1 month 1 week ago
பேச்சுவார்த்தையின் போதே குண்டுகளை போட்டு விட்டு இப்போ போர் நிறுத்தம் என்பது நகைச்சுவையின் உச்சக்கட்டம். நத்தனியாகுவின் சொல்லை கேட்டு கூத்தாடி விட்டு இப்போ போர் நிறுத்தம் என்பது எவ்வளவு சாத்தியமானது? கொண்டு போய் மண்ணுக்கு மேல் போட்டு இஸ்ரேலை ஏன் சந்தோசப்படுத்த வேண்டும்? அமெரிக்காவில் எத்தனை பேர் இஸ்ரேலின் சொல்லை கேட்டு ஈரானுடன் மோதாமல் இருக்கும் படி கேட்டும் மண்ணுக்கு /மலைக்கு மேல் குண்டுகளை போட்டு எதிரிகளை வீணாக உருவாக்குவது எப்படி பொருளாதார ரீதியில் அமெரிக்காவை மேம்படுத்தும்?
1 month 1 week ago
ceasefirepublished at 23:13 23:13BREAKING US President Donald Trump has announced a "complete and total" ceasefire between Israel and Iran on social media. Trump says the ceasefire will begin "in approximately six hours from now" after each country has "wound down" their military operations. Trump's announcement contains a periodic unravelling of hostilities but says that "upon the 24th hour" the war will officially end. Israel and Iran are yet to confirm a ceasefire has been reached. BBC
1 month 1 week ago
👹 இந்த மதவெறி குமேனி கும்பலின் ஆட்சிக்கு முன்பு அவர்கள் எப்படி சுதந்திரமாக இருந்தார்கள் என்று தெரியாவிட்டாலும் சமீபத்தில் தலைக்கு மூடி துணி போடவில்லை என்பதற்காக முல்லாக்கள் ஆட்சியில் ஒரு பெண் அடித்து கொல்லபட்டு அதை தொடர்ந்து பெண்கள் தலைக்கு மூடும் துணியை எரித்து போராட்டங்கள் நடத்தியது ஆவது தெரிந்து இருக்கிறீர்களா
1 month 1 week ago
செத்த நாய்
1 month 1 week ago
இந்தியா பின்னனி வீரர்களின் விளையாட்டு ஜந்து சதத்துக்கு உதவாது அண்ணா...................இரண்டு இனிங்சையும் பாருங்கோ எல்லாரும் 000 0000 இப்படி அவுட் ஆகி இருக்கினம் , நாளை இங்லாந் காரங்கள் வெல்லக் கூடும் மழை வந்தால் விளையாட்டு சம நிலையில் முடியும்................இந்தியா 4வேகபந்து வீச்சோட வந்து வும்ராவை தவிற மற்ற வீரர்கள் பெரிசா சாதிக்க வில்லை.................ஒரே ஒரு சுழல் பந்து அது ஜடேயா மட்டும் , ஜபிஎல்ல சுதப்பினவரை டெஸ்ட் போட்டிக்கு தெரிவாகி இருக்கிறார் வஸ்சின்டன் சுந்தர விளையாட விட்டு இருந்தால் ரன்ஸ் ஆவது அடிச்சு இருப்பார்...............................
1 month 1 week ago
கைபந்து விளையாட்டில் கூட தலைக்கு துனிய கட்டி கொண்டு தான் விளையாடுகிறவை ஈரான் பெண்கள்👍................. ஈரானியர்கள் இந்தியர்களை விட திறமையானவர்கள் பல விளையாட்டில் , ஆசியாவில் ஈரான் கால்பந்து விளையாட்டில் பலமான அணி , கூடைபந்து விளையாட்டில் ஈரான் நாட்டவர்கள் திறமை மிக்கவர்கள் , உலக கிண்ண போட்டியில் தோத்தாலும் அவங்கள் கலந்து கொள்ளுகினமே , நாசம் அறுத்த இந்தியாவை விட ஈரான் நாட்டவர்கள் பல விளையாட்டில் திறமையானவர்கள்.......................... இந்தப் பொண்ணு மதத்தால் முஸ்லிம் , கிரிக்கேட்டில் ஸ்கொட்லாந் அணிக்கா விளைடுகிறா இந்தப் பெண்ணும் தலைக்கு துனிய போட்டு கொண்டு தான் கிரிக்கேட் விளையாடுகிறா , போன மாசம் இவா இங்லாந் உள்ளூர் கிலப்பான Essex அணிக்காக விளையாடினதை நேரடியாக பார்த்தேன் , அவங்கட கலாச்சாரம் அது அதை மாற்றி அமைக்க முடியாது................அவர்களின் உலகம் கூட அல்லா பற்றியே.....................
1 month 1 week ago
🤣 ஓம் தம்பி! ஈரான் பெண் விளையாட்டு வீராங்கனைகளை மிகவும் ஊக்குவிக்கும் ஒரு இஸ்லாமிய நாடு! எவ்வளவு ஊக்குவிப்பென்றால், 2022 சியோல் ஒலிம்பிக்கில் தலையில் ஹிஜாப் இல்லாமல் போட்டியில் கலந்து கொண்டு விட்டு நாடு திரும்பிய எல்நாஸ் றெகாபி என்ற ஈரானிய வீராங்கனையை உள்ளே வர விட்டுக் கைது செய்து, பின் அவரது வீட்டையும் புல்டோசரால் இடித்துத் தரை மட்டமாக்கி, மிகுந்த ஊக்குவிப்பைக் கொடுத்தது ஈரான். ஈரானின் ஊக்குவிப்பு மிகையாகி விட்டதால், வீராங்கனை இப்போது ஸ்பெயினில் வசிக்க வேண்டியிருக்கிறது😎! https://iranwire.com/en/women/139724-iranian-climbing-champion-elnaz-rekabi-leaves-country/
1 month 1 week ago
நீங்கள் சொல்வது உண்மை , கலிபோனியாவுக்கு பக்கத்தில் இருக்கும் மானிலம் Nevada பல வருடத்துக்கு முதல் கஸ்ரப் பட்ட மானிலமாய் இருந்ததாகவும் , பிறக்கு விப*** மற்றும் சூதாட்ட கிலப்புகளுக்கு அனுமதி கொடுத்து இப்ப வளந்த மானிலமாக வந்து விட்டது...............அந்த மானிலத்தில் las vegas பெயர் போன சிற்றி , முந்தி அமெரிக்கா வரலாறுகளை பாடசாலையில் சொல்லி தருவினம் , ஈழ மண்ணிக் இல்லை புலம்பெயர் நாட்டில் அண்ணா ஈழ மண்ணில் இருக்கும் போது எனக்கு அமெரிக்கா என்ர நாடு இருக்கேன்ரே தெரியாது😁😁😁😁😁😁😁😁😁😁........................
1 month 1 week ago
நான் எழுதினதை மீண்டும் வாசியுங்கோ , ஈரான் நாட்டு பெண்கள் கைபந்து விளையாட்டில் மெதுவாய் வளந்து கொண்டு வருகினம் என எழுதினேன் , 2வருடத்துக்கு ஒருக்கா நடக்கும் உலக கிண்ண கைபந்து விளையாட்டில் ஈரான் பெண்கள் கலந்து கொள்வினம் , கைபந்தை ஆங்கிலத்தில் handball என அழைப்பினம் இந்த விளையாட்டு எல்லா ஜரோப்பிய நாடுகளும் விளையாடுகினம் , மகளிரில் நோர்வே நாட்டு பெண்கள் முதல் இடம் கைபந்து விளையாட்டில் ஆண்களில் டென்மார்க் தான் முதல் இடம் , ஒலிம்பிக் பதக்கம் , ஜரோப்பா கப் , உலக கோப்பை என்று எல்லாத்தையும் டென்மார்க் ஆண்கள் வென்று விட்டினம்..................இந்த விளையாட்டுக்கு ஸ்கன்ரினேவியன் மக்கள் அடிமை😁...........................
1 month 1 week ago
அமெரிக்காவைச் சுற்றி சோவியத் யூனியனின் தளங்கள் இருந்திருக்கலாம், பையன் சார். அங்கு அமெரிக்காவின் முக்கிய நகரங்களை நோக்கி ஆயுதங்கள் நிறுத்தப்பட்டும் இருக்கக்கூடும். அமெரிக்காவும், சோவியத் யூனியனும் இதை உலகெங்கும் தளங்கள் அமைத்து செய்து கொண்டிருந்தார்கள். ஆனால் இன்றைய ரஷ்யா மிகவும் பின்தங்கிவிட்டது. அமெரிக்கா நன்றாக முன்சென்றுவிட்டது. அன்றைய கியூபா, இன்றைய வெனிசுவேலா என்று மிகக் குறைந்த ஆதரவு நாடுகளே ரஷ்யாவிற்கு இந்தப் பக்கங்களில் உண்டு. இன்று வெனிசுவேலாவில் கூட ரஷ்யாவால் தளம் அமைக்க முடியாத நிலை. ஆனால் மிக வேகமான விமானங்களும், ஏவுகணைகளும் தளங்களின் தேவையை ஓரளவு குறைக்கும். ரஷ்யாவைச் சுற்றி அமெரிக்காவின் தளங்கள் பல இன்றும் இருக்கின்றன. இங்கு அமெரிக்காவில் சில மாநிலங்கள் பெரியவை, பொருளாதாரத்திலும் மேம்பட்டவை. சில மாநிலங்கள் மிகச் சிறியவை, வசதி வாய்ப்புகளும் குறைந்தவை. பெரும் மாநிலங்கள் சிறிய மாநிலங்களை பாதுகாக்க வேண்டிய நிலையில் இருக்கின்றன. இதுவே சரியான நடைமுறையும் கூட. ஆனால் சில பெரிய மாநிலங்களில் சிலர் இது போன்ற காரணங்களால் பிரிந்து போகப் போகின்றோம் என்று சொல்லிக் கொள்வார்கள்.
1 month 1 week ago
ஈரானில் பெண்கள் மீது மத ஆட்சியாளர்களினால் பல கொடூரங்கள் நடத்தபடுகின்றது தான் ஆனால் நான் அதை முல்லாக்களின் குரல் தரவல்ல அதிகாரி வீர பையன் இங்கே சொன்னதை வைத்து அது அவர்களின் கலாச்சாரம் என்று நினைத்துவிட்டேன் 😒
1 month 1 week ago
விளங்காத மாதிரி எழுதினாலும், அதற்குள்ளும் சில புரட்டுகளை உள்ளடக்கி விடுகிறீர்கள்😂. ஈரான் ஷாவிடம் இருந்து இஸ்லாமிய அடிப்படை வாதிகளிடம் விழுவதற்கு முன்னர், Atom for Peace என்ற திட்டத்தின் அடிப்படையில் அணு சக்தி நுட்பங்களில் உதவியது அமெரிக்கா. அந்தக் காலத்தில் ஜேர்மன் நிறுவனமான சீமன்ஸ் கட்ட ஆரம்பித்த அணு சக்தி ஆலை 79 புரட்சியோடு இடையில் நின்று போக, பின்னர் ரஷ்யா தான் அந்த அணு சக்தி ஆலையைப் பூரணப் படுத்தி இயக்க உதவியது. இது தான் "சமாதான நோக்கங்களுக்காக யுரேனியம் செறிவாக்கும்😎" ஈரானின் ஒரேயொரு அணு சக்தி ஆலை. இன்று வரை, இந்த ஒரேயொரு அணு சக்தி ஆலைக்கான யுரேனியம் கூட ரஷ்யாவில் இருந்து தான் வருகிறது . ஈரான் "சமாதானத்திற்காக செறிவாக்கும் யுரேனியம்" இந்த அணு சக்தி ஆலையில் பயன்படுவதாக ஈரானே எங்கும் சொல்லவில்லை. அணு ஆயுதம் செய்வதற்காக மைய நீக்க சுழலிகளை ஈரானே தயாரிக்க உதவியது பாகிஸ்தானின் அணு விஞ்ஞானி காதிர் கான். இவரும் தானே சுயம்புவாக விஞ்ஞானியாகவில்லை, ஐரோப்பாவில் மேற்கு நாட்டு உதவித் தொகையில் அணு விஞ்ஞானம் படித்து பின் அதையே உலக அழிவு நாடும் வட கொரியா, ஈரான் போன்ற நாடுகளுக்கு பணத்திற்காக தொழில் நுட்பத்தை விற்றார். எனவே, ஈரானின் அணுவாயுத தொழில் நுட்பம் அவர்களே கட்டியமைத்ததல்ல.
1 month 1 week ago
பையன் சார், இங்கு நாங்கள் எழுதுவது வெறும் கருத்துப் பரிமாற்றம் மட்டுமே. உங்கள் மீது எனக்கிருக்கும் வாஞ்சையில் ஒரு துளியேனும் இந்தக் கருத்துகளால் குறைந்து விடப்போவதில்லை. ரஷ்யா மக்கள் மீதும், அந்தப் பெரும் தேசத்தின் மீதும், அது ஒரு காலத்தில் கட்டி எழுப்பப்பட்ட கோட்பாடுகளின் மீதும் மற்றும் அதன் இலக்கியவாதிகளின் மீதும் பெரும் மதிப்பும் விருப்பும் எனக்கு உள்ளது. ஊரில் வாழ்ந்த பதின்ம வயதுகளில் கூட ஒவ்வொரு ஒலிம்பிக் போட்டிகளிலும் சோவியத் யூனியனே பதக்கப்பட்டியலில் முதலாவதாக வர வேண்டும் என்று உளமார விரும்பியும் இருக்கின்றேன். ஆனால் அந்த சோவியத் யூனியன் அல்ல இன்றிருக்கும் ரஷ்யா. அதிபர் புடின் அந்த தேசத்தையே அழித்துவிட்டார். மேலும் கோட்பாடுகள் வேறு, நடைமுறை வாழ்க்கை வேறு என்று கிடைத்த வாழ்க்கை மிக நல்லாகவே கற்றுக் கொடுத்தும் விட்டது. அன்றிருந்த சோவியத் யூனியனைப் பற்றியே இன்று சில கேள்விகள் உள்ளே இருக்கின்றன.
1 month 1 week ago
இது நான் வரலாற்டில் படித்து தெரிந்து கொண்டது Soviet Union அமெரிக்கா மீது அணுகுண்டு போட , கியூபா நாட்டில் கொண்டு வந்து வைத்து இருந்தவையாம் பிறக்கு அமெரிக்கா கண்டு பிடிக்க Soviet Union அமெரிக்கா மீது போடாம பின் வாங்கி விட்டினம் , அன்று இவர்கள் அமெரிக்கா மீது போட்டு இருந்தால் இப்ப அமெரிக்கா என்ர நாடு உலக வரைபடத்தில் இருந்து இருக்குமோ தெரியாது , அமெரிக்காவில் கூட பிரிவினைவாதம் இருக்கு தனி நாடு கோரிக்கைய கூட ஏதோ ஒரு மானிலம் கேட்டதாகவும் அதற்க்கு வஸ்சின்டனில் இருப்பவர்கள் சம்மதிக்க வில்லை என வரலாற்றில் தெரிந்து கொண்டேன் , இந்த பிரிவினை வாத விடையத்தில் எவளவு உண்மை பொய் இருக்கு என்று எனக்கு தெரியாது அண்ணா...................2012களில் இதை பற்றி தெரிந்து கொண்டேன்.............................
1 month 1 week ago
பெரியப்பு நான் பலஸ்தீன மக்களுக்கு இழைக்கப் படும் கொடுமைகளை பற்றி தான் யாழில் அதிகம் எழுதி இருக்கிறேன் , எனக்கு ஹமாஸ் வரலாறுகள் படிக்க ஆர்வம் இல்லை , நானும் சிறுவயதில் குண்டு சத்தத்தை கேட்டு தான் வளந்தேன்................போர் என்று வந்தால் அழிவுகள் எப்படி இருக்கும் என 2009ம் ஆண்டே பார்த்து விட்டோம்...................பலஸ்தீன மக்கள் சுதந்திரமாய் வாழனும் அதுவே எனது விருப்பம்👍...............................
1 month 1 week ago
பையன் சார், ஈரானின் நட்பு நாடுகள் இதுவரை ஈரானுக்கு ஏதாவது உதவி செய்திருக்கின்றார்களா என்று பார்த்தால், சீனா, ரஷ்யா உட்பட, எந்த உதவிகளும் செய்யவில்லை என்றே தெரிகின்றது. பாகிஸ்தானுக்கு சீனா செய்த உதவிகளைக் கூட சீனா ஈரானுக்கு செய்யவில்லை. இத்தனைக்கும் ஈரானிடமிருந்து எவ்வளவு எண்ணெயை மிக மலிவு விலையில் சீனா வாங்கிக் கொண்டிருக்கின்றது. கைமாறாக பிஎல் - 15 ரகம் போன்ற ஏவுகணைகளையும், அதை சுமந்து செல்லும் சில யுத்த விமானங்களையும் சீனா ஈரானுக்கு கொடுத்திருக்ககலாம் தானே. இவற்றை வைத்துத்தானே பாகிஸ்தான் இந்திய விமானங்களை தாக்கியது. இந்தியாவுக்கு அடிப்பது என்றால் கொடுப்பார்கள், ஆனால் அமெரிக்காவிற்கு அடிப்பது என்றால் கொடுக்காமல் பின்வாங்குகின்றார்களா? இஸ்ரேலும், அமெரிக்காவும் வேறு வேறல்ல. இரு நாடுகளும் ஒன்றே தான். இதில் ஒருவரை ஒருவர் போர்க் குற்றவாளி என்று என்றும் சொல்லப்போவதில்லை. அணு குண்டை அமெரிக்கா முதலில் செய்தது அமெரிக்காவினது மட்டும் இல்லை, உலகின் அதிர்ஷ்டமும் கூட. இதையே அன்று ஜேர்மன் அல்லது ஜப்பான் செய்திருந்தால், இன்று நாலு கண்டங்களின் பெரும் பகுதிகள் பூமியில் மனிதர்கள் இல்லாத பாலைநிலங்களாக இருந்திருக்கும். அதன் பின்னர் அணு ஆயுதங்கள் கிட்டத்தட்ட ஒரே காலத்தில் பல் நாடுகளால் சுயமாக தயாரிக்கப்பட்டன. அமெரிக்காவால் எவரையும் அன்று தடைசெய்ய முடியாது. சில நாடுகளிடம் இருப்பதும் நன்மைக்கே. ஒற்றை ஏகாதிபத்தியம் என்ற நிலையை அது இல்லாமல் செய்கின்றது.
1 month 1 week ago
உக்கிரேன் படை வீரர்களுடன் சேர்ந்து நேட்டோ படைகளும் ரஸ்சியா கூட போரிட்டவை அந்த காணொளிய நான் பார்த்தேன் அவர்களின் முகம் மறைக்கப் பட்டது அந்த காணொளியில் , ஏதும் சாதிக்க முடிந்ததா இதுவரை , பைடன் ஆட்சியில் அமெரிக்கா உக்கிரேனுக்கு அள்ளி கொடுத்த பணம் ஆயுதங்கள் எவளவு ஜரோப்பிய நாடுகள் உக்கிரேனுக்கு கண்ண மூடி கொண்டு உதவினவை , ஏதும் பலன் கிடைச்சு இருக்கா இந்த மூன்று ஆண்டுகளில்................வடகொரியா ரஸ்சியாவுக்கு உதவினதை மட்டம் தட்டி எழுதுறீங்கள் , அப்ப அமெரிக்கா தொடர்ந்து உக்கிரேனுக்கு உதவினதை ஆதாரத்தோடு எழுதினால் உங்கள் கருத்துடன் சிறு கருத்து முரன் வரும் குரு👍................... ஆயுதம் சொந்தமாக தயாரிக்கும் நாடு ரஸ்சியா ரஸ்சியா மற்ற நாடுகளிடம் ஆயுத பிச்சை கேட்க்க வேண்டிய அவசியம் அவைக்கு இல்லையென நான் நான் நம்புகிறேன் .......................ரஸ்சியா அன்மையில் கண்டு பிடித்த புது ஆயுதம் ராடரில் சிக்காம அடுத்தவர்களின் நாட்டின் மீது விழும் என புட்டின் அறிவித்தார் , அந்த ஆயுதத்தின் பெயர் வடிவாய் தெரியாது......................... அந்த ஆயுதத்தை உக்ரேன் மேல் தான் முதல் முறை பாவிச்சவை , ஒரு வட்டின அமத்த சரியான இடத்தில் போய் வெடிக்கும் நீங்கள் ரஸ்சியாவை பற்றி கீழ் தனமாக எழுதுவதில் எனக்கு உடன் பாடு இல்லை , ரஸ்சியா ஒரு நாட்டுடன் போராட வில்லை , பல நாடுகளை எதிர்த்து அவர்கள் உக்கிரேனுக்கு கொடுக்கும் ஆயுதங்கள் தொழில்நுட்ப கருவிகளை எதிர்த்து தான் போர் செய்யினம் , உக்கிரேன ரஸ்சிய அழிக்க நினைச்சா அவங்களுக்கு நீண்ட நேரம் ஆகாது , சீக்கிரம் முடித்து இருப்பாங்கள் , அதுவல்ல அவர்களின் நோக்கம்...................புட்டின் தனது இலக்கை அடையும் வரை ஓய மாட்டார்.................... எங்களது கருத்து மோதல் யாழுடன் முடிந்து விடும் , யாழுக்கு வெளியில் நீங்கள் எனக்கு நல்ல ஒரு அண்ணா மற்றும் குரு , உங்களிடம் இருந்து சில நல்லதுகளை கற்று இருக்கிறேன் அதனால் தான் உங்களை குரு என பாசத்தோடு அழைக்கிறேன் , உங்களுக்கு புரிந்து இருக்கும் என நம்புகிறேன்🙏🥰👍..............................
1 month 1 week ago
இஸ்ரேலில் இரண்டு மில்லியன் ரஷ்யமொழி பேசும் யூதர்கள் இருப்பதால் ஈரானுக்கான உதவிகள் வெறும் வாய்வார்த்தைகளாகத்தான் புட்டினிடம் இருந்து வரும்.! ஈரானின் மீதான இஸ்ரேலின் தாக்குதலால் அதிகம் பாதிக்கப்படுவது காஸாவில் உள்ள பலஸ்தீனியர்களும், ரஷ்யாவின் ஆக்கிரமிப்பில் உள்ள உக்ரைனியர்களும்தான்.. பையன் ஹமாஸுக்கு இஸ்ரேல் செப்பல் அடி கொடுப்பதை வரவேற்றமாதிரி நினைவு😃
1 month 1 week ago
இரானில் 1980களில், சாவொறுப்பிற்கு முன்னர் கன்னிப்பெண்கள் வன்புணரப்பட்டனராம்!! ஏனென்றால் இஸ்லாமிய நம்பிக்கைப்படி கன்னிப்பெண்கள் சுவர்க்கம் காணக்கூடாதாம்! என்ன கொடுமை சாமியிது!! The Jerusalem Post | JPost.com'I wed Iranian girls before execution' | The Jerusalem PostIranian militiaman tells 'Post' shocking story of ruthlessness, rape. https://iranwire.com/en/society/60172/
1 month 1 week ago
குரு👍................. உள்ளடி வேலைகள் பேச்சுக்கள் நமது காதுக்கு உடன வராது...............செயலில் நடக்கும் போது தான் தெரியும் எல்லாம் , நாம யாழில் சும்மா விவாதிச்சுட்டு இருக்கிறோம் , ஈரானின் நட்ப்பு நாடுகள் ஈரானுக்கு இதுவரை ரகசியமாக என்ன சொன்னார்கள் என்று கூடத் தெரியாது அமெரிக்காவை பல முஸ்லிம் நாடுகளுக்கு பிடிக்காது , சவுதி , கட்டார் போன்ற நாடுகள் ஏன் அமெரிக்கா கூட பகையை வளப்பான் என அமெரிக்காவுக்கு அவர்கள் முற்றிலுமாய் அடிமைகலாக போய் விட்டினம்........................ ஜ நா சபைய அமெரிக்கா எப்பவாவது மதிச்சு இருக்கா குரு உங்களிடம் ஒரே ஒரு கேள்வி , பல நாடுகள் சேர்ந்து நெத்தனியாகு போர் குற்றவாளி என சொன்ன பின்பும் , அந்த கொடுரனை அமெரிக்கா தொடர்ந்து காப்பாற்றுவது ஏன் சதாமுக்கு தூக்கு நெத்தனியாவுக்கு புகழ் மரியாதை , இதா அமெரிக்காவின் நடு நிலை இதனால் தான் பலர் அமெரிக்காவை வெறுக்க காரணம் ஹிரின்லாந் பிரச்சனையின் போது டென்மார்க் இனத்தவர்கள் அமெரிக்காவின் உண்மை முகத்தை தெரிந்து கொண்டு விட்டினம் , அவனை பகைக்க கூடாது என்று அரவனைச்சு போகினம் இப்ப..................பிரிடிஷ் காரனின் அராஜகத்தை விட அமெரிக்கனின் அட்டூழியம் பொறுத்துக் கொள்ள முடிய வில்லை..................... அமெரிக்கா நடுநிலையா செயல் பட்டு இருந்தால் இந்த உலகம் ஒற்றுமையாக இருந்து இருக்கும் மதம் இனம் என பிரிவு வேறு பாடுகள் பெரிசா வந்து இருக்காது........................ ஜப்பான் மீது அணுகுண்டை போட்ட போது அவளவு அழிவை தரும் ஆயுதத்தை ஏன் பல ஆயிர கணக்கில் அமெரிக்கா மீண்டும் செய்தது , ஒட்டு மொத்த உலகத்தை கூட்டி இந்த ஆயுதம் நாங்கள் தொட்டு யாரும் இதை செய்யவும் கூடாது வைச்சு இருக்கவும் கூடாது என முடிவு எடுத்து இருந்தால் பல பிரச்சனைகள் வந்து இருக்காது👍............................
Checked
Wed, 08/06/2025 - 06:22
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed