ஊர்ப்புதினம்

தந்தை செல்வாவின் 126வது பிறந்த தினம் இன்று அனுஷ்டிப்பு!

2 months 3 weeks ago
31 MAR, 2024 | 02:05 PM
image

தந்தை செல்வாவின் 126ஆவது பிறந்த தின நிகழ்வு இன்று (31) காலை 9.30 மணியளவில் தந்தை செல்வா நினைவிடத்தில் தென்னிந்திய திருச்சபையின் ஓய்வுபெற்ற பேராயர் ஜெபநேசன் தலைமையில் நடைபெற்றது.

இதன்போது தந்தை செல்வாவின் உருவச் சிலைக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு அவரது சதுக்கத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.   

இந்நிகழ்வில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, வட மாகாண அவைத் தலைவர் சீ.வி.கே. சிவஞானம், கட்சியின் உப செயலாளர் குலநாயகம் உட்பட அரசியல் பிரமுகர்கள், பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.   

IMG-20240331-WA0081.jpg

IMG-20240331-WA0079.jpg

IMG-20240331-WA0077.jpg

IMG-20240331-WA0078.jpg

https://www.virakesari.lk/article/180063

யாழில் கார்த்திகைப்பூ அலங்காரம் : விசாரணைக்கு அழைக்கும் பொலிஸார்!

2 months 3 weeks ago
31 MAR, 2024 | 01:28 PM
image
 

யாழ்ப்பாணம் தெல்லிப்பழையில் உள்ள கல்லூரியில் நேற்று (30) இடம்பெற்ற இல்ல மெய்வல்லுநர் போட்டியில் இல்ல அலங்காரம் தொடர்பில் விசாரணைக்கு வருமாறு தெல்லிப்பழை பொலிஸார் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

அதன்படி, இன்று ஞாயிற்றுக்கிழமை (31) காலை 9 மணிக்கு பொலிஸ் நிலையத்துக்கு வருமாறு ஆசிரியர்களும் மாணவர்களும் அழைக்கப்பட்டுள்ளனர். 

கல்லூரியின் இல்ல மெய்வல்லுநர் போட்டி தளத்தில் கார்த்திகைப்பூ அலங்காரம் செய்யப்பட்டிருந்ததன் அடிப்படையிலேயே பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

https://www.virakesari.lk/article/180061

உயிர்த்த ஞாயிறு தாக்குதலிற்கு இந்தியாவே காரணம் என குற்றம் சாட்டிய சிறிசேன

2 months 3 weeks ago
உயிர்த்த ஞாயிறு தாக்குதலிற்கு இந்தியாவே காரணம் என குற்றம்சாட்டிய சிறிசேன - முன்னாள் ஜனாதிபதியின் புதிய சகாவே இந்த குற்றச்சாட்டிற்கு காரணமா என அரசாங்கம் விசாரணை

Published By: RAJEEBAN   31 MAR, 2024 | 02:05 PM

image

சண்டே டைம்ஸ் 

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேன  சிஐடியினரிடம் வாக்குமூலம் வழங்கியவேளை உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் இந்தியாவே உள்ளதாக தெரிவித்துள்ளார் என குறிப்பிட்டுள்ள சண்டே டைம்ஸ் மைத்திரிபால சிறிசேனவுடன் சமீபத்தில் இணைந்து கொண்டுள்ள நபர் ஒருவரே இந்த குற்றச்சாட்டின் பின்னணியில் உள்ளரா என  அரசாஙகமட்டத்தில் விசாரணைகள் இடம்பெறுவதாகவும் தெரிவித்துள்ளது.

இது குறித்து சண்டேடைம்ஸ் மேலும் தெரிவித்துள்ளதாவது,

easter_sunday_attack_main.jpg

கடந்த காலங்களில் வெளியான விடயங்களை தலைகீழாக மாற்றும் விதத்தில்  முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வரலாற்றை மாற்றியமைக்கும் விதத்தில்  புதிய தகவல்களை வெளியிட்டுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தினத்திற்கு சில நாட்கள் இருக்கையில் அவர் இந்த புதிய தகவலை வெளியிட்டார்.

கண்டிக்கு கடந்த வெள்ளிக்கிழமை விஜயம் மேற்கொண்டவேளை தனக்கு உயிர்த்த ஞாயிறுதாக்குதல் குறித்து புதிய விடயங்கள் தெரியவந்துள்ளதை அவர் கோடிட்டுக்காட்டியிருந்தார்.

கண்டியில் தனது நிகழ்வுகளில் கலந்துகொண்ட பின்னர் அவர் ஊடகவியலாளர்களுடன் உரையாடினார். உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் யார் உள்ளனர் என்பதை தான் அறிந்துகொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

அவர்கள் யார் என்பதை அவ்வேளை அவர் தெரிவிக்கவில்லை. நான் நீதிமன்றத்தின் முன்னிலையிலேயே அதனை தெரிவிப்பேன் என தெரிவித்த மைத்திரிபால சிறிசேன இந்த தகவலின் மிக முக்கிய தன்மை காரணமாக தனக்கு மேலதிக பாதுகாப்பையும் கோரவுள்ளதாக குறிப்பிட்டார்.

கொழும்பில் சிறிசேன ஊடகங்களிற்கு பேட்டி வழங்குவதற்கான ஏற்பாடுகளை அவரின் இரண்டு உதவியாளர்கள் மேற்கொண்டிருந்தமை அவ்வேளையில் புலனாகியது.

சிறிசேனவின் இந்த தகவலிற்கு அதிகளவு முக்கியத்துவத்தை வழங்குவதே அவர்களின் நோக்கம்.

எனினும் இந்த தகவல் வெளியானதும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் உடனடி நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்ற அழுத்தங்களிற்குள்ளானார். குற்றச்செயல்கள் குறித்த விபரங்களை மறைத்தமைக்காக முன்னாள் ஜனாதிபதியை கைதுசெய்யவேண்டும் என சில தரப்பினர் வாதிட்டனர்.

பொலிஸ்மா அதிபர் ஊடாக மைத்திரிபால சிறிசேனவை விசாரணை செய்யவேண்டும் என்ற உத்தரவை அமைச்சர் பிறப்பித்தார்.

மிக முக்கியமாக முன்னாள் ஜனாதிபதி சிஐடிக்கு அழைக்கப்பட்டார் அவரின் வாக்குமூலம்பதிவு செய்யப்பட்டது.

ஐந்து மணிநேரத்திற்கு மேல் விசாரணைகள் இடம்பெற்றதாக  பொலிஸ்வட்டாரங்கள் தெரிவித்தன.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் இந்தியா உள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வாக்குமூலம் வழங்கியுள்ளார் என சண்டே டைம்சிற்கு தெரியவந்துள்ளது.

அவருக்கு எப்படி தெரியும்?

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து இந்திய இராஜதந்திரியொருவர் தனக்கு தெரிவித்தார். என்ன காரணங்களிற்காக அந்த தாக்குதல் இடம்பெற்றது என்பதையும் அவர்  தெரிவித்தார் என சிஐடியினரிடம் தெரிவித்துள்ள சிறிசேன அந்த இராஜதந்திரியின் பெயரையும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் இந்தியா தனது அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுப்பதற்கான அனுமதி வழங்கப்படாமையே இந்த தாக்குதலிற்கான காரணம் என அந்த இராஜதந்திரி தெரிவித்தார் என சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.

உதாரணத்திற்கு மத்தல விமானநிலையம் போன்ற திட்டங்கள்.

சிறிசேனவிடம் இதற்கான ஆதாரங்கள் உள்ளதா?

easter_sunday__attack22.jpg

அரசாங்கம் இது குறித்து விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும் என எதிர்பார்ப்பதாக  மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

மைத்திரிபால சிறிசேனதான் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகளின் பாரதூரதன்மையை உணரவில்லை போல தோன்றுகின்றது.

எந்த இராஜதந்திரியும் முன்னாள் ஜனாதிபதியின் வீட்டிற்கு சென்று நாங்கள்தான் உயிர்த்த ஞாயிறு தாக்குதலை மேற்கொண்டோம் என தெரிவிக்கப்போவதில்லை - சித்த சுவாதீனமற்றவர் மாத்திரமே அவ்வாறு செயற்படுவார்.

இந்தியாவின் ரோ அமைப்பிடமிருந்து உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து வெளியான எச்சரிக்கையை முதலில் அறிந்தவர் சிறிசேன.

ஏன் அவர் தற்போது உயிர்த்த ஞாயிறு தினத்திற்கு முன்னர் இந்த குற்றச்சாட்டுகளை சுமத்துகின்றார்.

சிறிசேனவுடன் சமீபத்தில் இணைந்து கொண்டுள்ள  வாகன இறக்குமதியாளருக்கும் இந்த குற்றச்சாட்டுகளிற்கும் இடையில் தொடர்புள்ளதா என அரசாங்கத்தின் சில மட்டத்தினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

குறிப்பிட்ட நபர் முன்னாள் ஜனாதிபதி மகிந்தராஜபக்சவுடன் இணைந்து செயற்பட்டவர் மோசமான நடவடிக்கைகள் காரணமாக அனைத்து நடவடிக்கைகளில் இருந்தும் நீக்கப்பட்டார்.

இந்த நபர் தொடர்ந்தும் விசாரணைகளை எதிர்கொண்டுள்ளார்.

மைத்திரிபால சிறிசேனவின் வாக்குமூலத்தினை சிஐடியினர் பதிவு செய்துகொண்டிருந்தவேளை இந்த நபர் மேற்குலக இராஜதந்திரியுடன் உணவகமொன்றில் காணப்பட்டார்.

சிறிசேன தனது வாக்குமூலத்தை பூர்த்தி செய்ய முன்னரே இந்த இராஜதந்திரி இந்தியாதான் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில்உள்ளதாக தனது தொடர்பில் உள்ளவர்களிற்கு தெரிவித்துள்ளார்.

மைத்திரிபால சிறிசேன சிஐடியினருக்கு வழங்கிய வாக்குமூலம் குறித்து அரசாங்கத்தின் உயர்வட்டாரங்கள் ஆராய்ந்துள்ளன.

இந்த விடயம் தேசிய பாதுகாப்புடன் தொடர்புபட்டுள்ளது என்பதாலேயே  அரசாங்கத்தின் உயர் வட்டாரங்கள் இது குறித்து அதிக கவனம் செலுத்தியுள்ளன.

 

சட்டமா அதிபரின் அறிவுரையின் கீழ் சிஐடியினர் நீதிமன்றத்தில் பி அறிக்கையை பதிவு செய்தனர். இதனை தொடர்ந்து நான்காம் திகதி நீதிமன்றம் முன்னாள் ஜனாதிபதி நீதிமன்றத்தில் ஆஜராகி அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டுள்ளது.

சிறிசேன நீதிமன்றத்தில் ஆஜரானால் சிஐடியினர் முன்னிலையில் தெரிவித்த அனைத்து விடயங்களையும் அவர் பகிரங்கமாக தெரிவிக்கவேண்டிய நிலையேற்படும்.

இதனை விட மிக முக்கியமான விடயம் என்னவென்றால் இதற்கு இந்திய அரசாங்கம் பதிலளிக்க வேண்டிய நிலை உருவாகும்.

உள்நோக்கம் உள்ளதா இல்லையா தெரியவில்லை. இந்தியா குறித்து குற்றம் சாட்டுவது இந்த விடயம் குறித்து இதுவரை தெரிவிக்கப்பட்ட அறியப்பட்ட அனைத்தையும் முற்றாக மாற்றியுள்ளது.

இலங்கை முஸலீம்களே இந்த தாக்குதலை மேற்கொண்டனர் என்பது நன்கு அறியப்பட்ட விடயம்.

ஏன் தாக்குதலிற்கு இந்தியா ஒரு சமூகத்தை மாத்திரம் தெரிவுசெய்யவேண்டும்.

மேலும் இந்த விடயத்தில் ஐஎஸ் அமைப்பு மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதும் சிறிசேன தெரிவித்துள்ள விடயங்களை அர்த்தமற்றதாக்குகின்றது.

சிறிசேனவின் குற்றச்சாட்டுகள் தற்போதைய அரசாங்கத்தின் தலைமை மீது கடும் தாக்கத்தினை செலுத்தக்கூடும் 

மைத்திரிபால சிறிசேனவை தொடர்புகொள்வதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் வெற்றியளிக்கவில்லை.

https://www.virakesari.lk/article/180066

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளரை களமிறக்கும் முன்மொழிவை நான் ஆதரிக்கவில்லை : சம்பந்தன் அறிவிப்பு !

2 months 3 weeks ago
ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளரை களமிறக்கும் முன்மொழிவை நான் ஆதரிக்கவில்லை : சம்பந்தன் அறிவிப்பு !
kugenMarch 31, 2024
 
Sampanthan-7201-720x480.gif


எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளரை களமிறக்கும் முன்மொழிவை நான் ஆதரிக்கவில்லை. அந்த முன்மொழிவுக்கு தமிழ் மக்களிடத்தில் பரவலான கருத்தாதரவு கிடையாது என்று இலங்கைத் தமிழரசுக்கட்சியின் சிரேஷ்ட தலைவரும், திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

தற்போதைய நிலையில் ஜனாதிபதி தேர்தலில் யார்யார் போட்டியிடப்போகின்றார்கள் என்பது சம்பந்தமாக உத்தியோகபூர்வமான அறிவிப்புக்கள் வெளியாகவில்லை.

அந்த அறிவிப்புக்கள் உறுதியாக வெளியானதன் பின்னர் தீர்மானம் எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழர்கள் சார்பில் பொதுவேட்பாளர் ஒருவர் களமிறக்கப்படுவது தொடர்பிலான உரையாடல்கள் ஆரம்பமாகியுள்ள நிலையிலும் ஜனாதிபதி தேர்தலுக்கான முன்னாயத்தங்களை தேசிய கட்சிகள் முன்னெடுத்து வருகின்றமை நிலையிலும் ஊடகமொன்றிற்கு கருத்து வெளியிடும்போதே சம்பந்தன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழர்கள் சார்பில் பொதுவேட்பாளர் ஒருவரைக் களமிறக்க வேண்டும் என்ற முன்மொழிவுக்கு தமிழ் மக்களிடத்தில் பரலவலான ஆதரவு கிடையாது.

அத்துடன், குறித்த முயற்சியானது தமிழ் மக்களுக்கான சதகமான நிலைமைகளை உருவாக்கும் என்றும் நான் கருதவில்லை. தமிழ் மக்கள் ஐக்கிய இலங்கைக்குள் வாழுவதற்காக ஆணையை வழங்கி வந்துள்ளார்கள்.

அவ்விதமான நிலையில் ஜனாதிபதி தேர்தலில் பொதுவேட்பாளர் ஒருவரை தமிழர்கள் சார்பில் களமிறக்கும் விடயத்தினை நான் ஆதரிக்கவில்லை.

அதேநேரம் தென்னிலங்கை அரசியல் கட்சிகள் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளர்களை இன்னமும் உத்தியோக பூர்வமாக அறிவிக்கவில்லை. அவர்கள் அவ்வாறு அறிவிக்கின்றபோது நாம் இறுதியான தீர்மானத்தினை எடுப்போம்.

எம்மைப்பொறுத்தவரையில்ரூபவ் தமிழ் மக்கள் நீண்டகாலமாக ஐக்கிய இலங்கைக்குள் அதியுச்ச அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் என்று கோரிவருகின்றார்கள்.

அத்துடன் இந்திய, இலங்கை ஒப்பந்தத்தின் பிரகாரம் அவர்களின் வரலாற்று ரீதியான வாழிடங்களான வடக்கும் கிழக்கும் இணைக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றார்கள்.

அந்த வகையில் ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கும் வேட்பாளர்கள் தமிழர்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யும் வகையிலான கோரிக்கைகளை ஆதரிப்பவர்கள் பற்றியே நாம் கருத்தில் கொள்ள முடியும் என்றார்.

https://www.battinews.com/2024/03/blog-post_640.html

 

கருணா VS பிள்ளையான் – ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் – அனைத்து உண்மைகளும் விரைவில் வௌிவரும்!

2 months 3 weeks ago
கருணா VS பிள்ளையான் – ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் – அனைத்து உண்மைகளும் விரைவில் வௌிவரும்!
adminMarch 30, 2024
Pillayan-Karuna-1170x682.jpg

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் தொடர்பில் ஆசாத் மௌலானா சிறந்த ஆதரங்களுடன் நிரூபித்துள்ளார். இந்த நிலையில் இந்த தாக்குதலினை ஏவியவர்களினால் அது தொடர்பான புத்தகம் வெளியிடப்பட்டது என்பது முழுப்பூசணிக்காயை சோற்றுக்குள் மறைப்பதற்காக எழுதப்பட்டதாகவே பார்க்கப்படுகின்றது என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான கருணா என்றழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில் ஜனாதிபதி தேர்தல் வருகின்ற காலகட்டத்தில் அனைத்து உண்மைகளும் வெளிவருவதற்கு வாய்ப்பு இருக்கின்றது எனவும் தெரிவித்தார்.

தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியை பொறுத்த வரையில் ரணில் விக்ரமசிங்க தேர்தல் களத்தில் இறங்குவாராக இருந்தால் அவருக்கு எமது ஆதரவினை வழங்குவதாக நாங்கள் தீர்மானித்து இருக்கின்றோம் எனவும் முன்னாள் பிரதியமைச்சர் தெரிவித்தார்.

மட்டக்களப்பில் உள்ள அவரது கட்சி தலைமையகத்தில் இன்று பிற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,

“இன்று பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருந்தும் அமைச்சர்களாக இருந்தும் மக்களின் குறைபாடுகளை தீர்ப்பதற்கு மாறாக தாங்கள் சுகபோகங்களை அனுபவிப்பதற்காக இந்த வேலை திட்டங்களை கொண்டு வருகின்றார்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் பல வீதிகள் இன்று அமைக்கப்பட்டாலும் அதில் பத்து வீதத்திற்கு மேற்பட்ட தரகுகள் வாங்கப்படுகின்றது இவ்வாறு செயல்பட்டால் எமது கட்டுமானங்கள் எந்த அளவிற்கு இஸ்திரத்தன்மையற்ற நிலையில் இருக்கும் என்பதனை நாங்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். இதுவரையில் மயிலத்தமடு பிரச்சனைக்கு எதிர்வித தீர்வும் கிடைக்கப்பெறவில்லை. அந்த மக்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு பிரச்சனைகளை தற்போது சந்தித்து வருகின்றனர்.

இதே போன்று  வடமாகாணத்தை பொறுத்தவரையில் மத திணிப்புகளும் மதவாதிகளால் ஏற்படும் பிரச்சனைகள் மீண்டும் இன குரோதங்களை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகளை, தேவையற்ற விதத்தில் சில மதகுருமார்கள் மேற்கொண்டு வருகின்றார்கள். அதில் வெடுக்குநாரி மற்றும் குறுந்தூர் மலை போன்ற பிரச்சனைகள் உருவாகி உள்ளன.

தமிழ் மக்களின்  ஆலயங்கள் இருந்த இடங்கள் அனைத்தும் இன்று அதில் பலவந்தமாக புத்த கோவில்களை கட்டி மத திணிப்புகளை மேற்கொள்வதற்கு முயற்சி எடுத்து வருகின்றார்கள் இது போன்ற பல நடவடிக்கைகளை மாற்றி அமைக்க வேண்டும் தமிழர்களின் அவிலாசைகளை தீர்ப்பதற்கு தமது கட்சியின் வேலை திட்டங்கள் தொடர்பாக  கலந்துரையாடி இருக்கின்றது.

ஜனாதிபதியாக கோட்டபாய ராஜபக்ஸ இருந்த காலத்தில் நாடு ஒரு பாதாளத்தில் தள்ளி விடப்பட்டது என்பது அனைவருக்கும் தெரியும் அதனால் தான் அவர் மக்களால் துரத்தி அடிக்க பட்டார் அவரின் அவ்வாறான செயற்பாட்டால் பொருளாதாரம் வங்குரோத்து நிலையை அடைந்திருந்தது.

இந்த நிலையில் தற்போது இருக்கின்ற ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வந்ததன் பிற்பாடு இன்று பல சிரமத்தில் மத்தியில் இருந்த எமது நாட்டை கட்டி எழுப்பியிருக்கின்றார். அதனை அனைத்து மக்களும் ஏற்றுக்கொள்ள வேண்டும். இன்று டொலரின் பெறுமதி எந்த அளவிற்கு குறைந்திருக்கின்றது என்பது அனைவருக்கும் தெரியும் அந்த அளவுக்கு இன்று நாட்டின் பொருளாதாரம் மேம்பட்டு வருகின்றது.

தமது கட்சியை பொறுத்த அளவில் ரணில் விக்ரமசிங்க தேர்தல் களத்தில் இறங்குவாராக இருந்தால் அவருக்கு எமது ஆதரவினை வழங்குவதாக தாங்கள் தீர்மானித்து இருப்பதாகவும்,  தமது கட்சியின் செயற்பாடுகளை பரவலாக முன்னெடுத்து வருவதாகவும்,  இறுதிக் கட்டத்தில் தாங்கள் கூட்டு சேர்வதா அல்லது தனித்து போட்டியிடுவதா என்பதை இறுதி கட்டத்திலே அறிவிக்க உள்ளதாகவும் கருணா தெரிவித்துள்ளார்.

கடந்த காலத்தில் சிவாஜிலிங்கம் போன்றவர்களும் தேர்தலில் போட்டியிட்டு இருந்தார்கள் தமிழ் மக்களை மற்றும் தன்னை பொறுத்தவரையில் இலங்கை நாட்டிலே ஒரு தமிழரோ அல்லது முஸ்லிமோ ஜனாதிபதியாக வருவதற்கு வாய்ப்புகள் இல்லை ஏனென்றால் பெரும்பான்மை சிங்கள மக்களைக் கொண்ட நாடாக இருக்கின்ற காரணத்தினால் யாரோ ஒரு சிங்கள தரப்பினர்தான் ஜனாதிபதியாக வருவதற்கான வாய்ப்பு உள்ளது.

தமிழர்கள் பிரதமராக அல்லது அமைச்சர்களாக வருவது அது ஒரு வேறுபட்ட விடயம் ஆனால் ஜனாதிபதியாக வருவதற்கு அனைத்து மக்களுக்கும் அனைத்து கல்விச் சமூகங்களுக்கும் இடையிலான தெரிந்த விடயம் சிங்கள குடிமகன் தான் ஜனாதிபதியாக வருவார் ஆகவே அந்த வகையில்  அதனை புரிந்து கொண்டு செயல்பட்டால் தமிழர்களுக்கு நன்மை தரக்கூடிய ஜனாதிபதியை நாங்கள் தெரிவு செய்வது என்பது ஏற்றுக் கொள்ள வேண்டிய விடயம்.

“தமிழர்கள் போட்டியிடுவதை வரவேற்கின்றோம் அது இலங்கை குடிமகன் யாராக இருந்தாலும் எங்கும் போட்டியிடலாம் அதனை வரவேற்கின்றோம்.”

இது ஒரு நல்ல விடயம் ஆனால் அதனை முன் வைப்பதற்கு முன்னர் அனைத்து கட்சிகளும் கூடி கலந்தாலோசித்து அதில் ஒருமித்த கருத்தினை எடுத்து அனைத்து தமிழ் மக்களும் அந்த ஒருவருக்கு வாக்களித்து எதிர்ப்பினை காட்டுவார்களாக இருந்தால் உலக மத்தியில் பாரிய வரவேற்பு வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது இதனை மறப்பதற்கு இல்லை.

ஆனால் அந்த அளவிற்கு எந்த கட்சி ஒற்றுமையாக இருக்கும் என்பது வேடிக்கையான விடயம் ஏனென்றால் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் தெரிவிலே இன்னமும் தீர்மானம் இல்லை தமிழ் தேசிய கூட்டமைப்பு இன்று தேசியம் கதைத்துக் கொண்டு தலைவர் தெரிவில் நீதிமன்றத்தை நாடி நிற்கின்றது என்றால் எவ்வளவு பிற்போக்குத்தனமாக அந்த கட்சி இருக்கின்றது என்பதனை புரிந்து கொள்ள வேண்டும் இந்த நிலையில் தமிழ் கட்சிகள் ஒன்றாகுமா என்பது சந்தேகத்திற்குரிய விடயம்.

“இன்று ஈஸ்டர் குண்டு தாக்குதல் தொடர்பாக பல்வேறு விடயங்கள் பேசப்பட்டு வருகின்றது இந்த நிலையில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனக்கு இது தொடர்பாக தெரியும் என கூறுகின்றார் அதே நேரம் இந்த விடயம் தொடர்பாக இரண்டு புத்தகங்கள் வெளிவந்திருக்கின்றது. கோட்டபாய ராஜபக்ஸ  மற்றும் பிள்ளையானும்  புத்தகம் வெளியிட்டுள்ளனர். இதனை ஒரு முதலை கண்ணீர் வடிப்பதற்கு சமமாக தான் பார்க்கின்றோம். ஏனென்றால் அசாத் மௌலானா  சிறந்த ஆதாரங்களை நிரூபித்து இருக்கின்றார். அவர் நீண்ட காலமாக அந்த கட்சியிலே ஒரு முக்கிய உறுப்பினராக செயலாளராக அல்லது பிரதம ஆலோசகராக செயல்பட்டவர் என்பது உண்மையான விடயம். ஏனென்றால் அவர் கூறிய விடயங்களை எவரும் மறுப்பதற்கு இல்லை. குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஏன் புத்தகத்தை வெளியிட வேண்டும் என்கின்ற கேள்வி எழுந்திருக்கின்றது.

ஏனென்றால் இன்று பாதிக்கப்பட்ட மக்கள் ஒரு புத்தகத்தையும் வெளியிடவில்லை. இதை ஏவியவர்களால் புத்தகம் வெளியிடப்பட்டது என்பது தங்களது பிரச்சினைகளை மறைப்பதற்காக அதாவது முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பதற்காக எழுதப்பட்டதாகதான் பார்க்கப்படுகின்றது.

உண்மையிலே இதற்கான தீர்வு என்பது ஆண்டவரால் வழங்கப்படும். ஜனாதிபதி தேர்தல் வருகின்ற காலகட்டத்தில் அனைத்து உண்மைகளும் வெளிவருவதற்கு வாய்ப்பு இருக்கின்றது. தற்போது கடந்த கால ஜனாதிபதி ஒரு அறிக்கையை வெளியிட்டு இருக்கின்றார் நான் அனைத்து ரகசியங்களையும் வெளியிடுவேன் என்று. அதனை நாங்கள் வேடிக்கையாக பார்க்க முடியாது ஏனென்றால் அவர் இலங்கையில் ஒரு பொறுப்பு வாய்ந்த ஜனாதிபதி அவர் கூறுகின்ற போது இதற்கு பின்னால் பாரிய உண்மைகள் இருக்கின்றது என்பது அனைவருக்கும் தெரிந்த விடயம் இது எதிர்காலத்தில் வெளிப்படையாக நிருபிக்கப்பட்டு இதற்குரிய தண்டனைகள் வழங்கப்பட வேண்டும் என்பது என்னுடைய எதிர்பார்ப்பு.” என கருணா அம்மான் என்ற விநாயகமூர்த்தி முரளீதரன் குறிப்பிட்டுள்ளார்.

 

https://globaltamilnews.net/2024/201410/

ஜனாதிபதி ரணிலின் உயிர்த்த ஞாயிறு தின வாழ்த்துச் செய்தி!

2 months 3 weeks ago
ஜனாதிபதி ரணிலின் உயிர்த்த ஞாயிறு தின வாழ்த்துச் செய்தி!

வரலாற்றில் மிக மோசமான பொருளாதார சவாலை எதிர்கொண்ட ஒரு நாடு என்ற வகையில்,  தாங்கிக்கொள்ளும் இயலுமை நிறைந்த தேசமாக ஆசிர்வாதத்துடன் உயிர்த்தெழ ஆரம்பித்திருக்கிறோம் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தமது உயிர்த்த ஞாயிறு தின வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

பல்லின சமூகமாக வாழும் நாடு என்ற வகையில் இலங்கை தற்காலத்தில் எதிர்நோக்கும் சவால்களை வெற்றிகொள்வதற்காக ஒன்றிணைந்து செயற்படுவது அவசியமாகும்.

எனவே, இலங்கையர்களாகிய நாம் எமது ஒற்றுமையையும் நல்லிணக்கத்தையும் பேணுவதுடன், அதற்கு பாதிப்பு ஏற்படுத்தும் எந்தவொரு சக்திகளிடமும் சிக்கிக்கொள்ளாமல், அறிவுபூர்வமாக நாட்டின் பாதுகாப்பு, சமாதானம் மற்றும் அபிவிருத்திக்காக அர்பணிக்க வேண்டியது அவசிமாகும்.

இலங்கை கிறிஸ்தவர்களால் மிகுந்த மரியாதையுடனும் பக்தியுடனும் கொண்டாடப்படும் ஈஸ்டர் காலம் ஒரு கொடூரமான தீவிரவாத தாக்குதலை கண்டிருந்தது.

அந்த மோசமான நினைவுகள் எமது மனங்களில் இருந்து மறையாது.  அதேநேரம் அதற்கு பொறுப்பு கூற வேண்டியவர்களுக்கு எதிராக சுதந்திரமாகவும் பாரபட்சம் இன்றியும் சட்ட அமுல்படுத்துவதற்கான சூழலை அரசாங்கம் உருவாக்கியுள்ளதுடன் இனிவரும் நாட்களில் இதுபோன்ற சம்பவங்கள் இடம்பெறாமல் இருக்கும் வகையில் தேசிய பாதுகாப்பை உறுதி செய்ய  அரசாங்கம் அர்ப்பணிக்கும்.

அனைத்து கிறிஸ்தவர்களுக்கும் ஆசீர்வதிக்கப்பட்ட மற்றும் மகிழ்ச்சியான ஈஸ்டர் நாளாகட்டும் என பிராத்திப்பதாக ஜனாதிபதி தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

http://www.samakalam.com/ஜனாதிபதி-ரணிலின்-உயிர்த்/

 

முன்னாள் போராளிகளின் நலன் பேணவுள்ள முரளிதரன்

2 months 3 weeks ago
Karuna-Amman.jpg

அம்மான் படையணி எனும் புதிய அமைப்பினூடாக வடக்கு, கிழக்கு மாகாணங்களிலுள்ள முன்னாள் போராளிகளின் நலன் பேணவுள்ளதாக தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதி அமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் நேற்று(29) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்தார்.

இந்த செயற்பாடுகளுக்கு புலம்பெயர்ந்து வாழும் மக்களின் ஆதரவு கிடைத்துள்ளது. யுத்தத்தால் பாதிக்கப்பட்ட, கணவனை இழந்த குடும்பத் தலைவிகளும், விடுதலைப் புலிகள் மாத்திரமல்லாது அனைத்து இயக்கங்களையும் சேர்ந்த போராளிகளும் வாழ்வாதாரமற்ற நிலையில் வாழ்ந்து கொண்டிருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.

அவர்களுக்காக புது வேலைத்திட்டங்களை ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளதாகவும் அம்மான் படையணி அமைப்பு போராளிகளின் நலம் பேணுவதற்காக உருவாக்கப்பட்டு, பெரும்பாலும் வட மாகாணத்திலேயே தற்போது செயற்பட்டு வருவதாகக் குறிப்பிட்ட அவர், கிழக்கு மாகாணத்திலும் அதன் செயற்பாடுகளை விரிவாக்க திட்டமிட்டுள்ளதாகக் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

https://thinakkural.lk/article/297671

வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களின் போராட்டம் தொடர்பான செய்திகள்

2 months 3 weeks ago
வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் சர்வதேச நீதி கோரி வவுனியாவில் போராட்டம்
30 MAR, 2024 | 02:16 PM
image

வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினரால் சர்வதேச நீதி கோரி இன்றைய தினம் (30) போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

வவுனியா பழைய பேருந்து நிலையத்துக்கு முன்பாக இன்று காலை 10 மணிக்கு போராட்டம் ஆரம்பமானது. 

இதன்போது போராட்டக்காரர்கள் தெரிவிக்கையில், 

குற்றமிழைத்த நாட்டில் எமக்கான நீதி கிடைக்கப்பெறாது. இதனால் சர்வதேச நீதி கோரி நாம் போராட்டத்தினை முன்னெடுத்து வருகிறோம். எனவே சர்வதேசம் இனியும் கண்மூடித்தனமாக இருக்காமல் எமக்கான நீதியை பெற்றுத்தர வேண்டும். 

எமது போராட்டங்களை நீர்த்துப்போகச் செய்வதற்காக பல அமைப்புக்கள் முற்படுகின்றன. எனவே, குற்றம் இழைத்தவர்களை சர்வதேச நீதிமன்றத்தில் பாரப்படுத்தி எமக்கான நீதியை வழங்கவேண்டும்.  அதுவரை நாம் போராடிக்கொண்டே இருப்போம் என்றனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் 'ஓ.எம்.பி கண்துடைப்பு நாடகம்', 'சர்வதேச விசாரணையே எமக்கு தேவை', '12 ஆணைக்குழுக்கள் அமைத்தும் பயன் இல்லை' போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தியவாறு பல்வேறு கோசங்களை எழுப்பியிருந்தனர்.

IMG_20240330_103122.jpg

IMG_20240330_103046.jpg

IMG_20240330_103105.jpg

IMG_20240330_102919.jpg

IMG_20240330_102836.jpg

IMG_20240330_102752.jpg

https://www.virakesari.lk/article/180022

யாழ். போதனா வைத்தியசாலையில் பத்து மாடியில் புதிய கட்டடம் - வைத்தியசாலை பணிப்பாளர் சத்தியமூர்த்தி

2 months 3 weeks ago
30 MAR, 2024 | 03:50 PM
image

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் 10 மாடியுடைய புதிய கட்டடம் ஒன்றை அமைப்பதற்கான முன்னாயத்த ஏற்பாடுகள் இடம்பெற்று வருவதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் தங்கமுத்து சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

நேற்று வெள்ளிக்கிழமை (29) யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற வைத்தியசாலையின் அபிவிருத்தி குழு கூட்டத்தின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், 

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் தினமும் அதிகளவிலான நோயாளிகள் பல்வேறு நோய்களுக்கான சிகிச்சை பெற்று வரும் நிலையில் விடுதிகளிலும் அதிகளவானோர் தாங்கி நின்று சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனால், இட நெருக்கடி காரணமாக 10 மாடியில் புதிய கட்டடம் ஒன்றை அமைப்பதற்கான ஆரம்ப நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

புதிய கட்டடத்தை அமைப்பதற்கான வரைபடம் தயாரிக்கப்பட்ட நிலையில் அடுத்த கூட்டத்தில் அதனை சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்க்கிறேன்.

புதிய கட்டடத்தை கட்டுவதற்கு பாரிய நிதி செலவு செய்யவேண்டிய சூழ்நிலையில் எமது புலம்பெயர் வர்த்தகரான ராஜ் ராயரட்ணம் ஒரு தளத்துக்கான முழுமையான செலவை வழங்குவதற்கான சாதகமான பதிலை வழங்கியுள்ள நிலையில் அவரைப் போன்று பலர் உதவி வழங்குவார்கள்.

அரசாங்கத்திடம் புதிய கட்டடத்துக்கு தேவையான இயந்திரங்களை கொள்வனவு செய்வதற்கு வரிவிலக்கை கோரி பெற்றுக்கொள்வதற்கான ஏற்பாடுகளையும் சம்பந்தப்பட்டவர்களிடம் கலந்துரையாடியுள்ளோம்.

ஒரே தடவையில் பத்து மாடிகளையும் கட்டி முடிக்காவிடினும் ஆகக் குறைந்தது ஐந்து தொடக்கம் ஆறு மாடிகளையாவது கட்டி முடித்தால் இட நெருக்கடி குறைந்துவிடும்.

ஆகவே, புதிய கட்டடத்துக்கான ஏற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் அதனை வெற்றிகரமாக நிறைவேற்றுவதற்கு அனைவரது ஒத்துழைப்பும் அவசியம் என அவர் தெரிவித்தார்.

இந்த கலந்துரையாடலில் யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் கலந்துகொண்டார்.

https://www.virakesari.lk/article/180026

யாழ். போதனா வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவு மாலை 6 மணி வரை செயற்படும் - வைத்தியர் சத்தியமூர்த்தி

2 months 3 weeks ago
30 MAR, 2024 | 11:57 AM
image

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் வெளி நோயாளர் பிரிவு  மாலை ஆறு மணி வரை செயற்படும் என யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர்  தங்கமுத்து சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

வெள்ளிக்கிழமை  (29) மாலை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற  வைத்தியசாலையின் அபிவிருத்தி குழு தீர்மானங்களை அறிவித்து கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வெளி மாவட்டங்களில் இருந்து வெளிநோயாளர் பிரிவில் அதிகளவில்  சிகிச்சை பெறுவதற்கு வருகிறார்கள்.

அதன் காரணமாக வெளி நோயாளர் பிரிவை போயா தவிர்ந்த  கிழமை நாட்களில் மாலை 6 மணி வரை செயற்படுத்துவதற்கு தீர்மானித்துள்ளோம்.

வைத்தியசாலையின் செயற்பாடுகளை விஸ்தரிப்பதற்கு இட வசதி மற்றும் ஆளணி எமக்குள்ள ஒரு பாரிய சவாலாக விளங்குகிறது. இருந்த போதும் எம்மிடம்  காணப்படுகின்ற வளங்களை உரிய முறையில் பயன்படுத்தி  சேவையாற்றி வருகிறோம்.

எமது தேவைப்பாடுகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் எடுத்துரைத்துள்ளோம் அவர் எமது தேவைகளை நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கை இருக்கிறது என அவர் மேலும் தெரிவித்தார்.

குறித்த கூட்டத்திற்கு யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் அபிவிருத்தி குழு தலைவர் வாழ்நாள் பேராசிரியர் பொன் பாலசுந்தரம் பிள்ளை,  யாழ்ப்பாணம் போதனா  வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் யமுனானந்தா வைத்தியசாலை கணக்காளர் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

https://www.virakesari.lk/article/180014

யாழ் மாநகரத்தினை தூய்மையாக்கும் பணி முன்னெடுப்பு

2 months 3 weeks ago
30 MAR, 2024 | 11:55 AM
image

யாழ்ப்பாண மாநகரத்தினை தூய்மையாக்கும் பணியினை முன்னெடுக்கும் வகையில், ஆரோக்கியமான யாழ் பவனி துவிச்சக்கரவண்டி பயணம் இன்று சனிக்கிழமை (30)  யாழ்ப்பாணம் ஆரியகுளத்திற்கு  அருகாமையில், யாழ்ப்பாண மாநகர ஆணையாளர் சந்திரன் கிருஷ்னேந்திரன் தலைமையில்  நடைபெற்றது.

VideoCapture_20240330-073450.jpg

சர்வதேச சுழியக் கழிவுதினத்தினை முன்னிட்டு யாழ்ப்பாணம் இந்தியத் துணைத் தூதரகம், யாழ்ப்பாண மாநகர சபை, யாழ்ப்பாண பொஸில் நிலையம், வடமாகாண சுற்றுலா சேவை அலுவலகம் ஆகியவற்றின் ஒருங்கிணைந்த ஏற்பாட்டில் யாழ்ப்பாண மாநகரத்தினை தூய்மையாக்கும் பணி ஆரம்பமானது . 

இவ் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக யாழ்ப்பாணம் இந்திய துணைத்தூதுவர் சாய் முரளி கலந்து கொண்டு தூய்மையாக்கும் திட்டத்தினை ஆரம்பித்துவைத்தார்.   

VideoCapture_20240330-073409.jpg

குறித்த ஆரோக்கியமான யாழ் பவனியின் துவிச்சக்கர வண்டி பயணம் யாழ் ஆரியகுளத்தில் இருந்து ஆரம்பமாகி வேம்படிச்சந்தி, வைத்தியசாலை வீதி மகாத்மா காந்தி சுற்றுவட்ட வீதி, யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டு அரங்கு வீதி, பண்ணை வீதி, ஊடாக பண்ணை சுற்று வட்ட வீதியுடாக வந்து யாழ்ப்பாணம் பொது நூலகத்தில் வந்து நிறைவடைந்தது.     

VideoCapture_20240330-073335.jpg

https://www.virakesari.lk/article/180013

சிறுவர்களிடையே பரவும் கை, கால், வாய் தொற்று நோய் - வைத்தியர் தீபால் பெரேரா எச்சரிக்கை!

2 months 3 weeks ago

Published By: NANTHINI    30 MAR, 2024 | 01:09 PM

image

கை, கால், வாய் தொடர்பான தொற்று நோய்கள் சிறுவர்கள் மத்தியில் பரவி வருவதாக கொழும்பு லேடி ரிட்ஜ்வே வைத்தியசாலையின் குழந்தைகள் நல வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். 

இந்நோய்த் தொற்று தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், 

நோயினால் பீடிக்கப்பட்டுள்ள சிறுவர்களுக்கு காய்ச்சல், தொண்டை வலி, வாய், கை, கால் மற்றும் பிட்டம் முதலான உறுப்புகளில் கொப்புளங்கள் ஏற்படுகின்றன.

இது சின்னம்மை போன்றது. ஆனால், சின்னம்மை ஏற்பட்டால் மார்பு மற்றும் முதுகில் கொப்புளங்கள் தோன்றும். இது தொற்றக்கூடியது. 

இது போன்ற அறிகுறிகள் பிள்ளைகளுக்கு தென்பட்டால் அவர்களை பாடசாலைக்கு அனுப்ப வேண்டாம் எனவும் அவர் தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/180020

மயிலிட்டி துறைமுக பிரச்சினைக்கு தீர்வுகாண அமைச்சர் டக்ளஸ் நேரடி விஜயம்!

2 months 3 weeks ago

Published By: DIGITAL DESK 3    30 MAR, 2024 | 09:24 AM

image
 

மயிலிட்டி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் இழுவைப் படகுகளால் துறைமுகத்தில்  கடற்றொழிலாளர்கள் படகுகளை கரைசேர்ப்பது மற்றும் எரிபொருள் நிரப்புவது போன்ற செயற்பாடுகள் பாதிக்கப்பட்டு வருவதாகவும் அதற்கு நிரந்தர தீர்வை பெற்றுத்தருமாறும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் குறித்த பகுதி கடற்றொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குறித்த துறைமுகத்தில் தொடர்ந்துவரும் இவ்வாறான பிரச்சினைகள் தொடர்பில் அமைச்சரின் பார்வைக்கு கொண்டுவரப்பட்டிருந்த நிலையில் இன்று சனிக்கிழமை (30) மயிலிட்டி இறங்குதுறைப் பகுதிக்கு கள விஜயம் மேற்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா  நிலைமைகளை ஆராய்ந்துகொண்டார்.

மேலும், மயிலிட்டி இறங்குதுறை பகுதியில் அதிகளவான நீண்டநாள் தொழில் மேற்கொள்ளும் ரொலர் படகுகளும் மீன்பிடி படகுகளும் தரித்து நிற்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.

ஆனாலும் அவை நாளாந்தம் தொழில் நடவடிக்கைகளை மேற்கொளும் படகுகள் எரிபொருள் நிரப்புவதிலும் படகுககளை கரை சேர்ப்பதிலும் பல அசௌகரியங்களை உண்டுபண்ணி வருகின்றன.

இவ்வாறான பிரச்சினைகள் தொடர்ந்துவருவதால் அவற்றை ஒழுங்கபடுத்தி கடற்றொழில் நடவடிக்கைகளுக்கு இறங்குதுறையின் செயற்பாடுகளை இலகுபடுத்தி தருமாறு  கடற்றொழிலாளர்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அத்துடன்,மயிலிட்டி துறைமுகத்தில் சட்டவிரோதமாக இலங்கை எல்லைக்கள் நுளைந்த குற்றச்சாட்டில் கடற்படையினரால் பிடிக்கப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் இந்திய இழுவைப் படகுகளாலும் துறைமுகத்தின் செயற்பாடகள் பாதிக்கப்பட்டு வருவதாகவும் சுட்டிக்காட்டியிருந்தனர்.

நிலைமைகளை அவதானித்த அமைச்சர் அவ்வாறு தரித்து நிறுத்தப்பட்ட படகுகளை ஆழமான பகுதியில் நிறுத்தி வைப்பதற்கான ஒழுங்குகளை மேற்கொள்ளுமாறும் குறிப்பாக  தொழில் மற்றும் எதிபொருள் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக வருகைதரும் படகுகளுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்தாத விகையில் பொறிமுறையை வகுத்து தீர்வுகளை காணுமாறும் துறைசார் அதிகாரிகளுக்கு பணித்துள்ளார்.

இதேவேளை தடைசெய்யப்பட்ட சுருக்குவலை தொழில் நடவடிக்கைகளும் இப்பகுதியில் அதிகரித்து வருவதாகவும் அவற்றையும் கட்டுப்படுத்துவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் அமைச்சரிடம் கடற்றொழிலாளர்கள் கோரியிருந்தனர்.

இவ்விடயம் தொடர்பிலும் அதிக கவனம் செலுத்திய அமைச்சர் அவ்வாறான தொழில் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அனுமதிக்க கூடாதெனவும் அவ்வாறு செயற்படும் தரப்பினரை தடுப்பதுடன் அவர்களை சட்டத்தின் முன்நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறும் உரிய தரப்பினருக்கு உத்திவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

IMG-20240330-WA0085_-_Copy.jpg

IMG-20240330-WA0089.jpg

IMG-20240330-WA0087.jpg

IMG-20240330-WA0091.jpg

IMG-20240330-WA0092.jpg

https://www.virakesari.lk/article/180000

வலிந்து காணாமலாக்கப்படல்கள் தொடர்பில் பொறுப்புக்கூறலை உடன் உறுதிப்படுத்தவேண்டிய நிலையில் இலங்கை - சர்வதேச மன்னிப்புச்சபை வலியுறுத்தல்

2 months 3 weeks ago

Published By: DIGITAL DESK 3   30 MAR, 2024 | 08:54 AM

image

(நா.தனுஜா)

இலங்கையைப் பொறுத்தமட்டில் வலிந்து காணாமலாக்கப்படல்கள் தொடர்பில் உடனடியாகப் பொறுப்புக்கூறல் நிலைநாட்டப்படவேண்டும் என்பதுடன், இவ்வாறான சம்பவங்கள் மீண்டும் நிகழாதிருப்பதை உறுதிசெய்யவேண்டியது அவசியம் என சர்வதேச மன்னிப்புச்சபை வலியுறுத்தியுள்ளது.

'தெற்காசியப் பிராந்தியத்தில் வலிந்து காணாமலாக்கப்படல் சம்பவங்களின் தடங்கள்' எனும் தலைப்பில் சர்வதேச மன்னிப்புச்சபையினால் வெளியிடப்பட்டிருக்கும் தரவு அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

இலங்கையின் கறைபடிந்த வலிந்து காணாமலாக்கப்படல் வரலாறு மனித உரிமைகள் வலுவாகப் புறந்தள்ளப்படுவதைக் காண்பிக்கின்றது. அத்தோடு சுமார் 60,000 - 100,000 வலிந்து காணாமலாக்கப்படல் சம்பவங்கள் பதிவாகியிருக்கும் இலங்கை, உலகிலேயே அதிக எண்ணிக்கையான வலிந்து காணாமலாக்கப்படல் சம்பவங்கள் இடம்பெற்ற நாடுகளின் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. 

இலங்கை அரசாங்கமானது பல தசாப்தகாலமாக தீவிரவாதத்தைத் தோற்கடித்து, தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தல்' என்ற போர்வையில் அரச பயங்கரவாதத்தை பிரயோகிப்பதற்கான ஆயுதமாக வலிந்து காணாமலாக்குவதைப் பயன்படுத்திவந்திருக்கின்றது.

1970 மற்றும் 1980 களில் ஜனதா விமுக்தி பெரமுன (மக்கள் விடுதலை முன்னணி) கிளர்ச்சி இடம்பெற்ற காலப்பகுதியில் ஆரம்பமான வலிந்து காணாமலாக்கப்படல்கள், தமிழ் இளைஞர்கள் அரச படையினரால் கடத்தப்படல் போன்ற சம்பவங்கள் மூலம் உள்நாட்டு ஆயுதப்போராட்டத்தின்போது மேலும் தீவிரமடைந்தது. 

இருப்பினும் 2009 இல் போர் முடிவுக்குக்கொண்டுவரப்பட்டதுடன் இவ்வலிந்து காணாமலாக்கப்படல்களும் இடைநிறுத்தப்பட்டன. ஆனால் போருக்குப் பின்னர் ஊடகவியலாளர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், சிறுபான்மையின சமூகங்களை இலக்குவைத்து அரச அனுசரணையுடன்கூடிய 'வெள்ளை வான் கடத்தல்கள்' எனும் புதிய பாகம் ஆரம்பமானது. 

வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் குடும்பத்தினர் மத்தியில் மிக ஆழமான துயரமும், தமது அன்புக்குரியவர்களுக்கு என்ன நேர்ந்தது என்ற பதில் தெரியாத கேள்வியும், தொடர் விரக்தியும் நிலைகொண்டிருக்கின்றது. உண்மை, நீதி மற்றும் இழப்பீட்டுக்கான அவர்களது தொடர் போராட்டம் அரச ஒடுக்குமுறைகளுக்கு உள்ளாகின்றது.

வலிந்து காணாமலாக்கப்படல் சம்பவங்கள் தொடர்பில் நீதியை நிலைநாட்டுமாறு தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்டுவரும் நிலையில், அரசாங்கம் காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் மற்றும் இழப்பீட்டுக்கான அலுவலகம் போன்ற கட்டமைப்புக்களை ஸ்தாபித்திருக்கின்றதே தவிர, அர்த்தமுள்ள பொறுப்புக்கூறலை உறுதிசெய்வதற்கான முயற்சிகள் மிகவும் மந்தகரமான நிலையிலேயே உள்ளன. 

அதன்படி இலங்கையைப் பொறுத்தமட்டில் வலிந்து காணாமலாக்கப்படல்கள் என்பது உடனடியாக பொறுப்புக்கூறல் நிலைநாட்டப்படவேண்டிய விடயமாக இருப்பதுடன், இவ்வாறான சம்பவங்கள் மீண்டும் நிகழாதிருப்பதை உறுதிப்படுத்தவேண்டியது அவசியமாகும் என்று மன்னிப்புச்சபை வலியுறுத்தியுள்ளது.

https://www.virakesari.lk/article/179999

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த உண்மைகள் வெளிவரும் - அருட்தந்தை சிறில் காமினி பெர்ணான்டோ

2 months 3 weeks ago

Published By: RAJEEBAN   29 MAR, 2024 | 12:22 PM

image
 

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் உள்ள விடயங்களை கண்டுபிடிப்பதற்கான முக்கிய தடையாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவே காணப்படுகின்றார் என கத்தோலிக்க திருச்சபையின்  பேச்சாளர் அருட்தந்தை சிறில் காமினி பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

ஊடகமொன்றிற்கு வழங்கிய பேட்டியில் இதனை அவர் தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று  பலமாதங்ளின் பின்னர் ஜனாதிபதியான பின்னர் கோட்டாபய ராஜபக்ச செய்த எடுத்த முதல் நடவடிக்கை உயிர்த்தஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணைகளை மேற்கொண்ட உண்மையை கண்டறியும் ஆணைக்குழுவை செயல்இழக்கச்செய்ததே என அவர் குறிப்பிட்டுள்ளார்.

உயிர்த்தஞாயிறுதாக்குதல் சூத்திரதாரிகள்யார்  என்பது யார் தனக்கு தெரியும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருப்பது குறித்து கருத்து தெரிவித்துள்ள  அருட்தந்தை  சுயாதீன ஆணைக்குழுவை நியமித்தால் மாத்திரமே உண்மை வெளிவரும் என குறிப்பிட்டுள்ளார்.

ஷானி அபயசேகர தலைமையிலான ஆணைக்குழுவை மீண்டும் நியமிக்கவேண்டும் சர்வதேசஅளவில் விசாரணை இடம்பெறவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனை செய்தால் மைத்திரிபாலசிறிசேன அதன் முன்னிலையில் தோன்றி சூத்திரதாரி யார் என்ற உண்மையை தெரிவிக்க முடியும் எனவும் அருட்தந்தை தெரிவித்துள்ளார்.

 நீங்கள் கோட்டாபய ராஜபக்சவை சூத்திரதாரி என தெரிவிக்கின்றீர்களா என செவ்வி காண்பவர் கேள்விஎழுப்பியவேளை அருட்தந்தை சிறில் ஆம் அது தெளிவான விடயம் என குறிப்பிட்டுள்ளார்.

உயிர்த்த ஞாயிறுதாக்குதலில் பொதுமக்கள் கொல்லப்பட்டதை எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர்கள் வாக்குகளை பெறுவதற்காக பயன்படுத்தக்கூடும் என தெரிவித்துள்ள அருட்தந்தை சிறில்பெர்ணான்டோ ஆட்சிமாற்றத்தின் போது அரசியல் வஞ்சகர்கள் மீண்டும் தெரிவு செய்யப்பட்டால் அது ஏற்கனவே

பொருளாதார நெருக்கடி சட்டமொழுங்கின்மையினால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நாட்டிற்கு மேலும் பேரழிவாக அமையும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அமைப்புமுறையில் பாரிய மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே உண்மை வெளிவரும் அமைப்பு முறை மாற்றம் ஏற்படுவதற்கு அரசியல் நிர்வாகம் முற்றாக மறுசீரமைக்கப்படுவது அவசியம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/179961

லொத்தர் சபையின் பங்களிப்பு அதிகரிப்பு

2 months 3 weeks ago
news-03-13.jpg

அபிவிருத்தி லொத்தர் சபை அதன் 40 வருட வரலாற்றில் 2023 இல் அதிகூடிய இலாபத்தை பதிவு செய்துள்ளது.

இதன்படி, அபிவிருத்தி லொத்தர் சபையானது 2022-2023 ஆம் ஆண்டில் 32% இலாபமீட்டி புதிய சாதனையை படைத்துள்ளது, இது 2022 இல் பெற்ற இலாபத்தின் இருமடங்காகும்.

இதன்டபடி, ஜனாதிபதி நிதியத்திற்கு அபிவிருத்தி லொத்தர் சபையினால் வழங்கப்பட்ட பங்களிப்பு கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது 13 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

3,622,506,725 ரூபா 03 பில்லியன் இலக்கை கடந்துள்ளது. அதே சமயம், அரசாங்கத்திற்கான பங்களிப்பை 6% உயர்த்தி 5,193,833,721 ரூபாவினை வழங்கியுள்ளது.

அவிருத்தி லொத்தர் சபையின் தலைவரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான அஜித் குணரத்ன நாரங்கல இது குறித்து கருத்து தெரிவிக்கையில்,
சவாலான காலப்பகுதியில் நாட்டின் பொருளாதாரத்தின் எதிர்மறையான விளைவுகளை குறைக்க அபிவிருத்தி லொத்தர் சபை கையாண்ட உத்திகளால் மிகக் குறுகிய காலத்தில் வருமான அதிகரிக்க வழி செய்துள்ளது.

வழமையான லொத்தர் சீட்டுகள் மற்றும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள விசேட சீட்டுகளுக்கு வழங்கப்படும் பரிசுத் தொகையை அதிகரிக்க அபிவிருத்தி லொத்தர் சபை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இந்நாட்டு பயனாளிகளுக்கு புதிய அனுபவத்தை வழங்கும் வகையில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் ஊடாக லொத்தர் சீட்டுகளை அறிமுகப்படுத்தும் நடவடிக்கையும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தலைவர் தெரிவித்தார்.

அபிவிருத்தி லொத்தர் சபையின் வருமானத்தில் 50% இந்த நாட்டில் கல்வி மற்றும் சுகாதாரத்திற்காக ஒதுக்கப்படுவதாகவும் அவர் அவர் மேலும் குறிப்பிட்டார்.

https://thinakkural.lk/article/297543

மக்களே அவதானமாக இருங்கள்; சமூக ஊடகங்களில் பகிரப்படும் இணைப்புகளைக் கிளிக் செய்ய வேண்டாம்

2 months 3 weeks ago

Published By: DIGITAL DESK 3   29 MAR, 2024 | 12:09 PM

image

பிரபல வர்த்தக நாமங்கள் மற்றும் அவர்களின் வர்த்தக முத்திரைகளை பயன்படுத்தி பரிசுகள் வழங்கப்படும் எனக் கூறி  சமூக ஊடகங்களில் பகிரப்படும் இணைப்புகளை கிளிக் செய்ய வேண்டாம் என இலங்கை கணினி அவசரநிலை தயார்நிலைக் குழு (SLCERT) மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.

இது குறித்து இலங்கை கணினி அவசர நடவடிக்கை பிரிவின் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சாருக தமுனுபொல  தெரிவித்துள்ளதாவது,

குறித்த இணைப்புகள் குறுஞ்செய்தி, வட்ஸ்அப், எக்ஸ் (ட்விட்டர்) மற்றும் பேஸ்புக் மற்றும் கையடக்க தொலைபேசியில் பெறப்பட்ட அழைப்பு ஆகியவற்றினூடாக பகிரப்படுகிறது.

எனவே இவ்வாறான இணைப்புகள் வந்தால்  கிளிக் செய்யவதற்கு முன்பு அவற்றின் நம்பகத்தன்மையை முதலில் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இதுபோன்ற இணைப்புகளை உங்கள் நண்பர்கள் வட்டாரத்தில் இருந்து உங்களுக்கு வரலாம்.

சில சமூக ஊடகங்களில் பகிரப்படும் இவ்வாறான இணைப்புகளை கிளிக் செய்வதால் தனிப்பட்ட தரவுகளை திருடப்படலாம்.

மேலும், உங்களின் தேசிய அடையாள அட்டை இலக்கம் (NIC), சாரதி அனுமதி பத்திரம், வங்கிக் கணக்கு விவரங்கள், ஒரு முறை பயன்படுத்தப்படும் கடவுச்சொல் (OTP), வேலை செய்யும் விவரங்கள் போன்ற தனிபட்ட விவரங்களை பெற்றுகொள்வார்கள்.

சில நேரங்களில் மூன்றாம் தரப்பு கையடக்க தொலைபேசியில் இணைப்புகள் பதிவிறக்கம் செய்யப்பட்டு, குறித்த கையடக்க தொலைபேசியில்  சேமித்து வைக்கப்பட்டுள்ள தனிபட்ட விவரங்களை திருடலாம்.

எனவே அவர்களும் பாதிக்கப்படலாம் என்பதால், அந்த இணைப்புகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/179956

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி சாத்தியம் என்பதை சிங்கள மக்கள் புரிந்துகொள்ளவேண்டும் - அரசியல் செயற்பாட்டாளர் ரஜீவ்காந்

2 months 3 weeks ago

Published By: RAJEEBAN   29 MAR, 2024 | 03:40 PM

image
 

அதிகாரபகிர்வு உரிய முறையில் சரியான விதத்தில் இடம்பெற்றால்தான் பொருளாதார வளர்ச்சி சாத்தியம் என்பதை சிங்கள மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என அரசியல் செயற்பாட்டாளர் ராஜ்குமார் ரஜீவ்காந்  வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கொழும்பில் தூய்மையான அரசியல் கலாச்சாரத்தை ஏற்படுத்துவதற்காக மார்ச் 12 இயக்கம் ஏற்பாடு செய்திருந்த தூய்மையான அரசியலுக்காக ஒன்றிணைவோம் என்ற நிகழ்வில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்தார்.

அவர் தனது உரையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

தூய்மையான ஒரு எதிர்காலத்தினை  தூய்மையான அரசியலிற்கான ஒரு தேவைப்பாட்டினை அரசிடமிருந்து மக்கள் நீண்டகாலமாக  எதிர்பார்க்கின்றனர்.

இலங்கைதொடர்ந்து பல வருடங்களாக பொருளாதார ரீதியில் பின்னடைவுகளை சந்தித்துவந்தாலும் 2022ம் ஆண்டு மிக மோசமான அடியை சந்தித்தது 2022 பொருளாதார பிரச்சினை என்பது வெறுமனே 2022 ம் ஆண்டு வந்தது அல்ல இது மிகநீண்டகாலமாக தீர்க்கவேண்டிய பிரச்சினைகளை தீர்க்காமல் அந்த பிரச்சினைகளை மையமாக வைத்து அதன் ஊடாக அரசியல் இலாபம் தேடிக்கொண்டிருந்தவர்களால் எடுத்துக்கொண்டுவரப்பட்டு பின்னர் அது ஒரு பூகம்பமாக வெடித்தது.

அதுதான் நாங்கள் அனைவரும் எதிர்நோக்கிய மோசமான பொருளாதார  நெருக்கடி.

அதன் பிற்பாடு நாங்கள் மீட்சியை அடைந்துவிட்டோம் என சிலர் கூறினாலும் கூட நாங்கள் உண்மையான மீட்சியை அடையவில்லை.

சிறந்த ஒரு பொறிமுறை ஊடாக நாங்கள் அடையவேண்டிய இலக்குகள் இன்னமும் உள்ளன.

march_12_111.jpg

சமத்துவம் என்ற வார்த்தையை வைத்து நாங்கள் இலங்கையின் ஒட்டுமொத்த  பிரச்சினையையும் அடையாளம் காணமுடியும்.

சமத்துவமற்ற ஜனநாயகத்தினால் நாங்கள் எந்தவொரு முன்னேற்றத்தையும் அடைந்துவிட முடியாது.

இலங்கையில் இலவசக்கல்வி வழங்கப்படுகின்றது இந்த இலவசக்கல்வி ஊடாக தங்களுடைய இலக்கினை ஒரு பணக்கார மாணவன் அடைந்துகொள்ளும்;  தன்மையும் ஏழை மாணவன் அடைந்துகொள்ளும் முறைக்கும் இடையில் பாரிய வேறுபாடு காணப்படுகின்றது.

அடித்தட்டுமக்கள் இவ்வளவு சிரமங்களை எதிர்கொள்கின்றனர் ஏன் அவர்கள் இவ்வளவு பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளவேண்டியுள்ளது என்பதை சற்றே சிந்தித்து பார்த்தால் சமத்துவமற்ற நிலையே இதற்கு காரணம் என்பது புலப்படும்.

வருமானசமத்துவம் இன்மை அதிகரித்துவருகின்றது செல்வந்தர்கள் மேலும் செல்வந்தர்களாகின்றனர்  வறியவர்கள் மேலும் வறியவர்களாகின்றனர்.

இங்கு காணப்படுகின்ற ஜனநாயகத்தில் தமிழர்கள் முஸ்லீம்கள்  ஒருபோதும் அதிகாரம் செலுத்துவதில்லை.

சிங்களவர்கள் கொண்டுவருகின்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள்தான் அதிகாரம் செலுத்துகின்றார்கள.

நாங்கள் பங்காளிகள் இல்லையா என்ற கேள்வி  தமிழ் முஸ்லீம்கள் மத்தியில் காணப்படுகின்றது.

வடக்குகிழக்கில் தமிழ் மக்களின் நிலங்கள் அடாத்தாக கைப்பற்றப்படுகின்றன இதற்கு பொலிஸார் துணைபோகின்றனர்.

இனங்களுக்கு இடையில் சமத்துவம் இன்மையே இதற்கு காரணம் மற்றைய சமூகங்களிற்கு அதிகாரங்கள் சென்றடையவில்லை.

கொரோனா காலத்தில் முஸ்லீம்மக்களின் உடல்கள் எரியூட்டப்பட்டன அவர்கள் பழிவாங்கப்பட்டார்கள் இதற்கு யாராவது பொறுப்புக்கூறச்செய்யப்பட்டார்களா 

சிறுபான்மை சமூகங்களின் இடங்களை பிடித்து  பௌத்த மக்களை கவர்ந்து நாயகர்களாக மாறி தேர்தல்களில் வெற்றிபெறுகின்றனர் ஆனால் அவர்களை வெற்றிபெறச்செய்தவர்களின் வாழ்க்கை மாற்றமடையாமல் வறுமையில் நீடிக்கின்றது.

இந்த உணர்வு அரசியலை என் சகோதரசிங்கள மக்கள் புரிந்துகொள்ளவேண்டும்.

சரியான முறையில்  அதிகாரபகிர்வு இடம்பெற்றால்தான் பொருளாதார வளர்ச்சி சாத்தியம் என்பதை நீங்கள் நம்பவேண்டும்.

மீண்டும் மீண்டும் இந்த விடயங்களை  கூறி எங்களை எத்தனை காலமாக எங்களை ஏமாற்றப்போகின்றீர்கள்.

புரிந்துணர்வுதான் இந்த ஜனநாயகத்திற்கு மிகவும் அவசியமானது.

https://www.virakesari.lk/article/179972

யாழ்.போதனா வைத்தியசாலையின் எரியூட்டி, கோம்பயன்மணல் இந்து மயானத்தில் திறந்து வைப்பு.

2 months 3 weeks ago
spacer.png யாழ்.போதனா வைத்தியசாலையில் எரியூட்டி திறப்பு!
யாழ்ப்பாணம் கோம்பயன்மணல் இந்து மயாணத்தில் அமைக்கப்பட்டுள்ள, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியினை, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்றைய தினம் உத்தியோகபூர்வமாக திறந்துவைத்தார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் மருத்துவ கழிவுகளை எரியூட்டுவதற்காக ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் 40 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் குறித்த எரியூட்டி கொள்முதல் செய்யப்பட்டுள்ளமை  குறிப்பிடத்தக்கது.

முன்பதாக வைத்தியசாலை மருத்துவ கழிவுகளை எரியூட்டுவதில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்த நிலையில் எரியூட்டியை அமைப்பதற்கான இடத்தை தேர்வு செய்வதில் கடும் இழுபறி ஏற்பட்டிருந்தது.

இந்நிலையில் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தீர்மானத்திற்கமைய யாழ் மாநகர சபை, கோம்பயன்மணல் மயான சபை என்பவற்றின் அனுமதியுடன் குறித்த எரியூட்டி கோம்பயன்மணல் இந்து மயானத்தில் நிர்மாணிக்கப்பட்ட நிலையில் இன்றையதினம் திறந்து வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

01-3-2-1-600x338.jpg

https://athavannews.com/2024/1375554

தொடரும் கல்முனை போராட்டம் : நிர்வாகம் எடுக்கப்போகும் முடிவு என்ன

2 months 3 weeks ago
ஐந்தாவது நாளாகவும் தொடரும் கல்முனை போராட்டம் : நிர்வாகம் எடுக்கப்போகும் முடிவு என்ன 15-22.jpg

கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் மீதான தொடர்ச்சியாக நிர்வாக அடக்குமுறைகளுக்கு எதிராக அங்குள்ள பொதுமக்கள் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

அதன்படி, போராட்டத்தின் ஐந்தாவது நாளான இன்றும் (29) கவனயீர்ப்புப் போராட்டம் கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் முன்பு இடம்பெற்று வருகிறது.

குறித்த பிரதேச செயலகத்தின் முன்பு கடந்த திங்கட்கிழமை (25) பொதுமக்கள் பல்வேறு சுலோகங்களை உள்ளடக்கிய பதாகைகள் தாங்கிய வண்ணம் அமைதி வழியில் ஒன்றுகூடி போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர்.

30 வருட காலமாக

அதன் தொடர்ச்சியாக 5வது நாளான இன்றும் பல்வேறு சுலோகங்களை முன்வைத்து போராட்டத்தை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.

இன்றைய 5ம் நாள் போராட்டத்தில் சேனைக்குடியிருப்பு விதாதா தையல் பயிற்சி நிலைய மாணவிகள் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், கடந்த காலங்களில் உதவி அரசாங்க அதிபர் பிரிவாகச்செயற்பட்டு வந்த இந்த பிரதேச செயலகம் 1988 களில் தனியான பிரதேச செயலகமாக தரமுயர்த்தப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து 1993ம் ஆண்டு அமைச்சரவை அங்கீகாரம் பெற்று தனியான பிரதேச செயலகமாக கடந்த 30 வருட காலமாக இயங்கி வருவதாகவும் ஊடகங்களிடம் மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

நிர்வாக அடக்குமுறை

இருந்த போதிலும், ஒரு சில அரசியல்வாதிகள் தொடக்கம் உயரதிகாரிகள் வரை குறித்த பிரதேச செயலகத்தின் மீது நிர்வாக அடக்குமுறைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருவதன் காரணமாக பொதுமக்களாகிய தாங்கள் இப்போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக அவர்கள் மேலும் குறிப்பிடுகின்றனர்.

கடந்த 30 வருடங்களுக்கு மேலாக கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்துக்கு எதிராக இடம்பெற்று வரும் சூழ்ச்சிகளையும் நிர்வாக அடக்குமுறைகளைக் கண்டித்தும் திட்டமிடப்பட்டு பிரதேச செயலக உரிமைகளை ஒடுக்கும் நிருவாக அடக்குமுறைகளை இனியும் பொறுத்துக் கொண்டிருக்க முடியாதெனவும் அரசாங்கம் இன்னும் வாக்குறுதிகளை வழங்கி காலத்தை இழுத்தடிக்காது உடன் தீர்வை தரும் வரை தமது அமைதிப் போராட்டம் தொடரும் எனவும் மேலும் மக்கள் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

 

https://akkinikkunchu.com/?p=272438

Checked
Sun, 06/23/2024 - 02:23
ஊர்ப் புதினம் Latest Topics
Subscribe to ஊர்ப்புதினம் feed
texte-feed
sqdgvsqfqsg vdgvdgvv qdsbrzbvzrbvzr