1 month 1 week ago
வணக்கம் வாத்தியார் . ......... ! ஆண் : ஆயிரம் ஜன்னல் வீடு இது அன்பு வாழும் கூடு ஆலமரத்து விழுது இதன் ஆணி வேரு யாரு ஆண் : அடை காக்கிற கோழியப் போலவே இந்த கூட்டைக் காப்பது யாருங்க அழகான அம்மன போலவே எங்க அப்பத்தாவப் பாருங்க ஆண் : ஏய் சுத்துறான் சுத்துறான் காதுலதான் சுத்துறான் வீசுறான் வீசுறான் வலையத்தானே வீசுறான் ஆண் : பாசமான புலிங்க கூட பத்துநாள் தூங்கலாம் பாசமுள்ள இந்த வீட்டில் படிக்கட்டா மாறலாம் ஆண் : வீரபாண்டித் தேரப் போல இந்த வீட்டப் பாரு பாரு வீரமான வம்சத்தாளு இவங்களப் போல் யாரு ஆண் : சித்தப்பாவின் மீசையப் பார்த்தா சிறுத்த கூட நடுங்கும் நடுங்கும் சித்தியோட மீன் கொழம்புக்கு மொத்த குடும்பம் அடங்கும் ஆண் : கோழி வெரட்ட வைரக்கம்மல் கழட்டித்தானே எறிவாங்க திருட்டுப்பயல புடுச்சுக் கட்ட கழுத்துச் செயின அவுப்பாங்க ஆண் : காட்டுறான் காட்டுறான் கலர்படம் காட்டுறான் நீட்டுறான் நீட்டுறான் வாய ரொம்ப நீட்டுறான் ஆண் : சொந்த பந்தம் கூட இருந்தா நெருப்புல நடக்கலாம் குழு : வேலு அண்ணன் மனசுவச்சா நெருப்பயே தாண்டலாம் ஆண் : சொக்கம்பட்டி ஊருக்குள்ள ஒடுதொரு ஆறு ஆறு ஆத்துக்குள்ள அயிரமீனும் சொல்லுது உன் பேரு ஆண் : சுத்துப்பட்டு பதினெட்டுப்பட்டி நாட்டாமதான் யாரு யாரு பஞ்சாயத்து திண்ணையும் சொல்லும் தாத்தாவோட பேரு ஆண் : வாசக்கதவு தொரந்தே இருக்கும் வந்த சொந்தம் திரும்பாது வேட்டையாடப் போனா ஐயா நூறு சிங்கம் புடிப்பாரு ஆண் : ஐயோ வைக்கிறான் வைக்கிறான் ஐசத்தூக்கி வைக்கிறான் கத்துறான் கத்துறான் காரியமா கத்துறான் ஆண் : ஈரமுள்ள இதயம் இருந்தால் ஈட்டியத்தான் தாங்கலாம் குழு : வேலு அண்ணன் மனசவச்சா இந்த வீட்டில் தங்கலாம் ......... ! --- ஆயிரம் ஜன்னல் வீடு ---
1 month 1 week ago
செம்மணி புதைகுழி - சர்வதேச தடையவியல் நிபுணர்களையும் மனித உரிமை நிபுணர்களையும் அழையுங்கள் அனுரவிற்கு கனடிய தமிழர் பேரவை கடிதம் - அணையாவிளக்கிற்கு ஆதரவு Published By: RAJEEBAN 23 JUN, 2025 | 11:07 AM செம்மணி மனிதப்புதைகுழி தொடர்பில் முறையான விசாரணைகள் செய்யுமாறும் அகழ்வு நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறும் உண்மையின் பக்கம் நின்று இதனை கையாளுமாறும் கனடிய தமிழர் பேரவை இலங்கையின் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கு வேண்டுகோள் விடுத்து கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. அதேவேளை செம்மணி மனித புதைகுழியில் புதைக்கப்பட்டவர்களுக்கு நீதிகோரியும் மனிதபுதைகுழி அகழ்வை மேற்கொள்ளவும் வலியுறுத்தி ஜூன் 23 தொடக்கம் 25 வரை இலங்கையில் நடக்கவிருக்கும் அணையா விளக்கு போராட்டத்திற்கும் கனடிய தமிழர் பேரவை தனது ஆதரவைத்தெரிவித்துள்ளது. அந்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது இலங்கையின் வடபகுதியில் செம்மணி சிந்துபாத்தி மயானத்தில் சமீபத்தில் மனித புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டமை குறித்து ஆழ்ந்த கரிசனையுடனும் கவலையுடனும் இந்த கடிதத்தை எழுதுகின்றோம். சிறுவர்கள் உட்பட பலரின் மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளமை தமிழ் சமூகத்தினை மீண்டும் உலுக்கியுள்ளது.இலங்கையிலும் வெளிநாடுகளிலும். இது தனிப்பட்ட ஒரு சம்பவம் இல்லை மாறாக பல தசாப்தகால காணாமல்போதல், அரசபயங்கரவாதம்,பதில்கள் இன்றி பொறுப்புக்கூறல் இன்றி தமிழ் குடும்பங்கள் அனுபவித்துவரும் துயரங்கள் ஏற்றுக்கொள்ளப்படாமை ஆகியவற்றின் துயரம் மிகுந்த பாரம்பரியமாகும். கடந்த 25 வருடங்களாக செம்மணி தமிழ் சமூகத்தின் கூட்டு மனப்பான்மையை கடுமையாக பாதித்துவந்துள்ளது.இந்த பகுதி நம்பகதன்மை மிக்க ஆதாரங்கள் , படுகொலைகள் குறித்த குற்றச்சாட்டுகள்,இரகசியமாக உடல்கள் புதைக்கப்படுதல் ஆகியவற்றுடன் நீண்டகாலமாக தொடர்புபட்ட பகுதியாகும். அதன் மோசமான தன்மை குறித்து தெரிந்திருந்தாலும் சிறிய பகுதியே தோண்டப்பட்டுள்ளது.மேலும் மனித புதைகுழிகளை தோண்டும் நடவடிக்கைகள் உரிய காரணங்கள் தெரிவிக்கப்படாமல் இடையில் நிறுத்தப்பட்டன. மன்னார் ,கொக்குதொடுவாய், திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழிகள் முழுமையாக தோண்டப்படாததும்,தெளிவற்ற விசாரணைகளும், தமிழ் மக்களின் நம்பிக்கைகளை மோசமாக பாதித்துள்ளன. நீதியை உறுதி செய்வதற்காக உடனடியாக நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால் இந்த சமீபத்தைய கண்டுபிடிப்பு உண்மைக்கான மற்றுமொரு வாய்ப்பு தவறவிடப்படுதலாக அமையும். மனித உரிமை நீதிக்காக தன்னை அர்ப்பணித்துள்ள அமைப்பு என்ற அடிப்படையில் இந்த தருணத்தினை தீவிரமாக கருதுமாறு நாங்கள் கேட்டுக்கொள்கின்றோம். உங்கள் அலுவலகத்தை வெளிப்படையான முழுமையான மனித புதைகுழிகளை தோண்டும் கட்டமைப்பை பின்பற்றுமாறு கேட்டுக்கொள்கின்றோம். அது தெளிவான காலவரையறை,முறையியல், பொதுமக்களிற்கு அறிவித்தல் ஆகியவற்றை கொண்டிருக்கவேண்டும். சர்வதேச தடயவியல் நிபுணர்களையும் மனித உரிமை நிபுணர்களையும் அகழ்வு ஆய்வின் ஒரு பகுதியாகயிருப்பதற்கு அழையுங்கள். காணாமல்போனவர்களின் குடும்பத்தவர்களின் ஆக்கபூர்வமான பங்களிப்பை உறுதிசெய்யுங்கள். தலையீடுகள் அல்லது ஆதாரங்களை தங்களிற்கு சாதகமாக மாற்றுதல்ஆகியவற்றை தவிர்ப்பதற்காகஅந்த பகுதியில் பணியாற்றுபவர்களிற்கு போதுமான வளங்களையும் பாதுகாப்பையும் வழங்குங்கள். https://www.virakesari.lk/article/218185
1 month 1 week ago
அமெரிக்காவின் தாக்குதல் - வடகொரியா கடும் கண்டனம் 23 JUN, 2025 | 11:05 AM ஈரானின் அணுஉலைகள் மீதான அமெரிக்காவின் தாக்குதல்களை வடகொரியா கண்டித்துள்ளது. ஈரானின் பாதுகாப்பு நலன்கள் மிக மோசமாக மீறப்பட்டது என தெரிவித்துள்ள வடகொரியா ஈரானின் ஆள்புல உரிமைகளும் மீறப்பட்டதாக தெரிவித்துள்ளது. மேற்குலக நாடுகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டு ஊக்குவிக்கப்பட்ட இஸ்ரேலின் இடைவிடாத போர் நடவடிக்கைகள் மற்றும் பிராந்திய விரிவாக்கத்தினால் உருவான மத்திய கிழக்கின் பதட்டங்களிற்கு அமெரிக்காவும் இஸ்ரேலுமே குற்றவாளிகள் என வடகொரியாவின் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. ஒரு இறையாண்மை கொண்ட நாட்டின் ஆள்புல ஒருமைப்பாடு மற்றும் பாதுகாப்பு நலன்களை வன்முறையாக நசுக்கிய அமெரிக்காவின் தாக்குதலை வடகொரியா கடுமையாக கண்டிக்கின்றது என அந்த நாட்டின் வெளிவிவகார பேச்சாளர் தெரிவித்துள்ளார். அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் நடவடிக்கைகளிற்கு எதிராக நியாயமான சர்வதேச சமூகம் குரல் எழுப்பவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/218190
1 month 1 week ago
சிரிய தலைநகரில் தேவாலயத்தில் தற்கொலை குண்டு தாக்குதல்; 22 பேர் உயிரிழப்பு Published By: DIGITAL DESK 3 23 JUN, 2025 | 10:53 AM சிரியாவின் தலைநகர் டமஸ்கஸில் உள்ள தேவாலயம் ஒன்றில் இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதலில் 22 பேர் உயிரிழந்துள்ளதோடு, 63 பேர் காயமடைந்துள்ளனர். இதனை சிரிய சுகாதார அமைச்சு உறுதிப்படுத்தியள்ளது. டமஸ்கஸ், ட்வீலா பகுதியிலுள்ள தேவாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை (22) ஆராதனை நடைபெற்றுள்ளது. இதன்போது, தேவாலயத்துக்குள் வந்த நபரொருவர் துப்பாக்கி சூட்டை மேற்கொண்டு தற்கொலை குண்டு தாக்குதலை நடத்தியுள்ளார். தற்கொலை குண்டு தாக்குதலை ஐஎஸ் அமைப்பைச் சேர்ந்த நபர் மேற்கொண்டதாக் கூறப்பட்டாலும், அந்த அமைப்பு இந்த சம்பவத்தை இதுவரை உரிமைகோர வில்லை. குண்டு தாக்குதலில் தேவாலயத்திற்குள் பலிபீடத்துக்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதோடு, உடைந்த கண்ணாடியால் மூடப்பட்டிருக்கும் பீடங்கள் மற்றும் சுவர்களில் இரத்தம் சிதறிக் கிடப்பது புகைப்படங்கள் மற்றும் வீடியோவில் பதிவாகியுள்ளன. சம்பவத்தை நேரில் பார்த்த லாரன்ஸ் மாமாரி, யாரோ ஒருவர் தேவாலயத்திற்குள் ஆயுதம் ஏந்தி நுழைந்து துப்பாக்கிச் சூட்டை நடத்தினார். அவர் குண்டை வெடிக்க செய்வதற்கு முன்னர் மக்கள் அவரை தடுக்க முயன்றனர் என அவர் ஏப்பி செய்தி சேவைக்குத் தெரிவித்துள்ளார். இலங்கையிலும் இதேபோன்றதொரு சம்பவம் 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி இடம்பெற்றது. அதில், 250க்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதோடு, 219 பேர் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/218182
1 month 1 week ago
நிலத்தடி நீர்த் தேவை பற்றிய ஆய்வு Jun 22, 2025 - 10:20 - யாழ்ப்பாணத்தில் வழுக்கியாற்றைப் புனரமைப்பு செய்து நிலத்தடி நீர்த் தேவை மற்றும் விவசாய தேவைகளை பூர்த்தி செய்வதற்கான ஆய்வு ஒன்றினை யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவபீட மாணவர்கள் நேற்று (21) ஆரம்பித்தனர். யாழ்ப்பாணம் வறுத்தலைவிளான் பிள்ளையார் ஆலயத்தில் ஆரம்பிக்கும் வழுக்கையாற்றில் கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள், அரச திணைக் களத்தை சேர்ந்தவர்கள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். குறித்த ஆராய்ச்சி பயணத்தில் வருத்தலைவிளான் பகுதியில் ஆரம்பிக்கும் வழுக்கையாற்று பயணம் அராலியில் முடிவடையும். இதன்போது பொறியியலாளர்கள், விவசாயிகள், பொதுமக்கள் மற்றும் மருத்துவ பீடம் மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். -யாழ். நிருபர் பிரதீபன்- https://adaderanatamil.lk/news/cmc76w60i0076qp4khyhg75fy
1 month 1 week ago
LUNCH 1st Test, Leeds, June 20 - 24, 2025, India tour of England India (48 ov) 471 & 153/3 England 465 Day 4 - Session 1: India lead by 159 runs. Current RR: 3.18 • Min. Ov. Rem: 66 • Last 10 ov (RR): 28/0 (2.80)
1 month 1 week ago
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, தெற்கு இஸ்ரேலில் உள்ள டிமோனா அணுஉலை கட்டுரை தகவல் எழுதியவர், அலிசியா ஹெர்னாண்டஸ் பதவி, பிபிசி முண்டோ 23 ஜூன் 2025, 01:22 GMT இஸ்ரேலிடம் அணு ஆயுதம் 1960கள் முதலே இருக்கிறது என்பது அனைவரும் அறிந்த ஒரு ரகசியம். ஆனாலும் இதனை இஸ்ரேல் ஒருபோதும் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்ததில்லை. கடந்த வாரம் இரான் மீது ராணுவ தாக்குதலை இஸ்ரேல் தொடங்கியது. "அணு ஆயுதத்தை தயாரிக்கும் நிலையை இரான் எட்டியிருக்கிறது" என இஸ்ரேல் குற்றம் சாட்டியது. பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசி இரான் பதில் தாக்குதல் நடத்திய நிலையில், இரு நாடுகளிடையேயான போராக மாறியது. அமைதி ஆராய்ச்சிக்கான சுயாதீன அமைப்பான அமைதிக் கல்விக்கான டாலஸ் மையத்தின் (Dallas Center for Peace Studies) ஆராய்ச்சியாளரான முனைவர் ஜேபியர் பிகஸ் பேசுகையில், "மத்திய கிழக்கில் அணு ஆயுதம் வைத்திருக்கும் ஒரே நாடு இஸ்ரேல் தான்" என்று கூறினார். சர்வதேச அணுசக்தி முகமையின் தகவல்படி, யுரேனியத்தை செறிவூட்டுவதில் 60 சதவிகிதத்தை இரான் எட்டியுள்ளது. ஆனால் பிகஸ் அளிக்கும் விளக்கத்தின்படி, "அணு ஆயுதத்தை தயாரிக்க யுரேனியம் 90 சதவிகிதத்துக்கு மேல் செறிவூட்டப்பட்டிருக்க வேண்டும்" இஸ்ரேல் ஒருபோதும் அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை. மாறாக, இரான், அமெரிக்கா மற்றும் ரஷ்யா இந்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டுள்ளன. இதன் பொருள் என்னவென்றால், அணு ஆயுதங்கள் தொடர்பான எந்த ஆய்வுக்கும் இஸ்ரேல் அணு சக்தி மையங்களை உட்படுத்த முடியாது. இதன் காரணமாகத் தான் இஸ்ரேலின் அணு ஆயுதங்கள் தொடர்பான எந்த தகவல்களும் கசியவிடப்படுவதன் மூலமே பெறப்படுகின்றன. அமெரிக்காவின் பாதுகாப்பு மற்றும் எரிசக்தித்துறை மற்றும் அணு சக்தி குறித்து கண்காணிப்பு மேற்கொள்ளும் சர்வதேச முகமைகள் மூலமாகவே இந்த தகவல்கள் வெளிப்படுகின்றன. இது தவிர, இஸ்ரேலின் அணுசக்தி திட்டங்களில் வேலை பார்த்து, பின்னர் அங்கிருந்து பணி நீக்கம் செய்யப்பட்டவரான அணு பொறியாளர் மாவ்டுகாய் வானுனு 1986ம் ஆண்டு சன்டே டைம்ஸ் இதழுக்கு அளித்த பேட்டியின் மூலமாகவும் பல தகவல்கள் கிடைத்தன. இஸ்ரேலிடம் அணு ஆயுதத்திட்டம் செயல்பாட்டில் இருக்கிறது என்பதை முதன்முதலில் வெளிப்படுத்திய இவர், பல ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டார். அமிமுட் அல்லது வேண்டுமென்றே தெளிவற்ற நிலை பட மூலாதாரம்,AFP/GETTY IMAGES படக்குறிப்பு, அணு ஆயுதங்கள் குறித்து "தெளிவின்மை" கொள்கையை கடைபிடிக்கும் இஸ்ரேல் இஸ்ரேலின் அணு ஆயுதம் குறித்த அதிகாரப்பூர்வ கொள்கையானது அமிமுட் (Amimut) என்ற ஹீப்ரு மொழி வார்த்தையால் குறிப்பிடப்படுகிறது. இதற்கு வேண்டுமென்றே தெளிவின்மையை ஏற்படுத்துதல் என பொருள் கொள்ளலாம். அதாவது, ஏற்கெனவே கூறியது போன்று அணு ஆயுதம் இருக்கிறதா என்பதை இஸ்ரேல் உறுதிப்படுத்தவோ அல்லது மறுக்கவோ இல்லை. "இஸ்ரேலின் இந்த அணுகுமுறை அணு யுகத்தில் தனித்துவமானது என கருதலாம்" என, பிரிட்டனின் ஹவுஸ் ஆஃப் லார்ட்ஸ்க்கு எழுதிய கட்டுரையில் குறிப்பிடுகிறார் பேராசிரியர் ஆவ்னெர் கோஹன். இவர் அணு ஆயுத பரவலை தடுப்பதற்கான கல்விகளுக்கான பேராசிரியர் என்பதோடு, இஸ்ரேல் அணு திட்டங்கள் குறித்த நிபுணராகவும் அறியப்படுகிறார். இந்த திட்டம் முற்றிலும் புதிது அல்ல இஸ்ரேலின் அதிபராகவும், பிரதமராகவும் இருந்துள்ள ஷிமோன் பெரஸ் தமது நினைவுக் குறிப்புகளில் இதனை எழுதியுள்ளார்: "தெளிவின்மைக்கு அசாதாரணமான சக்தி இருக்கிறது. சந்தேகம் என்பது இரண்டாவது ஹோலோகாஸ்ட்டை திட்டமிடுபவர்களுக்கு எதிரான சிறந்த தடுப்பரணாக இருக்கும்" என குறிப்பிட்டுள்ளார். கோஹன் கூறுகையில், "அணு சக்தி குறித்த தெளிவின்மை இஸ்ரேலின் மூலோபாய மற்றும் ராஜீய ரீதியான சாதனை" என குறிப்பிடுகிறார். அவரது கருத்தின்படி, சர்வதேச சமூகத்தின் மறைமுக ஒப்புதலுடன் கூடிய இந்த திட்டமானது "இஸ்ரேல் இரண்டு சூழ்நிலைகளிலும் பலனடைய உதவி செய்கிறது" என கூறியுள்ளார். "இஸ்ரேல் வேண்டுமேன்றே தெளிவற்ற தன்மையைத் தேர்வு செய்துள்ளது. இந்த நாடு அணுஆயுத பரவலை தடுப்பதற்கான எந்த ஒப்பந்தத்திலும் இணையவில்லை. இதனால் சர்வதேச அமைப்புகளின் எந்த ஆய்வுக்கும் உட்பட வேண்டியதில்லை" என பிபிசி முன்டோவிடம் கூறியுள்ளார் ஜேபியர் பிகஸ். "ராணுவ விவகாரங்களில் இஸ்ரேல் மட்டுமல்ல, உலகின் பல நாடுகள் வெளிப்படைத் தன்மை இல்லாமல் தான் உள்ளன. ஆனால், இஸ்ரேல் அணுசக்தி சார்ந்த விவகாரங்களிலும் வெளிப்படைத்தன்மை இன்றி இருக்கிறது " என்கிறார் பிகஸ். அவர் மேலும் கூறுகையில், "இஸ்ரேலின் பார்வையிலிருந்து இதனை அணுகும்போது, இந்த தெளிவின்மை அதன் விருப்பங்களை பாதுகாக்கிறது" என்கிறார். "இதில் உண்மை என்னவென்றால், இஸ்ரேலிடம் அணுசக்தி திட்டம் உள்ளது என்பது நமக்கு தெரியும், அந்நாட்டிடம் குண்டுகள் உள்ளன என்பதும் தெரியும். அவற்றை பயன்படுத்தும் திறனும் அந்நாட்டுக்கு இருக்கிறது என்பதையும் நாம் அறிவோம்" என பிகஸ் கூறுகிறார். பட மூலாதாரம், AHMAD GHARABLI/AFP/GETTY IMAGES "இந்த தெளிவின்மை வெளியிலிருந்து வந்த தகவல்களால் தான் உடைக்கப்பட்டது. இஸ்ரேல் ஒருபோதும் இதனை மறுக்கவோ, ஒப்புக்கொள்ளவோ இல்லை" என தமது அறிக்கையில் கூறும் கோஹன், "இந்த கொள்கை தனது இருப்பியலுக்கு எதிரான அச்சுறுத்தலில் இருந்து தற்காப்பு அளிப்பதோடு, அணு ஆயுதங்களை வைத்திருப்பதற்கு எதிரான அரசியல் பின்விளைவுகளிலிருந்தும் பாதுகாப்பு அளிக்கிறது. மேலும் அணு ஆயுதங்களை வைத்திருப்பதற்காக அரசியல், ராஜ்ஜீய மற்றும் தார்மீக விலைகளையும் இஸ்ரேல் கொடுப்பதில்லை" என கோஹன் கூறுகிறார். இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு ஆதரவு பத்திரிகையான 'இஸ்ரேல் ஹாயோம்' அந்நாட்டில் மிகப்பெரிய சந்தாதாரர்களைக் கொண்ட இலவச பத்திரிகையாக அறியப்படுகிறது. இந்த இதழில் வெளியான நீண்ட கட்டுரையில் இஸ்ரேல் தனது அணு சக்தி திறன் குறித்து ஏன் எச்சரிக்கையாக இருக்கிறது என விளக்கப்பட்டுள்ளது. இந்த பத்திரிகையின் கருத்துப்படி, "அணு ஆயுதப் பரவலை எந்த விலை கொடுத்தேனும் தடுக்க வேண்டும் என்பது தான் இஸ்ரேலின் முதன்மை இலக்கு" என கூறப்பட்டுள்ளது. தெளிவின்மை கொள்கையின் ஆதரவாளர்களின் கூற்றுப்படி, "இந்த அணுகுமுறையை கைவிடுவது மத்தியக் கிழக்கில் அணு ஆயுதப்போட்டி விரிவடைவதற்கும், ஆயுதப் போட்டிக்கும் ஊக்கியாக அமையும்" என கூறப்பட்டுள்ளது. ஆனால், ஆயுதக் கட்டுப்பாடு மற்றும் பரவலை தடுப்பதற்கான மையத்தின் வாதம் வேறாக உள்ளது. வெளிப்படைத் தன்மையற்று இருப்பது "மத்தியக் கிழக்கில் பேரழிவு ஆயுதங்கள் இல்லாத சூழலை ஏற்படுத்த தடையாக இருப்பதாக" அந்த மையம் கூறுகிறது. இஸ்ரேலிடம் அணுசக்தி திட்டம் இருப்பதை எப்படி அறியலாம்? பட மூலாதாரம்,SATELLITE IMAGE (C) 2020 MAXAR TECHNOLOGIES/GETTY IMAGES படக்குறிப்பு, நெகெவ் அணு ஆராய்ச்சி மையத்தின் செயற்கைக்கோள் புகைப்படம் இஸ்ரேலின் அணுசக்தித்திறன் குறித்த முதல் தகவலானது 1962ம் ஆண்டு அமெரிக்காவின் வெளியுறவு அமைச்சகத்தின் குறிப்பாணை ஒன்றின் மூலம் வெளிப்பட்டது. இதில், பிரான்ஸ் மற்றும் இஸ்ரேலுக்கு இடையே 1950களில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் மூலம் தெற்கு இஸ்ரேலின் டிமோனா நகரத்தில் அணு மின் நிலையம் ஒன்று அமைக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டிருந்தது. "பிரான்ஸ் உடனான ஒத்துழைப்பு என்பது புளூட்டோனியத்தை உற்பத்தி செய்யும் அணுஉலையை கட்டமைப்பது" என்கிறார் பிகஸ். கூகுள் வரைபட உதவியுடனான தேடுதலின் முடிவில், "நெகெவ் அணு ஆராயச்சி மையம்" டிமோனா நகரிலிருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் பாலைவனத்தின் நடுவே இருப்பதாக அறிய முடிகிறது. முதலில் இந்த வளாகத்துக்கு ஜவுளி தொழிற்சாலை, உலோகவியல் ஆராய்ச்சி மையம், வேளாண் வளாகம் என பல்வேறு அறிமுகங்கள் கொடுக்கப்பட்டன. சில காலத்துக்குப் பிறகு 1960களில் அப்போதைய இஸ்ரேல் பிரதமரான டேவிட் பென் குரியன், நாட்டின் அணுசக்தி திட்டம் குறித்து பொதுவெளியில் அறிவித்தார். இஸ்ரேலிய நாடாளுமன்றத்தில் அவர் பேசுகையில், அணு ஆராய்ச்சி மையமானது "அமைதி நோக்கங்கள்" கொண்டிருப்பதாகக் கூறினார். அமெரிக்காவின் பாதுகாப்பு மற்றும் எரிசக்தித் துறைகளின் விசாரணை அறிக்கைகள், "இஸ்ரேலிடம் அணு ஆயுத திட்டம் இருக்கிறது என்பதை தெளிவாக காட்டுகின்றன" என்கிறார் பிகஸ். ரகசிய ஆவணங்களாக இருந்து பின்னர் வெளியிடப்பட்ட சில ஆவணங்களின் மூலம், குறைந்தது 1975 வரையிலும் இஸ்ரேல் அணு ஆயுதங்களை தயாரித்தது என்பதில் அமெரிக்க அரசு உறுதியாக இருந்தது என்பது தெரியவந்துள்ளது. ஆனால், இஸ்ரேலின் அணுசக்தி திட்டங்கள் குறித்த வரலாற்றில் முக்கிய திருப்புமுனையானது ஒரு நபரின் பெயருடன் தொடர்புடையது: அவர் தான் மாவ்டுகாய் வானுனு சன்டே டைம்ஸ் இதழுக்கு அளித்த பேட்டி பட மூலாதாரம், DAN PORGES/GETTY IMAGES படக்குறிப்பு, டிமோனா அணுசக்தி மையத்தில் பணியாற்றிய வானுனு 1980களில் இஸ்ரேலின் அணுசக்தி திட்டங்கள் குறித்த கூடுதல் விவரங்கள் வெளியாயின. வானுனு டிமோனா அணு உலையில் 1985ம் ஆண்டு வரையிலும் 9 ஆண்டுகள் வேலை பார்த்துள்ளார். அங்கிருந்து வெளியேறும் முன்னதாக வளாகத்தை இரண்டு முறை முழுமையாக புகைப்படம் எடுத்திருக்கிறார். இந்த புகைப்படங்கள் அணு ஆயுத தயாரிப்புக்காக கதிரியக்கத் தன்மை கொண்ட பொருட்கள் பிரித்தெடுக்கப்படுவது மற்றும் தெர்மோநியூக்ளியர் ஆயுத வடிவமைப்புக்கான ஆய்வகங்களையும் காட்டின. 1986ம் ஆண்டில் ஆஸ்திரேலியா சென்ற வானுனு அணுசக்தி எதிர்ப்பு அமைப்பினரை சந்தித்தார். கொலம்பியாவைச் சேர்ந்த சுயாதீன பத்திரிகையாளரான ஆஸ்கர் கெரேரோவைச் சந்தித்த போது, இந்த புகைப்படங்களை வெளியிட சம்மதித்தார். இதன் மூலமாக வானுனு பிரிட்டிஷ் சன்டே டைம்ஸ் இதழுக்கு வேலை பார்க்கும் பீட்டர் ஹன்னம் எனும் பத்திரிகையாளரை சந்தித்தார். பிபிசியின் "விட்னஸ் டூ ஹிஸ்டரி" நிகழ்ச்சிக்கு பேட்டி அளித்த பீட்டர் இந்த தகவல்களை வெளியிடுவதன் மூலம், இஸ்ரேல் சர்வதேச அழுத்தத்துக்கு ஆளாகி அணுசக்தி திட்டத்தை நிறுத்தும் என வானுனு நம்பினார் என கூறினார். ஆனால், இந்த நம்பிக்கை எதுவும் நிறைவேறவில்லை. இந்த நிகழ்ச்சியில் வெளியான தகவல்களின்படி, அணுசக்தி குறித்த தகவல் வெளியானதும் வானுனு கடத்தப்பட்டு, போதை மருந்து கொடுக்கப்பட்டு இஸ்ரேல் கொண்டு செல்லப்பட்டார். விசாரணைக்குப் பின்னர் தேசத் துரோகம் மற்றும் உளவு பார்த்து இஸ்ரேலின் அணு ஆயுத ரகசியங்களை வெளியிட்ட குற்றச்சாட்டுக்காக 18 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. 2004ம் ஆண்டு அவர் விடுதலை செய்யப்பட்டார். அப்போது பேசிய அவர், தனது செயலுக்காக "மகிழ்ச்சியும் பெருமையும்" அடைவதாகக் கூறினார். ஆனால் அவர் விடுதலை செய்யப்பட்ட பின்னர், அவருக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை மீறியதற்காக மீண்டும் தண்டிக்கப்பட்டார். இம்முறை வெளிநாட்டினருடன் பேசவும், இஸ்ரேலை விட்டு வெளியேறவும் அவருக்கு தடை விதிக்கப்பட்டது. வானுனு வெளிப்படுத்திய பின்னர் இஸ்ரேலிடம் அணு ஆயுத திட்டம் இருப்பது வெளிப்படையாக ஒப்புக் கொள்ளப்பட்டது. இஸ்ரேலிடம் எத்தனை அணு ஆயுதங்கள் உள்ளன? பட மூலாதாரம், RONEN ZVULUN/POOL/AFP/GETTY IMAGES மாவ்டுகாய் வானுனு வெளியிட்ட தகவல்களின் அடிப்படையில், அந்நாளில் இஸ்ரேலிடம் 100 முதல் 200 அணு ஆயுதங்கள் இருக்கலாம் என மதிப்பிடப்பட்டது. தற்போதைய சூழலில் ஸ்டாக் ஹோம் அமைதி ஆராய்ச்சி நிறுவனம் போன்ற, அணு செயல்பாட்டு கண்காணிப்பு நிறுவனங்களின் மதிப்பீட்டின்படி, இஸ்ரேலிடம் சுமார் 90 அணு ஆயுதங்கள் இருக்கலாம். இந்த ஆயுதங்களை தயாரிப்பதற்கான புளூட்டோனியம் டிமோனாவில் உள்ள நெகெவ் அணு ஆராய்ச்சி மையத்தில் தயாரிக்கப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது. இஸ்ரேலால் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்ட தகவல்களின்படி, இந்த அணு உலையானது 26 மெகாவாட் திறனுடைய வெப்ப உலையைக் கொண்டுள்ளது. ஆனால், இதன் உண்மையான திறன் இன்னும் அதிகமாக இருக்கலாம் என சிலர் நம்புகின்றனர். இஸ்ரேலின் மற்ற பகுதிகளில் உள்ள அணு திட்டங்களைப் போன்று இந்த உலையானது சர்வதேச அணுசக்தி முகமையின் பாதுகாப்பு நெறிமுறைகளுக்கு உட்பட்டதல்ல. பாதுகாப்பு நெறிமுறைகளானது அணு கட்டமைப்புகள் அமைதியான நோக்கங்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்படுவதை உறுதி செய்வதோடு வேறு நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படுவதை தடை செய்கிறது. ஆனால், இஸ்ரேல் அதிகாரப்பூர்வ தகவல்கள் எதையும் கொடுக்காத போது, அணு ஆயுதங்களின் எண்ணிக்கையை எப்படி கணக்கிட முடியும்? "சர்வதேச அமைப்புகள் அணு திட்டங்களை கண்காணித்து, ஆண்டுதோறும் ஆயுதங்கள் குறித்த மதிப்பீடுகளை வழங்குகின்றன" என்கிறார் பிகஸ். "குறைவான தகவல்களையே கொண்டிருக்கும் இஸ்ரேல் மற்றும் வடகொரியா போன்ற நாடுகளைப் பொருத்தவரையிலும், கடந்த ஆண்டில் உற்பத்தி செய்யப்பட்ட யுரேனியம் மற்றும் புளூட்டோனியத்தின் உத்தேச அளவு மதிப்பிடப்பட்டு இதன் மூலம் அணு ஆயுதங்கள் கணக்கிடப்படும்" என பிகஸ் விளக்குகிறார். அணு உலைகள் இயங்கிய நேரம் மற்றும் அவற்றின் திறன் ஆகியவற்றை கணக்கில் கொண்டு, இவற்றில் தயாரிக்கப்படும் அணு பிளவு பொருளின் அளவு மதிப்பிடப்படுகிறது. சுமார் 50 அணு ஆயுதங்களை வைத்திருக்கும் வடகொரியாவுக்கோ அல்லது இஸ்ரேலுக்கோ பின்பற்றப்படும் இந்த அணுகுமுறையானது முற்றிலும் புதிது அல்ல. 2011-ல் நியூ ஸ்டார்ட் ஒப்பந்தம் கையெழுத்தாகும் முன்பு , அணு உலைகளில் காலமுறைப்படியான ஆய்வுகள் மற்றும் அதிகாரப்பூர்வ அறிக்கைகள் கட்டாயமாக்கப்படவில்லை. அப்போது, சர்வதேச அமைப்புகள் சோவியத் ஒன்றியம் அமெரிக்காவிடம் இருக்கும் அணு ஆயுதங்களை தோராயமாகவே கணக்கிட்டன என்று பிகஸ் கூறுகிறார். "இந்த மதிப்பீடுகள் பின்னாளில் ஆய்வு நடத்தப்பட்டு வெளியான அறிக்கைகளுடன் ஒத்துப்போயின. எனவே, இஸ்ரேலுக்கான தற்போதைய கணக்கீடு உண்மைக்கு நெருக்கமாக இருக்கும் என நாம் கூறலாம்" என பிகஸ் கூறுகிறார். அணு ஆயுதமற்ற நாடாக மாற முடியுமா? பட மூலாதாரம்,REUTERS 2012-ஆம் ஆண்டில் ஐ.நா. பொதுசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம், இஸ்ரேல் தனது அணுசக்தி திட்டங்களை சர்வதேச ஆய்வுக்கு அனுமதிக்குமாறு வலியுறுத்தியது. இஸ்ரேலை அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் இணைய வலியுறுத்தும் இந்த தீர்மானத்துக்கு எதிராக இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் கனடா வாக்களித்தன. 1970-ஆம் ஆண்டு இந்த அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் இரான் கையெழுத்திட்டது. சமீப நாட்களில் இரான் மீதான இஸ்ரேலின் தாக்குதலைத் தொடர்ந்து, இந்த ஒப்பந்தத்திலிருந்து வெளியேறுவது குறித்து இரான் நாடாளுமன்றம் ஆலோசித்து வருவதாக, அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் இஸ்மாயில் பாகெய் குறிப்பிட்டார். மறுபுறம் மத்திய கிழக்கு பிராந்தியத்தை அணு ஆயுதமற்ற பகுதியாக அறிவிக்கும் தீர்மானமானது ஐ.நா. பொதுச்சபையில் அவ்வப்போது முன்மொழியப்படுகிறது. "இந்த முன்மொழிவை இஸ்ரேல் மறுத்துவிட்டதோடு, இதனை தனது இறையாண்மை மீதான தாக்குதல்" என்றும் விமர்சிக்கிறது என்கிறார் பிகஸ். அவரது கூற்றுப்படி, ஐக்கிய நாடுகள் அவையின் ஆயுதக்குறைப்பு ஆராய்ச்சி நிறுவனத்தின் பத்திரிகை காப்பக அறிக்கைகளின்படி, இதுபோன்ற கட்டுப்பாடுகள் பிராந்தியத்தில் உள்ள உண்மையான அபாயங்களை குறைக்காது என இஸ்ரேல் விளக்கம் அளித்துள்ளது. ஜேபியர் பிகஸ் வலியுறுத்துவது என்னவென்றால், "எந்த ஒரு நாடு அணு ஆயுதங்களை வைத்திருப்பதும் கவலை அளிக்கக்கூடியது தான். ஏனென்றால், இந்த ஆயுதங்களை வைத்திருப்பது இயல்பாகவே ஆபத்தானது" என்கிறார். "ஆனால் உண்மையில் இஸ்ரேல், ஐக்கிய நாடுகள் அவையின் தீர்மானங்களை மீண்டும் மீண்டும் மீறி வருகிறது. சர்வதேச சட்டங்கள், மனிதாபிமான சட்டங்களை தொடர்ந்து புறக்கணிக்கும் இஸ்ரேலிடம் அணு ஆயுதங்கள் உள்ளன. வேறு எந்த நாடும் அவற்றைத் தடுக்கவோ, கட்டுப்படுத்தவோ முடியுது என்பது இந்த விஷயத்தை இன்னும் கவலையடையச் செய்கிறது" என பிகஸ் கூறுகிறார். இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cnvm326v8njo
1 month 1 week ago
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம் பதவி, பிபிசி தமிழ் 23 ஜூன் 2025, 06:31 GMT புதுப்பிக்கப்பட்டது 27 நிமிடங்களுக்கு முன்னர் தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தலில் நெருங்கி வரும் வேளையில், திமுக கூட்டணியில் கூடுதல் இடங்கள், ஆட்சியில் பங்கு என்கிற குரல்கள் மீண்டும் ஒலிக்கத் தொடங்கியுள்ளன. விசிகவைத் தொடர்ந்து காங்கிரசிலும் ஆட்சியில் பங்கு என்ற பேச்சுகள் வந்துள்ளன. "கடந்த முறை 25 தொகுதிகளில் போட்டியிட்டோம். இந்தமுறை அதிக தொகுதிகளை தி.மு.க-விடம் கேட்போம். பேச்சுவார்த்தையின்போது, அமைச்சரவையில் பங்கு கேட்போம்" - என்று கிள்ளியூர் தொகுதி எம்.எல்.ஏ-வும் காங்கிரஸ் சட்டமன்றக் குழுத் தலைவருமான ராஜேஷ்குமார் கூறியுள்ளார். இதனை மறுக்கும் தி.மு.கவே, 'கூட்டணி ஆட்சியை தமிழ்நாட்டு மக்கள் ஏற்க மாட்டார்கள்' என்று கூறுகிறது. கூட்டணிக் கட்சிகளால் தி.மு.க-வுக்கு நெருக்கடியா? தமிழ்நாட்டு அரசியலில் என்ன நடக்கிறது? 'ஆட்சியில் பங்கு ' கடந்த சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் கட்சி 25 தொகுதிகளில் போட்டியிட்டு 18 இடங்களில் வெற்றி பெற்றது. முந்தைய தேர்தல்களுடன் ஒப்பிடுகையில் தங்களுக்கு குறைவான தொகுதிகளே ஒதுக்கப்பட்டதாக அப்போதே காங்கிரஸ் நிர்வாகிகள் மத்தியில் முணுமுணுப்புகள் எழுந்தன. எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் திமுகவிடம் கூடுதல் தொகுதிகளை கேட்டுப் பெற வேண்டும் என்று காங்கிரஸ் நிர்வாகிகள் இப்போதே பேசத் தொடங்கியுள்ளனர். படக்குறிப்பு, தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் ராஜேஷ்குமார் கன்னியாகுமரியில் வெள்ளிக்கிழமையன்று (ஜூன் 20) செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் ராஜேஷ்குமார், "கடந்த முறை 25 தொகுதிகளில் போட்டியிட்டோம். இந்தமுறை அதிக தொகுதிகளை தி.மு.க-விடம் கேட்போம்" என்றார். "காங்கிரஸ் ஒரு தேசிய கட்சி. தமிழ்நாட்டின் நிலவரத்தை காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர்களிடம் தெரிவித்துள்ளோம். பேச்சுவார்த்தை நடக்கும் போது, 'அமைச்சரவையில் பங்கு வேண்டும், ஆட்சியில் பங்கு வேண்டும்' என்று கேட்போம்" என அவர் குறிப்பிட்டார். "துணை முதல்வர் பதவி...தராவிட்டால் மாற்று வழி" பட மூலாதாரம்,FACEBOOK/KRISHNAMURTHY படக்குறிப்பு, குறைந்தது 40 இடங்களைப் பெற வேண்டும் என்பதில் தலைமை உறுதியாக இருக்க வேண்டும் என்கிறார், பொன்.கிருஷ்ணமூர்த்தி இதே கருத்தை பிபிசி தமிழிடம் முன்வைத்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் துணைத் தலைவர் பொன்.கிருஷ்ணமூர்த்தி, "கடந்த தேர்தலில் குறைவான தொகுதிகளை முடிவு செய்ததன் பின்னணியில் மூத்த காங்கிரஸ் தலைவர் ஒருவர் இருந்தார். தி.மு.க-வின் கோரிக்கையை ஏற்று குறைந்த இடங்களில் போட்டியிட்டோம்" எனக் கூறுகிறார். "ஆனால், 2026 தேர்தலில் குறைந்தது 40 இடங்களைப் பெற வேண்டும் என்பதில் தலைமை உறுதியாக இருக்க வேண்டும்" எனக் கூறும் பொன்.கிருஷ்ணமூர்த்தி, "அவ்வாறு கொடுக்காவிட்டால் மாற்று வழிகளை கட்சித் தலைமை ஆலோசிக்க வேண்டும். கூடவே, காங்கிரசுக்கு துணை முதலமைச்சர் பதவியும் தரப்பட வேண்டும்" என்கிறார். "தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சிக்கு வலுவான கட்டமைப்பு உள்ளது. ஆட்சியில் பங்கு கொடுத்தால் தி.மு.க-வுக்கு அதன் பெருமை வந்து சேரும். கூட்டணி ஆட்சி என பா.ஜ.க கூறுகிறது. அவர்களே கூறும் போது, தமிழ்நாட்டை ஆண்ட காங்கிரஸ் கட்சி கூறக் கூடாதா?" எனவும் பொன்.கிருஷ்ணமூர்த்தி கேள்வி எழுப்பினார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு.செல்வப்பெருந்தகை, "கூட்டணிக் கட்சிகளுக்கு தி.மு.க தொகுதிகளைக் குறைத்துக் கொடுப்பதற்கு வாய்ப்பில்லை" என்று மட்டும் பதில் அளித்தார். 'கூட்டணி யாருக்கு அவசியம்': மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் vs திமுக எதிர்க்கருத்தால் கூட்டணியில் பிளவா? தமிழ்நாட்டில் ஆட்சியை நிர்ணயிக்கும் சக்தியாக இருந்த பா.ம.க., இந்த நிலைக்கு வந்தது ஏன்? கமலுக்கு சீட், வைகோவுக்கு இல்லை - திமுக முடிவு ஏன்? அதிமுகவில் என்ன நடக்கிறது? "தனித்து நின்று வெற்றி பெற முடியாது" சமீப நாட்களாக, தி.மு.க கூட்டணியில் இடம்பெற்றுள்ள விடுதலைச் சிறுத்தைகள், ம.தி.மு.க, இடதுசாரிகள் ஆகிய கட்சிகள், 'அதிக தொகுதிகளைக் கேட்டுப் பெறுவோம்' எனப் பேசி வருகின்றன. ஜூன் 10 அன்று மா.கம்யூ., கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம், "2021 சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க-பா.ஜ.க கூட்டணி வெற்றி பெற்றுவிடக் கூடாது என்பதால் குறைவான தொகுதிகளைக் கேட்டுப் பெற்றோம். அதை மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்ளவில்லை" என பேட்டி ஒன்றில் தெரிவித்தார். வரும் சட்டமன்றத் தேர்தலில் சட்டமன்ற உறுப்பினர்களின் பலத்தை அதிகரிக்க வேண்டும் எனக் கட்சியின் மாநாட்டில் தீர்மானமாக நிறைவேற்றியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். "தமிழ்நாட்டில் பல்வேறு நலத்திட்டங்களை தி.மு.க செயல்படுத்தினாலும் தனித்து நின்று வெற்றி பெறுவது சாத்தியமில்லை" எனக் கூறிய பெ.சண்முகம், "அ.தி.மு.க- பா.ஜ.க கூட்டணியாக நின்று தேர்தலை எதிர்கொள்ளும் போது தி.மு.க தரப்பிலும் கூட்டணியாக நின்றால் மட்டுமே வெற்றி பெற முடியும்" எனக் கூறினார். பெ.சண்முகத்தின் கருத்தை வரவேற்று செய்தியாளர்களிடம் பேசிய வி.சி.க தலைவர் திருமாவளவன், "அனைத்துக் கட்சிகளையும் அரவணைத்துச் செல்ல வேண்டிய தேவை, தி.மு.க-வுக்கு இருக்கிறது. அவர்களும் கூடுதல் இடங்களில் வெற்றி பெற வேண்டிய விருப்பத்தில் இருப்பார்கள்" எனக் கூறினார். ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கைக்குப் பதில் அளித்த திருமாவளவன், "கூட்டணி ஆட்சி என்பதில் மாறுபட்ட கருத்து கிடையாது. வேண்டாம் என்ற நிலைப்பாடும் இல்லை. ஆனால், அந்தக் கோரிக்கையை வைக்கும் சூழல் கனியவில்லை" எனவும் தெரிவித்தார். "12 தொகுதிகள்" - துரை.வைகோ பட மூலாதாரம்,X/DURAIVAIKO படக்குறிப்பு, தங்கள் கட்சிக்கு குறைந்தது 12 தொகுதிகளில் போட்டியிட்டால் தான் அங்கீகாரம் கிடைக்கும் எனக் கூறுகிறார், ம.தி.மு.க முதன்மைச் செயலாளர் துரை.வைகோ. ஜூன் 22 அன்று ஈரோட்டில் நடைபெற்ற மதிமுகவின் 31வது பொதுக்குழு கூட்டத்தில், "2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியுடன் இணைந்து கூடுதல் தொகுதிகளைப் பெற்று, வென்று, மதிமுக தேர்தல் அங்கீகாரம் பெற வேண்டும்" என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. "தங்கள் கட்சி குறைந்தது 12 தொகுதிகளில் போட்டியிட்டால் தான் அங்கீகாரம் கிடைக்கும்" எனக் கூறுகிறார், ம.தி.மு.க முதன்மைச் செயலாளர் துரை.வைகோ. "எதிர்க்கட்சிகளுக்கு சாதகமாக மாறும்" "தேர்தலில் தொடர்ந்து வெற்றி பெறக் கூடிய அணியாக, தி.மு.க கூட்டணி உள்ளது. இதில் அதிக இடங்களைப் பெறுவதற்கான முயற்சிகள் இருக்கும். ஆனால், ஒதுக்கப்படும் இடங்களில் எத்தனை இடத்தில் கூட்டணிக் கட்சிகள் வெற்றிப்பெறப் போகிறார்கள் என்பது முக்கியம்" எனக் கூறுகிறார், மூத்த பத்திரிகையாளர் சிகாமணி. கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கும் இடங்களில் அவை பாதிக்கும் குறைவாக வெற்றி பெற்றால் அது எதிர்க்கட்சிகளுக்கு சாதகமாக மாறும் சூழல் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். பட மூலாதாரம்,FACEBOOK/SIGAMANI படக்குறிப்பு, எத்தனை இடத்தில் கூட்டணிக் கட்சிகள் வெற்றி பெறப் போகிறார்கள் என்பது முக்கியம் எனக் கூறுகிறார், மூத்த பத்திரிகையாளர் சிகாமணி. "உதாரணமாக, 2011 மற்றும் 2016 சட்டமன்றத் தேர்தல்களில் அதிக இடங்களை பெற்றாலும் காங்கிரஸ் கட்சியால் குறைந்த இடங்களில் மட்டும் வெற்றி பெற முடிந்தது. இதை மனதில் வைத்தே தி.மு.க இடங்களை ஒதுக்கும்" எனவும் சிகாமணி திருப்பதி குறிப்பிட்டார். 2011 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க கூட்டணியில் 63 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி, 5 இடங்களில் மட்டும் வெற்றி பெற்றது. தி.மு.க 119 இடங்களில் போட்டியிட்டு 23 இடங்களில் வெற்றி பெற்றது. 2016 சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு 41 இடங்கள் ஒதுக்கப்பட்டன. தேர்தல் முடிவில் எட்டு தொகுதிகளில் மட்டுமே அக்கட்சி வெற்றி பெற்றது. தி.மு.க-வுக்கு 89 தொகுதிகள் கிடைத்தன. "தொகுதிகளை ஒதுக்குவது மட்டுமல்ல, அந்தத் தொகுதிகளில் கூட்டணிக் கட்சிகளை வெற்றி பெற வைக்கவும் தி.மு.க அதிகம் உழைக்க வேண்டிய நிலை உள்ளது" எனக் கூறுகிறார், சிகாமணி திருப்பதி. "வெற்றி மட்டுமே அளவுகோல் கிடையாது" பட மூலாதாரம்,FACEBOOK/MK STALIN இந்தக் கருத்தை மறுத்துப் பேசும் மூத்த பத்திரிகையாளர் ஆர்.மணி, "தேர்தலில் ஒரு கட்சியின் வெற்றி, தோல்வியை வைத்து கூட்டணியை முடிவு செய்ய முடியாது" எனக் கூறுகிறார். 2016 சட்டமன்றத் தேர்தலில் தே.மு.தி.க, ம.தி.மு.க, த.மா.கா, இ.கம்யூ, மா.கம்யூ ஆகிய கட்சிகள் இணைந்து மக்கள் நலக் கூட்டணியாக போட்டியிட்டன. "தி.மு.க தோல்வியடைவதற்கு இந்தக் கூட்டணியும் ஒரு காரணமாக இருந்தது. சுமார் ஒன்றரை சதவிகித வாக்கு வித்தியாசத்தில் அ.தி.மு.க வெற்றி பெற்றது. தேர்தலில் வெற்றி மட்டுமே அளவுகோல் கிடையாது. அதிகாரத்தில் பங்கு என்பதை நியாயமான கோரிக்கையாகவே பார்க்கிறேன்" எனக் கூறுகிறார் ஆர்.மணி. "காங்கிரஸ் கட்சிக்கு இந்த முறை கூடுதல் இடங்களைக் கொடுக்காவிட்டால் கண்டிப்பாக பிரச்னை வரும். கூடுதல் இடங்களைத் தருவதைத் தவிர தி.மு.க-வுக்கு வேறு வழியில்லை" எனவும் ஆர்.மணி குறிப்பிட்டார். 'ஆட்சியில் பங்கு' என்ற காங்கிரஸின் கோரிக்கை குறித்துப் பேசும் ஆர்.மணி, " கூட்டணியாக தேர்தலை எதிர்கொள்கின்றனர். ஆனால், வெற்றி பெற்ற பிறகு நாங்கள் மட்டுமே அதிகாரத்தில் இருப்போம் என்பதை ஏற்க முடியாது" என்கிறார். "மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என்ற முழக்கத்தை தி.மு.க வைக்கிறது. ஆனால், அதிகாரத்தில் பங்கு என்பது தான் ஜனநாயகமாக இருக்கும். ஒரு கட்சி ஓர் இடத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றாலும் ஆட்சியில் பங்கு கொடுக்க வேண்டும்" எனக் கூறுகிறார் ஆர்.மணி. தமிழ்நாட்டில் ஆட்சியில் பங்கு வேண்டும் என்ற கோரிக்கையை பா.ஜ.க தொடர்ந்து முன்வைப்பதாகக் கூறும் ஆர்.மணி, "இது நியாயமான கோரிக்கை. இதை பா.ம.க, தே.மு.தி.க ஆகிய கட்சிகளும் முன்வைக்கின்றன" என்கிறார். "ஸ்டாலினால் சமாளிக்க முடியாது" - ஆர்.மணி 2006 சட்டமன்றத் தேர்தலில் 132 தொகுதிகளில் போட்டியிட்ட தி.மு.க 96 இடங்களில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் 36 பேரும் பா.ம.க உறுப்பினர்கள் 18 பேரும் தி.மு.க அரசுக்கு ஆதரவு கொடுத்தனர். இதை மேற்கோள் காட்டும் ஆர்.மணி, "2026 தேர்தலில் அப்படியொரு நிலை வந்தால் தி.மு.க தலைமையால் எதிர்கொள்ள முடியாது. வெளியில் உள்ள ஒவ்வொரு கட்சியும் அதிகாரத்தில் பங்கு கேட்கும். கருணாநிதியைப் போல ஸ்டாலினால் சமாளிக்க முடியாது" எனக் கூறுகிறார். "கூட்டணி ஆட்சி அமைவது தமிழ்நாட்டுக்கு நல்லது" எனக் கூறும் ஆர்.மணி, "மத்தியில் தனிப் பெரும்பான்மையுடன் பா.ஜ.க ஆட்சி அமைத்தாலும் கூட்டணிக் கட்சிகளுக்கு அமைச்சரவையில் இடம் கொடுத்துள்ளது. அதேபோல், மாநிலத்திலும் கூட்டணி ஆட்சி அமைய வேண்டும்." என்கிறார். "தமிழ்நாடு மக்கள் ஏற்க மாட்டார்கள்" - தி.மு.க பட மூலாதாரம்,FACEBOOK/CONSTANTINE படக்குறிப்பு, அதிகாரத்தில் பங்கு என்ற கருத்து ஏற்புடையதல்ல. அதை தமிழ்நாட்டு மக்கள் ஏற்க மாட்டார்கள் - தி.மு.க செய்தித் தொடர்புத் துறை செயலாளர் பேராசிரியர் கான்ஸ்டன்டைன் "அதிகாரத்தில் பங்கு என்ற கருத்து ஏற்புடையதல்ல. அதை தமிழ்நாட்டு மக்கள் ஏற்க மாட்டார்கள்" எனக் கூறுகிறார், தி.மு.க செய்தித் தொடர்புத் துறை செயலாளர் பேராசிரியர் கான்ஸ்டன்டைன். "மாநிலத்தில் கூட்டாட்சி என்பதை மக்கள் ஏற்பதில்லை. ஒருவர் ஆளும் போது மட்டுமே தெளிவான முடிவை எடுக்க முடியும் என நினைக்கிறார்கள். கூட்டணி ஆட்சியாக இருந்தால் முடிவெடுப்பதில் சிக்கல் ஏற்படும்" எனவும் அவர் குறிப்பிட்டார். 1980 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் சரிபாதியாக தொகுதிகளை பிரித்துக்கொண்டு தி.மு.க-வும் காங்கிரஸ் கட்சியும் போட்டியிட்டதை நினைவுகூர்ந்து பேசிய கான்ஸ்டன்டைன், "அந்தக் கூட்டணியை மக்கள் ஏற்கவில்லை. 2011 தேர்தலில் குறைவான தொகுதிகளில் தி.மு.க போட்டியிட்டபோதும் மக்கள் ஏற்கவில்லை" என்கிறார். பட மூலாதாரம்,FACEBOOK/VCK படக்குறிப்பு, எளிய மக்களுக்கு அதிகாரம் என்பதை திருமாவளவன் முன்வைத்தார். தற்போதும் அவர் உறுதியாக இருக்கிறார். ஆனால், அது 2026 தேர்தலுக்குப் பொருந்துமா என்பது கிடையாது எனக் கூறிவிட்டார் - கான்ஸ்டன்டைன் "தவிர இது ஒன்றும் புதிய கோரிக்கை அல்ல" எனக் கூறும் கான்ஸ்டன்டைன், "கட்சி தொடங்கும் போதே, எளிய மக்களுக்கு அதிகாரம் என்பதை திருமாவளவன் முன்வைத்தார். தற்போதும் அவர் உறுதியாக இருக்கிறார். ஆனால், அது 2026 தேர்தலுக்குப் பொருந்துமா என்பது குறித்து அவர் ஏதும் கூறவில்லை." என்கிறார். அதிக இடங்களை கேட்பதன் மூலம், ஏற்கெனவே கொடுத்ததை குறைத்துவிட வேண்டாம் என கூட்டணிக் கட்சிகள் உணர்த்துவதாக கான்ஸ்டன்டைன் தெரிவித்தார். "கூட்டணிக் கட்சிகள் கேட்பதைப் போல தி.மு.க-வினரும் அதிக இடங்களில் போட்டியிட வேண்டும் என்று நினைப்பார்கள். தற்போதுள்ள எண்ணிக்கையே தொடரலாம் அல்லது சிறிய அளவில் மாற்றம் இருக்கலாம். அதைத் தலைமை முடிவு செய்யும்" என்கிறார், பேராசிரியர் கான்ஸ்டன்டைன். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cpqn91pp95qo
1 month 1 week ago
நீதி கிடைக்கும் வரை போராட்டம் தொடர வேண்டும் : செம்மணியில் யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் ஜெபரட்ணம் அடிகளார் Published By: DIGITAL DESK 2 23 JUN, 2025 | 04:58 PM தமிழ் மக்களுக்கு நிகழ்த்தப்பட்ட அநீதிகளை உலக நாடுகள் அறிந்திருந்தாலும் நீதிக்காக மக்கள் தொடர்ந்தும் போராடிக்கொண்டிருக்க வேண்டும் என யாழ் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அடிகளார் தெரிவித்தார். செம்மணியில் திங்கட்கிழமை (23) ஆரம்பித்த அணையா விளக்கு போராட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், உணர்வுபூர்வமான நிகழ்வில் கலந்து கொண்டுள்ளோம். தமிழ்மக்களின் வாழ்வில் நிண்டகால ஏற்படுத்தப்பட்ட பல அழிவுகளுக்கு நிநீகோரி இப்போராட்டம் நடாத்தப்படுகிறது. இது மக்களின் மனங்களில் அழியாத தாகமாக இருக்கிறது. இதுவரை காலமும் நிகழ்த்தப்பட்ட அநீதிகளுக்கு நியாயம் கிடைக்க வேண்டும். இதனை உலக மக்கள் அனைவரும் சேர்ந்து செயற்படுத்த முன்வர வேண்டும். உலக நாடுகள் எல்லாம் எங்களுக்கு நிகழ்த்தப்பட்ட அநீதிகளை அறிந்திருந்தாலும் அதைப்பற்றி எந்தவிதமான நீதியும் கிடைக்காமல் மக்கள் நிண்டகாலமாக அணையாத தாகத்தோடு அலைந்து கொட்டிருக்கிறார்கள். ஆகவே இவற்றுக்கு எல்லாம் ஒரு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கத்தோடு இந்த அணையா தீபம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது . குறிப்பாக நாங்கள் நிக்கின்ற செம்மணி பிரதேசத்திலே மனித புதை குழிகள் அடையாளம் காணப்பட்டுள்ளது. பல அப்பாவி மக்களது மனித எலும்புக்கூடுகள், எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டுவரும் இந்த சூழலில் இந்த நிகழ்வு மிகவும் முக்கியமானதாகும். காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுகின்ற இந்த வேளையில் யுத்தத்தின் இறுதி நாட்களில் சரணடைந்தவர்களுக்கு என்ன நடந்தது என்று தேடுகின்ற, கேள்விகேட்கின்ற இந்த நாட்களில் மனித புதை குழிகள் பயங்கரமான ஒரு பதிவுகளை, கதைகளை எங்களுக்கு செல்லிக் கொண்டிருக்கின்றன. ஆகவே இவற்றை நாங்கள் உதாசினம் செய்து கொண்டிருக்காது இந்த அரசாங்கமும் உலக நாடுகளும் இந்த சந்தர்பத்தில் மக்கள் எதிர்பார்க்கின்ற நியாயமான நீதியை வழங்க வேண்டும். இனிமேலும் தாமதிக்க கூடாது, நீதியை பெறுவதற்கு தடையாக இருக்கின்ற எல்லாவிதமான தடைகளையும் நீக்கி நியாயமான முறையில் நீதிகிடைக்க வேண்டி இப்போராடம் இடம்பெற்றுக் கொண்டிருக்கிறது. மக்கள் உணர்வோடு பங்குபற்றி இப்போராட்டத்திற்கு வலுச் சேர்க்க வேண்டும் என்றார். https://www.virakesari.lk/article/218238
1 month 1 week ago
1 month 1 week ago
1 month 1 week ago
வெற்றி பெற்ற நந்தன் அண்ணாவுக்கு வாழ்த்துக்கள்👍...................என்னோட சேர்ந்து குப்பை கொட்டின செம்பாட்டனுக்கும் வாழ்த்துக்களும் நன்றிகளும்🙏🥰😁......................
1 month 1 week ago
அவர்களை கண்டு நேட்டோ நாடுகள் கலக்கத்தில் இருக்கினம் ஹா ஹா....................அடிபனிய போவது அவர்கள் கிடையாது , எவன் ஆரம்பிச்சானோ அவனே பேச்சு வார்த்தைக்கு அழைப்பான்..............................
1 month 1 week ago
முதல் மைச் சம நிலையில் முடிய வாய்பில்லை...............இந்தியா வீரர்கள் எல்லாரும் இன்றையான் நாள் விளையாட்டில் அவுட் ஆகி விடுவினம் , இங்லாந் இரண்டாவது இனிங்சில் சிலது வெல்லக் கூடும் தோல்வியும் அடையலாம் , இந்தியா வீரர்களின் பந்து வீச்சை பொருத்து ஜந்தாம் நாள் பிச் மாறுபடும் , அது பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாய் அமையும்..................................
1 month 1 week ago
நண்பா எனக்கு ஒரு டவுட் இஸ்லாந்திடம் பல வாட்டி கேட்டு விட்டேன் யாழில் இதுக்கு முதல் என்ன பெயரில் எழுதினவர் என்று , இந்த பாவி மனுஷன் உண்மையை சொல்லுகிறார் இல்லை , புலிகள் பலமாய் இருந்த போது புலி வேசம் இப்போது நரி வேசம் இதை என்னால் உனர முடியுது எப்பவும் பயணிக்கும் பாதை நேர்மையா இருக்கனும் , அது இப்படியானவர்களிடம் இல்லையென வெளிப்படையாய் தெரியுது......................................
1 month 1 week ago
செத்த கிளிகள் பிரமிப்பை ஏற்படுத்கின்றன... 🤣
1 month 1 week ago
ஓம் அண்ண பல பூதங்கள் சேர்ந்து ஒருதனுக்கு அடிப்பது வீரமா அல்லது தனிய மோதி வெல்பவன் வீரனா உக்கிரேன் ரஸ்சியாவின் போரின் போது , ரஸ்சியா தான் பேரை முதல் தொடங்கினது , பிழை எல்லாம் ரஸ்சியா மீது , என யாழில் நீங்கள் தொட்டு பலர் உக்கிரேனுக்கு ஜிங்சாங் போட்டிங்கள் , இந்த வருட ஆரம்பத்தில் அமெரிக்கா வெள்ளை மாளிகையில் செலன்ஸ்கி அவமான பட்டதை உலக மக்கள் எளிதில் மறக்க மாட்டினம் 😁😛 ஈரான் மீது யார் முதல் போர் தொடுத்தது , உக்கிரேனுக்கு வந்தால் ரத்தம் ஈரானுக்கு வந்தால் தக்காளி சட்னியா....................போங்கோ நீங்களும் உங்கட நடு நிலையும்😁😛...............................
1 month 1 week ago
இந்த செய்திய நேற்று நான் தான் யாழில் முதல் இணைத்தேன் , வடகொரியா பற்றிய செய்தி பல தளங்களில் வந்த பின்பு அதையும் இணைத்தேன் , இணையவன் வந்து குறுக்கிட அவருக்கு பதில் அளித்து இருந்தேன் அதை உடன நீக்கி விட்டு தனது பதிவை அப்படியே விட்டு இருக்கிறார்....................இப்படியான ஒருபக்க சார்வாய் நிர்வாகம் நடந்து கொள்வதால் தான் யாழில் பலரும் பெரிதாக எழுதுவதில்லை...................... எனக்கும் இதுக்கை எழுத ஆர்வம் இல்லை , ஈரானுக்கு அநீதி இழைக்கப் படுது என தெரிந்த படியால் தான் முகம் தெரிந்த உறவுகளுடன் விவாதிச்சேன் மற்றம் படி இதுக்கை விவாதிக்க ஒன்னும் இல்லை............... X தளம் , யூடுப் முக நூல் , ரிக்ரோக் , இங்கு தான் உடனுக்கு உடன் செய்திகள் விவாதங்கள் மின்னல் வேகத்தில் நடக்கும்...............செய்திகளுக்கு முதல் இடம் X தளம் அங்கு தான் உடனுக்கு உடன் எல்லாம் வரும்.....................
1 month 1 week ago
srael-Iran| Destroy FighterJets| Attack| நிலைகுலைந்த Airports| சேதமான போர்விமானங்கள்|Sathiyamtv
1 month 1 week ago
தலைவரின் தகுதியைப்பற்றி கதைப்பதற்கு சிங்களத்தின் எலும்புத்துண்டுக்காக வாலாட்டும் நானாக்களுக்கு எந்தவித அருகதையும் இல்லை!
Checked
Wed, 08/06/2025 - 06:22
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed