1 month 2 weeks ago
அந்த இரண்டு பேர்... சுமந்திரனும், சிவஞானமும்தான். 😂 அவர்கள் மாறி, மாறி... முதுகு சொறிஞ்சு கொண்டு இருக்க, சோக்காக இருக்கும். 🤣
1 month 2 weeks ago
வேலணையில் “தியாக தீபம்” திலீபனின் நினைவேந்தல் 15 Sep, 2025 | 01:44 PM தியாக தீபம் திலீபனின் 38வது நினைவேந்தலின் ஆரம்ப நிகழ்வுகள் இன்று (15) காலை தீவகம் நினைவேந்தல் குழுவின் ஏற்பாட்டில் யாழ். தீவகம் வேலணை வங்களாவடி சந்தியில் அமைந்துள்ள பொது நினைவுத்தூபியில் நடைபெற்றன. இதன்போது பொதுச் சுடர் ஏற்றப்பட்டு தியாக தீபம் திலீபனின் திருவுருவப்படத்திற்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு மலர் அஞ்சலியும் செலுத்தப்பட்டது. இந்த நினைவேந்தல் நிகழ்வில் வேலணை பிரதேச சபையின் உறுப்பினர்கள், வர்த்தகர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர். https://www.virakesari.lk/article/225134
1 month 2 weeks ago
உண்மைதான் https://www.zocalopublicsquare.org/the-world-war-ii-wonder-drug-that-never-left-japan/
1 month 2 weeks ago
கடைசியில் 2 பேர் மட்டுமே மிஞ்சும்
1 month 2 weeks ago
🤣 அந்த வீடியோவை இங்கே இணைப்பதில் உங்களுக்கு என்ன தயக்கம்? "ஞாபகம்" என்பது கொஞ்சம் சிக்கலான விடயம். நீங்கள் கனவில் கண்டது கூட "ஞாபகம்" ஆக பின்னர் தெரியக் கூடும்!
1 month 2 weeks ago
புதிய 2 ஆயிரம் ரூபா தாள் குறித்து இலங்கை மத்திய வங்கி விடுத்துள்ள அறிவிப்பு! 15 Sep, 2025 | 12:29 PM இலங்கை மத்திய வங்கியின் 75 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு அதனை நினைவுகூரும் முகமாக ஞாபகார்த்த 2 ஆயிரம் ரூபா நாணயத்தாள் சுற்றோட்டத்திற்கு விடப்படுவது பற்றிய பொதுமக்களுக்கான விழிப்புணர்வு குறித்த அறிக்கையொன்றை இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, இலங்கை மத்திய வங்கி அதன் 75 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு 2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 29 ஆம் திகதி அன்று 2000 ரூபா சுற்றோட்டத்திற்கு விடப்படும் நாணயத்தாளை வெளியிட்டுள்ளது. புதிய நாணயத்தாளை தங்குதடையின்றி ஏற்றுக்கொள்வதையும் விநியோகிப்பதையும் வசதிப்படுத்தும் பொருட்டு, உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகள் அவற்றின் பணம் கையாளும் இயந்திரங்களை அளவமைக்கும் செயன்முறையை முன்னெடுக்கின்றன. இச் செயன்முறையின் முன்னேற்றத்திற்கு ஏற்ப, புதிய நாணயத்தாள் உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகள் ஊடாக படிப்படையாக சுற்றோட்டத்திற்கு விடப்படும். மாறுதலடைகின்ற இக்காலப்பகுதியில் பொதுமக்களின் உத்துழைப்பை இலங்கை மத்திய வங்கி மெச்சுவதுடன் அளவமைக்கும் செயன்முறை நிறைவடைந்தவுடன் புதிய நாணயத்தாள் அனைத்து வங்கிகள் மூலமும் தங்குதடையின்றிப் பயன்படுத்தப்படுமெனவும் உறுதியளிக்கின்றது. இது குறித்த விபரங்களை அறிந்துகொள்ள, நாயணத்திணைக்களத்துடன் தொடர்பு கொள்ளுமாறும், மத்திய வங்கியின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்கோ அல்லது மத்திய வங்கியின் சமூக ஊடகத்தளங்களை பின்தொடருமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/225128
1 month 2 weeks ago
குருக்கள்மடம் மனித புதைகுழி அகழ்வுப்பணி அடுத்தவாரம் ஆரம்பம் - 29 இலட்சம் ரூபா ஒதுக்கீடு Sunday, September 14, 2025 செய்திகள் மட்டக்களப்பு குருக்கள்மடம் மனித புதைகுழியின் அகழ்வு நடவடிக்கைகளை அடுத்த வாரம் ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்காக 29 இலட்சம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு பிரதியமைச்சர் முனீர் முளப்பர் தெரிவித்தார். களுவாஞ்சிக்குடி நீதவான் விடுத்த உத்தரவிற்கமைய குருக்கள்மடம் மனித புதைகுழியின் அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அவர் கூறினார். குருக்கள்மடம் மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகளை முன்னெடுப்பது தொடர்பான விசாரணை மற்றும் நிதி ஒதுக்கீடு தொடர்பான அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம் அறிக்கை விடுத்திருந்தது. அதற்கமைய, எதிர்வரும் 18ஆம் திகதி களுவாஞ்சிக்குடி நீதவானிடம் இது தொடர்பான விசாரணை அறிக்கைகள் சமர்பிக்கப்படவுள்ளதாக அலுவலகம் தெரிவித்துள்ளது. குறித்த அகழ்வுப் பணிகள் தொடர்பான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் ஆராய்வதற்காக கடந்த வியாழக்கிழமை காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தின் அதிகாரிகள் விஜயம் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது இவர்கள் ஏன் இப்போது அவசரப் படுகின்றார்கள்..... என்பது புரியவில்லை ...என்பி பி அரசின் நீதி அமைச்சர் கர்சன் நாணயக்காரா ..அமெரிக்கா போய் வந்தவுடன் குருக்கள் மடம் போனவர்...இப்ப இந்த முசுலிம் அமஐச்சரும் அவசரமாக காசு கொடுக்கிறார்....செம்மணி விடையத்திற்கு பின்பு ...புட்டும் கிரிபத்தும் ஒன்றாகி விட்டினமோ
1 month 2 weeks ago
அவரின் நடவடிக்கைகள் இதுவரை அவர் ஊழல் சம்பந்தமாக தொடர்பு பட்டதாக ஏதானும் ஆதாரங்கள் இருக்கின்றனவா. மேலும் ஊழல்கட்சிகளுடன் கூட்டணி அமைப்பதையே தவிர்த்து வருகிறார். அவர்நினைத்தால் ஏதாவது ஒரு ஊழல்கட்சியுடன் கூட்டணியை அமைத்து பெருந்தொகைப்பணத்தையும் பெற்று குறிப்பிடத்தக்க அளவு உறுப்பினர்களை சட்டமன்றத்தில் பெற்றிருக்கலாம். எதிர்காலத்தில் ஊழல் செய்யக்கூடியவராக உங்களால் நம்பப்படும் அவர் ஏன் இப்போது கூட்டணி அதை;து பெருந்தொகைப்பணத்தைப் பெற்றுக்கொள்ள முடியாது?
1 month 2 weeks ago
பட மூலாதாரம், Reuters படக்குறிப்பு, உச்சிமாநாட்டிற்கு முன்பாக கத்தார் பிரதமர் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஆலோசனை நடத்தினர். கட்டுரை தகவல் சந்தீப் ராய் பிபிசி செய்தியாளர் 2 மணி நேரங்களுக்கு முன்னர் கத்தார் தலைநகர் தோஹாவில் ஹமாஸ் தலைவர்களை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்குப் பிறகு, அரபு நாடுகளிடையே நேட்டோ போன்ற ஒரு ராணுவ கூட்டணியை உருவாக்கும் முயற்சி வேகமெடுத்து வருவதாகத் தெரிகிறது. கத்தாரில் இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதல் குறித்து விவாதிக்க அரபு மற்றும் இஸ்லாமிய நாடுகள் தோஹாவில் இன்று அவசர உச்சி மாநாட்டை ஏற்பாடு செய்துள்ளன. இதற்கான முன்னேற்பாடுகள் தொடர்பாக நேற்று நடந்த கூட்டத்தில் அந்தந்த நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் பங்கேற்றனர். இந்தநிலையில் இன்று நடக்கும் மாநாட்டில் அந்நாட்டின் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். இரான் அதிபர் மசூத் பெஷஷ்கியன், இராக் பிரதமர் முகமது ஷியா-அல் சூடானி மற்றும் பாலத்தீன அதிகாரசபை தலைவர் மஹ்மூத் அப்பாஸ் உட்பட பல உயர்மட்ட தலைவர்களும் இந்த உச்சிமாநாட்டில் கலந்து கொள்கிறார்கள். இதற்கிடையே, நேட்டோ போன்ற ஒரு ராணுவ கூட்டணியை உருவாக்க எகிப்து ஒரு திட்டத்தை முன்மொழிந்திருக்கிறது. "எகிப்தின் முன்மொழிவு நேட்டோ போன்ற ராணுவ கூட்டணியை உருவாக்க வேண்டும் என்று கோருகிறது. அதன் தலைமைப் பொறுப்பு 22 அரபு லீக் நாடுகளிடம் சுழற்சி முறையில் ஒப்படைக்கப்படும். அதன் முதல் தலைவர் எகிப்தை சேர்ந்தவராக இருப்பார்" என நேஷன் செய்தித்தாள் குறிப்பிட்டுள்ளது தி நியூ அரபு ஊடக செய்தியின்படி, இதுபோன்ற திட்டம் முதன்முதலில் 2015-ல் முன்வைக்கப்பட்டது. அப்போது யேமனில் உள்நாட்டுப் போர் தொடங்கி ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் சனாவை கைப்பற்றினர். மறுபுறம் தோஹா மீதான தாக்குதலுக்குப் பிறகு துருக்கி மீதான பதற்றமும் அதிகரித்துள்ளது. கத்தாரில் செய்தது போல இஸ்ரேல் அதன் கண்மூடித்தனமான தாக்குதல்களை அதிகரிக்கக்கூடும். அது இஸ்ரேலையும் முழு பிராந்தியத்தையும் பேரழிவை நோக்கித் தள்ளக்கூடும் என துருக்கி பாதுகாப்பு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரியர் அட்மிரல் எச்சரித்துள்ளார். எகிப்தின் திட்டம் என்ன? பட மூலாதாரம், Reuters படக்குறிப்பு, செப்டம்பர் 9-ஆம் தேதி தோஹாவில் உள்ள கட்டடத்தின் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. எகிப்தின் முன்மொழிவில் ராணுவம், விமானப்படை மற்றும் கமாண்டோ பிரிவுகளுக்கு இடையே சிறந்த ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவதுடன் பயிற்சி, தளவாடங்கள் மற்றும் ராணுவ அமைப்புகளை ஒருங்கிணைப்பதும் அடங்கும். ராணுவ படையை பயன்படுத்துவதற்கான அனுமதி உறுப்பு நாடுகள் மற்றும் ராணுவத் தலைமையுடன் கலந்தாலோசித்து வழங்கப்படும். லெபனான் ஊடகமான அல் அக்பரின் கூற்றுப்படி, அத்தகைய ராணுவக் கூட்டணிக்கு 20,000 வீரர்களை வழங்குவதாக எகிப்து தெரிவித்துள்ளது. எகிப்து அதிபர் அப்தெல் ஃபத்தா அல்-சிசி இது குறித்து பல நாடுகளுடன் பேசியுள்ளார். தோஹா உச்சிமாநாட்டில் இந்த திட்டம் குறித்தும் விவாதம் நடத்த வாய்ப்பு உள்ளது. அதே நேரம் இது போன்ற ராணுவ கூட்டணி இந்த பிராந்தியத்தில் முன்பும் இருந்திருக்கிறது. அரபு மற்றும் இஸ்லாமிய நாடுகளுக்கு இடையே பாக்தாத் ஒப்பந்தம் என அறியப்பட்ட Central Treaty Organisation என்ற ராணுவ கூட்டணி 1955 முதல் 1979 வரை நீடித்தது. கத்தார் மீதான இஸ்ரேலின் தாக்குதலுக்கு அரபு நாடுகளிடமிருந்து கடுமையான எதிர்வினை வந்துள்ளன, இந்த பிராந்தியத்தில் இஸ்ரேலுடன் ராஜிய உறவை கொண்டுள்ள ஒரே நாடான ஐக்கிய அரபு எமிரேட்ஸும் இந்த தாக்குதலை கண்டித்துள்ளது இராக் பிரதமர் முகமது ஷியா அல்-சூடானியும் இஸ்லாமிய ராணுவ கூட்டணியை உருவாக்க அழைப்பு விடுத்துள்ளார். காஸா மற்றும் கத்தாரில் இஸ்ரேலின் சமீபத்திய தாக்குதல்களுக்கு கூட்டு பதிலடி அவசியம் என அவர் கூறியதாக துருக்கி அரசு ஊடகமான TRT World தெரிவித்துள்ளது. இஸ்ரேலை தண்டிக்க வேண்டும் எனக் கூறும் கத்தார் பட மூலாதாரம், Reuters படக்குறிப்பு, உச்சி மாநாட்டை ஒட்டி இரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ், கத்தார் பிரதமரை சந்தித்தார். "சர்வதேச அமைப்பு தங்களின் இருதரப்பட்ட நிலைப்பாட்டை புறந்தள்ளிவிட்டு, இஸ்ரேலை தண்டிக்க வேண்டிய நேரமிது" என திங்கட்கிழமை அன்று நடைபெறும் உச்சி மாநாட்டுக்கு முன்னதாக கத்தார் பிரதமர் கூறியதாக பிபிசி பெர்ஷிய சேவை குறிப்பிட்டுள்ளது. "எங்களின் சகோதரத்துவ மக்களான பாலத்தீனத்தின் மீது போர் தொடுத்து, அவர்களின் நிலத்தை அபகரிக்க நினைக்கும் இஸ்ரேல் எண்ணம் பலிக்காது" எனவும் அவர் கூறியுள்ளார். கடந்த செப்டம்பர் 9-ஆம் தேதி தோஹா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு கத்தார் ஏற்கனவே கடுமையான கண்டனத்தை பதிவு செய்திருந்தது. மேலும் தற்போது எச்சரிக்கையுடன் இருப்பதாகவும், எந்த விதமான சூழலை எதிர்கொள்ளவும் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளது. தற்போது இஸ்ரேலுக்கு பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க வெளியுறவு செயலாளர் மார்கோ ரூபியோ தோஹா தாக்குதல் தொடர்பாக தனது கடும் கண்டனத்தை தெரிவித்தார். ஆனால் அதே நேரத்தில் இது அமெரிக்கா இஸ்ரேல் இடையிலான பலமான உறவை பாதிக்காது எனவும் கூறினார். பட மூலாதாரம், Israel Prime Minister's Office படக்குறிப்பு, அமெரிக்க வெளியுறவு செயலாளர் மார்கோ ரூபியோ தற்போது இஸ்ரேலுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார் நேட்டோ மாதிரியான ஒரு கூட்டணி உருவாவது சாத்தியமானதா? அரபு நாடுகளிடையே நேட்டோ போன்ற ராணுவக் கூட்டணியை உருவாக்கும் யோசனை நீண்ட காலமாக இருந்து வரும் நிலையில், அது செயல்பாட்டுக்கு வரும் என்பது குறித்து நிபுணர்களுக்கு அதிக நம்பிக்கை இல்லை. ''அரபு நேட்டோ தொடர்பான யோசனை முன்பே விவாதிக்கப்பட்டது. செளதி அரேபியா அதற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தது. பாகிஸ்தானின் முன்னாள் ராணுவத் தலைவர் ரஹீல் ஷெரீப் கூட அதன் தலைவராக நியமிக்கப்பட்டார். ஆனால் அது அடுத்த கட்டத்துக்கு செல்லவில்லை'' என்கிறார் ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தின் Nelson Mandela Centre for Peace and Conflict Resolution மையத்தை சேர்ந்த பிரேமானந்த் மிஸ்ரா. தொடர்ந்து இது பற்றி விளக்கிய அவர், ''அனைத்து நாடுகளின் பாதுகாப்பு நலன்கள் மிகவும் வேறுபட்டவை, அவற்றுக்கிடையே ஒருமித்த கருத்தை உருவாக்குவது கடினமான வேலை. உதாரணமாக, சௌதி அரேபியாவும் இரானும் தங்கள் வேறுபாடுகளை களைந்து ஒன்றிணைய முடியுமா? ஏனெனில் ராணுவக் கூட்டணி உருவாக வேண்டுமானால், உளவுத்துறை பகிர்வும் நடைபெறும்'' என்றார். எனினும் சௌதி அரேபியா மற்றும் இரான் இடையிலான உறவை இயல்பாக்க முயற்சிகள் நடந்து வருகின்றன. "இந்தத் திட்டம் எகிப்திலிருந்து வந்துள்ளது, அது செயல்படுத்தும் நிலையில் உள்ளதா என்பதைப் பார்க்க வேண்டும். மேலும் இதுபோன்ற எந்தவொரு குழுவையும் மேற்கத்திய நாடுகள், குறிப்பாக அமெரிக்கா மற்றும் நேட்டோ செயல்படுத்த அனுமதிக்குமா?" என்கிறார் பிரேமானந்த் மிஸ்ரா. டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மேற்கு ஆசிய ஆய்வு மையத்தின் உதவிப் பேராசிரியரான முதாசிர் கமர், அரபு நாடுகள் அரபு லீக், OIC, GCC என பல அமைப்புகளைக் கொண்டுள்ளன என்கிறார். இது தவிர, செளதி அரேபியா தலைமையில் பயங்கரவாத எதிர்ப்பு ராணுவ கூட்டமைப்பும் உள்ளது. ஆனால் இங்கு சிக்கல் என்பது அரபு நாடுகளுக்கு இடையே உள்ள பரஸ்பர வேறுபாடுகளை கையாள்வதே. பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும். https://www.bbc.com/tamil/articles/cdxqkvq590ro
1 month 2 weeks ago
கருனா அந்த உடலைப் பார்த்ததும் “மோடன்கள்” என்று கூறியதை வீடியோவுடன் பார்த்த ஞாபகம் உள்ளது. வேறு பலரும் இதனைப் பார்த்திருப்பார்கள் என நம்புகிறேன்.
1 month 2 weeks ago
இலங்கை தமிழரசு கட்சிக்கு எதிராக செயற்பட்ட தப்பியுள்ள சிலர் கட்சியில் இருந்து நீக்கப்படுவார்கள் என தமிழரசு கட்சியின் பிரதி பொதுச் செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம். ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். அம்பாறை ஆலையடிவேம்பு கலாசார மண்டபத்தில் இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் நேற்று (14) இடம்பெற்ற பின் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். விளக்கம் கோரி எழுதிய கடிதங்கள் மேலும் தெரிவிக்கையில், கட்சியின் ஒழுக்காற்று நடவடிக்கை தொடர்பாக இதன்போது பேசப்பட்டது. ஜனாதிபதி தேர்தல், நாடாளுமன்ற தேர்தல், உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ஆகிய மூன்று தேர்தல்கள் சம்மந்தமாக கட்சியின் உடைய தீர்மானங்களை மீறி செயற்பட்டவர்கள் அனைவருக்கும் எதிராக விளக்கம் கோரி கடிதம் அனுப்பபட்டுள்ளன. நேரடியாக எங்கள் கட்சிக்கு எதிராக போட்டியிட்டவர்கள் ஏற்கனவே கட்சியில் இருந்து விலக்கப்பட்டிருக்கின்றனர். அதேவேளை உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட்ட சிலர் எங்கள் கவனக்குறைவால் தப்பியுள்ளனர். அவர்களுடைய பெயர்களும் சொல்லப்பட்டுள்ளது. அவர்களும் கட்சியில் இருந்து நீக்கப்படுவார்கள். விளக்கம் கோரி எழுதிய கடிதங்களுக்கு சிலர் பதில் எழுதாமல் இருக்கின்றனர். சிலர் பதில் எழுதி இருக்கின்றனர். ஆகவே பதில் எழுதாதவர்கள் அவர்களுக்கு கொடுப்பதற்கு விளக்கம் எதுவும் இல்லை என நிர்ணயிக்கப்பட்டிருக்கின்றது. ஆனாலும் அதை அவர்களுக்கு அறிவிக்கின்றோம். அதற்கு மேலதிகமாக விளக்கம் எழுதப்படாவிட்டால் நடவடிக்கை எடுப்போம். கட்சியின் தீர்மானத்துக்கு எதிராக நடவடிக்கை அதேவேளை விளக்கம் எழுதியவர்கள் தொடர்பாக அவர்களது விளக்கத்தை ஆராய்ந்து அவர்களை கட்சியின் ஒழுக்காற்று முறைமைக்குள்ளே அவர்கள் குற்றம் செய்தவர்களாக இருந்தால் குற்றவாளிகளாக காணப்பட்டு ஒழுக்ககாற்று நடவடிக்கை மூலமாக அவர்களை கண்காணிப்பது அல்லது ஒரு சந்தர்ப்பத்தை கொடுப்பதாக இருந்தால் கொடுப்பது என்ற கருத்துக்கள் நிலவி இருக்கின்றன. அது தொடர்பாக ஒவ்வொரு விடயங்களை எடுத்து வெளிப்படுத்துவோம். ஆகவே கட்சியின் கட்டுப்பாடு சம்மந்தமாக மிக தெளிவான அனைவரும் புரிந்து கொள்ளக்கூடிய வகையிலே கட்சி தீர்மானத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்கின்றவர்களுக்கு எதிராக கட்சி உரிய நடவடிக்கை எடுக்கும் என தீர்மானித்துள்ளோம் எனவும் குறிப்பிட்டுள்ளார் Tamilwinகட்சியில் இருந்து பலர் நீக்கப்படுவர்..! சுமந்திரன் எச்சரி...இலங்கை தமிழரசு கட்சிக்கு எதிராக செயற்பட்ட தப்பியுள்ள சிலர் கட்சியில் இருந்து நீக்கப்படுவார்கள் என தமிழரசு கட்சியின் பிரத...
1 month 2 weeks ago
என்னை மிரட்ட முடியாது.. தன்மானமே முக்கியம்! கைகூலிகளுக்கு முடிவு கட்டப்படும்.. இறங்கி அடித்த எடப்பாடி Mani Singh SUpdated: Monday, September 15, 2025, 21:24 [IST] சென்னை: என்னை யாரும் மிரட்ட முடியாது, ஆட்சி அதிகாரத்தை விட தன்மானமே முக்கியம் என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். அமித்ஷாவை சந்திப்பதற்காக டெல்லி பயணம் மேற்கொள்வதாக தகவல் வெளியான நிலையில் அதற்கும் எடப்பாடி பழனிசாமி மறுப்பு தெரிவித்துள்ளார். தர்மபுரியில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டு இருந்த நிலையில் மழை பெய்யும் jiஎன வானிலை மையம் அறிவுறுத்தியதால் அந்த பயணத்தை மாற்றி அமைத்தோம். அதற்கு அமித்ஷாவை சந்திப்பதற்காக சுற்றுப்பயணம் மாற்றப்பட்டதாக தகவல் வெளியாகி விட்டது என எடப்பாடி கூறுகிறார். 10 நாட்கள் கெடு விதித்த செங்கோட்டையன் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பாஜக மேலிடம் அழைப்பின் பேரில் நாளை டெல்லி செல்ல இருப்பதாக தகவல் வெளியானது. அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்களை மீண்டும் கட்சியில் இணைக்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் 10 நாள் கெடு விதித்து இருந்தார். இந்த கெடு இன்றுடன் முடிந்த நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த செங்கோட்டையன், அதிமுக மீண்டும் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற அவர், அதிமுக ஒன்றிணையும் விவகாரத்தில் புரிய வேண்டியவர்களுக்குப் புரிய வேண்டும் என்று கூறியிருந்தார். ஏற்கனவே டெல்லியில் அமித்ஷாவை சந்தித்ததாக செங்கோட்டையன் கூறியிருந்த நிலையில், நாளை எடப்பாடி பழனிசாமி டெல்லி செல்ல இருப்பதாக வெளியான தகவல் அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஓ பன்னீர்செல்வத்தை சேர்க்க முடியாது இந்த நிலையில், சென்னையில் நடைபெற்ற கட்சி பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசினார். அப்போது, ஓ பன்னீர் செல்வத்தை கட்சியில் சேர்க்க முடியாது என்பதை மறைமுகமாக கூறியுள்ளார். எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:- தருமபுரி மாவட்டத்தில் நான் வரும் 15 ஆம் தேதி சுற்றுப்பயணத்தை வைத்திருந்தோம். ஆனால் அன்று மழை பெய்யும் என வானிலை மையம் அறிவுறுத்தி இருந்தது. இதனால் அந்த தேதியில் சுற்றுப்பயணத்தை ஒத்தி வைத்தோம். ஆனால் அதற்குள் எடப்பாடி பழனிசாமி அதிமுகவை ஒன்றிணைக்க, இணைப்பதற்காக மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க டெல்லி செல்ல இருப்பதாக செய்திகளை வெளியிட்டு விட்டார்கள். கைக்கூலிகளுக்கு முடிவு கட்டப்படும் அப்படி ஒரு நாளும் நான் செய்ய மாட்டேன். எனக்கு ஆட்சி அதிகாரத்தை விட தன்மானமே முக்கியம். கைக்கூலிகளை வைத்து ஆட்டம் போட்டனர். அவர்கள் இப்போது அடையாளம் காணப்பட்டுள்ளனர். கைக்கூலிகளுக்கு விரைவில் முடிவு கட்டப்படும். அதிமுகவை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது. சிலர் அதிமுகவை அழிக்க பார்த்தார்கள். ஆனால் அது முடியவில்லை. அதிமுக அலுவலகத்தை உடைத்தவர்கள் இப்போது அதிமுகவில் சேர வேண்டும் என துடிக்கிறார்கள். துணை முதல்வர் பதவி கொடுத்தும் திருந்தவில்லை. அதிமுக ஆட்சியை கவிழ்க்க 18 பேரை அழைத்துக்கொண்டு சென்றார். எவர் ஒருவர் துரோகம் செய்தால் அவர் நடுரோட்டில் தான் நிற்க வேண்டும்.. இவ்வாறு அவர் பேசினார். அதிமுக அலுவலகத்தை அடித்து உடைத்தவர்களை கட்சியில் சேர்க்க முடியுமா? என்றும் அதிமுக ஆட்சியை கவிழ்க்க 18 பேரை கடத்தி செனறார் அவர்களையும் சேர்க்க முடியுமா? என்று எடப்பாடி பழனிசாமி பேசியிருப்பதன் மூலம் ஓ பன்னீர் செல்வத்தை கட்சியில் மீண்டும் இணைக்க வாய்ப்பே இல்லை என்பதை எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக பேசியிருப்பதை காட்டுவதை அரசியல் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். https://tamil.oneindia.com/news/chennai/no-one-can-intimidate-me-self-respect-matters-more-than-power-edappadi-k-palaniswami-fires-back-735891.html?ref_source=OI-TA&ref_medium=Home-Page&ref_campaign=News-Cards டிஸ்கி எடப்பாடி அமித்ஷா இடையே லடாய் போல உள்ளது.
1 month 2 weeks ago
பேரை சொல்லலாமா .........! 😍
1 month 2 weeks ago
வணக்கம் வாத்தியார் . .........! இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : பூங்காற்று திரும்புமா என் பாட்ட விரும்புமா பாராட்ட மடியில் வெச்சுப் தாலாட்ட எனக்கொரு தாய் மடி கெடைக்குமா பெண் : ராசாவே வருத்தமா ராசாவே வருத்தமா ஆகாயம் சுருங்குமா ஏங்காதே அத ஒலகம் தாங்காதே அடுக்குமா சூரியன் கருக்குமா ஆண் : என்ன சொல்லுவேன் என்னுள்ளம் தாங்கல மெத்த வாங்கினேன் தூக்கத்த வாங்கல பெண் : இந்த வேதனை யாருக்குத்தான் இல்ல ஒன்ன மீறவே ஊருக்குள் ஆளில்ல ஆண் : ஏதோ என்பாட்டுக்கு நான் பாட்டுப் பாடி சொல்லாத சோகத்த சொன்னேனடி பெண் : சோக ராகம் சொகம் தானே சோக ராகம் சொகம் தானே ஆண் : யாரது போறது பெண் : குயில் பாடலாம் தன் முகம் காட்டுமா ஆண் : உள்ள அழுகுறேன் வெளிய சிரிக்கிறேன் நல்ல வேஷம்தான் வெளுத்து வாங்குறேன் பெண் : உங்க வேஷம்தான் கொஞ்சம் மாறனும் எங்க சாமிக்கு மகுடம் ஏறனும் ஆண் : மானே என் நெஞ்சுக்குப் பால் வார்த்த தேனே முன்னே என் பார்வைக்கு வாவா பெண்ணே பெண் : எசப் பாட்டு படிச்சேன் நானே எசப் பாட்டு படிச்சேன் நானே ஆண் : பூங்குயில் யாரது பெண் : கொஞ்சம் பாருங்க பெண் குயில் நானுங்க ஆண் : அடி நீதானா அந்தக் குயில் யார் வீட்டு சொந்தக் குயில் ஆத்தாடி மனசுக்குள்ள காத்தாடி பறந்ததே ஒலகமே மறந்ததே பெண் : நான்தானே அந்தக் குயில் தானாக வந்தக் குயில் ஆத்தாடி மனசுக்குள்ள காத்தாடி பறந்ததா ஒலகந்தான் மறந்ததா ........! --- பூங்காற்று திரும்புமா ---
1 month 2 weeks ago
அன்று பல பேய்கள் அரசு செய்தன, சாத்திரங்கள் பிணம் தின்றன.🫣
1 month 2 weeks ago
1 month 2 weeks ago
கண்ணீரின் இன்னொரு முக்கியமான நன்மை, அதில் இருக்கும் நுண்ணியிர்களுக்கெதிரான பதார்த்தங்கள். Lysozymes எனப்படும் நொதியங்கள், பல பக்ரீயாக்களின் மேல்படையான கலச்சுவரை அழிக்கக் கூடிய ஆற்றல் மிக்கவை. இதனால் தான், உணர்ச்சிகளால் மட்டுமல்லாமல் கண்ணுக்குள் தூசு விழுந்தாலும் உடனடியாக கண்ணீர் சுரந்து கண்களைப் பாதுகாக்கிறது.
1 month 2 weeks ago
கணேசன் spSnoedotr326034h1mt0m8g3r,13eu:64is011p5mm3i4h15ieh1318eb · அமெரிக்காவின் செல்வாக்கு மிக்க தொழிலதிபர் ஸ்டீவ் ஜாப்ஸ். ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை அதிகாரி. கணைய புற்று நோயால் 56-ஆவது வயதிலேயே இறந்தார். அப்போது அவர் விட்டுச் சென்ற சொத்து ஏழு பில்லியன் டாலர். இந்திய மதிப்பில் சுமார் 61,130 கோடி ரூபாய். இதில் எந்த ஆச்சரியமும் இல்லை. ஆனால் மரண தருவாயில் அவர் கூறிய வார்த்தைகள் தான் ஆச்சரியம் மிக்கவை. ஆம், அவர் கூறினார்: "வாழ்க்கை என்றால் பணம் சம்பாதிப்பது என்று தான் நான் நினைத்திருந்தேன். ஆனால் இப்போதோ என்னிடம் இருப்பதில் எனக்கு மகிழ்ச்சி இல்லை. செல்வம் வெறும் எண்ணிக்கையாக மாறிவிட்டது. இதோ இப்போது நோயால் அவதியுற்று படுக்கையில் இருந்தவாறு என் வாழ்க்கை குறித்து சிந்திக்கிறேன். உடனடியாக மரணத்தை எதிர்கொள்ளும்போது எனது நற்பெயரும் செல்வமும் அர்த்தமற்றதாக மாறிவிட்டன. உங்கள் வாகனத்தை ஓட்டவும், அன்றாடப் பணிகளை செய்யவும், தொழிலை நிர்வகிக்கவும் பணியாளர்களை நீங்கள் நியமிக்கலாம். ஆனால் உங்கள் வலியையோ உங்கள் நோயையோ சுமக்க எந்த விலை கொடுத்தும் யாரையும் உங்களால் நியமிக்க இயலாது. எதை இழந்தாலும் பெற்றுக்கொள்ளலாம். ஆனால் வாழ்க்கையை இழந்தால் பெற்றுக்கொள்ள முடியாது. 30 டாலர் கடிகாரம்.. 3000 டாலர் கடிகாரம்.. இரண்டும் ஒரே நேரத்தையும் ஒரே நிமிடத்தையுமே காட்டுகின்றன என்பதை இப்போது உணர்கிறேன். வசிக்கும் வீடு 300 சதுர அடியாகவோ 3000 சதுர அடியாகவோ இருந்தாலும், ஒருசில மீட்டருக்கு மேல் காலை நீட்டி உங்களால் தூங்க முடியாது. விமானத்தில் முதல் வகுப்பிலோ பொருளாதார வகுப்பிலோ எப்படிப் பயணித்தாலும், விமானம் விபத்துக்கு உள்ளானால் உங்களுடன் சேர்ந்து எல்லாம் ஒரு நொடியில் சாம்பல்தான். எனவே வாழ்க்கையில் ஓர் உயரிய இலக்கை நீங்கள் வைத்திருந்தால், மற்றவர்களை மகிழ்ச்சியடையச் செய்திருந்தால் அதுதான் உண்மையான நிம்மதி என்பதை புரிந்துகொள்வீர்கள்''.👍" Voir la traduction
1 month 2 weeks ago
மிகவும் அரிதான நீலத்திமிங்கிலத்தின் புகைப்படம் ........! 👍 🌷கரிசக்காட்டுப்பூவே🌷 கௌரி சற்குணம் ·odoSpernts5h3i0c2g8412mttl0 95m58flff91thf3gtfa920g93utt6tc3 · உலகின் மிகப்பெரிய விலங்கு.. 100 ஆண்டில் 3வது முறையாக காட்சி.. டக்கென கிளிக்கிய போட்டோகிராபர்! உலகின் மிகப்பெரிய விலங்கான நீலத் திமிங்கிலத்தினை ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர் ஒருவர் கடந்த 2022ஆம் ஆண்டு புகைப்படம் எடுத்துள்ளார். கடந்த 100 ஆண்டுகளில் நீலத் திமிங்கலத்தை புகைப்படம் எடுப்பது இது 3வது முறையாகும். திமிங்கலங்கள் நீரில் வாழும் பாலூட்டி இனைத்தை சேர்ந்தவை. இதில் மொத்தம் 75 வகை உண்டு. அதில் நீலத் திமிங்கலம் தான் உலகின் மிகப்பெரிய விலங்காகும். சற்றேறக்குறைய 100 அடி நீளமும் 150 டன் எடை உள்ளதாகவும் வளரக்கூடியவை இந்த நீலத் திமிங்கிலங்கள். ஆழ் கடலில் மட்டுமே வாழும் நீலத் திமிங்கலங்களை பார்ப்பது அத்தனை எளிதான காரியம் அல்ல. மிக அரிதாகவே அவை மனிதர்களின் கண்களில் தென்படுகின்றன. தற்போது ஆஸ்திரேலியாவின் சிட்னி சேர்ந்த புகைப்படக் கலைஞர் சீன் என்பவர் மிக நீளமான நீலத் திமிங்கிலத்தை புகைப்படம் எடுத்து சாதித்திருக்கிறார். சிட்னி கடற்பகுதிகளில் கடந்த நூறாண்டுகளில் நீலத் திமிங்கிலத்தை புகைப்படம் எடுப்பது இது 3வது முறையாகும். 'எனக்கு வாத்தைகளே வரவில்லை. அதிக சந்தோஷத்தின் காரணமாக ஒரே நேரத்தில் எனக்கு எல்லாமே மங்கலாக தெரிகிறது. மரோப்ரா கடலில் நான் வழக்கம் போல் கேமராவுடன் வானில் பறந்துகொண்டிருந்தேன். அப்போது தான் அந்த அதிசயம் நிகழ்ந்தது. எனக்கு முன்னால் ஒரு பெரிய ராட்சச நீலத் திமிங்கிலம் கடலில் போவதை பார்த்தேன். அது ஒரு 30.5 மீட்டர் நீளமிருக்கும் இருக்கும். அதுனுடைய நாக்கு ஒரு யானையின் அளவில் இருக்கும். இதயம் ஒரு கார் சைஸ்க்கு இருக்கும்', என சீன் தனது சமூகவலைதளப் பக்கத்தில் குறிப்பிட்டு, தான் எடுத்த நீலத் திமிங்கிலத்தில் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். சீன் புகைப்படம் எடுத்துள்ள அந்த திமிங்கிலம் சுமார் 100 டன் வரை எடை கொண்டதாக இருக்கும் என ஆஸ்திரேலியாவின் தேசிய பூங்காக்கள் மற்றும் வன விலங்கு சேவை அமைப்பு தெரிவித்துள்ளது. கடந்த 100 ஆண்டுகளில் சிட்னி கடற்பகுதியில் இப்படி ஒரு ராட்சச நீலத் திமிங்கிலத்தை புகைப்படம் எடுத்தது இது 3வது முறை என்றும் அந்த அமைப்பு கூறியுள்ளது. இத்தனை அரிதான விலங்கை புகைப்படம் எடுத்துள்ள சீனை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர். காணக்கிடைக்காத ஒரு அரிய காட்சியை தங்களுக்கு காட்டியதற்காக சீனுக்கு அவர்கள் நன்றி கூறியுள்ளனர். முதலில் பார்ப்பதற்கு சாதாரணமாக இந்தப் புகைப்படம் தோன்றினாலும், சீன் விவரித்துள்ளதைப் பார்க்கையில் அது எத்தனை பெரிய திமிங்கலமாக இருந்திருக்கும் என நினைக்கும் போதே மலைப்பாக இருக்கிறது.......! Voir la traduction
1 month 2 weeks ago
“இது முசுலீம் மக்களையும் அழைக்கலாம் தானே” என்று கேட்டால் சிறப்பாக இருக்கும்.
Checked
Sun, 11/02/2025 - 23:39
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed