புதிய பதிவுகள்2

மயிலத்தமடு - மாதவனை மேய்ச்சல் தரை - இரண்டு வருடம் கடந்த போராட்டம்

5 days 7 hours ago
இரண்டு வருடம் கடந்த போராட்டம் லக்ஸ்மன் மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதான மேய்ச்சல் தரையாக விளங்கும் மயிலத்தமடு, மாதவணை பிரதேசத்தில் பொலன்னறுவை, மாவட்டத்தவரின் அத்துமீறிய சேனைப் பயிர்செய்கை செயற்பாடுகள் காரணமாக கால்நடைப் பண்ணையாளர்கள் கடந்த ஆட்சி காலங்களில் பெரும் சிரமங்களை எதிர்கொண்டனர். சிறிது சிறிதாக அத்துமீறிய செயற்பாடுகள் தணிக்கப்பட்டன. இருந்தாலும், இப்போதும் ஒருசிலர் அப்பிரதேசத்தில் தங்களது தவறான செயற்பாடுகளில் ஈடுபட்டே வருகின்றனர். அதற்கெதிரான போராட்டமும் நடைபெற்றுக் கொண்டே இருக்கிறது. மயிலத்தமடு - மாதவனை மேய்ச்சல் தரைப்பகுதியானது, இதுவரையில் வர்த்தமானியில் வெளியிடப்படுத்தப்படாதிருப்பதே அதற்கான முக்கிய காரணம் என்பது கால்நடை பண்ணையாளர்களின் நிலைப்பாடு. இருந்தாலும் அதற்குள் வேறு சில விடயங்களும் இருக்கலாம் என்பது யதார்த்தம். யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்த காலங்களில் இல்லாத பொலன்னறுவை அம்பாறை மாவட்டங்களைச் சேர்ந்தவர்களின் அத்துமீறிய வருகை யுத்தம் முடிவுக்கு வந்தவுடன் ஆரம்பித்தது. அது முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவின் காலத்தில் உச்சத்துக்கு வந்தது. அதன் பின்னர் ரணிலின் ஆட்சி காலத்தில் ஓரளவுக்குக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டாலும் முடிவாகாத நிலையில், பண்ணையாளர்கள் சித்தாண்டிச் சந்தியில் போராட்டத்தினை ஆரம்பித்தனர். சந்திப்புக்கள் பல நடைபெற்றிருந்தாலும் இப்போதும் முடிவுக்கு வரமலாம். எதிர்பார்த்தளவுக்கான எந்தவிதமான முன்னேற்றத்தையும் அடைந்து விடாத போராட்டத்தினை பண்ணையாளர்கள் தொடர்ந்து வருகின்றனர் என்பதே உண்மை. எந்தவொரு தீர்வும் கிடைக்காத நிலையில் மூன்றாவது வருடத்துக்குள் இந்தப் போராட்டம் சென்றிருக்கிறது. பரம்பரை பரம்பரையாகப் பண்ணை வளர்ப்புக்கெனப் பயன்படுத்தி வந்த காணிகளை வர்த்தமானிப்படுத்தித் தாருங்கள் என்ற நியாயமான கோரிக்கைக்குப் பதில் கிடைக்கும்வரை தொடரும் என்பது பண்ணையாளர்களின் நிலைப்பாடு. 2009 இற்கு பின்னர் மட்டக்களப்பு மாவட்டத்தின் மேய்ச்சல் தரைப் பிரச்சினை தலையெடுக்கத் தொடங்கியது முதல் பல தடவைகளிலும் பலவாறும் தீர்வுக்காக முயற்சி செய்து பயனில்லாமல், பல பிரச்சினைகளை எதிர்கொண்டும் வந்திருந்த கால்நடை வளர்ப்பாளர்கள் இறுதியாக எடுத்த முயற்சியாக இந்த சுழற்சி முறையிலான உண்ணாவிரதம் அமைந்திருக்கிறது. மயிலத்தமடு, மாதவணை பிரதேசம் 1974இன் காலப்பகுதியிலிருந்து மேய்ச்சல் தரையாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. அத்துமீறிய குடியேற்ற சம்பவங்கள் இங்கு இடம்பெற்றபோது, அவற்றினைத் தடுப்பதற்குச் சரியான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. இவர்களை வெளியேற்றுவதற்குக் கிழக்கு முதலமைச்சர் மற்றும் ஆளுநரால் 2009களில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் அப்போது முழுமையான பயனைத் தரவில்லை. அதேநேரம், 2015இல் ஆட்சி மாற்றத்தையடுத்து, 2016இல் அத்துமீறலாளர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டதோடு, நீதிமன்றக் கட்டளையின் அடிப்படையில், அனைவரும் வெளியேற்றப்படுவார்கள் என்று மகாவலி அதிகார சபையினால் உறுதியளிக்கப்பட்டது. இருந்தாலும், அது முழுமையாக நடைபெற்றிருக்கவில்லை. கிழக்கு மாகாண சபை 2017 செப்டெம்பரில் கலைக்கப்பட்டதையடுத்து, அத்துமீறலாளர்களது நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பித்தன. கோட்டாபய ஜனாதிபதியானதும் இந்த அத்துமீறல்கள் பூதாகாரமானது. அதற்கு முழுமையான ஒத்துழைப்பையும் உந்துதல் உதவிகளை வழங்கியவர் முன்னாள் கிழக்கு ஆளுநர் அனுராதா ஜகம்பத் ஆவார். பெருந்தொகை கால்நடைகள் அத்துமீறி பயிர்ச்செய்கையில் ஈடுபடுவோரால் களவாடப்படுவதும், பிடிக்கப்படுவதும், இறைச்சிக்காகக் கொல்லப்படுவதும், பொறி வெடிக் குண்டுகளால் கொல்லப்படுவதும் வாய் மற்றும் உடற் பாகங்கள் பாதிக்கப்படுவதும் சம்பவங்களாக இருந்தன. அவ்வாறு காணாமல்போன தமது கால் நடைகளைத் தேடிச் செல்லும் பண்ணையாளர்கள் தாக்கப்படுல், கைது செய்யப்படுதல் போன்ற சந்தர்ப்பங்களும் நடைபெற்று வந்தன. இதனால் நூற்றுக்கணக்கான கால்நடைகள் மரணமாகியிருக்கின்றன. இன்னல்களை அனுபவித்தபடியே தங்களது கால்நடைகளைப் பாதுகாக்க வேண்டிய கட்டாயத்திலிருக்கின்ற பண்ணையாளர்களுக்கு ஏற்கனவே வாய் மொழி மூலமாக வழங்கப்பட்ட தீர்வுகள் எதுவும் பயனில்லாதவைகளாகவே இருந்துள்ளன. மயிலத்தமடு - மாதவணை பிரதேசத்தில் மேய்ச்சல் தரைக்கான பகுதி அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. ஏறாவூர் பற்று பிரதேச செயலகப்பிரிவின் ஈரணைக்குளம் கிராம சேவையாளர்பிரிவில் 6383 ஹெக்டெயரும், கோரளைப்பற்று தெற்கு பிரதேச செயலாளர் பிரிவின் குடும்பிமலை கிராம சேவையாளர் பிரிவில் 9,969 ஹெக்டெயரும் முன்மொழியப்பட்டுள்ளன. இருப்பினும், அது வர்த்தமானி அறிவித்தலாக வெளியிடப்படவில்லை. அது நிறைவேறாமையினாலேயே இப்பிரச்சினை நீண்டகாலப் பிரச்சினையாக மாறியிருக்கிறது.கல்லோயா குடியேற்றம், அல்லை- கந்தளாய் குடியேற்றம் என பல குடியேற்றங்களைக் கிழக்கில் ஏற்படுத்தி கிழக்கில் தமிழர்களுடைய இனப் பரம்பலைக் குறைத்தது மாத்திரமல்லாமல், மட்டக்களப்பு மாவட்டம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு அம்பாறை மாவட்டம் தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்டது. தமிழர்களுடைய இனப்பரம்பல் கிழக்கின் திருகோணமலை, அம்பாறை மாவட்டங்களில் குறைந்து கொண்டே வருகிறது. மட்டக்களப்பு மாவட்டம் மாத்திரமே பெரும்பான்மையாக தமிழர்கள், தமிழ் பேசும் மக்கள் வாழுகின்ற மாவட்டமாக இருந்து வருகிறது. அந்தவகையில், இனப்பரம்பலை மாற்றுகின்ற செயற்பாடாகவே மட்டக்களப்பு மாவட்டத்தின் மேய்ச்சல்தரைப் பிரதேசத்தில் முன்னெடுக்கப்படும் குடியேற்ற நடவடிக்கைகள் பார்க்கப்படவேண்டும் என்ற அச்சமும் வெளியிடப்பட்டது. மேய்ச்சல் தரை பிரச்சினையில் எதிர்பார்த்த அளவு முன்னேற்றம் இல்லாவிட்டாலும் ஓரளவுக்கு முன்னேற்றம் கண்டுள்ளதாகப் பண்ணையாளர்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர். சிவில் தரப்பினர் பண்ணையாளர்களுடைய பிரச்சினைகளை சர்வதேச மட்டம் வரையிலும் வெளிப்படுத்தும் செயற்பாடுகளில் ஈடுபட்டுவருகின்றனர். அதற்கு மேய்ச்சல் தரைப் போராட்டக்காரர்களிற்கு வெற்றி கிடைக்கவேண்டும் என்பதே நோக்கமாக இருக்கிறது. இருந்தாலும் மகாவலி அபிவிருத்தி திட்டத்திற்குட்பட்ட பிரதேசமாக இந்தப்பிரதேசம் உள்ளதனால் மகாவலியினுடைய நடவடிக்கைகளுக்குட்பட்டதாகவே இருக்க வேண்டிய நிலைமையொன்றும் உள்ளது. மகாவலி பி வலயமானது அம்பாறை, பொலன்னறுவை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களை உள்ளடக்கியதாக இருக்கிறது. பெரும்பாலான நிலப்பகுதி மட்டக்களப்பு மாவட்டத்திற்குரியதாக இருக்கிறது. மகாவலியினுடைய அபிவிருத்தி திட்டங்கள் பெரும்பான்மை மக்களைப் பிரதானமாகக் கொண்டு மேற்கொள்ளப்படுவது என்றவகையில், மட்டக்களப்பு மாவட்டத்தில் பெரும்பான்மை மக்களை அதிகளவில் உள்வாங்கி மேற்கொள்ளப்படும் நிலை ஏற்பட்டால் பாதிக்கப்படவுள்ளது கால்நடைப் பண்ணையாளர்களே. இந்த இடத்தில் வாழ்வாதாரத்திற்கு அடுத்தபடியாக, நில உரிமை மீறல், கால்நடைகளின் பாதுகாப்பு, பாரம்பரிய கால்நடை இனங்களின் அழிவு, நல்லிணக்கம் பாதிக்கப்படல், எதிர்கால சந்ததிகளுக்கான வாழ்வாதாரம் கேள்விக்குறியாதல், இயற்கை வள ஆக்கிரமிப்பு, பாரம்பரிய புல்லினங்களுக்குப் பாதிப்பு, இனப் பரம்பல் மாற்றம், அரசியல் பிரதிநிதித்துவப் பாதிப்பு என பல்வேறு விடயங்கள் கவனத்திற் கொள்ளப்பட வேண்டும். வடக்கில் மணலாறு பகுதி மகாவலி எல் வலயமாக உருவாகி வெலிஓயாவாக மாற்றம்பெற்றது. அதே ஒழுங்கில் கிழக்கில் கொண்டுவரப்பட்டுள்ள மகாவலி பி வலயம் அமையலாம் என்ற அச்சம் பெரும்பாலானவர்களிடம் உள்ளது. இதனால் ஏற்படவுள்ள பாதிப்பானது அனைவரையும் உள்வாங்கும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. இயற்கையாக அமைந்துள்ள கால்நடைகள் வளர்க்கப்பட்டு வருகின்ற இப்பிரதேசம், மகாவலி பிரதேசத்துக்குள் உள்வாங்கப்பட்டிருக்கிறது. இந்நிலைமை கால்நடை பண்ணையாளர்களின் நோக்கத்தினை சிதைக்கும் என்ற கவலை இருந்தாலும், அரசாங்கத்தின் திட்டம் என்றவகையில், அனைவரும் வாய்மூடிய பொம்மைகளாக இருக்கவேண்டிய சூழலே உருவாகியிருக்கிறது. முன்னைய ஆட்சிக்காலத்தில் தொடங்கப்பட்ட கால்நடைப் பண்ணையாளர்களின் மேய்ச்சல் தரைக்கான போராட்டம், தற்போதைய மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஆட்சியிலும் தொடர்ந்து கொண்டிருப்பது அரசுக்கு அபகீர்த்தியான ஒன்றேயாகும். அரசாங்கம் இதனைக் கண்டும் காணாத வகையிலிருந்து வருகின்றமையானது, இவ்விடத்தில் கவனிக்கப்படவேண்டும். தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தமிழ் மக்களது விடயங்களில் பாராமுகமாக இருப்பது போன்ற நடத்தையைக் கைக் கொண்டிருப்பதை அவதானிக்க முடிகிறது. அதே போலவே கிழக்கின் மேய்ச்சல் தரைப் பிரச்சினையையும் கையாள்வது போலவே தெரிகிறது. அபிவிருத்தி என்ற போர்வையில் மேற்கொள்ளப்படுகின்ற செயற்பாடுகள் அரசியல் அதிகாரங்களுக்கு அப்பாற்பட்டதல்ல. என்றாலும் பிரதேசத்தின் அரசியல் தரப்பினர் கொடுக்கின்ற அழுத்தங்களின் போதாமை தற்போது வெளிப்படத் தொடங்கியிருக்கிறது. அல்லது தேவையற்றதான ஒரு போராட்டம் நடத்தப்படுகிறதோ என்ற சந்தேகத்தையும் தோற்றுவிக்கிறது. எது எவ்வாறானாலும், திட்டமிட்ட வகையில் மேற்கொள்ளப்படும் மகாவலியின் அபிவிருத்தித் திட்டம் மேய்ச்சல் தரையை வர்த்தமானிப்படுத்தக் கோரும் பண்ணையாளர்களுக்கும் கால்நடைகளுக்கும் பாதகத்தை ஏற்படுத்தாதிருந்தால் சரி. https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/இரண்டு-வருடம்-கடந்த-போராட்டம்/91-365826

இலங்கையில் இளைஞர்களிடையே தீவிரமடையும் எச்.ஜ.வி

5 days 7 hours ago
இலங்கையில் இளைஞர்களிடையே தீவிரமடையும் எச்.ஜ.வி இலங்கையில் 15 – 29 வயதுக்குட்பட்டவர்களிடையே எச்.ஐ.வி தொற்று அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களிலேயே அதிக எண்ணிக்கையிலான எயிட்ஸ் நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உலகில் பெரும் பேரழிவை ஏற்படுத்தும் பாலியல் வைரஸ்களில் எச்.ஐ.வியும் ஒன்றாகும். இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை நேரடியாகத் தாக்கி உடலை பலவீனப்படுத்துகிறது. மேலும் மிகவும் ஆபத்தான சூழ்நிலை என்னவென்றால், இருமல் அல்லது சளி போன்ற ஒரு சிறிய நோய் ஏற்பட்டால் கூட அது மரணத்திற்கு வழிவகுக்கும். எச்.ஐ.வி தொற்றுகள் ஏற்படக்கூடிய மூன்று முக்கிய வழிகளை சுகாதார அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர். 1. எச்.ஐ.வி தொற்றுக்குள்ளான ஒருவருடன் உடலுறவு கொள்வது எச்.ஐ.வி நோயாளியை முத்தமிடுவதால் நோய் பரவாது. எனினும் பாலியல் ரீதியான உடலுறவினால் பரவுகின்றது. குறிப்பாக ஆசனவழி உடலுறவுதான் எச்.ஐ.வி வருவதற்கான முக்கிய காரணமாக கருதப்படுகின்றது. இதுபோன்ற பாதுகாப்பற்ற உடலுறவு மூலம் பரவக்கூடிய எச்.ஐ.வி வைரஸ், உடல் முழுவதும் சுமார் 72 மணிநேரத்திற்குள் பரவி விடும். 2. ஊசிகளின் கட்டுபாடற்ற பயன்பாடு ஊசி மூலம் போதைப்பொருள் பாவணை மூலமும் வெகுவாக பரவுவதுடன் ஒரே ஊசியை பலர் பயன்படுத்துவதற்கு இதற்கு காரணமாக அமைந்துள்ளதாக சுகாதார அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர். 3.எயிட்ஸ் நோயாளியாக இருக்கும் கர்ப்பிணித்தாய்மாரிடத்தில் இருந்து அவரது பிறக்கவுள்ள குழந்தைக்கும் எச்.ஐ.வி வைரஸ் பரவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2021 ஆம் ஆண்டில் 411 நோயாளர்களும், 2022 இல் 607 நோயாளர்களும், 2023 இல் 697 நோயாளர்களும், 2024 இல் 824 நோயாளர்களும் கண்டறியப்பட்டுள்ளனர். அதிகளவில் ஆண்களே எயிட்ஸ் நோயாளர்களாக கண்டறியப்பட்டுள்ளனர். இது 7:1 விகிதமாகும். அதன்படி, 2025 ஆம் ஆண்டின் ஜனவரி முதல் மார்ச் வரை அடையாளம் காணப்பட்ட புதிய எயிட்ஸ் நோயாளர்கள் உட்பட, நாட்டில் இதுவரை 6,740 நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தரவுகள் தெரிவிக்கின்றன. 2024 ஆம் ஆண்டில், 824 புதிய எச்.ஐ.வி தொற்றுகள் அடையாளம் காணப்பட்டன, அவற்றில் அதிகபட்ச எண்ணிக்கை கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களிலிருந்து பதிவாகியுள்ளது. எயிட்ஸ் நோயினால் 47 பேர் உயிரிழந்துள்ளனர். இலங்கை குறைந்த எச்.ஐ.வி பாதிப்பு உள்ள நாடாகக் கருதப்பட்டாலும், கடந்த ஆண்டு பதிவான புதிய தொற்றுகளின் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு கவலையளிப்பதாக சுகாதார அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர். சுகாதார அமைச்சின் கீழ் செயல்படும் தேசிய பாலியல் நோய் மற்றும் எயிட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டம், இலவச மற்றும் ரகசிய சோதனை மற்றும் சிகிச்சைகளை வழங்குகிறது. இலங்கை முழுவதும் உள்ள 41 பாலியல் நோய் சிகிச்சை மையங்களில் எச்.ஐ.வி தொற்றுக்குள்ளானவர்களுக்கு இலவச சிகிச்சையை வழங்குகிறது. எயிட்ஸ் தொடர்பான சிகிச்சைகளை பெற்றுக்கொள்ள தேசிய பாலியல் நோய் மற்றும் எயிட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் தொலைபேசி (+94 703 733 933) இலக்கத்திற்கு அழைப்பினை ஏற்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. https://www.samakalam.com/இலங்கையில்-இளைஞர்களிடைய/

நாகொடையில் பேனா வடிவிலான துப்பாக்கி மீட்பு!

5 days 7 hours ago
நாகொடையில் பேனா வடிவிலான துப்பாக்கி மீட்பு! காலி, நாகொடை பகுதியில் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட பேனா வடிவிலான துப்பாக்கி மற்றும் வெடிமருந்துகளை வைத்திருந்ததற்காக 23 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நாகொடை பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலைத் தொடர்ந்து நேற்று (06) மாலை இந்த கைது இடம்பெற்றுள்ளது. கைப்பற்றப்பட்ட துப்பாக்கி, பேனா வடிவத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது ஒரு தோட்டாவை மட்டுமே சுடும் திறன் கொண்டது. கைது செய்யப்பட்ட நேரத்தில் இரண்டு சுடப்படதாத தோட்டாக்கள், பயன்படுத்தப்படாத தோட்டங்கள் என்பவற்றை பொலிஸார் மீட்டனர். மாபலகமவைச் சேர்ந்த சந்தேக நபர், விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் நாகொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். https://athavannews.com/2025/1449702

இலங்கை தொடர்பான ஐ.நா. தீர்மானத்தை அரசாங்கம் நிராகரித்தது

5 days 7 hours ago
இலங்கை தொடர்பான ஐ.நா. தீர்மானத்தை அரசாங்கம் நிராகரித்தது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான தீர்மானத்தை அரசாங்கம் நிராகரித்துள்ளது. முன்னதாக குறித்த தீர்மானத்தை ஏற்றுக் கொள்ளப்போவதில்லை என ஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி, அமர்வில் அறிவித்துள்ளார். எனினும், பிரித்தானியா உள்ளிட்ட ஏனைய நாடுகளின் ஆதரவுடன் சமர்ப்பிக்கப்பட்ட குறித்த பிரேரணையை வாக்கெடுப்புக்கு விடாது ஏற்றுக் கொள்வதாக, அவைத் தலைவர் தெரிவித்தார். அதன்படி, கனடா, மலாவி, மாண்டினீக்ரோ, வடக்கு மாசிடோனியா மற்றும் ஐக்கிய இராச்சியம் ஆகியவற்றைக் கொண்ட குழுவால் கடந்த செப்டம்பர் 10 ஆம் திகதி இலங்கை தொடர்பான பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டது. இந்த நிலையில், அல்பேனியா, ஆஸ்திரியா, கோஸ்டாரிகா, பல ஐரோப்பிய நாடுகள், நியூசிலாந்து உள்ளடக்கிய பரந்த கூட்டணியால் கடந்த 01 ஆம் திகதி திருத்தப்பட்ட வடிவத்தில் குறித்த பிரேரணை மீள சமர்ப்பிக்கப்பட்டது. அரசியல் அதிகாரத்தைப் பகிர்ந்தளிக்கவும், குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மாகாண சபைத் தேர்தல்களை நடத்தவும், இந்த அமைப்புகள் திறம்படச் செயல்படுவதை உறுதி செய்யவும், குறித்த பிரேரணையினூடாக இலங்கை அரசு கோரப்பட்டுள்ளது. மனித உரிமை மீறல்கள் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்ட மீறல்கள் குறித்து பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களின் பிரதிநிதிகளின் முழு பங்கேற்புடன் முழுமையான மற்றும் பாரபட்சமற்ற விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்பது இந்தத் தீர்மானத்தின் மிக முக்கிய கோரிக்கையாகும். பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை இரத்து செய்ய வேண்டும் என்றும், தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்களை விகிதாசாரமற்ற முறையில் பாதிக்கும் சட்டத்தின் கீழ் தொடர்ந்து தடுப்புக்காவல்கள் நடத்தப்படுவதை எடுத்துக்காட்டுவதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. அத்துடன், கருத்துச் சுதந்திரத்தைப் பாதுகாக்க நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டத்தில் திருத்தங்களைக் கொண்டுவர வேண்டும் என்றும் அந்த பிரேரணையில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இலங்கையின் உறுதிமொழிகளை ஐக்கிய இராச்சியம் பாராட்டியதுடன், வாக்குறுதிகளை உறுதியான நடவடிக்கைகளாக மாற்றவும் வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், மனித புதைகுழிகளைத் தோண்டி எடுப்பது சுயாதீனமான வழக்குத் தொடுப்பு வழிமுறைகள் மற்றும் மனித உரிமை பாதுகாவலர்களைக் கண்காணிப்பதை முடிவுக்குக் கொண்டுவருதல் ஆகியவற்றின் அவசியத்தைக் குறித்த பிரேரணை வலியுறுத்தியுள்ளது. இந்த நிலையில், இலங்கையின் மனித உரிமைகள் முன்னேற்றத்தையும், பொருளாதார மீட்சியையும் சீனப் பிரதிநிதி பாராட்டினார். இலங்கையின் இறையாண்மை மற்றும் அரசியல் ஸ்திரத்தன்மைக்கான ஆதரவை மீண்டும் அவர் உறுதிப்படுத்தியுள்ளார். எனினும், கொரியா குடியரசு மற்றும் ஜப்பான் அரசாங்கத்தின் சீர்திருத்த முயற்சிகளை வரவேற்று, ஒருமித்த கருத்துடன் தீர்மானம் நிறைவேற்றப்படுவதை ஆதரித்தன. இந்த நிலையில், எத்தியோப்பியாவும், கியூபாவும் இலங்கைக்கு எதிரான வெளிப்புற ஆணையை எதிர்த்தன. இலங்கையின் தேசிய இறையாண்மையை மதிக்க வேண்டும் என அந்த நாடுகள் கூறியுள்ளதுடன், அதில் தலையிட வேண்டாம் என வலியுறுத்தின. குறித்த தீர்மானமானது, உண்மையான உள்நாட்டு நல்லிணக்க முயற்சிகளுக்கு எதிர்மறையானது என அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த கால மீறல்களை நிவர்த்தி செய்வதற்கான தேசிய நிறுவனங்களுக்கான தனது உறுதிப்பாட்டை இலங்கை வலியுறுத்தியதோடு, தீர்மானத்தை நிராகரிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார். https://www.samakalam.com/இலங்கை-தொடர்பான-தீர்மானத/

யாழில் காணி உறுதிப்பத்திரம் தொடர்பான முறைப்பாட்டின் கீழ் பெண் சட்டத்தரணி கைது

5 days 7 hours ago
காணி மோசடிகள் – முன் பிணை கோரவுள்ள சட்டத்தரணிகள்! adminOctober 7, 2025 யாழ்ப்பாணத்தில் கடந்த காலங்களில் இடம்பெற்றதாகக் கூறப்படும் உறுதி மோசடிகள் தொடர்பில், சட்டத்தரணிகள் சிலரைக் கைது செய்வதற்குக் கடந்த சில நாள்களாகப் காவற்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர் அந்நிலையில் மோசடிகளில் ஈடுபட்ட சந்தேகத்தில் உள்ள சில சட்டத்தரணிகள் தற்போது தலைமறைவாகியுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது. அதேவேளை குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளான சில சட்டத்தரணிகள் நாளைய தினம் புதன்கிழமை நீதிமன்றங்களில், தமது கைதுகளை தடுக்கும் முகமாக முன் பிணை கோரவுள்ளதாக அறிய முடிகிறது. காணி உறுதி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் நேற்றைய தினம் திங்கட்கிழமை சட்டத்தரணி ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில் , நேற்றைய தினமே அவர் பிணையில் செல்ல மல்லாகம் நீதவான் நீதிமன்று அனுமதித்துள்ளது. இதேவேளை காணி உறுதி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் சட்டத்தரணி ஒருவரை கைது செய்வதற்கு காவற்துறையினர் நடவடிக்கை எடுத்த வேளை குறித்த சட்டத்தரணி அவரது வீட்டில் இல்லாத நிலையில், அவரது வீட்டுக்குள் காவற்துறையினர் அத்துமீறி நுழைந்து தேடுதல் நடத்தியதாகவும் , தேடுதலுக்கான நீதிமன்ற அனுமதியின்றி , காவற்துறையினர் அடாத்தாக நடந்து கொண்டு தேடுதல் நடாத்தினார்கள் என குற்றம் சாட்டி இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை வடமாகாண நீதிமன்றங்களில் வழக்குகளுக்கு தோன்றாது சட்டத்தரணிகள் பணிபுறக்கணிப்பில் ஈடுபட்டதுடன் , நீதிமன்றங்களின் முன் கவனயீர்ப்பு போராட்டங்களிலும் ஈடுபட்டனர். https://globaltamilnews.net/2025/221258/

யாழில் புதுவித மோசடி – பாதிக்கப்பட்டவர்கள் காவல் நிலையம் செல்ல தயக்கம்!

5 days 7 hours ago
யாழில் புதுவித மோசடி – பாதிக்கப்பட்டவர்கள் காவல் நிலையம் செல்ல தயக்கம்! adminOctober 7, 2025 யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல தனியார் விடுதிகளின் பெயர்களை பாவித்து கும்பல் ஒன்று பாரிய பண மோசடிகளில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. சமூக வலைத்தளங்களான வாட்ஸ் அப், வைபர் பேஸ்புக் மற்றும் இணையத்தளங்கள் ஊடாக யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல தனியார் விடுதிகளில் பெண்களுடன் உல்லாசமாக இருக்க முடியும் எனவும் , அதற்காக 10 ஆயிரம் ரூபாய் முதல் 20 ஆயிரம் ரூபாய் வரையில் செலவாகும் என சில பெண்களின் புகைப்படங்களில், அவர்களின் முகங்கள் மறைக்கப்பட்ட புகைப்படங்களை விளம்பரமாக பிரசுரிக்கின்றனர். அவற்றை நம்பி சில அந்த விளம்பரங்களில் உள்ள தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொண்டு விபரங்களை கேட்கும் போது, குறித்த தனியார் விடுதியில் பெண் உள்ளதாக கூறி பணத்தினை வைப்பிலிடுமாறு கூறி பணத்தினை பெற்றுக்கொள்கின்றனர். பணத்தினை வழங்கியவர்கள் அந்த விடுதிகளில் சென்ற பின்னரே தாம் ஏமாற்றப்பட்ட விடயம் அறிந்து அந்த தொலைபேசி இலக்கம் செயலிழந்து காணப்படுகிறது. இது தொடர்பில் பாதிக்கப்பட்டவர்கள் காவல் நிலையங்களில் முறைப்பாடு செய்ய தயங்குவதால் , தொடர்ந்து குறித்த கும்பல் பண மோசடிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அதேவேளை குறித்த கும்பல்கள் சமூக வலைத்தளங்களில் யாழில் உள்ள பிரபல தனியார் தங்குமிட விடுதிகளின் பெயர்களை பாவித்து மோசடிகளில் ஈடுபடுவதனால் , குறித்த தங்குமிடங்களில் நற்பெயர்களுக்கு களங்கம் ஏற்படுவதாக அதன் உரிமையாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர். எனவே காவற்துறையினர் இவ்வாறான சமூக வலைத்தளங்கள் தொடர்பில் கவனம் செலுத்தி குறித்த கும்பல்களை சேர்ந்தவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் விடுதி உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். https://globaltamilnews.net/2025/221253/

யாழில் காணி உறுதிப்பத்திரம் தொடர்பான முறைப்பாட்டின் கீழ் பெண் சட்டத்தரணி கைது

5 days 7 hours ago
வட மாகாண சட்டத்தரணிகள் இன்று ஒருநாள் பணிப்புறக்கணிப்பில்! உரிய வகையில் தேடுதல் ஆணை இல்லாது பொலிஸாரால் சோதனை முன்னெடுக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து வட மாகாண சட்டத்தரணிகள் இன்று (7) ஒருநாள் பணிப்புறக்கணிப்பை முன்னெடுத்துள்ளனர். இந்நிலையில் யாழ்ப்பாண மாவட்டத்தின் அனைத்து நீதிமன்றங்கள் மற்றும் கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா உள்ளிட்ட மாவட்டங்களை பிரதிநிதித்துவம் செய்யும் சட்டத்தரணிகள் இணைந்து போராட்டம் ஒன்றையும் முன்னெடுத்துள்ளனர். இந்தப் போராட்டமானது யாழ்ப்பணத்தில் உள்ள நீதிமன்ற வளாகம் முன்னிலையில் இன்று காலை (07) ஆரம்பமானது. இந்த பணிப்புறக்கணிப்பு காரணமாக நீதிமன்ற நடவடிக்கைகள் ஸ்தம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. யாழ்ப்பாணத்தில் காணி உறுதி மோசடிகளில் ஈடுபட்டார்கள் என சட்டத்தரணிகள் சிலருக்கு எதிராக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வரும் நிலையில் நேற்று முன்தினம் காணி மோசடி குற்றச்சாட்டுக்கு உள்ளான சட்டத்தரணி ஒருவரை கைது செய்யும் நோக்குடன் அவரது வீட்டுக்கு சென்ற பொலிஸார் வீட்டினுள் சென்று தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்தனர். வீட்டினுள் சென்று தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுக்க எவ்வித நீதிமன்ற அனுமதியும் பெறாது பொலிஸார் வீட்டினுள் அத்துமீறி நுழைந்து தேடுதல் மேற்கொண்டதாகவும் , பொலிசாரின் நடவடிக்கையை கண்டித்து வடமாகாண சட்டத்தரணிகள் இன்றைய தினம் நீதிமன்றங்களில் வழக்குகளுக்கு தோன்றாது பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டதுடன் , நீதிமன்றங்களுக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டங்களிலும் ஈடுபட்டனர். இதேவேளை , காணி மோசடி குற்றச்சாட்டுகளுக்கு முகம் கொடுத்துள்ள சட்டத்தரணிகள் தம்மை பொலிஸார் கைது செய்வதனை தடுக்கும் முகமாக நாளைய தினம் (08) நீதிமன்றங்களில் முன் பிணை கோரவுள்ளதாகவும் அறியமுடிகிறது. https://athavannews.com/2025/1449742

யாழில். சில காவல் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கு பதவி இறக்கத்துடன் இடமாற்றம்!

5 days 7 hours ago
யாழில். சில காவல் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கு பதவி இறக்கத்துடன் இடமாற்றம்! adminOctober 7, 2025 யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களின் பொறுப்பதிகாரிகளாக கடமையாற்றி வந்த சிலருக்கு, பதவி இறக்கத்துடன் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம், ஊர்காவற்றுறை மற்றும் நெடுந்தீவு ஆகிய காவல் நிலையங்களைச் சேர்ந்த பொறுப்பதிகாரிகளுக்கே இவ்வாறு பதவி இறக்கத்துடன் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. குறித்த பொறுப்பதிகாரிகள் தொடர்பில் காவற்துறை தலைமையகத்துக்கு வழங்கப்பட்ட முறைப்பாடுகளுக்கு அமையவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. https://globaltamilnews.net/2025/221251/

விஜயின் அரசியல் எதிர்காலத்தை கரூர் அனர்த்தம் தீர்மானிக்குமா?

5 days 7 hours ago
விஜய்யை வைத்து ஸ்டாலின் நிகழ்த்தும் அரசியல் விளையாட்டு! -சாவித்திரி கண்ணன் கொஞ்சம் ரிலாக்ஸாக இருங்களேன்..! விஜய்க்கு ஏன் இவ்வளவு ‘அட்டென்சன்’ தர்றீங்க..! மரம் சும்மா இருந்தாலும் காற்று விடுவதில்லைம்பாங்க. அதைப் போல விஜய் சும்மா இருந்தாலும், மீது நாளும் பொழுதும் ஆளாளுக்கு பாய்ந்து, பாய்ந்து கடுமையான விமர்சனங்களை வைத்து தாக்கித் தள்ளுகிறார்கள்…! நடந்துவிட்டது ஒரு அசம்பாவிதம்! அதில் இருந்து தற்போது மீண்டாரா விஜய் …? என்பதே தெரியவில்லை. அநியாயத்துக்கு அரண்டு கிடக்கிறார். மூன்றாவது நாள் ஒரு வீடியோ போட்டதோட சரி. அதுக்கு பிறகு பேச்சு, மூச்சே இல்லை. ஆனால், நாள் தோறும் என்று சொல்வதைவிட நாளும், பொழுதும் விஜய் தான் இங்கு பேசுபடு பொருளாக உள்ளார். இதற்கு உபயம் அதிகாரத்தில் இருப்பவர்களே..! அவங்க ஐ.டி விங்க் ஒரு பக்கம் ரெக்கை கட்டிப் பறக்குது. முக்கிய மெயின்ஸ்டீர்ம் மீடியாக்கள் கூட விஜய்யை வறுத்தெடுக்கின்றன. இது பத்தாது என்று எழுத்தாளர்கள், ஓய்வு பெற்ற நீதிபதிகள், கலைஞர்கள், பத்திரிக்கையாளர்கள், அறுவுஜீவிகள் என அனுமார் வாள் நீளத்தை விட அதிகமான அளவில் கூட்டறிக்கை வெளியிட்டு விஜய்யை வெளுத்து வாங்குகிறார்கள்! போதாக்குறைக்கு போலீஸ்துறை அதிகாரிகள் வருவாய்த் துறை அதிகாரிகள் வேறு விலாவாரியாக பேட்டி தந்து விஜய் மீது தான் தவறுள்ளது என ‘எஸ்டாபிளீஸ்மெண்ட்’ செய்கிறார்கள். திமுக கூட்டணிக் கட்சிகளோ.., தங்கள் விசுவாசத்தை வெளிப்படுத்தி உறவை பலப்படுத்திக் கொள்ளும் வாய்ப்பாக விஜய்யை விளாசித் தள்ளுகிறார்கள். இதுல திருமாவளவன் தான் ஸ்டாலினே வியக்கிறா மாதிரி பேசி அதிகமாக ஸ்கோர் பண்ணிட்டாருன்னு சொல்லலாம். ஒரு வகையில் ஸ்டாலினின் மனசாட்சியாக அவர் தன் விசுவாசத்தை காட்ட நினைத்தாரோ என்னவோ..? இதுல நான் முற்றிலும் எதிபாக்காதவர் ஐயா வீரமணி. அவர் வயதுக்கும், அனுபவத்திற்கும் அவர் விஜய்யைப் பற்றியெல்லாம் பேசிக் கொண்டிருக்க வேண்டியதில்லை. ஆனால், ஏதோ ஒரு பெரிய எதிரியிடம் மோதுவதைப் போல உணர்ச்சிவசப்பட்டு பேசறார். பெரியாரைப் பற்றி சீமான் பேசிய போது கூட இவ்வளவு உணர்ச்சிவசப்பட்டிருப்பாரா? தெரியவில்லை. எல்லாவற்றுக்கும் சிகரம் வைத்தது போல நீதிபதியே நிதானமின்றி இவ்வளவு நீட்டி முழக்கி விஜய்யை தாக்குகிறார். அவர் வகிக்கும் மிக உயர்ந்த பொறுப்புக்கு முன் விஜய் ஒன்னுமே இல்லை. வழக்கில் விசாரணையை நடத்தி சொல்லும் தீர்ப்பின் வாசகத்தில் நீதியை நிலை நாட்டி நீதிபதி பிரகாசிக்க வேண்டுமேயன்றி, வரம்பு மீறி கருத்துக்கள், அபிப்ராயங்களை அள்ளி வீசுவது அவரது மாண்புக்கு அழகல்ல. விஜய்க்கு இளைய தலைமுறையின் மிகப் பெரிய ஆதரவு வட்டம் இருந்தாலும், இது வரைக்குமான விஜய் அரசியலை நான் அனுமானித்த வகையில் அவர் பொது வாழ்க்கைக்கான மனிதராக உருவாகலை. ஒரு தேர்தலுக்கு பிறகு, விஜய் அரசியலில் தொடர்வாரா? என்பதும் என்னை போன்றோருக்கு சந்தேகமாகவே உள்ளது. அவர் ஒரு நிழல் ஹீரோ மட்டும் தானேயன்றி, நிஜ ஹீரோவல்ல. உண்மையில் நிஜ ஹீரோவாக இருந்திருந்தால், நடந்த அசம்பாவித சூழலை நன்கு கையாண்டு தன்னை நிரூபித்து இருப்பார். என்னை பொருத்த வரை விஜய் விசயத்தில் அவரை அலட்சியப்படுத்திவிட்டு கடந்து போவது ஆட்சியாளர்களுக்கு நல்லது. அவரை அதிகமாக பேசுபடு பொருளாக்கி, பெரிய ஆளாக சித்தரித்து வளர்த்து விடாதீர்கள்..! நீங்கள் செய்வதனைத்தும் அவருக்கு அனுதாப அலையை அதிகரிக்கச் செய்து கொண்டிருக்கிறது. நிகழ்வு நடந்த அன்று இரவே ஒரு நபர் ஆணையத்தை அறிவித்து நீதிபதி அருணா ஜெகதீசனும் களத்தில் இறங்கிவிட்டார். அடுத்ததாக ஐ.ஜி அஸ்ரா கர்க் தலைமையில் சிறப்பு விசாரணைக் குழுவையும் களத்தில் இறக்கி விட்டீர்கள். உங்களிடம் ஆட்சி அதிகாரம் உள்ளது. உண்மைகள் வெளி வரும் வரை ஏன் பொறுமை காட்ட முடியவில்லை…? கரூரில் நிகழ்வு நடந்த இடத்தில் ஆய்வு செய்யும் அஸ்ரா கர்க் ஐ.ஜி எதையும் பேசவும் துணிவின்றி மிக பலவீனமாக இருக்கும் ஒருவரை தொடர்ந்து கேரக்டர் அசாசினேஷன் செய்கிறீர்கள். அந்தக் கட்சியின் முதல் நிலைத் தலைவர்களே தலைமறைவாகி அஞ்சி அரசியல் நடத்தும் அவல நிலையில் தொடர்ந்து கடுமையான ஏவுகணைகள் வீசப்படுவதை எவ்வாறு புரிந்து கொள்வது..? தொடர்ந்து ஒரு தரப்பை விரட்டி, விரட்டி அடித்தால், அவர்களுக்கும் வேறு வழியின்றி துணிவு பெற்று கடும் எதிர் அரசியல் செய்யும் நிலைக்கு தயாராகிவிடுவார்கள்! இது வேலியில் போகிற ஓணானை எடுத்து சட்டைக்குள் போட்ட கதையாகிவிடும். இப்படித்தான் நான் அரசியலில் இருந்தே விலகுகிறேன் என்ற ஒரு கடிதத்தை ஜெயலலிதா எழுதி பத்திரிக்கைகளுக்கு தந்தார். அதை மோப்பம் பிடித்து நடராஜன் அந்த கடிதத்தை வழியிலேயே கொண்டு சென்றவரிடமிருந்து கைப்பற்றி ரகசியமாக ஒளித்து வைத்தார். இதை உளவுத் துறை மூலம் கேள்விப்பட்ட கலைஞர் காவல்துறையை அனுப்பி, அதை நடராஜன் வீட்டில் கைப்பற்றி ஊடகங்களில் வெளிப்படுத்தினார். விளைவு, எதிர்பாராத வகையில் மீண்டும் ஜெயலலிதாவை அரசியலுக்கு கொண்டு வந்துவிட்டது. அதைப் போலத் தான் விஜய் விவகாரத்தில் பதற்றப்பட்டு தன்னை சுற்றிலும் உள்ளவர்களை ‘அலர்ட்’ செய்து, ‘ஓவர் ரியாக்‌ஷன்’ செய்ய வைக்கிறார், ஸ்டாலின். தான் எதுவும் பேசாமல் கமுக்கமாக இருந்து கொண்டு, இப்படி சுற்றிலும் உள்ளவர்களை வைத்து விளையாடும் அரசியல் விளையாட்டைத் தான், தொடக்கம் முதல் முதலமைச்சர் ஸ்டாலின், தன் அதிகார ஹோதாவில் நிகழ்த்திக் கொண்டுள்ளார். நிகழ்வதை அதன் போக்கில் இயல்பாக அணுகாமல், வலிந்து விஜய்யை பலவீனப்படுத்தும் ‘நேரசனை செட்’ செய்து கொண்டே இருந்தால்.., அது இயற்கையின் விதிப்படி எதிர்வினையாற்றிவிடும். சாவித்திரி கண்ணன் https://aramonline.in/22967/stalin-politics-about-vijay/

இந்தியா – பாகிஸ்தான் மோதலை முடிவுக்கு கொண்டுவர முக்கிய பங்கு வகித்ததாக ட்ரம்ப் மீண்டும் தெரிவிப்பு!

5 days 7 hours ago
இந்தியா – பாகிஸ்தான் மோதலை முடிவுக்கு கொண்டுவர முக்கிய பங்கு வகித்ததாக ட்ரம்ப் மீண்டும் தெரிவிப்பு! வர்த்தக அச்சுறுத்தல்களைப் பயன்படுத்தி இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான இராணுவ மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதில் தான் முக்கிய பங்கு வகித்ததாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் திங்களன்று (06) மீண்டும் ஒருமுறை கூறியுள்ளார். இந்த ஆண்டு தொடக்கத்தில் மோதல்கள் அதிகரித்திருந்த நிலையில், அணு ஆயுதம் ஏந்திய இரண்டு நாடுகளையும் போர் நிறுத்தத்தை நோக்கித் தள்ளியது அவரது ஆக்ரோஷமான வரி உத்தி என்று கூறிய ட்ரம்ப், தான்தான் உலகளாவிய அமைதியை நிலைநாட்டுபவர் என்று கூறினார். அவரது வரி அச்சுறுத்தலைப் பாராட்டிய அவர், அது வொஷிங்டனுக்கு “நூற்றுக்கணக்கான பில்லியன் டொலர்களை” ஈட்டித் தருவதாகக் கூறினார். அமெரிக்கத் தலைவர் இதுபோன்ற கூற்றுக்களை கூறுவது இது முதல் முறை அல்ல. மே 10 ஆம் திகதி, வொஷிங்டனின் மத்தியஸ்தத்தில் “நீண்ட இரவு” பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு இந்தியாவும் பாகிஸ்தானும் “முழுமையான, உடனடி” போர்நிறுத்தத்திற்கு ஒப்புக் கொண்டதாக ட்ரம்ப் சமூக ஊடகங்களில் அறிவித்திருந்தார். அதன் பின்னர் ஆகஸ்ட் மாதம், இரண்டு ஆசிய அண்டை நாடுகளுக்கும் இடையே சமாதானத்தை ஏற்படுத்துவதற்காக வொஷிங்டன் வர்த்தகத்தை நிறுத்தி வைப்பதாகவும், அதிக வரிகளால் புது டெல்லிக்கு அழுத்தம் கொடுப்பபோம் என பிரதமர் மோடியை மிரட்டியதாக ட்ரம்ப் கூறினார். எனினும், பாகிஸ்தான் இராணுவத்தின் இராணுவ நடவடிக்கைகளுக்கான பணிப்பாளர் ஜெனரல், இந்த விவகாரம் தொடர்பாக நேரடிப் பேச்சுவார்த்தை நடத்த பிரதமர் மோடியை அணுகிய பின்னர், போர் நிறுத்தம் குறித்த புரிதல் எட்டப்பட்டதாக இந்தியா கூறி வருகிறது. பாகிஸ்தான் ஆரம்பத்தில் இந்தக் கூற்றை மறுத்தாலும், பின்னர் அதை ஏற்றுக்கொண்டது. https://athavannews.com/2025/1449725

காசா போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான இரகசிய பேச்சுவார்த்தை!

5 days 7 hours ago
காசா போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான இரகசிய பேச்சுவார்த்தை! காசா போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான அமெரிக்க அமைதி திட்டம் குறித்த இறுதி ஒப்பந்தத்தை அடைவதற்கான மறைமுக பேச்சுவார்த்தைகள் எகிப்தின் ஷார்ம் எல்-ஷேக் நகரில் ஆரம்பமாகியுள்ளன. இதன்மூலம் இஸ்ரேலிய பணயக் கைதிகளையும் பலஸ்தீன பணயக் கைதிகளையும் விடுவிப்பதற்கான ஒப்பந்தம் சாத்தியமாகும் என கூறப்படுகிறது. ஹமாஸ் அமைப்பு, அமைதி திட்டத்தின் சில முன்மொழிவுகளுக்கு ஒப்புதல் தெரிவித்துள்ளதாகவும் பல கோரிக்கைகளுக்கு இதுவரையில் பதில் அளிக்கவில்லை எனவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதேவேளை எதிர்வரும் சில நாட்களில் சிறைபட்டவர்களின் விடுதலை குறித்து அறிவிக்க முடியும் என நம்புவதாக இஸ்ரேல் பிரதமர் கடந்த சனிக்கிழமை தெரிவித்திருந்தார். மேலும், காஸா அமைதி திட்டத்தில் மாற்றங்கள் செய்ய வேண்டிய அவசியமில்லை எனவும் இந்த திட்டத்தை அனைவரும் ஏற்றுக்கொள்கிறார்கள் எனவும் திட்டம் அமுலுக்கு வந்தால் மத்திய கிழக்கில் முதல் முறையாக அமைதி நிலவும் எனவும் பணயக்கைதிகளை உடனடியாக மீட்போம் எனவும் அதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றது எனவும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2025/1449713

இங்கிலாந்தில் BYDஇன் விற்பனை 880 சதவீதம் அதிகரிப்பு!

5 days 7 hours ago
இங்கிலாந்தில் BYDஇன் விற்பனை 880 சதவீதம் அதிகரிப்பு! சீனாவின் கார் தயாரிப்பு நிறுவனமான BYD, செப்டம்பர் மாதத்தில் சீனாவிற்கு வெளியே அதன் மிகப்பெரிய சந்தையாக இங்கிலாந்து மாறியுள்ளது என்று கூறுகிறது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 2025 செப்டம்பர் மாதத்தில் அதன் விற்பனை அங்கு 880% அதிகரித்துள்ளது. கடந்த மாதம் இங்கிலாந்தில் 11,271 கார்களை விற்றதாக நிறுவனம் கூறுகிறது, அதன் Seal U sports utility (SUV) வாகனத்தின் பிளக்-இன் ஹைப்ரிட் பதிப்பு அந்த விற்பனையில் பெரும்பகுதியைக் கொண்டுள்ளது. கடந்த செப்டம்பர் மாதத்தில் மின்சார வாகனங்களின் (EV) விற்பனை சாதனை அளவை எட்டியதாக கார் தொழில்துறை அமைப்பான மோட்டார் உற்பத்தியாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் சங்கத்தின் (SMMT) புள்ளிவிவரங்கள் வெளிப்படுத்தியதைத் தொடர்ந்து இது வந்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்கா போன்ற பிற முக்கிய சந்தைகளைப் போலல்லாமல், சீன மின்சார வாகனங்களுக்கு நாடு வரிகளை விதிக்காததால், BYD போன்ற நிறுவனங்களுக்கு இங்கிலாந்தில் குறிப்பாக கவர்ச்சிகரமானதாக உள்ளது. மேற்கத்திய போட்டியாளர்களை விட மலிவான மொடல்களை வழங்கும் BYD, செப்டம்பரில் இங்கலிந்து சந்தையில் அதன் பங்கு 3.6% ஆக உயர்ந்துள்ளதாகக் கூறியது. வரும் மாதங்களில் நிறுவனம் மேலும் புதிய கலப்பின மற்றும் மின்சார கார்களை அறிமுகப்படுத்தும் என்று BYD இன் இங்கிலாந்துக்கான முகாமையாளரம் போனோ ஜி கூறினார். கடந்த ஆண்டு ஒக்டோபரில், ஐரோப்பிய ஒன்றியம் சீன மின்சார வாகனங்களின் இறக்குமதியை 45% வரை வரிகளுடன் பாதிக்கும் என்று அறிவித்தது. இந்த நடவடிக்கை ஐரோப்பிய கார் தயாரிப்பாளர்கள் நியாயமற்ற சீன-அரசு மானியங்கள் என்று ஐரோப்பிய ஒன்றியம் நம்புவதால் பாதிக்கப்படுவதிலிருந்து பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அவரது முன்னோடி ஜோ பைடன் இருவரும் ஆதரித்த உயர் கட்டணங்களால் BYD போன்ற சீன கார் தயாரிப்பாளர்கள் அமெரிக்காவிலிருந்து திறம்பட மூடப்பட்டுள்ளனர். https://athavannews.com/2025/1449698

40,000 மொபைல்கள் திருட்டு; சர்வதேச கொள்ளை கும்பல் இங்கிலாந்தில் கைது!

5 days 7 hours ago
40,000 மொபைல்கள் திருட்டு; சர்வதேச கொள்ளை கும்பல் இங்கிலாந்தில் கைது! கடந்த ஆண்டில் இங்கிலாந்தில் இருந்து சீனாவிற்கு 40,000 திருடப்பட்ட மொபைல் தொலைபேசிகளை கடத்தியதாக சந்தேகிக்கப்படும் ஒரு சர்வதேச கும்பலை பொலிஸார் கைது செய்துள்ளதாக கூறப்படுகிறது. தொலைபேசி திருட்டுகளுக்கு எதிரான இங்கிலாந்தின் மிகப்பெரிய நடவடிக்கையாக இது அமைந்ததாக மெட்ரோபொலிட்டன் காவல்துறை தெரிவித்துள்ளது. இதன்போது, 18 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதுடன், 2,000 க்கும் மேற்பட்ட திருடப்பட்ட மொபைல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. லண்டனில் திருடப்பட்ட அனைத்து மொபைல்களிலும் பாதி வரை ஏற்றுமதி செய்ததற்கு இந்தக் கும்பல் காரணமாக இருக்கலாம் என்று பொலிஸார் நம்புகின்றனர் – இங்கிலாந்தில் பெரும்பாலான மொபைல்கள் இங்குதான் திருடப்படுகின்றன. கடந்த வாரம், திருட்டு, திருடப்பட்ட பொருட்களைக் கையாளுதல் மற்றும் திருட்டு சதி செய்ததாக சந்தேகத்தின் பேரில் மேலும் 15 பேரை அதிகாரிகள் கைது செய்தனர். சந்தேக நபர்களில் ஒருவரைத் தவிர மற்ற அனைவரும் பெண்கள், ஒரு பல்கேரிய நாட்டவர் உட்படவரும் அதில் அடங்குவர். கடந்த நான்கு ஆண்டுகளில் லண்டனில் திருடப்பட்ட தொலைபேசிகளின் எண்ணிக்கை கிட்டத்தட்ட மூன்று மடங்காக அதிகரித்துள்ளது. 2020 இல் இது 28,609 ஆக இருந்தது, 2024 இல் 80,588 ஆக உயர்ந்துள்ளது. இங்கிலாந்தில் திருடப்பட்ட அனைத்து மொலைபல்களில் நான்கில் மூன்று சதவீதம் லண்டனில் திருடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. https://athavannews.com/2025/1449692

ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் இலங்கை மீதான புதிய பிரேரணை இன்று நிறைவேறும் !

5 days 9 hours ago
புதிய பிரேரணையை ஆதரித்தும், எதிர்த்தும் கருத்துக்களை வெளியிட்ட உறுப்புநாடுகள் 07 Oct, 2025 | 09:12 AM (நா.தனுஜா) இணையனுசரணை நாடுகளினால் சமர்ப்பிக்கப்பட்ட புதிய பிரேரணையின் ஊடாக இலங்கை தொடர்பில் பேரவையும், உயர்ஸ்தானிகர் அலுவலகமும் கொண்டிருக்கும் ஆணை காலநீடிப்பு செய்யப்படுவது பற்றி உறுப்புநாடுகள் சில வரவேற்பு வெளியிட்ட அதேவேளை, மேலும் சில நாடுகள் இலங்கையின் இறையாண்மைக்கு மதிப்பளித்து அந்நாட்டின் உள்ளக விவகாரங்களில் பேரவை தலையிடக்கூடாது என வலியுறுத்தின. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடர் கடந்த 8 ஆம் திகதி ஜெனிவாவில் ஆரம்பமானது. இக்கூட்டத்தொடரின்போது நிறைவேற்றும் நோக்கில் பிரிட்டன் தலைமையில் கனடா, மாலாவி, மொன்டெனீக்ரோ மற்றும் வட மெசிடோனியா உள்ளிட்ட இணையனுசரணை நாடுகளால் 'இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல்' எனும் தலைப்பில் தயாரிக்கப்பட்ட 60/L1/Rev.1 எனும் புதிய பிரேரணை, நேற்று திங்கட்கிழமை (6) பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டு, வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டது. இதன்போது புதிய பிரேரணை தொடர்பில் உறுப்புநாடுகளின் பிரதிநிதிகளால் வெளிப்படுத்தப்பட்ட கருத்துக்கள் வருமாறு: சீனா மனித உரிமைகள் நிலைவரத்தை மேம்படுத்துவதற்கு இலங்கையினால் முன்னெடுக்கப்படும் முயற்சிகளுக்கு அவசியமான ஒத்துழைப்பை வழங்கத் தயாராக இருக்கின்றோம். அதேவேளை சம்பந்தப்பட்ட நாட்டின் ஒப்புதலுக்கு விரோதமாக நிறைவேற்றப்படும் பிரேரணைகளை நாம் நிராகரிக்கின்றோம். இப்பிரேரணையின் பிரகாரம் இலங்கை தொடர்பான ஆணையை மேலும் காலநீடிப்பு செய்வதன் ஊடாக எந்தவொரு பெறுபேறும் கிட்டாது. எனவே இலங்கையின் முன்னுரிமைக்குரிய விடயங்களின் அடிப்படையில் மனித உரிமைகள் பேரவை செயற்படவேண்டும். கொரியா இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரத்தில் அடையப்பட்டுள்ள முன்னேற்றத்தை வரவேற்கின்றோம். இம்முயற்சிகளைத் தொடர்ந்து மேற்கொள்ளும் அதேவேளை, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகம் மற்றும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை என்பவற்றுடனான ஒத்துழைப்பைத் தொடர்ந்து பேணுமாறு வலியுறுத்துகின்றோம். ஜப்பான் இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரத்தை மேம்படுத்துவதற்கும், தேசிய நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கும் அரசாங்கத்தின் முயற்சிகள் இன்றியமையாதனவாகும். அதன்பிரகாரம் உயர்ஸ்தானிகரின் விஜயத்துக்கு அனுமதி அளித்தமையைப் பாராட்டுகின்றோம். எதியோப்பியா இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரத்தை மேம்படுத்தல் என்ற இலக்கினை அடைந்துகொள்வதற்கான முயற்சிகளின்போது அந்நாட்டின் இறையாண்மைக்கு மதிப்பளித்தல் மற்றும் அதன் உள்ளக விவகாரங்களில் தலையிடாதிருத்தல் ஆகிய கொள்கைகள் உரியவாறு பேணப்படவேண்டும். அதன்படி இலங்கையின் விருப்பத்துக்கு முரணான வகையில் வெளியகப்பொறிமுறை மேலும் காலநீடிப்பு செய்யப்படுவது குறித்து எமது கரிசனையை வெளிப்படுத்துகின்றோம். https://www.virakesari.lk/article/227077

நிறைவேறவுள்ள ஜெனீவா தீர்மானம் மிக மோசமானது; சுமந்திரனுக்கு இதில் பங்குண்டு; கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு

5 days 13 hours ago
சுத்துமாத்து சுமந்திரன் என்றுமே….. தமிழ் இனம் சார்ந்தோ, தமிழரசு கட்சி சார்ந்தோ…. கொள்கை அளவில், பாதிக்கப் பட்ட தமிழ் மக்களுக்காக நல்ல முடிவு எடுக்கும் மனிதன் கிடையாது. செய்வது முழுக்க “பின்கதவு சுத்துமாத்து” வேலைகள்தான். கடந்த காலங்களில் கூட…. ஜனாதிபதிகளாக இருந்த மகிந்த, கோத்தா, மைத்திரி, ரணில் போன்றவர்களை…. தமிழரசு கட்சிக்கும், சக பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் தெரியாமல், இரகசியமாக பின் கதவால் சென்று சந்தித்து விட்டு வந்து, அதனைப் பற்றி வெளியில் எதுவும் சொல்லாமல் “அமுசடக்கி திருடன்” போல் இருப்பது அவரின் வழமையான செயல். ஜனாதிபதிகளை பின்கதவால் சந்தித்த செய்திகள் பத்திரிகைகளில் கசிந்த பின்பு…. தான், இவர் அங்கு சென்று இரகசிய சந்திப்பு நடத்தியது வெளியே தெரிய வரும். அதே போன்று தான்… வெளி நாட்டு தூதுவர்களையும் கட்சி சார்பாக அல்லாமல், தனியாக சென்று சந்தித்து…. சந்திப்பில் என்ன விடயமாக பேசப் பட்டது என்பது குறித்தும் வெளிப்படைத் தன்மை இல்லாமல் “இருட்டுக்குள், திருட்டு பேரம்” பேசுவதை வழமையாக கொண்ட கீழ்த்தரமான நடத்தை கொண்ட தமிழ் மக்களுக்கு எள்ளளவும் பிரயோசனமற்ற ஆபத்தை விளைவிக்கும் கேடு கெட்ட மனிதன்தான் சுமந்திரன். சுமந்திரன்…. காலம் காலமாக செய்து வரும், இந்தத் திருட்டுத்தனமான இரகசிய சந்திப்புக்களால் தமிழ் மக்களுக்கு ஒரு நன்மையோ, அல்லது ஏதாவது ஒரு முன்னேற்றமோ கிடைத்ததா என்றால்… எதுவுமே இல்லை என்பதுதான் உண்மை நிலை. “தமிழ் மக்களை காட்டிக் கொடுத்து…. தங்களது வயிற்றை வளர்க்கும்” இந்தச் செயல் உடனடியாக, அடியோடு நிறுத்தப் பட வேண்டும். வர இருக்கும் ஜெனீவா தீர்மானம் சம்பந்தமாக…. சுமந்திரன், பிரித்தானியாவுக்கு இரகசியமாக சென்று தமிழ் மக்களை காட்டிக் கொடுக்கும் வேலைகளை செய்யக் கூடிய ஆள்தான் சுமந்திரன். சுமந்திரன், கடந்த காலங்களில் கூட… ஐக்கிய நாடுகள் சபையில், போர்க்குற்ற விசாரணகளுக்கு வெளிநாட்டு விசாரணை தேவை இல்லை, உள்ளக விசாரணையே போதும் என்றும் சொல்லி ஶ்ரீலங்கா சிங்களவருக்கு முட்டுக் கொடுத்து விட்டு வந்த, “தற்குறி”தான் சுமந்திரன். இப்படிப்பட்ட….. சுமந்திரன் போன்ற நாத்தம் பிடித்த அரசியல்வாதிகளால், தமிழ் மக்களின் எதிர்கால இருப்பு, ஆபத்தாக மாறி விட்டது என்பதே கசப்பான உண்மை.

என்.பி.பி அரசாங்கம் ஆயிரம் மடங்கு சிறந்தது – ராஜபக்சர்களை குற்றம் சாட்டுகின்றார் சரத் பொன்சேகா

5 days 13 hours ago
அரச இல்லத்திலிருந்து வெளியேறுவதற்கு முன், அங்கிருந்த அரச உடமைகளை திருடிச்சென்று விட்டாராம் மஹிந்தா. எங்களிடம் ஒன்றுமேயில்லை என அவரது இளைய புதல்வர் புலம்புகிறார். நாமலோ தன்னிடமுள்ளதெல்லாம் தனது மனைவியின் சொத்துக்கள் என்கிறார். மஹிந்தவோ தனக்கு வசிப்பதற்கு கொழும்பில் வீடு இல்லை என மக்களைப்பார்த்து அழுகிறார். இவர்கள் தங்களது பழைய வாழ்க்கை நிலையை மறக்கவில்லை என புரிகிறது. இவர்களுடைய பாதுகாப்பு அதிகாரி, பல மில்லியன் சொத்துக்களுக்கு அதிபதி. இவர் பிச்சைப்பாட்டுப்பாடுகிறார். நாட்டில் அனிஞாயங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்போது குமுறுகிறார்கள், ஏன்? இவர்களுக்கெல்லாம் எஜமானர் இவர்கள். இவர்கள் நாட்டை ஆண்டார்களா? சுடுகாடாக்கி சூறையாடினார்களா? தங்கள் ஏவல் நாய்கள், தங்களை காட்டிக்கொடுப்பதற்கு முன் சுட்டுக்கொல்கிறார்கள். இவர்களுக்கு முன் முந்திக்கொள்பவர்கள் இவர்களை காட்டிக்கொடுத்து தாம் தப்புவர். எங்கள் பெற்றோர் தம் பிள்ளைகளை இழந்து தனிமையில் தவிப்பதுபோல் இவர்களும் தவிப்பார்கள். அதுதான் தர்மத்தின் வேலை.

தைவான் மீதான PRC படையெடுப்பில் குறிப்பிடத்தக்க பங்கை வகிக்கக்கூடிய PLA வான்வழி பட்டாலியனை சித்தப்படுத்துவதற்கும் பயிற்சி அளிப்பதற்கும் ரஷ்ய திட்டங்களை கசிந்த ஆவணங்கள் விவரிக்கின்றன.

5 days 13 hours ago
பொலிடிக்கோ மற்றும் இந்த இணையத்தளத்தினை ஒரு பிரச்சார ஊடகம் ( டீப் ஸ்ரேர்) என கூறுகிறார்கள், அதன் உண்மை தன்மை தெரியாது, உண்மையில் அப்படி ஒன்று உள்ளதா என்பதில் கூட சந்தேகமாக உள்ளது. இந்த இணையத்தளத்தின் இராணுவ ஆய்வுகள் பல மோசமான தவறான ஆய்வுகளாக உக்கிரேன் இராணுவம் தொடர்பில் கடந்த காலத்தில் வெளியிட்டதாக கூறப்படுவதுண்டு, இந்த செய்தியின் உண்மை தன்மை தெரியாது, ஆனால் மேற்கு ஊடகங்களால் பெரிதும் கூறப்படும் ஊடகமாக இருப்பதால் இந்த செய்தியினை பதிந்தேன், அத்தோடு எதிர்காலத்தில் நேரெதிர்மாறான சம்பவம் நிகழ்ந்தால் வாசகர்கள் அதன் மூலம் சரியானவற்றை அடையாளம் காண உதவுமாக இருக்கும் என்பதால் இதன் இணைத்துள்ளேன்.
Checked
Sun, 10/12/2025 - 15:00
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed