1 month 1 week ago
சிவநேசதுரை சந்திரகாந்தன் மீதான பயங்கரவாத தடைச் சட்டத்தினை நீக்குமாறும், நீதியான விசாரணைகளை நடத்துமாறும் கோரி கையெழுத்து சேகரிக்கும் நடவடிக்கை 28 JUN, 2025 | 05:16 PM வாழைச்சேனை முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் மீதான பயங்கரவாத தடைச் சட்டத்தினை நீக்குமாறும் நீதியான விசாரணைகளை நடத்துமாறும் கோரி அரசினை வலியுறுத்தி சனிக்கிழமை (28) பேத்தாழை வாழைச்சேனையில் கையெழுத்து சேகரிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. வாழைச்சேனை பொது அமைப்புக்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து ஜனாதிபதியின் கவனத்திற்கு தெரிவிக்கும் வகையில் இதனை ஏற்பாடு செய்திருந்தனர். இன்றைய நிகழ்வில் முன்னாள் அமைச்சருக்கு விடுதலை வேண்டி பேத்தாழை மாவடி மாரியம்மன் ஆலயத்தில் விசேட பூசைகள் நடைபெற்று கையெழுத்து வேட்டை இடம்பெற்றது. இதன்போது பொதுமக்கள் பலர் ஆர்வத்துடன் இதில் ஈடுபட்டிருந்தனர். இவ் நடவடிக்கையானது மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் இடம் பெறவுள்ளதாக கட்சியின் கோறளைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் ந.நிமல்ராஜ் தெரிவித்தார். முன்னாள் அமைச்சர் கொழும்பு குற்றத் தடுப்பு புலனாய்வு பிரிவினரால் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். எமது தாய் நாட்டின் இறைமையும் தேசிய ஒருமைப்பாடும் ஆபத்துக்குள்ளாகி இருந்த வேளையில் அவற்றை மீட்டெடுக்க அவர் போன்றவர்கள் ஆற்றிய சேவைகள் இன்று மறக்கப்பட்டால் எதிர் காலத்தில் சிறுபான்மை இனங்களில் இருந்து இவ்வாறான தேச பக்தர்கள் எவ்வாறு தோன்ற முடியும் என்பது தேசத்தின் ஒருமைப்பாட்டை நேசிக்கும் சகலரும் சிந்திக்க வேண்டிய தருணம் இதுவாகும். ஆகவே சந்திரகாந்தன் மீதான விசாரணைகள் அனைத்தும் பயங்கரவாத தடைச் சட்டத்தின் பிடியில் இருந்து நீக்கப்பட்டு சாதாரண சட்ட நடைமுறைகளுக்கு அமைய நடத்தப்படுவதற்கு ஆவண செய்யுமாறு தயவுடன் கேட்டுக் கொள்ளுகின்றோம் என ஜனாதிபதியின் கவனத்திற்கு அனுப்பும் மகஜரில் மேற்படி விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/218711
1 month 1 week ago
யாழ். செம்மணியில் மேலும் 3 மனித எலும்புக் கூட்டுத் தொகுதி அடையாளம் காணப்பட்டது! 28 JUN, 2025 | 06:43 PM யாழ். செம்மணி சித்துபாத்தி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட, மூன்றாவது நாள் அகழ்வாய்வு பணியின் போது மேலும் மூன்று மனித எலும்புக் கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. நேற்றுவரை 24 மனித எலும்புக்கூட்டுத்தொகுதி அடையாளம் காணப்பட்ட நிலையில் இன்றையதினம் மேலும் 3 மனித மனித எலும்புக்கூட்டுத் தொகுதி அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்நிலையில் இதுவரை அடையாளம் காணப்பட்ட மனிதஎலும்புக் கூட்டுத்தொகுதிகளின் எண்ணிக்கை 27ஆக உயர்வடைந்துள்ளது. கடந்த நாட்களில் அடையாளம் காணப்பட்ட மனிதஎலும்புக் கூட்டு தொகுதியில், தாயொருவர் குழந்தையை அணைத்த வண்ணம் காணப்பட்ட மனித ஓட்டுத்தொகுதியானது பல்வேறு அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. குறித்த புதைகுழியை அகழ்வதற்கு 45 நாட்கள் நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில் 15 நாட்கள் தொடர்ச்சியாக அகழ்வுப் பணிகளை முன்னெடுத்து, பின்னர் சிறுகால இடைவெளியின் பின்னர் மீண்டும் அகழாய்வு பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக சட்டத்தரணி வி.எஸ்.நிரஞ்சன் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/218723
1 month 1 week ago
இந்த நிகழ்வில் இப்படியான ஒரு நிகழ்வு நடந்திருக்கக் கூடாது. ஆனால் சிவஞானம் தன்னை நியாயவாதியாக காட்டிக் கொள்கிறார். தமிழரசுக்கட்சியின் தலைவர்களாக மக்களாலும் கட்சி அங்கத்தவர்களாலும் நிராகரிக்கப்பட்டவர்களே இன்று தமிழரசுக்கட்சியின் தலைமையை அடாத்தாக கைப்பற்றியிருக்கிறார்கள். ஒரு பழம்பெரும்கட்சி தலைவர் பொதுச்செயலாளர் இல்லாமல் பதில்தலைவர் பதில் செலாளரை வைத்துக்கொண்டு நீண்டகாலமாக இருப்பது. நகைப்புக்குரியது. தற்காலிக ஏற்பாடாக யாப்பில் இருக்பகும் விடயத்தை நிரந்தர ஏற்பாடாக மாற்றி தங்களுக்குப் பிடிக்காதவர்களை கட்சியிலிருந்து வெளியேஷற்றி இருக்கிறார்கள். தான் செய்த செயலுக்கு பொது வெளியில் இவ்வாறான சம்பவங்கள் நடைபெறும் என்று தெரிந்து கொண்டு அவர் அதைத்தவிர்த்திருக்க வேண்டும்.அங்கே போய் தனக்கு வெள்ளையடிக்க வெளிக்கிட்டு அசிங்கப்பட்டுப் போயிருக்கிறார்.
1 month 1 week ago
இங்லாந்தில் எப்பவும் இல்லாத அளவுக்கு இந்த வருடம் மகளிர் உள்ளூர் கிலப் போட்டிகள் அதிகம் நடத்தப் படுது ஆண்களுக்கு இருக்கும் முன்னனி கிலப்பை போல மகளிருக்கும் 18கிலப்பை உருவாக்க போகினம் , இப்ப 8 கிலப்பை சரி செய்து விட்டினம் , மீதம் 10 கிலப்பை அடுத்த வருடம் சரி செய்து விடுவினம் சொந்த நாட்டில் நடப்பதால் இங்லாந் மகளிர் கோப்பை வெல்லக் கூடும்...................................................................
1 month 1 week ago
நிலாவெளி வீரவணக்க நினைவாலயம் கோபாலபுரம் சந்திப்பு, நிலாவெளி, கிண்ணியா, தலைநகர் ஜமாலியாவிலிருந்த தேச வஞ்சகர்களான ENDLFஇன் முகாமை அழித்துவிட்டு திரும்பிய போது திருமலைக் கடலில் ஏற்பட்ட படகு நேர்ச்சியில் 22 போராளிகள் நீரில் மூழ்கி வீரச்சாவடைந்தனர். அவர்களின் நினைவாய் எழுப்பப்பட்ட நினைவுத்தூண் இதுவாகும். 1990இல் சிறிலங்கா படையினரால் அழிக்கப்பட்ட இது 2003இல் மீளவும் திறக்கப்பட்டது. எனினும் இதன் முழுப் படம் (நினைவாலயத்துடனான) எனக்கு கிடைக்கப்பெறவில்லை. வெறும் தூணின் படமே கிடைத்துள்ளது.
1 month 1 week ago
லெப். செல்லக்கிளி எ சந்திரன் எ அம்மானின் வீரவணக்க நினைவாலயம் அஞ்சல் நிலையச் சந்தி, திருநெல்வேலி, யாழ் 23 சூலை 2004 அன்று திறந்துவைக்கப்பட்டது.
1 month 1 week ago
மாவீரர்களுக்கான பொது வீரவணக்க நினைவாலயம் யாழ் பல்கலைக்கழகம் புலிகளின் காலத்திலேயே இது கட்டப்பட்டுவிட்டது.
1 month 1 week ago
முள்ளிக்குளம் வீரவணக்க நினைவாலயம் முள்ளிக்குளத்தில் இருந்த தேசவஞ்சக கும்பலான புளட்டின் முகாம் மீதான தாக்குதலில் வீரச்சாவடைந்த போராளிகளில் நினைவாலயம்
1 month 1 week ago
தலைநகரின் சம்பூர் பரப்பில் தவிபுவினரால் அமைக்கப்பட்டிருந்த ஒரு வீரவணக்க நினைவாலயம் (இதன் பெயர் அறிந்தவர்கள் ஆவணப்படுத்த தெரியப்படுத்துங்கள்)
1 month 1 week ago
வீரவணக்க நினைவாலயம் சத்தியநாதன் சிலையடி, கம்பர்மலை, வல்வெட்டித்துறை (இதனது நல்ல நிலையிலுள்ள படிமம் ஒன்றை ஆவணப்படுத்த தந்துதவுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்) இது லெப். சங்கர் அவர்களின் வீட்டிலிருந்து சில மீட்டர்கள் தொலைவில் 1980களின் பிற்பகுதியில் கட்டப்பட்டது ஆகும். இச்சிலையில் பெயரால் அப்பகுதி "சத்தியநாதன் சிலையடி" என்றே வழங்கப்பட்டு வந்தது. சிதிலமடைந்த நிலையிலுள்ள மூல நினைவாலயம் 2017ம் ஆண்டு இதனது மூல நினைவாலயத்தின் எஞ்சியுள்ள பகுதிகளில் சுடரேற்றப்பட்டுள்ளதைக் காண்க. அந்த பெட்டிகளுக்குள் முந்தைய காலத்தில் திருவுருவப்படங்கள் (லெப். சங்கர், கப்டன் பண்டிதர் மற்றும் வேறுசிலர்) வைக்கப்பட்டிருந்தனவாம். 2023 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் உள்ளூர் இளைஞர்களால் பழைய வடிவத்திலேயே சிதிலமடைந்த பகுதிகள் சரிசெய்யப்பட்ட பின்னர்: "மாவீரர்களின் நினைவாலயம்" என்ற சொற்றொடர் பழையதிலையும் எழுதப்பட்டிருந்தது.
1 month 1 week ago
கரும்புலிகளுக்கான வீரவணக்க நினைவாலயம் சம்பூர், திருகோணமலை திரும்லை மாவட்ட கரும்புலிகளுக்கான வீரவணக்க நினைவாலயம் தலைநகர் திருகோணமலையின் அரசியல்துறைப் பொறுப்பாளர் திரு எழிலன் அவர்களால் திறந்து வைக்கப்படுகிறது (5-6-2006). ..
1 month 1 week ago
ஏதோ டக்லஸ் மட்டும் தான் படு கொலைகளை புரிந்தது போலவும் மற்றைய இயக்கங்கள் புனிதர்கள் போலவும் கூறப்படுகிறது. இலங்கையில் போரடிய அனைத்து இயக்கங்களும் பல ஆயிரம் படுகொலைகளை நிகழ்ததியவர்கள் தான். இதில் யாரும் சுத்தமானவர்கள் கிடையாது. ஶ்ரீலங்கா இராணுவம் தமிழ் மக்களை படுகொலை செய்ய சூழ்நிலையை அமைத்து கொடுத்ததில் தமிழ் க்கங்களுக்கு பங்கு உள்ளது.
1 month 1 week ago
மாவீரர் மற்றும் கொல்லப்பட்ட பொதுமக்கள் நினைவாக எழுப்பப்பட்ட வீரவணக்க நினைவாலயம் நாவாந்துறை: புலிகள் யாழில் இருந்த போது இது கட்டப்பட்டது.
1 month 1 week ago
லெப் சீலன், வீரவேங்கை ஆனந் ஆகியோருக்கான வீரவணக்க நினைவாலயம் மீசாலை, அல்லாரை இந்நினைவுச் சின்னமானது அன்னவர்கள் வீரச்சாவடைந்த அதே வெட்டையில்தான் அமைக்கப்பட்டது. இவ்வெட்டையானது பின்னாளில் தோப்பாகியது என்பது குறிப்பிடத்தக்கது.
1 month 1 week ago
ஆகாய கடல் வெளி நடவடிக்கை வீரவணக்க நினைவாலயம் கண்டி வீதி, கொடிகாமம் "எதையும் தாங்கிடும் இதயம் உடையவர் - தமிழர் அதை மறவோம்" - தருமம் ஒருநாள் ஆ.கா.வெ. சமர் புலிகளின் வரலாற்றிலேயே ஒரு கண்திறப்புச் சமராகியது. அன்றைய பின்னடைவின் பாடங்களே பின்னாளைய பல வெற்றிகளுக்கு காரணமாகியது. இந்தச் சமரில் உப்புக்காற்றின் அடிமை விலங்குடைக்க உயிரீந்த 602 தமிழீழ விடுதலைப் போராளிகளுக்கு யாழில் ஒரு நினைவு மண்டபம் விடுதலைப் புலிகளால் கட்டப்பட்டது. இந்த நினைவு மண்டபத்தின் சுவர்களில்(உள் & வெளி) ஆ.கா.வெ. நடவடிக்கை மாவீரர்களின் திருவுருவப்படங்கள் மாட்டப்பட்டிருந்தன, தொகுதிகளாக. இந்நினைவு மண்டபமானது 1993/07/31 அன்று தமிழீழ புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் பொட்டம்மான் (மாவீரர்) அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. கீழ்க்காணும் படிமங்கள் யாவும் அற்றைநாளில் எடுக்கப்பட்டவையாகும். 'தவிபு இன் அப்போதைய படைத்துறை துணைக் கட்டளையாளர் பிரிகேடியர் பால்ராஜ் அவர்கள் கொடியேற்றி வைக்கிறார்' அம்மான் 'பிரிகேடியர் சொர்ணம் அவர்கள் மாவீரர் நினைவுக்கல்வெட்டை திரை நீக்குகிறார்.' 'படிமத்தில் அந்த சுவரில் உள்ள மாவீரர் திருவுருவப்படங்களை கவனிக்குக. இது போன்று துமுக்கிகளை ஏந்திக்கொண்டிருப்பது அந்தக்காலத்து வேங்கைகளின் பாணியாகும்.'
1 month 1 week ago
எச்சில் பந்தில் படுவதை அன்மையில் கூட பார்த்தேன் , அப்ப நடுவர்கள் கவனிக்க வில்லையா , இலங்கை வீரர் லசித் மலிங்கா பந்து போடுவதுக்கு முதல் பந்துக்கு முத்தம் கொடுப்பார் , எத்தனை வீரர்களின் எச்சில் அவரின் சொன்டில் பட்டு இருக்கும்.😁..................... டெஸ்ட் விளையாட்டை குறைத்து , இன்னும் கூடுதல் 20ஓவர் போட்டி வைத்தால் கிரிக்கேட் இன்னும் வேகமாக வளரும்👍................ பிரேசில் நாட்டு மகளிர் கூட நல்லா கிரிக்கேட் விளையாடுகினம் , கால்பந்துக்கு பெயர் போன நாட்டில் , கிரிக்கேட் மெது மெதுவாய் வளர்வது வரவேற்க்க தக்கது பெரியப்பு👍................... டெஸ்ட் விளையாட்டு என்றால் ஜரோப்பிரகள் விரும்ப மாட்டினம் , இங்லாந் நாட்டை தவிர , ஜரோப்பாவில் கிட்ட தட்ட எல்லா நாடுகளும் 20 ஓவர் கிரிக்கேட் விளையாட தொடங்கி விட்டினம்................... ஜரோப்பா கப் போட்டி வைத்தால் இங்லாந் மற்ற நாடுகளை வென்று கோப்பைய தூக்கும் , கிரிக்கேட் ஜரோப்பாவில் வளரனும் என்றால் ஜரோப்பா கப் போட்டி 4வருடத்துக்கு ஒருக்கா நடத்தினால் நல்லா இருக்கும்.................... கென்னியா அணிய முந்தி உகன்டா நாடு கிரிக்கேட்டில் வளந்து வரும் என நினைத்து இருப்போமா😮😁💪........................ டெஸ்ட் போட்டிக்கு வெஸ்சின்டீசில் வரவேற்ப்பு சுத்தமாய் இல்லை , அங்கு 20ஓவர் விளையாட்டுக்கு தான் நல்ல வரவேற்ப்பு.😁👍............................
1 month 1 week ago
தமிழக பள்ளிகளில் 'வாட்டர்பெல் திட்டம்' எவ்வாறு அமலாகும்? மாணவர்கள் தண்ணீர் குடிப்பது ஏன் அவசியம்? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் சேவியர் செல்வகுமார் பிபிசி செய்தியாளர் 28 ஜூன் 2025, 10:35 GMT புதுப்பிக்கப்பட்டது 34 நிமிடங்களுக்கு முன்னர் கோவையிலுள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 2 படிக்கும் மாணவர் அவர். கடந்த மாதத்தில் விடுமுறை நாளாக இருந்த சனிக்கிழமையன்று காலை 6 மணியளவில் தனது நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடச் சென்றார். காலையிலிருந்து மாலை வரை தொடர்ந்து கிரிக்கெட் விளையாடிவிட்டு வீட்டுக்கு வந்தார். மிகவும் சோர்வாக இருந்த அந்த மாணவன், மறுநாள் காலையில் எழவேயில்லை. மயக்கமாக இருந்த அவனை தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். மாணவன் கோமா நிலைக்குச் சென்று விட்டதாகக் கூறிய மருத்துவர்கள், சிறுவனின் உடலில் நீர்ச்சத்து மிகவும் குறைந்திருந்ததே இதற்குக் காரணமென்று கூறி சிகிச்சை மேற்கொண்டனர். இரு வார சிகிச்சைக்குப் பின், மாணவன் நலம் பெற்று வீடு திரும்பினார். மாணவனின் பெற்றோரிடம் பிபிசி தமிழ் பேசிய போது, காலையிலிருந்து மாலை வரை தண்ணீரே குடிக்காமல் விளையாடியதே இதற்குக் காரணமென்று மருத்துவர்கள் கூறியதாக தெரிவித்தனர். பொதுவாகவே அந்த மாணவன் மிகவும் குறைவாகவே தண்ணீர் குடித்து வந்ததாக மாணவனின் பெற்றோர் கூறினர். இந்த நிகழ்வு, பள்ளி மாணவர்கள் போதிய அளவு தண்ணீர் குடிப்பதன் அவசியத்தை உணர்த்துகிறது. இதற்காகவே, வெளிநாடுகள் பலவற்றிலும் உள்ள 'வாட்டர் பெல்' திட்டத்தை இந்தியாவில் பல மாநிலங்கள் செயல்படுத்தத் தொடங்கியுள்ளன. இதன் தொடர்ச்சியாக தமிழ்நாட்டில் அனைத்துப் பள்ளிகளிலும் வாட்டர் பெல் திட்டத்தை அமல்படுத்துவதற்காக பள்ளி கல்வித்துறை சார்பில் சுற்றறிக்கை ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. 'வாட்டர் பெல்' தமிழ்நாட்டில் எவ்வாறு செயல்படுத்தப்படும்? பட மூலாதாரம்,GETTY IMAGES வாட்டர் பெல் திட்டம் பற்றி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், பள்ளி கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் அனைத்து மாவட்ட கல்வித்துறை அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதன்படி, அனைத்து மாணவர்களும் தண்ணீருடனோ அல்லது தண்ணீர் இல்லாமலோ பாட்டிலை வீட்டிலிருந்து கொண்டு வர அறிவுறுத்தப்பட வேண்டும். காலைநேர கூட்டத்தின் போது தண்ணீர் குடிப்பதன் அவசியம் குறித்து மாணவர்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும். தண்ணீர் குடிப்பதற்காக அடிக்கப்படும் பெல்லானது, வழக்கத்தை விட வித்தியாசமானதாக மாணவர்களுக்கு தண்ணீர் குடிப்பதை அறிவுறுத்தும் வகையில் இருக்க வேண்டும். இந்த பெல் சத்தம் கேட்டதும் மாணவர்கள் அவர்களின் தேவைக்கேற்ப தண்ணீர் குடிக்க வேண்டும். வாட்டர் பெல்லுக்கான நேரமானது காலை 11 மணி , பகல் 1 மணி, பிற்பகல் 3 மணி என பள்ளிகளின் வசதிக்கேற்ப இருக்கலாம். இந்த நேரத்தில் மாணவர்கள் வகுப்பை விட்டு வெளியேற அனுமதிக்காமல், வகுப்புச் சூழல் பாதிக்காமலும் 2 முதல் 3 நிமிடங்கள் தண்ணீர் குடிக்க ஆசிரியர்கள் அனுமதிக்க வேண்டும் தண்ணீர் குடிக்க அனுமதிப்பதும் தனிமனித உரிமையும்! பட மூலாதாரம்,DR.SRINIVASAN படக்குறிப்பு,மருத்துவர் சீனிவாசன், குழந்தைகள் சிகிச்சை நிபுணர் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு தேவையான அளவுக்கு தண்ணீர் குடிப்பது அவர்களின் உடல் ஆரோக்கியத்தில் முக்கியப் பங்காற்றுகிறது என்கிறார் குழந்தைகள் நல மருத்துவர் சீனிவாசன். ''பள்ளிக் குழந்தைகள் நிறைய விளையாடுவதால் வியர்வை அதிகமாக வெளியேறும். அதனால் மற்றவர்களை விட அவர்கள்தான் அதிகளவில் தண்ணீர் எடுத்துக்கொள்ள வேண்டும். தேவையான அளவுக்கு தண்ணீர் குடிக்காத பட்சத்தில் நீர்ச்சத்து இழப்புடன் உடல் சோர்வு, மனச்சோர்வு ஏற்படும். கவனமின்மை அதிகரிக்கும். அடிக்கடி நீர்ச்சத்து குறையும் போது, சிறுநீர் தொற்று வரும். பதின்பருவத்தினருக்கு முகப்பருக்கள் தோன்றும்.'' என்கிறார் மருத்துவர் சீனிவாசன். இன்றைய காலகட்டத்தில், துரித உணவு முறைகளாலும், தண்ணீர் தேவையான அளவுக்குக் குடிக்காத காரணத்தாலும் ஏராளமான குழந்தைகள், மலச்சிக்கலை சந்திப்பதாக கூறும் மருத்துவர் சீனிவாசன், நமது உடலில் ஏற்கெனவே உள்ள நீர்ச்சத்தைப் பராமரிக்கவும், உடல் செயல்பாட்டுக்கேற்பவும் அனைவரும் குறிப்பாக குழந்தைகள் அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டுமென்கிறார். பட மூலாதாரம்,DR.DURAIKANNAN படக்குறிப்பு,மருத்துவர் துரைக்கண்ணன், ஊட்டச்சத்து நிபுணர் பொதுவாக நீரிழப்பு (Dehydration) அதிக வியர்வை, விளையாட்டு போன்ற அதிகமான உடல் செயல்பாடு (Activities), அதிக வெப்பம் ஆகியவற்றால் ஏற்படும் என்று விளக்கும் குழந்தைகள் நலம் மற்றும் ஊட்டச்சத்து நிபுணர் துரைக்கண்ணன், நீரிழப்பால் உடலின் சமநிலை பாதிக்கும் (electrolyte imbalance) என்கிறார். உடலில் நீர்ச்சத்து சரியாக இருந்தால்தான் எல்லா வயதினருக்குமே மூளைக்குச் செல்லும் ரத்த ஓட்டம் சரியாக இருக்கும். ''குழந்தைகளுக்கு முக்கியமாக பதின் பருவத்தினருக்கு உயரம், எடை இரண்டுமே வேகமாக அதிகரிக்கும் என்பதால் உடலுக்கு நிறைய ஆற்றல் தேவைப்படும். அதற்கு நீர்ச்சத்து மிக முக்கியம். குழந்தையின் உடல் மற்றும் வளர்ச்சிக்கேற்ப தாகம் ஏற்படும். அதற்குரிய அளவில் கட்டாயம் தண்ணீர் குடிக்க வேண்டும். சமவெளிகளில் ஒவ்வொரு மாணவனும் குறைந்தபட்சம் ஒரு மணி நேரத்திலிருந்து அதிகபட்சமாக 3 மணி நேரத்துக்கு ஒரு முறையாவது தண்ணீர் குடிக்க வேண்டும்.'' என்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் துரைக்கண்ணன். நீர்ச்சத்து குறைவதால் வரும் பாதிப்புகள் பட மூலாதாரம்,GETTY IMAGES உடலில் நீர்ச்சத்து குறையும் போது, நமது உடலின் இயக்கத்தில் முக்கியப் பங்காற்றும் எலக்ட்ரோலைட் (Electrolytes) சமநிலை இல்லாமல் போக வாய்ப்புள்ளது என்று கூறும் மருத்துவர் சீனிவாசன், அதனால் உடலில் ரத்த ஓட்டம் குறையவும். சில நேரங்களில் ரத்தப்போக்கு (Bleeding) ஏற்படவும் வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கிறார். உடலுக்குத் தேவையான பொட்டாசியம் உள்ளிட்ட தாதுக்களும் குறையுமென்றும் அவர் எச்சரிக்கிறார். ''ஒருவருக்கு நீர்ச்சத்து முற்றிலும் குறையும் பட்சத்தில் சிறுநீரகம் செயல்பாட்டை நிறுத்திவிடும். தண்ணீர் குடிக்காமலே வெகுநேரம் விளையாடும் போது தசைப்பிடிப்பு (cramps) ஏற்படும். தொடர்ச்சியாக இந்த பாதிப்பு ஏற்படும்போது, மாரடைப்பு ஏற்படவும் வாய்ப்பிருக்கிறது. அதனால் பள்ளிகளில் 'வாட்டர் பெல்' வைப்பது மிகவும் நல்ல திட்டம் என்பதோடு மிகவும் அவசியமானதும் கூட.'' என்கிறார் மருத்துவர் சீனிவாசன். ஒரே வயதுடைய மாணவர்களிடையே உயரம், எடை போன்றவற்றில் நிறைய மாறுபாடு இருக்கும் நிலையில், 'எல்லோரும் சராசரியாக இவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும்' என்ற கருத்து சரியானதுதானா என்ற கேள்வியும் பலரிடமும் எழுப்பப்படுகிறது. இதுபற்றி பிபிசி தமிழிடம் விளக்கிய ஊட்டச்சத்து நிபுணர் துரைக்கண்ணன், சராசரியாக ஒவ்வொருவரும் 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டுமென்றால், மாணவர்களின் செயல்பாட்டுக்கேற்ப இந்த அளவு மாறுபடும் என்றார். உயரம், எடையை விட பாடம் படிப்பது, பாட்டுப்பாடுவது, விளையாடுவது என அந்தந்த நேரத்தின் செயல்பாட்டின் அளவைக் கணக்கில் கொண்டே தண்ணீர் குடிக்க வேண்டுமென்பது அவரின் கருத்து. இந்த அளவு குறையும்போது, அவர்களால் பாடங்களைச் சரியாகக் கவனிக்க முடியாது; செயல்பாடுகளிலும் சுணக்கம் ஏற்படும் என்கிறார் அவர். கொடைக்கானல், வால்பாறை போன்ற மலைப்பகுதிகளிலும், ஒரு நாளுக்கு இதே அளவு தண்ணீர் குடிக்க வேண்டுமா என்ற சந்தேகமும் பலருக்கு எழுகிறது. இதைப் பற்றி விளக்கும் மருத்துவர் சீனிவாசன், மலைப்பகுதியில் வியர்வை வராது என்பதால் அங்கே தண்ணீரின் தேவை குறைவாக இருக்கும் என்கிறார். அதேநேரத்தில் அங்கேயும் உடல் உழைப்பு இருப்பவர்கள் தேவையான அளவு தண்ணீர் குடிக்க வேண்டுமென்று அவர் வலியுறுத்துகிறார். ஆனால் மலைப்பகுதிகளில் 'வாட்டர் பெல்' வைத்து, தண்ணீர் குடிக்க நினைவூட்ட வேண்டிய அவசியமில்லை என்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் துரைக்கண்ணன். ''எங்கெங்கே காற்றுப்போக்கு குறைவாயிருக்கிறதோ, வெப்பம் அதிகமாகியிருக்கிறதோ அங்கெல்லாம் தண்ணீர் தேவை அதிகமாக இருக்கும். தமிழகத்தில் பெரும்பாலான தனியார் பள்ளிகளில் ஒவ்வொரு தளத்திலும் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் வைக்கப்படுகிறது. ஆனால் அரசுப் பள்ளிகளில் இந்த வசதியை இன்னும் மேம்படுத்த வேண்டியுள்ளது.'' என்கிறார் அவர். ''சிறுநீர் கழிக்கவும் அனுமதி அளிப்பது அவசியம்'' பட மூலாதாரம்,GETTY IMAGES அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 'வாட்டர் பெல்' வைப்பது நல்ல திட்டம் என்றாலும், தண்ணீர் குடிக்க அனுமதிக்கும் அதே நேரத்தில் சிறுநீர் கழிக்கவும் போதிய கால இடைவெளியில் அவகாசம் வழங்க வேண்டுமென்று வலியுறுத்துகிறார் குழந்தைகள் நல மருத்துவர் சீனிவாசன். அதற்கேற்ப கழிப்பறை வசதியையும், சுகாதாரத்தையும் பள்ளி நிர்வாகங்கள் பேணவேண்டியது அவசியம் என்கிறார் அவர். இதுபற்றி பிபிசி தமிழிடம் பேசிய மருத்துவர் சீனிவாசன், ''பள்ளிக்குழந்தைகளை தண்ணீர் குடிக்க அனுமதித்தால் மட்டும் போதாது. சிறுநீர் கழிக்க அனுமதி கேட்டால் ஆசிரியர்கள் திட்டுவார்கள் என்றே பல குழந்தைகள் தண்ணீர் குடிப்பதில்லை. இதில் அதிகம் பாதிக்கப்படுவது பெண் குழந்தைகள். பெரும்பாலான மாணவிகள், பள்ளிகளில் சிறுநீர் கழிப்பதைத் தவிர்க்கும் பொருட்டே தண்ணீர் குடிப்பதைத் தவிர்க்கின்றனர். இதனால் அதிகளவில் சிறுநீர் தொற்று பாதிப்புக்கு உள்ளாகின்றனர். ஒவ்வொரு குழந்தையும் ஒரு நாளுக்கு 5 அல்லது 6 முறை சிறுநீர் கழிப்பது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.'' என்கிறார். "குளிர் பானங்கள் தண்ணீருக்கு மாற்று அல்ல" பட மூலாதாரம்,GETTY IMAGES தண்ணீருக்குப் பதிலாக குளிர்பானங்கள் (aerated drinks), உற்சாக பானங்கள் குடிப்பது கூடுதல் ஆபத்துகளை விளைவிக்கும் என்கிறார். ''மாணவர்கள் இதுபோன்ற பானங்களை தொடர்ந்து குடிக்கும்போது, முதலில் உடல் பருமன் (obesity) ஏற்படும். அதன் தொடர்ச்சியாக சிறுவயதிலேயே நீரிழிவு பாதிப்பும் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. அதனால் தாகத்துக்கு எதையாவது குடிக்க வேண்டுமென்று இத்தகைய பானங்களைக் குடிக்காமல் பாதுகாப்பான, சுத்தமான குடிநீரை மட்டுமே குடிக்க வேண்டும். இந்த விஷயத்தில் பெற்றோர், ஆசிரியர், மாணவர்கள் என 3 தரப்பினருக்கும் சரியான விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும்,'' என்கிறார் மருத்துவர் துரைக்கண்ணன். தமிழகத்திலுள்ள 55 ஆயிரம் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 63 லட்சம் மாணவர்களும், 14 ஆயிரம் தனியார் பள்ளிகளில் 68 லட்சம் மாணவர்களும் என மொத்தம் ஒரு கோடியே 30 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் படிப்பதாகத் தகவல் தெரிவிக்கிறார் தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் நந்தகுமார். ''தமிழகத்திலுள்ள தனியார் பள்ளிகள் அனைத்திலும் குழந்தைகளின் பாதுகாப்பு, ஆரோக்கியம் சார்ந்து பலவிதமான அறிவுறுத்தல்களை சங்கம் வழங்கி வருகிறது. இதன் ஒரு பகுதியாக பாதுகாக்கப்பட்ட குடிநீர், தேவையான அளவு கழிப்பிடம் போன்றவை இருப்பதை உறுதி செய்ய வலியுறுத்தி வருகிறோம்.'' என்று நந்த குமார் கூறினார். -இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c9w184w2vg2o
1 month 1 week ago
செம்மணி தமிழர் புதைகுழிகள் மனிதப்பேரவலத்தின் உச்சம்: சீமான்! 28 JUN, 2025 | 12:12 PM செம்மணி தமிழர் புதைகுழிகள் மனிதப்பேரவலத்தின் உச்சம்; சிங்கள இனவெறியர்களின் தமிழின அழிப்புக்கான மற்றுமொரு வரலாற்றுச் சான்று! உலக நாடுகள் இப்போதாவது மௌனம் கலைக்குமா? உரிய நீதியைப் பெற்றுத் தருமா? என்று சீமான் கூறியுள்ளார். இதுகுறித்து நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளதாவது:- ஈழத்தாயகத்தின் வடக்குப் பகுதியில் யாழ்ப்பாணம் செம்மணி – சிந்துபாத்தி இடுகாடு அருகே அண்மையில் குழந்தை உட்பட 5 தமிழர்களின் எலும்புக் குவியல்கள் கண்டறியப்பட்ட மனித புதைகுழி பெரும் அதிர்ச்சியையும், மிகுந்த மனவலியையும் தருகிறது. 1996 ஆம் ஆண்டு செப்டம்பர் 7 அன்று சுண்டிக்குளி மகளிர் கல்லூரி மாணவி கிரிஷாந்தி தேர்வெழுதிவிட்டு வீடு திரும்பும் வழியில் யாழ்ப்பாணம் காவலரணில் இருந்த 11 சிங்கள இனவெறி ராணுவத்தினரால் கூட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டுக் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டார். அவரைத் தேடிச்சென்ற தாய் ராசம்மா, தம்பி பிரணவன், குடும்ப நண்பர் சிதம்பரம் கிருபாமூர்த்தி ஆகியோரும் கொல்லப்பட்டு நால்வரின் உடலும் அடுத்தநாள் வயல்வெளியில் புதையுண்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஈழத்தமிழ் மக்களின் இதயத்தை நொறுக்கிய இக்கொடூர நிகழ்வால், பெரும் மனக்கொந்தளிப்புடன் வீதிகளில் இறங்கி தமிழ் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பன்னாட்டு அமைப்புகளும், மகளிர் அமைப்புகளும் இலங்கை இனவெறி அரசுக்குக் கொடுத்த அழுத்தம் காரணமாக 7 இராணுவ வீரர்களும், 2 காவலர்களும் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டனர். கிருஷாந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, மரண தண்டனையை எதிர்கொண்ட இராணுவ வீரர்களில் ஒருவரான சோமரத்ன ராஜபக்சே இலங்கை நீதிமன்றத்தில் துணிச்சலுடன் அளித்த வாக்குமூலத்தின் மூலமாகவே முதன் முதலாக செம்மணி மனித புதைகுழிகள் வெளிச்சத்திற்கு வந்தன. அவரது வாக்குமூலத்தின் படி 1995-96 ஆம் ஆண்டுகளில் இலங்கை ராணுவத்தினரால் விசாரணைக்காக அழைத்துச்செல்லப்பட்ட நூற்றுக்கணக்கான தமிழ் மக்கள் தம்முடைய உயர் அதிகாரிகளால் படுகொலை செய்யப்பட்டுப் புதைக்கப்பட்டதாகவும், பத்திற்கும் மேற்பட்ட புதைகுழிகளைத் தம்மால் அடையாளம் காட்ட முடியும் என்றும் தெரிவித்திருந்தார். ஐக்கிய நாடுகள் சபையின் தலையீடு காரணமாக அவர் அடையாளம் காட்டிய இடங்கள் சிலவற்றில் கொல்லப்பட்ட தமிழர்களின் எலும்புக் கூடுகள் தோண்டி எடுக்கப்பட்டன. ஆனால், வழக்கம்போல இலங்கை இனவெறி அரசு புதைகுழிகள் அனைத்தையும் முழுமையாகத் தோண்டி விசாரணை நடத்தாமல் கிடப்பில் போட்டது. செம்மணி மனித புதைகுழிகளில் ஏறத்தாழ 500க்கும் மேற்பட்ட தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுப் புதைக்கப்பட்டிருக்கலாம் என்று கருதப்படும் நிலையில் ஒரு சிலரின் உடல்களே தோண்டி எடுக்கப்பட்டன. அவற்றில் சில உடல்கள் அடையாளம் காணப்பட்டன. ஆனால், அதற்கான விசாரணையும்கூட முழுமையாக நிறைவடையவில்லை. குற்றஞ்சாட்டப்பட்ட சிங்கள இனவெறி ராணுவ அதிகாரிகளுக்கும் எந்தத் தண்டனையும் வழங்கப்படவுமில்லை. அவ்வப்போது புதைகுழிகள் தோண்டப்படுவதும், விசாரணை நடைபெறுவதும், சில நாட்கள் ஊடகங்கள் அவை குறித்து பரபரப்பாகப் பேசப்பட்ட பிறகு அவ்வழக்குகளும், விசாரணைகளும் நீர்த்துப்போவதும் வழக்கமான ஒன்றாகிப்போனதுதான் தமிழினத்திற்கு நேர்ந்த பேரவலம். கொல்லப்பட்டவர்கள் யார், யார்? ஏன் கொல்லப்பட்டார்கள்? எப்போது கொல்லப்பட்டார்கள்? எப்படிக் கொல்லப்பட்டார்கள்? யாரால் கொல்லப்பட்டார்கள்? என்று எந்த விசாரணையும் இல்லாமல், எந்த நீதியும் கிடைக்காமல் கடந்த 30 ஆண்டுகளாக தமிழ் இனத்தில் பிறந்த ஒற்றைக்காரணத்திற்காகக் கொல்லப்பட்ட பல நூற்றுக்கணக்கான ஈழத்தமிழர்களின் உடல்கள், செம்மணி புதைகுழிகளில் இன்றளவும் புதைந்து கிடக்கின்றன. மரிக்கும் முன் எழுப்பிய தங்களது இறுதி மரண ஓலங்களுக்கான நீதியானது, தமிழனாய் மரணித்த தங்களின் இறுதி பார்வைக்கான நியாயமானது, புதைக்கப்பட்ட தங்கள் எலும்புகள் முழுவதுமாய் அரிக்கும் முன்பாவது கிடைத்துவிடாதா என்ற ஏக்கத்துடன் மண்ணுக்கடியில், ஈழத்தாய்மடியில் அவ்வுடல்கள் காத்து கிடக்கின்றன. செம்மணி மட்டுமல்ல ஈழத்தாயகம் முழுவதுமே சிங்கள இனவெறி ராணுவத்தாலும், இனவாத இலங்கை அரசின் பயங்கரவாதத்தாலும் படுகொலை செய்யப்பட்ட தமிழ் மக்களின் புதைகுழிகள் நிரம்பியுள்ளன. இன்றைக்கும் ஈழத்தமிழ்ச் சொந்தங்கள் தேடி அலைகின்ற காணாமல் ஆக்கப்பட்ட தங்கள் உறவினர்களான, பல்லாயிரம் தமிழர்களில் பெரும்பான்மையோர் இப்படி சிங்கள இனவெறி ராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டவர்கள்தான் என்பது ஏற்றுக்கொள்ள முடியாத துயரம் தோய்ந்த உண்மையாகும். 2009 ஆம் ஆண்டு உலக நாடுகளின் கண் முன்னே 2 இலட்சம் தமிழ் மக்கள் கொத்துக்கொத்தாக இனப்படுகொலை செய்யப்பட்டதற்கான முறையான விசாரணையையோ, உரிய நீதியையோ பெற முடியாமல், பன்னாட்டு அவைகளில் முட்டி மோதி முற்றாகச் சோர்ந்து போயுள்ளது தமிழினம். ஈழத்தாயக விடுதலைத்தான் பெறமுடியவில்லை குறைந்தபட்சம் இனப்படுகொலை செய்யப்பட்ட நீதியைக்கூடத் தமிழினத்தால் பெறமுடியவில்லை என்பதுதான் வரலாற்றுப்பெருந்துயரம். 2 இலட்சம் தமிழர்களின் இனப்படுகொலைக்கான நீதி விசாரணையையே பெற முடியாமல், அரசியல் அதிகாரம் ஏதுமற்றுத் தவித்துப்போயுள்ள தமிழினம், யாருக்கும் தெரியாமல் கொன்று புதைக்கப்பட்ட பல்லாயிரம் தமிழ் மக்களுக்கான நீதியை எப்படிப் பெறப்போகிறோம்? என்று தெரியாமல் கையறு நிலையில் தவித்து நிற்கும் நிலைதான் மற்றுமொரு பெருங்கொடுமையாகும். இந்நிலையில், கடந்த இரு வாரங்களுக்கு முன்பாக யாழ்ப்பாணம் அருகே அரியாலை – சிந்துப்பாத்தி பகுதியிலிருந்த புதைகுழியிலிருந்து சிறு குழந்தை உட்படக் கொல்லப்பட்ட 5 தமிழர் உடல்களின் எச்சங்கள் தோண்டி எடுக்கப்பட்டது உலகத் தமிழர்களிடம் மிகப்பெரும் அதிர்வினை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து ஈழத்தாயக மக்கள் முன்னெடுத்த ‘அணையா தீபம்’ தொடர்ப்போராட்டத்தின் விளைவாக, யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் அவர்கள், செம்மணி – சித்துப்பாத்தி மனித புதைகுழிகளை நேரில் கண்டு விசாரணை மேற்கொண்டது தமிழ் மக்களிடையே புதிய நம்பிக்கையைத் துளிர்விடச் செய்கிறது. செம்மணி மனித புதைகுழிகள் என்பது இனவெறி இலங்கை அரசு மேற்கொண்ட கடலளவு தமிழ் இனப்படுகொலைகளில் ஒரு சிறு துளி மட்டுமே; செம்மணி போன்ற ஏராளமான மனித புதைகுழிகள் ஈழத்தாயகம் முழுவதும் விரவிக்கிடக்கின்றன. அவற்றையெல்லாம் தோண்டி எடுத்து முழுமையாக விசாரித்தால் கடந்த அரை நூற்றாண்டு காலத்தில் எத்தனை பெரிய இனப்படுகொலையை தமிழர்கள் மீது இனவெறி இலங்கை அரசு நிகழ்த்தி வந்திருக்கிறது என்பதை உலக மானுட சமூகம் அறிய முடியும். தடைசெய்யப்பட்ட கொத்துக் குண்டுகள் போட்டு 2009 இல் 2 இலட்சம் தமிழ் மக்களைத் தம்மால் நேரடியாக இனப்படுகொலை செய்யப்பட்டதற்கான சுதந்திரமான நீதி விசாரணையையே நடைபெறவிடாமல் முற்று முழுதாக முடக்கியுள்ள இனவெறி இலங்கை அரசு, எவ்வித குற்றச்சாட்டும் இன்றி, எவ்வித விசாரணையும் இன்றி, எவ்வித காரணங்களும் இன்றி, எவ்வித ஆதாரங்களும் இன்றி, பல்வேறு காலகட்டங்களில், மறைமுகமாகக் கொன்று புதைக்கப்பட்ட பல்லாயிரம் தமிழர்கள் குறித்தும், அப்படுகொலைகளை நிகழ்த்தியவர்கள் குறித்தும் முறையான நீதி விசாரணைக்கு ஒருபோதும் அனுமதியோ, ஒத்துழைப்போ வழங்கப்போவதில்லை. ஆகவே, செம்மணி உட்பட ஈழத்தாயகத்தில் மறைக்கப்பட்டுள்ள அனைத்து மனிதப்புதைகுழிகள் குறித்து பன்னாட்டு சுதந்திர விசாரணை நடத்தத் தேவையான பொறிமுறையை உருவாக்கி, புதைகுழிகளை அகழாய்வு செய்து, இனப்படுகொலை குறித்த விசாரணையை அறிவியல் பூர்வமாக மேற்கொள்வதற்கு உரிய நடவடிக்கையை விரைந்து எடுக்க வேண்டுமென்று ஐ.நா.அவையின் மனித உரிமை ஆணையத்தை வலியுறுத்துகிறேன். அதன் மூலம் மட்டுமே இலங்கை அரசின் சிங்கள இனவெறி எந்த அளவிற்கு உச்சத்தில் இருந்துள்ளது என்பதையும், 2009 ஆம் ஆண்டிற்கு முன்பே தொடர்ச்சியாக, மிகக்கொடூரமாக ஈவு இரக்கமின்றி தமிழர்கள் இலங்கை ஆட்சியாளர்களால் இனப்படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்பதையும் உலக நாடுகள் அறிந்துகொள்வதற்கான மறுக்க முடியாத வரலாற்றுச் சான்றாக அவை அமையும். தமிழர்களுக்கான தனித்த இறையாண்மை கொண்ட தமிழீழத் தாயகம் அமைவது ஒன்றே நிலைத்த, சரியான தீர்வாக இருக்க முடியும் என்பதை உலகம் உணர்ந்து கொள்ளவும், ஆதரவளிக்கவும் செம்மணி புதைகுழிகள் குறித்த விசாரணை மிக முக்கிய தொடக்கப் புள்ளியாக அமையும் என்பதையும் உறுதிபடத் தெரிவித்துக்கொள்கிறேன். மனித புதைகுழிகள் குறித்து சுதந்திரமான பன்னாட்டு விசாரணை நடத்தக்கோரி ஈழத்தமிழ்ச்சொந்தங்கள் முன்னெடுக்கும் அறப்போராட்டம் வெல்லட்டும்! ஈழத்தாயகத்தில் நடைபெறும் நீதிக்கான தொடர் போராட்டங்களுக்கு ஆதரவாக உலகெங்கும் வாழும் தமிழர்கள் அனைவரும் உணர்வுப்பூர்வமாக இணைந்து நிற்கின்றோம்! எங்களைக் கொன்று மண்ணில் புதைத்தாய்! – எங்கள் மண்ணைக் கொண்டுபோய் எங்கே புதைப்பாய்? இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/218686
1 month 1 week ago
இலங்கை பெரிய வெற்றி........................
1 month 1 week ago
இல்லை. பதவிமோகத்தில் எதுவும் புரியவில்லை. அன்று முன்னாள் பிரித்தானியப்பிரதமர் பல தடைகளை தாண்டி தமிழ் மக்களின் துயரங்களை கேட்க சொந்த நிலம் இருந்தும் அகதிகளாக வெள்ளத்திலும் ஒழுகும் குடிலிலும் இருந்த மக்களை சந்திக்க வந்தார். அப்பொழுது அந்த மக்களின் பிரதிநிதிகளாக நின்று பேச வேண்டியவர்கள் அங்கு வரவில்லையே, எங்கே ஓடி மறைந்தார்கள்? ஏன்? அப்போது இவர்களின் பொறுப்பு எங்கே போனது? கட்சி எங்கே போனது? இத்தனை ஆயிரம் மக்கள் கொல்லப்பட்டார்களே, அப்போது அந்த மக்களோடு இவர்கள் இல்லாமல் எங்கே போய் ஒளிந்தார்கள்? அப்போ இவர்களுக்கு பொறுப்பு இருக்கவில்லையா அந்த மக்கள் மட்டில்? இந்தபுதைகுழியில் கொலைகாரன் டக்கிளஸால் கொல்லப்பட்டவர்களின் உடல்களும் இருக்க வாய்ப்புண்டு. மக்களை கொன்ற கொலைகாரர்களோடு பதவிக்காக சமரசம், மக்களோடு பொறுப்பு தெரிவிக்கப்போனாராம். பதவிக்காக எந்தப்பேயோடும் கூட்டுசேர்வார்கள். இவர்களாலேயே மக்களுக்கு இந்த நிற்கதி. நாமே தமிழரின் ஏகோபித்த கட்சி, ஆதிக்கட்சி என்று சொன்னவர்கள், இன்று பதவிக்காக கொலைகாரரிடம் இறங்கிபோகிறார்கள். யாருக்காக? தங்களை அழித்தவர்கள் தங்களுக்கு வேண்டாம் என ஒதுக்கும் போது, இவர்களுக்கு என்ன தேவையிருக்கிறது அவர்களுடன் கூட்டுச்சேர? இப்போ வீட்டில் குடியிருப்பது கொலை கொள்ளை செய்பவர்களும், மக்களை வஞ்சிப்பவர்களுமே. அடுத்த தேர்தலில் தமிழரசுக்கட்சி என்று சொல்லிக்கொள்ள சந்தர்ப்பமே இருக்காது, எல்லோரையும் வெளியேற்றிவிடுவார்கள்.
Checked
Fri, 08/08/2025 - 06:40
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed