1 week 3 days ago
சீமான் அமைதியாக பேசுகின்றார்.உண்மை நிலை பற்றி பேசுகின்றார்.
1 week 3 days ago
மிகச் சரியான நடவடிக்கை. உண்மை எல்லோருக்கும் தெரியும். வெளிக் கொண்டு வரட்டும்.
1 week 3 days ago
நன்றி அண்ணா🙏👍..................
1 week 3 days ago
நான் கொஞ்சம் வேறு விதமாக யோசிக்கிறேன். சீமான் - நாள் 1 முதலே அவரது வலது கரமான தூஷண துரை இந்த ரூட்டைத்தான் பிடித்தார். அவர் வாங்கிய துட்டு விசுவாசமாக பேசிவிட்டார். சீமான் - முதலில் விஜையை தலைய தடவி அதன் மூலம் குறித்த சதவீத வாக்குகளை அபேஸ் பண்ண முடியுமா என பார்த்தார். ஆனால் விஜை அவரை விட பெரிய இடத்தோடு சம்பந்தம் பேச, டியூனை மாற்றுகிறார் அல்லது வாங்கிய பெட்டிக்கு விசுவாசமாக இரு - இல்லை என்றால் விஜைக்கு கரூர், உனக்கு மேட்டூர் அல்லது புதூர் எதையோ ஒன்றை செட்டப் செய்வோம் என மிரட்டி இருக்க கூடும். எடப்பாடி - அவர் விஜையை சேர்க்க மாட்டார் என நினைக்கிறேன். இதுவரை விஜை மீது பிழை இல்லை என அவர் சொல்லவில்லை. அவரின் ஒரே டார்கெட் அரசை குற்றம் சொல்வதே. முடிந்தவரை விஜையை வைத்து திமுகவை அட்டாக் செய்து விட்டு, தேமுதிக, பாஜக, பாமக கூட்டணியில், அத்தனை திமுக அதிருப்தி வாக்குகளையும் தம் பக்கம் ஈர்ப்பதே அவர் நோக்கம் என நினைக்கிறேன். நயினாரின் பேச்சும் இப்படி அல்லது இதை விட நடுநிலையாகவே இருந்தது. இடையில் அமித் ஷா வேறு வகையில் முடிவு எடுத்தால் சில நேரம் விஜை உள்ளே வரக்கூடும். இதில் அதி பரிதாபங்கள் ஓபிஎஸ், தினகரந்தான். செங்கோட்டையந்தான். முதலில் அண்ணாமலை பேச்சை கேட்டு மோசம் போனார்கள். விஜையின் பஸ்சிலாவது ஜன்னலோரமாக சீட்டு பிடிக்கலாம் என நினைத்தால் - பஸ் குடைசாய்ந்து கிடக்கிறது😂.
1 week 3 days ago
வர வர நீங்கள் ஜக்கம்மாவை மதிக்கிறீங்கள் இல்லை ஜக்கம்மா இந்த போட்டியில் உங்களை கீழ போட்டு மிதிக்க போகிறா வீ காபுல் லொள்😁😁😁😁😁😁............................. மக்களே பாருங்கோ இவர் எப்படி எல்லாம் நடிக்கிறார் என்று போர போக்கை பார்த்தால் வாய்க்கை வாழை பழத்தை வைச்சாலும் கடிக்கத் தெரியாது என சொல்லுவிங்கள் போல் இருக்கு ஒருக்கா சசிகலா அம்மையாருக்கு போன் போட்டால் தான் நீங்கள் என் வழிக்கு வருவிங்கள் ஹா ஹா..................சந்தோச படுங்கோ அடுத்த வருடம் சசிகலா அம்மையாரோட உங்கட கனவுக் கன்னியும் சேர்ந்து வரக் கூடும் தேர்தல் நேரம்🥰❤️😁.........................
1 week 3 days ago
👍.................... நான் கிரிக்கெட்டை மட்டுமே பார்ப்பதாக இருக்கின்றேன், பையன் சார்...................🤣
1 week 3 days ago
@ரசோதரன் நாளைக்கு தென் ஆபிரிக்கா அழகியலும் இங்லாந் அழகியலும் விளையாடுகினம்................கலிபோனியா நேரம் காலை 7மனிக்கு இரண்டாவது இனிங்சை நீங்கள் பார்க்கலாம்😍👍................. தென் ஆபிரிக்கா மகளிர் அவுஸ்ரேலியா மகளிர் இந்தியா மகளிர் இங்லாந் மகளிரின் அழகை பார்த்து ரசிக்கலாம் இந்த உலக கோப்பையில்❤️🥰😁👍.........................
1 week 3 days ago
நான் வங்கதேசம் தான் மிகக் குறைவான ஓட்டங்கள் எடுப்பார்கள் என்று தெரிவு செய்திருக்கின்றேன். அக்கம்மாவும், ஜக்கம்மாவும் கைவிடமாட்டார்கள்............... வங்கதேசம் ஏதாவது ஒரு போட்டியில் 99 ஓட்டங்கள் மட்டுமே எடுக்கத்தான் போகின்றார்கள்...................😜.
1 week 3 days ago
கொழும்பு மைதானத்தில் தான் குறைந்த ஓட்டம் எடுப்பினம் என தெரிவு செய்தேன் இந்த 129 பெரிய ஸ்கோரே கிடையாது , சிலது இதை விடவும் குறைய வரக் கூடும்😁................................
1 week 3 days ago
இதுக்கேன் எச்சியை வீணாக்குகிறீர்கள் அண்ணை😂
1 week 3 days ago
மக்கள் அவரை கைவிட்டு விடுவார்கள் என்று தான் நானும் நினைக்கின்றேன். ஆனாலும் அவரது இளம் ரசிகர்கள் பலர் அவருடன் சேர்ந்தே நிற்பார்கள், ஆனால் அது ஒரு அரசியல் சக்தியாக அவரை தக்கவைக்க போதியதில்லை. இன்றைய நிலையில் பல் எதிர்க் கட்சிகள் அவரை உடனடியாக கைவிடப் போவதில்லை. 'தவிர்க்க முடியாத விபத்து.............' என்று சொன்ன சீமானுக்கு தம்பி விஜய் அவருக்கே அருகே வரப் போவதில்லை என்று தெரிந்துவிட்டது. இனிமேல் அவர் எதிர்ப்பக்க வாக்குகளையே நோக்கிப் பேசவேண்டும், பேசுகின்றார். ஒரு 20 அல்லது 30 தொகுதிகளை மட்டுமே கொடுத்து விஜயை மடக்கிப் போடலாம் என்று எடப்பாடியார் நினைக்கின்றார். கடைசியில் எடப்பாடியாரின் கொங்குநாடும் இந்த முடிவால் அவரது கைவிட்டுப் போகப் போகின்றது.
1 week 3 days ago
பாங்கிஸ்தான் மகளிர் பந்து வீச்சை குறை சொல்ல முடியாது பாக்கிஸ்தானின் தொடக்க மகளிர் தான் காரனம் , லாகூர் மைதானத்தில் பாக்கிஸ்தான் மகளிர் பெரிய ஸ்கோர் எல்லாம் அடிச்சவை ஆனால் இன்று இப்படி ஆகி விட்டது😞.....................
1 week 3 days ago
இதில் ஒரு அரசாக தகுந்த பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க தவறியமையும் உள்ளடங்க வேண்டுமா இல்லையா அறிஞர்களே? சந்துரு திமுக சார்பானவர் என்றே அறியபடுகிறார் என நம்புகிறேன். அடுத்த கலைமாமணி, தமிழ் நாடு அரசு விருதுகள் வரும்போது ஏனையோர் சாயமும் வெளிக்கும். இவர்கள் முன்வைத்த விஜை மீதான விமர்சனத்தை குறை சொல்ல முடியாது. ஆனால் ஒரே அடியாக மொத்த பழியையும் விஜை மீது போடுவதும். ஏதோ தாமே விசாரணை அதிகாரிகள் போல் சதியே நடக்கவில்லை என சாதிப்பதும், இவர்கள் யார் சொல்லி அறிக்கை விடுகிறார்கள் என சந்தேகிக்க வைக்கிறது. சதி இல்லவே இல்லை என ஆகட்டும். இதில் யார் ஒருவர் அரசின் கூட்டு பொறுப்பை (joint liability), ஆளும் கட்சியாக திமுவின் அலட்சியத்தை (criminal negligence) பேசாமல் விடுகிறார்களோ அவர்கள் நோக்கம் சந்தேகத்துக்குரியதாகிறது. இந்த அறிக்கையில் ஒரு வரி கூட அரசை கண்டித்து இல்லை. பிகு விஜை இந்த அழிவுக்கு பின்னர் நடந்து கொள்ளும் முறையால் - மக்கள் அவரை அகற்றியே ஆவர்கள் என நான் எண்ணுகிறேன்.
1 week 3 days ago
காணொளி: 👉 https://www.facebook.com/100081012193895/videos/762988353430117 👈 துக்கம், தொண்டையை அடைக்குது. 😂
1 week 3 days ago
எஸ்.வி. ராஜதுரை, சந்துரு, பாலகிருஷ்ணன் போன்றோரையும் அப்படியே ஒரு கூடைக்குள் போட்டு மூடி விட முடியாது தானே, கோஷான். விஜய்யின் காணொளியை பார்த்த பின், தமிழ்நாட்டில் இருந்து அகற்றப்பட வேண்டிய முதலாவது விஷம் விஜய் என்று தான் தோன்றுகின்றது. சீமானும், சாதிக் கட்சிகளும் கூட விஜய்யை விட பல மடங்குங்கள் சமூகத்திற்கு ஆபத்தில்லாதவர்கள்.
1 week 3 days ago
இந்த வார ஆனந்தவிகடனின் கட்டுரைக்கான கருத்தோவியம். ஆனந்தவிகடனில் வெளிவந்த இலங்கையின் மனித புதைகுழிகள் பற்றிய ஊடகவியலாளர் தமிழ்ச்செல்வனின் கட்டுரைக்காக ஓவியர் காசிப்கான் வரைந்த ஓவியம். Inuvaijur Mayuran
1 week 3 days ago
இவர்களில் பலரை திமுக சார்பு கலை, இலக்கிய மேடைகளில் சர்வசாதாரணமாக அண்மைய வருடங்களில் காண கிடைத்தது என்பதை கொஞ்சம் நினைவூட்ட விரும்புகிறேன். அதுவும் இந்து ராம் இப்போதெல்லாம் ஸ்டாலினின் ரசிகர் மன்ற தலைவர் போல் பேசுகிறார்😂. மெத்த படித்த கனவான்களே, அப்படியாயின் அந்த முன்னோட்டத்தை கண்டும், அழிவை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்காத தமிழக அரசு சட்டம் ஒழுங்கை பேணும் தன் பொறுப்பில் தவறியுள்ளது என்பதுதானே பொருள்? இந்த தவறுக்காக ஸ்டாலின் பதவி விலக வேண்டும் அல்லது மத்திய அரசு டிஸ்மிஸ் செய்ய வேண்டும்😂. அப்பட்டமான பொய். விஜைக்கு ரோடு ஷோ நடத்த அனுமதி கொடுக்கவில்லை. வேலுசாமிபுரத்தில் நடந்தது பொதுக்கூட்டம்.
1 week 3 days ago
https://www.newsweek.com/jane-goddall-dead-conservationist-institute-chimpanzees-latest-updates-10813647 கடந்த 60 ஆண்டுகளாக சிம்பன்சிகள் (Chimps) எனப்படும் மனிதக் குரங்குகள் பற்றி நடத்தையியல் ஆய்வுகளை மேற்கொன்டு வந்த ஜேன் குடால் நேற்றுக் காலமானார். ஏராளமான பெண் விஞ்ஞானிகளுக்கு ஊக்கமாக இருந்தவர். சிம்பன்சிகளின் நடத்தையியலைக் கொண்டு பல ஆபிரிக்க நாடுகளில் சிம்பன்சிகளை அழியாமல் பாதுகாக்கும் செயல்திட்டங்களை உருவாக்க உதவியவர். மிகவும் எளிமையான பிரபலம். கொண்டாடப் பட வேண்டிய வாழ்வு இவருடையது!
1 week 3 days ago
செந்தில் பாலாஜி, அன்பில் மகேஷ், உதயநிதி இன்னும் இருக்கும் திமுக பேச்சாளர்கள் எல்லாரும்…இதை பார்த்து, பேச கற்றுகொள்ள வேண்டும்😂. பிகு கரூர் அவலம் பற்றி நான் முதன் முதலில் திரி திறந்த போது, டிஸ்கியாக ஒரு எதிர்வுகூறலை போட்டேன். ஐந்து நாளில் அது உண்மையாகி உள்ளது 😂.
1 week 3 days ago
கரூர் துயரம் : தமிழக அரசுக்கு ’முக்கிய’ வேண்டுகோள் வைத்த சமூக செயற்பாட்டாளர்கள்! Published On: 2 Oct 2025, 7:33 PM | By Pandeeswari Gurusamy கரூரில் நடந்த பெருந்துயர சம்பவத்தில் விஜய் உள்ளிட்ட அனைவரையும் சட்டத்தின் முன் நேர்நிறுத்த தமிழ்நாடு அரசு தயங்கக்கூடாதென சமூக செயற்பாட்டாளர்கள் கூட்டறிக்கை ஒன்றை இன்று (அக்டோபர் 2) வெளியிட்டுள்ளனர். கரூரில் நடிகர் விஜய் கலந்து கொண்ட பரப்புரையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கி உள்ளது. இந்த நிலையில் மூன்னாள் நீதியரசர் சந்துரு, ஆர்.பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ், எம்.ஜி.தேவசகாயம் ஐஏஎஸ், எழுத்தாளர் எஸ்.வி.ராஜதுரை, ஊடகவியலாளர் ‘தி இந்து’ என்.ராம், வழக்குரைஞர் ஹென்றி டிபேன், நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் ரவிக்குமார் உள்ளிட்ட கலை இலக்கிய வாதிகள், சமூக செயற்பாட்டாளர்கள் என 100க்கும் மேற்பட்டோர் ஒன்றிணைந்து கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அந்த அறிக்கையில், “கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி இரவு 7.20 மணியளவில் கரூரில் வேலுசாமிபுரம் பகுதியில் தமிழக வெற்றிக் கழகம் நடத்திய “சாலையில் காட்சிதரும் – ரோடு ஷோ” நிகழ்வில் அதன் தலைவர் நடிகர் விஜய் அவர்களைக் காணவந்த பொதுமக்களில் 41பேர் கூட்ட நெரிசலில் சிக்கி மரணமடைந்துள்ளனர். இதனால் ஆற்றொணா துயரத்திலும் கடும் மனவுளைச்சலிலும் தமிழக மக்கள் தவித்து வரும் இவ்வேளையில், தவறான தகவல்களைப் பரப்பி இந்த மரணங்கள் உதாசீனப்படுத்தப்படுவதைக் காணச்சகியாமல் நாங்கள் இந்தக் கூட்டறிக்கையினை வெளியிடுகின்றோம். விஜய் அரசியல் கட்சி துவங்கியதிலோ தனது கட்சியினரை அவர் சந்திப்பதிலோ எவருக்கும் மாறுபட்ட கருத்து இல்லை. நாட்டின் குடிமக்கள் எவரொருக்குமானது போலவே அது அவருக்குரிய சனநாயக உரிமை. ஆனால் அவர் தனது கட்சியினரையும் ரசிகர்களையும் சந்திக்கத் தெரிவுசெய்துள்ள முறை, இந்த நாட்டின் அரசியல் முதிர்ச்சிக்கும் பொதுவாழ்க்கைக்கும் தனிமனித கண்ணியத்திற்கும் உகந்ததல்ல என்பதுடன், அதுவே இந்தப் பேரழிவுக்கும் இட்டுச்சென்றுள்ளது எனவும் சுட்டிக்காட்டுகிறோம். கரூருக்கும் முன்னதாக விக்கிரவாண்டி, மதுரை, திருச்சி, அரியலூர், நாகை ஆகிய இடங்களில் விஜய்யின் கூட்டங்கள் இந்தப் பேரழிவுக்கான முன்னோட்டம் போலவே நடந்திருக்கின்றன. போக்குவரத்து விதிகளைக் கடைபிடிக்காமலும் பொதுமக்களுக்கு அச்சமூட்டும் வகையிலும் வாகனங்களில் பயணம் செய்தது, பொதுச் சொத்துக்களை சேதப்படுத்தியது மற்றும் மின் கம்பங்கள், மரங்கள், அருகமைக் கட்டிடங்கள் ஆகியவற்றில் ஏறி சேதப்படுத்தியது என அவரது கட்சியினர் பொறுப்புணர்வின்றியும் கட்டுப்பாடற்றும் சுயஒழுங்கின்றியும் நடந்துகொண்டனர். அவர்களில் பெரும்பாலோர் முப்பது வயதுக்குட்பட்டவர்கள், புதிதாக அரசியல் ஆர்வம் கொண்டவர்கள், விஜய்யின் சொல்லுக்கு கட்டுப்படக்கூடியவர்கள். அத்துமீறல்களுக்காக அவர்களைக் கண்டித்து, நல்வழிப்படுத்த அவர் அறிவுறுத்தியிருக்க வேண்டும். ஆனால் விஜய் அப்படியான முயற்சியெதையும் மேற்கொள்ளாமலும் அவர்களது அத்துமீறல்களை ரசிப்பவராகவும், அவர்கள் அவ்வாறு இருப்பதுதான் தனது பலமென்று கருதியும் அவற்றை இயல்பானதாக்க முயற்சித்தன் விளைவே இந்த அநியாய மரணங்கள். விஜய், அறிவித்திருந்த நேர அளவுக்குள் கரூருக்கு வராமல் தன்னைக் காண்பதற்காக திரண்டிருந்தவர்களை 7 மணிநேரத்திற்கும் மேலாக காக்கவைத்ததும், அங்கு குடிநீர், உணவு, கழிவறை உள்ளிட்ட அடிப்படைத்தேவைகள் போதுமானதாக இல்லாதிருந்ததும், கூட்டத்திற்குள் வந்த பிறகும் முகம் காட்டாமல் மக்களை தன் வண்டிக்குப் பின்னேயே அலையவிட்டதும்தான் உயிரிழப்புக்குக் காரணம் என்பதை காணொளிச்சான்றுகள் காட்டுகின்றன. ஆனால் இந்த உயிரிழப்புகளுக்குப் பின்னே “திட்டமிட்ட சதி” இருப்பதாகவும் விஜய் மீது எந்தத் தவறுமில்லையெனவும் உண்மைக்கு மாறான ஒரு கட்டுக்கதையை விஜய்யின் ஆதரவாளர்கள் சிலர் பரப்பத் தொடங்கினர். மணிப்பூர் உள்ளிட்டு நாட்டின் பல்வேறு பகுதிகளில் நிகழ்ந்த இயற்கைப் பேரிடர்கள், மோதல்கள், கலவரங்கள், ஒடுக்குமுறைகள் பற்றி விசாரிக்கப் போயிராத தேசிய ஜனநாயகக் கூட்டணி, கரூர் மரணங்கள் பற்றி ஆராய தனது நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு ஒன்றை அனுப்பியுள்ளதும் அந்தக் குழுவினர் “சதி” கட்டுக்கதையை வலுப்படுத்தும் விதமாக கருத்து தெரிவித்து வருவதும் ஏற்கத்தக்கதல்ல. தன் கண்முன்னேயே விபரீதம் நடப்பதைப் பார்த்தப் பிறகும் அதில் கவனம் செலுத்தி நிலைமையைச் சீராக்காமல் அங்கிருந்து வெளியேறிப் போய் இரண்டு நாட்கள் அமைதிகாத்த விஜய், இந்தக் கட்டுக்கதை கொடுத்த தைரியத்தில் 30.9.2025 அன்று ஒரு காணொளியை வெளியிட்டுள்ளார். தன்னால்தான் இந்தச் சாவுகள் நிகழ்ந்தன என்பது பற்றிய குற்றவுணர்ச்சியோ வருத்தமோ தார்மீகப் பொறுப்பேற்போ இல்லாத அவரது காணொளி விளக்கத்தில் அரசின் மீது பழிசுமத்திவிட்டு தப்பித்துவிடும் உள்நோக்கமே துருத்திக் கொண்டுள்ளது. கலையும் இலக்கியமும் சமூகத்தை மேம்படுத்துவதாக, விடுதலை உணர்வைத் தருவதாக, அடிமைச்சிந்தனைக்கு எதிராக தன்மதிப்புணர்வைத் தூண்டுவதாக இருக்க வேண்டும். ஆனால் விஜய்யின் அணுகுமுறை நேர்மைத்தன்மையற்றதாகவும், தனது ரசிகர்களை வேண்டுமென்றே தவறாக வழிநடத்துவதாகவும் உள்ளது. உழைப்பும், பொது சிந்தனையும், சமூக அக்கறையுமற்ற வழியில் அதிகாரத்தைப் பெறும் முனைப்பு மேலோங்கியுள்ளது. இழைத்துவிட்ட குற்றத்திலிருந்து தப்பிப்பதற்காக, இதுவரை தனது கொள்கை எதிரி என்று குறிப்பிட்டு வந்த வலதுசாரிகளை அண்டி நிற்கவும் தயாராகிவிட்டார் என்பதை அவரது அடுத்தடுத்த நகர்வுகள் உணர்த்துகின்றன. எவ்வளவு கொடிய தீங்கினையும் இழைத்துவிட்டு வதந்திகளையும் கட்டுக்கதைகளையும் களமிறக்கி தப்பித்துவிட முடியும் என்கிற விஜய்யின் கெடுநோக்கம் தடுக்கப்பட வேண்டும். ரசிக மனப்பான்மையில் அவரது பின்னே திரண்டுள்ள சிறார்களையும் இளைஞர்களையும் மீட்டெடுத்து சமூகப் பொறுப்புணர்வும் தன்மதிப்பும் உள்ளவர்களாக, தமது உள்ளாற்றல்கள் மூலம் வியத்தகு சாதனை புரிபவர்களாக வளர்த்தெடுப்பதில் கலை இலக்கியவாதிகளுக்கும் கூட்டுப்பொறுப்பு உள்ளதென உணர்கிறோம். விஜய்யின் முந்தைய நிகழ்வுகள், விளைவுகள் குறித்த மதிப்பீட்டின் அடிப்படையில் கரூரில் மேற்கொண்டிருக்க வேண்டிய கட்டுப்பாடுகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளில் ஏதேனும் குறைபாடுகள் இருப்பின் தமிழ்நாடு அரசு கண்டறிய வேண்டும். வருங்காலத்தில் இதுபோன்ற அவலங்கள் உருவாகாமல் கூட்டத்தை கட்டுப்படுத்தும் வழிவகைகள் கண்டறியப்பட வேண்டும். சட்டத்தின் ஆட்சியை உறுதிசெய்ய, கரூர் உயிரிழப்புகளுக்கு காரணமான விஜய் உள்ளிட்ட அனைவரையும் சட்டத்தின் முன் நேர்நிறுத்த தமிழ்நாடு அரசு தயங்கக்கூடாதென வலியுறுத்துகிறோம். மேலும், கரூர் நிகழ்வைக் காரணம் காட்டி சமூக, சனநாயக, பண்பாடு மற்றும் அரசியல் இயக்கங்களின் கருத்துரிமை, கூட்டம் கூடும் உரிமை, சங்கம் சேரும் உரிமை, போராடும் உரிமை ஆகியவற்றை தீர்மானிக்கும் அதிகாரத்தை காவல்துறையிடம் ஒப்படைத்துவிடக் கூடாது. அரசமைப்பு உரிமைகளான அவற்றைக் காப்பாற்றுவதில் தனக்குள்ள பொறுப்பினை தமிழ்நாடு அரசு உறுதியாக நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்துகிறோம்.” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Checked
Mon, 10/13/2025 - 09:07
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed