1 month 2 weeks ago
இவங்கள் மும்மூர்த்திகளையும் மீறி வெல்லுற என்டா....ஒருத்தன் இடக்கையால போட்டா மற்றவங்கள் வலக்கையால தெறிக்க விடுவாங்கள். பந்து இரண்டு பக்கமும் இழுக்கும். ஆற்றேக்க அடிக்கிறது. தெம்பா பவுமா என்னடாப்பா செய்யிற
1 month 2 weeks ago
இந்த விமானம் டெல்கியில் இருந்து அகமபாத்துக்கு வந்த போது விமானத்தின் குளிரூட்டிகள் முதற்கொண்டு வேலை செய்யவில்லை என ஒரு பயணி காணொளி எடுத்து அதனை எயர் இந்தியாவுக்கு அனுப்பியதாகவும் இவ்விமானத்தில் ஏதோ பிழை இருப்பதாகவும் சொன்ன போதும் எயர் இந்தியா அதனை கருத்தில் கொல்ளவில்லை என்கிறார்கள்.
1 month 2 weeks ago
தலைவர் வேலை களைப்பு தீர சோமபானத்தை அருந்தி விட்டு…தென்னாபிரிக்கா என்னா, அந்தாட்டிக்கா கூட நாளைக்கு வெல்லும் எண்டு சொல்லுவார்…அதை எல்லாமுமா நம்புவது🤣.
1 month 2 weeks ago
இப்ப நாங்கள் எத நம்பிறது. ஓரு தலைவனா மதிச்சு, நாங்கள் பின்னால் நிக்கிறம். தென்னாபிரிக்கா வென்றால்தான் எனக்கும் புள்ளி. இல்லாட்டி நிரந்தர முட்டை. பாத்துச் சொல்லுங்க
1 month 2 weeks ago
265பேர் உயிரிழந்துள்ளனர் என்று பிரெஞ்சு செய்தி சொல்கிறது
1 month 2 weeks ago
நாளைக்கு வெயில் அதிகம். மூன்றாம் நாள் லோர்ட்ஸ் மைதானத்தில் நல்ல ஸ்கோர் எடுக்க வாய்ப்பிருக்கு. தென்னாபிரிக்கா வெல்லுது💪
1 month 2 weeks ago
Viduni Basnayake 2h · UPSC Network 2h · Pratik Joshi had been living in London for six years. A software professional, he’d long dreamed of building a life abroad for his wife and three young children, who stayed back in India. After years of waiting for due clearances the dream was finally coming true. Just two days ago, his wife, Dr. Komi Vyas, a renowned doctor in Udaipur, resigned from her job. The bags were packed, goodbyes said, the future within reach. This morning, the family of five, filled with hope and excitement, boarded Air India flight 171 to London. They clicked a selfie. Sent it to relatives. A one-way journey to a new life. But they never made it. The plane crashed. No one survived. In a matter of moments, a lifetime of dreams turned to ash. A brutal reminder, life is terrifyingly fragile. Everything you build, everything you hope for, everything you love, it all hangs by a thread. So while you can, live, love, and don’t wait for happiness to start tomorrow. இலண்டனில் நிரந்தரமாக குடியேறச்சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர்கள் பலியாகி உள்ளமையும் வேதனைக்குரியது. இந்த பெண் ஒரு மருத்துவர்.கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் தான் தனது வேலையிருந்து விடு பட்டு லண்டனுக்கு குடும்பத்தோடு போகும் போது விமான விபத்தில் சிக்கியுள்ளார்கள்.குஜராத் முன்னாள் முதலமைச்சர் விஜய் ரூபானியும் பலியாகியுள்ளார்.
1 month 2 weeks ago
1 month 2 weeks ago
இவ்வாறு கூறி விட்டு வேதாளம் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறி அமர்ந்து கொண்டது. தனது முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்ரமாதித்தன்…..
1 month 2 weeks ago
இந்த விமான விபத்தில் இந்தியாவை சேர்ந்த (கனேடிய) பெண் மருத்துவர் ஒருவரும் அடங்கிள்ளார்.மிசிசாகாவில் பல் மருத்துவராக பணியாற்றிக் கொண்டு இருப்பவர் என்று அறிந்து கொண்டேன்.மற்றும் 9 பேர் காயங்களோடு தப்பியுள்ளார்கள். ஆனாலும் அவர்களது நிலையும் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.விமான விபத்தில் மரணித்தவர்கள் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்..🙏
1 month 2 weeks ago
Sollathigaram | விபத்துக்கு ஒரே காரணம் இதுதான்! மாடியில் எடுத்த இந்த வீடியோவில்.. வினோத்குரூப்
1 month 2 weeks ago
Published By: RAJEEBAN 12 JUN, 2025 | 12:41 PM சூழல் ஆர்வலர் கிரெட்டா தன்பேர்க் காசாவிற்கு கடல்வழியாக செல்வதற்கு மேற்கொண்ட முயற்சிகளை இஸ்ரேல் முறியடித்துள்ள அதேவேளை காசா முற்றுகையை உடைக்கும் நோக்கில் சுமார் 1500 பேர் கொண்ட வாகனப்பேரணியொன்று அல்ஜீரியாவிலிருந்து ஆரம்பமாகியுள்ளது. அல்ஜீரியா துனிசியாவை சேர்ந்த 1500க்கும் அதிகமான பாலஸ்தீன ஆதரவாளர்கள் வாகனங்களுடன் லிபியா சென்றடைந்துள்ளனர். அல்ஜீரியாவிலிருந்து புறப்பட்ட இவர்கள் துனிசியாவிற்கு சென்ற பின்னர் அங்கிருந்து லிபியாவை சென்றடைந்துள்ளனர். இஸ்ரேலின் மனிதாபிமான முற்றுகைக்கு சவால் விடுக்கும் நோக்கில் காசவை சென்றடைவதே இவர்களது திட்டம். லிபியாவின் ஜவியா நகரை சென்றடைந்துள்ள இவர்கள் எகிப்து ஊடாக ரவா எல்லையை சென்றடைய திட்டமிட்டுள்ளனர். இவர்கள் கார்கள் பேருந்துகளில் பயணம் செய்கின்றனர். லிபியாவின் திரிபோலி,மிஸ்ரட்டா, சேர்ட்டே,பெங்காசி ஊடாக இவர்கள் எகிப்தின் எல்லையான சலூம் சென்றடையவுள்ளனர். பின்னர் அவர்கள் கெய்ரோ ஊடாக ரபா எல்லைக்கு செல்லவுள்ளனர். அல்ஜீரியா துனிசியா அதிகாரிகள் தங்களிற்கு முழுமையான ஆதரவை வழங்கியுள்ளதாக அல்ஜீரியாவை சேர்ந்த ஜமீலா ஷரிட்டா என்பவர் தெரிவித்துள்ளார். எல்லைகளை திறந்து காசா பள்ளத்தாக்கிற்குள் உணவுகள் செல்லும் நிலையை உருவாக்குவதே தங்களின் பயணத்தின் நோக்கம்என மற்றுமொருவர் தெரிவித்துள்ளார். கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள போதிலும் காசாவில் கடல்தரை வான்வழியாக ஆர்வலர்கள் வந்து சேருவார்கள் என இந்த வாகனத்தொடரணியை ஏற்பாடு செய்துள்ள டெர்க்கியா சயிபி தெரிவித்துள்ளார். எங்களிற்கு எதிரான வன்முறைகளால் நாங்கள் அச்சமடையப்போவதில்லை என அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/217253
1 month 2 weeks ago
Published By: RAJEEBAN 12 JUN, 2025 | 11:07 AM பாலஸ்தீனம் குறித்த ஐக்கியநாடுகளின் சர்வதேசமாநாட்டில் கலந்துகொண்டால் விளைவுகளை எதிர்கொள்ளவேண்டியிருக்கும் என அமெரிக்கா அதன் சகாக்களை எச்சரித்துள்ளது. பாலஸ்தீன விவகாரத்திற்கு இரு தேசதீர்வு குறித்து ஆராய்வதற்கான ஐக்கியநாடுகளின் மாநாட்டில் கலந்துகொள்வது குறித்தே அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. ஐக்கியநாடுகளின் மாநாட்டை தொடர்ந்து இஸ்ரேலிற்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடும் நாடுகளை அமெரிக்காவின் வெளிவிவகார கொள்கை மற்றும் நலன்களிற்கு எதிராக செயற்படும் நாடுகளாக கருதப்போவதாக இராஜதந்திர அறிக்கையில் அமெரிக்கா தெரிவித்துள்ளது.இந்த நாடுகள் இராஜதந்திர விளைவுகளை எதிர்கொள்ளநேரிடும் எனவும் அமெரிக்கா எச்சரித்துள்ளது. காசாவில் யுத்தத்தை முடிவிற்கு கொண்டுவருவதற்கும், பணயக்கைதிகளை விடுவிப்பதற்கும் உயிர்காக்கும் முயற்சிகளிற்கு எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என நாங்கள் கருதும் இந்த மாநாட்டில் கலந்துகொள்ளவேண்டாம் என அமெரிக்கா வேண்டுகோள் விடுத்துள்ளது. இஸ்ரேலை தண்டிக்கும் விதத்திலான தடைகள் அரசியல் நடவடிக்கைகள் போன்றவைகளிற்கு சர்வதேச மாநாட்டில் ஆதரவு வழங்கப்படலாம் இதனை எதிர்க்கின்றோம் என அமெரிக்கா தெரிவித்துள்ளது. இஸ்ரேலின் பாதுகாப்பை உறுதிசெய்யும் அதேவேளை பாலஸ்தீன தேசத்திற்கான திட்டத்தினை முன்வைக்கும் மாநாட்டினை பிரான்சும் சவுதிஅரேபியாவும் அடுத்தவாரம் நியுயோர்க்கில் நடத்துகின்றன. https://www.virakesari.lk/article/217236
1 month 2 weeks ago
ஓம்.. இந்த விபத்தில் இவர் மட்டுமே தப்பியுள்ளார் போல இருக்கு. Business Class இருக்கை எண் 111 இல் இருந்த இவர், விபத்து நடந்த விமானத்தின் இருந்து தானாகவே தப்பி நடந்து வெளியே வந்துள்ளார்
1 month 2 weeks ago
நாளைக்கே முடியும் போலத்தான் இருக்கு. 80+உள்ளே சாப்பாடு, நீகாராகாரம் =50, போக்குவரத்து 15. ஒரு £150 பவுண் தப்பியது என விட்டு விட வேண்டியதுதான். பெர்மிங்ஹாம், மான்செஸ்டரில் இங்கிலாந்து - இந்தியா 3ம் நாள் டிக்கெட்டுகள் வாங்கி வைத்துள்ளேன். அதாவது ஒழுங்கா நடக்க வேணும் கடவுளே.
1 month 2 weeks ago
Published By: DIGITAL DESK 2 12 JUN, 2025 | 09:16 PM யாழ்ப்பாணம் , பலாலி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மல்லாகம் நீதவான் நீதிமன்றை தவறாக வழிநடத்துவதாக மன்றில் சட்டத்தரணிகள் தமது சமர்ப்பணங்களில் தெரிவித்துள்ளனர். நீதிமன்ற கட்டளையை மீறி, தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிராக போராட்டம் நடத்தியதாக பலாலி பொலிஸார் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடர்ந்திருந்தனர். குறித்த வழக்கு இன்றைய தினம் வியாழக்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, போராட்டம் நடத்தியவர் சார்பாக மன்றில் முன்னிலையான மூத்த சட்டத்தரணி என்.சிறிகாந்தா, நா.காண்டீபன் ஆகியோர் சமர்ப்பனங்களை முன்வைத்தனர். குறித்த வழக்கு தொடர்பில் சட்டத்தரணிகள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், தையிட்டி விகாரைக்கு எதிரான போராட்டம் நடைபெறவிருந்த வேளை சிலரின் பெயர் அவர்களுக்கு எதிராக நீதிமன்றில் தடையுத்தரவுகளை பெற்று இருந்தன. நீதிமன்றினால் பெறப்பட்ட தடையுத்தரவை , சம்பந்தப்பட்டவர்களுக்கு வழங்காது, போராட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்த வேளை , அங்கு வந்த பொலிஸார் அவர்களின் பெயர் விபரங்களை வாசித்து சென்று இருந்தனர். அதனூடாக சட்டத்தின் ஏற்பாடுகளை திருப்தி படுத்தியுள்ளதாக பொலிஸ் தரப்பு கூற முடியாது என மன்றில் தெரிவித்திருந்தோம். அதேவேளை, தையிட்டி விகாரைக்கு பொறுப்பான "அமரபுர நிக்காய பீடம்" விகாரையில் பொசன் நிகழ்வுகளை நடாத்துவது இல்லை என கடந்த மே மாதம் 29ஆம் திகதியே பதில் பொலிஸ் மா அதிபர் , வடமாகாண மூத்த பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோருக்கு அறிவித்துள்ளது. இந்த நிலையில் கடந்த மாதம் பூரணை தின வழிபாட்டிற்கு வருகை தந்த பௌத்தர்களை போராட்டக்காரர்கள் இடை மறித்ததாகவும் , தமிழர்கள் விகாரையை இடித்து அழிக்க போகின்றார்கள் , பௌத்தர்கள் ஒன்றிணைந்து தையிட்டிக்கு செல்ல வேண்டும் என சமூக வலைத்தளங்களில் கடும் போக்கு சிங்கள இனவாதிகள் பொய்யான தகவல்களை பரப்பி , இனங்களுக்கு இடையில் முரண்பாடுகளை தோற்று விக்க முயன்றனர். அவர்கள் தொடர்பில் பொலிஸார் எந்த விதமான நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என்ற விடயத்தை மன்றில் சுட்டிக்காட்டி , அதற்கான ஆதாரங்களையும் மன்றில் சமர்ப்பித்துள்ளோம். பலாலி பொலிஸ் அதிகாரிகள் பொய்யான தகவல்களை வழங்கி மன்றை தவறாக வழி நடத்துகிறார். என்ற விடயத்தையும் மன்றில் சுட்டிக்காட்டினோம். அதனை அடுத்து குறித்த வழக்கினை நீதவான் கிடப்பில் போட்டுள்ளார் என தெரிவித்தனர். அதேவேளை தையிட்டி விகாரையை தமிழர்கள் இடித்து அழிக்க போகிறார்கள் என சமூக வலைத்தளங்களில் பொய்யான தகவல்களை பரப்பியவர்கள் என குற்றம் சாட்டப்பட்ட பொதுபலசேன ராவண பலய, சிங்கள ராவய அமைப்பை சேர்ந்தவர்கள் தையிட்டி விகாரைக்கு வந்திருந்தார்கள் என்றும், அவர்களுக்கு பலாலி பொலிஸார் பாதுகாப்பு வழங்கி இருந்தார்கள் என சமூக செயற்பாட்டாளர் ராஜ்குமார் ராஜீவ்காந்த் குற்றம் சாட்டியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/217283
1 month 2 weeks ago
1 month 2 weeks ago
2ம் நாள் ஆட்ட முடிவில் நம்பிக்கை வாக்கெடுப்பு முடிவுகள் தலை கீழ் மாற்றத்தை தந்து விட்டிருந்தன. முன்னாள் முதல்வர் பதவி இழக்க அவர் இடத்தை கெட்டியா பிடித்து கொண்டு சத்தமில்லாமல் முதல்வர் கதிரையில் அமர்ந்து கொண்டார் நேற்றைய துணைமுதல்வர் சுவி அவர்கள். ஆனால் இன்றைய துணை முதல்வரோ, இது நிரந்தரமில்லை, நாளை தானும் அதையே செய்வேன் என தன் ஆதரவாளர்களிடம் சூளுரைத்ததாக தகவல்கள் வெளியாகி பகீர் கிளப்பியுள்ளன. இவ்வாறு பலரும் பலவாறு தடுமாறிய போதும், எதற்கும் கலங்காத உறுப்பினர் செம்பாட்டான் தொடர்ந்து இரெண்டாம் நாளாக கேண்டீனில் உட்கார்ந்து ஹாயாக முட்டை கோப்பி குடித்துகொண்டிருந்தார் என்பது மேலதிக செய்தி. சுவி 30 🪑 வாதவூரான் 30 ரசோதரன் 30 வீரப்பையன் 20 ஏராளன் 20 கிருபன் 20 புலவர் 20 ஈழப்பிரியன் 20 வசி 20 வாத்தியார் 20 அல்வாயான் 20 எப்போதும் தமிழன் 20 கோஷான் 20 கந்தப்பு 20 நுணாவிலான் 10 பிரபா 10 செம்பாட்டான் 00 🐥 இப்போ இருக்கும் 218 ஐ அடிக்க வே திணற வேண்டி வரும். ஆனால் பிட்சில் எந்த பிழையும் இல்லை. தெ. ஆ - இதை ஒரு ஒருநாள் ஆட்டம் போல அணுகினால் வெல்லலாம். எதிர் மறை அணுகுமுறை பலந்தராது.
1 month 2 weeks ago
இந்தத் தகவலை ஆங்கில பிபிசி தளத்தில் பார்த்த பின்னர் தான் கிருபனின் வீடியோ பார்த்தேன். ஒரு விமானம் மேலெழும் போது மிக முக்கியமான பகுதியாக இந்த மடிப்பு என்கிற flaps இருப்பதால், ஓடு பாதையில் ஓடுவதற்குத் தரித்து நிற்கும் வேளையில் இந்த மடிப்புகளை இயக்கிச் சரி பார்ப்பார்கள். விமானப் பயணங்களில், இறக்கை மட்டத்திற்குப் பின்னால் இருப்பவர்களுக்கு இந்த மடிப்பின் இயக்கங்கள் தெளிவாகத் தெரியும். மேலெழும் விமானத்திற்கு ஒரு முக்கியமான சவால் stalling எனப்படும் "ஏறா நிலை". வேகமாக ஓடி மேலெழும் போது, பூமியின் ஈர்ப்பு விசையை விமானத்திற்குக் கிடைக்கும் மேலுதைப்பினால் மேவ முடியாவிட்டால் விமானம் stall ஆகி , தொப்பென்று விழும். இந்த stalling மிக உயரத்தில் நிகழ்ந்தால், சமாளித்து விமானம் விழாமல் தடுப்பது இலகு. விமானிகளுக்கு இதைச் செய்யும் பயிற்சி இருக்கிறது. ஆனால், தரைக்கு மிக அருகில் விமானம் stall ஆனால், சமாளிப்பது இயலாத காரியம்.
1 month 2 weeks ago
தாங்கள் சொன்னதுதான் நடக்கப் போகுது. 250க்குக் கிட்ட துரத்த வேணும். உலகமே தென்னாபிரிக்காவின் வெற்றிக்காக. எல்லா தென்னாபிரிக்காவின் முன்னால் வீரர்களும் மைதானத்தில்.
Checked
Sun, 08/03/2025 - 15:02
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed