புதிய பதிவுகள்2

மனித உரிமை மீறல்களில் தொடர்புடையவர்களுக்கு கடுமையான தடைகள் விதிக்கப்பட வேண்டும்;  ஜெனீவா கூட்டத் தொடரின் 37 ஆவது அமர்வில் சிறிதரன்

1 week 3 days ago
மனித உரிமை மீறல்களில் தொடர்புடையவர்களுக்கு கடுமையான தடைகள் விதிக்கப்பட வேண்டும்; ஜெனீவா கூட்டத் தொடரின் 37 ஆவது அமர்வில் சிறிதரன் இலங்கை குறித்து ஒரு நாட்டுக்கே உரிய விசேட அறிக்கையாளர் நியமிக்கப்பட வேண்டுமென ஐ.நா.வின் தீர்மானத்தில் இடம்பெறுவதை உறுதி செய்யும் அதேவேளை, இடைக்கால நீதி நடைமுறையின் ஒரு பகுதியாக, கடுமையான மனித உரிமை மீறல்களில் தொடர்புடையவர்களுக்கு கடுமையான தடைகள் விதிக்கப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்துகிறேன் என இலங்கை தமிழரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் ஜெனீவாவில் எடுத்துரைத்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடரில் பங்குபற்றுவதற்காக ஜெனீவாவுக்கு சென்றிருக்கும் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் அங்கு நடைபெற்ற 37 ஆவது அமர்வில் கலந்துகொண்டு பேசுகையிலேயே இவ்வாறு வலியுறுத்தியுள்ளார். அங்கு தொடர்ந்து பேசிய அவர்; சமாதான காலத்திலும் ஈழத் தமிழர்கள் வாழும் பகுதிகளில் இலங்கை இராணுவத்தின் தொடர்ச்சியான ஆக்கிரமிப்பைப் பற்றிய என் நீண்டகாலக் கவலைவை வெளிப்படுத்த விரும்புகிறேன். இத்தகைய பகுதிகளில் வாழும் மக்கள் இன்றும் மனித உரிமைகளை ஒடுக்கக்கூடிய பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கொடுங்கோண்மையான விதிகளுக்கு பலியாகி வருகின்றனர். தற்போது, செம்மணியில் உள்ள மனிதப் புதைகுழி குறித்து நடைபெற்று வந்த முக்கியமான நீதித்துறை விசாரணைக்கான அரசாங்க நிதி நிறுத்தப்பட்டுள்ளது. சாட்சிகளின் மீதான அச்சுறுத்தல், பத்திரிகையாளர்கள் கைது போன்றவை தொடர்ச்சியாக நடைபெறுவதாக ஐக்கிய நாடுகள் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. 2013 முதல், ஒரு சுயாதீனமான, பன்னாட்டுத் தனித்துவமான விசாரணை அமைப்பை நிறுவ வேண்டும் என்று நான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். குறிப்பாக, 2009 மே மாத இறுதிக் கட்ட போரின்போது இடம்பெற்ற கொடூர குற்றச்செயல்களைப் பற்றிய சுதந்திரமான, வெளிப்படையான மற்றும் நிபுணத்துவமான விசாரணைகள் நடைபெறுவது அவசியம். எனவே, இலங்கை குறித்து ஒரு நாட்டுக்கே உரிய விசேட அறிக்கையாளர் நியமிக்கப்பட வேண்டுமென தீர்மானத்தில் இடம்பெறச் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். மேலும், இடைக்கால நீதி நடைமுறையின் ஒரு பகுதியாக, கடுமையான மனித உரிமை மீறல்களுடன் தொடர்புடையவர்களுக்கு கடுமையான தடைகள் விதிக்கப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்துகிறேன். இந்நடவடிக்கைக்கு சீர்மை இருக்க வேண்டுமெனில், பொதுமக்கள் நீதிக்கான அணுகலை, இழப்பீட்டை, மேலும் விசாரணைகளில் சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் பங்கேற்கும் வாய்ப்பைப் பெறுதல் அவசியம். ஏனெனில், தமிழர் பகுதிகள் முழுமையாக இராணுவமயமாக்கப்பட்டுள்ளதால் மக்கள் அஞ்சுகின்றனர். அவர்கள் தங்களை இலங்கை அரசாங்கத்திடம் வெளிப்படுத்த அச்சப்படுகின்றனர். நானே கூட இலங்கை அரசாங்கத்தாலும், அதற்கு ஆதரவாக செயல்படும் இராணுவமல்லாத குழுக்களாலும் தொடர்ந்து துன்புறுத்தப்பட்டு, தாக்கப்பட்டு, கொடுமைப் படுத்தப்பட்டிருக்கிறேன். துரதிர்ஷ்டவசமாக, பல சாட்சிகள் மற்றும் உயிர் பிழைத்த குடும்பத்தினர் முதிர்ந்து வருகின்றனர், சிலர் உயிரிழந்து வருகின்றனர், சிலர் அச்சத்தில் வாழ்கின்றனர், மற்றவர்கள் நம்பிக்கையை இழந்து வருகின்றனர். எனவே, இப்பிரச்சினை மிகுந்த அவசரத்தன்மையுடையது. உடனடியான நீதி மற்றும் நடவடிக்கையை ஐ.நா.மனித உரிமைகள் பேரவை எடுக்க வேண்டுமென தமிழ் மக்கள் காத்திருக்கின்றனர் என்றார். https://akkinikkunchu.com/?p=343176

சட்டவிரோத சொத்துக்களை அரசு பறிமுதல் செய்ய முடியும் - ரங்க திஸாநாயக்க

1 week 3 days ago
03 Oct, 2025 | 10:15 AM சட்டவிரோத சொத்துக்களை பறிமுதல் செய்யும் புதிய சட்டத்தின் கீழ் அரசியல்வாதிகள் மற்றும் அரச அதிகாரிகளால் சட்டவிரோதமாக குவிக்கப்பட்ட சொகுசு விடுதி மற்றும் வீடுகள் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ரங்க திஸாநாயக்க தெரிவித்துள்ளார். சட்டவிரோத சொத்துக்களை பறிமுதல் செய்யும் புதிய சட்டமூலம் அண்மையில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. இந்த சட்டத்தின்படி, உரிமையாளர்கள் தங்களது சொத்துக்களை சேகரித்த வழிமுறையை நியாயப்படுத்த தவறினால் அல்லது முடியாவிட்டால், அவற்றை அரசு பறிமுதல் செய்ய முடியும். அதன்படி, சொத்துக்களின் உரிமையாளர்கள் தங்களது சொத்துக்கள் தொடர்பான சட்டபூர்வமான மூலங்களை நிரூபிக்க வேண்டும். இல்லை என்றால் தண்டனை விதிக்கப்படாமலேயே, சொத்துக்களை இழக்க நேரிடும் என இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ரங்க திஸாநாயக்க தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/226755

பெண்கள் பொது வாழ்க்கையிலிருந்து அழிக்கப்படுகின்றனர்: அம்பிகா சற்குணநாதன்

1 week 3 days ago
பெண்கள் பொது வாழ்க்கையிலிருந்து அழிக்கப்படுகின்றனர்: அம்பிகா சற்குணநாதன் October 3, 2025 உலகளாவிய ரீதியில் பாலின சமத்துவத்தில் அடைந்த முன்னேற்றங்கள் பின்வாங்கிக் கொண்டிருக்கின்றன. பெண்கள் பொது வாழ்க்கையிலிருந்து அழிக்கப்படுகின்றனர்; அவர்களின் உரிமைகளும் குரல்களும் வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் கட்டுப்படுத்தப்படுகின்றன. சட்டங்கள், கொள்கைகள், திட்டங்கள் பெண்களை ஒதுக்கி அமைதியாக்குகின்றன. சமூக ஊடகம் போன்ற கருவிகள் பெண்களுக்கு எதிரான வன்முறையை நிலைநாட்டுவதற்கும், பெண்களைப் பொது வாழ்க்கை, தொழில், வீட்டை கடந்து பொது விருப்பங்களை செய்வதை தடுக்க தூண்டுவதற்கும் பயன்படுத்தப்படுகின்றன. என மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் தெரிவித்தார். இலங்கையில் தெற்காசியப் பெண்களுக்கான ஊடக அமைப்பின் 16 ஆவது ஆண்டு நிறைவு விழா புதன்கிழமை (01) கொழும்பில் மண்டரினா ஹோட்டலில் நடைபெற்றது. இந்நிகழ்வின் சிறப்பு விருந்தினரான மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் உரையாற்றுகையில், இந்நிகழ்வுக்கு “பெண்களின் குரல்களை வலுப்படுத்துதல்” என்ற தலைப்பு பொருத்தமாக இருந்தாலும், அதே சமயம் மனக்கசப்பையும் தருகிறது. ஏனெனில் இன்று நாம் வாழும் காலகட்டத்தில் உலகளாவிய ரீதியில் பாலின சமத்துவத்தில் அடைந்த முன்னேற்றங்கள் பின்வாங்கிக் கொண்டிருக்கின்றன. பெண்கள் பொது வாழ்க்கையிலிருந்து அழிக்கப்படுகின்றனர்; அவர்களின் உரிமைகளும் குரல்களும் வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் கட்டுப்படுத்தப்படுகின்றன. சட்டங்கள், கொள்கைகள், திட்டங்கள் பெண்களை ஒதுக்கி அமைதியாக்குகின்றன. அத்தோடு, சமூக ஊடகம் போன்ற கருவிகள் பெண்களுக்கு எதிரான வன்முறையை நிலைநாட்டுவதற்கும், பெண்களைப் பொது வாழ்க்கை, தொழில், வீட்டை கடந்து பொது விருப்பங்களை செய்வதை தடுக்க தூண்டுவதற்கும் பயன்படுத்தப்படுகின்றன. இன்ஸ்டாகிராம் மற்றும் டிக்டொக் போன்ற தளங்களில் தற்போது “பாரம்பரியமான மனைவி ”(Traditional Wife) எனப்படும் புதிய போக்கு பரவலாகியுள்ளது. இளம் பெண்கள், வேறு பெண்களை தொழில், பொருளாதார சுயாதீனம், பொது வாழ்க்கையில் இருந்து விடுப்பட்டு வீட்டு வேலைகளை முன்னிலைப்படுத்த பரிந்துரைக்கிறார்கள். இதை சர்வதேச தொழிலாளர் அமைப்பின் 2023 அறிக்கையுடன் ஒப்பிடுகையில், உலகளாவிய ரீதியில் 74.8 கோடி பேர் பராமரிப்பு பொறுப்புகள் காரணமாக வேலைவாய்ப்பில் ஈடுப்படவில்லை. அதில் 70.8 கோடி பெண்களும், வெறுமனே 4 கோடி ஆண்களும் அடங்குகின்றனர். பெண்கள் குழந்தை பராமரிப்பு, விசேடதேவையுடையவர்கள் பராமரிப்பு, முதியோர் பராமரிப்பு, வீட்டுப் பணி போன்றவற்றில் அசாதாரண அளவில் சுமையைக் கொண்டிருப்பதைக் காட்டுகிறது. அதனால் தான் இன்றைய தலைப்பு மனக்கசப்பைத் தருகிறது. 2025 ஆம் ஆண்டு வந்துவிட்டது ஆனால் இன்னும் பெண்களின் குரலை வலுப்படுத்துவதற்கான வழிகளைத் தேடிக்கொண்டிருக்கிறோம். சில நாட்களுக்கு முன்பு, “Women Shot AI” எனப்படும் யூடியூப் சேனல் ஒன்று உருவானது. அதில் பெண்கள் தலையில் சுடப்படுவதை காட்டும் ஏஐ உருவாக்கிய வீடியோக்கள் மட்டுமே இருந்தன. அதை 4O4 Media வெளிப்படுத்திய பின்னர் அதனை யூடியூப் நீக்கியது. ஆனால் அதற்குள் 2 இலட்சம் பார்வையாளர்கள் அதை பார்த்துவிட்டனர். இந்தக் காலத்தில் கூட, இப்படிப்பட்ட வன்முறைச் சித்திரங்கள் பரவலாக ஏற்றுக்கொள்ளப்படுகின்றன என்பதே கவலைக்குரியது. இதற்கு நாம் எப்படி பதிலளிக்க வேண்டும்? உள்ளடக்கக் கட்டுப்பாடு (content moderation) அவசியம் தான், ஆனால் அது போதுமானதல்ல. பெண்களின் சமத்துவத்தைத் தடுக்கின்ற வரலாற்று, அமைப்பு, கட்டமைப்பு தடைகள் தற்போது புதிய வடிவங்களில் – குறிப்பாக சைபர் வன்முறை போன்றவற்றில் – வெளிப்படுத்தப்படுகின்றன. ஒரே நபரின் அடையாளத்தின் பல்வேறு அம்சங்கள் (பாலினம், மதம், இனப்பெருக்கம், வர்க்கம் போன்றவை) இணைந்து சமத்துவமின்மையை ஆழப்படுத்துகின்றன. உதாரணமாக, ஒருவரின் வர்க்க நிலை அவருக்கு பாதுகாப்பையும் சிறப்பையும் தரலாம், ஆனால் அவரது மதம் அல்லது இனப்பெருக்கம் அவருக்கு அபாயத்தை உருவாக்கக்கூடும். பெண்கள் பல அடுக்குகளில் ஒதுக்கப்படுவதையும் எதிர்கொள்கிறார்கள். வன்முறையை நாம் திடீரென்று நிகழும் நிகழ்வாகக் கருதுகிறோம், ஆனால் அது அன்றாட வாழ்க்கையின் ஓர் தொடர்ச்சி. பாலியல் வன்முறை மிக அதிகம் பேசப்படும், ஆனால் அது தனியே நிகழ்வல்ல; அன்றாட வன்முறையின் ஓர் பகுதி. ஆசிரியர் மாணவனை அடிப்பது, பொலிஸ் ஆர்ப்பாட்டக்காரரை அடிப்பது, அலுவலக அதிகாரிகளின் வார்த்தைகளால் துஷ்பிரயோகம் செய்வது – இவை அனைத்தும் அன்றாட வன்முறைதான். கலாச்சார மதிப்புகள் பெயரில் அடக்குமுறையை நியாயப்படுத்தும் நடைமுறைகள், வன்முறையை சாதாரணமாக்குகின்றன. இது சமூக பரிவு மற்றும் ஒற்றுமையை சீர் குலைக்கிறது. உலகின் பல இடங்களில் நடக்கும் போரினால் கூட, மனிதாபிமானமற்ற கொடுமைகள் இயல்பானவை போலக் கருதப்படுகின்றன. சட்டமும் நீதி மன்றங்களும் சமூகமாக நாம் வன்முறைக்கு கடும் தண்டனைகளை (உதா: தூக்கு தண்டனை) கோருகிறோம். ஆனால், அத்தகைய தண்டனைகளுக்குப் பின்னரும் வன்முறை குறைவதில்லை. ஏனெனில் வேறுக்காரணம் – ஆண்மை பற்றிய சமூகக் கருத்தாக்கங்கள் கவனிக்கப்படுவதில்லை. சமூகத்தில் ஆண்களுக்கு வன்முறை, ஆணவம், ஆதிக்கம் ஆகியவை பயிற்றுவிக்கப்படுகின்றன. பெண்களை சம உரிமையுள்ள மனிதர்களாக பார்க்க மறுப்பதே, பெண்களை ஒரு பொருளாகக் கருதும் மனப்போக்கையும், பாலியல் வன்முறையையும் உருவாக்குகிறது. சட்டமும், நீதி மன்றங்களும் கூட நடுநிலையாக இல்லை. அவற்றும் ஆணாதிக்கம், வர்க்கம், மதம் போன்ற பாகுபாடுகளால் பாதிக்கப்படுகின்றன. சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ICC) கூட பெண்கள் ஊழியர்களுக்கு எதிரான, பாலியல் தொந்தரவு போன்ற பிரச்சனைகளில் சிக்கியுள்ளது. இது, வேறு காரணங்களைத் தீர்க்காவிட்டால், நீதியை வழங்க வேண்டிய அமைப்புகளும் வலுப்படுத்தும் என்பதை காட்டுகிறது. பொருளாதாரம், பெண்ணியம், சமூகக் கண்ணோட்டங்கள் பொருளாதார வளர்ச்சி, தொழில்நுட்ப முன்னேற்றம் போன்றவை மட்டும் பாலின சமத்துவத்தை உறுதி செய்யாது. ஏனெனில் அவை தற்போதைய சமத்துவமின்மைகளைப் புதிய வடிவில் மீண்டும் உருவாக்கும். உதாரணமாக, இலங்கையின் வடக்கு, கிழக்கு பகுதிகளில் போர் முடிந்தபின் பெண்களுக்கு வழங்கப்பட்ட நுண் கடன்கள், கடும் சுமைகளை ஏற்படுத்தின. பலர் தற்கொலைக்கும் தள்ளப்பட்டனர். பெண்கள் வன்முறைகளை எதிர்கொள்ளும்போது கூட, சமூக எதிர்பார்ப்புகள் அவர்களை “சமூகத்துக்கேற்ப நடந்து கொள்ள வேண்டும்” என நிர்பந்திக்கின்றன. “பெண்ணியம்” என்ற சொல்லையே பலர் பயன்படுத்த அச்சப்படுகிறார்கள். ஒரு நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானியும் கூட தன்னைப் பெண்ணியவாதி என்று சொல்லத் தயங்கினார். பெண்களின் கோபம் கூட “அவசியமற்றது” அல்லது “அதிகப்படுத்தல்” என்று குற்றம்சாட்டப்படுகிறது. ஆனால் அந்தக் கோபமே அநீதிக்கு எதிரான இயல்பான, நியாயமான பதிலாகும் என்றார். https://www.ilakku.org/women-are-being-erased-from-public-life-ambika-sarkunanathan/

யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025

1 week 3 days ago
பையன் முன்பும் ஒரு திரியில் எழுதி இருந்தவர், அவரது தனிமையை கலைத்து மாற்றம் வரவே இந்த போட்டிகளில் பங்குபற்ற வேண்டுகோள் விடுத்தேன். அதோட பையன் இல்லாத போட்டித் திரிகளில் கலகலப்பிருக்காதே!

பிரிட்டனில் யூதர்களின் தேவாலய வளாகத்தில் பயங்கரவாதத் தாக்குதல்!

1 week 3 days ago
பிரிட்டனில் யூதர்களின் தேவாலய வளாகத்தில் பயங்கரவாதத் தாக்குதல்! October 3, 2025 பிரிட்டனில் யூதர்களின் தேவாலயம் ஒன்றிற்குக்கு அருகில் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் சிலர் காயமடைந்துள்ளனர். பிரிட்டன், வட மான்செஸ்டர், க்ரம்சால் பகுதியில் ஹீட்டன் பார்க் ஹீப்ரு காங்கிரஸ் என்ற யூத தேவாலயம் அமைந்துள்ளது. இந்நிலையில் நேற்று யூதர்களின் புனித நாளான யோம் கிப்பூர் கொண்டாட்டதிற்காக அங்கு ஏராளமானோர் குழுமி இருந்தனர். உள்ளுர் நேரப்படி காலை 9.30 மணியளவில் அப்பகுதி வழியே நபர் ஒருவர் காரை ஓட்டி வந்து ஆலயம் அருகே சென்றுகொண்டிருந்த பாதசாரிகள் மீது மோதியுள்ளார். மேலும் காரில் இருந்து இறங்கி அங்கிருந்த ஒருவரை கத்தியால் தாக்கியுள்ளார். இந்த சம்பவத்தில் 2 பேர் உயிரிழந்தனர், 3 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த பொலிஸார் குற்றவாளியை துரத்திச் சென்று சுட்டுக் கொன்றனர். அவரிடமிருந்து வெடிகுண்டு போன்ற சந்தேகத்திற்குரிய பொருட்கள் கண்டறியப்பட்டதாக கூறப்படுகிறது. அவர் வெடிகுண்டு அங்கியை அணித்திருந்ததாக தெரிகிறது. வெடிகுண்டு அகற்றும் குழுவினர் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு சோதனைகள் நடத்தப்பட்டன. சம்பவம் நடந்த இடத்தில் இருந்த ஒரு காவல்துறை அதிகாரி, திரும்பிப் போங்கள், அவர் ஒரு வெடிகுண்டை வைத்திருக்கிறார், விலகிச் செல்லுங்கள்” என்று பொதுமக்களை நோக்கி சத்தமிடும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. மேலும் குற்றவாளியை பொலிஸார் சுட்டுக்கொள்ளும் வீடியோவும் வைரலாகி வருகிறது. ஐரோப்பிய அரசியல் சமூக மாநாட்டில் பங்கேற்பதற்காக டென்மார்க் சென்றிருந்த பிரிட்டன் பிரதமர் தனது பயணத்தை பாதியில் முடித்துக்கொண்டு நாடு திரும்பினார். இந்த தாக்குதலை பயங்கரவாத தாக்குதலாக பிரிட்டன் காவல்துறை அறிவித்துள்ளது. https://www.ilakku.org/terrorist-attack-on-jewish-synagogue-in-britain/

அசிங்க அரசியலும் அடாவடி அரசியலும்

1 week 3 days ago
அசிங்க அரசியலும் அடாவடி அரசியலும் முருகானந்தன் தவம் தியாகி திலீபனின் 38ஆவது ஆண்டு நினைவு தினம் அரசின் ,நீதிமன்றங்களின், படைகளின் தடைகள், அடக்கு முறைகள், அடாவடிகள் எதுவுமின்றி அண்மையில் நடந்து முடிந்துள்ளது. இம்முறை இவ்வாறாக அரச தரப்புக்களின் அடக்கு முறைகள் அடாவடிகள் இல்லாதபோதும் தமிழ்த் தேசியம் பேசும் அரசியல் கட்சியான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரின் அடாவடிகள், அடக்கு முறைகளுடன் நடந்து முடிந்துள்ளதுதான் தமிழ் மக்களை விசனப்படுத்தியுள்ளது. செம்மணி மனிதப்புதைகுழி அகழ்வு இடத்திற்கு அஞ்சலி செலுத்த வந்த தேசிய மக்கள் சக்தி அரசின் அமைச்சர் சந்திரசேகர் தலைமையிலான எம்.பிக்கள் குழுவினர் விரட்டியடிக்கப்பட்டமை தொடர்பில் தமிழ் மக்கள் மத்தியில் எழுந்த எதிர்ப்புக்கள், கண்டனங்கள், கவலைகள், விமர்சனங்கள் தணிவதற்குள் தியாகி திலீபனுக்கு அஞ்சலி செலுத்த வந்த அமைச்சர் சந்திரசேகர் தலைமையிலான குழுவினர் மீண்டும் விரட்டியடிக்கப்பட்ட சம்பவம் நடந்தேறியமை இவ்வாறு விரட்டுபவர்களின் அரசியல் நாகரிகத்தைக் கேள்விக்குட்படுத்தியுள்ளதுடன், அரசியல் அடாவடித்தனத்தை விமர்சனத்துக்குள்ளாக்கியுள்ளது. தமிழரின் போராட்ட வரலாற்றில் பல்லாயிரக்கணக்கான போராளிகள் தமது இன்னுயிரைத் தியாகம் செய்துள்ளனர். இவ்வாறான போராளிகளில் அகிம்சை என்னும் ஆயுதத்தைக் கையிலேந்தி, காந்திய வழியில் தமிழ் மக்களின் விடிவிற்காய் காந்திய தேசமான இந்தியத் தேசத்திற்கு எதிராக நீரின்றி, உணவின்றி பட்டினியால் உயிர் துறந்த ஒருவர் தான் தியாகி திலீபன். 1987இல் இந்திய இராணுவம் அமைதிப்படை என்ற பெயரில் வடக்கு,கிழக்கில் கால்பதித்தது. தன்னினம் பகைவனால் அழிக்கப்பட்டு, இந்திய வல்லாதிக்க அரசின் கூட்டுச்சதிக்கு இலக்காகி சித்திரவதைக்கு உள்ளாக்கப்படுவதைக் கண்ட திலீபன் தான் உயிரிலும் மேலாக நேசித்த மக்களின் விடியலுக்காக மகாத்மா காந்தி இவ்வுலகிற்கு விட்டுச் சென்ற போராட்ட வழிமுறையான உண்ணா விரதம் என்ற அகிம்சை வழி ஆயுதத்தைக் கையில் எடுத்து அகிம்சையின் தாய் வீடான இந்தியத் தேசத்திடமே 5 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரத அறப்போரைத் தொடுத்தார். 1987 செப்டெம்பர் 15ஆம் திகதி நல்லைக் கந்தனின் முன்றிலிலே மீளக் குடியமர்த்தல் என்ற பெயரில் வடக்கிலும் கிழக்கிலும் புதிதாகத் திட்டமிடப்படும் சிங்களக் குடியேற்றம் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்,சிறைச் சாலையிலும் தடுப்பு முகாமிலும் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ்க் கைதிகள் யாவரும் விடுவிக்கப்பட வேண்டும், அவசரகாலச் சட்டம் முற்றாக நீக்கப்பட வேண்டும், ஊர்க்காவல் படைக்கு வழங்கப்பட்ட ஆயுதம் யாவும் மீளப்பெறப்பட வேண்டும், தமிழ்ப் பிரதேசத்தில் புதிதாக பொலிஸ் நிலையங்கள் திறக்கப்படும் முயற்சிகள் முற்றாகக் கைவிடப்பட வேண்டும் என்ற 5 கோரிக்கைகளை முன்வைத்து தனது சாகும் வரையிலான உண்ணாநிலைப் போராட்டத்தை திலீபன் ஆரம்பித்தார். திலீபனின் உண்ணாவிரத நாட்கள் கடந்தோடிய போதும், அந்தக் கோரிக்கைகள் எதுவும் காந்தி தேசத்தினால் நிறைவேற்றப்படாத நிலையில், 1987ஆம் ஆண்டு செப்டெம்பர் 26ஆம் திகதி சனிக்கிழமை அன்று, தியாகப்பயணத்தின் பன்னிரெண்டாவது நாள், சரியாகக் காலை 10.48 மணிக்கு திலீபன் உயிர் பிரிந்தது. அன்றிலிருந்து இன்றுவரை தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வு ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் 15ஆம் திகதி முதல் 26ஆம் திகதி வரையிலான 12 நாட்கள் தமிழர் தேசம் மற்றும் தமிழர் வாழும் புலம்பெயர் தேசமெங்கும் உணர்வுப்பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. இவ்வாறான நிலையில்தான், தமிழர் தேசத்திற்கும் தமிழ் மக்களுக்கும் சொந்தமான திலீபனை தமது தனியுரிமையாக, தனிச் சொத்தாகச் சொந்தம் கொண்டாடி தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி செய்து வந்த அரசியல் இம்முறை தமிழ் மக்களினது கடும் வெறுப்புக்கும் கண்டனத்திற்கும் விமர்சனத்திற்கும் உள்ளாகியுள்ளது. வழக்கம் போலவே, இம்முறையும் கடந்த 15ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகள் நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள தியாக தீபத்தின் நினைவிடத்தில் ஆரம்பமாகின. இதனையடுத்து தினமும் பெருமளவிலான மக்கள், மதத் தலைவர்கள்,அரசியல் கட்சியினர் என வேறுபாடின்றி சென்று அஞ்சலி செலுத்தினர். இதில் கடந்த 17ஆம் திகதி மாலை கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் திலீபனுக்கு அஞ்சலி செலுத்தச் சென்றனர். இதன்போது, அங்கிருந்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் அமைச்சரை அஞ்சலி செலுத்த அனுமதிக்க மாட்டோம் என தடுத்து நிறுத்தி முரண்பட்டுள்ளனர். அமைச்சரையும் அவரது குழுவினரையும் திருப்பி அனுப்பியுள்ளனர். தமிழ்த் தேசத்திற்காக, தமிழ் மக்களுக்காகா உயிர் நீத்த தியாக தீபம் திலீபனுக்கு அஞ்சலி செலுத்த வந்த அமைச்சர் அடங்கிய குழுவினரை அதிலும் அவர்கள் தமிழர்களாகவும் இருக்கும் நிலையில் அவர்களை அஞ்சலி செலுத்த விடாது தடுக்க,திருப்பியனுப்ப தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினருக்கு என்ன உரிமையுள்ளதென்பதே இன்று தமிழர் தேசத்தில் எழுந்துள்ள கேள்வி. திலீபன் அனைத்து தமிழர்களுக்கும் சொந்தமானவனாக இருக்கையில் திலீபனை உரிமை கொண்டாடத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் யார்? இவர்களுக்கு அந்த உரிமையை கொடுத்தது யார்? இவர்களுக்கும் திலீபனுக்கும் என்ன தொடர்பு? திலீபனுக்கு அஞ்சலி செலுத்த யார் வரலாம் யார் வரக்கூடாது என்பதனை தீர்மானிக்க இவர்கள் யார்?என்பதே தமிழ் மக்கள் மத்தியில் எழுந்துள்ள கேள்விகள் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரே நல்லூரில் திலீபன் நினைவுத்தூபியை நிர்மாணித்துப் பராமரித்தவர்கள். ஆனால், வீட்டிற்குள் ஒட்டகம் புகுந்து போல் புகுந்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் இன்று அங்குள்ளவர்களை எல்லாம் விரட்டிவிட்டு திலீபனின் நினைவுத்தூபி இடத்தை சர்வாதிகாரமாக தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொண்டு தமிழ்த் தேசத்தை மீட்க வந்தவர்கள் போல, காட்டி அரசியல் செய்கின்றனர். இதுதான் இன்று தமிழ் மக்களைத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் மீது விசனமும் வெறுப்பும் கொள்ள வைத்துள்ளது. அமைச்சரும் அவரது குழுவினரும் தியாகி திலீபனுக்கு அஞ்சலி செலுத்தவிடாது தடுக்கப்பட்டமை மிகவும் மோசமான செயல். ஏனெனில், தியாகி திலீபன் நினைவிடம் என்பது ஒரு பொது இடம் அங்கு எதிரிகளுக்குக் கூட நினைவேந்தல் செய்ய உரிமை உண்டு. இந்த உரிமையைத் தடுப்பதற்குத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினருக்கு எந்த உரிமையும் இல்லை. அரசாங்கத்தை எதிர்க்கின்ற களம் தியாகி திலீபனது நினைவேந்தல் களம் அல்ல.தியாகி திலீபனின் நினைவிடத்தைத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் சர்வாதிகாரமாக தமது கட்டுப் பாட்டுக்குள் வைத்திருப்பதனால் ஏனைய தமிழ்த் தேசிய கட்சிகள்கூட திலீபனுக்கு அஞ்சலி செலுத்த அங்கு சென்றால் தாமும் அவமானப்படுத்தப்படுவோம் , திருப்பி அனுப்பப்படுவோம் என்ற அச்சம் காரணமாக செல்லத் தயங்குகின்றனர்.எனவே தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் திருந்த வேண்டும் அல்லது திருத்தப்படுவார்கள் என்றவாறாக, மக்கள் தமது விசனத்தை வெளிப்படுத்துகின்றனர். யாரும் யாரையும் அஞ்சலிக்கலாம். அதுதான் மனித மாண்பு. திலீபன் போராடிய காலத்தில் அவருக்கு எதிராக நின்ற பலர் கூட திலீபனின் தியாகத்தை மதித்து இன்று நினைவேந்தல்களில் பங்கேற்கின்றனர். ஒரு மாவீரனின் தியாகியின் நினைவேந்தலை வாக்குக் கணக்குப் பொருட்டு அரசியல் ஆக்கிரமிப்பு செய்வது ஒருபோதும் மன்னிக்க முடியாத குற்றம். இது மனித மாண்புகளை மீறிய காட்டுமிராண்டித்தனமே தவிர வேறில்லை. தமிழ் மக்களின் இனமான உணர்வுகளை, போராளிகளின் தூய்மையான போராட்டத்தை அறியாதவரல்ல அமைச்சர் சந்திரசேகர், திலீபன் போன்ற தமிழ்த் தேசிய இனத்தின் உயர்ந்த நோக்கத்திற்காகத் தமிழ் மக்களுக்காகத் தன்னுயிரை ஆகுதியாக்கியவரின் நினைவிடத்திற்கு அஞ்சலி செலுத்த வந்த அவரை அஞ்சலி செலுத்த விடாது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் முட்டாள்கள் போன்று செயற்பட்டுள்ளனர். அமைச்சர் அரசியல் நோக்கில் அங்கு வந்திருந்தால் கூட அதுபற்றி தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் கவலைப்படத் தேவையில்லை. ஏனெனில், இவர்களும் தமிழ்த் தேசிய அரசியல் ஆதாயத்திற்காகத்தான் தியாக தீபம் திலீபனை உரிமை கொண்டாடுகின்றனர். தியாகி திலீபனுக்கு அஞ்சலி செலுத்த நினைவிடத்திற்கு வந்த போதும் இதேபோன்றே செம்மணி மனித புதைகுழிப்பகுதிக்கு அஞ்சலி செலுத்த வந்தபோதும் அமைச்சர் சந்திரசேகரும் அவரது எம்.பி.க்கள் குழுவினரும் விரட்டப்பட்டுள்ளனர். இவ்வாறு விரட்டியவர்கள் இதன் மூலம் சாதிக்க நினைப்பது என்ன? . செம்மணிக்கு வந்த அமைச்சரை அஞ்சலி செலுத்த விடாது விரட்டி விட்டு யாழ்ப்பாணம் வந்த ஜனாதிபதி செம்மணிக்கு வரவில்லையென ஒப்பாரி வைக்கின்றனர். ஜனாதிபதி இனவாதி என்கின்றனர் .இது மிகவும் இழிநிலையான அரசியல் . திலீபன் நினைவேந்தல் விடயத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் நடந்து கொண்ட விதம் அருவருக்கத்தக்கது. திலீபனின் நினைவேந்தலை பொறுத்த வரையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் திலீபனை உரிமை கொண்டாடி அசிங்க அரசியல்.அடாவடி அரசியல் செய்கின்றனர். என்பதே உண்மை. https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/அசிங்க-அரசியலும்-அடாவடி-அரசியலும்/91-365653

யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025

1 week 3 days ago
அதுசரி. எங்க உங்கட பெயரைக் காணவில்லை. நீங்களும் பங்குபற்றி இருக்கவேணும். நடத்துகின்றேன் என்று உங்கள் நேரத்தை தியாகம் பண்ணத் தேவையில்லையே.

யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025

1 week 3 days ago
வினா 4) 7 விக்கேற்றுக்களினால் வங்காளதேசம் அணி பாகிஸ்தான் அணியை தோற்கடித்தது. 5 போட்டியாளர்கள் சரியாக பதில் எழுதியிருக்கிறார்கள். 1)ஏராளன் - 9 புள்ளிகள் 2)கிருபன் - 9 புள்ளிகள் 3)அகஸ்தியன் - 9 புள்ளிகள் 4)நியூபேலன்ஸ் - 9 புள்ளிகள் 5)ஆல்வாயன் - 7 புள்ளிகள் 6)புலவர் - 7 புள்ளிகள் 7)வாதவூரான் - 7 புள்ளிகள் 8) ரசோதரன் - 7 புள்ளிகள் 9) வீரப்பையன் - 7 புள்ளிகள் 10) சுவி - 6 புள்ளிகள் 11) வாத்தியார் - 5 புள்ளிகள் 12)செம்பாட்டன் - 5 புள்ளிகள் 13)கறுப்பி - 5 புள்ளிகள் 14)ஈழப்பிரியன் - 5 புள்ளிகள் 15)வசி - 3 புள்ளிகள் இதுவரை வினாக்கள் 1 - 4, 41, 42 க்கு புள்ளிகள் வழங்கியுள்ளேன்.

புற்று நோயால் பாதிக்கப்பட்டவரின் திருட்டுப்போன பசுமாடுகளில் ஒன்று இறைச்சிக்கு வெட்டி நிலையில் காத்தான்குடியில் தலை மீட்பு; இருவர் கைது இரு மாடுகள் மீட்பு

1 week 3 days ago
இந்த செய்தி போட்டதிற்காக காத்தான்குடியில் நாளை ஜூம்மா முடிந்ததும் ஆர்ப்பாடம் நடைபெறும் ...நாமெல்லாம் பத்தரை மாற்று தங்கமெல்லொ..

யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025

1 week 3 days ago
இங்கு வருவது உங்கள் மனதுக்கு ஆறுதல் என்றால் மகிழ்ச்சி. ஆனால் சிரமமாக இருந்தால், தேவையான ஓய்வை எடுத்து முழு ஆரோக்கியத்துடன் திரும்பி வாருங்கள். உங்கள் ஆரோக்கியத்துக்கு.வீரப்பையன் விரையில் உடல்நலம் தேறி கலகலப்பாக வேண்டும்

ரணிலும், மஹிந்தவும் நம்பர் வன் திருடர்கள் - அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவிப்பு

1 week 3 days ago
ஏன் சொத்துக்களின் பிரகடனத்தை பார்க்க வேணும்..தோழர்களின் வண்டியை(தொந்தியை)உடல் பருமனின் வளர்ச்சியை பார்க்கும் பொழுதே தெரிகின்றது தோழர்களிடம் சொத்துக்கள் குவிகின்றது என்று....🤣 சிறிலங்கா தீவு மக்கள் இவையை மட்டுமா அரியணையில் ஏற்றி அழகு பார்த்தார்கள்.சிறிமா கோஸ்டி,ஜெஆர் கோஸ்டி,சந்திரிக்காகோஸ்டி ,மகிந்தா கோஸ்டி என எல்லோரையும் அரியணையில் ஏற்றி அழகு பார்த்தவர்கள் ...இப்பொழுது அனுரா கோஸ்டி யை ஏற்றியிருக்கினம் ...தீவு மக்கள்....

யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025

1 week 3 days ago
என்ன சொல்கிறீர்கள். தேவையான ஓய்வை எடுங்கள். யாழ் களம் இங்கேயே இருக்கும். இந்தப் போட்டியெல்லாம் சும்மா முசுப்பாத்திக்குத் தானே. உங்கள் நலம்தான் முக்கியம். இங்கு வருவது உங்கள் மனதுக்கு ஆறுதல் என்றால் மகிழ்ச்சி. ஆனால் சிரமமாக இருந்தால், தேவையான ஓய்வை எடுத்து முழு ஆரோக்கியத்துடன் திரும்பி வாருங்கள். உங்கள் ஆரோக்கியத்துக்கு.

திருமண உறவில் குறுக்கிடும் 3ஆம் நபரிடம் நஷ்டஈடு கோரலாம்!

1 week 3 days ago
ஆம். யார் இல்லை. என்றது. சினிமா. மூலம். அழிந்தவர்களுமுண்டு. அது. தான. அதிகம். நீங்கள். சொன்னவர்கள. பெரிய. பணம். படைத்தவர்கள். சரி. அண்ணை. சீமான். தமிழ் ஈழம். எடுத்து. தந்ததான். பிற்பாடு. கதைப்பம்.

கரூர் துயரம் : தமிழக அரசுக்கு முக்கிய வேண்டுகோள் வைத்த சமூக செயற்பாட்டாளர்கள்.

1 week 3 days ago
ஹேமமாலினி ஏற்கனவே சொல்லிவிட்டார். பாஜக என்றால் யார் என்று தெரியும் என்பதால், நாங்கள் எவரும் அவர்களின் கருத்தை இங்கே ஒரு பொருட்டாக கொண்டு வருவது கூட இல்லை. கும்பமேளாவில் இறந்தால் சொர்க்கத்திற்கு போகலாம் என்று சொல்லும் கூட்டம் அது.............🫣. என்ன நடந்தது என்பதில் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு பார்வைகள் இருக்கும். அவை பெரும்பாலும் அவர்களின் முன்னைய ஆதரவு - எதிர்ப்பு நிலையை ஒட்டியே இருக்கும். ஆனால் இந்த தலைவர்கள் எல்லோரும் இப்போது என்ன சொல்கின்றார்கள், என்ன செய்கின்றார்கள், எப்படி நடந்து கொள்கின்றார்கள் என்பதில் பல பார்வைகள் இருக்கமுடியாது.

கரூர் துயரம் : தமிழக அரசுக்கு முக்கிய வேண்டுகோள் வைத்த சமூக செயற்பாட்டாளர்கள்.

1 week 3 days ago
பாம்பின் கால் பாம்பறியும் என்பது போல்...... நாட்டிற்கு எதுவுமே செய்யாமல் மேடை அதிரடி வசனங்களாலும்,திரைக்கதை வசனங்கள் புகழாலும்,நாடக நடிப்புகளாலும் முன்னுக்கு வந்தவர் கருணாநிதி.அன்றைய காலத்தில் திரை முன்னணிகள் சொல்வதெல்லாம் தெய்வவாக்கு(இன்றும் அதே நிலைதான்☹) தீபம் காட்டுவது,பால் ஊத்துவது இன்றும் உள்ளது. இதுதான் இன்றைய இந்திய, தமிழ்நாட்டின் அரசியல் நிலைமை. நிலைமை இப்படியிருக்க.... சினிமா கவர்ச்சி அரசியல் வலிமை மிக்கது என பழைய வரலாறுகள் சொல்லி நிற்கும் இவ் வேளையில் திமுக பயப்பிடுமா இல்லையா? சினிமா அரசியலில் எம்ஜிஆர் தப்பி பிழைக்க...... எஸ் எஸ் ராஜேந்திரன் தொடக்கம் சிவாஜிகணேசன் பாக்கியராஜ் ரி ராஜேந்தர் கமலகாசன் ராமராஜன் செந்தில் விஜகுமார் என பலர் அவஸ்தை பட்டது பலருக்கும் தெரியும்.

கரூர் துயரம் : தமிழக அரசுக்கு முக்கிய வேண்டுகோள் வைத்த சமூக செயற்பாட்டாளர்கள்.

1 week 3 days ago
நீங்கள் போடும் அந்த 100 சமூக செயற்பாட்டாளர்களை விட நீதியானவர்களை கொண்ட பாஜக அமைத்த ஆய்வுக் குழு ஒன்று டெல்லியில் இருந்து உண்மை என்ன என்பதை கண்டறியும் தூய நோக்கத்தில் கரூர் வருகின்றது .அவர்கள் சொன்னால் இவர்கள் ஏற்று கொள்வார்கள்.

கரூரில் விஜய்யை காண குவிந்த கூட்டத்தில் நெரிசல்! 29 பேர் பலி.. உயிரிழப்பு அதிகரிக்கும் என அச்சம்!

1 week 3 days ago
அதான் கரூரில் ஒரு மூ.சந்தில் வைத்து வீரவாகுவை முங்கு முங்கு எண்டு மொங்கிவிட்டார்களே…இனி ஐயரிடம் டீல் போடுவதுதான் ஒரே வழி என்ற முடிவுக்கு வீரவாகு வந்திருக்க கூடும். வீரவாகு கொடுப்பதை கொடுக்க ஒத்து கொண்டால், ஐயர் பேக்கரியை கொடுப்பார். ஆனால் இது வெளியே கடுகளவு கசிந்தாலும் வீரவாகு மானம் அம்பேல்😂.

கரூர் துயரம் : தமிழக அரசுக்கு முக்கிய வேண்டுகோள் வைத்த சமூக செயற்பாட்டாளர்கள்.

1 week 3 days ago
சினிமா வசனங்களை வைத்து அரசியல் செய்ய வெளிக்கிட்டால் இந்த அழிவும் வரும் இதுக்கு மேலான அழிவுகளும் வரும். சினிமாவை வைத்து அரசியல் செய்த எம்ஜிஆர் காலம் அந்தக்காலம்.அப்போது அது சரியாக இருந்தது. ஊடக வெளிச்சம் இல்லாத காலத்தில் சினிமா தகவல் சொல்லும் களமாக இருந்தது. அதே அரசியலை மூக்கை பிடித்தால் வாயை திறக்க தெரியாத இளம் சினிமாக்காரர்களுக்கு அரசியலை பற்றி என்ன தெரியும்? சினிமாவில் கதையும் சொந்தமில்லை.கதை வசனங்களும் சொந்தமில்லை. இசையும் சொந்தமில்லை.பாடல் வரிகளும் சொந்தமில்லை. பஞ்ச் வசனங்களும் சொந்தமில்லை.அணியும் உடைகளும் சொந்தமில்லை. பத்து வசனம் தொடர்ந்து பேச வக்கில்லை. ஆனால் நினைப்போ நேரடி முதல்வர் கதிரை.

கரூர் துயரம் : தமிழக அரசுக்கு முக்கிய வேண்டுகோள் வைத்த சமூக செயற்பாட்டாளர்கள்.

1 week 3 days ago
இந்திய அரசியலை மாபியாவுடன் ஒப்பிட்டது மிகப்பொருத்தமானது. இது தனியே கூட்டம் கூடியது, தள்ளுமுள்ளு, சாவு என்பதாக எனக்கு படவில்லை. விஜையின் நிகழ்வுக்கு பின்னான நடத்தை அவர் மீது எரிச்சலை ஏற்படுத்தினாலும், நாமும் இந்த சதிக்கு பலியாகி அவர் மீது மட்டும் கோவத்தை காட்டி விட்டு அடங்கி விட கூடாது என நான் நினைக்கிறேன். விஜைக்கு கூடிய கூட்டம் வாக்காக மாறாது, மாறாது என கூவினாலும், திமுக ரொம்பவே கிலி கொண்டது என்பதே உண்மை. சீமானை பெயரை கூட சொல்லாமல் சிவாஜி கிருஸ்ணமூர்தியை வைத்து லெப்ட் ஹாண்டில் டீல் பண்ணிய அதே திமுக அத்தனை அமைச்சர், முதல்வர், துணை முதல்வரையும் இறக்கி களமாடியது. தேர்தலுக்கு 7 மாதம் முன்பே. தமது சுயநலனுக்காக பல இலட்சம் ஈழதமிழர் கொலையை உண்ணாவிரத நாடகம் ஆடி கடந்து போன கட்சி, குடும்பம் இது, அதே சுயநலனுக்காக ஏன் இதை செய்திருக்க கூடாது.
Checked
Mon, 10/13/2025 - 06:07
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed