புதிய பதிவுகள்2

கரூர் துயரம் : தமிழக அரசுக்கு முக்கிய வேண்டுகோள் வைத்த சமூக செயற்பாட்டாளர்கள்.

1 week 3 days ago
நீங்கள் போடும் அந்த 100 சமூக செயற்பாட்டாளர்களை விட நீதியானவர்களை கொண்ட பாஜக அமைத்த ஆய்வுக் குழு ஒன்று டெல்லியில் இருந்து உண்மை என்ன என்பதை கண்டறியும் தூய நோக்கத்தில் கரூர் வருகின்றது .அவர்கள் சொன்னால் இவர்கள் ஏற்று கொள்வார்கள்.

கரூரில் விஜய்யை காண குவிந்த கூட்டத்தில் நெரிசல்! 29 பேர் பலி.. உயிரிழப்பு அதிகரிக்கும் என அச்சம்!

1 week 3 days ago
அதான் கரூரில் ஒரு மூ.சந்தில் வைத்து வீரவாகுவை முங்கு முங்கு எண்டு மொங்கிவிட்டார்களே…இனி ஐயரிடம் டீல் போடுவதுதான் ஒரே வழி என்ற முடிவுக்கு வீரவாகு வந்திருக்க கூடும். வீரவாகு கொடுப்பதை கொடுக்க ஒத்து கொண்டால், ஐயர் பேக்கரியை கொடுப்பார். ஆனால் இது வெளியே கடுகளவு கசிந்தாலும் வீரவாகு மானம் அம்பேல்😂.

கரூர் துயரம் : தமிழக அரசுக்கு முக்கிய வேண்டுகோள் வைத்த சமூக செயற்பாட்டாளர்கள்.

1 week 3 days ago
சினிமா வசனங்களை வைத்து அரசியல் செய்ய வெளிக்கிட்டால் இந்த அழிவும் வரும் இதுக்கு மேலான அழிவுகளும் வரும். சினிமாவை வைத்து அரசியல் செய்த எம்ஜிஆர் காலம் அந்தக்காலம்.அப்போது அது சரியாக இருந்தது. ஊடக வெளிச்சம் இல்லாத காலத்தில் சினிமா தகவல் சொல்லும் களமாக இருந்தது. அதே அரசியலை மூக்கை பிடித்தால் வாயை திறக்க தெரியாத இளம் சினிமாக்காரர்களுக்கு அரசியலை பற்றி என்ன தெரியும்? சினிமாவில் கதையும் சொந்தமில்லை.கதை வசனங்களும் சொந்தமில்லை. இசையும் சொந்தமில்லை.பாடல் வரிகளும் சொந்தமில்லை. பஞ்ச் வசனங்களும் சொந்தமில்லை.அணியும் உடைகளும் சொந்தமில்லை. பத்து வசனம் தொடர்ந்து பேச வக்கில்லை. ஆனால் நினைப்போ நேரடி முதல்வர் கதிரை.

கரூர் துயரம் : தமிழக அரசுக்கு முக்கிய வேண்டுகோள் வைத்த சமூக செயற்பாட்டாளர்கள்.

1 week 3 days ago
இந்திய அரசியலை மாபியாவுடன் ஒப்பிட்டது மிகப்பொருத்தமானது. இது தனியே கூட்டம் கூடியது, தள்ளுமுள்ளு, சாவு என்பதாக எனக்கு படவில்லை. விஜையின் நிகழ்வுக்கு பின்னான நடத்தை அவர் மீது எரிச்சலை ஏற்படுத்தினாலும், நாமும் இந்த சதிக்கு பலியாகி அவர் மீது மட்டும் கோவத்தை காட்டி விட்டு அடங்கி விட கூடாது என நான் நினைக்கிறேன். விஜைக்கு கூடிய கூட்டம் வாக்காக மாறாது, மாறாது என கூவினாலும், திமுக ரொம்பவே கிலி கொண்டது என்பதே உண்மை. சீமானை பெயரை கூட சொல்லாமல் சிவாஜி கிருஸ்ணமூர்தியை வைத்து லெப்ட் ஹாண்டில் டீல் பண்ணிய அதே திமுக அத்தனை அமைச்சர், முதல்வர், துணை முதல்வரையும் இறக்கி களமாடியது. தேர்தலுக்கு 7 மாதம் முன்பே. தமது சுயநலனுக்காக பல இலட்சம் ஈழதமிழர் கொலையை உண்ணாவிரத நாடகம் ஆடி கடந்து போன கட்சி, குடும்பம் இது, அதே சுயநலனுக்காக ஏன் இதை செய்திருக்க கூடாது.

கரூரில் விஜய்யை காண குவிந்த கூட்டத்தில் நெரிசல்! 29 பேர் பலி.. உயிரிழப்பு அதிகரிக்கும் என அச்சம்!

1 week 3 days ago
https://x.com/sindhan/status/1973707471329116265?s=12https://x.com/sindhan/status/1973707471329116265?s=12 டெல்லியில் கொள்கை எதிரிகள்தான் இருக்கிறார்கள்.அவர்களைச்சந்தித்து ஒரு பேக்கரி டீல் போடப்போகிறார்களோ?

கரூர் துயரம் : தமிழக அரசுக்கு முக்கிய வேண்டுகோள் வைத்த சமூக செயற்பாட்டாளர்கள்.

1 week 3 days ago
விஜய் இப்ப தான் கட்சி தொடக்கி இருக்கார். ஒரு தேர்தலைக் கூட எதிர்கொள்ளவில்லை தேர்தலை எதிர்கொள்வதற்கான.... அதற்கான ஆயத்தங்களில் ஈடுபடுகின்றார். ஆனால் இதுவரை அவரை ஒரு நடிகனாகவே மக்கள் அறிந்துள்ளார்கள் அரசியலில் எப்படிச் செயற்படுவார் என்பதை மக்கள் அவருடைய திரைப்படங்களை வைத்தே அளவிட்டுள்ளார்கள் இது உண்மையா? இல்லை அவர் சினிமா மூலம் மக்களை ஏமாற்றிருக்கின்றாரா? என்பது யாருக்கும் வெளிச்சம் இல்லை தி மு க எட்டு சதாப்தங்கள் கண்ட ஒரு கட்சி. ஏன் விஜயின் வரவை பார்த்து அச்சப்படுகின்றனர் என்பது தான் என்னுடைய கேள்வி. அது கொசுறு என்றால் கொசுறாகவே போயிடும். ஆனால் இவர்கள் விஜயை ஒரு பெரிய யானையாகக் காட்ட முயற்சிக்கின்றார்கள் எதற்காக ஒருவேளை எடப்பாடி யின் எதிர் வாக்குக்களை விஜய் பக்கம் திருப்பவா? தி மு க வை எடப்பாடியார் முந்தும் வேளையில் இந்த விளையாட்டால் விஜயால் எடப்பாடிக்கு ஆப்பா ? அதை உணர்ந்த எடப்பாடியார் விஜயை தன்னுடன் இழுக்க முயல்கின்றாரா ? அதற்கான மாமா வேலையை பா ஜ க பயமுறுத்தி செயல்படுத்த நினைக்கின்றதா ? இப்படிப் பல கேள்விகள் உள்ளது இந்தியா என்பது அரசியல் மாபியாக்கள் கூட்டணி எப்போதும் எதுவும் நடக்கலாம்

கரூர் துயரம் : தமிழக அரசுக்கு முக்கிய வேண்டுகோள் வைத்த சமூக செயற்பாட்டாளர்கள்.

1 week 3 days ago
நான் அந்த 100 பேர்களின் பெயர்களை இங்கே போட்டாலும், நீங்கள் அவர்களில் ஒருவர் விடாமல் ஏதோ சொல்லத்தான் போகின்றீர்கள். அதை உங்கள் தரப்பின் பார்வையாக எடுத்துக் கொள்கின்றோம். நீங்கள் திமுகவால் இறக்கி விடப்பட்ட 100 பேர்கள் என்று இவர்களைச் சொல்கின்றீர்கள். நான் அவர்களாகவே முன்வந்து தமிழ் சமூகத்தின் மேல் இருக்கும் அக்கறையில் இதைச் செய்கின்றார்கள் என்கின்றேன். நான் கூட அந்த அக்கறையினால் தான் விஜய்க்கும், அவரது நடவடிக்கைகளுக்கும் எதிராக என்னால் முடிந்த இடங்களில் என் கருத்துகளை பதிவு செய்து கொண்டிருக்கின்றேன்.

இங்கிலாந்து இந்திய டெஸ்ட் கிரிக்கெட் தொடர்

1 week 3 days ago
இந்த‌ தொட‌ரில் த‌மிழ‌க‌ வீர‌ர் வ‌ஸ்சின்ட‌ன் சுந்த‌ர் சிற‌ப்பாக‌ விளையாடினார் வ‌ஸ்சின்ட‌ன் சுந்த‌ர் அடிச்ச ர‌ன்ஸ்சும் முன்ன‌னி வீர‌ர்க‌ளின் விக்கேட்டை எடுத்த‌ ப‌டியால் தான் விளையாட்டு 2/2 என‌ முடிஞ்ச‌து யாழில் ஜ‌பிஎல் திரியில் கூட‌ எழுதி இருந்தேன் வ‌ஸ்சின்ட‌ன் சுந்த‌ர் சிற‌ந்த‌ வீர‌ர் என‌ , கிடைச்ச‌ வாய்ப்பை ச‌ரிய‌ ப‌ய‌ன் ப‌டுத்தினார் வ‌ஸ்சின்ட‌ன் சுந்த‌ருக்கு வாழ்த்துக்க‌ளும் பாராட்டுக்க‌ளும்🙏👍.........................

கரூர் துயரம் : தமிழக அரசுக்கு முக்கிய வேண்டுகோள் வைத்த சமூக செயற்பாட்டாளர்கள்.

1 week 3 days ago
ஆர். பாலகிருஷ்ணன் திராவிடவியல் ஆய்வாளர் அடுத்து மூன்னாள் நீதியரசர் சந்துரு இவருடைய தீர்ப்புக்கள் பலதும் திராவிட கொள்கையின் அடிப்படையிலான தீர்ப்புகள் . ( நான் தீர்ப்புக்களை பிழை என்று கூறவில்லை. ) உதாரணம் 1.கோவில்களில் பெண்கள் பூசை செய்யும் குருக்கள் ஆகலாம். 2.சாதி பாகுபாடு இல்லாமல்எல்லாருக்கும் ஒரே சுடுகாடு வேண்டும் அடுத்து எழுத்தாளர் எஸ்.வி.ராஜதுரை இவர் சிறு வயதிலேயே தி மு க ஆர்வலர் பின்னர் கம்யூனிஸ்ட் ஆக மொத்தம் கலை இலக்கிய வாதிகள், சமூக செயற்பாட்டாளர்கள் என்று இறக்கி விடப்பட்ட இந்த தி மு க ஆதரவு செயற்பாட்டாளர்களால் எப்படி விஜயைக் குறை கூறாமல் இருக்க முடியும்

யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025

1 week 3 days ago
உட‌ல் நிலை ச‌ரி இல்லை அண்ணா😞................ ஏராள‌ன் அண்ணையின் அழைப்பை ஏற்று போட்டியில் க‌ல‌ந்தேன்.........................என‌க்கு கூடுத‌ல் ஓய்வு தேவை......................ம‌ற்ற‌ம் ப‌டி வாழ்க்கை ஏனோ தானோ என்று போகுது அண்ணா................. நீங்க‌ள் ந‌ல‌மா அண்ணா🙏❤️👍......................

யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025

1 week 3 days ago
🤣........... அந்த முகபாவங்கள் காட்டுகின்ற பிள்ளை............... இப்ப சசியையே தீண்டுவார் இல்லை, அதால அந்தப் பிள்ளையும் இப்ப அவுட் ஆஃப் ஃபோகஸில் போயிட்டுது..........🤣.

கரூர் துயரம் : தமிழக அரசுக்கு முக்கிய வேண்டுகோள் வைத்த சமூக செயற்பாட்டாளர்கள்.

1 week 3 days ago
எந்த உண்மை? கரூரில் என்ன நடந்தது என்ற உண்மையா? அந்த எல்லோரில் நான் இல்லை. நீங்கள் இருந்தால்… அந்த உண்மைதான் என்ன?
Checked
Mon, 10/13/2025 - 09:07
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed