2 months 3 weeks ago
டிபிக்கல் தமிழ் மனப்பான்மையைப் பற்றித் தான் இங்கே குறிப்பிடப்படுகிறது அது எவ்வாறிருக்கின்றது என அறிய வேண்டுமெனில் பார்க்க .. மாதவன் நடித்த Aap Jaisa Koi (2025)..
2 months 3 weeks ago
எங்கட யாழ்கள கலைஞனும் இப்ப விமானி ஆகியிருப்பார் என்று நினைக்கிறேன்.கனடா உறவுகளுக்கு சில வேளை தெரிந்திருக்கலாம்.
2 months 3 weeks ago
இந்த தம்பியின் செய்தி தமிழ்வின். ஐபிசி ஆகியவற்றிலும் வந்தது. தமிழ் சமூகத்தை பொறுத்தவரை இது முக்கிய செய்திதான். வைத்தியர், பொறியியலாளர், சட்டத்தரணி ஆகியோரின் எண்ணிக்கையுடன் ஒப்பிடும் போது எமது சமூகத்தில் எத்தனை விமானிகள் உள்ளனர் என்று பார்த்தால்.. அங்கை ஒருவர் எனக்கு தெரியும். ஆனால் எனக்கு அறிமுகம் இல்லை.. இந்த அளவில்தான் விமானிகளின் பிரசன்னம் உள்ளது. அதிகம்பேர் விமானத்துறையில் கால்பதிக்க வேண்டும். வழங்கல் குறைவான இடத்தில் பொருளுக்கு மவுசு அதிகம் காணப்படும். அதற்காக இந்த தம்பி மீது பொறாமைப்படக்கூடாது. எயார் பஸ் என்றால் இனியும் போடலாம்.
2 months 3 weeks ago
முன்னர் பிரித்தானியாவில் சுரேன் என்று அழைக்கப்படுபவர் சுமந்திரனின் எடுபிடியாக இருந்து மூடிய அறைக்குள் ஆலோசனைகள் நடந்தன. இப்போ, கட்சியை மாற்றி அமைத்ததுபோல் அந்த அணியை மாற்றி அமைக்க சென்றிருப்பார் போலுள்ளது. ஊரில், தெருக்கோடியெங்கும் கோட்டு ஸூட்டோடு காட்சியளித்து அலைபவர், அங்கே சமயலறையில் சமையற்காரன், தனது சமையல் பற்றி விளக்குவது, விவரிப்பதுபோல் ஒரு படம். எப்பிடியிருந்த சுமந்திரனா இப்படி?
2 months 3 weeks ago
செம்மணி மனித எலும்புகள் வெளிக்கிளம்பியதுதான் தாமதம், சகோதரத்துவமும் முளை விடுகிறது. இது ஒன்றும் கிழட்டுப்புலி, தருப்பை காப்பை ஏந்திய கதையில்லைத்தானே? இனிமேல் சண்டித்தனம் காட்ட முடியாதென்றால் அணைத்து குத்த வேண்டியது. இது இனத்தின் பாரம்பரியம். இத்தனை அழிவுகள் நம் இனத்துக்கு நடக்கும்போது, இவர்களும் நாட்டில், பாராளுமன்றத்தில், பதவிகளில் இருந்து ஆதரவு கொடுத்திருந்தார்கள். தமிழருக்காக அனுதாபத்தை கூட வெளிப்படுத்த வில்லையே இந்த செம்மணி விவகாரம் வெளிவரும்வரை. ஐ .நா வில் அப்படியொன்றும் நடக்கவில்லை, இனஅழிப்பு என்று யாராவது கதைத்தால் சட்டம் பாயும் என்று வேறு அச்சுறுத்தினார்களே? நடந்தது நடந்தவையாகவே இருக்கட்டும் எங்கள் நிலங்களை மீள அளியுங்கள், தடைகளை நீக்குங்கள், தேவையற்ற விகாரைகளை அகற்றுங்கள், நமது நிலங்களை ஆக்கிரமித்திருந்து சமூக சீர்கேடுகளை உருவாக்கும் இராணுவத்தினரை மீளப்பெறுங்கள், சம உரிமையை தாருங்கள், உங்களை நாங்கள் நம்புகிறோம். இங்கு ஒன்று, தெற்கில் வேறொன்று கூறி இரு பகுதி மக்களையும் ஏமாற்ற வேண்டாம்.
2 months 3 weeks ago
"இக்கரை மாட்டிற்கு அக்கரை பச்சை."எங்கும் நாம் சொல்லும் பிரச்சனைகள் உள்ளன. ஆனால் வடக்கு கிழக்கில் இன்று நடக்கும் திருமணங்கள், நாங்கள் சொல்லும் காரணங்களுக்குள் அடங்காது. எமது சமூகத்திலும் சாதி, சமயம் பாராமல், சீதனம் வாங்காமல் தாங்களே விரும்பியும், பெற்றோர் பார்த்தும் செய்துவைத்த திருமணங்கள் உண்டு. அப்போ சிலர் சொல்லிக்கொண்டனர்; பெண் கிடைக்காததால் அவ்வாறு செய்து கொண்டனர், ஆணில் ஏதோ குறையுண்டு. இவ்வாறு பல காரணங்கள் சொல்லிக்கொண்டனர். எனக்கு தெரிந்து அப்போது போலீசாக இருந்த ஒரு சிங்களவர், தாதியாக பணியாற்றிய ஒரு தமிழ்ப்பெண்ணை விரும்பி திருமணம் செய்திருந்தார். அவர் ஒருதடவை தன் குடும்பத்தை பார்த்து குடும்ப சொத்தில் தனது பாகத்தை பெற சென்றிருந்தார். ஆனால் அவர் அங்கிருந்து அடித்து விரட்டப்பட்டார். அன்று போர் நடக்கும் போது, கோத்தா சொன்னார் என நினைக்கிறன். "தமிழ் இளைஞரின் உடல்கள் கடல் மீன்களுக்கு, பெண்கள் உடல் சிங்கள இளைஞருக்கு." போரிலும், திட்டமிட்டு அழிக்கப்பட்ட தமிழ் இளைஞர்கள், பறிக்கப்பட்ட, மறுக்கப்பட்ட வேலைவாய்ப்புகள், நிலங்கள், பெண்கள் வேறு வழியில்லாமல் இந்த நிலைக்கு தள்ளப்படுகின்றனர் அல்லது அந்த நிலை வேண்டுமென்றே உருவாக்கப்படுகிறது. நாம் ஏதோ நல்ல மாற்றம் நிகழ்ந்து விட்டதாக நினைக்கிறோம். ஏன் சிங்கள தம்பதியினர் விவாகரத்து பெறவில்லையா? கள்ள தொடர்பு வைத்து காதலியையோ மனைவியையோ கொலை செய்யவில்லையா?
2 months 3 weeks ago
சிறுகதை - 183 / "கறுப்பு ஜூலை 1983, என்னை கருப்பாக்கியது" [ஒரு தேசத்தின் ஆன்மாவில் எரிந்த காதல் கதை] அது ஜூலை 1983, இலங்கையின் தலைநகரம் கொழும்பு, ஈரப்பதமான, சாம்பல் நிறத்துடன் அதன் வழக்கமான பருவ மழையின் தாக்கத்தில் ஆழ்ந்து யோசனை செய்துக் கொண்டு இருந்தது. ஆனால் கொழும்பு பல்கலைக்கழகத்தின் சிறப்பு மிக்க மாணவர்கள் கூடும் மண்டபங்களுக்குள், ஒரு அமையான, ஆனால் ஆவேசமான எதிர்ப்பு அங்கொன்று இங்கொன்றாக மின்னியது. அதன் குரல்கள், ஒரு மூலையில் குளிர்பானத்தை இரசித்து சுவைத்துக் கொண்டு இருந்த இரண்டு காதலர்கள் காதிலும் விழுந்தது. ஒருவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இறுதியாண்டு அரசியல் அறிவியல் மாணவன் பிரதீபன் மற்றவர் மட்டக்களப்பைச் சேர்ந்த உற்சாகமான தமிழ் இலக்கிய பட்டதாரி இரண்டாம் ஆண்டு மாணவி அருந்ததி. அவர்களின் காதல் அமைதியாக அங்கே இரண்டு ஆண்டுகளாக பூத்து குலுங்கின. திருமண மேடையில் இன்னும் அருந்ததி பார்க்கவில்லை என்றாலும், தினம் அருந்ததியை பார்த்தவண்ணம் தான் பிரதீபன் இருந்தான். அவர்கள் பல்கலைக்கழக வாளாவிலும், பூந்தோட்டத்திலும் நூலகத்திலும், உணவகத்திலும் சந்திக்கத் தவறுவதில்லை. அவர்கள் இலக்கியம் பேசிக் கொண்டே காதல் வளர்த்தார்கள். பாவேந்தர் பாரதியையும் பாரதிதாசனையும் படித்து, அதில் அரசியல் காணும் பிரதீபனுக்கும், சங்க இலக்கியத்தை நயமாக வாசித்து அதில் காதல் சுவை காணும் அருந்ததிக்கும் இடையில் பசுமைக் காதல் வளர்ந்ததில் எந்த ஆச்சரியமும் இல்லை. அவன் நீதியைக் கனவு கண்டான். அவள் இன்பக் காதலைக் கனவு கண்டாள். என்றாலும் ஒன்றாக, அவர்கள் சமமான, ஒன்றுபட்ட மற்றும் அமைதியான எதிர்காலத்தைக் கனவு கண்டார்கள். ஆனால் வரலாற்றில் ஜூலை 23 இல், வேறு திட்டங்கள் இருந்தது அவர்கள் இருவருக்கும் தெரியாது! ஜூலை 23 ஆம் தேதி, சில அரசுக்கு எதிரான தமிழ் இளைஞர்களால், 13 இலங்கை இராணுவ வீரர்கள் கொல்லப்பட்ட செய்தி இடி முழக்கம் போல வெடித்தது. அதைத் தொடர்ந்து வந்தது துக்கம் அல்ல - மாறாக அரசால் திட்டமிடப்பட்ட பழிவாங்கல். அருந்ததியும் பிரதீபனும் அமைதியான இரவு உணவிலிருந்து திரும்பி வந்தபோது, வீதிகள் போர்க்களங்களாக மாறின. வாக்காளர் பட்டியல்கள் மற்றும் தடிகளுடன், கையில் தீப்பிழம்புகளையும், கண்களில் வெறுப்பையும் ஏந்திய சிங்கள கும்பல்கள், கட்டவிழ்த்து விடப்பட்ட மிருகங்களைப் போல தமிழ் வீடுகளை வேட்டையாடினர். அவர்களின் தங்குமிடம், அவர்களின் புகலிடம் தீக்கிரையாக்கப்பட்டது. ஒரு சில மணித்தியாலத்துக்குள் 3,000 உயிர்கள். 18,000 வீடுகள். 5,000 வியாபாரங்கள். நெருப்பு மட்டுமல்ல, கலங்காத மௌனமும் எரிந்தது. மகாவம்சத்தில் ஒரு கதை இருக்கிறது. 'கர்ப்ப பெண்ணான, ராணி விகாரமகாதேவிக்கு விசித்திரமான ஆசைகள் ஏற்பட்டன. தமிழ் மன்னன் எல்லாளனுடைய வீரர்களிலே முதல் வீரனுடைய கழுத்தை வெட்டிய கத்தியைக் கழுவ உதவிய நீரை, வெட்டுண்ட அந்த தலை மீது நின்று கொண்டு குடிக்க வேண்டும் அது என்கிறது' மகாவம்சம் அத்தியாயம் 22 - 44 & 45 . அந்தக் காடையர் கூட்டத்தை கண்ட இருவருக்கும், அவர்களின் 'கொடூர அவா' எப்படி இருக்கும் என்று ஊகிக்க முடிந்தது. உடனடியாக அவர்கள் அங்கிருந்து ஓட முயன்றனர். என்றாலும் அவர்களைச் சிக்கவைத்து விட்டன. பிரதீபனைத் துரத்தி, சாலையில் பாய்ந்து பிடித்து, சாலையின் நடுவில் இழுத்துச் செல்லப்பட்டு உயிருடன் எரிக்கப்பட்டான். அவன் மார்பில் ஒரு டயர் சுற்றிப் போட்டு, மண்ணெண்ணெய் நனைந்த துணியால் எரிக்கப்பட்டது. அவனுடைய அலறல் சத்தம் அவள் கதை அடைத்தது. அருந்ததி தானும் விழ முயன்றால். ஆனால், அவர்களில் இருவர் அவளை பிடித்து ஏதேதோ சொல்லிக் கொண்டு இருந்தார்கள். அவள் தவித்து கண்ணீர் சிந்தியபடி துடித்துக் கொண்டு நின்றாள். அவர்கள் சிரித்தார்கள். பத்தினி தெய்வம் என்று இன்னும் இலங்கையில், சிங்களவர் உட்பட, வழிபாடும் கண்ணகி போல் அவள் கண்கள் சிவந்து எரிந்து கொண்டு இருந்தன. அவர்களுக்கு அவளின் கண்ணைப்பற்றி, பெண்மை பற்றி பிரச்சனை இல்லை. அவளின் உடலுக்காக ஒன்றின்பின் ஒன்றாக மிருகங்களாக வரிசையில், பிரதீபனின் உடல் எரிந்து முடியுமட்டும் ஆனந்தமாக வேடிக்கை பார்த்தனர். “மலரினும் மெல்லிது காமம் சிலர் அதன் செவ்வி தலைப்படு வார்” என்றார் வள்ளுவர்' ஆனால் மிருகங்களுக்கு அது தெரியப்போவதில்லை. அவர்களின் காம அவசரத்தில், அவளின் ஆடைகளை கிழித்தனர், பலர் சேர்ந்து கற்பழித்தனர். அவளுடைய தந்தையாக இருக்கும் அளவுக்கு வயதானவர்களால் கூட பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டாள். “காதலுக்கு நான்கு கண்கள், கள்வனுக்கு இரண்டு கண்கள், காமுகனின் உருவத்தில் கண்ணுமில்லை காதுமில்லை” அவளின் இலக்கிய வாய் முணுமுணுத்தது! பின்னர் தெஹிவளை கடற்கரையின் மணல் திட்டுகளில், மயக்க நிலையில், அவள் இறந்து விட்டாள் என்று அவளின் உடலை தூக்கி எறிந்தனர். அங்கே வீதி ஓரத்தில் புத்தர் சிலையாக இருந்தார்! இத்தனைக்கும் இலங்கை அரசு எந்த ஊரடங்கு சட்டமோ அல்லது காவல் துறையினரையோ பயன்படுத்த வில்லை. தூண்டி விடப்பட்ட காடையர் கூட்டத்தின் விசித்திரமான ஆசைகள் நிறைவேறட்டும் என்று ஒரு சில நாள் காத்திருந்தது! அங்கு ஆர்ப்பரிக்கும் அலைகள் அவளுடைய முனங்குதலைக் கண்டு, தங்கள் கைகளால் அவளை ஆறுதல் படுத்தின. கதிரவன் தன் கரங்களைப் பரப்ப, காகங்கள் கூடிப் பறக்க அவள் சற்று கண்களைத் திறந்தாள். என்றாலும் அவள் உடம்பால் எழுந்திருக்க முடியவில்லை. மீண்டும் அங்கே கண்மூடிக் கிடந்தாள்! பின்னர், விதி தலையிட்டது. அன்று காலை கடற்கரையில், தன் மனைவியுடன் நடந்து சென்ற கொண்டு இருந்த, நடுத்தர வயது சிங்கள மருத்துவர் டாக்டர் விஜேசிங்கே [විජේසිංහ], இரத்தக்கறை படிந்த, அரைகுறை கிழிந்த உடுப்புடன் ஒரு பெண்ணின் உருவத்தை அலைகளின் மோதலுக் கிடையில் கண்டார். அவரது மனசாட்சி அவரது பயத்தை விட வலிமையானது. அவரும் அவரது இரக்கமுள்ள பள்ளி ஆசிரியரான மனைவி நேத்மியும் [නෙත්මි], அருந்ததியை தமது வீட்டிற்கு காவிச் சென்று, நடுங்கும் கைகளால் அவளது காயங்களைக் கழுவி, அதற்கு ஏற்ற, தன்னிடம் இருந்த முதல் உதவி மருந்துகள் மூலம் சிகிச்சை அளித்தார். அதன் பின் அவளுக்குக் கஞ்சி மற்றும் இளநீர் கொடுத்தார்கள். என்றாலும் அவள் பேசவே இல்லை. அவள் தான் யார் என்று, தனக்கு என்ன நடந்தது என்று மூச்சு விடவே இல்லை. அவர்களும் அதைக் கேட்கவில்லை. என்றாலும் அவள் ஒரு தமிழிச்சி என்று மட்டும், அன்று நிலவிய சூழலால் அவர்களுக்கு புரிந்தது. அவர்கள், அவளை ஒரு அப்பாவி இலங்கைப் பெண்ணாக மட்டுமே பார்த்தார்கள். அப்பத்தான் அவளுக்கு புத்தர் இன்னும் வாழ்கிறார் என்ற நம்பிக்கை பிறந்தது! மூன்று நாட்கள், வீட்டிலேயே அவர்களால் முதலுதவி. உணவு, சுகாதாரம், பாதுகாப்பு என எல்லா வசதியும் இரகசியமாக செய்தனர். பிறகு இறுதியாக, அனைத்துலக கண்களை நிர்வகிக்க அல்லது சரிசெய்ய அரசு தயக்கத்துடன் ஊரடங்கு உத்தரவு கொண்டு வந்ததும், டாக்டர் விஜேசிங்கே தனது மருத்துவமனை சலுகைகளைப் பயன்படுத்தி, அவளை ஒரு தொலைதூர உறவினராகக் காட்டி, கொழும்பு தனியார் வைத்தியசாலை ஒன்றில் அனுமதித்தார். அங்கு, அருந்ததி மெதுவாக குணமடைந்தாள். ஆனால் ஞாபகங்கள் 'மனிதம்' எரிந்த அந்த நிலத்தில் தான் இருந்தன. பிரதீபனின் அழுகையும், தன்னைப்போல பரிதாபமடைந்த பெண்களின் ஓசையும், மனதில் ஒலித்துக் கொண்டிருந்தன. பல மாதங்களின் பின் அவளுடைய உடல் குணமடைந்தது - ஆனால் அவளுடைய ஆன்மா மட்டும் குணமடையவில்லை. அது இன்னும் எதையெதையோ தேடிக் கொண்டு இருந்தது. பௌத்தத்தில் உள்ள ஐந்து கட்டளைகளில் (பஞ்ச - சீலம்) மூன்றாவது கட்டளை “Kāmesu micchācāra veramaṇī sikkhāpadaṃ samādiyāmi” என்கிறது, அதாவது, “பாலியல் துஷ்பிரயோகத்திலிருந்து விலகுவதற்கான பயிற்சி விதியை நான் ஏற்றுக்கொள்கிறேன்.” என்கிறது. ஆனால் அவள் அதை நம்பும் நிலையில் அன்று - பிரதீபனை எரித்து, தன்னை அனாதையாக்கி, தன் உடலை கெடுத்த அந்த மிருகங்களை பார்த்த பொழுது, கொடூரத்தை அனுபவித்த பொழுது இருக்கவில்லை. ஆனால் இன்று டாக்டர் குடும்பத்தை பார்த்த பொழுது கொஞ்சம் ஆறுதல் அடைந்தாள். ஆனால் இன்னும் அவள் சில நேரங்களில் தூக்கத்தில் கத்தினாள். அவள் சில நேரங்களில் கண்ணாடியில் பிரதீபனின் எரியும் கண்களைப் பார்ப்பாள். அவள் திருமணத்தை முற்றிலும் மறுத்தாள். அதுமட்டும் அல்ல, அவள் தன் மேல் இன்று காட்டும் அனுதாபத்தை மறுத்தாள். அவள் நினைவு முழுமையாகத் திரும்பிய போது, அவள் நீதியின் குரலாக எழுந்தாள்! விஜேசிங்கே குடும்பத்தால் சகோதரியாக போற்றப் பட்ட அவள், இனப்படுகொலையில் இருந்து தப்பிய தமிழ்ப் பெண் அருந்ததி பிரதீபன் என்று தன் அடையாளத்தைத் தக்க வைத்துக் கொண்டதுடன், அவள் ஒரு மனித உரிமை வழக்கறிஞரானாள். அவளது தீ மெதுவாக ஆனால் வலுவாக எரியத் தொடங்கியது! அவள் வெலிக்கடை முதல் செம்மணி வரை, கொக்கடிச்சோலை முதல் முள்ளிவாய்க்கால் வரை வழக்குகளை எதிர்த்துப் போராடினாள். கருப்பு ஜூலையையோ அல்லது அதைத் தொடர்ந்து வந்த இருண்ட மௌனத்தையோ அவள் ஒருபோதும் மறக்கவில்லை. இன்று ஜூலை 23, 2025. கொழும்பு மீண்டும் வெட்கத்தின் கண்ணாடியில் தன்னைப் பார்த்துக் கொண்டிருக்கிறது. தற்போது 62 வயதான அருந்ததி, விஜேசிங்கே குடும்பத்துடன் நடந்து செல்கிறார் - ஒருபுறம் வயதான டாக்டர் விஜேசிங்கே, மற்றும் அவரது பேரன், சட்டக் கல்லூரி மாணவன், மறுபுறம் ஓய்வுபெற்ற ஆசிரியை நேத்மியும் மற்றும் அவரது பேத்தி பாடசாலை மாணவி. "நீதி தாமதமானது இனப்படுகொலை மறுக்கப்பட்டது" என்று எழுதப்பட்ட ஒரு பலகையை சிங்களத்திலும் தமிழிலும் ஏந்தி, அவர்கள் காலி முகத்திடலைக் கடந்து ஜனாதிபதி செயலகத்தின் வாயில்களை நோக்கி நடக்கிறார்கள்! பிரதீபனின் புகைப்படத்தை டாக்டரின் பேத்தி தூக்கி பிடித்துக் கொண்டு இருந்தாள். பேரன் புத்தரின் பஞ்சசீலத்தை காட்சிப் படுத்திக் கொண்டு நடந்தான். கூட்டமும் மெல்ல மெல்ல இணைகிறது. சில சிங்களவர்கள். பல தமிழர்கள். அவள் மனுவைப் படிக்கிறாள். அவள் குரல் நடுங்குகிறது, ஆனால் பயத்துடன் அல்ல. "நாம் எனக்காக மட்டும் நடக்கவில்லை, ஆனால் திரும்பி வராத அனைவருக்காகவும். காதலர்கள் எரிந்ததற்காக, சகோதரிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதற்காக, நமது அவமானத்தைத் தாங்கிய மண்ணுக்காக / I walk not for myself alone, But for all those who never returned. For the lovers burned, the sisters raped, For the sand that holds our shame" அவள் நடைபாதையில் ரோஜாக்களை தூவினாள். அவள் காற்றில் கிசுகிசுத்தாள்: "கருப்பு ஜூலை 1983 இல் முடிவடையவில்லை. ஆனால் நம்பிக்கையும் இன்னும் இல்லை / Black July didn’t end in ’83. But neither did hope.” அங்கு கூடிய எல்லோரும் ஒன்றாக முழக்கமிடடனர்: . "நியாயம் தாமதிக்கப்படும் போது, அது இன அழிப்பு என்றே கருதப்படும் / When justice is delayed, it is considered genocide" நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
2 months 3 weeks ago
அவரே அப்படி போகக்கூடிய ஆள்தான்!
2 months 3 weeks ago
இலங்கை தமிழரசுக்கட்சியின் பதில் பொதுச்செயலாளர் சுமந்திரன் பிரித்தானியாவுக்கு சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. தமிழரசுக்கட்சியின் பிரித்தானிய ஆதரவு அணி என்று ஒரு அணியினரை சுமந்திரன் முகநூல் பக்கங்களில் அறிமுகப்படுத்தியுள்ளார். இந்த நிலையில் இவர்களை சந்தித்து மூடிய சமையலறையில் சுமந்திரன் கலந்துரையாடிள்ளார் என்று பிரித்தானியாவில் இருக்கும் அரசியல் ஆய்வாளர் தி.திபாகரன் தெரிவித்தார். அவர்கள் தனிப்பட்ட சந்திப்புகளுக்காக சந்திக்கின்றார்களே தவிர தமிழ் தேசியம் சார்ந்து சந்திக்கவில்லை. சுமந்திரன் தவறானவர் என்று சாணக்கியனே ஒப்புக்கொள்ளும் வகையில் பேசும் காணொளியொன்றினை நான் சமூகவலைத்தளமொன்றில் பார்த்தேன் என குறிப்பிட்டார். லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவித்த போதே இவ்வாறு குறிப்பிட்டார். https://tamilwin.com/
2 months 3 weeks ago
சித்தர்கள் கூறும் வாழ்க்கை ரகசியங்கள் ஐந்து . ......... ! 🙏
2 months 3 weeks ago
நல்லவேளை மாக்கிரெட் தட்சருக்கு எம் ஆர் ஐ எடுக்கவில்லை.
2 months 3 weeks ago
Tamils 4 Martians ! எலி அம்மணமா ஓடுவதே தப்பு, அதிலும் சைக்கிளில் ஏறி வேறு ஓடுகிறது🤣
2 months 3 weeks ago
தமிழர்கள் சர்வதேசத்தையும் இந்தியாவையும் நம்பிப்பயணில்லை என்ற தலைப்பார்த்தாவுடன் நான் நினைத்தேன், வேற்றுகிரகவாசிகள் யாராவது உதவிசெய்யிரதாக உத்தரவாதம் அளித்துவிட்டார்களா என்று 🤔 அப்ப இந்தியா சர்வேசம் இல்லையா? 😃
2 months 3 weeks ago
தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே .......... ! 😍
2 months 3 weeks ago
வணக்கம் வாத்தியார் . .......... ! பெண் : கவிதை கேளுங்கள் கருவில் பிறந்தது ராகம் நடனம் பாருங்கள் இதுவும் ஒரு வகை யாகம் பெண் : பூமி இங்கு சுற்றும் மட்டும் ஆட வந்தேன் என்ன நட்டம் ஓடும் மேகம் நின்று பார்த்து கைகள் தட்டும் பெண் : கவிதை கேளுங்கள் கருவில் பிறந்தது ராகம் நடனம் பாருங்கள் இதுவும் ஒரு வகை யாகம் பெண் : நேற்று என் பாட்டு ஸ்ருதியில் விலகியதே பாதை சொல்லாமல் விதியும் விலகியதே பெண் : காலம் நேரம் சேரவில்லை காதல் ரேகை கையில் இல்லை சாக போனேன் சாகவில்லை மூச்சு உண்டு வாழவில்லை பெண் : வாய் திறந்தேன் வார்த்தை இல்லை கண் திறந்தேன் பார்வை இல்லை தனிமையே இளமையின் சோதனை புரியுமா இவள் மனம் இது விடுகதை பெண் : பாறை மீது பவள மல்லிகை பத்தியம் போட்டதாரு ஓடும் நீரில் காதல் கடிதம் எழுதிவிட்டது யாரு அடுப்பு கூட்டி அவிச்ச நெல்லை விதைத்து விட்டது யாரு அலையில் இருந்து உலையில் விழுந்து துடி துடிக்கிது மீனு பெண் : இவள் கனவுகள் நனவாக மறுபடி ஒரு உறவு சலங்கைகள் புது இசை பாட விடியட்டும் இந்த இரவு பெண் : கிழக்கு வெளிச்சம் இருட்டை கிழிக்கட்டும் இரவின் முடிவில் கனவு பலிக்கட்டும் இருண்டு கிடக்கும் மனமும் வெளுக்கட்டும் ........ ! --- கவிதை கேளுங்கள் ---
2 months 3 weeks ago
இது இந்த மருத்துவ சேவை நிலையத்தின் ஒரு பாரதூரமான குறைபாடாக தெரிகிறது. எக்ஸ் கதிர்கள் பயன்படும் அறை, காந்தப் புலம் பயன்படும் எம்.ஆர்.ஐ அறை என்பன பயன்பாட்டில் இருக்கும் போது உள்ளே யாரும் நுழைய முடியாதபடி கதவு பூட்டப் பட்டிருக்க வேண்டும். அனேகமாக தொழில் நுட்பவியலாளரின் வேலை பறி போகும்.
2 months 3 weeks ago
இந்த வாரத்தில் இருந்து வடக்கில் வடக்கு மாகாணத்தில் உள்ள மக்கள் தங்கள் வீடுகளைப் புனிதப்படுத்த தொடங்கிவிடுவார்கள் என்று இவர் சொல்வது இதுவரை நான் அறிந்தது இல்லை. இவர் வீடுகளை புனிதப்படுத்துவது என்று தூசு அகற்றும்கருவியால் vacuum cleaner சுத்தம் செய்வது , சுத்தபடுத்தும் தண்ணியால் சுத்தம் செய்வதை தானே சொல்கின்றார் அது அவர்கள் ஒவ்வொரு வாரமும் செய்து வருவது தானே
2 months 3 weeks ago
இது ஒரு தாழ்வுமனபான்மை சிக்கலாக தெரிகின்றது
2 months 3 weeks ago
இலங்கையில் இனப் பிரச்சனை நாட்டையே இரண்டாக்கும் முன் இருந்த காலத்தில், வடக்கில் வாழ்ந்த தமிழ் மக்களிடையே சாதியப் பாகுபாடுகள் உச்சத்தில் இருந்தது. அன்றைய நாட்களில் சில தமிழ் வியாபாரிகள் சிங்கள மக்கள் பெரும்பான்மையாக வாழும் இடங்களில் வியாபாரங்களும் செய்து கொண்டிருந்தனர். பெண்கள் மீதான கட்டுப்பாடுகளும் மிகவும் அதிகமாக இருந்த காலகட்டம் அது. ஆனாலும் அன்று சிங்கள மக்களுக்கும், தமிழ் மக்களுக்கும் இடையே திருமண உறவு மிகக் குறைவாக இருந்தது. காவல்துறை தலைவர் நடேசன் போன்ற ஓரிருவரே அப்படிச் செய்ததாக தெரிந்திருந்தது. போராட்டம் தீவிரமாக இருந்த காலம் வேறு. முற்று முழுதான சந்தேகமே இரண்டு பக்கங்களிலும் இருந்தது. இனப் பாகுபாட்டை மீறி எந்த விதமான உறவுகளையும் ஏற்படுத்தும் ஒரு சாதகமான நிலை இருக்கவில்லை. மிகவும் சிலவே நடந்தன. இன்றைய போக்கு மாறி இருந்தால், அதற்கான பிரதான காரணம் வடக்கு மக்களின் பரம்பலே பிரதான காரணமாக இருக்கவேண்டும். வடக்கிலிருந்து வெளியேறிய மக்கள் நாட்டின் வேறு பகுதிகளில் நிரந்தரமாக , முக்கியமாக கொழும்பு போன்ற இடங்கள், வாழ ஆரம்பித்துவிட்டனர். அங்கு அவர்கள் வேறு இன மக்களுடன் அதிக இணக்கத்துடன், முன்னருடன் ஒப்பிடும் போது, இருக்கின்றார்கள் போல. இது இன்று உலகின் பல பெரு நகரங்களிலும் காணும் ஒரு நடைமுறையே. சென்னையில் கூட அவர்களின் மிகவும் இறுக்கமான சாதியக் கட்டுப்பாடுகளையும் மீறி புதிய உறவுகள் அதிக அளவில் உருவாகிக் கொண்டிருக்கின்றன. கிழக்கு மாகாணமோ மூவினங்களும் ஒரே அளவில் வாழும் ஒரு பிரதேசமாக மாறிவிட்டது. காலப்போக்கில் இன மற்றும் வேறு அடையாளங்களை தாண்டிய உறவுகள் அங்கே அதிகமாவது தவிர்க்க முடியாத ஒன்றே.
2 months 3 weeks ago
புனர்வாழ்வு அளிக்கப்பட்டவர் என்பதால் அவரை அவர்களே இருக்கமுடியும். அதற்கான பயிற்சி மற்றும் செயற்பாடுகள் அங்கிருந்தே தொடங்கி இருக்கவேண்டும்.
Checked
Thu, 10/16/2025 - 03:24
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed