புதிய பதிவுகள்2

புலிகளின் விருப்பங்களை நிறைவேற்றுவதற்குச் சதி; கதறுகின்றார் கம்மன்பில

2 months 3 weeks ago
ஆமா.... துல்லியமான தகவல் வழங்கி, எதை தடுத்தீர்கள்? தகவல் கிடைத்தும் தடுக்கத்தவறியவர்கள் குற்றவாளிகளே. அது கூடத்தெரியாத இதெல்லாம் வக்கீலாமெல்லே! இந்த இரத்தக்காட்டேரி ஏன்இப்போ பதறுது? சிவநேசதுரை சந்திரகாந்தன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைக்காக கைது செய்யப்படவில்லை, அவர் அதைப்பற்றி வாயே திறக்கவில்லை என்றார், இப்போ இப்படி புலம்புகிறார். ஒருநாள் வக்கீல் சட்டையை மாட்டி விட்டு சட்டம் தெரிந்ததுபோல் அலப்பறை பண்ணக்கூடாது. ஏதோ ஒரு குற்றத்திற்காக கைது செய்யப்படுவர், வேறு ஏதேனும் குற்றத்தில் ஈடுபட்டாரா என விசாரிக்கும்போது எல்லாமே வெளியில் வரும், சம்பந்தப்பட்டவரின் குற்ற வரலாற்றை பார்க்கும்போது அங்கு குறிப்பிடப்பட்டிருக்கும். ஏன் கிரிசாந்தி வழக்கில் தண்டனை அறிவிக்கப்பட்டவர் மற்ற கொலைகள் பற்றி தெரிவிக்கவில்லையா? இவர் எல்லாம் சிறைக்குள் போய் குற்றவாளியை சந்திப்பதற்காக வக்கீல் சட்டை மாட்டுபவர். ரொம்பதான் துடிக்கிறார், சிறைக்கு போவதற்காகவோ?

ஐரோப்பாவில் விமானி உரிமம் பெற்ற மன்னார் இளைஞன்!

2 months 3 weeks ago
என் செய்வேன்… நான் எடுத்தது சி டி பி பஸ். உண்மையில் விமானி ஆவது டாக்டர் எஞ்சினியர் ஆவதை விட மிக இலகு. சாதாரண தரத்தில் மிக சாதாரண சித்தி இருந்தால் போதும். செலவாகும் பணம் கூட ஒரு டாக்டரோடு ஒப்பிடும் போது குறைவுதான். இங்கே பிரிடிஷ் ஏர்வேஸ், ரோயல் ஏந்ர் போசில் பயிற்றுனராக சேர்ந்து காசு கட்டாமல் ஐந்து வருடத்தில் விமானியாகலாம், சம்பளமும் தருவார்கள். இந்தியாவில் படிப்பது இன்னும் இலகு. ஆனால் பெரும்பாலும் ஒரு விமானியாக பல மணி நேர பயிற்ற்சி பறப்பை பெற்ற ஒருவர் எடுக்கும் சம்பளத்தை விட இலண்டன் underground tube ஓட்டுனர், ஒரு வருட பயிற்சியின் பின் எடுக்கும் சம்பளம் அதிகம். ரிஸ்கும் குறைவு. வீட்டை விட்டு போய் வேலை செய்ய தேவையில்லை, ஒரு மூடிய பெட்டிக்குள் 18 மணத்தியாலம் வரை இருக்க தேவையும் இல்லை. இப்படி விமானி தொழிலில் பல பிரதிகூலங்கள் இருப்பதாலே மக்கள் அதை நாடுவதில்லை. இங்கே வழங்கல் அல்ல பிரச்சனை, விமானி தொழிலுக்கு எம் மக்களிடம் கேள்வி இல்லை என்பதே உண்மை. உண்மையில் இலண்டனில் bin collection செய்யும் வேலைக்கு ஓரளவு நல்ல சம்பளம். ஆனால் நம்மவர் எவரும் செய்வதில்லை. அதனால் தமிழர் ஒருவர் rubbish truck ஓட்டும் உரிமம் எடுத்தால் அதை ஆதவனில் செய்தியாகவா போடுவார்கள். இதெல்லாம் ஒரு செய்தியா என்பதே கேள்வி - தவிர இதில் பொறாமை பட என்ன இருக்கிறது? அத்தோடு இந்த இலகு ரக பறப்பு உரிமம், அவுஸ் அமேரிக்கா போன்ற நாடுகளில் எல்லாம் சாதாரண பூச்சி மருந்து அடிக்கும் தொழிலாளர்களே வைத்திருப்பது.

யாழ்ப்பாண தமிழ் பெண்கள், சிங்களவர்களை திருமணம் முடிப்பது அதிகரிப்பு.

2 months 3 weeks ago
அப்ப கருத்து எழுதின ஆட்கள் வேறை, இப்ப கருத்து எழுதிற ஆட்கள் வேறை. எல்லோருடைய கருத்தையும் நாடி பிடித்துப் பார்க்க அரிய சந்தர்ப்பம். 😁😂

வவுணதீவு இரட்டைக் கொலை: பொலிஸ் புலனாய்வு அதிகாரி கைது – உண்மை வெளிச்சத்திற்கு!

2 months 3 weeks ago
மட்டு. வவுணதீவு பொலிஸார் இருவர் படுகொலை தொடர்பில் உண்மைக்கு புறம்பான தகவலை வழங்கிய பொலிஸ் பரிசோதகர் கைது 23 JUL, 2025 | 10:17 AM மட்டக்களப்பு, வவுணதீவு வலையிறவு பாலத்துக்கு அருகாமையில் இரு பொலிஸார் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு வெட்டி கொலை செய்த சம்பவம் தொடர்பில் உண்மைக்கு புறம்பான தகவலை வழங்கிய சம்பவம் தொடர்பில் பொலிஸ் பரிசோதகர் ஒருவரை திங்கட்கிழமை (21) குற்றபுலனாய்வு பிரிவினர் கொழும்பில் வைத்து கைது செய்துள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். கைதான பொலிஸ் பரிசோதகர் மட்டு. மாவட்ட புலனாய்வு பிரிவு பொறுப்பதிகாரியாக கடமையாற்றிய பின்னர் தற்போது கந்தளாய் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வருபவர் என பொலிஸ் உயர் அதிகாரி மேலும் ஒருவர் தெரிவித்தார். இது பற்றி தெரியவருவதாவது, கடந்த 2018 நவம்பர் 29 ஆம் திகதி வவுணதீவு வலையிறவு பொலிஸ் சோதனைச் சாவடியில் கடமையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இருந்த பொலிஸ் சாஜன்ட் மற்றும் பொலிஸ் கொஸ்தாபர் ஆகியோரை இனந் தெரியாதோர் இருவர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு கத்தியால் வெட்டியும் கொலை செய்துவிட்டு பொலிஸார் இருவரின் துப்பாக்கிகளையும் எடுத்துச் சென்றுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக முன்னாள் விடுதலைப்புலிகளில் இருந்து புனர்வாழ்வு பெற்று வெளிவந்த வவுணதீவு கரையாக்கன்தீவு பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் பாவித்து வந்த ஜக்கட் பாலத்தின் கீழ் வீசி எறிந்து கிடப்பதாகவும் அவர் இந்த படுகொலையை செய்ததாக அரச மற்றும் புலனாய்வு பிரிவினர் அறிக்கையிட்டதையடுத்து அவரை கடந்த 2018 நவம்பர் 30 ம் திகதி பொலிஸார் கைது செய்தனர். இதில் கைது செய்யப்பட்ட முன்னாள் போராளியை பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கொழும்பிலுள்ள குற்ற புலனாய்வு திணைக்களத்தின் நான்காம் மாடியில் தடுத்துவைக்கப்பட்ட நிலையில் 2019 ஏப்பிரல் 21 உயித்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரியான ஜ.எஸ்.ஜ.எஸ் பயங்கரவாத அமைப்பின் சஹரானின் குழுவைச் சேர்ந்த கபூர் மாமா என அழைக்கப்படும் சஹரானின் சாரதி உட்பட நால்வரை கைது செய்ததன் பின்னர் அவர்கள் தான் இந்த படுகொலையை செய்துள்ளதாக தெரியவந்ததையடுத்து கைது செய்யப்பட்ட முன்னாள் பேராளியை விடுதலை செய்தனர். இதனையடுத்து தேசிய மக்கள் சக்தி ஆட்சியை கைபற்றியதையடுத்து இந்த உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளை மீண்டும் முன்னெடுத்த நிலையில் இந்த பொலிஸார் படுகொலைச் சம்பவத்தின் உண்மை சம்பத்தை மூடிமறைத்து விடுதலைப்புலிகளின் முன்னாள் போராளி மீது சுமத்தப்பட்டதை கண்டறிந்தனர். இதனையடுத்து, குறித்த சம்பவம் தொடர்பாக அப்போது மட்டக்களப்பு மாவட்ட புலனாய்வு பிரிவு பொறுப்பதிகாரியாக கடமையாற்றிவரும் தற்போது கந்தளாய் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிவரும் பொலிஸ் பரிசோதகர் கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவுக்கு விசாரணைக்கு திங்கட்கிழமை (21) அழைக்கப்பட்டு விசாரணையின் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார். இதேவேளை, இந்த சம்பவம் தொடர்பாக கடந்த ஏப்ரல் 8ம் திகதி மட்டக்களப்பு கரடியனாறு தேசிய புலனாய்வு சேவை பிரிவில் கடமையாற்றிவரும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை குற்றபுலனாய்வு பிரிவினர் கைது செய்து பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது. https://www.virakesari.lk/article/220695

இங்கிலாந்து இந்திய டெஸ்ட் கிரிக்கெட் தொடர்

2 months 3 weeks ago
இங்கிலாந்தின் பலவீனம் இந்தியாவின் பலமாக மாறுமா? 4-வது டெஸ்ட் இன்று தொடக்கம் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இந்திய அணி கேப்டன் சுப்மன் கில் கட்டுரை தகவல் தினேஷ்குமார் கிரிக்கெட் விமர்சகர் 23 ஜூலை 2025, 01:38 GMT புதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர் ஆண்டர்சன்–டெண்டுல்கர் தொடரின் நான்காவது டெஸ்ட், இன்று மான்செஸ்டரில் ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் தொடங்குகிறது. இந்த தொடரின் பெரும்பான்மை செசன்களில் ஆதிக்கம் செலுத்தியும், முக்கியமான தருணங்களை கோட்டைவிட்டதால் இந்திய அணி 2–1 என பின்தங்கியுள்ளது. சுமாரான அணியாக இருந்தபோதும், ஸ்டோக்ஸ், ரூட், ஆர்ச்சர் என மேட்ச் வின்னர்கள் தக்க சமயத்தில் தோள் கொடுப்பதால், இங்கிலாந்தின் கை தற்சமயம் ஓங்கியுள்ளது. வரலாற்று சிறப்பு வாய்ந்த ஓல்ட் டிராஃபோர்ட் மைதானம், இந்தியாவுக்கு என்றைக்கும் சாதகமான ஒன்றாக இருந்ததில்லை. 1936 முதல் இதுவரை 9 டெஸ்ட்களில் இந்திய அணி, மான்செஸ்டரில் விளையாடியுள்ளது. ஆனால், ஒருமுறை கூட வெற்றிக்கோட்டை தொடவில்லை. டெஸ்ட் மட்டுமல்ல வெள்ளைப் பந்து கிரிக்கெட்டிலும், ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் இந்தியாவுக்கு நல்ல நினைவுகள் என்று எதுவுமில்லை. 2019 உலகக் கோப்பை அரையிறுதியில் நியூசிலாந்துக்கு எதிராக இந்தியா மண்ணைக் கவ்வியது இங்குதான். பட மூலாதாரம்,GETTY IMAGES ஒருகாலத்தில் தாறுமாறாக சீறிய ஓல்ட் டிராஃபோர்ட் மைதானம், மறுகட்டுமானத்துக்கு பிறகு தட்டையாக மாறிவிட்டது. ஆகவே, லார்ட்ஸ் டெஸ்ட் போலவே இந்த டெஸ்ட்டும் 'லோ ஸ்கோரிங் திரில்லர்' ஆக (Low scoring thriller) மாறுவதற்கு வாய்ப்பதிகம் உள்ளது. சுழலுக்கு சாதகமான ஆடுகளம் என்பதால், 'சைனா மேன்' சுழலர் குல்தீப் யாதவ் லெவனில் இடம்பிடித்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஆனால், யார் இடத்தில் குல்தீப் விளையாடப் போகிறார் என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது. காயத்தால் தொடரில் இருந்து விலகிய ஆல்ரவுண்டர் நிதிஷ் குமார் ரெட்டிக்கு பதிலாக சேர்க்கலாம். ஒருவேளை, நிதிஷ் இடத்தில் மற்றொரு ஆல்ரவுண்டர் ஷார்துலை கொண்டுவர அணி நிர்வாகம் விரும்பினால், ஆஃப் ஸ்பின்னிங் ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர்தான் குல்தீப்புக்கு வழிவிட்டாக வேண்டும். நீண்ட பேட்டிங் வரிசையை விரும்பும் இந்திய அணி நிர்வாகம், தற்காப்பு பேட்டிங்கில் வித்தரான சுந்தர் தலையில் கை வைக்குமா என்பது சந்தேகம். ஒன்று, இரண்டு, ஐந்தாம் நாள்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்படும் நிலையில், பும்ரா–சிராஜ், மூன்று சுழலர்கள் என இந்தியா களமிறங்கவும் வாய்ப்புள்ளது. 1956 மான்செஸ்டர் டெஸ்டில் மழையால் பாதிக்கப்பட்ட இதே மைதானத்தில், இங்கிலாந்தின் ஜிம் லேக்கர் 19 விக்கெட்களை எடுத்து உலக சாதனை படைத்தார் என்பதை மறந்துவிட முடியாது. பட மூலாதாரம்,GETTY IMAGES ரிஸ்க் எடுப்பதற்கான சமயம் இதுவல்ல என்று குல்தீப்பை எடுக்காமல், 3 வேகப்பந்து வீச்சாளர், 2 ஸ்பின்னிங் ஆல்ரவுண்டர்கள் (சுந்தர், ஜடேஜ்) என இந்தியா களமிறங்கவும் தயங்காது. காயத்தால் அர்ஷ்தீப் சிங், ஆகாஷ் தீப் விலகியதாலும் பிரசித் கிருஷ்ணா பந்துவீச்சு எடுபடாததாலும் மூன்றாவது வேகப்பந்து வீச்சாளராக கம்போஜ் களமிறங்கலாம். ஷான் பொல்லாக் பாணியில் 5–15 செமீ லெங்த்தில் தையலை (seam) பிடித்து பந்துவீசும் கம்போஜ், இங்கிலாந்து மண்ணுக்கு என்றே அளவெடுத்து செய்தது மாதிரியான ஒரு பவுலர். பேட்டிங் வரிசையில் மாற்றம் இருப்பதற்கு வாய்ப்பு மிகவும் குறைவு. நல்ல தொடக்கம் கிடைத்தும் பெரிய இன்னிங்ஸாக மாற்ற முடியாமல் திணறும் கருண் நாயருக்கு இன்னொரு வாய்ப்பு கொடுத்து பார்ப்பார்கள். ஸ்லிப் பிராந்தியத்தில் கருணுக்கு நிகரான ஒரு ஃபீல்டர் இப்போது அணியில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. பேட்டிங்கை பலப்படுத்துவதற்காக கூடுதல் பேட்ஸ்மேனாக சுதர்சனை அணியில் சேர்க்கவும் அணி நிர்வாகம் தயங்காது. பட மூலாதாரம்,GETTY IMAGES இந்தியாவின் காம்பினேஷன் எப்படி இருக்கப் போகிறது என்பது தெளிவில்லாத நிலையில், வழக்கம் போல ஆட்டத்துக்கு முன்பே லெவனை அறிவித்துவிட்டு இங்கிலாந்து களம் காண்கிறது. காயத்தால் ஆஃப் ஸ்பின்னர் பஷீர் விலகிய நிலையில், இடக்கை சுழல் ஆல்ரவுண்டர் லியாம் டாசனை இங்கிலாந்து உள்ளே கொண்டுவந்துள்ளது. ஆஷ்லி கைல்ஸ், பனேசர் பாணியில் தற்காப்பு இடக்கை சுழற்பந்து வீச்சில் கை தேர்ந்தவர் இவர். பல் பிடுங்கப்பட்ட இங்கிலாந்து பந்துவீச்சுக்கு, கேப்டன் ஸ்டோக்ஸ் ஒருவர்தான் நம்பிக்கை ஒளியாக திகழ்கிறார். 4.5 ஆண்டுகளுக்கு பிறகு மறுவருகை நிகழ்த்திய ஆர்ச்சர், லார்ட்ஸில் தூள்பரத்தினாலும், பவுன்ஸ் அதிகமில்லாத ஓல்ட் டிராஃபோர்டில் அவருடைய பாட்சா பலிக்காது என்கிறார்கள் விமர்சகர்கள். அதுமட்டுமின்றி, ஆர்ச்சரின் பணிச்சுமையையும் கருத்தில் கொள்ள வேண்டிய நெருக்கடி இங்கிலாந்துக்கு உள்ளது. அனுபவ வீரர் வோக்ஸ் பந்துவீச்சு இந்த தொடரில் சுத்தமாக எடுபடவில்லை. கடந்த டெஸ்டில் கார்ஸ் நம்பிக்கை அளித்தாலும், ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது, இங்கிலாந்தின் பந்துவீச்சு படை பலவீனமானவே தெரிகிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES 'சமர்த்து பையன்கள்' என வலம்வரும் இங்கிலாந்து அணியினர், கடந்த டெஸ்டில் ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தினர். குறிப்பாக சேசிங்கின் போது ஸ்லிப் பிராந்தியத்தில் நின்றுகொண்டு புரூக் உள்ளிட்ட வீரர்கள், இந்திய அணியின் டெயில் எண்டர்களை கடுமையாக வசைபாடினர். கில் தலைமையிலான இந்திய அணியும் தன் பங்குக்கு களத்தில் சீற்றத்தை வெளிப்படுத்தியதை பார்த்தோம். ஆனால், கில்லின் ஆக்ரோஷம் இந்திய அணிக்கு வெற்றியை தேடி கொடுக்காததோடு அவருடைய பேட்டிங் ஃபார்மையும் பாழ்படுத்தியது. இந்தமுறை, கோலியை அப்படியே போலச் செய்ய முயலாமல், கட்டுப்பாட்டுடன் கூடிய ஆக்ரோஷத்தை கில் கையில் எடுப்பார் என நம்புவோம். இங்கிலாந்து பேட்டிங் வரிசையை பொருத்தமட்டில், கிராலி, போப் ஆகியோரின் ஃபார்ம் கவலையளிக்கும் விதமாக உள்ளது. லீட்ஸ் டெஸ்டில் சதமடித்த போப், 3 டெஸ்டில் மொத்தமாக 186 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். 21.33 சராசரியில் ஒரு அரைசதத்துடன் 128 ரன்கள் மட்டுமே தொடக்க வீரர் கிராலி அடித்துள்ளார். புரூக் நிறைய ரன்கள் குவித்தாலும், உள்ளே வரும் பந்துகளுக்கு (Nip backer) இந்த தொடர் முழுக்க அவர் திணறுவதை பார்க்கலாம். அதிர்ஷ்டமும் அவருக்கு சிலமுறை கைகொடுத்ததை சொல்லியாக வேண்டும். முக்கியமான சமயங்களில் கேப்டன் ஸ்டோக்ஸ் அணியை தாங்கிப் பிடித்தாலும், ஜேமி ஸ்மித், பென் டக்கெட்டையே இங்கிலாந்து அணி பேட்டிங்கில் பெரிதும் நம்பியுள்ளது. பாஸ்பால் பாணியில் இருந்து வெளியே வந்து விளையாட முடியும் என நிரூபித்த இங்கிலாந்து, ஃபார்முக்கு திரும்பியுள்ள ஜோ ரூட்டை பெரிதும் நம்பியுள்ளது. ஆடுகளம் சுழலுக்கு சாதகமாக மாறினால், ரூட்டின் விக்கெட் ஆட்டத்தை தீர்மானிக்கும் ஒன்றாக மாறும். ரூட்–பும்ரா இடையிலான ஆடுபுலி ஆட்டமும், குல்தீப் விளையாடும் பட்சத்தில் ரூட்–குல்தீப் இடையிலான உள்ளே வெளியே ஆட்டமும் ஒரு தனி நிகழ்வாக (Event) பரபரப்பை கூட்டும். பட மூலாதாரம்,GETTY IMAGES நிதிஷ் குமார் ரெட்டி விலகியது, அணியின் சமநிலையை பாதித்தாலும் இந்தியாவின் பேட்டிங் வரிசை வலிமையாகவே உள்ளது. கேஎல் ராகுல், தனது கிரிக்கெட் வாழ்வின் ஆகச்சிறந்த ஃபார்மில் உள்ளார். கடந்த டெஸ்டில் தவறான ஷாட் விளையாடி, விமர்சனத்துக்கு ஆளானாலும் ஜெய்ஸ்வாலும் முதலிரு டெஸ்ட்களில் ரன்கள் குவித்ததை மறுக்க முடியாது. டிரைவ், கட் ஷாட் ஆடும்போது கவனத்தை குவித்து, சூழலுக்கு ஏற்ப வேகத்தை கூட்டியும் குறைத்தும் விளையாடினால், அவர் ஆட்டம் மீண்டும் மிளிரும். பிராட்மேன் சாதனையை முறியடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட கில், கவனம் தொலைத்ததால் அழுத்தத்துக்கு ஆட்பட்டு கடந்த டெஸ்டில் சறுக்கினார். 2 சதங்களுடன் 425 ரன்கள் குவித்துள்ள பந்த், முழு உடற்தகுதியுடன் விக்கெட் கீப்பர்– பேட்ஸ்மேனாக களமிறங்குவதில் பிரச்சினை இருக்காது என கூறப்படுகிறது. ஒரு ஸ்பெசலிஸ்ட் பேட்ஸ்மேனாக விளையாடுவதற்கு முழு தகுதி கொண்டவர் என்றாலும், விக்கெட் கீப்பிங் பொறுப்பை பந்த் ஏற்காவிட்டால், அணியின் காம்பினேஷன் அடிவாங்கும். பட மூலாதாரம்,GETTY IMAGES இந்த தொடரில் தனது கடைசி டெஸ்டில் விளையாடும் பும்ரா, ரூட், புரூக் உள்ளிட்ட முக்கிய விக்கெட்களை குறிவைத்து நிச்சயம் வியூகம் வகுத்திருப்பார். இந்த டெஸ்டை இந்தியா வென்றால், மூன்று டெஸ்ட் மட்டும்தான் அவர் விளையாட வேண்டும் என்ற விதியை தளர்த்தி, கடைசி டெஸ்டில் பும்ராவை கம்பீர் விளையாட வைப்பதற்கு வாய்ப்புள்ளது. அதிக விக்கெட் கைப்பற்றியவர்கள் வரிசையில் முதலிடத்தில் இருக்கும் சிராஜ், ஆகாஷ் தீப் இல்லாத நிலையில் பவுன்ஸ் குறைவான ஆடுகளத்தில் கட்டுக்கோப்பாக பந்துவீசி இங்கிலாந்துக்கு நெருக்கடி ஏற்படுத்துவது அவசியம். மணிக்கட்டு ஸ்பின்னரான குல்தீப்பை ரிஸ்க் எடுத்து இந்திய அணி நிர்வாகம் விளையாட வைத்தால், நிச்சயம் பலனுண்டு. 1993 இல், இதே ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில்தான் மறைந்த ஆஸ்திரேலிய ஜாம்பவான் 20 ஆம் நூற்றாண்டின் தலைசிறந்த பந்தை வீசினார் என்பது வரலாறு. பட மூலாதாரம்,GETTY IMAGES ஜடேஜா உள்பட கீழ் வரிசை பேட்ஸ்மேன்களும் நம்பிக்கையுடன் உள்ளதால், இந்தியாவின் பேட்டிங் படை வலுவாக உள்ளது. மிகச் சிறப்பான கிரிக்கெட் விளையாடியும், பின்தங்கியுள்ளதற்கு இந்திய அணியின் தைரிய குறைபாடும் ஒரு காரணம் என்கிறார்கள் கிரிக்கெட் விமர்சகர்கள். லார்ட்ஸ் டெஸ்டில் 9 விக்கெட்கள் விழுந்தவுடன் ஜடேஜா, தாக்குதல் பாணி கிரிக்கெட்டை கையில் எடுத்திருக்க வேண்டும். ஆனால், விதியின் மீது பாரத்தை போட்டுவிட்டு சிராஜுக்கு ஸ்ட்ரைக் கொடுத்து குருவி போலச் சிறுக சிறுக ரன் சேர்த்தார். 2019 ஆஷஸ் தொடரில் ஹெடிங்லி டெஸ்டில் இதே போன்றதொரு சூழலில், ஸ்டோக்ஸ் ரிஸ்க் எடுத்து விளையாடி விதியை மாற்றி எழுதி ஆட்டத்தை வென்றார். இந்திய அணி தேவையற்ற வாய்ச் சவடாலை தூக்கி கடாசிவிட்டு, பயமறியாமல் ஆட்டத்தை அணுகினால் இந்த டெஸ்டை வென்று தொடரை சமன் செய்யலாம். இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cdx51vx59p9o

இராணுவப் புலனாய்வுப் பிரிவுகள் கிழக்கில் மேற்கொண்ட ஒரு முக்கிய சதி நடவடிக்கை

2 months 3 weeks ago
இலங்கையில் தமிழர்களும், முஸ்லிம்களும் பிட்டும் தேய்காய்ப்பூவும் போல வாழ்ந்துவருகின்ற பிரதேசம் என்று கூறப்படுகின்ற ஒரு பிரதேசம்தான் கிழக்கு மாகாணம். அங்கு தமிழர்களையும் முஸ்லிம்களையும் மோதவிட்டு- அவர்களை நிரந்தரமாகவே பிரித்துவைப்பதற்காகவென்று- சிறிலங்கா புலனாய்வுப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட ஏராளமான சம்பவங்களில் ஒரு சில உதாரணங்களை மீட்டுப் பார்க்கின்றது இந்த உண்மையின் தரிசனம் நிகழ்ச்சி. தமிழ் மக்கள் மீது தாக்குதல் நடாத்திவிட்டு, அந்தத் தாக்குதல்களின் பழியினை முஸ்லிம்களின் மீது போடுவதையும், முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடாத்திவிட்டு- அந்தத் தாக்குதல்களின் பழியை தமிழர் தரப்பின் மீது போடுவதையும் ஒரு முழுநேரத் தந்திரோபாயமாச் செய்துகொண்டிருந்த சிறிலங்காப் புலலாய்வுப் பிரிவின் ஒழு முக்கிய சதியினை அம்பலப்படுத்துகின்றது இந்த ‘உண்மையின் தரிசனம்’ நிகழ்ச்சி: https://ibctamil.com/article/military-intelligence-units-conspiracyin-the-east-1753197859

குரோதம் கொண்டு வந்த ரயிலில் இப்போது சகோதரத்துவம் சுமந்து வருகிறோம் – மகேஷ் அம்பேபிட்டிய

2 months 3 weeks ago
கறுப்பு ஜூலைக்கு பொறுப்புக்கூறலை மடைமாற்றும் ஜே.வி.பி.யின் செயற்பாடே சகோதரத்துவ தினம் - நிரோஷ் 23 JUL, 2025 | 10:51 AM தமிழ் மக்கள் மீது திட்டமிட்ட படுகொலைகள் நடைபெற்றன என்ற உண்மையையும் அநீதிகளுக்கு பொறுப்புக் கூறவேண்டும் என்ற கடப்பாட்டினையும் மூடி மறைக்கும் செயலாகவே தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அடிப்படையான ஜே.வி.பியின் உத்தியோகபூர்வ இளைஞர் அமைப்பான சோசலிச இளைஞர் சங்கம் சகோதரத்துவ நாளாக கறுப்பு ஜூலை நிகழ்வுகளை மடைமாற்றம் செய்ய எத்தனிக்கின்றது. இதனை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம் என வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத்தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார். இலங்கையில் தமிழ் மக்கள் அடையாளப்படுத்தப்பட்டு தேடியழிக்கப்பட்ட கறுப்பு ஜூலை நினைவுகளின் 42 ஆவது ஆண்டினை உணர்வுபூர்வமாக எமது இனம் அனுஷ்டிக்கின்றது. கடந்த 42 ஆண்டுகளுக்கு முன் குட்டிமணி, தங்கத்துரை, ஜெகன் உள்ளிட்ட 54 அரசியல் கைதிகள் வெலிக்கடை சிறையில் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டனர். தமிழர்களை வாக்காளர் பட்டியலுடன் தேடிச் சென்று மூவாயிரத்துக்கு மேற்பட்ட தமிழர்களை உயிருடன் தீயில் இட்டும் இதர கொடூரங்களுக்குள்ளாகவும் கொன்றழித்தனர். ஒன்றரை இலட்சம் பேர் வீடற்றவர்கள் ஆயினர். 8 ஆயிரம் வீடுகளும் 5 ஆயிரம் வணிக நிறுவனங்களும் கொள்ளையிடப்பட்டன, அழிக்கப்பட்டன. இக்காலகட்டத்தில் 300 மில்லியன் டெலர்கள் அழிக்கப்பட்டன. இதனை பன்னாட்டு மனித உரிமைகள் ஆணையம் தமிழருக்கு எதிரான திட்டமிட்ட இனப் படுகொலை என விபரித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. இவ் இனப்படுகொலையை அரச இயந்திரமே தகவமைத்து வழிப்படுத்தியது என்பதற்கு சகல ஆதாரங்களும் உள்ளன. இவ்வாறாக நாட்டில் இனப்படுகொலை நடைபெற்றமைக்கு பொறுப்புக் கூறல் எதையும் முன்வைக்காமல் அத் தேவையினை போர்த்தி மூடிவிடும் உத்தியுடன் இன்றைய அரசாங்கம் நிதானமாகச் செயற்படுகின்றது. இப்படுகொலைகளுக்கு ஜே.வி.பியும் பொறுப்புடையது. ஆதலால் அரசாங்கத்தின் மாணவர் அமைப்பான ஜே.வி.பி தலைமைச் செயலகத்திற்குள்ளேயே இயங்கும் உத்தியோகபூர்வ இளைஞர் அமைப்பான சோசலிச இளைஞர் அமைப்பு ஊடாக அரச அனுசரணையுடன் இன்றைய நாளை சகோதரத்துவ நாள் பிரகடனப்படுத்தப்படுகின்றது. இதற்காக யாழில் அரச வளங்கள் ஈடுபடுத்தப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இது தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலையினையும் அதற்கான பொறுப்புக்கூறலையும் திட்டமிட்டு மறைக்கின்ற இல்லாமலாக்குகின்ற முயற்சியாகும். இதனை நாம் கண்டிக்கின்றோம். ராஜபக்சாக்களை ஒத்ததாக இன்றைய அரசாங்கம் மென்வலு அணுகுமுறையில் தமிழருக்கு எதிரான நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றது என்ற வழிப்புணர்வை ஏற்படுத்துகின்றோம் என மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/220696

சங்கிலியுடன் எம்ஆர்ஐ ஸ்கேன் அறைக்குள் நுழைந்தவர் மரணம் - நொடி நேரத்தில் எந்திரத்துக்குள் இழுத்த காந்தபுலம்

2 months 3 weeks ago
எம் ஆர் ஐ ஸ்கேன் செய்யும் அறைக்குள் நுழைந்த நபர் ஒருவர் அந்த இயந்திரத்தால் அதிவேகமாக ஈர்க்கப்பட்டு, விபத்தின் தாக்கத்தால் மரணமடைந்திருக்கிறார்.. அன்னாரை இழந்து வாடும் அவருடைய மனைவிக்கும் உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைப் பதிவு செய்து இந்த விழிப்புணர்வுக் கட்டுரையை ஆரம்பம் செய்கிறேன். சம்பவம் நிகழ்ந்திருப்பது அமெரிக்காவில் என்றாலும் நவீன மருத்துவ முறை சிகிச்சை வழங்கும் பெரிய மருத்துவமனைகள் அனைத்திலும் தற்போது எம் ஆர் ஐ ஸ்கேன் செய்யும் வசதி உள்ளது. நமக்கோ நமது உறவினர்களுக்கோ ஸ்கேன் செய்து பார்க்கும் தேவை என்பது எப்போதும் வரக்கூடும் என்பதால் நிச்சயம் எம் ஆர் ஐ குறித்த விழிப்புணர்வு நமக்கு அத்தியாவசியமாகிறது. முதலில் எம்.ஆர்.ஐ என்றால் என்ன? அது இயங்கும் தத்துவம் குறித்து அறிந்தால் நாம் அந்த ஸ்கேன் செய்யும் அறைக்குள் செல்லுமுன் எடுத்துக் கொள்ள வேண்டிய எச்சரிக்கை குறித்து புரிந்து கொள்ள முடியும். எம் ஆர் ஐ என்றால் மேக்னெட்டிக் ரெசோனன்ஸ் இமேஜிங் என்று பொருள். MRI - MAGNETIC RESONANCE IMAGING அதாவது காந்தப் புலத்தில் அதிர்வை உண்டாக்கி அதன் வழியாக படம் பிடித்தல் என்பதாகும். எம் ஆர் ஐ இயந்திரமே ஒரு அதிசக்தி வாய்ந்த காந்தமாகும். மின்சாரம் இந்த இயந்திரத்தில் பாய்ச்சப்படும் போது அதி கடத்தல் காந்தமாக உருமாற்றம் பெறுகிறது. மனித உடலில் உள்ள அனைத்து செல்களிலும் நீர் இருக்கிறது. நீர் என்பது இரண்டு ஹைட்ரஜனும் ஒரு ஆக்சிஜனும் இணைந்து உருவாக்கும் வெற்றிக் கூட்டணி என்பது நாம் அனைவரும் கற்ற பால பாடமாகும். எம்.ஆர்.ஐ இயந்திரத்தின் காந்தப் புலத்துக்குள் மனித உடல் படுத்த வாக்கில் காந்த புலத்துக்கு பக்கவாட்டில் நுழையும் போது, நமது உடலில் இருக்கும் ஒவ்வொரு செல்லுக்குள் இருக்கும் நீர் மூலக்கூறில் உள்ள ஹைட்ரஜன் அணுவில் உள்ள ப்ரோடான்கள் அனைத்தும் எம் ஆர் ஐ இயந்திரத்தின் காந்தப் புலத்துடன் ஒன்றுபட்டும் வரிசைப்பட்டும் இருக்கும். இப்போது எம் ஆர் ஐ இயக்குநர், ரேடியோ அலைகளை குறிப்பிட்ட இடைவெளியில் உடல் மீது பாயச் செய்வார். இவ்வாறு மின்காந்த விசை பெற்ற ரேடியோ அலைகள் ஊடுறுவும் போது, ஹைட்ரஜன் அணுவில் உள்ள ப்ரோடான்கள் இந்த அலைகள் மூலம் சக்தியைப் பெற்று தனது முந்தைய சுழலும் நிலையில் இருந்து அடுத்த சுழலும் நிலைக்கு சற்று முன்னேறிச் செல்லும். ரேடியோ அலை பாய்ச்சுவது நிறுத்தப்படும் போது, தான் உள்வாங்கிய சக்தியை வெளியிட்டு விட்டு மீண்டும் பழைய மாதிரி எம்.ஆர்.ஐ காந்தத்தின் காந்தப் புலத்துடன் ஓர்மையில் ஓரணியில் நிற்க பழைய நிலைக்குத் திரும்பும். இவ்வாறு பழைய நிலைக்குத் திரும்ப அந்த ப்ரோடான்கள் வெளியிட்ட சக்தியைக் கொண்டும் ஏற்கனவே இருந்த பழைய நிலையில் அதற்கு இருந்து சக்தியையும் முன்வைத்து கணிணியானது நமது உடலின் குறுக்கு வெட்டுத் தோற்றத்தை படமாக ஆக்கி நமது திரையில் கொண்டு வரும். இதன் வழியாக சிறுநீரகம், கல்லீரல், குடல் , நுரையீரல் உள்ளிட்ட உள்ளுறுப்புகள் தசை, ஜவ்வு, மூளை ஆகியவற்றில் உள்ள மாற்றங்களைத் துல்லியமாகக் காண முடிகிறது. இதுவே எம் ஆர் ஐ தத்துவம். எம்.ஆர்.ஐ இயந்திரம் என்பது ஒவ்வொரு ஸ்கேன் செய்யும் போதும் ஆஃப் செய்து ஆன் செய்யும் இயந்திர வகை அல்ல. காரணம் - எம் ஆர் ஐ இயந்திரம் மிகக் குறைவான வெப்பத்தில் இயங்கக் கூடிய அதி கடத்தல் மின் காந்தமாகும். இத்தனை அதி திறன் கொண்ட காந்தப் புலத்தை உருவாக்க குறைந்த வெப்ப நிலை அவசியமாகிறது. இதனால் எம் ஆர் ஐ இயந்திரத்தின் காந்தம் - திரவ ஹீலியத்தால் சூழப்பட்டிருக்கும். ஹீலியம் திரவ நிலையிலேயே இருப்பதற்கு எம் ஆர் ஐ இயந்திரம் தொடர்ந்து இயங்கிக் கொண்டே இருக்க வேண்டும். அதை ஆஃப் செய்தாலோ அல்லது திடீரென அது ஆஃப் ஆனாலோ திரவ ஹீலியம் - வாயு நிலையை அடையும். அப்போது அந்த அறைக்குள் வாயு நிலை ஹீலியம் கசியலாம். இது அறைக்குள் இருப்பவர்களுக்கு மூச்சுத் திணறலை ஏற்படுத்தக்கூடும். எம் ஆர் ஐ இயந்திரமானது குறைவான மின் உபயோகத்தில் இயங்கும் ஆற்றல் கொண்டது. ஆனால் அதை அடிக்கடி ஆஃப் செய்து ஆன் செய்யும் போது மின் தேவை அதிகரிக்கும். மேற்கூறிய காரணங்களால் நோயாளிகளுக்கு ஸ்கேன் செய்யப்படும் போதும் சரிநோயாளிகள் உள்ளே இல்லாத நிலையிலும் சரி எப்போதும் எம் ஆர் ஐ இயந்திரம் "ரெடி டு டேக்" நிலையில் தான் இருக்கும். எனவே எம் ஆர் ஐ அறைக்குள் இரும்பு, ஸ்டீல் உள்ளிட்ட காந்தத்தால் ஈர்க்கப்படக்கூடிய சாதனங்களுடன் நுழைவது பேராபத்தை வரவழைக்கும் செயலாகும். முதல் ரூல்ஸ் எம் ஆர் ஐ அறைக்குள் அந்த அறையின் இயக்குநரின் அனுமதியின்றி உள்ளே நுழைதல் கூடாது. இரண்டாவது ரூல்ஸ் அப்படி நோயாளியாக உள்ளே நுழைய வேண்டுமெனில் கட்டாயம் தங்கள் உடலில் ஆபரணங்கள், ஹேர் க்ளிப், ஹேர் பின் உள்ளிட்ட எந்த காந்தத்தால் ஈர்க்கப்படும் பொருளும் இருக்கக்கூடாது என்பதை உறுதி செய்த பின் நுழைய வேண்டும். மூன்றாவது ரூல்ஸ் மருத்துவ ரீதியாக பேஸ் மேக்கர்/ இதய வால்வு உள்ளிட்ட இயந்திரங்கள் / உபகரணங்கள் உங்களுக்கு பொருத்தப்பட்டிருக்குமானால் தாங்கள் அது குறித்து முன்கூட்டியே தெரிவித்து ஸ்கேன் அறைக்குள் நுழையும் அனுமதி பெற்ற பிறகே உள்ளே நுழைய வேண்டும். உங்களது உடலில் உள்ள உபகரணம் எம் ஆர் ஐ பாதுகாப்பானதா என்பதை அறிய mrisafety.com சென்று உபகரணம் குறித்த தயாரிப்பு தகவல்களைக் கொடுத்து பயன்பெறலாம். இவையெல்லாம் எம் ஆர் ஐ ஸ்கேன் செய்யுமுன் நாம் கற்க வேண்டிய முக்கியமான பாலபாடங்கள். காந்தத்தின் புலத்தின் வலிமை குறித் கணக்கீடு "டெஸ்லா" கொண்டு கூறப்படுகிறது. பொதுவாக எம் ஆர் ஐ எடுக்க 0.5 (குறைவான காந்தப்புலம்) முதல் 3.0 (அதி காந்தப் புலம்) வரை கொண்ட இயந்திரங்கள் பயன்பாட்டில் உள்ளன. இதில் பொதுவாக பெரும்பான்மையான இடங்களில் 1.5 டெஸ்லா இயந்திரங்கள் புழக்கத்தில் உள்ளன. இவை நமது பூமியின் காந்தப் புலத்தைக் காட்டிலும் 21,000 மடங்கு வலிமையானவை என்பது குறிப்பிடத்தக்கது. இத்தகைய காந்தப் புலத்துக்குள் சாதாரண காகிதம் கோர்க்கும் க்ளிப்போ அல்லது ஹேர் பின் உள்ளே போனாலும் உடனடியாக அவை "ஏவுகணைகள்" போன்ற வேகத்தில் ஈர்க்கப்படும். சுமார் ஒரு மணிநேரத்திற்கு 65 கிலோமீட்டர் வேகத்தில் ஈர்க்கப்படும் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். தற்காலத்தில் வடிவமைக்கப்படும் நோயாளிகளை கொண்டு செல்லும் ஸ்ட்ரெட்சர்கள், ஆக்சிஜன் சிலிண்டர்கள் ஆகியவை இரும்பு , ஸ்டீல் அல்லாத காந்தத்தால் ஈர்க்கப்படாத உலோகங்களால் செய்யப்படுகின்றன. தற்காலத்தில் செய்யப்படும் பேஸ் மேக்கர்கள்/ இதய வால்வுகள் அனைத்தும் எம் ஆர் ஐ இயந்திரத்திற்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டுள்ளன. எனினும் கட்டாயம் தங்களது உடலுக்குள் மருத்துவ உபகரணங்கள்/ இயந்திரங்கள் இருப்பின் வெளிப்படுத்தி அதற்குரிய எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்த பின்னரே எம் ஆர் ஐ அறைக்குள் நுழைய வேண்டும். 2 டெஸ்லா அளவுள்ள எம் ஆர் ஐ இயந்திரங்கள் வரை செய்யப்பட்ட ஆய்வுகளில் அவற்றால் மனிதர்களின் செல்களுக்கு எந்த பாதகமும் விளைவிக்க இயலவில்லை. இவற்றால் புற்று நோய் ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கவில்லை. தற்காலத்தில் குறைவான டெஸ்லா அளவுகள் எம் ஆர் ஐ இயந்திரங்கள் பரவலாக்கம் அடையத் தொடங்கியுள்ளன. எம் ஆர் ஐ என்பது நவீன மருத்துவத் துறையில் முக்கியமான அங்கமாக விளங்கி வருகிறது. அதன் வழியாக பல நோய்களை அதன் ஆரம்ப நிலையில் கண்டு சிகிச்சை அளிக்க முடிகிறது. பல அறுவை சிகிச்சைகளை துல்லியமாகவும் கனகச்சிதமாகவும் செய்து முடிக்க முடிகிறது. தற்போது அமெரிக்காவில் நடந்த நிகழ்வுக்கு வருவோம்.. மத்திய வயது மனைவி கால் மூட்டு பகுதிக்கு எம் ஆர் ஐ எடுக்க உள்ளே சென்று ஸ்கேன் செய்யப்பட்டு இருக்கிறார். . பிறகு ஸ்கேன் படுக்கையில் இருந்து கீழிறங்க தனது 61 வயது கணவரை உள்ளே அழைக்கக் கூறியிருக்கிறார். ஸ்கேன் எடுத்த நபர் வெளியே சென்று அன்னாரது கணவரை உள்ளே செல்லக் கூறியிருக்கிறார். ஆனால் ஸ்கேன் எடுத்த நபரும் கணவரும் ஒன்றைக் கருத்தில் கொள்ளவில்லை. ஸ்கேன் எடுத்த நபர் - உள்ளே செல்லும் நபரிடம் இரும்புப் பொருட்கள் இல்லை என்பதை உறுதி செய்திருக்க வேண்டும். உள்ளே சென்ற நபர் - தன்னிடம் இரும்பு உள்ளிட்ட பொருட்கள் இல்லை என்பதை உறுதி செய்து கொண்டு உள்ளே சென்றிருக்க வேண்டும். நிச்சியம் ஸ்கேன் அறைக்கு வெளியே பல பெரிய எச்சரிக்கை ஸ்டிக்கர்கள் ஒட்டியிருக்கும். ஆனால் வயது 60+ என்பதால் கவனிக்காமல் விட்டிருக்கலாம். தனது கழுத்து வலிக்காகவோ அல்லது எடை பயிற்சிக்காவோ தனது கழுத்தில் 9 கிலோ எடை கொண்ட இரும்புச் சங்கிலியை அவர் அணிந்திருந்திருக்கிறார். அந்த சங்கிலியோடு உள்ளே சென்றதால் சங்கிலி வேகமாக எம் ஆர் ஐ இயந்திரத்தால் ஈர்க்கப்பட வேகமாக இயந்திரத்தில் மோதியதால் அவர் இறந்திருக்கலாம். இந்த சம்பவத்தில் நமக்கும் படிப்பினை உண்டு சொந்தங்களே... எம் ஆர் ஐ இயந்திரங்கள் மீதோ எம் ஆர் ஐ தொழில்நுட்பம் மீதோ பிழையில்லை. எம் ஆர் ஐ இயந்திரங்கள் நமக்கு நன்மை செய்பவை. நாள்தோறும் நன்மை செய்து வருபவை. எனினும் அவற்றிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதை நாம் அறிந்து நடந்து கொண்டால் எல்லாம் சுகமே... நன்றி Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா பொது நல மருத்துவர் சிவகங்கை https://web.facebook.com/story.php?story_fbid=24502030766120102&id=100002195571900&rdid=6q8I3kLMv1557NMI#

யாழ்ப்பாண தமிழ் பெண்கள், சிங்களவர்களை திருமணம் முடிப்பது அதிகரிப்பு.

2 months 3 weeks ago
வருசாவருசம் பொங்கலுக்கு தீர்வு தீபாவளிக்கு தீர்வு என்று ஓடிய தீர்வு படத்தை விட இந்த படம் கடும் படமாகவல்லவோ இருக்கு, மூண்டு வருசத்திற்கொரு தரம் ஓடுது

ஐரோப்பாவில் விமானி உரிமம் பெற்ற மன்னார் இளைஞன்!

2 months 3 weeks ago
தற்போதைய வன்னி பா.உ துரைராசா இரவிகரன் அவருடைய மகன் என நினைக்கிறேன் அண்ணை. வேட்டி கட்டி படம் போட்டிருந்ததாகவும் நினைவுள்ளது.

புலிகளின் விருப்பங்களை நிறைவேற்றுவதற்குச் சதி; கதறுகின்றார் கம்மன்பில

2 months 3 weeks ago
புலிகளின் விருப்பங்களை நிறைவேற்றுவதற்குச் சதி; கதறுகின்றார் கம்மன்பில இலங்கைப் படையினர் போர்க்குற்றங்களில் ஈடுபட்டனர் என முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை நியாயப்படுத்தும் விதத்திலேயே, உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலை இராணுவத்துடன் தொடர்புபடுத்தும் சர்வதேசச் சூழ்ச்சி இடம்பெறுகின்றது என்று முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார். கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகச் சந்திப்பின்போது அவர் மேலும் தெரிவித்ததாவது:- இலங்கையின் வரலாற்றில் என்றும் இல்லாத வகையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பில் துல்லியமான தகவல்களைப் புலனாய்வாளர்கள் வழங்கியிருந்தனர். அப்படியான சேவைகளை வழங்கியவர்கள் தண்டிக்கப்பட்டால். இதன்பின்னர் ஆயிரம் குண்டுகள் வெடித்தாலும் தகவல்களை வெளியிட புலனாய்வாளர்கள் முன்வரமாட்டார்கள். பொலிஸ் சேவையில் இருந்து நீக்கப்பட்டுள்ள நிலந்த ஜயவர்த்தனவுக்காக அல்ல. உண்மை மற்றும் நீதிக்காகவே நான் குரல் கொடுக்கின்றேன். எமது இராணுவத்தினரைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு, நீதி மற்றும் உண்மைக்காக முன்னிலையாகும் பொறுப்பு என்பன எம்முன் உள்ளன. அதற்காக நாம் முன்னிலையாவோம். இற்றைக்கு 25 வருடங்களுக்கு முன்னர் புலிகள் அமைப்பு தோற்கடிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினோம். அப்போது என்னை 'இரத்தப் பிசாசு' என்று முத்திரை குத்தினார்கள். அந்தத் துன்பங்களைத் தாங்கிக்கொண்டு தான் நாடு சரியான திசைக்கு வரும்வரை போராடினோம். உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் பின்னணியில் இராணுவத்தினர் உள்ளனர் என்பது போன்று காண்பிக்க முனைகின்றனர். இராணுவத்தினர் போர்க் குற்றங்களில் ஈடுபட்டனர் என புலிகளால் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டை நியாயப்படுத்தும் வகையில் தான் இந்த நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன- என்றார். https://newuthayan.com/article/புலிகளின்_விருப்பங்களை_நிறைவேற்றுவதற்குச்_சதி;_கதறுகின்றார்_கம்மன்பில

மீண்டும் இராணுவ தேவைக்காக சுவீகரிக்கப்படவுள்ள காணிகள்!

2 months 3 weeks ago
மீண்டும் இராணுவ தேவைக்காக சுவீகரிக்கப்படவுள்ள காணிகள்! யாழ்ப்பாணம் - வலி வடக்கில் பல காணிகள் மக்களிடம் மீள கையளிக்கப்பட்டு இருந்தாலும் 2013ஆம் ஆண்டு வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைய அது இராணுவ தேவைக்காக சுவீகரிக்கப்பட வேண்டிய காணியாகவே காணப்படுகிறது என மனிதவுரிமை செயற்பாட்டாளர் ஜட்சன் தெரிவித்துள்ளார். வலி. வடக்கில் இராணுவத்தினரின் பிடியில் உள்ள காணிகளின் உரிமையாளர்களின் பிரதிநிதிகள் யாழில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் நேற்று (22) நடத்திய ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில், ”தெல்லிப்பழை பிரதேச செயலக பிரிவில் 2,800 ஏக்கர் காணியே விடுவிக்கப்பட வேண்டியுள்ளதாக மாவட்ட செயலர் கூறுகின்றார். ஆனால் 2808 ஏக்கர் என பிரதேச செயலக தகவல்கள் கூறுகின்றன ஆனால் 2013ஆம் ஆண்டு வெளியான வர்த்தமானியில் 6,317 ஏக்கர் காணிகள் இராணுவத்தினர் வசமுள்ளதாகவும், அவற்றை இராணுவ தேவைகளுக்காக சுவீகரிக்க உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன் பின்னரான கால பகுதியில் ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் கட்டம் கட்டமாக பல பகுதிகளில் உள்ள காணிகள், வீதிகள், ஆலயங்கள் என்பவற்றை மீள மக்களிடம் கையளித்து வந்துள்ளன. அந்த காணிகள் மக்களிடம் மீள கையளிக்கப்பட்ட இருந்தாலும் 2013ஆம் ஆண்டு வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைய அது இராணுவ தேவைக்காக சுவீகரிக்கப்பட வேண்டிய காணியாகவே காணப்படுகிறது. அத்துடன், மக்களின் காணிகளில் இதுவரை காலமும் இராணுவத்தினர் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டு பெரும் பணம் ஈட்டியுள்ளனர். அவர்கள் தனியார் காணிகளில் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டமைக்காக காணி உரிமையாளர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்பதுடன், காணிக்கான குத்தகை பணத்தினையும் வழங்க வேண்டும்” என தெரிவித்தார். https://newuthayan.com/article/மீண்டும்_இராணுவ_தேவைக்காக_சுவீகரிக்கப்படவுள்ள_காணிகள்!

வவுணதீவு இரட்டைக் கொலை: பொலிஸ் புலனாய்வு அதிகாரி கைது – உண்மை வெளிச்சத்திற்கு!

2 months 3 weeks ago
வவுணதீவு இரட்டைக் கொலை: பொலிஸ் புலனாய்வு அதிகாரி கைது – உண்மை வெளிச்சத்திற்கு! பயங்கரவாதி ஷாகறான். கொழும்பு, ஜூலை 22, 2025: 2018 ஆம் ஆண்டு மட்டக்களப்பு, வவுணதீவு வலையிறவு பாலத்துக்கு அருகாமையில் இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் சுட்டும் வெட்டியும் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், பிழையான தகவல்களை வழங்கியதாகக் கூறப்படும் அப்போதைய மட்டக்களப்பு மாவட்ட புலனாய்வுப் பிரிவு பொறுப்பதிகாரியும், தற்போது கந்தளாய் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வருபவருமான ஒரு பொலிஸ் பரிசோதகர் நேற்று (திங்கட்கிழமை, ஜூலை 21) கொழும்பில் வைத்து குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் (CID) கைது செய்யப்பட்டுள்ளார். வவுணதீவு சம்பவத்தின் பின்னணி (2018): 2018 ஆம் ஆண்டு நவம்பர் 29ஆம் திகதி இரவு, மட்டக்களப்பு வவுணதீவு வலையிறவுப் பாலத்திற்கு அருகில் உள்ள பொலிஸ் சோதனைச் சாவடியில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் கான்ஸ்டபிள்களான கணேஸ் தினேஸ் (28, கல்முனை) மற்றும் வல்பிட்ட கமகே நிரோசன் இந்திக்க பிரசன்ன (35, காலி) ஆகியோர் அடையாளம் தெரியாத நபர்களினால் சுட்டும் வெட்டியும் கொலை செய்யப்பட்டனர். அவர்களது பாதுகாப்புக்காக வைத்திருந்த துப்பாக்கிகளும் எடுத்துச் செல்லப்பட்டிருந்தன. இந்தச் சம்பவம் இடம்பெற்றபோது, விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகள் மீது இந்தக் கொலைகள் சுமத்தப்பட்டு, பலர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டனர். தமிழ் அரசியல் மற்றும் சமூகப் பிரதிநிதிகள் இந்த நடவடிக்கைக்குக் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். உண்மை வெளிச்சத்திற்கு வந்த வழி: உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்குப் பின்னர் இடம்பெற்ற விசாரணைகளின் போதுதான், வவுணதீவு பொலிஸார் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கும், சஹ்ரான் ஹாஷிம் தலைமையிலான பயங்கரவாதக் குழுவிற்கும் தொடர்பு இருப்பது வெளிச்சத்திற்கு வந்தது. இந்தத் தாக்குதல்களைத் திசைதிருப்பி, முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்கள் மீது பழிசுமத்துவதற்காகப் போலியான ஆதாரங்கள் உருவாக்கப்பட்டதாகவும், இதில் அரச புலனாய்வுச் சேவை மற்றும் இராணுவப் புலனாய்வுப் பிரிவின் சில அதிகாரிகள் முன்னின்று செயற்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. குறிப்பாக, ஒரு மோட்டார் சைக்கிள் ஜக்கெட் சம்பவ இடத்திற்கு அருகே மறைத்து வைக்கப்பட்டு, அது தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்குத் தவறான தகவல் அளிக்கப்பட்டதும் விசாரணைகளில் தெரியவந்தது. தற்போதைய கைது மற்றும் விசாரணைகள்: படுகொலைச் சம்பவத்தின் உண்மைத் தன்மையை மூடிமறைத்து, விடுதலைப்புலிகளின் முன்னாள் போராளி மீது குற்றத்தைச் சுமத்தப்பட்டதை பொலிஸார் கண்டறிந்தனர். இதனையடுத்து, குறித்த சம்பவம் தொடர்பாக அப்போதைய மட்டக்களப்பு மாவட்ட புலனாய்வுப் பிரிவு பொறுப்பதிகாரியாகக் கடமையாற்றியவரும், தற்போது கந்தளாய் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வருபவருமான பொலிஸ் பரிசோதகர் ஒருவரை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கொழும்புக்கு விசாரணைக்கு அழைத்து, விசாரணையின் பின்னர் கைது செய்துள்ளதாகப் பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்தக் கைது, வவுணதீவு இரட்டைக் கொலை வழக்கு விசாரணைகளில் ஒரு முக்கிய திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது. Liked Tamil AB Amam ######### @satan, @alvayan, @goshan_che, @ஈழப்பிரியன், @கிருபன் , @Paanch , @ஏராளன் , @விசுகு, @குமாரசாமி, @ரசோதரன், @பெருமாள், @புலவர் , @ரஞ்சித் , @நன்னிச் சோழன் , @Sasi_varnam , @நியாயம் , @suvy , @நிழலி, @இணையவன் , @vasee, @அக்னியஷ்த்ரா , @உடையார் , @தனிக்காட்டு ராஜா

மாலைத் தீவுடன் இராஜதந்திர பயிற்சியில் இணையும் இலங்கை!

2 months 3 weeks ago
மாலைத் தீவுடன் இராஜதந்திர பயிற்சியில் இணையும் இலங்கை! வெளிநாட்டு சேவை அதிகாரிகளுக்காக நிறுவப்பட்டுள்ள இலங்கையின் பண்டாரநாயக்க சர்வதேச இராஜதந்திர பயிற்சி நிறுவகம் மற்றும் மாலைத் தீவின் வெளிநாட்டு சேவைகள் நிறுவகத்திற்கும் இடையிலான பரஸ்பர ஒத்துழைப்புக்களை மேம்படுத்துதல் மற்றும் புரிந்துணர்வை அதிகரிக்கும் நோக்கில் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றை மேற்கொள்வதற்கு முன்மொழியப்பட்டுள்ளது. இன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்திலேயே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்தவகையில் கற்கை நிகழ்ச்சித்திட்டங்கள் மற்றும் ஏனைய கற்கை நடவடிக்கைகள் தொடர்பாக தகவல் பரிமாற்றம், கல்வியியலாளர்கள், மாநாடுகளுக்கான வளவாளர்கள் மற்றும் ஆர்வங்காட்டுகின்ற துறைசார் நிபுணர்கள் பரிமாற்றம், இருநாடுகளாலும் வழங்கப்படுகின்ற பயிற்சிகளில் கலந்து கொள்வதற்கு இராஜதந்திர அதிகாரிகளுக்கு வாய்ப்பு வழங்குதல் மற்றும் கொழும்பு மற்றும் மாலே போன்ற நகரங்களில் பாடநெறிகள் மற்றும் மாநாடுகளை ஒழுங்குபடுத்துவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. அதற்கமைய, இலங்கையின் பண்டாரநாயக்க சர்வதேச இராஜதந்திர பயிற்சி நிறுவகம் மற்றும் மாலைதீவின் வெளிநாட்டு சேவைகள் நிறுவகத்திற்கும் இடையில் முன்மொழியப்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்காக வெளிவிவகாரம், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1440170
Checked
Thu, 10/16/2025 - 03:24
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed