2 months 3 weeks ago
செம்மணி குறித்து சர்வதேச விசாரணை அவசியம் - அவுஸ்திரேலியாவில் தமிழர்கள் பேரணி Published By: RAJEEBAN 22 JUL, 2025 | 11:10 AM செம்மணி மற்றும் ஏனைய மனித புதைகுழிகள் குறித்து முழுமையான சர்வதேச விசாரணை அவசியம் என அவுஸ்திரேலியாவில் உள்ள இலங்கை தமிழர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற பேரணியின் போது இலங்கை தமிழர்கள் ஐநா மற்றும் வெளிநாடுகளின் தூதரகங்களிடம் இந்த கோரிக்கையை வலியுறுத்தியுள்ளனர். இது தொடர்பில் தமிழ் ஏதிலிகள் பேரவை தெரிவித்துள்ளதாவது. இலங்கை அரசாங்கத்தினால் நூற்றுக்கணக்கான தமிழர்கள் கடத்தப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டுள்ளமை செம்மணிமனித புதைகுழிகள் மூலம் மீண்டும் தெரியவந்துள்ளதை தொடர்ந்து அவுஸ்திரேலியாவில் உள்ள இலங்கை தமிழர்கள் இது குறித்த கவனத்தை ஈர்க்கும் விதத்தில் நேற்று பேரணியொன்றை முன்னெடுத்தனர். இந்த மனித புதைகுழிகள் தனியானதொரு சம்பவம் இல்லை, அமைதியான விதத்திலும் தண்டனையின் பிடியிலிருந்து விலக்களிக்கப்பட்ட நிலையிலும் தொடரும் இனப்படுகொலையின் ஒரு பகுதியே இந்த மனித புதைகுழிகள். அவுஸ்திரேலியாவிற்கான ஐநா தூதரகத்தின் முன்னாள் ஆரம்பமான பேரணி ஐநா அலுவலகங்களை நோக்கியும் பல தூதரங்களை நோக்கியும் சென்றது. ஐநா அலுவலகத்திடமும் உலக நாடுகளின் தூதரங்களிடமும் தமிழர்கள் சர்வதேச சமூகத்தின் உறுதியான நடவடிக்கை மற்றும் நீதியை கோரும் மகஜர்களை கையளித்தனர். இந்த பேரணியில் இலங்கையில் உள்ள செம்மணி மற்றும் ஏனைய மனித புதைகுழிகள் குறித்து முழுமையான சர்வதேச விசாரணையை ஆரம்பிக்கவேண்டும். செப்டம்பரில் இடம்பெறவுள்ள ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் அமர்வில் இலங்கை தொடர்பில் வலுவான தீர்மானமொன்றை நிறைவேற்றவேண்டும். அமெரிக்கா பிரிட்டன் கனடா போன்று அவுஸ்திரேலியாவும் இலங்கையில் இனப்படுகொலையில் ஈடுபட்ட இலங்கை இராணுவ அதிகாரிகளிற்கு எதிராக பயணதடைகளை விதிக்கவேண்டும். இனப்படுகொலையிலிருந்து உயிர்தப்பியவர்கள் மற்றும் முக்கிய சாட்சிகளிற்கு பாதுகாப்பு மற்றும் புகலிடத்தை வழங்கவேண்டும். இலங்கை இராணுவத்தினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலங்களை விடுவிப்பதற்கான அழுத்தங்களை கொடுக்கவேண்டும். நீண்டகாலமாக தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான ஒடுக்குமுறை சட்டங்களை நீக்குவதற்கான அழுத்தங்களை கொடுக்கவேண்டும். தமிழர்கள் இனப்படுகொலைக்குள்ளானார்கள் என்பதை சர்வதேச சமூகம் அங்கீகரிக்கவேண்டும் போன்ற வேண்டுகோள்களை பேரணியில் கலந்துகொண்டவர்கள் முன்வைத்துள்ளனர். செம்மணி மனித புதைகுழிகள் இனப்படுகொலைக்கான ஆதாரங்கள் மாத்திரமல்ல உலகிற்கான ஒரு அழைப்பு என தெரிவித்துள்ள தமிழ ஏதிலிகள் பேரவையின் பேச்சாளர் ரேணுகா இன்பகுமார் ஒவ்வொரு புதைகுழியும் நீங்கள் நீதிக்காக குரல்கொடுப்பீர்களா அல்லது பாராமுகமாகயிருப்பீர்களா என்ற கேள்வி எனவும் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/220600
2 months 3 weeks ago
துப்பாக்கி, தோட்டாக்கள், போதைப்பொருளுடன் இளைஞன் கைது! 22 JUL, 2025 | 12:45 PM பேலியகொடை பிரதேசத்தில் துப்பாக்கி, தோட்டாக்கள் மற்றும் போதைப்பொருளுடன் இளைஞன் ஒருவர் கிரிபத்கொடை பொலிஸாரால் நேற்று திங்கட்கிழமை (21) மாலை கைதுசெய்யப்பட்டுள்ளார். கிரிபத்கொடை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் பேலியகொடை பிரதேசத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் பயணித்த முச்சக்கரவண்டியில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேக நபரான இளைஞன் கைதுசெய்யப்பட்டுள்ளார். கைதுசெய்யப்பட்டவர் வவுனியாவைச் சேர்ந்த 30 வயதுடைய இளைஞன் ஆவார். சந்தேக நபரான இளைஞனிடமிருந்து ரி - 56 ரக துப்பாக்கி, 30 தோட்டாக்கள் மற்றும் 5 கிராம் 560 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கிரிபத்கொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். https://www.virakesari.lk/article/220608
2 months 3 weeks ago
பிரிக்ஸை மிரட்டும் டிரம்ப்: இந்தியா, சீனா, ரஷ்யா ஓரணியில் திரளுமா? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எந்த நாட்டின் பெயரையும் குறிப்பிடாமல் பிரிக்ஸ் கூட்டமைப்பை குறிவைத்து வருகிறார். 21 ஜூலை 2025 புதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர் பிரிக்ஸ் நாடுகளின் மீது வரிகள் விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் எச்சரித்துள்ளார். இந்தக் குழு விரைவில் முடிவுக்கு வரும் என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார். கடந்த வெள்ளியன்று வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசும்போது பிரிக்ஸ் நாடுகள் அமெரிக்க டாலரின் ஆதிக்கத்தைக் கைப்பற்ற முயற்சித்ததாகக் குற்றம்சாட்டிய டிரம்ப் கடினமான நடவடிக்கை எடுத்ததாகவும் தெரிவித்துள்ளார். எனினும் எந்த நாட்டின் பெயரையும் டிரம்ப் குறிப்பிடவில்லை. பிரிக்ஸ் அமைப்பின் முக்கிய உறுப்பினர்களான இந்தியா, ரஷ்யா மற்றும் சீனா இடையே முத்தரப்பு உறவுகளை மேம்படுத்த முயற்சிகள் எடுக்கப்பட்டு வரும் வேளையில் டிரம்ப்பிடமிருந்து இந்த அச்சுறுத்தல் வந்துள்ளது. சமீபத்திய பிரிக்ஸ் உச்சிமாநாட்டிற்குப் பிறகு, இந்த கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ள நாடுகள் மீது வரிகள் அதிகரிக்கப்படும் என டிரம்ப் எச்சரித்திருந்தார். இந்தியா மற்றும் சீனா இடையேயான உறவுகளை இயல்புநிலைக்கு கொண்டு வர ரஷ்யா தொடர்ந்து முயற்சித்து வருகிறது, சீனாவும் அதற்கு நேர்மறையாக பதிலளித்துள்ளது. சீனா, ரஷ்யா மற்றும் இந்தியா இடையேயான முத்தரப்பு ஒத்துழைப்பு இந்த மூன்று நாடுகளின் நலன்களை மட்டுமல்ல, இந்தப் பிராந்தியம் மற்றும் உலகத்தில் அமைதி, பாதுகாப்பு, நிலைத்தன்மை மற்றும் வளர்ச்சி ஆகியவற்றை பராமரிக்க உதவுகிறது என சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் லின் ஜியான் தெரிவித்துள்ளார். முத்தரப்பு ஒத்துழைப்பை முன்னெடுத்துச் செல்ல ரஷ்யா மற்றும் இந்தியா உடன் பேச்சுவார்த்தை நடத்த சீனா தயாராக இருப்பதாகவும் லின் தெரிவித்துள்ளார். ரஷ்யா-இந்தியா-சீனா (ஆர்ஐசி) அமைப்பை மீண்டும் தொடங்குவது தொடர்பாக இந்தியா மற்றும் சீனா உடன் ரஷ்யா பேச்சுவார்த்தையில் உள்ளது என அந்நாட்டின் துணை வெளியுறவு அமைச்சர் ஆண்ட்ரெய் ருடென்கோ முன்னர் தெரிவித்திருந்தார். இதே கருத்து தொடர்பாக தான் சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் லின் ஜியானும் பேசியிருந்தார். டாலர் மற்றும் பிரிக்ஸ் பற்றி டிரம்ப் என்ன கூறினார்? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, டாலரை வலுப்படுத்துவது பற்றியும் அதனை உலகளாவிய நாணயமாக வைத்திருப்பது பற்றியும் பேசியுள்ளார் டிரம்ப் கடந்த வெள்ளியன்று வெள்ளை மாளிகையில் மசோதாவை ஒன்றைப் பற்றி பேசிய டிரம்ப் அதனை புகழ்ந்ததோடு, இந்த மசோதா அமெரிக்கா டாலரை வலுப்படுத்தும் என்று தெரிவித்திருந்தார். அப்போது பிரிக்ஸ் பற்றி குறிப்பிட்ட டிரம்ப், "பிரிக்ஸ் என்று அழைக்கப்படுகிற சிறிய குழு ஒன்று உள்ளது, அது விரைவில் முடிவுக்கு வர உள்ளது. அது அமெரிக்க டாலர், அதன் ஆதிக்கம் மற்றும் தரங்களைக் கைப்பற்ற முயற்சித்தது. பிரிக்ஸ் தற்போதும் இதைத்தான் விரும்புகிறது." என்றார். "பிரிக்ஸ் குழுவில் உள்ள அனைத்து நாடுகள் மீது 10 சதவிகிதம் வரி விதிக்கப்போவதாக நான் கூறினேன். அதற்கு அடுத்த நாள் அவர்கள் சந்திப்பு நடைபெற இருந்தது, ஆனால் ஒருவருமே வரவில்லை." என டிரம்ப் நகைச்சுவையாக தெரிவித்திருந்தார். டாலரை வலுப்படுத்துவது பற்றியும் அதனை உலகளாவிய நாணயமாக வைத்திருப்பது பற்றியும் பேசிய டிரம்ப், "நாங்கள் டாலரை வீழ்ச்சியடைய விடமாட்டோம். டாலர் உலகளாவிய நாணயம் என்கிற நிலையை நாம் இழந்தால். அது ஒரு உலகப் போரை இழப்பதற்குச் சமம்" எனக் கூறினார். மேலும் அவர், "நான் இந்த பிரிக்ஸ் நாடுகள் குழுவைப் பற்றி கேள்விப்பட்டபோது அவர்கள் மீது கடினமான நிலைப்பாட்டை எடுத்தேன். இந்த நாடுகள் எப்போதாவது ஒன்றாக வந்தால், இந்தக் குழு முடிந்துவிடும்," எனத் தெரிவித்தார். 'டாலருக்குப் பதிலாக புதிய நாணயம்': பிரிக்ஸ் நாடுகளை மிரட்டும் டிரம்ப் - இந்தியாவை பாதிக்குமா? '100% வரி விதிப்போம்' - இந்தியா, சீனா உள்ளிட்ட பிரிக்ஸ் நாடுகளுக்கு டிரம்ப் விடுத்த எச்சரிக்கை - ஏன்? இந்தியா - சீனா உறவை மேம்படுத்தும் மோதியின் எண்ணம் ஈடேறுமா? அமெரிக்கா என்ன செய்கிறது? 17வது பிரிக்ஸ் உச்சிமாநாடு பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் ஜூலை 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இந்த சந்திப்பிற்குப் பிறகு டிரம்ப் கூடுதலாக 10 சதவிகிதம் வரி விதிக்கப்படும் என எச்சரித்திருந்தார். "பிரிக்ஸின் அமெரிக்க எதிர்ப்பு கொள்கைகளுடன் தங்களை தொடர்புபடுத்திக் கொள்ளும் எந்த நாடுகளின் மீதும் 10 சதவிகிதம் கூடுதல் வரி விதிக்கப்படும். இந்த கொள்கையில் எந்த விதிவிலக்கும் இருக்காது" என ஜூலை 7ஆம் தேதியிட்ட சமூக ஊடகப் பதிவில் டிரம்ப் தெரிவித்திருந்தார். அதன் பின்னர் வியாழன் அன்று (ஜூலை 17) வெள்ளை மாளிகையில் டிரம்ப் ஆற்றிய உரையிலும் இந்த அச்சுறுத்தலைக் குறிப்பிட்டிருந்தார். பிரிக்ஸின் நிகழ்ச்சி நிரலில் என்ன இருந்தது? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பிரிக்ஸ் உச்சிமாநாடு பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் ஜூலை 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. பிரிக்ஸ் ரியோ பிரகடனத்தில் உலகளாவிய நிர்வாகம் மற்றும் சர்வதேச நிலைத்தன்மையை மேம்படுத்துவது தொடர்பான பேச்சுக்கள் இருந்தன. இதோடு ஒருதலைபட்சமான வரிகளும் விவாதிக்கப்பட்டன. எனினும் அறிக்கையில் அமெரிக்கா பற்றிய குறிப்பு இல்லை. வர்த்தகப் போக்கை சிதைத்த உலக வர்த்தக நிறுவனத்தின் விதிகளை மீறும் ஒருதலைபட்சமான வரி மற்றும் வரியில்லா நடவடிக்கைகளின் அதிகரித்த பயன்பாடு பற்றி பிரிக்ஸ் நாடுகள் கவலை கொள்வதாக ரியோ பிரகடனம் தெரிவிக்கிறது. இவை போக, ஒருதலைபட்சமான அச்சுறுத்தல் நடவடிக்கைகளைத் திணிப்பது சர்வதேச சட்ட மீறல் மற்றும் ஒருதலைபட்சமான பொருளாதார தடைகள் தீங்கான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் அந்த பிரகடனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக வர்த்தக நிறுவனத்தின் விதிகளின் படி வர்த்தகம் மேற்கொள்ள வேண்டும் என்றும் பலதரப்பு வர்த்தக அமைப்புகள் பற்றியும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. டிரம்ப்பின் அச்சுறுத்தலும் ஆர்ஐசியை வலுப்படுத்தும் முயற்சிகளும் பட மூலாதாரம்,X/DR S JAISHANKAR 2020ஆம் ஆண்டில் இந்தியா மற்றும் சீனா இடையேயான மோதலுக்குப் பிறகு இரு நாடுகளுக்கு இடையேயான உறவுகள் மோசமடைந்தது. அதன்பிறகு ஆர்ஐசி தொடர்பாக எந்த முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை. ஜூலை 17 ஆம் தேதியன்று ஆர்ஐசி அமைப்பை மீண்டும் தொடங்குவது பற்றி வெளியுறவு அமைச்சகம் பரிசீலிப்பதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்ட நிலையில் இது தொடர்பாக எந்த முடிவும் "பரஸ்பரம் சவுகரியமான முறையில்" மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் ஐந்து ஆண்டுகளில் முதல் முறையாக ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டத்தில் கலந்து கொள்ள டியான்ஜினுக்குச் சென்றபோது ஆர்ஐசி பற்றி விவாதிக்கப்பட்டது. "ஒருதலைபட்சவாதம், பாதுகாப்புவாதம் மற்றும் அதிகார அரசியல் மற்றும் அச்சுறுத்தும் போக்கு உலகிற்கு தீவிரமான சவால்களாக உள்ளன" என சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி கடந்த ஜூலை 14 அன்று அமைச்சர் ஜெய்சங்கர் உடனான கூட்டத்தில் தெரிவித்தார். எனவே இரு நாடுகளும் "நல்லிணக்கத்துடன் வாழ்ந்து இருவரும் வெற்றி பெற உதவுவதற்கு" வழிகளை கண்டுபிடிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார். இந்தியா-அமெரிக்கா உறவில் சீனாவின் கருத்து என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இந்தியா மற்றும் சீனா இடையேயான உறவுகளை இயல்புநிலைக்கு கொண்டு வர ரஷ்யா தொடர்ந்து முயற்சித்து வருகிறது, சீனாவும் அதற்கு நேர்மறையாக பதிலளித்துள்ளது. ரஷ்யாவின் எண்ணெய்யை அதிகமாக வாங்கும் நாடுகளில் இந்தியாவும் சீனாவும் ஒன்று. இந்த இரு நாடுகளும் டிரம்ப்பின் 100 சதவிகித கூடுதல் வரி அச்சுறுத்தலை எதிர்நோக்கியுள்ளன. இதன் மூலம் ரஷ்யாவை ஒரு ஒப்பந்தத்திற்கு சம்மதிக்க அழுத்தம் கொடுத்து யுக்ரேன் போரை 50 நாட்களுக்குள் முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா நினைக்கிறது. டிரம்ப்பின் இரண்டாம் ஆட்சிக் காலத்தில் இந்தியா-அமெரிக்கா உறவுகளில் ஏற்பட்ட கசப்புத்தன்மை பற்றி சீன வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ஜூலை 13 அன்று சீன செய்தி ஊடகமான குவான்சாவில் எழுதியுள்ள கட்டுரையில் ஃபுடான் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஜீ சாவோ தற்போது அமெரிக்கா மற்றும் இந்தியா இடையே நடைபெற்று வரும் வர்த்தக மோதல் பற்றி குறிப்பிட்டிருந்தார். அமெரிக்கா, இந்தியாவைக் கட்டுப்படுத்த பாகிஸ்தானைப் பயன்படுத்தும் உத்தியை எடுத்து இரு நாடுகளுக்கும் இடையே "வற்புறுத்தப்பட்ட இணக்கத்தை" ஊக்குவிக்கிறது எனத் தெரிவித்துள்ளார். சீனாவின் முன்னணி விமர்சகரான பேராசிரியர் ஜின் கன்ரோங் இது போன்ற கருத்தை தெரிவித்துள்ளார். "இந்தியா-அமெரிக்க உறவுகள் மோசமடைந்து வரும் நிலையில் அமெரிக்கா மற்றும் பாகிஸ்தான் இடையேயான உறவுகள் சமீபத்தில் மேம்பட்டுள்ளன" என்றார். ஜூன் மாதம் கனடாவில் ஜி-7 உச்சிமாநாட்டில் கலந்து கொண்டபோது பிரதமர் நரேந்திர மோதி டிரம்பை சந்திக்க தவறினார். அதன் பிறகு டிரம்ப் பாகிஸ்தான் ராணுவ தளபதி ஃபீல்ட் மார்ஷல் அசிம் முனிரை வெள்ளை மாளிகையில் வைத்து சந்தித்ததால் இந்தியா மேலும் ஏமாற்றமடைந்தது. பிரிக்ஸ் நாடுகள் டாலருக்கு மாற்றைத் தேடுகின்றவா? பட மூலாதாரம்,GETTY IMAGES சீனா மற்றும் ரஷ்யா உடனான அமெரிக்காவின் உறவுகள் பதற்றமாக உள்ளன. யுக்ரேன் மீதான ரஷ்யாவின் தாக்குதலுக்குப் பிறகு சீனாவும் ரஷ்யாவும் நெருக்கமாகியுள்ளதாக வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். இருநாடுகளும் அமெரிக்கா ஆதிக்கம் செலுத்தும் உலக ஒழுங்கை நிராகரிப்பது பற்றியும் பல்முனை உலகை உருவாக்குவது பற்றியும் பேசுகின்றன உலகில் நீண்ட காலமாக அமெரிக்காவின் நாணயமான டாலரின் ஆதிக்கத்திற்கு சவால்விட இருநாடுகளும் முயற்சி செய்வதற்கு இது தான் காரணம் 2023ஆம் ஆண்டு சீன அதிபர் ஜீ ஜின்பிங் தான் ஆசியா, ஆப்ரிக்கா மற்றும் தென் அமெரிக்க நாடுகளுடன் டாலருக்குப் பதிலாக சீன நாணயமான யுவானில் வர்த்தகம் செய்ய விரும்புவதாக தெரிவித்திருந்தார். சீனா ஏற்கெனவே ரஷ்யாவுடன் யுவானில் தான் வர்த்தகம் செய்து வருகிறது. ரஷ்யாவும் அதே தான் செய்து வருகிறது, ஏனென்றால் அமெரிக்காவும் மேற்குலக நாடுகளும் அதன் மீது கடுமையான பொருளாதார தடைகளை விதித்துள்ளன. அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், பிரிட்டன் மற்றும் அதன் கூட்டாளிகள் பல ரஷ்ய வங்கிகளை முக்கியமான சர்வதேச பேமெண்ட் அமைப்பான ஸ்விஃப்டில் இருந்து விலக்கியுள்ளன. பிபிசியின் 2024ஆம் ஆண்டின் பிபிசி இந்தியின் செய்தியின்படி வெளிநாட்டு விவகார வல்லுநர் மற்றும் தி இமேஜ் இந்தியா இன்ஸ்டிட்யூடின் தலைவருமான ரபிந்திர சச்தேவ் கூறுகையில், "பிரிக்ஸ் நாடுகள் இதைச் செய்ய முயற்சித்து வருகின்றன. அவர்களால் மாற்று நாணயத்தை உருவாக்க முடியவில்லையென்றாலும் அவர்கள் குறைந்தபட்சம் ஒரு நிதி வலையமைப்பை உருவாக்க முயற்சிக்கின்றன" "ஸ்விஃப்ட் பேங்கின் இண்டர்நேஷனல் அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் மேற்குலக நாடுகளால் ஆதிக்கம் செலுத்தப்படுகிறது. எந்த நாட்டின் மீதும் பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டால் அவை இந்த அமைப்பிலிருந்து விலக்கி வைக்கப்படும்" என்றார். "ரஷ்யா மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதார தடைகளைப் பார்க்கையில், தங்களுடைய வங்கிகளும் எதிர்காலத்தில் முடக்கப்படலாம் என பிரிக்ஸ் நாடுகள் அச்சம் கொள்கின்றன. இதனால் அவை ஒரு நிதி வலையமைப்பை உருவாக்க முயற்சிக்கின்றன" எனத் தெரிவித்தார். நிஜமாகவே டாலரின் மாற்றுக்கான தேடல் உள்ளதா? இந்தக் கேள்விக்குப் பதிலளித்த ரபிந்திர சச்தேவ், "பிரிக்ஸ் நாடுகள் அத்தகைய ஒன்றை திட்டமிட்டு வருகின்றன, ஆனால் அது கூடிய விரைவில் நடக்கப்போவதில்லை. எனினும் சில முன்னெடுப்புகள் தொடங்கப்பட்டுள்லன. பிரேசில் உடன் யுவானில் வர்த்தகம் செய்கிறது சீனா. சவுதி அரேபியா உடன் நாணயம் தொடர்பான ஒப்பந்தம் ஒன்றை கையெழுத்திட்டுள்ளது சீனா, இந்தியா ரஷ்யாவுடன் இதே போன்ற ஒப்பந்தம் ஒன்றை கையெழுத்திட்டுள்ளது. இத்தகைய போக்குகள் தொடங்கிவிட்டன" எனத் தெரிவித்தார். ஆனால் டாலருக்கு எதிராக வேறு நாணயத்தை நிறுத்துவது என்பது அசாத்தியமானது என ரபிந்திர சச்தேவ் நம்புகிறார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cp86gkzrlv6o
2 months 3 weeks ago
வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையம் கொலைக் களமா? - போராட்டத்தில் குதித்த மக்கள்! 22 JUL, 2025 | 03:36 PM வட்டுக்கோட்டை பொலிஸாரின் அடாவடியான செயற்பாடுகளுக்கும், தமக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கும் நீதி கோரி, இன்றைய தினம் (22) மூளாய் பகுதி மக்கள் யாழ்ப்பாண மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபரின் அலுவலகத்துக்கு முன்னால் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தெரிவிக்கையில், மூளாயில் உள்ள மதுபான நிலையம் ஒன்றுக்குள் இடம்பெற்ற மோதல் சம்பவமே கடந்த சில தினங்களுக்கு முன்னர் இடம்பெற்ற வன்முறைக்கு காரணமாக அமைந்துள்ளது. மதுபான நிலையத்தில் வைத்து எமது பகுதியைச் சேர்ந்தவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டபோது எமது பகுதியைச் சேர்ந்த இன்னொருவர் எழுந்து ஏன் அவரை தாக்குகின்றீர்கள் என கேட்டபோது அவரையும் தாக்கி படுகாயம் ஏற்படுத்தினர். இதனால் தாக்குதலுக்கு உள்ளானவரின் மகன்கள் இருவர் மதுபான நிலையத்துக்கு கல்வீச்சுத் தாக்குதல் மேற்கொண்டனர். பின்னர் காயமடைந்த எமது பகுதியைச் சேர்ந்த இருவரும் வைத்தியசாலைக்கு சென்று சிகிச்சை பெற்றுவிட்டு வந்தபோது பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடு பதிவு செய்வதற்கு சென்றபோது பொலிஸார் முறைப்பாடு பதிவு செய்யவில்லை. ஆனால், தாக்குதல் நடாத்திய ஒருவரை கைது செய்து வைத்திருந்தனர். தாக்குதல் நடாத்திய மற்றவர்களையும் அழைத்து, எமது தரப்பினரையும் அழைத்து விசாரணை செய்யுமாறு நாங்கள் கோரினோம். ஆனால் பொலிஸ் அதனை செய்யவில்லை. எங்களை பொலிஸ் நிலையத்தில் இருந்து விரட்டியடித்தனர். பின்னர் எமது பகுதியைச் சேர்ந்த ஒருவர் வேலை முடிந்து வரும்போது மற்றைய குழுவினர் பிடித்துச் சென்று அவர் மீது கொடூர தாக்குதல் நடாத்தினர். பின்னர் நாங்கள் சம்பவம் அறிந்து சென்றபோது அவரை பொலிஸாரிடம் ஒப்படைத்தனர். பொலிஸார் அவரை பொலிஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றவேளை ஏற்கனவே தாக்குதலுக்கு உள்ளானதால் அவர் பொலிஸ் நிலையத்தில் மயங்கி விழுந்தார். அவரை வைத்தியசாலைக்கு அனுப்புமாறு கோரியவேளை பொலிஸார் தகாத வார்த்தையால் எம்மை திட்டி, எம்மையும் இப்படித்தான் தாங்கள் தாக்கிவிட்டு உள்ளே தூக்கிப் போடுவோம் எனக் கூறினர். பின்னர் நாங்கள்தான் நோயாளர் காவு வண்டியை அழைத்து அவரை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றோம். பொலிஸார் மயங்கிய நபரை வைத்தியசாலைக்கு கூட கொண்டு செல்ல முன்வரவில்லை. இதற்கு பின்னர்தான் ஞாயிற்றுக்கிழமை கலவரம் ஏற்பட்டது. அவர்கள் ஒரு குழுவாக இணைந்து எமது ஊருக்குள் தாக்குதல் நடாத்துவதற்கு வரும்போதே எமது ஊர் மக்கள் இணைந்து அவர்களை விரட்டியடித்துவிட்டு கலவரத்தில் ஈடுபட்டனர். வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு புதிய பொறுப்பதிகாரி வந்த பின்னர் பொலிஸ் காவலில் வைத்து ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டார். பொன்னாலை பகுதியில் பெண் தலைமைத்துவ குடும்பம் ஒன்றில் மாணவர் ஒருவர் தனது உழைப்பில் தனது வீட்டில் குழாய் கிணறு அமைக்கும்போது அங்கு சென்ற பொலிஸார் அது தவறான விடயம் என கூறி இலஞ்சம் பெற்றுச் சென்றனர். பொன்னாலை பகுதியில் இருந்து சந்தேக நபர் ஒருவரை கிராம சேவகர், பிரதேச செயலர் ஆகியோர் பொலிஸாரிடம் ஒப்படைத்த நிலையில் அவர் சில தினங்களுக்கு பின்னர் பொன்னாலையில் புதர் ஒன்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். இதுபோன்ற பல சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. எனவே, இந்த பொறுப்பதிகாரி எமக்குத் தேவையில்லை. ஒரு திறமையான பொறுப்பதிகாரியை எமது பொலிஸ் நிலையத்திற்கு வழங்குங்கள். இந்த பொலிஸ் பொறுப்பதிகாரியால் எமது மக்களுக்கு சீரான சேவையை வழங்க முடியாது என்றனர். மக்களையும் யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரையும், உதவி பொலிஸ் அத்தியட்சகரையும், வட்டுக்கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியையும், அழைத்த யாழ்ப்பாணம் மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியை கடுமையாக எச்சரித்து, உடனடியாக சந்தேக நபர்களை கைது செய்யுமாறு உத்தரவிட்டார். https://www.virakesari.lk/article/220637
2 months 3 weeks ago
2 months 3 weeks ago
2 months 3 weeks ago
2 months 3 weeks ago
அப்பலோ தனது வேலையை சரியாகவே செய்து முடிக்கும். நல்ல செய்திக்கு இடமுண்டு.
2 months 3 weeks ago
இலங்கை – சிங்கப்பூர் செயற்கை நுண்ணறிவுத் திட்டம் : அமைச்சரவை ஒப்புதல். இலங்கையில் செயற்கை நுண்ணறிவு (AI) துறையின் மேம்பாடு மற்றும் மூலோபாய முன்னேற்றத்திற்காக, சிங்கப்பூர் செயற்கை நுண்ணறிவு திட்டம் (AI Singapore) உடன் ஒத்துழைப்பு ஏற்படுத்தும் முன்மொழிவுக்கு அமைச்சரவை இன்று (22) அதிகாரப்பூர்வமாக ஒப்புதல் வழங்கியுள்ளது. சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் AI Singapore திட்டத்துடன், இலங்கையின் செயற்கை நுண்ணறிவு வளர்ச்சியை விரைவுபடுத்தும் நோக்கில் விரிவான கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. இதன் தொடர்ச்சியாக, இரு நாடுகளுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) ஒன்றை கையெழுத்திட்டு, இந்த ஒத்துழைப்பை சட்டரீதியாக உறுதிப்படுத்த அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. இதற்கமைய, இலங்கையின் டிஜிட்டல் பொருளாதார அமைச்சகம் மற்றும் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம் இடையே MoU ஒன்றை கையெழுத்திட ஜனாதிபதி முன்வைத்த யோசனைக்கும் அமைச்சரவை தனது அங்கீகாரத்தை வழங்கியுள்ளது. இந்த ஒத்துழைப்பு, இலங்கையின் டிஜிட்டல் மாற்றம் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்தில் ஒரு முக்கியமான மைல் கல்லாக அமைவுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1440134
2 months 3 weeks ago
சீமான், விஜய்க்கு மீண்டும் அழைப்பு விடுத்த எடப்பாடி பழனிசாமி! தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே இருக்கும் நிலையில் தமிழக தேர்தல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கி விட்டது. குறிப்பா அரசியல் கட்சிகள் இடையே கூட்டணி பேச்சுவார்த்தைகளும் தற்போது மும்முரமாக இடம்பெற்று வருகின்றன. அதிமுக-பாஜக கூட்டணியில் சேர சீமான் மற்றும் விஜய்-க்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் அழைப்பு விடுத்துள்ளார். தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ்இ ம.தி.மு.க. விடுதலை சிறுத்தைகள்இ கம்யூனிஸ்டு உள்ளிட்ட கட்சிகள் உள்ளன. இந்த கூட்டணி கடந்த 2017-ம் ஆண்டு முதல் நீடித்து வருகிறது. தற்போது கூடுதலாக கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியும் திமுக கூட்டணியில் இணைந்துள்ளது. அதேபோல் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அ.தி. மு.க. இணைந்திருந்தாலும் தமிழகத்தை பொறுத்தவரை அ.தி.மு.க. தலைமையில்தான் கூட்டணி என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கூட்டணியில் சேர சீமான் மற்றும் விஜய்-க்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் அழைப்பு விடுத்துள்ளார். இதுதொடர்பாக ஊடகமொன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:- 2026-ல்தமிழக மக்கள் ஒற்றைக் கட்சி ஆட்சியை மட்டுமே எதிர்பார்க்கிறார்கள். திமுகவை தோற்கடிக்க அனைத்து ஒத்த எண்ணம் கொண்ட கட்சிகளும் அதிமுகவுடன் கைகோர்க்க வேண்டும். ஒத்த கருத்துடைய கட்சிகள் எங்களுடன் கூட்டணிக்கு வரலாம் என்ற கருத்து விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் மற்றும் சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு பொருந்தும். இதுவரை தவெகவுடன் எந்த பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை. மக்களின் துன்பங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புரிந்து கொள்ளவில்லை. ஆட்சியில் பங்கு கொடுக்க நாங்கள் ஏமாளிகள் அல்ல என்பதை பாஜக தலைமைக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் நான் கூறவில்லை. அதிமுகவை பாஜக விழுங்கிவிடும் என திமுக கூட்டணி கட்சிகள் கூறி வந்ததற்கு பதிலளிக்கவே அப்படி பேசினேன்” எனத் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2025/1440105
2 months 3 weeks ago
காசா விவகாரம்: இஸ்ரேலுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த உலக நாடுகள் ! காசா பகுதியில் இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான போர் தொடர்ந்து தீவிரமடைந்து வரும் நிலையில், ஐக்கிய இராச்சியம், பிரான்ஸ் மற்றும் கனடா போன்ற முக்கிய நாடுகள் போரை உடனடியாக நிறுத்துமாறு இஸ்ரேலுக்கு வலியுறுத்தி வருகின்றன. குறிப்பாக காசாவின் முக்கிய நட்பு நாடுகளாகக் கருதப்படும் ஐக்கிய இராச்சியம்,பிரான்ஸ் மற்றும் கனடா ஆகிய நாடுகள், இஸ்ரேலின் தொடர்ச்சியான தாக்குதல்கள் குறித்து தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளன. நிலைமை சீராகாவிட்டால் ‘தக்க நடவடிக்கைகள்’ எடுக்கப்படும் என இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு இந்த நாடுகள் எச்சரித்துள்ளதாகத் தெரிகிறது. அதேசமயம் அமெரிக்கா, இஸ்ரேலின் முக்கிய நட்பு நாடாக இருந்தாலும், காசாவில் போர் நிறுத்தத்திற்கு அழுத்தம் கொடுத்து வருகிறது. குறிப்பாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், காசாவில் உடனடி போர் நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்து வருகின்றார். காசா போர் 21 மாதங்களுக்கும் மேலாக நீடித்து வருகிறது. இந்த மோதலில் 57,000க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்களும்,1,700க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்களும் கொல்லப்பட்டுள்ளனர். இதில் பெரும்பாலானோர் பொதுமக்கள், குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது. பல உலக நாடுகள், இந்த மனிதாபிமான பேரழிவை முடிவுக்குக் கொண்டுவர இஸ்ரேல் மீது சர்வதேச அழுத்தங்களை அதிகரிக்க வேண்டும் என்று கோரி வருகின்றன. காசாவில் ஒரு நிரந்தர போர் நிறுத்தம் ஏற்படாவிட்டால், பிராந்தியத்தில் அமைதி திரும்புவது கடினம் என்பதே சர்வதேச சமூகத்தின் பொதுவான கருத்தாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1440098
2 months 3 weeks ago
அடுத்த முதல்வர் யார்.... கனிமொழியா, உதயநிதியா. நாளைக்கு... பங்காளி சண்டை வரக்கூடாது என்பதற்காக, இப்பவே உயில் எழுதி வைப்பது நல்லது.
2 months 3 weeks ago
அண்ணன் பார்த்தாலே ஆம்பிளை கூட கர்ப்பம் கன்பர்ம்டா 🔥🔥🔥 இவ்வண், தம்பிகள்
2 months 3 weeks ago
முப்பது வயதிற்குள் புலியில் போராடி, புனர்வாழ்வு அளித்து..... இவர்கள் கதை புனையும்போது மற்றவர்கள் முட்டாள்கள் என்று நினைத்து புனைகிறார்களா அல்லது முட்டாள்தனமாக புனைகிறார்களா? இவர்களது கதையை பார்க்கும்போது இவர்கள் தங்கள் முட்டாள் கதைகளை மற்றவர்கள் நம்ப வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள்.
2 months 3 weeks ago
2 months 3 weeks ago
எங்களுக்கு இங்கு ஒரு இந்தியத் தமிழ் குடும்பம் அறிமுகமாகிப் பழகிவருகிறோம். இளம்குடும்பம், நேற்று அவர்கள் எங்களைச் சந்திக்க வந்தபோது இட்லி அவித்துக் கொண்டுவந்தார்கள் நான் 3இட்லி சாப்பிட்டேன். இது பொ்யாகவோ, கேலிக்காகவோ எழுதவில்லை. சத்தியமாக உண்மை.
2 months 3 weeks ago
ஆம் நான் இந்த இயந்திரத்தினுள் போயிள்ளேன். கட்டயம் உலோகங்கள் ஏதும் உடலில் இருந்தால் கலட்டி விடுமாறு அறிவுறுத்துவார்கள். 90களில் இருந்து வரும் இந்த படத்தில் உள்ள எல்ல பாகமும் பார்த்துள்ளேன். இது கடசியாக கடந்த மாதம் வந்தது. இங்கு கொழும்பில் பார்த்தேன்
2 months 3 weeks ago
காசாவில் உணவு குடிநீர் போன்றவற்றை பெற முயலும் சிறுவர்கள் கூட கொல்லப்படுகின்றனர் - உலக நாடுகள் கடும் கண்டனம் - யுத்தத்தை நிறுத்துமாறு வேண்டுகோள் 22 Jul, 2025 | 11:25 AM காசா யுத்தம் தொடர்பில் இஸ்ரேலை கடுமையாக சாடியுள்ள 25 நாடுகள் யுத்தத்தை உடனடியாக முடிவிற்கு கொண்டுவரவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர். பிரிட்டன் ஜப்பான் கனடா அவுஸ்திரேலியா உட்பட 25 நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளனர். காசா மக்களின் துயரங்கள் முன்னர் இல்லாத அழவிற்கு தீவிரமடைந்துள்ளன என தெரிவித்துள்ள அவர்கள்அடிப்படை தேவைகளான உணவு குடிநீர் போன்றவற்றை பெற முயலும் சிறுவர்கள் உட்பட பொதுமக்கள் மனிதாபிமானமற்ற முறையில் கொல்லப்படுவதையும்,மிகச்சிறிய அளவில் மனிதாபிமான உதவிகள் வழங்கப்படுவதையும் கண்டித்துள்ளனர். மனிதாபிமான உதவி பொருட்களை பெற முயன்ற 800 பொதுமக்கள் கொல்லப்பட்டமை பயங்கரமானது என தெரிவித்துள்ள 25 நாடுகளும் இஸ்ரேலிய அரசாங்கம் மனிதாபிமான உதவியை வழங்குவதற்கு பயன்படுத்தும்முறை ஆபத்தானது இது ஸ்திரமின்மையை உருவாக்குவதுடன் காசா மக்களின் மனிததன்மையை பறிக்கின்றது என தெரிவித்துள்ளன. https://www.virakesari.lk/article/220603
2 months 3 weeks ago
அரசு இந்த முடிவு எடுக்க காரணம். யாரோ ஒரு பெண் குழந்தையை பெற்று வயல் வெளியில் வீசி விட்டு சென்றதினால் தான். மிருகங்கள் கூட இப்படி செய்யாதே. ஆண்சிங்கம், பெண்சிங்கம் என்ன்றில்லை. கிறிமினல் வேலை செய்ய ஆண் பெண் இருபாலரிலும் இருக்கின்றார்கள்.
2 months 3 weeks ago
ரமேஷ் என்பவருக்கு தற்போது 30 வயது என்று தெரிகிறது. இன்னமும் பால்குடி மறக்கவில்லையா.??🤔
Checked
Thu, 10/16/2025 - 00:21
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed