Search the Community
Showing results for tags 'போர் இலக்கியப் பாடல்கள்'.
-
"தோற்றிடேல், மீறித் தோற்றிடினும் வரலாறின்றி மரியேல்!" -நன்னிச் சோழன் எழுதருகை(warning): இங்குள்ள செய்திகள் யார் மனதையும் புண்படுத்துவதற்காக எழுதப்படவில்லை. இவை தமிழினத்தின் வரலாற்றை ஆவணப்படுத்தும் முகமாகவே எழுதப்பட்டுள்ளன என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்…! "புதிய வரலாறு எழுதும் புலிவீரர் புகழை உலகெங்கும் கூவு - அவர் உதிரம் சொரிகின்ற உணர்வைக் கவியாக்கி உரத்த குரலெடுத்து பாடு, பாடு, பாடு!" --> நெய்தல் இறுவட்டிலிருந்து பண்டைய காலத்தில் தமிழ் மக்களின் வாழ்வு எவ்வாறு இலக்கியங்களில் செய்யுள் வடிவத்தில் வடிக்கப்பட்டிருந்ததோ அதே போன்று தற்காலத்திய ஈழத்தமிழர்களின் போர்க்காலத்திய வாழ்வானது பாடல்களின் மூலமாக காட்டப்பட்டுள்ளது. ஆயிரம் ஆயிரம் மாவீரர்களை ஈர்ந்தும் பல வரலாறுகளையும் சாதனைகளையும் படைத்த தமிழீழ விடுதலைப் போரின் பக்கங்கள் பாடல்களாக புலிகளின் காலத்தில் வெளிடப்பட்டன. இவை புலிகளின் அனுமதிபெற்று அவர்களின் வரமுறைகளுக்கு உட்பட்டு புலிகளின் அங்கீகாரம் பெற்ற நிறுவனங்கள்/ வெளிநாட்டுக்கிளைகள் ஊடாக வெளியிடப்பட்டன. பேந்து, நான்காம் ஈழப்போரின் முடிவிற்குப் பிறகு, புலிகளுக்குப் பின்னான காலத்திலும், வெளிவந்துகொண்டுள்ளன. இப்பாடல்கள் தொடக்க காலத்தில் இந்தியாவின் தமிழ்நாட்டிலிருந்தும் பின்னாளில் தமிழீழம், தமிழ்நாடு மற்றும் புலம்பெயர் நாடுகள் என எல்லா இடங்களிலிருந்தும் வெளிவந்தன. 1990இற்கு முன்னர் வந்த பாடல்கள் தனிப்பாடல்களாகவும் பின்னாளில் தனிப்பாடல்களாகவும் இறுவட்டுகளாகவும் வெளியிடப்பட்டன. இப்பாடல் ஆக்கத்திற்கு தமிழ்நாடு மற்றும் தமிழீழத்தைச் சேர்ந்த கலைஞர்கள் பங்களித்திருந்தனர். இப்பாடல்கள் யாவும் "இயக்கப்பாட்டு" என்றும் "புலிப்பாட்டு" என்றும் மக்கள் நடுவணில் அறியப்பட்டுள்ளன. இலக்கியங்களில் "விடுதலைப் பாடல்கள்", "போர்க்காலப் பாடல்கள்", "இயக்கப்பாடல்" என்ற பெயர்களால் சுட்டப்படுகின்றன. இவற்றின் பாடல்வரிகள் போரின் பல பக்கங்களை பல கோணங்களில் விதந்துரைப்பவையாக எழுதப்பட்டிருந்தன. தமிழீழ மக்களின் வாழ்வு, புலம்பெயர் ஈழத்தமிழர்களின் வாழ்வு, விடுதலைப் போரிற்கு ஆட்சேர்ப்பித்தல், போராளிகளின் களவாழ்வு, படைத்துறைக் கிளைகள், கரும்புலிகளின் தாக்குதல்கள் மற்றும் அவர்தம் வாழ்க்கை, வலிதாக்குதல் நடவடிக்கைகள், விடுதலைப்போரிற்கு ஆதரவளிக்கும் சிங்கள/இந்திய வன்வளைப்பு வாழ் மக்களின் வாழ்வு, போராளிகளின் வீரச்சாவுகள், துயிலுமில்லங்கள், இடப்பெயர்வு அவலங்கள், படுகொலை அவலங்கள், வழிபாட்டுத் தலப் பாடல்கள் என விடுதலைப்போரின் அனைத்துக் கூறுகளும் பாடல்களாக வடிப்பிக்கப்பட்டிருந்தன. இவ்வாறு வெளிவந்த பாடல்களில் 2009ம் ஆண்டு மே மாதம் 18ம் திகதி வரை வெளிவந்தவற்றைக் கொண்ட, புலிகளின் காலத்திய, மொத்தம் 217 இறுவட்டுகளை அடையாளம் கண்டு தொகுத்துள்ளேன். நான் தொகுத்ததைத் தவிர வேறு ஏதேனும் விடுபட்டிருந்தால் அதனைத் தொகுக்க தெரிவித்துதவுமாறு கேட்டுள்கொள்கிறேன். இவை எதிர்காலத்தில் புலிகளின் காலத்திய பாடல்களுக்கும் ஆயுதவழி ஈழப்போரிற்குப் பிறகு வெளிவந்த பாடல்களுக்குமான வேறுபாட்டைக் காட்டுவதோடு இருவேறு காலத்திய பாடல்களை இலகுவாக அடையாளம் காணவும் உதவும் என்று நம்புகிறேன். ஆக்கம் & வெளியீடு நன்னிச் சோழன் *****
- 234 replies
-
- 1
-
- இயக்கப் பாடல்
- போர் இலக்கியப் பாடல்கள்
- (and 1 more)