புதிய பதிவுகள்2

ஈரானின் கார்க் தீவை கைப்பற்றும் சாத்தியம் உள்ளது - ட்ரம்ப்

1 week 6 days ago
அந்த நேரத்தில் - நாடுகளுக்கு இடையேயான ஆயுத விநியோகத்தில் - இரான் un தடைகளுக்கு இருந்த்தது. சிறிலங்கா விடயத்தில் இரான் இரகசியமாக செய்ய முடியாது. (ஹிஸ்புல்லாஹ், ஹூத்தி போன்றவைக்கு கொடுப்பது அனாமதேயம். ஏனெனில் அவை அரசு சாரா அமைப்புகள்) ருசியாவுக்கு கொடுக்கும் போது இரானுக்கு UN தடைகள் இல்லை. மேற்கு முறித்த jcpoa மூலம் தடைகள் விலக்கப்பட்டு இருந்தது ஆனால். மேற்றுகின் தடை இருந்தது, மேற்கின் தடை UN கடை அல்ல. இந்த வேறுபாட்டை , அதன் விளைவை இணையத்தில் ஹெடி அறிந்த்து கொள்ளலாம். இந்த வேறுபாட்டை , அதன் விளைவை இணையத்தில் ஹெடி அறிந்த்து கொள்ளலாம். கொத்தாக தோற்றம் அப்பதால் அவை cluster குண்டு அல்ல. (cluster ) குண்டு போடப்பட்ட பின் திசை, குறிவவைக்கப்பட்ட இலக்கை மாற்ற முடியாது. இந்த ஏவுகணை 1 பெரியஅளவு, மற்றும் பிரியும் ஏவுகணைகள் சிறியவை, இறுதியான terminal phase இல் கூட திசை, இலக்கை மாற்றலாம் (maneuverable). சிலவற்றில் ஒவ்வொரு சிறிய கணையையும் manoeuvre பண்ண முடியும். எது ஆயினும், நான் சொல்லியவை hardfacts. எனவே சொன்ன கருத்தை மாற்றாது. அனால், இரான், சிறிலங்கா உறவு அந்த நேர வசதிக்காக. தேயிலை - எண்ணெய் வியாபாரத்தை வசதிப்படுதியது அமெரிக்கா பின் இருந்து. வசதி. தேவை அற்றுப்போக உறவும் இல்லை இஸ்ரேல் - சிறிலங்கா உறவே தத்துவத்தின் அடிப்படையில் - மகாவம்ச, விவிலிய கால வேறுபாட்டை தவிர்த்து ஒரே தன்மை அடிப்படையில் - நிரந்தரமானது. மற்றது அவற்றின் பாதுகாப்பு வகிபாகம் - சிங்களதத்துக்கு எப்போதும் தமிழரால் அச்சுறுத்தல், இஸ்ரேல் அரபு (முஸ்லிம்களால்) அச்சுறுத்தல் (அதன் நிகழ் கால மாற்றம் - கிந்தியா சிங்களத்துக்கு ஆதரவு, தமிழர் எதிர். அரபிகள் இஸ்ரேலுக்கு உள்ளால் மிகவம் நெருக்கம் (காரணம் இருக்கிறது), இரான் (பெர்சியன்) இஸ்ரேல் க்கு எதிர்.) அனால், ஈடுபாடு அவ்வப்போது கூடும், குறையும்.

5-ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரல்

1 week 6 days ago
5-ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரல் Mar 30, 2026 - 08:07 PM 2026 ஓகஸ்ட் மாதம் 9 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்கான விண்ணப்பங்களைக் கோருவது தொடர்பான அறிவித்தலை பரீட்சை திணைக்களம் வெளியிட்டுள்ளது. அதன்படி, இன்று (30) முதல் ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணி வரை விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. எக்காரணம் கொண்டும் விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதற்கான இறுதித் திகதி நீடிக்கப்பட மாட்டாது என பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது. அரசாங்கப் பாடசாலை அல்லது அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலை ஒன்றில் 5 ஆம் தரத்தில் கல்வி பயிலும் மாணவர்கள் மாத்திரமே இப்பரீட்சைக்குத் தோற்ற முடியும். குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த, 2027 ஜனவரி 31 ஆம் திகதியன்று 11 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கு மாத்திரமே புலமைப்பரிசில் கொடுப்பனவுகள் வழங்கப்படும் என பரீட்சை திணைக்களம் வலியுறுத்தியுள்ளது. விண்ணப்பங்கள் இணையவழியில் (Online) சமர்ப்பிக்கப்பட வேண்டும். இது தொடர்பான அறிவுறுத்தல்களை https://onlineexams.gov.lk/eic என்ற இணையத்தளத்திற்குச் சென்று பெற்றுக்கொள்ளலாம். விசேட தேவையுடைய மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டிய முறை குறித்த விரிவான தகவல்கள் அறிவுறுத்தல் பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளன. மேலதிக விபரங்களுக்கு: 0112 784 537 / 0012 786 616 / 0112 784 208 / 0112 786 200 / 0112 784 201 அவசர தொலைபேசி இலக்கம்: 1911 பெக்ஸ் (Fax): 0112 784 422 மின்னஞ்சல்: gr5schexam@gmail.com https://adaderanatamil.lk/news/cmndak07n0007356pqr4bypmw

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 - செய்திகள்

1 week 6 days ago
மனைவி பெயரில் உள்ளது மட்டும்தான் தேர்தல் கணக்கில் காட்ட வேண்டும் என நினைக்கிறேன். RR 2012 கார் என நினைக்கிறேன். வித்திருக்க கூடும். வரி கட்டுவதில் பிரச்சனையான காரை கணக்கில் காட்டாமல் விட்டால் அது பிடிபடும். சம்பளம், சொத்து மாறுபாடு. நானும் அவதானித்தேன். இன்னும் பல சொத்து சந்ததியினர் பெயரில் trust இல் இருக்க கூடும். ஆனால் இதை காட்ட வேண்டிய கட்டாயம் இல்லை என நினைக்கிறேன். வேட்பு மனு தாக்கலில் talk of the town இண்டைக்கு அண்ணன் சீமான் தான். ஆக்டோபர் 2025 இல் அண்ணன் 25 ஏக்கர் நிலத்தை 50 இலட்சத்துக்கு வாங்கி உள்ளார். பலர் அதை இப்போ 1 கோடிக்கு எனக்கு தாங்க அண்ணே என கேட்கிறார்கள். 6 மாதமுமில்லை 100% இலாபம். விற்பாரா சீமான்😂

குவைத்தில் 'இரான்' தாக்குதல் - ராமநாதபுரத்தைச் சேர்ந்தவர் உயிரிழப்பு

1 week 6 days ago
குவைத்தில் 'இரான்' தாக்குதல் - ராமநாதபுரத்தைச் சேர்ந்தவர் உயிரிழப்பு பட மூலாதாரம்,Handout கட்டுரை தகவல் பிரபுராவ் ஆனந்தன் பிபிசி தமிழுக்காக 30 மார்ச் 2026, 11:06 GMT புதுப்பிக்கப்பட்டது 12 நிமிடங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் இரான் இடையே போர் நிகழ்ந்து வரும் சூழலில் ராமநாதபுரத்தைச் சேர்ந்த தொழிலாளி குவைத்தில் உயிரிழந்தார். ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அடுத்த அனிகுருந்தான் கிராமத்தைச் சேர்ந்த சந்தான செல்வம் என்பவர் தான் இந்த தாக்குதலில் உயிரிழந்தவர். குவைத்தில் நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் இந்தியர் ஒருவர் உயிரிழந்ததாக இந்திய தூதரகம் உறுதி செய்துள்ளது. ட்ரோன் தாக்குதலால் சுவர் இடிந்து விழுந்ததில் சந்தான செல்வம் சிக்கிக் கொண்டார் என அவருடன் குவைத்தில் பணிபுரியும் நண்பர்கள் கூறுகின்றனர். அவரது உடலை இந்தியா கொண்டு வர நடவடிக்கை எடுக்குமாறு குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். குவைத்தில் உள்ள இந்திய தூதரகம் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது, அதில் குவைத்தில் இந்தியர் உயிரிழந்ததையடுத்து இந்திய தூதர் பிரமிதா திரிபாதி குவைத் அதிகாரிகளை சந்தித்ததாகவும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருடன் தொடர்பில் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. 'உயிரிழந்தவரின் உடலை இந்தியா கொண்டு வருவது' தொடர்பாக குவைத் அதிகாரிகளுடன் பேசி வருவதாகவும் இந்திய தூதரகம் கூறியுள்ளது. குவைத் நாட்டின் மின்சாரம், நீர் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கான அமைச்சகம் வெளியிட்டுள்ள பதிவு ஒன்றில், 'இரான் நடத்திய தாக்குதலால் நீர் சுத்திகரிப்பு நிலையம் சேதமடைந்தது. இதில் இந்திய குடிமகனான ஊழியர் ஒருவர் உயிரிழந்தார்' என தெரிவிக்கப்பட்டுள்ளது. "பாதுகாப்பற்ற பணிச்சூழல்" சந்தான செல்வத்துடன் குவைத்தில் பணியாற்றும் பொய்யாமொழி என்பவர் பிபிசி தமிழிடம் இதுபற்றிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டார். இதன்படி, சந்தான செல்வம் கடல்நீரை நன்னீராக்கும் பிரிவில் எலக்ட்ரீசியன் ஆக வேலை செய்து வருகிறார். இவர் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பணி முடிந்து கொண்டு தனது அறையில் இருந்தபோது, "ஃபில்டர் ஒன்றை மாற்ற வேண்டும் என அவசர அழைப்பு வந்தது" என்கிறார் பொய்யாமொழி. மீண்டும் ஆலைக்கு சென்று பணியை முடித்து விட்டு, அறைக்கு திரும்புவதற்காக காத்திருந்த போது ட்ரோன் தாக்குதலுக்கு அந்த ஆலை இலக்கானதாகக் கூறுகிறார் பொய்யாமொழி. சந்தான செல்வன் உயிரிழந்த இடம் தற்போது ராணுவத்தினர் கட்டுப்பாட்டில் உள்ளதால், இதனால் வெளிநபர்கள் யாரும் அங்கு அனுமதிக்கப்படவில்லை என்கிறார் அவர். சந்தான செல்வன் உடல் தற்போது குவைத்தின் மத்திய பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது. குவைத்தில் இரான் நடத்தும் தொடர் தாக்குதல் குறித்த அச்சுறுத்தல்களுக்கு நடுவே, தொடர்ந்து பணி செய்ய நேர்வதாகக் கூறுகிறார் பொய்யாமொழி. "எங்கு திரும்பினாலும் குண்டு சத்தமாக இருப்பதால் பெரும்பாலான நேரங்களில் அறையை விட்டு வெளியே வருவதில்லை. கடந்த சில நாட்களாக தங்கும் விடுதிகள் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்படவில்லை ஆனால் நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் உள்ளிட்ட பகுதிகளில் அவ்வப்போது குண்டுகள் வீசப்பட்டு வருகிறது" என்றார். பட மூலாதாரம்,Handout படக்குறிப்பு,ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்த குடும்பத்தினர் சந்தான செல்வம் உயிரிழந்தது குறித்து திங்கள் கிழமை (மார்ச் 30) தங்களுக்கு தகவல் அளிக்கப்பட்டதாக ராமநாதபுரம் மாவட்டம் அனிகுருந்தான் கிராமத்தில் வசிக்கும் அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். உயிரிழந்த சந்தான செல்வத்தின் உடலை இந்தியா கொண்டு வர நடவடிக்கை எடுக்கக் கோரி ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜித் சிங் காலோனிடம் குடும்பத்தினர் மனு அளித்தனர். 36 வயதான சந்தான செல்வத்திற்கு திருமணமாகி ஓர் ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தைகள் உள்ளனர். இவர் குவைத்தில் உள்ள பொறியியல் பொதுவர்த்தகம் மற்றும் ஒப்பந்த நிறுவனத்தில் 10 வருடங்களுக்கு மேலாக எலக்ட்ரீசியனாக பணியாற்றி வருவதாக அவரது மனைவி கௌசல்யா தெரிவித்தார். "உரிய இழப்பீடு பெற்றுத்தர வேண்டும்" உயிரிழந்த சந்தான செல்வனின் மனைவி கௌசல்யா பிபிசி தமிழிடம் பேசுவையில் நேற்று இரவு 8 மணி அளவில் என் கணவருடன் தொலைபேசியில் பேசினேன். அப்போது திடீரென "கம்பெனியிலிருந்து போன் வருவதாக கூறி தொடர்பை துண்டித்தார். பிறகு என்னை தொடர்பு கொள்ளவில்லை." என்றார். "இன்று காலை என் கணவருடன் வேலை செய்யும் நபர் ஒருவர் அழைத்து என் கணவர் உயிரிழந்த செய்தியை தெரிவித்தார். உடனடியாக நான் மீண்டும் எனது கணவரின் செல்போன் என்னை தொடர்பு கொண்டேன் தொடர்பு கொள்ள முடியவில்லை." என்கிறார் கௌசல்யா. தங்களுக்கு இரண்டு சிறிய குழந்தைகள் இருப்பதாகக் கூறும் கௌசல்யா, சந்தான செல்வனின் உடலை இந்தியா கொண்டு வர உதவி செய்வதோடு உரிய இழப்பீடு பெற்றுத்தர உதவ வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் பிபிசி தமிழிடம் பேசுகையில்,"சந்தான செல்வனின் மனைவி கொடுத்த மனுவின் அடிப்படையில் தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது." என்றார். இந்திய வெளியுறவு அமைச்சகத்திலிருந்து சந்தான செல்வன் குடும்பத்தினரின் தொடர்பு எண் மற்றும் அரசு ஆவணங்கள் உள்ளிட்டவற்றை கேட்டதால், இதனை பகிர்ந்துள்ளதாகக் கூறினார். குடும்பத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் அரசு சார்பில் செய்து வருகிறோம் என்றும் உடலை இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கை குறித்து தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். படக்குறிப்பு,தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2026, தொடர்பான செய்திகள், காணொளிகள், நேர்காணல்களை படிக்க, பார்க்க... தமிழக அரசின் சார்பில் செய்யப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வு ஆணையரகத்தின் ஆணையர் வள்ளலார் பிபிசி தமிழிடம் பேசுகையில், "மத்திய கிழக்கில் நடைபெறும் போரில் உயிரிழந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த முதல் நபர் சந்தான செல்வம்" என்றார். எனவே "குவைத் நாடு போரில் உயிரிழந்தோருக்கு வழங்கும் நிவராணத்துடன், சந்தான செல்வன் உடலை தாயகம் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது" என்றார். வழக்கமாக வெளிநாடுகளில் யாரேனும் உயிரிழந்தால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகக் கூறிய வள்ளலார், இவர் போரால் உயிரிழந்ததால், அவருக்கான "அனைத்து நிவாரணம் மற்றும் காப்பீடு உள்ளிட்டவைகளை பெற்று" உடலை கொண்டு வருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார். தமிழ்நாடு அரசின் அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வு வாரிய உறுப்பினராக சேர்ந்திருந்தால் இழப்பீடு தொகையாக தமிழக அரசு சார்பில் ஒரு லட்ச ரூபாய் வழங்கப்படும். ஆனால் சந்தான செல்வம் உறுப்பினராக பதிவு செய்யவில்லை எனக் கூறும் வள்ளலார், "விதிகளின்படி அவருக்கு தமிழக அரசு சார்பில் நிவாரண நிதி வழங்க முடியாது" என்றார். இருப்பினும் அவரது குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு என்ன செய்யலாம் என்பது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசித்து வருவதுடன் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்துடன் தொடர்பில் இருந்து வருகிறோம் என்றார். இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c1eqgdpdnq3o

ஈரானின் கார்க் தீவை கைப்பற்றும் சாத்தியம் உள்ளது - ட்ரம்ப்

1 week 6 days ago
என்னது, ஈரானால் வேறு நாடுகளுக்கு ஆயுதம் கொடுக்க முடியாதா? அப்ப ரஷியாவுக்கு Shahed வகை ட்ரோன்கள் மற்றும் இராணுவ உபகரணங்கள் ஆயுதங்களை வழங்கும் செயலுக்கு பெயர் என்ன? அத்துடன் ஹிஸ்புல்லா அமைப்புக்கு ஏவுகணைகள் உட்பட பெருமளவு ஆயுதங்களை வழங்குவது யார்? இன்று இஸ்ரேல் மீது ஏவப்படும் ஏவுகணைகளில் கிள்ஸ்ரர் குண்டுகளும் உள்ளன என காணொளி ஆதாரங்கள் நிறைய உள்ளன்வே. ஈரான் இலங்கை யின் உற்ற நண்பன் என ஏற்றுக் கொள்வது ஈரானை ஆதரிக்கும் உங்களுக்கு அறச் சீற்றத்தை தரும் என்பதால் ஏற்க மறுக்கின்றீர்கள் என நினைக்கிறேன். ஓம் பாஸ், நெதன்யாஹுவின் கொட்டம் அடக்கப்பட வேண்டும்.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 - செய்திகள்

1 week 6 days ago
விஜய் கூறிய லிஸ்டில் அந்த ரோல்ஸ்ரோய் கார் விபரம் ஏதும் இல்லை. அத்துடன் 250 கோடி சம்பளம் பெறுவதாக அவரே கூறுகின்றார் எனும் போது அவர் காட்டிய இந்த சொத்தின் பெறுமதி மிகக் குறைவு அல்லவா? இன்னும் ஒன்றை அவதானித்தேன். வாங்கிய அனைத்தும் அவர் பெயரில் தான் உள்ளது. சங்கீதாவின் பெயரோ பெற்றோரின் பெயரோ, 18 வயதுக்கு மேல் உள்ள மகனது பெயரோ இல்லை. சங்கீதா இந்திய பிரஜை இல்லை என்பதால் அவர் பெயரில் சொத்து வாங்க முடியாமல் இருக்கலாம், ஆனால் மற்றவர்கள்..?

ஈரானின் கார்க் தீவை கைப்பற்றும் சாத்தியம் உள்ளது - ட்ரம்ப்

1 week 6 days ago
கார்க் தீவில் எண்ணெய் / வாயு (சர்வதேச) விநியோகத்துக்கு வழங்கப்படும் இடம் (terminal), உற்பத்தியாகும் இடம் அல்ல. (சர்வதேச) விநியோக வழங்கலுக்கு வருண் எண்ணை / வாயுவை இரான் நிறுத்தலாம். மற்றும் கார்க் தீவு மிகவும் சிறிது , எனவே இறங்கும் எந்த படைக்கும் கொலைக்களத்தில் இறங்குவது போல. ஆனால், கார் தீவை சொல்லிக்கொண்டு, வேறு இலக்கே இங்கே அமெரிக்காவிற்கு மேலும் அழிவு தாக்கம் , இரானுக்கு ஏறத்தாழ real-time துல்லிய உளவு கிடைப்பது. எல்லா சகதிகளிடமும் (எதோ) ஆயுத பலம் இருக்கிறது, ஆனால், மேட்ற்கு (இதுவரையில்) பொதுவாக மேலாண்மை நிலை நாட்ட மிக முக்கியமாக உதவியது துல்லிய, real-time உளவு. மற்றும், துல்லிய உளவை பாவித்து துல்லியமாக ஆயுத பலத்தை குறிப்பிட்ட கோளத்தில் பிரயோகிக்க கூடிய நிலை இவை இரானிடம் இருக்கிறது. இரானுக்கு, கணிசமாக கிடைக்கும் துல்லிய உளவு , துல்லியமாக ஆயுத பலத்தை குறிப்பிட்ட கோளத்தில் பிரயோகிக்க கூடிய நிலை, களத்தை மேற்கிற்கு புரட்டி போட்டுள்ளது என்பதை மேற்கு சகிக்க முடியாமல் (இரத்தம்) கக்கும் நிலை.

கைது செய்யப்பட்டார் அமைச்சர் கெஹலிய

1 week 6 days ago
கெஹெலிய காலத்து மருந்து கொள்வனவுகள் தொடர்பில் தடவியல் கணக்காய்வு Mar 30, 2026 - 04:08 PM முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல சுகாதார அமைச்சராகப் பதவி வகித்த காலத்தில், சுகாதார அமைச்சினால் முன்னெடுக்கப்பட்ட மருந்துப் பொருட்கள் மற்றும் மருத்துவ விநியோகக் கொள்வனவு நடவடிக்கைகள் குறித்து அரசாங்க கணக்காய்வாளர் நாயகத்தினால் தடவியல் கணக்காய்வு (Forensic Audit) ஒன்று மேற்கொள்ளப்படவுள்ளதாக சட்டமா அதிபர் இன்று (30) உயர்நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார். ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீலங்கா நிறுவனத்தினால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் இந்த அறிவிப்பை விடுத்தார். https://adaderanatamil.lk/news/cmnd21uax0002356plv3xo398

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 - செய்திகள்

1 week 6 days ago
களவு செய்யாமல் உழைச்சு, அதை டிக்ளேரும் பண்ணும் போது கிடைக்கும் பெருமிதம் ஒரு சிலருக்கு மட்டுமே வாய்க்கும். ஸ்டாலின் - தன்னிடம் காரே இல்லை என வழமையான பல்லவியை பாடி உள்ளார். உதய்னா ஒரு படி மேலே போய் தன்னிடம் அண்டர்வேரே இல்லை என அபிடெபிட் தாக்கல் செய்தாலும் ஆச்சரியம் இல்லை. சீமான் போன தேர்தலுக்கும் இந்த தேர்தலுக்கும் இடைப்பட்ட காலத்தில் 50, இலட்சம் பெறுமதியான காணி வாங்கி உள்ளார் மனைவி பெயரில். காணியின் அளவை பார்த்தால் - சொல்லப்பட்ட விலை பொய் என்பது அப்பட்டமாக தெரிகிறதாம். கணவனும் மனைவியும் வேலை செய்வதில்லை. போன தடவை இருவர் காட்டியதிலும் அதிக சொத்து வந்த வழி என்ன? கேள்வி கேட்டால் அவன் தெலுங்கன்😂

ஈரானின் கார்க் தீவை கைப்பற்றும் சாத்தியம் உள்ளது - ட்ரம்ப்

1 week 6 days ago
இரான் ஆயுதம் கொடுக்கமுடியாதா நிலை. un தடையை கண்காணிக்க அமெரிக்கா நிபுணத்துவதுடன் , சில அமெரிக்கா / மேட்ற்கு தலைமையிலும் un இல் பிரத்தியேக குழுக்கள் அமைக்கப்பட்டு, கண்கொத்தி பாம்பாக இரான் கண்காணிக்கப்பட காலம். உண்மையில், அமெரிக்காவே, இஸ்ரேல் வழியாக cluster குண்டுகளை கொடுத்தது. மற்றது , இரான் cluster குண்டுகளில் , மாற்றம் பொதுவாக குண்டு தொழில்நுட்ப்பதில் அக்கறை இல்லை, ஏனெனில் குண்டுகளை போட இரானுக்கு போர்விமான தொழில் நுட்பம் இல்லை. அனால், இப்போதுலா ஏவுகணை cluster குண்டு அல்ல. மேற்கு ஊடகங்கள் அவற்றுக்கு அனுதாபம் தேடுவகற்கு பொய்யாக அந்த ஏவுகணையை cluster குண்டு என்று பிரச்சாரம்.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 - செய்திகள்

1 week 6 days ago
Vijay: 'BMW உள்ளிட்ட 5 கார்கள், 1 TVS XL ' - வெளியான விஜய்யின் வாகனங்களின் லிஸ்ட்! பெரம்பூர் தொகுதியில் தவெக தலைவர் விஜய் வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில் வேட்புமனுவில் குறிப்பிட்டிருக்கும் விஜய்யின் சொத்து மதிப்பு விவரம் தற்போது வெளியாகி இருக்கிறது. அதன்படி விஜய்யின் அசையும் சொத்து 404 கோடி என குறிப்பிடப்பட்டிருக்கிறது. தவிர விஜய் 5 கார்கள், 1 இருசக்கர வாகனம் வைத்திருப்பதாகவும் விவரம் வெளியாகிறது.. அதன்படி விஜய் வைத்திருக்கும் கார்கள் BMW 530 (2020) — ரூ.80,54,119 Toyota Lexus 350 (2024) — ரூ.3,01,57,881 Toyota Vellfire (2024) — ரூ.1,63,45,118 BMW I7 (2024) — ரூ.2,00,64,296 Maruti Swift (2024) — ரூ.5,35,000 TVS XL Super (2025) — ரூ.67,400 விஜய் வைத்திருக்கும் 5 கார்கள் அசையாச் சொத்துகள் (மொத்தம்: ரூ.82,81,93,010): விள்பட்டி கிராமம், கொடைக்கானல் உட்பட பல இடங்களில் நிலங்கள் மற்றும் வணிகக் கட்டடங்கள். கல்வித் தகுதி: B.scB.Sc Degrees Online 2025 - Best Course After 12th | Compa...Find the best B.Sc course after 12th. Compare accredited online B.Sc degrees in Computer Science, Data Science, Nursing & more. Start your career journey. இடைநிற்றல் — லயோலா கல்லூரி, சென்னை, 1992 தொழில்: சுய தொழில் (நடிப்பு), விஜய் வித்யாசிரம் நிர்வாகம், ஜெயா நகர் பிராபர்டி பி லிட் மேலாண்மை இயக்குநர், விதியா சாரிடபுள் டிரஸ்ட் குற்றவியல் வழக்குகள்: இல்லை வெள்ளி பொருட்கள் ரூ.15,00,000 (883 கிராம்) தங்கம் 3,132 கிராம் — ரூ.4,07,16,000 வைரம் 134.91 கேரட் — ரூ.1,00,00,000 Tvk Vijay: ' BMW உள்ளிட்ட 5 கார்கள், 1 இருசக்கர வாகனம்'- வெளியான விஜய்யின் வேட்புமனு விவரம்| “BMW among 5 cars, 1 two-wheeler” – Vijay’s nomination affidavit details released. - Vikatan

களப்பிரர் காலத்து இலங்கை

1 week 6 days ago
கந்த புராணத்தில் சொல்லப்பட்டது - (என்று முருகன் வீரவாகு தேவர் குழாமை அனுப்பி சோழரின் விருத்தி மாறும் இராச்சியத்தின் விரிவாக்கத்துக்கு வாக்கு கொடுத்து, சோழர்கள் எபோதும் நிலைத்து இருப்பார்கள் என்பது இப்போதும் யதார்தமாகவே இருக்கிறது.

ஈரானின் கார்க் தீவை கைப்பற்றும் சாத்தியம் உள்ளது - ட்ரம்ப்

1 week 6 days ago
சாமியார்... இதே கருத்துத்தான் எனக்கும். ஆனாலும் எனக்கு இந்த "நாதன்யாஹு இஸ்ரரேலின்" கொட்டம் அடக்கப்பட்ட வேணும் என்கிற வெறியும் இருக்கிறது.

ஈரானின் கார்க் தீவை கைப்பற்றும் சாத்தியம் உள்ளது - ட்ரம்ப்

1 week 6 days ago
கார்க் தீவின் எண்ணெய் உள்கட்டமைப்புகளில் கைவைக்க அமெரிக்கா தயங்குகிறதா? - ஈரானுக்கு ஏன் கார்க் முக்கியம்? - ஒரு பார்வை Published By: Nanthini 30 Mar, 2026 | 06:44 PM (இணையத்தள சர்வதேச செய்திப் பிரிவு) ஈரானின் முக்கியமான பொருளாதார மையமாக விளங்கும் கார்க் தீவில் உள்ள அனைத்து இராணுவ இலக்குகளையும் அமெரிக்க படைகள் முற்றாக அழித்துவிட்டன. அத்தீவை அமெரிக்கா விரைவில் கைப்பற்றும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறிவந்தாலும், கார்க் தீவின் உள்கட்டமைப்புகளை அழித்தாலோ தீவை முற்றாக கைப்பற்றினாலோ அதன் விளைவுகள் எத்தகையதாக இருக்கும் என்பது குறித்து சிந்திக்கும் அவரது நிலைப்பாட்டில் ஒரு தளம்பல் ஏற்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை (29) பைனான்ஷியல் டைம்ஸ் பத்திரிகைக்கு ட்ரம்ப் அளித்த பேட்டியில், "ஒருவேளை நாம் கார்க் தீவைக் கைப்பற்றலாம் அல்லது கைப்பற்றாமலும் போகலாம். எங்களிடம் பல விருப்பங்கள் உள்ளன. கார்க் தீவை கைப்பற்றினால் அமெரிக்க படைகள் அங்கு நீண்ட காலம் தங்கியிருக்க வேண்டியிருக்கும்... அந்த தீவில் ஈரானிடம் பெரிய அளவில் பாதுகாப்பு வசதிகள் இல்லை. நாம் அதை மிக எளிதாகக் கைப்பற்ற முடியும்" எனக் கூறியுள்ளார். கடந்த 13ஆம் திகதி இத்தீவு தொடர்பாக பேசிய ட்ரம்ப், கார்க்கில் உள்ள அனைத்து இராணுவ இலக்குகளையும் அமெரிக்க படைகள் பரிபூரணமாக அழித்துவிட்டன. அதேசமயம், ஈரானின் எண்ணெய் உள்கட்டமைப்பைத் தாக்குவதை அமெரிக்க இராணுவம் இதுவரை தவிர்த்து வந்துள்ளது என்றும் குறிப்பிட்டிருந்தார். இம்மாத தொடக்கத்தில் ஆக்சியோஸ் செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தியில், உலகின் மிக முக்கியமான கப்பல் போக்குவரத்துப் பாதைகளில் ஒன்றாக ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க ஈரானை வற்புறுத்துவதற்காக, அத்தீவை ஆக்கிரமிக்க அல்லது முற்றுகையிட அமெரிக்க நிர்வாகம் திட்டமிட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. ஈரானின் எண்ணெய் ஏற்றுமதியை தடுப்பதோடு மட்டுமன்றி, அந்நாட்டின் நிலப்பரப்பு மீது தாக்குதல்களை நடத்தவும் ஒரு தளமாக பயன்படுத்த, கார்க் தீவை அமெரிக்கா கைப்பற்றத் திட்டமிட்டுள்ளதாக சர்வதேச மட்டத்தில் பல்வேறு செய்தி ஊடகங்களும் கருத்துக்களை முன்வைத்து வருகின்றன. அமெரிக்காவால் இலக்குவைக்கப்படும் கார்க் தீவு ஏன் ஈரானுக்கு முக்கியம்? ஈரான் நாட்டின் பொருளாதார உயிர்நாடியான விளங்குவது கார்க் தீவாகும். இந்த தீவு ஈரான் கடற்கரை பகுதியிலிருந்து 15 கடல் மைல் தொலைவில் உள்ள ஒரு சிறிய பாறைத் தீவு ஆகும். அத்தீவு சிறியதென்றாலும் ஈரானின் எரிபொருள், எரிசக்தி உள்கட்டமைப்பின் அமைவிடமாக உள்ளதோடு, ஈரானுக்கு எரிபொருள் மூலமாக அதிகப்படியான வருமான செழிப்பை ஏற்படுத்துவதாகவும் கருதப்படுகிறது. ஈரானின் மசகு எண்ணெய் போக்குவரத்தில் 90 வீத செயற்பாடுகள் இந்த தீவில் உள்ள எரிபொருள் ஏற்றுமதி முனையத்திலேயே நடைபெறுகின்றன. ஈரான் நாட்டின் மசகு எண்ணெய், பிரதான நிலப்பரப்பிலிருந்து குழாய்கள் மூலம் கொண்டுசெல்லப்பட்டு, இந்த தீவில் உள்ள முனையத்தின் வழியாகவே வருகிறது. கார்க் தீவின் கடற்கரை ஆழமான நீர்ப் பகுதியை கொண்டிருப்பதால் 85 மில்லியன் கேலன் எண்ணெய் கொள்ளளவு கொண்ட மிகப் பெரிய எண்ணெய் தாங்கிகளை ஏற்றிச் செல்லும் கப்பல்கள் அத்தீவில் உள்ள இறங்குதளங்களுக்கு சென்று எண்ணெய் ஏற்றிக்கொண்டு புறப்படுகின்றன. கார்க் தீவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் எண்ணெய், ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படைக்கு ஒரு பிரதான வருமான ஆதாரமாக விளங்குகிறது. ட்ரம்பின் எச்சரிக்கை ட்ரம்ப் இத்தீவின் எண்ணெய் குழாய்களை தாக்குவது குறித்து பேசினாலும், இதனால் ஈரானின் பொருளாதாரத்துக்கு நீண்ட கால பாதிப்பு ஏற்படக்கூடும் என்பது குறித்தும் சிந்திக்காமல் இல்லை. ஒரே ஒரு உத்தரவு கொடுத்தால் போதும். அந்த எண்ணெய்க் குழாய்கள் அழிந்துவிடும். அப்படி அழித்தால், அதை மீண்டும் கட்டியெழுப்ப நீண்ட காலம் எடுக்கும் என்றும் குறிப்பிட்டார். ஈரானின் பதிலடி ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் மொஹமட் பாகர் காலிபாஃப் கூறுகையில், அமெரிக்க வீரர்கள் ஈரானில் தாக்குதல் நடத்தினால் விளைவுகள் மோசமாக இருக்கும் என்றும் அமெரிக்க படைவீரர்கள் ஈரான் மண்ணில் கால் வைப்பதையே தமது படையினர் எதிர்பார்த்து காத்திருப்பதாகவும் கூறுகிறார். ஈரான் எல்லைக்குள் நுழைய முயலும் அமெரிக்க வீரர்கள் மீது “நெருப்பு மழை பொழியும்” என்று எச்சரித்துள்ளார். அத்தோடு, அமெரிக்கா ஈரான் மீது தரைவழித் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகிவரும் நிலையில், ஈரான், எதற்காகவும் தாம் அடிபணியப்போவதில்லை என்று தெரிவித்துள்ளது. தரைவழித் தாக்குதல் நடந்தால் செங்கடலில் கப்பல் போக்குவரத்து இலக்கு வைக்கப்படும் என்றும் ஈரானிய இராணுவ அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், அமெரிக்காவிடமிருந்து கார்க் தீவை பாதுகாக்க, வான்பாதுகாப்பு அமைப்புகளின் செயற்பாடுகளை முடுக்கிவிடுவது, கண்ணிவெடிகளை வைப்பது என ஈரான் மும்முரமாக களத்தில் இறங்கும் என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்கா கார்க் தீவின் எண்ணெய் உள்கட்டமைப்புகளை தாக்கினால் என்ன நடக்கும்? கார்க் தீவின் எண்ணெய் உள்கட்டமைப்புகளை அழிப்பது ஈரானுக்கு மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்துவதாக அமெரிக்கா கூறிவந்தாலும், அமெரிக்கா காரியத்தில் முழுதாக இறங்குவதைத் தவிர்த்துவருவதற்கான காரணங்களும் பல தரப்பால் ஆராய்ந்து முன்வைக்கப்படுகின்றன. போர் தீவிரம் - கார்க் தீவில் தாக்கி முற்றாக அழித்தால் வரலாறு கண்டிராத மாபெரும் போர் உலகளவில் வெடிக்கும். எண்ணெய் விலை உயர்வு - உலகெங்கும் எண்ணெய் விலைகள் கடுமையாக உயரும் ஈரான் பதில் தாக்குதல் - மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள மற்ற எரிசக்தி நிலையங்களை ஈரான் தாக்க வழிவகுக்கும். ட்ரோன் தாக்குதல் அச்சுறுத்தல் - போர் ஆரம்பமாகி ஒரு மாத காலத்துக்குப் பிறகும் ஈரான் தனது அண்டை நாடுகள் மற்றும் கப்பல்கள் மீது குறைந்த விலை மற்றும் அதிக வெடிபொருள் கொண்ட ட்ரோன்களை ஏவும் திறனைக் கொண்டுள்ளது. தீவு அழிவுக்குட்படுத்தப்பட்டால் ஈரானின் மொத்த ஆக்ரோஷமும் பழிவாங்கலாக மாறி, பேரழிவுகள் ஏற்பட வாய்ப்புண்டு. குடிநீர் ஆதாரம் - ஈரான் தனது இலக்குகளை விரிவுபடுத்தி, மில்லியன்கணக்கான மக்களுக்கு குடிநீர் வழங்கும் கடல் நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் போன்ற முக்கிய இடங்களை தாக்கக்கூடும். இவ்வாறான பின்விளைவுகளை கருத்திற்கொண்டே அமெரிக்கா, கார்க் தீவின் மீது பரந்துபட்ட தாக்குதலை நடத்த இதுவரை பாரியதொரு இராணுவ நடவடிக்கையில் இறங்காதிருப்பதாக சர்வதே அளவில் பேசப்படுகிறது. https://www.virakesari.lk/article/242339

இலங்கையின் சுருக்கமான தொல்பொருள் வரலாறு - வரலாற்றுக்கு முந்தைய காலம் முதல் பிரிட்டிஷ் காலம் வரை [நாலு பகுதிகள் ]

1 week 6 days ago
இலங்கையின் சுருக்கமான தொல்பொருள் வரலாறு - வரலாற்றுக்கு முந்தைய காலம் முதல் பிரிட்டிஷ் காலம் வரை / பகுதி 01 [தொல்பொருள் சான்றுகள், கல்வெட்டியல் மற்றும் வரலாற்றுப் பதிவுகளின் அடிப்படையில் இத்தொகுப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இது நான்கு பகுதிகளைக் கொண்ட ஒரு 'நிர்வாகச் சுருக்கமாக' (Executive Summary) அமைகிறது; இதனைத் தொடர்ந்து, இலங்கையின் தொடக்ககால வரலாறு குறித்த முக்கிய தொல்பொருள் கண்டுபிடிப்புகள், வரலாற்று மேற்கோள்கள் மற்றும் முதன்மை ஆதாரங்களைக் கொண்ட விரிவான 30-பகுதி தொடர் வெளியிடப்படும்.] இலங்கையின் ஆரம்பகால வரலாறு தொல்லியல், கல்வெட்டியல், இலக்கியம் மற்றும் வாய்வழி மரபுகளால் வடிவமைக்கப்பட்ட ஒரு சிக்கலான மற்றும் சுவாரசியமான விடயமாகும். கடந்த நூற்றாண்டில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள், இலங்கையின் வரலாறு எழுதப்பட்ட காலத்திற்குப் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தொடங்கிவிட்டதை வெளிப்படுத்துகின்றன. வரலாற்றுக்கு முந்தைய காலத்திலேயே வேட்டையாடி வாழ்ந்த மக்கள் இங்கு வாழ்ந்ததையும், பின்னர் தென்னிந்தியாவுடன் கலாசார மற்றும் பொருளாதாரத் தொடர்புகளைக் கொண்டிருந்ததையும், காலப்போக்கில் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் ஒரு முக்கியமான வர்த்தக மற்றும் நாகரிக மையமாக இலங்கை மாறியதையும் தொல்லியல் கண்டுபிடிப்புகள் உறுதிப்படுத்துகின்றன. பல நூற்றாண்டுகளாக, தீவின் கடந்தகாலம் முக்கியமாக மகாவம்சம் மற்றும் தீபவம்சம் போன்ற பண்டைய நூல்களின் மூலமே விளக்கப்பட்டது. இந்த நூல்கள் பெறுமதிமிக்க கலாசாரத் தகவல்களை வழங்கினாலும், நவீன வரலாற்றாசிரியர்கள் இலங்கையின் ஆரம்பகால மனித வரலாற்றை மீளமைக்க தொல்பொருள் மற்றும் அறிவியல் சான்றுகளையே அதிகம் நம்பியுள்ளனர். இருப்பினும், பௌத்த வரலாற்று நூல்கள் பெரும்பாலும் சிங்கள அரசர்களையும் பௌத்த மதத்துடனான அவர்களின் தொடர்பையும் மையப்படுத்திய ஒரு பார்வையை முன்வைத்தன. இது தமிழர்களின் இருப்பைக் குறைத்து மதிப்பிட்டது அல்லது புறக்கணித்தது. இத்தகைய பதிவுகள், தமிழர்கள் பிற்காலத்தில் வந்தவர்கள் என்ற எண்ணத்தை உருவாக்கியதுடன், தீவின் கலாசாரம், வர்த்தகம் மற்றும் குடியேற்றங்களில் அவர்களின் பங்களிப்பையும் மறைத்தன. இதன் விளைவாக, தமிழர்கள் வரலாற்று ரீதியாகப் புறக்கணிக்கப்பட்டதுடன், இது காலப்போக்கில் இனரீதியான பதற்றங்களுக்கும் மோதல்களுக்கும் வழிவகுத்தது. ஆனால், நவீன தொல்பொருள் ஆய்வுகளும் கல்வெட்டுகளும், தமிழ் பேசும் மக்கள் பண்டைய காலத்திலிருந்தே இலங்கையின் வரலாற்றில் வர்த்தகம், அரசியல் மற்றும் கலாசாரத்தில் முக்கிய பங்கு வகித்துள்ளனர் என்பதைக் காட்டுகின்றன. இக்கட்டுரை தொல்லியல், கல்வெட்டியல் மற்றும் வரலாற்று ஆய்வுகளின் அடிப்படையில் இலங்கையின் ஆரம்பகால வரலாற்றைப் பற்றிய ஒரு சமநிலையான பார்வையை முன்வைக்கிறது. பல்வேறு துறைகளின் ஆதாரங்களை விமர்சன ரீதியாக ஆராய்வதன் மூலம், இலங்கையின் கடந்தகாலத்தைப் பற்றிய முழுமையான மற்றும் துல்லியமான சித்திரத்தை இது வழங்குகிறது. 1. வரலாற்றுக்கு முந்தைய இலங்கை: ஆரம்பகால மனிதக் குடியேற்றங்கள் (கி.மு. 125,000 – கி.மு. 1000) இலங்கையில் மனித நடமாட்டத்திற்கான ஆரம்பகால சான்றுகள் 125,000 ஆண்டுகளுக்கு முற்பட்டவை. வட இலங்கையின் இரணைமடுப் படிவு (Iranamadu Formation) மற்றும் தென்கிழக்கின் புந்தல (Bundala) பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சிகள், இடைக்கற்காலத்தைச் சேர்ந்த கற்கருவிகளை வெளிப்படுத்தியுள்ளன. குவார்ட்ஸ் (Quartz) மற்றும் செர்ட் (Chert) கற்களால் செய்யப்பட்ட இக்கருவிகள் தாவரங்களை வெட்டவும், இறைச்சியைப் பதப்படுத்தவும், விலங்குத் தோல்களைத் தயார் செய்யவும் பயன்படுத்தப்பட்டிருக்கலாம். கடல் மட்டம் குறைந்திருந்த காலங்களில், இலங்கையும் தென்னிந்தியாவும் நிலப்பாலத்தால் இணைக்கப்பட்டிருந்தபோது, இந்தியத் துணைக் கண்டத்திலிருந்து இடம்பெயர்ந்த ஹோமோ எரெக்டஸ் (Homo erectus) அல்லது ஹோமோ ஹைடெல்பெர்கென்சிஸ் (Homo heidelbergensis) போன்ற ஆதி மனித இனங்கள் இக்கருவிகளை உருவாக்கியிருக்கலாம் என தொல்பொருள் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். முக்கியமான வரலாற்றுக்கு முந்தைய இடங்கள்: பாஹியங்கல (Fa Hien Cave) மற்றும் பட்டதொம்பலென (Batadombalena) குகைகள் பின்னர், சுமார் கி.மு. 38,000 அளவில், பலாங்கொடை மனிதன் (Homo sapiens balangodensis / Balangoda Man) என்று அழைக்கப்படும் நவீன மனித இனம் இத்தீவில் வாழ்ந்தது. பாஹியங்கல மற்றும் படதொம்பலேன போன்ற குகைகளில் கண்டெடுக்கப்பட்ட எலும்புக்கூடுகள், இவர்கள் வெப்பமண்டல மழைக்காடுகளில் வாழ்ந்த திறமையான வேட்டைக்காரர்கள் என்பதை உறுதிப்படுத்துகின்றன. இலங்கையின் தொல்பொருள் ஆய்வாளர் சிரான் உபேந்திர தெரணியகல [archaeologist Siran Upendra Deraniyagala] மேற்கொண்ட ஆய்வுகள், இந்த வரலாற்றுக்கு முந்தைய கலாசாரங்களின் காலவரிசையை நிலைநிறுத்த உதவின. பாஹியங்கல குகை அகழ்வாராய்ச்சியில் மிகச்சிறிய கற்கருவிகள் (Microlithic tools), எலும்பு கருவிகள் மற்றும் மழைக்காடு சூழலில் வில் மற்றும் அம்புகளின் ஆரம்பகால பயன்பாட்டிற்கான சான்றுகள் கிடைத்துள்ளன. இக்கண்டுபிடிப்புகள் அக்காலத்துக்கே உரிய மிகவும் மேம்பட்ட பிழைப்புத் தொழில்நுட்பங்களை அவர்கள் கொண்டிருந்ததைக் காட்டுகின்றன. இந்த ஆரம்பகால வேட்டைக்காரர்களின் சந்ததியினர் இலங்கையின் பழங்குடிச் சமூகமான வேடர் (Vedda) மக்களுடன் தொடர்புடையவர்கள் என பல அறிஞர்கள் நம்புகின்றனர். மரபணு மற்றும் மானுடவியல் ஆய்வுகளின்படி, வேடர் மக்கள் தமிழ்நாட்டின் இருளர் (Irula) மற்றும் கேரளாவின் பணியர் (Paniya) போன்ற தென்னிந்திய பழங்குடியினருடன் நெருங்கிய மூதாதையர் தொடர்பைப் பகிர்ந்து கொள்கின்றனர். இத்தொடர்புகள் இலங்கையினதும் தென்னிந்தியாவினதும் ஆரம்பகால மக்கள் ஒரு பரந்த வரலாற்றுக்கு முந்தைய கலாசார வலையமைப்பின் அங்கமாக இருந்ததை நிரூபிக்கின்றன. நன்றி ✍️ கந்தையா தில்லைவிநாயகலிங்கம் BSc Engineering (Honours) அத்தியடி, யாழ்ப்பாணம் பகுதி 02 தொடரும் துளி/DROP: 2124 [இலங்கையின் சுருக்கமான தொல்பொருள் வரலாறு - வரலாற்றுக்கு முந்தைய காலம் முதல் பிரிட்டிஷ் காலம் வரை / பகுதி 01 https://www.facebook.com/groups/978753388866632/posts/34603917772590095/?

சிறு கதை - 207 / பெயர்களுக்கு முன் நினைவிருந்த தீவு அல்லது ஒரு நிலத்தின் கதை [ஒன்பது பகுதிகள்]

1 week 6 days ago
சிறு கதை - 207 / பெயர்களுக்கு முன் நினைவிருந்த தீவு அல்லது ஒரு நிலத்தின் கதை / அத்தியாயம் 6 [இந்த கதை ஒரு கல்லைப் பற்றியது மட்டுமல்ல. இது ஒரு நிலத்தின் கதை. அதில் வாழ்ந்த மக்களின் கதை. மாற்றப்பட்ட ஒரு சொல்லின் கதை. மறைக்கப்பட்ட நினைவுகளின் கதை. வரலாறு என்றால் நாம் புத்தகங்களில் படிப்பதையே நினைப்போம். ஆனால் வரலாறு மக்களின் நினைவுகளிலும் வாழ்கிறது. ஒரு கல், ஒரு சொல், ஒரு மாற்றம் — இவை எல்லாம் சேர்ந்து எவ்வாறு ஒரு சமூகத்தின் வாழ்க்கையை மாற்றுகின்றன என்பதையே இந்த கதை சொல்லுகிறது. ஒரு கல் பேசாது. ஆனால் அது பல காலங்களைக் காணும். மனிதர்கள் வரலாற்றை எழுதுகிறார்கள். ஆனால் அவர்கள் எல்லாவற்றையும் எழுத மாட்டார்கள். சில உண்மைகள் தெரிவு செய்யப்படுகின்றன. சில உண்மைகள் மறைக்கப்படுகின்றன. இந்த கதை சொல்லும் முக்கியமான செய்தி இதுதான்: வரலாறு முழுவதும் பொய்யாக இருக்க வேண்டிய அவசியமில்லை. அது ஆபத்தாக மாறுவதற்கு சில உண்மைகளை மட்டும் தேர்ந்தெடுத்து சொல்லினால் போதும். என் குறிப்பு: இந்த நூல் ஒரு கற்பனைக்கதை. ஆனால் இதில் பேசப்படும் உணர்வுகள் உண்மையானவை. நிலம், மொழி, அடையாளம், நினைவு — இவை எல்லாம் மனிதர்களின் வாழ்க்கையில் முக்கியமானவை. இந்த நூல் ஒருபக்கத்தை ஆதரிப்பதற்காக அல்ல. பேசப்படாத குரல்களை நினைவில் கொள்ளச் செய்வதற்காக. நாம் வரலாற்றைப் படிக்கும் போது ஒரு கேள்வியை கேட்க வேண்டும்: “இங்கே யாருடைய குரல் கேட்கப்படவில்லை?” அந்தக் கேள்வியே இந்த கதையின் இதயம்.] அந்தக் கிளர்ச்சி ஒரு மாபெரும் காவியமாக உருவெடுக்கும் முன்பே பலவீனமடையத் தொடங்கியது. பாடல்களில் பாடப்படும் பிரம்மாண்டமான இறுதிப் போரோ அல்லது தீர்ப்பு வழங்கும் ஒரு குறிப்பிட்ட தருணமோ அங்கே நிகழவில்லை. மாறாக, அங்கிருந்தது நீண்ட காலச் சோர்வு, தீராத பசி மற்றும் அதிகாரம் மெதுவாகத் தன் பிடியை இறுக்கிய ஒரு இருண்ட உணர்வு மட்டுமே. நிலவில்லாத ஒரு இரவில், மலைக்காடுகளில் எரிந்த புரட்சியின் நெருப்பு ஒவ்வொன்றாக அணைந்தது. ஒற்றர்கள் வரவில்லை; செய்திகள் துண்டிக்கப்பட்டன. "இது முடிவின் ஆரம்பம்" என்பதைச் சிவா உணர்ந்தான். சிவா அவனது உடல் வலிமைக்காகத் தேர்ந்தெடுக்கப்படவில்லை; அவன் அந்த நிலத்தின் ஆதி நினைவுகளுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டான். மன்னர்கள் தோன்றுவதற்கு முன்பே அங்கிருந்த ஒற்றையடிப் பாதைகள், வணிகர்களின் வழித்தடங்கள், யாத்திரிகர்களின் பாதைகள் மற்றும் வேடர்கள் (Veddhas) மட்டுமே அறிந்த அடர்ந்த காட்டு வழிகள் சிவாவிற்கு அத்தப்படியாகத் தெரிந்திருந்தது. அவன் சிறிய குழுக்களைக் கொண்டு அரசின் தானியக் களஞ்சியங்களைத் தாக்கினான்; கைதிகளை விடுவித்தான். இருளுக்குள் தோன்றி விடியலுக்குள் மறைந்தான். சில காலம் இந்த யுக்தி வெற்றியளித்தது. ஆனால், ஒரு கிளர்ச்சி நீடிக்கத் துணிச்சல் மட்டும் போதாது; அதற்குச் சாதகமான காலமும் தொடர்ச்சியான மக்கள் ஆதரவும் தேவை. அரசவையிடம் ஆள் பலமும், தானியமும் இருந்தது. மடாலயங்களிடம் தங்களின் செயல்களை நியாயப்படுத்த ‘தர்மம்’ என்ற முகமூடி இருந்தது. மீண்டும் பஞ்சம் வந்தபோது, மக்கள் தங்களின் உரிமையை விட உயிரைத் தக்கவைக்க உணவைத் தேர்ந்தெடுத்தனர். சிலர் சரணடைந்தனர்; சிலர் உயிர் பிழைக்கக் காட்டிக் கொடுத்தனர். ஒரு காலத்தில் சிவா யாரைப் பசியிலிருந்து காப்பாற்றினானோ, அதே சிறுவனால் ஒரு வறண்ட ஏரிக்கரையில் (Wewa) வைத்துச் சிவா காட்டிக்கொடுக்கப்பட்டான். சிவா பிடிபட்டபோது அவனுக்குச் சித்திரவதைகள் வழங்கப்படவில்லை. ஒரு உயர் அதிகாரியும் (Adigar) ஒரு மூத்த துறவியும் அவனிடம் பேசினர். அந்தத் துறவி நிதானமாகச் சொன்னார்: “நீ ஒரு பழைய கதையை (Identity) நம்பிப் போராடினாய். இப்போது நாங்கள் ஒரு புதிய, மேன்மையான கதையை (The New History) உலகிற்குச் சொல்வோம்.” அப்போதுதான் அவர்களின் உண்மையான திட்டம் சிவாவிற்குப் புரிந்தது. அவர்கள் அவனைக் கொல்ல விரும்பவில்லை; மாறாக, அவனை வரலாற்றிலிருந்தே துடைத்தெறிய விரும்பினர். அவனுக்கு இரண்டு தேர்வுகள் தரப்பட்டன: கடல் கடந்து (தமிழகம் அல்லது தென்கிழக்கு ஆசியாவுக்கு) நாடு கடத்தப்படுதல். முழுமையான மௌனம் — எவருமறியாத இடத்தில் அடையாளமின்றி மறைந்து வாழ்வது. அவன் பெயர் எந்தக் கல்வெட்டிலும் வராது; அவன் ஒரு வீரனாகப் போற்றப்பட மாட்டான். அவன் இந்த மண்ணில் பிறந்ததற்கான தடையமே இல்லாமல் ஆக்கப்படுவான். வரலாற்றுத் தரவுகள் (Historical Context): யுக்தி (Guerrilla Warfare): கி.மு. காலத்திலேயே இலங்கையின் மலைப்பாங்கான பகுதிகளில் (மலையரட்டை - Hill Country) மறைந்திருந்து தாக்கும் முறை புழக்கத்தில் இருந்தது. இதற்குப் பூர்வகுடி வேடர்களின் உதவி முக்கியமாக இருந்தது. பஞ்சத்தின் அரசியல்: அக்காலத்தில் குளங்களை (Wewa) மையமாகக் கொண்ட விவசாயம் பாதிக்கப்பட்டபோது, அரசுகள் உணவைக் கட்டுப்பாட்டில் வைத்துப் போராட்டங்களை ஒடுக்கின. கல்வெட்டுகள் (Epigraphy): அக்காலக் கல்வெட்டுகள் (Brahmi Inscriptions) பெரும்பாலும் மடாலயங்களுக்கு வழங்கப்பட்ட தானங்களையும், அரச வெற்றிகளையும் மட்டுமே பதிவு செய்தன. கிளர்ச்சியாளர்களின் பெயர்கள் வேண்டுமென்றே தவிர்க்கப்பட்டன. நாடுகடத்தல்: இலங்கையின் வரலாற்றில் தண்டனையாக அல்லது அரசியல் காரணங்களுக்காகத் தலைவர்கள் தமிழகத்திற்கு (பாண்டிய/சோழ நாடு) நாடுகடத்தப்படுவது ஒரு வழக்கமான நடைமுறையாக இருந்தது. சிவா நாடு கடத்தப்படுவதைத் தேர்ந்தெடுத்தான். அது மரணத்தின் மீதான பயத்தால் அல்ல; யாராவது ஒருவராவது இந்த நிலத்தின் உண்மையான நினைவுகளுடன் உயிரோடு எஞ்சியிருக்க வேண்டும் என்பதற்காக. அதே சமயம், மடாலயத்தின் சுவர்களுக்குள் கலினி முற்றிலும் வேறொரு போரில் இருந்தாள். பகல் நேரங்களில் அவள் ஓலைகளைப் பதப்படுத்தினாள், மை தயாரித்தாள், எழுத்துப் பிழைகளைச் சீர் செய்தாள். எந்த மாதிரியான வார்த்தைகள் ஆட்சியாளர்களுக்கும் துறவிகளுக்கும் பிடிக்கும் என்பதை அவள் நுணுக்கமாகக் கற்றுக்கொண்டாள். எங்கே உண்மை முடிகிறது, எங்கே புனைவு தொடங்குகிறது என்ற சூட்சுமம் அவளுக்குத் தெரிந்திருந்தது. இரவு நேரங்களில், அவள் ரகசியமாகச் சில மாற்றங்களைச் செய்தாள். யாரும் கவனிக்காத வண்ணம் ஒரு பழைய ஊர்பெயரை மாற்றாமல் அப்படியே விட்டாள். ஒரு குறிப்பிட்ட குடிவழியை (Clan) “பழமையான ஆதிக்குடிகள்” என்று எழுதினாள். ஒரு வழிபாட்டுத் தலத்தை “அனைவருக்குமான பொதுவான இடம்” என்று குறித்தாள். இவை மிகச் சிறிய மாற்றங்கள் தான். ஆனால், வரலாறு என்பது ஒருமுறை படிக்கப்படுவதில்லை; அது பல நூற்றாண்டுகளாக நகலெடுக்கப்படும் (Manuscript copies). இன்று விடப்படும் ஒரு சிறு குறிப்பு, எதிர்காலத் தலைமுறைக்கு மாபெரும் உண்மையாக மாறலாம் என்பதை அவள் அறிந்திருந்தாள். ஒரு நாள், ஒரு வரியை எழுதும்போது கலினி தயங்கி நின்றாள். அவளது கணவன் அதைக் கவனித்து, “வரலாறு சுத்தமாக (Clean) இருக்க வேண்டும்” என்றான். கலினி மெதுவாகக் கேட்டாள்: “சுத்தமாக இருக்க வேண்டுமா? அல்லது முழுமையாக (Complete) இருக்க வேண்டுமா?” அவளது கணவனின் பார்வையில் சந்தேகம் தெறித்தது. அன்று இரவு, ஒரு முக்கியமான ஓலைச்சுவடியை கலினி எரியூட்டினாள். யாரும் பார்க்கவில்லை; ஆனால் ஒரு திரிபுவாதம் அன்று சாம்பலானது. அதேசமயம், ஒரு உண்மையும் மீண்டும் எழுதப்பட வாய்ப்பில்லாமல் அழிந்தது. ஆண்டுகள் உருண்டோடின. மடாலயங்களில் வளர்ந்த அடுத்த தலைமுறை குழந்தைகள் புதிய கதைகளையே உண்மையான வரலாறு என நம்பிக் கற்றனர். மன்னர்கள் “நாட்டை உருவாக்கியவர்களாக” (Founders) போற்றப்பட்டனர்; ஆனால் அவர்கள் நிலத்தைக் கைப்பற்றியவர்கள் என்பது மறைக்கப்பட்டது. அந்த நிலத்தில் முன்பே வாழ்ந்த ஆதிக்குடிகள் ஒளி வருவதற்கு முன் இருந்த “இருள்” போலவும், வெறும் “நிழல்கள்” போலவும் சித்திரிக்கப்பட்டனர். ஒரு இனத்தின் புராணம் (Mythology) திடீரென்று உருவாவதில்லை. அது கல்லின் மேல் சுண்ணாம்பு பூசுவது போல மெல்ல மெல்லக் கட்டப்பட்டது. ஒரு அடுக்குக்கு மேல் அடுத்த அடுக்கு எனப் பொய்கள் பூசப்பட, இறுதியில் அடியில் இருந்த உண்மையான வரலாறு கண்ணுக்குத் தெரியாமல் மறைந்து போனது. வரலாற்றுத் தரவுகள் (Historical Context): சிங்கள மொழி உருவாக்கம் (Genesis of Sinhala): கி.மு. காலப்பகுதியில் புழங்கிய 'எளு' (Elu), தமிழ் மற்றும் பிராகிருத மொழிகள், பௌத்த வருகைக்குப் பின் பாளி (Pali) மற்றும் சமஸ்கிருதத்தின் ஆதிக்கத்தால் மாற்றமடைந்து இன்றைய சிங்கள மொழியின் ஆரம்ப வடிவமாக மாறியது. வரலாறு திரிபு (Historiography): 'மகா வம்சம்' போன்ற நூல்கள் எழுதப்பட்டபோது, விஜயன் வருகைக்கு முந்தைய காலம் 'மனிதர்கள் வாழாத அல்லது அரக்கர்கள் வாழ்ந்த இடமாக' (Yakkhas/ Nagas) உருவகப்படுத்தப்பட்டது. இது நிலத்தைக் கைப்பற்றுவதை நியாயப்படுத்தப் பயன்படுத்தப்பட்ட ஒரு உத்தி. ஓலைச்சுவடிகள் (Palm-leaf Manuscripts): பழங்காலத்தில் ஓலைச்சுவடிகளை நகலெடுக்கும்போது (Copying process), நகலெடுப்பவர்கள் தங்களுக்குத் தேவையான மாற்றங்களைச் செய்வது வழக்கமாக இருந்தது. கலினி போன்றவர்கள் மூலமே சில ஆதித் தமிழ் அடையாளங்கள் இன்றும் எஞ்சியுள்ளன. வழிபாட்டுத் தலங்கள்: இலங்கையில் பல இடங்கள் ஆரம்பத்தில் இந்து மற்றும் நாட்டுப்புறத் தெய்வ வழிபாட்டுத் தலங்களாக இருந்து, பின்னர் பௌத்த விகாரைகளாக மாற்றப்பட்டன என்பதைத் தொல்லியல் ஆய்வுகள் (எ.கா: கதிர்காமம்) உணர்த்துகின்றன. கடலுக்கு அப்பால், தமிழகத்தின் கரைகளில் வாழ்ந்த சிவா, தன் தேசத்தின் புதிய கதைகளைக் கேட்டான். அவனது வாழ்நாள் போராட்டமும், அந்த மக்களின் தியாகமும் ஒரு சிறிய அடிக்குறிப்பாகக் கூடப் பதியப்படவில்லை. "அவர்கள் இருந்தார்கள், பிறகு மறைந்தார்கள்" — அவ்வளவே. ஒரு மாபெரும் கிளர்ச்சி, வரலாற்றின் முன்னுரையில் ஒரு வரியில் கரைந்து போனது. மடாலயத்தில் ஓலைகளைத் தொகுத்துக் கொண்டிருந்த கலினி ஒரு கசப்பான உண்மையை உணர்ந்தாள்: ஒரு வரலாற்று நூல் முழுவதுமே பொய்யாக இருக்க வேண்டிய அவசியமில்லை. அதில் பத்து விஷயங்களில் ஏழு உண்மைகள் இருக்கலாம்; ஆனால் மிக முக்கியமான மூன்று உண்மைகள் மறைக்கப்பட்டால், அந்த நூல் ஒரு முழுப் பொய்யை விடவும் ஆபத்தானது. இது நேரடிப் பொய் அல்ல, ஆனால் முழுமையற்ற உண்மை. நேரடியான பொய்யை ஆதாரங்களுடன் எதிர்த்துவிடலாம். ஆனால், எழுதப்படாத உண்மையை எப்படி எதிர்ப்பது? ஒரு விஷயம் எழுதப்படவே இல்லை என்றால், அப்படி ஒன்று நிகழவே இல்லை என்று வருங்காலத் தலைமுறை நம்பத் தொடங்கும். காலப்போக்கில் அது நினைவுகளில் இருந்தும் முற்றிலுமாகத் துடைத்தெறியப்படும். இதுவே ஒரு இனத்திற்கு இழைக்கப்படும் மிகப்பெரிய அநீதி. அந்த வரலாற்று நூலை (மகா வம்சத்தின் முன்னோடிப் பதிவுகள் போன்ற தொகுப்புகள்) உருவாக்க உதவியவள் என்ற முறையில், அதில் மறைக்கப்பட்ட ஓட்டைகளை கலினி நன்கு அறிவாள். அவள் கடவுளிடம் மன்னிப்பு கேட்கவில்லை; மாறாக, அந்த நூலில் இடம் பெறாத மக்களிடம், பெயர்கள் குறிக்கப்படாத வீரர்களிடம், குரல்கள் நசுக்கப்பட்ட அந்தப் பூர்வகுடிகளிடம் மனதார மன்னிப்பு கேட்டாள். அவளால் முழு வரலாற்றையும் மாற்ற முடியாமல் போயிருக்கலாம்; அதிகாரத்திற்கு எதிராக முழு உண்மையை நிலைநாட்ட முடியாமல் போயிருக்கலாம். ஆனால், உண்மையை முழுமையாகத் திரிப்பதற்கும் அவள் சம்மதிக்கவில்லை. வரலாறு என்பது வாளால் மட்டும் எழுதப்படுவதில்லை; அது வார்த்தைகளால் வடிவமைக்கப்படுகிறது. சிலரை நாயகர்களாகச் சித்திரிக்கவும், சிலரைச் சிறுமைப்படுத்தவும், சிலரை வரலாற்றிலிருந்தே நீக்கவும் சொற்கள் ஆயுதங்களாகப் பயன்படுத்தப்படுகின்றன. கலினி அந்த ஓலைச்சுவடிகளைத் தொட்டு, தன் கண்ணீரால் அந்த மௌனத்திற்கு அஞ்சலி செலுத்தினாள். வரலாற்றுத் தரவுகள் (Historical Context): முழுமையற்ற வரலாறு (Selective History): இலங்கையின் ஆதி வரலாறான 'தீபவம்சம்' மற்றும் 'மகாவம்சம்' போன்றவை பௌத்த மதத்தின் மேன்மையையும், ஒரு குறிப்பிட்ட வம்சத்தின் வெற்றியையும் நிலைநாட்ட எழுதப்பட்டவை. இதில் பூர்வகுடிகளான இயக்கர் மற்றும் நாகர்களின் (ஆதித் தமிழர்களின் முன்னோடிகள்) வாழ்வியல் முறைகள் திட்டமிட்டுத் தவிர்க்கப்பட்டன . வாய்மொழி மரபு vs எழுத்து மரபு: எழுதப்பட்ட வரலாறுகள் அதிகார மையங்களைச் சார்ந்து இருந்தபோது, உண்மையான வரலாறு நாட்டுப்புறப் பாடல்கள் (Ballads) மற்றும் வாய்மொழி மரபுகள் வழியாகவே மக்களிடையே தங்கியிருந்தது . மொழிக் கலப்பு: கி.மு. 3-ஆம் நூற்றாண்டு வாக்கில், பாளி மொழியில் இருந்த மத நூல்கள் ஹெல (Elu) மொழியில் மொழிபெயர்க்கப்பட்டபோது, பல தமிழ் மற்றும் ஆதி இடப்பெயர்கள் சமஸ்கிருதமயமாக்கப்பட்டன . மன்னிப்பு மற்றும் மனசாட்சி: வரலாற்றை எழுதிய பல அறிஞர்கள் (Scribes), தாங்கள் அரசவைக்குக் கட்டுப்பட்டு உண்மையை மறைக்க வேண்டியிருந்ததை மறைமுகமான குறியீடுகள் மூலம் தங்கள் பதிவுகளில் உணர்த்தியுள்ளனர். நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] அத்தியாயம் 7 தொடரும் துளி/DROP: 2123 [சிறு கதை - 207 / பெயர்களுக்கு முன் நினைவிருந்த தீவு அல்லது ஒரு நிலத்தின் கதை / அத்தியாயம் 6 https://www.facebook.com/groups/978753388866632/posts/34603845805930625/?

சிகாடா வைரஸ்; மீண்டும் உலகை அச்சுறுத்தும் உருமாறிய கொரோனா; அறிகுறிகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்னென்ன?

1 week 6 days ago
23 நாடுகளில் பரவியுள்ளது புதிய கொவிட் திரிபு ‘சிக்காடா’ வைரஸ் Published By: Digital Desk 3 30 Mar, 2026 | 03:28 PM (இணையத்தள சர்வதேச செய்திப் பிரிவு) கொரோனா வைரஸின் உருமாறிய புதிய துணைத் திரிபான BA.3.2, தற்போது அமெரிக்கா உட்பட உலகின் 23 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது. இதற்குப் பொதுவாக ‘சிக்காடா’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்தத் திரிபு அதன் அசாதாரணமான மரபணு மாற்றங்கள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியைத் தாண்டிப் பரவும் திறன் காரணமாக உலக சுகாதார ஸ்தாபனம் உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது. நீண்ட காலத்திற்கு ஒருமுறை நிலத்திலிருந்து வெளியே வரும் 'சிக்காடா' பூச்சிகளைப் போலவே, இந்த வைரஸும் நீண்ட காலம் கண்டறியப்படாமல் மறைந்திருந்து, திடீரென மீண்டும் வெளிப்பட்டதால் இந்தப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இது முதன்முதலில் 2024 ஆம் ஆண்டின் இறுதியில் தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்டது. அமெரிக்காவில் இதனுடன் தொடர்புடைய முதல் பாதிப்பு 2025 ஜூன் மாதம் பதிவாகியுள்ளது. ஆராய்ச்சியாளர்களைப் பொறுத்தவரை, இந்தத் திரிபு 70 முதல் 75 வரையிலான மரபணு மாற்றங்களைக் கொண்டுள்ளது. குறிப்பாக, மனித உடலுக்குள் வைரஸ் ஊடுருவ உதவும் 'ஸ்பைக் புரோட்டீன்' பகுதியில் மட்டும் 50-க்கும் மேற்பட்ட மாற்றங்கள் உள்ளன. கடந்த இரண்டு ஆண்டுகளாக அமெரிக்காவில் ஆதிக்கம் செலுத்தி வந்த 'JN.1' திரிபிலிருந்து இது முற்றிலும் மாறுபட்டதாகக் கருதப்படுகிறது. இதுவரை கிடைத்துள்ள தரவுகளின்படி, 'சிக்காடா' திரிபு தீவிரமான பாதிப்புகளை ஏற்படுத்துவதாகத் தெரியவில்லை. ஓமிக்ரான் வகையைப் போன்றே இதுவும் மென்மையான அறிகுறிகளையே கொண்டுள்ளது. இருமல் மற்றும் தொண்டை வலி, சோர்வு மற்றும் உடல் வலி, மூக்கடைப்பு அல்லது மூக்கு ஒழுகுதல், மிதமான காய்ச்சல், அரிதாக வாசனை மற்றும் சுவை இழப்பு, இரவு நேரங்களில் வியர்த்தல் போன்ற அறிகுறிகளையே கொண்டுள்ளது. இந்த வைரஸ் நோய் எதிர்ப்பு சக்தியைச் சற்றே ஏமாற்றும் திறன் கொண்டிருந்தாலும், தற்போதுள்ள தடுப்பூசிகள் தீவிரமான பாதிப்பு மற்றும் உயிரிழப்புகளிலிருந்து பாதுகாப்பை வழங்கும் என்று நிபுணர்கள் உறுதியளிக்கின்றனர். https://www.virakesari.lk/article/242317
Checked
Mon, 04/13/2026 - 01:49
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed