புதிய பதிவுகள்2

அமெரிக்க ஏகாதிபத்தியமும் சியோனிச இஸ்ரேலும் தோற்கடிக்கப்பட வேண்டும் - புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி தெரிவிப்பு

1 week 6 days ago
அமெரிக்க ஏகாதிபத்தியமும் சியோனிச இஸ்ரேலும் தோற்கடிக்கப்பட வேண்டும் - புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி தெரிவிப்பு 29 Mar, 2026 | 01:06 PM (க.சிவலிங்கமூர்த்தி) மத்திய கிழக்கின் இறையாண்மை கொண்ட நாடான ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து தொடுத்துள்ள ஆக்கிரமிப்புப் போர் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் எனவும், உலக மேலாதிக்கச் சக்தியான அமெரிக்க ஏகாதிபத்தியமும் அதன் கூட்டாளியான சியோனிச இஸ்ரேலும் தோற்கடிக்கப்பட வேண்டும் எனவும் புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி அறைகூவல் விடுத்துள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் சி.கா. செந்திவேல் விடுத்துள்ள விசேட அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது மத்திய கிழக்கில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த ஈரான் நாட்டை ஆக்கிரமித்து, அங்கு தமக்குச் சாதகமான ஒரு கைப்பொம்மை ஆட்சியை நிறுவுவதே அமெரிக்காவினதும் இஸ்ரேலினதும் நோக்கமாகும். கடந்த பெப்ரவரி மாதம் 28ஆம் திகதி ஈரானுக்கு எதிராகத் தொடங்கப்பட்ட இந்தக் கொடிய போர், தற்போது ஒரு மாதத்தை எட்டியுள்ளது. தனது உலக மேலாதிக்கத்தைத் தக்கவைக்க அமெரிக்காவும், தனது விரிவாக்கக் கனவை நனவாக்க இஸ்ரேலும் இணைந்து இந்த அநீதியான போரை முன்னெடுத்து வருகின்றன. அமெரிக்கா உலகின் முதல் நிலை வல்லரசு என்றும், இஸ்ரேல் அசைக்க முடியாத பலம் கொண்ட நாடு என்றும் கட்டமைக்கப்பட்டிருந்த பிம்பங்கள், ஈரானிய மக்களின் வீரமிக்க எதிர்ப்பினால் இன்று உடைந்து நொறுங்கி வருகின்றன. 'மக்களே உலக வரலாற்றின் உந்துசக்தி' என்பதை ஈரானிய மக்கள் இன்று உலகுக்கு நிரூ பித்துக் காட்டியுள்ளனர். ஏகாதிபத்திய எதிர்ப்பில் உறுதியாக நிற்கும் ஈரானிய மக்களுக்கும் அந்நாட்டு ஆட்சியாளர்களுக்கும் எமது கட்சியும் இலங்கை மக்களும் தமது முழுமையான ஆதரவையும் ஒருமைப்பாட்டையும் தெரிவிக்கின்றனர். ஏகாதிபத்தியம் என்பது போர் மற்றும் இரத்தத்தால் ஆனது என்பதை நடப்பு நிகழ்வுகள் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளன. இப்போரின் விளைவாக இலங்கை உள்ளிட்ட மூன்றாம் உலக நாடுகள் கடும் பொருளாதார நெருக்கடிகளைச் சந்தித்து வருகின்றன. எரிபொருள் தட்டுப்பாடு, அநியாயமான விலை ஏற்றம் மற்றும் பொருளாதார வீழ்ச்சி போன்றவற்றால் கோடிக்கணக்கான உழைக்கும் மக்களின் அன்றாட வாழ்வு சிதைக்கப்பட்டுள்ளது. பசி, பட்டினி மற்றும் வேலையில்லாத் திண்டாட்டத்தை உலக மக்களுக்குப் பரிசாக அளிக்கும் முதலாளித்துவ சக்திகள், மக்களின் வளங்களைச் சுரண்டி நவீன போராயுதங்களை உற்பத்தி செய்வதிலேயே குறியாக உள்ளனர். உலக மக்களின் பொது எதிரியான அமெரிக்க ஏகாதிபத்தியத்தையும் அதன் கூட்டாளியான சியோனிச இஸ்ரேலையும் முறியடிப்பது இன்றைய காலத்தின் உடனடித் தேவையாகும். எனவே, ஏகாதிபத்திய மேலாதிக்கத்தை எதிர்த்துப் போராட அனைத்து இடதுசாரி, முற்போக்கு மற்றும் ஜனநாயகச் சக்திகள் ஓரணியில் திரள வேண்டும் என எமது கட்சி கேட்டுக்கொள்கிறது என்றார். https://www.virakesari.lk/article/242217

மோடிக்கு நன்றி கூறிய அநுர

1 week 6 days ago
மோடிக்கு நன்றி கூறிய அநுர Mar 29, 2026 - 03:41 PM எரிபொருள் நெருக்கடிக்கு தீர்வாக இந்தியாவில் இருந்து எரிபொருள் கப்பல் ஒன்று இலங்கைக்கு அனுப்பப்பட்டமைக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க நன்றித் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க எக்ஸ் கணக்கில் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மத்திய கிழக்கு மோதலினால் இலங்கை எதிர்கொண்டுள்ள எரிபொருள் விநியோகத் தடைகள் குறித்து சில நாட்களுக்கு முன்னர் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் கலந்துரையாடினேன். இந்தியாவின் விரைவான ஆதரவிற்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நேற்று 38,000 மெட்ரிக் தொன் எரிபொருள் கொழும்பை வந்தடைந்தது. இதனை கிடைப்பதற்கு ஒருங்கிணைத்த இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கருக்கும் நன்றிகள் என தெரிவித்துள்ளார். https://adaderanatamil.lk/news/cmnblnbxc000n356p0byh5vr2

ஹோர்முஸ் நீரிணை வழியாக 20 பாகிஸ்தான் கப்பல்கள் பயணிக்க ஈரான் அனுமதி!

1 week 6 days ago
ஹோர்முஸ் நீரிணை வழியாக 20 பாகிஸ்தான் கப்பல்கள் பயணிக்க ஈரான் அனுமதி! Mar 29, 2026 - 02:39 PM பாகிஸ்தான் கொடியுடன் கூடிய 20 கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணை வழியாகப் பயணிப்பதற்கு ஈரான் இணக்கம் தெரிவித்துள்ளதாக பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்த உடன்படிக்கையின் கீழ், தினசரி இரண்டு பாகிஸ்தான் கப்பல்கள் வீதம் இந்த கடல் வழிப்பாதையின் ஊடாகப் பயணிக்கும் என பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் இஷாக் தார் தனது X தளத்தில் பதிவிட்டுள்ளார். "இது ஈரானால் எடுக்கப்பட்ட மிகவும் சாதகமான மற்றும் ஒத்துழைப்புடன் கூடிய ஒரு நடவடிக்கையாகும், இது பாராட்டப்பட வேண்டும்... இது அமைதிக்கான ஒரு முன்னோடியாகும் மற்றும் பிராந்தியத்தில் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த உதவும்" என இஷாக் தார் அங்கு குறிப்பிட்டுள்ளார். தற்போதைய பதற்றமான சூழ்நிலைகளைத் தணிப்பதற்கான ஒரு அர்த்தமுள்ள நடவடிக்கையாக இது அமைந்துள்ளதாகவும், அமைதிக்கான முயற்சிகளை வலுப்படுத்த இது வழிவகுக்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். https://adaderanatamil.lk/news/cmnbik3dy000m356ph638jyp3

மாகாணசபைத் தேர்தல் குறித்த பாராளுமன்ற விசேட குழுவில் சட்டமா அதிபர், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் முன்னிலை

1 week 6 days ago
மாகாணசபைத் தேர்தல் குறித்த பாராளுமன்ற விசேட குழுவில் சட்டமா அதிபர், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் முன்னிலை 29 Mar, 2026 | 01:07 PM (இராஜதுரை ஹஷான்) மாகாணசபைத் தேர்தல் குறித்து ஆராய்ந்து விதப்புரைகளை முன்வைக்க நியமிக்கப்பட்ட பாராளுமன்ற விசேட குழுவில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 7 ஆம் திகதி சட்டமா அதிபர் மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் ஆணைக்குழுவின் உயர் அதிகாரிகள் முன்னிலையாகவுள்ளனர். கடந்த 9 ஆண்டுகளாக மாகாண சபைகள் கூட்டப்படாததால் பல பிரச்சினைகள் தோற்றம் பெற்றுள்ளன. எனவே மாகாண சபைத் தேர்தல்களை பழைய விகிதாசார முறைப்படி நடத்த வேண்டும். பின்னர் தேர்தல் முறையைத் திருத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் செயற்குழுவில் முன்மொழிந்தனர். மாகாண சபைத் தேர்தல்களை எந்தத் தேர்தல் முறைமையின் கீழ் நடத்தப்பட வேண்டும் என்பதை ஆராய்ந்து அறிக்கையிடுவதற்கும், அது தொடர்பான முன்மொழிவுகளையும் விதப்புரைகளையும் சமர்ப்பிப்பதற்கான பாராளுமன்ற விசேட குழு அதன் தலைவர் அமைச்சர் விஜித ஹேரத் தலைமையில் கடந்த 17 ஆம் திகதி முதல் தடவையாகக் கூடியது. மாகாணசபைத் தேர்தல்கள் சட்டம் திருத்தப்பட்டு தற்பொழுது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள 2017ஆம் ஆண்டின் 17ஆம் இலக்க சட்டத்தின் ஏற்படுகளுக்கு அமைய அறிமுகப்படுத்தப்பட்டுள்ள கலப்பு விகிதாசார பிரதிநிதித்துவ முறையை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான வட்டார எல்லைகளை தீர்மானிக்கும் நடைமுறை இதுவரையில் பூர்த்திசெய்யப்படாமையால் உருவாகியுள்ள சட்டரீதியான தடையின் காரணமாக மாகாண சபை தேர்தல்களை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது என்று குழுவின் தலைவர் அமைச்சர் விஜித்த ஹேரத் சுட்டிக்காட்டியுள்ளார். கல்வி மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட பெரும்பாலான முக்கிய நிறுவனங்கள் மாகாண சபைகள் மூலமே நிர்வகிக்கப்படுகின்றன என்று எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் இதன்போது சுட்டிக்காட்டினர். இதற்கமைய கடந்த 9 ஆண்டுகளாக மாகாண சபைகள் கூட்டப்படாததால் பல பிரச்சினைகள் எழுந்துள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். எனவே மாகாண சபைத் தேர்தல்களை பழைய விகிதாசார முறைப்படி நடத்த வேண்டும் என்றும், பின்னர் தேர்தல் முறையைத் திருத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முன்மொழிந்தனர். மாகாணசபைத் தேர்தல்களில் பெண்களின் பிரதிநிதித்துவத்தையும் இளைஞர்களின் பிரதிநிதித்துவத்தையும் கட்டாயமாக்கும் ஒரு தேர்தல் முறையை உருவாக்குவத தொடர்பில் பரந்த, ஆழமான கலந்துரையாடல்களை முன்னெடுக்க வேண்டியதன் அவசியத்தை குழுவின் தலைவர் வலியுறுத்தினார். அதன்படி, மாகாணசபைத் நடத்துவதற்கு தற்போதைய சட்ட நிலைமை குறித்த அடிப்படைப் புரிதலைப் பெறுவதன் முக்கியத்துவத்தை தலைவர் வலியுறுத்தியுள்ளதுடன், இது தொடர்பான சட்ட ரீதியான வாய்ப்புக்கள் குறித்த கருத்துக்களைப் பெறுவதற்காக சட்டமாஅதிபர் அலுவலகம் மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழு ஆகியவற்றின் அதிகாரிகளை அழைப்பதற்கும் குழுவின் தலைவர் முன்மொழிந்தார்.இதற்கமைய சட்டமா அதிபர் மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் அதிகாரிகள் எதிர்வரும் 7 ஆம் திகதி குழுவில் முன்னிலையாகவுள்ளனர். https://www.virakesari.lk/article/242218

அமெரிக்காவின் சதித்திட்டம் தொடர்பில் ஈரானின் வௌிப்படுத்தல்

1 week 6 days ago
"நரகத்திற்கு வரவேற்கிறோம்" - அமெரிக்காவின் தரைவழித் தாக்குதல் ஊகங்களுக்கு இரான் கூறும் பதில் என்ன? பட மூலாதாரம்,American marin VANO SHLAMOV AFP via Getty Images படக்குறிப்பு,இரான் நாட்டில் தரைவழித் தாக்குதலைத் தொடங்க அமெரிக்கா தயாராகி வருவதாக வாஷிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது (கோப்புப் படம்). 16 நிமிடங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள் இந்தியாவிலுள்ள இரான் தூதரகம், 'தெஹ்ரான் டைம்ஸ்' பத்திரிகையின் ஒரு சிறப்புப் பதிப்பின் பக்கத்தைப் பகிர்ந்து, 'நரகத்திற்கு உங்களை வரவேற்கிறோம்' என்று எழுதியுள்ளது. தெஹ்ரான் டைம்ஸின் அந்தப் பக்கத்தின் தலைப்பே 'நரகத்திற்கு உங்களை வரவேற்கிறோம்' என்பதுதான். அதில், "இரான் மண்ணில் கால் வைக்கும் அமெரிக்க வீரர்கள் சவப்பெட்டிகளில் மட்டுமே திரும்புவார்கள்" என்றும் எழுதப்பட்டுள்ளது. முன்னதாக, பென்டகன் இரான் மீது பல வாரங்களுக்கு தரைவழித் தாக்குதல் நடத்தத் தயாராகி வருவதாக 'வாஷிங்டன் போஸ்ட்' ஆங்கில இதழ் எழுதியிருந்தது. "பேச்சுவார்த்தை ஒருபுறம், தாக்குதல் சதி மறுபுறம்" பட மூலாதாரம்,Ghalibaf NurPhoto via Getty Images படக்குறிப்பு,இரான் சரணடைவது குறித்த கேள்விக்கு பதிலளித்த இரான் நாடாளுமன்ற சபாநாயகர் காலிபாஃப், இரான் "அவமானத்தை" ஏற்காது என்று கூறினார் (கோப்புப் படம்). இரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப் விடுத்த செய்தியை இரான் அரசு செய்தி நிறுவனமான ஐஆர்என்ஏ உள்ளிட்ட பல இரான் ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. போர் தொடங்கி 30 நாட்கள் நிறைவடைந்ததையொட்டி விடுத்த இந்தச் செய்தியில் காலிபாஃப் கூறுகையில், "எதிரி பகிரங்கமாகப் பேச்சுவார்த்தைக்கான சமிக்ஞைகளைத் தருகிறதி, ஆனால் திரைக்குப் பின்னால் தரைவழித் தாக்குதலுக்கான சதியைத் தீட்டுகிறது" என்றார். மேலும் அவர், அமெரிக்கா "போரின் மூலம் அடைய முடியாத 15 அம்சப் பட்டியலுடன் தனது விருப்பங்களை முன்வைக்கிறது" என்றும் கூறினார். " அவர்கள் மீது நெருப்பை மழை எனப் பொழிவதற்காக அமெரிக்க வீரர்கள் தரை இறங்குவதற்காக இரான் படைகள் காத்திருக்கின்றன, " என்றும் காலிபாஃப் கூறினார். இரான் சரணடைவது குறித்த கேள்விக்கு, அரபு மொழியில் பதிலளித்த காலிபாஃப், இரான் வழங்கும் செய்தி 'மிகவும் தெளிவானது' என்றும் அது 'அவமானத்தை' ஏற்காது என்றும் கூறினார். இதற்கிடையில், சில உறுதிப்படுத்தப்படாத செய்திகள், டிரம்ப் நிர்வாகம் காலிபாஃப்பை ஒரு சாத்தியமான பங்காளியாகவும், வருங்காலத் தலைவராகவும் கருதுவதாகக் கூறுகின்றன. தரைவழித் தாக்குதலுக்குத் தயாரிப்பா? பட மூலாதாரம்,Reuters படக்குறிப்பு,'யுஎஸ்எஸ் திரிப்போலி' போர்க்கப்பல் இப்பகுதிக்கு வந்து சேர்ந்ததாக அமெரிக்க சென்ட்ரல் கமாண்ட் சனிக்கிழமையன்று தெரிவித்துள்ளது. ஆங்கில நாளிதழான வாஷிங்டன் போஸ்ட் செய்தியின்படி, பென்டகன் இரான் மீது பல வாரங்களுக்கு தரைவழித் தாக்குதல் நடத்தத் தயாராகி வருகிறது. அப்பத்திரிகையின்படி, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தாக்குதல் திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்தால், போரின் ஒரு புதிய கட்டம் தொடங்கும். இது முதல் நான்கு வாரங்களுடன் ஒப்பிடும்போது அமெரிக்க வீரர்களுக்கு மிகவும் ஆபத்தானதாக இருக்கும். அமெரிக்க சென்ட்ரல் கமாண்ட் சனிக்கிழமையன்று, 'யுஎஸ்எஸ் திரிப்போலி' போர்க்கப்பல் இப்பகுதிக்கு வந்து சேர்ந்ததாகத் தெரிவித்துள்ளது. சமூக வலைதளப் பதிவின்படி, யுஎஸ்எஸ் திரிப்போலி தலைமையிலான பிரிவில் 5,000 மாலுமிகள் மற்றும் கடற்படை வீரர்கள் உள்ளனர், அவர்கள் பல போர்க்கப்பல்களில் நிறுத்தப்பட்டுள்ளனர். படக்குறிப்பு,தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2026, தொடர்பான செய்திகள், காணொளிகள், நேர்காணல்களை படிக்க, பார்க்க... தற்போதைய திட்டங்களின்படி, இத்தகைய தரைவழி நடவடிக்கைகள் முழு அளவிலான தாக்குதலாக இருக்காது, மாறாக சிறப்பு அதிரடிப் படைகள் மற்றும் வழக்கமான காலாட்படை வீரர்களின் கூட்டுத் தாக்குதல் நடவடிக்கைகளாக இருக்கும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. கடலில் உள்ள கப்பல்களில் 4,000-க்கும் மேற்பட்ட அமெரிக்க கடற்படை வீரர்கள் இருப்பதாகவும், அவர்கள் வளைகுடா பகுதியை நோக்கி முன்னேறி வருவதாகவும் கருதப்படுகிறது. இது தவிர, 82-வது ஏர் போர்ன் டிவிஷனின் பாராட்ரூப்பர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர் மற்றும் கூடுதல் வீரர்களை அனுப்புவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இதற்கு மத்தியில் எகிப்து, செளதி அரேபியா மற்றும் துருக்கி ஆகிய மூன்று நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் மத்திய கிழக்கின் நிலைமை குறித்து விவாதிக்க பாகிஸ்தானில் கூடியுள்ளனர். அமெரிக்கா மற்றும் இரான் இடையிலான பேச்சுவார்த்தைக்குத் தலைமை தாங்க பாகிஸ்தான் முன்வந்துள்ளது. இதுவரை அமெரிக்கா என்ன கூறியுள்ளது? பட மூலாதாரம்,Reuters படக்குறிப்பு,எந்தவொரு தரைவழிப் படையும் இல்லாமலேயே அமெரிக்கா தனது இலக்குகளை எட்ட முடியும் என்று அமெரிக்க வெளியுறவு செயலாளர் மார்கோ ரூபியோ வெள்ளிக்கிழமையன்று கூறினார். இந்த மாதத்தில் முன்னதாக டிரம்ப் செய்தியாளர்களிடம் கூறுகையில், "நான் எங்கும் படைகளை அனுப்பவில்லை" என்றார், ஆனால் உடனடியாக அவர், "ஒருவேளை நான் அனுப்பிக் கொண்டிருந்தால், நிச்சயமாக உங்களிடம் சொல்ல மாட்டேன்" என்றும் சேர்த்துக் கொண்டார். வெள்ளிக்கிழமை அன்று, அமெரிக்க வெளியுறவு செயலாளர் மார்கோ ரூபியோ கூறுகையில், "எந்தவொரு தரைவழிப் படையும் இல்லாமலேயே" அமெரிக்கா தனது இலக்குகளை அடைய முடியும் என்றார். சமீபத்திய ராணுவ நகர்வுகள் டிரம்பிற்கு வாய்ப்புகளை வழங்குவதற்காகவே என்பதையும் அவர் தெளிவுபடுத்தினார். அவர் கூறுகையில், "சூழ்நிலைக்கு ஏற்ப முடிவுகளை மாற்ற அதிபருக்கு அதிகபட்ச வாய்ப்புகளை வழங்க நாங்கள் எப்போதும் தயாராக இருக்கிறோம்" என்றார். யுஎஸ்எஸ் திரிபோலி போர்க்கப்பல் அந்தப் பகுதியை அடைந்துவிட்டதாக அமெரிக்க செண்ட்ரல் கமாண்ட் சனிக்கிழமை தெரிவித்தது. அமெரிக்கா மீதான அவநம்பிக்கை புதியதல்ல அமெரிக்கா மீது காலிபாஃப் அவநம்பிக்கை தெரிவிப்பது இது முதல் முறையல்ல. திரைக்குப் பின்னால் என்ன நடக்கிறது என்பது குறித்த விரிவான தகவல்கள் பிபிசிக்குத் தெரியவில்லை என்றாலும், ஒரு விஷயம் தெளிவாக உள்ளது. 1979 புரட்சிக்குப் பிறகு, இரான் கொள்கைகள் பெருமளவிற்கு மேற்கத்திய அரசியல், கலாச்சார மற்றும் கருத்தியல் செல்வாக்கிற்கு எதிரானதாகவே இருந்து வருகின்றன. மேலும் அது அமெரிக்கா மற்றும் இஸ்ரேலைத் தனது முக்கிய எதிரிகளாகப் பார்க்கிறது. பிப்ரவரி 28 அன்று தொடங்கிய தற்போதைய போர், ஜெனிவாவில் அமெரிக்கா மற்றும் இரான் இடையிலான மறைமுக அணுசக்தி பேச்சுவார்த்தையின் மூன்றாவது சுற்று முடிந்த இரண்டு நாட்களுக்குப் பிறகு தொடங்கியது. பட மூலாதாரம்,Reuters படக்குறிப்பு,முகமது பாகர் காலிபாஃப், இரான் நாடாளுமன்றத்தின் சபாநாயகர். கடந்த கோடைகாலத்திலும், அமெரிக்காவும் இரான் நாடும் அணுசக்தி பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருந்தபோது இரான் மீதான தாக்குதல்கள் தொடங்கின. இதன் காரணமாக இரான் மற்றும் இஸ்ரேல் இடையே 12 நாட்கள் போர் நடந்தது, மேலும் அமெரிக்கா இரான் நாட்டின் மூன்று முக்கியமான அணுசக்தி நிலையங்கள் மீது குண்டுவீசித் தாக்குதல் நடத்தியது. 2015 ஒப்பந்தத்திலிருந்து டிரம்ப் வெளியேறிய பிறகு, அமெரிக்காவை நம்ப முடியுமா இல்லையா என்ற அளவுகோலிலேயே இரான் அதிகாரிகள் எந்தவொரு ஒப்பந்தத்தையும் பார்க்கிறார்கள். இப்போது அவர்கள் முன்பை விட அதிக சந்தேகத்துடன் உள்ளனர். கத்தார் தொலைக்காட்சி நிலையம் மீது தாக்குதல் நடத்திய 10 ட்ரோன்களை செளதி அரேபியா தடுத்தது இதற்கிடையில், ஞாயிற்றுக்கிழமை மதியம் செளதி அரேபியா கடந்த சில மணி நேரங்களில் 10 ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியதாகத் தெரிவித்தது. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் குவைத் உள்ளிட்ட பிற வளைகுடா நாடுகளும் இரவு முழுவதும் தாக்குதல்கள் நடந்ததாகக் கூறியுள்ளன. கத்தாரின் அல் அரபி தொலைக்காட்சி நிறுவனம், தெஹ்ரானிலுள்ள அதன் அலுவலகம் ஏவுகணைத் தாக்குதலால் சேதமடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. அந்த நிறுவனம் எக்ஸ் தளத்தில் ஒரு வீடியோவைப் பகிர்ந்துள்ளது, அதில் உடைந்த கண்ணாடித் துண்டுகள் மற்றும் இடிபாடுகள் காணப்படுகின்றன. இந்த ஏவுகணையை யார் ஏவினார்கள் என்பது தெளிவாகத் தெரியவில்லை. இஸ்ரேல் இது குறித்து கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. துபையிலுள்ள எமது செய்தியாளரின் கூற்றுப்படி, கடந்த 24 மணிநேரத்தில் இப்பகுதியில் பலமுறை தாக்குதல்கள் நடந்துள்ளன. Get in touch பிரச்னைகளைப் பேசுவோம் - 2 | பெண்கள் பாதுகாப்பு Contact form - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cddqy1l8238o

எரிபொருள் செலவைக் குறைக்க அவுஸ்திரேலியாவின் 02 மாநிலங்களில் இலவசப் பொதுப் போக்குவரத்து

1 week 6 days ago
எரிபொருள் செலவைக் குறைக்க அவுஸ்திரேலியாவின் 02 மாநிலங்களில் இலவசப் பொதுப் போக்குவரத்து Published By: Digital Desk 3 29 Mar, 2026 | 11:36 AM (இணையத்தள சர்வதேச செய்திப் பிரிவு) மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போரினால் எரிபொருள் விநியோகம் தடைப்பட்டு, பெற்றோல் நிலையங்களில் நீண்ட வரிசைகள் காணப்படுகின்றன. இந்நிலையில், பொதுமக்களின் குடும்பச் செலவுகளைக் குறைக்கும் நோக்கில் அவுஸ்திரேலியாவின் விக்டோரியா மற்றும் தாஸ்மேனியா மாநில அரசுகள் பொது போக்குவரத்தை முற்றிலும் இலவசமாக வழங்க முன்வந்துள்ளன. விக்டோரியா மாநில அரசாங்கம் எதிர்வரும் மார்ச் 31 முதல் ஏப்ரல் இறுதி வரை ஒரு மாத காலத்திற்கு அனைத்து ரயில்கள், டிராம்கள் மற்றும் பஸ்களை இலவசமாக வழங்குகிறது. பயணிகள் தங்களது பயண அட்டைகளைப் பயன்படுத்தத் தேவையில்லை. அனைத்து நுழைவு வாயில்களும் திறந்து விடப்படும். இதன் மூலம் ஒரு சாதாரண பயணி மாதம் சுமார் 220 முதல் 250 டொலர்கள் வரை சேமிக்க முடியும் என மாநில முதல்வர் ஜசிந்தா ஆலன் தெரிவித்துள்ளார். தாஸ்மேனியா மாநிலத்தில் பஸ்கள் மற்றும் படகு சேவைகள் மார்ச் 30 முதல் ஜூலை 1 ஆம் திகதி வரை இலவசமாக அமுலில் இருக்கும். இதன்மூலம், டாட்ஜஸ் ஃபெரியிலிருந்து ஹோபார்ட்டிற்கு வேலைக்குச் செல்லும் ஒருவர் வாரத்திற்கு 88 டொலர்கள் வரை சேமிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எரிபொருள் தட்டுப்பாட்டைச் சமாளிக்க அவுஸ்திரேலிய மத்திய அரசாங்கம் நாளை திங்கட்கிழமை பாராளுமன்றத்தில் அவசரகாலச் சட்டங்களை அறிமுகப்படுத்தவுள்ளது. நிறுவனங்கள் சர்வதேச சந்தையில் அதிக விலைக்கு எரிபொருளைக் கொள்வனவு செய்யும் போது, அதற்கான காப்புறுதியை அரசாங்கம் ஏற்கும். தற்போது அவுஸ்திரேலியாவிடம் 39 நாட்களுக்கான ப பெற்றோலும், 30 நாட்களுக்கான டீசலும் கையிருப்பில் உள்ளதாகப் பிரதமர் அந்தோனி அல்பானீஸ் உறுதிப்படுத்தியுள்ளார். வாகனங்களைப் பயன்படுத்துவதைக் குறைத்து, முடிந்தவரை வீடுகளிலிருந்து வேலை செய்யுமாறும், தேவையற்ற முறையில் எரிபொருளைச் சேமித்து வைக்க வேண்டாம் எனவும் அவுஸ்திரேலிய பிரதமர் கேட்டுக்கொண்டுள்ளார். https://www.virakesari.lk/article/242192

அமெரிக்காவின் சதித்திட்டம் தொடர்பில் ஈரானின் வௌிப்படுத்தல்

1 week 6 days ago
அமெரிக்காவின் சதித்திட்டம் தொடர்பில் ஈரானின் வௌிப்படுத்தல் Mar 29, 2026 - 02:18 PM அமெரிக்கா பகிரங்கமாக பேச்சுவார்த்தைக்கான சமிக்ஞைகளை வெளிப்படுத்திவிட்டு, இரகசியமாக தரைவழித் தாக்குதலுக்குச் சதி செய்து வருவதாக ஈரானின் பாராளுமன்ற சபாநாயகர் மொஹமட் பாகர் கலிபாப் தெரிவித்துள்ளார். ஈரான் உத்தியோகபூர்வ செய்தி நிறுவனமான IRNA இந்த செய்தியை இன்று (29) வௌியிட்டுள்ளது. அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, அமெரிக்கா பகிரங்கமாக பேச்சுவார்த்தைக்கான சமிக்ஞைகளை வெளிப்படுத்துகிறது. ஆனால் இரகசியமாக தரைவழித் தாக்குதலுக்குச் சதி செய்வதை அறியமுடிந்துள்ளது. அமெரிக்கா 15 அம்ச ஒப்பந்தம் ஒன்றை கொண்டு தமது விருப்பங்களை முன்வைப்பதன் மூலம், போரில் அடையத் தவறியதை நிலைநாட்ட முயல்கிறது என்றார். அமெரிக்க வீரர்கள் தரைவழியாக உள்ளே நுழைவதற்காக ஈரானியப் படைகள் காத்திருப்பதாகவும், அவர்கள் மீது நெருப்பு மழையைப் பொழிவோம் என்றும் கலிபாப் எச்சரித்துள்ளார். ஈரான் சரணடைவது குறித்த கேள்விக்கு அரபு மொழியில் பதிலளித்துள்ள கலிபாப், ஈரானின் செய்தி தெளிவானது என்றும், தாங்கள் ஒருபோதும் அவமானப்படுவதை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்றும் கூறியுள்ளார். இதற்கிடையில், ட்ரம்ப் நிர்வாகம் கலிபாப்பை ஒரு சாத்தியமான பங்காளியாகவும், ஒருவேளை எதிர்காலத் தலைவராகவும் கருதியதாக உறுதிப்படுத்தப்படாத சில தகவல்கள் தெரிவிக்கின்றன. https://adaderanatamil.lk/news/cmnbiod140000356pm1cq3tv6

5 ஆண்டு கால எண்ணெய் ஒப்பந்தத்திற்கு ரஷ்யா அழைப்பு - அணுமின் நிலையத் திட்டத்தை அரசாங்கம் நிராகரித்தது

1 week 6 days ago
5 ஆண்டு கால எண்ணெய் ஒப்பந்தத்திற்கு ரஷ்யா அழைப்பு - அணுமின் நிலையத் திட்டத்தை அரசாங்கம் நிராகரித்தது 29 Mar, 2026 | 11:34 AM (லியோ நிரோஷ தர்ஷன்) இலங்கையின் தற்போதைய எரிபொருள் மற்றும் மின்சார நெருக்கடியைத் தீர்ப்பதற்காக ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் கொள்வனவு செய்வது தொடர்பான பேச்சுவார்த்தைகளில் புதிய திருப்பங்கள் ஏற்பட்டுள்ளன. இலங்கைக்கு அணுமின் நிலையத் திட்டத்தை வழங்க ரஷ்யா முன்வைத்த கோரிக்கையை அரசாங்கம் நிராகரித்துள்ள நிலையில், நீண்ட கால எண்ணெய் ஒப்பந்தம் தொடர்பாக ரஷ்யா நிபந்தனைகளை விதித்துள்ளது. ரஷ்ய வலுசக்தி பிரதி அமைச்சர் றோமன் மார்ஷவின் இலங்கை விஜயத்தின் போது மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடல்களில் அணுமின் நிலையம் குறித்து பேசப்பட்டதா? என அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸவிடம் வினாவிய போது, இது தொடர்பான விபரங்களை ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிடும் எனத் தெரிவித்தார். எனினும், வெளிவிவகார அமைச்சு இதனை உறுதிப்படுத்தியுள்ளதுடன், ரஷ்யாவின் அணுமின் நிலையத் திட்டக் கோரிக்கையை இலங்கை நிராகரித்துள்ள அதேவேளை, எண்ணெய் கொள்வனவுக்கான ஒப்பந்தம் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டது. தற்போது நிலவும் எரிபொருள் தட்டுப்பாட்டைப் போக்க ரஷ்யாவிடம் அரசாங்கம் கோரிக்கை விடுத்ததற்குப் பதிலளித்துள்ள ரஷ்யா, ஆரம்பகட்டமாக இரண்டு எரிபொருள் கப்பல்களை வழங்க முன்வந்துள்ளது. ஆனால், இந்த இரண்டு கப்பல்களைப் பெற்ற பிறகு, அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு ரஷ்யாவிடமிருந்து எண்ணெயைப் பெறுவதற்கான நிரந்தர ஒப்பந்தத்தில் இலங்கை கையெழுத்திட வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. இந்த நிபந்தனைக்கு இலங்கை சம்மதித்தால் மட்டுமே, மேலதிக ஒப்பந்தங்களுக்காக ரஷ்ய அமைச்சர் மீண்டும் இலங்கைக்கு விஜயம் செய்வார். இருப்பினும், ரஷ்யா மீதான அமெரிக்காவின் தடைகள் தற்போது முப்பது நாட்களுக்கு மட்டுமே நீக்கப்பட்டுள்ள சூழலில், ஐந்து ஆண்டு கால ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவது இலங்கைக்குப் பாரிய இராஜதந்திர நெருக்கடியை ஏற்படுத்தலாம் என அஞ்சப்படுகிறது. முப்பது நாட்களுக்குப் பிறகு அமெரிக்கா மீண்டும் தடைகளை விதித்தால், ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவது சர்வதேச ரீதியில் இலங்கையைப் பாதிக்கலாம். இதற்கிடையில், அணுசக்தி திட்டத்தை மேம்படுத்தும் தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாக, முதல் அணுமின் நிலையத்தை அமைப்பதற்கான ஐந்து சாத்தியமான தளங்களை இலங்கை அடையாளம் கண்டுள்ளதாக சர்வதேச அணுசக்தி நிறுவனம் 2025 ஆம் ஆண்டு ஜுலை மாதத்தில் உறுதிப்படுத்தியது. அணுசக்தி உள்கட்டமைப்பை மேம்படுத்துவதில் இலங்கை குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை அடைந்துள்ளதாகக் குறிப்பிட்டிருந்த சர்வதேச அணுசக்தி நிறுவனம், குறிப்பாக உலை கொள்முதல் செய்வதற்கான ஒரு மேலாண்மை கட்டமைப்பை இலங்கை நிறுவியதுடன், விரிவான அணுசக்தி சட்ட வரைவையும் உருவாக்கி, 2025-2044 ஆம் ஆண்டுக்கான தேசிய நீண்டகால எரிசக்தி திட்டத்தில் அணுசக்தியைச் சேர்த்துள்ளதையும் சுட்டிக்காட்டியது. ஆனால் ரஷ;ய தரப்பு இத்திட்டம் குறித்து கோரிக்கையை முன்வைத்த போது தற்போதைய அரசாங்கம் அதனை நிராகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/242202

இஸ்ரேல் மீது ஹூதி போராளிகள் ஏவுகணை தாக்குதல்

1 week 6 days ago
சிறியர், இங்கு போர் சம்மந்தமாக பகிரப்படும் கருத்துக்களை அவ்வப்போது பார்க்கின்றேன். வேறு பல தகவல் தளங்களிலும் பொது அபிப்பிராயங்களை பார்க்கின்றேன். இங்கு பிரச்சனை என்ன என்றால் பகிரப்படும் தகவல்கள் ஏதோ ஒரு தரப்புக்கு பக்கச்சார்பானதாகவோ/ஆதரிப்பதாகவோ/ஊக்குவிப்பதாகவோ உள்ளன. சுய, விறுப்பு வெறுப்புக்களை ஒரு பக்கம் தூக்கி எறிந்துவிட்டு யதார்த்தத்தை, உண்மை நிலையை அறிவுபூர்வமாக ஆராயும் பக்குவ நிலையான தகவல்கள் ஏறக்குறைய எங்கும் இல்லை. சுய அடையாளங்கள், குறுகிய வட்டங்களுக்கு அப்பால் சென்று பரந்த வீச்சில், அனைவருக்குமான சிறப்பான எதிர்காலம் என பார்த்தால் இப்போதுள்ள குழப்பங்கள் எமது எதிர்காலத்து வாழ்க்கையை, எமது சந்ததிகளை வெகுவாக பாதிக்கும். நொருங்கிய இடிந்த கட்டடத்துக்குள் குற்றுயிராக கிடப்பது எந்த நாட்டவன் எந்த இனத்தவர் என இனம்கண்டு அவர்கள் மீது இரக்கம் கொள்வதும் அல்லது திருப்தி அடைவதும், ஆட்களின் அடையாளத்தின் அடிப்படையில் அவர்களது இறப்பை கொண்டாடுவதும், துக்கம் அடைவதும் நாங்கள் அடிப்படை மனித விழுமியங்கள், உயர்வான நிலையை விட்டு விலகி இதர காட்டு விலங்கினங்கள் போல் பின்னோக்கிய பரிணாமத்திற்கு திரும்புகின்றோம் என்பதை குறிக்கின்றது.

தமிழர் பிரச்சினைகள் தொடர்பில் தீர்மானங்களை மேற்கொள்ள 9 பேரடங்கிய இணைக்குழு நியமனம் தமிழரசுக்கட்சி - ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணி சந்திப்பில் தீர்மானம்

1 week 6 days ago
நீங்கள், இவ்வளவு நாளும் புடுங்கின ஆணியே போதும். இனி... ஒரு ஆணியும் புடுங்க வேண்டாம். தமிழருக்கு, நீங்கள் தான் பிரச்சினையே.... முதலில்... உங்கள் கட்சியின் பிரச்சினையை தீருங்கள். மிச்சத்தை பிறகு பாப்பம்.

யாழில். கைப்பற்றப்படும் சட்டவிரோத மணலை , காவல்நிலையத்தில் வைத்து ஏலத்தில் விட தீர்மானம்

1 week 6 days ago
கைப்பற்றப்படும் சட்டவிரோத மணலை திரும்பவும் அள்ளிய இடத்தில் கொண்டு கொட்டச் செய்தால் நிலம் பழுதாகாது பாதுகாக்கப்படுமே.🤔

தமிழர் பிரச்சினைகள் தொடர்பில் தீர்மானங்களை மேற்கொள்ள 9 பேரடங்கிய இணைக்குழு நியமனம் தமிழரசுக்கட்சி - ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணி சந்திப்பில் தீர்மானம்

1 week 6 days ago
ஆனை முகனை தொழுதால் நவகிரகங்களும் மகிழும். நல்லதே நடக்கும். நல்லதே நடக்கும். ஒன்பது கோளும் ஒன்றாய் காண. பிள்ளையார் பட்டி வர வேண்டும். அங்கு கற்பகம் என்னும் கடவுளின் மெய்யில். உறையும் அவரை தொழ வேண்டும்.🙏🤩

ஈரானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகள் சில வாரங்களில் நிறைவடையும்

2 weeks ago
கவுண்டமணி: யுத்தத்த எப்போ நிறுத்துவீங்க சார்? ட்ரம்ப்: ஹோர்முஸ்ஸ திறந்தா நிப்பாட்டிடுவன். கவுண்டமணி: நீங்க யுத்தத்த ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி, ஹோர்முஸ் எப்டி இருந்துச்சு சார்? டிரம்ப்: திறந்திருந்துச்சு. கவுண்டமணி: அப்போ என்ன மயிருக்கு யுத்தத்த ஆரம்பிச்ச?🤣"

அமெரிக்கா முழுவதும் ட்ரம்ப் நிர்வாகத்திற்கு எதிராக பாரிய போராட்டம்

2 weeks ago
ரம்புக்கு வந்த சோதனை😁, ஆடாதைய மனித ஆடாதே. கேள்விப்பட்டது Bharain இனில் அமெ படைகள் தளங்களை விட்டு மக்களுடன் கலந்துள்ளார்களாம்🫠

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 - செய்திகள்

2 weeks ago
ஆனாலும் அண்ணனின் தொழில் நேர்த்தி வியக்கத்தக்கது. என்னதான் சபரீசனிடம் பெட்டி வாங்கினாலும்….திரள்நிதியை திரட்டாமல் விடுவதும் இல்லை. அதற்கும் முழு எபெர்ட் போடுகிறார். இங்கே Tesco அன்ற பல்பொருள் அங்காடியின் மகுட வாக்கியம் அண்ணனுக்கும் பொருந்தும். Every little helps 😂

உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு

2 weeks ago
வணக்கம் வாத்தியார் . .......! ஆண் : ………………………………….. ஆண் : உன்னை நான் பார்த்தது வெண்ணிலா வேளையில் உன் வண்ணங்கள் கண்ணோடுதான் உன் எண்ணங்கள் நெஞ்சோடுதான் ஆண் : நான் உனக்காகவே பாடுவேன் கண் உறங்காமலே பாடுவேன் ஆண் : அன்று ஒரு பாதி முகம்தானே கண்டேன் இன்று மறுபாதி எதிர்பார்த்து நின்றேன் கை வளையோசை கடல் பொங்கும் அலையோசையோ என செவியாற நான் கேட்க வரவில்லையோ ஆண் : கம்பன் மகனாக நான் மாற வேண்டும் கன்னித் தமிழால் உன் எழில் கூற வேண்டும் என் மகராணி மலர்மேனி செம்மாங்கனி என் மடிமீது குடியேறி முத்தாடவா ஆண் : எங்குத் தொட்டாலும் இனிக்கின்ற செந்தேன் உன்னைத் தொடராமல் நானிங்கு வந்தேன் நான் மறந்தாலும் மறவாத அழகல்லவா நாம் பிரிந்தாலும் பிரியாத உறவல்லவா .......! ...... உன்னை நான் பார்த்தது .....

வாழ்நாள் போராளிகள்; முன்னாள் போராளிகள்; இந்நாள் போராளிகள்! நிலாந்தன்.

2 weeks ago
வாழ்நாள் போராளிகள்; முன்னாள் போராளிகள்; இந்நாள் போராளிகள்! நிலாந்தன். கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் டில்கோ விருந்தினர் விடுதியில் ஒரு கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டது.”போராளிகள் நலன்புரி அமைப்பினால்” ஏற்பாடு செய்யப்பட்ட இக்கருத்தரங்கில், “சமகால அரசியலில் போராளிகளின் வகிபாகம்” என்ற தலைப்பின் கீழ் பலரும் உரையாற்றினார்கள். போராளிகள் நலன்புரி அமைப்பு என்பது விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து 2009க்குப்பின் புனர்வாழ்வு பெற்ற,தடுப்பிலிருந்து விடுதலை செய்யப்பட்ட,அல்லது கைது செய்யப்பட்ட பின் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர்களைக் கொண்ட அமைப்பாகும். முன்னாள் விடுதலைப் புலிகள் இயக்கத்தவர்கள் கடந்த 16 ஆண்டுகளாக ஜனநாயக நீரோட்டத்தில் பங்கெடுப்பதற்காக வெவ்வேறு கட்டமைப்புகளை உருவாக்கி வந்திருக்கிறார்கள். இந்த பெரும்பாலான கட்டமைப்புகளில் அங்கம் வகிப்பவர்கள் போராளிகள் என்று தங்களை அழைத்துக் கொள்கிறார்கள்.அதேசமயம் அவர்களில் ஒரு பகுதியினர் தங்களை முன்னாள் போராளிகள் என்றும் அழைத்துக் கொள்கிறார்கள்.அரசியல்வாதிகள், செயற்பாட்டாளர்கள்,என்.ஜி.ஓக்கள்,ஊடகங்கள் என்று எல்லா இடங்களிலும் இந்த முன்னாள் போராளிகள் என்ற வார்த்தைப் பிரயோகம் உண்டு. இது தொடர்பாக கடந்த கிழமைக்கு முதல் கிழமை யாழ்ப்பாணத்தில் நடந்த ஒரு கூட்டத்தில் தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் ஐங்கரநேசன் சுட்டிக்காட்டிப் பேசியிருந்தார்.அந்தக் கூட்டம் தமிழகத்தின் மூத்த கொம்யூனிஸ்ட் தலைவராகிய நல்லகண்ணுவுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக ஒழுங்கு செய்யப்பட்ட கூட்டம்.நல்லகண்ணுவை தமிழக முதல்வர் “வாழ்நாள் போராளி “என்று அழைத்திருந்தார்.ஆனால் “தமிழ் மக்களில் ஒரு பகுதியினரை நாங்கள் முன்னாள் போராளிகள் என்று அழைக்கிறோம்” என்று ஐங்கரநேசன் சுட்டிக்காட்டினார். முன்னாள் போராளிகள் என்று அழைத்தால் அதன் பொருள் அவர்கள் இப்பொழுது போராளிகள் இல்லை என்பதாகும்.ஆனால் போராளி என்பது ஒரு பதவி அல்ல.அதில் முன்னாள்,இந்நாள் என்று அழைக்கலாமா? ஒரு போராளி கட்டாயம் இயக்கங்களில் இருக்க வேண்டும் என்று இல்லை.ஆயுதம் ஏந்திப் போராடினால் மட்டும்தான் ஒருவர் போராளி என்று அழைக்கப்பட வேண்டும் என்று இல்லை.சமூகத்தின் வெவ்வேறு விவகாரங்களை முன்வைத்துப் போராடும் அனைவருமே போராளிகள்தான்.சமூக விடுதலைபி போராளிகள், பெண்விடுதலைப் போராளிகள்…. என்று சமூகத்தின் சிறுமை கண்டு பொங்கும் அனைவருமே போராளிகள்தான். இதுதொடர்பாக கடந்த 16 ஆண்டுகளாக இக்கட்டுரை ஆசிரியரும் உட்பட பலராலும் சுட்டிக்காட்டப்பட்டு வருகிறது. நல்லகண்ணுவின் கூட்டத்தில் ஐங்கரநேசன் ஆற்றிய உரையை அவர் முகநூலில் பதிவிட்டிருந்தார். அந்த உரைக்குக் கீழ் வந்த ஒரு பின்னூட்டத்தில், முன்னாள் ஈ. பி.ஆர்.எல்.எவ் அமைப்பின் உறுப்பினர் ஒருவர் பதில்வினை ஆற்றியிருந்தார். அதில் அவர் ஏனைய இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் இப்பொழுதும் அரசியல் செய்கிறார்கள்.அவர்கள் தங்களைப் போராளிகள் என்று அழைத்துக் கொள்வதில்லை.தங்களுடைய கட்சிகள்,அமைப்புகளின் பெயர்களால்தான் தங்களை அழைத்துக்கொள்கிறார்கள்.ஆனால் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இருந்தவர்கள் மட்டும் ஏன் தங்களைப் போராளிகள் என்று அழைத்துக் கொள்கிறார்கள்? என்று அவர் கேள்வி எழுப்பியிருந்தார். அந்தக் கேள்வி நியாயமானது.அந்த முகநூல் பதிவில் அதற்குரிய பதில் வந்திருக்கவில்லை.கடந்த 16 ஆண்டுகளாக முன்னாள் விடுதலைப் புலிகள் இயக்கத்தவர்கள் ஏன் தங்களைப் போராளிகள் என்று அழைத்துக் கொள்கிறார்கள் ? 2009க்குப் பின்னரான தமிழ்த் தேசியவாத அரசியல் எனப்படுவது ஆயுதப் போராட்டத்தின் பெருமைகளுக்கு “கொப்பிரைட்” எடுப்பதாகத்தான் காணப்படுகிறது.ஆயுதப் போராட்டத்தின் தியாகங்களையும் அர்ப்பணிப்புகளையும் வீரத்தையும் போற்றி அதன்மூலம் நமது வாக்கு வங்கியைத் திரட்டுவதைத்தான் பெரும்பாலான எல்லாத் தமிழ்த் தேசியக் கட்சிகளும் தமது தேர்தல் உத்தியாகக் கொண்டிருக்கின்றன.இதில் நினைவு நாட்களுக்கு யார் அதிகம் உரித்துடையவர்கள் என்ற விடயத்தில் அவ்வப்போது மோதல்களும் ஏற்படுவதுண்டு.இவ்வாறு கடந்த 16 ஆண்டுகளாக ஆயுதப் போராட்டத்தின் மெய்யான வாரிசுகளாக தங்களைக் காட்டிக்கொள்ள முற்படும் கட்சிகள்,அல்லது ஆயுதப் போராட்டத்தின் விளைவுகளைத் தமது தேர்தல்மைய அரசியலுக்குப் பயன்படுத்தும் கட்சிகள்,அல்லது முன்னாள் இயக்கத்தவர்களை தமது உட்கட்சி முரண்பாடுகளுக்கு வசதியாகப் பயன்படுத்தும் அரசியல்வாதிகள் போன்ற யாருமே, எந்தப் போராட்டத்தை தமது வாக்குமைய அரசியல் தேவைகளுக்கு பயன்படுத்தி வருகிறார்களோ, அந்தப் போராட்டத்திற்கு உண்மையாக இல்லை. அல்லது அந்த போராட்டத்தின் இலட்சியங்களுக்கு விசுவாசமாக இல்லை என்ற ஓர் அபிப்பிராயம் தமிழ் மக்கள் மத்தியில் உண்டு தமிழ்த் தேசியக் கோஷங்கள் பெரும்பாலும் திருடர்கள் எடுத்தணியும் முகமூடிகளாக அப்பொழுதோ மாறிவிட்டன.பாதுகாப்பான இறந்த காலத்தைப் பெற்றவரெல்லாம் நிகழ்காலத்தின் பேச்சாளர்களாக மேலெழுந்து விட்டார்கள். யாரெல்லாம் இறந்த காலத்தில் தமது இனத்துக்காக தியாகம் செய்யப் புறப்பட்டார்களோ,அவர்களெல்லாம் இப்பொழுது கைதிகளாகஅரைக் கைதிகளாக,கைவிடப்பட்டவர்களாக,தடுப்பிலிருந்து வந்தவர்களாக, மதிக்கப்படாதவர்களாக,சந்தேகிக்கப்படுகிறவர்களாகக் காணப்படுகிறார்கள். கடந்த 16 ஆண்டுகளிலும் இலங்கைத் தீவில் மிகவும் பாதிக்கப்படக்கூடிய ஒரு பிரிவினராக(most vulnerable) காணப்படுவது தடுப்பிலிருந்து விடுவிக்கப்பட்ட முன்னாள் விடுதலைப் புலிகள் இயக்கத்தவர்கள்தான். பயங்கரவாதத் தடைச் சட்டம் எப்பொழுதும் அவர்களுடைய தலைக்கு மேல் தொங்கிக் கொண்டிருக்கிறது. சாதாரண ஒன்றிணைவைக்கூட “மீளுருவாக்கம்” என்ற பெயரில் ஒரு சட்டப் பிரச்சினையாக மாற்றக்கூடிய சட்டச் சூழல் இப்பொழுதும் உண்டு.எனவே இலங்கைத் தீவின் அரசியல் நீரோட்டத்தில் அதிகம் ஆபத்துக்குள்ளாகக்கூடிய ஒரு பிரிவினராக முன்னாள் இயக்கத்தவர்கள் காணப்படுகிறார்கள். ஆனால் அவர்கள் எந்த அமைப்பை,எந்தக் கருநிலை அரசைக் கட்டியெழுப்பினார்களோ, அதன் பெருமைகளைக் கொப்பிரைட் எடுக்க முற்படும் கட்சிகளும் அரசியல்வாதிகளும் அவர்களைப் பொருட்படுத்துவதில்லை.அல்லது தேவைக்குப் பயன்படுத்திவிட்டு வீசி விடுகிறார்கள். அல்லது அவர்களைச் சந்தேகிக்கிறார்கள். இப்படிப்பட்டதோர் அரசியல் சூழலில்,தங்களுடைய இறந்த காலத்தை கொப்பிரைட் எடுக்க முற்படும் கட்சிகளின் மத்தியில்,தாங்கள்தான் அதன் உண்மையான வாரிசுகள்,அல்லது தாங்கள்தான் அந்த போராட்டத்தின் உண்மையான தொடர்ச்சிகள் என்று காட்டவேண்டிய தேவை தங்களுக்கு இருப்பதாக பெரும்பாலான முன்னால் இயக்கத்தவர்கள் நம்புகிறார்கள். அந்த அடிப்படையில்தான் அவர்கள் தங்களைப் போராளிகள் என்று அழைத்துக் கொள்கிறார்கள் என்று எடுத்துக் கொள்ளலாமா? ஆனால் கடந்த 16ஆண்டுகளிலும் அவர்கள் தாங்களாக கட்சியை உருவாக்கியும் அல்லது ஏனைய கட்சிகளோடு இணைந்தும் தேர்தல் கேட்டிருக்கிறார்கள்.எனினும்,தொடர்ச்சியாகத் தோற்கடிக்கப்பட்டு வருகிறார்கள்.தமது இறந்தகாலத்தைத் தேர்தல் மொழியில் மொழிபெயர்க்க அவர்களால் முடியவில்லை. தேர்தல் மைய அரசியலுக்குத் தேவையான தொழில் திறன்களை,தந்திரங்களைக் கற்றுக்கொண்டு தேர்தல் மேடைகளில் வெற்றி பெற அவர்களால் இன்றுவரை முடியவில்லை. ஆனால் இது தமிழ்த் தேசிய அரசியலுக்கு மட்டுமான ஒரு தோற்றப்பாடு அல்ல. உலகப் பொதுவானது.இலட்சியவாதிகளும் உண்மையான தியாகிகளும் நேர்மையானவர்களும் தேர்தல்மைய அரசியலில் ஒன்றில் இறங்குவதில்லை; அல்லது இறங்கினாலும் மிகக்குறைந்த அளவே வெற்றிகளைப் பெறுகிறார்கள். உதாரணம்,இங்கே முன்னர் குறிப்பிட்ட நல்லகண்ணு.நல்லகண்ணுவைத் தவிர வேறு ஒரு உள்ளூர் உதாரணத்தையும் இங்கு சுட்டிக்காட்டலாம்.சில ஆண்டுகளுக்கு முன் தென்னிலங்கையில் ஏற்பட்ட தன்னெழுச்சிப் போராட்டங்களின் பின்னணியில் இருந்த அமைப்புகள் ஒன்றுதிரண்டு குடைச் சின்னத்தின் கீழ் தேர்தலில் போட்டியிட்டன.ஆனால் அந்த கூட்டமைப்பு கட்டுக்காசையும் இழக்கும் அளவுக்கு கேவலமாக சிங்கள மக்களால் தோற்கடிக்கப்பட்டது.ஆனால் அந்தக் கிளர்ச்சிகளின் ஓரத்தில் நின்று அந்தக் கிளர்ச்சியின் கனிகளை தேர்தல் மொழியில் “ஹைஜாக்” பண்ணிய ஜேவிபி இப்பொழுது நாட்டின் ஆளுங்கட்சியாக வந்துவிட்டது. ஜேவிபியை இதயமாகக் கொண்ட தேசிய மக்கள் சக்தியின் எழுச்சியில் இருந்து முன்னாள் இயக்கத்தவர்கள் கற்றுக்கொள்ளலாம்.தேசிய மக்கள் சக்தியின் இனப்பிரச்சினை தொடர்பான நிலைப்பாட்டை இக்கட்டுரை ஏற்றுக்கொள்ளவில்லை. ஆயுதப் போராட்ட அமைப்பாகிய ஜேவிபி அதன் இரண்டு புரட்சிகளிலும் தோற்கடிக்கப்பட்டது.இரண்டு தடவைகள் தடை செய்யப்பட்டது.இரண்டு தடவைகள் அதன் தோழர்கள் மிகக்குரூரமான விதங்களில் கொன்று எரிக்கப்பட்டார்கள்,அல்லது புதைக்கப்பட்டார்கள்,அல்லது ஆறுகளில் வீசப்பட்டார்கள்.மொத்தம் 85 ஆயிரத்துக்கும் குறையாத தோழர்கள் அவ்வாறு கொன்றொழிக்கப்பட்டதாக அந்த அமைப்புக் கூறுகிறது. ஆனால் கிட்டத்தட்ட அரை நூற்றாண்டு கால வரலாற்றைக் கொண்ட அந்த இயக்கமானது,தன் சொந்தச் சாம்பல் மேட்டில் இருந்து,தன் தோழர்களின் புதை மேட்டில் இருந்து மீண்டு எழுந்தது. தன்னைத் தேசிய மக்கள் சக்தியாக, தேர்தல் கவர்ச்சி மிக்க ஒரு புதிய கட்டமைப்பாக வளர்த்துக் கொண்டது. அதன் பின் பொருளாதார நெருக்கடியின் விளைவாக ஏற்பட்ட தன்னெழுச்சிப் போராட்டங்களின் கனிகளை தேர்தல் மேடைகளில் வெற்றிகரமாக ஹைஜாக் பண்ணியது.போராட்டங்களில் பிரதானமாக பின்னணியில் நின்ற அமைப்புக்களால் தமது போராட்டத்தின் வெற்றிகளை தேர்தல் மொழியில் வெற்றிகரமாக மொழிபெயர்க்க முடியவில்லை.ஆனால் தேசிய மக்கள் சக்தி அதைச் செய்தது. இப்பொழுது ஆளும் கட்சியாக எழுச்சி பெற்றுவிட்டது. ஓர் ஆயுதப் போராட்ட அமைப்பு எப்படி ஆளுங்கட்சியாக வர முடியும் என்பதற்கு அது ஓர் உதாரணம்.இனப்பிரச்சினை தொடர்பான என்.பி.பியின் நிலைப்பாட்டை இக்கட்டுரை ஏற்றுக்கொள்ளவில்லை.ஆனால் ஒர் ஆயுதப் போராட்ட அமைப்பு,ஏப்படி தேர்தல் மேடைகளில் வெற்றிபெற முடிந்தது என்ற விடயத்தில் அங்கு கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் உண்டு. இங்கு ஒரு முக்கியமான கள நிலவர வேறுபாட்டை ஒப்பீடு செய்ய வேண்டும். 1980களின் இறுதியில் நசுக்கப்பட்ட பின்னர்,ஜேவிபியின் அரசியலை கொப்பிரைட் எடுப்பதற்கு அங்கிருந்த பெரும்பாலான மேட்டுக்குடி மைய அரசியல் கட்சிகள் முயற்சிக்கவில்லை.முயற்சிக்கவும் மாட்டார்கள். ஏனென்றால் ஜேவிபியின் அரசியல் பாரம்பரியம் வேறு.அவர்களுடைய அரசியல் பாரம்பரியம் வேறு.அதனால் ஜேவிபியின் இரண்டு ஆயுதப் போராட்டங்களையும் கொப்பிரைட் எடுப்பதற்கு அங்கே வேறு எந்தக் கட்சியும் இருக்கவில்லை.ஆனால் தமிழ்த் தேசிய அரசியலில் அப்படியல்ல. தமிழ்த் தேசிய அரசியலில் ஆயுதப் போராட்டத்தின் நன்மைகளை,உன்னதங்களை கொப்பிரைட் எடுக்க முற்படும் தமிழ்த் தேசியவாத கட்சிகளின் மத்தியில், முன்னாள் இயக்கத்தவர்கள் தங்கள்தான் உண்மையான வாரிசுகள் என்று நிரூபிக்க வேண்டிய அரசியல் தேவை ஏற்பட்டது.ஆனால் அவ்வாறு தங்களை போராளிகள் என்று அடையாளப்படுத்திக் கொண்டதனால் அவர்கள் தேர்தல் மைய அரசியலில் வெற்றிகளைப் பெற முடியவில்லை என்பதை கடந்த16 ஆண்டுகளையும் தொகுத்துப் பார்த்தால் தெரியவரும். எனவே தமிழ் மக்களின் வாக்குகளைக் கவர்வதற்கு அவர்கள் ஜனநாயக வழியில் வேறு எதையோ செய்ய வேண்டியிருக்கிறது என்பதனை கடந்த 16 ஆண்டுகளும் அவர்களுக்கு உணர்த்தியுள்ளன.ஆயுதப் போராட்ட ஒழுக்கம் வேறு.தேர்தல் அரசியல் ஒழுக்கம் வேறு.இரு வேறு அரசியல் களங்கள். இரண்டுக்குமான வெற்றி வியூகங்களும் உத்திகளும் தந்திரங்களும் வேறு வேறானவை.எனவே தேர்தல்மைய அரசியலுக்குரிய ஒழுக்கத்தை,அதற்குரிய தந்திரங்களை,தொழில் சார் திறன்களை வளர்த்துக்கொள்ள வேண்டிய கால நிர்பந்தம் முன்னாள் இயக்கத்தவர்களுக்கு உண்டு. இப்போதிருக்கும் தமிழ்த் தேசிய மிதவாத அரசியலில் பொய்யர்களும் நஞ்சர்களும் நவஞ்சகர்களும் திருடர்களுந்தான் அதிகமாக இருக்கிறார்கள் என்று கருதுபவர்கள் நேர்மையான,கண்ணியமான,தமது வாக்காளர்களுக்கு உண்மையான,புதிய மாற்றத்தைக் காட்டவல்ல ஒரு ஜனநாயக அரசியல் வழியைப் பலப்படுத்த வேண்டும்.ஜனநாயக வழியில் தமிழ் மக்களின் நம்பிக்கைகளை எப்படி வென்றெடுப்பது என்று சிந்திக்க வேண்டும். இந்தியாவிலும் லத்தீன் அமெரிக்காவிலும் ஆபிரிக்க நாடுகளிலும் முன்னாள் போராட்ட இயக்கங்கள் எப்படி ஜனநாயக நீரோட்டத்துக்குள் தங்களை அடுத்த கட்டத்துக்கு தகவமைத்துக் கொண்டன என்பதைக் கற்றுக் கொள்ள வேண்டும். இலட்சியவாதிகளும் நேர்மையானவர்களும் நல்லகண்ணுகளும் தேர்தல்மைய அரசியலில் ஏன் வெற்றி பெற முடியவில்லை என்பதையும் ஆழமாக ஆராய வேண்டும். நேர்மையானவர்கள்,கண்ணியமானவர்கள்,உண்மையானவர்கள்,வாக்காளர்களுக்கு விசுவாசமானவர்கள்,தமது வாக்குறுதிகளுக்கு உண்மையாக இருப்பவர்கள்…தமிழ்த்தேசிய அரசியலில் அதிகரித்த எண்ணிக்கையில் ஈடுபடுவார்களாக இருந்தால்,தமிழ்த்தேசிய அரசியலிலும் புதிய மாற்றங்களைக் காட்டமுடியும். இப்பொழுது அதுதான் பொருத்தமான போராளித்துவம். https://athavannews.com/2026/1470350
Checked
Sun, 04/12/2026 - 10:47
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed