புதிய பதிவுகள்2

6 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் கைப்பேசி பயன்படுத்தக் கூடாது!- அமைச்சர் சரோஜா போல்ராஜ்

2 months 3 weeks ago
இந்த விடயத்தில் சரோஜா சாவித்திரி போல்ராஜும், ஜேவிபி கட்சியினரும் நடந்து கொண்ட விதம் மோசமானதே. அவர்கள் உறுதியான நடவடிக்கை எடுத்திருக்கவேண்டும். பின்னர் இந்த விவகாரம் அப்படியே அடங்கிப் போய்விட்டது...........................😒.

அமெரிக்க விசாவுக்கு மேலதிகமாக 250 டாலர்கள் அறவிட தீர்மானம்.

2 months 3 weeks ago
டிரம்ப் நிர்வாகத்தின் சமீபத்தில் இயற்றப்பட்ட உள்நாட்டு கொள்கை மசோதாவில் உள்ள ஒரு விதியின்படி, சர்வதேச பார்வையாளர்கள் தற்போதுள்ள விசா விண்ணப்ப செலவுகளுடன் சேர்த்து குறைந்தபட்சம் $250 புதிய "விசா நேர்மை கட்டணம்" செலுத்த வேண்டும் என்று அமெரிக்கா கோரும். அமெரிக்காவிற்குள் நுழைய குடியேறாத விசாக்களைப் பெற வேண்டிய அனைத்து பார்வையாளர்களுக்கும் இந்தக் கட்டணம் பொருந்தும். இதில் பல ஓய்வு மற்றும் வணிகப் பயணிகள், சர்வதேச மாணவர்கள் மற்றும் பிற தற்காலிக பார்வையாளர்கள் அடங்குவர். 2024 நிதியாண்டில், வெளியுறவுத்துறை புள்ளிவிவரங்களின்படி, அமெரிக்கா கிட்டத்தட்ட 11 மில்லியன் குடியேறாத விசாக்களை வழங்கியது. https://www.cnn.com/2025/07/21/travel/visa-integrity-fee-usa-international-travelers இது நடைமுறைக்கு வந்தால் மற்றைய நாடுகளும் இதனைப் பின் பற்றலாம். ஏற்கனவே இங்கிலாந்து இடைத்தங்கலுக்கு 15-20 டாலர்கள் அறவிடுவதாக சொன்னார்கள்.

சங்கிலியுடன் எம்ஆர்ஐ ஸ்கேன் அறைக்குள் நுழைந்தவர் மரணம் - நொடி நேரத்தில் எந்திரத்துக்குள் இழுத்த காந்தபுலம்

2 months 3 weeks ago
final destination எனும் படத்தில் இதே போல் ஒரு காட்சி வந்துள்ளது.

பிறப்பு அத்தாட்சிப் பத்திரத்துக்கு தந்தையின் பெயர் அவசியமில்லை ; அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ்

2 months 3 weeks ago
ஒரு காலத்தில் இவை தேவையானவையாக இருந்திருக்கலாம். ஆனால் இன்று பிள்ளை பெற்றுக் கொள்ள மணம் முடித்து இருக்கவேண்டிய அவசியமில்லை என்பதும் அதற்கும் மேலாக பிள்ளையின் தகப்பனாரின் தகவல்கள் தாய்க்கே தெரிந்து இருக்க வாய்ப்பில்லை என்றாகிவிட்ட நிலையில்...?

6 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் கைப்பேசி பயன்படுத்தக் கூடாது!- அமைச்சர் சரோஜா போல்ராஜ்

2 months 3 weeks ago
அதே நேரம் மகளிர் மற்றும் சிறுவர் விவகாரங்களுக்கு பொறுப்பான அமைச்சராக சரோஜா சாவித்திரி போல்ராஜ் இருந்து கொண்டு ஒரு மாணவிக்கு நடந்த அநீதி தனது கட்சிகாரரினால் நடத்தபட்டதினால் அவரை பாதுகாப்பதற்காக மோசமா நடந்து கொண்டவர் 👎

முதல் முறையாக ஆடு மாடுகளுக்கான மாநாடு நடத்தும் சீமான்.. தயார் நிலையில் மாடுகள்!

2 months 3 weeks ago
பைத்தியமாக இருந்தாலும் அவர்களை நம்பவைத்து திரள்நிதியில் வெற்றிபெற்றுவிட்டது பைத்தியம் சீமான் வந்தால் கள்ளும் உணவாகும் உணவுகள் நஞ்சாகும்

ஆடைகள் குறித்த விமர்சனங்களால் மன அழுத்தத்திற்கு உள்ளானேன்! -சரிகமபவில் இருந்து வெளியேறிய சினேகா!

2 months 3 weeks ago
இலங்கை தமிழர்களின் உயர்ந்த நிலைக்கு அம்பானி வீட்டு தரத்திற்கு இவா ஆடை அணியாமல் ஒரு சாதாரணமாக ஆடை அணிந்தது காட்சி அளித்தது பல இலங்கை தமிழர்களை ஏமாற்றத்திற்குள்ளாக்கி மன உளைச்சல் அடைய வைத்தது.அதனால் சமூக ஊடகங்களில் விமர்சித்து இவாவை ஒரு வழி பண்ணிவிட்டனர்.

பிறப்பு அத்தாட்சிப் பத்திரத்துக்கு தந்தையின் பெயர் அவசியமில்லை ; அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ்

2 months 3 weeks ago
ஐயா, உங்கள் சமூகம் எண்டால் ஜேர்மனியை சொல்கிறீர்களா? . அமேசன் பழங்குடிகள் உட்பட பல தாயாதி (matriarchal ) சமூகங்கள் உள்ளன. தமிழர் கூட தந்தை பெயரை காவும் மரபினர் அல்ல. இடுபெயர் (given name ) மட்டும்தான். நீங்கள் அடிக்கடி சிலாகிக்கும் வெள்ளைகார அடிமைத்தனத்தின் ஒரு கூறுதான் surname போடும் வழக்கம். நான் சின்ன வயதில் பார்த்த ஒரு விபரணத்தில் பெண் சிங்கம் வேட்டையாடி கொண்டு வரும் உணவை குட்டிகளை விலக்கி போட்டு தான் முதலில் தின்றுவிட்டு, சோம்பேறியாக ஓய்வெடுக்கும் ஆண் சிங்கம். ஆகவே சோம்பேறி ஆண்களை விட சோறு போடும் பெண்கள் பெயரை வைப்பதே நியாயம்.

கலைஞரின் மூத்த மகன் மு.க.முத்து காலமானார்!

2 months 3 weeks ago
👍 சூரியனுக்கு டோர்ச் அடிக்கும் பழக்கம் எனக்கு இல்லை 🤣. ஆகவேதான் இதை பிற்சேர்த்தேன்👇. 🙏 அருள்நிதியின் படங்கள் பார்த்ததில்லை ஆனால் அவரின் முரட்டு மனேரிசம் பேட்டிலளில் பார்க்க வினோதமாயும், கவரும் விதமாயும் இருக்கும். 80,90 கிராமத்து ஹீரோக்கள் போல நடந்து கொள்வார். ஆனால் சிட்டி போய் என நினைக்கிறேன்.

கலைஞரின் மூத்த மகன் மு.க.முத்து காலமானார்!

2 months 3 weeks ago
👍.................. அருள்நிதியின் நடிப்பை பார்த்து ஆச்சரியப்பட்டு, மு க குடும்பத்தில் இவர் யார் என்று தேடி நீங்கள் சொல்லியிருக்கும் தகவலை பார்த்திருக்கின்றேன். அதே போலவே சமீபத்தில் முரசொலி செல்வம் மறைந்த பொழுது அவர் பற்றிய செய்திகள் பிரசுரமாகியிருந்தன. பெரிய ஒரு குடும்பமே................

6 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் கைப்பேசி பயன்படுத்தக் கூடாது!- அமைச்சர் சரோஜா போல்ராஜ்

2 months 3 weeks ago
சரோ அக்கா முன்மொழிவுகள் எல்லாம் வரவேற்கத்தக்கன. ஆனால் தன் கட்சிகார நண்பர் பெண் சிறுமியை பாலியல் தொந்தரவு செய்து, தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் அக்கா வழமையான இலங்கை அரசியல்வாதி போலவே நீதிக்கு புறம்பாக நடந்து கொண்டார். ஊருக்குத்தான் உபதேசம்.

கலைஞரின் மூத்த மகன் மு.க.முத்து காலமானார்!

2 months 3 weeks ago
ஆனால் இந்த ராஜபார்ட் எதுவும் வேண்டாமென அரசாங்க குமாஸ்தாவாக காலத்தை ஓட்டியவர் கருணாநிதியின் மகன் முக தமிழரசு. பின்னர் திரைப்பட தயாரிப்பில் இறங்கினார். இவரின் மகந்தான் நடிகர் அருள்நிதி. அதே போலவே செல்வி என்ற மகளும். முறை மாமனாகிய முரசொலி செல்வத்தை மணந்தார். பொதுவாழ்வில் இல்லை. ரசோ அண்ணாவுக்கு இவை கட்டாயம் தெரிந்திருக்கும். வாசகர்களுக்காக.

கலைஞரின் மூத்த மகன் மு.க.முத்து காலமானார்!

2 months 3 weeks ago
நானும் குடித்திருக்கேன்… குடிப்போனை பார்த்திருக்கேன்… நல்ல புத்தி வருவதில்லை குடியிலே… ஒரு நாய் கூட மதிப்பதில்லை தெருவிலே… -கண்ணதாசன்- குடியால் வீழ்ந்த மு.க.முத்து.. ஊற்றி கொடுத்து கெடுத்தது ‘இந்த’ நடிகரா? அந்த நடிகையின் தாத்தா ஆச்சே! Rajkumar RUpdated: Sunday, July 20, 2025, 13:26 [IST] சென்னை: தமிழ்நாடு முன்னாள் முதல்வரும் திமுக முன்னாள் தலைவருமான கலைஞர் கருணாநிதியின் முதல் மகனான மு.க.முத்து நேற்று மரணம் அடைந்தார். அரசியல் திரை பிரபலங்கள் அவருக்கு இரங்கல் தெரிவித்தனர். இந்த நிலையில் எம்ஜிஆருக்கு போட்டியாக களம் இறக்கப்பட்ட மு.க.முத்து, வீழ்ந்தது குடிப்பழக்கத்தால் தான் எனவும், அவருக்கு குடிப்பழக்கத்தை கற்றுக் கொடுத்ததே அவரது உறவினரான பிரபல நடிகர் எனக் கூறியிருக்கிறார் பிரபல பத்திரிகையாளரான இர்ஷாத் அகமது. ஈஞ்சம்பாக்கத்தில் வசித்து வந்த அவர் கடந்த சில நாட்களாகவே உடல் நல கோளாரால் அவதிப்பட்டு வந்த நிலையில் நேற்று காலமானார். இதை அடுத்து மு.க.ஸ்டாலின், முக அழகிரி உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்திய நிலையில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. அடுத்த எம்ஜிஆர், அடுத்த கலைஞர் என அரசியல் வாரிசாகவும் கலைவாரிசாகவும் பார்க்கப்பட்ட மு.க.முத்து குடிப்பழக்கத்தால் வீழ்ந்தார். இந்த நிலையில் தான் ஏன் அப்படி ஆனேன் என்பது குறித்து பிரபல பத்திரிகையாளரான இர்ஷாத் அகமதுவிடம் தெரிவித்திருக்கிறார் மு.க.முத்து. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருவாரூருக்கு நேரில் சென்ற பத்திரிக்கையாளர் இர்ஷாத் அகமது, முக முத்துவை பேசுயிருக்கிறார். அப்போது பேசிய அவர்," சென்னையில் பத்தாம் வகுப்பு தோல்வி அடைந்ததால் திருச்சியில் சேர்க்கப்பட்டேன். ஆனால் அங்கும் ஒழுங்காக படிக்கவில்லை. எனது அப்பாவை போலவே நானும் பத்தாம் வகுப்பில் பெயில். ஆனால் அவர் போராடி ஜெயித்தார். நான் தோற்றுவிட்டேன். Recommended For You என்னை வாழ்க்கையில் முன்னேற வைக்க வேண்டும் என அப்பா முயற்சி செய்தார். ஆனால் நான் பேச்சை கேட்டு நடக்கவில்லை. சினிமாவில் என்னை எம்.ஜி.ஆர் போல் ஆக்க வேண்டும் என அப்பாதான் கொண்டு வந்தார். அந்த முதல் படம் பிள்ளையோ பிள்ளை. அந்த படத்தை தொடங்கி வைத்ததே பெரியப்பா எம்ஜிஆர் தான். அப்பாவின் பேச்சை கேட்டு வாழ்க்கையில் முன்னேற வேண்டுமென பெரியப்பா எம்ஜிஆர் அடிக்கடி சொல்வார். ஆனால் நான் கேட்கவில்லை. அவர் மட்டும் உயிரோடு இருந்திருந்தால் எனக்கு இந்த நிலைமை வந்திருக்காது. அரசியல் என்னையும் என் அப்பாவையும் பெரியப்பாவையும் பிரித்து விட்டது. குடி என் வாழ்வையே திருப்பிப் போட்டுவிட்டது. நடிகர் ரவிச்சந்திரன் தான் ( நடிகை தன்யாவின் தாத்தா) முதன் முதலில் எனக்கு தண்ணீ அடிக்க கற்றுக் கொடுத்தார். அவர் எங்கள் உறவினர். அவர் எனக்கு மாமா முறை வேண்டும். முதன் முதலில் அவர் கற்றுக் கொடுத்த பிறகு தினமும் குடிக்க ஆரம்பித்தேன். அதற்குப் பிறகு எவ்வளவோ முயற்சி செய்தும் என்னால் குடிப்பழக்கத்தை நிறுத்த முடியவில்லை. எனது வாழ்க்கையே நாசமாகிவிட்டது. அதே நேரத்தில் அப்பா உள்ளிட்ட யாருமே என்னை சரியாக புரிந்து கொள்ளவில்லை" எனக் கூறியிருக்கிறார். https://tamil.oneindia.com/news/chennai/m-k-muthus-life-tragedy-how-actor-ravichandran-introduced-him-to-alcohol-721905.html

புனர்வாழ்வு பெற்ற விடுதலைப் புலி உறுப்பினர் கொழும்பில் துப்பாக்கியுடன் கைது

2 months 3 weeks ago
புனர்வாழ்வு பெற்ற விடுதலைப் புலி உறுப்பினர் கொழும்பில் துப்பாக்கியுடன் கைது July 21, 2025 10:17 pm விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து பின்னர் ராணுவத்தினரால் புனர்வாழ்வளிக்கப்பட்ட ரமேஷ் என்பவர் சற்று முன்னர் கொழும்பில் துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டுள்ளார். கிரிபத்கொடை புதிய வீதியில் வைத்து பேலியாகொடை பொலிசார் சந்தேகத்தின் பேரில் அவரைக் கைது செய்துள்ளனர். அவரிடம் இருந்து டி- 56 ரக துப்பாக்கியொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது. குற்றச் செயல் ஒன்றை மேற்கொள்ளும் நோக்குடன் குறித்த நபர் துப்பாக்கியொன்றைத் தம் வசம் வைத்திருந்ததாக பொலிசார் தெரிவித்துள்ளனர் சிவப்பு நிறக் கார் ஒன்றில் வந்தவர்கள் அவரிடம் துப்பாக்கியைக் கையளித்து தங்களிடம் இருந்து தகவல் வரும் வரை ஹோட்டல் அறையில் ரமேஷைத் தங்கியிருக்குமாறு கூறிச் சென்றுள்ளனர். இதற்கிடையே பொலிசாருக்கு கிடைத்த இரகசியத் தகவலை அடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார் https://oruvan.com/rehabilitated-ltte-member-arrested-with-gun-in-colombo/
Checked
Thu, 10/16/2025 - 00:21
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed