புதிய பதிவுகள்2

தலைவனை இழந்த ஈழத்தமிழர்களுக்காக குரல் கொடுப்பது நமது கடமை – விஜய்

1 month 1 week ago
இதே யாழில் இதே கேள்வியை , என் கருத்தை எல்லா தமிழக கட்சியினரிடமும் கேட்டுள்ளேன். என்னைப் பொறுத்தவரை தமிழக கட்சிகள் அனைத்தும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் இந்த விடயத்தில்.

காசா மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் சுமார் 91 பேர்

1 month 1 week ago
இங்கிலாந்து, கனடா, அவுஸ்திரேலியா, போர்த்துக்கல் நாடுகள் பாலஸ்தீன நாட்டை உத்தியோகபூர்வமாக அங்கீகரிப்பதாக செய்திகள் வந்துள்ளன. அல்லற்படும் மக்களுக்கு நிம்மதியான. அமைதியான வாழ்வு விரைவில் கிடைக்கும் என எதிர்பார்ப்போம்.

சிரிக்கவும் சிந்திக்கவும் .

1 month 1 week ago
இஸ்ரேலுக்கு ஆயுத ஏற்றுமதி செய்யும் இந்தியாவிலா தமிழ்நாடு முதலமைச்சர் இருக்கிறார்? ஒரு மேடையில் பேசும்போது கேள்வி கேட்க எவருமே இல்லையா?

ஒரு பயணமும் சில கதைகளும்

1 month 1 week ago
புதிதாக கோயில் கட்டப்பட்டால் அதனை ஒரு அருங்காட்சியத்திற்கு போவது போல அந்த கோயிலுக்கு போக வேண்டும் என சொல்வார்கள், அந்த கோயில் எங்காவது ஒரு மூலையில் இருக்கும், அதற்கும் போகும் வழிகள் கற்களாக இருந்தாலும் அந்த கடவுளின் அருளால் வாகன சக்கரம் பழுதாவதில்லை, மனதில் தோன்றும் எண்ணங்களை வெளியே சொல்லும் தைரியம் இருக்காது🤣. மக்களின் நம்பிக்கைகள் மிக சக்தி வாய்ந்தவை சிலர் தம்து நம்பிக்கைக்காக பிறரின் உயிரை எடுக்கிறார்கள், சிலர் அவர்களது மூட நம்பிக்கைகளை வைத்து ஆதாயம் தேடுகிறார்கள், தமக்கு உவப்பான விடயங்களாக அல்லது தாம் சார்ந்த விடயங்களை கண்ணை மூடி நம்புபவர்கள் அதே நேரம் மற்ற விடயங்களில் கேள்வி கேட்டு முன்னுதாரணமாக இருக்கிறார்கள். இங்கு படித்தவர்கள் கூட இப்படி இருப்பதுதான் வருத்தமளிக்கும் விட்யமாக இருக்கின்றது, சமூகத்திற்கு முன்மாதிரியாக இருக்கவேண்டிய படித்தவர்கள்தான் அதிகளவில் சமூக அடக்குமுறைகளில் பலவழிகளில் பங்களிக்கிறார்கள்.

டிரம்புடனான சந்திப்பிற்குப் பிறகு உக்ரைன் மீதான தாக்குதல்களை தீவிரப்படுத்த புடின் முடிவு செய்தார் - ப்ளூம்பெர்க்

1 month 1 week ago
இந்த உலகம் வேறொரு ஒருங்கிணைப்பிற்குள் ஒன்று சேரவேண்டிய காலம் வந்து விட்டது என நினைக்கின்றேன். இன்றைய உலக நியதிகளுக்குள்..... ஐநா சாதித்ததென்ன? அவர்களது இதர அமைப்புகள் சாதித்தது என்ன? பல மனித/ மிருக நலன்புரி இயக்கங்கள் கூட இதுவரை எதையுமே சாதித்து காட்டவில்லை.

ஒரு பயணமும் சில கதைகளும்

1 month 1 week ago
சுப்ரா பாதம் என்ற ஜெய்கணேஷ் நடித்த பக்திப் படம் சிறு வயதில் பார்த்தேன் விஷ்ணுவின் ஒரு அவதாரம் தான் நாராயணா என்று அறிந்தேன் ஓம் நமோ நாராயணா....

டிரம்புடனான சந்திப்பிற்குப் பிறகு உக்ரைன் மீதான தாக்குதல்களை தீவிரப்படுத்த புடின் முடிவு செய்தார் - ப்ளூம்பெர்க்

1 month 1 week ago
டிரம்புடனான சந்திப்பிற்குப் பிறகு உக்ரைன் மீதான தாக்குதல்களை தீவிரப்படுத்த புடின் முடிவு செய்தார் - ப்ளூம்பெர்க் கேடரினா டிஷ்செங்கோ — சனிக்கிழமை, 20 செப்டம்பர் 2025, 22:01 32645 அலாஸ்காவில் விளாடிமிர் புதின் மற்றும் டொனால்ட் டிரம்ப். புகைப்படம்: கெட்டி இமேஜஸ் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்புடனான அலாஸ்கா சந்திப்பு மற்றும் கிழக்கு உக்ரைன் தொடர்பான ரஷ்யாவின் கோரிக்கைகளை உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி நிராகரித்த பிறகு, ரஷ்ய ஆட்சியாளர் விளாடிமிர் புடின், உக்ரைனின் எரிசக்தி துறை மற்றும் பிற உள்கட்டமைப்பு மீதான தாக்குதல்கள் உட்பட இராணுவ விரிவாக்கத்தைத் தொடர முடிவு செய்தார். மூலம்: ப்ளூம்பெர்க் , கிரெம்ளினுக்கு நெருக்கமான ஆதாரங்களை மேற்கோள் காட்டி. விவரங்கள்: ஆதாரங்களின்படி, "உக்ரைனை தனது நிபந்தனைகளின் பேரில் பேச்சுவார்த்தைக்கு கட்டாயப்படுத்த இராணுவ மோதல்தான் சிறந்த வழி என்றும், டொனால்ட் டிரம்ப் கியேவின் பாதுகாப்பை வலுப்படுத்த அதிகம் செய்ய வாய்ப்பில்லை என்றும் புடின் முடிவு செய்துள்ளார்". உக்ரைனின் மின் கட்டமைப்பு மற்றும் பிற உள்கட்டமைப்புகளை தொடர்ந்து குறிவைக்க புடின் திட்டமிட்டுள்ளதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. அலாஸ்காவில் நடந்த பேச்சுவார்த்தைகள், போரில் தலையிடுவதில் டிரம்ப் ஆர்வம் காட்டவில்லை என்பதை புடினை நம்ப வைத்ததாக அவர்கள் மேலும் கூறினர். ஆங்கரேஜில், கியேவ் டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் ஒப்லாஸ்ட்களின் மீதமுள்ள கைப்பற்றப்படாத பகுதிகளை விட்டுக்கொடுக்க ஒப்புக்கொண்டால், தெற்கு உக்ரைனில் போர்களை நிறுத்தி முன்னணியை முடக்க புடின் முன்மொழிந்தார். உக்ரைன் அதன் ஆயுதப் படைகளின் அளவைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றும் நேட்டோவில் சேரும் இலக்கைக் கைவிட வேண்டும் என்றும் அவர் முன்னதாகக் கோரினார். இந்த நிபந்தனைகளை உக்ரைன் நிராகரித்துள்ளது, மேலும் இது தனது தீவிரத்தை நியாயப்படுத்துகிறது என்று புடின் நம்புகிறார் என்று கிரெம்ளினுக்கு நெருக்கமானவர்கள் ப்ளூம்பெர்க்கிடம் தெரிவித்தனர். உக்ரைனின் விமானப்படை கட்டளையிலிருந்து ப்ளூம்பெர்க் சேகரித்த தரவுகளின்படி, டிரம்ப் மற்றும் புடினின் பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து ஒரு மாதத்தில் உக்ரைன் மீதான ரஷ்ய ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்கள் சுமார் 46% அதிகரித்துள்ளன. ப்ளூம்பெர்க்கின் மேற்கோள்: "புடின் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் காசாவில் நடக்கும் போரை கவனித்து வருகிறார் என்று கிரெம்ளினுக்கு நெருக்கமான இருவர் தெரிவித்தனர். காசாவில் நெதன்யாகுவின் பிரச்சாரத்தை ரஷ்யாவின் உக்ரைன் போரை விட கடுமையானதாக அவர் கருதுகிறார், மேலும் இது அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் அரசாங்கங்களால் பெரும்பாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது, இது மாஸ்கோ மீதான அவர்களின் விமர்சனத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது என்று குறிப்பிடுகிறார்." விவரங்கள்: புடின் அமெரிக்காவுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்துவார், ஆனால் தனக்குப் பொருத்தமாக இருக்கும் வகையில் செயல்படுவார் என்று ப்ளூம்பெர்க்கின் வட்டாரங்கள் தெரிவித்தன. பின்னணி: ஆகஸ்ட் 15 அன்று, டிரம்ப் மற்றும் புடின் அலாஸ்காவில் தங்கள் முதல் பேச்சுவார்த்தையை நடத்தினர் . உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி மற்றும் பிற ஐரோப்பிய தலைவர்கள் வெள்ளை மாளிகையில் டிரம்பை சந்தித்து, இராஜதந்திரம் மூலம் ரஷ்ய ஆக்கிரமிப்பை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான வழிகளைப் பற்றி விவாதித்தனர். இந்த சந்திப்புகளுக்குப் பிறகு, புடின் உக்ரேனிய பிராந்தியங்கள் மீது, குறிப்பாக தலைநகர் மீது தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளார். உக்ரைன் மீதான ஒரு பெரிய அளவிலான ரஷ்ய வான்வழித் தாக்குதலின் போது, ரஷ்ய ட்ரோன்கள் போலந்து வான்வெளியை மீறின . உக்ரைனில் போரை முடிவுக்குக் கொண்டுவந்ததில் புடின் தன்னை ஏமாற்றிவிட்டதாக டிரம்ப் கூறினார் . செப்டம்பர் தொடக்கத்தில், ரஷ்ய-உக்ரைன் போரை விரைவில் முடிவுக்குக் கொண்டுவருவதற்கான வாய்ப்புகள் அல்லது புடினுக்கும் ஜெலென்ஸ்கிக்கும் இடையிலான தனிப்பட்ட சந்திப்பு குறித்து டிரம்ப் பெருகிய முறையில் அவநம்பிக்கையுடன் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. https://www.pravda.com.ua/eng/news/2025/09/20/7531757/ கிரெம்பிளினுக்கு நெருக்கமான ஆதாரம் எது என யாருக்காவது தெரியுமா? இந்த ஆதாரமற்ற செய்தியினை இங்கே பதிந்துள்ளேன் என என்மேல் குற்றம் சாட்டமாட்டீர்கள் என நம்புகிறேன்.🤣

தலைவனை இழந்த ஈழத்தமிழர்களுக்காக குரல் கொடுப்பது நமது கடமை – விஜய்

1 month 1 week ago
அவர்களுக்கும் டி ஆர் பி க்கு விஜைதான் தேவைபடுகிறார் போலும் 🤣. யார் என்ன சொன்னாலும் ஈழத்தமிழர் விடயம் எப்போதும் தமிழக தேர்தல் அரசியலில் ஒரு non issue தான். 83, 2009 இல் கூட அப்படித்தான். ஆனுர ஆட்சியில் ஈழத்தில் வாழும் தமிழர்கள் பலருக்கு கூட இது ஒரு non issue ஆகிவிட்ட நிலையில், புலம்பெயர் திரள் நிதிக்கு ஆசைபடுபவர்கள் மட்டும்தான் புலிகள், தலைவர் என கூவி கூவி வித்து கல்லா கட்டுவார்கள். படத்துக்கு 250 கோடியை விட்டு விட்டு அரசியலுக்கு வரும் விஜைக்கு திரள்நிதி-யாசகத்தில் ஆர்வம் இல்லாதிருப்பது வியப்பல்ல.

தலைவனை இழந்த ஈழத்தமிழர்களுக்காக குரல் கொடுப்பது நமது கடமை – விஜய்

1 month 1 week ago
அண்ணன் விஜி அண்ணி வழக்கில் உச்ச நீதிமன்றம் வரை போனவர், ஏன் விகடன் மேல் 1000 கோடி மானநஸ்ட வழக்கு போடவில்லை? (மானம் இருந்தால்தானே நட்டம் ஆக முடியும் என்கிறீர்களா🤣). முக முத்து இறந்தால் அவர் மகள் தேன் மொழியை அல்லவா சந்திக்க வேண்டும்? ஏன் முத்துவின் சிற்றன்னை மகன் ஸ்டாலினை இரெண்டு அரசியல் புரோக்கர்கள் சகிதம் சந்தித்தார். இந்த சந்திப்புக்கு பின் ஏன் திமுக மீதான விமர்சனத்தை தடாலடியாக குறைத்து, அப்படியே விஜையை பார்த்து மூர்க்கமாக குரைக்க ஆரம்பித்தார்?

தலைவனை இழந்த ஈழத்தமிழர்களுக்காக குரல் கொடுப்பது நமது கடமை – விஜய்

1 month 1 week ago
தேசியத்தலைவர் பேரைக் கூட சொல்லத்தைரியமில்லை.இருந்தாலும் அவர் பேசியதை வரவேற்கலாம். விஜை இந்த விடயத்தைப் பேசி இருப்பதால் அது ஊடக வெளிச்சம் பெறும். காலம்கடந்தாவது ஒப்புக்கு ஒரு வரி பேசி விட்டு கடந்து போயிருக்கிறார்.இதை எல்லா அரசியல்வாதிகளும் பேசியிருக்கிறார்கள். நாளைக்கு காங்கிரசுடன் கூட்டணி அமைப்பாரா இல்லையா என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும். விகடன் வாங்கிய காசுக்கு ஒரு செய்தியை ஒரு ஓரமாகப் போட்டு விட்டு சிவனே என்று இருக்கிறது.மேற்கொண்டு அதை உறுதிப்படுத்த எந்தச் செய்தியைுயும் வெளிவிடவில்லை.சீமான் எதிர்ப்பாளர்கள் அதைப் பிடித்துத் தொங்கிக் கொணடு நிற்கிறார்கள்.

இலங்கை போக்குவரத்து சபைக்கு பெண்களை விமான பணிப்பெண்களைப் போன்ற சீருடையில் பணியமர்த்த நடவடிக்கை

1 month 1 week ago
Published By: Digital Desk 1 21 Sep, 2025 | 03:35 PM இலங்கை போக்குவரத்து சபைக்கு சாரதிகள் மற்றும் நடத்துநர்களாக பெண்களையும் பணியமர்த்த நடவடிக்கை எடுக்கபட்டுள்ளது. அந்தவகையில், அவர்களுக்கு விமானப் பணிப்பெண்களின் சீருடைக்கு போன்ற சீருடை வழங்கப்படவுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். 450 சாரதிகள் மற்றும் 300 நடத்துனர்களை பணியமர்த்துவதற்கான நேர்காணல்கள் நடைபெற்று வருவதாகவும், அதில் பெண் ஊழியர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். ஆரம்ப கட்டத்தில், இந்தத் திட்டம் விரிவுபடுத்தப்படுவதற்கு முன்பு, கொழும்பு மாவட்டத்தில் உள்ள பாடசாலை பஸ்களில் பெண்கள் பணியமர்த்தப்படுவார்கள். https://www.virakesari.lk/article/225667

யாழ். பொது நூலகத்தில் தொல்பொருட்கள் காட்சிப்படுத்தல்

1 month 1 week ago
21 Sep, 2025 | 01:39 PM யாழ்ப்பாணம் பொது நூலகத்தில், சிறுவர் பகுதியில் புத்தக கண்காட்சியும், ஆவணவாக்கல் பகுதியில் தொல்பொருட்கள் காட்சிப்படுத்தலும் நடைபெற்றது. உள்ளூராட்சி வாரம், மற்றும் தேசிய வாசிப்பு மாத செயற்றிட்டங்களின் தொடர்ச்சியாக அவை நடைபெற்றது. அவற்றை பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பார்வையிட்டனர். https://www.virakesari.lk/article/225662

திலீபனின் 38வது நினைவு தினம் அனுஷ்டிப்பு

1 month 1 week ago
தியாக தீபம் திலீபனின் 07ஆம் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் 21 Sep, 2025 | 01:39 PM தியாக தீபம் திலீபனின் 07ஆம் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (21) முன்னெடுக்கப்பட்டது. நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள தியாக தீபத்தின் நினைவிடத்தில், சுடரேற்றி, திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. https://www.virakesari.lk/article/225660

தலைவனை இழந்த ஈழத்தமிழர்களுக்காக குரல் கொடுப்பது நமது கடமை – விஜய்

1 month 1 week ago
வடக்கன் மீடியா எல்லாம் விஜய் புலிகளுக்கு ஈழத்தமிழருக்கு ஆதரவாக பேசிவிட்டாராம்.. கதறிக்கொண்டிருக்கின்றன..

சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை அடுத்தவாரத்துக்குள் முடிவு என்கிறது பிரதான எதிர்க்கட்சி

1 month 1 week ago
21 Sep, 2025 | 01:36 PM ஆர்.ராம் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்படுவது தொடர்பில் அடுத்தவார இறுதிக்குள் தீர்மானிக்கப்படும் என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. சபாநாயகருக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லாப்பிரேரணை தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினரும் எதிர்க்கட்சி கொறடாவுமான கயந்த கருணாதிலக்க தெரிவிக்கையில், சபாநாயகர் மீதான நம்பிக்கை இழப்பு குறித்து நாங்கள் தற்போது ஆய்வு செய்து வருகிறோம். அவருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றைக் கொண்டு வருவது தொடாபில் பரிசீலிக்க வேண்டும் என்று எங்களின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் வலியுறுத்தியுள்ளனர். அந்த வகையில் அந்த விடயம் சம்பந்தமாக அடுத்தவாரம் இறுதி முடிவினை எடுப்போம் என்றார். முன்னதாக, எதிர்க்கட்சியின் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்க சபாநாயகர் தவறினால் அவருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வரப்படும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரஞ்சித் மத்தும பண்டார எச்சரிக்கை விடுத்திருந்தார். குறிப்பாக, பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் (ஓய்வுபெற்ற) மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகரவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் சமர்ப்பித்த நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பாக சட்டமா அதிபர் அறிக்கை மற்றும் பாராளுமன்ற செயலாளர் நாயகத்தின் அறிக்கை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு கடந்த 10ஆம் திகதி சபாநாயகர் ஜகத் விக்ரமத்ன தனது முடிவினை அறிவித்திருந்தார். இதனையடுத்து எதிர்க்கட்சிகள் அந்த அறிவிப்புக்கு எதிராக கடுமையான எதிர்ப்பினை வெளியிட்டிருந்ததோடு பாராளுமன்ற செயலாளர் நாயகத்தின் அறிக்கை மற்றும் சட்டமா அதிபரின் அறிக்கை ஆகியவற்றை சபையில் சமர்ப்பிக்குமாறு கோரியிருந்தது. எனினும், அதற்கு ஆளும் தரப்பில் மறுப்புத் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த அறிக்கைகளை நம்பிக்கையில்லாப் பிரேரணை சமர்ப்பித்த உறுப்பினர்கள் சபாநாயகர் அலுவலகத்தில் வைத்து பார்வையிட முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய அடுத்தவாரம், பாதுகாப்பு பிரதியமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை சமர்ப்பித்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அந்த அறிக்கையை பார்வையிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/225657

சாபாநயகருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை அடுத்தவாரத்துக்குள் முடிவு என்கிறது பிரதான எதிர்க்கட்சி

1 month 1 week ago
21 Sep, 2025 | 01:36 PM ஆர்.ராம் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டரப்படுவது தொடர்பில் அடுத்தவார இறுதிக்குள் தீர்மானிக்கப்படும் என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. சபநாயகருக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லாப்பிரேரணை தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினரும் எதிர்க்கட்சி கொறடாவுமான கயந்த கருணாதிலக்க தெரிவிக்கையில், சபாநாயகர் மீதான நம்பிக்கை இழப்பு குறித்து நாங்கள் தற்போது ஆய்வு செய்து வருகிறோம். அவருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றைக் கொண்டு வருவது தொடாபில் பரிசீலிக்க வேண்டும் என்று எங்களின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் வலியுறுத்தியுள்ளனர். அந்த வகையில் அந்த விடயம் சம்பந்தமாக அடுத்தவாரம் இறுதி முடிவினை எடுப்போம் என்றார். முன்னதாக, எதிர்க்கட்சியின் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்க சபாநாயகர் தவறினால் அவருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வரப்படும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரஞ்சித் மத்தும பண்டார எச்சரிக்கை விடுத்திருந்தார். குறிப்பாக, பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் (ஓய்வுபெற்ற) மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகரவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் சமர்ப்பித்த நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பாக சட்டமா அதிபர் அறிக்கை மற்றும் பாராளுமன்ற செயலாளர் நாயகத்தின் அறிக்கை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு கடந்த 10ஆம் திகதி சபாநாயகர் ஜகத் விக்ரமத்ன தனது முடிவினை அறிவித்திருந்தார். இதனையடுத்து எதிர்க்கட்சிகள் அந்த அறிவிப்புக்கு எதிராக கடுமையான எதிர்ப்பினை வெளியிட்டிருந்ததோடு பாராளுமன்ற செயலாளர் நாயகத்தின் அறிக்கை மற்றும் சட்டமா அதிபரின் அறிக்கை ஆகியவற்றை சபையில் சமர்ப்பிக்குமாறு கோரியிருந்தது. எனினும், அதற்கு ஆளும் தரப்பில் மறுப்புத் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த அறிக்கைகளை நம்பிக்கையில்லாப் பிரேரணை சமர்ப்பித்த உறுப்பினர்கள் சபாநாயகர் அலுவலகத்தில் வைத்து பார்வையிட முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய அடுத்தவாரம், பாதுகாப்பு பிரதியமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை சமர்ப்பித்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அந்த அறிக்கையை பார்வையிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/225657
Checked
Tue, 11/04/2025 - 08:47
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed