புதிய பதிவுகள்2

பொன்சேகா மீது போர்க்குற்றம் ஏன் முன்வைக்கப்படவில்லை? மகிந்த அணியினர் கேள்வி

4 weeks ago
முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா மீது எதற்காகப் போர்க் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படவில்லை என்று முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கேள்வி எழுப்பியுள்ளது. மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக கடும் விமர்சனங்களை சரத் பொன்சேகா முன்வைத்து வருகின்றார். மகிந்த ராஜபக்ச தூக்குத் தண்டனைக்குத் தகுதியானவர் என்றும் சரத் பொன்சேகா கூறியுள்ளார். சரத் பொன்சேகாவுக்கு எதிராக போர்க் குற்றச்சாட்டுக்கள் இதையடுத்தே, அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு அமைய சரத் பொன்சேகா செயற்படுகின்றார் என்றும், அதற்காகவே அவருக்கு எதிராகப் போர்க் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படவில்லை என்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன குறிப்பிட்டுள்ளது. மகிந்த ராஜபக்சவின் ஊடகப் பேச்சாளரான சட்டத்தரணி மனோஜ் கமகே இது தொடர்பில் ஊடகங்களிடம் மேலும் தெரிவிக்கையில், இறுதிப் போரை முடிப்பதற்கு முன்னர், மகிந்த ராஜபக்சவால் போர் நிறுத்தம் வழங்கப்பட்டது எனச் சரத் பொன்சேகா கூறி வருகின்றார். இது பொய்யான அறிவிப்பாகும். போர் முடிவுக்கு வரப்போகின்றது என்பது தெரிந்திருந்தால், எதற்காக ஆயுதங்களைக் கொள்வனவு செய்வதற்காக சரத் பொன்சேகா சீனாவுக்குச் சென்றார்? முடியப்போகும் போருக்கு எதற்காக ஆயுதங்கள்? போர் முடியப்போகின்றது என மகிந்தவுக்கும் தெரியாது. பொன்சேகாவுக்கும் தெரியாது. போரின்போது பணியாற்றிய படைத் தளபதிகளில் பொன்சேகாவைத் தவிர, ஏனைய அனைவருக்கும் எதிராக போர்க் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. ஆனால், பொன்சேகாவுக்கு எதிராக எந்தத் தரப்பாலும் போர்க் குற்றச்சாட்டு முன்வைக்கப்படவில்லை. ஏனெனில், படையினரை ஐரோப்பிய நாடுகளிடம் காட்டிக் கொடுத்தவரே பொன்சேகாதான் என குறிப்பிட்டுள்ளார். Tamilwinபொன்சேகா மீது போர்க்குற்றம் ஏன் முன்வைக்கப்படவில்லை? மகிந...முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா மீது எதற்காகப் போர்க் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படவில்லை என்று முன்னாள் ஜனாதிப...

வடக்கில் ஜனவரி முதல் லஞ்ச் சீற் பாவனைக்கு தடை!

4 weeks ago
திரும்பவும் கற்காலத்துக்கே போறமா? கடைகாரர்களுக்கு சாப்பாட்டுக் கோப்பையை ஒழுங்கா சுத்தமா கழுவி பயன்படுத்தணும் என்று அறிவுறுத்தலுடன் அதை செய்ய கற்றுகுடுங்கப்பா. வாழை இலையை அறுத்து எடுத்துவந்து சுத்தம் பண்ணும் செலவுக்கு ஒரு சாப்பாட்டுக் கோப்பையை சுகாதராமான முறையில் இலகுவாக சுத்தம்பண்ணி மீண்டும் பயன்படுத்தலாம். இந்த லஞ்ச் சீற் ஒரே கோப்பையை திரும்ப திரும்ப பலர் பாவிக்கும் போது சுகாதார பாதுகாப்புக்காகப் பயன்படுத்துவதாக எண்ணுகிறேன். நான் படித்த காலத்தில் வாழை இலையைப் பயன்படுத்தி சாப்பிட்டதாக ஞாபகம்.

இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா - சுமந்திரனுடன் சந்திப்பு: வடக்கு, கிழக்கு அபிவிருத்தி மற்றும் அரசியல் நிலவரம் குறித்து பேச்சு !

4 weeks ago
தமிழர்களுடன் ஒட்டி உறவாட சுமத்திரன்(எந்த வித பிரயோசனமும் கிடைக்காது தமிழர்களுக்கு) சிங்களவர்களுடன் ஒட்டி உறவாட மோடி ஜீ ..இதனால் இந்தியாவுக்கு பல நன்மைகள் கிடைக்கும் அதே நேரம் சிங்கள அதிகார வர்க்கம் தமிழர் இருப்பை இல்லாமல் பண்ண உதவிகள் இந்தியாவிடமிருந்து கிடைக்கும்...

வடக்கில் ஜனவரி முதல் லஞ்ச் சீற் பாவனைக்கு தடை!

4 weeks ago
வாழை மரம் அவ்வளவுக்கு தற்பொழுது யாழில் கிடைக்குமா என்பது கேள்விக்குறி....வாழை இலையில் சைவர்கள் சாப்பிடுவார்கள். யாழ் வாழ் இஸ்லாமியர்கள்,கிறிஸ்தவர்கள் எப்படி சாப்பிட முடியும்?

வடக்கில் ஜனவரி முதல் லஞ்ச் சீற் பாவனைக்கு தடை!

4 weeks ago
நாங்கள் அந்த கால யாழ்தேவி,மெயில் ரயில் வண்டிகளில் கொழும்புக்கோ,மட்டகளப்புக்கோ பயணம் செய்யும் பொழுது உந்த வாழையிலையில் ஆட்டிறைச்சி கறியும் இடியப்பமும் கட்டி கொண்டு போய் சாப்பிட்ட ஆட்கள் தானே...அதில் ஒர் சுவையிருக்கு ..ரயில் ஆட இடியப்பத்தையும் இறைச்சியை குழைத்து அடிக்க ,,உறைப்பு அதிகமாக இருந்தால் கண்ணாடி தண்ணீர் போத்தலில் ஊர் தண்ணீரை மதவாச்சி தாண்டினவுடன் குடிச்ச ஆட்கள்

இந்த வாரம் கிளைமேக்ஸ்.. சென்னைக்கு வரும் பாண்டா.. விஜய்க்கு டெல்லி முக்கிய மெசேஜ்.. கூட்டணி ரெடி!

4 weeks ago
எனக்கு போஸ்டுக்கு 200 ரூபாய் நட்டம். இப்போ சீமான்+திமுக ராசி ஆகிவிட்டதால் சீமானை திட்டி போடும் பதிவுகளுக்கு வெறும் 20 ரூபாய்தான் தருகிறார்கள். இப்படியே போனால் நானும் திரள்நிதியில் குடும்பம் நடத்தும் அவல நிலைக்கு தள்ளப்படலாம். பிகு தமிழ் நாட்டில் எது நடப்பினும் என் தனிவாழ்வில் ஒரு உரோமம் வீழ்ந்த பாதிப்பும் கூட இல்லை. இலங்கை அரசியல் கூட, வெளிநாட்டில் வாழுவோரின் நில உரிமையில் கைவைக்காதவர்ரை பாதிப்பு குச் நஹி. ஆனால்…தமிழ் நாட்டில் சாதி அடிப்படையிலான சங்கிகள் வளர விடக்கூடாது என்பது, தமிழ் நாட்டின் நண்பனாக எனது நிலைப்பாடு. பெரியார் அல்ல…அதற்கு முன் வள்ளார்….அதற்கும் முன் 9ம் நூற்றாண்டில் சிவவாக்கியர், இராமானுஜர் காலம் தொட்டு - சங்கிதுவத்தை எதிர்த்த, எதிர்கின்ற மண் தமிழ் நாடு. அதன் மீதும் காவி கறை வீழ்வது அதன் சகஜ வாழ்வுக்கு நல்லதல்ல. தமிழ் நாடு தவிர் இதர இந்தியா சங்கி மயமாகி, இந்து-முஸ்லீம் என வெட்டுப்பட்டால் எனக்கு அது பற்றி எந்த அக்கறையும் இல்லை. சொல்லப்போனால் வட இந்தியாவில் இப்படி ஒரு இரெண்டாம் பாகிஸ்தான் உருவாகி இந்தியா சிதறி - அதன் மூலம் தென்னிந்தியா, அதிலும் தமிழ்நாடு தனியாக வந்து விடாதா என்ற ஒரு நப்பாசையும் எனக்கு உண்டு.

பொலிஸாருக்கு எதிராக யாழ்.வழக்கறிஞர்கள் வேலைநிறுத்தம்

4 weeks ago
தீவில் இப்ப எல்லாம் சட்டப்படி தான் நடக்குதாம்... பொலிசார் வீடு புகுந்தால்(உத்தர்வின்றி உள்ளே புகுந்தால்) சட்டத்தரனிகளே பகிரங்கமாக போராட்டம் நடத்த கூடியதாக இருப்பதற்கு காரணம் எங்கள் செந்தோழர் களின் ஆட்சி யாழில் நடப்பதால் தான்... இது தான் செய்தி ....இது தான் ஐ,நா சபைக்கு அரசு சொல்லும் செய்தியும் .....செம்மணி புதைகுழி அல்ல முக்கியம்🤔

திருகோணமலை கடற்கரையில் 2006 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 2 ஆம் திகதி இராணுவத்தால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட, தனது மகன் உட்பட ஐந்து மாணவர்களுக்காக நீதி கோரி போராடிய வைத்தியர் மனோகரன்

4 weeks ago
வைத்தியர் மனோகரனுக்கு கண்ணீர் அஞ்சலிகள்.

வடக்கில் ஜனவரி முதல் லஞ்ச் சீற் பாவனைக்கு தடை!

4 weeks ago
இல்லை. சாப்பட்டு கோப்பைக்கு மேல் பொடும் மிக மெல்லிய பொலித்தீன் தாள். தடை நல்ல விடயம். சூழலுக்கு ஆபத்தனது. பூனை நாய் சப்பிட்டுட்டு சரியாய் கஷ்டபடும். சின்னனைலை 50 சதத்துக்கு 10 லஞ்ச் சீற்றை கொத்துரொட்டி கடையில வாங்கி பரசூட் விடுவம்.

கரூரில் இறந்தவர்கள் குடும்பத்திடம் வீடியோ காலில் விஜய் பேசியது என்ன?

4 weeks ago
விஜய் 41 குடும்பங்களையும் பனையூருக்கு வரச் சொல்லவில்லையே என்று ஆறுதல்பட்டுக் கொள்ள வேண்டியது தான்.....................🫣. 'ரசிகர்களா, நடிகர்களா.............. தமிழ்நாட்டில் இதில் எவருக்கு அதிக உளவியல் ஆலோசனைகள் தேவை..........' என்று ஒரு வழக்காடு மன்றமே வைக்கலாம் போல............... முழுச்சட்டையையும் கிழிக்காமல் விடமாட்டார்கள்............

நடிகை பாலியல் வழக்கு.. நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டார் சீமான்! வழக்கை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்

4 weeks ago
விகடனில் இருந்து சீமான் கொடுத்த மன்னிப்பு கடித வாசகம்….. "எனது சொல், செயல்களால் நடிகைக்கு வலி, காயம் ஏற்பட்டிருந்தால் மன்னிப்பு கோருகிறேன். இனி நடிகை குறித்து அவதூறாகப் பேசமாட்டேன்" என்றும் சீமான் தெரிவித்திருக்கிறார். பிகு இங்கே எங்கள் அண்ணன் அவதூறு பேச்சுக்கு மட்டுமே மன்னிப்பு கேட்டார் என உருட்டியவர்களுக்கு….. மாண்பு மிகு சீமான் விஜயலட்சுமி மீதான தன்…. செயல்களுக்கும்…. மன்னிப்பு கேட்டுள்ளார்….. செயல்களில் பாலியல் வன்கொடுமை, திருமணம் செய்வதாக சொல்லி ஏமாற்றி உடலுறவு வைத்ததும் அடங்கும் என்பது என் வாதம். Seeman: "இனி அவதூறாகப் பேச மாட்டேன்" - நடிகை வழக்கில் மன்னிப்பு கேட்ட சீமான் https://www.vikatan.com/Seeman: "இனி அவதூறாகப் பேச மாட்டேன்" - நடிகை வழக்கில் மன்...

வடக்கில் ஜனவரி முதல் லஞ்ச் சீற் பாவனைக்கு தடை!

4 weeks ago
சாப்பிடுகின்ற பிளேட்டுக்கள் பல தடவைகள் கழுவி உடைகின்ற வரை மறுபடியும் பாவிக்க கூடியவை என்பதால்சுற்று புற சூழல் பாதுகாப்புக்கும் சுத்தத்திற்கும் உகந்தவை.

இந்த வாரம் கிளைமேக்ஸ்.. சென்னைக்கு வரும் பாண்டா.. விஜய்க்கு டெல்லி முக்கிய மெசேஜ்.. கூட்டணி ரெடி!

4 weeks ago
ஐயா, கடந்த இரு நாட்களாக நீங்கள் சொன்னதை மனதில் அசை போட்டேன். வரும் செய்திகள், அதிமுக+பாஜக+தவெக+பாமக+தேமுதிக+கொசுறுகள் கூட்டணி அமையும் என்றே சொல்வதாகபடுகிறது. இப்படி அமையின் திமுக ஒரே முதல்வரை அடுத்தடுத்து கதிரையில் அமர்த்தியது இல்லை என்ற வாக்கு பலிக்கும். திமுகவை அகற்றல் எனும் நன்மையோடு பார்க்கும் போது…பாஜகவுக்கு 20 சீட்டு என மட்டுப்படுத்த முடிந்தால் - இந்த கூட்டணி வெல்வதும் ஆபத்தில்லையோ என எண்ண தோன்றுகிறது. ஆனால் தேர்தலின் பின் ஆட்சியில் பங்கு என்பதுதான் உதைக்கிறது. தேர்தலுக்கு பின் பாஜக ஆட்சியை, கட்சியை கபளீகரம் செய்வதை தடுக்கும் இயலுமை எடப்பாடிக்கு இல்லை என்பதே என் கணிப்பு.

இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா - சுமந்திரனுடன் சந்திப்பு: வடக்கு, கிழக்கு அபிவிருத்தி மற்றும் அரசியல் நிலவரம் குறித்து பேச்சு !

4 weeks ago
இலங்கையில் எத்தனையோ தமிழ்கட்சிகள் இருக்க இந்த ஊத்தைவாளிகளை தேடி வெளிநாட்டு பிரதிநிதிகள் தேடிவந்து பேச்சுவார்த்தை நடத்துவதன் மர்மம் என்ன? இந்த கேள்வி 40 வருட கால அனுபவத்தில் வந்தது.

கரூரில் இறந்தவர்கள் குடும்பத்திடம் வீடியோ காலில் விஜய் பேசியது என்ன?

4 weeks ago
சும்மா போவியா…🤣 சீமான் டு அண்ணாமலை வரை காமெடி பீசுங்க கூட இதை வச்சு அரசியல் பண்றானுக…. நியாயமா முதல் ஆளா நின்றிருக்க வேண்டிய விஜை… வீடியோ கால், டிரங் கால் எண்டு காமெடி பண்றார்🤣.
Checked
Thu, 11/06/2025 - 12:03
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed