புதிய பதிவுகள்2

ஐரோப்பாவில் விமானி உரிமம் பெற்ற மன்னார் இளைஞன்!

2 months 3 weeks ago
பாராட்டுக்கள்! ஆனால் இது ஏன் ஆதவன் செய்தியாக வருமளவு அதிசயமென எனக்கு விளங்கவில்லை! ஊர்ச்சங்கங்களின் வேலையாக இருக்குமோ😂? நான் அறிந்த வரையில், பல ஆண்டுகளாக சில ஈழத்தமிழர்கள் பாரிய தாரை (jet) இயந்திரங்களைக் கொண்ட பயணிகள்/சரக்கு விமானங்களை இயக்கும் கப்ரன் தர விமானிகளாக இருந்து வருகிறார்கள். கேணல் சங்கர், கனடா எயார் இல் சரக்கு விமானங்களை இயக்கிய ஒரு கப்ரன் என நினைக்கிறேன். இந்த தம்பி பெற்றிருப்பது, பயிர்களுக்கு மருந்தடிக்கும் (dusting) சிறிய விமானங்களை அவை ஒன்றுக்கு மேற்பட்ட இயந்திரங்களைக் கொண்டிருந்தால் இயக்கும் அனுமதிப் பத்திரம். இந்த லைசென்சை வைத்துக் கொண்டு சில பயணிகள் விமான சேவைகள் இன்னும் பயன்படுத்தும் turboprop விமானங்களையும் இயக்க முடியாது. ஏன் இவ்வளவு ஆர்ப்பாட்டமென்று விளங்கவில்லை!

புனர்வாழ்வு பெற்ற விடுதலைப் புலி உறுப்பினர் கொழும்பில் துப்பாக்கியுடன் கைது

2 months 3 weeks ago
கொழும்பில் ஒரு தமிழர் துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டார். அவர் வழங்கிய தகவலின் பேரில் வவுனியாவில் ஒரு வீட்டில் 5600 போதை மாத்திரைகள் , 10கிராம் ஐஸ் போதைப் பொருள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன. இது முழுக்க முழுக்க பாதாள உலக கோஸ்டியினரின் போதைப் பொருள் கடத்தல் கும்பல் என்று தெரிந்தும் வேண்டுமென்றே மீண்டும் புலிகள் என்று வதந்தி பரப்பப்படுகிறது. கைது செய்யப்பட்ட பிள்ளையான் வழங்கிய தகவலின் பேரில் ஈஸ்டர் குண்டு தாக்குதல் தொடர்பாக பலர் கைது செய்யப்பட்டு வருகின்றனர். அடுத்து சுரேஸ்சாலே எந்நேரமும் கைது செய்யப்படலாம் என்ற நிலை உருவாகியுள்ளது. இதனால் தமக்கு ஆபத்து வந்துவிட்டது என்பதை உணர்ந்த கோத்தபாயா கும்பல் அதில் இருந்து தப்புவதற்காக மீண்டும் புலிகள் என்ற வதந்தியைப் பரப்புகின்றனர். இதற்காக அவர்கள் ஒரு தாக்குதலைக்கூட தென்னிலங்கையில் நிகழ்த்தலாம் என்பதால் அரசு இதற்கு இடங்கொடாது விரைந்து கோத்தபாயாவை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். தோழர் பாலன்

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி விடுதலை விருட்சம் நாட்டும் நிகழ்வு

2 months 3 weeks ago
விடுதலை நீர் தந்து தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை நோக்கிய பயணத்தில் இணையுங்கள் - வேலன் சுவாமி Published By: RAJEEBAN 22 JUL, 2025 | 03:59 PM விடுதலைநீர் தந்து தமிழ் அரசியல்கைதிகளின் விடுதலையை நோக்கிய பயணத்தில் இணையுங்கள் என பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி அமைப்பின் ஏற்பாட்டாளர் தவத்திரு வேலன் சுவாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஏற்பாட்டில் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை நோக்கிய பயணம் தொடர்ந்துகொண்டிருக்கின்றது. ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்ட விடுதலை விருட்சம் என்கின்ற தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை நோக்கியும் தமிழ் இனத்தின் விடுதலையை நோக்கியதுமான அந்த பயணம் இன்று விடுதலை விருட்சத்திற்கு நீர்வழங்கி அனைவரும் பேராதரவு கொடுத்து, விடுதலை மரத்தை வளர்த்தெடுக்கவேண்டும். விடுதலைக்காக நாங்கள் அனைவரும் எங்களை அர்ப்பணிக்கும்போதுதான் அதுசாத்தியமாகும். தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையாகயிருக்கட்டும் தமிழ் இனத்தின் விடுதலையாகயிருக்கட்டும், எங்கள் இனத்திற்காக எங்களை நாங்கள் அர்ப்பணிப்பதற்கான அடையாளமாக இந்த விடுதலை விருட்சம், தமிழர் தாயகத்தின் எட்டு மாவட்டங்களிலும் நாட்டப்படயிருக்கின்றது. அந்த விடுதலை விருட்சங்களிற்கு நீர் ஊற்றிவளர்க்கவேண்டிய அடிப்படை உணர்வை இந்த விடுதலை நீர் வழங்குதல் எடுத்துக்காட்ட இருக்கின்றது. கிட்டுபூங்காவில் 24, 25ம் திகதிகளில் நடைபெறவிருக்கின்ற இந்த விடுதலையை நோக்கிய போராட்டத்திலே அனைத்து உறவுகளும் கலந்துகொள்ளும் விதத்திலும், ஊர்தியொன்று ஒவ்வொரு பிரதேசமாக வலம்வரயிருக்கின்றது. அந்த ஊர்திக்கு அந்த பிரதேசங்களில் இருக்கின்ற மக்கள் பேராதரவை வழங்கி, விடுதலை நீரை வழங்கி அந்த விடுதலை நீர் சேகரிக்கப்பட்டு, தாயகத்தின் எட்டு மாவட்டங்களிலும் நாட்டப்படுகின்ற விடுதலை விருட்சங்களிற்கு வழங்கப்படவிருக்கின்றது. ஆகவே தமிழர்களாக நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து எமது உறவுகளின் விடுதலைக்காகவும் இனத்தினது தேசத்தினது விடுதலைக்காகவும் ஒன்றுபடுவதற்கான முயற்சியை குரல்அற்றவர்களின் குரல் அமைப்பு ஏற்படுத்தியுள்ளது. ஆகவே எமது உறவுகள் பெருமளவிலே திரண்டு இதற்கு ஆதரவு வழங்கவேண்டும், விடுதலை நீரை வழங்கி ஆதரவு செய்யவேண்டும். 24, 25 ம்திகதிகளில் கிட்டு பூங்காவிற்கு வருவதன் ஊடாக அங்கு பெரிய மக்கள் எழுச்சியை ஏற்படுத்துவதன் ஊடாக எமது தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை நாங்கள் சாத்தியமாக்கி தொடர்ந்து இனத்தின் விடுதலையை நோக்கி நாங்கள் பயணிக்க முடியும். https://www.virakesari.lk/article/220640

உள்நாட்டு யுத்தத்தின் இறுதி பகுதியில் சரணடைந்தவர்களின் பெயர் விபரங்களை இலங்கையின் காணாமல்போனோர் அலுவலகம் பெற்று வெளியிடுவதை உறுதிப்படுத்துங்கள் - ஐநா அமைப்பிற்கு சர்வதேச மன்னிப்புச்சபை பரிந்துரை

2 months 3 weeks ago
Published By: RAJEEBAN 22 JUL, 2025 | 02:57 PM இலங்கையின் உள்நாட்டு மோதலின் முடிவில் சரணடைந்தவர்களின் பெயர் விபரங்களை பெற்று வெளியிடுவதன் மூலம் காணாமல்போனோர் அலுவலகம் காணாமல்போனோரை தேடுவதற்கான அதன் ஆணையை நிறைவேற்றுவதில் குறிப்பிடதக்க முன்னேற்றத்தை காண்பிக்கவேண்டும் என சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது. பலவந்தமாக காணாமலாக்கப்பட்டவர்கள் தொடர்பில் ஐக்கியநாடுகள் குழுவிற்கு சமர்ப்பித்துள்ள 22 பக்க அறிக்கையில் சர்வதேச மன்னிப்புச்சபை இதனை தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகளின் பலவந்தமாக காணாமல்போனோர் தொடர்பான குழுவின் 29 வது அமர்வு செப்டம்பர் 22 முதல் ஒக்டோபர் 3ம் திகதி வரை நடைபெறவுள்ள நிலையிலேயே சர்வதேச மன்னிப்புச்சபைதனது அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. இந்த அமர்வில் ஐநாவின் குழு பலவந்தமாக காணாமல்போதலில் இருந்து அனைத்து நபர்களையும் பாதுகாப்பது தொடர்பான சர்வதேச உடன்படிக்கையின் இன் கீழ் இலங்கை தனது கடப்பாடுகளை எவ்வாறு நிறைவேற்றியுள்து என்பது குறித்து ஆராயவுள்ளது. இலங்கை இந்த உடன்படிக்கையை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் பல பரிந்துரைகளையும் அவதானிப்புகளையும் சர்வதேச மன்னிப்புச்சபை22 பக்க அறிக்கை முன்வைக்கின்றது. சர்வதேச மன்னிப்புச்சபை மேலும் தெரிவித்துள்ளதாவது இலங்கையின் உள்நாட்டு மோதலின் முடிவில் சரணடைந்தவர்களின் பெயர் விபரங்களை பெற்று வெளியிடுவதன் மூலம் - பலவந்தமாக காணாமலாக்கப்படுதலில் தொடர்புபட்ட படையினர் மற்றும் பிற குற்றவாளிகளிடம் இது வரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் குறித்த புதுப்பிக்கப்பட்ட தகவல்களை வழங்குவதன் மூலம் காணாமல்போனோர் அலுவலகம் காணாமல்போனோரை தேடுவதற்கான அதன் ஆணையை நிறைவேற்றுவதில் குறிப்பிடதக்க முன்னேற்றத்தை காண்பிப்பதை உறுதிப்படுத்தவேண்டும். தொடரும் மனித புதைகுழி அகழ்வுகள் தொடர்பில் மிகவும் அவசரமாக காணாமல்போனவர்கள் அலுவலகம் வெளிநாட்டு தொழில்நுட்ப நிபுணத்துவத்தை கேட்டுப்பெற்றுக்கொள்வதை உறுதிப்படுத்தவேண்டும். காணாமல்போனவர்களின் அலுவலகத்திற்கு வழங்கப்பட்ட ஆணையை நிறைவேற்றுவதில் காணாமல்போனவர்களின் அலுவலகம் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை காண்பிக்காதமைக்கு அதன் தலைமைத்துவத்தை பொறுப்புக்கூறலிற்கு உட்படுத்துங்கள்.அதன் நடவடிக்கைகள் குறித்து ஒழுங்கமைக்கப்பட்ட மாற்றங்களை மேற்கொள்ளுங்கள்அந்த அலுவகத்திற்கு நியமிக்கப்படுபவர்கள் திறமைசாலிகள் அர்ப்பணிப்புள்ளவர்கள் சுயாதீனமானவர்களாக விளங்குவதை உறுதி செய்யுங்கள். பல தசாப்தங்களாக பதில்களைக் கோரும் காணாமல் போனவர்களின் குடும்பங்களின் கோரிக்கைகளை அவசரமாகவும் உண்மையாகவும் கவனத்தில் கொள்ள வேண்டும். காணாமல்போனவர்கள் எங்கிருக்கின்றாகள் தெளிவுபடுத்தாமல்,அவர்கள் உள்ள இடத்தை சுயாதீனமாக ஆராயாமல், காணாமல்போனமைக்கான சூழ்நிலைகளை தெரிவிக்காமல்,உயிருடன் இல்லை என உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மனித எச்சங்களை அவர்களின் குடும்பத்தவர்களிடம் வழங்காமல் இது தொடர்பான விடயத்திற்கு அதிகாரிகள் முடிவை காணமுயலக்கூடாது. பாதிக்கப்பட்டவர்களின் உண்மை நீதி மற்றும் இழப்பீட்டிற்கான உரிமைகளிற்கு அதிகாரிகள் முன்னுரிமை வழங்கவேண்டும்,அவற்றை மதிக்கவேண்டும்,அதற்கு உதவவேண்டும். நிறுவனத்திற்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் இடையே நிலவும் நம்பிக்கை மற்றும் அறிவு இடைவெளியைக் குறைக்க இன்னும் பல தொலைநோக்குப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். https://www.virakesari.lk/article/220633

கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் காலமானார்

2 months 3 weeks ago
"மார்க்சிஸ்ட் தலைமையை மீறி கூடங்குளம் போராட்டத்திற்கு ஆதரவு" - அச்சுதானந்தன் கண்ட போராட்ட களங்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் முரளிதரன் காசி விஸ்வநாதன் பிபிசி தமிழ் 5 மணி நேரங்களுக்கு முன்னர் கேரள மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சராகவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவராகவும் இருந்த வி.எஸ். அச்சுதானந்தன், மாநில எல்லைகளைத் தாண்டியும் சுற்றுச்சூழல் பிரச்னைகளில் ஆர்வம் காட்டியவர். கட்சியின் நிலைப்பாட்டைத் தாண்டியும் கூடங்குளம் அணு உலை போராட்டத்துக்கு ஆதரவு அளித்தவர். கேரள மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரான வேலிக்ககத்து எஸ். அச்சுதானந்தன், முதுமையின் காரணமாக திருவனந்தபுரத்தில் உள்ள மருத்துவமனையில் ஜூலை 21ஆம் தேதி உயிரிழந்தார். கடைசி சில நாட்கள் வரை மிகுந்த ஆரோக்கியத்துடன் இருந்த அச்சுதானந்தன், மூச்சுத் திணறல் காரணமாக ஜூன் 23ஆம் தேதி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். கேரளாவின் ஆலப்புழாவில் உள்ள கடற்கரையோர கிராமமான புன்னப்ராவில் 1923ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 20ஆம் தேதி சங்கரன் - அக்கம்மா தம்பதிக்குப் பிறந்தார். தாயை நான்கு வயதிலும் தந்தையை பதினொரு வயதிலும் இழந்த அச்சுதானந்தன் ஏழாம் வகுப்போடு கல்வியை நிறுத்திக்கொண்டு, 11 வயதிலேயே வேலைக்குச் செல்லும் நிலைமைக்குத் தள்ளப்பட்டார். அந்த தருணத்தில் தீவிரமாக இருந்த இந்திய விடுதலைப் போராட்டம், தொழிலாளர் இயக்கங்கள் அவரைத் தீவிரமாக ஈர்த்தன. 1940ஆம் ஆண்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்த அவர், சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு சில ஆண்டுகள் சிறையில் இருந்தார். பல தருணங்களில் தலைமறைவு வாழ்க்கையை வாழ வேண்டியிருந்தது. 1946ஆம் ஆண்டில் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் நடந்த புன்னப்புரா - வயலார் இடதுசாரி இயக்கத்தினரின் போராட்டத்தில் பங்கேற்ற வி.எஸ். அச்சுதானந்தன் காவல் துறையின் கடுமையான தாக்குதலுக்கு உள்ளானவர். பட மூலாதாரம்,GETTY IMAGES 1964ஆம் ஆண்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இரண்டாக பிளவுபட்டபோது, தேசிய கவுன்சிலில் இருந்து வெளியேறிய 32 பேரில் அச்சுதானந்தனும் ஒருவர். புதிதாக உருவான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிறுவனத் தலைவர்களில் ஒருவர். மக்கள் ஆதரவை பெற்ற அச்சுதானந்தன் ஊழல், நில மாஃபியா உள்ளிட்ட பல விவகாரங்களில் தீவிரமான நிலைப்பாடுகளை எடுத்த வி.எஸ். அச்சுதானந்தனுக்கு எப்போதுமே மக்கள் ஆதரவு இருந்துவந்தது. கேரள மாநிலத்தின் சட்டமன்ற உறுப்பினராக, எதிர்க்கட்சித் தலைவராக பல ஆண்டுகள் இருந்த வி.எஸ். அச்சுதானந்தனுக்கு 82வது வயதில்தான் கேரள மாநிலத்தின் முதலமைச்சராகும் வாய்ப்பு கிடைத்தது. 2006ஆம் ஆண்டில் முதலமைச்சரான வி.எஸ். அச்சுதானந்தன், தனது ஆட்சிக் காலத்தில் அதிரடியான சில நடவடிக்கைகளை மேற்கொண்டார். மூணாறில் இருந்த ஆக்கிரமிப்புகளை எதிர்ப்புகளை மீறி அகற்றினார். இது கட்சிக்குள்ளும் சலசலப்பை ஏற்படுத்தியது. கேரளாவில் ஐடி துறைக்கு முக்கியத்துவம் தர ஆரம்பித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES "வி.எஸ். அச்சுதானந்தன் கட்சியின் தலைமைக் குழுவில் இருந்தபோது நான் மத்தியக் குழுவுக்கு தேர்வானேன். இதனால், பல ஆண்டுகள் அவரோடு இணைந்து செயல்படும் வாய்ப்புக் கிடைத்தது. அர்ப்பணிப்பு, தன்னடக்கம், தான் கொண்ட கொள்கையில் மன உறுதி, மக்கள் நலனே பிரதானமானது போன்ற விஷயங்களில் அவர் ஒரு முன்னுதாரணமாக இருந்தார்." என நினைவுகூர்கிறார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநிலச் செயலரும் மூத்த தலைவருமான ஜி. ராமகிருஷ்ணன். 1964ல் அப்போதைய கல்கத்தாவில் நடந்த 7வது மாநாட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உருவானது. அந்த மாநாடு புதிய மத்தியக் குழுவை தேர்வுசெய்தது. சுந்தரைய்யா பொதுச் செயலாளராகத் தேர்வுசெய்யப்பட்டார். அந்த மாநாட்டில் என். சங்கரய்யாவும் வி.எஸ். அச்சுதானந்தனும் மத்தியக் குழுவுக்கு தேர்வுசெய்யப்பட்டார்கள் என கூறுகிறார் ஜி.ராமகிருஷ்ணன். பட மூலாதாரம்,GETTY IMAGES "சமீபத்தில் என். சங்கரய்யா காலமான நிலையில், வி.எஸ். அச்சுதானந்தன் தற்போது காலமாகியிருக்கிறார். இதன் மூலம், முதல் முதலில் உருவான மத்தியக் குழுவில் இடம்பெற்று, நீண்ட காலம் அதில் பணியாற்றிய ஒரு உறுப்பினராக அச்சுதானந்தனைச் சொல்ல முடியும். ஒரு சாதாரண விவசாய தொழிலாளர் குடும்பத்தில் பிறந்து, சுதந்திரப் போராட்ட காலத்தில் புன்னப்புரா - வயலார் போராட்டம் என்ற நிலப்பிரபுத்துவத்துக்கு எதிரான போராட்டத்தில் கிருஷ்ணப்பிள்ளையின் வழிகாட்டுதலில் கலந்துகொண்டார். இடதுசாரி இயக்கத்தில் ஒரு பெருமிதமிக்க வரலாற்றைக் கொண்டவர் அச்சுதானந்தன்" என தெரிவித்தார் ஜி. ராமகிருஷ்ணன். தமிழ்நாட்டின் சூழல் போராட்டங்களில் ஆர்வம் காட்டியவர் வி.எஸ். அச்சுதானந்தனுக்கும் தமிழ்நாட்டிற்கும் பெரிய அளவிலான தொடர்புகள் இருந்ததில்லை. இருந்தாலும், தமிழ்நாட்டில் நடந்த சூழல் போராட்டங்களில் அவர் ஆர்வம் காட்டினார். தமிழ்நாட்டில் 2012ஆம் ஆண்டில் கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமாக நடந்துகொண்டிருந்தபோது, அந்தப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தார். 2011- 2012ஆம் ஆண்டுகளில் கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டம் தமிழ்நாட்டில் தீவிரமடைந்தபோது, கேரள மாநில எதிர்க்கட்சித் தலைவராக இருந்தார் வி.எஸ். அச்சுதானந்தன். அவர் கூடங்குளம் அணு மின் நிலையத் திட்டத்துக்கு தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்து வந்தார். இத்தனைக்கும் அவர் சார்ந்திருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, அணு உலைத் திட்டத்துக்கு எதிராக இல்லாத நிலையிலும் வி.எஸ். அச்சுதானந்தன் அத்தகைய நிலைப்பாட்டை எடுத்தார். இந்த நிலையில், 2012ஆம் ஆண்டு கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டம் தீவிரமாக இருந்த நிலையில், அந்தப் போராட்டத்துக்கு நேரில் ஆதரவு தெரிவிப்பதற்காக செப்டம்பர் மாதம் 18ஆம் தேதி கூடங்குளத்துக்கு வர முடிவுசெய்தார் அச்சுதானந்தன். அதேபோல, தேனி மாவட்டத்தில் நியூட்ரினோ ஆய்வுக்கூடம் அமைக்கும் திட்டத்திற்கும் எதிர்ப்புத் தெரிவித்தார். நியூட்ரினோ ஆய்வுக்கூடம் பற்றியும், அதனால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்தும் அந்த பகுதியில் வசிக்கும் மக்களுடன் மத்திய அரசு ஆலோசனை நடத்த வேண்டும். ஆய்வுக்கூடத்துக்காக பூமிக்கு அடியில் சுரங்கம் அமைக்கும் பணியை மத்திய அரசும், தமிழக அரசும் உடனடியாக நிறுத்த வேண்டும் எனக் குரல் கொடுத்தார். "பக்கத்து மாநிலத்தில் எதிர்க்கட்சித் தலைவராகத்தான் இருந்தாலும்கூட, தமிழ்நாட்டில் மக்கள் போராடும் ஒரு பிரச்சனைக்காக வி.எஸ். அச்சுதானந்தன் குரல் கொடுத்தார். கட்சியின் மாநில அமைப்பும் சரி, தேசிய அளவிலும் சரி அணு உலைக்கு ஆதரவாக இருந்தும்கூட, அதற்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்தார் வி.எஸ். அச்சுதானந்தன். போராடும் மக்கள், தமிழர்களா மலையாளியா என்று பார்க்காமல் அவர்களுக்காக நின்றார். நெருக்கடியான அந்த காலகட்டத்தில் போராடிவந்த மக்களுக்கு இது மிக முக்கியமானதாக இருந்தது. பல முறை அவரை அவருடைய வீட்டில் சந்தித்துப் பேசியிருக்கிறேன். எளிதில் அணுகக்கூடியவராகவும் மனம்விட்டுப் பேசக்கூடியவராகவும் இருந்தார்" என்கிறார் கூடங்குளம் அணு உலை எதிர்ப்புப் போராட்டக் குழுவைச் சேர்ந்த சுப. உதயகுமார். குடியரசு துணைத் தலைவர் பதவியில் இருந்து விலகியது ஏன்? ஜெகதீப் தன்கரை சூழும் ஊகங்கள் பிரிக்ஸை மிரட்டும் டிரம்ப்: இந்தியா, சீனா, ரஷ்யா ஓரணியில் திரளுமா? இந்தியாவில் ஐரோப்பிய வல்லரசுகளின் விதியை தீர்மானித்த 'வந்தவாசிப் போர்' பிரம்மபுத்திரா ஆற்றில் சீனா அணை கட்டுவதால் இந்தியா, வங்கதேசத்திற்கு என்ன பாதிப்பு? ஆனால், முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் எல்லா கேரள அரசியல்வாதிகளைப் போலவேதான் அவருடைய நிலைப்பாடும் இருந்தது. முல்லைப் பெரியாறு அணை மிகுந்த அபாயத்தில் உள்ளது என்றும் புதிய அணையைக் கட்ட வேண்டும் என்றும் தொடர்ந்து வலியுறுத்திவந்தார். பல தருணங்களில் அவர் எடுத்த நிலைப்பாடுகள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. இருந்தபோதும், கேரள மாநிலத்தின் கடந்த 80 ஆண்டு கால அரசியலை வி.எஸ். அச்சுதானந்தனைத் தவிர்த்துவிட்டு விவாதிக்க முடியாது என்ற பாரம்பரியத்தை விட்டுச் சென்றிருக்கிறார் வி.எஸ். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/czey475denlo

தமிழர் பண்பாட்டை வெளிப்படுத்தும் வகையில் நல்லூர் திருவிழாக் காலத்தை பேணுங்கள் - ஆறுதிருமுருகன்

2 months 3 weeks ago
22 JUL, 2025 | 02:51 PM (எம்.நியூட்டன்) தமிழர் பண்பாட்டை வெளிப்படுத்தும் வகையில் வழிபாட்டுக் காலத்தை பேணுமாறும் புனிதமான திருவீதியில் எவரும் மறந்தும் பாதணிகளை அணிந்து செல்லாமல், புனிதத்தைப் பேணுமாறும் ஆறுதிருமுருகன் வேண்டுகோள் விடுத்துள்ளார். நல்லூர் திருவிழாக் காலம் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது : நல்லூரானின் பெருந்திருவிழாவை முன்னிட்டு நாம் ஆயத்தமாவோம். ஈழத்திருநாட்டின் ஈடு இணையற்ற பெருங்கோவிலாக விளங்குவது நல்லூர்க் கந்தசுவாமி கோவில். இத்திருக்கோவிலின் வருடாந்த பெருந்திருவிழா இம்மாதம் 29ஆம் திகதி செவ்வாய்க்கிழமையன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி சிறப்பாக நடைபெறவுள்ளது. பல இலட்சம் மக்கள் நல்லூர் வீதியில் முருகனைக் காண ஒன்றுகூடப் போகிறார்கள். வடக்கில் உள்ள மக்கள் இந்த வாரமே தங்கள் வீடுகளைப் புனிதப்படுத்தி நல்லூரான் திருவிழாவிற்காக தங்கள் வசிப்பிடத்தையும் புனிதப்படுத்தத் தொடங்கியிருப்பார்கள். நல்லூர் சுற்றாடல் தெய்வீகக் களைகட்டத் தொடங்கிவிடும். தண்ணீர்ப்பந்தல்கள் அமைக்கும் வேலைகள் ஆரவாரமாக தொடங்கிவிடும். அழகன் முருகன் திருவீதியில் அரோகரா சத்தம் இருபத்தைந்து நாட்களும் ஓங்கி ஒலிக்கும். வீதியெல்லாம் புதிய மணல் பரப்பி அங்கப் பிரதிஷ்டை மற்றும் அடியடித்துக் கும்பிடும் அடியவர்க்கு வசதிகள் செய்வார்கள். தெய்வீகச் சூழலாக மாறும் நல்லூர்ச் சுற்றாடலின் சிறப்பு எழுத்தில் வடித்துவிடமுடியாது. நல்லூர்க் கந்தன் ஆலயத்தை உருவாக்கி பரம்பரை பரம்பரையாக காத்துவரும் மாப்பாணர் பரம்பரைக்கு சைவ உலகம் என்றும் நன்றிக்கடன் பட்டது. போரில் அழிந்த சைவத் தமிழர்களின் திருக்கோவிலை தமது சொந்த நிலத்தில் தமது குடும்பத்தின் முயற்சியால் உருவாக்கி கடந்த மூன்று நூற்றாண்டுகள் உன்னதமாக கட்டிக்காத்து வரும் மாப்பாணர் குடும்பத்தின் மகத்துவத்தை எல்லோரும் நன்கு அறிவர். திசைகள் தோறும் கோபுரங்கள் உள்வீதி முழுவதும் உவமை இல்லா அழகுக் காட்சிகள் உருவாக்கி உலகம் வியக்க வைக்கும் நல்லூரான் தனித்துவத்தை எவரும் குறைத்து மதித்து விடமுடியாது. சர்வதேசமே நல்லூர்ச் சிறப்பை வியந்து போற்றுகிறது. அமெரிக்க ஹவாய் சைவ ஆதீனம் வெளியிட்டு வரும் நூலில் உலகம் முழுவதும் வாழும் சைவ மக்கள் சீரிய ஒழுங்கைப் பின்பற்றுவதற்கு நல்லூரை தரிசியுங்கள் என கூறியுள்ளார்கள். இந்திய மத்திய அரசின் நிதி அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் அவர்கள் “அப்பப்பா என்ன அதிசயம்? நல்லூர்க் கந்தசுவாமி கோயிலுக்குள் கால் எடுத்து வைத்தவுடன் எம்மை மறந்து விடுகிறோம். ரம்மியமான இத்திருக்கோவில் சிறப்புப் பற்றி உலகமே வியக்கிறது” என உரைத்தமை அனைவரும் அறிவர். அன்பர்களே நல்லூர்ப் பெருந்திருவிழாக் காலங்களில் குடும்பம் குடும்பமாக சென்று வழிபாடு செய்வதற்கு ஆயத்தமாகுங்கள். தமிழர் பண்பாட்டை வெளிப்படுத்தும் வகையில் வழிபாட்டுக் காலத்தை பேணுங்கள். புனிதமான திருவீதியில் எவரும் மறந்தும் பாதணிகளை அணியாதீர்கள். விசேட தேவையுடையவர்கள் வழிபாடு செய்ய வரும்போது தொண்டர்கள் உதவுங்கள். சுற்றுச்சூழலில் வசிப்பவர்கள் ஆன்மிக அலங்காரங்களை தாம் வசிக்கும் இடங்களில் ஏற்படுத்துங்கள். படம்பிடித்து முருகனை தேடுவதை விட பக்தியோடு அவனை அகத்தால் உள்வாங்குங்கள். வீதியில் சுவாமி புறப்பட்டால் வேடிக்கைக்கு இடமில்லை. வேலனிடம் விடிவு கேட்டுப் பிரார்த்திப்பதே எமக்கு வேலை என உணருங்கள். சஞ்சலமின்றி இறைவன் எமக்குத் தந்த இந்த இனிய நாட்களை ஆனந்தமாகக் கழிப்பதற்கு ஆயத்தமாகுங்கள். அலங்காரக் கந்தனை தரிசிக்க வரும் அடியவர்களாகிய நாம் எளிமையாக நின்று வணங்குவோம். எமது அடுத்த தலைமுறைக்கு எடுத்துக்காட்டாக வழிபாட்டு மரபை முன்னெடுத்துச் செல்வோம். எல்லோரும் நல்லூரான் பெருவிழாவைக் கண்ணாரக் காண்போம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/220631

குரோதம் கொண்டு வந்த ரயிலில் இப்போது சகோதரத்துவம் சுமந்து வருகிறோம் – மகேஷ் அம்பேபிட்டிய

2 months 3 weeks ago
Published By: DIGITAL DESK 2 22 JUL, 2025 | 05:04 PM அன்று ரயிலேறி யாழ்ப்பாணத்துக்கு வைராக்கியம், குரோதம், பிரிவினையை கொண்டு வந்தனர். அதன் மூலம் யாழ். நூலகத்தை எரித்து நாசமாக்கினார்கள். இன்று நாம் ரயிலேறி சகோதரரத்துவத்தை கொண்டு வருகின்றோம். வடக்கையும், தெற்கையும் இணைக்கும் உறவு பாலத்தை ஏற்படுத்த வருகின்றோம் என சோசலிச இளைஞர் சங்கத்தின் தேசியக் குழு உறுப்பினர் மகேஷ் அம்பேபிட்டிய தெரிவித்தார். சகோதரத்துவ தினம் தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடக சந்திப்பு இன்று செவ்வாய்க்கிழமை (22) யாழ். தேசிய மக்கள் சக்தி மக்கள் தொடர்பாடல் காரியாலயத்தில் நடைபெற்றது. இதன் போது கருத்து தெரிவிக்கையிலேயே இவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், சோசலிச இளைஞர் சங்கத்தின் ஏற்பாட்டில் 2008 ஆம் ஆண்டு முதல் சகோதரத்துவ தின நிகழ்வுகளை நடத்தி வருகின்றோம். சகோதரத்துவத்தை கட்டியெழுப்புவதற்காக 17 ஆண்டுகளாக செயற்படுகின்றோம். இம்முறை கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு சகோதரத்துவ ரயில் பயணம் இடம்பெறவுள்ளது. 1981 மே 31 ஆம் திகதி யாழ்.வந்த ரயில் நிலையத்தில் குருணாகல் ரயில் நிலையத்தில் இருந்து அரசியல் குழுவொன்று ஏறியது. காமினி லொக்குகே, காமினி திஸாநாயக்க, காமினி ஜயவிக்கிரம, சிறில் மெத்திவ், கிறிஸ்டன் பெரேரா, ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட குழுவினர் வைராக்கியம், குரோதம், பிரிவினையை எடுத்து வந்தனர். அவற்றை எடுத்து வந்துதான் ஆசியாவின் மிக்பெரிய பொக்கிஷமான நூலகத்தை எரிந்தனர். எனவேதான் அந்த ரயிலில் சகோதரத்துவத்தை நாம் நாளை புதன்கிழமை (23) எடுத்துவருகின்றோம். 1981 இல் ஆரம்பமான குரோதம் 1983 இல் கறுப்பு ஜுலையாக மாறியது. இறுதியில் பிரச்சினை போர்வரை வந்தது. இந்த கறுப்பு புள்ளி இன்னும் நீங்கவில்லை. ஆட்சியாளர்களும் அரசியலுக்காக மக்களை பிரித்தாளும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். வடக்கையும், தெற்கையும் தமது அரசியலுக்காக அரசியல்வாதிகள் பிரித்தார்கள். தமது சுகபோக வாழ்வுக்காக மக்களை பிரித்தார்கள். அந்த யுகம் தற்போது முடிந்துவிட்டது. புதிய நாடு உருவாகி வருகின்றது. புதிய யுகத்தை நோக்கி பயணித்துக்கொண்டிருக்கின்றோம். தேசிய சமத்துவமே அரசாங்கத்தின் நோக்கம். அதற்காக ஜனாதிபதியும் அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றார் என்றார். https://www.virakesari.lk/article/220629

இஸ்ரேலிய படையினர் எங்கள் பணியாளர்களை ஆடைகளை களைந்து சோதனையிட்டதுடன் கைதுசெய்துள்ளனர் - உலக சுகாதார ஸ்தாபனம்

2 months 3 weeks ago
22 JUL, 2025 | 01:26 PM இஸ்ரேலிய படையினர் தனது பணியாளர்களை ஆடைகளை களைந்து சோதனையிட்டதுடன் கைதுசெய்துள்ளனர் என உலக சுகாதார ஸ்தாபனம் குற்றம்சாட்டியுள்ளது. இஸ்ரேல் தனது பண்டகசாலை மீது விமானதாக்குதலை மேற்கொண்டது என தெரிவித்துள்ள உலக சுகாதார ஸ்தாபனம் தனது பணியாளர்களின் வீடுகளையும் இலக்குவைத்தது, இதனால் பெரும் சேதமேற்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளது. பெண்களும் குழந்தைகளும் மோதல் இடம்பெறும் பகுதியை நோக்கி கால்நடையாக வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்டார்கள் என உலக சுகாதார ஸ்தாபனத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். டெய்ர் அல்பலாவில் இஸ்ரேல் மேற்கொண்ட உலக சுகாதார ஸ்தாபனத்தின் ஆண்பணியாளர்கள் அவர்களது குடும்பத்தவர்களை கைதுசெய்து அவர்களிற்கு கைவிலங்கிட்ட இஸ்ரேலிய படையினர் அந்த இடத்தில் வைத்தே அவர்களது ஆடைகளைந்து விசாரணை செய்தனர் என உலக சுகாதார ஸ்தாபனத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். இதேவேளை இது குறித்து உலக சுகாதார ஸ்தாபனம் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளதாவது காசாவின் நடுப்பகுதியில் உள்ள டெய்ர் அல் பலாவில்உலக சுகாதார ஸ்தாபன ஊழியர்கள் தங்கியிருந்த கட்டிடத்தின் மீதான தாக்குதல்கள்இ அங்கு தங்கியிருந்தவர்களை தவறாக நடத்துதல் மற்றும் அதன் முக்கிய பண்டகசாலை அழிக்கப்பட்டதை WHO வன்மையாகக் கண்டிக்கிறது இஸ்ரேலிய இராணுவத்தால் வெளியிடப்பட்ட சமீபத்திய வெளியேற்ற உத்தரவுக்குப் பிறகு டெய்ர் அல் பலாவில் அதிகரித்த மோதலை தொடர்ந்து உலக சுகாதார ஸ்தாபன ஊழியர்களின் வீடு மூன்று முறை தாக்கப்பட்டது. வான்வழித் தாக்குதல்கள் தீ மற்றும் குறிப்பிடத்தக்க சேதத்தை ஏற்படுத்தியதால் குழந்தைகள் உட்பட ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பங்கள் கடுமையான ஆபத்தில் இருந்தனர் மற்றும் அதிர்ச்சியடைந்தனர். இஸ்ரேலிய இராணுவம் வளாகத்திற்குள் நுழைந்து தீவிர மோதல்களுக்கு மத்தியில் பெண்களையும் குழந்தைகளையும் அல்-மவாசி நோக்கி கால்நடையாக வெளியேற கட்டாயப்படுத்தியது. ஆண் ஊழியர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் கைவிலங்கு போடப்பட்டு ஆடைகளை அவிழ்த்து சம்பவ இடத்திலேயே விசாரித்து துப்பாக்கி முனையில் சோதனை செய்யப்பட்டனர். இரண்டு ஊழியர்கள் மற்றும் இரண்டு குடும்ப உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டனர். மூன்று பேர் பின்னர் விடுவிக்கப்பட்டனர் அதே நேரத்தில் ஒரு ஊழியர் இன்னும் காவலில் வைக்கப்பட்டுள்ளார். https://www.virakesari.lk/article/220613

கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் காலமானார்

2 months 3 weeks ago
கேரள முன்னாள் முதல்வர் வி.எஸ். அச்சுதானந்தன் தன்னுடைய 102 ஆவது வயதில் காலமானார். 2006 ஆம் ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டுவரை இவர் கேரளாவின் முதலமைச்சராக பதவி வகித்திருந்தார். https://thinakkural.lk/article/319195

ஈழத் தமிழர்கள் சர்வதேசத்தையும் இந்தியாவையும் நம்பி பலனில்லை

2 months 3 weeks ago
நஜீப் பின் கபூர் நெப்போலியன் ஒரு முறை தனது அதிகாரிகளிடத்தில் பேசும் போது “அரசியல் தலைவர்களாக இருந்தாலும் சரி தேசங்களாக இருந்தாலும் சரி பத்து வருடங்களுக்கு ஒரு முறையாவது நாம் கடந்து வந்த பாதை தொடர்பாக மதிப்பீடு செய்து அதற்கான சீர்திருத்தங்களை செய்து கொள்ள வேண்டும்” என்று சுட்டிக்காட்டி இருந்தார். இந்தக் கட்டுரையைத் தயாரிக்கின்ற போது அதனை இங்கு சுட்டிக்காட்டுவது பொருத்தமானதாக அமையும் என்று நாம் கருதுகின்றோம். ஐரோப்பா வரலாற்றில் நெப்போலியன் மறக்கமுடியாத ஒரு நாமம். நெப்போலியன் பொனபார்ட் 1769 – 1821 களில் வாழ்ந்து தனது 52 வது வயதில் இறந்தும் போனார். இந்த நெப்போலியன் கதை நமக்கு சில நூறு வருடங்களுக்கு முந்தியது ஒன்று. அந்தக் காலகட்டத்தில் – அப்போதைய உலக செயல்பாடுகளில் இன்றைய அளவு வளர்ச்சி வேகம் அன்று இருந்திருக்காது என்பது நாம் அனைவரும் அறிந்த தகவல்கள்தான். எனவே மின்னல் வேகத்தில் அல்லது ஒளிவேகத்தில் மாற்றங்கள் நடந்து வருகின்ற இந்தக் காலத்தில் தனிமனிதர்களும் சமூகங்களும் இந்த உலகில் வாழும் போது அதற்கேற்றவாறு தம்மை மாற்றிக் கொள்ள வேண்டும். அதற்குத் தயாரில்லாத சமூகமும் தனிமனிதர்களும் கூட அனைத்துத் துறைகளிலும் பின்னுக்குத் தள்ளப்படுவது தவிர்க்கமுடியாத ஒன்று என்று நாம் நம்புகின்றோம். நாம் தலைப்புக்கு ஏற்று கருத்துக்களை பேசுவதாக இருந்தால் சிறுபான்மை சமூகங்களுக்கு சமகால அரசியலில் புதிய அணுகுமுறைகள் தேவை – காலத்தின் கட்டாயமாகும். அரசியல் பற்றி நேரடியாக விமர்சனங்கள் பண்ணும் போது அரசியல் கட்சிகள் அதன் தலைவர்களை சுட்டிக்காட்டாது கருத்துக்களை முன்வைப்பது என்பது முழுப்பூசணியை சோற்றில் மறைக்கின்ற ஒரு வேலை. நமது பதிவுகளில் இப்படியான கருத்துக்களை மறைத்து கதைகள் சொல்வதில்லை என்பது நமது வாசகர்களுக்குத் தெரியும். எனவே எமது சாதக – பாதக விமர்சனங்களையும் வாசகர்கள் ஜீரணித்துக் கொள்வார்கள் என்றும் நாம் நம்புகின்றோம். இந்த நாட்டில் வாழ்கின்ற சமூகங்கள் பற்றி அனைவருக்கும் தெரியும் என்றாலும் இன ரீதியில் சிங்களவர்கள், தமிழர், முஸ்லிம்கள், மலையகத்தார், ஏனையோர் என்று அது அமைகின்றது. மத ரீதியில் என்று வருகின்ற போது பௌத்தர்கள், இந்துக்கள், இஸ்லாமியர், கிறிஸ்தவர்கள், இதர என்று ஒரு மிகச்சிறிய குழுவும் இங்கு வாழ்ந்து வருகின்றனர். இதனால் இன ரீதியிலும் மத ரீதியிலும் இவர்களிடையே இணக்கப்பாடுகளும் முரண்பாடுகளும் இயல்பானவை. என்னதான் நாம் அனைவரும் இலங்கையர் என்று சொல்லிக் கொண்டாலும் இந்த வேறுபாடுகளை ஒவ்வொரு தரப்பினரும் புரிந்து கொள்ள வேண்டும். இங்கு மட்டுமல்ல உலகிலுள்ள அனைத்து நாடுகளிலும் இதே நிலைதான். எனவே புரிந்துணர்வுகளும் விட்டுக் கொடுப்புகளும் சமூக ஒற்றுமைக்கு தேவை. வரலாறு தொட்டு மன்னராட்சி காலம், தென்னிந்தியப் படையெடுப்புக்கள், ஐரோப்பிய ஆக்கிரமிப்பு, அதற்குப் பின்னர் நாடு விடுதலை பெற்ற பின்னர் ஏறக்குறைய முப்பது வருடங்கள் நாட்டில் நடைபெற்ற ஆயுதப் போராட்டங்கள் இந்த நாட்டில் இன ரீதியான முரண்பாடுகளை உச்சத்துக்கு கொண்டு சென்றிருந்தன. அத்துடன் இன – மத ரீதியான செல்வாக்கும் சிறிதும் பெரிதுமாக நமது அரசியலில் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருந்தன. சுதந்திரத்துக்கு பின்னர் நாட்டில் அதிகாரத்துக்கு வந்த சில ஆட்சியாளர்கள் சிறுபான்மை சமூகங்கள் மீது தமது மேலாண்மையை செலுத்தி வந்தனர். இது ராஜபக்ஸ -கோட்டா அதிகாரத்தில் இருந்த போது உச்சம் தொட்டிருந்தது. அதே ஆணவம் அவர்களது வீழ்ச்சிக்கும் காரணமாக அமைந்தது. ஜே.ஆர். காலத்தில் கொண்டுவரப்பட்ட விகிதாசார தேர்தல் முறை இன ரீதியான அரசியல் இயக்கங்களை, கட்சிகளை வலுப்படுத்தியது என்றுதான் சொல்ல வேண்டும். குறிப்பாக தெற்கில் இனவாதம் மேலோங்க இதுவும் ஒரு காரணமாக இருந்து வந்திருகின்றது. சிறுபான்மையினர் அரசியல் பற்றிப் பார்க்கும் முன்னர் பெரும்பான்மை சமூகத்தின் எதிர்பார்ப்புக்கள், விருப்பு வெறுப்புக்கள், அரசியல் செயல்பாடுகள் பற்றி முதலில் பார்ப்போம். இன்று இந்த நாட்டில் வாழ்கின்ற இயக்கர், நாகர்களைத் தவிர அனைவரும் வந்தேறு குடிகள். அதில் எல்லோருக்கும் ஒரு பொது உடன்பாடு இருக்கின்றது. ஆனால் இந்த நாட்டில் விஜயன் வருகை, அதற்குப் பின்னர் மஹிந்த தேரர் வரவு, மன்னன் தேவநம்பிய தீசன் பௌத்த மதத்தை பின்பற்றியது என்பன இந்த நாட்டில் புதியதோர் அரசியல் கலாசாரத்துக்கு பிரதான காரணங்களாக அமைந்தன என்பது எமது கருத்து. அதன் பின்னர் மன்னராட்சி, நாம் முன்சொன்ன இந்தியப் படையெடுப்புக்கள், ஐரோப்பியர் ஆக்கிரமிப்பு, நாடு சுதந்திரம் என்ற அனைத்துக் காலப்பகுதிகளிலும் நாட்டில் சுதேச அரசியல் இயக்கங்களின் செல்வாக்கு மேலோங்கி வந்தது. இதில் இன – மத உணர்வுகளும் கலந்திருந்தன. இதன் பின்னணியில்தான் நாட்டில் இனக்கலவரங்களும் முறுகல் நிலைகளும் அந்தக் காலப்பகுதிகளிலும் அவ்வப்போது இருந்து வந்திருந்தன என்பதை நாம் அவதானிக்க முடிகின்றது. நமது பண்டைய வரலாற்றுச் சுருக்கம் அப்படி இருக்க, சுதந்திரத்துக்குப் பின்னரான காலப்பகுதியை ஆராய்கின்ற போது நாட்டில் அதிகாரத்தில் இருந்த அரசியல் கட்சிகளைப் பார்க்கின்ற போது ஐக்கிய தேசியக் கட்சியும் (1946) சுதந்திரக் கட்சியுமே (1951) மாறிமாறி ஏறக்குறைய 2020 வரையிலும் அதிகாரத்தில் இருந்து வந்திருக்கின்றன. சமசமாஜ கட்சி (1935), இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி (1943) என்பன துவக்கத்தில் செல்வாக்குடன் இருந்தாலும் பின்னர் பலயீனமடைந்தன. இன்று அவை கட்சிப் பொருட்கள் போல ஆகிவிட்டன. ஒருமுறை சமசமாஜக் கட்சியின் என்.எம் பெரேரா கொழும்பு மேயராக பதவியில் இருந்திருக்கின்றார். கூட்டணிகள் அமைத்து மேற்படி இடதுசாரிகள் செல்வாக்கான அமைச்சுகளை வகித்திருக்கின்றார்கள். அதேநேரம் வடக்கில் சில தமிழ் அரசியல் கட்சிகள் செயல்பட்டு வருகின்றன. அவை இன்று முன்பு போல செல்வாக்குடன் இன்று இல்லை. 1981 கள் வரைக்கும் இந்த நாட்டில் முஸ்லிம் அரசியல் கட்சிகள் தோற்றம் பெற்றிருக்கவில்லை. என்றாலும் அவர்களின் பல சிவில் இயக்கங்கள் பெரும்பாலும் கொழும்பை மையப்படுத்தி செயல்பட்டு வந்திருக்கின்றன. உதாரணமாக பதியுதீன் மஹ்மூத் அவர்களின் இஸ்லாமிய சோஸலிச முன்னணி டாக்டர் கலீல் போன்றவர்களின் முஸ்லிம் லீக்கை கூறலாம். ஆனால் அவை நாட்டில் அதிகாரத்தில் இருக்கின்ற பிரதான கட்சிகளுக்கு துணைபோகின்ற இயக்கங்களாக செயல்பட்டு வந்திருக்கின்றன. ஜே.ஆர். ஜெயவர்தன செயல்பாடுகள் இஸ்ரேலுடன் இராஜதந்திர உறவு ஏற்படுத்திக் கொண்டமை, முஸ்லிம்களை மரத்தில் தொங்கிக் கொண்டிருக்கும் ஒட்டுண்ணிகள் என்று செடிகொடி என்று பேசி அவர்களைப் பண்படுத்தி வந்தமை. இதனால், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் (1981) அந்த சமூகத்தில் செல்வாக்குடன் மக்கள் மத்தியில் அங்கீகாரம் பெற ஜே.ஆர். துணைபுரிந்திருக்கின்றார். மு.கா. தலைவர் அஸ்ரபுக்குப் பின்னர் இன்று வடக்கிலும் கிழக்கிலும் பிரதேசவாத உணர்வுடைய கட்சிகள் பிறந்து செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. இது தனிப்பட்ட நபர்களின் அரசியல் இருப்பை மையமாகக் கொண்ட இயக்கங்கள் என்றுதான் சொல்ல வேண்டும். எனவே அவற்றை தேசிய அளவில் முஸ்லிம்களின் நலன்களை மையமாக வைத்து செயல்படுகின்ற அரசியல் இயக்கங்கள் என்று சொல்ல முடியாது. பிரதான அரசியல் கட்சிகளுக்குள் ஏற்பட்ட கருத்து முரண்பாடுகள், வெட்டுக் கொத்துக்கள் காரணமாக ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்த பண்டாரநாயக்க புதுக் கட்சி துவங்கி பெரும்பான்மை மக்களின் அங்கீகாரத்தைப் பெற்று அண்மைக்காலம் வரை நமது அரசியலில் செல்வாக்குடன் செயல்பட்டு வந்தது. சந்திரிக்காவுக்குப் பின்னர் குறிப்பாக மைத்திரி காலத்தில் சுதந்திரக் கட்சி பல கூறுகளாக பிளந்து நிற்கின்றது. அதிலிருந்து மஹிந்த தலைமையிலன மொட்டுக் கட்சி உருவாகியது. சஜித் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து ஐக்கிய மக்கள் சக்தியும் பிற்பட்ட காலப்பகுதிகளில் செல்வாக்கான அரசியல் கட்சிகளாக வளர்ந்திருக்கின்றன. ஆனால் குறுகிய காலத்திற்குள்ளேயே மஹிந்த தலைமையிலான மொட்டு வாடிப்போயிருப்பதை நமது அரசியல் களத்தில் பார்க்க முடிகின்றது. அதேபோல் ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்களை சஜித் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி தன்பக்கம் இழுத்துக் கொண்டது. இதற்கு ரணிலுக்கும் சஜித்துக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாடுதான் காரணமாக அமைந்தது. இதுவரை நாட்டில் மிகப் பெரும் அரசியல் கட்சியாக இருந்த ஐ.தே.க. தலைமையிலான ரணிலின் கட்சி ஆதரவாளர்களினால் நிராகரிக்கப்பட்டது. இன்று ரணில் அரசியலில் மிகவும் பலயீனமான மனிதராக இருந்தாலும் களத்தில் தனது ஆட்டத்தை அவர் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. மலையக அரசியலை எடுத்துக் கொண்டால் சுதந்திரத்துக்குப் பின்னர் மிகவும் செல்வாக்கான அரசியல் கட்சிகளை வைத்திருந்தவர்கள் என்று பார்க்கும் போது, சௌமியமூர்த்தி தொண்டமான், (1939) இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் ஏ.அசிஸ் (இலங்கை இந்திய காங்கிரஸ் 1939) போன்றவர்களின் அரசியல் கட்சிகளைக் குறிப்பிட முடியும். இன்று மலையகத்தில் மலைக்கு மலை தோட்டத்துக்குத் தோட்டம் கட்சிகள் என்று அரசியல் இயக்கங்கள் முளைத்திருப்பதைப் பார்க்க முடியும். இப்போது சர்வதேசத்தையும் இந்தியாவையும் தொடர்ந்தும் நம்பி இருப்பதில் எந்தப் பயன்களும் இல்லை என்ற நமது வாதத்துக்குள் நுழைவோம். அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 1944ல் ஆரம்பிக்கப்பட்டது. அதன் மூலம் ஐம்பதுக்கு ஐம்பது கோரிக்கை ஜீ.ஜீ. பென்னம்பலம் முன்வைத்தார். பின்னர் 1949 ல் தந்தை செல்வா தலைமையில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி ஆரம்பமானது. இவை இரண்டும் ஏதோ வகையில் வடக்கு, கிழக்கில் இன்றும் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் வரையிலான காலப்பகுதி தமிழரசுக் கட்சி வீரியத்துடன் செயல்பட்டு வந்திருக்கின்றன. அதேபோல ஜீ.ஜீ. பொன்னம்பலம் துவங்கிய தமிழ் காங்கிரஸ் இன்று ஒரு பிராந்தியக் கட்சி என்ற அளவுக்கு போய் நிற்கின்றது. அத்துடன் விக்னேஸ்வரன் ஒரு கட்சி வைத்திருக்கின்றார். பார் அனுமதிப்பத்திரத்துடன் அவர் மீது இருந்த இமேஜ் கெட்டுப்போய் நிற்கின்றது. டக்ளஸ் மற்றும் முன்னாள் போராளிகள் குழுக்களின் பேரில் பல அரசியல் கட்சிகள் வடக்கு கிழக்கில் செயல்பட்டு வருகின்றன. கிழக்கிலும் அம்மான் மற்றும் பிள்ளையானின் அரசியல் செய்பாடுகளும் காணப்படுகின்றன. அதேநேரம் அனுரவுடன் சேர்ந்து அனைவருக்கும் விமோசனம் என்ற கருத்தும் இப்போது அங்கு பலமாக இருந்து வருகின்றது. இதுபோல தமது இருப்புக்கான ஒரு அரசியல் செயல்பாடுகள்தான் பொதுவாக இப்போது வடக்கு, கிழக்கில் காணப்படுகின்றன. எனவே, வடக்கு, கிழக்கில் செயல்படுகின்ற அரசியல் இயக்கங்கள் இன்று அவற்றின் தனிப்பட்ட இருப்புக்காகத்தான் போராடிக் கொண்டிருக்கின்றார்கள். எனவே இவர்கள் ஒருபோதும் தமிழர்களுக்கு விமோசனங்களைப் பெற்றுத் தரப்போவதில்லை என்பதனை வடக்கு, கிழக்கு மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். தமிழர்கள் நலன்களைவிட இவர்கள் தமது அரசியல் இருப்புக்குத்தான் முன்னுரிமை கொடுத்து போராடி வருகின்றார்கள். அத்துடன் இன்று தமிழ் மக்களின் பிரதான அரசியல் கட்சி என்று சொல்லிக் கொண்டிருக்கின்ற இலங்கை தமிழரசுக் கட்சி சம்பந்தன் காலத்தில் பதவியில் இருக்கின்ற அரசுக்கு விசுவாசமான ஒரு முகவர் அணியாகத்தான் இயங்கி வந்திருக்கின்றது. அதனால்தான் ஆட்சியாளர்களை நம்பி இவர்கள் தமிழர்களின் அரசியல் விமோசனம் பற்றி அவ்வப்போது இன்று – நாளை எனக் காலகெடுக்களை கொடுத்து தமிழ் மக்களை ஏமாற்றி வந்திருக்கின்றனர். இதில் சுமந்திரன் பங்கு அளப்பரியது என்பதுதான் நமது கணிப்பு. இன்று உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்குப் பின்னர் தமது கட்சி மீண்டும் மக்கள் மனதை வென்றுவிட்டதாக இவர்கள் கதை விட்டாலும் மாகாண சபைத் தேர்தல் வருமாக இருந்தால் யதார்த்தத்தை நமக்கு புரிந்து கொள்ள முடியும். உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வரும் ஒரு இயல்புநிலை தான் இது என்பதும் தமிழ் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். விடுதலைப் போராட்ட காலத்தில் தமிழ் மக்களுக்கு மட்டுமல்ல, முழு நாட்டுக்கும் கடும் சேதாரங்கள் நிகழ்ந்தாலும் விடுதலைப் புலிகள் மற்றும் அதன் அரசியல் தலைமையை தமிழ் மக்கள் வரலாற்றில் ஒருபோதும் மறக்க மாட்டார்கள். பல தசாப்தங்கள் பிரபாகரன் தலைமையில் அங்கு ஒரு அரசு இயங்கி வந்திருப்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும். தெற்கில் பிரபாகரன் பயங்கரவாதி என்றாலும் வடக்கு, கிழக்கில் மட்டுமல்ல, தமிழ் உலகத்தில் அப்படி ஒரு நிலை இல்லை. என்னதான் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் இந்த என்.பி.பி. அரசு அதிகாரத்தில் இருந்தாலும் அதற்கு எதிரான விமர்சனங்கள் இருப்பது போலதான் பிரபாகரன் பற்றிய மதிப்பீடும். ஜனாதிபதித் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல், உள்ளாட்சித் தேர்தல், மாகாணசபைத் தேர்தல் என்று வந்து அதில் தமிழர் பிரதிநிதித்துவம் என்பதனை விட தமிழ் மக்களுக்கு அடிப்படைத் தேவை ஒரு அரசியல் தீர்வு. இது விடயத்தில் மேற்சொன்ன தேர்தல்களோ அதில் தமிழர்களுக்கு வரும் பிரதிநிதித்துவமோ சமூகத்தின் விமோசனத்துக்கு காரணிகளாக அமையப்போவதில்லை. அதேநேரம், சர்வதேசமும் இந்தியாவும் ஈழத்தமிழர்களை இன்று கைவிட்டு விட்டது. இதற்குக் காரணம் வடக்கு, கிழக்கில் அரசியல் செயல்பாடுகள் – போராட்டங்கள் பலயீனப்பட்டதே காரணம். இப்போது செம்மணி விவகாரம் பேசு பொருளாக இருந்தாலும் அது பற்றி ஒட்டுமொத்த தமிழர்கள் மத்தியில் ஒன்றுபட்ட கருத்து இல்லை. இப்போது இந்தியா மற்றும் தமிழ்நாட்டில் தேர்தல் பற்றி பெரிதாகப் பேசப்பட்டுக் கொண்டிருக்கின்றன. எங்காவது ஒரு இடத்தில் ஈழத்தமிழர் விவகாரம் ஒரு பேசுபொருளாக அவர்கள் எடுத்துக் கொண்டிருக்கின்றார்களா என்பதை சிந்தித்துப் பாருங்கள். சர்வதேசமும் இப்போது ஈழத்தமிழர் விவகாரத்தை ஒரு தலைப்பாக எடுத்துக் கொள்வதே கிடையாது. அது கிடப்பில் போடப்பட்ட கோவைகளாகத்தான் இருந்து வருகின்றன. எனவே நாம் முகவுரையில் சொல்லி இருப்பது போல நெப்போலியன் உபதேசத்தை கட்டாயமாக இன்று ஈழத் தமிழர்கள் பரிசீலித்துப் பார்க்க வேண்டும். எனவே, வடக்கு, கிழக்கில் இன்று இயங்கி வருகின்ற அரசியல் கட்சிகளும் அவற்றின் மக்கள் பிரதிநிதிகளும் தமிழர் விமோசனங்களைப் பெற்றுத்தர முடியாது நிலையிலேயே இருக்கிறார்கள். அவர்கள் செல்லாக் காசுகள் என்பதனைப் புரிந்து புதிய வியூகங்களுடன் ஒரு பலமான அரசியல் இயக்கம் தமிழர்களுக்கு தேவை. முஸ்லிம் மற்றும் மலையக தனித்துவ அரசியல் இயக்கங்களின் நிலையும் இதுதான். இவர்கள் சமூகத்தை விற்று தன்னல அரசியல் செய்கின்றார்கள் என்ற ஒரு வலுவான குற்றச்சாட்டும் அந்த சமூகங்களின் மத்தியில் நிலவி வருகின்றன. https://thinakkural.lk/article/319267

யாழ்ப்பாண தமிழ் பெண்கள், சிங்களவர்களை திருமணம் முடிப்பது அதிகரிப்பு.

2 months 3 weeks ago
கனடா திருமணசேவை விளம்பரங்களில்...வெ....ப...கோ ...ந...என்று அடையாளக்குறிகள் ..இப்போ அதிகமாக வருகின்றபோது...நாட்டில் இந்த நிலை அதிகரிப்பது..தவிர்க்க முடியாது தானே....நமிமினத்தின் தலையெழுத்து இது..

இலங்கையர்களுக்கு கொரியாவில் 8 மாத வேலைவாய்ப்பு!

2 months 3 weeks ago
எந்தக் கொரியா ? இரண்டும் குடியரசுதான். படத்தில் உள்ள கொடிக்குச் சொந்தக்கார கொரியா பரவாயில்லை. மற்றக் கொரியாவை நம்பினால் ரஸ்யாவில் 'வேலை' செய்ய வேண்டி வரலாம் 😀.

புனர்வாழ்வு பெற்ற விடுதலைப் புலி உறுப்பினர் கொழும்பில் துப்பாக்கியுடன் கைது

2 months 3 weeks ago
வவுனியாவில் 86 கைக்குண்டுகளுடன் ஒருவர் கைது! வவுனியா நேரியகுளம் பகுதியில் வீடு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பரல் ஒன்றில் நிலத்தின்கீழ் புதைக்கப்பட்ட 86 கைக்குண்டுகளுடன் ஒருவர் வவுனியா மாவட்ட குற்ற தடுப்பு விசாரணை பிரிவால் கைதுசெய்யப்பட்டார். நேற்றைய தினம் கொழும்பில் துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்ட முன்னாள் விடுதலைப்புலி போராளி வழங்கிய தகவலின் அடிப்படையில் கொழும்பிலிருந்து வருகைதந்த புலனாய்வுத்துறை அதிகாரிகளோடு வவுனியா மாவட்ட குற்றத்தடுப்பு விசாரணை பிரிவு பொலிஸாரும் இணைந்து செட்டிகுளம் துட்டுவாகை மற்றும் நேரியகுளம் பகுதிகளில் உள்ள இரு வீடுகளில் சோதனையை மேற்கொண்டனர். இதன்போது நேரியகுளத்தில் வீடு ஒன்றின் அருகாமையில் பிளாஸ்டிக் பரல் ஒன்றினுள் 86 கைக்குண்டுகள் ரி56 ரக துப்பாக்கிக்கான ரவைகள், கைத்துப்பாக்கிக்கான மூன்று ரவைகள், 5600 போதை மாத்திரைகள், 10 கிராம் ஐஸ் போதைப்பொருள் என்பன நிலத்தின் கீழ் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டன. இதனை அடிப்படையாகக் கொண்டு குறித்த வீட்டின் உரிமையாளர் கைது செய்யப்பட்டு செட்டிகுளம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்படவுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். குறித்த தேடுதல் நடவடிக்கையின் போது வவுனியா குற்ற தடுப்பு விசாரணை பிரிவின் பொறுப்பதிகாரி சிரேஸ்ட பொலிஸ் பரிசோதகர் ஜெயதிலக தலைமையில் பொலிஸ் பரிசோதகர் ராஜபக்ச மற்றும் ராஜகுரு, பொலிஸ் அதிகாரிகளான ரன்வேல, ரூபசிங்க, பாலசூரிய, சனுஷ், கேரத், சனத், பண்டார, திசாநாயக ஆகியோர் ஈடுபடுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1440191

செம்மணி மனிதப் புதைகுழி: இன்று இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகள் மீண்டும் ஆரம்பம்!

2 months 3 weeks ago
செம்மணி மனித புதைகுழி: இன்றைய தினம் 8 மனித எச்சங்கள் அடையாளம்! யாழ்.செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகள் நேற்றைய தினம்(21) மீள ஆரம்பிக்கப்பட்டன. அந்தவகையில் நேற்யை தினம் 7 மனித எச்சங்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில் இன்றைய தினம் மேலும் 8 மனித எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை செம்மணி மனித புதைகுழி அகழ்வில் 80 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1440171

யாழ்ப்பாண தமிழ் பெண்கள், சிங்களவர்களை திருமணம் முடிப்பது அதிகரிப்பு.

2 months 3 weeks ago
யாழ்ப்பாணத்தில் தமிழ் பெண்கள் சிங்களவர்களை திருமணம் முடிப்பது அதிகரித்து வருவதாக ஒரு செய்தியைப் பார்த்தேன். அதன் உண்மைத் தன்மை தெரியவில்லை. ஆனால் அதற்கான சாத்தியங்கள் நிறைய உள்ளது . ஒரு தமிழ் பெண் தமிழரை திருமணம் முடிப்பதை விட ஒரு சிங்களவரை திருமணம் முடிக்கும் பொழுது திருமணத்தின் பின் அவளுக்குக் கிடைக்கின்ற சுதந்திரம் அதிகமானது. ஒப்பீட்டளவில் தமிழ் ஆணை மணமுடிக்கும் பொழுது வருகின்ற சீதனப் பிரச்சனை, சாதிப் பிரச்சனை போன்றவை ஒரு சிங்களவரை மணம் முடிக்கும்போது போது குறைவாகத்தான் வரும். ஜாதகம் பார்ப்பது சிங்களவர்களிடேயும் இருந்தாலும் இறுக்கத்தன்மை மிகக் குறைவு. முக்கியமாக மணமகன் வீட்டில் இருக்கும் பெண்களால் மணப்பெண்ணுக்கு வருகின்ற அழுத்தங்கள் சிங்கள குடும்பங்களிலே மிக மிகக் குறைவு. ஒரு தமிழ் பெண் மனமுடிக்கும் பொழுது கணவனின் தங்கை ,அக்கா , அம்மா எல்லோரும் அந்த பெண்ணை ஒரு அடிமை மனநிலையிலேயே பார்க்கின்றார்கள். அண்மையில் இந்தியாவில் ஒரு ஆடியோ பதிவு லீக்காகி இருந்தது அதிலே ஒரு கணவன் தன் மனைவியை சீதனம் கேட்டு எவ்வாறு அடித்து கொடுமைப்படுத்துவேன் என்று தங்கையிடம் பேசும் பொழுது, அந்தத் தங்கை கணவனை பாராட்டி அவளுக்கு அப்படித்தான் இன்னும் அடிக்க வேண்டும் என்று செல்கிறார். இலங்கையில் அவ்வாறான ஓடியோக்கள் இல்லாவிட்டாலும் பல குடும்பங்களில் அவ்வாறு நடக்கின்ற ஆதாரங்கள் என்னிடமே இருக்கின்றன. அவர்களின் அடையாளம் வெளிப்படும் என்பதற்காகவும் , சில விவாகரத்து வழக்குகள் இப்பொழுது நிலுவையில் இருப்பதாலும், சிலவேளை அந்த ஆண் மகன்கள் மனசு மாறி மீண்டும் சேர்ந்து வாழலாம் என்ற சின்ன நம்பிக்கையிலும் அவை எதையும் நான் வெளியிடுவதில்லை. நான் சிங்களவர்களோடு பழகி அவர்களின் திருமணங்களுக்கு சென்ற பொழுது பார்த்த விடயம், திருமணத்தை தம்பதியினரே பிளான் பண்ணுகிறார்கள். அங்கு அவர்களுடைய பெற்றோருக்கும், குடும்பத்தாருக்கும் இருக்கின்ற அழுத்தம் தமிழ் பெற்றோருக்கு இருக்கின்ற அழுத்தத்தை விட மிகக் குறைவு. குறிப்பாக சிங்கள இளைஞர்கள் அது பெண்ணாக இருக்கட்டும், ஆணாக இருக்கட்டும் தங்கள் துணையை தாங்களே தீர்மானித்து கொள்ளவே விரும்புகிறார்கள். குறிப்பிட்ட வயது வந்ததும், குறிப்பாக பல்கலைக்கழகம் வந்ததும் அவர்கள் அனைவரும் ஏதோ ஒரு வகையில் தங்களுக்கு ஒரு துணையை தேடிக் கொள்ளவே விரும்புகின்றார்கள். அங்கு புரோக்கர், சாதி, ஜாதகப் பொருத்தம் போன்றவை மிக குறைவாகவே செல்வாக்கு செலுத்துகிறது. திருமணத்துக்கு பிறகு அந்த தம்பதியினரின் வாழ்க்கையில் மண மகனின் குடும்பத்தார் அளவுக்கு அதிகமாக செல்வாக்கு செலுத்துவதில்லை. அவர்கள் புதுமணத் தம்பதிகளை தனித்து சுதந்திரமாக வாழ அனுமதி கொடுப்பது தமிழர்கள் விட சிங்களவர்களிடம் அதிகமாக இருக்கின்றது. அக்காவுக்கு சீதனம் கொடுக்க வேண்டும், தங்கச்சிக்கு சீதனம் கொடுக்க வேண்டும் என்று மணப்பெண்ணை கொடுமை படுத்துவதும் அங்கு ஒப்பிட்டளவில் மிக மிகக் குறைவு. இந்தச் சுதந்திரங்களை அறியும் பொழுது நிச்சயமாக தமிழ் பெண்கள், தமிழ் மணமகனை மணமுடிப்பதை விட சிங்கள மணமகனை மணமுடிப்பதை விரும்புகின்ற போக்கு அதிகரிக்கும். Sivachandran Sivagnanam ·

இலங்கையர்களுக்கு கொரியாவில் 8 மாத வேலைவாய்ப்பு!

2 months 3 weeks ago
இலங்கையர்களுக்கு கொரியாவில் 8 மாத வேலைவாய்ப்பு! கொரிய குடியரசின் விவசாய நடவடிக்கைகளுக்கான பருவகால தொழிலாளர் வேலைத்திட்டத்தின் கீழான ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்காக சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. கொரிய குடியரசின் E-08 வீசா வகை (பருவகால தொழிலாளர்கள்) கீழ் இலங்கை தொழிலாளர்களை இணைத்துக் கொள்வதற்கு வசதியளிக்கும் வகையில் முன்னோடிக் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கும், அதில் ஆர்வம் காட்டுகின்ற கொரியாவின் உள்ளுராட்சி நிறுவனத்துடன் கலந்துரையாடுவதற்கும் கடந்த 2025.02.19 ஆம் திகதி மற்றும் 2025.07.01 ஆம் திகதிகளில் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டங்களில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய, கொரியாவின் போசோங்க் உள்ளுராட்சி நிறுவனத்துடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பெறுபேறாக இலங்கையில் பருவகால தொழிலாளர்களை ஆட்சேர்ப்புச் செய்வதற்கும் மற்றும் அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்கும் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. உத்தேச புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம், இலங்கையின் பருவகால தொழிலாளர் வேலைத்திட்டத்தின் கீழ் குறுகியகாலம் (உயர்ந்தபட்சம் 08 மாதங்கள் வரை) போசோங்க் பிராந்தியத்தில் விவசாயக் கிராமங்களில் பணியாற்றி வருமானத்தை ஈட்டிக் கொள்வதற்காகவும், எமது நாட்டுக்கு வெளிநாட்டு செலாவணியை ஈட்டுவதற்கும் வாய்ப்புக் கிடைத்துள்ளது. அதற்கமைய, உத்தேச புரிந்துணர்வு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் போசோங்க் உள்ளுராட்சி நிறுவனத்துடன் கையொப்பமிடுவதற்காக வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1440153

இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு

2 months 3 weeks ago
இடம்பெயர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் தங்கியுள்ள டெய்ர் அல் பலா - தரை வழிதாக்குதலை ஆரம்பித்தது இஸ்ரேல் Published By: RAJEEBAN 21 JUL, 2025 | 04:12 PM தென்காசாவிலிருந்து இடம்பெயர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் தங்கியுள்ள மத்திய காசாவில் உள்ள டெய்ர் அல் பலா நகரத்தின் மீது இஸ்ரேலிய இராணுவம் தரை மற்றும் வான்தாக்குதலை ஆரம்பித்துள்ளது. ஹமாசினால் பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்டவர்கள் இந்த நகரத்திலேயே உள்ளனர் என ஊகம் காணப்படுவதும் குறிப்பிடத்தக்கது. கடும் ஆட்டிலறி மற்றும் வான்தாக்குதலின் மத்தியில் இஸ்ரேலிய டாங்கிகள் மற்றும் இராணுவ வாகனங்கள் இந்த நகரத்தை நோக்கி செல்வதாக உள்ளுர் ஊடகவியலாளர்கள் பிபிசியிடம் தெரிவித்துள்ளனர். டெய்ர் அல் பலா நகரின் மீது இஸ்ரேலிய படையினர் மேற்கொண்டுள்ள முதலாவது தரை நடவடிக்கை இது. கடந்த 21 மாதங்களாக இந்த நகரத்தை இலக்குவைத்து இஸ்ரேல் தரைநடவடிக்கை எதனையும் மேற்கொள்ளாதமை குறிப்பிடத்தக்கது. இந்த நகரத்தில் ஆயிரக்கணக்கான இடம்பெயர்ந்த மக்கள் தங்கியுள்ளனர். மேலும் காசாவின் ஏனைய பகுதிகளை விட இந்த நகரத்தில் கட்டிடங்களிற்கு குறைவான சேதங்களே ஏற்பட்டுள்ளன.. இந்த நகரில் மருத்துவமனைகள் இயங்குகின்றன. ஒருவருடத்திற்கு முன்னர் காசா பள்ளத்தாக்கின் தென்பகுதிக்குள் இஸ்ரேலிய படையினர் நுழைந்த பின்னர் ஐநாவினது அலுவலங்களும் ஏனைய மனிதாபிமான அமைப்புகளின் அலுவலகங்களும் டெய்ர் அல் பலா நகரத்திலேயே இயங்குகின்றன. https://www.virakesari.lk/article/220550

கர்நாடகா: பெண்கள் உட்பட 100 உடல்களை புதைத்ததாக கூறும் நபர் - எழும் கேள்விகள் என்ன?

2 months 3 weeks ago
'15 ஆண்டுகள்; 100-க்கும் மேற்பட்ட பெண்கள் கொலை...' - கர்நாடகா தர்மஸ்தலா மஞ்சுநாதர் கோவில் வழக்கு 22 JUL, 2025 | 10:24 AM கர்நாடகா தர்மஸ்தலா கோயிலில் சிறுமிகள் காணாமல் போன விவகாரம் தொடர்பாக, முன்னாள் ஊழியர் கொடுத்த வாக்குமூலமும், புதைக்கப்பட்ட உடல்கள் குறித்த புகாரும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. "2003-ம் ஆண்டு, எனது மகள் தர்மஸ்தலா மஞ்சுநாதர் கோவிலில் காணாமல் போனார். அக்கம் பக்கத்தில் விசாரித்ததில், என்னுடைய மகள் அடையாளம் கொண்ட பெண்ணை கோயில் ஊழியர்கள் தூக்கி சென்றதாக கூறினார்கள்.இதை கோயில் நிர்வாகத்திடம் கேட்டப்போது, என்னை மிரட்டி, அடித்தனர். அதனால், நான் கோமாவிற்கு சென்றேன்.இந்தப் பயத்தில் தான், இவ்வளவு காலம் இது குறித்து வெளியே சொல்லவில்லை'. இப்படி கடந்த 15-ம் தேதி, தட்சின கன்னடாவின் காவல் கண்காணிப்பாளரிடம் பெண் ஒருவர் புகார் அளித்தார். என்ன நடந்தது? கர்நாடகா மாநிலம் தட்சின கன்னடாவில் உள்ளது தர்மஸ்தலா. இங்கே மஞ்சுநாதர் கோயில் உள்ளது. இது மிகவும் பிரசித்தி பெற்ற கோவில் ஆகும். அரசியல்வாதிகள், பிரபலங்கள் என பலரும் வந்து செல்லும் கோயில் இது. கடந்த ஜூலை 11-ம் தேதி, இந்தக் கோயிலின் முன்னாள் தூய்மை பணியாளர் ஒருவர், "1995-ம் ஆண்டிலிருந்து 2014-ம் ஆண்டு வரை, பல பெண்கள் மற்றும் மாணவிகளின் உடல்களை அடக்கம் செய்ய சொல்லி என்னை கோயில் நிர்வாகத்தினர் கட்டாயப்படுத்தினார்கள். இதை நான் செய்யவில்லை என்றால் என்னை கொன்றுவிடுவதாக மிரட்டினார்கள். பல பெண்களை பள்ளி சீருடையிலேயே புதைத்து இருக்கிறேன். பெண்களின் உடலில் பாலியல் வன்முறைக்கான காயங்களும், சில நேரம் ஆசிட் தழும்புகளும் காணப்படும்" என்று பெல்தங்கடி நீதிமன்றத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார். இவர் ஜூன் மாதமே இது குறித்து புகார் அளித்துள்ளார். கோரிக்கைஅந்த இடத்தை தோண்டி பார்க்க வேண்டும் என்கிற கோரிக்கையும் நீதிமன்றத்தின் முன் வைத்துள்ளார். மேலும், இவர் எலும்புகூடுகளின் புகைப்படங்களையும் சமர்பித்துள்ளார். இவர் நீதிமன்றத்தில் ஆஜராகும் போதும் கூட, சில எலும்புகளை கொண்டு வந்திருக்கிறார். ஆரம்பத்தில் இவர், அந்த உடல்கள் தற்கொலை செய்துகொண்டவர்களுடையது என்று நினைத்துள்ளார். அதன் பின் தான், தர்மஸ்தலாவை சுற்றி நடக்கும் குற்றங்களை மறைக்க கொலை செய்யப்பட்ட உடல்கள் என்று அறிந்திருக்கிறார். இதே நிலை, அவர் சொந்தகாரர்களுக்கே நடந்த நிலையில், 2014-ம் ஆண்டு அந்தப் பணியில் இருந்து நின்றிருக்கிறார். இவர் இந்த வாக்குமூலத்தைக் கொடுக்கவே, மேலே கூறிய பெண்மணி காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளார். சிறப்பு புலனாய்வு குழு இதனையடுத்து, கர்நாடகா பெண்கள் அமைப்பு, கர்நாடக அமைச்சர் சித்தராமையா இந்த சம்பவம் குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு ஒன்றை அமைக்க வேண்டும் என்று கூறியுள்ளது. கர்நாடகாவின் சுகாதார துறை அமைச்சர், 'இந்த சம்பவம் குறித்து அரசு விசாரணை நடத்தும்' என்று கூறியுள்ளார். இந்த சம்பவம் குறித்து தட்சின கன்னடா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண், "புகார் அளித்த மஞ்சுநாதர் கோயிலின் முன்னாள் ஊழியர் எங்கு இருக்கிறார் என்பது தெரியவில்லை. அவர் சொல்லும் இடத்தில் குழி தோண்டி உடல்களை எடுப்பதற்கான பணிகள் நடைபெற உள்ளது. இது சாதாரண விஷயம் இல்லை. அதற்கு சில சட்ட நடைமுறைகள் தேவை. அதற்காக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது" என்று கூறியுள்ளார். https://www.virakesari.lk/article/220598

1983 கறுப்பு ஜூலை; பாதுகாப்பான எதிர்காலத்துக்காக கடந்த காலத்தை நினைவுகூருதல்

2 months 3 weeks ago
22 JUL, 2025 | 12:32 PM கறுப்பு ஜூலை வன்செயல்களுக்குப் பிறகு 42 வருடங்கள் கடந்துவிட்ட நிலையில், ஆயிரக்கணக்கான தமிழர்களின் வாழ்வைச் சிதறடித்த அந்த வன்செயல்களின் நிழலிலேயே தொடர்ந்தும் இலங்கை வாழ்ந்துகொண்டிருக்கிறது. வீடுகள் எரிக்கப்பட்டன, வாழ்வாதாரங்கள் நிர்மூலம் செய்யப்பட்டன, அப்பாவி உயிர்கள் காவுகொள்ளப்பட்டன. தலைநகர் கொழும்பில் தொடங்கி நாடுபூராவும் அந்த கலவரங்களும் வன்செயல்களும் பரவின. நூற்றுக்கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். பல்லாயிரக்கணக்கான மக்கள் இடம் பெயர்ந்தார்கள். ஆனால், அந்தக் கொடிய வன்செயல்களுக்காக இன்னமும் பொறுப்புக் கூறப்படவில்லை. உத்தியோகபூர்வ நீதி கிடைக்கவில்லை. மீண்டும் அத்தகைய வன்செயல்கள் மூளாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. தேசிய சமாதானப் பேரவை கறுப்பு ஜூலையில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தவும் பாதிக்கப்பட்டவர்களுடன் ஒருமைப்பாட்டை வெளிப்படுத்தவும் மாத்திரமல்ல, முதலில் கடந்த காலத்துக்கு முகங்கொடுத்து பிரச்சினைக்கான காரணிகளை கையாளக்கூடிய அரசியல் தீர்வொன்றைக் காணாவிட்டால், நிலைபேறான நல்லிணக்கத்தை ஒருபோதும் காணமுடியாது என்பதை வலியுறுத்திக் கூறுவதற்காகவும் கறுப்பு ஜூலையின் வருடாந்தத்தை நினைவுகூருகிறது. 1983 ஜூலை நிகழ்வுகள் ஒன்றும் தன்னியல்பானவை அல்ல. வன்முறையாக மாறிய நீண்டகாலமாக புரையோடிப்போன இனநெருக்கடியின் விளைவானதே அது. வடக்கில் வளர்ந்துகொண்டிருந்த தமிழ்த் தீவிரவாதத்தின் பின்னணியில், 13 படைவீரர்களை பலியெடுத்த விடுதலைப் புலிகளின் தாக்குதல் ஒன்றைத் தொடர்ந்தே தெற்கில் கலவரங்கள் மூண்டன. அரசியல் சூழ்ச்சி, அரசின் செயலின்மை மற்றும் தண்டனையின்மைக் கலாசாரம் (Culture of impunity) ஆகியவற்றின் விளைவானதே தெற்கின் வன்முறை எதிர்வினை. இந்த உண்மையை பகிரங்கமாக ஏற்றுக்கொள்ளும் வரை, குணப்படுத்தலை தொடங்க முடியாது. 1983 கறுப்பு ஜூலை வன்செயல்களுக்கு யார் பொறுப்பு, எத்தனை பேர் இறந்தார்கள், ஏன் அரசு தவறியது என்ற பதிலளிக்கப்படாத கேள்விகள் நாட்டை தொடர்ந்தும் தொந்தரவு செய்து கொண்டிருக்கின்றன. 2019 ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள், 1995ஆம் ஆண்டில் இருந்து செம்மணியில் கண்டுபிடிக்கப்படும் மனிதப் பதைகுழிகள் மற்றும் நீதி தாமதிக்கப்பட்ட, மறுக்கப்பட்ட அல்லது புதைக்கப்பட்ட ஏனைய பல சம்பவங்கள் உட்பட அண்மைய தேசிய அனர்த்தங்கள் பலவற்றில் இந்த தீர்வு காணப்படாத உண்மைகள் எதிரொலிக்கின்றன. காலம் கடந்து சென்றுகொண்டிருக்கும் நிலையில், 1983 ஜூலையில் நடந்தவற்றை தெரிந்து வைத்திருப்போர் மிகச் சிலராகவே இருப்பர். ஆனால், கடந்த காலத்தை நாம் தெரிந்துகொள்ளாவிட்டால், பிரச்சினையின் மூலவேர்க் காரணிகளை கையாளக்கூடிய சமாதான எதிர்காலம் ஒன்றுக்கான பயனுறுதியுடைய அத்திவாரத்தை போடமுடியாது. இத்தகைய பின்புலத்தில், அரசாங்கத்தின் உத்தேச உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு 1983 ஜூலை நிகழ்வுகளை முழுமையாக ஆராயவேண்டிய தேவையையும் அதன் ஆணையில் உள்ளடக்கவேண்டியது அவசியமாகும். நீதி மற்றும் பரஸ்பர மதிப்பின் மீது கட்டியெழுப்பப்பட்ட ஒரு நாட்டை எதிர்காலச் சந்ததி பொறுப்பேற்க வேண்டுமானால், நடந்தவை பற்றிய உண்மையையும் அதற்கான காரணங்களையும் கற்றுக்கொள்வதற்கான வாய்ப்பு அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும். தீர்வு காணப்படாமல் இருக்கும் இனநெருக்கடியின் விளைவாக உயிரிழந்த சகலரையும் முழு நாடும் நினைவுகூருவதற்கும் அத்தகைய வன்முறைகள் மீண்டும் ஒருபோதும் நிகழாதிருப்பதற்கு உறுதிபூணுவதற்குமான ஒரு தினமாக ஜூலை 23 பிரகடனம் செய்யப்பட வேண்டும் என்று தேசிய சமாதானப் பேரவை யோசனை முன்வைக்கிறது. இனம், மதம், சாதி மற்றும் வர்க்க வேறுபாடுகளுக்கு அப்பால் சகல சமூகங்களையும் அரவணைத்துப் பாதுகாக்கக்கூடிய அதிகாரப் பரவலாக்கம், அதிகாரப்பகிர்வு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட நீதியான அரசியல் முறைமை ஒன்றின் ஊடாக சுபீட்சமும் அபிவிருத்தியும் நிறைந்த நாடொன்றை கட்டியெழுப்புவதில் இன்றைய தலைமுறையினரிடமும் அரசாங்கத் தலைமைத்துவத்திடமும் இருக்க பற்றுறுதிக்கான ஒரு குறிகாட்டியாக அந்த யோசனை அமையும். https://www.virakesari.lk/article/220610
Checked
Thu, 10/16/2025 - 03:24
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed