வாட்ஸ் அப்பில் வந்த அருமையான செய்தி:
ஐந்து மாநிலங்களின் கழிவுகளை சுமந்தாலும் கங்கைதான் புனித நதி, காவிரி அல்ல! ஐவரைக் கலந்தாலும் பாஞ்சாலிதான் பத்தினி, கண்ணகி அல்ல!
பல மொழிகள் கலந்திருந்தாலும் இந்தியும், சமற்கிருதமும்தான் உயர்ந்தவை, தமிழ் அல்ல!
உலகின் முதல் மாந்தனாக இல்லாத போதும் ஆரியனே உயர்ந்தவன், தமிழன் அல்ல!
மனித வாழ்வியலுக்கான உலகப் பொதுமறையாக போற்றப்பட்டாலும் மகாபாரத, இராமாயண புராணப் புரட்டுகளே உயர்ந்தவை, திருக்குறளோ, சங்க இலக்கியங்களோ அல்ல!
எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் ஆரிய இந்துத்துவா கழிசடைகள் ஆளும் இந்தியாவின் பார்வை இதுதான்! இது மாறாது, தமிழினம் இதை உணர்ந்துள்ளது! ஆகையால்தான் தமிழ்த்தேச விடுதலையே தமிழ்த்தேசியம் என்று இறுதி செய்துள்ளது நிகழ்கால தமிழர் வரலாறு..!
.