Jump to content

Search the Community

Showing results for tags 'பல கட்டுரைகள்'.

  • Search By Tags

    Type tags separated by commas.
  • Search By Author

Content Type


Forums

  • யாழ் இனிது [வருக வருக]
    • யாழ் அரிச்சுவடி
    • யாழ் முரசம்
    • யாழ் உறவோசை
  • செம்பாலை [செய்திக்களம்]
    • ஊர்ப் புதினம்
    • உலக நடப்பு
    • நிகழ்வும் அகழ்வும்
    • தமிழகச் செய்திகள்
    • அயலகச் செய்திகள்
    • அரசியல் அலசல்
    • செய்தி திரட்டி
  • படுமலைபாலை [தமிழ்க்களம்]
    • துளித் துளியாய்
    • எங்கள் மண்
    • வாழும் புலம்
    • பொங்கு தமிழ்
    • தமிழும் நயமும்
    • உறவாடும் ஊடகம்
    • மாவீரர் நினைவு
  • செவ்வழிப்பாலை [ஆக்கற்களம்]
    • இலக்கியமும் இசையும்
    • கவிதைப் பூங்காடு
    • கதை கதையாம்
    • வேரும் விழுதும்
    • தென்னங்கீற்று
    • நூற்றோட்டம்
    • கவிதைக் களம்
    • கதைக் களம்
  • அரும்பாலை [இளைப்பாறுங்களம்]
    • சமூகவலை உலகம்
    • வண்ணத் திரை
    • சிரிப்போம் சிறப்போம்
    • விளையாட்டுத் திடல்
    • இனிய பொழுது
  • கோடிப்பாலை [அறிவியற்களம்]
    • கருவிகள் வளாகம்
    • தகவல் வலை உலகம்
    • அறிவியல் தொழில்நுட்பம்
    • சுற்றமும் சூழலும்
  • விளரிப்பாலை [சிந்தனைக்களம்]
    • வாணிப உலகம்
    • மெய்யெனப் படுவது
    • சமூகச் சாளரம்
    • பேசாப் பொருள்
  • மேற்செம்பாலை [சிறப்புக்களம்]
    • நாவூற வாயூற
    • நலமோடு நாம் வாழ
    • நிகழ்தல் அறிதல்
    • வாழிய வாழியவே
    • துயர் பகிர்வோம்
    • தேடலும் தெளிவும்
  • யாழ் உறவுகள்
    • யாழ் 26 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 25 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 24 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 23 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 22 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 21 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 20 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 19 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் ஆடுகளம்
    • யாழ் திரைகடலோடி
    • யாழ் தரவிறக்கம்
  • யாழ் களஞ்சியம்
    • புதிய கருத்துக்கள்
    • முன்னைய களம் 1
    • முன்னைய களம் 2
    • COVID-19: Coronavirus - பாதுகாப்பு வழிமுறைகள் மற்றும் ஆலோசனைகள்
    • பெட்டகம்
  • ஒலிப்பதிவுகள்
  • Newsbot - Public club's Topics
  • தமிழரசு's வரவேற்பு
  • தமிழரசு's வயிறு குலுங்க சிரிக்க..
  • தமிழரசு's என்றும் கேட்க்கக்கூடிய பாடல்கள்
  • தமிழரசு's நாபயிற்சி
  • தமிழரசு's படித்ததில் பிடித்தது
  • தமிழரசு's மறக்க முடியாத காட்சி
  • தமிழரசு's பனங்காய்ப் பணியாரத்தால் தமிழருக்குள் என்ன நிகழ்ந்தது தெரியுமா?
  • தமிழ்நாடு குழுமம்'s குழுமம் வரவேற்பு
  • தமிழ்நாடு குழுமம்'s காணொளிகள்
  • தமிழ்நாடு குழுமம்'s கணணி
  • தமிழ்நாடு குழுமம்'s பாடல்கள்
  • தமிழ்நாடு குழுமம்'s கட்டமைப்பு
  • தமிழ்நாடு குழுமம்'s மீனாட்சி கோயில்
  • தமிழ்நாடு குழுமம்'s நினைவலைகள்
  • தமிழ்நாடு குழுமம்'s ரசித்தவை
  • தமிழ்நாடு குழுமம்'s தொழிற்நுட்பம்
  • தமிழ்நாடு குழுமம்'s செய்தி / துணுக்கு
  • தமிழ்நாடு குழுமம்'s நகைச்சு வை
  • தமிழ்நாடு குழுமம்'s புகைப்படங்கள்
  • தமிழ்நாடு குழுமம்'s நற்சிந்தனை
  • தமிழ்நாடு குழுமம்'s தமிழ்
  • தமிழ்நாடு குழுமம்'s சுற்றுலா
  • தமிழ்நாடு குழுமம்'s பேசும் படம்
  • தமிழ்நாடு குழுமம்'s வாழ்த்துக்கள்
  • தமிழ்நாடு குழுமம்'s ஒலிப்பேழை
  • தமிழ்நாடு குழுமம்'s கொரானா
  • தமிழ்நாடு குழுமம்'s விநோதம்
  • தமிழ்நாடு குழுமம்'s பரிச்சார்த்த முயற்சி
  • தமிழ்நாடு குழுமம்'s அஞ்சலிகள்
  • "இலையான்" அடிப்போர் சங்கம்.'s சங்கத்தின் திறப்பு விழா.
  • "இலையான்" அடிப்போர் சங்கம்.'s அந்தநாள், ஞாபகம் வந்ததே....!
  • வலைப்போக்கன் கிருபன்'s என்றும் இனிய பாடல்கள்
  • வலைப்போக்கன் கிருபன்'s உலக சினிமா
  • வலைப்போக்கன் கிருபன்'s புத்தக அலுமாரி
  • வலைப்போக்கன் கிருபன்'s பலதும் பத்தும்
  • வலைப்போக்கன் கிருபன்'s செயற்கை நுண்ணறிவு உருவாக்கி
  • Ahal Media Network's Topics

Calendars

  • நாட்காட்டி
  • மாவீரர் நினைவு

Blogs

  • மோகன்'s Blog
  • தூயவன்'s Blog
  • Mathan's Blog
  • seelan's Blog
  • கறுப்பி's Blog
  • lucky007's Blog
  • சந்தோஷ் பக்கங்கள்
  • தூயாவின் வலைப்பூ
  • vijivenki's Blog
  • sindi's Blog
  • சந்தியா's Blog
  • இரசிகை-இரசித்தவை
  • arunan reyjivnal's Blog
  • இலக்கியன்`s
  • PSIVARAJAKSM's Blog
  • blogs_blog_18
  • sujani's Blog
  • Iraivan's Blog
  • Thinava's Blog
  • குட்டியின் கோட்டை
  • வல்வை மைந்தன்
  • vishal's Blog
  • kural's Blog
  • KULAKADDAN's Blog
  • குறும்பன் வாழும் குகை
  • Thamilnitha's Blog
  • அடர் அவை :):):)
  • டுபுக்கு's Blog
  • வானவில்'s Blog
  • NASAMAPOVAN's Blog
  • சுட்டியின் பெட்டி இலக்கம் 1
  • vikadakavi's Blog
  • ravinthiran's Blog
  • Tamizhvaanam's Blog
  • hirusy
  • neervai baruki's Blog
  • இனியவள்'s Blog
  • senthu's Blog
  • tamil_gajen's Blog
  • சின்னப்பரின் பக்கம்
  • ADANKA THAMILAN's Blog
  • வல்வை சகாறாவின் இணையப்பெட்டி
  • Tamil Cine's Blog
  • harikalan's Blog
  • antony's Blog
  • mugiloli's Blog
  • Kavallur Kanmani's Blog
  • jeganco's Blog
  • Waren's Blog
  • "வா" சகி 's Blog
  • nishanthan's Blog
  • semmari's Blog
  • Akkaraayan's Blog
  • தமிழில் ஒரு சமையல் வலைப்பதிவு
  • தீபன்'s Blog
  • தமிழ் இளையோர் அமைப்பு
  • மாயன்'s Blog
  • Thumpalayan's Blog
  • mullaiyangan's Blog
  • NAMBY's Blog
  • பரதேசி's Blog
  • thamilkirukkan's Blog
  • Vakthaa.tv
  • colombotamil's Blog
  • மசாலா மசாலா
  • muththuran
  • கிருபா's Blog
  • நந்தவனம்
  • தமிழர் பூங்கா
  • TAMIL NEWS
  • dass
  • puthijavan's Blog
  • AtoZ Blog
  • Vani Mohan's Blog
  • mullaiiyangan's Blog
  • mullaiman's Blog
  • மல்லிகை வாசம்
  • karu's Blog
  • saromama's Blog
  • tamil92's Blog
  • athirvu
  • melbkamal's Blog
  • nedukkalapoovan's Blog
  • Loshan's Blog
  • ஜீவநதி
  • எல்லாளன்'s Blog
  • kanbro's Blog
  • nillamathy's Blog
  • Vimalendra's Blog
  • Narathar70's Blog
  • யாழ்நிலவன்'s Blog
  • நிரூஜாவின் வலைப்பதிவு
  • cyber's Blog
  • varnesh's Blog
  • yazh's Blog
  • MAHINDA RAJAPAKSA's Blog
  • விசரன்'s Blog
  • tamil paithiyam's Blog
  • TamilForce-1's Blog
  • பருத்தியன்
  • aklmg2008's Blog
  • newmank
  • ilankavi's Blog
  • இனியவன் கனடா's Blog
  • muthamil78
  • ரகசியா சுகி's Blog
  • tamileela tamilan's Blog
  • சுஜி's Blog
  • மசாலா மசாலா
  • Anthony's Blog
  • Gunda's Blog
  • izhaiyon's Blog
  • TamilEelamboy's Blog
  • sathia's Blog
  • லோமன்
  • kobi's Blog
  • kaalaan's Blog
  • sathiri's Blog
  • Voice Blog
  • தமிழ் செய்தி மையம் மும்பை
  • ஜீவா's Blog
  • தீபம்'s Blog
  • Iraivan's Blog
  • பிறேம்'s Blog
  • mullaikathir.blogspot.com
  • ஸ்ரீ பார்சி காங்கிரஸ் = ஸ்ரீ லங்கா = தமிழ் ஜெனோசைட்
  • sam.s' Blog
  • வாழ்ந்தால் உண்மையாய் வாழவேண்டும் இலலையேல் வாழதிருப்பதுமேல்
  • வாழ்ந்தால் உண்மையாய் வாழவேண்டும் இலலையேல் வாழதிருப்பதுமேல்
  • sam.s' Blog
  • தயா's Blog
  • தயா's Blog
  • ஏராழன்'s Blog
  • Small Point's Blog
  • Rudran's Blog
  • ulagathamilargale.blogpsot.com
  • ramathevan's Blog
  • Alternative's Blog
  • Alternative's Blog
  • அ…ஆ…புரிந்துவிட்டது…. கற்றது கைமண் அளவு…
  • ஜீவா's Blog
  • மொழி's Blog
  • cawthaman's Blog
  • ilankavi's Blog
  • ilankavi's Blog
  • கனடா போக்குவரத்து
  • வேலிகள் தொலைத்த ஒரு படலையின் கதை!
  • nirubhaa's Blog
  • nirubhaa's Blog
  • தமிழரசு's Blog
  • akathy's Blog
  • அறிவிலி's Blog
  • மல்லிகை வாசம்'s Blog
  • வல்வை சகாறா's Blog
  • விவசாயி இணையம்
  • அருள் மொழி இசைவழுதி's Blog
  • ஈழப்போரில் தமிழரால் பாவிக்கப்பட்டவை's படிமங்கள்
  • ஈழப்போரில் தமிழரால் பாவிக்கப்பட்டவை's ஆவணங்கள்
  • ஈழப்போரில் தமிழரால் பாவிக்கப்பட்டவை's சிறப்பு ஆவணங்கள்
  • ஈழப்போரில் தமிழரால் பாவிக்கப்பட்டவை's ஆவணக்கட்டுகள்
  • ஈழப்போரில் தமிழரால் பாவிக்கப்பட்டவை's திரட்டுகள்
  • Home Appliances Spot's Home Appliances

Find results in...

Find results that contain...


Date Created

  • Start

    End


Last Updated

  • Start

    End


Filter by number of...

Joined

  • Start

    End


Group


AIM


MSN


Website URL


ICQ


Yahoo


Jabber


Skype


Location


Interests

Found 1 result

  1. இன்றைய சூழலில் வரலாறுகள் திரிக்கப்பட்டு எழுதப்படுவது கவலைக்குரிய விடயம் – ராஜன் https://www.ilakku.org/matter-concern-histories-distorted-written-todays/ https://www.ilakku.org/heroes-day-has-become-a-cultural-event/ தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் யாழ்.மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளராகப் பணியாற்றிய ராஜன் அவர்கள், போராட்ட வரலாறுகள் தற்போது தவறாக பதிவு செய்யப்படுவது குறித்தும், தனது பணிக் காலத்தில் நடந்த சம்பவங்களின் உண்மைத் தன்மைகள் குறித்தும் உயிரோடைத் தமிழ் வானொலிக்கு வழங்கிய செவ்வி. கேள்வி: 1982இல் முதல் மாவீரர் வீரச்சாவடைந்தாலும், 1989ஆம் ஆண்டு தான் மாவீரர் தினம் ஏற்படுத்தப்பட்டது. இதற்கான காரணம் என்ன என்பதை அறியத்தாருங்கள். உங்கள் கேள்விக்கு பதிலளிக்க முன்னர் உங்களுக்கு ஒருவிளக்கம் ஒன்றை தர விரும்புகின்றேன். யாழ். மாவட்டத்தில் நான் பணியாற்றியதால், அந்த நேரம் யாழ். மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்வுகள் பற்றியே தகவல் தரமுடியும். பதில்: இன்றைய சூழலில் முள்ளிவாய்க்காலுக்கு முன் தான் நாங்கள் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பாக இருந்தோம். முள்ளிவாய்க்காலுக்குப் பின் வருகின்ற செய்திகள், ஊடகச் செய்திகள், விடுதலைப் புலிகள் தொடர்பான நடவடிக்கைகளுக்கும் எங்களுக்கும் தொடர்பு இல்லை. தேசியத் தலைவர் இருந்த போது இருந்தது தான் தமிழீழ விடுதலைப் புலிகள். வரலாறுகளைத் தனிநபர்கள் மாற்றியமைப்பதும், கருத்துச் சுதந்திரம் உள்ள நாட்டில் இருந்து கொண்டு அவர்கள் கருத்துக்களை சுதந்திரமாகவும், தியாகத்தின் வரலாற்றையும், மாபெரும் தலைவனின் தியாகத்தையும் தங்களுடைய அமைப்பாக மாற்றி, வலம் வருவதையும், ஆய்வாளர்கள், கட்டுரையாளர்கள், இணையவழி ஊடகங்கள் என்று சொல்லி, அவர்கள் புது வரலாறை எழுதுவதும், தங்களுடைய நேரத்தை ஊடகங்களுக்குக் கடத்துவதற்காக ஊடகவியலாளர்களை அணுகி, சம்பந்தமில்லாமல் மாபெரும் இயக்கத்தின் தியாக வரலாறுகளை திரிபுபடுத்தி, அவர்கள் கூறுவதைக் கேட்டு அப்படியே ஒப்புவிப்பதும், பின்னர் நாங்கள் சொல்கின்றோம். மக்களே நீங்களே கேட்டு தெளிவடையுங்கள் என்று சாட்டாகச் சொல்லிவிட்டு நகர்வதும் நாங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் ஒரு நடவடிக்கையாக இருக்கின்றது. ஒட்டுமொத்தமாக தமிழ் பேசும் மக்களுக்கு 2009உடன் தேசியத் தலைவரின் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் அழிந்து விட்டது. அந்த இயக்கத்தின் செயற்பாடுகள் அனைத்தும் முடக்கப்பட்டு விட்டன. தமிழீழத் தேசியத் தலைவர் இருக்கும் போதுதான் அது தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம். அப்போது நாங்கள் யாழ்.மாவட்ட அரசியல் பிரதிநிதிகளாக வேலை செய்தோம். இந்த வகையில் இதைப் பற்றி சொல்ல வேண்டிய கடப்பாடு இருக்கின்றது. 1989ஆம் ஆண்டு எப்படி இந்த மாவீரர் நாள் உருவானது. அதற்கு முன்னர் ஏன் உருவாகவில்லை என்பதற்கான விடையை நான் உங்களுக்குத் தருகின்றேன். 1982ஆம் ஆண்டு சத்தியநாதன் ரமரணமடைந்த பின்னர் 1989வரையில் ஆயிரத்திற்குட்பட்ட போராளிகள் ரமரணமடைந்திருக்கின்றனர். இந்தக் காலப்பகுதியில் வீரமரணமடைந்த போராளிகளின் உடல்கள் எங்கள் கைக்குக் கிடைக்கும் போது, அந்தந்த மாவட்ட தளபதிகள், அந்தந்த மாவட்ட அரசியல்துறைப் போராளிகள் எல்லோரும் வீரமரணமடைந்த போராளியின் பெற்றோரிடம் அவரின் உடல்களை இறுதி நிகழ்விற்காக அவர்களிடம் ஒப்படைப்போம். அந்த நடைமுறை தொடர்ந்தும் பேணிக் கொண்டு வரப்பட்டது. 1989இல் யாழ். மாவட்டத்தில் குறிக்கப்பட்ட இடங்களில், குறிக்கப்பட்ட போராளிகளே இருந்தனர். இலங்கை-இந்திய இராணுவங்கள் நடத்திய போரிலே அவர்கள் எல்லோரும் சிதைவடைந்து, தலைவர் உட்பட எல்லோரும் காட்டிற்குள் சென்று தான் ஒரு கெரில்லாப் போராட்டத்தை நாங்கள் மீண்டும் ஆரம்பித்தோம். யாழ். மாவட்டத்தில் நீர்வேலி, பொக்கணை, குப்பிளான், மாதகல், யாழ். நகரம் போன்ற இடங்களில் 3 போராளிகள், 5 போராளிகள் எனத்தான் போராளிகள் நின்றார்கள். இதே போன்று வடமராட்சி, தென்மராட்சியிலும் நின்றார்கள். மீதிப்பேர் வவுனியாக் காட்டிலும் இதே பாணியில் குறிக்கப்பட்ட போராளிகள் நின்றார்கள். காடுகளில் வீரமரணமடையும் போராளிகளை காடுகளிலே புதைக்கவேண்டிய சூழ்நிலை இருந்தது. உடல் எங்களிடம் கிடைக்குமிடத்து, நாங்கள் காடுகளில் புதைப்போம். அங்கு எரிக்க முடியாது. எரித்தால், அங்கு எழும் புகை மூலம் நாங்கள் இருக்கும் இடத்தை இராணுவத்தினர் கண்டு பிடித்து விடுவார்கள் என்பதால், புதைத்தோம். நாங்கள் கட்டுப்பாட்டுப் பகுதியாக வைத்திருந்த யாழ். மாவட்டத்திலே நாங்கள் கெரில்லாப் போராட்டத்தையும், இராணுவத்தை தடுத்து நிறுத்தி, சண்டை செய்யும் போதும், பொலிஸ் நிலையங்கள், இராணுவக் காவலரண்களைத் தாக்கும் போது நாங்கள் கைப்பற்றும், போராளிகளின் உடல்கள் பெற்றோரிடம் ஒப்படைக்கப்படும். பெற்றோரின் விருப்பப்படி அவர்கள் தங்கள் சமயக் கிரியைகளைச் செய்து, தங்கள் மயானங்களில் உடல்களை எரிப்பார்கள். நாங்கள் மாவீரர் துயிலும் இல்லம் கட்டும் வரையில் இப்படியான நடைமுறையே இருந்தது. காடுகளில் வீரமரணமடையும் போராளிகளின் உடல்களை பெற்றோரிடம் கொடுக்க முடியாத சூழ்நிலை. இன்றைய சூழலில் வரலாறுகள் திரிக்கப்படுவது, எழுதப்படுவது என்பது கவலைக்குரிய விடயம். ஆரம்பத்தில் நாங்கள் வீரமரணமடையும் போராளிகளின் உடல்களை Body என்றுதான் சொல்வோம். பின்னர்தான் வித்துடல் என்று சொல்லும் வழமை வந்தது. இதேபோன்று நாங்கள் சண்டைசெய்யும் போதும், கால்களில் செருப்பு இல்லாமல் சண்டை செய்தோம். சாரத்துடன் சண்டை செய்தோம். இவை எல்லாம் அன்றைய காலத்தில் வந்த பத்திரிகைகளில் வந்த செய்திகள், புகைப்படங்களில் ஆவணங்களாக இருக்கின்றன. எழுதுபவர்கள் சரியானதை, சரியான முறையில் தகவல்களைச் சேகரித்து, அந்தக் காலப் பத்திரிகைகளை nulagam.com இல் பார்த்து எழுதலாம். எல்லோருக்கும் கருத்துச் சுதந்திரம் உள்ளது. ஆனால் புதிய கருத்துக்களை, புதிய வடிவில், தாங்கள் பக்கத்தில் நின்றவர்கள் போல் எழுதுவது தான் குழப்பத்தை ஏற்படுத்துகின்றது. 1990இல் இந்திய இராணுவம் வெளியேறி நாங்கள் வந்த போதும், இதே நடைமுறைதான் இருந்தது. பெற்றோரிடமே உடல்களை ஒப்படைத்து, அவர்கள் சமயக்கிரியைகள் செய்து உடல்களை அடக்கம் செய்தனர். அதற்குரிய பதிவுகளும் அன்றைய பத்திரிகைகளில் செய்திகளாக உள்ளன. இவற்றை வைத்துக் கொண்டு எழுதுபவர்களும், ஆய்வு செய்பவர்களும் எழுத வேண்டும என்பது எனது தாழ்மையான வேண்டுகோள். கேள்வி: www.noolaham.org பற்றி எங்களுக்கு அறியத்தருவீர்களா? பதில்: இணையத்தில் நீங்கள் தேடினால், முழுப் பத்திரிகைகளையும், முழுமையாகப் பெறமுடியா விட்டாலும், ஈழநாதம், ஈழநாடு, முரசொலி, ஈழமுரசு, உதயன் போன்ற அந்தக் காலத்துப் பத்திரிகைகள் எல்லாமே இருக்கின்றன. அவற்றில் குறித்த காலப்பகுதிகளை நீங்கள் பார்க்கலாம். சில பத்திரிகைகள் தற்போது பதிவேற்றம் செய்து கொண்டிருக்கிறார்கள். நீங்கள் அவர்களுடன் தொடர்பு கொள்ளலாம். சிலவேளைகளில் பல்கலைக்கழகங்களில் பத்திரிகைகள் இருக்கலாம். அல்லது கொழும்பு ஆகாஷ் என்ற ஆவணக்காப்பகத்தில் இருக்கின்றது. ஆய்வுகள் செய்பவர்கள்தான் அல்லது பிழையாகத் தகவல்களைக் கொடுப்பவர்கள் தான் ஒரு வரலாறை நீங்கள் நினைத்தபடியும், உங்கள் கட்டுரைகளுக்கு ஏற்றபடியும், கேள்வி ஞானத்திலும், கற்பனையிலும் எழுதுவது தான் இங்கே கொடுமையாக உள்ளது. வரலாற்றாசிரியர் என்று சொல்பவர்களும் துயிலும் இல்லம் சம்பந்தமாக 2019ஆம் ஆண்டு தினக்குரல் பத்திரிகையில் பிழையாக கட்டுரை எழுதியதை நான் வாசித்தேன். அது என்னுடன் சம்பந்தப்பட்டது. நான் நிர்வாகப் பொறுப்பாளராக இருக்கும் போது நடந்த வரலாறு. அண்மையில் முகநூல் ஒன்றில் காட்டில் விதைத்த மாவீரர்களின் வித்துடல்களை எடுத்துக் கொண்டு வந்து தான் தேசியத் தலைவர் துயிலும் இல்லங்களை அமைத்தார் என்று ஒருவர் எழுதியிருக்கிறார். இது திட்டமிட்டு செய்யப்படுகின்றதா? சிலவேளைகளில் எங்களுக்காக வேலை செய்பவர்களே பிழையான கருத்துக்களை முன்வைக்கின்ற ஒரு சூழ்நிலையும் இருக்கின்றது. தேசியத் தலைவர் இருக்கும் போது, தேசியத் தலைவராலும், தளபதிகளாலுமே ஒரு அரசியல் ரீதியான நடவடிக்கைக்குரியவர்கள் நியமிக்கப்படுவர். இந்திய இராணுவம் போனதன் பின்னர், முதலாவது அரசியல் பொறுப்பாளராக டொமினிக் அண்ணா வந்தவர். இரண்டாவதாக இளம்பரிதி வந்தவர். மூன்றாவதாகத்தான் நான் வந்தேன். பின்னர் நான்காவதாக மீண்டும் இளம்பரிதி வந்தார். இந்திய இராணுவத்தின் பின்னர் 2009 வரை இந்த மூன்று பேராலும் தான் யாழ்.மாவட்ட அரசியல் கட்டமைப்பு வழிநடத்தப்பட்டு வந்தது. தேசியத் தலைவர், பிரதித் தலைவர், தளபதி ஆகிய மூன்றுபேருடைய நெறிப்படுத்தலின் கீழ்தான் நாங்கள் மூன்றுபேரும் இயங்கினோம். மற்ற மாவட்டங்களில் உள்ளவர்களும் அப்படித்தான் இயங்கினார்கள். கேள்வி: 1982இல் முதல் மாவீரர்களின் ஈக வரலாறு தொடங்கியிருந்தாலும்கூட, 1989ஆம் ஆண்டு தான் மாவீரர்நாள் என்பது நினைவுகூரப்பட்டது. இந்த 7 வருடகால இடைவெளி பற்றி எங்களுக்கு விளக்கம் தருவீர்களா? பதில்: ஆரம்பத்தில் கெரில்லாப் போராட்டமாக ஆரம்பித்த எங்கள் போராட்டம், பிற்காலத்தில் பொலிஸ் நிலையத் தாக்குதல்கள், இராணுவ முகாம் மீதான தாக்குதல்கள் மூலம் யாழ். மாவட்டத்தைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கக்கூடிய சூழ்நிலை இருந்தது. இந்த மோதல்களின் போது வீரச்சாவடைந்த போராளிகளை அவர்களின் பெற்றோரிடம் கொடுத்து, அவர்கள் சமய முறைப்படி அவர்களின் ஊர்களில் இறுதிக் கிரியைகள் நடைபெற்றன. ஆரம்பத்தில் இயக்க மரபு என்பது ஆரம்பிக்கப்படவில்லை. அந்த நேரம் அந்தச் சிந்தனையில் போராட்டம் நடத்தவும் இல்லை. அதுதான் உண்மை. காலத்திற்குக் காலம் எங்கள் நடவடிக்கைகளில், கொள்கைகளில் மீளாய்வு செய்து, பொருத்தமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தோம். இது தான் இயக்கத்தின் வளர்ச்சிப் போக்காக இருந்தது. 1989இல் மாவீரர் நாள் என்ற ஒரு நாளை தேசியத் தலைவர் அவர்கள் வடக்கு கிழக்கிலுள்ள எட்டு மாவட்டங்களுக்கும் அறிவிக்கிறார். முதல் மாவீரரான சத்தியநாதன் வீரமரணமடைந்த நாளை மாவீரர் நாளாக கொண்டாடும்படி அறிவிக்கிறார். அந்த நேரத்தில் நான் யாழ். மாவட்டத்தில் இருந்தேன். அப்போது யாழ். மாவட்டத்தில் பொட்டம்மான் இருந்தார். குறிக்கப்பட்ட இடங்களில் குறிக்கப்பட்ட போராளிகளே இருந்தோம். இதை தேவர் அண்ணா எழுதிய புத்தகத்திலே பார்த்தோம். விமானப்படைக்குப் பொறுப்பாக சங்கர் அண்ணா இருந்தார். அந்தக் காலத்தில் வெளிநாடுகளில் நடந்த போர்களைப் பற்றியும், போர் நடவடிக்கைகளைப் பற்றியும் தலைவருடன் கதைத்துக் கொண்டிருக்கும் போது, பிரிட்டனில் நடக்கின்ற பொப்பி தினம் பற்றி தலைவருக்கு சொல்லிக் கொண்டிருக்கும் போதுதான், தலைவருக்கு சிந்தனைக்கு இந்த மாவீரர் நாள் என்பது வந்தது. முல்லைத்தீவில் 1 – 4 என்ற காட்டில் தேசியத் தலைவரும், வவுனியாவில் 3 -7 காட்டில் பிரதித் தலைவரும் இருந்தனர். அங்கிருந்து தான் அரசியல், இராணுவ நிர்வாகங்கள் வழிநடத்தப்பட்டுக் கொண்டிருந்தன. யாழ். மாவட்டத்தில் பொட்டம்மானுக்கு தகவல் வருகின்றது. யாழ். மாவட்டத்தில் நின்ற பல்வேறு போராளிகள் இன்றும் உலகப்பரப்பில் வாழ்கின்றோம். பொட்டம்மானுக்கு வந்த அறிவித்தலை எங்களுக்குச் சொல்கிறார். அந்த வேளையில் வெளியீட்டுப் பிரிவுப் பொறுப்பாளராக நான் இருந்தேன். வீரமரணமடையும் போராளிகளுக்கு சுவரொட்டி அச்சிடும் பணியை நான் செய்தேன். திலீபன் துண்டுப் பிரசுரம் அச்சிட்டு வெளியிடுவர். இவற்றிற்காக மனோகரா திரையரங்கிற்கு அருகிலிருந்த அச்சகமும், நாவலர் வீதியில் தவம் அண்ணர் என்பவரிடம் அச்சிடும் பணிகளை மேற்கொண்டோம். அந்தக் காலத்தில் யாழ்ப்பாணத்திலும், இந்தியாவிலிருந்தும் சுவரொட்டிகள் வரும். வீரமரணமடைந்த போராளிகளின் வீரவணக்கம், அவர்களையும் இந்த நேரத்தில் நினைவுகூர விரும்புகின்றேன். அவர்களால் தான் விடுதலைப் போராட்ட வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தது. தேசியத் தலைவரின் மாவீரர் நாள் கொண்டாடுங்கள் என்ற அறிவித்தல் தேசிய மட்டத்தில் வந்துவிட்டது. பொட்டம்மான் என்னைக் கூப்பிட்டு, ஒரு சுவரொட்டி வெளியிட வேண்டும். ஒரு வசனம் எழுதும்படி என்னைக் கேட்க, நான் “உங்கள் சுவடுகளில் தொடரும் எங்கள் பாதங்கள்” என்று ஒரு வசனத்தை எழுதினேன். பொட்டம்மான் ஒரு திருத்தம் செய்வோம் எனக் கூறிவிட்டு, கறுப்பு மையை கொண்டுவரும்படி கூறி, சூட்டின் காலின் அடிப் பாதத்தில் மையைத் தடவி அதை சுவடு என்ற சொல்லிற்கு பதிலாக வைத்து, சுவரொட்டியை அடித்து விடுவம் என்று கூறுகிறார். இது நல்லது என்று அதில் நின்ற போராளிகள் சொன்னோம். சூட்டின் கால் சிறியதாக உள்ளதால், ஜக்சன் என்ற போராளியின் காலில் மையைத் தடவி அந்த பாதத்தை நாங்கள் சுவரொட்டியாக ஒட்டினோம். ஜக்சன் என்ற அந்தப் போராளி இன்று வெளிநாட்டில் வாழ்கிறார். அவரையும் தேடிக் கண்டுபிடித்து அவரிடமும் நேர்காணல் ஒன்றை எடுப்பது வரலாற்றிற்கு சான்றாக இருக்கும். நாங்கள் புத்தூரில் நிற்கும் போது அங்கு மாவீரர் நினைவாலயம் என்ற மண்டபம் ஒன்றைக் கட்டினோம். அதன் திறப்பு விழாவை நடத்தும் போது, இந்திய இராணுவம் அதை தடுப்பதற்காக அங்கே வந்தது. அப்போது அப்பகுதிவாழ் மக்கள் வயோதிபர்கள், இளைஞர்கள் ஊர்வலமாகச் சென்று அந்த இராணுவத்தை தடுத்து நிறுத்தி, இது எங்கள் பிள்ளைகளுக்காக நாங்கள் செய்கிறோம் அவர்களின் நினைவாக நாங்கள் செய்வதை நீங்கள் தடுக்கக்கூடாது என்று சொல்லி அந்த இராணுவத்தினரை திருப்பி அனுப்பி விட்டார்கள். அந்த இராணுவத் தளபதி மனமிரங்கித் திரும்பிப் போய்விட்டார் என்பது தான் உண்மை. அதேவேளை தென்மராட்சி, வடமராட்சிப் பகுதிகளில் மாவீரர்களின் படங்களைத் தூக்கி எறிந்ததும், அவர்களுக்காக சோடனை செய்ததை அகற்றியதுமான வரலாறுகள் உள்ளன. ஆகவே இந்த வரலாறுகள் தான் யாழ். மாவட்டத்தில் 1989ஆம் ஆண்டு நடந்தது. அந்த நினைவு மண்டபத்தில் நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். யாழ்.மாவட்டத்தில் இவ்வாறுதான் நடந்தது. மற்றைய மாவட்டங்களில் இதேபோன்றுதான் நடந்தது. இது விடுதலைப் போராட்டத்தின் வரலாறாக இருக்கின்றது. கேள்வி: நீங்கள் அமைத்த மாவீரர் துயிலுமில்லம் மக்களிடையே எவ்வாறான பார்வையைப் பெற்றிருந்தது. அது மதங்களைக் கடந்து அமைக்கப்பட்ட ஒரு வடிவமைப்பைக் கொண்டிருந்தது. அத்துடன் துயிலும் இல்லம் மக்களிடத்தில் எவ்வாறான எழுச்சியை ஏற்படுத்தியது? பதில்: உண்மையில் நான் அதனைக் கூறுவேனாக இருந்தால், மாவீரர் நாள் என்பது பண்பாட்டு கலாசாரமாகவே மாறிவிட்டது. அன்றைய நேரத்தில் 1989 ஆம் ஆண்டு தலைவர் காட்டுக்குள் போராளிகள் மத்தியில் ஒரு உரையை நிகழ்த்தியிருந்தார். அவ் உரை எந்தப் பத்திரிகைகளிலும் வெளிவரவில்லை. 1990 ஆம் ஆண்டு மாவீரர் நாள் தொடர்பான தலைவருடைய அறிக்கை பத்திரிகையிலும், எங்களுடைய புலிகளின்குரல் வானொலியிலும் வெளிவந்திருந்தது. அதைத் தொடர்ந்து அந்த உரை வெளிநாடுகளிலும் வெளிவந்தது. அதேநேரம் பெற்றோர்களை கௌரவித்திருந்தோம். ஆலயங்களில் மணியோசை அடிக்கும் போது அனைவரும் வீடுகளில் விளக்கேற்றுமாறு கேட்டுக்கொண்டோம். இதேப் போலவே நாங்கள் 89 ஆண்டு 90 ஆம் ஆண்டுகளிலும் செய்திருந்தோம். 1991 ஆம் ஆண்டு நாங்கள் இவ்வாறு சுடலை ஒன்றைக் கட்டிவிட்டோம் என புதுவை அண்ணையிடமும், மாத்தையா அண்ணையிடமும் ஒரு சனிக்கிழமை ஒரு கூட்டத்தில் தெரிவித்திருந்தோம். அப்போது தான் புதுவை அண்ணை மாவீரர் துயிலும் இல்லம் என்னும் சொற்பதத்தையும் கூறியிருந்தார். அந்தச் சொற்பதம் கூட்டத்தில் எல்லோருடைய கூட்டு முடிவாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. மாவீரர் துயிலும் இல்லத்தில் நாங்கள் மாவீரர் நாளைக் கொண்டாட வேண்டும் என்ற ஒரு மரபை அந்த கூட்டத்தில் முடிவெடுத்து, தலைவருக்கும் அறிவித்து, தலைவரும் ஏனைய தளபதிகளும் அதனை ஏற்றுக் கொண்டு, 1991 ஆம் ஆண்டு மாவீரர் துயிலும் இல்லங்களில் மாவீரர் நாள் கொண்டாடும் மரபு உருவாகியது. மாவீரர் நாள் நினைவு கூரப்படும் போது இவ்வாறாகத் தான் செய்ய வேண்டும் என்ற ஒரு சுற்றறிக்கை தமிழீழ அரசியல் பிரிவினரால் வெளியிடப்பட்டு, ஒவ்வொரு அரசியல் துறை பொறுப்பாளர்களும் அந்த மரபில் அதைக் கடைப்பிடித்தார்கள். துயிலும் இல்லம் என்பது எவ்வாறு கட்டப்பட வேண்டும் என்று தலைவரினால் தேசிய அளவில் அறிவிக்கப்பட்டது. எல்லோரும் கட்ட வேண்டும் என்றும் அறிவித்திருந்தார். நாங்கள் யாழ். மாவட்டத்தைப் பொறுத்தவரையில் 4 பிரிவுகளாக இருந்தோம். வடமராட்சி, தென்மராட்சி, தீவகம், வலிகாமம். அதில் வலிகாமத்திற்கு முதலாவது துயிலும் இல்லம் உருவாக்கப்பட்டது. அதேநேரம் தென்மராட்சிக்கு 1991 ஆம் ஆண்டு உடனே கட்டப்பட்டது. வடமராட்சியிலும் , தீவகத்திலேயும் கட்டப்பட்டது. தென்மராட்சிக்குத் தமிழ்செல்வனும், வலிகாமத்திற்கு கிளியண்ணை தளபதியாக அதேநேரம் துயிலும் இல்லம் கட்டும் போது தீவகத்திற்கு தளபதியாக இருந்தவர். இப்படி சூசை அண்ணை வடமராட்சிக்கு இருந்தவர். இப்படியாக இருந்த சிலர் உயிருடன் இருக்கின்றனர். புதுவை அண்ணை, அரசியல் துறையைச் சேர்ந்த எல்லோரும் அதனை சிந்தித்து பெயர்களில் மாற்றங்களைக் கொண்டு வந்து 1991 ஆம் ஆண்டு துயிலும் இல்லத்தில் செய்ய வேண்டும் என்பதைத் தீர்மானித்தோம். அப்போது தான் மக்களும் நாங்களும் போராளிகளும் சரி அதில் பொது ஈகைச்சுடர் ஒன்றினை ஏற்ற வேண்டும் என்று முதலாவது மாவீரர் நாள் நடக்கும் போ, துயிலுமில்லத்தில் அந்த நேரம் பிரதித் தலைவராக இருந்த மாத்தையா அண்ணை ஈகைச்சுடரினை ஏற்றினார். பானு அண்ணை கோட்டையில் ஏற்றினார். அதேநேரம் மணியோசை ஒலித்ததும் மௌன அஞ்சலியைச் செலுத்தி, தீபத்தை ஏற்றும் போது 1991 ஆம் ஆண்டு அப்போது துயிலுமில்லப் பாட்டு வரவில்லை. அப்போது நாங்கள் “ஓ மரணித்த வீரனே உன் சீருடையை உனக்கு தா ” என்ற பாடலைப் போட்டனாங்கள். பொதுவான பாட்டுக்கள் மெதுவாக போய்க் கொண்டிருந்தன. அதேநேரத்தில் மக்கள் மௌன அஞ்சலியையும் செலுத்தி, ஈகைச்சுடரினை ஏற்றி அந்த சமாதிக்கு மேலே அவர்கள் விழுந்து தங்களுடைய பிள்ளைகளின் நினைவுகளை சத்தம் போட்டு அழுது, தங்களுடைய மனச்சுமையை குறைத்ததை பார்க்கக் கூடியதாகவும் இருந்தது. அந்த நேரம் சோகமும், வீரமும் கலந்த எழுச்சியாக தான் நாங்கள் அதனை பார்க்கின்றோம். அந்த லைற் ஒளிவெள்ளங்கள் லஸ்பிக்கர் மோகன்மாமா என்பவர் பூட்டுவார். எல்லா நிகழ்ச்சிக்கும் அவர்தான் பூட்டுபவர் யாழ். மாவட்டத்தில் சிங்கம் சவுண்ட் சேர்விஸ் எண்டு வைச்சிருந்தவர். இப்பவும் வைத்திருக்கிறார் இப்பவும் உயிருடன் இருக்கிறார். இவர்கள் எல்லோருடய கூட்டு முயற்சியாகவும், எல்லோருடய சிந்தனையின் வெளிப்பாடாகவும் இந்த நிகழ்வு 1991ம் ஆண்டு நடைபெற்றது. அதே நேரத்தில் நாங்கள் கோயில் வளைவுகள் போல எல்லா சந்திகளிலும் கட்டினோம். அந்த வளைவுகள் எழுச்சியை ஏற்படுத்தியிருந்தது. எல்லா சந்திகளிலும் கட்டியிருந்தோம். சிவப்பு மஞ்சள் கொடிகளைக் கட்டியிருந்தோம். லைற்றுகளை பூட்டி மிகவும் எழுச்சியாகதான் மாவீரர் நாளை நடாத்துவதற்கு திட்டமிட்டிருந்தோம். அந்த எழுச்சிக்குள்ளும் ஒரு சோகம் என்பதை துயிலும் இல்லங்களில் பார்க்கக் கூடியதாக இருந்தது. மாவீரர் வளைவுகளை பற்றி நான் சொல்லும் போது வளைவுகளை நாங்கள் சந்திக்கு சந்தி யாழ் மாவட்டத்தில் கட்டி அந்த வளைவுகளை எந்த பிரதேச பொறுப்பாளர் திறம்பட செய்கின்றார் அந்த வளைவுகளுக்குரிய புள்ளிகளை போட்டு அவர்களை ஊக்குவிக்கிறதற்காகவும், உற்சாகத்தை கொடுக்கிறதற்காகவும் பரிசில்களை வழங்கினாங்கள். அந்த பரிசில்களை மதிப்பீடு செய்வதற்கு ஐங்கரநேசன் மாஸ்டர் இன்றைக்கு பசுமை இயக்கத்தின் தலைவராக இருக்கிறார். அவர் தான் அந்த காலங்களில செயற்பட்டவர். அவருடைய மாணவர்களும் அவரும் தேனீக்கள் என்ற ஒரு அமைப்பை வைத்திருந்தவர்கள். அந்த அமைப்பால் அந்த மதிப்பீடுகளை செய்து எந்த வளைவு முதலாம், இரண்டாம் , மூன்றாம் இடங்களை பெறுகின்றது என்ற மதிப்பீட்டை செய்து யாழ் மாவட்ட அரசியல் நிர்வாகத்திற்கு கொண்டு வந்து தந்தவையள். அதனையும் நாங்கள் வளைவுகள் என்று நாங்கள் கட்டியது சம்பந்தமாக நினைவு கூருகின்ற போது அவர்களையும் நாங்கள் மறக்க முடியாது என்பதனை நான் இந்த வேளையில் தெரிவித்து கொள்கின்றேன். பின்னர் மரபு வழியில் மக்கள் தங்களுடைய பிள்ளைகளுக்கு பூப்போடுவதும் அதே நேரம் பாடசாலைகளிலிருந்த பிள்ளைகள் வந்து அதனைப் பார்ப்பதும் கிட்டத்தட்ட வரலாறு என்று சொல்கின்ற வரலாற்று இடங்களை பார்ப்பதுபோல் பார்க்கின்ற ஒரு சூழலையும் அது ஏற்படுத்தியிருந்தது. ஆகவே இந்த மரபு என்பது அந்த இடத்தை நாங்கள் அமைத்ததன் விளைவாக மக்களால் இயல்பாக கடைப்பிடிக்கக்கூடிய ஒரு உணர்வைத்தான் அந்த இடம் ஏற்படுத்தியது. இந்த மரபு என்பது அந்த இடத்தை அமைத்ததன் விளைவாக ஏற்படுத்தப்பட்டது. மக்களால் இயல்பாகவே கடைப்பிடிக்ககூடிய உணர்வைத்தான் அந்த இடம் ஏற்படுத்தியது. அன்றும் சரி இன்றும் சரி ஒரு ஆலயத்தில் மக்கள் கடவுளுக்கு எப்படி மதிப்பைக் கொடுக்கிறார்களோ அப்படி ஒரு மரபை தோற்றிவித்தது. இந்த எழுச்சிக் கட்டங்கள் அழிக்கப்பட்டாலும், மனங்களில் உள்ள அந்த நினைவுகளோ அந்த கல்லறைகளோ அழிக்கப்படாது அவை மாவீரர் துயிலுமில்லம் இருக்கும் இடம் என்பதுதான் மாவீரர் துயிலும் இல்லம் என்ற சொற்பதத்திற்கும் பொருத்தமானது. அந்த சொற்பதங்களைச் சரியான முறையில் பாவித்து சரியான முறையில் மாவீரர்களுடைய நினைவுகளை நாங்கள் தொடர்ந்தும் கடைப்பிடிப்பதுதான் அந்த மாவீரர்களுக்கு செய்கின்ற ஒரு கடமையாக இருக்கும் என்பதுதான் இந்த நேரத்தில் என்னுடைய கருத்தாக இருக்கின்றது. கேள்வி: 2009க்கு பின்பதாக அல்லது யாழ்ப்பாணம் கைப்பற்றப்பட்டதன் பின்னராக மாவீரர்களுடைய எழுச்சி சின்னம் என்பது முற்றுமுழுதாக அழிக்கப்பட்டு விட்டது. அதாவது தமிழர் பிரதேசங்களில் நினைவுச் சின்னமான மாவீரர் துயிலும் இல்லம் இல்லை எனும் அளவிற்கு இலங்கை இராணுவம் முற்றாக அழித்துவிட்டது. அந்த புறச்சூழலிலே சிலர் புலம்பெயர் தேசங்களில் அவற்றை நிறுவ வேண்டும் இந்த சின்னங்களை நிறுவி அந்த அடையாளங்களை பேணவேண்டும் என்ற அடிப்படையில் புலம்பெயர் தேசங்களில் இந்த மாவீரர் துயிலுமில்லங்கள் அமைக்கப்பட்டது. இந்த சிந்தனை சரியா? அல்லது இந்த மாவீரர்களுடைய சினைவுச் சின்னம் உருவாக்கப்பட்டதன் அடிப்படை நோக்கத்தோடு இந்த சிந்தனை ஒத்துப்போகின்றதா? அல்லது அதில் ஏதாவது தவறுகள் இருக்கின்றனவா? பதில்: உணர்வுபூர்வமான நடவடிக்கை. இடங்கள் மாறினாலும் ஆட்கள் இடம்பெயர்ந்தாலும் மாவீரர்களுடைய உரித்துடையவர்கள் மாவீரர்களை நினைவு கூரவேண்டும். அவர்களுடன் களமாடியவர்கள் இன்றும் புலம் பெயர்தேசங்களுடன் உலகப்பரப்பில் பல்வேறு இடங்களில் வாழ்கின்றார்கள். மாவீரர் நாள் என்பது தேசியத்தலைவர் இருக்கும் போது 52 நாடுகளில் கொண்டாடப்பட்ட ஒரு நாள். எங்கெங்கு தமிழன் இருந்தானோ அங்கெல்லாம் அந்த நினைவுகள் கொண்டாடப்பட்டது. இங்கே நினைவுகள் கொண்டாடப்பட வேண்டும் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. இந்த மாவீரர் துயிலும் இல்லம் என்ற சொற்பதம் வரும் போது மாவீரருடைய சொற்பததத்தை பாவிப்பதுதான் சரி. இந்த கருத்துக்கு முரண்பாடான சொற்பதம் அதாவது மாவீரர் துயிலுமில்லம் என்பது மாவீரர்கள் துயில்கொள்கின்ற இடம். ஆகவே மாவீரர்களுடைய உடம்பு இல்லாத இடத்திற்கு அந்த சொற்பதத்தை பாவிக்காது, அது அவர்கள் உண்மையாக உணர்ச்சி போக்கிலே அல்லது எழுந்த மானத்திலே அந்த கருத்துக்களை பேசும்போது புண்படுத்துவதாகத்தான் நான் பார்க்கின்றேன். அதே நேரத்தில் அந்த சொல்லாடலை தவிர்த்து மாவீரர் நினைவாலயம் மாவீரரை நினைவு கொள்கின்ற மண்டபம் என்ற சொல்லாடல்களை பயன்படுத்துவதுதான் புலம்பெயர் தேசத்தை பொறுத்தவரை பொருத்தமாக இருக்கும் என்பது தான் என்னுடைய தாழ்மையான அபிப்பிராயமும்கூட. இந்த சொற்பதங்களைப் பாவிக்கும்போது அதற்குரிய அர்த்தத்துடன் தான் பாவிக்க வேண்டும். அர்த்தம் இல்லாமல் பொருளில்லாமல் கதைப்பதென்பது அறிவுபூர்வமான செயலாக இருக்காது. ஆகவே அந்த நிலமையிலிருந்து மாறுபட்டு மாவீரர்களுடைய நினைவுகளை எந்த உலகப்பரப்பில் வாழ்ந்தாலும் அதனை நினைவு கொள்ள வேண்டிய தேவை உள்ளது. ஏனென்றால் 27,000 ற்கும் மேற்பட்டவர்கள் மாவீரர்களாக இருக்கின்றார்கள். அவர்களுடைய உறவுகள் என்று பார்த்தால் 2 இலட்சம் பேருக்குகிட்ட உறவுகள் உலகப்பரப்பில் வாழ்ந்து கொண்டு இருப்பார்கள். அந்த மண்ணிலும் வாழ்ந்து கொண்டிருப்பார்கள். ஆகவே நினைவாலயம் என்கின்ற சொற்பதத்தை நினைவு என்ற சரியான சொற்பதத்தையும் பாவித்து கொண்டாடப்பட வேண்டும் என்பதுதான் யதார்த்தமான உண்மையாக இருக்கின்றது. கேள்வி: மாவீரர் துயிலுமில்லங்கள் சிதைக்கப்பட்டன. சிதைக்கப்படும் போது மனித நாகரிகத்திற்கு அப்பாற்பட்ட ஒரு விடயமாகத்தான் பார்க்கப்பட்டது. அந்தவகையில் மாவீரர் துயிலுமில்லம் சிதைக்கப்பட்டதோடு நீங்கள் மாவீரர் துயிலுமில்லங்களை நிறுவிய ஒருவர். அதனை ஆரம்பித்து ஆரம்ப கருவை உருவாக்கியதிலிருந்து பல மாவீரர்களை விதைத்து அதனை நிறுவியவர் எனும் வகையில் அந்த மாவீரர்களின் நினைவுச்சின்னம் சிதைக்கப்படும் போது உங்களுடைய எண்ணங்கள் அல்லது உங்களுடைய மனக்குமுறல் எவ்வாறிருந்தது? பதில்: சிந்தனைதான் என்னுடையது. இதை நிறுவியது ஒரு கூட்டு முயற்சியாகவே நிறுவினோம். இப்படியான ஒரு சூழலை உருவாக்கி இன்றைக்கு இந்த துயிலும் இல்லங்கள் எதிரிகளை பொறுத்தவரையில் அவர்கள் கல்லறைகளைத்தான் சிதைத்தார்கள் ஆகவே அவர்கள் கல்லறைகளை சிதைக்கும் போது உண்மையில் அவர்கள் யுத்த தர்மத்தையோ அல்லது மனிதாபிமானத்தையோ கடைப்பிடிக்காமல் நடந்தபோது மிகவும் திரும்பவும் உயிருடன் வைத்து மீண்டும் கொல்லப்பட்டு இருக்கின்றோம். மன ரீதியாக எதிரியின் வன்முறைகள் அட்டூழியங்கள் கூடும்போது தமிழ்மக்களாக இருந்தாலும் சரி ஆறறிவுள்ள எவருமே வந்து அதற்கெதிராக போராடக்கூடிய மனநிலையைத்தான் அது ஏற்படுத்தியிருக்கின்றது. ஆகவே அந்த நினைவுகள் மிண்டும் மீண்டும் அழியவிடாமல் மக்கள் மனங்களை அதாவது பொதுவாக சிந்திக்க கூடியவர்கள் உட்பட எல்லோரிடத்திலும் தான் ஏற்படுத்தியிருக்கின்றது. வன்முறை கூடும் போது அதற்கு எதிராக புரியக்கூடிய மொழியிலே திரும்பவும் நாங்கள் அதை கொடுக்கின்றபோது அவர்கள் திருந்தக்கூடிய வாய்ப்பு அல்லது சமாதானம் பிறக்கக்கூடிய வாய்ப்பு என்பது ஏற்படுகின்றது. நாங்கள் இந்த அழிவிலிருந்து மீள்வதென்பது உண்மையாகக் சிந்திக்ககூடியது. அந்த நினைவுகளை பேணவேண்டும் என்பதை நாங்கள் சிந்தித்து அவர்களுடைய நினைவுகளையும் மாவீரர்களுடைய சிந்தனைகளையும் எவ்வாறு உலகத்துடன் சிந்தித்து எப்படி அறிவுபூர்வமாக ஒர் அரசியல் வடிவமாக திரும்ப நாங்கள் மீள் எழுச்சி பெறவேண்டும் என்பதுதான் அவர்கள் அழிக்கும் போது ஏற்பட்ட சிந்தனையாகத்தான் இருக்கின்றது. அவர்கள் இவ்வாறு செய்யக்கூடியவர்கள் என்பது கடந்த கால அரசியல் வரலாறு, கடந்த கால அனுபவங்கள் சிங்களவர்கள் என்னத்தை செய்வார்கள் என உலகத் தமிழர்கள் அறிந்த ஒரு உண்மை. ஆகவே அதிலிருந்த மீள்வதற்கான நடவடிக்கைகளை உலகத்தமிழினம் செய்யலாம். எமது சமூகத்திலிருந்த வெளியே தெரியக்கூடிய மாதிரியான நடவடிக்கைகள் நடக்கவேண்டும் என்பதைத்தான் சமூகம் எதிர்பார்க்கின்றது. அறிவுபூர்வமான மாவீரர்களின் சிந்தனைகளை உருவாக்கி நடைமுறைப்படுத்துவதற்கான சிந்தனையை உருவாக்கியதுதான் சிங்கள அரசின் துயிலுமில்ல அழிப்பு நடவடிக்கை என்றுதான் நான் கருதுகின்றேன். முற்றும்.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.