புதிய பதிவுகள்2

தமிழ் தேசியம் எதிர் என்பிபி? - நிலாந்தன்

3 months 1 week ago
தலையங்கம் தவறு. “தமிழ் தேசியத்தை பிழைப்புவாதிகள் எதிர் என் பி பி” என்று தலையங்கம் இருந்திருக்க வேண்டும். ஏனெனில் தமிழ் பிரதேசங்களின் வளர்ச்சி பற்றி எந்த அக்கறையும் இல்லாது மக்கள் பிரச்சனைகளை வெறும் ஊறுகாய போல் தொட்டு கொண்டு நடக்க முடியாதவற்றை வீரவசனங்களாக கதைப்பவர்களே இதுவரை நகர பிரதேச சபைகளில் பதவிகளில் இருந்தனர். அந்த பிழைப்புக்கு ஆபத்து வந்து விட்டதே என்ற கோபமே இவர்களிடம் எஞ்சி உள்ளது . பிழைப்பு வாதஅத்துக்கு ஆபத்து வந்த நிலையில் கூட ஒன்று பட முடியாத ஈகோ. இது தான் இவர்களின் டிசைன்.

உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின

3 months 1 week ago
எங்கட வெற்றிக் கதைகளை நாங்கள் தான் சொல்லோணும்... ♥️" class="xz74otr x168nmei x13lgxp2 x5pf9jr xo71vjh" referrerpolicy="origin-when-cross-origin" src="https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/tac/1/16/2665.png" style="border: 0px; border-radius: 0px; object-fit: fill;">💪🏽" class="xz74otr x168nmei x13lgxp2 x5pf9jr xo71vjh" referrerpolicy="origin-when-cross-origin" src="https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/te9/1/16/1f4aa_1f3fd.png" style="border: 0px; border-radius: 0px; object-fit: fill;"> இது ஐந்தாம் ஆண்டு மூன்றாம் தவணையிலிருந்து, ஐலண்ட் ராங்க் செகண்ட் வந்தவனின் அமைதியான ஓர்மம்! யாழ் / ஹாட்லிக் கல்லூரியின், செல்வன் கந்ததாசன் தசரத் பெளதீக விஞ்ஞானப்பிரிவின் (கணித) - மாவட்ட நிலை - 01 மட்டுமல்ல, - தேசிய நிலை - 02 2024 GCE AL இல் இலங்கையில் இரண்டாவது பெரிய ஸ்கோரான 2.8394 எடுத்தவரான தம்பி தசரத் GCE OL இல் 9Aயும், எடுக்க அவரை படிப்பிச்சது யார்? - ஒரேயொரு தோல்வியும், கொஞ்ச சிறு வயது அவமானங்களும்! ஹாட்லிக் கல்லூரியின் தரம் 06 அனுமதியின் போது வரிசையில் கடைசியிலிருந்து 4வது இடத்தில் நின்றதை இன்னமும் மறக்காமல் இருந்த தசரத் - புலமைப்பரிசில் பரீட்சையில் வெட்டுப்புள்ளிகளை விட 03 புள்ளிகள் குறைவாக பெற்றிருந்தவர்!! பொதுவான வழக்கில், ஸ்கொலர்ஷிப் பெயிலான பொடியன் ஒருதன் தான் - அடுத்த ஒன்பதாவது வருடம் கணிதப்பிரிவில் தேசிய நிலையில் இரண்டாமிடம் என்ற ‘பெரீய’ செய்தி, வெறுமனே மாணவர்களுக்கானது மட்டுமல்ல பெற்றோருக்குமான இடியேறு. தாயார் - ஆசிரியர், தந்தையார் - பிரதிக் கல்விப் பணிப்பாளர், தமையன் - பொறியியல்பீட மாணவன் என்று வீட்டுக்குள்ளே ஏற்றிவிடும் கரங்கள் கிடைத்திருந்தாலும் - தனியொருவனாக தசரத், “உழைப்பின் உயர்வு” என்ற எங்களுக்கான திகிலூட்டும் திரைக்கதையை எழுதி ரியல் சினிமாவாக நிகழ்த்திக் காட்டியிருக்கிறான். நதி போல ஓடிக்கொண்டிரு, தம்பீ...♥️" class="xz74otr x168nmei x13lgxp2 x5pf9jr xo71vjh" referrerpolicy="origin-when-cross-origin" src="https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/tac/1/16/2665.png" style="border: 0px; border-radius: 0px; object-fit: fill;">🔥" class="xz74otr x168nmei x13lgxp2 x5pf9jr xo71vjh" referrerpolicy="origin-when-cross-origin" src="https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/t50/1/16/1f525.png" style="border: 0px; border-radius: 0px; object-fit: fill;">♥️" class="xz74otr x168nmei x13lgxp2 x5pf9jr xo71vjh" referrerpolicy="origin-when-cross-origin" src="https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/tac/1/16/2665.png" style="border: 0px; border-radius: 0px; object-fit: fill;"> நீதி: - படிங்கடா பரமா? பரீட்சைகள் தற்காலிகம்! படிப்பு நிரந்தரம்!! 🤚🏽" class="xz74otr x168nmei x13lgxp2 x5pf9jr xo71vjh" referrerpolicy="origin-when-cross-origin" src="https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/t9e/1/16/1f91a_1f3fd.png" style="border: 0px; border-radius: 0px; object-fit: fill;"> நம்ம யாழ்ப்பாணம் ·

உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின

3 months 1 week ago
ஹாட்லி கல்லூரி மாணவன் தசரத் கணிதவியலில் மாவட்டத்தில் முதலாவதாகவும் நாடாளாவியரீதியில் இரண்டாவதாகவும் வந்துள்ளார்! 28பேருக்கு 3A.

கனடாவில் கூட்டத்திற்குள் கார் மோதி விபத்து; பலர் உயிரிழப்பு!

3 months 1 week ago
CP24Vancouver wakes to tragedy of nine dead in ramming attack...Vancouver is waking to the tragic aftermath of a deadly ramming attack on a Filipino community street festival that killed at least nine people, with survivors describing horrifying scenes of victi...Vancouver wakes to tragedy of nine dead in ramming attack on Filipino street festival..

கனடாவில் கூட்டத்திற்குள் கார் மோதி விபத்து; பலர் உயிரிழப்பு!

3 months 1 week ago
கனடாவின் வான்கூவர் திருவிழாவில் கோர விபத்து : பலர் உயிரிழப்பு Canada Accident World By Raghav 4 hours ago கனடாவில் (Canada)நடைபெற்ற லாபு லாபு தின தெரு விழாவில் (Lapu Lapu Day street festival) பங்கேற்ற மக்கள் மீது கார் மோதியதில் பலர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. குறித்த சம்பவம் நேற்று (26.04.2025) இரவு 8.00 மணியளவில் வான்கூவார் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில் பலர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதுடன் மேலும் பலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக கனேடிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. மேலதிக விசாரணை இது தொடர்பில் மேலும் தெரிய வருகையில், கருப்பு நிற எஸ்யூவி வாகனம் ஒன்று அதிவேகமாக திருவிழா பகுதிக்குள் புகுந்து, அங்கிருந்த ஏராளமான மக்களை இடித்துத் தள்ளியுள்ளது. மேலும், அந்த வாகனத்தை ஓட்டியவர் ஒரு இளம் ஆசிய இளைஞராகவும், அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் போலவும் காணப்பட்டதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றனர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மற்றும் ஆள் அடையாள விபரங்கள் வெளியிடப்படவில்லை. https://ibctamil.com/article/lapu-festival-vancouver-car-accident-1745744961

பொன்னியின் செல்வன் பாடல்: ஏ.ஆர்.ரஹ்மான் ரூ.2 கோடி செலுத்த உத்தரவு - காப்புரிமை சர்ச்சைகள் தொடர்வது ஏன்?

3 months 1 week ago
இசை மூலம் / காப்புரிமை மூலம் பெறப்படும் பணத்தை பெற்று இசையமைப்பாளருக்கும் ஏனையவர்களுக்கும் பகிர இந்தியாவில் IPRS என்ற அமைப்பு உள்ளது. இதனையே அங்குள்ள அனேகமான இசையமைப்பாளர்கள் பயன்படுத்துகின்றனர். இளையராஜா இதனை பயன்படுத்துவதில்லை. தன் இசை மூலம் கிடைக்கும் ராயல்டி பணத்தை நலிவுற்ற இசைக் கலைஞர்களுக்கான ஒரு அமைப்பின் மூலமே பெறுகின்றார் என கூறுகின்றனர். அதாவது இளையராஜா ராயல்டியின் மூலம் பெறப்படும் வருமானத்தில் ஒரு பெரும் பங்கை நலிவுற்ற கலைஞர்களுக்கு பகிர்கின்றார்.

பொன்னியின் செல்வன் பாடல்: ஏ.ஆர்.ரஹ்மான் ரூ.2 கோடி செலுத்த உத்தரவு - காப்புரிமை சர்ச்சைகள் தொடர்வது ஏன்?

3 months 1 week ago
நான் வேலை செய்வது இசை காப்புரிமை தொடர்பான அமைப்பில். பாடல்களின் காப்புரிமை காரணமாக கிடைக்கும் கோடிக்கணக்கான பணத்தை அதில் ஈடுபடுகின்றவர்களுக்கு பிரித்து கொடுக்கும் அமைப்பில கனடாவில் வர்த்தக நோக்கத்திற்காக இசையை / பாடலை பயன்படுத்தினால் எம்மிடம் மற்றும் எம்மை போன்ற இன்னொரு அமைப்பிடம் அனுமதி பெற்று இருக்க வேண்டும். அது gym மில் ஒலிக்க விடும் பாடலாக இருந்தாலும் சரி, FM மில் ஒலிபரப்பும் பாடலாக இருந்தாலும் சரி அந்த இசைக்கான காப்புரிமை பணத்தை தரவேண்டும். Live music நிகழ்விற்கும் இது பொருந்தும். அதில் கிடைக்கும் வருமானத்தின் ஒரு பங்கு காப்புரிமை பெற்றவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்படல் வேண்டும். பாடல் யாருக்கு சொந்தம்? பாடல் அதன் இசையமைப்பாளருக்கே சொந்தம். இது தான் பெரும்பாலான நாடுகளின் சட்டம். கனடா, இந்தியா, அமெரிக்கா ஆகிய நாடுகளிலும் இது தான் சட்டம். ஒரு பாடலின் இசையை படத்தின் தயாரிப்பாளர் வாங்குகின்றார். அதை அவர் அப் படத்தில் மட்டுமே பயன்படுத்த முடியும். SPB, ஒரு இசை நிகழ்ச்சி நடத்தும் போது, அங்கு இசைத்த, இசைக்கப்படும் பாடல்களின் list இனை நான் வேலை செய்யும் அமைப்புக்கோ (கனடாவில் நிகழ்ந்தால்) அல்லது அது போன்ற இன்னொரு அமைப்பிற்கோ வழங்கப்படும். அதன் படி காப்புரிமையின் படி வருமானத்தின் சிறு பங்கு பகிர்ந்தளிக்கப்படும். இதில் spb யின் மகனே இவ் நிகழ்ச்சிகளை நடாத்த ஏற்பாடு செய்பவர் எனும் அடிப்படையில், இளையராஜா இசையமைத்த பாடல்களை பாடினால் அதனையும் அந்த list இல் தர வேண்டும்.ஆனால் அவர்கள் அவ்வாறு செய்யவில்லை. சட்ட ரீதியாக ஒரு நாட்டில் நிகழ்ச்சி நடாத்த அனுமதி பெற்று இளையராஜா வின் பாடலையும் பாடி வருமானம் பெற்று விட்டு, சட்ட ரீதியாக கொடுக்க வேண்டிய அதன் விபரங்களை அவர்கள் கொடுக்காமல் தவறினார்கள். இது வேண்டும் என்றே செய்த தவறு. இதே தவறை ஒரு பிரபலமான ஆங்கில பாடல் பாடி செய்து இருந்தால் பெரும் பணம் தண்டமாக கிடைத்திருக்க வாய்பிருந்து இருக்கும்.

உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின

3 months 1 week ago
3 A எடுத்தவர்களின் பெயர்களையும், படத்தையும், பாடசாலையையும் குறிப்பிடும் போது.... 3 F எடுத்தவர்களையும் குறிப்பிட்டு ஆறுதல் சொல்லாமல் இருப்பது கண்டிக்கப் பட வேண்டும். 🤣

10 ஆண்டுகளில் இல்லாத அபார வளர்ச்சியில் தமிழ்நாடு

3 months 1 week ago
தெரியாவிட்டால் விடுங்கள். இது இந்தியா அரசை பற்றியது, எங்கு சென்றாலும் அதுக்கு ஒப்புமை காண முடியாது. அங்கு சென்று, இங்கு சென்று, சதிக்கதை என்று ... தவறாக திரிக்க தேவை இல்லை. தான் திரிப்பதை மற்றவர்கள் செய்தது என்று சொல்வது சீனாவை பற்றி மேற்கு ஊடகங்கள் சொல்லுவதை பிரதி செய்வது. சீனாவின் பார்வையில் எல்லோருமே அதிகாரிகள் அந்ததந்த தரத்தில். சீனாவை பற்றி தெரியாமல் கதைப்பது வசதிக்காக. அதன் அடிப்படை அமைப்பே திறமையான பணியாளர்களை, ஊழியர்களை selective - elective ஆக பொறுப்புக்கு கொண்டு வருவது. காங்கிரஸ் தேர்தலில் ல்லியது சீர்த்திருத்தம். தாராளம் என்பதோ திறந்த என்பதோ (இதுவல்ல இப்போதைய பொருளாதரமும்) என்றோ காங்கிரஸ் சொல்லவில்லை. (இப்போதைய பொருளாதாரம் தாராளம் உள்ள, மூடிய அமைப்பு சாய்ந்த பொருளாதாரம்) காங்கிரஸ் முதல் கட்டத்தில் (ராஜீவ் இருக்கும் பொது நடந்த தொகுதிகளில்) முற்றாக அடிபட்டு போய்விட்டது (உண்மையில் என்ன காரணம் என்று தெரியாவிட்டாலும், பொருளாதாரம் முக்கிய காரணம்) ராஜீவுக்கு (இறப்பின்) பின் நடந்ததில் கணிசமான வெற்றி பெற்றது. 1991 காங்கிரஸ் அரசாங்கம் சிறுபான்மை அரசாங்கம். (1991 மறக்க முடியாது சில காரணகளுக்காக) ஆம், காங்கிரஸ் பொருளியல் வல்லுனரை உள்ளுக்கு கொண்டு வந்தது, சுமுகமாக நடப்பதற்கு. அனால். அவருக்கு அதிகாரம் இல்லை தேர்தலில் சொன்னதை தலைகீழாக மாற்றுவதற்கு. அதுவும் சிறுபான்மை அரசாங்கத்தில். (அனால், இதில் சிறுபான்மை / பெரும்பான்மை அரசாங்கம் என்பது 2ம் பட்சம். பெரிய கொள்கை மற்றம் அல்லது மாற்றீடு என்பதே பிரச்சனை). அந்த நிலையில், அதிகாரா பீடத்துக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. அதுவே பாவிக்கப்பட்டது. அது வெளியில் தெரியாது தான். மாறாக, எந்த அரசியல்வாதி/ மந்திரி கொள்கை வந்தாலும், அந்த அதிகார பீட இணக்கம் இல்லாமல் வரமுடியாது. திருத்தம், மாற்றம், மாற்றீடு செய்ப்படும். உதவியா வழங்கப்படும், யாப்பு அப்படியான நிலையில் வைத்து இருக்கிறது மந்திரிகளை. ஆனால், மேற்கு சொல்வது என்ன இந்திய அரசை பற்றி - complex democracy. ராஜதந்திரத்தில், அரச கலையில் complex என்பதன் அர்த்தம் தெரியாத கதை. இந்தியாவுக்கு (சீனாவுக்கும்) பொத்தாம் பொதுவான ஒப்புமை, அது தவறான ஒப்புமை என்று கூட புரியாமல்.

யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025

3 months 1 week ago
சென்னை அணிக்கு நீண்டகாலமாக ஆதரவு என்பதினால் அதற்கு போட்டி அணியான மும்பாயினை பெரியதாக பிடிப்பதில்லை. இன்று மும்பாய் வெல்லும் என போட்டியில் விடை எழுதியிருந்தாலும் பூரான், மார்ஸ், மார்க்கம் விளையாடும் LKG வென்றால் நல்லது என்று மனம் நினைக்கிறது. போட்டியில் மும்பாய் என்று எழுதியதினால் போட்டி சுவரிஷ்யமில்லாமல் இருக்கிறது.

உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின

3 months 1 week ago
உயர்தர பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றவர்கள் விபரம் 2024 க.பொ.தராதர உயர் தரப் பரீட்சையின் பெறுபேறுகளுக்கு அமைய, சிறந்த பெறுபேற்றை பெற்றவர்களின் விபரங்களை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர இன்று (27) முற்பகல் அறிவித்தார். அதன்படி, உயிரியல் பிரிவில் குருநாகல் மலியதேவ மகளிர் வித்தியாலய மாணவி ஹேகொட ஆராச்சிகே சந்திதி நிம்ஹார நாடளாவிய ரீதியில் முதலிடத்தை பெற்றுள்ளார். இதே பாடப் பிரிவில் இரண்டாம் இடத்தை அனுராதபுரம் மத்திய கல்லூரி மாணவி கல்பா விதுசரனி பெற்றுள்ளதோடு, யாழ்ப்பாணம் இந்து கல்லூரி மாணவன் ஜமுனாநந்தா பிரணவன் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளார். கணிதப் பிரிவில் நாடளாவிய ரீதியில் முதலாம் இடத்தை கம்பஹா பண்டாரநாயக்க கல்லூரியின் லெசந்து ரன்சர குமாரகே என்ற மாணவரும், இரண்டாம் இடத்தை யாழ்ப்பாணம் ஹாட்லி கல்லூரியின் கந்ததாசன் தசரத் என்பவரும், மூன்றாம் இடத்தை கம்பஹா பண்டாரநாயக்க கல்லூரியின் மாணவன் தெவிந்து தில்மித் தஹநாயக்க என்பவரும் பெற்றுள்ளனர். கொழும்பு விசாகா கல்லூாியின் மாணவி கங்கானிகே அமாஷா துலாரி பெரேரா, வணிகப் பிரிவில் நாட்டிலேயே முதலிடத்தைப் பெற்றுள்ளார். வணிகப் பிரிவில் இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களை கொழும்பு ரோயல் கல்லூரியைச் சேர்ந்த இந்துவர சன்ஹித குமாரபேலி என்பவரும் நுகேகொட சுஜாதா கல்லூரியின் லெசந்தி உதாரா பெரேரா என்பவரும் பிடித்துள்ளனர். அதேநேரம் ரத்னாவலி பாலிகா வித்யாலய மாணவி செனெலி சமத்கா ரணசிங்க, கலைப் பிரிவில் நாடளாவிய ரீதியில் முதலாம் இடத்தை பெற்றுள்ளார். இரத்தினபுரி பர்கசன் உயர் மகளிர் கல்லூரி மாணவி தினெத்மி மெதன்கா ஜனகாந்த கலைப்பிரிவில் இரண்டாம் இடத்தையும், கண்டி மஹமாயா மகளிர் வித்தியாலய மாணவி இசுரி அஞ்சலிகா பீரிஸ் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளனர். பொறியியல் தொழில்நுட்பவியல் பிரிவில் முதலாம் இடத்தை நாரம்மல மயுரபாத மத்திய கல்லூரியின் மாணவன் காவ்ய ரவிஹங்சவும் இரண்டாம் இடத்தை இரத்தினபுரி சீவலி மத்திய மகா வித்தியாலயத்தின் மாணவன் உஷான் மலிக் ஜயசூரியவும் மூன்றாம் இடத்தை நாகஸ்தெணிய ஶ்ரீ சுமங்கல வித்தியாலயத்தின் பசிந்து மதுசங்கவும் பெற்றுள்ளனர். உயர்தர பரீட்சையில் சிறந்த பெறுபே...உயர்தர பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றவர்கள் விபரம்2024 க.பொ.தராதர உயர் தரப் பரீட்சையின் பெறுபேறுகளுக்கு அமைய, சிறந்த பெறுபேற்றை பெற்றவர்களின் விபரங்களை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர இன்று (27) முற்பகல் அறிவித்தார்.

பொன்னியின் செல்வன் பாடல்: ஏ.ஆர்.ரஹ்மான் ரூ.2 கோடி செலுத்த உத்தரவு - காப்புரிமை சர்ச்சைகள் தொடர்வது ஏன்?

3 months 1 week ago
இளையராஜ கொப்பி அடித்த படங்கள் எதிலாவது அதை கிரெட்டில் போடும்படி செய்துள்ளாரா? இல்லை. தான் சொல்லாமல் கொப்பி அடித்தால் அதுக்கு பிடிபட்டபின் காரணம் சொல்வார். ஆனால் ஜீவி பிரகாஷ் கதை பொருத்தம் கருதி, வெளிப்படையாக இளையராஜா பாடலை கையாண்டால் அது ஆண்மை அற்றதனமா?

யாழ். பல்கலைக்கழக ஒழுக்காற்று உத்தியோகத்தர்களுக்கு எதிராக ஆணைக்குழுவில் முறைப்பாடு!

3 months 1 week ago
யாழ். பல்கலைக்கழக ஒழுக்காற்று உத்தியோகத்தர்களுக்கு எதிராக ஆணைக்குழுவில் முறைப்பாடு! April 27, 2025 4:33 pm யாழ். பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மீதான ஒழுக்காற்று நடவடிக்கைகளின் போது மாணவ ஒழுக்காற்று உத்தியோகத்தர்கள் பலகலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் ஒழுக்காற்று விதிகளை மீறி, தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கமைவாக நடந்து கொள்வதாகவும், இந்த விதி மீறல்கள் தொடர்பில் பல்கலைக்கழக நிர்வாகம் பொறுப்பற்ற விதத்தில் நடந்து கொள்வதாகவும் பல்கலைக்கழக மாணவர்கள் மூவர் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு முறைப்பாடு செய்துள்ளனர். கடந்த மாதம் 29ஆம் திகதி பல்கலைக்கழக விடுதி ஒன்றுக்குள் நான்காம் வருட மாணவர் ஒருவர் குடிபோதையில் வந்து அறையொன்றில் அனுமதி பெறாமல் தங்கியிருந்த சம்பவம் தொடர்பில் முதலாம் ஆண்டு மாணவர்களால் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. அம்முறைப்பாட்டுக்கமைய நடவடிக்கைகளை எடுக்காமல், முறைப்பாடு செய்த மாணவர்கள் உட்பட விடுதியில் தங்கியிருந்த முதலாம் ஆண்டு மாணவர்களை அச்சுறுத்தும் வகையில், மாணவர்களை விடுதிகளிலிருந்து வெளியே செல்லும் நேரம் முடிவடைந்த பின்னர் இரவு வேளையில் வீதி வழியாக வேறொரு வீடுதிக்கு அழைத்துச் சென்று, அறை ஒன்றில் வைத்துப் பூட்டிய பின்னர் அங்கு வலுக்கட்டாயமாகப் பொய் வாக்குமூலங்களில் கையொப்பம் இடுமாறு பணிக்கப்பட்டதாகவும், மாணவர்களின் சம்மதமின்றி காணொளி வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டதாகவுமே மூன்று மாணவர்களும் தமது முறைப்பாடுகளில் குறிப்பிட்டுள்ளனர். மேலும், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் சுற்று நிரூபத்துக்கமைவாகத் துணைவேந்தரால் நியமிக்கப்பட்ட விசாரணை அதிகாரிகள் விசாரணை மேற்கொள்ளாமல், சட்டத்துக்கு மாறாக மாணவ ஒழுக்காற்று உத்தியோகத்தர்கள் விசாரணைகளை மேற்கொள்வதாகவும், மாணவர்களை விசாரணைக்கு அழைப்பது முதல் விசாரணை நடைமுறைகள் உட்பட சட்டத்துக்கு முரணாகச் செய்யப்படும் விசாரணைகள் பற்றி பல்கலைக்கழக நிர்வாகத்தின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்ட போதிலும், திரும்பத் திரும்ப முறைப்பாடு செய்யும் மாணவர்களுக்கெதிராகவே விசாரணைகள் மேறகொள்ளப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://oruvan.com/complaint-filed-with-the-commission-against-jaffna-university-disciplinary-officers/
Checked
Sun, 08/10/2025 - 06:59
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed