5 days 1 hour ago
பொலிஸாருக்கு எதிராக யாழ்.வழக்கறிஞர்கள் வேலைநிறுத்தம் October 7, 2025 0 நீதிமன்ற அனுமதியின்றி காவல்துறையினர் ஒரு வழக்கறிஞரின் வீட்டிற்குள் சட்டவிரோதமாக நுழைந்து சோதனை செய்ததாகக் குற்றம் சாட்டி, யாழ்ப்பாணத்தில் வழக்கறிஞர்கள், செவ்வாய்க்கிழமை(07) வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். யாழ்ப்பாணத்தில் நிலப் பத்திர மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் பல வழக்கறிஞர்கள் மீது காவல்துறையினர் விசாரணை நடத்தி வரும் நிலையில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. நில மோசடி குற்றச்சாட்டுக்கு உள்ளான அத்தகைய ஒரு வழக்கறிஞரை கைது செய்யும் நோக்கத்துடன், காவல்துறை அதிகாரிகள் அவரது வீட்டிற்குள் ஞாயிற்றுக்கிழமை(05), நுழைந்து, வீட்டிற்குள் சோதனை நடவடிக்கையை மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், நீதிமன்றத்தின் முன் அனுமதி அல்லது பிடிவிறாந்து பெறாமல் சோதனை நடத்தியதாக காவல்துறையினர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதற்கு பதிலளிக்கும் விதமாக, காவல்துறையினரின் நடவடிக்கைகளைக் கண்டித்து நீதிமன்றங்களுக்கு முன்பாக வழக்கறிஞர்கள் போராட்டங்களை நடத்தினர். இதற்கிடையில், நில மோசடி தொடர்பான குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் வழக்கறிஞர்கள், காவல்துறையினரால் கைது செய்யப்படுவதைத் தடுக்க நாளை (புதன்கிழமை) நீதிமன்றத்தில் முன்பிணை மனுக்களை தாக்கல் செய்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. https://akkinikkunchu.com/?p=343714
5 days 1 hour ago
மவுனமாக இருந்தாலும் பரவாயில்லை அதற்கு ஆதரவும் கொடுத்தார்களே! மவுனமாக இருக்க மனச்சாட்சி விடுமா?
5 days 1 hour ago
பூசணிக்காயில் ஒரு அருமையான உணவு ..........! 😂
5 days 1 hour ago
5 days 1 hour ago
என்ன சொல்லவருகிறீர்கள் குமாரசாமி? சீமான் சினிமாக்காரர் இல்லை என்கிறீர்களா? அரசியலுக்கு எவரும் வரலாம். நான் யாருடைய ரசிகனும் இல்லை. விபத்து நடந்திருக்கிறது. கவலைதான். இங்கே யாரை நோவது என்பதே கேள்வியாக இருக்கிறது. முடிவு வரட்டும். நானும் நாங்களும் முட்டி மோதுவதால் என்ன பயன்? எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் எம்ஜிஆர் போல வேடம் போட்டு “சாப்பிட்டீங்களா?” என்று கேட்டுக் கொண்டு வந்த சீமானின் நடிப்பு அபாரம். நீங்கள் பார்த்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.
5 days 2 hours ago
இவர்களுக்கு அதை சொல்வதற்கு என்ன உரிமை இருக்கிறது? ஒரு இனம் கொத்துக்கொத்தாக அழிக்கப்படும்போது மவுனமாக இருந்தார்களே, அப்படி இருக்க வேண்டியதுதானே. ஒரு நாட்டின் இறையாண்மையை மதிக்க வேண்டுமானால், இவர்கள் ஐ. நா. கூட்டத்தொடருக்கே வந்திருக்கத்தேவையில்லை, தங்கள் நாட்டில் இருந்து தங்கள் இறையாண்மையை கவனித்துக்கொண்டிருந்திருக்க வேண்டும்.
5 days 2 hours ago
இன்னும் எதிர்பார்க்கிறேன். இவர்களுக்கெல்லாம் எதற்கு இடமாற்றம்? வீட்டுக்கு அனுப்ப வேண்டும், இடம் மாறினாலும் குணம் மாறாது.
5 days 2 hours ago
பணத்தினை இழந்தவர்களையும் கைது செய்ய வேண்டும். நோய் காவிகள்!
5 days 3 hours ago
“On Sri Lanka’s Coastal ‘Highway’: Grandpa Kandiah Thillai with His Grandchildren” / Part 02 [Original in Tamil 'கதை - 187 / 'இலங்கை கடற்கரை “நெடுஞ்சாலை” யில் தாத்தா, கந்தையா தில்லையுடன் பேரப்பிள்ளைகள்' ] Part 02 – Nallur Festival “Roosters crow across Jaffna. Dawn is breaking. The sun blazes. Koels sing. The fragrance of white jasmine spreads everywhere. What bliss it is to wake in this paradise! And what supreme joy to watch the setting sun in the west, framed by the ‘shadow-paintings’ of palmyra trees! Then, in the fading twilight, to sip quickly the nectar of the palmyra—that delight is beyond words!” Grandpa murmured these lines to himself as he gazed out of the window in the early morning. This was the season of the grand Nallur Murugan Temple Festival. Jaffna was alive with lights, the pealing of bells, the rhythms of drums, and the scent of incense. Saffron flags fluttered in the sky like tongues of fire. On August 15, 2025, the 19th day of the annual festival—the sacred Karthigai Festival—Grandpa and his grandchildren, dressed in traditional attire, joined the great throng. That evening, Lord Murugan, with his consorts Valli and Deivayanai, appeared in procession upon the silver peacock chariot. The veshti reveals our culture, The white cloth that many wear. Though fashions change with passing years, At festival hours the veshti shines! Learned scholars, humble folk, Tie it on with equal pride. With the angavastram on their shoulder, They walk in dignity, side by side. For Jaya, Kalai, and little Isai, this was their very first time experiencing such a colorful and deeply spiritual festival in the land of their ancestors. Just before the chariot procession began, the children surprised everyone—they wanted to carry kavadi! “Grandpa, can we also take kavadi?” Jaya asked, her eyes shining. “You are still little, dear ones. Kavadi is heavy,” Grandpa hesitated. But soon, priests and helpers brought forth smaller kavadis decorated with peacock feathers and flowers, especially for children. The crowd clapped, and the children’s faces glowed with delight. Kalai placed the kavadi on his shoulders and cried out: “Muruganukku Arohara! … Kandhanukku Arohara!” Little Isai, the youngest, tried to balance his kavadi with both hands, his small feet trembling as the crowd watched with affection. Though his legs shook, his heart danced to the drumbeats. Jaya, moving gracefully to the rhythm of the temple drums, danced with natural expressions, as though a golden garland itself had come alive. Her anklets jingled in divine harmony, making her look like a little devadasi of Murugan. Kalai, with eyes like blooming flowers, spun and clapped like a master of the tavil, circling round and round in joy. Lift the kavadi and dance, O child, Bow your head and sing, O soul. Kumaran who clears our sins—O Lord, We seek your feet each day. See the Six Sacred Shrines, O heart, Hear the solace they bring, Om! Chant the mantra “Saravanabhava”— Its wisdom burns away all deeds. Then, as the golden Vel chariot—pulled by hundreds of devotees—emerged from the temple, the entire atmosphere shimmered with sacred light. The tropical evening air was heavy with the fragrance of jasmine, camphor, and incense. “I wish I could stay here forever, Grandpa. It feels as though Murugan is smiling at us,” whispered Jaya. “When I grow older, I will join the men and pull the chariot!” declared Kalai. And Isai, bouncing with joy, shouted: “Amma… Ice cream!” Everyone burst into laughter. Even amidst divine devotion, the innocent yearning of a child for ice cream revealed the simple sweetness of life. No wonder the crowd loved it! Pointing to the decorated deity, little Isai cried out, “Shining God!” “Yes,” Grandpa explained gently, “this is Lord Murugan, the Tamil God adored in full decoration—Alankara Kandhan.” But Kalai tugged at him, insisting: “Grandpa, Grandpa… tell us a Murugan story!” 👴 Grandpa: “Do you want to hear the story of Nalluran, Murugan?” 👦 Grandson: “Yes, Grandpa! Please tell us Murugan’s story!” 👴 “One day, Sage Narada brought a golden mango to Lord Shiva. To decide who should eat it, a contest was held.” 👦 “Who joined the contest?” 👴 “Only Murugan and Ganesha.” Isai giggled: “The one with the big belly who loves modakam?” 👴 “Yes! Lord Shiva declared, ‘Whoever goes around the world three times may have the mango.” 👦 “What did Murugan do then?” 👴 “He mounted his peacock and flew around the world with speed!” 👦 “Ha ha! That peacock must have flown so fast! Poor Ganesha on his little mouse!” 👴 “But do you know what Ganesha did? He thought, ‘For me, my mother and father are the world.’ So he circled Shiva and Parvati three times.” 👦 “Oh! That was true wisdom!” 👴 “Exactly. And so, Shiva happily gave the mango to Ganesha.” 👦 “Then Murugan got angry?” 👴 “Yes! He left on his peacock in anger and went to Palani Hills, saying, ‘From now on, I will stay here.’” 👦 “Ha ha! Even Murugan gets angry for small things, like me!” 👴 “😄 Yes! But even in his anger, there was love. That is why Murugan is always the favorite deity of children.” Around Nallur, sweet stalls overflowed with delicacies. “I can’t eat any more laddus!” groaned Kalai, his cheeks puffed like little drums, making everyone laugh. On August 18, 2025, with memories of Nallur, Idaikaddu, Thondaimanaru, Pannai, and Pungudutivu still glowing in their hearts, Grandpa and his grandchildren set out from Jaffna toward the eastern coast of Sri Lanka. Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna Part 03 will follow “On Sri Lanka’s Coastal ‘Highway’: Grandpa Kandiah Thillai with His Grandchildren” / Part 02 [Original in Tamil 'கதை - 187 / 'இலங்கை கடற்கரை “நெடுஞ்சாலை” யில் தாத்தா, கந்தையா தில்லையுடன் பேரப்பிள்ளைகள்' ] https://www.facebook.com/groups/978753388866632/posts/31682708958044339/?
5 days 3 hours ago
கதை - 187 / 'இலங்கை கடற்கரை “நெடுஞ்சாலை” யில் தாத்தா, கந்தையா தில்லையுடன் பேரப்பிள்ளைகள்' / பகுதி: 02 பகுதி: 02 - நல்லூர் திருவிழா 'யாழ்ப்பாணம் எங்கும் சேவல் கூவுகிறது. பொழுது விடிகிறது. சூரியன் சுடுகிறது. குயில்கள் பாடுகின்றன. வெள்ளை மல்லிகையின் நறுமணம் எங்கும் பரவுகிறது. இந்த சொர்க்கத்தில் நித்திரை செய்து எழும் போது என்னவொரு சுகம்! மாலையில் சூரியன் மேற்கு திசையில் மறைவதை பனை மரங்களின் "நிழல் படம்" [நிழல்வடிவம்] வழியாக பார்ப்பதில் என்ன பேரின்பம்!! அதன் பின் மங்கும் அந்தியொளியில் பனை தந்த அமிர்தத்தை அவசரமாக விழுங்குவதில் காணும் இன்பமோ- சொல்லில் அடங்கா மகிழ்ச்சி!!!' தாத்தா காலை எழும்பியதும் சாளரத்தின் ஊடாக வெளியே பார்த்து முணுமுணுத்தார். இது நல்லூர் முருகன் கோயில் திருவிழா காலம் என்பதால், யாழ்ப்பாணம் - விளக்குகள், மணி ஓசைகள், மேள தாளங்கள் மற்றும் தூப வாசனையால் நிறைந்திருந்தன. அதே நேரத்தில் காவி நிறக் கொடிகள் [saffron flags] அந்தி வானத்தில் நெருப்பு நாக்குகளைப் போல பறந்தன. 15 / 08 / 2025, நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவத்தின் 19ம் திருவிழாவான கார்த்திகை திருவிழாவாகும். தாத்தாவும் மூன்று பேரப்பிள்ளைகளும் பாரம்பரியமான உடைகளுடன் அங்கு சென்றனர். அன்று முருக பெருமான் வள்ளி தெய்வானை சமேதரராய் பூஞ்சப்பரத்தில் ஊர்வலம் வந்தார். பண்பாடு கலாசாரம் காட்டும் உடை பலராலும் உடுத்த வெள்ளை வேட்டி! காலம் மாற கோலம் மாறினாலும் திருவிழாக் காலத்தில் தோன்றும் வேட்டி! படித்தவரும் கட்டினர் பாமரரும் கட்டினர் உடுத்த வேட்டியில் மகிழ்ச்சி கொண்டனர் மடித்தகரை சால்வையை தோளில் போட்டு எழுந்து நடந்தனர் மனதில் கம்பீரம்பொங்க! குழந்தைகள் ஜெயா, கலை மற்றும் இசை ஆகியோருக்கு, அவர்களின் மூதாதையர் நிலத்தில் இவ்வளவு வண்ணமயமான மற்றும் ஆன்மீக விழாவை அனுபவிப்பது இதுவே முதல் முறையாகும். ஊர்வலத்திற்கு சற்று முன்பு, மூன்று குழந்தைகளும் அனைவரையும் ஆச்சரியப்படுத்தினர். அவர்கள் காவடி எடுக்க விரும்பினர்! “தாத்தா, நாங்களும் காவடி எடுத்துச் செல்லலாமா?” ஜெயா ஒளிரும் கண்களுடன் கேட்டார். “நீ இன்னும் சிறியவள், கண்ணா. காவடி கனமானது,” என்று தாத்தா கொஞ்சம் தயங்கினார். ஆனால் விரைவில், பூசாரிகளும் உதவியாளர்களும் மயில் இறகுகள் மற்றும் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட சிறிய குழந்தைகளின் காவடியைக் கொண்டு வந்தனர். கூட்டம் கைதட்டியது, குழந்தைகளின் முகங்கள் பிரகாசித்தன. கலை காவடியைத் தோளில் வைத்துக்கொண்டு கத்தினான்: “முருகனுக்கு அரோகரா! .. கந்தனுக்கு அரோகரா!” மூவரிலும் இளையவரான 'இசை', தனது சகோதரனைப் பின்பற்றி, இரண்டு கைகளாலும் காவடியை சமநிலைப்படுத்த முயன்றான். சிறுவனின் கால்கள் நடுங்க, அனைவரும் அன்பாக பார்த்து மகிழ்ந்தனர், ஆனாலும் அவனது மனம் தாளத்துடன் நடனமாடியது. மூத்தவள் ஜெயா, கோயில் மேளங்களின் தாளத்தில் அழகாக, "கைவழி நயனஞ் செல்லக், கண்வழி மனமும் செல்ல, மனம் வழி பாவமும், பாவ வழி ரசமும் சேர" என, பொன்னால் செய்த பூங்கொடி ஒன்று வந்திருந்து நடனமாடியது போலவே அபிநய பாவங்கள் அழகுறக் கடைப் பிடித்து நடனமாடினாள், அவளுடைய கணுக்கால்கள் (Ankle) சத்தமிட்டன. அவள் முருகனின் சிறிய தேவதாசி போல இருந்தாள், அதே நேரத்தில், மலர்ந்த நெய்தல் மலர் போன்ற கண்களைக் கொண்ட - கலை, புன்முறுவலுடன் அமர்ந்தும், குதித்தும், சுழன்றும் தன்னை ஒரு தவில் வித்வான் போல நடித்து வட்டமாக சுழன்று சுழன்று ஆடினான். காவடி தூக்கி ஆடு - அவன் காலடி பணிந்து பாடு - நம் பாவங்கள் தீர்க்கும் குமரன் - அவன் திருவடி நாடு தினம்! ஆறுபடை வீடு பாரு - அது ஆறுதலைத் தரும் கேளு - ஓம் சரவணபவ எனும் - மந்திரம் வினைகள் தீர்க்கும் புரிந்திடு! நூற்றுக்கணக்கான பக்தர்களால் இழுக்கப்பட்ட தங்க வேல் சப்பரம் கோவிலிலிருந்து வெளியே வந்த போது, வளிமண்டலம் மின் ஒளி மயமானது. வெப்பமண்டல மாலையில் காற்றோடு கலந்த மல்லிகை, கற்பூரம் மற்றும் தூப வாசனை எங்கும் பரவியது. ஜெயா: “நான் இங்கேயே என்றென்றும் இருக்க விரும்புகிறேன், தாத்தா. முருகன் நம்மைப் பார்த்து சிரிப்பது போல் இருக்கிறது.” என்றாள். கலை: “நான் பெரியவனானதும், பெரியவர்களுடன் சேர்ந்து சப்பரம் இழுப்பேன்.” என்றான். இசை: (சிரித்துக்கொண்டே) “அம்மா... ஐஸ்கிரீம்!” என்று துள்ளினான். அனைவரும் விழுந்து விழுந்து சிரித்தனர். தெய்வீக பக்தியின் நடுவிலும், ஒரு குழந்தையின் இதயம் இன்னும் ஐஸ்கிரீமுக்காக ஏங்கியது இயல்பான உண்மை நிலையைக் காட்டியது. அதனால்த்தான் அங்கு சனக் கூட்டம்! அலங்கரிக்கப்பட்ட தெய்வத்தை சுட்டிக்காட்டி, “பிரகாசிக்கும் கடவுள்!” என்று கத்தினான் குட்டி 'இசை'. “இது முழு அலங்காரத்தில் இருக்கும், தமிழ்க் கடவுள் எனக் கருதப்படும் முருகன், அலங்காரக் கந்தன்.” என்று கூற, கலை, 'தாத்தா தாத்தா .. முருகன் கதை ஒன்று சொல்லுங்க' என்று பிடிவாதமாக வெள்ளை மண்ணில் உருண்டான். 👴 தாத்தா : நல்லூரான், முருகப்பெருமான் கதை கேட்டுக்கொள்ள விரும்புகிறாயா, குட்டி? 👦 பேரன் : ஆமாம் தாத்தா! முருகன் கதை சொல்றீங்களா? என்று கேட்டபடி, மணலில் இருந்து எழும்பினான். 👴 தாத்தா : சரி. ஒருநாள் நாரத முனிவர், சிவபெருமானிடம் ஒரு பொன் மாம்பழம் கொண்டு வந்தாராம். அந்த மாம்பழம் யாருக்குக் கிடைக்கும்னு போட்டி ஒன்று போட்டாராம். 👦 பேரன் : யாரெல்லாம் போட்டில கலந்துகிட்டாங்க? 👴 தாத்தா : முருகப்பெருமான், மற்றும் கணேசப்பெருமான் மட்டுமே இசை சிரித்தான், 👴'தொப்பை வயிருடன், மோதகம் சாப்பிடுபவரா ?' தாத்தா தொடர்ந்தார், 👴ஆமாம் , சிவபெருமான் சொன்னாராம் – “யாரு மூன்று தடவை உலகத்தைச் சுற்றிகிட்டு வருகிறாரோ, அவங்கத்தான் மாம்பழம் சாப்பிடலாம்.” என்று 👦 பேரன்: அப்போ முருகன் என்ன பண்ணாரு? 👴 தாத்தா: அவன் தன் மயிலின் மேல் ஏறிக்கிட்டு – “வீய்ய்… வீய்ய்…”ன்னு உலகத்தையே சுற்றிப்பார்த்துட்டாராம். 👦 பேரன்: ஹா ஹா! எவ்வளவு வேகமா பறந்திருக்கும் அந்த மயில்!, எலியில் கணேசப்பெருமான் பாடு ... பாவம் ... பாவம் 👴 தாத்தா: ஆமாம். ஆனா கணேசர் என்ன பண்ணினாரு தெரியுமா? 👦 பேரன் [ஆச்சரியத்துடன்] : என்ன பண்ணினாரு தாத்தா? 👴 தாத்தா: “அவன் யோசிச்சான் – என் அம்மா அப்பா தான் எனக்கு உலகமே. அவர்களைச் சுற்றினால் போதும்.” ன்னு. அவன் மூன்று தடவை சிவபெருமான் – பார்வதியம்மா இருவரையும் சுற்றினாராம். 👦 பேரன்: ஐய்யோ! அதான் பெரிய புத்திசாலித்தனம்! 👴 தாத்தா: சரியாக சொன்னாய் குட்டி. அதனாலே சிவபெருமான் மகிழ்ந்து அந்த மாம்பழம் கணேசருக்கே கொடுத்தார். 👦 பேரன்: அப்போ முருகன் கோவம் பண்ணினாரா? 👴 தாத்தா: ஆமாம்! 😄 அவன் மயிலோட கோபத்துல பறந்துட்டு பழனி மலையிலே போய்ச் சேர்ந்தான். “இனிமேல் நான் இங்குதான் இருப்பேன்” ன்னு சொல்லிக்கிட்டான். 👦 பேரன்: ஹா ஹா! முருகனுக்கு கூட - என்னை மாதிரியே சின்னச் சின்ன விஷயத்துக்கே கோவம் வந்துடுது ? 👴 தாத்தா : 😄 சரியாகச் சொன்னாய்! ஆனா, அந்தக் கோபத்துக்குள்ளேயும் பாசம் தான் இருந்தது. அதனால் தான் முருகன் எப்போதுமே குட்டிகளுக்கு பிடித்த தெய்வம் என்று கதையை முடித்தார். நல்லுரைச் சுற்றி எல்லா இடங்களிலும் இனிப்புகளும் சிற்றுண்டிகளும் நிரம்பி வழிந்தன. "இனி என்னால் லட்டு சாப்பிட முடியாது!" என்று கலை முனகினான், அவனது கன்னங்கள் டிரம் [drum] போல இருந்தது, அனைவருக்கும் சிரிப்பைக் கொடுத்தது. ஆகஸ்ட் 18, 2025 அன்று, யாழ் நகரின் குறிப்பாக நல்லூரின் மற்றும் இடைக்காடு, தொண்டைமானாறு, பண்ணைக்கடல், புங்குடுதீவு என .... யாழ் நகருக்கு வெளியே உள்ள இடங்களும் - நினைவுகளில் இன்னும் இதயங்களில் இருக்க, அவர்கள் யாழ்ப்பாணத்திலிருந்து கிழக்கு கடற்கரைக்குப் புறப்பட்டனர். நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] பகுதி: 03 தொடரும் கதை - 187 / 'இலங்கை கடற்கரை “நெடுஞ்சாலை” யில் தாத்தா, கந்தையா தில்லையுடன் பேரப்பிள்ளைகள்' / பகுதி: 02 https://www.facebook.com/groups/978753388866632/posts/31682603474721554/?
5 days 3 hours ago
உலக இந்துமத மகா சபை · Kulenthiran Uthayakumar ·porontsdSe0896e:3t2cl5099c368b1l71uc t2o1ra9 ii,t3mmh1ml8ot8 · 1.தந்தை ஒருவர் ஒரு பெரிய ஆட்டை வெட்டி நெருப்பினில் வதக்கி, தன் மகளிடம் சொன்னார். "மகளே, நம்முடன் சாப்பிட என் நண்பர்களையும் அண்டை வீட்டாரையும் அழைக்கவும் ... எல்லோரும் சாப்பிடுவோம் என்றார். அவருடைய மகள் தெருவுக்கு வந்து கத்த ஆரம்பித்தாள். 2.தயவுசெய்து எங்கள் அப்பாவின் வீட்டில் எரியும் தீயை அணைக்க எங்களுக்கு உதவுங்கள்!". சில நிமிடங்களுக்குப் பிறகு, ஒரு சில மக்கள் வெளியே வந்தனர், மீதமுள்ளவர்கள் உதவிக்கான கூக்குரலைக் கேட்காதது போல் செயல்பட்டனர். 3.வந்தவர்கள் நள்ளிரவு வரை நன்றாக சாப்பிட்டு கொண்டாட்டமாக கழித்தனர். திகைத்த தந்தை! தன் மகளிடம் திரும்பி, அவளிடம் கேட்டார். "வந்த மக்களை எனக்கு தெரியாது, இதுவரை அவர்களைப் பார்த்ததில்லை, எனவே என்னுடைய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் எங்கே?". மகள் சொன்னாள். 4.தங்கள் வீடுகளில் இருந்து வெளியே வந்தவர்கள் நம் வீட்டில் எரிவதாக நினைத்த தீயை அணைப்பதர்க்கே அன்றி, விருந்து உண்ண அல்ல. இவர்களே நம்முடைய தாராள மனப்பான்மைக்கும் விருந்தோம்பலுக்கும் தகுதியானவர்கள். " நீங்கள், வாழ்க்கையில் துன்பப்படுகிறீர்கள் என்று தெரிந்தும், 5.உங்களுக்கு உதவாதவர்கள், ஒருநாள் நீங்கள் வெற்றி அடையும் போது அந்த மகிழ்ச்சியில் பங்கு கொள்ள எப்படி தகுதியானவர்களாக இருக்கக்கூடும்? -படித்ததில் பிடித்தது.........!
5 days 3 hours ago
இரவு 10:00 மணிக்குமேல் சாப்பிடாதே, தண்ணி குடிக்காதே ........நாளை காலை 8:00 மணிக்கு அறுவை சிகிச்சை உண்டு .......! 🙂
5 days 4 hours ago
ஏக்ய ராஜ்ய என்ற ஒற்றையாட்சி வரைபை உருவாக்க இலங்கை தமிழ் அரசுக் கட்சி பெரும் பங்கு வகித்தது - கஜேந்திரகுமார் பொன்னம்பலம் 07 Oct, 2025 | 12:25 PM 38 வருடம் நடைமுறைப்படுத்தாத 13ம் திருத்தத்தை இலங்கை தமிழ் அரசுக் கட்சி தற்போது அமுல்படுத்த கோருவது ஏக்ய ராஜ்ய என்ற ஒற்றையாட்சி முடக்குவதற்காகவே என அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். இலங்கை தமிழ் அரசுக் கட்சி தலைவர் சி.வீ.கே.சிவஞானம் அண்மையில் தெரிவித்த கருத்துக்கள் தொடர்பாக யாழ்ப்பாணத்தில் திங்கட்கிழமை (06) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த போதே இதனை தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், 13ம் திருத்தத்தை அமுல்படுத்த வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணி தவிர்ந்த அனைவரும் இணங்கியுள்ளதாக சி.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். அதற்காக சி.வீ.கே.சிவஞானத்திற்கு நன்றி சொல்ல வேண்டும். தமிழ் தேசிய மக்கள் முன்னணியை தவிர அனைத்து தரப்புக்களும் போருக்கு பிந்தைய காலத்தில் ஒற்றையாட்சிக்குள் உள்ள 13ற்கு இணங்கியிருந்தன. ஒற்றையாட்சிக்குள் முடக்கப்பட கூடாது. 13ஐ ஆரம்ப புள்ளியாக கொண்டு நகர்த்த முடியாது என சொல்லியே தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து வெளியேறினோம். இந்நிலையில் அந்த உண்மையை மூடி மறைக்க நாங்கள் சமஷ்டிக் கட்சி எனவும் காங்கிரஸ் ஒற்றையாட்சியை ஏற்றுக்கொண்டது எனவும் தமிழ் அரசுக் கட்சி கடந்த 16 வருடங்களாக மக்கள் மத்தியில் பொய் பரப்புரை செய்தனர். 13ம் திருத்தத்தை ஏற்கவில்லை என்ற பொய்யை தமிழ் அரசுக் கட்சி தலைவர் தனது அறிவுக்கு ஏற்ற வகையில் குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தை வழங்கியுள்ளார். வழங்கிய கால கட்டம் மிக முக்கியமானது. இரண்டு கிழமைக்கு முன்னராக 2015 - 2019 காலத்தில் செய்யப்பட்ட ஏக்ய ராஜ்ஜிய வரைபை திருத்தி அதனை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றபோவதாக தேசிய மக்கள் சக்தி மற்றும் மக்கள் விடுதலை முன்னணி பிரதிநிதிகள் சுவிட்சர்லாந்தில் தெரிவித்தனர். ஏக்ய ராஜ்ய என்ற ஒற்றையாட்சி வரைபை உருவாக்க இலங்கை தமிழ் அரசுக் கட்சி பெரும் பங்கு வகித்தது. அந்த வரைவை அமுல்படுத்த ஹரினி அமரசூரிய பாராளுமன்றத்தில் சொல்லியிருக்கிறார். அனுர குமார திஸாநாயக்க சொல்லியிருக்கிறார். அவ்வாறான தற்போதைய சூழலில் 13 ஐ கொண்டு வந்து நடைமுறைப்படுத்த வேண்டும் என இலங்கை தமிழ் அரசுக் கட்சி தலைவர் சொல்கிறார் என்றால் ஏக்ய ராஜ்ஜியவை எதிர்க்காமல் ஏக்கிய ராஜ்யவை கைவிட்டதாக சொல்லி கொண்டு அதே நேரம் எக்கிய ராஜ்ய வரும் போது எதிர்க்காமல் விடுவதற்கு யோசிக்கின்றனர். எத்தனையோ வருடங்களுக்கு பிறகு தமிழ் அரசுக் கட்சி தலைவர் நிருபித்தமைக்கு நன்றி தெரிவிக்கிறோம். இந்த வேளையிலே 38வருடம் நடைமுறைப்படுத்தாத 13ம் திருத்தத்தை இலங்கை தமிழ் அரசுக் கட்சி தற்போது அமுல்படுத்த கோருவது ஏக்ய ராஜ்ய என்ற ஒற்றையாட்சி முடக்குவதற்காகவே - என்றார். https://www.virakesari.lk/article/227101
5 days 4 hours ago
செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வாய்வுக்கு 18 மில்லியன் ரூபாய் கோரப்பட்டுள்ளது! 07 Oct, 2025 | 02:01 PM இலங்கையில் இரண்டாவது பெரிய மனித புதைகுழியை இன்னும் இரண்டு மாதங்களுக்கு அகழ்வாய்வு செய்வதற்கு கோரப்பட்ட நிதி இரண்டு கோடி ரூபாயை அண்மித்த தொகை என்பது தெரியவந்துள்ளது. எட்டு வார காலத்திற்கு அகழ்வாய்வுப் பணிக்காக தயாரிக்கப்பட்ட பாதீடு யாழ்ப்பாண சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவனால் கடந்த செப்டெம்பர் மாதம் 18,ஆம் திகதி அன்று நீதவான் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதோடு, அந்த தொகை சுமார் ஒரு கோடியே என்பது இலட்சம் (18 மில்லியன் ரூபாய்) எனத் தெரியவந்துள்ளது. யாழ்ப்பாணம் செம்மணி சித்துப்பாத்தி இந்து மயான மனித புதைகுழி தொடர்பான கடந்த ஒக்டோபர் 1, 2025 அன்று யாழ்ப்பாண நீதவான் செல்வநாயகம் லெனின்குமார் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதன் பின்னர், ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட பாதிக்கப்பட்டவர்களின் சார்பாக முன்னிலையான சட்டத்தரணி கே. சுபாகர், அகழ்வாய்வுகளை மேற்கொள்வதற்காக கோரப்பட்ட நிதி நீதி அமைச்சினால் இதுவரை அங்கீகரிக்கப்படவில்லை எனக் குறிப்பிட்டிருந்தார். சிறுவர்கள் உள்ளிட்ட 240 மனித எலும்புக்கூடுகள் கண்டறியப்பட்டுள்ள, மனித புதைகுழியின் அகழ்வாய்வுகளை மேற்கொள்வதற்காக கோரப்பட்ட நிதி அங்கீகரிக்கப்படாததால் பணிகள் முடங்கியுள்ளன. சட்ட வைத்திய அதிகாரியின் கோரிக்கை முன்வைக்கப்பட்டு இரண்டு வாரங்களின் பின்னர், செம்மணிப் புதைகுழி தொடர்பான விசாரணைகள் தடைபடாமல் இருக்க நிதியுதவியை வழங்குமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அரசாங்கத்திற்கு பரிந்துரைத்திருந்தது. "நிதி தாமதமின்றி கிடைப்பதை உறுதி செய்வதற்காக, பாதீட்டு கோரிக்கைகளை விரைவாக செயல்படுத்தவும், நிதி ஒதுக்கீடுகள் மற்றும் வழங்கல்களை விரைவாக செயல்படுத்தவும், காணாமல் போனோர் அலுவலகம் உட்பட செம்மணிப் புதைகுழி விசாரணையில் ஈடுபட்டுள்ள அனைத்து அரச அதிகாரிகளுடனும் நெருக்கமாகப் பணியாற்றவும் நீதி அமைச்சின் ஒரு மத்திய அதிகாரி நியமிக்கப்பட வேண்டும்," என ஆணைக்குழு ஒரு அறிக்கையில் கூறியிருந்தது. அந்த பரிந்துரைகள் செயல்படுத்தப்பட்டதா என்பது தெரியவில்லை. முன்னர் அங்கீகரிக்கப்பட்ட நிதியுடன் 45 நாட்கள் நடத்தப்பட்ட இரண்டாம் கட்ட அகழ்வாய்வு, கடந்த செப்டெம்பர் மாதம் 6 ஆம் திகதி அன்று பிற்பகல் நிறைவடைந்த நேரத்தில், 240 மனித எலும்புக்கூடுகளில் ஒன்றைத் தவிர ஏனைய அனைத்தும் புதைகுழியிலிருந்து அகழ்ந்து எடுக்கப்பட்டிருந்தன. மனித எலும்புகளுடன், செம்மணி புதைகுழியில் இருந்து இதுவரை மீட்கப்பட்ட பிற பொருட்களில் குழந்தை பால் போத்தல், பொம்மை, சிறுவர் காலணிகள் மற்றும் பாடசாலை பைகள் ஆகியவை உள்ளடங்கும். கடந்த பெப்ரவரி மாதம் 11 ஆம் திகதி அன்று மயானத்தில் கட்டுமானப் பணிகளை மேற்கொண்டிருந்தபோது, தற்செயலாக பல மனித எலும்புகள் கண்டெடுக்கப்பட்டன. எலும்புத் துண்டுகளை பரிசோதிப்பதற்காக யாழ்ப்பாண சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவனுடன் வருகைத்தந்த அப்போதைய நீதிபதி ஏ.ஏ. ஆனந்தராஜா, அவை மனித எச்சங்களா என்பது குறித்து விசாரணை நடத்துவதற்காக சட்ட வைத்திய அதிகாரியிடம் ஒப்படைக்க பெப்ரவரி 20 அன்று பொலிஸாருக்கு உத்தரவிட்டார். நீதிமன்ற உத்தரவிற்கு அமைய, தடயவியல் தொல்பொருள் ஆய்வாளர் பேராசிரியர் ராஜ் சோமதேவ மற்றும் யாழ்ப்பாண சட்ட வைத்திய அதிகாரி அதிகாரி செல்லையா பிரணவன் ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ்,கடந்த மே மாதம் 15 ஆம் திகதி அன்று செம்மணி சித்துப்பாத்தி மயானத்தில் அகழ்வாய்வுப் பணிகள் ஆரம்பமாகின. https://www.virakesari.lk/article/227117
5 days 4 hours ago
Bolavip Soccer · ROBERTO CARLOS, RONALDINHO, CAFÚ, RONALDO AND DIDA 🤯"
5 days 4 hours ago
அப்படி இல்லை, அண்ணன் நெய்தல் படை சூழ கடலில் இறங்கியதும் ஒட்டு மொத்த இலங்கை நேவியும் முகாமுக்குள் சுருண்டு கொண்டன. நீங்கள் உங்கள் சந்தோசத்துக்கு எதை வேண்டுமானாலும் எழுதலாம். ஆனால் உண்மை இதுதான்🤣
5 days 4 hours ago
5 days 4 hours ago
5 days 4 hours ago
இரண்டு வருடம் கடந்த போராட்டம் லக்ஸ்மன் மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதான மேய்ச்சல் தரையாக விளங்கும் மயிலத்தமடு, மாதவணை பிரதேசத்தில் பொலன்னறுவை, மாவட்டத்தவரின் அத்துமீறிய சேனைப் பயிர்செய்கை செயற்பாடுகள் காரணமாக கால்நடைப் பண்ணையாளர்கள் கடந்த ஆட்சி காலங்களில் பெரும் சிரமங்களை எதிர்கொண்டனர். சிறிது சிறிதாக அத்துமீறிய செயற்பாடுகள் தணிக்கப்பட்டன. இருந்தாலும், இப்போதும் ஒருசிலர் அப்பிரதேசத்தில் தங்களது தவறான செயற்பாடுகளில் ஈடுபட்டே வருகின்றனர். அதற்கெதிரான போராட்டமும் நடைபெற்றுக் கொண்டே இருக்கிறது. மயிலத்தமடு - மாதவனை மேய்ச்சல் தரைப்பகுதியானது, இதுவரையில் வர்த்தமானியில் வெளியிடப்படுத்தப்படாதிருப்பதே அதற்கான முக்கிய காரணம் என்பது கால்நடை பண்ணையாளர்களின் நிலைப்பாடு. இருந்தாலும் அதற்குள் வேறு சில விடயங்களும் இருக்கலாம் என்பது யதார்த்தம். யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்த காலங்களில் இல்லாத பொலன்னறுவை அம்பாறை மாவட்டங்களைச் சேர்ந்தவர்களின் அத்துமீறிய வருகை யுத்தம் முடிவுக்கு வந்தவுடன் ஆரம்பித்தது. அது முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவின் காலத்தில் உச்சத்துக்கு வந்தது. அதன் பின்னர் ரணிலின் ஆட்சி காலத்தில் ஓரளவுக்குக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டாலும் முடிவாகாத நிலையில், பண்ணையாளர்கள் சித்தாண்டிச் சந்தியில் போராட்டத்தினை ஆரம்பித்தனர். சந்திப்புக்கள் பல நடைபெற்றிருந்தாலும் இப்போதும் முடிவுக்கு வரமலாம். எதிர்பார்த்தளவுக்கான எந்தவிதமான முன்னேற்றத்தையும் அடைந்து விடாத போராட்டத்தினை பண்ணையாளர்கள் தொடர்ந்து வருகின்றனர் என்பதே உண்மை. எந்தவொரு தீர்வும் கிடைக்காத நிலையில் மூன்றாவது வருடத்துக்குள் இந்தப் போராட்டம் சென்றிருக்கிறது. பரம்பரை பரம்பரையாகப் பண்ணை வளர்ப்புக்கெனப் பயன்படுத்தி வந்த காணிகளை வர்த்தமானிப்படுத்தித் தாருங்கள் என்ற நியாயமான கோரிக்கைக்குப் பதில் கிடைக்கும்வரை தொடரும் என்பது பண்ணையாளர்களின் நிலைப்பாடு. 2009 இற்கு பின்னர் மட்டக்களப்பு மாவட்டத்தின் மேய்ச்சல் தரைப் பிரச்சினை தலையெடுக்கத் தொடங்கியது முதல் பல தடவைகளிலும் பலவாறும் தீர்வுக்காக முயற்சி செய்து பயனில்லாமல், பல பிரச்சினைகளை எதிர்கொண்டும் வந்திருந்த கால்நடை வளர்ப்பாளர்கள் இறுதியாக எடுத்த முயற்சியாக இந்த சுழற்சி முறையிலான உண்ணாவிரதம் அமைந்திருக்கிறது. மயிலத்தமடு, மாதவணை பிரதேசம் 1974இன் காலப்பகுதியிலிருந்து மேய்ச்சல் தரையாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. அத்துமீறிய குடியேற்ற சம்பவங்கள் இங்கு இடம்பெற்றபோது, அவற்றினைத் தடுப்பதற்குச் சரியான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. இவர்களை வெளியேற்றுவதற்குக் கிழக்கு முதலமைச்சர் மற்றும் ஆளுநரால் 2009களில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் அப்போது முழுமையான பயனைத் தரவில்லை. அதேநேரம், 2015இல் ஆட்சி மாற்றத்தையடுத்து, 2016இல் அத்துமீறலாளர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டதோடு, நீதிமன்றக் கட்டளையின் அடிப்படையில், அனைவரும் வெளியேற்றப்படுவார்கள் என்று மகாவலி அதிகார சபையினால் உறுதியளிக்கப்பட்டது. இருந்தாலும், அது முழுமையாக நடைபெற்றிருக்கவில்லை. கிழக்கு மாகாண சபை 2017 செப்டெம்பரில் கலைக்கப்பட்டதையடுத்து, அத்துமீறலாளர்களது நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பித்தன. கோட்டாபய ஜனாதிபதியானதும் இந்த அத்துமீறல்கள் பூதாகாரமானது. அதற்கு முழுமையான ஒத்துழைப்பையும் உந்துதல் உதவிகளை வழங்கியவர் முன்னாள் கிழக்கு ஆளுநர் அனுராதா ஜகம்பத் ஆவார். பெருந்தொகை கால்நடைகள் அத்துமீறி பயிர்ச்செய்கையில் ஈடுபடுவோரால் களவாடப்படுவதும், பிடிக்கப்படுவதும், இறைச்சிக்காகக் கொல்லப்படுவதும், பொறி வெடிக் குண்டுகளால் கொல்லப்படுவதும் வாய் மற்றும் உடற் பாகங்கள் பாதிக்கப்படுவதும் சம்பவங்களாக இருந்தன. அவ்வாறு காணாமல்போன தமது கால் நடைகளைத் தேடிச் செல்லும் பண்ணையாளர்கள் தாக்கப்படுல், கைது செய்யப்படுதல் போன்ற சந்தர்ப்பங்களும் நடைபெற்று வந்தன. இதனால் நூற்றுக்கணக்கான கால்நடைகள் மரணமாகியிருக்கின்றன. இன்னல்களை அனுபவித்தபடியே தங்களது கால்நடைகளைப் பாதுகாக்க வேண்டிய கட்டாயத்திலிருக்கின்ற பண்ணையாளர்களுக்கு ஏற்கனவே வாய் மொழி மூலமாக வழங்கப்பட்ட தீர்வுகள் எதுவும் பயனில்லாதவைகளாகவே இருந்துள்ளன. மயிலத்தமடு - மாதவணை பிரதேசத்தில் மேய்ச்சல் தரைக்கான பகுதி அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. ஏறாவூர் பற்று பிரதேச செயலகப்பிரிவின் ஈரணைக்குளம் கிராம சேவையாளர்பிரிவில் 6383 ஹெக்டெயரும், கோரளைப்பற்று தெற்கு பிரதேச செயலாளர் பிரிவின் குடும்பிமலை கிராம சேவையாளர் பிரிவில் 9,969 ஹெக்டெயரும் முன்மொழியப்பட்டுள்ளன. இருப்பினும், அது வர்த்தமானி அறிவித்தலாக வெளியிடப்படவில்லை. அது நிறைவேறாமையினாலேயே இப்பிரச்சினை நீண்டகாலப் பிரச்சினையாக மாறியிருக்கிறது.கல்லோயா குடியேற்றம், அல்லை- கந்தளாய் குடியேற்றம் என பல குடியேற்றங்களைக் கிழக்கில் ஏற்படுத்தி கிழக்கில் தமிழர்களுடைய இனப் பரம்பலைக் குறைத்தது மாத்திரமல்லாமல், மட்டக்களப்பு மாவட்டம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு அம்பாறை மாவட்டம் தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்டது. தமிழர்களுடைய இனப்பரம்பல் கிழக்கின் திருகோணமலை, அம்பாறை மாவட்டங்களில் குறைந்து கொண்டே வருகிறது. மட்டக்களப்பு மாவட்டம் மாத்திரமே பெரும்பான்மையாக தமிழர்கள், தமிழ் பேசும் மக்கள் வாழுகின்ற மாவட்டமாக இருந்து வருகிறது. அந்தவகையில், இனப்பரம்பலை மாற்றுகின்ற செயற்பாடாகவே மட்டக்களப்பு மாவட்டத்தின் மேய்ச்சல்தரைப் பிரதேசத்தில் முன்னெடுக்கப்படும் குடியேற்ற நடவடிக்கைகள் பார்க்கப்படவேண்டும் என்ற அச்சமும் வெளியிடப்பட்டது. மேய்ச்சல் தரை பிரச்சினையில் எதிர்பார்த்த அளவு முன்னேற்றம் இல்லாவிட்டாலும் ஓரளவுக்கு முன்னேற்றம் கண்டுள்ளதாகப் பண்ணையாளர்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர். சிவில் தரப்பினர் பண்ணையாளர்களுடைய பிரச்சினைகளை சர்வதேச மட்டம் வரையிலும் வெளிப்படுத்தும் செயற்பாடுகளில் ஈடுபட்டுவருகின்றனர். அதற்கு மேய்ச்சல் தரைப் போராட்டக்காரர்களிற்கு வெற்றி கிடைக்கவேண்டும் என்பதே நோக்கமாக இருக்கிறது. இருந்தாலும் மகாவலி அபிவிருத்தி திட்டத்திற்குட்பட்ட பிரதேசமாக இந்தப்பிரதேசம் உள்ளதனால் மகாவலியினுடைய நடவடிக்கைகளுக்குட்பட்டதாகவே இருக்க வேண்டிய நிலைமையொன்றும் உள்ளது. மகாவலி பி வலயமானது அம்பாறை, பொலன்னறுவை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களை உள்ளடக்கியதாக இருக்கிறது. பெரும்பாலான நிலப்பகுதி மட்டக்களப்பு மாவட்டத்திற்குரியதாக இருக்கிறது. மகாவலியினுடைய அபிவிருத்தி திட்டங்கள் பெரும்பான்மை மக்களைப் பிரதானமாகக் கொண்டு மேற்கொள்ளப்படுவது என்றவகையில், மட்டக்களப்பு மாவட்டத்தில் பெரும்பான்மை மக்களை அதிகளவில் உள்வாங்கி மேற்கொள்ளப்படும் நிலை ஏற்பட்டால் பாதிக்கப்படவுள்ளது கால்நடைப் பண்ணையாளர்களே. இந்த இடத்தில் வாழ்வாதாரத்திற்கு அடுத்தபடியாக, நில உரிமை மீறல், கால்நடைகளின் பாதுகாப்பு, பாரம்பரிய கால்நடை இனங்களின் அழிவு, நல்லிணக்கம் பாதிக்கப்படல், எதிர்கால சந்ததிகளுக்கான வாழ்வாதாரம் கேள்விக்குறியாதல், இயற்கை வள ஆக்கிரமிப்பு, பாரம்பரிய புல்லினங்களுக்குப் பாதிப்பு, இனப் பரம்பல் மாற்றம், அரசியல் பிரதிநிதித்துவப் பாதிப்பு என பல்வேறு விடயங்கள் கவனத்திற் கொள்ளப்பட வேண்டும். வடக்கில் மணலாறு பகுதி மகாவலி எல் வலயமாக உருவாகி வெலிஓயாவாக மாற்றம்பெற்றது. அதே ஒழுங்கில் கிழக்கில் கொண்டுவரப்பட்டுள்ள மகாவலி பி வலயம் அமையலாம் என்ற அச்சம் பெரும்பாலானவர்களிடம் உள்ளது. இதனால் ஏற்படவுள்ள பாதிப்பானது அனைவரையும் உள்வாங்கும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. இயற்கையாக அமைந்துள்ள கால்நடைகள் வளர்க்கப்பட்டு வருகின்ற இப்பிரதேசம், மகாவலி பிரதேசத்துக்குள் உள்வாங்கப்பட்டிருக்கிறது. இந்நிலைமை கால்நடை பண்ணையாளர்களின் நோக்கத்தினை சிதைக்கும் என்ற கவலை இருந்தாலும், அரசாங்கத்தின் திட்டம் என்றவகையில், அனைவரும் வாய்மூடிய பொம்மைகளாக இருக்கவேண்டிய சூழலே உருவாகியிருக்கிறது. முன்னைய ஆட்சிக்காலத்தில் தொடங்கப்பட்ட கால்நடைப் பண்ணையாளர்களின் மேய்ச்சல் தரைக்கான போராட்டம், தற்போதைய மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஆட்சியிலும் தொடர்ந்து கொண்டிருப்பது அரசுக்கு அபகீர்த்தியான ஒன்றேயாகும். அரசாங்கம் இதனைக் கண்டும் காணாத வகையிலிருந்து வருகின்றமையானது, இவ்விடத்தில் கவனிக்கப்படவேண்டும். தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தமிழ் மக்களது விடயங்களில் பாராமுகமாக இருப்பது போன்ற நடத்தையைக் கைக் கொண்டிருப்பதை அவதானிக்க முடிகிறது. அதே போலவே கிழக்கின் மேய்ச்சல் தரைப் பிரச்சினையையும் கையாள்வது போலவே தெரிகிறது. அபிவிருத்தி என்ற போர்வையில் மேற்கொள்ளப்படுகின்ற செயற்பாடுகள் அரசியல் அதிகாரங்களுக்கு அப்பாற்பட்டதல்ல. என்றாலும் பிரதேசத்தின் அரசியல் தரப்பினர் கொடுக்கின்ற அழுத்தங்களின் போதாமை தற்போது வெளிப்படத் தொடங்கியிருக்கிறது. அல்லது தேவையற்றதான ஒரு போராட்டம் நடத்தப்படுகிறதோ என்ற சந்தேகத்தையும் தோற்றுவிக்கிறது. எது எவ்வாறானாலும், திட்டமிட்ட வகையில் மேற்கொள்ளப்படும் மகாவலியின் அபிவிருத்தித் திட்டம் மேய்ச்சல் தரையை வர்த்தமானிப்படுத்தக் கோரும் பண்ணையாளர்களுக்கும் கால்நடைகளுக்கும் பாதகத்தை ஏற்படுத்தாதிருந்தால் சரி. https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/இரண்டு-வருடம்-கடந்த-போராட்டம்/91-365826
5 days 4 hours ago
இலங்கையில் இளைஞர்களிடையே தீவிரமடையும் எச்.ஜ.வி இலங்கையில் 15 – 29 வயதுக்குட்பட்டவர்களிடையே எச்.ஐ.வி தொற்று அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களிலேயே அதிக எண்ணிக்கையிலான எயிட்ஸ் நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உலகில் பெரும் பேரழிவை ஏற்படுத்தும் பாலியல் வைரஸ்களில் எச்.ஐ.வியும் ஒன்றாகும். இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை நேரடியாகத் தாக்கி உடலை பலவீனப்படுத்துகிறது. மேலும் மிகவும் ஆபத்தான சூழ்நிலை என்னவென்றால், இருமல் அல்லது சளி போன்ற ஒரு சிறிய நோய் ஏற்பட்டால் கூட அது மரணத்திற்கு வழிவகுக்கும். எச்.ஐ.வி தொற்றுகள் ஏற்படக்கூடிய மூன்று முக்கிய வழிகளை சுகாதார அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர். 1. எச்.ஐ.வி தொற்றுக்குள்ளான ஒருவருடன் உடலுறவு கொள்வது எச்.ஐ.வி நோயாளியை முத்தமிடுவதால் நோய் பரவாது. எனினும் பாலியல் ரீதியான உடலுறவினால் பரவுகின்றது. குறிப்பாக ஆசனவழி உடலுறவுதான் எச்.ஐ.வி வருவதற்கான முக்கிய காரணமாக கருதப்படுகின்றது. இதுபோன்ற பாதுகாப்பற்ற உடலுறவு மூலம் பரவக்கூடிய எச்.ஐ.வி வைரஸ், உடல் முழுவதும் சுமார் 72 மணிநேரத்திற்குள் பரவி விடும். 2. ஊசிகளின் கட்டுபாடற்ற பயன்பாடு ஊசி மூலம் போதைப்பொருள் பாவணை மூலமும் வெகுவாக பரவுவதுடன் ஒரே ஊசியை பலர் பயன்படுத்துவதற்கு இதற்கு காரணமாக அமைந்துள்ளதாக சுகாதார அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர். 3.எயிட்ஸ் நோயாளியாக இருக்கும் கர்ப்பிணித்தாய்மாரிடத்தில் இருந்து அவரது பிறக்கவுள்ள குழந்தைக்கும் எச்.ஐ.வி வைரஸ் பரவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2021 ஆம் ஆண்டில் 411 நோயாளர்களும், 2022 இல் 607 நோயாளர்களும், 2023 இல் 697 நோயாளர்களும், 2024 இல் 824 நோயாளர்களும் கண்டறியப்பட்டுள்ளனர். அதிகளவில் ஆண்களே எயிட்ஸ் நோயாளர்களாக கண்டறியப்பட்டுள்ளனர். இது 7:1 விகிதமாகும். அதன்படி, 2025 ஆம் ஆண்டின் ஜனவரி முதல் மார்ச் வரை அடையாளம் காணப்பட்ட புதிய எயிட்ஸ் நோயாளர்கள் உட்பட, நாட்டில் இதுவரை 6,740 நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தரவுகள் தெரிவிக்கின்றன. 2024 ஆம் ஆண்டில், 824 புதிய எச்.ஐ.வி தொற்றுகள் அடையாளம் காணப்பட்டன, அவற்றில் அதிகபட்ச எண்ணிக்கை கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களிலிருந்து பதிவாகியுள்ளது. எயிட்ஸ் நோயினால் 47 பேர் உயிரிழந்துள்ளனர். இலங்கை குறைந்த எச்.ஐ.வி பாதிப்பு உள்ள நாடாகக் கருதப்பட்டாலும், கடந்த ஆண்டு பதிவான புதிய தொற்றுகளின் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு கவலையளிப்பதாக சுகாதார அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர். சுகாதார அமைச்சின் கீழ் செயல்படும் தேசிய பாலியல் நோய் மற்றும் எயிட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டம், இலவச மற்றும் ரகசிய சோதனை மற்றும் சிகிச்சைகளை வழங்குகிறது. இலங்கை முழுவதும் உள்ள 41 பாலியல் நோய் சிகிச்சை மையங்களில் எச்.ஐ.வி தொற்றுக்குள்ளானவர்களுக்கு இலவச சிகிச்சையை வழங்குகிறது. எயிட்ஸ் தொடர்பான சிகிச்சைகளை பெற்றுக்கொள்ள தேசிய பாலியல் நோய் மற்றும் எயிட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் தொலைபேசி (+94 703 733 933) இலக்கத்திற்கு அழைப்பினை ஏற்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. https://www.samakalam.com/இலங்கையில்-இளைஞர்களிடைய/
Checked
Sun, 10/12/2025 - 12:00
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed