புதிய பதிவுகள்2

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்

1 month 1 week ago
இங்கே முல்லாக்களின் அதிகாரம் பிடுங்கப்பட்டு, அவர்களின் ஆட்சி அழிக்கப்பட வேண்டும் என்பது பலராலும் வைக்கப்படும் கருத்தாக இருக்கிறது. இதில் எனக்கு உடன்பாடில்லை. உண்மையில் இது குரங்கின் கையில் கொடுக்கப்பட்ட அப்பமாகவோ ஒட்டகத்துக்கு தலை வைக்க இடம் கொடுத்த கதையாகத்தான் முடியும். எனக்கு ஈரானை பிடிக்காது அதற்காக சுயநலன்களுக்காக அந்த மக்களுக்கு அவலங்களை கொடுப்பதை ஏற்கமுடியாது.

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்

1 month 1 week ago
ஈரானின் இன்றைய காலாச்சாரம் என்பது 1979 இன் பின் வலிந்து திணிக்கப்பட்டது. தன் சொந்த மகள்களை இரெண்டாம் தர பிரசையாக நடத்தும் எந்த கொடுங்கோன்மையும் அழிக்கப்பட வேண்டியதே. அப்படி பட்ட கொடுங்கோன்மையை ஆதரிப்பவர்கள், அவர்களும் ஆணாதிக்க வாதிகளே, தாம் இருக்கும் நாடுகள் டின்னு கட்டி விடுவார்கள் என்பதால் அடக்கி கொண்டு இருக்கிறார்கள் என்றே கருத வேண்டி உள்ளது. பிகு ஈரானிய பெண்ணடிமைவாதிகளை தகைவரோடு, புலிகலோடு ஒப்பிடவே முடியாது. அப்போ சவுதி? அவர்களும் கொடுங்கோலரே, அவர்களுக்கு எதிராக அந்த மக்கள் போராடும் போது அதையும் நான் ஆதரிப்பேன்.

உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு

1 month 1 week ago
வணக்கம் வாத்தியார் . .......... ! ஆண் : என் கண்மணி உன் காதலி இள மாங்கனி உன்னை பார்த்ததும் சிரிக்கின்றதேன் சிரிக்கின்றதேன் நான் சொன்ன ஜோக்கை கேட்டு நாணமோ நீ நகைச்சுவை மன்னனில்லையோ ஆண் : நன்னா சொன்னேள் போங்கோ பெண் : என் மன்னவன் உன் காதலன் எனை பார்த்ததும் ஓராயிரம் கதை சொல்கிறான் கதை சொல்கிறான் அம்மம்மா இன்னும் கேட்க தூண்டுமோ நீ ரசிக்கின்ற கன்னியில்லையோ ஆண் : இருமான்கள் பேசும்போது மொழியேதம்மா பிறர் காதில் கேட்பதற்கும் வழியேதம்மா பெண் : ஒரு ஜோடி சேர்ந்து செல்லும் பயணங்களில் உறவன்றி வேறு இல்லை கவனங்களில் ஆண் : இளமா மயில் பெண் : அருகாமையில் ஆண் : வந்தாடும் வேலை இன்பம் கோடி என்று அனுபவம் சொல்ல வில்லையோ ஆண் : இந்தாமா கருவாட்டு கூடை முன்னாடி போ ஆண் : தேனாம்பேட்டை சூப்பர் மார்க்கெட் இறங்கு ஆண் : மெதுவாக உன்னை கொஞ்சம் தொட வேண்டுமே திருமேனி எங்கும் விரல்கள் படவேண்டுமே பெண் : அதற்கான நேரம் ஒன்று வர வேண்டுமே அடையாள சின்னம் ஒன்று தர வேண்டுமே ஆண் : இரு தோளிலும் மணமாலைகள் பெண் : கொண்டாடும் காலமொன்று கூடுமென்று தவிக்கின்ற தவிப்பென்னவோ ......... ! --- என் கண்மணி உன் காதலி ---

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்

1 month 1 week ago
ஈரானில் இளையவர்கள் மிக தெளிவாக இந்த அடிப்படைவாத அரசை எதிர்கிறார்கள். ஆனால் இரும்பு கரம் கொண்டு அடக்கபடுகிறார்கள். எனக்கு இஸ்ரேல்-ஈரான் போரில் இருபகுதி மீதும் ஈடுபாடு இல்லை. ஆனால் அயதுல்லா கொமேனி என்ற முன்னாள் பிரெஞ் உளவாளி, பின்னால் அடிப்படைவாதியின் இஸ்லாமிய புரட்சியின் பின்னான கொடுங்கோல் இஸ்லாமிய தியோகிரசி அழிய வேண்டும் என்பதில் மாற்று கருத்து இல்லை.

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்

1 month 1 week ago
A majority of Americans disapproves of Trump’s Iran airstrikes, CNN poll finds. President Donald Trump’s decision to launch airstrikes against Iran is broadly unpopular with Americans, according to a new CNN poll conducted by SSRS after the strikes. Americans disapprove of the strikes, 56% to 44%, according to the survey, with strong disapproval outpacing the share who strongly approve. Most distrust Trump’s decision-making on the use of force in Iran, with about 6 in 10 worried that the strikes will increase the Iranian threat to the US. https://www.cnn.com/2025/06/24/politics/trump-iran-strikes-poll-cnn-ssrs

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்

1 month 1 week ago
@ஈழப்பிரியன் ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா உங்க‌ட த‌மிழ் பொக்ஸ்ச‌ம் விக்கி , இப்ப‌வும் பாக்கிஸ்தான் இந்தியாவிட‌ம் ம‌ண்டியிட்ட‌து என்று பொய் பொய்யா சொல்லி ம‌க்க‌ளை ஏமாற்றுகிறார் அவ‌ரின் காணொளிக‌ளை இப்ப‌வும் பாப்பிங்க‌ளா.....................நான் அவ‌ரை த‌ள்ளி வைத்து விட்டேன் அவ‌ர் ப‌க்கா ச‌ங்கி , இந்திய‌ ஆட்சியாள‌ர்க‌ளிட‌ம் காசு வேண்டி விட்டு க‌ண்ட‌ ப‌டி இந்தியா புக‌ழ் பாடுவ‌தாக‌ தெரியுது இஸ்ரேல் ஈரான் பிர‌ச்ச‌னைக்கு பிற‌க்கு சில‌ காணொளிக‌ள் பார்த்தேன் அதுக்கையும் இந்தியாவை எழுத்து வாயால் வ‌டை சுடுவார்.........................பொய்ய‌ ஏக்க‌ர் க‌ண‌க்கில் சொல்லுவார் இந்தியா விடைய‌த்தில் ஹா ஹா😁😛........................

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்

1 month 1 week ago
அண்ணா எங்க‌ட‌ த‌லைவ‌ர் வாழ்ந்த‌ கால‌த்தில் எங்க‌ட‌ நாட்டு க‌லாச்சார‌ம் எப்ப‌டி இருந்த‌து..............இப்ப‌ எப்ப‌டி இருக்கு , ஈரான் நாட்டு கலாச்சார‌ம் அப்ப‌டி அந்த‌ நாட்டு ம‌க்க‌ள் அதுக்கு ம‌திப்பு அளித்து ந‌ட‌க்க‌னும் , ஈரான் நாட்டு ஜ‌னாதிப‌திக‌ள் சில‌ர் தாடி வ‌ள‌க்க‌ வில்லையே , கோட் சூட் போட்ட‌வ‌ர்க‌ளும் இருக்கின‌ம் , ஈரான் நாட்டு பார‌ம்ப‌ரிய‌ உடை அனிந்த‌வ‌ர்க‌ளும் இருக்கின‌ம்.................... ஈழ‌த்தில் வ‌சிக்கும் பெண்க‌ளே போதை பொருளை ப‌ய‌ன் ப‌டுத்தின‌ம் இப்ப‌ , நாங்க‌ள் சின்ன‌ப் பிள்ளைக‌ளாக‌ இருக்கும் போது எங்க‌ளுக்கு க‌ஞ்சா என்றாலும் என்ன‌ என்று தெரியாது , அதே போல் போதை பொருட்க‌ளும் தெரியாது , ஒரு இன‌த்தின் த‌லைவ‌ரின் ம‌றைவோட‌ ஒரு இன‌ம் எப்ப‌டி சின்ன‌பின்ன‌மாய் போன‌துக்கு ந‌ல்ல‌ ஒரு உதார‌ன‌ம் எங்க‌ட‌ த‌மிழ் இன‌ம்....................... 12வ‌ய‌தோட‌ நான் எங்க‌ட‌ ஊரை விட்டு வ‌ந்து விட்டேன் , இப்ப‌ எங்க‌ட‌ ஊரில் ர‌வுடிக‌ள் , கொள்ளை கும்ப‌ல் , போதைக்கு அடிமையான‌ போன‌ 2கே கிட்ஸ் , ஊரில் கால் வைக்க‌ முடியாது , எப்ப‌டி இருந்த‌ ஊரை இப்ப‌டி நாச‌ம் ப‌ண்ணிட்டாங்க‌ளே என்று நினைத்து வேத‌னை ப‌ட்டு இருக்கிறேன்😥☹️..................... ஈரானில் ayatollah ali khameneiயின் ஆட்சிய‌ க‌லைச்சா , ஈரானும் இன்னொரு குப்பை நாடாக‌ மாறி விடும் , அமெரிக்காவாளும் ச‌ரி இஸ்ரேலாலும் ச‌ரி ayatollah ali khameneiயின் ஆட்சிய‌ க‌வுக்க‌ முடியாது , அவ‌ங்க‌ள் அவ‌ங்க‌ட‌ நாட்டின் மீது தீவிர‌ ப‌ற்று...................ஈரான் நாட்டு க‌லாச்சார‌ம் இப்ப‌டியே தான் போய் கொண்டு இருக்கும்..............எந்த‌ கொம்ப‌ன் வ‌ந்தாலுன் இந்த‌ அர‌சை அக‌ற்ற‌ முடியாது...................இது தான் நித‌ர்ச‌ன‌ உண்மையும் கூட‌ பிரோ............................

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்

1 month 1 week ago
டொனால்ட் டிரம்ப் அவர்கள் நோபல் பரிசுக்கு உகந்தவர் தான். முதல் தடைவையாக அமெரிக்க தலைவர் ஒருவர் பொது வெளியில் இஸ்ரேலை கண்டித்துள்ளார், அதுவும் வசை மொழியில் கண்டித்தது சிறப்பாக உள்ளது 😋

இங்கிலாந்து இந்திய டெஸ்ட் கிரிக்கெட் தொடர்

1 month 1 week ago
இங்லாந் வீர‌ர்க‌ள் அதிர‌டியா விளையாடி வெல்ல‌ப் போராங்க‌ள் , ச‌ம‌ நிலையில் முடிக்க‌ வேண்டிய‌ மைச்சை இந்தியா பின்ன‌னி வீர‌ர்க‌ள் சுத‌ப்பின‌தால் வெற்றி வாய்ப்பு இங்லாந்துக்கு..................... விக்கேட் இர‌ண்டை எடுத்து , மெடின் ஓவ‌ர் சில‌ போட்டால் கூட‌ வெற்றி ச‌ம‌ நிலையில் முடியும்......................

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்

1 month 1 week ago
இஸ்ரேல் காசு கொடுத்து சிறு குழுக்க‌ளை அன்டை நாடுக‌ளுக்கு எதிராக‌ எப்ப‌டி இய‌க்கிய‌தோ , அதையே தான் ஈரானும் செய்யுது , ஆர‌ம்பிச்சு வைச்ச‌வ‌ன் இஸ்ரேல் , இந்த‌ போர் எத‌னால் இவ‌ள‌வு பெரிதாகின‌து , ப‌ல‌ஸ்தீன‌ ம‌க்க‌ளுக்கு தீர்வு , அதாவ‌து த‌னி நாடு................................ யூத‌ர்க‌ளும் அமெரிக்க‌ர்க‌ளும் ந‌ல்ல‌ பிள்ளையாக‌ இருக்க‌ ஈரான் போய் சொன்ன‌தா உங்க‌ளை உல‌க‌வ‌ரை ப‌ட‌த்தில் இருந்து இல்லாம‌ செய்வோம் என‌ இவ‌ர்க‌ள் ஈரானுக்கு செய்த‌ துரோக‌ங்க‌ள் ப‌ல‌........................அணு ஆயுத‌த்தை இவ‌ர்க‌ள் வைத்து ஈரானை மிர‌ட்ட‌ வில்லையா , இஸ்ரேல் அர‌சை சேர்ந்த‌ ஒருத‌ர் போன‌ வ‌ருட‌ம் த‌ங்க‌ளிட‌ம் இருக்கும் அணு குண்டை ஈரான் மீது போட‌னும் என‌ வெறித் த‌ன‌த்தோடு சொல்லும் போது , ஈரானிய‌ர்க‌ளுக்கு எப்ப‌டி இருந்து இருக்கும்....................ஈரான் அணுகுண்டு செய்வ‌தில் த‌வ‌று எதுவும் இல்லை , அவ‌ர்க‌ளின் நாட்டின் பாதுகாப்புக்கு அணுகுண்டு முக்கிய‌ம் , அப்ப‌ தான் அமெரிக்க‌ன் இஸ்ரேல் அட‌ங்குவாங்க‌ள் , ஈரான் அணுகுண்டை சிறு குழுக்க‌ளுக்கு கொடுத்தால் அத‌ன் பின் ஈரானை த‌னிமை ப‌டுத்த‌ வேண்டிய‌து தான் , ஆனால் ஈரான் அப்ப‌டி செய்யாது , ஹிஸ்புள்ளாவுக்கு கூட‌ ஈரான் ச‌க்தி வாய்ந்த‌ குண்டுக‌ளை கொடுக்க‌ வில்லை , அப்ப‌டி கொடுத்து இருந்தா , ஹ‌மாஸ் பிர‌ச்ச‌னையின் போது இஸ்ரேலும் பெருத்த‌ அழிவை ச‌ந்திச்சு இருக்கும்..................ஈரானிய‌ர்க‌ள் முட்டாள்க‌ள் கிடையாது , அவ‌ங்க‌ள் அறிவில் சிற‌ந்த‌வ‌ங்க‌ள்.....................இஸ்ரேல் ப‌ல‌ வாட்டி ஈரான் நாட்டை தாக்கியும் பொறுமைய‌ க‌டை பிடித்த‌வ‌ங்க‌ள் இந்த‌ மாதாம் மொசாட் ஈரானுக்கை இருந்த‌ ப‌டியே செய்த‌ தாக்குத‌லால் தான் கோவ‌த்தின் உச்சிக்கு சென்ற‌வ‌ங்க‌ள் , இதில் ஈரானை குறை சொல்ல‌ முடியாது , வ‌ட‌ கொரியா கிறுக்க‌ன் அணு குண்டு வைத்து இருக்கும் போது , ஈரான் வைத்து இருப்ப‌து த‌வ‌று கிடையாது................... நான் ஈரான் பெண்னுட‌ன் ஒன்னா சாப்பிட்டு இருக்கிறேன் இர‌ண்டு பேரும் ந‌ல்ல‌ ப‌ம்ப‌ல் க‌தை க‌தைச்சு இருக்கிறோம் , அவள் டென்மார்க்கில் வ‌சிப்ப‌தால் த‌லைக்கு துணிய‌ போடுவ‌தில்லை....................ஈரான் நாட்டில் வ‌சிப்ப‌தாக‌ இருந்தால் அந்த‌ நாட்டு அர‌சாங்க‌த்தில் சொல் ப‌டி தான் ந‌ட‌க்க‌னும் அது தான் முறை ......................................

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்

1 month 1 week ago
ஒருகணம் உங்களின் இக்கருத்தைப் பார்த்ததும் நெகிழ்ந்துவிட்டேன். என்னைப்பற்றி என்னைவிட அதிக ஆளமாக நீங்கள் புரிந்து வைத்திருக்கிறீர்கள், இல்லாவிட்டால் "நிச்சயமாக" என்று சொல்வீர்களா, என்ன? சரி, அதை விடலாம். உங்களின் கூற்றிற்கே வரலாம். "முஸ்லீம்களில் உள்ள இனவாதிகளானவர்கள்" ‍ இவ்வாறு உங்களால் அடையாளப்படுத்தப்படுவோர் யார்? இஸ்லாமிய அடிப்படைவாதிகளைக் குறிப்பிடுகிறீர்கள் என்று எடுத்துக்கொண்டு இக்கூற்றிற்கான பதிலை எனக்குத் தெரிந்த வகையில் தர முயல்கிறேன். ஏனென்றால் முஸ்லீம்கள் என்று ஒரு இனம் இல்லை. இஸ்லாம் என்பது அவர்களின் மதம். இஸ்லாமிய அடிப்படைவாதிகளில் மற்றைய மதத்தோரை ஏற்றுக்கொண்டு, சகித்துக்கொண்டு, சமாதானமாக வாழ முயல்வோர் என்று ஒரு பகுதியினர் இருக்கிறார்களா? அப்படியிருந்தால் அவர்கள் மத அடிப்படைவாதிகளாக இருக்கமுடியாது. சரி, மத அடிப்படைவாதிகளாக இருப்போர் மீது இன்னொரு பகுதியினர் (உங்களின் "நிச்சயமான" கருத்தின்படி, என்னால் முண்டுகொடுக்கப்படும் "வெள்ளையினத்தவர்") தாக்குதல் நடத்தினால் அது எவ்வாறு தவறாக இருக்கமுடியும்? அடிப்படைவாதிகளால் உலகிற்குக் கிடைக்கும் நண்மைகள் என்னவென்பதை இங்கே பட்டியலிட்டீர்கள் என்றால் நான் அவர்கள் மீது தாக்குதல் நடத்துவது தவறென்று ஏற்றுக்கொள்கிறேன். தலிபான்களோ, அல்கயிடாவோ, ஐஸிஸோ அல்லது வேறு எந்த இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்போ எவரால்த் தாக்கப்பட்டபோதும் நான் ஆதரவளித்தேன், இனியும் செய்வேன். ஏனென்றால் அவர்களால் இந்த உலகிற்கு கிடைக்கப்போகும் நண்மையென்று எதுவும் இல்லை. மூளைச்சலவை செய்யப்பட்ட மத அடிப்படைவாதிகள் ஏனையவர்களைக் கொல்லுமுன்னர் அவர்களின் முயற்சி தோற்கடிக்கப்படவேண்டும் என்பது எனது அசைக்கமுடியாத் நம்பிக்கை. இறுதியாக, உங்களின் சிந்தனைக்கு ஒன்றை விட்டுச் செல்கிறேன். சோவியத் ஒன்றியத்தின் முன்னாள் குடியரசாக இருந்த செச்சென்னியாவை, அம்மாநிலத்தின் பெரும்பான்மையினத்தவர்களான முஸ்லீம்கள் சுதந்திர பிரதேசமாக அறிவித்தபோது உங்களின் நாயகனான புட்டின் அவர்கள் இருமுறை மிகக்கொடூரமான போர்களை அங்கே கட்டவிழ்த்து விட்டார். பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டும், தலைநகர் குரொஸ்னி எரித்துச் சாம்பலாக்கப்பட்டும், அம்மக்களின் விடுதலைப்போராட்டத்தை"இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் போர்" என்று கூறியே புட்டின் அழித்தார். உங்களிடம் நான் முன்வைக்கும் கேள்வி என்னவென்றால், செச்சென்னியர்களான முஸ்லீம்கள் மீது புட்டின் நடத்திய போரை நீங்கள் ஆதரிக்கிறீர்களா இல்லையா என்பதுதான். முடிந்தால் பதிலளியுங்கள். பின்னர் தொடர்ந்து பேசலாம்.

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்

1 month 1 week ago
இங்கு கேள்வி கேட்கிறீர்களா அல்லது எழுந்தமானமாக நீங்களே சிலவற்றைக் கற்பனை செய்துகொண்டு பின்னர் அவற்றினை நான் நினைப்பதாக எழுதுகிறீர்களா என்று தெரியவில்லை. இருந்தபோதிலும் இவற்றினைக் கேள்வியாக எடுத்துக்கொண்டு பதிலளிக்க முயல்கிறேன். வெள்ளையினம் கும்பலாக இன்னொரு இனத்தை அடித்தல் எனும் கூற்று. இங்கு வெள்ளையென்று யாரைக் குறிப்பிடுகிறீர்கள்? இஸ்ரேலியர்களையும் அமெரிக்கர்களையுமா? அமெரிக்கர்கள் வெள்ளையர்கள் என்பதில் எனக்குச் சந்தேகம் இல்லை. ஆனால் யூதர்கள் வெள்ளையர்களா? அவர்களின் தோலின் நிறத்தை வைத்துச் சொல்கிறீர்கள் போலும். உண்மையென்னவென்றால் யூதர்களில் கறுப்பினத்தவர்களும், எம்மைப்போன்ற நிறமுடையவர்களும் இருக்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. தெரிந்திருந்தால் வெள்ளையினத்தவர்கள் கும்பலாக அடிக்கிறார்களே என்று கேட்கமாட்டீர்கள். அது சரி, ஈரானியர்களும் வெள்ளையினத்தவர்கள் தானே, தோலின் நிறத்தின் அடிப்படையில் பார்த்தால். சரி, அதை விடலாம், ரஸ்ஸியர்களும், உக்ரேனியர்களும் தோலின் நிறத்தால் ஒருவரையொருவர் ஒத்தவர்கள். ஆனால் நீங்களோ ரஸ்ஸியர்களை ஆதரிக்கிறீர்கள். பலஸ்த்தீனர்கள் இஸ்ரேலினால் ஆக்கிரமிக்கப்படுவதைப் பொறுத்துக்கொள்ளாது மிகுந்த சினம் கொண்டு வெகுண்டெழும் நீங்கள், உக்ரேனியர்கள் மீதான ரஸ்ஸியர்களின் ஆக்கிரமிப்பை இன்றுவரை சரியென்று வாதாடுவதுதான் புதிராக இருக்கிறது. சரி, இந்தப் புரிதலில் உங்களுக்கு இருக்கும் கோளாற்றினை நீங்களே சரிசெய்துகொள்வீர்கள் என்கிற நம்பிக்கையில் அதனை இப்போதைக்கு விட்டு விடுகிறேன். உக்ரேன் எனும் சிறிய நாட்டினை ஆக்கிரமித்து அழித்துவரும் ரஸ்ஸியாவை நீங்கள் எந்தவிதமான மனச்சாட்சியும் இல்லாமல் ஆதரிக்கும்போது, இஸ்ரேலினை அழிப்பதே எமது ஒரே இலட்சியம் என்று கூவிக்கொண்டு இஸ்ரேலைச் சுற்றியிருக்கும் தனது அடிப்படைவாத முகவர்களான ஹமாஸ், ஜிஹாத், ஹூத்தீக்கள், ஹிஸ்புள்ளா , சிரியா, ஈராக் ஆகிய நாடுகளின் அடிப்படைவாதிகளைப் பயிற்றுவித்து, ஆயுதம் கொடுத்து, கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணை கொடுத்து போசித்துவரும் ஈரான் மீது இஸ்ரேல் தாக்கும்போது மட்டும் நான் மனச்சாட்சியுடன் நடக்கவேண்டும் என்று கேட்கிறீர்கள். உங்களுக்கே இது அபத்தமாகத் தெரியவில்லையா? முல்லாக்களின் அதிகாரம் நிச்சயமாகப் பிடுங்கப்பட்டு, அவர்களின் காட்டாட்சி அழிக்கப்பட வேண்டும். இதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. 1979 இல் இஸ்லாமியப் புரட்சி என்கிற பெயரில் முல்லாக்கள் ஆரம்பித்து இன்றுவரை செய்துவருவது இஸ்லாமிய அடிப்படைவாதக் காட்டாட்சிதான். இங்கே மக்களின் கருத்துக்களோ, உரிமைகளோ ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. இன்றுவரை முல்லாக்களுக்கு எதிராகப் பேசுவோர், எழுதுவோர், பிரச்சாரம் செய்வோர் கைதுசெய்யப்பட்டு, சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்டே வருகிறார்கள். நீங்கள் வேண்டுமென்றே மறைக்க முனைந்தாலும் ஈரானில் பெண்களுக்கு இருக்கும் கட்டுப்பாடுகள் உலகம் அறியாதது அல்ல. தலைகளை மூடி ஹிஜாப் அணியமாட்டோம் என்று போராடிய பல பெண்களுக்கு நிகழ்ந்த கொடுமைகள் நீங்கள் அறியாமல் இருக்கலாம். முல்லாக்கள் தமது அதிகாரத்தைக் கைவிட்டு, வெளிப்படையான தேர்தல் ஒன்றிற்குச் செல்லட்டும், அப்போது பார்க்கலாம் மக்கள் எம்மாதிரியான‌ ஆட்சியினை விரும்புகிறார்கள் என்று. சர்வாதிகரத்தனமான அடிப்படைவாதிகளின் கீழ் மக்கள் வேறு வழியின்றி வாழ்வதை, மக்கள் விரும்பித்தான் வாழ்கிறார்கள் என்று நினைப்பதும், ஆட்சிமாற்றம் ஒன்று அவசியம் என்று கூறுவோரை, உனது வேலையைப் பார் என்று கூறுவதும் முல்லாக்களுக்கு ஆதரவாக நீங்கள் இருக்கிறீர்கள் என்பதையே காட்டுகிறது. ஈரானிய முல்லாக்களும், தலிபான்களும், அல்கயிடாவும், ஐஸிஸ்களும் ஒரே மாதிரியானவர்கள். மத அடிப்படைவாதத்தால் உந்தப்பட்டு ஏனைய மதத்தவர்களை, சிறுபான்மையினங்களை அழிப்பவர்கள். அல்கயிடாக்களின் கையிலோ அல்லது ஐஸிஸ்களின் கையிலோ அணுவாயுதம் ஒன்று கிட்டுமாயின் அவர்கள் என்ன செய்ய விரும்புவார்களோ அதையே ஈரானின் முல்லாக்களும் செய்வார்கள். ஆகவேதான் அவர்களின் கைகளில் அணுவாயுதம் இருக்கக் கூடாதென்று நான் நினைக்கிறேன்.

அதிரடியாக தொடங்கி… அந்தரத்தில் தொங்கும் திரைப்பயணம்… போதை வழக்கில் சிறை… யார் இந்த ஸ்ரீகாந்த்?

1 month 1 week ago
ஆப்பிள் பெண்ணே நீ யாரோ ஐஸ் கிரீம் சிலையே நீ யாரோ கண்ணில் தோன்றி மறையும் கானல் நீரோ பூமிகாவின் பிளந்த அந்த உதடுகளுக்காவே இந்த படத்தை பலமுறை பார்த்தேன்

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்

1 month 1 week ago
இந்த‌ அடி காணாது ப‌ல‌ஸ்தீன‌ ம‌க்க‌ள் ப‌ட்ட‌ அவ‌ல‌த்தை துன்ப‌த்தை க‌ண்ணீர‌ , ப‌சி ப‌ட்டினிய‌ குழ‌ந்தைக‌ள் மீது குண்டு போட்டு கொடுமையாக‌ கொன்று குவிச்ச‌ யூத‌ர்க‌ள் அதே கொடுமைக‌ளை இவ‌ர்க‌ளும் அனுப‌விக்க‌னும்..................... இதை வாசித்து விட்டு பைய‌னுக்கு ம‌னித‌ நேய‌த்தை நேசிக்க‌ தெரியாது என்று சில‌ர் நினைக்க‌லாம் , இஸ்ரேல் அர‌சு ஹாசாவில் ப‌ல‌ ம‌ருத்துவ‌ம‌னைய‌ தாக்கி அழிச்ச‌வை , புற்றுநோய் ம‌ருத்துவ‌ம‌னைய‌ அழிச்ச‌வை , போர் விதிமீற‌ல‌ செய்த‌வை..................ஈரானிட‌ம் அடி வேண்டி கொடுமைக‌ளை யூத‌ர்க‌ள் அனுப‌விக்க‌ட்டும்...........................................அல்லா அக்ப‌ட்..................

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்

1 month 1 week ago
இந்த வினாவினுள் இரு கேள்விகளை அடக்கியிருக்கிறீர்கள். ஆகவே ஒவ்வொன்றாகப் பதிலளிக்கிறேன். முதலாவது இஸ்ரேலின் சண்டித்தனம் பற்றிய கேள்வி. ஆம், நிச்சயமாக. ஹிட்லரின் காலத்தின் ஆறு மில்லியன் சொந்தங்களை இழந்து, 1967 முதல் இன்றுவரை தன்னைச் சுற்றியிருக்கும் இஸ்லாமிய நாடுகளின் தொடர்ச்சியான அழுத்தத்திற்கும் மத்தியில் தனது இருப்பினைத் தக்கவைத்துக்கொண்டு இன்னொரு இனவழிப்பினை எப்படியாவது தடுத்தே தீருவதென்று தீர்க்கமாக அல்லது உங்களின் புரிதலில் சண்டித்தனமாக நிற்கும் இஸ்ரேலினை என்னால் முழுமையாக விளங்கிக்கொள்ள முடியும். இரண்டாவது கேள்வி, பலஸ்த்தீன மக்கள் முஸ்லீம்கள் என்பதால் அவர்கள் அழிக்கப்படவேண்டுமா என்பது. நிச்சயமாக இல்லை. அவர்கள் முஸ்லீம்களாக இருந்தால் என்ன, கிறீஸ்த்தவர்களாக இருந்தாலென்ன அல்லது யூதர்களாக இருந்தாலென்ன, அவர்கள் அழிக்கப்படக் கூடாது. பலஸ்த்தீனர்கள் மீது இஸ்ரேல் நடத்திவருவது இனக்கொலைதான் என்பதில் எனக்கு எந்தவிதமான சந்தேகமும் இல்லை. அவர்களுடன் இரு தேசங்களுக்கான இணக்கப்பாட்டினை இஸ்ரேல் கண்டிப்பாக ஏற்றுக்கொள்ள வேண்டும். அவர்களுக்கென்று இன்றிருக்கும் பிரதேசங்களில் இருந்து இஸ்ரேல் தனது குடியேற்றங்களை அகற்றிக்கொள்ள வேண்டும், தொடர்ச்சியாக நடத்திவரும் ஆக்கிரமிப்பினை நிறுத்திக்கொள்ள வேண்டும். இதனைச் செய்வதற்கு அமெரிக்கா விரும்புகிறதோ இல்லையோ, ஏனைய நாடுகள் இது தொடர்பான செயற்பாடுகளை தொடர்ச்சியாக முன்னெடுப்பது அவசியமானது. யுத்தக் குற்றங்களிலும், இனக்கொலையிலும் ஈடுபட்ட அரசியல்வாதிகள், தளபதிகள் என்போரது பெயர்கள் வெளிக்கொணரப்பட்டு, பயணத்தடைகள் விதிக்கப்படுதல் அவசியமானது. இதுவே அவர்களின் ஆக்கிரமிப்பு மனோபாவத்தை ஓரளவிற்காவது தடுத்து நிறுத்தும். பலஸ்த்தீன முஸ்லீமும் காத்தான்குடி முஸ்லீமும் ஒன்றென்று நான் கருதுவதாக எதை வைத்துக் கேட்கிறீர்கள் என்று புரியவில்லையே? இக்கேள்வியின் அர்த்தம் என்ன? விளக்கமாக கேட்டீர்கள் என்றால் எனது நிலைப்பாட்டை விளக்குவது இலகுவாக இருக்கும்.

யாழ். மாவட்டத்தின் நிரந்தர அரசாங்க அதிபராக மருதலிங்கம் பிரதீபன் நியமனம்

1 month 1 week ago
யாழ். மாவட்ட அரச அதிபராக கடமைகளை பொறுப்பேற்றார் மருதலிங்கம் பிரதீபன் 24 JUN, 2025 | 12:59 PM யாழ்ப்பாணம் மாவட்ட அரச அதிபராக மருதலிங்கம் பிரதீபன் இன்றைய தினம் (24) சம்பிரதாயபூர்வமக பொறுப்பேற்றுக்கொண்டார். இப்பதவியேற்பு நிகழ்வு யாழ். மாவட்ட செயலகத்தில் மேலதிக மாவட்ட அரச அதிபர் ஸ்ரீமோகன் தலைமையில் மதத் தலைவர்கள், மாவட்ட செயலக ஊழியர்கள், பிரதேச சபையின் செயலர்கள் மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டத்தின் பல்துறைசார் பொறுப்பு நிலை அதிகாரிகள் முன்னிலையில் நடைபெற்றது. முதலில் மாவட்ட செயலகத்துக்கு தனது பாரியாருடன் வருகைதந்த மாவட்ட செயலாளரை, மேலதிக மாவட்ட அரச அதிபர் ஸ்ரீமோகன் கைலாகு கொடுத்து மாலை அணிவித்து வரவேற்றார். அதைத் தொடர்ந்து சக ஊழியர்களால் வரவேற்கப்பட்ட அரச அதிபர் பிரதீபன் மாவட்ட செயலரின் அதிகாரபூர்வ அலுவலகத்தில் கடமைகளை பொறுப்பேற்றிருந்தார். யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பல மாதங்களாக மாவட்ட அரச அதிபர் வெற்றிடம் இருந்துவந்த நிலையில் பதில் அரச அதிபராக கடமையாற்றிவந்த ம.பிரதீபன் சில தினங்களுக்கு முன்னர் யாழ் மாவட்டத்தின் அரச அதிபராக நியமிக்கப்பட்டிருந்தார். அமைச்சரவை அனுமதியின் பிரகாரம் நியமிக்கப்பட்ட பிரதீபனுக்கான நியமனக் கடிதம் கடந்த 20.06.2025 அன்று அமைச்சரவை செயலாளர் W.M.D.J. பெர்னாண்டோவினூடாக பெற்றார். இந்நிலையில் பிரதீபன் இன்றைய தினம் கடமையை பொறுப்பேற்றுக்கொண்டார். மேலும், பிரதீபன் 2024 மார்ச் 9ஆம் திகதி முதல் யாழ்ப்பாண மாவட்டத்தின் பதில் அரசாங்க அதிபராக கடமையாற்றி வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/218309

இலங்கைக்கு விஜயம் மேற்கொள்கின்றார் ஐநாவின் மனித உரிமை ஆணையாளர் - அரசாங்கம் அனுமதி

1 month 1 week ago
மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்துடன் ஒத்துழைப்புடன் செயற்பட அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளது - ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரிடம் பிரதமர் தெரிவிப்பு 24 JUN, 2025 | 02:14 PM ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரை வரவேற்ற பிரதமர் ஹரிணி அமரசூரிய, மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்துடன் (OHCHR) பயனுள்ள விதத்திலும் ஒத்துழைப்புடனும் செயற்படுவதற்கான அரசாங்கத்தின் அர்ப்பணிப்பை வெளிப்படுத்தினார். ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோக்கர் டர்க் (Volker Türk) மற்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு திங்கட்கிழமை (23) பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றது. ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரை வரவேற்ற பிரதமர், மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்துடன் (OHCHR) பயனுள்ள விதத்திலும் ஒத்துழைப்புடனும் செயற்படுவதற்கான அரசாங்கத்தின் அர்ப்பணிப்பை வெளிப்படுத்தினார். சமீபத்தில் இலங்கை அரசியல் ஏற்பட்ட மாற்றம் குறித்து குறிப்பிட்ட அவர், அனைத்து சமூகங்களிடமிருந்தும் கிடைக்கப்பெற்ற வரலாற்று முக்கியத்துவம் மிக்க மக்கள் ஆணையானது இலங்கையின் அரசியல் கலாச்சாரத்தில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை பிரதிபலிக்கிறது என்றும் குறிப்பிட்டார். கிராமப்புற வறுமையை ஒழித்தல், டிஜிட்டல் மயமாக்கலை முன்னெடுத்தல் மற்றும் தேவையான சமூக மாற்றத்தைப் போன்றே நிறுவன ரீதியிலான மாற்றங்களுடன் சட்ட மற்றும் அரசியல் சீர்திருத்தங்களை பின்பற்றுதல்.ஆகிய மூன்று முக்கிய காரணிகளில் அரசாங்கத்தின் கவனம் செலுத்தப்பட்டுள்ளது என்பதை பிரதமர் சுட்டிக்காட்டினார். சமூக, கல்வி, சுகாதார மற்றும் பொருளாதார உரிமைகள் உள்ளிட்ட மனித உரிமைகளின் முழுமையான கட்டமைப்பை பாதுகாத்து மேம்படுத்துவதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகின்றது என்றும் பிரதமர் தெரிவித்தார். காணாமல் போனோர் பற்றிய அலுவலகம், இழப்பீட்டுக்கான அலுவலகம்(OR) மற்றும் தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகம் (ONUR) போன்ற உள்நாட்டு இயங்குதளங்களை வலுப்படுத்துவதன் மூலம் இந்த செயல்முறைக்கு ஆதரவளிக்கப்படும் என்றும் அவர் வலியுறுத்தினார். இதன் போது மனித உரிமைகளை பாதுகாப்பதற்கான இலங்கையின் தொடர்ச்சியான தலையீட்டை பாராட்டிய உயர்ஸ்தானிகர், மனித உரிமைகள், ஜனநாயக ஆட்சி மற்றும் தேசிய நல்லிணக்கத்தை முன்னெடுப்பதில் இருதரப்பு ஒத்துழைப்பின் முக்கியத்துவம் குறித்து விசேடமாகக் குறிப்பிட்டார். இந்த சந்திப்பில் இலங்கைக்கான ஐக்கிய நாடுகளின் நிரந்தர ஒருங்கிணைப்பாளர் Marc-André Franche, ஐக்கிய நாடுகள் அமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகள். இலங்கை தூதுக்குழுவின் சார்பாக பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி, வெளிநாட்டு விவகாரங்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சின் செயலாளர் அருணி ரணராஜா, பிரதமர் அலுவலகத்தினதும் வெளிநாட்டு விவகாரங்கள் பிரிவினதும் சிரேஷ்ட அதிகாரிகள் சிலரும் பங்கேற்றனர். https://www.virakesari.lk/article/218295
Checked
Thu, 08/07/2025 - 00:30
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed