளில் ஒன்றான கடற்படையாகப் பரிணாம வளர்ச்சி பெற்றது. அதுவே கடற்புலிகள் என்றானது. இக்கிளையை 2005 முதல் "தமிழீழக் கடற்படை" என்றும் அழைக்கத் தொடங்கினர்.| எண்ணிக்கை: 750 - 1500 ஆசிர் சிறப்புத் தாக்குதலணி (இதுதான் முதலாவது சிறப்புக் கடற்றாக்குதல் அணி ஆகும். இது மேஜர் ஆசிர் நினைவாக கடற்புலிகளின் தாக்குதல் கட்டளையாளர் சாள்ஸ் அவர்களின் தலைமையில் 1992 ல் ஆரம்பிக்கப்பட்டது ஆகும். பின்னாளில் வேறு கடல் தாக்குதலணியோடு இணைக்கப்பட்டதாக அறிந்தேன்.) சாள்ஸ் சிறப்புக் கடற்தாக்குதல் அணி(ஆ) (உருவாக்கப்பட்டது : 11-11-1993. நடவடிக்கை அணி தாக்குதலணி (இது முதலில் "சிறப்புக் கடற்படையணி" என்றே இருந்ததாக அவர்களின் நாளிதழ்களின் மூலமாக அறிய முடிகிறது. (களத்தில் 05-1994). ஆனால் 1997 ஆம் ஆண்டு நடந்த கடற்சமர் பற்றி பின்னாளில் வெளியிடப்பட்ட கரும்புலிகள் பற்றிய ஓர் நிகழ்படத்தில் "கடல் தாக்குதலணி " என்றும் அதன் பின்னர் வெளிவந்திருந்த ஒரு சில நாளிதழ்களிலும் இதன் பெயர் "கடல் தாக்குதலணி "என்றே வழங்கப்படுவதால், இதுவோர் கடல் தாக்குதலணி என்ற முடிவிற்கே வர முடிகிறது. எனவே இதன் பெயர் மாற்றம் 2000இற்கு பின்னரே நிகழ்ந்திருக்கக் கூடும்) நளாயினி சிறப்புக் கடற்தாக்குதல் அணி(பெ) நடவடிக்கை அணி தாக்குதலணி (இது முதலில் "சிறப்புக் கடற்படையணி " என்றே இருந்ததாக அவர்களின் நாளிதழ்களின் மூலமாக அறிய முடிகிறது. (களத்தில் 05-1994). ஆனால் 1997 ஆம் ஆண்டு நடந்த கடற்சமர் பற்றி பின்னாளில் வெளியிடப்பட்ட கரும்புலிகள் பற்றிய ஓர் நிகழ்படத்தில் "கடல் தாக்குதலணி " என்றும் அதன் பின்னர் வெளிவந்திருந்த ஒரு சில நாளிதழ்களிலும் இதன் பெயர் "கடல் தாக்குதலணி "என்றே வழங்கப்படுவதால், இதுவோர் கடல் தாக்குதலணி என்ற முடிவிற்கே வர முடிகிறது. எனவே இதன் பெயர் மாற்றம் 2000இற்கு பின்னரே நிகழ்ந்திருக்கக் கூடும்) பாக்கியன் ஆழ்கடல் தாக்குதல் அணி (ஆ & பெ) வசந்தன் படையணி (உருவாக்கப்பட்டது : 1994. பின்னாளில்(~2000) வேறு கடல் தாக்குதலணியோடு இணைக்கப்பட்டதாக அறிந்தேன்) சங்கர் படையணி நரேஸ் படையணி (2000 ஆம் ஆண்டு வரை) மாதவி படையணி டேவிட் படையணி எழிற்கண்ணன் படையணி கடற்புலிகளின் தரைத்தாக்குதல் படையணி புனிதா தரைத்தாக்குதல் அணி(பெ) சுகன்யா தரைத்தாக்குதல் அணி(பெ) சூட்டி தரைத்தாக்குதல் அணி(ஆ) (1995 மண்டைத்தீவுத் தாக்குதலிற்குப் பின்னர் "அருச்சுனா படையணி"யின் பெயர் சூட்டி தரைத்தாக்குதல் அணி என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.) | உருவாக்கப்பட்டது: 5.7.1995 சிறப்புப் படையணி கப்பல் பிரிவு (இதில் பணியாற்றியவர்கள் ஆழ்கடலோடிகள் என்று அழைக்கப்பட்டனர். இவர்களிடம் சொந்தமாக 20–25 கப்பல்கள் இருந்தன. அவற்றுள் 15 போரின் போது மூழ்கடிக்கப்பட்டு விட்டது) சிறப்புப் பணிப்பிரிவு நீரடி நீச்சல் பிரிவு கங்கையமரன் நீரடி நீச்சல் பிரிவு (உருவாக்கப்பட்டது: 1994) (ஆ) (சுலோயன் என்று இருந்த இதன் பெயர் 2008 இல் இருந்து கங்கை அமரன் என்று பெயர் மாற்றமடைந்தது) அங்கயற்கண்ணி நீரடி நீச்சல் பிரிவு (உருவாக்கப்பட்டது: 1994- 8ஆம் மாதத்திற்குப் பின்னர்) (பெ), சிறப்பு சுற்றுக்காவல் அணி கடல் வேவு அணி வானூர்தி எதிர்ப்பு அணி கடற் கண்காணிப்புப்பிரிவு (radar monitoring) சதீஸ் இயந்திரவியல் பிரிவு உள்ளிணைப்பு இயந்திரப்பிரிவு வெளியிணைப்பு இயந்திரப்பிரிவு டீசல் இயந்திரப்பிரிவு வழங்கல் பிரிவு படகுக் கட்டுமானப் பகுதி மங்கை படகுக் கட்டுமானப்பிரிவு & டேவிட்(சண்முகம்) படகு கட்டுமானப்பிரிவு ஆடியிழை கட்டுத்துறை (Fibreglass yard ) மாதிரி கட்டுத்துறை(Model yard) வரைபடப்பிரிவு மலரவன் வெடிமருந்துப் பிரிவு தமிழீழக் கடற் துணைப்படை(ஆ):- தமிழீழக் கரையோரக் காவல் துணைப்படை:- மறவன் துணைப்படை திருவடி துணைப்படை நவரசன் துணைப்படை ஜோன்சன் துணைப்படை ஒஸ்கார்(ஆதிமான்) சிறப்புத் துணைப்படை அணி - இது கடற்புலிகளின் ஆழ்கடல் நடவடிக்கை ஆற்றுதல் அணி ஆகும் கனவகை கடற்றாக்குதல் ஆய்தங்கள் தேவைப்படும் இடங்களில் கடற்புலிகளின் கடற்படையணிகளும் தாக்குதலணிகளும் களமிறக்கப்பட்டிருந்தன. மேலும் கடற்புலிகளின் ஆளுகை வசதிக்காக, நிருவாகச் செயலகம் அரசியல்துறை (1991 இல் தொட.) புலனாய்வுத்துறை பொறியியல்துறை மருத்துவப்பகுதி என்பனவும் உருவாக்கப்பட்டிருந்தன. ஈரூடகப்படை (Marines)- இது கடற்புலிகளின் கீழ் இயங்கியது. சேரன் ஈரூடகத் தாக்குதலணி விடுதலைப்புலிகளின் வான்புலிகள்:- இக்கிளையை 2007 முதல் "தமிழீழ வான்படை" என்றும் அழைக்கத் தொடங்கினர். வானூர்தி தாக்குதலணி வானோடிகள் அணி வானூர்தி தொழில்நுட்பப்பிரிவு வானூர்தி ஓடுதளப் பாதுகாப்புப்பிரிவு வான் கண்காணிப்புப்பிரிவு சிறப்புத் தாக்குதலணி கரும்புலிகள் (சிறப்புப்படை & தற்கொடைப்படை) கரும்புலிகள் பொத்தாம் பொதுவாக 'தடைநீக்கிகள்' என்று அழைக்கப்பட்டனர். மறைமுகக் கரும்புலிகள் (புலனாய்வுத்துறையின் விசேட செயற்பாட்டுப் பிரிவின் கீழ் இயங்கியது) தரைக்கரும்புலிகள் (இவர்கள் தேசத்தின் புயல்கள் என்றும் அழைக்கப்பட்டனர். மேலும் கரும்புலிகள் என்று பொதுவாக குறிக்கப்பட்டனர்; இ.பா. படையணியின் கீழ் இயங்கியது.) வான்கரும்புலிகள் (வான்புலிகளின் கீழ் இயங்கியது) கடற்கரும்புலிகள் (இவர்கள் உயிராயுதங்கள் என்றும் அழைக்கப்பட்டனர்; கடற்புலிகளின் கீழ் இயங்கியது.) நீர்மேல் தாக்குதல் கரும்புலிகள் (இவர்கள் 'இடியர்கள்' என்றும் அழைக்கப்பட்டனர். மேலும் கடற்கரும்புலிகள் என்று பொதுவாக குறிக்கப்பட்டனர்.) செவ்வானம் கடற்கரும்புலிகள் அணி புகழரசன் கடற்கரும்புலிகள் அணி நீரடி நீச்சல் கரும்புலிகள் கங்கையமரன் நீரடி நீச்சல் பிரிவு (இது முதலில் "சுலோஜன் நீரடி நீச்சல் பிரிவு" என்ற பெயரால் அழைக்கப்பட்டு 2008இல் தற்போதைய பெயருக்கு மாற்றப்பட்டது. உருவாக்கப்பட்டது: 1994) (ஆ) அங்கயற்கண்ணி நீரடி நீச்சல் பிரிவு (உருவாக்கப்பட்டது: 1994- 8ம் மாதத்திற்கு பின்னர்) (பெ) என சண்டை உருவாக்கங்கள் நிமிர்ந்து நின்றன. புலனாய்வுத்துறை (ஐந்தாம்படை) → 1990களுக்கு முன்னர் இதன் பெயர்: புலி இயக்கப் பாதுகாப்புப் புலனாய்வுச் சேவை [Tiger Organization Security Intelligence Service] - TOSIS புலனாய்வுத்துறை தாக்குதலணி பன்னாட்டுப் புலனாய்வு அணி தேசிய புலனாய்வுப்பிரிவு தகவல் சேகரிப்புப்பிரிவு ஆய்வு மற்றும் வெளியீட்டுப்பிரிவு பயிற்சி மற்றும் தொழில்நுட்பப்பிரிவு நிருவாகம் மற்றும் அறிக்கைப்பிரிவு விசேட செயற்பாட்டுப் பிரிவு படையப் புலனாய்வுப்பிரிவு தரைப்படை தகவல் சேகரிப்புப்பிரிவு கடற்படை தகவல் சேகரிப்புப்பிரிவு வான்படை தகவல் சேகரிப்புப்பிரிவு நிருவாகம் மற்றும் அறிக்கைப்பிரிவு உள்ளகப் புலனாய்வுப்பிரிவு வெளியகப் புலனாய்வுப்பிரிவு நிருவாகப் புலனாய்வுப்பிரிவு நிதிப் புலனாய்வுப்பிரிவு உளவியல் செயற்பாட்டுப்பிரிவு முகவர்கள் மறைமுக உறுப்பினர்கள் இரகசிய நடவடிக்கை அணிகள் கபிற்றல் ஹீரோஸ் - கொழும்பு (1990 களின் தொடக்கம்) எல்லாளன் படை - தென்னிலங்கை (ஈழப்போர் முடியும் மட்டும்) சங்கிலியன் படை - யாழ்ப்பாணம் (1996 - 2001) சீறும் படை - மட்டு-அம்பாறை (2008) பொங்கி எழும் மக்கள் படை - யாழ்ப்பாணம் & மட்டு - அம்பாறை (2005 - 2007) குளக்கோட்டன் படை - திருகோணமலை (2001) பண்டாரவன்னியன் படை - வவுனியா & மன்னார் (2000 & 2001) புதிய வன்னியன் படை - வவுனியா (சமாதான காலத்தில்) தேசிய மண் மீட்புப் படை - மட்டக்களப்பு (2006) ஊடுருவல் முறியடிப்புப்பிரிவு புலனாய்வு பயிற்சி மையம் கல்விக்குழு தமிழீழப் போக்குவரவுக் கண்காணிப்புப்பிரிவு நுழைவிசைவு வழங்கும் பகுதி நிரந்தரப்படை தவிர்த்து மக்களுக்கும் படைத்துறைப் பயிற்சி, முதலுதவிப் பயிற்சி என பல்வகைப் பயிற்சிகள் வழங்கப்பட்டது. பயிற்சி பெற்றோர் அனைவரும் மக்கள் படையென நிமிர்ந்தனர். அம்மக்கள் படையானது மக்கள்படை:- எல்லைப்படை(ஆ&பெ) - இவர்கள் 'எல்லைப்புலிகள் ' எனவும் அழைக்கப்பட்டனர் | இவர்கள் கடற்புலிகளுக்கும் தரைப்புலிகளுக்கும் இருந்தனர், 1999ம் ஆண்டு முதல். சிறப்பு எல்லைப்படை (ஆ&பெ) (1998-2009) ஊரகத் தொண்டர் படை(ஆ) பொதுநோக்கு இயந்திர துப்பாக்கி அணி உந்துகணை செலுத்திப் பிரிவு ஆசிரியர் தொண்டர் படை போருதவிப்படை(ஆ) கிராமியப்படை(ஆ&பெ) - இதை 'ஈழப்படை' என்றும் மக்கள் அழைப்பர் கிராமிய விசேட படையணி உள்ளகப் பாதுகாப்புப் படை (ஆ&பெ) நிஸ்மியா உள்ளக மகளீர் பாதுகாப்பு அணி(பெ) தமிழ்ப்பாண்டி உள்ளகப் பாதுகாப்பு அணி சங்கர் அணி அன்பு அணி மாணவர் படை தமிழீழத் தேசிய இராணுவம் என மக்கள்படைக் கட்டமைப்புகளாக செயலுருப்பெற்றன. மேற்கண்ட மக்கள்படைக் கட்டமைப்பை 'தமிழீழ தேசிய எழுச்சிப் பேரவை' ஆளுவப்படுத்தியது. இவ் படையப் பிரிவுகளின் வழங்கல்களுக்காகவும் ஆளுகைக்காகவும் கீழ்க்கண்டவை உருவாக்கப்பட்டிருந்தன. தலைமைச் செயலகம் காந்தரூபன் அறிவுச்சோலை (ஆதரவற்ற ஆண் குழந்தைகள்) செஞ்சோலை (ஆதரவற்ற பெண் குழந்தைகள்) தலைவருக்கான தனிச்செயலகம் நிர்வாகச் செயலகம் மணாளன் தலைமைச் செயலகப் பாதுகாப்பு அணி போராளிகள் தொடர்புப்பகுதி மக்கள் தொடர்பகம் வெடிபொருள் களஞ்சியம் வெடிபொருள் விநியோகம் ஆயுத களஞ்சியம் ஆயுத பராமரிப்பு ஆயுத விநியோகம் சிறப்பு ஆளணி அறிக்கைப்பகுதி அறிக்கைப்பகுதி ஆளணி அறிக்கைப்பகுதி ஆயுத அறிக்கைப்பகுதி தேசிய உட்கட்டுமானப் பாதுகாப்புப்பிரிவு முரண்பாடு ஆய்வு நிறுவகம் ஒற்றாடல் பிரிவு (பல்வித படைத்துறை நகர்வுகளை பற்றிய தகவல்களை ஒட்டுக்கேட்டு விழிப்புவிக்கும் பிரிவு) நளன் வானொலி தொலைத்தொடர்புப் பிரிவு போர்க்கருவி தொழிலகம் ஆயுத ஆராச்சி & உருவாக்குதல் பிரிவு மலரவன் வெடிமருந்து பிரிவு சமராய்வு மையம் செய்தித் தகவல் மையம் களமுனை ஆய்வுப்பிரிவு கள விசாரணைப்பகுதி வழங்கல் பிரிவு படையத் தொழிநுட்பப்பிரிவு சமர் நூலாக்கப் பிரிவு- இவர்களால் உருவாக்கப்பட்ட அனைத்து நூல்கள் அழிக்கப்பட்டு விட்டன. இவர்கள் MOD என்னும் ஓர் தமிழ் படைத்துறை அகராதியையும் உருவாக்கியிருந்தார்கள். வாகனப்பகுதி கண்ணிவெடி உற்பத்தித் தொழிற்சாலை கைக்குண்டு உற்பத்தித் தொழிற்சாலை மிதிவெடி உற்பத்தித் தொழிற்சாலை எறிகணை உற்பத்தித் தொழிற்சாலை கடற்புலிகளின் படகு வடிவமைப்புத் தொழிற்சாலை பல பயிற்சிப் பாசறைகள் சுஜி கணினிப் பிரிவு (மட்-அம்) ராயு படைய அறிவியல் தொழினுட்ப ஆய்வு நிறுவனம் (கணினிப் பிரிவு) மின்னணுவியல் சிறப்பு உதவிப் பிரிவு வன்தொழினுட்பப் பிரிவு மென்தொழினுட்பப் பிரிவு- தாரக மந்திரம்: "கூடி முயல்வோம், வெற்றி பெறுவோம்" படைய தொழினுட்பவியல் கல்லூரி மென்பொருள் கட்டுமானப்பகுதி தொழில்நுட்பக் கல்லூரிகள் கொள்வனவுப்பகுதி சிறப்புத் தாக்குதலணி திட்டமியல் செயலகம் கடற்புலிகள் இவற்றோடு தங்களின் படைத்துறை போராளிகளுக்கு படைத்துறை தொடர்பான பயிற்சிகள் வழங்கி நெறிப்படுத்துவதற்காக பல்வேறு கல்லூரிகளையும் திறந்து வைத்திருந்தனர். அவையாவன, தமிழீழ படைத்துறைப்பள்ளி (ஆ&பெ) படையத் தொடக்கப் பயிற்சிக்கல்லூரி அன்னக்கிளி பயிற்சிக்கல்லூரி (குறிப்பிட்ட ஆண்டுகள் மட்டுமே தொழிற்பட்டது) சிறப்புப் பயிற்சிக்கல்லூரி திலீபன் அரசியல் கல்லூரி போர்ப்பயிற்சி ஆசிரியர் கல்லூரி G 10 போர் பயிற்சிக்கல்லூரி பாலேந்திரா அதிகாரிகள் பயிற்சிக்கல்லூரி- (மட்டு) பசிலன் அதிகாரிகள் பயிற்சிக்கல்லூரி அப்பையா வெடிபொருள் பயிற்சிக்கல்லூரி ஜொனி அதிகாரிகள் பயிற்சிக் கல்லூரி ராஜன் படைத்துறை பயிற்சிக்கல்லூரி புலேந்திரன் சிறப்புப்படை பயிற்சிக்கல்லூரி -->சிங்கள மொழி கலாச்சார கல்வி நிலையம் - (புலனாய்வுத்துறை & கரும்புலிகளுக்கானது) -->ராயன் அறிவுக்கூடம் (சிறப்புப்படைக்கானது) சதீஸ் இயந்திரவியல் கல்லூரி மகளீர் அடிப்படை பயிற்சிக்கல்லூரி மகளீர் படைத்துறை பயிற்சிக்கல்லூரி றோய் அதிகாரிகள் பயிற்சிக்கல்லூரி கடற்புலிகளின் கடற்படை படைத்துறைப்பள்ளி நிரோயன் ஆரம்பக் கடற்படை பயிற்சிக்கல்லூரி ஆசிர் கடற்படை பயிற்சிக்கல்லூரி (1992 இல் ) நரேஸ் தொழினுட்பக் கல்லூரி பெத்தா அதிகாரிகள் பயிற்சிக்கல்லூரி கப்பல் கல்லூரி (பன்னாட்டுக் கடற்பரப்பில் நடவடிக்கைகளில் ஈடுபடும் ஆழ்கடலோடிகளுக்கு) கடற்புலிகளின் அரசியற் பயிற்சிப்பள்ளி மொழியாக்கப்பிரிவு படப்பிடிப்புகளுக்கு மூன்றாம் ஈழப்போர் வரை நிதர்சனத்தின் களப்படப்பிடிப்பாளர்கள் ஈடுபட்டிருந்தனர். நான்காம் ஈழப்போரில் நடராசன் ஒளிப்பதிவுப்பிரிவு உள்ளகப் படப்பிடிப்பு களப் படப்பிடிப்பு அடிபாட்டாளர்களின் மருத்துவ வசதிக்காக 'விடுதலைப்புலிகள் மருத்துவப்பிரிவு' உருவாக்கப்பட்டிருந்தது. இதன் கட்டமைப்பு பற்றி எனக்கு சரியாகத் தெரியாது. கிடைத்த பற்றியத்தை ஏலுமானவரை கோர்வையாக்கியுள்ளேன். அதில் ஒவ்வொரு சண்டை உருவாக்கத்திற்குமென தனித்தனி மருத்துவப்பிரிவுகளும் இயங்கின என்பது குறிப்பிடத்தக்கது. விடுதலைப்புலிகள் மருத்துவப்பிரிவு: தமிழீழ மருத்துவக் கல்லூரி தமிழீழ தாதியர் பயிற்சிக்கல்லூரி கள மருத்துவக் கல்லூரி மருந்துக் களஞ்சியம் கள மருத்துவப்பிரிவு (முன்மாதிரி மருத்துவ நிலைகள்) --> துணை மருத்துவ நிலைகள் --> முதன்மை மருத்துவ நிலைகள் --> தள மருத்துவமனைகள் --> படையணிப்பிரிவு மருத்துவமனைகள் தள மருத்துவமனை (படைய மருத்துவமனைகள்) அபயன் ஞாபகார்த்த மருத்துவமனை சிந்தனைச்செல்வன் ஞாபகார்த்த மருத்துவமனை எஸ்தர் மருத்துவமனை யாழ்வேள் மருத்துவமனை கீர்த்திகா மருத்துவமனை திவாகர் ஞாபகார்த்த மருத்துவமனை லக்ஸ்மன் மருத்துவமனை (மட்டக்களப்பு) முல்லை மருத்துவமனை (இவையிரண்டும் இறுதி நேரத்தில் ஒன்றாக்கப்பட்டு தமிழீழத்தின் இறுதிப் படைய மருத்துவமனையாக இயங்கியது, மருத்துவப் போராளி அலன் தலைமையில்) நெய்தல் மருத்துவமனை (இவையிரண்டும் இறுதி நேரத்தில் ஒன்றாக்கப்பட்டு தமிழீழத்தின் இறுதிப் படைய மருத்துவமனையாக இயங்கியது, மருத்துவப் போராளி அலன் தலைமையில்) மற்றும் பல அலகுகள் ஒரு பக்கம் பார்த்தால் எப்படி மறுபக்கம் பார்க்க வேண்டாமா? உசாத்துணை : முன்னிலை நோக்குநர் அணி | புலன கிட்டிப்பு: புஸ்பகுமார் சற்குணநாதன் (இவர்கள் முன்களத்தில் நிற்பார்கள், ஆனால் சமரில் ஈடுபடாமல் தமது உயிரை பணயம் வைத்து சமர்க் களத்தில் தம்மையும் பாதுகாத்துக்கொண்டு பின்களத்தில் இருந்து விடுதலைப் புலிகளால் ஏவப்படும் எறிகணைகளுக்கு ஏற்றக்கோண வேறுபாடு பார்த்து தெரிவிப்பார்கள்.) (இவையெல்லாம் தமிழில் எழுதப்பட்ட உசாத்துணைகள்தான். ஆதலால் ஒரு சரிபார்ப்பாகவாவது இவற்றைக் கொள்ளவும்.) ஈழநாதம்(29.4.2003) எரிமலை-1992 உதயன்: 09/08/1995 களத்தில் - 27.6.1995 விடுதலைப்புலிகள் - ஐப்பசி-கார்த்திகை 1998 பழ நெடுமாறன் அவர்களால் எழுதப்பட்ட ஓர் புத்தகம் (பசீலன் மோட்டர் பிரிவுப் பெயர் இங்கிருந்து கொள்ளப்பட்டது) தமிழீழ விடுதலைப் புலிகள் யார்…? - இ.இ. கவிமகன் EelamView நிர்வாக முடக்கலுக்கு மண்மீட்கும் படை அழைப்பு. https://tamilnation.org/tamileelam/armedstruggle/warfront/061022soosai.htm விடுதலைப்புலிகள் மார்கழி-தை 2001 லெப். தமிழ்பாண்டி உள்ளக பாதுகாப்பு அணி பயிற்சிகளை நிறைவு செய்துள்ளது https://eelamaravar.wordpress.com/2019/05/15/brigadier-sornam-4/ https://eelamheros.wordpress.com/2019/05/15/ltte-medical-team-kanavi/ https://www.eelamview.com/2016/04/18/ex-ltte-medical-unit/ https://yarl.com/forum3/topic/277039-பன்முகத்-திறன்கள்-கொண்ட-லெப்-சாள்ஸ்-அன்ரனி-சிறப்புப்-படையணி-தாக்குதல்-தளபதி-லெப்-கேணல்-நாகதேவன்/ http://eelamalar.com/கடலிலே-காவியம்-படைப்போம-4/ https://www.ilakku.org/இறுதிவரை-உறுதியுடன்-பணி/ சூட்டி படையணியிற்கு பெயர் சூட்டக் காரணமான சூட்டி https://vayavan.com/?p=11902 தொகுப்பு & வெளியீடு நன்னிச் சோழன்
- 8 replies
-
- 1
-
- divisions of ltte
- brigades of lttes
-
(and 36 more)
Tagged with:
- divisions of ltte
- brigades of lttes
- தமிழீழ படையம்
- tamil tiger military divisions
- புலிகளின் படைப் பிரிவுகள் விபரம்
- தமிழீழ விடுதலைப் புலிகளின் உள் கட்டமைப்பு
- விடுதலைப்புலிகள்
- புலிகளின் படைப்பிரிவுகள்
- தமிழீழ படையணிகள்
- தமிழீழ இராணுவ படையணிகள்
- tamil tigers division
- படையணி விபரம்
- ltte divisions
- புலிகளின் படையணிகள்
- regiments of ltte
- ltte rebel wings
- புலிகளின் படையணிகள் விபரம்
- படையணிகள் விபரம்
- தமிழீழ இராணுவம்
- தமிழ் புலிகளின் படையணிகள்
- விடுதலைப் புலிகளின் படையணிகள்
- தமிழ் ஈழ படைப்பிரிவுகள்
- புலிகளின் படைப்பிரிவுகள் விபரம்
- ltte regiments
- புலிகள் இராணுவக் கட்டமைப்புகள்
- புலிகள் கட்டமைப்புகள்
- இராணுவக் கட்டமைப்புகள்
- புலிகள் ராணுவக் கட்டமைப்புகள்
- ராணுவக் கட்டமைப்புகள்
- புலிகளின் கட்டமைப்புகள்
- ltte fighting formations list
- tamil tigers army
- tamil tigers navy
- tamil tigers airforce
- tamil tigers units
- தமிழீழ விடுதலைப்புலிகளின் பிரிவுகள்
- தமிழீழப் படைத்துறை
- விடுதலைப் புலிகளின் படைகள்