புதிய பதிவுகள்2

எங்க வீட்டில் எல்லாவற்றுக்கும் மழைநீர் தான்.

4 days 4 hours ago
அவுசில் கூரையில் இருந்து வரும் தண்ணீரை சேகரிக்க பொறிமுறை இல்லாவிட்டால் நகரம் அனுமதி கொடுக்காதாம். பழைய வீடுகளுக்கு இல்லை. இருந்தும் அண்ணன் வீட்டில் சேமிக்கிறார்கள். காலநிலை நன்றாக உள்ளதால் தோட்டமும் செய்கிறார்கள். ஏதோ கல்லுகள் போட்டு வடிகட்டி எடுக்கிறதாக சொன்னாரே.

இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!

4 days 6 hours ago
ஆழியிலே பிறவாத அலை மகளோ... ஆ... ஆ... ஆ... ஆ... ஆ... ஏழிசையை பயிலாத கலை மகளோ... மூழி நடம் புரியாத மலை மகளோ... உலகத் தாய் பெற்றெடுத்த தலை மகளோ... ஆ... ஆ... ஆ... ஆ... ஆ... அழகு தெய்வம் மெல்ல மெல்ல அடியெடுத்து வைத்ததோ நான் அன்பு கவிதை சொல்லச் சொல்ல அடியெடுத்து கொடுத்ததோ காலத்தால் அழியாத பாட்டு. இதிலே எனக்கு சரணத்தைவிட பல்லவியே எனக்கு மிகவும் பிடித்தது.

எங்க வீட்டில் எல்லாவற்றுக்கும் மழைநீர் தான்.

4 days 10 hours ago
சமூகம் சார்ந்த நல்லதொரு இணைப்பு. விவசாயியாக வாழ்ந்தாலும் இப்படி ஒரு வாழ்க்கை வாழ வேண்டும் என நினைத்ததுண்டு.அதாவது யாரையும் கையேந்தி வாழாத வாழ்க்கை வாழ வேண்டும் என்பது.❤️ மற்றும் படி..... நானறிந்த வரையில் ஐரோப்பிய நாடுகளில் நிலத்தடி நீரை அதிகம் உபயோகப்படுத்துவதில்லை.சில நாடுகளில் தடையும் உண்டு. கூடுதலாக மழைநீரை நீர்த்தேக்கங்களில் சேகரித்தே நாட்டு மக்களுக்கு விநியோகம் செய்வார்கள்.சொந்த வீடு வைத்திருப்பவர்கள் வீட்டு கூரையிலிருந்து வழிந்து வரும் மழை நீரை சேகரித்து வீட்டுத்தோட்டம் மற்றும் பூ மரங்களுக்கு பாவிப்பார்கள். அது சரி.... சேகரித்த மழை நீரை சுத்திகரிக்காமல் நேரடியாக குடிக்க முடியுமா?

திருகோணமலை கடற்கரையில் 2006 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 2 ஆம் திகதி இராணுவத்தால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட, தனது மகன் உட்பட ஐந்து மாணவர்களுக்காக நீதி கோரி போராடிய வைத்தியர் மனோகரன்

4 days 10 hours ago
சுட்டுக் கொல்லப்பட்ட மாணவர்களின் நண்பர ராஜீவ் வின் உரை. இவர் இப்போது பெரிய அரசியல் செயற்பாட்டராளாக உள்ளார்.

இந்த வாரம் கிளைமேக்ஸ்.. சென்னைக்கு வரும் பாண்டா.. விஜய்க்கு டெல்லி முக்கிய மெசேஜ்.. கூட்டணி ரெடி!

4 days 11 hours ago
12 மணிக்கு வருவதாக அறிவித்து கூட்டத்தை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக வேண்டுமென்றே திட்டமிட்டு தாமதபடுத்தி வெய்யில் வெப்பம் தாகம் பசியில் மக்களை காக்க வைத்து வந்த விஜய் நோகபட வேண்டியவர் இல்லையா சீமான் கேட்கின்றார் இப்போ நான் ஒரு நிகழ்ச்சிக்கு வந்து இருக்கிறேன். நான் வரவில்லை என்றால் இந்த நிகழ்ச்சி நடக்குமா? நான் வரவில்லை என்றால் அந்த நெரிசல் ஏற்படுமா? நான் வரவில்லை என்றால் அந்த மரணங்கள் நிகழுமா ? என்னுடைய வருகையால் நிகழ்ந்த மரணம் தான் அது .அப்படியானால் மரணங்களுக்கு முதல் காரணம் யார்?

யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025

4 days 11 hours ago
அடுத்த மூன்று போட்டிகளிலும் பெரும்பாலும் போட்டியாளர்களின் புள்ளிகளின் தரவரிசை மாறமாட்டாது. அதன் பிறகு வரும் இங்கிலாந்து- இலங்கை, அவுஸ்திரேலியா- இந்தியாவுக்கு இடையிலான போட்டிகளில் தரவரிசை மாற்றங்கள் வரலாம்.

இலங்கை தொடர்பான ஐ.நா. தீர்மானத்தை அரசாங்கம் நிராகரித்தது

4 days 11 hours ago
அடிப்படை எழுத்தே தெரியாதவனை கட்டுரை எழுதச்சொல்வது போல் உள்ளது ஐ. நா. வின் அறிக்கை. இலங்கையர்களுக்கு சமாதானம், ஒற்றுமை, நல்லிணக்கம், மனித உரிமை என்றால் என்னவென்றே தெரியாமல் ஆரம்பத்திலிருந்தே, எதிரான விளக்கம் கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள் வருகிறார்கள். ஐ. நா. வால் அவர்களின் மனநிலையை புரிந்து கொள்ள முடியவில்லை. காலத்தை இழுத்தடிப்பதை விடுத்து, சமாதானம், ஒற்றுமை, நல்லிணக்கம், மனித உரிமை என்றால் என்ன, அதற்கு முக்கியமானது என்ன, அதை எப்படி இனங்களிடையே கட்டியெழுப்புவது என்கிற பாடத்தை இவர்களுக்கு எடுத்து விளக்குவது பிரயோசனமானது என்பது எனது கருத்து. இல்லையெனில், ஒவ்வொரு கூட்டத்திற்கும் இதே பல்லவியை எழுதிக்கொண்டு வந்து வாசிப்பார்கள். அவர்களது கலாச்சாரமே; அடித்து, கொலை செய்து, பறித்து வாழ்வாதாரம் நடத்துவது. அது தான் சரியானது என்பது அவர்களது தரப்பு வாதம்.

இந்த ஆண்டிற்கான "நோபல் பரிசு" பெற்றவர்கள்.

4 days 11 hours ago
ரம்பருக்கு நோபல் பரிசு குடுக்காட்டில் சுவீடன் அமெரிக்காவின் 52வது மாநிலமாக அறிக்கை விட்டாலும் விடுவார். கனடா அமெரிக்காவின்ர 51வது மாநிலம் எண்டது ஊரறிஞ்ச விசயம் தானே....😂

திருகோணமலை கடற்கரையில் 2006 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 2 ஆம் திகதி இராணுவத்தால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட, தனது மகன் உட்பட ஐந்து மாணவர்களுக்காக நீதி கோரி போராடிய வைத்தியர் மனோகரன்

4 days 12 hours ago
திருகோணமலை கடற்கரையில் 2006 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 2 ஆம் திகதி இராணுவத்தால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட, தனது மகன் உட்பட ஐந்து மாணவர்களுக்காக நீதி கோரி போராடிய வைத்தியர் மனோகரன் பற்றிய நினைவு வணக்க நிகழ்வு யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. நேற்று 6 ஆம் திகதி திங்கட்கிழமை பகல் 10 மணிக்கு தந்தை செல்வா கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற நிகழ்வில், நான் உரை நிகழ்த்தியபோது எடுக்கப்பட்ட படங்கள் இவை. ”நீதி கோரலுக்கான சாட்சியங்களை பெறும் வழி முறைகளும், சாட்சியங்களை மையப்படுத்திய நாடாளுமன்ற உரைகளும்“ என்ற தலைப்பில் எனது உரை இடம்பெற்றது. நாடளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட பலர் நிகழ்வில் பங்குபற்றினர். நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், அரசியல் ஆய்வாளர் ம. நிலாந்தன், யாழ் பல்கலைக்கழக அரசறிவியல் துறை தலைவர் கலாநிதி விக்னேஸ்வரன், சட்டத்தரணி சிறிநாத் பெரேரா ஆகியோர் உரைற்றியிருந்தனர். கொலை செய்யப்பட்ட ஐந்து மாணவர்களின் நண்பர் இ. ரஜீவ்காந் தொடக்க உரையை நிகழ்த்தினார். ரஜீவ்காந், வடக்கு - கிழக்கு மற்றும் கொழும்பு உள்ளிட்ட இலங்கைத்தீவை மையப்படுத்திய அரசியல் செயற்பாட்டாளர். கொலைச் சம்பவம் பற்றிய நேரடி அனுபவத்தை சபையில் விரிவாக எடுத்து விளக்கினார்.. https://www.facebook.com/1457391262/posts/pfbid0cu5c1L46icqT2RhQB36yAv11acvbT2gUvDqwDcseskYXNTR87mencLwpMMQEHE7Gl/?
Checked
Sun, 10/12/2025 - 08:59
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed