புதிய பதிவுகள்2

மன்னாரில் பொலிஸ் காவலில் நபரொருவர் உயிரிழப்பு

1 month ago
மற்றொரு பொலிஸ் அராஜகத்தால்… தமிழன் ஒருவன் அடித்துக் கொலை. நாட்டில் எத்தனையோ சிங்கள போதைப் பொருள் உற்பத்தியாளர்களும், வியாபாரிகளும், துப்பாக்கிதாரிகளும், கொலைகாரர்களும் கைது செய்யப்பட்டு… நல்ல முறையில் விசாரணை நடைபெற்றுக் கொண்டு இருக்கும் போது…. அங்கு நிகழாத காவல் நிலைய கொலை… தமிழ்ப்பகுதியில் தமிழனை விசாரிக்கும் போது மட்டும் நிகழ்வது…. தமிழனை கேட்க நாதி இல்லாத அடிமை இனம் என்று நினைப்பதால் ஏற்படும் சிங்கள இனவெறி அன்றி வேறு காரணங்கள் இருக்கவே முடியாது. எமது சட்டத்தரணி அரசியல்வாதிகளுக்கு…. தமக்குள் புடுங்குப்பட நீதிமன்றம் போவார்களே தவிர, இதுகளுக்கு குரல் கொடுக்க நேரமும் , மனமும் இல்லை.

காசாவில் குண்டுவெடிப்பை உடனடியாக நிறுத்துமாறு டிரம்ப் இஸ்ரேலுக்கு உத்தரவிட்டார்

1 month ago
காசாவில் குண்டுவீச்சை உடனடியாக நிறுத்த இஸ்ரேலுக்கு டிரம்ப் உத்தரவு காசாவில் போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் முன்மொழிந்த அமைதித் திட்டத்திற்கு ஹமாஸ் சாதகமாக பதிலளித்துள்ளது. இதன் அடிப்படையில், நீடித்த அமைதிக்கான பாதையில் நம்பிக்கை தோன்றியுள்ளதாகக் கூறி, டிரம்ப் இஸ்ரேலுக்கு காசாவில் குண்டுவீச்சை உடனடியாக நிறுத்த உத்தரவிட்டுள்ளார். கடந்த திங்களன்று அமெரிக்கா விரைந்த இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு ஜனாதிபதி டிரம்ப் முன்மொழிந்த 20 அம்ச காசா அமைதி திட்டத்தை ஏற்றுக்கொண்டார். இதன் பின் ஹமாஸ் இதில் விரைந்து முடிவெடுக்க வரும் ஞாயிற்றுக்கிழமை வரை டிரம்ப் காலக்கெடு விதித்தார். இந்நிலையில் இதுதொடர்பாக ஆலோசித்து வந்த ஹமாஸ் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் இஸ்ரேல் பிடித்து வைத்துள்ள பாலஸ்தீன கைதிகளுக்கு ஈடாக உயிருடன் இருக்கும் இஸ்ரேலிய பணயக்கைதிகளையும், இறந்த கைதிகளின் உடல்களையும் திரும்ப ஒப்படைக்க சம்மதிப்பதாக தெரிவித்துள்ளது. மேலும் ஒப்பந்தத்தில் உறுதியளிக்கப்பட்டபடி, ஒருமித்த கருத்துடன் உருவாக்கப்பட்ட ஒரு சுயாதீன தொழில்நுட்ப வல்லுநர் குழுவிடம் காசா பகுதியை நிர்வகிக்கும் பொறுப்புகளை ஒப்படைக்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. காசாவில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கும், கைதிகளை பரிமாறிக்கொள்வதற்கும், உடனடி உதவி வழங்குவதற்கும், அரபு, இஸ்லாமிய நாடுகள் மற்றும் டிரம்பின் முயற்சிகளைப் பாராட்டுவதாக ஹமாஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. இருப்பினும் திட்டத்தின் பிற விபரங்களை விவாதிக்க மத்தியஸ்தர்கள் மூலம் பேச்சுவார்த்தை நடத்த விரும்புவதாக ஹமாஸ் கூறியுள்ளது. டிரம்பின் 20 அம்ச அமைதி திட்டத்தில் உடனடி போர்நிறுத்தம், கைதிகள் பரிமாற்றம், காசாவிலிருந்து இஸ்ரேலியப் படைகளை படிப்படியாக திரும்பப் பெறுதல், ஹமாஸ் தங்கள் ஆயுதங்களை கைவிட்டு அரசியலில் இருந்து வெளியேறுவது மற்றும் சர்வதேச மேற்பார்வையின் கீழ் ஒரு இடைக்கால அரசாங்கத்தை நிறுவுதல் ஆகியவை அடங்கும். ஆயுதத்தை கைவிடுவது உள்ளிட்ட அம்சங்களை ஹமாஸ் ஏற்க தயங்குவதாக கூறப்படுகிறது. https://adaderanatamil.lk/news/cmgbkklj600tdo29nsk902bng

6 குழந்தைகளின் உயிர்களை பலியெடுத்த இருமல் மருந்து!

1 month ago
03 Oct, 2025 | 05:17 PM இந்தியாவின் மத்தியப் பிரதேசத்தில் 'கோல்ட்ரிப்' (Coldrip) எனப்படும் இருமல் மருந்தை உட்கொண்டதனால் 6 குழந்தைகள் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து, தமிழகத்தில் இந்த மருந்து விற்பனைக்கும் விநியோகத்துக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தற்காலிகத் தடை உத்தரவை தமிழக மருந்து கட்டுப்பாட்டுத் துறை பிறப்பித்துள்ளது. மத்தியப் பிரதேச மாநிலம் சிந்த்வாரா மாவட்டத்தில், கடந்த 15 நாட்களுக்குள் 1 முதல் 7 வயதுக்குட்பட்ட 6 குழந்தைகள் அடுத்தடுத்து சந்தேகத்துக்குரிய வகையில் உயிரிழந்தன. திடீரென ஏற்பட்ட சிறுநீரகச் செயலிழப்பு அதற்குக் காரணம் என்பது தெரியவந்தது. உயிரிழந்த அந்தக் குழந்தைகள் அனைவரும் 'கோல்ட் ரிப்' உள்ளிட்ட இருமல் மருந்துகளை உட்கொண்டிருந்தமை விசாரணையில் கண்டறியப்பட்டது. விசாரணையில், அந்தக் குழந்தைகளின் சிறுநீரகத் திசுவில் டை எத்திலீன் கிளைகால் (Diethylene Glycol) எனப்படும் இரசாயன வேதிப்பொருள் இருந்தது ஆய்வறிக்கையில் உறுதிப்படுத்தப்பட்டது. பெயிண்ட், மை போன்றவற்றைத் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் இந்த இரசாயனம், சம்பந்தப்பட்ட இருமல் மருந்துகளில் கலந்திருக்கலாம் எனச் சந்தேகிக்கப்பட்டது. இதையடுத்து, தமிழக மருந்து கட்டுப்பாட்டுத் துறை துணை இயக்குநர் தலைமையிலான குழுவினர், இந்த மருந்தை உற்பத்தி செய்யும் நிறுவனத்தில் கடந்த இரண்டு நாட்களாக ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின் முடிவுகள் வெளியாகும் வரை, பொதுமக்கள் நலனைக் கருத்தில் கொண்டு, தமிழகம் முழுவதும் ‘கோல்ட் ரிப்’ மருந்து விற்பனையையும் விநியோகத்தையும் நிறுத்தி வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மத்தியப் பிரதேச துயரச் சம்பவத்தின் காரணமாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத் தமிழகத்தில் இந்தத் தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/226821

மன்னாரில் பொலிஸ் காவலில் நபரொருவர் உயிரிழப்பு

1 month ago
மன்னார் பேசாலை பொலிஸ் பிரிவில் போதைப்பொருள் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு, பேசாலை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்ட 34 வயது நபர், இன்று (03) காலை தடுப்புக்காவலில் இறந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். உயிரிழந்தவர், வவுனியா கூமாங்குளத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் கபிலன் (34) என அடையாளம் காணப்பட்டுள்ளார். சம்பவம் குறித்து தெரியவருகையில், பேசாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கட்டாஸ்பத்திரி பகுதியில் நேற்று (02) மாலை, போதைப்பொருள் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் ராஜேந்திரன் கபிலன் என்ற நபர் கைது செய்யப்பட்டார். பொலிஸார் அவரைத் துரத்திப் பிடித்த நிலையில், அவருடன் இருந்த மற்றொரு நபர் தப்பி ஓடியதாகத் தெரிவிக்கப்படுகிறது. கைது செய்யப்பட்ட கபிலனை பொலிஸார் பேசாலை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று, தடுப்புக்காவலில் வைத்து விசாரணைகளை மேற்கொண்டனர். பின்னர், பொலிஸ் நிலையத்தின் கூண்டில் தடுத்து வைக்கப்பட்ட நிலையில், இன்று (03) காலை அவர் உயிரிழந்த நிலையில் காணப்பட்டார். இன்று காலை 6:30 மணியளவில், அவரது சடலம் பேசாலை பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. மதியம் 12 மணியளவில், மன்னார் நீதிமன்ற பதில் நீதிவான் ஜெபநேசன் லோகு, பேசாலை பிரதேச வைத்தியசாலைக்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டார். அதன் பின், அவர் பேசாலை பொலிஸ் நிலையத்திற்கும் சென்று, பொலிஸ் நிலைய சிறைக் கூடத்தைப் பார்வையிட்டு விசாரணைகளைத் தொடர்ந்தார். இந்நிலையில், உயிரிழந்த நபரின் தாய், இன்று (03) காலை பேசாலை பிரதேச வைத்தியசாலைக்கு வந்து, பொலிஸார் தனது மகனை அடித்துக் கொன்றதாகக் குற்றம் சாட்டியுள்ளார். -மன்னார் நிருபர் லெம்பட்- https://adaderanatamil.lk/news/cmgb3c26e00tco29nzci5q8wh

11 ஆயிரம் அடி உயரத்திலிருந்து விழுந்த இளைஞன் : உயிர் தப்பிய அதிசயம்!

1 month ago
03 Oct, 2025 | 12:43 PM அமெரிக்காவின் நெவடா மாகாணத்தில் உள்ள லோஸ் வேகாஸில் பாராசூட் சாகச விளையாட்டில் ஈடுபட்டிருந்த 25 வயதுடைய இளைஞர், பாராசூட் திடீரென செயலிழந்ததால் சுமார் 11 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்தார். அதிர்ஷ்டவசமாக அவர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார். சாகச விளையாட்டுகளுக்குப் பிரபலமான லோஸ் வேகாஸ் நகரில், மிட்செல் டீக்கின் (வயது 25) என்ற இளைஞன் பாராசூட் சாகசத்தில் ஈடுபட்டிருந்தார். அவருடன் அவரது பயிற்றுவிப்பாளரும் சென்றிருந்தார். அவர்கள் ஆயிரக்கணக்கான அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தபோது, துரதிர்ஷ்டவசமாக பாராசூட் திடீரெனச் செயலிழந்தது. இதன் காரணமாக, மிட்செல் டீக்கின் மற்றும் அவரது பயிற்றுவிப்பாளர் இருவரும் சுமார் 11 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து கீழே விழும் அபாயகரமான சூழ்நிலை ஏற்பட்டது. இந்த விபத்தில், இளைஞரான மிட்செல் டீக்கின் அதிர்ஷ்டவசமாக சிறு காயங்களுடன் உயிர் தப்பினார். இருப்பினும், அவருடன் சென்ற பயிற்றுவிப்பாளருக்கு படுகாயம் ஏற்பட்டது. விபத்து குறித்த தகவல் அறிந்ததும், மீட்புக் குழுவினர் விரைந்து சென்று, கீழே விழுந்த இருவரையும் விமானம் மூலம் மீட்டனர். உடனடியாக அவர்கள் இருவரும் அருகிலுள்ள வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். பாராசூட் செயலிழந்ததற்கான காரணம் குறித்து லோஸ் வேகாஸ் பொலிஸார் மற்றும் சாகச விளையாட்டுத் துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். https://www.virakesari.lk/article/226772

காசாவில் குண்டுவெடிப்பை உடனடியாக நிறுத்துமாறு டிரம்ப் இஸ்ரேலுக்கு உத்தரவிட்டார்

1 month ago
ட்ரம்பின் உத்தரவை…. இஸ்ரேல் கணக்கில் எடுக்குமா? அப்படி எடுத்து… இஸ்ரேல் போரை நிறுத்தினால்… !!! ? எப்படியும் இந்த ஆண்டிற்கான நோபல் பரிசை வாங்கியே தீருவேன் என்று பல வழிகளிலும் “அடாத்தாக அடம் பிடித்துக் கொண்டு நிற்கும் ட்றம்பிற்கு” நோபல் பரிசு கிடைக்க வாய்ப்புகள்!? உள்ளதாகவே தெரிகின்றது. அடுத்த மாதம் நவம்பரில்…. நோபல் பரிசு அறிவிப்பற்கான நேரம் நெருங்கிக் கொண்டுள்ளது. அது…. ட்றம்பிற்கு கிடைக்காவிட்டால், நோபல் பரிசு அறிவிக்கும் குழுவிற்கு அட்டமத்து சனி ஆரம்பம்தான். 😂 ட்றம்பிற்கு சமாதானத்துக்குரிய, நோபல் பரிசு கொடுத்தால்…. நோபல் பரிசுக்கு அவமானம். கொடுக்காமல் விட்டால்…. ட்றம்பிற்கு அவமானம். எப்படிப் பார்த்தாலும்… இன்னும் ஒரு மாதத்தில் நல்ல கூத்து ஒன்று இருக்கின்றது. 🤣

இனப்பிரச்சினை எனும் பதத்தை மாற்றும்படி இலங்கை கோரியது - அதற்கமையவே மோதல்கள் எனும் சொல் சேர்க்கப்பட்டதாக பிரிட்டன் விளக்கம்

1 month ago
குற்றவாளியின் கோரிக்கைகள் மதிப்பளிக்கப்படுகின்றன, ஏற்றுக்கொள்ளப்படுகின்றன, நிறைவேற்றப்படுகின்றன. ஆனால் பாதிக்கப்பட்ட மக்களின் அவலங்கள், கோரிக்கைகள் கவனிப்பாரின்றி இழுத்தடிக்கப்படுகின்றன. சொல்லில் மாற்றமேயொழிய பொருளில் மாற்றமில்லையென்றால்; ஏன் அதை மாற்ற வேண்டுமென்று கோரிக்கை வைக்கிறார்கள், அதை ஏற்றுக்கொள்கிறார்கள்? ஏக்கிய ராஜ்ய ஏமாற்றுக்கதைதான். எங்கள் விடுதலையை நாங்களே போராடி பெற்றுக்கொள்ள விட்டிருக்க வேண்டும். இல்லையேல் தாம் அதை பெற்றுத்தந்திருக்க வேண்டும். தங்கள் தேவைக்கு, பொழுதுபோக்கிற்கு ஒரு சபை, இது கலைக்கப்படவேண்டும். இது பாதிக்கப்பட்ட மக்களை ஏமாற்றுகிறது. இலங்கையில் நடைபெற்றது இனப்படுகொலை என்று இனி கனடா சொல்ல முடியாது என இலங்கை எதிர்பார்க்கிறது. தமிழ் இனம் என்கிற ஒரே காரணத்திற்காகவே, இவ்வளவு அவலங்களை நம் இனம் சந்தித்தது. அதை மாற்றியமைக்க இவர்களுக்கு என்ன அதிகாரமிருக்கிறது? இதற்கு எதிர்ப்பு தெரிவிக்க நம் பக்கம் யாருமில்லை, சந்திப்புகள் இல்லை, விளக்கம் அளிக்க ஒருவருமில்லை. இலங்கைக்கு கால அவகாசம் வேண்டிக்கொடுக்க பலர் நம்பக்கமேயுண்டு. இந்த சொல் இலங்கைக்கு அச்சத்தை ஏற்படுத்துகிறது என்பது மட்டும் உண்மை. இதை விட கொடூரமான சொல் பயன்படுத்தப்படுவதுதான் பொருத்தமானது. காரணம் ஒரு இனத்தை அழித்து, மவுனமாக்கி விட்டு எதுவுமே நடக்காத மாதிரி, விடுதலை வேண்டியவர்களை மட்டும் குறி வைத்து தடைகளை ஏற்படுத்துவதும் குற்றம் சாட்டுவதும் எந்த வகையில் நிஞாயமானது? இவர்கள் எல்லாம் எங்களுக்கு நிவாரணம், நிஞாயம் பெற்றுத்தரப்போகிறார்களாம் நம்புவோம். இனி இனிப்பிரச்சனை ஒன்று இலங்கையில் நடைபெறவில்லை, பொருளாதார பிரச்சனை மட்டுமேயுண்டு, அதற்கான அபிவிருத்தி ஏர்படுத்தப்படுமென அறிவிக்கப்படும். ஐ. நா. இலங்கை பிரச்சனை பற்றி இனி விவாதிக்கப்போவதில்லை. எது நடந்ததோ அதுவே தொடர்ந்தும் நடைபெறும். போராட யாரும் இல்லை. இது தான் சர்வதேசத்தின் நடுவு நிலை. இதைத்தான் நம் தலைவர்கள் மௌனமாக இருந்து சேர்ந்தியங்கி சாதித்தது. இனிமேல் இவர்களுக்கு அரசியல், பதவி, பணம் எதுவுமிருக்கப்போவதில்லை. அப்பப்போ குரல் எழுப்பி விட்டு போக வேண்டியதுதான்! இது ஒரு சர்வாதிகார ஆட்சியாக மாறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. நல்லாட்சி மஹிந்தவை காப்பாற்றியது, இந்த ஆட்சி இனப்பிரச்சனை நடைபெறவேயில்லை என சாதிக்கும்.

காசாவில் குண்டுவெடிப்பை உடனடியாக நிறுத்துமாறு டிரம்ப் இஸ்ரேலுக்கு உத்தரவிட்டார்

1 month ago
ஹமாஸ் அனைத்து பணயக்கைதிகளையும் விடுவிக்க ஒப்புக்கொண்டது மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் அமைதித் திட்டத்திற்கு ஆதரவளித்தது. நீடித்த அமைதிக்கான பாதையில் நம்பிக்கையை வெளிப்படுத்தி, காசாவில் குண்டுவெடிப்பை உடனடியாக நிறுத்துமாறு டிரம்ப் இஸ்ரேலுக்கு உத்தரவிட்டார் - வெளிநாட்டு ஊடகங்கள்- adaderana.lk BBC NewsLive updates: Trump tells Israel to stop bombing Gaza as...The US president says he believes Hamas is "ready for a lasting peace", as the group seeks further negotiations on his peace proposal.

கரூர் துயரம் : தமிழக அரசுக்கு முக்கிய வேண்டுகோள் வைத்த சமூக செயற்பாட்டாளர்கள்.

1 month ago
அட… பந்தயம் எண்டது வரேல்ல என சொல்லிவிட்டு போனவர் விசுகு அண்ணா. பந்தயமா எண்டு கேட்ட திரியில் படுத்த பாய்கும் சொல்லாமல்…..எஸ் ஆன அண்ணைக்கு தன்னை சொல்லேல்ல எண்டு கோவமாக்கும்🤣

இனப்பிரச்சினை எனும் பதத்தை மாற்றும்படி இலங்கை கோரியது - அதற்கமையவே மோதல்கள் எனும் சொல் சேர்க்கப்பட்டதாக பிரிட்டன் விளக்கம்

1 month ago
எல்லாம் நமது தமிழ் அரசியல்வாதிகளின் நீண்டகால குறிக்கோள் அற்ற சிந்தனைகளாலும், அவர்களின் சுயநல அரசியல் நகர்வுகளாலும், தமது இனத்தின் நலன் கருதி ஒற்றுமையாக தமது குரலை சர்வதேசத்திற்கு ஆணித்தரமாக சொல்ல முன்வராமையாலும் ஏற்பட்ட விபரீதம் இது. இன்னும்… இந்தியா தீர்வு பெற்றுத் தரும் என்று, கிணத்துத் தவளை மாதிரி நம்பிக் கொண்டு இருக்கும் மர மண்டை அரசியல்வாதிகளை வைத்துக் கொண்டு… தமிழ் இனத்தின் விடிவு என்பது எட்டாக்கனிதான். இத்துப்போன இவர்களை வைத்துக் கொண்டு இனி பிரயோசனம் இல்லை. ஈழத் தமிழ் இனம் மாற்றுவழிகளை யோசிக்க வேண்டும்.

இனப்பிரச்சினை எனும் பதத்தை மாற்றும்படி இலங்கை கோரியது - அதற்கமையவே மோதல்கள் எனும் சொல் சேர்க்கப்பட்டதாக பிரிட்டன் விளக்கம்

1 month ago
அம்மன் சல்லிக்கு பயனில்லை. முற்றாக நீர்த்துவிட்டது மே 14, 2009 சிங்கள அரசாங்கத்திற்கு ஐநா பாராட்டு விழா வைத்தது: புலிகளை தூற்றியது. அன்றே நாம் தூக்கியெறியப்பட்டுவிட்டோம்!

விமர்சனம் : இட்லி கடை!

1 month ago
அப்படி என்ன பெரிய தொழில் செய்து… இவ்வளவு பணத்தை, இந்த இருபது வயதில் இன்பநிதி சம்பாதித்தார் என அறிய ஆவலாக உள்ளது. அது தெரிந்தால்… நாமும் இந்தக் குளிருக்குள் வருடக் கணக்கில் நின்று, கஸ்ரப்படுவதிலும் பார்க்க ஊருக்குச் சென்று செட்டில் ஆகி, இன்பநிதியைப் போல்… இன்பமாக வாழலாம். 😁 வீட்டில்… தங்க முட்டை இடும் வாத்து வளர்க்கின்றார்களோ.. தெரியவில்லை. 😂

வெளிநாட்டவருக்கு இலங்கையில் வதிவிட விசா!

1 month ago
நம்மவருக்கு இலங்கையின் பிறப்பு அத்தாட்சி பத்திரம் இருந்தால் இரட்டை குடியுரிமை எடுப்பதில் பெரும் சிரமம் இருக்காது என கருதுகின்றேன். அது இல்லாத பட்சத்தில்…. ஒரு லட்சம் (100,000) அமெரிக்க டொலரை கட்டினால்தான் 5 வருட வதிவிட விசா கிடைக்கும். பத்து வருட வதிவிட விசாவிற்கு இரண்டு லட்சம் அமெரிக்க டொலர் கட்ட வேண்டுமாம். குறிப்பிட்ட பணத்திற்கு.. மட்டுப் படுத்தப் பட்ட வருடங்களிலேயே மேற்படி விசா வழங்கப் படுவதால் நம்மவர் ஆர்வம் காட்டுவார்களோ தெரியவில்லை.

பிளாஸ்டிக், குழந்தைகளுக்கு பாலூட்டும் போத்தல்கள் குறித்து விசேட வர்த்தமானி வெளியீடு

1 month ago
குழந்தைகளுக்கு பாலூட்டும் போத்தல் அங்கீகாரம் பெற்றதா என சாதாரண மக்கள் அறிந்துகொள்வது எப்படி? பரிசு பொருட்களாக பாலூட்டும் போத்தல்களை குழந்தைகளுக்கு வழங்குகின்றார்கள். பரிசாக கிடைத்த அங்கீகாரம் பெறாத பாலூட்டும் போத்தலை சாதாரண மக்களால் கண்டுபிடிக்க முடியுமா?

கொழும்பு பேர வாவியிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு விமான சேவை ஆரம்பம்

1 month ago
இனிமேல் பாதாள உலக கோஸ்டியினர் கடத்தல் வேலை செய்ய தேவையில்லை... பகிரங்கமாக வியாபாரம் என்ற வகையில் பணம் சம்பாதிக்கலாம்.. யாழ்ப்பாணம் அபிவிருத்தி அடைந்து விடும் என்ற நீண்ட நாள் பயம் இருக்கு சில அதிகாரிகளுக்கு..😀

ரணிலும், மஹிந்தவும் நம்பர் வன் திருடர்கள் - அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவிப்பு

1 month ago
பேரதானிய,மொரட்டுவ,கொழும்பு பல்கலைகழகத்தில் படிக்கும் பொழுது அடிவாங்கி சிவப்பு சிந்தனையுடன் ஒடிவந்த பலர் இப்ப கூவி கொண்டு திரியினம் ... உவையல் யார் அரியனையில் ஏறினாலும் தொப்பி மாற்றி போடுவினம் ...கேட்டா தீவாராம் தாங்கள் என புலம்பல் வேற...

இனப்பிரச்சினை எனும் பதத்தை மாற்றும்படி இலங்கை கோரியது - அதற்கமையவே மோதல்கள் எனும் சொல் சேர்க்கப்பட்டதாக பிரிட்டன் விளக்கம்

1 month ago
நம்ம சிறீதரன் ஜெனிவாவில் முழங்கியதெல்லாம் பொய்யா கோபாலு
Checked
Thu, 11/06/2025 - 02:55
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed