புதிய பதிவுகள்2

பொன்னியின் செல்வன் பாடல்: ஏ.ஆர்.ரஹ்மான் ரூ.2 கோடி செலுத்த உத்தரவு - காப்புரிமை சர்ச்சைகள் தொடர்வது ஏன்?

3 months 1 week ago
ஒவ்வொரு பிரபலத்தினதும் தனிப்பட்ட வாழ்க்கையை நாம் அலசதேவையில்லை. என்பது என் நிலைப்பாடு. தனிப்பட்ட வாழ்க்கையில் அவர்கள் சட்டத்தை மீறினார்கள் என மறுதரப்போ, மூன்றாம் தரப்போ புகார் கூறும் வரை அது அவர்கள் தனிப்பட்ட விடயம். ஆனால் பொதுவெளியில் நடந்து கொள்ள என ஒரு முறை உள்ளது. இளையராஜாவிடம் தன்னை விட நலிந்தோரை தூக்கி போட்டு மிதிக்கும் ஒரு கேடு கெட்ட குணம் உள்ளது. பத்திரிகையாளரை, ரசிகரை, இசை ஆர்வம் உள்ள சிறுவனை அவர்கள் சுயமரியாதையை சீண்டும் படி பொது வெளியில் அவமரியாதை செய்யவார். ஆனால் கோவிலில் அவமரியாதையாக அவர் நடத்தப்பட்டால், அந்த அந்நீதியின் முன் நவதுவாரங்களையும் மூடி கொள்வார். அகங்காரமே கூடாத விடயம் - அதிலும் அகங்காரத்தை - ஆட்களின் ஸ்டேடஸ் பார்த்து காட்டுவது எவ்வளவு கீழ்தரமானது? இந்து இறையியலின் மிக அடிப்படையான விடயம் நான் என்ற மமதையை அழிப்பது. இந்த மமதையை அழிக்காமல் மனமுருகிபாடி, சாமியார் வேடம் போட்டு வாழ்வதில் ஒரு பயனும் இல்லை. நிச்சயமாக. ஆரம்பகால பாடல்கள் திரைப்பட நிறுவனன்வ்களுக்கும், பிந்தைய இளையராஜ ஒப்பந்தம் போட்ட பாடல்கள் அவருக்கும் உரியன என தீர்பாகும் என எதிர்பார்க்கிறேன். மேடையில் பாடுவதற்கு எந்த இசையமைப்பாளருக்கும் பணம் கொடுப்பதாக நான் அறியவில்லை. ஆதாரம் தந்தால் அறிந்து கொள்வேன். எல்லாம் பிடிபட்ட பின்புதான். யூடியூப் வரும் வரை நானே இசை பிரம்மா என்பதுதான் அவரின் நிலைப்பாடாக இருந்தது. என்ன காரணம் சொன்னாலும் களவு, களவுதானே. அதாவது இளையராஜ ஜீவி யை அண்மையில் சொன்னது போல சொல்வதாயின், ஆண்மை அற்ற தன்மை🤣.

தீக்கிரையாக்கப்படவுள்ள 500 கிலோ கிராம் ஹெரோயின்!

3 months 1 week ago
அழிக்க இருந்த சாராயப் போத்தலுக்குள்... தேயிலைச் சாயம் இருந்த மாதிரி, இவர்கள் கைப்பற்றிய ஹெரோயினை எடுத்து விட்டு கோதம்ப மாவை வைத்திருந்தால் எப்படி விற்பதாம். முன்னைய அரசாங்கத்தில் ஏற்கெனவே இவர்கள் கைப்பற்றுகின்ற கஞ்சா, ஹெரோயின் போன்ற போதைப் பொருட்கள் சுழற்சி முறையில் மீண்டும் வேறு ஆட்களுக்கு கைமாறி விற்பனை செய்யப் படுவதாக ஒரு முன்னாள் அமைச்சர் பாரளுமன்றத்தில் காவல்துறையினரை கண்டித்து இருந்தார்.

உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின

3 months 1 week ago
உயர்தர பரீட்சையில் மன்னாரில் முதலிடம் பிடித்த மாணவி! உயர்தர பரீட்சையில் கலைப்பிரிவில் மன்னார் சித்திவிநாயகர் இந்து தேசிய பாடசாலை மாணவி ஜெயந்தன் பவதாரணி முதல் இடம்பிடித்துள்ளார். 2024 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் நேற்று (26) வெளியாகின. அதில் கலை பிரிவில் மன்னார் கல்வி வலயத்தை சேர்ந்த மன்னார் சித்திவிநாயகர் இந்து தேசிய பாடசாலை மாணவி ஜெயந்தன் பவதாரணி 3 ஏ சித்திகளைப் பெற்று மாவட்ட மட்டத்தில் முதலாம் இடத்தையும் தேசிய ரீதியில் 84 வது இடத்தையும் பெற்று சாதனை படைத்துள்ளார். https://adaderanatamil.lk/news/cm9z3x79k002zqpzncl94uswc

தமிழ் தேசியம் எதிர் என்பிபி? - நிலாந்தன்

3 months 1 week ago
தமிழ் தேசியம் எதிர் என்பிபி? - நிலாந்தன் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடும் தமிழ்த் தேசியக் கட்சி ஒன்றின் வேட்பாளர் என்னிடம் கேடடார், ஒரு துண்டுப் பிரசுரத்தைத் தயாரிப்பதற்கு பின்வரும் கேள்விகளுக்கு கவர்ச்சியான விடைகள் வேண்டும் என்று. முதலாவது கேள்வி,தேசிய மக்கள் சக்திக்கு ஏன் வாக்களிக்க கூடாது? இரண்டாவது கேள்வி, மேற்படி வேட்பாளருடைய கட்சிக்கு ஏன் வாக்களிக்க வேண்டும்? மூன்றாவது கேள்வி, ஏனைய தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு ஏன் வாக்களிக்கக் கூடாது? நான் அவரிடம் சொன்னேன், முதலிரண்டு கேள்விகளும் சரி மூன்றாவது கேள்வி பொருத்தமானதா? என்று. ஏனெனில் என்பிபிக்கு எதிராக தமிழ்த் தேசியக் கட்சிகள் தங்களுக்கு இடையே போட்டித் தவிர்ப்பிற்கு போவதன் மூலம்தான் வாக்குத் திரட்சியைப் பாதுகாக்கலாம். இல்லையென்றால் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் வாக்களித்தது போல தமிழ் மக்கள் வாக்களிப்பார்களாக இருந்தால் என்பிபிக்குரிய வெற்றி வாய்ப்புகள் தொடர்ந்து பாதுகாக்கப்படும். தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒரே நேரத்தில் என்பிபிக்கு எதிராகவும் ஏனைய மூன்று தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு எதிராகவும்-ஆக மொத்தம் நான்கு தரப்புகளுக்கு எதிராகப்- போட்டியிட வேண்டி வரும். இது என்பிபிக்கு உற்சாகமூட்டக்கூடிய ஒரு விடயம்.தேர்தல் களத்தில் ஒப்பீட்டளவில் என்பிபி அதிகம் உற்சாகமாக வேலை செய்கிறது என்றே தோன்றுகிறது. கிராமங்கள் தோறும் நகரங்கள் தோறும் அவர்கள் தாங்கள் “எங்கும் இருக்கிறோம்” என்ற ஒரு தோற்றம் வரத்தக்க விதத்தில் பிரச்சாரத்தை காட்சி மயப்படுத்துகிறார்கள். தமிழ்க் கிராமங்களிலும் நகரங்களிலும் கண் படுமிடமெல்லாம் அவர்களுடைய சுவரொட்டிகளும் பதாகைகளும் உண்டு. அது மட்டுமல்ல, ஏனைய எல்லாக் கட்சிகளையும் விட என்பிபிதான் அதிக அளவில் பெருங்கூட்டங்களை ஒழுங்குபடுத்துகிறது. இக்கூட்டங்களில் அரச பிரதானிகள் கலந்து கொள்கிறார்கள். என்பிபிக்கு அடுத்தபடியாகத்தான் தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் தமிழரசுக் கட்சியும் வேலை செய்கின்றன என்று தோன்றுகிறது. தமிழ்த் தேசிய கட்சிகள் இதுவரை குறிப்பிட்டுச் செல்லக்கூடிய பிரமாண்டமான கூட்டங்களை ஒழுங்குப்படுத்தியிருக்கவில்லை.வேட்பாளர்களை அறிமுகப்படுத்தும் கூட்டங்கள்தான் நடக்கின்றன. இது கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போதும் ஒப்பிடப்பட்ட ஒரு விடயம். அப்பொழுதும் என்பிபிதான் அதிகம் பெருங் கூட்டங்களை ஒழுங்குபடுத்தியது. அதுவும் அது பெற்ற வெற்றிகளுக்கு ஒரு காரணம். தமிழ்த் தேசியக் கட்சிகள் தங்களிடம் நிதி இல்லை என்று கூறுகின்றன. புலம் பெயர்ந்த தமிழர்களிடமிருந்து பெரிய அளவில் நிதி திரளவில்லை என்றும் தெரிகிறது. அவ்வாறு பெருங்கூட்டங்களை நடத்தாத ஒரு பின்னணிக்குள் தேசிய மக்கள் சக்தியானது அரங்கில் அதிகம் வேலை செய்யும் ஒரு கட்சி என்ற தோற்றம் எழுகிறது. அண்மையில் நெடுங்கேணிப் பகுதிக்கு பிரதமர் ஹரிணி போனபோது, அங்கே அவரை வரவேற்று பதாகைகள் தொங்க விடப்பட்டன. அந்தப் பததைகளை ஒட்டியவர்களில் ஒருவர் தடுப்பிலிருந்து வந்த முன்னாள் இயக்கத்தவர் என்றும் மற்றவர் ஒதியமலைப் படுகொலையில் கொல்லப்பட்டவரின் மகன் என்றும் அப்பகுதியைச் சேர்ந்த தமிழ்த் தேசியக் கட்சி ஒன்றின் செயற்பாட்டாளர் தன்னுடைய முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அந்தத் தகவல் சரியா பிழையா என்பது தெரியவில்லை. ஆனால் தேசிய மக்கள் சக்தியை ஆதரிப்பவர்கள் யார் யார் என்று பார்த்தால் அவர்களில் குறிப்பிடத்தக்க அளவு தொகையினர் முன்பு தமிழ்த் தேசியக் கட்சிகளோடு நின்று உழைத்தவர்கள்தான். இங்கு யாழ் பல்கலைக்கழகத்தை ஒரு குறிகாட்டி எனலாம். ஒரு காலம் தமிழ்த் தேசிய ஆத்மாவை அடைகாத்த மையங்களில் அதுவும் ஒன்று. ஆயுதப் போராட்ட காலகட்டத்தில் மிக ஆபத்தான அரசியல் சூழலில் பல விரிவுரையாளர்கள் ஆயுதப் போராட்டத்திற்கு ஆதரவாக வேலை செய்தார்கள். சிலர் கைது செய்யப்பட்டார்கள். சிலர் தலைமறைவாக நேரிட்டது. அப்படிப்பட்ட ஒரு பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர்களில் எத்தனை பேர் இப்பொழுது தமிழ்த் தேசியக் கட்சிகளோடு பகிரங்கமாக நிற்கின்றார்கள்? கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போதும் இதுதான் நிலைமை. அப்பொழுது கிட்டத்தட்ட 15 விரிவுரையாளர்கள் ஒரு அறிக்கை விட்டிருந்தார்கள். அந்த அறிக்கையில் அவர்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதனை நேரடியாகச் சொல்லத் தயங்கினார்கள். ஆனால் இப்பொழுது அவர்கள் வெளிப்படையாகவே தேசிய மக்கள் சக்தியின் மேடைகளில் தோன்றுகிறார்கள். அவர்களில் ஒருவர் யாழ்.மாநகர சபைக்குரிய பிரதான வேட்பாளர். மற்றொருவர் மொழிபெயர்ப்பாளராக தமிழ் அரசியற் சூழலிலும் இலக்கியச் சூழலிலும் நன்கு தெரியவந்த ஒருவர். எளிமையானவர். சைக்கிளில்தான் திரிவார். அனுரவின் நண்பர். பல ஆண்டுகளுக்கு முன்பு யாழ். வீரசிங்க மண்டபத்தில், விடுதலைப் புலிகளால் ஒழுங்கமைக்கப்பட்ட “மானிடத்தின் ஒன்று கூடல்” நிகழ்வில் மொழிபெயர்ப்பாளராக இருந்தவர். கிட்டு பூங்காவில் நடந்த அனுரவின் கூட்டத்தில் அவர்தான் மொழிபெயர்ப்பாளர். இத்தனைக்கும் யாழ்.பல்கலைக்கழகத்தில் தமிழ்த் தேசிய நிலைப்பாட்டைக் கொண்டவர்கள்தான் அதிகம். ஆனால் அவர்கள் அமைப்பாக்கப்படவில்லை. தமிழ் மக்களின் பண்பாட்டுத் தலைநகரம் ஒன்றில் அமைந்துள்ள உயர் கல்வி நிறுவனமானது தமிழ்த் தேசிய அரசியலில் ஒரு கல்விச் சமூகமாக ஏன் வெளிப்படையாக இயங்கத் தயங்குகின்றது? ஆசிரியர்களும் சரி மாணவர்களும் சரி ஒரு சமூகமாக செயல்படத் தயாரில்லை. கடந்த ஜனாதிபதி தேர்தலின் போதும் அரசறிவியல் துறைத் தலைவர் ஒருவர் மட்டும்தான் பொது வேட்பாளருக்கான அணியில் வெளிப்படையாகக் காணப்பட்டார். ஆசிரியர்களும் ஒரு சமூகமாக வரத் தயங்கினார்கள்; மாணவர்களும் உதிரிகளாகவே வந்தார்கள். அறிக்கைகள் விட ஆயிரம் அமைப்புகள் உண்டு. ஒரு பல்கலைக்கழகம் அறிக்கையோடு நின்றுவிட முடியாது. கடந்த நாடாளுமன்ற தேர்தலோடு “தமிழ்த் தேசியமா?அல்லது என்பிபியா?” என்ற மோதல் ஏற்பட்டிருக்கும் ஒரு பின்னணியில், ஒரு பகுதி விரிவுரையாளர்கள் வெளிப்படையாக என்பிக்கு ஆதரவாக நிற்கும் ஒரு பின்னணியில், பல்கலைக்கழக ஆசிரியர்களும் மாணவர்களும் தங்களுக்கு விருப்பமான ஏதாவது ஒரு தமிழ்தேசியக் கட்சியோடு வெளிப்படையாக நின்று உழைப்பதற்கு ஏன் தயாரில்லை? என்பிபிக்கு ஆதரவான விரிவுரையாளர்கள் வெளிப்படையாக வேலை செய்கின்றார்கள். அரசாங்கத்தோடு வேலை செய்வது பாதுகாப்பானது. அது உயர் கல்வியையும் பாதிக்காது பதவி உயர்வுகளையும் பாதிக்காது. ஆனால் தமிழ்த் தேசியத்தின் பக்கம் நிற்பது ‘ரிஸ்க்’ ஆனது. அதனால்தான் தமிழ்த் தேசியக் கட்சிகளோடு வெளிப்படையாக நிற்பதற்கு பல்கலைக்கழகம் தயங்குகின்றது என்று ஒரு விளக்கம் தரப்படலாம். ஆனால் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தேசிய மக்கள் சக்தியும் அநுரவும் பெற்ற வெற்றிகளின் பின்னரும், ஒரு பண்பாட்டுத் தலைநகரத்தில் உள்ள உயர் கல்வி நிறுவனம் அவ்வாறு கூறிக் கொண்டிருக்க முடியாது. அதிலும் குறிப்பாக கடந்த 15 ஆண்டுகளாக சிங்களபௌத்த மயமாக்கலை அதிகம் எதிர்கொள்ளும் ஒரு பல்கலைக்கழகம் அவ்வாறு ஓய்ந்திருக்க முடியாது. யாழ். பல்கலைக்கழகத்தின் சில துறைகளில் ஒப்பீட்டளவில் சிங்கள மாணவர்களின் தொகை அதிகரித்து வருகிறது. கடந்த 15 ஆண்டுகளில் அதிகம் சிங்கள பௌத்த மயப்பட்டு வரும் நிறுவனங்களில் யாழ். பல்கலைக்கழகமும் ஒன்று. அது கடந்த 15 ஆண்டு கால தமிழ்த் தேசிய அரசியலின் ஒரு குறி காட்டியாக நிற்கிறது. தமிழ்த் தேசிய கட்சிகள் தங்களையும் கட்சிகளாக வளர்த்துக் கொள்ளவில்லை. தமிழ் மக்களையும் ஒரு தேசமாகத் திரட்டிக் கொள்ளவில்லை. தமிழ்த் தேசியக் கட்சிகள், கடந்த 15 ஆண்டுகளாக கட்டமைப்புக்களுக்கூடாகச் சிந்திக்கத் தவறிவிட்டன. மாணவ அமைப்புக்கள், ஆசிரியர்கள் மற்றும் அறிவுஜீவி அமைப்புக்கள், மகளிர் அமைப்புகள், தொழிற்சங்கங்கள், தொழில்சார் அமைப்புக்கள் போன்ற அமைப்புகளை உள்வாங்கி தமிழ்த்தேசிய அரசியலை கட்டமைப்புகளுக்கு ஊடாக கட்டியெழுப்பத் தவறி விட்டன. அந்த வெற்றிடத்திற்குள் கட்டமைப்புகளை உருவாக்கும் பயிற்சியும் அனுபவமும் மிக்க ஜேவிபியை அடித்தளமாகக் கொண்ட என்விபி தீயாக இறங்கி வேலை செய்கின்றது. ஏனென்றால் அப்படிப்பட்ட கட்டமைப்புகளை இணைத்து உருவாக்கபட்டதுதான் என்பிபி. கடந்த பொதுத் தேர்தலில் அவர்களுக்கு கிடைத்த வெற்றி எதிர்பாராத ஒன்று. ஆனால் இனி வரக்கூடிய தேர்தல்களில் அந்த வெற்றியை எப்படிப் பாதுகாப்பது?எப்படி அடுத்த கட்டத்துக்கு வளர்த்துச் செல்வது? என்றுதான் அவர்கள் திட்டமிடுகிறார்கள். எனது நண்பர் ஒருவர் சுட்டிக்காட்டியதுபோல தேர்தல் காலத்தில் தலதா மாளிகையின் புனித தந்த தாதுவை மக்கள் தரிசிப்பதற்கு அனுமதித்ததன்மூலம் என்பிபி சிங்கள பௌத்த வாக்குகளைக் கவரப்பார்க்கிறது. அதனால் கண்டி மாநகரத்தின் தெருக்களில் எதிர்பாராத விதமாக குவிந்த யாத்திரிகர்கள் கண்டி மாநகரத்தை குப்பைத் தொட்டியாக்கி விட்டார்கள். தந்த தாதுவைக் காட்டப்போய் குப்பை கொட்டியதில் முடிந்து விட்டதா? என்பிபி யாழ்ப்பாணத்தில் பலாலி வீதியைத் திறக்கின்றது.சோதனைச் சாவடிகளை மூடுகின்றது, மாவிட்ட புரம் கந்தசாமி கோவிலுக்குப் போகின்றது. கண்டியில் தலதா மாளிகையைத் திறந்து விடுகிறது. எல்லாமே தேர்தல் உள்நோக்கத்தைக் கொண்டவை. கிட்டுப் பூங்காவில் அனுர வந்த பொழுது அவருக்கு கொடுக்கப்பட்ட வரவேற்புக் காணொளி அதிகமதிகம் பகிரப்படுகின்றது. அவரை நோக்கி ஆண்களும் பெண்களும் தங்களுடைய கைகளை குலுக்குவதற்காக நீட்டுகிறார்கள். சிலர் உணர்ச்சி மேலிட்டால் அல்லது திட்டமிட்டு “ஜெய வேவ” என்று கோஷம் எழுப்புகிறார்கள். கடந்த பல தசாப்தங்களில் தமிழ் மக்கள் மத்தியில் ஒரு சிங்கள பௌத்த அரசுத் தலைவருக்கு இப்படி ஒரு வரவேற்புக் கிடைத்ததில்லை.இப்படி ஓர் ஈர்ப்பு இருந்ததில்லை. ‘அது திட்டமிட்டு கொண்டுவரப்பட்ட ஒரு கூட்டம். திட்டமிட்டு காட்சி மயப்படுத்தப்பட்ட ஒரு விடயம்`.என்று கூறிவிட்டுக் கடந்துபோக முடியாது. தமிழ்க் கட்சிகள் விட்ட வெற்றிடத்தில்தான் என்பிபி மேலெழுந்தது. அநுர மேலெழுந்தார். இப்பொழுதும் தமிழ் தேசியக் கட்சிகள் நான்காக நிற்கின்றன. இது தமிழ் மக்களைக் கவர உதவாது. அதேசமயம் அது என்பிபிக்கு உற்சாகமூட்டுவது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் கூட்டு ஒப்பீட்டளவில் முன்னேற்றகரமான ஒரு விடயம். நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின்னரான ஒரு புதிய மாற்றம் அது. எனினும் இக்கட்டுரையின் தொடக்கத்தில் கூறப்பட்டதுபோல, தமிழ்த் தேசியக் கட்சிகள் போட்டித் தவிர்ப்புக்கு போகக்கூடிய வாய்ப்புகள் பிரகாசமாகத் தெரியவில்லை. பிரச்சாரக் கூட்டங்களிலும் ஒருவர் மற்றவரைத் தாக்கி வருகிறார்கள். ஒவ்வொரு கட்சியும் ‘நான்;நான்’ என்று சிந்திக்கின்றது. ’நாங்கள்;தேசம்’என்று சிந்திப்பதாகத் தெரியவில்லை. நான்; நான் என்று ஒவ்வொரு வேட்பாளரும் சிந்திக்கும்போது அங்கே ” நாங்கள்”என்ற தேசியக் கூட்டுணர்வு ஏற்படாது. நான் நான் என்று சிந்தித்தால் போட்டித் தவிர்ப்பிற்குப் போக முடியாது. நாங்கள் என்று சிந்தித்தால்தான் போட்டித் தவிர்ப்புக்குப் போகலாம். ஆனால் தேசிய மக்கள் சக்தியோ ‘நாங்கள் இலங்கையர்கள்’ என்று சொல்லிக்கொண்டு தமிழ்க் கிராமங்களைக் கவ்விப் பிடிக்க முயற்சிக்கின்றது. https://www.nillanthan.com/7342/

தீக்கிரையாக்கப்படவுள்ள 500 கிலோ கிராம் ஹெரோயின்!

3 months 1 week ago
இப்படித்தான் அண்மையில்800 வெளிநாட்டு மதுபானப் போத்தல்கள் அழிக்கும்படி உத்தரவுக்கு எற்ப..அழிக்கும் இடத்தில் .போத்தகல்கள் சோதனையிடப்பட்டபோது ..அவற்றினுள்.. தேயிலைச்சாயமே இருந்ததாம் ...இதுதான் கிளீன் சிரிலங்கா

உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின

3 months 1 week ago
யாழ் . இந்துவில் 55 மாணவர்களுக்கு 3A adminApril 27, 2025 வெளியாகியுள்ள க.பொ.த உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளில் யாழ்ப்பாணம் இந்து கல்லூரியில் 55 மாணவர்களுக்கு மூன்று பாடங்களில் “ஏ“ சித்தி கிடைத்திருக்கின்றது. 33 மாணவர்கள் இரண்டு பாடங்களில் “ஏ” சித்தி பெற்றி ருக்கிறார்கள். உயிரியல் பிரிவில் 22 பேரும், பௌதீகவியல் பிரிவில் 27 மாணவர்களும், வர்த்தகத்துறையில் ஒருவரும் மூன்று பாடங்களிலும் “ஏ” சித்தியை பெற்றிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. உயிரியல் விஞ்ஞானத்தில் மாவட்ட நிலையில் 1, 2, 3, 4 ஆம் இடங்கள், வர்த்தகத்தில் மாவட்ட நிலையில் முதலாம் இடம், பொறியியல் தொழில் நுட்பத்தில் மாவட்ட மாவட்ட நிலையில் முதலாம் இடம், பௌதீக விஞ்ஞானத்தில் மாவட்ட நிலையில் இரண்டாம் இடம், உயிர் முறைமைகள் தொழில்நுட்பத்தில் மாவட்ட நிலையில் இரண்டாம் இடம் யாழ் இந்துவுக்குக் கிடைத்துள்ளது. https://globaltamilnews.net/2025/214743/

பலாலி வீதி திறப்பு – காங்கேசன்துறை வரை சிற்றூர்திகள் சேவையில்

3 months 1 week ago
பலாலி வீதி திறப்பு – காங்கேசன்துறை வரை சிற்றூர்திகள் சேவையில் adminApril 27, 2025 எதிர்வரும் முதலாம் திகதியிலிருந்து 764 வழித்தட சிற்றூர்திகள் (மினிபஸ்கள்) யாழ்ப்பாணத்திலிருந்து பலாலி வீதியூடாக காங்கேசன்துறை வரையில் சேவையில் ஈடுபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று 769 வழித்தட சிற்றூர்திகளும், யாழ்ப்பாணத்திலிருந்து காங்கேசன்துறை வீதியூடாக காங்கேசன்துறை வரையில் சேவையில் ஈடுபடும். கடந்த 10ஆம் திகதியன்று பலாலி வீதி கட்டுப்பாடுகளுடன் முழுமையாக திறக்கப்பட்ட நிலையில் குறித்த இரு வழித்தட சிற்றூர்திகளும் சேவையில் ஈடுபடவுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://globaltamilnews.net/2025/214749/

சிறுமியை துஸ்பிரயோகம் -இரு பெண்கள் உட்பட மூவர் கைது

3 months 1 week ago
சிறுமியை துஸ்பிரயோகம் -இரு பெண்கள் உட்பட மூவர் கைது adminApril 27, 2025 யாழ்ப்பாணத்தில் சிறுமி ஒருவரை கடந்த இரண்டு வருட காலத்திற்கு மேலாக பாலியல் துஸ்பிரயோகத்துக்குட்படுத்திய குற்றச்சாட்டில் இரண்டு யுவதிகள் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். வட்டுக்கோட்டை காவல்துறைப்பிரிவுக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த சிறுமி ஒருவரை அயல் வீட்டு பெண்ணொருவரும் மற்றுமொரு பெண்ணொருவரும் இணைந்து சிறுமியை மிரட்டி பிற ஆண்களுடன் உறவு கொள்ள வைத்து , பணம் சம்பாத்தித்து வந்துள்ளனர். தாம் பணம் பெற்றுக்கொண்ட போதிலும் , சிறுமிக்கு பணம் கொடுக்காது இனிப்பு பண்டங்களை மாத்திரம் வழங்கியுள்ளனர் இந்நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமி , தனது உறவினர் ஒருவருக்கு இது தொடர்பில் தெரிவித்தமையை அடுத்து , வட்டுக்கோட்டை காவல்துறையினருக்கு தகவல் வழங்கப்பட்டது. தகவலின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த காவல்துறையினர், பாதிக்கப்பட்ட சிறுமியை மீட்டு வைத்திய பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில், சிறுமியிடம் மேற்கொள்ளப்பட்ட முதல் கட்ட விசாரணைகளின் அடிப்படையில் இரு பெண்கள் உள்ளிட்ட மூவரை கைது செய்துள்ளனர் கைது செய்யப்பட்டவர்களை காவல் நிலையத்தில் தடுத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ள காவல்துறையினா் , சிறுமியை துஸ்பிரயோகத்துக்குட்படுத்திய ஏனைய ஆண்கள் தொடர்பிலும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். https://globaltamilnews.net/2025/214752/

கனடாவில் கூட்டத்திற்குள் கார் மோதி விபத்து; பலர் உயிரிழப்பு!

3 months 1 week ago
கனடாவில் கூட்டத்திற்குள் கார் மோதி விபத்து; பலர் உயிரிழப்பு! கனடாவின் மேற்கு நகரமான வான்கூவரில் நடந்த ஒரு திறந்த வெளி நிகழ்வின் போது, நபரொருவர் தான் பயணித்த வாகனத்தை கூட்டத்திற்குள் வேகமாக செலுத்தி விபத்தை ஏற்படுத்தியுள்ளார். இந்த சம்பவத்தில் ஒரு குழந்தை உட்பட குறைந்தது எட்டு பேர் உயிரிழந்துள்ளதாகவும், ஆறு பேர் காயமடைந்துள்ளதாகவும் சாட்சியங்களை மேற்கொள்காட்டு குளோபல் நியூஸ் தெரிவித்துள்ளது. எனினும், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை இன்னும் உறுதிப்படுத்தாத வான்கூவர் பொலிஸார், சந்தேக நபரை கைது செய்துள்ளதாகவும் எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளனர். அந் நாட்டு நேரப்படி சனிக்கிழமை இரவு 8.00 மணியளவில் கூட்டத்தின் வழியாக ஒரு கருப்பு SUV வாகனம் வேகமாக பயணித்து விபத்தை ஏற்படுத்தியதாக சாட்சிகள் விவரிக்கின்றனர். என்ன நடந்தது என்பது குறித்து வான்கூவர் பொலிஸார் எந்த விவரங்களையும் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை. ஆனால் கிழக்கு 41வது அவென்யூ மற்றும் ஃப்ரேசர் தெருவில் இரவு 8 மணிக்குப் பின்னர் ஒரு சாரதி கூட்டத்திற்குள் வாகனத்தை ஓட்டிச் சென்றதை அவர்கள் உறுதிப்படுத்தினர். https://athavannews.com/2025/1429677

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பை சந்தித்துக் கலந்துரையாடிய செலன்ஸ்கி!

3 months 1 week ago
ட்ரம்ப் பல முயற்சிகளை ஒருங்கே செய்ய முயற்சிக்கின்றார், ட்ரம்ப் தொடர்பில் அவர் மீதான விமர்சனம் நாளுக்கு நாள் அதிகரிக்கின்றது அண்மையில் அமெரிக்க மத்திய வங்கி ஆளுனரின் பதவியினை பறிப்பேன் என கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். அவ்வாறு மத்திய வங்கியின் ஆளுனரை பதவியிலிருந்து தூக்கியெறிய முடியாது, மத்திய வங்கி சட்டம் மூலம் அவர் மீட்கு வட்டி விகிதம் குறைக்கவில்லை என்பதற்காக பதவி விலக்கினால் நீதிமன்றத்தில் ட்ரம்ப் தோல்வியடைவார் என கூறப்படுகிறது ( For cause). அமெரிக்காவின் முதல் காலாண்டு மொத்த தேசிய வருமானம் -0.2% ஆக வந்துள்ளது இன்னுமொரு காலாண்டு மொத்த தேசிய வருமான மறை இலக்கத்தில் வந்தால் பொதுவாக அதனை பொருளாதார சரிவு என வரையறுக்கிறார்கள் (recession). இந்த புள்ளி விபரம் தெரிந்த ட்ரம்ப் தனது தாக்குதலை மத்திய வங்கி ஆளுனரின் மேல் தொடங்கியுள்ளார் என கருதுகிறேன், வட்டி விகித குறைப்பு பொருளாதாரத்தினை தூண்டும் ஆனால் தற்போது பணவீக்கம் முழுமையாக கட்டிற்குள் வரவில்லை அந்த நிலையில் வட்டி விகித குறைப்பு பொருளாதார சரிவினை தூண்டும். பொருளாதார சரிவு வெறுமனே மொத்த தேசிய வருமானத்தினை மட்டும் கவனத்தில் கொள்ளப்படும் விடயம் அல்ல, மாறாக வேலை வாய்ப்பு, உற்பத்தித்துறை, தனிநபர் தேறிய வருமானம் என்பவற்றில் தங்கியுள்ளது. மொத்த தேசிய வருமானத்திலேயே அமெரிக்கா தற்போது சரிவினை கண்டு வருகிறது ஆனால் மற்ற விடயங்களில் ட்ரம்பின் ஆட்சி ஏற்பின் பின்னர் நல்ல முன்னேற்றம் காணப்படுகிறது ஆனால் இவை அனைத்தும் ஒன்றோடொன்று தொடர்புடைய காரணி, ஒன்று சரிந்தால் மற்றதும் சரிவடையலாம். Real-time Sahm Rule Recession In...Real-time Sahm Rule Recession Indicator https://tradingeconomics.com/united-states/manufacturing-pmi ட்ரம்ப் தனது புகழை விட்டு செல்ல விரும்புகிறார், ஆனால் அவர் நினைப்பதற்கும் நடைமுறைக்கும் இடையே இடைவெளி உள்ளது போல இருக்கிறது. தற்போது உலகம் ஒரு உண்மையினை உணர்ந்துள்ளது, போரினால் யாரும் அனுகூலமடைய முடியாது, கர்மா வீடு தேடி வரும்.

பொன்னியின் செல்வன் பாடல்: ஏ.ஆர்.ரஹ்மான் ரூ.2 கோடி செலுத்த உத்தரவு - காப்புரிமை சர்ச்சைகள் தொடர்வது ஏன்?

3 months 1 week ago
நீங்கள் சொல்வது உண்மைதான். இளையராஜாவிற்கு மேடையில் எப்படி பேச வேண்டும் என தெரியாது.ஆனால் மேடையில்லாத அவர் வாழ்க்கை மிக மிக நாகரீகமானது. தமிழ்நாட்டு திரையுலகை பொறுத்தவரையில் நூற்றுக்கு தொண்ணூறு வீதமானவர்கள் மேடையில் நாகரீகமாக இருந்து விட்டு மேடை பின் நடக்கும் இருட்டு வாழ்க்கையும் அசிங்க வாழ்க்கையும் எவ்வளவு அசிங்கமானது என்பதை என்பதை இந்த ஊர் உலகமும் அறியும் தாங்களும் அறிவீர்கள் என நம்புகின்றேன். எந்த வாழ்க்கை சிறந்தது என நீங்களே முடிவெடுத்துக்கொள்ளுங்கள். அதை நீதிமன்றங்கள் தான் சட்ட ரீதியாக தீர்மானிக்க வேண்டும். ஏனைய இசை அமைப்பாளர்களுக்கு சட்டரீதியாக இசையுரிமை பணம் போகின்றது. இளையராஜா முன்னரெல்லாம் அதைப்பற்றி அலட்டிக்கொள்ளவில்லை. ஆனால் மற்றவர்கள் தனது பாடல்களுக்கு உரிமம் கோரும் போது இளையராஜா ஏன் வாய் மூடிக்கொண்டிருக்க வேண்டும்? அதை அவர் மேடைகளிலேயே நேரடியாக சொல்லியுள்ளார். அதற்கான காரணங்களையும் மிக தெளிவாக சொல்லியுள்ளார். ஏனைய இசையமைப்பாளர்கள் அப்படி பொது வெளியில் சொல்லியதாக தெரியவில்லை.

பொன்னியின் செல்வன் பாடல்: ஏ.ஆர்.ரஹ்மான் ரூ.2 கோடி செலுத்த உத்தரவு - காப்புரிமை சர்ச்சைகள் தொடர்வது ஏன்?

3 months 1 week ago
மேஸ்டிரோ… பேஷ்…பேஷ்…காப்பின்னா மேஸ்டிரோ காப்பிதான்😂👇 மாட்டிகினாரு ஒத்தரு அவர காப்பத்தவேணும் கர்த்தரு…

பொன்னியின் செல்வன் பாடல்: ஏ.ஆர்.ரஹ்மான் ரூ.2 கோடி செலுத்த உத்தரவு - காப்புரிமை சர்ச்சைகள் தொடர்வது ஏன்?

3 months 1 week ago
சகல விடயத்திலும் அணி பிரிந்து அடிபடத்தேவையில்லை😂. ஆர் செய்தாலும் தப்பு, தப்புத்தான். முன்பே ரஹ்மான் பல ஸ்பானிய இதர மொழி பாடல்களை அப்படியே உருவி பாவித்தமையை கண்டுள்ளோம். யூடியூப்பில் பல வீடியோக்களும் உள்ளன. ராஜாவும் இப்படி உருவி உள்ளார். எவ்வளவு பணம் இருக்கு, இசையை பாவிக்க முன்னம், உரிமையாளருக்கு கொஞ்சம் கொடுத்து, பெயரை படத்தின் முடிவில் ஓடும் கிரெட்டிசில் ஒரு மூலையில் போட்டால் ஒரு சர்ச்சையும் வராது. ஆனால் கண்டுபிடிக்க மாட்டார்கள் என்ற எண்ணத்தில் களவு எடுத்து மாட்டி கொள்வது😀. ராஜா மீதான விமர்சனம் 4 வகைபடும். அவர் இயல்பிலேயே சபை நாகரீகம் அற்றவர் பல படங்களின் பாடல் உரிமை அவருடையது அல்ல, தயாரிப்பாளரது பிச்சைகாரத்தனமாக மேடை நிகழ்ச்சியில், பணக்கஸ்டத்தில் இருக்கும் போது எஸ் பி பி பாடியதற்கு கூட காசு கேட்டார் மெட்டுக்களை திருடினார் இதில் 4 வது மட்டுமே இதுவரை ரஹ்மானுக்கு பொருந்தும்.

தீக்கிரையாக்கப்படவுள்ள 500 கிலோ கிராம் ஹெரோயின்!

3 months 1 week ago
ஒரு தகவலுக்காகத்தான் கேட்கிறேன் . ....... இவ்வளவு பெறுமதியான பொருளை ஏன் அரசாங்கமே இவற்றைச் சட்டபூர்வமாக பாவிக்கும் , வைத்திருக்கும் நாடுகளுக்கு விற்பனை செய்யக்கூடாது . ......... !

உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின

3 months 1 week ago
உயர்தரப் பரீட்சை பெறுபேறு; யாழ். மருத்துவரின் இரட்டை புதல்வர்கள் சாதனை! வெளியாகியுள்ள 2024 க.பொ.த. உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளில் யாழ்.போதனா வைத்தியசாலையினுடைய மருத்துவர் சி. ஜமுனானந்தாவின் இரட்டை புதல்வர்களும் மாவட்ட மட்டத்தில் முதல் மற்றும் இரண்டாம் இடங்களையும் பெற்று சாதனை படைத்துள்ளனர். அதேநேரம், அவர்கள் இலங்கை மட்டத்திலும் மூன்றாம் மற்றும் நான்காம் இடங்களை பிடித்தனர். யாழ்ப்பாணத்தில் உயர்தரத்தில் உயிரியல் விஞ்ஞானத் துறையில் உயரிய மாணவர்களின் பெறுபேறுகள். https://athavannews.com/2025/1429667
Checked
Sun, 08/10/2025 - 06:59
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed