Search the Community
Showing results for tags 'வர்ண ராமேஸ்வரன்'.
-
நெஞ்சை உருக்கும் மாவீரர் நாள் பாடலான 'மொழியாகி எங்கள் மூச்சாகி நாளை முடிசூடும் தமிழ்மீது உறுதி' என்ற பாடல் உட்பட தாயகப்பாடல்களைப் பாடிய பாடகர், சங்கீத, மிருதங்க கலாவித்தகரும் இசைக்கலாமணியுமான வர்ண ராமேஸ்வரன் அவர்கள் இன்று சனிக்கிழமை காலை கனடாவில் சாவடைந்துள்ளார். யாழ்ப்பாணம், அளவெட்டியைப் பிறப்பிடமாகக் கொண்டவர் வர்ண ராமேஸ்வரன் அவர்கள். ஆரம்பக் கல்வியை அளவெட்டி சீனன்கோட்டை ஞானோதய வித்தியாசாலையிலும், பின்னர் உயர் கல்வியை தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரியிலும் கற்றார். சிறுவயதிலேயே வாய்ப்பாட்டு, பண்ணிசை, வீணை, வயலின் எனும் கலைகளைத் தமது தந்தையாரான 'கலாபூஷணம்' 'சங்கீதரத்தினம்' வர்ணகுலசிங்கம் அவர்களைக் குருவாக் கொண்டு கற்கத் தொடங்கியவர். பின்னர் மிருதங்கம், பியானோ ஆகிய வாத்தியக் கருவிகளையும் முறையாகக் கற்றுக் தேறிய பெருமைக்குரியவர். வடஇலங்கை சங்கீத சபையினால் நடாத்தப்பட்ட வாய்பாட்டு, மிருதங்கம் ஆகியவற்றுக்கான பரீட்சைகளில் ஆசிரிய தரம் வரை கற்றுத்தேறி சங்கீத, மிருதங்க கலாவித்தகர் என்ற பட்டம் பெற்ற பின்னர், யாழ். பல்கலைக்கழக இராமநாதன் நுன்கலைக் கல்லூரியில் இசைக்கலாமணி பட்டம் பெற்று, அங்கு நான்கு ஆண்டுகளுக்குமேலாக இசை விரிவுரையாளராகவும் பணியாற்றிவர். இலங்கை வானொலி மற்றும் தொலைக்காட்சிச் சேவைகளின் நிகழ்ச்சிகளில் இசைக்கலைஞராக இருந்து பல சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு இசையமைப்பாளராகவும் பணியாற்றிருந்தார். இலங்கை இந்து கலாசார அமைச்சினால் இசை நடன ஆசிரியர்களுக்கு என நடத்தப்பட்ட பயிற்சிப் பட்டறைகளை தலைமை தாங்கி நடத்தியிருந்தார். சென்னைப் பல்கலைக்கழகத்தில் இசை மேற்படிப்பை மேற்கொண்ட வர்ண ராமேஸ்வரன், தமிழகத்தின் முதன்மைக் கலைஞர்களில் ஒருவரான திருவாரூர் பக்தவத்சலம் அவர்களிடம் மிருதங்கத்தையும் இசை மேசை ரி.எம். தியாகராஜன் , கல்கத்தா கிருஷ்ணமூர்த்தி, ரி.வி கோபாலகிருஷ்ணன் ஆகியோரிடம் இசை நுணுக்கங்களையும் கற்றுத்தேறி, தமிழ்நாட்டில் பல இசைக்கச்சோிகளையும் நடத்திப் பலரதும் பாராட்டைப் பெற்றவர். தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தம்மை முழுமையாக அர்ப்பணித்து பல போராட்டத்திற்கா விடுதலைப் பாடல்களைப் பாடியிருக்கின்றார். அதில் மாவீரர் நாளில் மட்டும் ஒலிப்பரப்பாகும் பாடலான மொழியாகி எங்கள் மூச்சாகி நாளை முடிசூடும் தமிழ்மீது உறுதி என்ற பாடல் வர்ண ராமேஸ்வரானால் பாடப்பட்டது. அத்துடன் பல மாவீரர்கள் நினைவுப் பாடல்கள், போராட்ட வெற்றிச் சமர் பாடல்கள், நல்லை முருகள் பாடல்கள் என அவரால் பாடப்பட்ட பாடல்கள் பல எம்முன்னே இருக்கின்றன. 1997 ஆம் ஆண்டு தமிழர்களின் போராட்ட குணத்தை வெளிப்படுத்தும் புறநானூறு பாடல்கள் பலவற்றை நவீன இசையில் இசையமைத்து (இவருடன் வேறு நபர்களையும் இணைந்து) இசைநாடகமாக தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரகாரன் அவர்கள் முன் அரங்கேற்றி பாராட்டைப் பெற்றிருந்தார். இதில் அன்று இம்ரான் - பாண்டியன் படையணியின் போராளிகள் குறித்த இசை நாடகத்தில் பாடல்களைப் பாடி நடித்திருந்தார்கள். கனடாவுக்குப் ரொறன்ரோவுக்குப் புலம் பெயர்ந்த வர்ண ராமேஸ்வரன் அவர்கள் மிருதங்க, நடன அரங்கேற்றங்களுக்கு முன்னணிப் பாடகராக விளங்கினார். வர்ணம் இசைக் கல்லூரியை அவர் அங்கு உருவாக்கி பல நகரங்களில் இசை வகுப்புக்களை நடாத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக வர்ணம் ஒன்லைன் இணைய இசைக்கல்லூரியை உருவாக்கி அதனை நிர்வகித்து வந்திருந்தார். அத்துடன் கனடாவில் தாயப் போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் தாய் அமைப்புடன் இணைந்து அன்றைய காலகட்டத்தில் நடத்தப்பட்ட பல போராட்டங்களுக்கான பல பாடல்களை இசையமைத்துப் பாடியுள்ளார் என்பது இங்க நினைவூட்டத்தக்கது. அவர் வாழ்ந்த காலத்தில் தாயத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புடனும் புலம் பெயர் நாட்டில் தாயகம் நோக்கிக் கனடாவில் செயற்பட்ட தாய் அமைப்புடனும் இறுவரை நின்று போராட்டத்தை வலுவாக்கும் இசைத்துறை ஊடான தனது கடமைகளை முடிந்தளவு செய்து தனது இசைப் பணிக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். அந்தவகையில் எம்முன்னே வாழ்ந்த அந்த தேசப் பற்றாளனை நாமும் ஒரு கணம் நெஞ்சில் நிறுத்தி வணக்கம் செலுத்துவதே அவருக்கு நாம் செய்யும் இறுதி மரியாதையாகும். புதுவை இரத்தினதுரை அவர்களின் வரிகளில் வர்ண ராமேஸ்வரன் அவர்கள் பாடிய மாவீரர் நாள் பாடல் வரிகள் கீழே பார்வையிடலாம் மொழியாகி எங்கள் மூச்சாகி நாளை முடிசூடும் தமிழ்மீது உறுதி! வழிகாட்டி எம்மை உருவாக்கும் தலைவன் வரலாறு மீதிலும் உறுதி! விழிமூடி இங்கே துயில்கின்ற வேங்கை வீரர்கள் மீதிலும் உறுதி! இழிவாக வாழோம்! தமிழீழப்போரில் இனிமேலும் ஓயோம் உறுதி! தாயகக்கனவுடன் சாவினைத் தழுவிய சந்தனப்பேழைகளே! தாயகக்கனவுடன் சாவினைத் தழுவிய சந்தனப்பேழைகளே! இங்குகூவிடும் எங்களின் குரல்மொழி கேட்குதா? குழியினுள் வாழ்பவரே! இங்குகூவிடும் எங்களின் குரல்மொழி கேட்குதா? குழியினுள் வாழ்பவரே! தாயகக்கனவுடன் சாவினைத் தழுவிய சந்தனப்பேழைகளே! உங்களைப் பெற்றவர் உங்களின் தோழிகள் உறவினர் வந்துள்ளோம்! உங்களைப் பெற்றவர் உங்களின் தோழிகள் உறவினர் வந்துள்ளோம்! அன்று செங்களம் மீதிலே உங்களோடாடிய தோழர்கள் வந்துள்ளோம்! அன்று செங்களம் மீதிலே உங்களோடாடிய தோழர்கள் வந்துள்ளோம்! எங்கே! எங்கே! ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள்! எங்கே! எங்கே! ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள்! ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள்! ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள்! தாயகக்கனவுடன் சாவினைத் தழுவிய சந்தனப்பேழைகளே வல்லமை தாருமென்றுங்களின் வாசலில் வந்துமே வணங்குகின்றோம்! வல்லமை தாருமென்றுங்களின் வாசலில் வந்துமே வணங்குகின்றோம்! உங்கள் கல்லறை மீதிலும் கைகளை வைத்தொரு சத்தியம் செய்கின்றோம்! உங்கள் கல்லறை மீதிலும் கைகளை வைத்தொரு சத்தியம் செய்கின்றோம்! வல்லமை தாருமென்றுங்களின் வாசலில் வந்துமே வணங்குகின்றோம்! சாவரும்போதிலும் தணலிடைவேகிலும் சந்ததி தூங்காது! சாவரும்போதிலும் தணலிடைவேகிலும் சந்ததி தூங்காது! எங்கள் தாயகம் வரும்வரை தாவிடும்புலிகளின் தாகங்கள் தீராது! எங்கள் தாயகம் வரும்வரை தாவிடும்புலிகளின் தாகங்கள் தீராது! எங்கே எங்கே ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள்! எங்கே எங்கே ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள்! ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள்! ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள்! தாயகக்கனவுடன் சாவினைத் தழுவிய சந்தனப்பேழைகளே! உயிர்விடும் வேளையில் உங்களின்வாயது உரைத்தது தமிழீழம்! உயிர்விடும் வேளையில் உங்களின்வாயது உரைத்தது தமிழீழம்! அதை நிரைநிரையாகவே நின்றினி விரைவினில் நிச்சயம் எடுத்தாள்வோம்! அதை நிரைநிரையாகவே நின்றினி விரைவினில் நிச்சயம் எடுத்தாள்வோம்! உயிர்விடும் வேளையில் உங்களின்வாயது உரைத்தது தமிழீழம்! தலைவனின் பாதையில் தமிழினம் உயிர்பெறும் தனியரசென்றிடுவோம்! தலைவனின் பாதையில் தமிழினம் உயிர்பெறும் தனியரசென்றிடுவோம்! எந்தநிலைவரும் போதிலும் நிமிருவோம் உங்களின் நினைவுடன் வென்றிடுவோம்! எந்தநிலைவரும் போதிலும் நிமிருவோம் உங்களின் நினைவுடன் வென்றிடுவோம்! எங்கே எங்கே ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள்! எங்கே எங்கே ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள்! ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள்! ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள்! தாயகக்கனவுடன் சாவினைத் தழுவிய சந்தனப்பேழைகளே! இங்குகூவிடும் எங்களின் குரல்மொழி கேட்குதா? குழியினுள் வாழ்பவரே! தாயகக்கனவுடன் சாவினைத் தழுவிய சந்தனப்பேழைகளே! https://eelam.tv/v/cxeYPT https://www.pathivu.com/2021/09/varnarameswaran.html?m=1