3 months 1 week ago
இடியோசை கேட்டால் “அர்சுனா அபயம்” என்று அழைத்தால் இடி விழாது ஓடிவிடுமாம். சிங்களவரோ, தமிழரோ அர்ச்சுனா என்று பெயர். கொண்டாலே அநீதிகள் அவர்கண்டு ஓடிவிடும்போல் தெரிகிறது.
3 months 1 week ago
இதில் ஒரேயொரு தகவல் பிழை இருக்கிறது: சர்வாதிகாரியான பரிஸ்ரா 1950 கள் வரையில் அமெரிக்க, மேற்கு சார்ந்த அரசொன்றை நடத்தி வந்தார். ஆனால், உள்ளூர் மக்களுக்கு பல துன்பங்கள், மனித உரிமை மீறல்கள் அவரால் நிகழ்ந்தன. ஒரு கட்டத்தில் அமெரிக்காவும் அவரைக் கண்டிக்க ஆரம்பிக்க, பிடல் காஸ்ரோவின் புரட்சியினால் 1953 இல் அவரது ஆட்சி கவிழ்ந்தது. கியூபப் புரட்சியின் பின்னர் உடனடியாக அமெரிக்கா தடைகளை விதிக்கவில்லை. காஸ்ரோ கூட ஆரம்பத்தில் கம்யூனிஸ்ட் சோவியத் பக்கம் சாய்ந்து விடவில்லை. 1959 இல் கியூபத் தலைவரான காஸ்ரோ அமெரிக்காவிற்கு வந்த போது அவருக்கு மக்கள் திரண்டு வரவேற்பளித்தனர். அந்த நேரம் உப ஜனாதிபதியாக இருந்த ரிச்சர்ட் நிக்சன் காஸ்ரோவைச் சந்தித்துப் பேசிய பின்னர் "a nice young man with strange ideas" என்று தன் குறிப்புகளில் எழுதியிருக்கிறார். 1961 இல் கியூபாவைக் கைப்பற்ற சி.ஐ.ஏ தன்னிச்சையாக முயன்ற பன்றிக் குடா நடவடிக்கை, பின்னர் 1962 இல் சோவியத் ஏவுகணைகளை இரகசியமாக கியூபாவினுள் நிறுத்த முயன்றமை, இந்த இரு கட்டங்களில் தான் கியூபா மீது பொருளாதாரத் தடைகள் முகலில் போடப் பட்டன.
3 months 1 week ago
அரசியலில் பிரபலமடைந்த அரசியல்வாதிகளில் இருவர், இரண்டு நாட்களுக்குள் கைது செய்யப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக பொலிஸ் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த அரசாங்கத்தில் அமைச்சர்களாக இருந்து அதிர்ச்சியான நடவடிக்கைளில் ஈடுபட்ட இருவர்கள் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் கிடைத்த சாட்சியங்களின் அடிப்படையில் இவ்விருவரும் கைது செய்யப்படவுள்ளனர் என்றும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துரைகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு அதிகாரிகளால் இவ்விருவரும் கைது செய்யப்படவுள்ளனர் என்றும், இலஞ்சம் ஊழல் பற்றி இவ்விருவருக்கு எதிராகவும் கடுமையான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன என்றும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. Tamilmirror Online || பிரபல அரசியல்வாதிகள் இருவர் கைது?
3 months 1 week ago
செம்மணிப் புதைகுழி விவகாரம்; செயற்கை நுண்ணறிவால் விசாரணைகள் சீர்குலைவு கடும் நடவடிக்கை எடுக்க முடிவு செம்மணி மனிதப் புதைகுழியில் அடையாளம் காணப்படும் என்புச் சிதிலங்கள் மற்றும் சான்றுப் பொருள்களை அடிப்படையாக வைத்து உருவாக்கப்படும் செயற்கை நுண்ணறிவுப் படங்கள், குற்றவியல் விசாரணைகளை சீர்குலைக்கின்றன என எச்சரிக்கப்பட்டுள்ளது. செம்மணிப் புதைகுழியில் சமீப நாள்களாக பல்வேறு மனிதச் சிதிலங்கள் மீட்கப்பட்டு வருகின்றன. கடந்த இரு நாள்களாக மனிதச் சிதிலங்களுக்கு மேலதிகமாக புத்தகப்பை, வளையல்கள். பாதணிகள் என்பனவும் மீட்கப்பட்டுள்ளன. இவற்றை அடிப்படையாக வைத்து செயற்கை நுண்ணறிவின் உதவுடன் போலியானதும் கற்பனையானதுமான படங்களை இணையப் பயநர்கள் உருவாக்குவதுடன் அவற்றை சமூகவலைத் தளங்களில் பரவவும் விட்டுள்ளனர். இந்தச் செயற்பாடுகள் குற்றவியல் விசாரணைகளை சீர்குலைக்கின்றன. அத்துடன், விசாரணைகளின் நோக்கங்களில் அல்லது செல்நெறிகளில் வலிந்து தலையீட்டையும், திசைதிருப்பலையும் ஏற்படுத்தும் முயற்சியாகப் பார்க்கப்படுகின்றது. இதையடுத்தே, இவ்வாறான ஒளிப்படங்களைப் பகிர்வோருக்கு எதிராக கடும் நடவடிக்கைகளை எடுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அத்துடன், செயற்கை நுண்ணறிவுப் படங்களால் உண்மையாகப் பாதிக்கப்பட்டவரின் உரு அடையாளங்கள் மாற்றப்படும் ஆபத்து இருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. செயற்கை நுண்ணறிவு ஒளிப்படங்களின் உண்மையை ஆராயாமல் அவற்றை உண்மையென நம்பி, நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் நேற்று உரையாற்றியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. செம்மணிப் புதைகுழி விவகாரம்; செயற்கை நுண்ணறிவால் விசாரணைகள் சீர்குலைவு
3 months 1 week ago
02 Jul, 2025 | 10:02 AM இலங்கையில் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட பாரிய மனித புதைகுழியில் இருந்து, ஒரு குழந்தையின் எலும்புக்கூடு போல் தோன்றும் ஒரு எலும்புக்கூடுக்கு அருகில், நீல நிறத்தில் ஆங்கில எழுத்துக்கள் எழுதப்பட்ட ஒரு நீல நிறப் பை, ஒரு சிறிய பொம்மை, விளையாட்டுப் பொருட்கள் மற்றும் ஒரு செருப்பு கண்டெடுக்கப்பட்டன. யாழ்ப்பாணம் செம்மணி, சித்துப்பாத்தி இந்து மயான மனித புதைகுழியில் இருந்து இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள 38 எலும்புக்கூடுகளில், குறைந்தது 10, சிறுவர்கள் அல்லது குழந்தைகளுடையது என சந்தேகிக்கப்படும் எலும்புக்கூடுகள் அடங்குமென ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். இது நீதிமன்றத்தால் குற்றம் நடந்த இடமாக அறிவிக்கப்பட்டுள்ளது. "ஏற்கனவே ஒரு பையுடன் அடையாளம் காணப்பட்ட எலும்புக்கூடு, நாள் முழுவதும் தோண்டப்பட்டு முழுமையாக மீட்கப்பட்டது," என பாதிக்கப்பட்ட மக்கள் சார்பில், புதைகுழி அகழ்வுப் பணிகளை மேற்பார்வை செய்யும் சட்டத்தரணி ரனித்தா ஞானராஜ் குறிப்பிடுகின்றார். ஜூலை முதலாம் திகதிக்கு முன்னர் கண்டுபிடிக்கப்பட்ட 33 மனித எலும்புகளுக்கு மேலதிகமாக ஐந்து மனித எலும்புகள் அடையாளம் காணப்பட்டாலும், எலும்புகள் பின்னிப் பிணைந்திருப்பதாகத் தோன்றுவதால் சரியான எண்ணிக்கையைக் கூற முடியாது என அவர் மேலும் கூறினார். "முழு நாள் அகழ்வுப் பணியில் சுமார் ஐந்து ஒன்றோடு ஒன்று பின்னிப்பிணைந்த எலும்புக்கூட்டு தொகுதி அடையாளம் காணப்பட்டுள்ளன. எனினும் எண்ணிக்கையை சரியாக குறிப்பிட முடியாது. குழப்பமாக காணப்படுகிறது." தடயவியல் தொல்பொருள் ஆய்வாளர் பேராசிரியர் ராஜ் சோமதேவாவால் அடையாளம் காணப்பட்டு, மனித எலும்புகள் இருக்கக்கூடிய இடங்களாக நீதிமன்றத்திற்கு அறிக்கை அளிக்கப்பட்ட இடத்தை சுத்தம் செய்யும் பணிகள், திங்கட்கிழமை (01) யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் தொல்லியல் துறை மாணவர்கள் மற்றும் நல்லூர் பிரதேச சபை ஊழியர்களின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்டதாக சட்டத்தரணி ரணிதா ஞானராஜா ஊடகங்களுக்குத் தெரிவித்தார். 1990 களில் செம்மணி அகழ்வுப் பணிகளை முன்னெடுத்த சட்ட வைத்திய அதிகாரி கிளிபர்ட் பெரேரா அகழ்வு பணிகளை பார்வையிட்டதோடு, அகழ்வாராய்ச்சிகளுக்குப் பொறுப்பான அதிகாரிகளுடன் அகழ்வாராய்ச்சி தொடர்பான பழைய தகவல்களைப் பற்றி விவாதித்ததாகவும் சட்டத்தரணி ரணிதா குறிப்பிடுகின்றார். செம்மணிப் பகுதியில் முன்னூறு முதல் நானூறு வரையிலான புதைகுழிகள் இருப்பதாக, செப்டம்பர் 7, 1996 அன்று பாடசாலை மாணவி கிருஷாந்தி குமாரசாமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்து கொலை செய்த குற்றத்திற்காக இலங்கை இராணுவத்தின் நான்கு உறுப்பினர்களுடன் சேர்ந்து குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட சோமரத்ன ராஜபக்ச, கொழும்பு உயர் நீதிமன்ற சாட்சிக்கூண்டில் இருந்தவாறு தெரிவித்திருந்தார். 1999 ஆம் ஆண்டு அந்த இடத்திலிருந்து மீட்கப்பட்ட 15 உடல்களில், இரண்டு உடல்கள் 1996 இல் காணாமலாக்கப்பட்ட இளைஞர்களின் உடல்கள் என அடையாளம் காணப்பட்டன. எஞ்சிய 13 உடல்கள் குறித்து எந்த விசாரணையும் நடத்தப்படவில்லை. எலும்புக்கூடுகள் தற்செயலாக கண்டுபிடிக்கப்பட்ட செம்மணி, சித்துப்பாத்தி இந்து மயானத்தில் அகழ்வாராய்ச்சிகள் மே 15 ஆம் திகதி தடயவியல் தொல்பொருள் ஆய்வாளர் பேராசிரியர் ராஜ் சோமதேவ மற்றும் யாழ்ப்பாண சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவன் ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ் ஆரம்பமானது. செம்மணி மனித புதைகுழியில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட 38 எலும்புக்கூடுகளில் குறைந்தது 10 சிறுவர்கள், குழந்தைகளுடையதென சந்தேகம் ! | Virakesari.lk
3 months 1 week ago
02 Jul, 2025 | 01:22 PM ரொபட் அன்டனி இந்தியா இலங்கையின் மிகவும் நம்பகமான நண்பராகவும், மிகவும் நம்பத்தகுந்த பங்காளியாகவும் உள்ளது என்பதை தெரிவிக்கிறோம். நிபந்தனை இல்லாமல் நாங்கள் உதவிகளை செய்கிறோம். பதிலுக்கு நாங்கள் எதையும் கேட்பதில்லை. நம்பிக்கை மற்றும் நல்லெண்ணத்தை வளர்ப்பதிலும், இரு நாடுகளுக்கும் பரஸ்பர நன்மை பயக்கும் நீடித்த உறவுகளை உருவாக்குவதிலும் இலங்கையின் உதவி மட்டுமே எங்களுக்குத் தேவையாகும் என்று இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா தெரிவித்தார். இன்று நாம் இதுவரை கண்டிராத மிகச் சிறந்த உறவைக் கொண்டிருக்கிறோம் என்று நான் உறுதியாக கூறுவேன் என்றும் அவர் குறிப்பிட்டார். இலங்கை வந்துள்ள இந்திய பெரு நிறுவனங்களின் பிரதம நிறைவேற்று அதிகாரிகளுக்கான வரவேற்பு நிகழ்வு கொழும்பு ஐ.டி.சி. ரத்னதீப ஹோட்டலில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே உயர்ஸ்தானிகர் இதனை குறிப்பிட்டார். இலங்கை வந்துள்ள சஞ்சீவ் பூரி தலைமையிலான இந்தியாவின் பெரு நிறுவனங்களின் பிரதம நிறைவேற்று அதிகாரிகள் குழு பல்வேறு தரப்பினரையும் சந்தித்து பேச்சு நடத்தியுள்ளது. ஜனாதிபதி, பிரதமர், வலுசக்தி அமைச்சர் ஆகியோரையும் சந்தித்து முதலீட்டு சந்தர்ப்பங்கள் குறித்து ஆராய்ந்துள்ளனர். இந்நிலையில் கொழும்பில் நடைபெற்ற நிகழ்வில் மேலும் உரையாற்றிய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா இலங்கையில் நல்ல அறிகுறிகளைக் காட்டும் பொருளாதார மீட்சிக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று நினைக்கிறோம். இது வெறும் அரசாங்கம் மட்டுமல்ல. இந்தியாவின் பரந்த சமூகமும், வணிகங்களும் அதன் ஒரு பகுதியாக, ஒரு தேசிய முயற்சியாக எங்கள் முயற்சிகளை ஆதரிக்கின்றன. இந்த பிரதிநிதிகள் குழு மிக விரிவான துறைகளை பிரதிநிதித்துவப்படுத்துவதற்கும், நமது உறவின் கிட்டத்தட்ட அனைத்து பரிமாணங்களையும் உள்ளடக்கியிருப்பதற்காகவும் நான் மகிழ்ச்சியடைகிறேன். கடந்த ஆறு மாதங்களாக எமது உறவில் நாம் கண்ட மிகப் பெரிய வெற்றிகளின் பின்னணியில்தான் இந்த சந்திப்பு நடைபெறுகிறது. கடந்த டிசம்பரில் ஜனாதிபதி அனுர குமார இந்தியாவிற்கு மேற்கொண்ட விஜயத்துடன் இது தொடங்கியது. அவர் பதவிக்கு வந்த பின்னர் மேற்கொண்ட முதல் வெளிநாட்டு விஜயம் அதுவாகும். அதைத் தொடர்ந்து ஏப்ரலில் இந்திய பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடியின் மிக வெற்றிகரமான இலங்கை விஜயம் இடம்பெற்றது. புதிய அரசாங்கத்தால் இலங்கையில் வரவேற்கப்பட்ட முதல் தலைவர் இந்திய பிரதமர் மோடி என்பது, எமது பார்வையில், இருதரப்பு உறவின் மிக அத்தியாவசியமான தன்மையைப் பிரதிபலிக்கிறது. நாங்கள் 'அண்டை நாடுகள் முதலில்' என்ற கொள்கையைக் கொண்டுள்ளோம். ஆனால் இலங்கை சில விஷயங்களிலாவது 'இந்தியா முதலில்' என்பதை நிரூபித்துள்ளது. இது ஒரு மிக மிக நேர்மறையான அறிகுறியாகும். ஜனாதிபதியின் விஜயத்தின்போது வெளியிடப்பட்ட கூட்டு அறிக்கை மற்றும் பின்னர் பிரதமரின் விஜயத்தின்போது கையெழுத்திடப்பட்ட பல ஒப்பந்தங்கள் மூலம் எமது உறவை முன்னோக்கிக் கொண்டு செல்ல ஒரு மிக மிக வலுவான அடிப்படை உள்ளது. இது உறவின் அனைத்து அம்சங்களையும் மேம்படுத்தியுள்ளது. இணைப்பு, டிஜிட்டல்மயமாக்கல், எரிசக்தி, வர்த்தகம் மற்றும் முதலீடு மற்றும் மேம்பாட்டு ஒத்துழைப்பு ஆகியவை எமது உறவின் ஐந்து முக்கிய தூண்களாகும். இவற்றில் ஒவ்வொன்றும் முன்னேறியுள்ளன. ஒவ்வொன்றும் புதிய வாய்ப்புகளை வழங்குகின்றன. நாங்கள் இலங்கைக்கு மிக ஆழமாக அர்ப்பணிப்புடன் இருக்கிறோம் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். கடந்த 13 அல்லது 14 ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது கடந்த மூன்று ஆண்டுகளில் இரண்டு மடங்குக்கும் அதிகமாக உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. 2022இல் நாங்கள் இலங்கைக்கு வழங்கிய அவசரகால உதவியின்போது வழங்கப்பட்ட கடன்களுக்கான மறுசீரமைப்பு இம்பெற்றுள்ளது. இதன் மூலம் இந்தியா இலங்கையின் மிகவும் நம்பகமான நண்பராகவும், மிகவும் நம்பத்தகுந்த பங்காளியாகவும் உள்ளது என்பதைத் தெரிவிக்கிறோம். நிபந்தனை இல்லாமல் இதை நாங்கள் செய்கிறோம். பதிலுக்கு நாங்கள் எதையும் கேட்பதில்லை. நம்பிக்கை மற்றும் நல்லெண்ணத்தை வளர்ப்பதிலும், இரு நாடுகளுக்கும் பரஸ்பர நன்மை பயக்கும் நீடித்த உறவுகளை உருவாக்குவதிலும் உங்கள் உதவி மட்டுமே எங்களுக்குத் தேவையாகும். இந்த நன்மைகள் இலங்கைக்கு அதிகமாக இருந்தாலும் நாங்கள் பொருட்படுத்தமாட்டோம், ஏனென்றால் இலங்கை எமது சகோதர நாடு, இன்று நாம் இதுவரை கண்டிராத மிகச் சிறந்த உறவைக் கொண்டிருக்கிறோம் என்று நான் உறுதியாக கூறுவேன் என்றார். நிபந்தனைகள் இன்றியே இலங்கைக்கு உதவுகிறோம்; பதிலுக்கு நாங்கள் எதையும் கேட்பதில்லை - சந்தோஷ் ஜா | Virakesari.lk
3 months 1 week ago
02 Jul, 2025 | 03:35 PM இராமநாதன் அர்ச்சுனாவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்து செய்வதற்கு உத்தரவிடுமாறு கோரி நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணை செய்ய மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று புதன்கிழமை (02) அனுமதி வழங்கியுள்ளது. அர்ச்சுனாவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்து செய்வதற்கு உத்தரவிடுமாறு கோரி சமூக செயற்பாட்டாளரான ஓஷல ஹேரத் என்பவரால் நீதிமன்றில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மாயாதுன்ன கொரயா மற்றும் மஹேன் கொபல்லவ ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது மனுதாரர் சார்பில் நீதிமன்றில் ஆஜரான சட்டத்தரணி அசோக் பரன், “இராமநாதன் அர்ச்சுனா யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக தெரிந்தெடுக்கப்பட்ட காலப்பகுதியில் வைத்தியர் துறையிலிருந்து பணி இடைநீக்கம் செய்யப்பட்டிருந்துள்ளார்.” “இதனால் அரசியலமைப்புச் சட்டத்தின்படி இராமநாதன் அர்ச்சுனா பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு தகுதியற்றவர் ” என சட்டத்தரணி அசோக் பரன் தெரிவித்துள்ளார். இருப்பினும், பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்காக ஆஜரான சட்டத்தரணி சேனானி தயாரத்ன, தனது கட்சிக்காரர் பாராளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது சம்பளம் இன்றி சேவையிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டதால், அவரை ஒரு அரசாங்க ஊழியராகக் கருத முடியாது என்றும் குறிப்பிட்டார். அதன்படி, அவர் பாராளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு எந்த சட்டத் தடையும் இல்லை என்று சட்டத்தரணி குறிப்பிட்டார். இரு தரப்பினரும் முன்வைத்த வாதங்களை பரிசீலித்த மேன்முறையீட்டு நீதிமன்றம், இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள தீர்மானித்தது. இதேவேளை, இந்த மனு எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 01 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் எனவும் நீதிபதிகள் குழாம் உத்தரவிட்டது. எவ்வாறாயினும், பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவுக்கு பாராளுமன்ற அமர்வுகளில் பங்கேற்பது மற்றும் வாக்களிப்பதை தடுக்கும் வகையில் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள இடைக்காலத் தடை உத்தரவைப் பிறப்பிக்கப் போவதில்லை என்று நீதிமன்ற அமர்வு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. அர்ச்சுனாவுக்கு எதிரான மனு மீதான விசாரணை : நீதிமன்றம் வழங்கியுள்ள உத்தரவு | Virakesari.lk
3 months 1 week ago
@ரசோதரன் 10 நாட்கள் மெதுவாக என் நாட்கள் ஓடிக் கொண்டிருக்கின்றன, இன்று தான் வாசித்தேன். அருமையான ஜீவ காருண்யக் கதை! அமெரிக்காவில் உரிமையாளர் இல்லாத நாய்களைக் காண முடியாது, ஆனால் உரிமையாளரும், வீடும் இல்லாத பூனைகள் எல்லா நகரங்களிலும் காணலாம். எமது வீட்டுச் சுற்றாடலிலும் ஒரு கறுப்பு வெள்ளைப் பூனை இப்படிச் சுதந்திரமாக உலவுகிறது. அவருக்கு ஒரு நேர சூசிகையும் இருப்பதைக் காண்கிறோம். இரவு 7 மணிக்கு முன் வளவினால் நடந்து வளவின் இடது மூலைக்குப் போய் விட்டு, 8 மணியளவில் அதே பாதையால் திரும்பிச் செல்லும். முன் பக்கக் கமெரா இரவு 7 க்கும் 8 க்கும் அலேர்ட் கொடுத்தாலும் இப்போது மெனக்கெட்டுப் பார்ப்பதில்லை, "பூனை குறொஸ்ஸிங்" 😂 என்பது தெரிந்திருப்பதால். தாய்ப்பூனையோ, கடுவன் பூனையோ குட்டிகளைச் சாப்பிடுவது சாதாரணமாக/இயற்கையாக நிகழ்வதில்லை. நாய், பூனை , எலி போன்ற விலங்குகள் குட்டியீன்ற பதட்டத்தில் இருக்கும் போது சில சமயங்களில் இது (cannibalism) நிகழும். குட்டியீன்ற இந்த விலங்குகளை மனிதர்கள் கிட்ட நெருங்கி பதட்டத்தைக் கூட்டினால் இது நிகழ்வதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். எனவே தான், குட்டியீன்ற மாமிசமுண்ணி விலங்குகளை அதிகம் நெருங்கிச் சென்று பதட்டப் படுத்தாமல் விலகி நடந்து கொள்ள வேண்டும். பூனையைப் பற்றிப் பேசும் போது இன்னொரு ஆச்சரியமான விடயமும் மிருகவைத்தியப் பார்வையில் குறிப்பிடத்தக்கது: ஒரு வளர்ப்பு (domesticated) யானையைப் பரிசோதிக்க பக்கத்தில் அதன் பாகன் இருந்தால் ஒருவர் போதும். ஆனால், ஒரு வளர்ப்புப் பூனையைப் பரிசோதிக்க மூவர் தேவை: ஒருவர் முன் கால்களையும், தலையையும் துவாயினூடாகப் பிடித்துக் கொள்ள வேண்டும். இன்னொருவர் பின்கால்களைத் துவாயினூடாகப் பிடித்துக் கொள்ள வேண்டும். மூன்றாவர், மிருக வைத்தியர், பரிசோதிக்க வேண்டும். இல்லையேல், நகங்களை வெளியே நீட்டிய கால்களால், தாறுமாறாகக் கீறித் தள்ளி விடும்!
3 months 1 week ago
வெளிநாட்டு மாணவர்களால் பல்கலைகள் பெருவாரியான பணம் சம்பாதித்தார்கள். ஒவ்வொரு மாணவர்களிடமிருந்தும் 50000-60000 டாலர்கள் வருடத்திற்கு எடுக்கிறார்கள்.
3 months 1 week ago
யானை மண்ணை அள்ளித் தன்தலையிலே போடுமாம். தற்போது அமெரிக்கா ரம்பை அள்ளித் தன் தலையில் போட்டிருப்பது போல் தெரிகிறது.😳
3 months 1 week ago
ஒரேஒரு தடவை ஸ்ரார்லிங் சேவையை கவாய் தீவுகளுக்கு போகும்போது கவாய் விமான சேவையில் இலவசமாக தந்த சேவையை பயன்படுத்தினேன். இதுவரை இப்படி ஒரு துரிதமான சேவையை காணவில்லை. வீட்டில் உள்ள சேவைகளைவிட இது மிகவும் திறமாக வேலை செய்தது. பிள்ளைகள் மருமகனும் இதையே கூறினார்கள். இலங்கைக்கு வழங்கப்பட்ட சேவை எப்படியோ தெரியவில்லை. இந்தியாவுக்கு இதனால் வருமானம் குறையலாம்.
3 months 1 week ago
நியூயோர்க் நகரத்தில் முழத்துக்கு முழம் கமரா. வேகக் கட்டுப்பாடு 25 மைல்.40 கிலோ மீற்றர்.
3 months 1 week ago
குழந்தை பெற்றபின் தாய்க்கு உடம்புதேற பத்தியக்கறி வைத்துக்கொடுப்பார்கள். அதுபோல குட்டிகள் ஈன்றபின் நாய் தான்போட்ட குட்டிகள் ஒன்றின் கால், காது, வால் போன்ற பகுதிகளில் ஒன்றைக் கடித்து தின்றுவிடுமாம். அதுதான் அந்த குட்டிகள் ஈன்ற நாய்க்குப் பத்தியக் கறி. அம்மா சொன்னது கேட்டுள்ளேன்.
3 months 1 week ago
🤣......... கனடாவில் கார் ஓட்டிப் பாருங்கள்....... 'கமரா......... கமரா.........' என்று விடாமல் ஒரு பயம் காட்டுவார்கள் பாருங்கள்...... மன்னன் அலெக்ஸாண்டரே பயந்து போய் விடுவார்..........
3 months 1 week ago
அருண் சித்தார்த்தைப் பற்றித் தெரிந்தவர்களுக்கு இங்கு நடந்தது என்னவென்பதை புரிந்துகொள்வதில் எந்தச் சிரமும் இருக்கப்போவதில்லை. ஏனென்றால் தமிழர்களின் அவலங்கள் குறித்தும், அவர்களின் இழப்புக்கள் குறித்தும் பேசப்படும்போதெல்லாம் அருண் சித்தார்த் தவறாது புலிகள் செய்த கொடுமைகள் என்று போராட்டம் ஒன்றினை யாழ்ப்பாணத்திலோ அல்லது வடக்குக் கிழக்கின் வேறு ஒரு பகுதியிலுமோ நடத்துவார். இப்போராட்டங்களின் ஒற்றை நோக்கம் எமது மக்களின் அவலங்களைக் கொச்சைப்படுத்துவதும், மலிடனப்படுத்துவதும் மட்டுமே. தமிழர்களின் எந்தப் பிரச்சினை குறித்தும் அவர் பேசுவதில்லை. தமிழர்களுக்கென்று பிரச்சினை இருக்கின்றதென்பதையும் அவர் ஏற்றுக்கொள்வதில்லை. நல்லூர்க் கோயிலை இடித்து மலசல கூடம் கட்டுவேன் என்று இன்றுவரை விடாப்பிடியாக இருப்பவர். இவர் குறித்து முன்னர் சிரச தொலைக்காட்சியில் வந்த நேர்காணல் ஒன்றுபற்றி எழுதியிருந்தேன். அதில் இவரது உண்மையான சுயரூபம் வெளித்தெரிந்திருந்தது. இப்போது செம்மணியில் இடம்பெற்றும் மனிதப் புதைகுழி குறித்த செய்திகள் இவரை அலைக்கழிக்கின்றன. செம்மணி மனிதப் புதைகுழி தோண்டப்படுவதால் ஆத்திரப்பட்டு நிற்கும் சிங்களப் பேரினவாதத்தை மகிழ்விக்கவேண்டிய தேவை அவருக்கு ஏற்பட்டிருக்கிறது. அதனால்த்தான் தனது மனைவி என்று அடையாளப்படுத்தும் ஒரு பெண்ணை அழைத்துவந்து துணுக்காயில் புலிகளின் சித்திரவதை முகாம் இருந்ததென்றும் அங்கு 4,000 தமிழர்கள் கொலைசெய்யப்பட்டு புதைக்கப்பட்டார்கள் என்றும் கூறுகிறார். செம்மணியில் 400 தமிழர்களைச் சிங்கள இராணுவத்தினர் புதைத்தனர் என்றால், துணுக்காயில் அதைப்போல பத்துமடங்கு தமிழர்களை புலிகள் கொன்று புதைத்தனர் என்று காட்டுவது அவருக்குத் தேவையாக இருக்கிறது. ஆகவேதான் சிங்கள மக்கள் மட்டுமே பார்க்கும் ஒரு இனவாதச் சிங்கள யூடியூப்பரைக் கூட்டிவந்து 4,000 தமிழர்கள் புதைக்கப்பட்ட இடத்தைக் காட்டி மகிழ்கிறார். இவரையும், இவரைப் பின்னால் நின்று இயக்கும் இனவாதிகளையும் தமிழ் மக்கள் நன்கு அறிவர். ஆகவே அலட்டிக்கொள்ளத் தேவையில்லை.
3 months 1 week ago
வணக்கம் ! வாங்கோ !! வாழ்த்துக்கள் !!!
3 months 1 week ago
இதற்காக ஒரு நோபல் பரிசை கேட்டுப் பார்ப்பமோ என்றும் ஒரு ஐடியா உள்ளுக்குள் வருகின்றது.........🤣.
3 months 1 week ago
மகள் தற்கொலை செய்து கொண்ட பிறகும் இப்படி பேசுகிறார் என்றால், கணவன் குடும்பத்தால் சித்ரவதை என்று அந்த இளம் பெண் வந்து கதறிய போதெல்லாம் இந்தாள் எவ்வளவு பிற்போக்கு தத்துவங்களை மகளுக்கு போதித்திருப்பார்? பாவம் அந்த பெண்.. பொறந்த வீடும் சரியில்ல.. புகுந்த வீடும் சரியில்லை... சுடுகாடே பரவாயில்லைனு நினைச்சுட்டாங்க போல.. Ezhumalai Venkatesan
3 months 1 week ago
எல்லாம் வீட்டுக்காரி இந்தப்பக்கம் வரமாட்டார், படிக்கமாட்டார் என்கிற துணிவுதான்.
3 months 1 week ago
E-8 விசா வகை வேலை வாய்ப்புகளை விரைவில் செயல்படுத்த திட்டம்! தென் கொரியாவில் பருவகால வேலைவாய்ப்புக்கான E-8 விசா வகை வேலை வாய்ப்புகளை செயல்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவர் கோசல விக்ரமசிங்க தெரிவித்தார். இதற்கான திட்டம் அமைச்சரவை அனுமதிக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது, அந்த அனுமதி கிடைத்த பிறகு, தென் கொரியாவுடன் புரிந்துணர்வு உடன்படிக்கைகள் கையெழுத்திடப்படும், பின்னர் தொழிலாளர்கள் வேலைவாய்ப்புக்காக அனுப்பப்படுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார். தற்போது, தென் கொரியாவில் 04 மாகாணங்களுடன் புரிந்துணர்வு உடன்படிக்கைளில் கையெழுத்திட தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. மேலும் இம்மாதம் 10 ஆம் திகதிக்குள் அவை கையெழுத்திடப்படும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். ‘ஜூலை மாத இறுதிக்குள் E-8 விசா பிரிவின் கீழ் முதல் குழுவை தென் கொரியாவிற்கு அனுப்ப எதிர்பார்க்கிறோம். அதற்காக, அந்நாட்டின் 04 மாகாணங்களுடன் புரிந்துணர்வு உடன்படிக்கைகளில் கையெழுத்திட நாங்கள் தயாராக உள்ளோம். இதன் கீழ், தென் கொரியாவில் பருவகால வேலைகளுக்காக ஆண்டொன்றிற்கு முடியுமான அளவு அதிக எண்ணிக்கையிலான தொழிலாளர்களை அனுப்ப நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகிறோம். இதற்கான ஆட்சேர்ப்புக்கள் அரசாங்கத்தால் மட்டுமே மேற்கொள்ளப்படும் என்பதுடன், தனியார் துறையினருக்கு இதற்கான ஆட்சேர்ப்புக்களை மேற்கொள்ள அனுமதி வழங்கப்படவில்லை என்றும் சுட்டிக்காட்டினார். அத்துடன், இந்த தொழில்வாய்ப்புக்கள் தொடர்பாக பல்வேறு சமூக ஊடகங்களில் பரவும் தவறான தகவல்களை பொதுமக்கள் நம்ப வேண்டாம் என்றும் அவர் மேலும் அறிவுறுத்தினார். https://athavannews.com/2025/1437855
Checked
Mon, 10/13/2025 - 09:07
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed