புதிய பதிவுகள்2

மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துங்கள்

1 week ago
மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்த பொதுமக்கள் முன்வர வேண்டும் Mar 30, 2026 - 09:01 AM தற்போதைய சூழ்நிலையில் வலுசக்தியை வினைத்திறனாகவும் உரிய முகாமைத்துவத்துடனும் பயன்படுத்த வேண்டும் என இலங்கை நிலைபெறுதகு வலுசக்தி அதிகார சபையின் தலைவர் பேராசிரியர் டி.எம்.டபிள்யூ.ஜே. பண்டார தெரிவித்துள்ளார். மாலை 5 மணி முதல் அதிகாலை வரை மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கு எரிபொருட்களைப் பயன்படுத்த வேண்டியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். பொதுமக்களின் பங்களிப்பு இந்த நேரத்தில் அவசியமானது என்றும், எரிபொருள் பயன்பாட்டைக் குறைக்க மின்சாரத்தைச் சிக்கனமாகப் பயன்படுத்துவது முக்கியம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். எரிபொருட்களை எரிப்பதன் மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கு அதிக செலவு ஏற்படும் என்றும், மின்சாரத்தைச் சிக்கனமாகப் பயன்படுத்துவதன் மூலம் மின்சார முகாமைத்துவத்தை மேற்கொள்வதானது மக்களின் மின்சாரக் கட்டணத்தைக் குறைப்பதுடன், எரிபொருள் எரிப்பதையும் குறைக்கும் என அவர் மேலும் தெரிவித்தார். பொதுமக்கள் எரிசக்தி வினைத்திறன் கொண்ட உபகரணங்களைப் பயன்படுத்துவதற்கு முன்வர வேண்டும் எனத் தெரிவித்த அவர், நிலையான எரிசக்தி அதிகார சபையினால் தற்போது ஒரு முத்திரை முறைமை நடைமுறைப்படுத்தப்படுவதாகவும், இதன் மூலம் LED மின்குமிழ்கள், குளிரூட்டிகள் மற்றும் ஏசி இயந்திரங்களைக் கொள்வனவு செய்யும் போது எரிசக்தி வினைத்திறன் மிக்க உபகரணங்களைத் தேர்வு செய்ய முடியும் என்றும் கூறினார். அதேபோல், எரிசக்தி வினைத்திறன் குறைந்த உபகரணங்கள் நாட்டுக்குள் நுழைவதைத் தடுப்பதற்கான சட்டங்கள் தற்போது தயாரிக்கப்பட்டு வருவதாகவும், குறுகிய காலத்தில் எரிசக்தியை வினைத்திறனாக்குவதற்கான வேலைத்திட்டத்தை அரசாங்கம் ஏற்கனவே ஆரம்பித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். தற்போதைய நிலையில் நாட்டுக்கு மசகு எண்ணெய் கிடைப்பதில் தட்டுப்பாடு நிலவுவதாகவும், இதனால் மின்சார உற்பத்திக்காக டீசல் பயன்படுத்தப்படுவதால் மின் உற்பத்திக்கு அதிக செலவு ஏற்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். பகல் வேளையில் சூரிய சக்தி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவதால், பொதுமக்கள் தமது அத்தியாவசியத் தேவைகளுக்கான நேரத்தை மாற்றியமைத்து அவற்றை பகல் பொழுதில் செய்துகொண்டால், மின் உற்பத்திச் செலவைக் குறைப்பதுடன் மக்களின் மின்சாரக் கட்டணத்தையும் குறைத்துக்கொள்ள முடியும் என அவர் மேலும் தெரிவித்தார். https://adaderanatamil.lk/news/cmncmrpwd0007356p0fkc258o

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 - செய்திகள்

1 week ago
சீமான் தனது பரப்புரையில் வழமைபோல் அனைவருக்கும் அரசவேலை என அடித்து விட… கூட்டத்தில் இருந்தே ஒருவர் எழும்பி, இந்த ஊரிலேயே 2000 வேலை தேடி வெளி ஊர் போறாங்க அனைவருக்கும் அரச வேலை எப்படி சாத்தியம் என கேள்வி எழுப்புகிறார். சீமான் பதில் 1: நீ இப்படி போய் திமுக கூட்டத்தில் கேட்பியா பதில்2: குடுப்பேன், குடுப்பேன் (எப்படி என்பதுதான் கேள்வி) கேள்வி கேட்டவரை சீமான் கண் முன்பே நாதக குண்டர்கள் அடக்கி வெளியேற்றுகிறார்கள். பொலிஸ் வந்து அழைத்து போகிறது. #அன்பான சர்வாதிகாரி

அமெரிக்காவின் சதித்திட்டம் தொடர்பில் ஈரானின் வௌிப்படுத்தல்

1 week ago
போரில் அடைய முடியாத இலக்குகளை 15 அம்ச பட்டியலின் ஊடாக அடைய முயற்சிக்கிறது அமெரிக்கா ; “சமரசத்துக்கோ சரணடைதலுக்கோ வாய்ப்பில்லை" - ஈரான் பாராளுமன்ற சபாநாயகர் 30 Mar, 2026 | 12:34 PM “அமெரிக்கா, அது விரும்பியவற்றை, போரின் ஊடாக அடைய முடியாத நிலையில், அதன் இலக்குகளை 15 அம்ச நிபந்தனைப் பட்டியலில் முன்வைத்து, அவற்றை தன் ராஜதந்திரத்தின் மூலம் அடைய முயற்சிக்கிறது என ஈரான் பாராளுமன்ற சபாநாயகர் மொஹமட் பாகர் காலிபாப் தெரிவித்துள்ளார். “அமெரிக்கா ஒருபுறம் பேச்சுவார்த்தைக்காக அழைப்பு விடுத்துக்கொண்டு, மறுபுறம் இரகசியமாக தரைவழித் தாக்குதலுக்கு திட்டமிட்டுள்ளது. அமெரிக்க வீரர்கள் ஈரான் மண்ணில் தரை இறங்கவிருப்பதை எங்களது படையினர் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். அவர்களை அழிக்கத் தயாராக உள்ளோம்” என்றும் அவர் சூளுரைக்கிறார். மேலும், ஈரானுடனான மோதல் ஒரு நெருக்கடியான கட்டத்தை எட்டியுள்ளது என்றும் இந்த சந்தர்ப்பத்தில் அமெரிக்கா முன்வைத்த நிபந்தனைகளுக்கு அமைய சரணடையவோ பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவோ ஈரான் முன்வராது என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் தாக்குதல் நடத்தத் தொடங்கிய நாள் முதல் ஈரானில் அரசாங்கத்துக்கு ஆதரவாக பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதை சபாநாயகர் சுட்டிக்காட்டியுள்ளார். இத்தகைய பொது முழக்கங்களும் ஆர்ப்பாட்டங்களும் ஈரானின் இராணுவ நடவடிக்கைகளை வலுப்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். “இனி சமரசம் இல்லை, சரணடைதலும் இல்லை, அமெரிக்காவுக்கு எதிராக போராடு” என்ற பேரணியினரின் முழக்கத்தின் வாயிலாக, அவர்கள் நாட்டின் ஏவுகணைகளுக்கு வலிமை சேர்த்திருக்கிறார்கள்” என்றும் சபாநாயகர் கூறியுள்ளார். பெப்ரவரி 28ஆம் திகதி ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் தாக்குதல் நடத்தத் தொடங்கியதிலிருந்து ஈரானும் பதில் தாக்குதல்களை தீவிரப்படுத்தி வரும் நிலையில், அமெரிக்கா ஈரானுடனான பேச்சுவார்த்தைகள் குறித்த பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. 15 அம்ச நிபந்தனைகளை பட்டியலிட்டு அமெரிக்கா அமைதி ஒப்பந்தத்தை முன்வைத்தது. அதற்காக 10 நாட்கள் தற்காலிக போர்நிறுத்தம் என அறிவித்தது. அதேவேளை இரு தரப்புக்கும் இடையே தாக்குதல் நடவடிக்கைகள் தொடர்ந்தவண்ணமே உள்ளன. பேச்சுவார்த்தைக்கு வருமாறு ஈரானுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அழைப்பு விடுத்து வரும் அதே சந்தர்ப்பத்தில் மேற்காசியாவில் அமெரிக்க படையினர் குவிக்கப்பட்டு வருகின்றனர். இத்தகைய பதற்றமான சூழ்நிலையில் அமெரிக்கா ஈரான் மீது தரைவழித் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருக்கிறது என்ற தகவல் பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அமெரிக்காவின் இந்தத் திட்டத்தையும் இராணுவ நடவடிக்கையையும் எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாகவும் எதற்கும் அடிபணியப் போவதில்லை என்றும் ஈரான் பதிலளித்துள்ளது. https://www.virakesari.lk/article/242294

நாட்டின் வெப்பநிலை 43 பாகை செல்சியஸை விட அதிகரிக்கும் - அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை

1 week ago
அதிக வெப்பம்: பாடசாலைகளுக்கான விசேட வழிகாட்டல்கள் வௌியீடு Mar 30, 2026 - 04:21 PM தற்போது நிலவும் வரட்சியான வானிலை நிலவரங்களுக்கு மத்தியில், பாடசாலைச் செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்லும் விதம் குறித்த பரிந்துரைகளை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது. கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவவின் கையொப்பத்துடன் அனைத்து மாகாண கல்விப் பணிப்பாளர்களுக்கும் இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, பின்வரும் பரிந்துரைகள் குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டும்: 1. வெப்பத் தசைப்பிடிப்பு (Heat Cramps) - அதிக வியர்வை காரணமாக நீர்ச்சத்துக் குறைபாடு மற்றும் தாது உப்புகள் வெளியேறுவதால் ஏற்படும் தசைப்பிடிப்பு: கை, கால்கள் மற்றும் வயிற்றில் தசை வலி மற்றும் பிடிப்பு ஏற்படும். முதலுதவி: அனைத்துச் செயற்பாடுகளிலிருந்தும் விலகி, குளிர்ந்த இடத்தில் ஓய்வெடுத்தல் மற்றும் போதுமான அளவு நீர் அருந்துதல் (ஒவ்வொரு 15 நிமிடங்களுக்கும் அரை கிளாஸ் வீதம்). 2. வெப்பக் களைப்பு (Heat Exhaustion) - அதிக வெப்பநிலை காரணமாக ஏற்படும் கடும் சோர்வு: அதிக வியர்வை, உடல் தளர்ச்சி, மயக்கம். முதலுதவி: அனைத்துச் செயற்பாடுகளிலிருந்தும் விலகி, குளிர்ந்த இடத்தில் ஓய்வெடுத்தல் மற்றும் போதுமான அளவு நீர் அருந்துதல் (ஒவ்வொரு 15 நிமிடங்களுக்கும் அரை கிளாஸ் வீதம்), குளித்தல், குளிர்ந்த நீரால் உடலைத் துடைத்தல். 3. வெப்பத்தாக்கம் (Heat Stroke) - உடலின் வெப்பநிலையை ஒழுங்குபடுத்தும் செயல்முறை செயலிழப்பதால் ஏற்படும் நிலை: அதிக உடல் வெப்பநிலை, நாடித்துடிப்பு மற்றும் சுவாச வேகம் அதிகரித்தல், மனக்குழப்பம், தலைவலி, வலிப்பு, மயக்கமடைதல். முதலுதவி: குளிர்ந்த நிழலான இடத்திற்கு அழைத்துச் செல்லுதல், உடலில் உள்ள தேவையற்ற இறுக்கமான ஆடைகளை அகற்றுதல்/தளர்வு செய்தல், குளிர்ந்த நீரால் உடலைத் துடைத்தல். இது மிகவும் ஆபத்தான நிலை என்பதால் மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். இவ்வாறான சந்தர்ப்பத்தில் 1990 ஐ அழைத்து 'சுவசரிய' நோயாளர் காவு வண்டி சேவையின் உதவியைப் பெறவும் அல்லது அருகிலுள்ள வைத்தியசாலையின் நோயாளர் காவு வண்டியைப் பெற நடவடிக்கை எடுக்கவும். பாடசாலைச் செயற்பாடுகளை முன்னெடுத்தல்: அதிக வெப்பநிலை நிலவும் நாட்களில் மாணவர்கள் வெளிப்புற/விளையாட்டு மைதானச் செயற்பாடுகளில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும். பாடசாலை இடைவேளையின் போது கடும் வெயில் உள்ள பகுதிகளில் மாணவர்கள் விளையாடுவதைத் தவிர்க்க வேண்டும். மேலதிகமாக நீர் அருந்துவதற்கும் களைப்பைத் தீர்ப்பதற்கும் இரண்டு குறுகிய இடைவேளைகளை வழங்குவது மிகவும் பொருத்தமானது. நண்பகல் வேளையில் அதிக வெப்பநிலை நிலவும் போது அத்தியாவசியமற்ற சந்தர்ப்பங்களில் மாணவர்களை வெளியே அழைத்துச் செல்வதைத் தவிர்க்க வேண்டும் (பாடசாலையிலும் வீட்டிலும்). பிராந்திய ரீதியில் நிலவும் வெப்பநிலை/வானிலை நிலவரங்களைக் கருத்திற்கொண்டு இல்ல விளையாட்டுப் போட்டிகள் மற்றும் பயிற்சிகளைத் திட்டமிடுவது சிறந்தது. வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல்: தேவையான அளவு குடிநீரை வழங்குவதோடு, சுத்தமான நீரை அதிகளவு பருகுவதற்கு மாணவர்களைத் தூண்டுதல். பாடசாலையில் போதுமான நீர் வசதி இல்லையெனில் அதற்கு மாற்று வழிகளைக் கையாளுதல் (மாவட்ட அனர்த்த முகாமைத்து ஒருங்கிணைப்பு உத்தியோகத்தர்கள் ஊடாக மாவட்டச் செயலாளரின் உதவியைப் பெறலாம்). வகுப்பறைகளில் காற்றோட்டம் சீராகக் கிடைப்பதை உறுதி செய்ய கதவு, ஜன்னல்களைத் திறந்து வைத்தல். மின்விசிறிகளைப் பயன்படுத்தினால் சுத்தமான காற்று கிடைக்கக் கதவு, ஜன்னல்கள் கட்டாயம் திறந்திருக்க வேண்டும். மாடிக்கட்டிடங்கள் அல்லது தகரக் கூரையிடப்பட்ட அதிக வெப்பம் நிலவும் வகுப்பறைகளைத் தற்காலிகமாகப் பொருத்தமான இடங்களுக்கு மாற்றுதல். மாணவர்களின் தனிப்பட்ட தயார்நிலை: அவசியமான சந்தர்ப்பங்களில் கழுத்துப்பட்டி (Tie) அணிவதைத் தவிர்க்க வேண்டும் அல்லது அதன் முடிச்சைத் தளர்வாக வைத்திருக்க வேண்டும். அரைக்கச்சை (Belt) அணிவதைக் கூடியவரை குறைத்தல். அதிக வெயில் நிலவும் போது தலைக்கவசம் அல்லது குடையைப் பயன்படுத்துதல். அடர் நிற ஆடைகளுக்குப் பதிலாக தளர்வான, மெல்லிய நிற பருத்தி (Cotton) ஆடைகளை அணிதல் (பாடசாலைக்கு பின்னரான செயற்பாடுகளுக்கும் இது பொருந்தும்). வீட்டிலிருந்து வெளியே செல்லும் போதெல்லாம் காய்ச்சி ஆறவைக்கப்பட்ட குடிநீர் போத்தலை எடுத்துச் செல்லுதல். சாதாரண நாட்களை விட அதிகளவு நீர் அருந்துதல். நீருக்குப் பதிலாக இளநீர் போன்ற பானங்களை அருந்துவது சிறந்தது. எக்காரணம் கொண்டும் அதிக சீனி கொண்ட மென்பானங்களை அருந்தக் கூடாது. தாகம் இல்லாவிட்டாலும் அதிகளவு நீர் அருந்துதல் வேண்டும். அதிக வெப்பம் உணரப்படும் போது முகம், கைகள் மற்றும் கால்களைக் குளிர்ந்த நீரால் நனைத்தல். அதிக வெப்பம் காரணமாக ஏதேனும் நோய் அறிகுறிகள் தென்பட்டால் ஆசிரியர் அல்லது பெரியவர்களிடம் அறிவித்து உடனடியாக மருத்துவ ஆலோசனையைப் பெறுதல். https://adaderanatamil.lk/news/cmnd2issh0000356plzog1i7h அதிக வெப்பமான காலத்தில் பாடசாலை நேரத்தை மாற்றலாமே?! 8.30 - 2.30 வரை என்றால் தாக்கம் குறையுமே.

இஷாரா செவ்வந்திக்கு சிஐடி பிரிவுக்குள் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம்!

1 week ago
இஷாரா செவ்வந்திக்கு சிஐடி பிரிவுக்குள் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம் : பொறுப்பதிகாரிக்கு எதிராக கடும் ஒழுக்காற்று நடவடிக்கை - பொலிஸ் ஊடகப் பேச்சாளர் Published By: Digital Desk 1 30 Mar, 2026 | 04:32 PM (இணையத்தள செய்திப் பிரிவு ) பாதாள உலகக் கும்பலைச் சேர்ந்த கனேமுல்ல சஞ்சீவவின் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரான இஷாரா செவ்வந்திக்கு, பொலிஸ் பிரிவுக்குள் பிறந்தநாள் கொண்டாட்டத்தை நடத்திய குற்றச்சாட்டில் சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு எதிராக பொலிஸார் கடும் ஒழுக்காற்று நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர். இது தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் எப்.யு. வூட்லர், மேல் மாகாணத்திற்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் தனிப்பட்ட ரீதியில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு விஜயம் செய்துள்ளதாகக் குறிப்பிட்டார். அங்கு சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளைக் கொண்ட குழுவொன்றின் ஊடாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பொறுப்பதிகாரிக்கு எதிராக கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. பொலிஸ் அதிகாரிகள் அரச அதிகாரிகளாவர் என்றும், அவர்கள் குற்றவாளிகளுடன் எவ்வித தொடர்புகளையும் பேண முடியாது என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் எப்.யு. வூட்லர் இதன்போது வலியுறுத்தினார். பொலிஸ் அதிகாரிகள் தமது கடமைகளைச் செய்யும்போது தமது பொறுப்புகளை பேண வேண்டும் என்றும் அவர் இதன்போது வலியுறுத்தியுள்ளார். https://www.virakesari.lk/article/242304

சவுதி அரேபியாவிலுள்ள அமெரிக்க இராணுவத் தளம் மீது ஈரான் தாக்குதல் – 10 அமெரிக்கப் படையினர் காயம்

1 week ago
இரான் தாக்குதலில் அமெரிக்க ராணுவ விமானம் தகர்ப்பா? புகைப்படத்தின் பின்னுள்ள உண்மை பட மூலாதாரம்,Facebook படக்குறிப்பு,அமெரிக்க ராணுவச் செய்திகளை வெளியிடும் ஒரு பேஸ்புக் பக்கத்தில் இந்த புகைப்படங்கள் முதலில் பகிரப்பட்டதாகத் தெரிகிறது. கட்டுரை தகவல் எம்மா பெங்கெல்லி, ஷயான் சர்தாரிசாதே மற்றும் ஜேக் ஹார்டன் 4 மணி நேரங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள் சௌதி அரேபியாவில் உள்ள ஒரு விமானப்படை தளத்தில், அமெரிக்காவின் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு விமானம் ஒன்று அழிக்கப்பட்டதை சரிபார்க்கப்பட்ட புகைப்படங்கள் காட்டுகின்றன. அமெரிக்க ராணுவச் செய்திகளை வெளியிடும் ஒரு பேஸ்புக் பக்கத்தில் இந்த புகைப்படங்கள் முதலில் பகிரப்பட்டதாகத் தெரிகிறது. அந்த புகைப்படங்களில் ஈ-3 (E-3) சென்ட்ரி (E-3 Sentry) விமானம் இரண்டாகப் பிளந்து காணப்படுகிறது. சௌதி தலைநகர் ரியாத்திற்கு தென்கிழக்கே சுமார் 100 கிமீ (62 மைல்) தொலைவில் உள்ள இளவரசர் சுல்தான் விமானப்படை தளத்தில் இந்த புகைப்படங்கள் எடுக்கப்பட்டதை நாங்கள் உறுதிப்படுத்தியுள்ளோம். புகைப்படங்களில் காணப்படும் மின்கம்பங்கள், சேமிப்பு அலகுகள் மற்றும் நடைபாதை அடையாளங்கள் ஆகியவை செயற்கைக்கோள் படங்களுடன் ஒத்துப்போகின்றன. இந்தச் சம்பவம் குறித்து அமெரிக்க மத்திய கட்டளை மையம் இதுவரை பகிரங்கமாக கருத்து தெரிவிக்கவில்லை. இதுகுறித்து பிபிசி விளக்கம் கேட்டுள்ளது. விமானப்படை தளத்தின் மீது இரான் நடத்திய தாக்குதலில் 12 அமெரிக்க வீரர்கள் காயமடைந்ததாகவும், அவர்களில் இருவர் படுகாயமடைந்ததாகவும் அமெரிக்க அதிகாரி ஒருவர் வெள்ளிக்கிழமை ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார். குறைந்தது இரண்டு அமெரிக்க எரிபொருள் நிரப்பும் விமானங்கள் சேதமடைந்ததாக 'தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல்' பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை, இரானின் ஐ.ஆர்.ஜி.சி அமைப்புடன் தொடர்புடைய ஃபார்ஸ் செய்தி நிறுவனம், ஒரு ஷாஹெட் டிரோன் மூலமாக ஈ-3 விமானம் தாக்கப்பட்டதாகத் தெரிவித்தது. மார்ச் 11 அன்று எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் படத்திலும் இதே இடத்தில் ஒரு ஈ-3 உளவு விமானம் இருப்பதை பிபிசி வெரிஃபை பார்த்துள்ளது. ஆனால் இவை இரண்டும் ஒரே விமானம் தானா என்று எங்களால் கூற முடியாது. சரிபார்க்கப்பட்ட புகைப்படங்களில் ஒன்றில் அந்த விமானத்தின் வால் பகுதி எண் தெரிகிறது. இதை வைத்து பிளைட்ரேடார்24 என்ற விமானப் பயணக் கண்காணிப்புத் தளத்தில் சோதித்தபோது, அந்த விமானம் மார்ச் 18 அன்று தளத்திற்கு அருகில் பறந்துகொண்டிருந்தது தெரியவந்தது. வெள்ளிக்கிழமை எடுக்கப்பட்ட ஒரு செயற்கைக்கோள் படம், ஈ-3 விமானம் இருக்கும் இடத்திற்கு கிழக்கே சுமார் 1,600 மீட்டர் (5,200 அடி) தொலைவில் விமானப்படை தளத்தின் ஓடுபாதையில் தீப்பிடித்திருப்பதைக் காட்டுகிறது. இந்த புகைப்படங்களில் காணப்படும் விமானம் சேதமடைந்த அதே தாக்குதலின் ஒரு பகுதியா இது என்பது தெளிவாகத் தெரியவில்லை. பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,ஈ-3 உளவு விமானத்தின் ரேடார், நீண்ட தூரங்களில் உள்ள சாத்தியமான இலக்குகளைக் கண்காணிக்க உதவுகிறது (கோப்புப் படம்). போயிங் ஈ-3 அவாக்ஸ் என்பதன் விரிவாக்கம் 'வான்வழி எச்சரிக்கை மற்றும் கட்டுப்பாட்டு அமைப்பு' (AWACS - Airborne Warning and Control System) என்பதாகும். இது போயிங் 707 ரக விமானத்தை அடிப்படையாகக் கொண்டது மற்றும் அதன் உடற்பகுதியின் பின்புறத்தில் ஒரு தனித்துவமான சுழலும் ரேடார் தட்டைக் கொண்டுள்ளது. இந்த ரேடார், இலக்குகளை நீண்ட தூரத்திலேயே கண்டறியவும் கண்காணிக்கவும் உதவுகிறது. இதன் மூலம் போர் நடவடிக்கைகளின் போது ஏற்படக்கூடிய அச்சுறுத்தல்கள் குறித்து முன்கூட்டியே எச்சரிக்கை வழங்க முடிகிறது. அமெரிக்க விமானப்படை வலைத்தளத்தின் படி, அந்த விமானம் "வான்வழிப் போரின் கட்டுப்பாட்டைப் பெறுவதற்கும் தக்கவைத்துக் கொள்வதற்கும் வான்வழி நடவடிக்கைகளின் தளபதிகளுக்குத் தகவல்களை வழங்குகிறது". இந்த வகை விமானங்களில் முதலாவது 1977 ஆம் ஆண்டு சேவையில் இணைந்தது. ஈ-3 ரக விமானங்கள் 2035 ஆம் ஆண்டு வரை அமெரிக்க விமானப்படையில் பயன்பாட்டில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cd7jvvr7g8qo

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 - செய்திகள்

1 week ago
ஒரு திங்கட் கிழமை பிற்பகலில் பெரம்பூரில் விஜை வேட்புமனு தாக்கல் செய்ய போன போது மறுபடியும் கட்டுக்கடங்கா கூட்டம். ஸ்டாலின் போகும் போது வழமையான கூட்டம்தான்.

யாழ்களத்தை வாழ்த்தும் ஒரு உறவு

1 week ago
காலை வணக்கத்தோடு யாழின் முகப்புத் தோற்றம் குறிப்பாக 28ம் ஆண்டு தோற்றம் மிகவும் நன்றாக இருக்கிறது.இனிய 28ம் ஆண்டு வாழ்த்துகள் உரித்தாகட்டும்.இது யாயினி.🙏

விரிவடையும் மத்திய கிழக்கு போர்; சாதனை அளவை எட்டிய எண்ணெய் விலை!

1 week ago
வீட்டையே ஆட்டையைபோடலாம் என்று போய் இப்ப வீடு கிடக்கட்டும் பின் கோடிக்குள்ள சாக்கடையை திறந்துவிடுகிற நாத்தத்தில வந்து நிக்குது . ........! 🙂

குட்டிக் கதைகள்.

1 week ago
destnporSo4aag21guel141m2ttàm52 :g0r0i u1h94u2f4hsL8876 a65 · ஒரு ஊர்ல ஒரு ராஜா இருந்தார். அவருக்கு ஒரு மந்திரி. இவங்க ரெண்டு பேரும் ஒரு நாள் மாலை நடைபயிற்சி போனாங்க ஒரு ஆத்தங்கரை ஒரமா.. அப்போது அங்கே ஒரு கொடியில் வெள்ளரிக்காய் காய்த்துத் தொங்குவதை பார்த்த ராஜா "மந்திரி.. அந்த வெள்ளரிக்காய பறிச்சிகிட்டு வா சாப்பிடலாம்"ன்னு சொன்னார். மந்திரி பறிக்க போனபோது அதனருகில் உட்கார்ந்து இருந்த ஓரு குருடன் சொன்னான் "ஐயா அது வெள்ளரிக்காய் இல்ல. அது குமட்டி காய். அதை தின்னா வாந்தி தான் வரும்"ன்னு... ராஜா சொன்னான் "யோவ் மந்திரி அது பறிச்சு சாப்பிடு.. வாந்தி வருதா பார்க்கலாம்"... வேற வழி இல்லாம மந்திரி சாப்பிட்டான். உடனே மந்திரிக்கு கும்மட்டிக்கிட்டு ஒரே வாந்தி. ராஜா கேட்டான் "யோவ் கபோதி இதுக்கு என்ன மருந்து?". அந்த குருடன் சொன்னான் "அது பக்கத்துல 'கை' மாதிரி பச்சை இலை இருக்கும்.. அதை கையால கசக்கி மந்திரி வாய்ல விட்டா வாந்தி நிற்கும்"ன்னு சொன்னான் குருடன். ராஜா முயற்சி செய்ய மந்திரிக்கு வாந்தி நின்னு போச்சு. மந்திரிக்கு போன உசுரு திரும்பி வந்தது. ராஜா குருடனை பார்த்து "உனக்கு தான் கண் தெரியாதே எப்படி கரெக்ட்டா சொன்னாய்" என்று கேட்க , குருடன் சொன்னான் "ராஜா இந்த நாட்ல எங்கேயும் பஞ்சம் பசி பட்டினி. அப்படி இருக்கும் போது எவனாவது வெள்ளரிப்பிஞ்சை விடுவானா. எப்பவும் இயற்கை ஒரு நோய் கொடுக்கற காயை கொடுத்தால் இறைவன் பக்கத்துல ஒரு மாற்று மருந்து வச்சிடுவான்".. ராஜாக்கு சந்தோஷம். "இந்தா ஒரு டோக்கன். கிழக்கு வாசலுக்கு போ. பட்டை சாதம் குடுப்பாங்க. சாப்பிட்டு ஜாலியா இரு..." என்று சொல்லிட்டு ராஜா போய்ட்டான். கொஞ்ச நாள் கழித்து ஒரு வெளியூர் வியாபாரி ராஜா கிட்ட வந்தான். "ராஜா எங்கிட்ட வைரம் நிறைய இருக்கிறது. வாங்கிக்கறீங்களா"ன்னு கேட்டான். 'இது ஒரிஜினலா டூப்ளிக்கேட்டான்னு எப்படி தெரிஞ்சிக்கிறது' என்று மந்திரியை கூப்பிட்டான். ஏற்கனவே ஒரு தடவை வாந்தி எடுத்த அனுபவம் இருந்ததால் எதையாவது முழுங்கி வைக்க சொன்னா என்ன பண்றதுன்னு பயந்துட்டு தெரியாதுன்னுட்டான். ராஜா சொன்னான் "மந்திரி போய் அந்த கபோதிய கூட்டிண்டு வா.. அவன்தான் காரண காரியத்தோட கரெக்டா சொல்லுவான்"னான். மந்திரி போய் அந்த குருடனை கூட்டிட்டு வந்தான். ராஜா சொன்னான் "டேய் இதுல ஒரிஜினல் வைரம்... டூப்ளிகேட் வைரம் கலந்திருக்கான்னு பார்த்து சொல்லு". அந்த குருடன் அந்த மொத்த வைரத்தையும் எடுத்து மத்தியான வெயில்ல கொண்டு போய் வெச்சான். கொஞ்ச நேரம் பொறுத்து அதை கையில் எடுத்து பிரிச்சு ராஜா "இதெல்லாம் வைரம். மற்றது எல்லாம் கண்ணாடி"ன்னு பிரிச்சு கொடுத்துட்டான். வியாபாரியும் "எதோ தெரியாம நடந்துடுச்சு"ன்னு சொல்லி எல்லா வைரத்தையும் இனாமா கொடுத்தான். ராஜாவுக்கு ஆச்சர்யம். ராஜா குருடனை பார்த்து கேட்டான் "எப்படி கண்டுபிடிச்ச காரண காரியத்தோட சொல்லு..." குருடன் சொன்னான் "ராஜா வெயிலில் வைரம் சூடாகாது. ஆனா கண்ணாடி சூடாகும். அதுனால சூடானது எல்லாம் கண்ணாடின்னும் சூடுஆகாதது எல்லாம் வைரம்ன்னு பிரிச்சேன்".. ராஜா சந்தோஷமா பாக்கெட்ல கைய விட்டு ஓரு டோக்கன் எடுத்து குருடன் கிட்ட குடுத்து " மேற்கு வாசலுக்கு போ... இந்த டோக்கனை கொடுத்து பட்டை சாதம் வாங்கி சாப்பிட்டு சந்தோஷமா இரு"ன்னு சொல்லி அனுப்பிச்சான். இப்படி கொஞ்ச நாள் போச்சு. ராஜா தன் மகனுக்கு கல்யாணம் பண்ண பெண் தேட ஆரம்பிச்சான். பக்கத்து ஊர்ல இருந்து எல்லாம் இளவரசி குடுக்க ரெடியா இருந்தாங்க. ராஜாவுக்கு குழப்பம். யாரை தேர்ந்து எடுக்கறதுன்னு. மந்திரியை கேட்டா எல்லாம் நல்லா இருக்குன்னு பயந்துகிட்டே சொல்றான். ராஜா பார்த்தான் "கூப்பிட்றா அந்த கபோதியை..". குருடன் வந்தான். ராஜா குருடன்கிட்ட சொன்னான் "என் மகனுக்கு கல்யாணம் பண்ண பொண்ணு பாக்கறேன். எந்த ராஜாவோட ராஜகுமாரி சரியா இருக்கும்ன்னு காரண காரியதோட சொல்லு" அப்படின்னான். குருடன் சொன்னான் "ராஜா அடுத்த நாட்டை விட்டுட்டு அதுக்கு அடுத்த நாட்டு ராஜா பொண்ணை பாருங்க"ன்னான். "அந்த ராஜா உங்க சம்பந்தி ஆனா பக்கத்து நாட்டு ராஜா உங்க ரெண்டு பேருக்கும் நடுல இருப்பான். அப்போ எல்லை பிரச்சினை வராது. பொண்ண குடுத்ததால அந்த இடைப்பட்ட பகுதில பிரச்சினை வராம பார்த்துப்பான்..". ராஜாவுக்கு ஒரே குஷி. "சபாஷ். இந்தாடா டோக்கன்... வடக்கு வாசலுக்கு போ. பட்டை சாதம் குடுப்பான். வாங்கி சாப்பிட்டு சந்தோஷமா இரு" அப்படின்னான். குருடனும் போய்ட்டான். கொஞ்ச நாள் போச்சு. ஒரு நாள் ராஜா அந்த குருடன தன்னோட அந்தரங்க ஆலோசனை அறைக்கு வர சொன்னான். "டேய் நான் ஒண்ணு கேட்பேன்... சரியா காரண காரியதோட சொல்லணும்" அப்படின்னான். குருடனும் சரின்னான். "இந்த ஊர்ல என்ன எல்லோரும் என்னை பிச்சைகாரனுக்கு பிறந்த பய அப்படின்னு சொல்றாங்க. இதுக்கு நீ என்ன சொல்ற?... அப்படின்னான். குருடன் அமைதியா இருந்தான். பதிலே பேசல.. ராஜா திரும்ப கேட்டான்... குருடன் சொன்னான் "ராஜா.. நீங்க திரும்ப திரும்ப கேட்கறதால சொல்றேன் நெசமா நீங்க பிச்சைக்காரனுக்கு பிறந்தவன் தான்" அப்படின்னான். ராஜாவுக்கு ரொம்ப வருத்தம். "ஏன்டா"ன்னு கேட்டான். "ராஜா முதல்ல குமட்டி காய பத்தி சொன்னேன். நீங்க சந்தோஷமா ஆகிட்டீங்க. ஆனா கொடுத்தது இலவச டோக்கன் பட்ட சாதத்துக்கு. ராஜாவா இருந்தா கைல இருந்த மோதிரத்தை கொடுத்திருப்பான்... அப்புறம் கோடி கணக்குல வைரம் கிடைக்க வழி செஞ்சேன். ராஜாவா இருந்திருந்தா கழுத்திலிருந்த வைர மாலைய கொடுத்திருப்பான். ஆனா நீங்க கொடுத்தது பட்டை சாத டோக்கன்... மூணாவது.. ஒரு ராஜ்யமே உங்க கைக்குள்ள வருவதற்கு வழி சொன்னேன். இன்னொரு ராஜாவா இருந்தா நாலு கிராமத்தை எனக்கு எழுதி கொடுத்திருப்பான். நீங்க கொடுத்தது வடக்கு வாசல் பட்ட சாத டோக்கன்... இதிலிருந்து தெரிகிறது சத்தியமா நீங்க பிச்சைகாரனுக்கு பிறந்தவன்னு... ஏன்னா உங்க புத்தி டோக்கனோடு முடிஞ்சு போச்சு. அதுக்கு மேல போகல.... 🤔" அந்த குருடன் நிலைமையில் தான் ஓட்டு போடற நாம இருக்கோம்... Voir la traduction....!
Checked
Mon, 04/06/2026 - 16:07
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed