புதிய பதிவுகள்2

உயர்தரப் பரீட்சையில் உயிரியல் விஞ்ஞான பிரிவில் யாழ். மாவட்டத்திற்கு பெருமை சேர்த்த இரட்டையர்கள்

3 months 1 week ago
உயர்தரப் பரீட்சை பெறுபேறு; யாழ். மருத்துவரின் இரட்டை புதல்வர்கள் சாதனை! வெளியாகியுள்ள 2024 க.பொ.த. உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளில் யாழ்.போதனா வைத்தியசாலையினுடைய மருத்துவர் சி. ஜமுனானந்தாவின் இரட்டை புதல்வர்களும் மாவட்ட மட்டத்தில் முதல் மற்றும் இரண்டாம் இடங்களையும் பெற்று சாதனை படைத்துள்ளனர். அதேநேரம், அவர்கள் இலங்கை மட்டத்திலும் மூன்றாம் மற்றும் நான்காம் இடங்களை பிடித்தனர். யாழ்ப்பாணத்தில் உயர்தரத்தில் உயிரியல் விஞ்ஞானத் துறையில் உயரிய மாணவர்களின் பெறுபேறுகள். Athavan Newsஉயர்தரப் பரீட்சை பெறுபேறு; யாழ். மருத்துவரின் இரட்டை புதல...வெளியாகியுள்ள 2024 க.பொ.த. உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளில் யாழ்.போதனா வைத்தியசாலையினுடைய மருத்துவர் சி. ஜமுனானந்தாவின் இரட்டை புதல்வர்களும் மாவட்ட மட்டத்தில் முதல் மற்றும் இரண்டாம் இடங்களையும் பெற்...

ஸ்ரீ தலதா வழிபாட்டின் இறுதி நாள் இன்றாகும்!

3 months 1 week ago
ஸ்ரீ தலதா வழிபாட்டின் இறுதி நாள் இன்றாகும்! உலகெங்கிலும் உள்ள பௌத்தர்களால் மிகவும் மதிக்கப்படும், இந்நாட்டில் பௌத்தர்களின் சிகரமாகத் திகழும் மிகவும் புனித தந்த தாதுவை உள்ளூர் மற்றும் வெளிநாட்டு பக்தர்கள் தங்கள் கண்களால் காணும் வாய்ப்பை வழங்கும் “ஸ்ரீ தலதா வழிபாட்டின்” இறுதி நாள் (27) இன்றாகும். இன்று காலை 11.00 மணி முதல் மாலை 5.30 மணி வரை பக்தர்கள் புனித புனித தந்த தாதுவை பார்வையிட்டு வழிபடுவதற்கு வாய்ப்பு கிடைக்கும். வரலாற்று சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகையில் அமைந்துள்ள புனித தந்ததாது நினைவுச் சின்னத்தைக் பார்வையிட்டு வழிபடும் வாய்ப்பு 18 ஆம் திகதி உள்ளூர் மற்றும் வெளிநாட்டு மக்களுக்கு கிடைத்தது. கடந்த 9 நாட்களில், இலட்சக்கணக்கான யாத்ரீகர்கள் புனித தந்த தாதுவை வழிபட வாய்ப்பைப் பெற்றுள்ளதுடன், இன்றும் அதனை காண்டு வழிபட ஏராளமான மக்கள் வரிசையில் காத்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்கிடையில், கண்டி நகரில் குவிந்துள்ள குப்பைகளை அகற்றுவது உட்பட, நகரம் முழுவதும் தூய்மைப்படுத்தும் திட்டத்தைத் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, இன்று முதல் இந்த வேலைத்திட்டம் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதாக மத்திய மாகாண பிரதம செயலாளர் அஜித் பிரேமசிங்க தெரிவித்துள்ளார். https://athavannews.com/2025/1429644

கருத்து படங்கள்

3 months 1 week ago
ஸ்ரீ தலதா வழிபாட்டின் இறுதி நாள் இன்றாகும்! இதற்கிடையில், கண்டி நகரில் குவிந்துள்ள குப்பைகளை அகற்றுவது உட்பட, நகரம் முழுவதும் தூய்மைப்படுத்தும் திட்டத்தைத் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தீக்கிரையாக்கப்படவுள்ள 500 கிலோ கிராம் ஹெரோயின்!

3 months 1 week ago
தீக்கிரையாக்கப்படவுள்ள 500 கிலோ கிராம் ஹெரோயின்! இலங்கை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்ட சுமார் 500 கிலோ கிராம் ஹெராயின் போதைப்பொருள் நாளை திங்கட்கிழமை புத்தளத்தில் எரித்து அழிக்கப்படும் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் பொலிஸார் விடுத்துள்ள அறிக்கையில், நீதிமன்ற ஆதாரமாக வைக்கப்பட்டிருந்த மொத்தம் 494.48 கிலோ ஹெராயின் புத்தளம், பாலாவியவில் உள்ள ஒரு சிமென்ட் தொழிற்சாலையில் எரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இலங்கை கடற்படை மற்றும் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு இணைந்து நடத்திய கூட்டு நடவடிக்கையின் போது 2021 டிசம்பரில் கைப்பற்றப்பட்ட 250.996 கிலோ ஹெராயின் இதில் அடங்கும். இதன் மூலம் ஆறு வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டனர். மேலும், 2022 ஏப்ரல் மாதம் கைது செய்யப்பட்ட ஏழு வெளிநாட்டினரிடம் இருந்த 243.052 கிலோ ஹெராயின் தொகையும் இதில் அடங்கும். நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், நாளை காலை 7.00 மணிக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்திலிருந்து ஹெராயின் விடுவிக்கப்பட்டு செய்யப்பட்டு புத்தளத்தில் உள்ள சிமென்ட் தொழிற்சாலைக்கு கொண்டு செல்லப்படும் என்று பொலிஸார் தெரிவித்தனர். பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால, அமைச்சின் அதிகாரிகள் மற்றும் பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய ஆகியோரின் முன்னிலையில் போதைப்பொருள் அழிக்கப்படவுள்ளது. https://athavannews.com/2025/1429664

உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின

3 months 1 week ago
177,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் பல்கலைக்கழக நுழைவுக்குத் தகுதி! 2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியிடப்பட்டதன் மூலம் பல்கலைக்கழக அனுமதிக்குத் தகுதி பெற்றுள்ள மாணவர்களின் எண்ணிக்கை தொடர்பில் இலங்கைப் பரீட்சைகள் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் பெறுபேறுகளின்படி மொத்தமாக 177,588 மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதிக்கு தகுதி பெற்றுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது. இது பரீட்சைக்கு தோற்றிய மொத்த மாணவர்களில் 64.43 சதவீதமாகும். இதற்கிடையில், 456 பரீட்சார்த்திகளின் பரீட்சை முடிவுகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மேலும், உயர்தரப் பரீட்சை முடிவுகளை மீள் மறுபரிசீலனை செய்வதற்கான விண்ணப்பங்கள் எதிர்வரும் மே 2 முதல் மே 16 ஆம் திகதி வரை ஆன்லைன் முறை மூலம் ஏற்றுக்கொள்ளப்படும் என்றும் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. 2024 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சைக்கு மொத்தம் 222,774 பாடசாலை விண்ணப்பதாரர்களும் 51,587 தனியார் விண்ணப்பதாரர்களும் தோற்றினர். க.பொ.த. உயர்தரப் பரீட்சையின் முடிவுகள் நேற்று மாலை (26) ஆன்லைனில் வெளியிடப்பட்டிருந்தன. https://athavannews.com/2025/1429649

உயர்தரப் பரீட்சையில் உயிரியல் விஞ்ஞான பிரிவில் யாழ். மாவட்டத்திற்கு பெருமை சேர்த்த இரட்டையர்கள்

3 months 1 week ago
மாவட்ட மட்டத்தில் முதல் இரு இடங்களையும், தேசிய மட்டத்தில் 3ஆம் மற்றும் 5ஆம் இடங்களை பெற்ற யாழ்.இந்துக் கல்லூரியை சேர்ந்த இரட்டையர்களுக்கு வாழ்த்துக்கள். தகுந்த முறையில் கல்வி அறிவு புகட்டிய... அவர்களின் பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் வாழ்த்துக்கள்.

தீவிரவாதிகளின் குடியிருப்புகளை குறிவைத்து ஜம்மு-காஷ்மீரில் தீவிர தாக்குதல்!

3 months 1 week ago
தீவிரவாதிகளின் குடியிருப்புகளை குறிவைத்து ஜம்மு-காஷ்மீரில் தீவிர தாக்குதல்! கடந்த ஏப்ரல் 22 ஆம் திகதி பஹல்காமில் 26 பேர் கொல்லப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, ஜம்மு-காஷ்மீரில் இந்திய பாதுகாப்பு படையினர் தீவிரவாதிகள் மற்றும் அவர்களின் நிலையங்களுக்கு எதிரான தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளனர். குறிப்பாக கடந்த 48 மணி நேரத்தில் ஆறு தீவிரவாதிகளின் குடியிருப்புகளை பாதுகாப்புப் படையினர் அழித்துள்ளதுடன், “பயங்கரவாத சுற்றுச்சூழல் அமைப்பை அகற்றும்” தேடுதல் நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுத்து வருவதாக இந்திய ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன. அண்மைய நடவடிக்கையில், ஷோபியன் மாவட்டத்தின் ஜைனாபோரா (Zainapora) பகுதியில் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதியான அட்னான் ஷாஃபியின் வீடு வெடித்துச் சிதறிக்கப்பட்டது. இந்த தாக்குதலின் சில மணி நேரங்களுக்கு முன்பு, தற்போது பாகிஸ்தானில் வசிக்கும் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதியான ஃபரூக் அஹமட்டின் குப்ரா நகரில் அமைந்துள்ள வீடு குண்டுவீச்சுக்கு உள்ளாகியுள்ளது. ஃபரூக்கின் வீட்டோடு, ஏனைய தீவிரவாதிகளுடன் தொடர்புடைய சொத்துக்களும் குறிவைக்கப்பட்டதாக இந்திய பாதுகாப்பு அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். அதேநேரம், கடந்த வெள்ளிக்கிழமை, பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்டதாக நம்பப்படும் இரண்டு தீவிரவாதிகளின் வீடுகளையும் பாதுகாப்புப் படையினர் அழித்துள்ளனர். கடந்த ஏப்ரல் 22 ஆம் திகதி பஹல்காமில் உள்ள பைசரன் பள்ளத்தாக்கைச் சுற்றியுள்ள அடர்ந்த பைன் காட்டில் இருந்து 4 முதல் 5 பேர் வரையிலான தீவிரவாதிகள் வெளிவந்து, சுற்றுலாப் பயணிகள் மீது AK-47 துப்பாக்கிளை பயன்படுத்தி துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதனால், 26 பேர் உயிரிழந்தனர். 2019 புல்வாமா தாக்குதலுக்குப் பின்னர் பள்ளத்தாக்கில் நடந்த மிகவும் பேரழிவு தரும் சம்பவங்களில் ஒன்றாக இது பதிவானது. இதேவேளை, மத்திய உள்துறை அமைச்சின் (MHA) உத்தரவைத் தொடர்ந்து, பஹல்காம் தீவிரவாதத் தாக்குதல் வழக்கை, பயங்கரவாத எதிர்ப்பு அமைப்பான இந்திய தேசிய புலனாய்வு அமைப்பு (NIA) முறையாகக் கையகப்படுத்தும் பணியைத் தொடங்கியுள்ளது. கடந்த புதன்கிழமை முதல் தீவிரவாத தாக்குதல் நடந்த இடத்தில் முகாமிட்டுள்ள இந்திய தேசிய புலனாய்வு அமைப்பு குழுக்கள், சாட்சியங்களை தேடும் பணியை தீவிரப்படுத்தியுள்ளன. பயங்கரவாத எதிர்ப்பு அமைப்பின் மூத்த அதிகாரிகளால் மேற்பார்வையிடப்படும் இந்தக் குழுக்கள், அமைதியான மற்றும் அழகிய பைசரன் பள்ளத்தாக்கில் தங்கள் கண்களுக்கு முன்பாக நடந்த கொடூரமான தாக்குதலை நேரில் கண்ட சாட்சிகளை ஆய்வு செய்கின்றனர். https://athavannews.com/2025/1429655

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பை சந்தித்துக் கலந்துரையாடிய செலன்ஸ்கி!

3 months 1 week ago
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பை சந்தித்துக் கலந்துரையாடிய செலன்ஸ்கி! நித்திய இளைப்பாறிய புனித பாப்பரசர் பிரான்சிஸின் இறுதி ஆராதனை நிகழ்வு வத்திக்கானிலுள்ள புனித பீட்டர்ஸ் பெசிலிக்கா தேவாலயத்தின் திறந்தவெளி முற்றத்தில் இன்று இடம்பெற்றன. இந்நிகழ்வில் கலந்து கொள்வதற்காக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், பிரித்தானிய இளவரசர் வில்லியம்ஸ், உக்ரேன் ஜனாதிபதி வொலோடிமிர் செலன்ஸ்கி உட்பட பல உலகத் தலைவர்கள் வத்திகானுக்கு வருகை தந்திருந்தனர். இந்நிலையில் பிரான்சிஸ் திருத்தந்தையின் நல்லடக்க ஆராதனைகளைத் தொடர்ந்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும் உக்ரேன் ஜனாதிபதி வொலோடிமர் செலன்ஸ்கியும் இன்று விசேட கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தனர். இது தொடர்பான புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1429622

ஈரானில் பாரிய வெடிப்புச் சம்பவம்! 500க்கும் மேற்பட்டோர் காயம்

3 months 1 week ago
ஈரானிய துறைமுக வெடிப்பு சம்பவம்; 18 பேர் உயிரிழப்பு! ஈரானின் மிகப்பெரிய துறைமுகமான பந்தர் அப்பாஸில் (Bandar Abbas) நேற்றைய (26) தினம் ஏற்பட்ட ஒரு பெரிய வெடிப்பு சம்பவத்தில் குறைந்தது 18 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், இந்த அனர்த்தத்தில் 700 க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக ஈரானிய அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சனிக்கிழமை காலை தெற்கு நகரமான பந்தர் அப்பாஸுக்கு அருகிலுள்ள நாட்டின் மிகப்பெரிய வணிகத் துறைமுகமான ஷாஹித் ராஜீயிலேயே இரசாயனக் கசிவு காரணமாக இந்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது. இது அருகிலுள்ள கட்டிடங்களின் ஜன்னல்கள் மற்றும் கூரைகளை வெடிக்கச் செய்து பல வாகனங்களை அழித்ததுடன், வெடிப்பின் தாக்கத்தை 50 கிலோ மீற்றர் தொலைவில் உணர்ந்ததாக குடியிருப்பாளர்கள் தெரிவித்தனர். ஈரான் அமெரிக்காவுடன் ஓமானில் மூன்றாவது சுற்று அணுசக்தி பேச்சுவார்த்தையைத் தொடங்கியுள்ள நிலையில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது. எனினும், இரண்டு நிகழ்வுகளுக்கும் இடையே ஒரு தொடர்பு இருப்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை என்று ஈரானிய அதிகாரிகள் கூறுகின்றனர். ஷாஹித் ராஜீயில் உள்ள கொள்கலன்களில் இரசாயனங்களை மோசமாக சேமித்து வைத்ததே வெடிப்புக்குக் காரணம் என்று ஈரானின் அவசரகால மேலாண்மை அமைப்பின் செய்தித் தொடர்பாளர் ஹொசைன் ஜஃபாரி குற்றம் சாட்டியுள்ளார். எவ்வாறெனினும், சம்பவம் குறித்து விசாரணை நடத்த ஜனாதிபதி மசூத் பெஷேஷ்கியன் உத்தரவிட்டதுடன், தீயை அணைக்கவும், ஏனைய பகுதிகளுக்கு தீ பரவாமல் தடுக்கவும் தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளார். ஹோர்மோஸ் நீரினைக்கு அருகில் அமைந்துள்ள ஷாஹித் ராஜீ துறைமுகம் ஈரானின் மிகப்பெரிய கொள்கலன் மையமாகும். இது நாட்டின் பெரும்பாலான கொள்கலன் பொருட்களைக் கையாளுகிறது என்று அரசு ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன. https://athavannews.com/2025/1429658

ரஷ்யாவுக்கு ஆதரவாக உக்ரைனில் போரிட்ட அமெரிக்க உளவுத்துறை அதிகாரியின் மகன் படுகொலை!

3 months 1 week ago
ரஷ்யாவுக்கு ஆதரவாக உக்ரைனில் போரிட்ட அமெரிக்க உளவுத்துறை அதிகாரியின் மகன் படுகொலை! அமெரிக்க உளவுத்துறை அதிகாரியின் மகன் என அடையாளம் காணப்பட்ட ஒரு அமெரிக்க நபர், 2024 ஆம் ஆண்டு கிழக்கு உக்ரைனில் ரஷ்ய இராணுவத்திற்கான ஒப்பந்தத்தின் கீழ் சண்டையிட்டபோது கொல்லப்பட்டார். அவரது குடும்பத்தினரால் வெளியிடப்பட்ட இரங்கல் செய்தியில் 21 வயதான மைக்கேல் அலெக்சாண்டர் க்ளாஸ், ஏப்ரல் 4, 2024 அன்று கிழக்கு ஐரோப்பாவில் இறந்தார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 2024 இல் மத்திய புலனாய்வு அமைப்பில் டிஜிட்டல் கண்டுபிடிப்புகளுக்கான துணை இயக்குநராக நியமிக்கப்பட்ட ஜூலியான் கல்லினாவின் மகனாவார் உக்ரைனில் கொல்லப்பட்ட மைக்கேல் க்ளாஸ். அமெரிக்காவின் மீதான உள்நாட்டு கோபமும், ஒன்லைன் தீவிரமயமாக்கலும், நடுத்தர வர்க்க அமெரிக்க இளைஞரை கிழக்கு உக்ரைனின் கொலைக் களங்களுக்கு இட்டுச் சென்றுள்ளது. இராணுவத்தில் பணியாற்றிய பெற்றோருக்குப் பிறந்த ஒரு உயர்நிலைப் பள்ளி கால்பந்து வீரர் இந்த மைக்கேல் குளோஸ். புலன்விசாரணை இணையபக்கம் ஒன்றில், பிப்ரவரி 2022 முதல் ரஷ்ய இராணுவத்துடன் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்ட 1,500க்கும் மேற்பட்ட வெளிநாட்டினரில் க்ளாஸும் ஒருவர் என குறிப்பிடப்பட்டுள்ளது. பல்கலைக்கழகத்தில், க்ளாஸ் பாலின சமத்துவம் மற்றும் சுற்றுச்சூழல் ஆதரவு வட்டாரங்களில் தீவிரமாக செயல்பட்டுள்ளார். இஸ்ரேலுக்கும் காசா போருக்கும் அமெரிக்கா அளித்த ஆதரவிற்காக அவர் தமது கோபத்தை வெளிப்படுத்தி வந்தார். துருக்கியில் இருந்தபோது, க்ளாஸ் ரஷ்யாவுக்குச் செல்லும் விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளார். அவர் வழக்கமாக பாலஸ்தீனம் பற்றிய வீடியோக்களை கவனிப்பதுடன் அமெரிக்கா மீது மிகவும் கோபமாக இருந்தார் என்றே அவருக்கு நெருக்கமான ஒருவர் குறிப்பிட்டுள்ளார். ரஷ்யாவிற்கு விசா பெற்ற பிறகு, அவர் மாஸ்கோவிற்கு செல்வதற்கு முன்பு ரஷ்யா முழுவதும் பயணம் செய்தார், அங்கு அவர் தனது ஆவணங்கள் காலாவதியாகும் முன்பு இராணுவத்தில் சேர்ந்தார். அங்கு அவர் பெரும்பாலும் நேபாள ஒப்பந்த வீரர்களுடன் பயிற்சி பெற்றார். இராணுவத்தில் சேர்ந்த மூன்று மாதங்களுக்குப் பிறகு அவர் உக்ரைனுக்கு ஒரு தாக்குதல் பட்டாலியனின் உறுப்பினராக அனுப்பப்பட்டார். ஆனால் அவர் மரணம் தொடர்பில் விளக்கங்கள் எதுவும் அளிக்கப்படவில்லை. அவரது பெற்றோர் ரஷ்ய அரசாங்கத்தைத் தொடர்புகொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. https://seithy.com/breifNews.php?newsID=332503&category=WorldNews&language=tamil

கீரிமலை ஜனாதிபதி மாளிகை - எதிர்கால பயன்பாடு குறித்து கலந்தாய்வு!

3 months 1 week ago
வடமாகாணத்தில் ஜனாதிபதிக்கு மாளிகை அமைத்த மஹிந்தா, இப்போ உத்தியோகபூர்வ மாளிகையை விட்டு வெளியேற மறுக்கிறார். போற போற இடங்களில் சின்ன வீடு வைப்பதுபோல். வீடு மாறுவதற்கு பணம் இல்லையாம். தமிழ் மக்களை சொந்த இல்லங்களில் இருந்து விரட்டி ரசித்தவருக்கு இந்த நிலை. இலங்கை அரசியலை சொந்த குடும்ப அரசியலாக்க கனவு கண்டவருக்கு விழுந்த அடிமேல் அடி. தங்கள் அரசியலை உறுதிப்படுத்துவதற்கு தமிழ் மக்களை கொன்றார்கள், இப்போ தம் ஊழல் கொலைகளை மறைப்பதற்கு தங்கள் விசுவாசிகளையே கொலை செய்கின்றனர். மக்கள் பணத்தில் ஆடிய ஆட்டம், இந்த நிலைக்குத் தம்மை தள்ளுமென எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். பௌத்த மதமே கர்மா பற்றி அதிகம் சொல்கிறது. இவர்கள் தமது சொந்த லாபத்திற்காக மதத்தை மாறினார்கள், உபயோகித்தார்கள். இப்போ அது தன் வேலையை தொடங்கியுள்ளது. எத்தனை பேரை கொன்றாலும் இவர்கள் தப்ப முடியாது. இன்னும் குற்றங்கள், தண்டனைகள் இவர்கள் மேல் பெருகும்.

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி ‘ஏக்கிய ராஜ்ய’ முறைமையை ஏற்றுக்கொள்ளாது!

3 months 1 week ago
ஹிஹி..... சிவஞானத்திற்கு அறளை பேந்து போச்சுதா அல்லது அரசியல்வாதியின் ஏமாற்று குணமா? நேரத்திற்கு நேரம் ஒரு பேச்சு பேசுறார். இவர் எல்லாம் ஒரு பழுத்த அரசியல்வியாதி. சாச்சா ... அப்பிடியொன்றுமில்லை. சுமந்திரனாவது அரசியலில், அதுவும் தமிழ் அரசியலில் இருந்து ஒதுங்குவதாவது. மக்கள் அவரை ஒதுக்கியபோதும் ஒதுங்காதவர், அவர் தமிழ் இனம் ஒழிக்கப்படும்வரை அரசியலில் இருந்து ஒதுங்கமாட்டார். அதன் பின் அரசியல் செய்யும் காரணமும் இருக்காது அவருக்கு. அவர் கட்சியை வெல்லவைப்பதற்காக என்ன வேண்டுமானாலும் பேசி மக்களை ஏமாற்றுங்கள் என்று இவருக்கு பச்சை கொடி காட்டியிருக்கிறார். வென்றபின் நான் அப்பிடி சொல்லேலை, அது பச்சைப்பொய் என்று காலை ஆட்டியவாறு பத்திரிகையாளருக்கு சொல்லி, நான் சொன்னதென்னவென்றால், ...... என்று உருட்டி பத்திரிகையாளரை முட்டாளாக்குவார். அதெல்லாம், மக்களை ஏமாற்றி வாக்கு பெட்டியை நிரப்புவதற்காக போடும் நாடகம். இவர் கதையெல்லாம் ஒரு கதையா? அவர் என்ன விரும்பியா பேசுகிறார்? பேசவேண்டிய கட்டாயத்தில் பேசுகிறார். இப்போதுதானே பதில் தலைவர் பதவியை ஏற்றிருக்கிறார். சம்பந்தர் இறக்கும்வரை, அந்தபதவியை விட்டிறங்க விரும்பவில்லை. மாவையர் தானாகவே விட்டுக்கொடுத்தும் அந்தபதவி வில்லங்கமே அவரது உயிரை காவுகொண்டது. இவரும் அவ்வாறே இருக்க பல தகிடுதத்தம் ஆடியவர். தலைவர் என்றால்; பதவி என்பதுதான் இப்போது பொருளாகும். ஆனால் பொறுப்பு எந்தவிதத்திலும் இல்லை. பதவிக்காக தெருவிலே சண்டையிடுமளவிற்கு கேவலமாகிவிட்டது. மக்கள் தொடர்ந்து தமக்கு வாக்களிக்க வேண்டுமென எதிர்பார்க்கும் இவர்கள், மக்கள் எதிர்பார்ப்பதுபோல் அவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்கிறார்களா?

டக்ளஸ் தொடர்பில் சகல விடயங்களும் விசாரிக்கப்படும் – அமைச்சர் பிமல் ரத்நாயக்க

3 months 1 week ago
ரிஷாட் பதியுதீன் பரம்பரை பணக்காரர் அல்ல. நீங்கள் கூறுவது…. பதியுதீன் மஹ்மூத். அவர்தான் ஶ்ரீமாவோ ஆட்சியில் கல்வி அமைச்சராக இருந்தவர்.

எஸ். ஜே.வி. செல்வநாயகம்; மதத்தால் கிறிஸ்தவராகவும் கலாசாரத்தால் இந்துவாகவும் விளங்கிய 'காந்தியவாத' தமிழ் அரசியல் தலைவர் (பகுதி - 1)

3 months 1 week ago
திரு செல்வநாயகம் இனவாதத்தை எதிர்தது தனது அரசியல் போராட்டத்தை நேர்மையுடன் ஆரம்பித்திருந்தாலும் காலப்போக்கில் வெறும் சுலோகங்களிலும் கோஷங்களிலும் தங்கி இருந்து ஆவேச பேச்சுக்களை தனது அரசியல் ஆயுதமாக்கி இறுதியில் வரட்டு பிடிவாதத்தால் அரசியல் ரீதியில் தனது அடைவுகளை நோக்கி ஒரு அங்குலம் தானும் முன்னேறாதது மட்டுமல்ல இறுதியில் இருந்ததையும் இழந்தது தான் கசப்பான உண்மை. இதை விடுதலை புலிகள் யுத்த இறுதியில் Bitter end என்று தெளிவாக குறிப்பிட்டனர்.

யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025

3 months 1 week ago
ஞாயிறு 27 ஏப்ரல் GMT நேரப்படி முற்பகல் 10:00 மணிக்கும் பிற்பகல் 2:00 மணிக்கும் இரு போட்டிகள் நடைபெறவுள்ளன. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே: 45) ஞாயிறு 27 ஏப்ரல் 10:00 am GMT வேங்கடே - மும்பை இந்தியன்ஸ் எதிர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் MI எதிர் LSG 19 பேர் மும்பை இந்தியன்ஸ் அணி வெல்லும் எனவும் நான்கு பேர் மாத்திரம் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர். மும்பை இந்தியன்ஸ் வசீ அல்வாயன் வாத்தியார் வீரப் பையன்26 நிலாமதி சுவைப்பிரியன் பிரபா கந்தப்பு வாதவூரான் ரசோதரன் நுணாவிலான் தமிழ் சிறி கிருபன் குமாரசாமி எப்போதும் தமிழன் நந்தன் புலவர் கோஷான் சே அகஸ்தியன் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஈழப்பிரியன் சுவி செம்பாட்டான் ஏராளன் இப்போட்டியில் போட்டியில் யாருக்கு புள்ளிகள் கிடைக்கும்? 46) ஞாயிறு 27 ஏப்ரல் 2:00 pm GMT டெல்லி - டெல்லி கேப்பிட்டல்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் DC எதிர் RCB 09 பேர் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வெல்லும் எனவும் 14 பேர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர். டெல்லி கேப்பிட்டல்ஸ் ஈழப்பிரியன் அல்வாயன் சுவி சுவைப்பிரியன் செம்பாட்டான் கந்தப்பு ஏராளன் கிருபன் அகஸ்தியன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் வசீ வாத்தியார் வீரப் பையன்26 நிலாமதி பிரபா வாதவூரான் ரசோதரன் நுணாவிலான் தமிழ் சிறி குமாரசாமி எப்போதும் தமிழன் நந்தன் புலவர் கோஷான் சே இப்போட்டியில் போட்டியில் எவருக்குப் புள்ளிகள் கிடைக்கும்?

டக்ளஸ் தொடர்பில் சகல விடயங்களும் விசாரிக்கப்படும் – அமைச்சர் பிமல் ரத்நாயக்க

3 months 1 week ago
இல்லை அவர் பரப்பரை. பணக்காரர் அவரின் தந்தை அமைச்சராக இருந்த ஞாபகம் உண்டு” சிறிமா ஆட்சியில்,..சரியா????

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி ‘ஏக்கிய ராஜ்ய’ முறைமையை ஏற்றுக்கொள்ளாது!

3 months 1 week ago
இதனால் என்ன பயன் உண்டு” தமிழ் மக்களுக்கு ?? எதுவுமில்லை எனவே நீங்கள் ஆதரிக்கலாம் அதனாலும் எந்தவொரு பயனுமில்லை ஆகவே ஆதரிப்பது எதிர்ப்பது இரண்டுமே ஒன்று தான் அதாவது எந்த பலனுமில்லை நீங்கள் கிழவன்கள் வீட்டுகுள்இருங்கள் இளைஞர்களை வீட்டுக்கு வெளியில் விடுங்கள் அவர்கள் அரசியல் செய்யட்டும். அரசியலை படிக்கட்டும் அவர்கள் பிழை விட்டாலும் கவலையில்லை உங்கள் போன்ற வயோதிபரகள் பிழை விடுவதும் நொண்டி சாட்டுக்கள் சொல்வதும் ஏற்க முடியாது

பொன்னியின் செல்வன் பாடல்: ஏ.ஆர்.ரஹ்மான் ரூ.2 கோடி செலுத்த உத்தரவு - காப்புரிமை சர்ச்சைகள் தொடர்வது ஏன்?

3 months 1 week ago
இளையராஜாவை வறுத்தெடுக்கும் ரகுமான் ரசிகர்கள் இனி என்ன சொல்லப்போகின்றார்கள்? https://youtu.be/TeOBakLZI_k?si=bXPieV8cBqHE1YI_
Checked
Sun, 08/10/2025 - 06:59
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed