ஊர்ப்புதினம்

நாட்டின் நீதிப் புத்தகத்திலுள்ள 13 ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவேன் - மன்னாரில் சஜித்

2 months 1 week ago
15 JUL, 2024 | 12:23 PM
image
 

நாட்டின் நீதிப் புத்தகத்தில் உள்ள 13 ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவேன். எமது கடல் வளங்கள் கொள்ளையிடப்படுவதை தடுக்கும் வகையில் நிரந்தர தீர்வு பெற்றுக்கொடுக்கவுள்ளேன் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

மன்னார் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொள்ளும் வகையில் இன்றைய தினம் திங்கட்கிழமை (15) காலை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மன்னாருக்கு விஜயம் செய்தார்.

இதன்போது சஜித் பிரேமதாச மன்னாரில் உள்ள தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ) அலுவலகத்துக்குச் சென்று அக்கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதனை சந்தித்து பல்வேறு விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடினார்.

DSC_0668.JPG

அதனை தொடர்ந்து, ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

சஜித் மேலும் தெரிவிக்கையில்,

மன்னாரின் அபிவிருத்திக்காக மீண்டும் ஒரு முறை மன்னார் மாவட்டத்துக்கு வருகை தந்துள்ளேன். வடக்கு மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு ஒரு தீர்வு வழங்குவதே எனது நோக்கமாக உள்ளது.

முக்கியமாக, நாட்டின் நீதிப் புத்தகத்தில் உள்ள 13வது திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவேன்.

மேலும், மன்னார் மாவட்டத்தில் உள்ள மீனவர்களின் பிரச்சினையை தீர்த்து, அவர்களுக்கு நிரந்தர தீர்வு பெற்றுக் கொடுக்கவுள்ளேன். எமது கடல் வளங்கள் கொள்ளையிடப்படுவதை தடுக்கும் வகையில் நிரந்தர தீர்வு பெற்றுக் கொடுக்கவுள்ளேன்.

DSC_0699.JPG

வடக்கு மக்களின் அரசியல் உரிமை, சமூக உரிமை, பொருளாதார உரிமை, மனித உரிமைகள் உட்பட அனைத்து உரிமைகளையும் பாதுகாக்கும் வகையில் செயற்றிட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளேன்.

இன, மத வேறுபாடுகளுக்கு அப்பால் ஒரு தாய் பிள்ளைகள் போல் எமது பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டு, இந்த நாட்டை அடுத்த கட்டத்துக்கு கொண்டுசெல்லவுள்ளேன். இந்த நாடு வங்குரோத்து அடைந்த நிலையில் உள்ளது. அதற்கு நாங்கள் ஒருதாய் பிள்ளைகள் போன்று தீர்வு பெற்றுக்கொள்வது அவசியம்.

மன்னார் மாவட்டமின்றி வடக்கு, கிழக்கில் பெண்தலைமைத்துவ குடும்பங்கள் அதிகமாக உள்ளன. அக்குடும்பங்களை சேர்ந்தவர்களுக்கான சிறந்த திட்டங்கள், இலங்கை முழுவதும் பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கான சிறப்புத் திட்டங்களை கொண்டுவரவிருக்கிறேன்.

நுண்கடன் திட்டம் ஊடாக பாதிக்கப்பட்ட பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு நிரந்தர தீர்வு பெற்றுக்கொடுக்க வேண்டிய நிலை உள்ளது.

மேலும், வடக்கு, கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு அவர்களை மையப்படுத்தி நிரந்தர தீர்வு பெற்றுக் கொடுக்க எண்ணியுள்ளேன்.

மீனவர்களின் பிரச்சினைக்கு இராஜதந்திர ரீதியில் தீர்வுகளை பெற்றுக்கொடுக்க எண்ணியுள்ளதோடு அதை வடக்கு கிழக்கை மையப்படுத்தி தீர்வு பெற்றுத் தருவேன்.

மாகாண சபை முறைமையை வலுப்படுத்தி அதை நிச்சயமாக பாதுகாக்க நடவடிக்கைகளை முன்னெடுப்பேன். அத்தோடு மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு அமைய பல செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்படும்.

மறைந்த எனது தந்தையார் ரணசிங்க பிரேமதாச அவர்கள் மாகாண சபையை இல்லாது ஒழிப்பதற்கு ஒருபோதும் முயற்சிக்கவில்லை. அதேபோன்று மாகாண சபை கட்டமைப்பை பாதுகாக்கவும் முயற்சிகளை மேற்கொள்வேன் என்றார். 

https://www.virakesari.lk/article/188490

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : நஷ்ட ஈட்டை செலுத்தி முடிக்க கால அவகாசம் கோரும் மைத்திரிபால

2 months 1 week ago
15 JUL, 2024 | 11:36 AM
image
 

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்ட ஈடு வழங்குமாறு உயர் நீதிமன்றினால் விதிக்கப்பட்ட 100 மில்லியன் ரூபாவில் 58 மில்லியன் ரூபா செலுத்தப்பட்டுள்ளதுடன் மீதி பணத்தை செலுத்தி முடிக்க கால அவகாசம் வழங்குமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உயர் நீதிமன்றத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

அதன்படி, மீதி பணத்தை செலுத்தி முடிக்க 6 வருடகால அவகாசம் வழங்குமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது சட்டத்தரணி மூலம் உயர் நீதிமன்றத்துக்குக் கோரிக்கை விடுத்துள்மை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/188483

சஜித் எம்முடன் இணைந்தால் ஐ.தே.க. உறுப்புரிமை : பஸ்கள் வழங்க எங்கிருந்து நிதி கிடைத்தது - ஜனாதிபதி கேள்வி?

2 months 1 week ago
15 JUL, 2024 | 10:57 AM
image

(இராஜதுரை ஹஷான்) 

ராஜபக்ஷர்களை பாதுகாக்க வேண்டிய தேவை எனக்கு கிடையாது. முன்னாள் ஜனாதிபதி பிரேமதாசவுக்கு ஆதரவாகவே நான் செயற்பட்டுள்ளேன். பொதுஜன பெரமுனவின் ஆதரவினால் தான் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணப்பட்டது. நாட்டுக்காக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எம்முடன் கைகோர்த்தால் ஐக்கிய தேசியக் கட்சியில் அவருக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கி கட்சி உறுப்புரிமையை மீண்டும் அவருக்கு வழங்குவேன். மக்கள் விடுதலை முன்னணி எம்முடன் ஒன்றிணைய வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்தார். 

பாடசாலைகளுக்கு பேரூந்து வழங்க நிதி எவ்வாறு கிடைத்தது என்பதை ஐக்கிய மக்கள் சக்தி குறிப்பிட்டால் ஊழலுக்கு எதிராக செயற்பட அவர்களுடன் ஒன்றிணைந்து செயற்பட தயார் எனவும் ஜனாதிபதி நிபந்தனை விதித்தார். 

கண்டி நகரில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (14) இடம்பெற்ற ஒன்றிணைந்து வெற்றிபெறுவோம் என்ற தொனிப்பொருளிளான அரசியல் கூட்டத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

அவர் மேலும் உரையாற்றியதாவது,   

நாட்டை காப்பாற்ற வேண்டும் என்பதால் மாறுப்பட்ட அரசியல் கொள்கையுடையவர்களுடன் ஒன்றிணைந்துள்ளோம். அரசியல் கொள்கை வேறுபாடுகள் இருக்கலாம் ஆனால் நாடு அதள பாதாளத்துக்குள் விழும் போது கட்சி பேதமின்றி நாட்டுக்காக ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். 

1963 ஆம் ஆண்டு இலங்கையில் வாழ்ந்த இந்திய வம்சாவளியினரது குடியுரிமை பிரச்சினையின் போது அப்போதைய பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கவும், டட்லி சேனாநாயக்கவும் ஒன்றிணைந்து செயற்பட்டார்கள். ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்று இவர்கள் முரண்பட்டுக் கொள்ளவில்லை. குடியுரிமை பிரச்சினைக்கு தீர்வு காண்பது பிரதான இலக்காக காணப்பட்டது. 

1971 ஆம் ஆண்டு கலவரத்தின் போது அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் ஜே.ஆர்.ஜயவர்தன அப்போதைய பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கவிடம் கலவரத்தை அடக்க முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம் என்று குறிப்பிட்டார்.

பண்டாரநாயக்கர்களுக்கும், ஐக்கிய தேசியக் கட்சியினருக்கும் அரசியல் கொள்கை வேறுபாடுகள் காணப்பட்டது. இருப்பினும் தீர்மானமிக்க தருணங்களில் நாட்டுக்காக ஒன்றிணைந்து செயற்பட்டுள்ளனர்.    

அதிகாரத்தை வழங்கும் போது அதனை பெற்றுக் கொள்ளுங்கள் என்று முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர் ஜயவர்தன எமக்கு கற்பித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியினருக்கு அவ்வாறே பயிற்சியளிக்கப்பட்டுள்ளது. நெருக்கடியான சூழலின் போது எனக்கு அதிகாரம் கிடைத்தது. நான் அதனை பெற்றுக் கொண்டு நாட்டை பாதுகாத்தேன்.

நாடு மிக மோசமான நெருக்கடிகளை எதிர்கொண்ட போது அரசாங்கத்தை பொறுப்பேற்கையில் முன்னாள் ஜனாதிபதிகளான ரணசிங்க பிரேமதாச, ஜே.ஆர்.ஜயவர்தன ஆகியோரை நினைத்துக் கொண்டு சவால்களை பொறுப்பேற்றேன்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஒத்துழைப்பு இல்லாமல் இருந்திருந்தால் எதனையும் செய்திருக்க முடியாது என்பதை இச்சந்தர்ப்பத்தில் குறிப்பிட வேண்டும். அதேபோல் ஏனைய அரசியல் கட்சியினரும் எனக்கு ஒத்துழைப்பு வழங்கினார்கள். 

பொருளாதார நெருக்கடியின் போது சர்வதேச நாணய நிதியத்தை நாடுமாறு முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவுக்கு பலமுறை ஆலோசனை வழங்கினேன். எனது ஆலோசனைக்கு பொதுஜன பெரமுனவின் பெரும்பாலான உறுப்பினர்கள் ஒத்துழைப்பு வழங்கினார்கள். 

அரசியல் நெருக்கடியின் பின்னர் பொதுஜன பெரமுன பிளவடைந்தது. கட்சியின் ஒரு தரப்பினர் கட்சியின் அரசரான மஹிந்த ராஜபக்ஷவை பழித்து விட்டு வெளியேறினார்கள். பெரும்பாலானோர் அரசருடன் இருந்து விட்டார்கள்.

அரசர் மோசமானவர் என்று குறிப்பிட்டுக் கொள்பவர்கள் தான் எதிர்க்கட்சி பக்கம் சென்றுள்ளார்கள். ஐக்கிய மக்கள் சக்தி பக்கம் சென்றுள்ள ஜீ.எல்.பீரிஸ் ஒரு காலத்தில் மஹிந்த ராஜபக்ஷ நல்லவர், சிறந்தவர் என்று மேளம் அடித்தார். ஒருபோதும் தவறு என்று இவர் குறிப்பிடவில்லை. இன்று விமர்சிக்கிறார். 

ராஜபக்ஷர்களை பாதுகாக்க வேண்டிய தேவை எனக்கு கிடையாது. நான் ரணசிங்க பிரேமதாசவை தவிர்த்து எந்த ஜனாதிபதிகளையும் பாதுகாக்கவில்லை. ரணசிங்க பிரேமதாசவுக்கு எதிராக கட்சியில் குற்றப்பிரேரணை கொண்டு வரப்பட்ட போது நானே முதலில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தேன். ஆகவே ஐக்கிய மக்கள் சக்தி நாட்டை பாதுகாக்க எம்முடன் ஒன்றிணைய வேண்டும். 

பாரிய நெருக்கடியில் இருந்து நாட்டை பாதுகாத்து விட்டேன். ஊழலுக்கு எதிராக நான் செயற்பட வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியினர் குறிப்பிடுகின்றனர். பாடசலைகளுக்கு பேரூந்து வழங்குவதற்கு நிதி எவ்வாறு கிடைத்தது என்று குறிப்பிட்டால் ஊழலுக்கு எதிராக செயற்பட அவர்களுடன் நான் ஒன்றிணைய தயார். 

நாட்டுக்காக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எம்முடன் ஒன்றிணைய வேண்டும். அவ்வாறு இணைந்துக் கொண்டால் ஐக்கிய தேசியக் கட்சியில் அவருக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கி கட்சியின் உறுப்புரிமையை மீண்டும்  வழங்குவேன். நான் நாட்டை பொறுப்பேற்கும் போது நாட்டில் ஏதும் இருக்கவில்லை. தற்போது எரிபொருள் தாராளமாக கிடைக்கிறது. இவர் இதனை கொண்டு பாடசாலைகளுக்கு பேருந்து வழங்குகிறார். 

சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்புடன் நாடு என்ற ரீதியில் முன்னேற வேண்டும். குறுகிய அரசியல் இலாபத்துக்காக தற்போதைய மறுசீரமைப்புக்களை மாற்றியமைத்தால் இலக்குகள் இடைநிறுத்தப்படும். மீண்டும் வங்குரோத்து நிலையடைய நேரிடும். மீண்டும் வீழ்ந்தால்  எவரும் ஆதரவு வழங்கமாட்டார்கள்.

ஆகவே நாட்டுக்காக ஐக்கிய மக்கள் சக்தி, மக்கள் விடுதலை முன்னணியினர் எம்முடன் கைகோர்க்க வேண்டும். ஐக்கிய தேசியக் கட்சியினர் இதனை எதிர்க்கட்சித் தலைவர் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியிடம் குறிப்பிட வேண்டும் என்றார்.

https://www.virakesari.lk/article/188471

விசா இன்றி தாய்லாந்து செல்ல, இலங்கையர்களுக்கு அனுமதி!

2 months 1 week ago

விசா இன்றி தாய்லாந்து செல்ல, இலங்கையர்களுக்கு அனுமதி!
adminJuly 15, 2024
thailand.jpg

இலங்கை உட்பட 93 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் விசா இன்றி தாய்லாந்துக்குள் செல்ல இன்று (15.07.24) முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதன் ஊடாக முதல் தடவையாக இலங்கையர்களுக்கு விசா இன்றி தாய்லாந்து செல்லும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

தாய்லாந்தின் உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ள புதிய கொள்கையின்படி, ஒரு சுற்றுலாப் பயணி 60 நாட்களுக்கு விசா இல்லாமல் நாட்டில் தங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, விசா இல்லாமல் தாய்லாந்திற்குள் நுழையும் சுற்றுலாப் பயணிகள் தங்குமிட நிதி மற்றும் திரும்புவதற்கான சான்றுகளை வைத்திருக்க வேண்டும் என்பதுடன், அந்நாட்டின் குடிவரவு அதிகாரிகளின் ஒப்புதலைப் பெறுவதும் கட்டாயமாகும்.

தாய்லாந்தில் சுற்றுலாவை மேம்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
 

https://globaltamilnews.net/2024/205081/

வியாபாரியை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிப்பது பிறிதொரு விளைவின் ஆரம்பம் - சுசில்!

2 months 1 week ago
14 JUL, 2024 | 09:25 PM
image

(இராஜதுரை ஹஷான்)

எவருக்கும் பயமில்லை, கடனில்லை என்று அரசியல் மேடைகளில் குறிப்பிடுபவர்கள் 2022 ஆம் ஆண்டு எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு கூட செல்ல முடியாமல் நாட்டை விட்டு தப்பிச் சென்றதை மறந்து விட்டார்கள். தேசிய பட்டியல் ஊடாக பாராளுமன்றத்துக்கு அனுப்பி வைக்கப்பட்ட வியாபாரியை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்க முயற்சிப்பது பிறிதொரு விளைவுக்கான ஆரம்பமாகும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். 

பதுளை நகரில் இன்று  ஞாயிற்றுக்கிழமை (14)  இடம்பெற்ற புதிய கூட்டணியின் மாநாட்டில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

அவர் மேலும் உரையாற்றியதாவது,  

தவறான அரசியல் தீர்மானங்களினால் பலவீனமடைந்திருந்த ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மீண்டும் உயிர் பெற்றுள்ளது.பாரம்பரியமான சுதந்திரக் கட்சியின் மீது பெரும்பாலான மக்கள் இன்றும் நம்பிக்கை கொண்டுள்ளார்கள்.ஆகவே இந்த புதிய கூட்டணியின் இரண்டாவது மாநாட்டின் ஊடாக சகல சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுக்கிறேன்.அனைவரும் புதிய கூட்டணியில் ஒன்றிணைய வேண்டும். 

அரசியல் நெருக்கடிகளினால் நாட்டில் மீண்டும் உறுதியற்ற அரசாங்கம் தோற்றம் பெற கூடாது என்பதை கருத்திற் கொண்டு சிரேஷ்ட அரசியல்வாதிகளை உள்ளடக்கிய வகையில் பலமான அரசியல் கூட்டணியை உருவாக்கியுள்ளோம்.இன்னும் இரண்டு வாரங்களில் கூட்டணியை பலப்படுத்தி ஜனாதிபதித் தேர்தல் குறித்து எமது தீர்மானத்தை அறிவிப்போம். 

பொருளாதாரப் பாதிப்பில் இருந்து நாடு மீண்டுள்ளது.ஜனாதிபதி தேர்தலுக்கான அறிவிப்பு விடுக்கப்படவுள்ள நிலையில் நாடளாவிய ரீதியில்  தேர்தல் பிரசாரங்கள் இடம்பெறுகின்றன.இதுவே ஜனநாயகம்.இதனை வரவேற்கிறேன்.ஆனால் 2022 ஆம் ஆண்டு  இவ்வாறான ஜனநாயக சூழல் நாட்டில் காணப்படவில்லை. 

அரசாங்கத்தை பொறுப்பேற்க தயார் என்று தற்போது குரல் எழுப்புபவர்வர்கள்  2022 ஆம் ஆண்டு நாடு மிக மோசமான நெருக்கடியை எதிர்க்கொண்ட போது அரசாங்கத்தை பொறுப்பேற்கவில்லை.தனி மனிதனாக இருந்து ரணில் விக்கிரமசிங்க நாட்டையும்இநாட்டு மக்களையும் பொறுப்பேற்றார்.நெருக்கடியான சூழலில் நாங்கள் எமது எதிர்கால அரசியல் பற்றி சிந்திக்காமல் அவருக்கு ஒத்துழைப்பு வழங்கினோம்.எமது தீர்மானம் இன்று வெற்றிப் பெற்றுள்ளது. 

எவருக்கும் கடனில்லைஇபயமில்லை என்று நாட்டை கடனாளியாக்கியவர்கள் அரசியல் மேடைகளில் குறிப்பிடுகிறார்கள்.இவர்கள் 2022 ஆம் ஆண்டு எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு கூட செல்ல முடியாமல் தலைமறைவாகி நாட்டை விட்டு தப்பி ஓடியதை மறந்து விட்டார்கள்.யார் அச்சமடைந்து தப்பிச் சென்றதுஇயார் நாட்டை கடனாளியாக்கியது என்பதை மக்கள் நன்கு அறிவார்கள். 

பலம்வாய்ந்த அரசியல் கட்சி என்று குறிப்பிட்டுக் கொள்பவர்கள் ஜனாதிபதி வேட்பாளரை அறிவிக்க முடியாமல் திண்டாடுகிறார்கள்.2019 ஆம் ஆண்டு அரசியல் அனுபவமற்ற ஒருவரை ஜனாதிபதியாக்கியதால் அரசியல் மற்றும் பொருளாதார ரீதியில் நெருக்கடிகள் தோற்றம் பெற்றன என்று குறிப்பிடப்படுகிறது.இவ்வாறான நிலையில் இந்த கட்சி மீண்டும் அதே தவறை செய்ய முயற்சிக்கிறது. 

தேசிய பட்டியல் உறுப்பினராக வியாபாரியை பாராளுமன்றத்துக்கு அனுப்பி வைத்தார்கள்.அவர் கடந்த 2 ஆண்டுகளாக வியாபாரம் செய்துக் கொண்டிருக்கிறார். இவ்வாறானவர்களினால் ஒருபோதும் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண முடியாது.ஆகவே எமது அரசியல் தீர்மானத்தை இன்னும் இரு வாரங்களில் அறிவிப்போம் என்றார்.

https://www.virakesari.lk/article/188459

பிரபாகரனின் நிலையில் ஜனாதிபதி ரணில்! - கலாநிதி தயான்

2 months 1 week ago
14 JUL, 2024 | 04:44 PM
image

(ஆர்.ராம்) 

கிளிநொச்சி வீழ்ச்சிக்குப் பின்னர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு அடுத்தகட்டம் குறித்து சிந்திப்பதற்கு அவகாசமில்லாது ஏற்பட்டிருந்த நிலைமையே தற்போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஏற்பட்டுள்ளது என்று கலாநிதி தயான் ஜயதிலக்க தெரிவித்துள்ளார். 

அதாவது, ஜனாதிபதி தேர்தலை ஒத்திவைப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் எடுக்கப்பட்ட அனைத்து செயற்பாடுகளும் எதிர்மறையான முடிவுகளை அளித்துள்ள நிலையில் அவரால் ஜனாதிபதி தேர்தலை ஒத்திவைப்பது குறித்து சிந்திப்பதற்கான அவகாசமற்ற நிலைமையே தற்போது ஏற்பட்டுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். 

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் தனது அவதானிப்புக்களைப் பகிர்ந்துகொண்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.  

அவர் மேலும் தெரிவிக்கையில், 

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இரண்டு ஆண்டுகளுக்கு முன்னதாக பாராளுமன்றத்தின் ஊடாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் அன்றைய தினம் மாலையில் ஜனாதிபதி செயலகத்தில் கூட்டமொன்றை நடத்தினார்.

அந்தக் கூட்டத்தில் நாடு பொருளாதார ரீதியில் மீண்டெழுந்த பின்னரே தேர்தல்கள் நடத்தப்படுவதற்கான சூழல்கள் ஏற்படும் என்ற கருத்தை வெளிப்படுத்தியிருந்தார். 

ஆனால் நாட்டின் அரசியலமைப்பில் பொருளாதாரத்தினை மீட்டதன் பின்னர் தான் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று எங்கும் கூறப்படவில்லை. ரணில் விக்கிரமசிங்க பொருளாதாரத்தினை காரணம் காண்பித்து தன்னுடைய அரசியல் அதிகாரத்தினை வலுப்படுத்திக்கொள்வதற்கு முனைந்து வந்தார். 

தற்போதும், ஜனாதிபதியின் பதவிக்காலத்தினை மையப்படுத்தி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தேர்தலை தாமதப்படுத்துவதற்கு முயற்சிகளை எடுத்திருந்தார். முன்னதாக தன்னுடைய கட்சியின் செயலாளரைப் பயன்படுத்தி காய்களை நகர்த்தினார். 

அதனைத் தொடர்ந்து நீதிமன்றத்தின் ஊடாகவும் முயற்சிகள் நடத்தப்பட்டன. ஆனால், இப்போது நீதித்துறையும் சட்டவாக்கத்துறையும் (எதிர்க்கட்சிகள்) மிகவும் உறுதியாக இருப்பதன் காரணத்தினால் அவருக்கு அடுத்தகட்டம் சிந்திப்பதற்கு இக்கட்டானதொரு நிலைமை ஏற்பட்டிருக்கின்றது. 

அதாவது, கிளிநொச்சி வீழ்ச்சியின் பின்னர் எவ்வாறு வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு சிந்திப்பதற்கு கால அவகாசம் இருக்கவில்லையோ அதேபோன்று தான் இப்போது ரணில் விக்கிரமசிங்கவுக்கும் நெருக்கடியான நிலைமை ஏற்பட்டுள்ளது. 

