புதிய பதிவுகள்2

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 - செய்திகள்

1 week 6 days ago
ஒரு திங்கட் கிழமை பிற்பகலில் பெரம்பூரில் விஜை வேட்புமனு தாக்கல் செய்ய போன போது மறுபடியும் கட்டுக்கடங்கா கூட்டம். ஸ்டாலின் போகும் போது வழமையான கூட்டம்தான்.

யாழ்களத்தை வாழ்த்தும் ஒரு உறவு

1 week 6 days ago
காலை வணக்கத்தோடு யாழின் முகப்புத் தோற்றம் குறிப்பாக 28ம் ஆண்டு தோற்றம் மிகவும் நன்றாக இருக்கிறது.இனிய 28ம் ஆண்டு வாழ்த்துகள் உரித்தாகட்டும்.இது யாயினி.🙏

விரிவடையும் மத்திய கிழக்கு போர்; சாதனை அளவை எட்டிய எண்ணெய் விலை!

1 week 6 days ago
வீட்டையே ஆட்டையைபோடலாம் என்று போய் இப்ப வீடு கிடக்கட்டும் பின் கோடிக்குள்ள சாக்கடையை திறந்துவிடுகிற நாத்தத்தில வந்து நிக்குது . ........! 🙂

குட்டிக் கதைகள்.

1 week 6 days ago
destnporSo4aag21guel141m2ttàm52 :g0r0i u1h94u2f4hsL8876 a65 · ஒரு ஊர்ல ஒரு ராஜா இருந்தார். அவருக்கு ஒரு மந்திரி. இவங்க ரெண்டு பேரும் ஒரு நாள் மாலை நடைபயிற்சி போனாங்க ஒரு ஆத்தங்கரை ஒரமா.. அப்போது அங்கே ஒரு கொடியில் வெள்ளரிக்காய் காய்த்துத் தொங்குவதை பார்த்த ராஜா "மந்திரி.. அந்த வெள்ளரிக்காய பறிச்சிகிட்டு வா சாப்பிடலாம்"ன்னு சொன்னார். மந்திரி பறிக்க போனபோது அதனருகில் உட்கார்ந்து இருந்த ஓரு குருடன் சொன்னான் "ஐயா அது வெள்ளரிக்காய் இல்ல. அது குமட்டி காய். அதை தின்னா வாந்தி தான் வரும்"ன்னு... ராஜா சொன்னான் "யோவ் மந்திரி அது பறிச்சு சாப்பிடு.. வாந்தி வருதா பார்க்கலாம்"... வேற வழி இல்லாம மந்திரி சாப்பிட்டான். உடனே மந்திரிக்கு கும்மட்டிக்கிட்டு ஒரே வாந்தி. ராஜா கேட்டான் "யோவ் கபோதி இதுக்கு என்ன மருந்து?". அந்த குருடன் சொன்னான் "அது பக்கத்துல 'கை' மாதிரி பச்சை இலை இருக்கும்.. அதை கையால கசக்கி மந்திரி வாய்ல விட்டா வாந்தி நிற்கும்"ன்னு சொன்னான் குருடன். ராஜா முயற்சி செய்ய மந்திரிக்கு வாந்தி நின்னு போச்சு. மந்திரிக்கு போன உசுரு திரும்பி வந்தது. ராஜா குருடனை பார்த்து "உனக்கு தான் கண் தெரியாதே எப்படி கரெக்ட்டா சொன்னாய்" என்று கேட்க , குருடன் சொன்னான் "ராஜா இந்த நாட்ல எங்கேயும் பஞ்சம் பசி பட்டினி. அப்படி இருக்கும் போது எவனாவது வெள்ளரிப்பிஞ்சை விடுவானா. எப்பவும் இயற்கை ஒரு நோய் கொடுக்கற காயை கொடுத்தால் இறைவன் பக்கத்துல ஒரு மாற்று மருந்து வச்சிடுவான்".. ராஜாக்கு சந்தோஷம். "இந்தா ஒரு டோக்கன். கிழக்கு வாசலுக்கு போ. பட்டை சாதம் குடுப்பாங்க. சாப்பிட்டு ஜாலியா இரு..." என்று சொல்லிட்டு ராஜா போய்ட்டான். கொஞ்ச நாள் கழித்து ஒரு வெளியூர் வியாபாரி ராஜா கிட்ட வந்தான். "ராஜா எங்கிட்ட வைரம் நிறைய இருக்கிறது. வாங்கிக்கறீங்களா"ன்னு கேட்டான். 'இது ஒரிஜினலா டூப்ளிக்கேட்டான்னு எப்படி தெரிஞ்சிக்கிறது' என்று மந்திரியை கூப்பிட்டான். ஏற்கனவே ஒரு தடவை வாந்தி எடுத்த அனுபவம் இருந்ததால் எதையாவது முழுங்கி வைக்க சொன்னா என்ன பண்றதுன்னு பயந்துட்டு தெரியாதுன்னுட்டான். ராஜா சொன்னான் "மந்திரி போய் அந்த கபோதிய கூட்டிண்டு வா.. அவன்தான் காரண காரியத்தோட கரெக்டா சொல்லுவான்"னான். மந்திரி போய் அந்த குருடனை கூட்டிட்டு வந்தான். ராஜா சொன்னான் "டேய் இதுல ஒரிஜினல் வைரம்... டூப்ளிகேட் வைரம் கலந்திருக்கான்னு பார்த்து சொல்லு". அந்த குருடன் அந்த மொத்த வைரத்தையும் எடுத்து மத்தியான வெயில்ல கொண்டு போய் வெச்சான். கொஞ்ச நேரம் பொறுத்து அதை கையில் எடுத்து பிரிச்சு ராஜா "இதெல்லாம் வைரம். மற்றது எல்லாம் கண்ணாடி"ன்னு பிரிச்சு கொடுத்துட்டான். வியாபாரியும் "எதோ தெரியாம நடந்துடுச்சு"ன்னு சொல்லி எல்லா வைரத்தையும் இனாமா கொடுத்தான். ராஜாவுக்கு ஆச்சர்யம். ராஜா குருடனை பார்த்து கேட்டான் "எப்படி கண்டுபிடிச்ச காரண காரியத்தோட சொல்லு..." குருடன் சொன்னான் "ராஜா வெயிலில் வைரம் சூடாகாது. ஆனா கண்ணாடி சூடாகும். அதுனால சூடானது எல்லாம் கண்ணாடின்னும் சூடுஆகாதது எல்லாம் வைரம்ன்னு பிரிச்சேன்".. ராஜா சந்தோஷமா பாக்கெட்ல கைய விட்டு ஓரு டோக்கன் எடுத்து குருடன் கிட்ட குடுத்து " மேற்கு வாசலுக்கு போ... இந்த டோக்கனை கொடுத்து பட்டை சாதம் வாங்கி சாப்பிட்டு சந்தோஷமா இரு"ன்னு சொல்லி அனுப்பிச்சான். இப்படி கொஞ்ச நாள் போச்சு. ராஜா தன் மகனுக்கு கல்யாணம் பண்ண பெண் தேட ஆரம்பிச்சான். பக்கத்து ஊர்ல இருந்து எல்லாம் இளவரசி குடுக்க ரெடியா இருந்தாங்க. ராஜாவுக்கு குழப்பம். யாரை தேர்ந்து எடுக்கறதுன்னு. மந்திரியை கேட்டா எல்லாம் நல்லா இருக்குன்னு பயந்துகிட்டே சொல்றான். ராஜா பார்த்தான் "கூப்பிட்றா அந்த கபோதியை..". குருடன் வந்தான். ராஜா குருடன்கிட்ட சொன்னான் "என் மகனுக்கு கல்யாணம் பண்ண பொண்ணு பாக்கறேன். எந்த ராஜாவோட ராஜகுமாரி சரியா இருக்கும்ன்னு காரண காரியதோட சொல்லு" அப்படின்னான். குருடன் சொன்னான் "ராஜா அடுத்த நாட்டை விட்டுட்டு அதுக்கு அடுத்த நாட்டு ராஜா பொண்ணை பாருங்க"ன்னான். "அந்த ராஜா உங்க சம்பந்தி ஆனா பக்கத்து நாட்டு ராஜா உங்க ரெண்டு பேருக்கும் நடுல இருப்பான். அப்போ எல்லை பிரச்சினை வராது. பொண்ண குடுத்ததால அந்த இடைப்பட்ட பகுதில பிரச்சினை வராம பார்த்துப்பான்..". ராஜாவுக்கு ஒரே குஷி. "சபாஷ். இந்தாடா டோக்கன்... வடக்கு வாசலுக்கு போ. பட்டை சாதம் குடுப்பான். வாங்கி சாப்பிட்டு சந்தோஷமா இரு" அப்படின்னான். குருடனும் போய்ட்டான். கொஞ்ச நாள் போச்சு. ஒரு நாள் ராஜா அந்த குருடன தன்னோட அந்தரங்க ஆலோசனை அறைக்கு வர சொன்னான். "டேய் நான் ஒண்ணு கேட்பேன்... சரியா காரண காரியதோட சொல்லணும்" அப்படின்னான். குருடனும் சரின்னான். "இந்த ஊர்ல என்ன எல்லோரும் என்னை பிச்சைகாரனுக்கு பிறந்த பய அப்படின்னு சொல்றாங்க. இதுக்கு நீ என்ன சொல்ற?... அப்படின்னான். குருடன் அமைதியா இருந்தான். பதிலே பேசல.. ராஜா திரும்ப கேட்டான்... குருடன் சொன்னான் "ராஜா.. நீங்க திரும்ப திரும்ப கேட்கறதால சொல்றேன் நெசமா நீங்க பிச்சைக்காரனுக்கு பிறந்தவன் தான்" அப்படின்னான். ராஜாவுக்கு ரொம்ப வருத்தம். "ஏன்டா"ன்னு கேட்டான். "ராஜா முதல்ல குமட்டி காய பத்தி சொன்னேன். நீங்க சந்தோஷமா ஆகிட்டீங்க. ஆனா கொடுத்தது இலவச டோக்கன் பட்ட சாதத்துக்கு. ராஜாவா இருந்தா கைல இருந்த மோதிரத்தை கொடுத்திருப்பான்... அப்புறம் கோடி கணக்குல வைரம் கிடைக்க வழி செஞ்சேன். ராஜாவா இருந்திருந்தா கழுத்திலிருந்த வைர மாலைய கொடுத்திருப்பான். ஆனா நீங்க கொடுத்தது பட்டை சாத டோக்கன்... மூணாவது.. ஒரு ராஜ்யமே உங்க கைக்குள்ள வருவதற்கு வழி சொன்னேன். இன்னொரு ராஜாவா இருந்தா நாலு கிராமத்தை எனக்கு எழுதி கொடுத்திருப்பான். நீங்க கொடுத்தது வடக்கு வாசல் பட்ட சாத டோக்கன்... இதிலிருந்து தெரிகிறது சத்தியமா நீங்க பிச்சைகாரனுக்கு பிறந்தவன்னு... ஏன்னா உங்க புத்தி டோக்கனோடு முடிஞ்சு போச்சு. அதுக்கு மேல போகல.... 🤔" அந்த குருடன் நிலைமையில் தான் ஓட்டு போடற நாம இருக்கோம்... Voir la traduction....!

நீருக்கடியில் பாரிய கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை

1 week 6 days ago
நீருக்கடியில் பாரிய கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை. மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உட்பட்ட சிரயாதீவு பிரதேச வாலியை அண்டிய அடர்ந்த காட்டுப் பகுதியில் நீருக்கடியில் சூட்சூமமான முறையில் நீண்ட நாட்களாக இயங்கி வந்த கசிப்பு உற்பத்தி நிலையத்தை சுற்றிவளைத்தனர் . இச்சுற்றி வளைப்பு தேடுதலின் போது 8 பரள்களில் 800 லீட்டர் கோடா மற்றும் 160 லீட்டர் கசிப்பு என்பன கைப்பற்றப்பட்டதுடன் கசிப்பு உற்பத்தி செய்யும் பெருமளவு உபகரணங்களும் கைப்பற்றப்பட்டன காத்தான்குடி பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி எ.எஸ்.எம்.ஏ. றஹீம் தலைமையிலான பொலிஸ் குழுவினர் மேற்படி சுற்றி வளைப்பை மேற்கொண்டிருந்தனர் சுற்றி வளைப்பு நடவடிக்கையின் போது இவ்வாறு கசிப்பு உற்பத்தி நிலையத்தில் கசிப்பு உற்பத்திக்கான பயன்படுத்தப்பட்ட பெருமளவிலான உபகரணங்களும் பரள்கள் போத்தல்கள் பலன்கள் என்பனவும் பொலிசாரினர் கைப்பற்றப்பட்டுள்ளன . சந்தேக நபர்கள் தப்பியோடிள்ளதுடன், கைப்பற்றப்பட்ட போதை பொருட்கள் மட்டக்களப்பு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். https://athavannews.com/2026/1470408

விரிவடையும் மத்திய கிழக்கு போர்; சாதனை அளவை எட்டிய எண்ணெய் விலை!

1 week 6 days ago
விரிவடையும் மத்திய கிழக்கு போர்; சாதனை அளவை எட்டிய எண்ணெய் விலை! ஈரானுக்கு எதிரான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கூட்டுத் தாக்குதல் தொடங்கி ஒரு மாதம் கடந்துள்ள நிலையில் ஆசியாவில் திங்கட்கிழமை (30) சந்தைகள் திறக்கப்பட்டபோது எண்ணெய் விலை 115 டொலருக்கும் மேல் உயர்ந்தது. அதன்படி, பிரென்ட் மசகு எண்ணெயின் விலை 2.9% அதிகரித்து, 115.84 டொலராக உள்ளது. பெப்ரவரி 28 ஆம் திகதிக்கு முன்பு, ஒரு பீப்பாய் பிரென்ட் மசகு எண்ணெய் சுமார் 72 டொலர் என்ற விலையில் வர்த்தகம் செய்யப்பட்டது. கடந்த வாரம், மார்ச் 19 அன்று ஒரு பீப்பாய் எண்ணெய் விலை 118 டொலர் என்ற உச்சத்தை எட்டியது. வெள்ளிக்கிழமை பிற்பகல் நிலவரப்படி, அது 112 டொலருக்கும் சற்றுக் குறைவாக இருந்தது. அதேநேரத்தில் முந்தைய அமர்வில் 5.5% விலை உயர்ந்ததைத் தொடர்ந்து, அமெரிக்க மேற்கு டெக்சாஸ் இன்டர்மீடியட் மசகு எண்ணெய் ஒரு பீப்பாய்க்கு 1.86 டொலர் அல்லது 1.87% அதிகரித்து, 101.50 டொலராக இருந்தது. வார இறுதியில் யேமன் ஹவுதிகள் இஸ்ரேல் மீது தங்களது முதல் தாக்குதல்களைத் தொடங்கியதைத் தொடர்ந்து, மத்திய கிழக்கில் ஈரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேல் போர் விரிவடைந்த நிலையில் இந்த உயர்வு ஏற்பட்டுள்ளது. உலகின் ஐந்தில் ஒரு பங்கு எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகத்திற்கான வழித்தடமான ஹார்முஸ் நீரிணையை ஈரான் மோதல் திறம்பட மூடியதைத் தொடர்ந்து, பிரென்ட் மசகு எண்ணெய் விலை இந்த மாதம் 59% உயர்ந்துள்ளது. இதுவே 1990 வளைகுடாப் போரின்போது காணப்பட்ட ஆதாயங்களை விட மிக அதிகமான, மிகப்பெரிய மாதாந்திர ஏற்றமாகும். பெப்ரவரி 28 அன்று ஈரான் மீது அமெரிக்க மற்றும் இஸ்ரேலியத் தாக்குதல்களுடன் தொடங்கப்பட்ட இந்தப் போர், மத்திய கிழக்கு முழுவதும் பரவியுள்ளது. மோதல் தொடங்கியதிலிருந்து சனிக்கிழமையன்று (28), ஈரானுடன் இணைந்த ஏமனின் ஹவுதிகள் இஸ்ரேல் மீது தங்கள் முதல் தாக்குதல்களைத் தொடுத்தனர். இது அரேபிய தீபகற்பம் மற்றும் செங்கடலைச் சுற்றியுள்ள கப்பல் போக்குவரத்துப் பாதைகள் குறித்த கவலையை எழுப்பியுள்ளது. ஹார்முஸ் நீரிணையிலிருந்து செங்கடலில் உள்ள யான்பு துறைமுகத்திற்குத் திருப்பிவிடப்பட்ட சவுதி மசகு எண்ணெய் ஏற்றுமதி, கடந்த வாரம் ஒரு நாளைக்கு 4.658 மில்லியன் பீப்பாய்களை எட்டியதாக, Kpler என்ற பகுப்பாய்வு நிறுவனத்தின் தரவுகள் காட்டின. யான்புவிலிருந்து ஏற்றுமதி தடைபட்டால், சவுதி எண்ணெய் மத்தியதரைக் கடலுக்குச் செல்லும் எகிப்தின் சூயஸ்-மத்தியதரைக் கடல் (SUMED) குழாய்வழியை நோக்கித் திருப்பப்பட வேண்டும் என்று ஜேபி மோர்கன் ஆய்வாளர்கள் தெரிவித்தனர். போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைகளைத் தொடங்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், வார இறுதியில் இப்பகுதியில் தாக்குதல்கள் தீவிரமடைந்து, ஓமானின் சலாலா முனையத்தைச் சேதப்படுத்தின. அமெரிக்காவின் தரைவழித் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கத் தயாராக இருப்பதாக ஈரான் கூறியதுடன், பேச்சுவார்த்தைகளை நாடிய போதிலும், தரைவழித் தாக்குதலுக்கு வொஷிங்டன் தயாராகி வருவதாக ஞாயிற்றுக்கிழமை குற்றம் சாட்டியது. இப்பகுதியில் போரை விரைவாகவும் நிரந்தரமாகவும் முடிவுக்குக் கொண்டுவருவதற்கான சாத்தியமான வழிகள் குறித்தும், இஸ்லாமாபாத்தில் நடைபெறக்கூடிய அமெரிக்க-ஈரான் பேச்சுவார்த்தைகள் குறித்தும் விவாதித்ததாக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் இஷாக் டார் கூறியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2026/1470391

தமிழர் பிரச்சினைகள் தொடர்பில் தீர்மானங்களை மேற்கொள்ள 9 பேரடங்கிய இணைக்குழு நியமனம் தமிழரசுக்கட்சி - ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணி சந்திப்பில் தீர்மானம்

1 week 6 days ago
இவ்வளவு பேரும்தான் கட்சியே கட்சிகளில் வேறு யாரும் இல்லை. கூடிப்பேசி அனைவரும் உள்ளடங்கிய இணைப்புக்குழு தெரிவு செய்யப்பட்டுள்ளது.

'உணவு, மருந்துகள், ஸ்மார்ட் ஃபோன்கள்' - ஹோர்மூஸ் நீரிணை மூடப்படுவதால் எதெல்லாம் விலை உயரும்?

1 week 6 days ago
'உணவு, மருந்துகள், ஸ்மார்ட் ஃபோன்கள்' - ஹோர்மூஸ் நீரிணை மூடப்படுவதால் எதெல்லாம் விலை உயரும்? கட்டுரை தகவல் பென் ஷூ பிபிசி வெரிஃபை 29 மார்ச் 2026 வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள் இரான் மீது அமெரிக்கா-இஸ்ரேல் தொடுத்துள்ள போரினால் ஹோர்மூஸ் நீரிணை வழியாக விநியோகிக்கப்படும் எண்ணெய் மற்றும் எரிவாயு தடைபட்டிருப்பது, உலகளாவிய எரிசக்தி விலைகளை கடுமையாக உயர்த்தியுள்ளது. பெட்ரோல் விலை ஏற்கனவே உயர்ந்துவிட்டது. பிரிட்டனில், குளிரிலிருந்து தங்களை பாதுகாத்துகொள்ள மக்கள் வீடுகளை வெப்பமூட்டுவதற்கான கட்டணங்களும் உயர்வது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. ஆனால் இந்த மோதலால் எரிபொருள் மட்டும் பாதிக்கப்படவில்லை. ஹோர்மூஸ் நீரிணை வழியாக சர்வதேச விநியோகச் சங்கிலிகளுக்குள் நுழையும் முக்கியமான ரசாயனங்கள், வாயுக்கள் மற்றும் இதர தயாரிப்புகளும் பாதிக்கப்பட்டுள்ளன. ஹோர்மூஸ் நீரிணை வழியாகச் செல்லும் கப்பல்களின் எண்ணிக்கை ஒரு நாளைக்கு 100-க்கும் மேல் இருந்த நிலையில் இருந்து, போர் தொடங்கிய பிறகு வெறும் ஒரு சில கப்பல்கள் என்ற எண்ணிக்கைக்கு அது குறைந்துள்ளதால், உணவு முதல் ஸ்மார்ட்போன்கள் மற்றும் மருந்துகள் வரை பல பொருட்களின் விலைகள் பாதிக்கப்படலாம் என்று பிபிசி வெரிஃபை கண்டறிந்துள்ளது. பாதிக்கப்படக்கூடியவை என்னென்ன என்பதை இந்தக் கட்டுரையில் பார்க்கலாம். படக்குறிப்பு,தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2026, தொடர்பான செய்திகள், காணொளிகள், நேர்காணல்களை படிக்க, பார்க்க... உரங்கள் (உணவு) பெட்ரோகெமிக்கல்கள் எண்ணெய் மற்றும் எரிவாயுவிலிருந்து பெறப்படுகின்றன, அவை வளைகுடா பிராந்திய நாடுகளால் ஏற்றுமதிக்காக பெருமளவில் உற்பத்தி செய்யப்படுகின்றன. அவற்றில் மிக முக்கியமானது உரம், இது உலகளாவிய விவசாய உற்பத்திக்கு இன்றியமையாதது. ஐக்கிய நாடுகள் சபையின் கூற்றுப்படி, யூரியா, பொட்டாஷ், அம்மோனியா மற்றும் பாஸ்பேட் போன்ற உலகின் உரங்களில் மூன்றில் ஒரு பங்கு பொதுவாக ஹோர்மூஸ் நீரிணை வழியாகச் செல்கிறது. பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,சிறு விவசாயிகள் பயிர்களுக்காக யூரியா உரத்தை பெருமளவில் சார்ந்துள்ளனர். உலக வர்த்தக அமைப்பின் (WTO) தரவுகள், மோதல் தொடங்கியதிலிருந்து இந்த நீர்வழிப்பாதை வழியாக உரங்கள் தொடர்பான தயாரிப்புகளின் வெளிச்செல்லும் ஏற்றுமதி சரிந்துள்ளதைக் காட்டுகின்றன. மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்கள் வடக்கு அரைக்கோளத்தின் பயிர் நடவு காலமாகும் என்பதால், இந்த உரங்களின் பற்றாக்குறை இப்போது விவசாய உற்பத்தியை மோசமாக பாதிக்கும் என்றும், இப்போது விவசாயிகள் குறைவான உரத்தைப் பயன்படுத்துவது ஆண்டின் பிற்பகுதியில் விளைச்சலைப் பாதிக்கும் என்றும் ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். கீல் நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, "ஒரு சிறிய கால அளவிலான மூடல் கூட முழு வளரும் பருவத்தையும் சீர்குலைக்கக்கூடும், இதன் உணவு பாதுகாப்பு விளைவுகள் நீரிணை மீண்டும் திறக்கப்பட்ட பிறகும் நீண்ட காலத்திற்கு நீடிக்கும்." நீரிணை முழுமையாக மூடப்பட்டால், உலகளாவிய கோதுமை விலை 4.2% மற்றும் பழங்கள் மற்றும் காய்கறிகளின் விலை 5.2% உயரக்கூடும் என்று அந்த நிறுவனத்தின் ஆய்வு தெரிவிக்கிறது. மேலும், ஒட்டுமொத்த உணவு விலையேற்றத்தால் மோசமாக பாதிக்கப்படும் நாடுகள் ஜாம்பியா (31%), இலங்கை (15%), தைவான் (12%) மற்றும் பாகிஸ்தான் (11%) என்று அது மதிப்பிடுகிறது. ரஷ்யா பொதுவாக உலகளாவிய உர ஏற்றுமதியில் ஐந்தில் ஒரு பங்கை வழங்குகிறது, இந்த இடைவெளியை நிரப்ப ரஷ்யா உற்பத்தியை அதிகரிக்கக்கூடும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். உரம் போன்ற பொருட்களின் முக்கிய உற்பத்தியாளரான ரஷ்யா, 'சரியான நிலையில்' இருப்பதாக விளாடிமிர் புதினின் சிறப்புத் தூதர் கிரில் டிமிட்ரிவ் கூறியுள்ளார். ஹீலியம் (மைக்ரோசிப்கள்) உலகளாவிய ஹீலியம் வாயு ஏற்றுமதியில் மூன்றில் ஒரு பங்கு பொதுவாக கத்தாரிலிருந்து வந்து ஹோர்மூஸ் நீரிணை வழியாகச் செல்கிறது. இது இயற்கை எரிவாயு உற்பத்தியின் ஒரு உபபொருளாகும், மேலும் இது செமிகண்டக்டர் வேஃபர்களை (semiconductor wafers) தயாரிக்கப் பயன்படுகிறது, பின்னர் அவை கணினிகள், வாகனங்கள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களில் பயன்படுத்தப்படும் மைக்ரோசிப்களாக மாற்றப்படுகின்றன. மருத்துவமனைகளில் பயன்படுத்தப்படும் எம்ஆர்ஐ (MRI) ஸ்கேனர்களில் உள்ள காந்தங்களைக் குளிர்விக்கவும் ஹீலியம் பயன்படுத்தப்படுகிறது. பட மூலாதாரம்,AFP via Getty Images இந்த வாயுவை உற்பத்தி செய்யும் கத்தாரின் ராஸ் லாஃபன் எனும் மாபெரும் ஆலை, இரானிய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களுக்குப் பிறகு உற்பத்தியை நிறுத்தியுள்ளது. சேதத்தை சரிசெய்ய மூன்று முதல் ஐந்து ஆண்டுகள் ஆகும் என்று கத்தார் அரசாங்கம் எச்சரித்துள்ளது, இது விநியோகம் குறித்த அச்சத்தை எழுப்பியுள்ளது. 2023 ஆம் ஆண்டில், உலகளாவிய ஹீலியம் விநியோகம் தடைபட்டால் 'விலை உயர்வு' ஏற்படும் என்று அமெரிக்க செமிகண்டக்டர் தொழில்துறை சங்கம் எச்சரித்தது. ஹோர்மூஸ் நீரிணை அடைப்பின் தொடர் தாக்கம், ஸ்மார்ட்போன்கள் முதல் தரவு மையங்கள் வரையிலான பல அதிநவீன தொழில்நுட்பங்களின் விலைகள் உயர்வதாக இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். நீடித்த ஹீலியம் பற்றாக்குறையால் எம்ஆர்ஐ விலைகள் அதிகரிக்கக்கூடும் என்று வெளிநாட்டு உறவுகளுக்கான கவுன்சிலின் மூத்த ஆய்வாளர் பிரசாந்த் யாதவ் எச்சரித்துள்ளார். "எம்ஆர்ஐ இயந்திரங்களுக்கு காந்தங்களைக் குளிர்விக்க 1,500 முதல் 2,000 லிட்டர் ஹீலியம் தேவைப்படுகிறது. ஒவ்வொரு முறை நீங்கள் ஸ்கேன் செய்யும் போதும், அதில் ஒரு சிறிய பகுதி ஆவியாகிவிடும்." "ஹீலியத்தின் முக்கிய பயன்பாடு தரவு மையங்கள், செமிகண்டக்டர்கள் மற்றும் ஏஐ மற்றும் தரவுத் துறையின் குளிர்விப்பு ஆகியவற்றில் இருப்பதாக மக்கள் நினைக்கிறார்கள். ஆனால் எம்ஆர்ஐ-களுக்கும் மற்ற மருத்துவ பயன்பாடுகளுக்கும் ஹீலியம் மிகவும் முக்கியமானது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது," என்று அவர் பிபிசி வெரிஃபையிடம் கூறினார். பெட்ரோகெமிக்கல் வழிப்பொருட்கள் (மருந்துகள்) மெத்தனால் மற்றும் எத்திலீன் போன்ற பெட்ரோகெமிக்கல்களின் வழிப்பொருட்கள், வலிநிவாரணிகள், நுண்ணுயிர் எதிர்ப்பிகள் மற்றும் தடுப்பூசிகள் உள்ளிட்ட மருந்துகளின் உலகளாவிய உற்பத்தியில் முக்கிய பொருட்களாக உள்ளன. வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் நாடுகள் - சௌதி அரேபியா, கத்தார், ஓமன், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், குவைத் மற்றும் பஹ்ரைன் ஆகியவை உலகளாவிய பெட்ரோகெமிக்கல் உற்பத்தித் திறனில் சுமார் 6% கொண்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த நாடுகள் இந்த ரசாயனங்களை உலகிற்கு ஏற்றுமதி செய்ய முதன்மையாக ஹோர்மூஸ் நீரிணையைப் பயன்படுத்துகின்றன, இதில் பாதி ஆசியாவிற்குச் செல்கிறது. இந்தியா உலகின் ஜெனரிக் (பிராண்ட் அல்லாதவை) மருந்து ஏற்றுமதியில் ஐந்தில் ஒரு பங்கை உற்பத்தி செய்கிறது, அவற்றில் பல அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவிற்கு அனுப்பப்படுகின்றன. இந்த மருந்துப் பொருட்களில் பல பொதுவாக வளைகுடா விமான நிலைய மையங்கள், குறிப்பாக துபாய் வழியாக உலகச் சந்தைகளுக்கு விமானம் மூலம் கொண்டு செல்லப்படுகின்றன, அவை இந்த மோதலால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. ஹோர்மூஸ் நீரிணையில் ஏற்பட்டுள்ள இடையூறு காரணமாக பொது மக்களுக்கான மருந்து விலைகள் உயரக்கூடும் என்று சில ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். கந்தகம் (உலோகங்கள்/பேட்டரிகள்) கந்தகம் (சல்பர்) என்பது கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவைச் சுத்திகரிப்பதன் மூலம் கிடைக்கும் மற்றொரு உபபொருளாகும், இது வளைகுடா பிராந்தியத்தில் ஏற்றுமதிக்காக அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகிறது. உலகளாவிய கடல்வழி கந்தக வர்த்தகத்தில் சுமார் பாதி ஹோர்மூஸ் நீரிணை வழியாகச் செல்கிறது. இதன் முக்கிய பயன்பாடு ஒரு விவசாய உரமாகும், ஆனால் இது உலோக செயலாக்கத்திற்கும் இன்றியமையாதது. கந்தகம், சல்பூரிக் அமிலம் தயாரிக்கப் பயன்படுகிறது, இது செம்பு, கோபால்ட் மற்றும் நிக்கல் ஆகியவற்றின் செயலாக்கத்திற்கும், லித்தியத்தைப் பிரித்தெடுப்பதற்கும் பயன்படுத்தப்படுகிறது. வீட்டு உபயோகப் பொருட்கள் முதல் மின்சார வாகனங்கள் மற்றும் டிரோன்கள் போன்ற ராணுவ வன்பொருட்கள் வரை அனைத்திலும் பயன்படுத்தப்படும் பேட்டரிகளின் உற்பத்திக்கு அந்த உலோகங்கள் அனைத்தும் தேவைப்படுகின்றன. கந்தக விநியோகம் தொடர்ந்து தடைபட்டால், பேட்டரிகள் கொண்ட பொருட்களை வாங்கும் நுகர்வோர் அதிக விலையைக் கொடுக்க வேண்டி வரும் என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர். Get in touch பிரச்னைகளைப் பேசுவோம் - 2 | பெண்கள் பாதுகாப்பு Contact form - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cdj7yezw1ldo

ஈரானின் கார்க் தீவை கைப்பற்றும் சாத்தியம் உள்ளது - ட்ரம்ப்

1 week 6 days ago
ஈரானின் மசகு எண்ணெய் வளத்தையும், கார்க் தீவையும் அமெரிக்காவால் கைப்பற்ற முடியும் - ட்ரம்ப் தெரிவிப்பு Published By: Digital Desk 3 30 Mar, 2026 | 09:02 AM (இணையத்தள சர்வதேச செய்திப் பிரிவு) ஈரானில் உள்ள மசகு எண்ணெயைக் கைப்பற்ற முடியும் எனவும், அந்நாட்டின் முக்கிய எரிபொருள் மையமான கார்க் தீவைக் கைப்பற்றவும் வாய்ப்புள்ளது எனவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பைனான்சியல் டைம்ஸ் பத்திரிகைக்கு வழங்கியுள்ள பிரத்தியேக செவ்வியில் தெரிவித்துள்ளார். டொனால்ட் ட்ரம்ப் மேலும் தெரிவிக்கையில், உண்மையைச் சொல்லப்போனால், ஈரானின் எண்ணெயை எடுத்துக்கொள்வதுதான் எனக்குப் பிடித்தமான விடயம். தனது இந்தத் திட்டத்தை எதிர்க்கும் அமெரிக்கர்கள் அறிவற்றவர்கள். ஈரானின் 90% எண்ணெய் ஏற்றுமதி நடைபெறும் கார்க் தீவைக் கைப்பற்றுவது தொடர்பில் ஆலோசித்து வருவதாகவும், சில நேரங்களில் நாம் கார்க் தீவைக் கைப்பற்றலாம், சில நேரங்களில் இல்லாமலும் போகலாம்; நம்மிடம் பல தெரிவுகள் உள்ளன. அத்தீவில் ஈரானிடம் பெரிய அளவில் பாதுகாப்பு வசதிகள் இல்லை, அமெரிக்காவால் மிக எளிதாக அதைக் கைப்பற்ற முடியும். மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், ஏற்கனவே 3,500 அமெரிக்க வீரர்கள் அங்கு தரையிறங்கியுள்ளனர். கார்க் தீவைக் கைப்பற்றினால், அமெரிக்கப் படைகள் அங்கு நீண்ட காலம் தங்கியிருக்க வேண்டியிருக்கும். அதேவேளை, பாகிஸ்தான் தூதுவர்கள் வழியாக ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே மறைமுக பேச்சுவார்த்தைகள் சுமூகமாக நடைபெற்று வருகிறது என்றார். ஒரு ஒப்பந்தம் மிக விரைவாக எட்டப்பட வாய்ப்புள்ளதாகக் குறிப்பிட்ட அவர், போர் நிறுத்தம் எப்போது ஏற்படும் என்பது குறித்து தெளிவான பதிலை அளிக்க மறுத்துவிட்டார். https://www.virakesari.lk/article/242270

இலங்கை ஆயுர்வேத மருந்துக் கூட்டுத்தாபனத்தின் பெயரைப் பயன்படுத்தி முன்னெடுக்கப்பட்ட பாரிய மோசடி முறியடிப்பு

1 week 6 days ago
இலங்கை ஆயுர்வேத மருந்துக் கூட்டுத்தாபனத்தின் பெயரைப் பயன்படுத்தி முன்னெடுக்கப்பட்ட பாரிய மோசடி முறியடிப்பு Published By: Digital Desk 1 30 Mar, 2026 | 07:35 AM ( இணையத்தள செய்திப் பிரிவு ) இலங்கை ஆயுர்வேத மருந்துக் கூட்டுத்தாபனத்தின் பெயரைப் போலியான முறையில் பயன்படுத்தி, மருந்துகளை விற்பனை செய்து வந்த பாரிய மோசடிச் செயலொன்றை நுகர்வோர் விவகார அதிகாரசபை முற்றுகையிட்டுள்ளது. இலங்கை ஆயுர்வேத மருந்துக் கூட்டுத்தாபனம் செய்த முறைப்பாட்டுக்கு அமைய, கடந்த 26ஆம் திகதி இந்தச் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இதன்போது, குறித்த நிறுவனம் நீண்டகாலமாக இவ்வாறான பாரிய மோசடியில் ஈடுபட்டு வந்தமை நுகர்வோர் விவகார அதிகாரசபையினால் கண்டறியப்பட்டுள்ளது. மாவனல்லை - ஹிங்குல பகுதியில் இயங்கி வந்த நிறுவனமொன்றே இவ்வாறு முற்றுகையிடப்பட்டுள்ளதுடன், அங்கிருந்த பெருமளவிலான மருந்துப் பொருட்களும் அதிகாரிகளால் பொறுப்பேற்கப்பட்டுள்ளன. இலங்கை ஆயுர்வேத மருந்துக் கூட்டுத்தாபனத்தின் பெயர் மற்றும் அரச இலச்சினை என்பவற்றை சட்டவிரோதமான முறையில் பயன்படுத்தி, போலித் தயாரிப்புகளை உண்மையான கூட்டுத்தாபனத் தயாரிப்புகள் என நுகர்வோரை ஏமாற்றி விற்பனை செய்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இந்தசம்பவம் தொடர்பில் குறித்த நிறுவனத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை மேலும் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/242266

பிரிட்டனுக்கு சூயஸ் போல அமெரிக்காவுக்கு ஹோர்மூஸ் முடிவுரை எழுதுமா? வரலாற்றில் 3 முக்கிய தருணங்கள்

1 week 6 days ago
பிரிட்டனுக்கு சூயஸ் போல அமெரிக்காவுக்கு ஹோர்மூஸ் முடிவுரை எழுதுமா? வரலாற்றில் 3 முக்கிய தருணங்கள் பட மூலாதாரம்,BBC/Getty images கட்டுரை தகவல் நிக் எரிக்சன் பிபிசி உலக சேவை 30 மார்ச் 2026, 05:52 GMT புதுப்பிக்கப்பட்டது 13 நிமிடங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள் ஒரு மாதத்திற்கு முன்பு இரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேலால் தூண்டப்பட்ட போர், கணிக்க முடியாத தன்மையிலிருந்து கணிக்க முடிவதாக மாறியுள்ளதாக தெரிகிறது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் சமூக ஊடகப் பதிவுகள், குறுகிய காலத்திற்காவது, குழப்பத்தை அதிகப்படுத்தி உலகளாவிய சந்தைகளை உலுக்குவதாகத் தோன்றுவதும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஆனால், இந்தப் போரின் போக்கைத் தீர்மானிப்பதில் டிரம்பின் கருத்துகள் மட்டுமே ஒரு காரணியாக இருக்கவில்லை - வரலாறும் ஒரு காரணியாகத் தெரிகிறது. மோதல் தொடங்கிய வாரங்களில், வல்லுநர்கள் இந்தக் கொந்தளிப்பைப் புரிந்துகொள்ளவும், அது எந்தத் திசையில் செல்லக்கூடும் என்று கணிக்கவும் கடந்த கால நிகழ்வுகளை அதிகளவில் ஆதாரமாகக் கொண்டுள்ளனர். பல வரலாற்று நிகழ்வுகளில், மூன்று முக்கிய அத்தியாயங்கள் தனித்து நிற்கின்றன. சூயஸ் பட மூலாதாரம்,Hulton-Deutsch/Hulton-Deutsch Collection/Corbis via Getty Images படக்குறிப்பு,ஆங்கிலோ-பிரெஞ்சுப் படைகளின் தாக்குதலை முறியடிப்பதற்காக, சூயஸ் கால்வாயை மறிப்பதன் செயல்திறனை எகிப்து அதிபர் கமால் அப்தெல் நாசர் உணர்ந்திருந்தார். இரானுடனான அமெரிக்க-இஸ்ரேல் போர் தொடங்கியதிலிருந்து, முதல்முறையாக இரான் ஆதரவு பெற்ற ஏமன் ஹூதிகள் வெள்ளிக்கிழமை இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதில் இருந்து, இந்த மோதலில் ஒரு புதிய முனைப்பு உருவாகியுள்ளது. இந்த மோதலில் சக்தி வாய்ந்த இரானிய ஆதரவுக் குழுவின் (proxy) நுழைவு, உலகப் பொருளாதாரத்தில் மேலும் சீர்குலைவுகள் ஏற்படும் என்ற அச்சத்தை எழுப்புகிறது. ஏனெனில், அந்த ஆயுதக் குழு செங்கடலில், குறிப்பாக சூயஸ் கால்வாயில் கப்பல் போக்குவரத்திற்கு இடையூறு செய்யும் திறன் கொண்டது. உலகளாவிய சரக்கு போக்குவரத்தில் 30% மற்றும் அனைத்துப் பொருட்களின் மொத்த உலகளாவிய வர்த்தகத்தில் ஏறத்தாழ 15% வழக்கமாகப் பயணிக்கும் அந்த முக்கிய நீர்வழியை ஹூத்தி குழுவால் உண்மையில் மறிக்க முடியாது, ஆனால் அதனால் கால்வாய்க்கான அணுகலைக் கடுமையாகச் சீர்குலைக்க முடியும். இவற்றுடன், முக்கியத்துவம் வாய்ந்த ஹோர்மூஸ் நீரிணையில் இரான் ஏற்படுத்தி வரும் இடர்பாட்டையும் சேர்த்தால், உலகப் பொருளாதாரத்தின் மீதான தாக்கம் பேரழிவை ஏற்படுத்தக் கூடும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இவை அனைத்தின் பின்னணியில், மத்திய கிழக்கில் இன்றைய போரின் பெரும் பின்விளைவுகள் குறித்த ஒரு பாடத்திற்காக, 70 ஆண்டுகளுக்கு முந்தைய சூயஸ் நெருக்கடியை ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். 1956-ல் எகிப்து அதிபர் கமால் அப்தெல் நாசர், சூயஸ் கால்வாயை நாட்டுடைமையாக்கியபோது, உலகின் முக்கிய எண்ணெய் வழித்தடங்களில் ஒன்றின் கட்டுப்பாட்டை அவர் கைப்பற்றினார். இதற்குப் பதிலடியாக, பிரான்ஸ், பிரிட்டன் மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் அதை மீண்டும் கைப்பற்ற மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. பட மூலாதாரம்,Hulton-Deutsch Collection/CORBIS/Corbis via Getty Images படக்குறிப்பு,சூயஸ் நெருக்கடியை கையாண்ட விதத்துக்காக எகிப்து அதிபர் கமால் நாசர் அந்த பிராந்தியத்தில் ஒரு நாயகனாக பார்க்கப்பட்டார் டிரம்ப் மற்றும் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆகியோருக்கு, வரலாறு இதுகுறித்த சில சிந்திக்க வைக்கும் பாடங்களை வழங்குகிறது. "மற்ற எதையும் விட, ஒரு உலக வல்லரசாக பிரிட்டனின் காலம் முற்றிலுமாக முடிந்துவிட்டது என்பதையே அது (சூயஸ் நெருக்கடி) குறித்தது," என்கிறார் பிபிசியின் சர்வதேசப் பிரிவு ஆசிரியர் ஜெர்மி போவன். "முதலாம் உலகப் போரிலிருந்து பிரிட்டன் மத்திய கிழக்கில் ஏகாதிபத்திய ஆதிக்கத்தைக் கொண்டிருந்தது, அதன் முடிவின் தொடக்கமாகவும் சூயஸ் நெருக்கடி அமைந்தது." உலகப் பொருளாதாரத்தின் இன்றியமையாத பொருளாதார வழித்தடங்களுக்கான அணுகலைக் கட்டுப்படுத்தும் வகையில், தெஹ்ரானும் ஹூத்திகளும் தற்போது கையாண்டுவரும் தந்திரங்கள், கமால் நாசரின் பதிலடியை ஒத்திருக்கின்றன. சூயஸ் கால்வாயின் வடமுனையில் ஆங்கிலோ-பிரெஞ்சுப் படைகள் கரைக்கு வந்திறங்குவதற்குள், நாசர் டஜன்கணக்கான கப்பல்களை மூழ்கடித்து, கால்வாயைத் தடுத்து, பாரசீக வளைகுடாவில் உள்ள ஐரோப்பாவின் எண்ணெய் வயல்களுக்கான உயிர்நாடியை திறம்படத் துண்டித்திருந்தார் என்று அமெரிக்க வரலாற்றாசிரியர் ஆல்ஃபிரட் டபிள்யூ. மெக்காய் சுட்டிக்காட்டுகிறார். சோவியத் ஒன்றியத்துடனான பனிப்போரில் ஒரு விரிவடைந்து வரும் அபாயகரமான மோதல் தளம் உருவாவது குறித்துக் கவலை கொண்ட அப்போதைய அமெரிக்க அதிபர் ஐசனோவர் பிரிட்டனையும் பிரான்சையும் பின்வாங்கும்படி கட்டாயப்படுத்தினார். "இதற்குள்... பிரிட்டன் மீது ஐக்கிய நாடுகள் சபையில் தடைகள் விதிக்கப்பட்டிருந்தன, அதன் நாணயம் சரிவின் விளிம்பில் இருந்தது, அதன் ஏகாதிபத்திய அதிகாரத்தின் பொலிவு மங்கிவிட்டது. அதன் உலகளாவிய பேரரசு அழிவை நோக்கிச் சென்றுகொண்டிருந்தது," என்று மெக்காய் எழுதுகிறார். பட மூலாதாரம்,Smith Collection/Gado/Getty Images படக்குறிப்பு,1973-ம் ஆண்டில் ஏற்பட்ட எண்ணெய் நெருக்கடி அமெரிக்க மக்கள் மீது ஏற்படுத்திய தாக்கம் ஒரு தசாப்தத்திற்கு நீடித்தது. இருப்பினும், இன்றைய மோதலுடனான ஒப்புமைகள் துல்லியமானவை அல்ல என்கிறார் போவன். "தற்போதைய அமெரிக்காவின் வலிமையை, இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய பிரிட்டனின் வலிமையுடன் நான் ஒப்பிடவில்லை; ஆனால், சக்தி வாய்ந்த நாடுகள் அனைத்தும் எழுச்சியும் வீழ்ச்சியும் அடையும் என்பதே நான் கூற வருவது. அமெரிக்கா சீனாவின் எழுச்சியை எதிர்கொண்டுள்ள நிலையில், எதிர்காலத்தில் மக்கள் அமெரிக்காவின் வீழ்ச்சியைப் பார்க்கத் தொடங்கினால், அது வரலாற்றாசிரியர்களால் அந்தப் பாதையில் ஒரு இடைநிலை கட்டமாக எழுதப்படலாம்; விளைவுகளைப் பற்றி அதிகம் சிந்திக்காமல் தொடங்கப்பட்ட ஒரு போர்." ஏற்படக்கூடிய பின்விளைவுகளைப் புரிந்துகொள்ள, கடந்த 70 ஆண்டுகளில் வரலாறு வழங்கிய மேலதிகப் பாடங்களை ஆராய்வது பயனுள்ளதாக இருக்கும். படக்குறிப்பு,தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2026, தொடர்பான செய்திகள், காணொளிகள், நேர்காணல்களை படிக்க, பார்க்க... 1973 - எண்ணெய் நெருக்கடி அதைத் தொடர்ந்த பத்தாண்டுகளில், அதிகபட்ச சேதத்தை ஏற்படுத்தும் நோக்கில் முக்கியப் பொருளாதார வழித்தடங்களைத் தடுக்கும் செயல் மீண்டும் நிகழ்ந்துள்ளது. எனவே இது இன்று முற்றிலும் கணிக்கக்கூடியதாகவே இருந்தது என்கின்றனர் இவ்விவகாரத்தை உற்றுநோக்குபவர்கள். பேரழிவை ஏற்படுத்திய சூயஸ் கால்வாய் நடவடிக்கைக்குச் சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு, அதற்கான மிகத் தெளிவான எடுத்துக்காட்டுகளில் ஒன்று வெளிப்பட்டது. "1973-ல் இஸ்ரேல், எகிப்து மற்றும் சிரியா இடையே ஒரு போர் நடந்தது. அது எகிப்தியர்கள் மற்றும் சிரியர்களால் [இஸ்ரேல் மீது] நடத்தப்பட்ட ஒரு திடீர் தாக்குதல் - யோம் கிப்பூர் போர் என்று அழைக்கப்பட்டது. அமெரிக்கர்கள் இஸ்ரேலுக்குள் ஆயுதங்களைக் குவித்தனர்," என்கிறார் போவன். அதன்பிறகு, அரபு நாடுகள் ஒரு பொருளாதாரத் தடையைக் கொண்டுவந்து பதிலடி கொடுத்தன. அது எண்ணெய் விலையை பெருமளவில் உயர்த்தியதுடன், மேற்கு ஐரோப்பாவில் பெரும் சேதத்தையும் ஏற்படுத்தியது. சௌதி அரேபியாவின் அப்போதைய எண்ணெய் அமைச்சரான ஷேக் அகமது ஸாகி யமானி, 1973-ஆம் ஆண்டில், உலகளாவிய சந்தைகளில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய எண்ணெய் போன்ற வளங்களை எவ்வாறு ஒரு கருவியாகப் பயன்படுத்தலாம் என்பது குறித்துத் தெளிவாகக் கூறினார். உற்பத்தியின் மீது அரபு நாடுகளுக்கு இருக்கும் குறிப்பிடத்தக்க கட்டுப்பாட்டை, உலகப் பொருளாதாரங்களை விரைவாக "சரிவடையச்" செய்யக்கூடிய ஒரு "எண்ணெய் ஆயுதம்" என்று அவர் விவரித்தார். இந்தத் தடை ஐந்து மாதங்கள் நீடித்தது, ஆனால் அதன் தாக்கம் ஒரு தசாப்த காலமாக உணரப்பட்டதாக நிபுணர்கள் கூறுகின்றனர். உதாரணமாக, அமெரிக்காவிலும், தங்கள் உற்பத்திக்கு எண்ணெயைப் பெரிதும் சார்ந்திருக்கும் நாடுகளிலும் பணவீக்கம் கடுமையாக உயர்ந்தது. அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவைக் கட்டுப்படுத்த நாடுகளின் நாடுகளின் மத்திய வங்கிகள் போராடியதால், அதனுடன் வட்டி விகிதங்களும் உயர்ந்தன. பட மூலாதாரம்,Hulton Archive/Getty Images படக்குறிப்பு,1973 ஆம் ஆண்டு யோம் கிப்பூர் போர், போர்க்களத்தில் மட்டுமல்ல, சர்வதேச எண்ணெய் சந்தைகளிலும் நடைபெற்றது. 50 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைப்போல, ஒரு சரக்காக எண்ணெய் தற்போது உலகளவில் ஆதிக்கம் செலுத்தவில்லை என்றாலும், உலகளாவிய தேவையின் பங்கு அக்காலத்தை விடக் குறைவாக இருந்தாலும், குறிப்பாக மேற்கத்திய நாடுகளில், மேலும் பல்வகைப்பட்ட எரிசக்தி ஆதாரங்களில் முதலீடு இப்போது வளர்ந்து வந்தாலும், அது இன்னமும் ஒரு முக்கியமான வளமாகவே உள்ளது. 1973 மற்றும் அதற்குப் பிறகான நிகழ்வுகள் டிரம்புக்கு முக்கியப் பாடங்களை வழங்குகின்றன. அரை நூற்றாண்டுக்கு முன்பு போலன்றி, அமெரிக்கா இப்போது தனது நுகர்வை விட அதிக ஆற்றலை உற்பத்தி செய்தாலும், அது இன்னும் கணிசமான அளவு கச்சா எண்ணெயை இறக்குமதி செய்கிறது மற்றும் உலகச் சந்தையில் வர்த்தகம் செய்யப்படும் எண்ணெயின் விலையால் பாதிக்கப்படக் கூடியதாக உள்ளது. இது இறுதியில் அமெரிக்க நுகர்வோரைப் பாதிக்கும். ஆசியாவில் உள்ள அதன் முக்கிய வர்த்தக கூட்டாளிகள் மீதான அழுத்தங்கள் மூலமாகவும் அந்நாடு மறைமுகமாகப் பாதிக்கப்படலாம் - ஏனெனில், அந்நாடுகளிடம் பன்முகப்படுத்தப்பட்ட எரிசக்தி விநியோகம் இல்லை. தற்போதைய எண்ணெய் பற்றாக்குறையால் அந்நாடுகளே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. "சௌதி அரேபியாவும், எமிரேட்ஸும் மற்றும் பிற நாடுகளும் ஐரோப்பாவில் உள்ள தங்கள் வாடிக்கையாளர்களுக்கு எண்ணெயை விற்கப் போவதில்லை என்று சொல்வதல்ல (இப்போது நடப்பது)," என்கிறார் போவன். "ஆனால் இரானும், ஒருவேளை ஹூத்திகளும் கூட, அந்நாடுகள் தங்கள் சந்தையை அணுகுவதை மிகவும் கடினமாக்குகின்றன. எண்ணெய் மிகவும் முக்கியமானது. அந்த விநியோகத்தை துண்டித்தால், அது பெரும் உலகளாவிய சீர்குலைவை ஏற்படுத்தும்." இரான் - இராக் போர் 1980-களின் பெரும்பகுதியை ஆக்கிரமித்திருந்த இரான்-இராக் போர், வாஷிங்டனின் எதிரிகள் முக்கியப் பொருளாதார உள்கட்டமைப்புகளை எவ்வாறு தடுக்க முடியும் என்பதற்கு, டிரம்புக்கு மிகவும் சமீபத்திய மற்றும் வலுவான வரலாற்று உதாரணங்களை வழங்குகிறது என்று வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர். அந்தப் போரின் பிற்பகுதியில், உலகின் வல்லரசுகளை மோதலுக்குள் இழுக்கும் முயற்சியாக, ஹோர்மூஸ் நீரிணையில் உள்ள கப்பல் போக்குவரத்தை இரானும் இராக்கும் குறிவைத்தன என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். 1980-களின் நடுப்பகுதி முதல் பிற்பகுதிக்குள், தாக்குதல்கள் மிகவும் தீவிரமடைந்ததால், குவைத் தனது கப்பல்களை அந்த நீர்வழிப்பாதை வழியாகச் செலுத்துவதற்கு சர்வதேச உதவியைக் கோரியது. தனது பனிப்போர் எதிரியான சோவியத் ஒன்றியம் முந்துவதை விரும்பாத அமெரிக்கா அதற்கு ஒப்புக்கொண்டது. பட மூலாதாரம்,Barry Iverson/Getty Images படக்குறிப்பு,இரான்-இராக் போரின் போது மேற்கொள்ளப்பட்ட 'ஆபரேஷன் ஏர்னஸ்ட் வில்', ஹோர்மூஸ் நீரிணையில் நிலவிய பகைமைச் சூழல்களைக் கையாள்வதில் அமெரிக்காவின் சில குறைபாடுகளை வெளிச்சம் போட்டுக் காட்டியது. 'ஆபரேஷன் ஏர்னஸ்ட் வில்' என்று அழைக்கப்பட்ட, எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும் பணி 1987 ஜூலையில் தொடங்கியது. அதனால் பாதுகாக்கப்பட வேண்டிய கப்பலான பிரிட்ஜ்டன், குவைத்திற்குச் செல்லும் வழியில் இரானியக் கண்ணிவெடிகளால் தாக்கப்பட்டதால் இப்பணி விரைவில் அமெரிக்காவுக்கு ஒரு பெரும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவம், நீரிணையில் அமெரிக்காவின் கண்ணிவெடி அகற்றும் திறன்கள் எவ்வளவு போதுமானதாக இல்லை என்பதை எடுத்துக்காட்டியது என்றும், இந்தப் பிரச்னை அந்த நடவடிக்கையைத் தொடர்ந்து பாதித்து வந்தது என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர். இன்றைய மோதலையும், ஹோர்மூஸ் நீரிணையைத் திறந்த நிலையில் வைத்திருக்க கடற்படைப் பாதுகாப்பு வழங்குவதன் மூலம் பிற நாடுகளிடமிருந்து செயல்பாட்டு ஆதரவைக் கோரிய டிரம்பின் சமீபத்திய அழைப்பையும் பார்க்கும்போது, இவ்விரண்டுக்கும் உள்ள ஒற்றுமைகள் தெளிவாகத் தெரிகின்றன. ஆனால், போர்க் கருவிகள் விரிவடைந்து, உதாரணமாக, டிரோன்களையும் உள்ளடக்கியிருப்பதாலும், இரான் இராக்குடன் ஒரு நீண்டகாலப் போரில் இல்லை என்பதாலும் அமெரிக்காவுக்கு இன்றைய சவால் இன்னும் பெரிதாக உள்ளது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். மத்திய கிழக்கில் தற்போது நடக்கும் போரில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு, அதிலும் குறிப்பாக அதன் முக்கிய கதாபாத்திரங்களுக்கு, வரலாறு பல பாடங்களைக் கற்றுத் தருகிறது. அவர்கள் இந்தப் பாடங்களை எந்த அளவுக்கு உன்னிப்பாகக் கவனிக்கிறார்கள் என்பது, இந்த உலகளாவிய கொந்தளிப்பின் போக்கையும் போர் நீடிக்கும் கால அளவையும் பாதிக்கக்கூடும். Get in touch பிரச்னைகளைப் பேசுவோம் - 2 | பெண்கள் பாதுகாப்பு Contact form - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cn78xg5vy16o
Checked
Sun, 04/12/2026 - 22:48
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed