1 month 1 week ago
பெரிய அளவில் எனக்கு அமெரிக்கா அரசியல் பற்றி தெரியாது , அமெரிக்கா விளையாட்டுக்களை பற்றிக் கேட்டால் தயங்காம பதில் சொல்லுவேன் , நீங்கள் எழுதினதை வாசிக்க இந்தியா அளவில் பிஜேப்பி செய்வதை தான் ரம்ப்பும் செய்கிறார் போல் தெரியுது.......................
1 month 1 week ago
விளையாட்டை பர்க்க 5 நாள் விளையாட்டு மூன்று நாளில் முடிந்து விடும் போல் இருக்கு.........................அவுஸ்ரேலியா மட்டையடி வீரர்கள் நிலைத்து நின்று ரனா அடிக்கினம் இல்லை...............வெஸ்சின்டீஸ் இந்த மைச்சை வெல்லக் கூடும்....................
1 month 1 week ago
1 month 1 week ago
மேற்குலக நாடு ஒன்றில் செற்றிலாகிவிட வேண்டும் என்பது கனவு தனிப்பட்ட உயிர் விருப்பு அது நிறைவேறி அங்கே பாதுகாப்பான வாழ்வு அமைத்து கொண்ட பின்பு சும்மா ஜாலிக்காக சர்வாதிகளுக்கு ஆதரவு முல்லாக்கள் ஆதரவு எழுத வேண்டியது. முஸ்லிம்களின் குரான் அவர்களுக்கு யூத வெறுப்பு வெறியை ஊட்டி வருகின்றது இலங்கையில் இனவாத முஸ்லிம்களுடன் சிறிதும் பழக்கம் அற்றவர்கள் அவர்களுடன் வாழ்ந்திருக்காதவர்களே இப்படியான புரளிகளை ஒரு போதும் நம்ப தயார் இல்லாத போது இலங்கையில் பல காலம் வாழ்ந்த இவர்கள் எப்படி புரளியை நம்பினார்களாம்
1 month 1 week ago
1 month 1 week ago
மன உளைசல் , கவலைகளில் இருக்கும் போது கைபேசியில் இருந்து இப்படியான BGM இசைய கேட்டால் மனதில் மகிழ்ச்சி வரும்👍🥰❤️😍 , இசை தான் நல்ல மருந்து......................
1 month 1 week ago
மூன்று மாதங்களுக்குப் பிறகு காசா மக்களுக்கு உணவு உட்பட அத்தியாவசிய பொருட்கள் வினியோகம் செய்ய எல்லையை திறந்து உள்ளது இஸ்ரேல் ஈரானுக்கு கிடைத்த மிகப்பெரிய 👍....................
1 month 1 week ago
தற்போதைய முதல்வர் சுயேட்சை வேட்பாளராக களமிறங்க ஆயத்தமாகிறார். ரம்பும் இவருக்கு பூரண ஆதரவு கொடுக்கலாம். இதன் மூலம் ஜனநாயகட்சியை பிளவுபடுத்தி குடியரசு வேட்பாளரை வெல்ல வைக்கலாம். ஏற்கனவே ஒரு இந்தியன் முஸ்லீம் எப்படி நியூயோர்க்கை ஆளலாம் என்று தொடங்கிவிட்டார்கள். தற்போதய முதல்வர் ஏற்கனவே ரம்பிடம் சரணடைந்துள்ளார்.
1 month 1 week ago
பெண் பூனைக்கும் உங்களைத் தெரிந்திருக்கிறது
1 month 1 week ago
நீங்கள் சில நாட்களுக்கு முன் பதிந்த, “பால் வண்ணம் பருவம் கண்டு…”, மற்றும் தற்போது பதிந்துள்ள “மூடித் திறந்த இமை இரண்டும்…” ஆகிய இரண்டு பாடல்களையும், கம்பராமாயணத்தைப் படித்தவுடன் கண்ணதாசன் எழுதியிருப்பார் போல் தெரிகிறது. கம்பன், சீதையின் இடையை வர்ணிப்பதை வாசித்த கண்ணதாசன், சரோஜாதேவிக்காக இப்படிச் சொல்லியிருப்பார்: “அன்னக் கொடி நடை முன்னும் பின்னும் ஐயோ ஐயோ என்றது வண்ணக் கொடியிடை கண்ணில் விழுந்து மெய்யோ பொய்யோ என்றது…” சரோஜாதேவியை விட்டுவிடுங்கள். அன்னை இல்லம் படத்துக்காக கடற்கரையில், பெருத்த இடையோடு தேவிகா நடந்து செல்ல, அவர் பின்னால் நடந்து வரும் சிவாஜி கணேசன், இவ்வாறு பாடிக் கொண்டு வருவார்: “நடையா இது நடையா ஒரு நாடகமன்றோ நடக்குது இடையா இது இடையா அது இல்லாதது போல் இருக்குது…” இங்கு கவிஞர் பொய் சொல்லியிருக்கிறார்!
1 month 1 week ago
பார்க்க தெரியவில்லையே யார் அவவோடை தேத்தண்ணி குடிக்கிறதெண்டு...😁 இந்நிகழ்வு, கனடாவில் வசிக்கும் சமயத் தலைவர்களுக்கும் இலங்கை சமூகத்தினருக்கும் பிரதமருடன் கலந்துரையாடுவதற்கான ஒரு அரிய வாய்ப்பாக அமைந்தது.
1 month 1 week ago
கிளிநொச்சியில் தடம் புரண்ட எரிபொருள் தாங்கி.
1 month 1 week ago
Highlights | West Indies v Australia | 1st Test Day 1 14 Wickets Fall On Day 1 Watch highlights of the 1st Test Day 1 between West Indies and Australia at Kensington Oval, Bridgetown
1 month 1 week ago
பெத்தும் நிஸ்ஸன்க 146 ஆ.இ., தினேஷ் சந்திமால் 93; பலமான நிலையில் இலங்கை Published By: VISHNU 26 JUN, 2025 | 07:26 PM (எஸ்.எஸ்.சி. அரங்கிலிருந்து நெவில் அன்தனி) பங்களாதேஷுக்கு எதிராக கொழும்பு எஸ்.எஸ்.சி. மைதானத்தில் நடைபெற்றுவரும் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இரண்டாம் நாளான இன்று வியாழக்கிழமை, பெத்தும் நிஸ்ஸன் குவித்த ஆட்டம் இழக்காத அபார சதம், தினேஷ் சந்திமால் குவித்த அரைச் சதம் ஆகியவற்றின் உதவியுடன் இலங்கை பலமான நிலையை அடைந்துள்ளது. பங்களாதேஷை முதல் இன்னிங்ஸில் இன்று காலை 247 ஓட்டங்களுக்கு கட்டுப்படுத்திய இலங்கை, இரண்டாம் நாள் ஆட்டம் போதிய வெளிச்சமின்மை காரணமாக நிறுத்தப்பட்டபோது 2 விக்கெட்களை இழந்து 290 ஓட்டங்களைப் பெற்று 43 ஓட்டங்களால் முன்னிலையில் இருக்கின்றது. தனது 18ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் பெத்தும் நிஸ்ஸன்க, தான் எதிர்கொண்ட முதலாவது பந்திலிருந்து இரண்டாம் நாள் ஆட்டம் முடியும் வரை மிகுந்த தன்னம்பிக்கையுடனும் பொறுப்புணர்வுடனும் துடுப்பெடுத்தாடி தனது 4ஆவது சதத்தைக் குவித்தார். பங்களாதேஷுக்கு எதிராக காலியில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியிலும் பெத்தும் நிஸ்ஸன்க சதம் குவித்து அசத்தியிருந்தார். இலங்கையின் முன்வரிசை வீரர்கள் மூவரும் ஆடுகளத்தின் தன்மைக்கு ஏற்ப தங்களை தயார்படுத்திக்கொண்டு மிகத் திறமையாக துடுப்பெடுத்தாடியது அணிக்கு பலம் சேர்ப்பதாக அமைந்தது. குறிப்பாக மிகத் திறமையாக துடுப்பெடுத்தாடிய பெத்தும் நிஸ்ஸன்க ஆரம்ப விக்கெட்டில் லஹிரு உதாரவுடன் 88 ஓட்டங்களையும் 2ஆவது விக்கெட்டில் தினேஷ் சந்திமாலுடன் மேலும் 194 ஓட்டங்களையும் பகிர்ந்து அணியை பலமான நிலையில் இட்டார். இரண்டாம் நாள் ஆட்டத்தின் கடைசிக் கட்டத்தில் தினேஷ் சந்திமால் அநாவசியமாக ரிவேர்ஸ் சுவீப் ஷொட் அடிக்க முயற்சித்து துரதிர்ஷ்டவசமாக ஆட்டம் இழந்து சதத்தை 7 ஓட்டங்களால் தவறவிட்டார். அவர் 153 பந்துகளை எதிர்கொண்டு 10 பவுண்டறிகள், ஒரு சிக்ஸுடன் 93 ஓட்டங்களைப் பெற்றார். பெத்தும் நிஸ்ஸன்க, 238 பந்துகளை எதிர்கொண்டு 18 பவுண்டறிகளுடன் 146 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழக்காதிருந்தார். அவருடன் இராக்காப்பாளன் ப்ரபாத் ஜயசூரிய 5 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். ஆரம்ப வீரர் லஹிரு உதார 40 ஓட்டங்களைப் பெற்றார். இன்றைய தினம் முழு நாளும் துடுப்பெடுத்தாடி 550க்கும் மேற்பட்ட ஓட்டங்களைக் குவித்து பங்களாதேஷுக்கு நெருக்கடிக்கைக் கொடுப்பதே இலங்கையின் திட்டமாகும். பந்துவீச்சில் நயீம் ஹசன், தய்ஜுல் ஆகிய இருவரும் தலா ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர். முன்னதாக தனது முதலாவது இன்னிங்ஸை 8 விக்கெட் இழப்புக்கு 220 ஓட்டங்களிலிருந்து இரண்டாம் நாள் ஆட்டத்தைத் தொடர்ந்த பங்களாதேஷ், கடைசி 2 விக்கெட்களை 27 மேலதிக ஓட்டங்களுக்கு இழந்தது. தய்ஜுல் இஸ்லாம் திறமையாக துடுப்பெடுத்தாடி 5 பவுண்டறிகளுடன் 33 ஓட்டங்களைப் பெற்று கடைசியாக ஆட்டம் இழந்தார். முதல் நாள் துடுப்பாட்டத்தில் ஷத்மான் இஸ்லாம் 46 ஓட்டங்களையும் முஷ்பிக்குர் ரஹிம் 35 ஓட்டங்களையும் லிட்டன் தாஸ் 34 ஓட்டங்களையும் நயீம் ஹசன் 25 ஓட்டங்களையும் பெற்றனர். இலங்கை பந்துவீச்சில் அறிமுக வீரர் சொனால் தினூஷ 3 ஓட்டமற்ற ஓவர்கள் அடங்கலாக 9.3 ஓவர்கள் பந்துவீசி 22 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களை வீழ்த்தினார். அசித்த பெர்னாண்டோ 51 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் விஷ்வா பெர்னாண்டோ 45 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் தனஞ்சய டி சில்வா, தரிந்து ரத்நாயக்க ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். https://www.virakesari.lk/article/218573
1 month 1 week ago
ஈரான் 2015 வரை JCPOA என்ற ஒபாமா அரசுடனான ஒப்பந்தப் படி பிசகாமல் நடந்திருக்கிறது. இதற்குக் காரணம், ஈரானின் நேர்மை என்பதை விட, 200 வரையான அணு விஞ்ஞானிகளாலும், நிபுணர்களாலும் தயாரிக்கப் பட்ட கண்காணிப்பு (monitoring) நுட்பங்கள் மிக நுணுக்கமானவையாக இருந்தமை தான் காரணம் என்கிறார்கள். அந்த கண்காணிப்பை மீறி, ஈரான் யுரேனியத்தை உள்நாட்டில் செறிவாக்கியிருக்க இயலாது என்று தான் நிபுணர்கள் சொல்கிறார்கள். ட்ரம்ப் அந்த ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்காவை விலக்கிக் கொண்ட நாளில் இருந்தே ஈரான் செறிவாக்கலை வெளிப்படையாகச் செய்ய ஆரம்பித்திருக்கிறது. அப்படிச் செறிவாக்கிய யுரேனியம் தான் இப்போது அமெரிக்கா தேடிக் கொண்டிருக்கும் 600 kg செறிவாக்கிய யுரேனியம். இதை எந்த அமெரிக்க ஊடகங்களிலும் யாரும் சுட்டிக் காட்டியதாகத் தெரியவில்லை. நேச்சர் இதழில், ஈரானின் யுரேனியம் செறிவாக்கல் வரலாற்று பற்றி ஒரு நல்ல கட்டுரை வந்திருக்கிறது, நேரம் இருக்கும் போது தமிழில் மாற்றிப் போடுகிறேன்.
1 month 1 week ago
26 JUN, 2025 | 05:03 PM செம்மணி மனித புதைகுழி குறித்த விசாரணைகள் சர்வதேச கண்காணிப்பின் கீழ் இடம்பெறுவதை ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளர் வோல்க்கெர் டேர்க் உறுதி செய்யவேண்டும் பாதிக்கப்பட்ட தமிழ் குடும்பங்களை பிரதிநிதித்துவம் செய்யும் சட்டத்தரணிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். யாழ் செம்மணி மனிதபுதைகுழி காணப்படும் பகுதிக்கு வோல்க்கெர் டேர்க் விஜயம் மேற்கொண்டவேளை அவருடன் சேர்ந்து அந்த பகுதிக்கு சென்ற சட்டத்தரணிகள் பின்னர் செய்தியாளர் மாநாட்டில் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளனர். அவர்கள் செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்துள்ளதாவது, செம்மணி மனித புதைகுழியை தோண்டும் பணிகளிற்கான நிதியை தாமதமின்றி தடையின்றி இலங்கை அரசாங்கம் வழங்கவேண்டும். இந்த விடயத்தில் இலங்கை அரசாங்கத்திற்கு சர்வதேச சமூகம் அழுத்தம் கொடுக்கவேண்டும். யாழ்ப்பாணத்தில் சேமிப்பதற்கான பாதுகாப்பு வசதிகள் போதியளவு இல்லாததால் நீண்டகால தீர்வு காணப்படும் வரை மனித எச்சங்களை கொழும்பிற்கு கொண்டு செல்லவேண்டும். மனித எச்சங்களை சேமித்து வைப்பதற்கும், விஞ்ஞான ஆய்வுகளிற்கு அதனை கொண்டு செல்வதற்கும் யாழ்ப்பாணத்தில் தடயவியல் ஆய்வுகூடமொன்றை ஏற்படுத்தவேண்டும். முறையான அகழ்வாராய்ச்சி மற்றும் மனித எச்சங்களை அடையாளம் காண அதிநவீன தடயவியல் கருவிகள் சாதனங்கள் மற்றும் தகுதிவாய்ந்த பணியாளர்கள் அவசியம். பக்கசார்பின்மை மற்றும் தலையீடுகளை தவிர்ப்பதற்காக செம்மணிமனித புதைகுழியை அகழ்வும் நடவடிக்கைளை சர்வதேச நிபுணர்களின் பங்களிப்புடன் முன்னெடுக்கவேண்டும். https://www.virakesari.lk/article/218552
1 month 1 week ago
Editorial / 2025 ஜூன் 26 , பி.ப. 01:21 - 0 - 52 இதுவரை இல்லாத முற்றிலும் புதிய வகை ரத்த வகையைக் கண்டுபிடித்துள்ளதாக பிரான்சின் தேசிய ரத்த முகமை அறிவித்துள்ளது. இந்த புதிய ரத்த வகையை இப்போது சர்வதேச ரத்த மாற்றச் சங்கமும் அங்கீகரித்துள்ளது. EMM-நெகடிவ் என்று இதற்குப் பெயரிடப்பட்டுள்ளது. இதுவரை உலகிலேயே ஒரே ஒருவருக்கு மட்டுமே இந்த வகை ரத்தம் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மனிதர்களிடையே ஓ பாசிட்டிவ், ஓ நெகடிவ், பி பாசிட்டிவ், பி நெகடிவ் என ஏகப்பட்ட ரத்த வகைகள் உள்ளன. எமர்ஜென்சி காலத்தில் ரத்தம் தேவைப்படும் போது உட்படப் பல சூழல்களில் இந்த ரத்த க்ரூப் முக்கிய தேவையாக இருக்கிறது. இதற்கிடையே இப்போது ஆய்வாளர்கள் முற்றிலும் புதிய வகை ரத்தத்தைக் கண்டுபிடித்துள்ளனர். குவாடா நெகடிவ் அல்லது EMM-நெகடிவ் என்று இதற்குப் பெயர் வைத்துள்ளனர். இதுவரை உலகில் இருக்கும் வேறு எந்தவொரு ரத்த வகையைப் போலவும் இது இல்லை. முற்றிலும் தனித்துவமான ரத்த வகையாக இது இருக்கிறது. கடந்த மாதம் வரை உலகிலேயே இவர் ஒருவருக்கு மட்டுமே இந்த ரத்த வகை இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.. இதன் மூலம் மிகவும் அரிதான ரத்த வகையாக குவாடா நெகடிவ் மாறியுள்ளது. குவாடா நெகடிவ் என்பது புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட ரத்தத்தின் பெயர். இந்த குவாடா நெகடிவ் வகையில் EMM ஆன்டிஜென் இருக்காது. இதன் காரணமாகவே இதை EMM நெகடிவ் என்றும் குறிப்பிடுகிறார்கள். இந்த ஆன்டிஜென் பொதுவாகச் சிவப்பு ரத்த அணுக்களில் இருக்கும்.. மேலும் இது ஒரு High-incidence antigens ஆகும். உலகில் உள்ள கிட்டதட்ட அனைத்து மனிதர்களிடமும் இந்த வகை ஆன்டிஜென்கள் இருக்கும். அப்படி இருக்கும்போது இந்த நபரிடம் மட்டும் ஆன்டிஜென்கள் இல்லாதது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. பொதுவாக ஒரு ரத்த வகையைப் புதிதாக அங்கீகரிக்க பல்வேறு கண்டிஷன்களை பூர்த்தி செய்ய வேண்டும். இந்த புதிய ரத்த வகை அந்த அனைத்து கண்டிஷன்களும் பூர்த்தி செய்கிறதாம். மேலும், உலகில் இதுவரை 47 ரத்த வகைகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இந்தச் சூழலில் இது 48ஆவது ரத்த வகையாக உறுதி செய்யப்பட்டுள்ளது. Tamilmirror Online || ஒருவருக்கு மட்டுமே இருக்கும் புதிய ரத்த வகை French scientists discover new blood type in Guadeloupe woman - CBS News
1 month 1 week ago
உண்மையை எழுதியமைக்கு பாராட்டுக்களும் நன்றிகளும்👍.................. இவர் தான் உலகில் அமைதியை நிலை நாட்ட போகிறேன் என சொல்லி தான் ஆட்சிக்கு வந்தார் , தான் வந்த கையோட உக்கிரேன் ரஸ்சிய போரை நிறுத்துவேன் என்றார் , நேற்று நடந்த நேட்டோ நாட்டு மீரிங்கில் , உக்கிரேன் செலஸ்கியும் கலந்து கொண்டார் , உக்கிரேன் எப்ப நேட்டோ அமைப்பில் சேர்ந்து................உலகில் என்ன நடக்குது என்று தெரியல😁😛..................................
1 month 1 week ago
இது "உப்புத் தண்ணி தரப் போகும் கிணறு தான்" என்று இங்கே அந்த நேரம் சொன்னவர்கள் மூக்குச் சாத்திரம் பார்த்துச் சொல்லவில்லை, உலகிலும் அமெரிக்காவிலும் நிகழ்ந்த சம்பவங்களைப் பார்த்தே சொல்லியிருந்தார்கள். சும்மா பைடனின் மேலிருந்த கடுப்பில் ட்ரம்பைப் பெரிய ஆளாகக் காட்டியவர்கள் களைத்து விழுந்து கிணறு வெட்டித் தண்ணியைச் சுவைத்த பின்னர் தான் நம்பியிருக்கிறார்கள்! இதைத் தான் சொல்வது, மூடனுக்கு காலில் அசுத்தம் அப்பினால் 3 இடங்களில் அப்புமாம் என்று😂!
1 month 1 week ago
Published By: DIGITAL DESK 2 26 JUN, 2025 | 04:25 PM வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும் யாழ். மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ராசிக குமாரவுக்கும் இடையிலான சந்திப்பு ஆளுநர் செயலகத்தில் வியாழக்கிழமை (26) நடைபெற்றது. சந்திப்பின்போது வடக்கு மாகாண ஆளுநரால் கடந்த ஆண்டு விவசாயத் தேவைக்காக விடுவிக்கப்பட்ட மக்களின் காணிகளுக்கு அண்மையாக அமைந்துள்ள இராணுவ வேலியை பின்நகர்த்துவதற்கான கோரிக்கை முன்வைக்கப்பட்டது. அதற்குரிய நிதி ஒதுக்கீடு கிடைக்கப்பெறாத போதிலும் தற்காலிக பின்னரங்க வேலியை அமைக்கப்பட்டு வருவதாகவும் ஆளுநருக்கு தெரியப்படுத்தப்பட்டது. மேலும், மக்களிடம் காணிகளை மீளக்கையளிக்கும்போது அங்கு களவுகள் இடம்பெறுவதாக மக்களிடமிருந்து முறைப்பாடுகள் கிடைக்கப்பெறுகின்றன என்பதைச் சுட்டிக்காட்டிய ஆளுநர் அதற்கு அமைவான பாதுகாப்பு முன்னேற்பாடுகளுடன் அவற்றைக் கையளிப்பதற்குரிய நடவடிக்கை எடுக்குமாறும் கோரினார். வடக்கில் நிலவும் உயிர்கொல்லி போதைப்பொருள் பாவனை தொடர்பிலும் இராணுவத் தளபதி ஆளுநரிடம் கேட்டறிந்து கொண்டார். உயிர்கொல்லி போதைப்பொருளுக்கு அடிமையானவர்களுக்கான புனர்வாழ்வு நிலையத்தை யாழ்ப்பாணத்தில் ஆரம்பிப்பதற்குரிய நடவடிக்கைகள் துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது எனவும் ஆளுநர் சுட்டிக்காட்டினார். இந்தச் சந்திப்பின் இறுதியில் நினைவுச் சின்னங்களை ஆளுநரும், இராணுவத் தளபதியும் பரிமாறிக்கொண்டனர். https://www.virakesari.lk/article/218530
Checked
Thu, 08/07/2025 - 21:39
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed