புதிய பதிவுகள்2

மஹிந்த ராஜபக்ஷவின் பிரதான பாதுகாப்பு அதிகாரி நெவில் கைது!

1 week 3 days ago
🔴 மகிந்தவின் பாதுகாப்பு அதிகாரி நெவில் வன்னியாராச்சிக்கு ஜெயில்! லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமை பாதுகாப்பு அதிகாரி நெவில் வன்னியாராச்சியை இந்த மாதம் 17 ஆம் தேதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (2) உத்தரவிட்டது. லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகள் மற்றும் சந்தேக நபரின் வழக்கறிஞர்கள் முன்வைத்த வாதங்களை பரிசீலித்த பின்னர் கொழும்பு தலைமை நீதவான் அசங்க எஸ். போதரகம இந்த உத்தரவை பிறப்பித்தார். ரூ. 28 மில்லியனுக்கும் அதிகமான சொத்துக்கள் மற்றும் சொத்துக்களை அவர் எவ்வாறு சம்பாதித்தார் என்பதை வெளியிடத் தவறிய குற்றச்சாட்டின் பேரில் அவர் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. Vaanam.lk

யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025

1 week 3 days ago
இந்த இருநாடுகளும் விளையாடுவதே பெரிய விடயம். முஸ்லிம் நாடுகளில் பெண்களின் நிலைமை தெரியும்தானே. இங்கு யார் வென்றாலும், அது வெற்றியே. ஆப்கானிஸ்தான் அணி தொடக்கவிழாவுக்கு வந்திருந்தார்கள். இந்தியா இலங்கை போட்டியைக் கண்டுகளித்தார்கள். வீராங்கனைகள் எல்லாம் புலம்பெயர்ந்து அவுஸ்ரேலியாவிலும் கனடாவிலும் வாழ்கிறார்கள். ஆப்கானிஸ்தான் கிரிக்கட் சபை அவர்களை அங்கீகரிக்கவில்லை.

யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025

1 week 3 days ago
வீராங்கனைகளில் ரொம்பவும் கண்ணாக இருக்கிறீகளோ? சுவாரிசம் இல்லாததால் மறந்துவிட்டேன்.இன்றிலிருந்து வாழ்த்துகிறேன் பையா. முதலமைச்சர் ஏராளனுக்கு வாழ்த்துக்கள்.

யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025

1 week 3 days ago
32 ஓவரிலேயே வங்காளதேசம் வென்றுள்ளது! சமபலம் என்றால் 48 ஓவர் மட்டுமாவது மட்ச் போயிருக்கவேண்டும் 😬 RESULT 3rd Match (D/N), Colombo (RPS), October 02, 2025, ICC Women's World Cup PAK-W 129 BAN-W (31.1/50 ov, T:130) 131/3 BAN Women won by 7 wickets (with 113 balls remaining)

“விஜய்யின் இதயத்தில் வலியோ, காயமோ இல்லை என்பது தெரிகிறது” - சீமான்

1 week 3 days ago
சென்னை: "தவெக தலைவர் விஜய் வீடியோவை பார்க்கும்போது அவரது இதயத்தில் வலியோ, காயமோ இல்லை என்பது தெரிகிறது. அப்படி, இருந்திருந்தால் அந்த மொழியில் வெளிப்பட்டிருக்கும்" என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். விருதுநகரில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களிடம் பேசியதாவது: விஜய் சென்றதால்தான் அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதற்கு காரணம் யார்? ஆனால், அவர் இதயத்தில் வலியோ, காயமோ இல்லை. திரைப்படத்தின் வசனம் போல வீடியோவில் பேசியுள்ளார். இது நல்ல அணுகுமுறை இல்லை. மற்ற இடத்தில் இல்லாமல் கரூரில் மட்டும் இப்படி நடந்தது எப்படி என விஜய் கேட்பது தவறு. மற்ற இடங்களிலும் இப்படி நடக்க வேண்டும் என அவர் நினைக்கிறாரா? கூட்டத்தில் கத்தியுடன் புகுந்தவர்கள் தாக்கினார்கள் என்று சொன்னார்கள். ஆனால், மருத்துவமனையில் இருக்கும் ஒருவருக்குக் கூட கத்திக் குத்து காயம் இல்லாதது எப்படி? நானே நேரில் சென்று பார்த்தேன். கரூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஒருவருக்கு கூட கத்திக் குத்து காயம் இல்லை. விஜய்க்கு சுய சிந்தனை இருக்கிறது என்றால் எதற்கு அருகில் ஆள் இருக்க வேண்டும்? வீடியோவில் பேசும்போது அவர் வலியை கடத்தி இருக்க வேண்டும், ஆனால் அவர் கடத்தவில்லை. சி.எம். சார் என்று கூப்பிடுவதே சின்ன பிள்ளைகள் விளையாட்டாக பேசுவதுபோல் இருக்கிறது. முதல்வர் மேல் அவருக்கு மரியாதை இல்லாமல் இருக்கலாம். ஆனால் அவர் இருக்கும் நாற்காலி பல தலைவர்கள் இருந்த இடம்” இவ்வாறு அவர் தெரிவித்தார். விஜய் இப்படி தான் பேசியிருக்க வேண்டும் என சீமான் பேசி காட்டியது குறிப்பிடத்தக்கது. “விஜய்யின் இதயத்தில் வலியோ, காயமோ இல்லை என்பது தெரிகிறது” - சீமான் | seeman slams tvk leader vijay - hindutamil.in

“கரூர் சம்பவத்தில் விஜய் மீது வழக்குப் பதிவு செய்ய தமிழக அரசு அஞ்சுகிறதா?” - திருமாவளவன்

1 week 3 days ago
சென்னை: தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மீது வழக்குப் பதிவு செய்த காவல்துறை, விஜய் மீது ஏன் வழக்குப் பதிவு செய்யவில்லை என விசிக தலைவர் திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது கூறியது: “தவெக தலைவர் விஜய் மீது வழக்குப் பதிவு செய்ய தமிழக அரசு, காவல் துறை அஞ்சுகிறதா? தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மீது வழக்குப் பதிவு செய்த காவல் துறை, விஜய் மீது ஏன் வழக்குப் பதிவு செய்யவில்லை எனக் கூற வேண்டும். இருவரும் ஒரே கட்சியை சேர்ந்தவர்கள். இருவருக்கும் வேறு வேறு நீதியா? விஜய் மீது வழக்குப் பதிவு செய்யாததற்கு திமுக - தவெக இடையே மறைமுக டீலிங் உள்ளதா என கேள்வி எழுப்பலாமா? காவல் துறை இது போன்ற ஓர வஞ்சனையை நிறுத்திக் கொள்ள வேண்டும். விஜய் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டாம் என யார் அழுத்தம் கொடுத்தது. விஜய் கொள்கை எதிரியாக சொல்லும் பாஜகவே, அவரை காப்பாற்ற முயற்சிக்கிறது. கரூர் சம்பவம் நடந்து 3 நாட்கள் சும்மா இருந்துவிட்டு, ஆர்எஸ்எஸ் தலைமை கூறிய பிறகு ஒரு வீடியோவை வெளியிடுகிறார். விஜய்க்கு தனது தொண்டர்கள், ரசிகர்கள் மீது என்ன அக்கறை இருக்கிறது. இப்படி நடந்ததற்கு திமுக தான் காரணம், முதல்வர் தான் காரணம் எனக் கூறி பழிபோட பார்க்கிறார்கள். உங்களது, தொண்டர்கள் அளவு கடந்து ஒரு இடத்தில் கூடுகிறார்கள், ஒருத்தர் மேல் ஒருத்தர் ஏறி மிதித்து தானே இறந்தார்கள். யாராவது மயக்க மருந்து தெளித்தார்களா, கல் எறிந்தார்களா? இது குறித்த ஏதேனும் ஆதாரம் உள்ளதா? இந்த விஷயத்தில் ஆதாயம் தேடத்தான் விஜய் ஆவலாக இருக்கிறாரே தவிர, மக்களுக்கு ஆறுதல் சொல்ல அவர் ஆர்வமாக இல்லை. இவை எல்லாம் அவரது அணுகுமுறையில் வெளிப்படுகிறது. அண்ணா ஹசாரேவை பயன்படுத்தி ஆட்சிக்கு வந்ததைப் போல், தவெக தலைவர் விஜய்யை பாஜக பயன்படுத்துகிறது. நடிகர் ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிக்க வேண்டும் என ஆர்எஸ்எஸ்-ஐ சேர்ந்தவர்கள் தான் கட்டாயப்படுத்தினார்கள். இதை நாம் காலப்போக்கில் தெரிந்து கொண்டோம். அவர்களின் பிடியில் சிக்கிக் கொள்ளக் கூடாது என்று மிகவும் எச்சரிக்கையாக அவர், கட்சி தொடங்குவதை தவிர்த்து விட்டார். அவருக்கு பதவி, அதிகாரம் மீதெல்லாம் மோகம் இல்லை. ஆனால் விஜய்க்கு அதிகாரத்தின் மீதுதான் மோகம். அடுத்த முதல்வராக ஆட்சியில் உட்கார வேண்டும் என குறிவைத்து, திமுகவை கடுமையாக சாடி வருகிறார். விஜய் கருத்தியல் சார்ந்து எதுவுமே பேசவில்லை. தமிழகத்துக்கு என்ன செய்யப் போகிறார் என்பதை அவர் கூறவில்லை. திமுவை தான் மாறி மாறி விமர்சிக்கிறார். இதுபோன்ற பல நபர்களை ஆர்எஸ்எஸ் இறக்கி விட்டிருக்கிறது. ஆர்எஸ்எஸ் அமைப்பின் பின்னணியில் இயங்கும் விஜய்யின் அரசியல் தமிழ்நாட்டில் எடுபடாது” என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார். “கரூர் சம்பவத்தில் விஜய் மீது வழக்குப் பதிவு செய்ய தமிழக அரசு அஞ்சுகிறதா?” - திருமாவளவன் | Thirumavalavan slams dmk and vijay over karur incident - hindutamil.in

சுற்றுலாவை மேம்படுத்த பருத்தித்துறை முனையில் படகுச் சவாரிக்கு ஏற்பாடு!

1 week 3 days ago
யாழ்ப்பாணம் 53 நிமிடம் நேரம் முன் சுற்றுலாவை மேம்படுத்த பருத்தித்துறை முனையில் படகுச் சவாரிக்கு ஏற்பாடு! வடமராட்சி பருத்தித்துறை முனை கடற்கரைப் பகுதியில் சுற்றுலாவை மேம்படுத்தும் நோக்கில் படகுச் சவாரிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தனியார் நிறுவனம் ஒன்றால், மூன்று மில்லியன் ரூபா நிதியில் இந்தத் திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மிகக் குறைந்த கட்டணத்தில் சாதாரண மக்களும் பயன்படுத்தக் கூடிய வகையில் இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, அதனை ஏற்பாடு செய்த பருத்தித்துறை நகர பிதா வின்சன் டீ போல் டக்ளஸ் போல் தெரிவித்துள்ளார். சுற்றுலாவை மேம்படுத்த பருத்தித்துறை முனையில் படகுச் சவாரிக்கு ஏற்பாடு!

மன்னார் காற்றாலை மின் திட்டத்தைத் தொடரக் கோரி போராட்டம்!

1 week 3 days ago
02 Oct, 2025 | 04:51 PM மன்னார் காற்றாலை மின் திட்டத்தைத் தொடரக் கோரியும், மக்களுக்கு ஏற்படும் நன்மைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துமாறும் மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு அருகில் இன்று வியாழக்கிழமை (02) காலை 11.00 மணிக்கு அமைதியான போராட்டம் நடைபெற்றது. ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்குமாறு கோரி மன்னார் மாவட்டச் செயலாளரிடம் போராட்டத்தின் கோரிக்கைகள் அடங்கிய கடிதமும் வழங்கப்பட்டது. காற்றாலை மின் திட்டத்தை நிறுத்தக் கோரி போராட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில், மற்றொரு குழுவினர் இந்தத் திட்டங்களை நிறைவேற்றுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தனர். மேலும், இந்த நேரத்தில் இரு தரப்பினருக்கும் இடையே ஒரு சிறிய மோதல் ஏற்பட்டது. ஆனால் காவல்துறையினர் அதைச் கட்டுப்படுத்தியுள்ளனர். மேலும், இந்தத் திட்டங்களைச் செயல்படுத்தக் கோரி மன்னார் நகரம் முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. மன்னார் காற்றாலை மின் திட்டத்தைத் தொடரக் கோரி போராட்டம்! | Virakesari.lk

புனரமைப்பு பணிகளினால் எதிர்வரும் நாட்களில் யாழ்.தேவி ரயில் தாமதமாக இயக்கப்படும்

1 week 3 days ago
02 Oct, 2025 | 06:51 PM வடக்கு ரயில் பாதையில் வவுனியா மற்றும் ஓமந்தை இடையேயான ரயில் பிரிவில் மேற்கொள்ளப்படும் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக யாழ்தேவி ரயில் தாமதமாக இயக்கப்படும் என ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. அதற்கமைய, எதிர்வரும் 7 ஆம் திகதி முதல் 18 ஆம் திகதி வரை ரயில் தாமதமாக இயக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாக, கொழும்பு கோட்டையிலிருந்து காங்கேசன்துறைக்கு இயக்கப்படும் யாழ்தேவி கடுகதி ரயில் கொழும்பு கோட்டையிலிருந்து திட்டமிட்ட நேரத்தில் (காலை 06.40) பயணத்தை ஆரம்பித்து, வவுனியா (வவுனியாவில் முற்பகல் 11.35) வரை உரிய நேரத்தில் இயக்கப்பட்டு வவுனியா ரயில் நிலையத்தில் 02 மணி நேரம் 40 நிமிடங்கள் நிறுத்தப்பட்டு பின்னர், வவுனியா ரயில் நிலையத்தில் இருந்து பிற்பகல் 02.15க்கு காங்கேசன்துறை நோக்கி இயக்கப்படும். அத்துடன் காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு கோட்டைக்கு இயக்கப்படும் யாழ்தேவி கடுகதி ரயில், காங்கேசன்துறை ரயில் நிலையத்திலிருந்து 30 நிமிடங்கள் தாமதமாகி முற்பகல் 11.00 மணிக்கு பயணத்தை ஆரம்பிக்கும். கொழும்பு கோட்டையிலிருந்து காங்கேசன்துறை நோக்கி பயணிக்கும் யாழ்தேவி கடுகதி ரயில் (இலக்கம் 4077 ரயில்) வவுனியாவிற்கு அப்பால் காங்கேசன்துறை வரை முன்பதிவு செய்த பயணிகளுக்கு, வவுனியா ரயில் நிலையத்தில் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக ரயில் நிறுத்தப்பட்டு பயணிப்பதால், தாம் முன்பதிவு செய்த பயணச்சீட்டை இரத்து செய்ய வேண்டுமானால் பயணச்சீட்டை இரத்து செய்து முழு தொகையையும் மீளப்பெறும் வசதி, முன்பதிவு செய்யும் வசதியுள்ள ரயில் நிலையங்கள் ஊடாக மேற்கொள்ள முடியும் என ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. புனரமைப்பு பணிகளினால் எதிர்வரும் நாட்களில் யாழ்.தேவி ரயில் தாமதமாக இயக்கப்படும் | Virakesari.lk

புற்று நோயால் பாதிக்கப்பட்டவரின் திருட்டுப்போன பசுமாடுகளில் ஒன்று இறைச்சிக்கு வெட்டி நிலையில் காத்தான்குடியில் தலை மீட்பு; இருவர் கைது இரு மாடுகள் மீட்பு

1 week 3 days ago
02 Oct, 2025 | 07:56 PM மட்டக்களப்பில் புற்று நோயால் பாதிக்கப்பட்ட ஒருவரின் வாழ்வாதாரத்துக்காக வளர்த்து வந்த 3 பசு மாடுகளைத் திருடிச் சென்று அதில் 3 இலட்சம் ரூபா பெறுமதியான ஒரு பசு மாட்டை வெட்டி இறைச்சியாக்கி சம்பவம் தொடர்பாக காத்தான்குடியைச் சேர்ந்த இறைச்சி கடை உரிமையாளர் மற்றும் பசுவை திருடிச் சென்று விற்பனை செய்த அதே பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் உட்பட இருவரை புதன்கிழமை (1) இரவு கைது செய்ததுடன் இரு மாடுகளை உயிருடன் மீட்டுள்ளதாகவும் கடந்த மாதத்தில் 25 மாடுகள் காணாமல் போயுள்ளதாக கரடியனாறு பொலிசார் தெரிவித்தனர். இதுபற்றி தெரியவருவதாவது. கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள உறுகாமம் பிரதேசத்தைச் சேர்ந்த புற்று நோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் தனது வாழ்வாதாரத்துக்காக உறுகாமத்தில் உள்ள தோட்டம் ஒன்றில் 3 பசுமாடுகளை கட்டி வளர்த்து வருகின்றார் இதில் இறைச்சிக்காக வெட்டிய கன்று குட்டி ஒன்றின் தாயான பசுமாட்டிலிருந்து தினமும் காலையில் 15 லீற்றர் மாலையில் 15 லீற்றர் பாலை கறந்து விற்பனை செய்து வருகிறார். இந்த நிலையில் கடந்த (28) ஞாயிற்றுக்கிழமை இரவு தோட்டத்தில் அமைந்துள்ள குடிசையில் நித்திரை செய்துவிட்டு அடுத்த நாள் காலையில் எழுந்து பார்த்த போது கட்டியிருந்த 3 மாடுகளும் திருட்டுப் போய் உள்ளதை கண்டு கரடியனாறு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். இதையடுத்து காத்தான்குடியில் உள்ள மாடு வெட்டும் மடுவத்தில் திருடிச் சென்ற பசு மாட்டை இறைச்சிக்காக வெட்டிய வருவதாக மாட்டின் உரிமையாளருக்கு தகவல் ஒன்று கிடைத்ததை அடுத்து சம்பவ தினமான புதன்கிழமை (1) இரவு மாட்டின் உரிமையாளர் காத்தான்குடி பொலிசாருடன் மாடு வெட்டும் மட்டத்தை சுற்றிவளைத்த போது அங்கு திருடு; போன பசு மாடு இறைச்சிக்காக பொது சுகாதார பரிசோதகரின் அனுமதியுடன் வெட்டி இறைச்சியாக்கப்பட்டை கண்டுபிடித்ததுடன் வெட்டிய பசு மாட்டின் தலையை மீட்டதுடன் இரு மாடுகளையும் உயிருடன் மீட்டனர். இதனை தொடர்ந்து இறைச்சி கடை முதலாளியை கைது செய்து விசாரணையில் அவர் அந்த பகுதி இளைஞர் ஒருவர் தனது மாடுகள் என தனக்கு பணத்திற்கு விற்பனை செய்ததாகவும் அவரிடம் இருந்து அதற்கான கடிதத்தை எழுத்து மூலம் பெற்று அதற்கான பணத்தை வழங்கியுள்ளதாக பொலிசாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதையடுத்து திருடிய மாடுகளை விற்பனை செய்த அந்த பகுதியை சேர்ந்த இளைஞனை கைது செய்தனர். இவ்வாறு கைது செய்யப்பட்ட இருவரையும் திருடய மாடுகள் மற்றும் வெட்டப்பட்ட மாட்டின் தலை உட்பட்ட சான்று பொருட்களுடன் அவர்களை கரடியனாறு பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர். இதனை தொடர்ந்து இது தொடர்பான விசாரணைகளை கரடியனாறு பொலிசார் மேற்கொண்டு வருவதுடன் கைது செய்யப்பட்ட இருவரையம் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை முன்னெடுத்து வருவதாகவும் பொலிசார் தெரிவித்தனர். இதேவேளை கரடியனாறு பொலிஸ் பிரிவில் கடந்த மாதம் மட்டும் 25 மாடுகள் காணாமல் போயுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு கிடைத்துள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர். புற்று நோயால் பாதிக்கப்பட்டவரின் திருட்டுப்போன பசுமாடுகளில் ஒன்று இறைச்சிக்கு வெட்டி நிலையில் காத்தான்குடியில் தலை மீட்பு; இருவர் கைது இரு மாடுகள் மீட்பு | Virakesari.lk

காணொளியில் இருந்த நபர் எனது தந்தை அல்ல ; அருணவிதான கமகே எனும் “கஜ்ஜாவின் மகன்

1 week 3 days ago
02 Oct, 2025 | 05:41 PM (செ.சுபதர்ஷனி) 2012 ஆம் ஆண்டு உயிரிழந்ததாக கூறப்படும் ரக்பி வீரரின் மரணத்துடன் என் தந்தைக்கு எந்த தொடர்பும் இல்லை. எனது தந்தைக்காகவே நான் பேசுகிறேன். அரசியல்வாதிக்காகவோ எந்த ஒரு கட்சிக்காகவோ நான் பேச வரவில்லை. குற்றப்புலனாய்வு பிரிவு அதிகாரிகள் காண்பித்த சிசிரிவி காணொளியில் இருந்த நபர் எனது தந்தை என என்னால் கூற முடியாது. அவரது அங்க அடையாளங்களை வைத்து பார்க்கும் போது அது எனது தந்தை அல்ல. எனது தந்தை ஒரு காலமும் மது அருந்தவோ சிகரெட் பிடிக்கவோ மாட்டார். அவரிடம் அவ்வாறான பழக்கம் இல்லை. எனினும் குறித்த காணொளி இருந்த நபர் கையில் மது போதலுடன் இருந்தார் என என பாதாள உலககுழுவை சேர்ந்தவர் என அறியப்படும் அருண ஷாந்த விதானகமகே எனும் “கஜ்ஜாவின் மகன் விதான கமகே இந்துவர அமேஷ மாதேவ தெரிவித்தார். மொஹம்மட் வசீம் தாஜுதீனின் கொலை வழக்குடன் மித்தெனியவில் சுட்டு படுகொலை செய்யப்பட்ட அருணவிதான கமகே எனும் “கஜ்ஜாவுக்கு தொடர்பிருந்தமை உறுதி செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு கடந்த செவ்வாய்கிழமை தெரிவித்திருந்தது. இந்நிலையில் இவ்விடயம் தொடர்பில் புதன்கிழமை (1) கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில், குறித்த ரக்பி வீரர் உயிரிழந்த போது அதாவது 2012 ஆம் ஆண்டு எனது தந்தை ஹொரணை- கொழும்பு 120 பஸ் வீதியில் பேருந்து உதவியாளராக பணிபுரிந்தார். அப்போது எனக்கு மூன்று வயது மாத்திரமே எனினும் எனது உறவினர்கள் எனது தந்தையின் சகோதரர்கள் நண்பர்கள் ஆகியோர் அவர் பேருந்து உதவியாளராக பணியாற்றி இருந்தது எனக்கு தெரிவித்திருந்தனர். அது எனக்கும் நன்றாக தெரிந்த விடயமே. அண்மையில் குற்றப்புலனாய்வு பிரிவு அதிகாரிகள் சிசிடிவி காணொளி ஒன்றை காண்பித்து அதில் இருக்கும் நபர் உங்களது தந்தையா? என கேட்டனர். அதற்கு காணொளியில் இருக்கும் நபர் எனது தந்தை என என்னால் கூற முடியாது. அவரது அங்க அடையாளங்களை வைத்து பார்க்கும் போது அது எனது தந்தை அல்ல. எனது தந்தை ஒரு காலமும் மது அருந்தவோ சிகரெட் பிடிக்கவோ மாட்டார். அவரிடம் அவ்வாறான பழக்கம் இல்லை. எனினும் குறித்த காணொளி இருந்த நபர் கையில் மது போதலுடன் இருந்தார். தந்தைக்கு முதுகு வலி இருப்பதாக எனது அம்மா அதிகாரிகளிடம் தெரிவித்திருந்தார். எனது தந்தைக்கு முதுகு வலி இருந்தது உண்மைதான் எனினும் 2016 ஆம் ஆண்டு இடம்பெற்ற பேருந்து விபத்து ஒன்றில் சிக்கி காயமடைந்தார். முள்ளந்தண்டு பகுதியில் ஏற்பட்ட தாக்கத்தினால் பின்னர் முதுகு வலி ஏற்பட்டது. சூது, கப்பம் கொருதல் உள்ளிட்ட குற்ற செயல்களில் தந்தை ஈடுபட்டுள்ளார். அவ்வாறு பெரும் பணத்தையும் ஏழை குடும்பங்களுக்கு செலவழித்துள்ளார். எவ்வாறாயினும் எனது தந்தை செய்தது தவறு என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன். தந்தை உயிரிழந்த போது அம்மா டுபாயில் இருந்தார். அம்மாவுக்கும், தந்தை பணியாற்றி வந்த பேருந்து சாரதிக்கும் இடையில் தகாத உறவு இருந்தது. அது எனக்கும் தெரியும் பின் தந்தைக்கும் தெரியவர பிரச்சனையாக மாறியது. ஒரு நாள் கையும் களவுமாக பிடிபட்ட இருவரையும் தந்தை தாக்கினார். சம்பத் ராமநாயக்க எனும் குறித்த பேருந்து சாரதியை இனிமேல் இந்த ஊரில் இருக்க வேண்டாம். இருந்தால் கொலை செய்வதாக எச்சரித்தார். துப்பாக்கி வைத்திருந்த குற்றச்சாட்டில் எனது தந்தை கைது செய்யப்பட்ட ஐந்தரை மாதங்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார். நானே அவரை பிணையில் வெளியே எடுத்தேன். எனினும் பொலிஸார் கூறியது போல எனது தந்தையிடமிருந்து துப்பாக்கி அல்ல 4 “வாக்கிடாக்கிகள்” மாத்திரமே கைப்பற்றப்பட்டன. இதற்கிடையில் தந்தையின் காணி ஒன்றை விற்று அதில் கிடைத்த பணத்தை கொண்டு அம்மா வெளிநாட்டுக்குச் சென்றார். விளக்கமறியலில் இருந்து வெளியே வந்த தந்தை பின்னர் அம்மாவை தேடினார். அதன் பின்னரே அவர் தனது இரண்டாவது கணவருடன் டுபாயில் இருப்பது தெரியவந்தது. தந்தையின் முன்விரோதியான ஜே.சி.பி . சமன் (பெக்கோ சமான்) என்பவரும் அதன் பின்னர் தந்தையுடன் பேச ஆரம்பித்தார். ஏதேனும் உள்நோக்கத்திற்காக பேச ஆரம்பித்தாரா என்பது எனக்கு தெரியாது. சம்பத் ராமநாயக்க சாரதியாக இந்த பஸ்ஸின் உரிமையாளரே ஜே.சி.பி சமன் . தந்தை உயிரிழந்தமை தொடர்பில் அம்மாவுக்கு தெரியப்படுத்தினோம் எனினும் தங்கை மற்றும் தம்பி ஆகியோர் உயிரிழந்த விடயத்தை அவரிடம் தெரிவிக்கவில்லை. அன்றைய தினமே அம்மா வெளிநாட்டில் இருந்து நாட்டிற்கு வந்திருந்தார். தந்தை இறந்து இரண்டு அல்லது மூன்று மணித்தியாலங்களுக்குள் ஜே.சி.பி . சமன் எனும் குறித்த நபர் சுமார் இரண்டரை இலட்சம் ரூபா பணத்தை அம்மாவின் வங்கி கணக்கில் வைப்பிட்டார். அதன் பின்னர் என்னை தொடர்பு கொண்டு அவ்விடயத்தை தெரிவித்திருந்தார். அம்மாவிடம் இதை கேட்ட போது அவரை இல்லை என அதற்கு மறுப்பு தெரிவித்தார். பின்னரே அதை ஏற்றுக்கொண்டார். எவராயினும் எனது தந்தையின் மரணத்துடன் எனது தாய்க்கும் ஜே.சி.பி சமன் என குறிப்பிடப்படும் நபருக்கும் தொடர்புள்ளது. பல வருடங்களாக தந்தையுடன் முரண்பட்டு கொண்டிருந்த நபர் திடீரென அவருடன் பழக ஆரம்பித்தது எப்படி? என தாயிடம் கேட்டபோது அவர் தனக்கு அதைப் பற்றி தெரியாது . எனது முதல் கனவனையும் பிள்ளைகளையும் கொலை செய்ய வேண்டிய எந்த அவசியமும் எனக்கு இல்லை என்றார். தந்தை இறந்து தற்போது 7 மாதங்கள் கடந்து விட்டன. தாய் மற்றும் தந்தையின் குடும்பத்தினரே எனக்கான செலவுகள் அனைத்தையும் கவனித்துக் கொள்கிறார்கள். தாய் என்னை பராமரிப்பதோ என்னுடன் பேசுவதோ இல்லை. குற்றப்புலனாய்வு பிரிவில் காணொளியை காண்பித்து விசாரணை நடத்திய போது நானும் அங்கிருந்தேன். இருவரிடமும் வெவ்வேறாக விசாரணை செய்தனர். ஆரம்பத்தில் அது தந்தை அல்ல என மறுத்த அவர் தனி அறையில் வைத்து விசாரணை நடத்தியதன் பின்னர் அது தந்தை எனக் குறிப்பிட்டுள்ளார். அவர்கள் உள்ள என்ன பேசிக் கொண்டார்கள் என்பது எனக்கு தெரியாது. தந்தையின் மரணத்தின் போது வீட்டிற்கு வந்திருந்த அம்மா எனக்கு தேவையானவரை அல்ல விட்டு வைத்துள்ளீர்கள் இவனை எப்படி நான் பார்த்துக்கொள்வது என தொலைபேசியில் உரையாடியுள்ளார். இதை அங்கிருந்த எனது உறவினர்களும் நன்கு அறிவார்கள். எனது தாய்க்கு என்னையும் எனது தந்தையையும் கொலை செய்ய வேண்டும் என்றே திட்டமிருந்தது. அவரின் உறவுக்கு நாங்கள் இருவருமே தடையாக இருந்தோம் ஆகையால் எம்மை இல்லாமல் ஆக்கவே எண்ணினார். தந்தையின் மரணத்திற்கு நீதி வேண்டும். அவர் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்த வேண்டாம். தந்தையின் மரணத்துக்கு காரணமான எனது அம்மாவையும் சமன் ரத்நாயக்க எனும் நபரையும் கைது செய்து விசாரணை மேற்கொள்ளுமாறு பொலிஸாரிடம் கோரிக்கை விடுக்கிறேன். மனித படுகொலை போன்ற பாரிய குற்றச்செயலில் எனது தந்தை ஈடுபடவில்லை என்பதை என்னால் உறுதியாக கூற முடியும் என்றார். காணொளியில் இருந்த நபர் எனது தந்தை அல்ல ; அருணவிதான கமகே எனும் “கஜ்ஜாவின் மகன் | Virakesari.lk

யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025

1 week 3 days ago
வங்காளதேசத்திலும் பெண்கள் கிரிக்கெட் விளையாடுகின்றார்கள் என்று எனக்கு முன்னரே ஒருவரும் சொல்லவில்லை..................... ஏதோ எட்டாவது அணியாக உள்ளே பிடித்துப் போட்டிருக்கின்றார்கள் என்று நான் நினைத்துவிட்டேன்....................😜. 'இன்று கறுப்பு பிட்சில் வெள்ளைப் பந்து போட்டார்கள்................' என்று கலர் கலராக காமெண்ட்ரி சொல்லும் வசீயின் காமெண்ட்ரி மிஸ்ஸிங்..............❤️.

திருமண உறவில் குறுக்கிடும் 3ஆம் நபரிடம் நஷ்டஈடு கோரலாம்!

1 week 3 days ago
வி.ஜி.பி. கோவிந்தசாமி: கோல்டன் ஏரி மின்சாரம் என்ற பெயரில் பிலிம் ஸ்டுடியோவை உருவாக்கியவர், மற்றும் கோடீஸ்வரர் ஆனார். ராஜாதி ராஜா: கோடீஸ்வரர் ஆனார். சினிமா தொழில் நுட்பத்தில் கோடீஸ்வரர்கள்: ஆர்.ஆர். ரம்யா: பிரபல சினிமா இசையமைப்பாளர், தற்போதைய கோடீஸ்வரர். கலாநிதி மாறன் (Kalanithi Maran): சன் குழுமத்தின் தலைவர், வெற்றிகரமான சினிமா தயாரிப்பாளர், மேலும் கோடீஸ்வரர் ஆனார். சினிமாத் துறை, பணம் சம்பாதிக்க மற்றும் கோடீஸ்வரர் ஆக பல வாய்ப்புகளைத் தருகிறது. இதில் தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், நடிகர்கள், மற்றும் திரைக்கதை எழுத்தாளர்கள் போன்றோர் அடங்குவர்.

யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025

1 week 3 days ago
ஏராள‌ன் அண்ணான்ட‌ ஆத்தில‌ இண்டைக்கு அடை ம‌ழை😍 வாழ்த்துக்க‌ள் அண்ணா👍...............நீங்க‌ள் தெரிவு செய்த‌ அணி வெற்றிக்கு அருகில் வ‌ந்து விட்டின‌ம்....................... என்ன சொல்லுவேன் என் உள்ள‌ம் தாங்க‌ல‌ மெத்த‌ வாங்கினேன் தூக்க‌த்த‌ வாங்க‌ள‌ பெரிய‌ப்பு நான் மேல‌ விப‌ர‌மாய் தான் எழுதினான் இர‌ண்டு அணிக‌ளும் ச‌ம ப‌ல‌ம் உள்ள‌ அணிக‌ள் என😁👍................ பாக்கிஸ்தான் ம‌க‌ளிர் முத‌லாவ‌து ஓவ‌ரில் இர‌ண்டு விக்கேட்டை இழ‌ந்து விட்டினம் அத‌னால் ஓட்ட‌ம் 200 தான்ட‌ வில்லை......................

சர்வதேச புத்தக கண்காட்சியில் தமிழ் மொழிக்கு உரிய இடம் வழங்கப்படவில்லை - இலங்கை தமிழ் புத்தக பதிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கம் குற்றச்சாட்டு

1 week 3 days ago
கொழும்பில் நடைபெறும் சர்வதேச புத்தக கண்காட்சியில் தமிழ் மொழிக்கு உரிய இடம் அளிக்கப்படவில்லை என இலங்கை தமிழ் புத்தக பதிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது. இது தொடர்பில் இந்த அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கடந்த 26 ஆண்டுகளாக கொழும்பு புத்தகக் கண்காட்சி நடத்தப்பட்டுவருகிறது. இலங்கை புத்தக வெளியீட்டாளர் சங்கத்தினால் நடத்தப்படும் இக் கண்காட்சியில் சிங்கள மொழி நூல்களுக்கே அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டு வருகிறது. அத்துடன் தமிழ் மொழி படைப்பாளர்கள், தமிழ் பதிப்பாளர்கள், தமிழ் நுகர்வோர் பல்லாண்டுகளாக பெரும் பாரபட்சங்களுக்கு உள்ளாகி வருகிறார்கள் என்பதை வருத்தத்துடன் வெளிப்படுத்த வேண்டியிருக்கிறது. அத்துடன் இவ்வாறான புத்தக கண்காட்சிகளில் தமிழ் பேசும், சிங்களம் பேசும் கலைஞர்களுக்கிடையிலான பிணைப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. துரதிர்ஷ்டவசமாக தமிழ் படைப்பாளர்கள் போதியளவு புத்தகக் கடைகள் இல்லாததால் கலந்துகொள்வதில்லை. கடந்த 26 ஆண்டுகளாகத் தொடரும் இந்த சிக்கல் இனிமேலும் தொடராமல் இருப்பதற்காகவே இந்த வேண்டுகோளை விடுக்கிறோம். இத்தனைகால இந்த நிகழ்வு இலங்கையின் பண்பாட்டு ஒன்றுகூடலாகவும், பண்பாட்டுப் பரிவர்த்தனைக்குமான களமாக ஆக்கப்பட்டிருக்க வேண்டும். சிங்கள மொழியில் வருடாந்தம் சுமார் 8000 நூல்கள் வெளியாகின்றன. தமிழில் 500க்கும் குறைவான நூல்களே வெளியாகி வருகின்றன. இலங்கைத் தீவில் தமிழ் நூல்களுக்கான சந்தை மிகச் சிறியது. அதுமட்டுமன்றி இங்கு வெளியாகும் நூல்கள் பல 300 பிரதிகள் மாத்திரமே பதிக்கப்படும் நிலையே தொடர்கிறது. இலங்கை புத்தக வெளியீட்டாளர் சங்கம் (SLBPA)ஆரம்பிக்கப்பட்டு 40 ஆண்டுகளை நெருங்கப் போகிறது. ஆனால் இதுவரை தமிழ் பதிப்பாளர்களை இணைத்துக்கொள்ள போதிய அக்கறை எடுத்துக்கொண்டதில்லை. இன்று 160 பதிப்பாளர்களை அங்கத்தவர்களாகக் கொண்டிருக்கும் இச்சங்கத்தில் ஓரிரு தமிழ் பதிப்பாளர்களே உள்ளனர். அதன் தலைமை இயக்குனர் சபையில் இருக்கும் எழுவரிலோ மேலதிக இயக்குனர்களாக இருக்கிற பதினோரு பேரிலோ அல்லது ஆறு பேரைக் கொண்ட ஆலோசனைக் குழுவிலோ ஒருவர் கூட தமிழ் பேசும் சமூகங்களைச் சேர்ந்தவர்கள் இல்லை. இச்சங்கத்தின் இணையத்தளமும் அதன் பதிப்புகளும் கூட ஆங்கிலத்திலும் சிங்களத்திலும் மட்டுமே உள்ளன. ஏற்பாட்டாளர்களில் தமிழ் பேசும் தமிழ், முஸ்லிம் சமூகங்களைச் சேர்ந்தவர்கள் பிரதிநிதித்துவப்பட்டிருந்தால் குறைந்த பட்சம் அவர்களின் குரல்கள் அங்கே ஒலித்திருக்கும். குறைகள் அடையாளம் காணப்பட்டு நிவர்த்தி செய்யப்பட்டிருக்கக் கூடும். எனவே தமிழ் பதிப்புப் பரப்பில் ஏற்படுகிற பிரச்சினைகளை வெளியில் கொணர ஒரு அமைப்பாக இந்த சங்கத்தின் மூலம் ஒன்றும் செய்ய முடியாத நிலை தொடர்கிறது. குறைந்தபட்சம் SLBPA தாம் நடத்தும் சர்வதேச புத்தகக் கண்காட்சியையாவது பாரபட்சமின்றி நடத்தினால் நலிவடைந்திருக்கிற தமிழ் பதிப்பாளர்களுக்கு சிறிய ஆறுதலாவது கிடைக்கும். இதேவேளை இந்த விவகாரம் தொடர்பில் பின்வரும் கோரிக்கைகளை முன்வைக்க விரும்புகிறோம். •தமிழ் பதிப்பாளர்கள் உறுப்பினர்களாக உள்வாங்கப் படவேண்டும்! * புத்தக் கண்காட்சியில் உரிய கடைகளை பெறுவதிலிருந்து, உரிய இடங்களை ஒதுக்குவது, வெளியீட்டு, பேச்சு போன்றவற்றுக்கான மேடைகளைப் பெறுவது, தமிழ் அறிவிப்புகள், விளம்பரங்கள், வசதிகள் என எல்லாவற்றிலும் இருக்கும் பாரபட்சம் அகற்றப்படவேண்டும். இப்போது ஒரு வீத தமிழ் கடைகள் கூட கண்காட்சியில் கிடையாது. * தமிழ் வாசகர்களும் பயனடையக் கூடிய வகையில் தமிழிலும் வழிகாட்டல், விளம்பர பதாகைகள் அமையவேண்டும். * மிகப் பெரிய பதிப்பாளர்களுக்கு மட்டுமே வரையறுக்கப்பட்டிருக்கிற அனுமதி மாற்றப்படவேண்டும். பதிலாக சிறு கடைக்காரர்களுக்கான வாய்ப்பு வழங்கப்பட்டு அவர்களுக்கான குறைந்த கட்டண அறவிடும் முறை கொணரப்படவேண்டும். சிங்கள பதிப்பகங்களுக்கு நிகரான வளர்ச்சியடைந்த பதிப்பாளர்களும்,விநியோகஸ்தர்களும் தமிழ்ச் சூழலில் இல்லை என்பதை கருத்திற் கொள்ளவேண்டும். * தமிழ் பேசும் மக்கள் தமது தேவையை அங்கு பெறக்கூடிய வகையில் அங்கே உதவக்கூடிய தமிழ் ஊழியர்களும் அங்கே போதிய அளவு பணிக்கமர்த்தப்படல் வேண்டும். * இலங்கைப் பதிப்பாளர்கள் சங்கம் என்கிற பெயரை உடைய ஒரு சங்கம் சிங்களம், தமிழ் ஆகிய இருமொழிச் சமூகங்களுக்கும் சமத்துவமான முறையில் இயங்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். அதை ஒரு சிங்கள சங்கமாக வெளியில் உணரப்படும் நிலையை இச்சங்கத்தால் மாற்ற முடியும் என்று நம்புகிறோம். * இன்றும் தமிழ் பதிப்பாளர்கள் இலங்கையில் எதிர்நோக்கி வருகிற விசேடமான பிரச்சினைகளுக்கு குரல் கொடுப்பதற்கான ஒரு அமைப்பும் இலங்கையில் கிடையாது. இனியாவது இவை மாற வேண்டும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச புத்தக கண்காட்சியில் தமிழ் மொழிக்கு உரிய இடம் வழங்கப்படவில்லை - இலங்கை தமிழ் புத்தக பதிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கம் குற்றச்சாட்டு | Virakesari.lk

செம்மணி மனிதப் புதைகுழி: நீதியமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு

1 week 3 days ago
செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வாய்வுப் பணிகளுக்காகக் கோரப்பட்ட நிதி அங்கீகரிக்கப்படவில்லை! - பணிகள் முடக்கம் 02 Oct, 2025 | 05:26 PM சிறுவர்களது எலும்புக்கூடுகள் உட்பட 240 மனித எலும்புக்கூடுகள் கண்டறியப்பட்டுள்ள, இலங்கையில் இரண்டாவது பெரிய மனித புதைகுழியில் மேலும் இரண்டு மாதங்களுக்கு அகழ்வாய்வுகளை மேற்கொள்வதற்காக கோரப்பட்ட நிதி அங்கீகரிக்கப்படாததால் பணிகள் முடங்கியுள்ளன. கோரப்பட்ட நிதி இன்னும் நீதி அமைச்சினால் அங்கீகரிக்கப்படவில்லை என யாழ்ப்பாணம் செம்மணி சித்துப்பாத்தி இந்து மயான மனித புதைகுழி தொடர்பான வழக்கு நேற்றைய தினம் (01) யாழ்ப்பாண நீதவான் செல்வநாயகம் லெனின்குமார் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதன் பின்னர், பாதிக்கப்பட்டவர்களின் சார்பாக முன்னிலையான சட்டத்தரணி கே. சுபாகர் ஊடகங்களுக்கு இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், "அகழ்வாய்வு பணிக்கான பாதீடு அமைச்சிற்கு அனுப்பப்பட்டு ஒப்புதல் கோரப்பட்டது. எனினும், பாதீடு இன்னும் அங்கீகரிக்கப்படாமையால் வழக்கு ஒக்டோபர் 13ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது." எட்டு வார காலத்திற்கு அகழ்வாய்வுப் பணிக்காக தயாரிக்கப்பட்ட நிதி மதிப்பீடு, யாழ்ப்பாண சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவனால் செப்டெம்பர் 18, 2025 அன்று நீதவான் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. அந்த மதிப்பீட்டில் கோரப்பட்ட நிதியின் அளவு இன்னும் ஊடகங்களுக்கு வெளியிடப்படவில்லை. தற்போதைய அகழ்வாய்வுப் பகுதிக்கு வெளியே மனித எலும்புகள் இன்னும் இருக்கலாம் என்பதற்கான புவியியல் ஆய்வின் மூலம் சான்றுகள் தெரியவந்துள்ளதால், அகழ்வாய்வுப் பணியைத் தொடர எட்டு வார கால நீட்டிப்பு கோரப்பட்டுள்ளதாக, ஒகஸ்ட் 14ஆம் திகதி யாழ்ப்பாணம் நீதவானிடம் சட்ட வைத்திய அதிகாரி சமர்ப்பித்த அறிக்கையை மேற்கோள் காட்டி, உள்ளூர் ஊடகவியலாளர்கள் குறிப்பிடுகின்றனர். சட்ட வைத்திய அதிகாரியின் கோரிக்கை முன்வைக்கப்பட்டு இரண்டு வாரங்களின் பின்னர், செம்மணிப் புதைகுழி தொடர்பான விசாரணைகள் தடைபடாமல் இருக்க நிதி உதவியை வழங்குமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அரசாங்கத்திற்கு பரிந்துரைத்திருந்தது. "நிதி தாமதமின்றி கிடைப்பதை உறுதி செய்வதற்காக, பாதீட்டு கோரிக்கைகளை விரைவாக செயல்படுத்தவும், நிதி ஒதுக்கீடுகள் மற்றும் வழங்கல்களை விரைவாக செயல்படுத்தவும், காணாமல் போனோர் அலுவலகம் உட்பட செம்மணிப் புதைகுழி விசாரணையில் ஈடுபட்டுள்ள அனைத்து அரச அதிகாரிகளுடனும் நெருக்கமாகப் பணியாற்றவும் நீதி அமைச்சின் ஒரு மத்திய அதிகாரி நியமிக்கப்பட வேண்டும்" என ஆணைக்குழு ஒரு அறிக்கையில் கூறியிருந்தது. அந்த பரிந்துரைகள் செயற்படுத்தப்பட்டதா என்பது தெரியவில்லை. முன்னர் அங்கீகரிக்கப்பட்ட நிதியுடன் 45 நாட்கள் நடத்தப்பட்ட இரண்டாம் கட்ட அகழ்வாய்வு, செப்டெம்பர் 6, 2025 அன்று பிற்பகல் நிறைவடைந்த நேரத்தில், 240 மனித எலும்புக்கூடுகளில் ஒன்றைத் தவிர ஏனைய அனைத்தும் புதைகுழியிலிருந்து அகழ்ந்து எடுக்கப்பட்டிருந்தன. மனித எலும்புகளுடன், செம்மணி புதைகுழியில் இருந்து இதுவரை மீட்கப்பட்ட பிற பொருட்களில் குழந்தை பால் போத்தல், பொம்மை, சிறுவர் காலணிகள் மற்றும் பாடசாலை பைகள் ஆகியவை உள்ளடங்கும். பெப்ரவரி 11, 2025 அன்று மயானத்தில் கட்டுமானப் பணிகளை மேற்கொண்டிருந்தபோது, தற்செயலாக பல மனித எலும்புகள் கண்டெடுக்கப்பட்டன. எலும்புத் துண்டுகளை பரிசோதிப்பதற்காக யாழ்ப்பாண சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவனுடன் வருகைதந்த அப்போதைய நீதிபதி ஏ.ஏ. ஆனந்தராஜா, அவை மனித எச்சங்களா என்பது குறித்து விசாரணை நடத்துவதற்காக சட்ட வைத்திய அதிகாரியிடம் ஒப்படைக்க பெப்ரவரி 20 அன்று பொலிஸாருக்கு உத்தரவிட்டார். நீதிமன்ற உத்தரவிற்கு அமைய, தடயவியல் தொல்பொருள் ஆய்வாளர் பேராசிரியர் ராஜ் சோமதேவ மற்றும் யாழ்ப்பாண சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவன் ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ், மே 15, 2025 அன்று செம்மணி சித்துப்பாத்தி மயானத்தில் அகழ்வாய்வுப் பணிகள் ஆரம்பமாகின. செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வாய்வுப் பணிகளுக்காகக் கோரப்பட்ட நிதி அங்கீகரிக்கப்படவில்லை! - பணிகள் முடக்கம் | Virakesari.lk
Checked
Mon, 10/13/2025 - 09:07
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed