Search the Community
Showing results for tags 'ltte accessory'.
-
"தோற்றிடேல், மீறித் தோற்றிடினும் வரலாறின்றி மரியேல்!" -நன்னிச் சோழன் எழுதருகை(warning): இங்குள்ள செய்திகள் யார் மனதையும் புண்படுத்துவதற்காக எழுதப்படவில்லை. இவை தமிழினத்தின் வரலாற்றை ஆவணப்படுத்தும் முகமாகவே எழுதப்பட்டுள்ளன என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்…! எல்லா(hello)... வணக்கம் நண்பர்களே! இன்று, நாம் பார்க்கப்போவது புலிகளால் அணியப்பட்ட படைத்துறை அணியங்கள் பற்றியே. இம் மடலத்தில் எவ்வெவ் அணியங்கள் பற்றி எழுதப் போகிறேன் என்றால், குப்பி - (cayanaide) capsule தகடு - dogs tag சண்டைச் சப்பாத்து - Combat shoe அடையாள அட்டைகள் கைமேசு - gloves கைப்பட்டை & புயத்துணி - Handband & Arm rag சுடுகல ஒட்டுப்படம் - Gun sticker சுடுகலத்தோல் - Gunskin தலை வலை - Head nets சறம் - Lungi வெற்றிக்கொடி - Victory Flag நீர்க் கலன் - water can தலைமயிர் பாணி - Hair style தலைக்கவர் - Headcover காதுப்பஞ்சு - Earcotton முதலில் குப்பியில் இருந்து தொடங்குவோம். குப்பி - cyanide capsule 'விளக்கப்படப் புரவு: நன்னிச் சோழன்' 'போராளியின் நெஞ்சினில் குப்பி & தகடு' குப்பியானது ஆடியால்(Glass) ஆனது ஆகும். இதை கறுப்பு கறுப்பு அல்லது சிவப்பு நிறக் கயிற்றில் கட்டி கழுத்தில் தொங்கவிட்டிருப்பர். இதனுள் 'சயனைட்' என்னும் வேதியல் நஞ்சு (மேற்கண்ட படத்தில் உள்ள குப்பியினுட் வெள்ளை நிறத்தில் உள்ள பொடி) இருக்கும். இதைக் கடித்த 5 நொடிகளுக்குள் மரணம் வந்துவிடும். இதைச் சாதாரண புலிவீரர்கள் அணிந்திருப்பர். கரும்புலிகள், வேவுப்புலிகள் மற்றும் புலிகளின் புலனாய்வாளர்கள் போன்றவர்கள் 'இரட்டை குப்பிகள்' அணிந்திருப்பர். இதைக் கடித்த அடுத்த நொடியே இவர்களிற்கு சாவு. இது புலிவீரர்களை சிங்கள, இந்தியப்(இந்திய அமைதிப் படைக் காலம்) படைகளின் பிடிபாட்டில் இருந்து காப்பாற்றிக் கொள்ள உதவியதோடு, சமர்க்களத்தில் பிடிபாடுகள் மற்றும் அதனால் ஏற்படும் சித்திரவதைகள் பற்றிய கவலையினை இல்லாது செய்தது. → இந்த குப்பியானது ஒரு புலிவீரனுக்கு பெருமை மிகுந்த அடையாளமாகவும், த.வி.பு இயக்கத்தின் அடையாளமாகவும் திகழ்ந்தது. 'இது இந்திய அமைதிப் படைக் காலத்தில் எடுக்கப்பட்ட படம். இப்படத்தில் உள்ள வீரர்களின் கழுத்தில் இரட்டைக் குப்பி தொங்குவதைக் காண்க.' | படிமப்புரவு: India Content Photos, Pictures, Photograph Online for Website வாய்க்குப்பி: இதன் பயிற்சி தனிவிதம். தண்டனை பெறாமல் பயிற்சி ௭டுப்பது மிகமிகக் கடினம். இதில் வேறு விதமானதும் உண்டு. அதற்கு இரும்பு வளையம் இருக்காது இதைவிட சிறியது, பரிசோதனைக்குழாய் மதிரி 5 அம்பியஸ் பியுஸ் அளவு வரும். ஒரு பக்கம் லாத்திரி மெளுகால் அடைக்கப்படும். 24 மணி நேரமும் பதுகாப்பற்ற பரப்புகளில் இருக்கும் போது வாய்க்குள் கன்னத்துக்கும் பல்லுக்குமிடையில் இருக்கவேண்டும். பிடிபடும் போது கொடுப்புப் பற்களால் கடிக்க 4 நொடிகளில் கதைமுடியும். முறையாக கடிக்கத்தவறின் பிடிபட நேரிடும். தகடு - Dog Tag இந்தத் தகடானது உலக படைத்துறைகளில் உள்ள ஒவ்வொரு வீரனும் அணிவது போன்று புலி இயக்கத்தின் ஒவ்வொரு வீரர்களும் (மக்கள்படை அணியுமா என்பது பற்றி எனக்குத் தெரியாது) அணியும் ஓர் படைத்துறை அணிகலனாகும். இதைக் கறுப்பு நிறக் கயிற்றில் கோர்த்துத் தொங்கவும் கட்டியிருக்கவும் செய்வர். இதில் உள்ள எண்ணானது ஒவ்வொரு புலி உறுப்பினரதும் எண்ணாகும். இது அந்த உறுப்பினர் எத்தனையாவது ஆளாக இயக்கத்தில் சேர்ந்தார் என்பதைக் குறிக்கும். சிறிய எண்ணென்றால் மூத்த உறுப்பினர்; பெரிய எண் என்றால் புதிய உறுப்பினர் என்பது பொருளாகும். முதலாவது எண்ணான '01' ஆனது அவ்வியக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களுக்கு வழங்கப்பட்ட எண்ணாகும். இந்த எண்ணின் அடிப்படையில் அந்த உறுப்பினரின் முழுத் தகவல்களும் அவ்வியக்க குறிப்பேடுகளில் ஆவணப்படுத்தப்பட்டு தலைமைச்செயலகத்தில் வைக்கப்பட்டிருக்கும். அதை உரிய அனுமதியிலாமல் எவராலும் பார்க்க முடியாது.. வீரச்சாவெய்திய ஓர் உறுப்பினரின் எண் மற்றோராளிற்கு வழங்கப்படாது. இத்தகடுகளானவை 1991, 1992 காலத்தில் இயக்கத்திற்குள் நடைமுறைக்கு வந்தது. அக்கால கட்டத்தில் இது ஒவ்வொரு மாவட்ட படைத்துறைப் பிரிவுக்குமென கொடுக்கப்பட்டிருந்தது. பின்னாளில் இது ஒவ்வொரு அடிபாட்டு உருவாக்கத்திற்குமென தனித்தனியாகப் பிரிக்கப்பட்டது. 1996 இற்குப் பின் புலிகளின் நிலக் கட்டுப்பாடு பெருமளவில் சுருங்கியதால் தகடுகள் யாவும் வட்டங்களை அடிப்படையாகக் கொண்டு வழங்கப்பட்டன. அதன் பின்னர் 2002 இற்குப் பின்னர் கட்டளைப் பணியகங்களை அடிப்படையாகக் கொண்டு சண்டையில் நிற்கும் போராளிகளுக்கும் துறைகளை அடிப்படையாகக் கொண்டு துறைசார் போராளிகளுக்கும் வழங்கப்பட்டன. மாவட்ட அடிப்படையில்(1991 - 1995): அ - மட்டு-அம்பாறை இ - வன்னி ஈ - மணலாறு உ - யாழ்ப்பாணம் (& அங்கு இயங்கிய துறைகளுக்கும்) ஊ - மன்னார் தலைமைச் செயலகம் - 0 (பின்னாளில் (எப்போதிலிருந்து என்று தெரியவில்லை) 'த' என்னும் குறியீடு வழங்கப்பட்டது) இந்த '0'-ஐ 'O' என்றும் அழைப்பர் - 1991 காலப்பகுதியில் இக்குறியீடுகள் எதுவும் நிரந்தரமானவை அன்று. வித்துடல்களில் இருந்து எதிரி கழற்றி எடுத்து ஆராய்ந்து கண்டுபிடித்துவிடுவான் என்பதால் இவை காலத்திற்கு காலம் மாற்றப்படும், பட்டது. பின்னாளைய படையணிகள், பிரிவுகள், துறைகள் மற்றும் ஏனையவற்றிற்கு வழங்கப்பட்ட குறியீடுகள்: இம்ரான்-பாண்டியன்: க படையப் புலனாய்வு: ஃ 'இரு வேறு புலிவீரர்களின் தகடுகள்' இது ஓர் புலி உறுப்பினரின் உடலில் கழுத்து, மணிக்கட்டு, இடுப்பு என மூவிடங்களில் கட்டப்பட்டிருக்கும். இதனால் ஒன்று தொலைந்தாலும் மற்றொன்றினை வைத்து அவர் இன்னாரென்று அடையாளப்படுத்த முடியும். இம்மூன்றினுள் ஒப்பீட்டளவில் மெல்லியதாக இருக்கும் தகடே மணிக்கட்டுத் தகடு ஆகும். இதில் மட்டும் த.வி.பு. என்று எழுதப்பட்டிருக்காது. பெரும்பாலான கழுத்துத் தகடுகளில் குருதி வகை குறிப்பிடப்பட்டிருக்கும். ஒரு புலிவீரனின் உடலில் இருக்கும் இம்மூன்றிலும் ஒரே உறுப்பினர் எண்கள் & குறியீடுகளே குறிப்பிடப்பட்டிருக்கும். இம்மூன்றையும் அனைத்து தவிபு உறுப்பினர்களும் அணிந்திருப்பர் (மக்கள் படை பற்றி நானறியேன்). 'கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியிலிருந்து கண்டெடுக்கப்பட்ட குருதி வகை பொறிக்கப்பட்ட கழுத்துத் தகடு.' ஒருவேளை வித்துடல் எதிரியிடம் சிக்குண்டால், எதிரியானவன் இந்தக் குப்பியையும் தகட்டையும் கழட்டியெடுத்து தனது ஆழஊடுருவும் அணி மற்றும் புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிக்குள் ஊடுருவும் சிங்கள உளவாளிகள் ஆகியோரிற்கு கொடுத்தனுப்புவதும் 2000 ஆம் ஆண்டிற்கு பிறகு அரங்கேறிய நிகழ்வுகளாகும். (2006 ஆம் ஆண்டு இரத்தினபுரம் இரும்புப் பாலத்திற்கு அருகில் வைத்து இதை அணிந்து வந்த ஒரு சிங்கள உளவாளியைப் பிடிக்க முற்பட்ட போது, அருகில் இருந்த காட்டிற்குள் அவன் செருப்புக் கூட இல்லாமல் தப்பி ஓடிய நிகழ்வும் நடந்தது. நிகழ்வு நடந்த பின்னர் இவ்விடத்திற்கு நன்னிச்சோழன் ஆகிய நானும் சென்றிருந்தேன்.) 'லாமினேட் தகடுகள், வெற்றுக் குப்பிகள், இடுப்பு மற்றும் மணிக்கட்டுத் தகடுகள் ஆகியவை உள்ளதைக் காண்க' மேற்கண்ட படிமத்தில் 'Lamination' செய்யப்பட்ட காகிதம் உள்ளதல்லவா, அது விடுதலைப் புலிகளால் நான்காம் ஈழப்போரில் மட்டுமே அணியப்பட்ட ஓர் அணியமாகும். இதை கறுப்புக் கயிற்றில் கட்டி கழுத்தில் வெளியே தெரியும்படியாக தொங்கவிட்டிருப்பர். இதில் "த.வி.பு" என்ற சுருக்கமும் படையணிக் குறியீடும் புலி உறுப்பினர் எண்ணும் பொறிக்கப்பட்டிருக்கும், குருதி வகை குறிப்பிடப்பட்டிருக்காது. இவை 2008 ஆகக்கடைசியில் பாவனைக்கு வந்துவிட்டன. இவற்றை ஆகக்குறைந்தது காயக்காரரைக் காவும் பணியில் ஈடுபட்டிருந்த போராளிகள் தொங்கவிட்டிருந்தனர் என்பதை புலிகளின் நிகழ்படம் ஒன்றின் மூலம் அறியக்கூடியவாறு உள்ளது. அடையாள அட்டை: அடையாள அட்டையின் முன்புறத்தில் உரியவரின் வரிப்புலிப் படத்தின் மேல் புலிகளின் முத்திரையுடன் அடையாள அட்டையின் பாவனைக் கால அளவும் குறிப்பிடப்பட்டிருக்கும். அதன் பின்புறத்தில் (கிடமட்டமாக) அப்புலிவீரனின் இயக்கப்பெயர், பிறந்த திகதி, உயரம், குருதி வகை, உறுப்பினர் கையொப்பம், இன்னொருவரின் ஒப்பந்தம் மற்றும் அடையாள அட்டை எண் என்பன அடங்கியிருக்கும். விடுதலைப்புலிகளின் நிரந்தரப்படை: முன்பக்கம்:- 'மேற்கண்ட படத்தில் இருப்பவர் கடற்புலிகளின் துணைக் கட்டளையாளர் லெப் கேணல் விநாயகம் ஆவார்' பின்பக்கம்:- விடுதலைப்புலிகளின் மக்கள்படை: இவை உள்ளூர் (நடைமுறை அரசின் கட்டுப்பாட்டு ஆட்புலங்கள்) பாவனைக்கு மட்டுமே. ''முன்பக்கம்" கைமேசு - gloves இதை இவர்கள் சமர்க்களங்களில் அணியார். மாறாக பகைப்புலத்தில் நடைபெறும் சிறப்பு நடவடிக்கைகளின்போது மட்டுமே அணிவர். அடிபாட்டுச் சப்பாத்து - Combat shoe இவர்களின் சண்டைச் சப்பாத்து ஏனைய சப்பாத்துகளைப் போல இருந்தாலும் இதனில் ஒரு வேறுபாடு உண்டு. அதாவது இவர்களின் சப்பாத்துகளில் கால் உள்ளுடுத்தும் வாயின் கீழ்ப்பகுதியிலிருந்து மேனோக்கி வரித்துணி தைக்கப்பட்டிருக்கும். (கீழே படத்தில் காண்க). இது எப்பொழுதும் புலிவீரர்களால் அணிந்திருக்கப்படவில்லை. சமர்க்களங்களில் இதை அவர்கள் அணியார். ஆனால் குறிப்பாக அணிநடைகளின் போது பங்கேற்கும் அனைத்துப் புலிவீரர்களும் இதை அணிவர். அதே சமயம் பயிற்சிகளின் போதும் இதை சிலர் அணிவதுண்டு. இச்சப்பாத்தின் பக்கவாட்டு உருமறைப்பு தரைப்புலிகளுக்கு (தரைச் சிறுத்தைப்படை & காட்டுச் சிறுத்தைப்படை உம் கூட) பச்சை வரிப்புலியிலும், கடற்புலிகளில் தரைப்பணிச் சீருடைக்கு மட்டும் நீல வரிப்புலியிலும் இருந்தது. கடற்கலவர், கரும்புலிகள் மற்றும் வான்புலிகள் ஆகியோருக்கு எந்தவொரு வரித்துணியும் தைக்கப்படாமல் வெறுமனே கறுப்பு நிறத்தில் இருந்தது. தரைப்புலிகள்: கடற்புலிகள் & சிறுத்தைப்படை: கீழுள்ள படிமத்தில் வலது பக்கத்தில் கடற்புலி தரைப்பணிச் சீருடை அணிந்தபடி நிற்கும் பெண் போராளியின் சப்பாத்தை நோக்குக. '10-10-2002' கைப்பட்டை & புயத்துணி - Handband & Arm rag புலிவீரர்கள் சமர்க்களங்களில், புயத்தில் ஓர் வெள்ளைத் துணியும் மணிக்கட்டிலும் ஓர் வெள்ளை நிற பட்டையும் கட்டியிருப்பார்கள். இது இவர்களை தற்படை வேட்டில்(friendly fire) இருந்து விலக்குவதோடு சமர்க்களத்தில் மாறுவேடத்தில் கலக்கும் எதிரிகளிடம் இருந்து வேறுபடுத்த உதவியது. 'சமர்களத்தில் வெள்ளை நிற கைப்பட்டை கட்டி நகரகழியினுள் பதுங்கியிருக்கும் பெண் போராளி ' இதே போன்ற கைப்பட்டைகளை சிங்களப் படைகளும் அணிவார்கள்.. அவை வண்ணம் வண்ணமாக இருக்கும். ஆனால் அவ்வண்ணங்கள் குறிப்பிடும் செய்தி பற்றி நானறியேன். 'பிரிகேடியர் தீபனுடன் நிற்கும் வெள்ளை நிற புயத்துணி கட்டிய ஆண் போராளிகள். அருகில் தரித்து நிற்பது ஒரு நிலத் தோரணம்(Land Rover) ஆகும்.' சுடுகல ஒட்டுப்படம் - Gun sticker 'உந்துகணை(Rocket) செலுத்தியின் குழலில் ஒட்டுப்படம் ஒட்டப்பட்டுள்ளதை நோக்குக' 1990 ஆம் ஆண்டு வரை புலிகள் இவ்வாறான ஒட்டுப்படங்களைப் பயன்படுத்தியிருந்தனர். இதை ஏன் பயன்படுத்தினர் என்று நான் அறியேன். ஆனால் நான் நினைக்கிறேன், இதன் மூலம் பிற இயக்கங்களில் இருந்து தம்மியக்கத்தின் ஆய்தங்களை வேறுபடுத்தியோ அல்லது தம்மியக்கப் போராளிகளை வேறுபடுத்தியோ காட்டியிருக்கலாம். இது என்னுடைய துணிபு மட்டுமே! சுடுகலத்தோல் - Gunskin புலிகள் தங்களின் சுடுகலங்களிற்கு சுடுகலத்தோல் பூண்டிருந்தார்கள். ஆனால் இத்தோல்கள் சுடுகலனிற்கு முற்றுமுழுதாக பூணப்படவில்லை. மாறாக ஏ.கே. வகை துமுக்கிகளின்(Rifle) பிடங்கு மற்றும் உந்துகணை செலுத்தியின் சுடுகுழல்(barrel) ஆகியவற்றிற்கு மட்டுமே பூணப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கதாகும். இவ்வாறு பூணப்பட்ட தோல்கள் நெடு வரியும் கிடைமட்ட வரியுமாக இருந்தது. →பிலிறுந்தம் - சொல் வழங்கியவர் தமிழ்த்திரு இராமகி அவர்கள் ஆவார். 'ஆர்.பி.யீ சூட்டாளர் ஒருவரின் தோளில் உள்ள உந்துகணை பிலிற்றுந்திய கைக்குண்டு செலுத்தியின் சுடுகுழலிற்கு சுடுகலத்தோல் பூணப்பட்டுள்ளதைக் காணவும். முதுகில் வெற்றிக்கொடியையும் சுருட்டி வைத்துள்ளார்.' 'ஆர்.பி.யீ உதவியாளர் ஒருவரின் வகை-56இன் பிடங்கிற்கு(butt) சுடுகலத்தோல் பூணப்பட்டுள்ளதைக் காணவும்' 'ஆர்.பி.யீ உதவியாளர் ஒருவரின் வகை-56 இன் கைப்பற்றில்(hand grip) சுடுகலத்தோல் பூணப்பட்டுள்ளதைக் காணவும்' இவ்வாறு பூணப்பட்டுள்ள சுடுகலத்தோலானது வரி உருமறைப்பு(camouflage) கொண்ட துணியால் செய்யப்பட்டது ஆகும். கவனி: இவருடைய செலுத்தியின் வெந்(Breech)-இல் ஒரு தோல்(skin) போடப்பட்டுள்ளது. புலிகளின் படைக்கலங்களின் அணிய விரிவுகளை கண்டீர்களா? அற்புதம்! தலை வலை (Head nets): இதனை இவர்கள் பூச்சிகள் மற்றும் நச்சு உயிரிங்களிடம் இருந்து தம்மை காத்துக்கொள்வதற்காக அணிந்திருக்கிறார்கள். 'இவர்கள் வைத்திருக்கும் படைக்கலம்(munition) வகை- 54 சேர்ந்த 12.7 மி.மீ இயந்திரச் சுடுகலன் ஆகும்' சறம் - Lungi இது இவர்களின் இருபால் தரைச் சமர்ப் போராளிகளால் மட்டும் உடலினில் யாத்தப்பட்டது. சிலர் இதனை சள்ளையில் கட்டியிருந்தனர்; சிலர் இதனை துப்பட்டி போல கழுத்தில் சுத்தியிருந்தனர்;சிலர் மாலை போன்று அணிந்திருந்தனர். இஃது, சமரில் காயமுற்றால் கிழித்துக் கட்டவும், கட்டிக் கொண்டு குளிக்கவும், இன்ன பிற தேவைகளிற்கும் பயன்பட்டது. இதன் நிறம் பெரும்பாலும் நீல நிறத்திலே காணப்பட்டது. பச்சை நிறம் உடைய சறத்தை யாத்தோரும் சமர்க் களத்தில் தென்பட்டனர். 'இப்படத்தில் உள்ள 3 பெண் பொராளிகளில் முன்னவரின் சள்ளையிலும் இரண்டாமவரின் கழுத்திலும் சறம் இருப்பதை நோக்குக' வெற்றிக்கொடி - Victory Flag இது புலிக் கொடி அன்று. ஈழத் தமிழரின் தேசிய நிறங்களான சிவப்பும் மஞ்சளும் கொண்ட கொடி. இதை முன்னேறித் தாக்கல் சமரின் போது போராளிகளில் ஒரு சிலர் கொண்டு செல்வர். 'இப் புலிவீரனின் நெஞ்சில் இருப்பதே மேற்கண்ட கொடியாகும்' நீர்க் கலன் - Watercan கீழக்கண்ட வடிவிலான கலன்கள் புலிகளிடம் இருந்த நீர்க் கலன்கள் ஆகும். ஆனால் இதை விட சோடா புட்டில்களையும் நீர்கொள் கலன்களாக பயன்படுத்தினர். 'மட்டு-அம்பாறையினைச் சேர்ந்த படையணியினர்' தலைமயிர் பாணி - Hair style பெண்களின் :- 'இப்படிமத்தில் தெரியும் பிடரிகளை நோக்குக. அதில் உள்ள தலைமயிர் பாணிதான் பெண்புலிகளின் தலை மயிர் பாணியாகும். இதில் உள்ள 6 பெண் போராளிகளும் மாலதி படையணி படையணிச் சீருடை அணிந்துள்ளனர். இது தவிர இயக்கத்தில் சேர்ந்த உடன், பெண்களின் தலைமயிர் கட்டையாக வெட்டப்படும். வளர்ந்தவுடன் இரட்டை பின்னலிட்டு உச்சந்தலையில் மேற்கண்டது போல கட்டுவர். ஆண்களின்:- இயக்கத்தில் சேர்ந்து பயிற்சி எடுக்கும்போது மொட்டை அடித்துவிடுவர். பிறகு பயிற்சி முடிந்தவுடன், களத்தில் நிற்கும் போது, கட்டையாக வெட்டியிருப்பர். விதப்பாக சொல்லவேண்டுமெனில் 'police cut' என்று சென்னையில் வழங்கும் முடிவெட்டும் பாணிதான் இவர்களுடையது(அதற்காக இவர்களிடம் இருந்து எடுக்கப்பட்டது அன்று) ஆனால் கன்னமீசையை மழித்திருப்பர். ஊடுருவிச் செல்லும் புலிகள் அணியும் 'மழைக்கவசம்' 'ஊடுருவி உள்ள புலிவீரர்கள் மழைக்கவசம் அணிந்துள்ளதை நோக்குக' தலைக்கவர் - Headcover இது மேற்குலகின் 'Helmet covering cloth' போன்றது. வரிப்புலி உருமறைப்பாலான தலையில் அணியும் ஒருவிதமான துணியாகும். இதன் தோற்றமானது இது இசுரேலியர்களின் தலைச்சீரா துணி போன்றல்லாமால் கொஞ்சம் நீளமானது. ஒரு நீளமான உருள்கலன் போன்ற வடிவிலான இதன் ஒரு முனையில் இருக்கும் திறவல் மூலம் தலையில் போடப்படுகிறது. பின்பக்கம் மடித்து விடப்படும் (படிமத்தில் காட்டப்பட்டுள்ளது போன்று) இது சோதியா படையணியினரால் மட்டுமே அணியப்பட்டதாகும். 'சோதியா படையணியினர் தலைக்கவர் அணிந்துள்ளதை நோக்குக' காதுப்பஞ்சு இது உந்துகணை சூட்டாளரும் அவரது துணைவனும் உந்துகணை வேட்டொலி தம் காதினை பாதித்துவிடாதவாறு காதினுள் வைத்துக்கொள்ளும் ஒரு சாதாரண பஞ்சாகும். இதை விடுதலைப் புலிகள் இயக்கத்தில் உந்துகணை அடித்த பெரும்பாலானோர் அணிந்திருப்பர். கீழ்க்கண்ட படிமத்தில் உந்துகணை சூட்டாளரின் துணைவனின் காதில் இது தெரிவதை(வெள்ளை நிறத்தில்) நோக்குக: கொசுறு: புலிவீரர்கள் அணியும் சீருடைகளின் முழுக் காற்சட்டையிலும் மேற்சட்டையிலும் பெண்களின் உள்ளாடையிலும் தொடரிலக்கம் கறுப்பு நிற நூல் கொண்டு தைக்கப்பட்டிருந்தது. அத்தொடரிலக்கமானது நான்கு எண்கள் கொண்டது ஆகும். மேற்சட்டையில் வலது மார்பில் தைக்கப்பட்டிருந்தது. இவ்வாறு புலிகளின் அனைத்துக் கிளைகளினது சீருடை மற்றும் படையணிச் சீருடை ஆகியவற்றில் தைக்கப்பட்டிருந்தது. உசாத்துணை: சொந்தமாக எழுதியது (தகட்டுக் குறியீடு & வாய்குப்பி பற்றிய தகவல் மட்டும் ஒரு முன்னாள் போராளி வழங்கியவர்) செ.சொ.பே.மு. https://eelam.tv/watch/எம-ம-உலக-ல-உயர-த-த-ம-emmai-ulakil-uyarththum-originla-version-tamil-eelam-songs_V9fei3U2lk6u93j.html படிமப்புரவு LTTE Home page | Sankathi24 பிரபாகரனின் நேரடி கண்காணிப்பில் 22249 விடுதலைப் புலிகள் எனும் படைப் பிரிவு JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn TamilNet (TamilNet) தேசக்காற்று http://veeraveengkaikaL.com (http://veeraveengkaikaL.com) Tamil Guardian அருச்சுனா புகைப்படக் கலையகம் YouTube India Content Photos, Pictures, Photograph Online for Website Log In or Sign Up Istock images ஆக்கம் & வெளியீடு நன்னிச் சோழன்
- 2 replies
-
- 2
-
- ltte equipments
- ltte gears
-
(and 2 more)
Tagged with: