Search the Community
Showing results for tags 'வான்கலம்'.
-
"தோற்றிடேல், மீறித் தோற்றிடினும் வரலாறின்றி மரியேல்!" -நன்னிச் சோழன் எழுதருகை(warning): இங்குள்ள செய்திகள் யார் மனதையும் புண்படுத்துவதற்காக எழுதப்படவில்லை. இவை தமிழினத்தின் வரலாற்றை ஆவணப்படுத்தும் முகமாகவே எழுதப்பட்டுள்ளன என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்…! இவ் ஆவணத் திரட்டில், மார்ச் 26, 2007 அன்று தமிழீழ வான்படையான "விடுதலைப்புலிகளின் வான்புலிகள்" - இன் முதலாவது அலுவல்சார் வான்தாக்குதல் பறப்பிற்கு முன்னர் அவர்கள் வானில் பறந்த போதும் குறித்த திகதிக்குப் பின்னர் அலுவல்சாரல்லாமல் பறந்த போதும் மனிதக் கண்கள் மற்றும் கதுவீகளில் (RADAR) தென்பட்ட மற்றும் கிடைத்த படிமங்கள் மூலம் என்னால் அறியப்பட்ட பறப்புகள் தொடர்பான தகவலைத் திரட்டி காலக்கோட்டின் அடிப்படையில் பதிவிட்டுள்ளேன். முதன் முதலாக சிறிலங்கா வான்படையின் அனுமதியின்றி சமர்ப் பரப்பில் அடையாளம் தெரியாத கன்னைக்குச் சொந்தமான ஓர் மரும வானூர்தி பறந்தது பதிவாகியிருப்பது 1994ம் ஆண்டிலே ஆகும். பலாலி கூட்டுப்படைத்தளத்திற்கு மேலாக வடக்கு நோக்கி சிறிலங்கா படைத்துறையின் அனுமதியின்றி ஒரு மரும வானூர்தி பறந்து சென்றதாகவும் அந்த வானூர்தியை பலாலி வான்கட்டுப்பாட்டு அறையிலிருந்து சிங்கள அதிகாரிகள் தொடர்புகொள்வதற்காக குறிகைகள் (ஸிக்னல்) அனுப்பி முயற்சித்த போது வானூர்தியிலிருந்து பகர குறிகைகள் எதுவும் அனுப்பாததால் அவ் வானூர்தி குறித்து உசாவல் செய்யுமாறு வான்படை அதிகாரிகள் உத்தரவிட்டிருந்ததாக 'திவயின' என்ற சிங்கள இனவாத நாளேடு செய்தி வெளியிட்டிருந்ததாக 'உதயன்' நாளேடு 19/09/1994 அன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்த உசாவலின் முடிவுகள் எதுவும் வெளியிடப்பட்டதாக என்னால் அறியமுடியவில்லை. ஈழத்தீவை விட்டு 'இந்திய அமைதி காக்கும் படை' என்ற பெயரில் வந்த இந்தியப் படையினர் வெளியேறிய பின்னர், ஈழப்போர் வரலாற்றில், சிங்கள அரசின் அனுமதியின்றி சிங்கள வான்படை தவிர்ந்த வானூர்தி ஒன்று சமர் உக்கிரமாக நடந்துகொண்டிருந்த பரப்பின் மேல் பறந்து சென்ற முதன் நிகழ்வு இதுவேயாகும். இது இவ்வாறு இருக்க, இச்செய்தி வெளியாகி சில மாதங்களுக்குப் பின்னர், அதாவது 1994 நவம்பர் 21ம் திகதி, உதயன் நாளேடு பூரிப்புச் செய்தியொன்றை தமிழீழ மக்களுக்கு வெளியிட்டது. வான்புலிகள் என்ற படைத்துறைக் கிளையை தொடங்கப் புலிகள் ஆயத்தமாகிவிட்டனர் என்றும் சுமார் 20 வானோடிகள் மேற்கத்திய நாடுகளில் அடிபாட்டு வானூர்திகளை ஓட்டப் பயிற்சி எடுத்துவிட்டதோடு புலிகள் ஐந்து வானூர்திகளை தருவித்துள்ளனர் அல்லது அது அவர்களுக்கு கிடைக்கப்பெறும் சூழ்நிலை எழுந்துள்ளது என்று சிங்களச் சார்பு நாளேடான 'சன்டே ஐலண்ட்' செய்தி வெளியிட்டிருக்கிறது என்பதுவே அதுவாகும். இதுவே முதன் முதலாக பெரும்பாலான தமிழீழ மக்கள் "வான்புலிகள்" என்ற பிடாரச்சொல்லைக் கேள்விப்பட்ட தருணம். இதிலிருந்து நான் ஊகிப்பது என்னவெனில், "வான்புலிகள்" என்ற கிளையானது புலிப் போராளிகள் சிலரது நடுவணில் தவிபு ஆல் அலுவல்சாராக நவம்பர் மாத மட்டில் அறிவிக்கப்பட்டிருக்கலாம் ஆனால் பொதுமக்கள் நடுவணிலன்று, என்பதாகும். அடுத்தடுத்த இரு மறுமொழிப்பெட்டிகளுக்கும் புலிகளின் அலுவல்சாரல்லாத வான்பறப்புகள் தொடர்பான காலக்கோட்டினைக் காணலாம். ஆக்கம் & வெளியீடு நன்னிச் சோழன் *****
- 2 replies
-
- வான்புலிகள்
- வானூர்திகள்
- (and 9 more)