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் தேர்தலை ஒத்திவைப்பது குறித்து நகர்வுகளைச் செய்வதற்கு சிந்திப்பதற்கான கால அவகாசம் போதாதுள்ளது. அதேநேரம், ஜனாதிபதி ரணில் இவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு காரணம், தேர்தல் முடிவுகள் தொடர்பில் அவர் கொண்டிருக்கின்ற நம்பிக்கையீனமும் கள யதார்த்தமுமே ஆகும். 

சஜித்துக்கும் அநுரவுக்கும் இடையிலான போட்டிதான் இம்முறை தேர்தலில் காணப்படப்போகிறது. ரணில் விக்கிரமசிங்கவுக்கும், சஜித், அநுர ஆகியோருக்கும் இடையில் பரம்பரை ரீதியாக இடைவெளியும் செல்வாக்கு செலுத்துகிறது. ஆகவே அவரின் நகர்வுகள் அடுத்தகட்டமாக நேர்மறையான விளைவுகளை தரப்போவதில்லை என்றார்.

https://www.virakesari.lk/article/188446

ஜனாதிபதி வேட்பாளர்களோடு நிபந்தனைகளுடன் பேசுங்கள் - ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியிடம் இந்திய உயர்ஸ்தானிகர் தெரிவிப்பு!

2 months 2 weeks ago
14 JUL, 2024 | 12:24 PM
image

ஆர்.ராம்

நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் மூன்று வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் அவர்களுடன் உங்களுடைய நிபந்தனைகளை முன்வைத்து பேச்சுவார்த்தைகளை முன்னெடுங்கள் என்று இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியுடனான சந்திப்பின்போது தெரிவித்துள்ளார். 

இதேவேளை, எதிர்வரும் தேர்தலில் நிறுத்தப்படவுள்ள தமிழ் பொதுவேட்பாளரை மையப்படுத்தி இனப்பிரச்சினைக்காள தீர்வு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாக இலங்கை அரசாங்கத்தினை இந்தியா அழுத்தமளிக்க வேண்டும் என்று ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியும் கோரியுள்ளது. 

ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணிக்கும் இந்திய உயர்ஸ்தானிகருக்கும் இடையிலான சந்திப்பொன்று கொழும்பில் உள்ள இந்திய இல்லத்தில் நடைபெற்றது. 

இதன்போது,  ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் பங்காளிக்கட்சியான புளொட்டின் தலைவர் சித்தார்த்தன் தவிர்க்க முடியாத காரணங்களால் பங்கேற்றிருக்கவில்லை. 

இந்நிலையில், இந்த சந்திப்பில் ஜனநாய கூட்டணியின் சார்பில் செல்வம் அடைக்கலநாதன், சுரேஷ் பிரேமச்சந்திரன், கோவிந்தன் கருணாகரம்,  வினோ நோகராதலிங்கம், வேந்தன், சிவநேசன் ஆகியோர் பங்கேற்றிருந்தனர். 

தமிழ் பொதுவேட்பாளர்

இதன்போது சமகாலத்தில் நிகழ்கின்ற விடயங்கள் பற்றிய உயர்ஸ்தானிகரின் கேள்வியோடு கலந்துரையாடல் ஆரம்பமானது. அவ்வினாவுக்கு பதிலளித்த கூட்டணியின் அங்கத்தவர்கள், தென்னிலங்கையின் வேட்பாளர்களால் தொடர்ச்சியாக ஏமாற்றப்படுகின்ற நிலைமைகளே காணப்படுகின்றன.  

அந்த வகையில் நாம் இம்முறை தமிழ் மக்களின் சார்ப்பில் ஒரு வேட்பாளரை களமிறக்கப்போகின்றோம். மூன்று பேர் தென்னிலங்கையில் போட்டியிடுகின்றபோது,  பெரும்பான்மை வாக்குகளைப் பெற்றுக்கொள்வது மிகவும் கடினமான விடயமாகும்.  

அதனை தென்னிலங்கையில் களமிறங்குவதற்கு தயாராகவுள்ள ரணில், சஜித், அநுர ஆகியோர் புரிந்துகொண்டுள்ளார்கள். அதன் காரணத்தினாலேயே அவர்கள் தற்போது வடக்கு, கிழக்கு ஆகிய பகுதிகளுக்கு  விஜயங்களை மேற்கொண்டு வருகின்றார்கள். ஆகவே அவர்களுக்கு தமிழ்த் தரப்பு நோக்கி தற்போது வருகை தரவேண்டிய நிலைமையொன்று ஏற்பட்டுள்ளது என்றனர்.

மூவருடன் பேசுங்கள்

அதன்போது, உயர்ஸ்தானிகர், தென்னிலங்கையில் மூன்று வேட்பாளர்கள் களமிறங்கவுள்ளதால் நீங்கள் (ஜ.த.தே.கூ) அவர்களுடன் உங்களது நிபந்தனைகளை முன்வைத்து பேசுங்கள் என்று குறிப்பிட்டார். 

அதற்குப் பதிலளித்த கூட்டணியினர், அநுரகுமார இப்போது மாகாண சபைகள் பற்றிப் பேசினாலும் அவர்கள் மாகாண சபைக்கான அதிகாரங்கள் தொடர்பில் கூட தெளிவான நிலைப்பாட்டை கொண்டிருப்பதாக தெரியவில்லை. ஏலவே அவர்கள்தான் வடக்கு, கிழக்கு பிரிக்கப்படுவதற்கு காரணமாக இருந்துள்ளனர்.  

ஆகவே அவர்களை ஆதரிப்பது முரணான நிலைப்பாடாகவே காணப்படும். அடுத்து சஜித் பிரேமதாச இதுவரையில் இனப்பிரச்சினைக்கான தீர்வு உட்பட தமிழ் மக்களின் விடயங்கள் சம்பந்தமாக கரிசனைகளைக் கொள்ளாதிருந்த நிலையில் தற்போது 13ஆவது திருத்தச்சட்டம் பற்றி கூறுகின்றார். அது கூட காணி, பொலிஸ் அதிகாரங்கள் இல்லாத வகையில் மாகாண சபை முறைமையை முன்னெடுப்பதற்கு எதிர்பார்க்கின்றார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் கூட, 13ஆவது திருத்தச்சட்டத்திற்கு அப்பால் செல்வதற்கு தயாரில்லை. மறைந்த சம்பந்தனின் இறுதி அஞ்சலி நிகழ்வில் உங்கள் முன்னிலையில் கூட அவர் காணி, பொலிஸ் அதிகாரங்கள் அற்ற மாகாண சபை முறைமை அமுலாக்கம் குறித்தே உரையாற்றியிருந்தார். 

ஆகவே மூன்று வேட்பாளர்களும் 13ஆவது திருத்தச் சட்டத்தினைக் கூட முழுமையாக முன்னெடுப்பதற்கு தயாரில்லாத நிலையில் தான் உள்ளார்கள். அவ்வாறான நிலையில் அவர்களுடன் பேச்சுக்களை முன்னெடுப்பதில் பயனில்லை. அதேநேரம், அவர்களும் தென்னிலங்கையில் தங்களது வாக்குவங்கி சரிந்துவிடும் என்பதற்காக பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்கு தயாரில்லாத நிலைமையிலேயே உள்ளனர். 

மேலும்,  தென்னிலங்கை தலைவர்களுடன் பேச்சுவார்த்தைக்கு செல்வதாக இருந்தர் மூன்றாம் தரப்பின் தலையீட்டுடன் தான் பங்கேற்பது பொருத்தமானது. ஆனால் அதற்குரிய நிலைமைகளும் பூரணமான அளவில் சாதகமாக இல்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளனர். 

இந்தியாவுக்கு சந்தர்ப்பம்

அத்துடன், எம்மைப் பொறுத்தவரையில் தமிழர்களின் இனப் பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் இந்தியாவினால் மட்டுமே தலையீடுகளைச் செய்ய முடியும் என்பதில் உறுதியாக இருக்கின்றோம். அவ்விதமான சூழலில் இந்தியாவும் பல சந்தர்ப்பங்களில் இலங்கை அரசாங்கத்திடம் தமிழர்களின் தீர்வு விடயத்தில் கரிசனைகளை வெளிப்படுத்தியுள்ளபோதும் இலங்கை அரசாங்கம் நடைமுறையில் எதனையும் முன்னெடுத்ததாக இல்லை. 

ஆகவே, தமிழ் பொது வேட்பாளர் நிறுத்தப்படுவதன் ஊடாக தமிழ் மக்களின் பிரதிபலிப்புக்களை மையப்படுத்தி இலங்கை அரசாங்கத்திற்கு மேலதிக அழுத்தங்களை இந்தியாவினால் வழங்க முடியும். ஆகவே தமிழ் பொதுவேட்பாளர் என்ற விடயமானது இந்தியா, இலங்கை அரசாங்கத்தின் மீது அழுத்தங்களைப் பிரயோகிப்பதற்கு பொருத்தமான சந்தர்ப்பமாகும் என்றும் கூட்டணியினர் குறிப்பிட்டனர்.

முதலீடுகள் மற்றும் இதர திட்டங்கள்

இதனையடுத்து, இந்திய உயர்ஸ்தானிகர், வடக்கு, கிழக்கில் இந்தியா முன்னெடுக்கவுள்ள திட்டங்கள் பற்றிக் குறிப்பிட்டார். விசேடமாக பலாலி விமான நிலைய விஸ்தரிப்பு, காங்கேசன்துறை துறைமுக ஆழப்படுத்தல் மற்றும் நிர்மாணங்கள், பருத்தித்துறை மீன்பிடி துறைமுக நிர்மாணம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் சம்பந்தமாகவும் வெளிப்படுத்தல்களைச் செய்திருந்தார். 

மேற்படி தகவல்களை ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் ஊடகப் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் உறுதிப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/188411

அமைச்சர்கள் மற்றும் எம்.பி.க்கள் சொத்து விபரங்களை சமர்ப்பிக்க இறுதி அறிவிப்பு!

2 months 2 weeks ago

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழு (CIABOC) இன்னும் தமது சொத்துக்கள் மற்றும் கடன்கள் தொடர்பான விபரங்களை சமர்ப்பிக்காத அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இந்த மாத இறுதிக்குள் சமர்ப்பிக்குமாறு “இறுதி அறிவிப்பை” விடுத்துள்ளது.

ஆணைக்குழு பாராளுமன்ற செயலாளர் மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் ஆகியோருக்கு இதுதொடர்பாக கடிதம் எழுதியுள்ளதுடன், இதுவரையில் தமது சொத்துக்கள் மற்றும் கடன் பிரகடனங்களை கையளித்த பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களின் பெயர் பட்டியலை சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் தொடர்பான பிரகடனங்களை பாராளுமன்ற செயலாளர் நாயகத்திடம் சமர்ப்பிக்க வேண்டும், அதேவேளை அமைச்சரவை மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் அத்தகைய பிரகடனங்களை ஜனாதிபதியின் செயலாளரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

தங்கள் சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் அறிக்கைகளை சமர்ப்பிக்காதவர்களின் சம்பளத்தில் மூன்றில் ஒரு பங்கிற்கு கூடுதல் கட்டணம் விதிக்க அதிகாரம் உள்ளது.

https://thinakkural.lk/article/306007

அரசாங்கத்திற்கு தொழிற்சங்க போராட்டங்கள் ஒரு பேரிடி: சபா குகதாஸ்

2 months 2 weeks ago

பொருளாதாரத்தை மீட்டு விட்டோம் என பொய் கூறும் அரசாங்கத்திற்கு தொழிற்சங்கப் போராட்டங்கள் பேரிடியாக மாறியுள்ளன என  வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் (Saba Kugadas) தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் இன்றையதினம் (13.07.2024) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். 

குறித்த அறிக்கையில் மேலும் கூறுகையில்,

"நாட்டில் 15 இலட்சம் அரச உத்தியோகத்தர்களைக் கொண்ட தொழிற்சங்கங்கள் சம்பள உயர்வு கோரி தொடர்ச்சியான போராட்டங்களை அரசாங்கத்திற்கு எதிராக மேற்கொள்கின்றன. 

இதனை உரிய முறையில் எதிர் கொள்ள அரசு தயாராக இல்லை. காரணம் நாட்டின் வீழ்ச்சியடைந்த பொருளாதாரம் துளியளவு கூட மீள எழவில்லை. 

பொருளாதார முன்னேற்றம் 

மாறாக மக்கள் மீது திணிக்கப்பட்ட வரி விதிப்பின் வருமானமும் கடன் செலுத்துவதை அரசாங்கம் நிறுத்தியதன் காரணமாகவே வரிசையுகம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. 

அரசாங்கத்திற்கு தொழிற்சங்க போராட்டங்கள் ஒரு பேரிடி: சபா குகதாஸ் | Saba Kugadhas Speech

தேர்தல் இலக்கிற்காக போலியான பொருளாதார மாற்றத்தை காட்ட அரசாங்கம் கடும் பிரையத்தனம் செய்கிறது.

நாட்டில் இரண்டு கோடியே இருபது இலட்சம் மக்கள் வாழ்கின்ற போது 15 இலட்சம் அரச உத்தியோகத்தர்களுக்கு சம்பள உயர்வை கூட்டினால் இரண்டு கோடியே 5 இலட்சம் மக்கள் மேலும் நெருக்கடியை சந்திக்க நேரிடும். 

வாழ்க்கை செலவு  

எனவே, வாழ்க்கைச் செலவு அனைவரும் எதிர்நோக்கும் மிகப் பெரிய பிரச்சினையாகும். தொழிற்சங்க போராட்டக்காரரின் கோரிக்கைகள் நியாயமாக இருந்தாலும் அவர்களுக்கான சம்பள உயர்வை ஈடு செய்ய அரசாங்கம் பொருட்கள் சேவைகளின் வரிகளை அதிகரிப்பதை தவிர வேறு வழி இல்லை.

அரசாங்கத்திற்கு தொழிற்சங்க போராட்டங்கள் ஒரு பேரிடி: சபா குகதாஸ் | Saba Kugadhas Speech

ஆகையால், அரசாங்கம் தொழிற்சங்கப் போராட்டங்களை ஓரளவு கட்டுப்படுத்தவும் ஏனைய மக்களின் வாழ்க்கைச் சுமையை குறைக்கவும் வாழ்க்கைச் செலவை குறைக்க உடனடித் தீர்மானங்களையும் எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் போராட்டங்கள் வலுப் பெறுவதை தடுக்க முடியாது" என சுட்டிக்காட்டியுள்ளார். 

https://tamilwin.com/article/saba-kugadhas-speech-1720864539?itm_source=parsely-api

ட்ரம்ப் மீதான துப்பாக்கிச்சூடு – சஜித்தைப் பாதுகாக்குமாறு அவசரக் கோாிக்கை!

2 months 2 weeks ago
WhatsApp-Image-2024-07-14-at-12.23.57-PM ட்ரம்ப் மீதான  துப்பாக்கிச்சூடு – சஜித்தைப் பாதுகாக்குமாறு அவசரக் கோாிக்கை!

ஜனநாயக ரீதியான தேர்தல் நடவடிக்கைகள் மற்றும் அரசியலையே நாம் முன்னெடுக்க வேண்டும் எனவும், அதை விடுத்து ஜனநாயக விரோத செயல்களுக்கு இடமளிக்கக் கூடாது என நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன தொிவித்துள்ளாா்.

எதிா்க்கட்சித் தலைவா் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகசந்திப்பிலேயே அவா் இதனைக் குறிப்பிட்டுள்ளாா். இவ்விடயம் தொடா்பாக அவா் மேலும் தொிவிக்கையில்,

”ட்ரம்ப் மீதான தாக்குதலை நாம் வன்மையாக கண்டிக்கிறோம். ஜனநாயக ரீதியான தேர்தல் நடவடிக்கைகள் மற்றும் அரசியலையே நாம் முன்னெடுக்க வேண்டும். அதை விடுத்து ஜனநாயக விரோத செயல்களுக்கு இடமளிக்கக் கூடாது.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் பிரதான எதிர்க்கட்சி வேட்பாளருக்கு துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இதை அனுமதிக்க முடியாது.

 

இலங்கையிலும் தேர்தல் நெருங்கி வருவதால் எமது எதிர்க்கட்சித் தலைவரின் பாதுகாப்பை பலப்படுத்துமாறு நாம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கிறோம்.

அத்துடன், கடந்த வாரம் நிதிக் குழு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. வீசா நடைமுறைகளில் முன்னெடுக்கப்பட்ட மாற்றங்களில் 140 நாடுகளில் தொழிற்பட்டு வரும் நிறுவனமான VFS எனும் நிறுவனத்தின் பெயரை முன்னிலைப்படுத்திக் கொண்டு வேறு கம்பனிகள் மூலம் இதை முன்கொண்டு செல்கின்றனர்.

இதனால் நாட்டுக்கு கிடைக்க வேண்டிய பல கோடி ரூபா வருமானம் இல்லாது போகிறது.

வீசா நடைமுறைகள் குறித்து கேட்டறிய நிதிக் குழுவிற்கு அழைக்கப்பட்ட போது முதல் தடவையில் அதிகாரிகள் சமூகமளிக்கவில்லை.  இது ஓரு வகையில் நாடாளுமன்ற சிறப்புரிமைகளை மீறும் நடவடிக்கையாக பார்க்க வேண்டும்.

அரச அதிகாரிகள் அரசியல்வாதிகளை பாதுகாப்பதை விடுத்து நாட்டு மக்களையும், நுகர்வோரையும் பாதுகாக்க வேண்டும்.

அரச அனுமதி இல்லாமல் வெளிப்படைத்தன்மை இல்லாமல், கேள்வி மனு இல்லாமல் இந்த கம்பனிக்கு இடமளிக்கப்பட்டுள்ளது”  என நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன மேலும் தொிவித்துள்ளாா்.

https://athavannews.com/2024/1392189

தமிழ் மக்கள் கூட்டணியின் முதலாவது தேசிய மாநாடு – சிறிதரன் பங்கேற்பு!

2 months 2 weeks ago
Wigneswaran.jpg?resize=750,375&ssl=1 தமிழ் மக்கள் கூட்டணியின் முதலாவது தேசிய மாநாடு – சிறிதரன் பங்கேற்பு!

தமிழ் மக்கள் கூட்டணியின் முதலாவது தேசிய மாநாடு விக்னேஸ்வரன் தலைமையில் யாழ்ப்பாணத்தில் நடாத்த ஏற்பாடாகியுள்ளதாகத் தொிவிக்கப்பட்டுள்ளது.

 

யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் ஜுலை 21 ம் மதியம் 3 மணிக்கு தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான க.வி.விக்னேஸ்வரன் தலைமையில் தேசிய மாநாடு நடைபெறவுள்ளது.

இதன்போது பிரதம அதிதியாக யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனும், சிறப்பு விருந்தினராக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக அரசறிவியல் துறைத் தலைவர் கே.ரி.கணேசலிங்கமும் கலந்துகொண்டு உரையாற்றவுள்ளதாகத் தொிவிக்கப்பட்டுள்ளது.

https://athavannews.com/2024/1392168

இராணுவயமயமாக்கலை நியாயப்படுத்துவதற்கான ஒரு திட்டமே 'யுக்திய' - சட்டத்தரணி அம்பிகா சற்குணநாதன்

2 months 2 weeks ago
13 JUL, 2024 | 05:22 PM
image

(நா.தனுஜா)

நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக இராணுவமயமாக்கலை சட்டபூர்வமாக்குவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், 'யுக்திய' நடவடிக்கையும் இராணுவயமயமாக்கலை நியாயப்படுத்துவதற்கான ஒரு திட்டமாகவே அமைந்திருப்பதாகவும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் சட்டத்தரணி அம்பிகா சற்குணநாதன் சுட்டிக்காட்டியுள்ளார். 

திட்டமிடப்பட்ட இராணுவமயமாக்கல், 'யுக்திய' நடவடிக்கையின் கீழ் இடம்பெறும் சட்டவிரோத கைதுகள் போன்றவற்றுக்கு எதிராகத் தொடர்ந்து கருத்து வெளியிட்டுவரும் அம்பிகா சற்குணநாதன், இவ்விடயம் தொடர்பில் மேலும் கூறியிருப்பதாவது: 

இலங்கையில், குறிப்பாக கடந்த சில ஆண்டுகளாக சட்டம் மற்றும் கொள்கை உருவாக்கத்தில் இராணுவமயமாக்கலை சட்டபூர்வமாக்குவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதை அவதானிக்க முடிகிறது. புனர்வாழ்வளித்தல் பணியக சட்டம், ஸ்ரீலங்கா டெலிகொம் திருத்தச் சட்டமூலம், குடியகல்வு சட்டமூலம் போன்றவற்றை அதற்கு உதாரணமாகக் குறிப்பிடமுடியும். 

அதேபோன்று போதைப்பொருளுக்கு எதிரான 'யுக்திய' நடவடிக்கையும் இராணுவமயமாக்கலுக்கு வாய்ப்பளிப்பதற்கும், அதனை நியாயப்படுத்துவதற்குமான ஒரு திட்டமாகவே அமைந்திருக்கிறது. 

அதேவேளை போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பில் கைதுசெய்யப்பட்டோர் சார்பில் ஆஜராகும் சட்டத்தரணிகளை பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் மீண்டுமொரு தடவை விமர்சித்துள்ளார். அதுமாத்திரமன்றி, பாராளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, பாதாள உலகக் குழுவினர் கொல்லப்பட வேண்டும் எனவும், அதனைச் செய்யும் பொலிஸாருக்கு நாமனைவரும் ஒன்றிணைந்து ஆதரவளிக்கவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். 

அதன் மூலம் பொலிஸார் சட்டவிரோத படுகொலைகளில் ஈடுபடுகின்றனர் என்பதை அமைச்சர் ஏற்றுக்கொண்டிருப்பதுடன், அது தேசிய மற்றும் சர்வதேச சட்டங்களின் பிரகாரம் மிகப் பாரிய குற்றமாகும். ஜனாதிபதி, அமைச்சர்கள் மற்றும் பொலிஸார் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்பதுடன், சட்டம் மீறப்படுவதற்கும் இடமளிக்கின்றனர். 

அரசாங்கம் தமது நடவடிக்கைகள் பாதுகாப்பானதும் அமைதியானதுமான இலங்கையை கட்டியெழுப்ப உதவும் எனக் கூறுகின்றது. ஆனால் அதற்கு முற்றிலும் எதிர்மாறான விடயங்களே நடைபெறுகின்றன. கடந்த பெப்ரவரி மாதத்திலிருந்து பொலிஸாருடனான துப்பாக்கிச்சூட்டில் 5 பேரும், அடையாளம் தெரியாதோரின் துப்பாக்கிச்சூட்டில் 19 பேரும் கொல்லப்பட்டுள்ளனர். இவை 'யுக்திய' நடவடிக்கை மற்றும் அதன்போது பின்பற்றப்படும் உத்திகளின் பின்னணியிலுள்ள உண்மையான நோக்கம் தொடர்பில் பல்வேறு சந்தேகங்களைத் தோற்றுவித்துள்ளன. 

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவரது அமைச்சர்களின் நடவடிக்கைகள் தொடர்பில் பொறுப்புக்கூறலுடன் செயற்படுவதற்குப் பதிலாக, அவர்கள் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு இடமளிக்கிறார். அதேபோன்று அமைச்சர்கள் வன்முறை செயற்பாடுகளுக்கு பொதுமக்களின் ஆதரவைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் பொய்யான தகவல்களைப் பரப்புகின்றனர். இருப்பினும் அது சட்டவாட்சியையும், உரிமைகளின் பாதுகாப்பையும் முற்றிலும் சீர்குலைப்பதாகவே அமையும் என எச்சரித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/188377

மன்னாரில் நோயாளிகளுக்கான இறுதி நிலை பராமரிப்பு செயற்பாடுகள் நிறுத்தம் - நோயாளர்கள் அவதி !

2 months 2 weeks ago
14 JUL, 2024 | 09:49 AM
image
 

மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையினால் மன்னார் மாவட்டத்தில் இறுதி நிலை நோயாளர்கள் என கூறப்படும் புற்று நோயாளர்கள் , சிறுநீரக நோயாளர்கள் மற்றும் படுக்கை நோயாளிகள்     போன்றவர்களுக்கான  மருத்துவ தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் அவர்களுக்கு ஏற்படும்   செலவுகளையும் அலைச்சல்களையும் குறைப்பதற்காக நோயாளிகளின் வீடுகளுக்கே சென்று முன்னெடுக்கப்பட்டு வந்த சிகிச்சை நடவடிக்கைகள்  கடந்த  பல மாதங்களாக நிறுத்தப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட நோயாளிகளின் குடும்பத்தினர்  கவலை தெரிவித்துள்ளனர்.  

AAAAAAA.jpg

இறுதி நிலை நோயாளர்களாக இருப்பவர்களை வைத்தியசாலைகளில்  வைத்து பராமரிக்க முடியாதவர்களும் கிளினிக் போன்ற செயற்பாடுகளுக்கு வாகனங்களில் அழைத்துச் செல்ல வசதிகளற்ற வறுமைக் கோட்டிற்கு உட்பட்ட பாமர மக்களே இந்த சேவையை பெற்று வந்தார்கள். 

ஆனால் திடீரென இந்த சேவைகள் நிறுத்தப்பட்டதால் இறுதி நிலை நோயாளர்களும், நோயாளிகளின் குடும்பத்தினரும் மிகவும் சிரமப் படுவதுடன் பாரிய மன உளைச்சல்களுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவித்துள்ளார்கள். 

மேலும் இந்த இறுதி நிலை மருத்துவ சேவை நிறுத்தப்பட்டதால் விரும்பத்தகாத மரணமும் நிகழ்ந்துள்ளதாக  பாதிக்கப்பட்ட மக்கள் கடிதம் மூலம் தெரிவித்துள்ளனர். 

AAAAA.jpg

இவ்வாறு இறுதி நிலை நோய் பராமரிப்பில் மன்னார் மாவட்டம் முழுவதும் நூற்றுக்கணக்கான நோயாளிகள் உள்ளதாகவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள்  கவனம் எடுத்து மீண்டும் மன்னார் மாவட்டத்தில் இறுதி நிலை நோயாளர் பராமரிப்பினை  செயற்படுத்த முன் வருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். 

இந்த விடயம் தொடர்பான வைத்தியர்கள் சிலரின் பெயர்களை குறிப்பிட்டு பொதுமக்கள் கடிதம் அனுப்பியுள்ளார்கள் . விரைவாக மக்களுக்கான இறுதி பராமரிப்பு செயற்பாடுகள் ஆரம்பித்து வைக்குமாறு கோரிக்கை முன்வைத்துள்ளனர்.

A.jpg

https://www.virakesari.lk/article/188391

வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் குடும்பத்தினருடனான தமது உடன்நிற்பை வெளிப்படுத்துவதாக அமெரிக்கத்தூதரக அதிகாரி தெரிவிப்பு

2 months 2 weeks ago
14 JUL, 2024 | 09:51 AM
image

(நா.தனுஜா)

கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வுப்பணிகளை அமெரிக்கத்தூதரகத்தின் அரசியல் பிரிவு அதிகாரி மெத்தியூ ஹின்ஸன் நேரடியாகச் சென்று பார்வையிட்டிருக்கும் நிலையில், இன்னமும் பதிலுக்காகக் காத்திருக்கும் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் குடும்பத்தினருடனான தமது உடன்நிற்பை இது வெளிப்படுத்துவதாக அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது. 

காணாமல்போனோர் பற்றிய அலுலகத்தின் தலையீட்டுடன் நிதி ஒதுக்கப்பட்டதை அடுத்து கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வுப்பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 

அதன்படி, காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் தவிசாளர் மகேஸ் கட்டுலந்த மற்றும் அதன் நிறைவேற்றுப்பணிப்பாளர் ஜெகநாதன் தற்பரன் ஆகியோருடன் முல்லைத்தீவில் உள்ள கொக்குத்தொடுவாய்க்கு விஜயம் மேற்கொண்ட கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகத்தின் அரசியல் பிரிவு அதிகாரி மெத்தியூ ஹின்ஸன், வெள்ளிக்கிழமை (12) மனிதப்புதைகுழி அகழ்வுப் பணிகளைப் பார்வையிட்டுள்ளார். 

'இலங்கையில் பல தசாப்தகாலமாக இடம்பெற்ற சிவில் யுத்தத்தின்போது வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் குடும்பத்தினருடனான எமது உடன்நிற்பை வெளிப்படுத்தும் வகையில், காணாமல்போனோர் பற்றிய அலுவலக அதிகாரிகளுடன் எமது தூதரக அதிகாரி கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வுப்பணிகளைப் பார்வையிட்டார்' என இதுகுறித்து கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகத்தின் உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில் செய்யப்பட்டிருக்கும் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

அதுமாத்திரமன்றி இன்னமும் பதிலுக்காகக் காத்திருப்போருக்கான உண்மை, ஆறுதல் மற்றும் வெளிப்படைத்தன்மையை நோக்கிய இந்த முக்கிய நகர்வைத் தாம் பெரிதும் வரவேற்பதாகவும் அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/188383

அனைத்து தமிழ் தேசிய கட்சிகளும் ஒன்றாக இணைந்து கூட்டமைப்பாக போட்டியிடவேண்டும்; கோவிந்தன் கருணாகரம்!

2 months 2 weeks ago
14 JUL, 2024 | 09:56 AM
image
 

அனைத்து தமிழ் தேசிய கட்சிகளும் ஒன்றாக இணைந்து கூட்டமைப்பாக போட்டியிடவேண்டும் என்பதே எமது நிலைப்பாடு ஆனால் வீட்டுச்சின்னம் நீதிமன்றில் வைக்கப்பட்டுள்ளது. அடுத்த தேர்தலில் அதுவெளியில் வருவதே சந்தேகம் என தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார்.  

மட்டக்களப்பில் உள்ள அவரது அலுவலகத்தில் இன்று  சனிக்கிழமை (13)   நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார். 

தமிழ் தேசிய கூட்டமைப்பு பிரிந்துள்ளதன் காரணமாக பாராளுமன்ற குழுக்களின் தலைவர் பதவியை செல்வம் அடைக்கலநாதனுக்கு வழங்கமுடியாது என்றவகையில் சிலர் பேசிவருவதாகவும் ஆனால் கட்சி செயற்பாடுகளுக்கும் பாராளுமன்ற குழுக்களின் தலைவர் பதவிக்கும் தொடர்பு இல்லையென்ற காரணத்தினால் சிரேஸ்ட பாராளுமன்ற உறுப்பினராகவுள்ள செல்வம் அடைக்கலநாதனை பாராளுமன்ற குழுக்களின் தலைவராக நியமிக்குமாறு கோரியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 

தங்களால் முன்மொழியப்படும் அபிவிருத்தி திட்டங்களை நடைமுறைப்படுத்தும்போது தமக்கு அழைப்பு விடுவதற்கு அரச ஆதரவு அமைச்சர்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் அச்சம் கொள்வதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/188382

யாழ் வட்டுக்கோட்டை பகுதியில் பெண்ணொருவர் கைது

2 months 2 weeks ago

யாழ்ப்பாணம் (Jaffna) - வட்டுக்கோட்டை பகுதியில் 10 போத்தல்கள் கசிப்புடன் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த கைது நடவடிக்கை இன்று(13.07.2024) இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாண குற்றத்தடுப்பு பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் , சுழிபுரம் பகுதியில் உள்ள வீடொன்றினை பொலிஸார் முற்றுகையிட்டு தேடுதல் நடத்தியுள்ளனர்.

மேலதிக சட்ட நடவடிக்கை

இதன்போது, விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 10 போத்தல்களில் அடைக்கப்பட்ட கசிப்பினை பொலிஸார் மீட்டதுடன் , கசிப்பினை விற்பனை செய்வதற்காக தயார்ப்படுத்தி வைத்திருந்த குற்றச்சாட்டில் வீட்டில் இருந்த 47 வயதான பெண்ணொரவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

யாழ் வட்டுக்கோட்டை பகுதியில் பெண்ணொருவர் கைது | A Woman Arrested 10 Bottles Drug In Jaffna

 

அத்துடன், கைது செய்யப்பட்ட பெண்ணையும் , மீட்கப்பட்ட கசிப்பினையும் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக வட்டுக்கோட்டை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

மேலும், குறித்த பெண் ஏற்கனவே கசிப்பு விற்பனையில் ஈடுபட்ட குற்றத்தில் கைதாகி நீதிமன்றினால் தண்டிக்கப்பட்டவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யாழ் வட்டுக்கோட்டை பகுதியில் பெண்ணொருவர் கைது | A Woman Arrested 10 Bottles Drug In Jaffna

https://tamilwin.com/article/a-woman-arrested-10-bottles-drug-in-jaffna-1720880032

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் ஆர்ப்பாட்டம்

2 months 2 weeks ago
13 JUL, 2024 | 06:06 PM
image
 

தமிழர் தாயகத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் இன்றைய தினம் (13) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

வவுனியா பிரதான தபால் நிலையத்துக்கு அருகில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளினால் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டத்தின் 2700 நாளான இன்றைய தினம் இந்த போராட்டம் இடம்பெற்றது.

இதன்போது காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் கொடிகளை ஏந்தியவாறும், "எங்கே எங்கே உறவுகள் எங்கே", "கையில் ஒப்படைக்கப்பட்ட உறவுகள் எங்கே" என்று கோஷங்களை எழுப்பியவாறும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

IMG_20240713_123256.jpg

IMG_20240713_122946.jpg

IMG_20240713_122905.jpg

https://www.virakesari.lk/article/188381

வீட்டுச் சின்னம் தற்போது நீதிமன்றத்தில் உள்ளது தேர்தல் வரும் போது சரியான முடிவு எடுப்போம்- ஜனா

2 months 2 weeks ago
வீட்டுச் சின்னம் தற்போது நீதிமன்றத்தில் உள்ளது. தேர்தல் வரும் போது சரியான முடிவு எடுப்போம் - ஜனா

 

கிழக்கின் அபிவிருத்திக்கான மக்கள் சந்திப்பு பந்துல தலைமையில் நேற்று ஆரம்பம்!

2 months 2 weeks ago
13 JUL, 2024 | 12:25 PM
image
 

கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்திக்கான மக்கள் சந்திப்பு செயற்றிட்டத்தின் கீழ் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன பங்கேற்கும் நிகழ்ச்சித் தொடரின் விசேட கூட்டம் வெள்ளிக்கிழமை (12) திருகோணமலை மாவட்ட செயலக பிரதான மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சாமிந்த ஹெட்டியாராச்சியின் வரவேற்புரையை தொடர்ந்து இவ்விசேட கூட்டம் ஆரம்பமானது.

20240712_215512.jpg

பொருளாதார நெருக்கடியில் இருந்து மூச்செடுக்க முடியாத நாட்டை படிப்படியாக மீட்டெடுப்பதற்கு, செலவை குறைத்து வருமானத்தை அதிகரிப்பது தொடர்பாகவே அரசாங்கம் சிந்தித்துக்கொண்டிருக்கின்றது. 

இந்த நிலையில் 2042ஆம் ஆண்டு வரை பணத்தை அச்சடிக்க முடியாது என்ற உண்மையை உணர்ந்து, அரச ஊழியர்கள் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும். 

20240712_215500.jpg

2019ஆம் ஆண்டுக்கு முன்னர், அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்காக, அவ்வப்போது பணம் அச்சடிக்கப்பட்டது. ஆனால், இன்று அவ்வாறு செய்ய முடியாது. கடனிலிருந்து நாட்டை முதலில் மீட்க வேண்டும். இதற்காக வருமானத்தை அதிகரித்து அரச செலவுகளை குறைக்க வேண்டும். மக்கள் உயிர் வாழ்வதற்கான, அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்வதற்கு அதிகமான நிதியினை செலவு செய்து வருகின்றோம். 

இறக்குமதி செய்யப்படுகின்ற பொருட்களுக்காக ஏற்படுகின்ற செலவை ஏற்றுமதி செய்யப்படுகின்ற பொருட்களில் இருந்து கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு ஈடு செய்ய முடியாதுள்ளது. இதுவே நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு முக்கிய காரணமாகும் என அமைச்சர் பந்துல குணவர்தன இதன்போது தெரிவித்தார். 

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், 

20240712_215442.jpg

பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் நாட்டின் வீதி உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக 10 பில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதில் கிழக்கு மாகாணத்துக்கு ஒரு பில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிதியின் மூலம் நாளாந்தம் மாணவர்கள் பயன்படுத்தும் பாடசாலைகளை அண்டிய வீதிகள், விவசாயிகள் பயன்படுத்தும் வீதிகள் மற்றும் உற்பத்தியாளர்கள் பயன்படுத்தும் வீதிகள் என அத்தியாவசிய வீதிகளுக்கு நாம் மிகவும் முன்னுரிமை கொடுத்து அபிவிருத்தி செய்து வருகின்றோம்.

கிழக்கு மாகாணத்தில் நிலவும் பயணிகளின் பஸ் போக்குவரத்து பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காணப்படும். 400 பஸ்களுக்கு 70 எஞ்சின்கள் பெறப்பட்டிருக்கின்றன. இதற்காகவும் கடனை பெறவேண்டிய நிலைக்கே ஆளாகியுள்ளோம் என மேலும் கூறினார்.

20240712_215431.jpg

இந்த கூட்டத்தில் கிராமிய வீதிகள், அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு இணைத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கபில நுவன் அத்துக்கோரள, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளர் ரஞ்சித் ரூபசிங்க, கிழக்கு மாகாண பிரதம செயலாளர் ஆர்.எம்.பி.எஸ்.ரத்நாயக்க,  மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜெஸ்டினா முரளிதரன், கிழக்கு மாகாண அமைச்சின் செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள், அரச திணைக்கள தலைவர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

20240712_215415.jpg

இந்த கூட்டம் நிறைவடைந்ததை தொடர்ந்து, மொறவெவ விமானப்படை முகாம் வீதி, ஸ்ரீகருமாரி அம்மன் வீதி (கன்னியா) ஆகியன திறக்கப்பட்டன. 

அத்தோடு, இலங்கை போக்குவரத்து சபை திருகோணமலை டிப்போவுக்கு அமைச்சர் பந்துல கள விஜயம் செய்தார். 

20240712_215400.jpg

20240712_215345.jpg

https://www.virakesari.lk/article/188348

அதிக புகையை வெளியிடும் வாகனங்களை கறுப்புப் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை

2 months 2 weeks ago
vehicle-fumes-300x200.jpg

அதிக புகையை வெளியிடும் வாகனங்களை கறுப்புப் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் வாகன புகை பரிசோதனை அறக்கட்டளை நிதியம் தெரிவித்துள்ளது.

வீதியில் பயணிக்கும் இவ்வாறான வாகனங்கள் தொடர்பில் 070 3500 525 என்ற வட்ஸ்அப் இலக்கத்திற்கு முறைப்பாடுகளை அனுப்ப சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக அதன் பணிப்பாளர் தசுன் கமகே குறிப்பிட்டுள்ளார்.

வாகன அனுமதிப்பத்திரத்தை பெற்றுக் கொள்வதற்காக மாத்திரம் புகை சான்றிதழை பெற்றுக் கொள்ள வேண்டாம் என தசுன் கமகே சாரதிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

அதிக புகை வெளியேறுவதை அவதானிக்கும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட வாகனத்தின் உரிமையாளருக்கு எதிராக பராமரிப்பு உத்தரவு பிறப்பிக்கப்படும் எனவும், இல்லையெனில் வாகனத்திற்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

https://thinakkural.lk/article/305945

Checked
Sat, 09/28/2024 - 11:10
ஊர்ப் புதினம் Latest Topics
Subscribe to ஊர்ப்புதினம் feed
texte-feed
sqdgvsqfqsg vdgvdgvv qdsbrzbvzrbvzr