புதிய பதிவுகள்2

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்

1 month 3 weeks ago
இரானின் தஸ்னிம் செய்தி நிறுவனம் வெளியிட்ட ஒரு அறிக்கையில், நாட்டின் வான் பாதுகாப்புப் படை இரண்டு இஸ்ரேலி போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியுள்ளதாகவும், "இந்த போர் விமானங்களில் ஒன்றின் விமானியை கைது செய்யப்பட்டுள்ளார், அவர் ஒரு பெண்" என்றும் கூறப்பட்டுள்ளது. சில ஈரானிய ஊடகங்களில் இஸ்ரேலிய விமானி ஒருவர் கைது செய்யப்பட்டதாக வந்த செய்திகளுக்கு பிறகு, இஸ்ரேலின் படைத்துறை இது உண்மை இல்லை என்று தெரிவித்துள்ளது -bbc.com

கோவிந்தன் கருணாகரத்துக்கு எதிராக நடவடிக்கை - ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணி அறிவிப்பு

1 month 3 weeks ago
கோவிந்தன் கருணாகரத்துக்கு எதிராக நடவடிக்கை - ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணி அறிவிப்பு Published By: VISHNU 14 JUN, 2025 | 02:06 AM (நா.தனுஜா) ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணியின் பங்காளிக்கட்சிகளில் ஒன்றான ரெலோவின் செயலாளர் நாயகம் கோவிந்தன் கருணாகரத்துக்கு (ஜனா) எதிராக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அக்கூட்டணி அறிவித்துள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தெற்கு எருவில் பற்று பிரதேச சபைக்கான தவிசாளர் தெரிவின்போது தேசிய மக்கள் சக்தி மற்றும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி என்பன இணைந்து களமிறக்கிய வேட்பாளருக்கு ஆதரவாக வாக்களிப்பதற்கு மாவட்டக்கிளைத் தலைவர் என்ற அடிப்படையில் உறுப்பினர்களுக்கு வழிகாட்டலை வழங்கியமை தொடர்பிலேயே அவருக்கு எதிராக மேற்குறிப்பிட்டவாறு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. அண்மையில் நடைபெற்றுமுடிந்த உள்ளுராட்சிமன்றத்தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தெற்கு எருவில் பற்று பிரதேச சபையில் இலங்கைத் தமிழரசுக்கட்சி 11,981 வாக்குகளைப்பெற்று 8 ஆசனங்களையும், தேசிய மக்கள் சக்தி 3,894 வாக்குகளைப்பெற்று 6 ஆசனங்களையும், தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி 3,894 வாக்குகளைப்பெற்று 2 ஆசனங்களையும், ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணி, ஐக்கிய மக்கள் சக்தி, சுயேட்சைக்குழு 1 மற்றும் சுயேட்சைக்குழு 2 என்பன முறையே 1967, 1286, 809, 1174 வாக்குகளைப்பெற்று தலா ஒரு ஆசனத்தையும் கைப்பற்றின. இந்நிலையில் அப்பிரதேச சபைக்கான தவிசாளர் மற்றும் உப தவிசாளரைத் தெரிவுசெய்வதற்கான வாக்கெடுப்பு வியாழக்கிழமை (12) நடாத்தப்பட்டது. இதன்போது 6 ஆசனங்களைக்கொண்ட தேசிய மக்கள் சக்தி மற்றும் 2 ஆசனங்களைக்கொண்ட தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி என்பன இணைந்து களமிறக்கிய தவிசாளர் வேட்பாளருக்கு ஆதரவாக ஒரு ஆசனத்தைப்பெற்ற ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணியின் உறுப்பினர் வாக்களித்தார். அதன்விளைவாக அப்பிரதேச சபை தேசிய மக்கள் சக்தி வசமானது. இந்நிலையில் ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணியின் மட்டக்களப்பு மாவட்டக்கிளைத் தலைவர் என்ற ரீதியில் யாருக்கு வாக்களிக்கவேண்டும் என்ற வழிகாட்டலை வழங்கினார் எனும் அடிப்படையிலேயே கோவிந்தன் கருணாகரத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவிருப்பதாக அக்கட்சி தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/217411

பட்டிப்பளை பிரதேச சபையின் தவிசாளர் தெரிவு

1 month 3 weeks ago
பட்டிப்பளை பிரதேச சபையின் தவிசாளர் தெரிவு மட்டக்களப்பு, பட்டிப்பளை பிரதேச சபையின் ஆட்சி அதிகாரத்தை தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியுடன் இணைந்து சுயேட்சை குழு கைப்பற்றியுள்ளது. பட்டிப்பளை பிரதேச சபையின் தவிசாளராக திரேஸ குமாரன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். பட்டிப்பளை பிரதேச தவிசாளர் தேர்வுக்காக இலங்கை தமிழ் அரசு கட்சி சார்பில் கோபாலபிள்ளை சுரேந்திரன் (பட்டிப்பளை வட்டாரம்) முன்மொழியப்பட்டார். சுயேட்சை குழு (பந்து) சார்பில் இளையதம்பி திரேஸ குமாரன் (அரசடித்தீவு வட்டாரம்) முன்மொழியப்பட்டார். வாக்கெடுப்பில் சுயேட்சை குழுவின் இளையதம்பி திரேஸ குமாரன் 9 வாக்குகளை பெற்றுக் கொண்ட நிலையில், தமிழ் அரசு கட்சியின் கோபாலபிள்ளை சுரேஷ்குமார் 6 வாக்குகளை பெற்றார். தேசிய மக்கள் சக்தியின் 1 உறுப்பினர் நடுநிலை வகித்தார். பிரதி தவிசாளராக தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி சார்பில் கனகநாயகம் கபில்ராஜ் (கொக்கட்டிச்சோலை வட்டாரம்) ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டார். தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியும் திரேஸ குமாரன் தலைமையிலான சுயேட்சை குழுவும் இணைந்து பட்டிப்பளை பிரதேச சபையின் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியுள்ளன. சுயேட்சை குழுவை தலைமை தாங்கியுள்ள திரேஸ குமாரன், தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவர் பிள்ளையான் (சி. சந்திரகாந்தன்) அவர்களால் சுட்டுக் கொல்லப்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்ட விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மட்டக்களப்பு-அம்பாறை மாவட்ட அரசியல் துறை பொறுப்பாளர் கௌசல்யன் அவர்களின் சகோதரராவார். https://adaderanatamil.lk/news/cmbuyoh6901toqpbsmkybfygk

யாழ்கள உலக டெஸ்ட் சாம்பியன் (WTC) கணிப்பு போட்டி

1 month 3 weeks ago
மதிய இடைவேளைக்கு முதல் முடிந்தால் முழுவதுமாக மட்ச்சைப் பார்க்கலாம்! இல்லாவிட்டால் கார் பயணத்தில் பிபிஸி சவுண்ட்டில் கொமென்ரரி கேட்கவேண்டும். அதுவும் த்ரில்லாகத்தான் இருக்கும்.

யாழ்கள உலக டெஸ்ட் சாம்பியன் (WTC) கணிப்பு போட்டி

1 month 3 weeks ago
அப்ப என்ன நாளைக்கு மத்தியானச் சாப்போட்டோட முடிஞ்சிடுமா. எப்பவும் மறுநாள் ஆரம்பம் சிரமமாகத்தான் இருப்பது. இருவரில் ஒருவர் நின்றாலே முடிச்சு விடலாம். சரித்திரம் எழுதப்படுமா. கோசானின் முன்னிலையில்.

யாழ்கள உலக டெஸ்ட் சாம்பியன் (WTC) கணிப்பு போட்டி

1 month 3 weeks ago
இப்படி செய்தது, normal swing ஐ பெற. அதாவது seam position ஆனது slips ஐ நோக்கி இருக்கும் போது பந்து பேட்ஸ்மேனனில் இருந்து விலகிய திக்கில் போனால் அது நோமல் அவுட் சுவிங். ஆனால் சீம் பொசிசன் இப்படியே இருக்க பந்து பேட்ஸ்மனை நோக்கி வந்தால் அது ரிவேர்ஸ் சுவிங். சுருங்க சொல்லின், outswing seam position இல் inswing ஆவதும், inswing seam position இல் outswing ஆவதுமே ரிவர்ஸ் சுவிங். இதற்கு பந்தின் ஒரு புறத்தை பொலிஷ் பண்ணுவது மட்டும் போதாது. மறுபுறம் கரடுமுரடு ஆகவும் வேண்டும். ஆனால் லொர்ட்ஸ் போன்ற ஒரு பச்சைபசேல் மைதானத்தில், யூன் மாத ஆரம்பத்தில் இதற்கு வாய்ப்புகள் குறைவு. அப்படியே ஆகட்டும்.

யாழ்கள உலக டெஸ்ட் சாம்பியன் (WTC) கணிப்பு போட்டி

1 month 3 weeks ago
இது Duke பந்துகள். கொஞ்சம் தேய்ச்சு மினுமினுப்பாக்கினாலே காணும். நல்லாத் திரும்பும். அவுஸ்ரேலியாக்காறர் ஒரு பக்கத்தைத் தொடர்ந்து தேய்த்துக்கொண்டே இருந்தார்கள். அதுதான் நினைத்தேன் Reverseக்குத்தான் முயற்சி செய்யினம் என்று.

யாழ்கள உலக டெஸ்ட் சாம்பியன் (WTC) கணிப்பு போட்டி

1 month 3 weeks ago
இன்றும் கம்பீரமாக பதவியில் தொடர்கிறார் முதல்வர் சுவி அண்ணா. புள்ளி நிலைகளில் மாற்றம் இல்லை. நாளை போட்டி வெள்ளனவாக முடிந்தாலும் நான் வீடு வர நேரம் எடுக்கும். செம்பாக அல்லது ஏராளன் அல்லது வேறு எவரேனும் போட்டி முடிவை அறிவித்தால் நன்றாக இருக்கும்? செய்வீர்களா 🤣 முடிந்தால் 14 ஓவருக்குள் முடிச்சு வை🤣

யாழ்கள உலக டெஸ்ட் சாம்பியன் (WTC) கணிப்பு போட்டி

1 month 3 weeks ago
ஒத்தைக் காலுடன், தெம்பாக ஆடினார் தெம்பா. தலைவனின் ஆட்டம் என்றால் அதுதான். நாளைக்கு தெம்பாக திரும்பிவா. முடிச்சு வை. எய்டன். ஒரு முறையான டெஸ்ட் துடுப்பாட்ட வீரன். அதுவும் அவுஸ்ரேலியா என்டா அவனுக்கு லட்டு சாப்பிடற மாதிரி. இன்றும் அதையே காட்டிவிட்டுச் சென்றான். ஓய்வெடுத்து தெம்பா திரும்பி வா. முடிச்சு வை.

யாழ்கள உலக டெஸ்ட் சாம்பியன் (WTC) கணிப்பு போட்டி

1 month 3 weeks ago
ஓம்…புத்தம் புதிய பந்தை கொடுக்கமாட்டார்கள், ஆனால் மாற்றும் பந்து அதே அளவு ஓவர்கள் பாவித்த பந்தாக இருப்பினும், சற்றே கடினமானதாக, அத்தோடு உருவம் குறையாமல், குறிப்பாக நூல் தேயாமல் இருக்க வாய்ப்புகள் கூட. பந்தை மாற்றும் போது விக்கெட் விழுவது உண்டு அதையே சொன்னேன். ரிவேர்ஸ் சுவிங்கிற்காக ஏதுநிலை இங்கே இல்லை என நினைக்கிறேன். அதற்கு மைதானம் வரண்டு அதன் மூலம் ஒரு பகுதி உராய, மறு பகுதியை பொலிஷ் பண்ணி, சுவிங்க உருவாக்க வேண்டும். அல்லது சாண்ட்பேப்பரால் சுரண்டினால்தான் உண்டு 🤣. இது அவுஸ் முன்னர் ஒரு முறை செய்து மாட்டியதுதானே🤣.

சாவகச்சேரி நகரசபையில் வீடா... சைக்கிளா...இன்று கடும்போட்டி

1 month 3 weeks ago
சாவகச்சேரி நகர சபை தமிழ் தேசிய பேரவை வசம் adminJune 13, 2025 சாவகச்சேரி நகரசபை தவிசாளராக போட்டியிட்ட தமிழ்த் தேசிய பேரவையின் உறுப்பினர் வ.சிறிபிரகாஸ் திருவுளச்சீட்டு முறையின் மூலம் தவிசாளராக தெரிவாகியுள்ளார். சாவகச்சேரி நகர சபை தவிசாளர் தெரிவு இன்றைய தினம் வெள்ளிக்கிழமை சபையின் சபா மண்டபத்தில் இடம்பெற்றது. அதன் போது தமிழரசு மற்றும் தமிழ்த் தேசிய பேரவையின் உறுப்பினர்கள் தலா 7வாக்குகளை பெற்ற நிலையில் திருவுளச்சீட்டு மூலம் தமிழ்த் தேசிய பேரவையின் உறுப்பினர் வ.சிறிபிரகாஸ் தெரிவானார் அதே போன்று உப தவிசாளர் தெரிவின் போதும், தமிழரசு மற்றும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி வேட்பாளர்கள் 07 வாக்குகளை பெற்ற நிலையில் திருவுளச்சீட்டு மூலம் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் உறுப்பினர் ஞா. கிஷோர் தெரிவானார். அதேவேளை சாவகச்சேரி நகராட்சி மன்ற எல்லைக்குள் வசிக்காதவர் என வழக்கு தாக்கல் செய்யப்பட்ட தமிழ் தேசிய பேரவையின் உறுப்பினர் சபை அமர்வில் கலந்துகொள்ள உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://globaltamilnews.net/2025/216787/

‘விபசாரம்’ செய்ய ஒப்பானதான ‘தமிழரசுக் கட்சி’

1 month 3 weeks ago
மாநகர சபை ஈபிடிபியின் ஆதரவோடு.. நல்லூர் பிரதேச சபை மான் கட்சிக்கு. ஆனால் சுமந்திரன் - விக்கியின் ஒப்பந்தம் மூலம். ஆக கொள்கை என்று ஒன்றுமில்லை. கூட்டணிக் கணக்குகள் மூலம் அதிகாரத்தை கைப்பற்றும் ஆசைதான். அதை வைத்து மக்களுக்கு ஒன்றும் செய்யமாட்டார்கள். எவ்வளவு சுருட்டமுடியுமோ அவ்வளவு சுருட்டுவார்கள்.. குடை பிடிக்க தொண்டர்கள் இருக்குமட்டும் அதிகாரத்துக்கு ஆசைப்படுபவர்களுக்கு குறைவில்லை!

தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்ததா? மொழியியலாளர்கள் சொல்வது என்ன?

1 month 3 weeks ago
கன்னடம் குறித்த கமல்ஹாசனின் கருத்தால் மூண்டிருக்கும் சர்ச்சையை புரிந்துகொள்ளல் 11 JUN, 2025 | 10:39 AM பெருமாள் முருகன் " கன்னட மொழி தமிழில் இருந்து பிறந்தது " என்ற நடிகர் கமல்ஹாசனின் கருத்து பல்வேறு விவாதங்களை மூளவைத்திருக்கிறது. ஆனால், இது ஒன்றும் புதிய கருத்து அல்ல. இது இரு நூற்றாண்டுகளாக தமிழ் உலையாடல்களில் இருந்து வந்திருக்கிறது. பொதுவான ஆதித்திராவிட மொழி (Proto - Dravidian language ) ஒன்றில் இருந்து கிளைவிட்டவையே திராவிட மொழிகள் என்று றொபேர்ட் கால்ட்வெல்லும் மற்றைய மொழியியல் நிபுணர்களும் கூறியிருக்கிறார்கள். ஆனால், இந்த கருத்தை தமிழ்த் தேசியவாதிகள் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளவில்லை. சகல திராவிட மொழிகளும் தமிழில் இருந்து பிறந்தவையே என்று அவர்களன உரிமை கோரினார்கள். இந்த நம்பிக்கை அதன் உச்சத்தில் தமிழே உலகின் முதலாவது மொழி என்றும் உலகின் ஏனைய மொழிகள் சகலதும் அதிலிருந்து பிறந்தவையே என்றும் பிரகடனம் செய்யப்படுகின்ற அளவுக்கு விரிவடைந்தது. பெரிதும் ஏற்புடைய கருத்து இன்றும் கூட தமிழ் அறிவுஜீவிப் பரப்பில் இரு சிந்தனைப் போக்குகள் தொடர்ந்து மேம்பட்டுக் காணப்படுகின்றன. ஆதித்திராவிட மொழி ஒன்று பற்றிய கருத்து தமிழ்நாட்டுக்கு அப்பால் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. மாறாக, தமிழ் சகல மொழிகளினதும் தோற்றுவாய் என்ற கருத்து தமிழ்நாட்டுக்கு வெளியில் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. இந்தியாவின் பன்மொழிப் பின்புலத்தில் மொழி ஆதிக்கத்தைச் சூழ்ந்த விழிப்புநிலை அரசியல் ரீதியாகவே வளர்ந்திருக்கிறது. ஒவ்வொரு தேசியக்குழுவும் அதன் அடையாளத்தின் பிரதான குறியீடாக மொழியையே கருதுகின்றன. அவர்களது மொழியின் பெருமையை சிறுமைப்படுத்துவதாக கருதப்படக்கூடிய எந்தவொரு கருத்து அல்லது நடவடிக்கை ஆவேசமான எதிர்ப்பைக் கிளப்பும். இத்தகைய ஒரு சூழ்நிலையில், பொதுவான ஒரு ஆதித்திராவிட தோற்றுவாயில் (Proto - Dravidian root) இருந்தே சகல திராவிட மொழிகளும் தோன்றின என்ற கருத்தை அழுத்திச் சொல்வதே பொது மேடைகளில் பெருமளவுக்கு பொருத்தமானதாக இருக்கும். இந்த கருத்து கலாசார ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் இணக்கப்போக்கையும் சமத்துவத்தையும் வளர்க்கும். மற்றைய மொழிகள் தமிழில் இருந்தே தோன்றின என்று கூறுவதை மற்றையவர்கள் தங்களது மொழியினதும் அடையாளத்தினதும் மதிப்பைக் குறைக்கும் ஒரு செயலாகவே எளிதில் நோக்கக்கூடும். தமிழே தங்களது மொழிகள் எல்லாவற்றினதும் தோற்றுவாய் என்று உரிமை கோருவதை மற்றைய மொழிகளைப் பேசுபவர்கள் தங்கள் மீதான திணிக்கப்படும் ஆதிக்கத்தின் ஒரு வடிவமாகப் பார்க்கக்கூடும். தங்களது மூதாதைப் பெருமையை அரசியல் பிரசாரத்துடன் கலக்கும் தமிழ்த் தேசியவாதிகளைப் பொறுத்தவரை, தமிழே மற்றைய மொழிகளின் தோற்றுவாய் என்று கூறுவது புராதன மேன்மைக் கதையாடல் ஒன்றை கட்டமைக்க உதவலாம். ஆனால், அதற்கு அப்பால், சமகால அரசியலில் இந்த கருத்து தமிழ்நாட்டை தனிமைப்படுத்த மாத்திரமே உதவும். வலிமையான - பரவலாக ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய அறிவுசெறிந்த சான்று இல்லாமல், சகல மொழாகளினதும் தோற்றுவாய் தமிழே என்நு அழுத்தியுரைக்க வேண்டிய தேவையில்லை. தமிழின் சிறப்புவாய்ந்த பண்புகளான அதன் தொல்பழமை, இலக்கியச் செழுமை மற்றும் இடையறாத இலக்கியப் பாரம்பரியம் ஆகியவற்றை ஏனைய மொழிச் சமூகங்களும் பரந்தளவில் உலகமும் நன்கு அறியும். இந்த சிறப்புக்களை எடுத்தியம்புவதே தமிழைக் கௌரவப்படுத்தப் போதுமானதாகும். இந்தியாவின் எந்தவொரு மொழியினதும் நவீன இலக்கியத்துடன் ஒப்பிடும்போது கூட, தமிழ் உயர்வானதாக மாத்திரமல்ல, சமத்துவமானதாகவும் நிற்கிறது. தமிழின் இந்தச் செழுமையை பரந்த உலகிற்கு எடுத்துச் செல்வதற்கு உணர்வு முனைப்புடைய முயற்சிகளே இன்று எமக்கு தேவைப்படுகிறது. 2022 ஆம் ஆண்டில் இந்தி எழுத்தாளர் கீதாஞ்சலி சிறீ சர்வதேச பூக்கர் பரிசை வென்றார். இந்த வருடம் கன்னட எழுத்தாளர் பானு முஷ்ராக் அதே கௌரவத்தைப் பெற்றார். தமிழும் கூட அத்தகைய உலகளாவிய உச்சங்களை பெறுவதற்கு உரித்துடையது. எமக்கு தேவை அந்த திசையிலான தளராத கலாசார முயற்சியே அன்றி, ஏனைய மொழிகளைப் பேசுபவர்களை மனமுறிவுக்கு உள்ளாக்கக்கூடிய -- ஆத்திரமூட்டும் வகையிலான பயன்ற்ற கருத்துக்கள் அல்ல. " தமிழில் இருந்து கன்னடம் பிறந்தது " என்று கமல்ஹாசன் கூறியபோது அவரது நோக்கம் அந்த மொழியை அவமதிப்பது அல்ல. கன்னட நடிகர் சிவராஜ்குமாரும் அந்த மேடையில் இருந்தார். அவரது குடும்பத்துடனான தனது கனிவான உறவுமுறை பற்றி பெருமையாக ஹாசன் பேசினார். கன்னடத்துக்கும் தமிழுக்கும் இடையிலான பண்பொற்றுமையை சுட்டிக்காட்டிய அவர் ' நாங்கள் ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள ; எம்மவை சகோதர மொழிகள்' என்று கூறுவதற்கே முயற்சித்தார். அந்த தருணத்தில், ' 'தமிழே மூலமொழி ' என்று தமிழ்ச் சிந்தனையாளர்களில் ஒரு பிரிவினர் நீண்டகாலமாகக் கொண்டிருக்கும் ஒரு கருத்து அவரது சிந்தனைக்கு வந்திருக்கக்கூடியது சாத்தியம். ஆனால், அவரது நோக்கங்களை சந்தேகிப்பதற்கு எந்த காரணமும் கிடையாது. அத்தகைய கருத்தை பொதுவெளியில் சொல்வதற்கு அவருக்கு கருத்து வெளிப்பாடாடுச் சுதந்திரம் இருக்கிறது. எதிர்க்கருத்தை கொண்டவர்கள் அவருடன் இணங்காமல் விடலாம். பதிலை பேச்சில் அல்லது எழுத்தில் வெளிப்படுத்த முடியும். ஆனால், அச்சுறுத்தல் விடுப்பது கருத்தை தெரிவிப்பதற்கான அவரின் உரிமையை மீறும் செயலாகும். நீதிமன்றத்தின் கருத்து கமல்ஹாசனின் ' தக் லைவ் ' என்ற திரைப்படத்தின் வெளியீடு தொடர்பான ஒரு வழக்கு கர்நாடகா மாநிலத்தில் விசாரணைக்கு எடுக்கப்பட்டபோது மன்னிப்புக் கேட்குமாறு அவரை நீதிபதி பெரும்பாலும் நிர்ப்பந்தித்தார். இந்த விவகாரத்தை இரு பிராந்திய இனங்களுக்கு இடையிலான ஒரு மோதலாக மாற்றுவதற்கு மொழி அடிப்படைவாதிகள் தயாராக இருக்கின்ற ஒரு நேத்தில், அவர்களுக்கு அனுகூலமான முறையில் நீதிமன்றம் அதை அணுக வேண்டுமா? பொலிசார் இந்த விவகாரத்தை சட்டம், ஒழுங்குடன் சம்பந்தப்பட்ட ஒரு பிரச்சினையாக கையாளக்கூடும், ஆனால், நீதிமன்றம் அந்த வழியில் நோக்கக்கூடாது. வர்த்தக ரீதியான விட்டுக்கொடுப்பை கட்டாயப்படுத்தும் கட்டப்பஞ்சாயத்து போன்று நீதிமன்றம் செயற்பட வேண்டுமா? நீதிமன்றம் இதை கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்துடன் சம்பந்தப்பட்ட ஒரு பிரச்சினையாக அணுகியிருக்க வேண்டும். ஒரு குறிப்பிட்ட கருத்தினால் தான் பாதிக்கப்பட்டிருப்பதாக எந்த ஒருவரும் கூறலாம். ஆனால், அவர் பாதிக்கப்பட்டிருப்பதற்கான அளவு என்ன? எவருமே வேண்டுமென்று சமூகப் பதற்றத்தை உருவாக்கலாம். அத்தகையவர்களை சமரச ஏற்பாட்டுக்கான ஒரு தரப்பாக நீதிமன்றம் கருதமுடியாது. கமல்ஹாசனுக்கு அத்தகைய கருத்தை வெளிப்படுத்துவதற்கான சுதந்திரம் இருக்கிறதா என்பது குறித்து கவனமாக ஆராயப்படும் என்று தான் நீதிமன்றம் கூறியிருக்க வேண்டும். அத்துடன் இந்த பிரச்சினைக்கும் திரைப்படத்தின் வெளியீடடுக்கும் எந்த தொடர்பும் இல்லை; பொலிஸ் பாதுகாப்புடன் திரைப்படத்தை வெளியிடுவதற்கு அனுமதிக்கப்படும் என்று நீதிமன்றம் கூறியிருக்க வேண்டும். எந்த வழியில் வழக்கு நீதிமன்றத்துக்கு வந்திருந்தாலும், கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தின் கோணத்திலேயே அதை நீதிமன்றம் அணுகியிருக்க வேண்டும். ஜனநாயக நாடொன்றில் அந்த உரிமையைப் பாதுகாப்பதற்கான இறுதிப் புகலிடம் நீதிமன்றமேயாகும். கமல்ஹாசன் மன்னிப்புக் கேட்கவில்லை. " எனது கருத்து தவறானது அல்ல. அது தவறாக விளங்கிக்கொள்ளப் பட்டிருக்கிறது" என்று அவர் விளக்கமளித்தார். வழமையாக, திரைப்படம் ஒன்று தொடர்பாக ஏதாவது பிரச்சினை எழுந்தால், உடனடியாக மன்னிப்புக் கோருவது, காட்சிகளை அகற்றுவது, திரைப்படத்தின் வெளியீட்டுக்கு வசதியாக சமரசத்தை ஏற்படுத்துதே நடைமுறை நியதியாகும். முதற்தடவையாக திரைப்படத்துறை சார்ந்த ஒருவர் " நான் மன்னிப்புக் கேட்கமாட்டேன் " என்று கூறியிருக்கிறார். அந்த நிலைப்பாட்டுக்கு பின்னால் எத்தகைய வர்த்தகக் கணிப்பீடுகள் இருந்தாலும், அத்தகைய அறிவிப்பு ஒன்றைச் செய்வதற்கு அவருக்கு இருந்த துணிச்சலை மெச்சவேண்டும். நீதிமன்றம் கூறியதைப் போன்று இது ஒரு அகங்காரப் பிரச்சினை அல்ல. சுயமரியாதைப் பிரச்சினை. கருத்தொன்றைக் கூறுவதற்கு ஒருவருக்கு சகல உரிமையும் இருக்கிறது. தான் கூறியது சரியானது என்று அவர் நம்பினால் அதில் உறுதியாக நிற்பதற்கான உரிமையும் அவருக்கு இருக்க வேண்டும். அத்தகைய கருத்துக்களுக்கு ஜனநாயக ரீதியான எதிர்ப்பை வெளிப்படுத்தவும் முடியும். ஆனால், வன்முறை அச்சுறுத்தல்களை விடுப்பதோ அல்லது உயிர்வாழ்வதற்கான உரிமையை நிராகரிப்பதோ தண்டனைக்குரிய குற்றங்களாக கணிக்கப்பட வேண்டும். (கட்டுரையாளர் தமிழகத்தின் கல்விமான், இலக்கிய வரலாற்று பதிவாளர்) (தி இந்து) https://www.virakesari.lk/article/217133
Checked
Sat, 08/09/2025 - 18:56
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed