Jump to content

Search the Community

Showing results for tags 'யோ. புரட்சி'.

  • Search By Tags

    Type tags separated by commas.
  • Search By Author

Content Type


Forums

  • யாழ் இனிது [வருக வருக]
    • யாழ் அரிச்சுவடி
    • யாழ் முரசம்
    • யாழ் உறவோசை
  • செம்பாலை [செய்திக்களம்]
    • ஊர்ப் புதினம்
    • உலக நடப்பு
    • நிகழ்வும் அகழ்வும்
    • தமிழகச் செய்திகள்
    • அயலகச் செய்திகள்
    • அரசியல் அலசல்
    • செய்தி திரட்டி
  • படுமலைபாலை [தமிழ்க்களம்]
    • துளித் துளியாய்
    • எங்கள் மண்
    • வாழும் புலம்
    • பொங்கு தமிழ்
    • தமிழும் நயமும்
    • உறவாடும் ஊடகம்
    • மாவீரர் நினைவு
  • செவ்வழிப்பாலை [ஆக்கற்களம்]
    • இலக்கியமும் இசையும்
    • கவிதைப் பூங்காடு
    • கதை கதையாம்
    • வேரும் விழுதும்
    • தென்னங்கீற்று
    • நூற்றோட்டம்
    • கவிதைக் களம்
    • கதைக் களம்
  • அரும்பாலை [இளைப்பாறுங்களம்]
    • சமூகவலை உலகம்
    • வண்ணத் திரை
    • சிரிப்போம் சிறப்போம்
    • விளையாட்டுத் திடல்
    • இனிய பொழுது
  • கோடிப்பாலை [அறிவியற்களம்]
    • கருவிகள் வளாகம்
    • தகவல் வலை உலகம்
    • அறிவியல் தொழில்நுட்பம்
    • சுற்றமும் சூழலும்
  • விளரிப்பாலை [சிந்தனைக்களம்]
    • வாணிப உலகம்
    • மெய்யெனப் படுவது
    • சமூகச் சாளரம்
    • பேசாப் பொருள்
  • மேற்செம்பாலை [சிறப்புக்களம்]
    • நாவூற வாயூற
    • நலமோடு நாம் வாழ
    • நிகழ்தல் அறிதல்
    • வாழிய வாழியவே
    • துயர் பகிர்வோம்
    • தேடலும் தெளிவும்
  • யாழ் உறவுகள்
    • யாழ் 26 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 25 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 24 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 23 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 22 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 21 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 20 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 19 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் ஆடுகளம்
    • யாழ் திரைகடலோடி
    • யாழ் தரவிறக்கம்
  • யாழ் களஞ்சியம்
    • புதிய கருத்துக்கள்
    • முன்னைய களம் 1
    • முன்னைய களம் 2
    • COVID-19: Coronavirus - பாதுகாப்பு வழிமுறைகள் மற்றும் ஆலோசனைகள்
    • பெட்டகம்
  • ஒலிப்பதிவுகள்
  • Newsbot - Public club's Topics
  • தமிழரசு's வரவேற்பு
  • தமிழரசு's வயிறு குலுங்க சிரிக்க..
  • தமிழரசு's என்றும் கேட்க்கக்கூடிய பாடல்கள்
  • தமிழரசு's நாபயிற்சி
  • தமிழரசு's படித்ததில் பிடித்தது
  • தமிழரசு's மறக்க முடியாத காட்சி
  • தமிழரசு's பனங்காய்ப் பணியாரத்தால் தமிழருக்குள் என்ன நிகழ்ந்தது தெரியுமா?
  • தமிழ்நாடு குழுமம்'s குழுமம் வரவேற்பு
  • தமிழ்நாடு குழுமம்'s காணொளிகள்
  • தமிழ்நாடு குழுமம்'s கணணி
  • தமிழ்நாடு குழுமம்'s பாடல்கள்
  • தமிழ்நாடு குழுமம்'s கட்டமைப்பு
  • தமிழ்நாடு குழுமம்'s மீனாட்சி கோயில்
  • தமிழ்நாடு குழுமம்'s நினைவலைகள்
  • தமிழ்நாடு குழுமம்'s ரசித்தவை
  • தமிழ்நாடு குழுமம்'s தொழிற்நுட்பம்
  • தமிழ்நாடு குழுமம்'s செய்தி / துணுக்கு
  • தமிழ்நாடு குழுமம்'s நகைச்சு வை
  • தமிழ்நாடு குழுமம்'s புகைப்படங்கள்
  • தமிழ்நாடு குழுமம்'s நற்சிந்தனை
  • தமிழ்நாடு குழுமம்'s தமிழ்
  • தமிழ்நாடு குழுமம்'s சுற்றுலா
  • தமிழ்நாடு குழுமம்'s பேசும் படம்
  • தமிழ்நாடு குழுமம்'s வாழ்த்துக்கள்
  • தமிழ்நாடு குழுமம்'s ஒலிப்பேழை
  • தமிழ்நாடு குழுமம்'s கொரானா
  • தமிழ்நாடு குழுமம்'s விநோதம்
  • தமிழ்நாடு குழுமம்'s பரிச்சார்த்த முயற்சி
  • தமிழ்நாடு குழுமம்'s அஞ்சலிகள்
  • "இலையான்" அடிப்போர் சங்கம்.'s சங்கத்தின் திறப்பு விழா.
  • "இலையான்" அடிப்போர் சங்கம்.'s அந்தநாள், ஞாபகம் வந்ததே....!
  • வலைப்போக்கன் கிருபன்'s என்றும் இனிய பாடல்கள்
  • வலைப்போக்கன் கிருபன்'s உலக சினிமா
  • வலைப்போக்கன் கிருபன்'s புத்தக அலுமாரி
  • வலைப்போக்கன் கிருபன்'s பலதும் பத்தும்
  • வலைப்போக்கன் கிருபன்'s செயற்கை நுண்ணறிவு உருவாக்கி
  • Ahal Media Network's Topics

Calendars

  • நாட்காட்டி
  • மாவீரர் நினைவு

Blogs

  • மோகன்'s Blog
  • தூயவன்'s Blog
  • Mathan's Blog
  • seelan's Blog
  • கறுப்பி's Blog
  • lucky007's Blog
  • சந்தோஷ் பக்கங்கள்
  • தூயாவின் வலைப்பூ
  • vijivenki's Blog
  • sindi's Blog
  • சந்தியா's Blog
  • இரசிகை-இரசித்தவை
  • arunan reyjivnal's Blog
  • இலக்கியன்`s
  • PSIVARAJAKSM's Blog
  • blogs_blog_18
  • sujani's Blog
  • Iraivan's Blog
  • Thinava's Blog
  • குட்டியின் கோட்டை
  • வல்வை மைந்தன்
  • vishal's Blog
  • kural's Blog
  • KULAKADDAN's Blog
  • குறும்பன் வாழும் குகை
  • Thamilnitha's Blog
  • அடர் அவை :):):)
  • டுபுக்கு's Blog
  • வானவில்'s Blog
  • NASAMAPOVAN's Blog
  • சுட்டியின் பெட்டி இலக்கம் 1
  • vikadakavi's Blog
  • ravinthiran's Blog
  • Tamizhvaanam's Blog
  • hirusy
  • neervai baruki's Blog
  • இனியவள்'s Blog
  • senthu's Blog
  • tamil_gajen's Blog
  • சின்னப்பரின் பக்கம்
  • ADANKA THAMILAN's Blog
  • வல்வை சகாறாவின் இணையப்பெட்டி
  • Tamil Cine's Blog
  • harikalan's Blog
  • antony's Blog
  • mugiloli's Blog
  • Kavallur Kanmani's Blog
  • jeganco's Blog
  • Waren's Blog
  • "வா" சகி 's Blog
  • nishanthan's Blog
  • semmari's Blog
  • Akkaraayan's Blog
  • தமிழில் ஒரு சமையல் வலைப்பதிவு
  • தீபன்'s Blog
  • தமிழ் இளையோர் அமைப்பு
  • மாயன்'s Blog
  • Thumpalayan's Blog
  • mullaiyangan's Blog
  • NAMBY's Blog
  • பரதேசி's Blog
  • thamilkirukkan's Blog
  • Vakthaa.tv
  • colombotamil's Blog
  • மசாலா மசாலா
  • muththuran
  • கிருபா's Blog
  • நந்தவனம்
  • தமிழர் பூங்கா
  • TAMIL NEWS
  • dass
  • puthijavan's Blog
  • AtoZ Blog
  • Vani Mohan's Blog
  • mullaiiyangan's Blog
  • mullaiman's Blog
  • மல்லிகை வாசம்
  • karu's Blog
  • saromama's Blog
  • tamil92's Blog
  • athirvu
  • melbkamal's Blog
  • nedukkalapoovan's Blog
  • Loshan's Blog
  • ஜீவநதி
  • எல்லாளன்'s Blog
  • kanbro's Blog
  • nillamathy's Blog
  • Vimalendra's Blog
  • Narathar70's Blog
  • யாழ்நிலவன்'s Blog
  • நிரூஜாவின் வலைப்பதிவு
  • cyber's Blog
  • varnesh's Blog
  • yazh's Blog
  • MAHINDA RAJAPAKSA's Blog
  • விசரன்'s Blog
  • tamil paithiyam's Blog
  • TamilForce-1's Blog
  • பருத்தியன்
  • aklmg2008's Blog
  • newmank
  • ilankavi's Blog
  • இனியவன் கனடா's Blog
  • muthamil78
  • ரகசியா சுகி's Blog
  • tamileela tamilan's Blog
  • சுஜி's Blog
  • மசாலா மசாலா
  • Anthony's Blog
  • Gunda's Blog
  • izhaiyon's Blog
  • TamilEelamboy's Blog
  • sathia's Blog
  • லோமன்
  • kobi's Blog
  • kaalaan's Blog
  • sathiri's Blog
  • Voice Blog
  • தமிழ் செய்தி மையம் மும்பை
  • ஜீவா's Blog
  • தீபம்'s Blog
  • Iraivan's Blog
  • பிறேம்'s Blog
  • mullaikathir.blogspot.com
  • ஸ்ரீ பார்சி காங்கிரஸ் = ஸ்ரீ லங்கா = தமிழ் ஜெனோசைட்
  • sam.s' Blog
  • வாழ்ந்தால் உண்மையாய் வாழவேண்டும் இலலையேல் வாழதிருப்பதுமேல்
  • வாழ்ந்தால் உண்மையாய் வாழவேண்டும் இலலையேல் வாழதிருப்பதுமேல்
  • sam.s' Blog
  • தயா's Blog
  • தயா's Blog
  • ஏராழன்'s Blog
  • Small Point's Blog
  • Rudran's Blog
  • ulagathamilargale.blogpsot.com
  • ramathevan's Blog
  • Alternative's Blog
  • Alternative's Blog
  • அ…ஆ…புரிந்துவிட்டது…. கற்றது கைமண் அளவு…
  • ஜீவா's Blog
  • மொழி's Blog
  • cawthaman's Blog
  • ilankavi's Blog
  • ilankavi's Blog
  • கனடா போக்குவரத்து
  • வேலிகள் தொலைத்த ஒரு படலையின் கதை!
  • nirubhaa's Blog
  • nirubhaa's Blog
  • தமிழரசு's Blog
  • akathy's Blog
  • அறிவிலி's Blog
  • மல்லிகை வாசம்'s Blog
  • வல்வை சகாறா's Blog
  • விவசாயி இணையம்
  • அருள் மொழி இசைவழுதி's Blog
  • ஈழப்போரில் தமிழரால் பாவிக்கப்பட்டவை's படிமங்கள்
  • ஈழப்போரில் தமிழரால் பாவிக்கப்பட்டவை's ஆவணங்கள்
  • ஈழப்போரில் தமிழரால் பாவிக்கப்பட்டவை's சிறப்பு ஆவணங்கள்
  • ஈழப்போரில் தமிழரால் பாவிக்கப்பட்டவை's ஆவணக்கட்டுகள்
  • ஈழப்போரில் தமிழரால் பாவிக்கப்பட்டவை's திரட்டுகள்
  • Home Appliances Spot's Home Appliances

Find results in...

Find results that contain...


Date Created

  • Start

    End


Last Updated

  • Start

    End


Filter by number of...

Joined

  • Start

    End


Group


AIM


MSN


Website URL


ICQ


Yahoo


Jabber


Skype


Location


Interests

Found 5 results

  1. 'துயிலும் இல்லப்பாடல்' என பொதுவாக அழைக்கப்படும் 'தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய சந்தனப் பேழைகளே' பாடல் ஈழப்போராட்ட காலத்தே எழுந்த பாடல்களுள் நின்று நிலைக்கும் ஒரு பாடலாகும். எப்பாடலை தவிர்த்துப் போனாலும் இப்பாடலை தவிர்க்கமுடியாத அளவிற்கு இது முக்கியத்துவம் பெற்றுவிட்டது. காரணம் ஆண்டுதோறும் நினைவுகொள்ளப்படும் மாவீரர் நாள் அப்பாடலை ஒலிக்கச் செய்கிறது அல்லது நினைக்க வைக்கிறது. ஈழப்போராட்ட காலத்தில் எழுந்த பாடல்களில் துயிலுமில்லப் பாடல் கொண்டுள்ள சில முக்கியத்துவ நோக்குகளை இவ்விடத்தே நோக்கலாம். துயிலும் இல்லப்பாடல் இரண்டு சந்தர்ப்பங்களில் முக்கியமாக ஒலிக்க விடப்பட்டது, ஒலிக்கவிடப்படுகிறது. ஒன்று போர்க்காலத்தில் மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் ஒருவரின் வித்துடலினை புதைகுழியில் இடுவதற்கு முன்பாக வித்துடற் பீடத்திலே இடம்பெறும் உறுதியுரையினைத் தொடர்ந்து, துப்பாக்கி வேட்டுச் சத்தங்கள் மூன்று ஒலித்த பின்னே இப்பாடல் ஒலிக்கும். அத்துடன் உடல் கிடைக்கப்பெறாத மாவீரர்களுக்கான நினைவுக்கல் திரைநீக்கத்தின் போதும் துயிலுமில்லத்தில் இப்பாடல் ஒலிக்கும். மலரிடுதல், மண் போடுதல் என்பனவற்றிற்கு வேறு பாடல்களை புலிகள் கொண்டிருந்தனர். இரண்டாவது மாவீரர் நாளின்போது சுடர்கள் ஏற்றப்பட்ட பின்னர் இப்பாடல் ஒலிக்கவிடப்படும். இவையிரண்டுமே பிரதானமானவை. ●துயிலும் இல்லப்பாடல் மாற்றத்துக்குள்ளாகி மீளவும் ஒலிப்பதிவாக்கப்பட்டது ஏன்? தமிழீழ விடுதலைப் புலிகளினால் அறிமுகம் செய்யப்பட்ட பாவனையிலுள்ள துயிலும் இல்லப் பாடலானது தொகையறா, பல்லவி, அனுபல்லவி, இரு சரணங்களைக் கொண்டது. 'மொழியாகி எங்கள் மூச்சாகி நாளை' எனத்தொடங்கும் தொகையறாவும், 'தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய சந்தனப் பேழைகளே' எனத்தொடங்கும் பல்லவியும் உண்டு. 'எங்கே எங்கே ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள். ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள்' என்பது அனுபல்லவி. முதலாவது சரணம் ஆரம்பத்தில் இப்படி அமைந்திருந்தது. நள்ளிரா வேளையில் நெய்விளக்கேற்றியே நாமுமை வணங்குகின்றோம். உங்கள் கல்லறை மீதிலெம் கைகளை வைத்தொரு சத்தியம் செய்கின்றோம். சாவரும் போதிலும் தணலிடை வேகிலும் சந்ததி தூங்காது – எங்கள் தாயகம் வரும் வரை தாவிடும் புலிகளின் தாகங்கள் தீராது. (எங்கே எங்கே ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள்) இப்படி அமையப்பெற்றதே சரணம். காரணம் 1989 முதலாக ஆரம்பத்தில் குறிப்பிட்டளவு ஆண்டுகள் மாவீரர் நாளானது நவம்பர் 27ஆம் திகதி நள்ளிரவு வேளையில்தான் அனுட்டிக்கப்பட்டது. பின்னைய நாட்களில் மாலைப்பொழுதில் இடம்பெற்ற அத்தனை அம்சங்களும் முன்பு நள்ளிரவில்தான் நடந்தேறின. நள்ளிரவிலேயே அன்றைய நாட்களில் மக்கள் துயிலும் இல்லத்தில் சேர்ந்தனர். மக்கள் விழித்திருந்தே சுடர் ஏற்றினர். புலிகளின் தலைமையின் உரையும் நள்ளிரவில்தான் ஒலிபரப்பானது. காரணம் முதல் மாவீரன் சங்கர் அவர்கள் 1982இல் நள்ளிரா வேளையில் மரணித்ததான ஒருபதிவே தென்பட்டமை ஆகும். ஆயினும் மிகச்சிறந்த ஆவணவாதியும், புலிகளின் கல்விக்கழகக் பொறுப்பாளருமான வெ.இளங்குமரன் என்கிற பேபி அவர்கள் 1982இன் ஓர் ஆவணத்தை கண்டெடுத்துவிட்டார். அது புலிகளின் தலைமையின் பதிவு. மாவீரர் சங்கர் அவர்களுக்கானது. அதில் மாலை 06.05மணி என்பதே முதல் மாவீரரின் மரணிப்பு என்பதே பதிவாக காணப்பட்டது. உடனடியாகவே புலிகள் மாவீரர் நாளின் நேரத்தை மாற்றினர். நள்ளிரா தீபமேற்றல் மாலை 06.05 மணியானது. 1995இன் பின்னரே இம்மாற்றம் இடம்பெற்றதாக அறியமுடிகிறது. இது மட்டுமா? துயிலும் இல்லப் பாடலில் நள்ளிரா வேளை விளக்கேற்றுவதான வரிகள் உள்ளதே. அந்த நாட்களில் புலிகளால் மாவீரர் குடும்பங்களுக்கு வழங்கப்படும் மாவீரர் படங்களில் துயிலும் இல்லப்பாடலும் இடம்பெற்றிருக்கும். உடனடியாகவே பாடலின் சரணத்தினையும் புலிகள் மாற்றத்திற்குள்ளாக்கினர். கவிஞர் புதுவை இரத்தினதுரையே இப்பாடலை எழுதியவர். மேலே சொல்லிய முதற்சரணத்தில் உள்ள 'நள்ளிரா வேளையில் நெய்விளக்கேற்றியே நாமுமை வணங்குகிறோம்' எனும் வரியானது கீழ்வருமாறு மாறுதலானது. வல்லமை தாருமென்றுங்களின் வாசலில் வந்துமே வணங்குகின்றோம். என்பதே அவ்வரி. இதுவே இப்போது பாவனையில் உள்ளது. ஏனைய வரிகள் மாற்றம் பெறவில்லை. இவ்விடத்தே துயிலும் இல்லப் பாடலில் உள்ள இன்னுமொரு விடயத்தைச் சொல்ல வேண்டும். துயிலும் இல்லப் பாடலில் எந்த இடத்திலும் புலிகளின் தலைவரின் பெயர் இடம்பெறவில்லை. 'தலைவன்' என பொதுமைப்பட ஈரிடங்களில் வந்துள்ளதே தவிர அவரது பெயர் பாடலில் இடம்பெறவில்லை. உலகில் உருவாகிய தமிழ்ப்பாடல்களில் உலகெலாம் ஒரே திகதியில் ஒரே நேரத்தில் ஆண்டில் ஒரே ஒரு தடவை ஒலிக்கும் பாடல் எனும் பதிவும் புலிகளின் துயிலும் இல்லப்பாடலுக்கு உண்டு. இப்பாடலினை கவிஞர் புதுவை இரத்தினதுரை எழுத, இசைவாணர் கண்ணன் அவர்களின் இசையில் மாவீரர் சிட்டு, மணிமொழி, அபிராமி, வர்ணராமேஷ்வரன் ஆகியோர் பாடியிருந்தனர். --> புரட்சி
  2. ஆழக்கடலெங்கும் சோழமகராஜன் ஆட்சி புரிந்தானே அன்று: தமிழ் ஈழக்கடலெங்கும் எங்கள் கரிகாலன் ஏறி நடக்கிறான் இன்று. காலை விடிந்ததென்று பாடு:சங்க காலம் திரும்பியது ஆடு இந்தப்பாடல் போர்க்காலத்தில் பிரபலமான பாடல். எஸ்.ஜி சாந்தன் பாடிய பாடலிது. சோழ மன்னர்களின் படைகளுக்கு ஒப்பாக புலிகளின் படை ஒப்பிடப்பட்டு எழுதப்பட்ட பாடலிது. இப்பாடலை கவிஞர் புதுவை இரத்தினதுரை அவர்கள் எழுதியிருந்தார். இப்பாடலின் சரணத்திலும் சோழன் பெயர் வருகிறது. எட்டுத் திசையாவும் தொட்டுப் பெருஞ்சோழன் ஏறி கடல் வென்றதுண்டு:அவன் விட்ட இடமெங்கும் வேங்கைக் கடல்வீரன் வென்று வருகிறான் இன்று என்பதே அச்சரணம். இக்காலத்தில் இராஜராஜ சோழன் தொடர்பாக சர்ச்சை நிலவுவதைக் காண்கிறோம். இராஜராஜ சோழனை தமிழர்க்கு தீங்கிழைத்தவனாக சிறு அணியும், அவர் தமிழர்களின் அடையாளம் என பெரு அணியும் வாதிடுகின்றன. புலிகளைப் பொறுத்தமட்டில் சோழர்களை தமிழர்களின் முன்னோடியாகவே கொண்டனர். அதிலும் அவர்கள் கரிகாட்(கரிகாலன்) சோழனையே பெயர் குறித்து பாடல்களில் வைத்தனர். கிறிஸ்துவுக்குப் பின் இரண்டாம் நூற்றாண்டு காலத்திலே காவிரிப்பூம்பட்டணத்தை தலைநகராகக் கொண்டு ஆண்டவனே இந்த கரிகாலச்சோழன். தனக்கு ஒப்புவமையாக யாருமில்லை எனும் மிடுக்குடையவன். இதோ இந்த ஈழப்பாடலிலும் சோழ வரலாறு பற்றி உள்ளது. சோழ வரலாறு மீண்டும் ஈழத்திலே பிறந்தது ஆழக்கடல் மீதிலெங்கும் வேங்கைக்கொடி பறந்தது நீலக்கடற் புலிகளினால் வீரமிங்கு எழுந்தது ஈழமெங்கும் தமிழர் நெஞ்சம் வீறுகொண்டு நிமிர்ந்தது. முல்லைக்கடல் மீதில் சொல்லும் ஒரு பாடல் செல்லப் பிள்ளையோடு சென்றவரைப் பாடு. செங்கதிர் பாடிய பாடலிது. முல்லைத்தீவுக் கடற்பரப்பில் ரணவிரு கப்பல் மீதான கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவடைந்த மேஜர் செல்லப்பிள்ளை, மேஜர் பதுமன், மேஜர் சுடரொளி (பெண்), மேஜர் கண்ணபிரான், மேஜர் பார்த்தீபன் ஆகியோரின் நினைவு சுமந்த பாடலது. தமிழீழ இசைக்குழுவினர் இதற்கு இசையமைத்திருந்தனர். தமிழர்களின் ஈழத்துப் போராட்டத்தை சோழர் பரம்பரை என ஒப்பிட்டும் போராட்ட கால பாடல்கள் வெளிவந்தன. சோழர்கள் சூரிய வம்சத்தினைச் சேர்ந்தவர்கள். பிரபாகரன் என்பது சூரியனின் கரம் என பொருளாகிறது. 'கடலிலே காவியம் படைப்போம்' இசைநாடாவில் எஸ்.ஜி.சாந்தன் பாடிய 'நீலக்கடலே பாடும் அலையே, நெஞ்சில் சுமந்த என் தாயின் மடியே' பாடலில் சோழர்கள் இவ்விதம் இடம்பெறுகினர். இது முதற்சரணம். ஆழக்கடல் சோழப்பரம்பரை ஆளும் நிலையாச்சு அந்நியரின் கோழைப்படையெலாம் ஓடும் படியாச்சு நாளை தமிழ் ஈழம் வருமென நம்பிக்கை வந்தாச்சு நம்ம கடற்புலிகள் செல்லும் தேதி குறிச்சாச்சு ஆடுங்களே இங்கு பாடுங்களே அச்சமில்லை என்று கூறுங்களே சோழ மன்னன் கடாரத்தை வெற்றி கொண்டான் என்பது வரலாறு. மலேசியப் பகுதியாகிய இது இன்றுமுள்ளது. சோழ மன்னன் கடற்படையைக் கொண்டுதான் கடாரத்தை வென்றான் என வரலாறு பதிப்பிக்கிறது. அச்சம்பவமும், சோழரும் ஈழப்போராட்ட படைக்கு இவ்விதமாக ஒப்பாக்கப்படுகின்றனர். கடலதை நாங்கள் வெல்லுவோம் - இனி கடற்புலி நாங்கள் ஆளுவோம் எனும் பாடலின் தொடர் வரிகள் இப்படி அமைகின்றன. கடாரம் வென்ற சோழனவன் கப்பலில் சென்றிடும் கடலிதுதான் பாரதம் வென்ற புலிப்படையின் படகது சென்றிடும் கடலிதுதான் இந்த வரிகளெல்லாம் சோழ சாம்ராஜ்யத்தை ஈழப்போராட்டப் படைகளோடு சம்மந்தமாக்கியவை. சோழனை புலிகள் கறைகொண்டு காணவில்லை. இலங்கையின் தமிழர் பகுதிகளை சோழர் நிலமாகவும், அதனை மீட்கும் போராட்டமே இதுவென்றும் சொல்லும் வரிகளும் ஈழப்பாடல்களில் உள்ளன. இசைவாணர் கண்ணன் இசையமைத்த 'கடலினில் காவியம் படைப்போம், வரும் தடைகளை எதிர்த்துமே முடிப்போம்' பாடலில் முதலாவது சரணத்திலே இதனைக் காணலாம். ஆழக்கடல்மடி மீது தவழ்ந்திடும் நீலப்புலிகளடா:களம் ஆடும் பொழுதினில் வீரம் விளைந்திடும் சூரப் புலிகளடா சோழப்பெருநிலம் மீள பகையுடன் மோதும் புலிகளடா:தமிழ் ஈழக்கடலினில் ஏறும் கடற்புலி என்றும் வெல்லுமடா இப்படியாக அவ்வரிகள் அமைந்திருக்கின்றன. தொடக்கத்திலே எழுதியது போல புலிகள் தமது எழுத்துக்களில் சோழர்கள் குறித்து எழுதியபோதும், அவர்கள் கரிகாலச் சோழனையே முதன்மையாக்கி காட்டினர். அதற்கு ஒரு சான்றாக இப்பாடலைக் குறிப்பிடலாம். இப்பாடல் இளங்கோவன் செல்லப்பா இசையமைத்த பாடல். கோவை கமலா பாடிய பாடலிது. நேற்று ஒரு கரிகாலன் எங்கள் அண்ணன் இன்று ஒரு கரிகாலன் எங்கள் மன்னன் இருவருக்கும் ஒரேகுடி தமிழ்க்குடி இருவருக்கும் ஒரேகொடி புலிக்கொடி இப்பாடலில் கரிகாட் சோழனுக்கு ஒப்பாகவே புலிகளின் தலைவர் ஒப்பிடப்பட்டார். அப்பாடலில் மேலும், மன்னன் கரிகாலன் அன்னை தமிழகம் காத்தான் அண்ணன் கரிகாலன் தமிழ் ஈழம் காத்தான் எனும் வரிகளும் உள. இப்படியாக ஈழவிடுதலைப் போராட்ட காலத்துப் பாடல்களிலே சோழரை தமிழரின் முன்னோடியாகக் காண்பித்தும், அதில் கரிகாலச் சோழனை புலிகளின் தலைவருக்கு ஒப்பாக்கியும் பாடல்கள் வெளிவந்துள்ளன. சேரன், பாண்டியன் ஆகியோரின் பெயர்களிலே முக்கியமான வாணிபங்கள் போர்க்காலத்திலே இருந்தன. ஆயினும் சோழர்களின் பெயர்கள் இடம்பெற்ற அளவிற்கு சேர, பாண்டியர்களின் பெயர்கள் ஈழப்போராட்ட பாடல்களில் இடம்பெறவில்லை. புரட்சி
  3. போர்க்காலத்தில் இயல்பான வழக்குடைய இலக்கணச் சொற்களிலேயே பெருவீதமான பாடல்கள் வெளிவந்தன. மிகச்சொற்பமான பாடல்களே வட்டார வழக்குச் சொற்களையும், காலச்சூழல் அமைவுச் சொற்களையும் கொண்டமைந்தன. உதாரணமாக இன்றைய காலத்தில் 'நன்றாக உள்ளது' என்பதற்கு 'சட்டப்படி' எனச் சொல்வர். இது காலச்சூழல் அமைவுச் சொல். அக்காலத்தில் 'அந்தமாதிரி' என்பர். இதை வைத்தும் ஈழப்பாடலுண்டு. இப்பதிகையிலே ஈழவிடுதலைப் போராட்ட காலத்தில் வெளிவந்த பாடல்களில் 'எங்கட', 'நம்மட' போன்ற சொற்கள் உள்ளடங்கும் பாடல்களை நோக்கலாம். சினிமாவும், போரல்லா இலக்கியமும் என அதிகமான உள்ள இக்காலத்தில் இவ்விதமான பதிவுகளுக்காக தேடலும், நினைவுப் பதிவும் மிக அவசியமாம். ஆயிரமான ஈழப்பாடல்களில் 'எங்கட', 'நம்மட' எனும் சொல் இடம்பெறும் பாடலைக் கண்டுபிடிப்பதற்காக, போகையிலும் வருகையிலும் நிறையவே சிந்திக்க வேண்டிதாயிற்று. முதலில் 'நம்மட' எனும் சொல் வருகின்ற பாடல். பாடலின் பல்லவி இது. என்னடா தம்பி கதைக்குறானுகள் சந்திவெளியில. எப்படியாண்டாம் நேற்றைய அடி கதிரவெளியில. வாகரைப் போடியார் சொல்லுறாரு அடியென்ன அடியாம். வழிசலுகள் வந்த பீரங்கி பொடியாம் பொடியாம். இப்பாடல் ஈழவிடுதலைப் போராட்ட காலத்தில் அதிகமாக இரசிப்பிற்குட்பட்ட பாடல். உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் எழுதிய பாடலை தேனிசை செல்லப்பா பாடியிருந்தார். பாடலின் மொழி வழக்கு மட்டக்களப்பு பிரதேசம் சார்ந்த வட்டார வழக்கு. இங்கே இயல்பான இலக்கண வழக்கு இல்லை. இதில் வரும் மானிடப் பெயர்கள், ஊர்ப்பெயர்கள், பேச்சு வழக்கு யாவுமே மட்டக்களப்பிற்குரியவையே. 'ஒரு தலைவனின் வரவு' இறுவட்டிற்காக இளங்கோவன் செல்லப்பா இசையமைத்த இப்பாடலின் சில வரிகளை காலச்சூழல் கருதி தவிர்க்கிறோம். பாடலில் மூன்று சரணங்கள். முதற் சரணம் 'கொடிய...' என தொடங்குகிறது. காலச்சூழல் கருதி அதனை முற்றுமாக பதிய இயலவில்லை. மூன்றாம் சரணம் 'காலம் காலமாக நம்மள அழிச்சவெயலவா...' எனத் தொடங்குகிறது. இடைச் சரணத்திலேயே 'நம்மட' சொல் இடம்பெறுகின்றது. இவ்வெழுத்தின் நோக்கே இச்சொற்கள் பற்றியதாகையால் அச்சரணத்தை முற்றுமாய் இதிற் பதிதல் நன்றெனவுணர்ந்து பதிகிறோம். இடைச் சரணம் இதுதான். காலங்காலமாக நம்மள அழிச்சவெயளவா கழுசரை "நம்மட" பெண்டுகள் உடம்ப கிழிச்சவெயளவா. நாலைஞ்சி கோயில பள்ளியக்கூட இடிச்சவயளவா "நம்மட" பொடியள் இவன்ட கதைய முடிச்சவெயளவா பார்த்தீர்களா? 'நமது' எனும் இயல்பான இலக்கண வழக்கு 'நம்மட' எனும் பிரதேச வழக்காக அமைகின்றது. கவிஞர் காசி ஆனந்தன் அவர்களின் திறமையே தனிதான். மலையக வழக்குகளிலும் அவர் பாடல் புனைந்திருக்கிறார். ஏனெனில் வடக்கு, கிழக்கு, மலையகம் என சகலருக்கும் பொருந்தும் இலக்கண வழக்கு உள்ளது. ஆனால் பிரதேச வழக்குகள் வித்தியாசமானவை. பாடலின் இறுதிச் சரணத்தில் கடைசி வரிகளிலும் வேறு வட்டாரச் சொற்களை நோக்கலாம். சரணத்தின் தொடக்கத்தை காலச்சூழல் கருதி தவிர்க்கிறோம். அக்கா நேத்துத்தான் கதிரவெளி பக்கம் போயிருக்கு அவ வரட்டுண்டா தம்பி மறுகா இன்னும் கதை இருக்கு 'மறுகா' போன்ற சொற்கள் கிழக்கு வட்டார வழக்கு. இனி 'எங்கட' எனும் சொல் இடம்பெறும் பாடலை நோக்குவோம். கல்யாணி உமாகாந்தன் பாடிய, இளங்கோவன் செல்லப்பா இசையமைத்த பாடலிது. புலிகள் மீண்டும் யாழ்ப்பாணத்துக்கு படையெடுப்பினம்: 'எங்கட' பொடியள் சிங்களப் படையளுக்கு முறையா கொடுப்பினம். வாங்கிக் கட்டுவினம் உவையள் வாங்கிக் கட்டுவினம். இப்பாடல் போர்க்காலத்திலே யாழ்ப்பாணத்தை மீளவும் கைப்பற்ற புலிகள் எத்தனித்த நாட்களில் பிரபலம். இன்றைய அருங்காட்சியம் அமைந்துள்ள நாவற்குழி கடந்து அரியாலை வரை புலிகள் நகர்ந்தனர். பின்னர் முகமாலை வரை பின்னே நகர்ந்தனர். பிரதேச, மத பாகுபாடின்றி இந்தப் பகுதிகளில் புலிகளின் போராளிகள் அநேகர் மடிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இப்பாடலில் வரும் சொற்கள் யாவுமே யாழ்ப்பாண பிரதேச வழக்குகளே. 'எமது', 'எங்கள்' எனும் இலக்கண வழக்குகளின் வட்டார வழக்காக 'எங்கட' என்பதனைக் குறிப்பிடலாம். எடுப்பினம், குடுப்பினம் என்பதெலாம் பிரதேச வழக்குகளே. இப்பாடலில் சில வரிகளை காலச்சூழல் கருதி தவிர்க்கிறோம். இரண்டாம் சரணத்தின் பிரதேச வழக்கினை நோக்குவோம். கள்ளத்தோணி என்டு எங்கள நேத்து கழிச்சவ. வடை, தோச என்டு எங்கள உவையள் பழிச்சவ முல்லைத்தீவில அடிவாங்கி முழியா முழிச்சவ. பொடியள் உவைய கிளிநொச்சியில கிழியா கிழிச்சவ இப்படியாக இப்பாடலில் முழுமையாக யாழ்ப்பாணத்திலே பேசப்படும் பேச்சு வழக்காக சொற்கள் அமைகின்றன. இவையெல்லாமே அக்காலத்திலே பிரபலமாக ஒலித்த பாடல்களே. 'மெய்யே!' போன்ற ஆச்சரிய வெளிப்படுத்துகைச் சொற்களும் இப்பாடலில் உள்ளன. இன்னுமொரு பாடல். கிட்டுப் பீரங்கிப் படையணி, குட்டிச்சிறி மோட்டார் படையணி பற்றிய 'வரும்பகை திரும்பும்' இறுவட்டில் இடம்பெற்றது. இசைப்பிரியனின் இசையில் தமிழ்க்கவி, சீலன், மேரி உள்ளிட்டோர் பாடிய பாடல். கிட்டுப் படை பீரங்கிக்கு கிட்ட நிக்க யாருமில்லை குட்டிச்சிறீ மோட்டாரோட முட்டி நிக்க ஜீவனில்ல என்பதே பல்லவி. இப்பாடலில் பொதுவாக கிராமிய வழக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. பாடலின் தொகையறாவின் தொடக்கத்தில் மலையக வழக்கிற்கு ஒப்பான வழக்கு உள்ளது. இப்பாடலிலும் 'எங்கட' எனும் சொல் உள்ளது. முதற்சரணத்தைத் தவிர பிற சரணங்களைத் தவிர்க்கிறோம். நெல்ல வெதைச்ச 'எங்கட' மண்ணில செல்லை வெதச்சான் கேளு மச்சான் புல்லையும் பூவையும் பிஞ்சையும் தேய்ச்சி தொல்லை கொடுத்தான்....... .... இதிலே 'எங்கட' சொல் வந்ததனை நோக்கலாம். காலச்சூழல் கருதி இப்பகுதி கட்டுப்பாடாகிறது. இப்பாடல் பொதுவான கிராமிய வழக்கிலே வந்ததே. இப்படியாக போர்க்காலப் பாடல்கள் பன்முக நோக்கோடு சகல பகுதிகளையும் உள்ளடக்கி பல விதங்களில் வெளியாகி உள்ளமை நோக்கத்தக்கது. ஈழவிடுதலைப் போராட்ட காலத்தில் பிரதேச வழக்குச் சொற்கள் கொண்ட பிற பாடல்களை வாய்ப்பிருப்பின் பிறிதொரு பொழுதில் நோக்கலாம். -->புரட்சி
  4. எச்சார்புளோர் ஈழவிடுதலைப் போராட்ட வரலாற்றினை எழுதினும், ஜெனரல் அனுருத்த ரத்வத்தையை புலிகள் எதிர்கொண்டமை பற்றியோ, புலிகளை ஜெனரல் அனுருத்த ரத்வத்தை எதிர்கொண்டமை பற்றியோ எழுதாமல் இருக்க முடியாது. மூன்றாம் கட்ட ஈழப்போரில் புலிகள் எதிர்கொண்ட அரச தரப்பு இராணுவ வழிநடத்துநர்களில் அனுருத்த ரத்வத்தைக்கும் முக்கிய இடமுள்ளது. இதனால்தான் புலிகளின் ஈழப்போராட்ட பாடல்களில் அரச தரப்பின் இராணுவ வழிநடத்துநர்களில் அனுருத்த ரத்வத்தை இடம்பிடித்திருக்கிறார். இப்பாடல்களில் எல்லா இடத்திலும் பரிகாசம் செய்யப்படும் ஒருவராகவே ஜெனரல் அனுருத்த ரத்வத்தை இடம்பெறுகிறார். கேணல் நிலையில் இருந்த அனுருத்த ரத்வத்தை யாழ்ப்பாணம் மீதான சூரியக்கதிர்(ரிவிரெஷ) நடவடிக்கையின் பின்னர் நேரடியாக ஜெனரல் நிலைக்கு அன்றைய ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்காவினால் உயர்த்தப்பட்டார். 1996ஆம் ஆண்டு ஜெனரல் அனுருத்த ரத்வத்தை பயணித்த உலங்கு வானூர்தி பழுதுபட்டு புலிகளின் ஆளுகைகொண்ட வவுனியா பகுதியில் தரையிறங்கியபோது, அதிலிருந்து தப்பித்து தரை வழியே போய்விட்டார்! கீழ்வரும் இப்பாடல் ஈழப்போரியலின் நீண்டகாலச் சமராகிய 'ஜெய்சிக்குறு' சமர்க்காலத்தில் குறித்த சமரினை மையப்படுத்தி புலிகள் வெளியிட்ட பாடல். இப்பாடலின் அனுபல்லவியில் அனுருத்த ரத்வத்தையின் பெயர் இடம்பெறுகின்றது. யாரென்று நினைத்தாய் எம்மை ஏன்வந்து அழித்தாய் மண்ணை போர் என்று வந்தாய் துணிந்து புலிகாலில் விழுந்தாய் பணிந்து பார்த்தாயா சிங்களத் தம்பி இங்கு வருவாயா அனுருத்தவ நம்பி. (சரணங்கள் தொடர்கின்றன.) மேல்வந்த பாடலினை கவிஞர் வேலணையூர் சுரேஷ் எழுத திருமாறன் மற்றும் திருமலைச் சந்திரன் ஆகியோர் பாடியிருந்தனர். இசை:சிறீகுகன். இனிவரும் பாடலில் ரத்வத்தையின் பெயர் நேரடியாகவே இடம்பெறுவதைக் காணலாம். இப்பாடலானது முல்லைத்தீவு தளத்தினை 'ஓயாத அலைகள்' நடவடிக்கை மூலம் மீட்ட புலிகள் அதன் வெற்றியை பறைசாற்றி வெளியிட்ட 'முல்லைப்போர்' ஒலிநாடாவில் இடம்பெற்றது. 'நந்திக் கடலோரம் முந்தைத் தமிழ் வீரம் வந்துநின்று ஆடியது நேற்று' எனும் பாடலின் மூன்றாவது சரணத்தில் ரத்வத்தை இப்படியாக இடம்பெறுகிறார். இன்னும் வலிகாமத்துள்ளே குந்தி இருப்பாயா? "ரத்வத்தையின்" சொல்லை நம்பி எங்கும் திரிவாயா? இன்னும் இன்னும் முல்லைத்தீவை எண்ணிக்கொள்ளுவாயா?: புலி இன்றுவரும் என்றுவரும் என்று முழிப்பாயா? கவிஞர் புதுவை இரத்தினதுரை எழுதிய பாடலை தமிழீழ இசைக்குழு இசையில் பாடகர் நிரோஜன் மற்றும் தியாகராஜா ஆகியோர் சேர்ந்து பாடியிருந்தனர். கீழ்வரும் இப்பாடல் உணர்ச்சக் கவிஞர் காசி ஆனந்தன் எழுதியது. இளங்கோவன் செல்லப்பா இசையில் தேனிசை செல்லப்பா பாடிய பாடலிது. 'செல்லப்பா கொஞ்சம் நில்லப்பா, புலிகள் செய்தியிருந்தால் நீ சொல்லப்பா' எனும் பாடலில் இடம்பெறும் இச்சரணத்தில் ரத்வத்தையின் பெயர் இவ்விதம் இடம்பெறுகிறது. பொத்துப் பொத்தென்றங்கே சிங்களர் விமானம் பூமியில் விழுகுதாம் மெய்யா? செத்துப் போனாரா உயிரோடுள்ளாரா சிங்கள ரத்வத்தை ஐயா. இந்தியாவில் உருவான இப்பாடலில் இராணுவத் தளபதி ஒருவரின் பெயர் இடம்பெறாமல் பாதுகாப்பு அமைச்சினை நிர்வகித்த ஒருவரான ரத்வத்தையின் பெயர் இடம்பெற்றிருக்கின்றது. யாழ்ப்பாணத்திலிருந்து புலிகள் வன்னிக்கு பின்னகர முன்னர் அனுருத்த ரத்வத்தை கேணல் நிலையிலேதான் இருந்தார். ரிவிரெஷா எனப்படும் சூரியக்கதிர் நடவடிக்கையின் மூலம் யாழ்ப்பாணம் இலங்கைப் படைகள் வசமான பின்னர் அவர் ஜெனரல் எனும் நிலைக்கு அப்போதைய ஜனாதிபதி சந்திரிகாவினால் உயர்த்தப்பட்டார். சூரியக்கதிர் இராணுவ நடவடிக்கைக்கு முன்னர் சில மாதங்களுக்கு முன்னர் 'முன்னேறிப் பாய்தல்' எனும் இராணுவ நடவடிக்கையை மேற்கொண்ட அரச படைகள் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்ற முயன்றன. இந்த இராணுவ நடவடிக்கைக்கு எதிராக புலிகள் 'புலிப்பாய்ச்சல்' எனும் நடவடிக்கையை மேற்கொண்டு, குறித்த இராணுவ நடவடிக்கையை முறியடித்தனர். இந்த வெற்றியின் பின்னர் இப்பாடல புலிகளால் வெளியிடப்பட்டது. பல்லவி இது: முன்னேறிப் பாய்வதென்ன அம்மா. நீ பின்னாலே ஓடுவதேன் சும்மா. புக்காரா....எடித்தாரா புக்காரா எடித்தாரா போயாச்சே நிற்பாரா? இப்பல்லவியில் இடம்பெறும் புக்காரா என்பது உக்ரெய்ன் தயாரிப்பு போர்விமானம். எடித்தாரா என்பது போர்க்கப்பல். இவையிரண்டும் இந்தச் சமரில் புலிகளால் அழிக்கப்பட்டவை. இப்பாடலில் ரத்வத்தை 'கேணல்' மற்றும் 'மாமன்' எனும் பெயர்களில் காட்டப்படுகிறார். மேல் வந்த பாடலின் சரணமிது: பன்னிரெண்டு ஆயிரம் பேரம்மா - மாமன் பந்தயக் குதிரை அநேயம்மா தேரிழுக்க நம்பி வந்து கேணல் கயிரை பிடிக்க வேலி வெட்ட வந்தவனே கழுதை புலி பாய்கையிலே விட்டதனை உயிரை. மாமன் என அனுருத்த ரத்வத்தை குறிப்பிடப்படக் காரணம், அப்போதைய ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவிற்கு மாமன் முறை என்பதாலேயாம். ஜெய்சிக்குறு வெற்றிப்பாடலான 'சுக்குநூறானது சிக்குறு. வந்து சும்மா கிடந்து அது முக்குது' பாடலின் சரணமொன்றில் இவ்விதம் ரத்வத்தையின் பெயர் இடம்பெறுகின்றது. வன்னியை என்னென்று எண்ணினாய் ரத்வத்தையின் சொல்லையா நம்பினாய் கண்டியின் வீதியில் ஏறினாய்: வந்து காட்டுக்குள் ஏனடா சாகிறாய். இன்னொரு பாடல். மூன்றாம் கட்ட ஈழப்போரில் யாழ்ப்பாணம் கைப்பற்றலினால் ரத்வத்தைக்கு எப்படி பெயர் கிடைத்ததோ, அதே ரத்வத்தை காலத்தில் இலங்கையின் அதிமுக்கிய தளமான ஆனையிறவுப் பெருந்தளம் 2000ஆம் ஆண்டில் புலிகளால் கைப்பற்றப்பட்டது. குடாரப்பு தரையிறக்கம் எனும் தரையிறக்கம் மூலம் ஓயாத அலைகள் மூன்று நடவடிக்கையினால் இத்தளம் மீது நகர்வினை புலிகள் செய்தனர். இதன் வெற்றியாக 'ஆனையிறவு' எனும் ஒலிநாடா புலிகளால் வெளியிடப்பட்டது. புதுவை இரத்தினதுரை எழுதிய பாடல்களுக்கு இசையமைப்பாளர்கள் கண்ணன் மற்றும் முரளி ஆகியோர் இசை வழங்கியிருந்தார். பாடலை எஸ்.ஜி.சாந்தன், ஜெயா சுகுமார், திருமலைச் சந்திரன், நிரோஜன், மணிமொழி, தவமலர் ஆகியோர் பாடியிருந்தனர். 'ஈடுவைத்து ஈடுவைத்து நந்தலாலா' எனத்தொடங்கும் பாடலில் அனுருத்த ரத்வத்தை இவ்விதம் காட்டப்படுகிறார். ஊருக்குள்ள போகப்போறம் நந்தலாலா இப்ப உள்ளதையும் தந்துபோறா நந்தலாலா. மாமனையே நம்பிநம்பி நந்தலாலா:இன்று மாரடிச்சுக் கொள்ளுறாவாம் நந்தலாலா. ஜனாதிபதிபதி சந்திரிகாவை பரிகாசம் செய்யும் அப்பாடலில் மாமன் ரத்வத்தையை அவர் நம்பியமையும் பதிவாகியிருக்கிறது. ஈழவிடுதலைப் போராட்டத்தில் இப்படியான பதிவுகள் கொண்ட பாடல்கள் பலவுள. 1938இல் கண்டியில் பிறந்த அனுருத்த ரத்வத்தை 2011இல் மரணித்தமை குறிப்பிடத்தக்கது. -- > புரட்சி
  5. https://www.facebook.com/puratchi2100/?locale=fr_CA போர்க்காலப் பாடல்களில் 'தாலாட்டுப் பாடல்கள்' தேனிசை செல்லப்பா இசையில் சுவர்ணலதா பாடிய இப்பாடலே போர்க்கால தாலாட்டுப் பாடல்களில் முதற்பாடல் என வரையறுக்கக்கூடியது. தாலாட்டு பாடமாட்டேன் தாலாட்டு பாடமாட்டேன் தமிழ் பிள்ளை என்பிள்ளை அவன் தலைசாய்த்து தூங்க இது நேரம் இல்லை. புல்லாங்குழலிசை அள்ளிவரும் இப்பாடலை உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் எழுதிருந்தார் 'இது புலிகளின் காலம்' இசைநாடா. இப்பாடலின் சரணங்கள் எல்லாமே போர் கொடுத்த இழப்புகளையும், சம்பவ பதிவுகளையும் சொல்லி வைப்பதாக அமைகின்றது. இப்பதிவுகளில் முகநூல், சூழல் நிலைகருதி சில வரிகள் தவிர்க்கப்பட்டு இலக்கிய பதிவாகவும், மறக்கப்படாதபடி காலக்கண்ணாடியான இலக்கியம் ஆவணப்படுத்தப்படவும் பதிவாகின்றது. தொட்டில்கூட இல்லாத அவலம் இப்படி சொல்லப்பட்டிருக்கிறது. எதிரியின் கொடிய குண்டுவீச்சிலே தொட்டில் எரிந்தது என் பிள்ளை விளையாடும் முற்றத்தில் நின்ற பந்தல் சரிந்தது. உறங்கக்கூடாது என் மகன் என்றொரு உண்மை புரிந்தது.(2) தாலாட்டு எனும் சொல் எப்படி ஆனது? தால் என்றால் நாக்கு ஆட்டு என்றால் நாவினை ஆட்டி அசைத்தல் என்பர். ஆக தாலாட்டு என்பது நாட்டுப்புற பாடலாக இயல்பிலேயே தோன்றியதெனலாம். இதனை சங்கீதமே கற்காதோரும் பாடினர். போர்க்காலத்தில் இதனை புதிய விதமாக எழுச்சிக்கும், பரப்புரைக்கும் பயன்படுத்தினர். பி.சுசீலா பாடிய போர்க்காலப் பாடல்களில் 'கண்மணியே கண்ணுறங்கு காவியமே நீயுறங்கு' தாலாட்டுப்பாடல் ஒரு காலப்பதிவு எனலாம். இப்பாடல் இப்போது கேட்டாலும் ஒரு காலத்தை காண்பிக்கும் கண்ணாடியாகவே தெரியும். இந்திய இராணுவத்தினர் இலங்கையில் நிலைகொண்டிருந்த காலத்தையும் ஒரு சரணத்தில் கவிஞர் பதிவாக்குகிறார். ஒரு கொடூரமான போர்க்காலத்திலே அதில் சிக்கியிருக்கும் தாயொருத்தி வரலாற்றோடு வாழ்வையும் தாலாட்டிலே சொல்லிக் கொடுக்கிறாள். புதுவை இரத்தினதுரை எழுதி தேவேந்திரன் இசையில் 'களத்தில் கேட்கும் கானங்கள்' ஒலிநாடாவில் வெளியான பாடல். இப்பாடல் காலத்தில் ஒலிநாடாக்களே பாவனையில் இருந்தன. முதற்சரணம்: நாய்கள் குரைக்குது ராவினிலே - இந்தி ராணுவம் போகுது வீதியிலே. வாய்கள் திறக்கவும் கூடாதாம் - எங்கள் வாசலில் தென்றலும் வீசாதாம். தீயினில் தாயகம் வேகுது பார் - எட்டு திக்கிலும் ஓர்குரல் கேட்குது பார். பாய்ந்திடும் வேங்கைகள் வீரத்தையே - நான் பாலுடன் ஊட்டுவேன் வாயினிலே. என்று தொடர்கின்றன. 'கண்மணியே கண்ணுறங்கு காவியமே நீயுறங்கு, பொன்முடி சூடிய பூச்சரமே எந்தன் பூங்குயிலே நீயும் கண்ணுறங்கு' எனும் பல்லவி அக்காலத்தில் அதிக பிரபலம். புவனா இரத்தினசிங்கம் அவர்களின் குரலுக்கென யாருக்குமில்லா தனித்துவம் உண்டு. பார்வதி சிவபாதம் போலவே புவனா இரத்தினசிங்கம் அவர்களின் குரலையும் கேட்ட மாத்திரத்திலேயே பகுத்தறியலாம். 'தீயினில் எரியாத தீபங்களே' போன்ற பாடல்களைப் பாடியவர். இவர் பாடிய போர்க்கால தாலாட்டுப் பாடலொன்று. பஞ்சவர்ணத் தொட்டிலிலே பள்ளிகொள்ள வந்தவனே வஞ்சமற்ற உன்மனதில் வாழ்வதுதான் தெய்வமடா(2) ஆராரோ கண்ணே ஆரிரரோ ஆராரோ கண்ணே ஆரிரரோ. முல்லை செல்லக்குட்டி என்ற முல்லைச்செல்வன் போர்க்காலத்தில் மக்கள் மனதில் நின்றுநிலைக்கும் பாடல்களை வார்த்தவர். 'ஆதியாய் அநாதியாய் அவதரித்த செந்தமிழ்' போன்ற பாடல்களின் சொந்தக்காரர். இவர் இரண்டு போர்க்காலத் தாலாட்டுப் பாடல்களையும் எழுதியுள்ளார். இப்பாடலும் போரில் தமிழ்த்தாய் பட்ட கொடூர வலியை சொல்லிற்று. முதலாவது சரணத்தில் புவனா இரத்தினசிங்கம் இப்படிப் பாடுகிறார். தாயகத்தில் அமைதியின்றி தாய்மனசு தவிக்கையிலே பூமியிலே நீ பிறந்தாய் பொன்மகனே கண்மணியே! நீதியென்ற பாதையிலே வீறுநடை போட்டிடடா நீ பிறந்த தாய்நாட்டின் வேதனையை நீக்கிடடா. ஆராரோ கண்ணே ஆரிராரோ. மேற்படி பாடலில் இனப்பற்றும், படை பலப்படுத்தல் பற்றி இரண்டாம் சரணத்தில் குறிப்பிடும் கவிஞர் மூன்றாவது சரணத்தில் நற்பழக்கத்தையும் சொல்லி வாழ்வியல் தத்துவத்தையும் வைத்தார். நெஞ்சமெனும் கோவிலிலே நஞ்சை வைத்து வாழுகின்ற நீசர்களின் பாதையிலே நீ மயங்கிப் போகாதே மஞ்சமொடு மாளிகையும் மடிந்தால் வருவதில்லை மானமது காத்திடவே ஆரமுதே வாழ்ந்திடடா ஆராரோ கண்ணே ஆரிரரோ இப்பாடல்கள் இரண்டும் இடம்பெற்ற யாகராகங்கள் இசைநாடாவிற்கு இசையமைப்பாளர் கண்ணன் இசை வழங்கியிருந்தார். முல்லை செல்லக்குட்டி அவர்களின் இன்னுமொரு தாலாட்டுப் பாடலை இந்திராணி பாடியிருக்கிறார். இதோ அப்பாடல். கண்ணே கண்ணே கதைகேளு அன்னை பெற்றாள் பெரும்பேறு கரும்புலி பிறந்த இந்நாட்டிலே கதிரவனே நீ பிறந்தாய் எந்தன் வீட்டிலே. என்பதே பல்லவி. காலனவன் கலங்கிட கண்டவர்கள் நடுங்கிட கடற்படை கலமிங்கு சிதறுதடா என்று தொடரும் முதற்சரணமும், பெற்றமண்ணை அந்நியர்க்கு விற்றுவிட எண்ணுகின்ற அத்தரின் தயவை என்றும் நாடாதே. சத்தியத்தை காத்திடவே நித்தம் களம் ஆடிவரும் உத்தம புலியைவிட்டு ஓடாதே. என இரண்டாம் சரணத்தோடு மூன்று சரணங்கள் கொண்டமைந்த பாடலிது. அகநானூற்றிலும் தாலாட்டுப் பாடல்கள் உள. கொற்றங்கொற்றனாரின் தாலாட்டுப்பாடலை தமிழுலகில் அறியப்பட்ட முதற்தாலாட்டு பாடலென்பர். முன்னேயும் இருந்திருக்கலாம். பாடகி சுனந்தா தமிழ்ச்சினிமாவில் நன்கு அறியப்பட்டவர். 'நட்சத்திர ஜன்னலில் வானம் எட்டிப்பார்க்குதே' போன்ற பாடல்களைப் பாடியவர். போர்க்கால 'புயல் அடித்த தேசம்' இறுவட்டில் காந்தன் இசையில் சுனந்தா பாடிய பாடலும் போர்க்காலப் பாடல்களில் அதிகம் ஒலித்த பாடல். குஞ்சுரம்மா அவர்களும் இணைந்து குரல் கொடுத்திருக்கிறார். பாடலின் பெரும்பகுதி சுனந்தா குரலே. செந்தமிழ் தூளியிலே சிரிக்கும் வெண்ணிலவே செவ்வள்ளி கண்சிமிட்டி துள்ளி குதிக்கும் பொன்மலரே! நான் நினைத்த தமிழீழம் வேண்டும் உனக்கு நீ அதனை அரசாள வீரம் இருக்கு. அன்னை நினைத்ததை முடித்துக்காட்டடா. காந்தன் அவர்கள் இப்பாடலில் புல்லாங்குழலினை பயன்படுத்தி இருந்தார். வாணி ஜெயராம் அவர்கள் பிள்ளைக்காக போர்க்காலத்தில் பாடிய 'தலைவாரி பூச்சூடினேன்' பாடலை பாடியிருந்தார். அப்பாடல் தாலாட்டுப் பாடல் என வகைப்படுத்த முடியாதது. போர்க்காலம் இலக்கியம் தமிழ் இலக்கியப்பரப்பில் தனித்துவமானது. அதன் வகைகளை ஆய்வாக்குதலின் தொடரே இப்பதிவாம். நன்றி யோ-புரட்சி-
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.