3 months 2 weeks ago
சொர்க்கம்தான் சுகம் தரும் . ......... ! 😍
3 months 2 weeks ago
வணக்கம் வாத்தியார் ......... ! ஆண் : பட்டுப் பட்டு பூச்சி போல எத்தனையோ வண்ணம் மின்னும் நட்டு வச்சு நான் பறிக்க நான் வளர்த்த நந்தவனம் ஆண் : கட்டி வைக்கும் என் மனச வாசம் வரும் மல்லிகையும் தொட்டுத் தொட்டு நான் பறிக்க துடிக்குதந்த செண்பகமே ஆண் : செண்பகமே செண்பகமே தென்பொதிகை சந்தனமே தேடி வரும் என் மனமே சேர்ந்திருந்தா சம்மதமே ஆண் : { உன் பாதம் போகும் பாதை நானும் போக வந்தேனே உன் மேலே ஆசைப்பட்டு பார்த்து காத்து நின்னேனே } (2) ஆண் : உன் முகம் பார்த்து நிம்மதி ஆச்சு என் மனம் தானா பாடிடலாச்சு ஆண் : என்னோட பாட்டு சத்தம் தேடும் உன்னை பின்னால எப்போதும் உன்ன தொட்டு பாடப்போறேன் தன்னால ஆண் : மூணாம்பிறையைப் போல காணும் நெத்திப் பொட்டோட நாமும் கலந்திருக்க வேணும் இந்தப் பாட்டோட ஆண் : கருத்தது மேகம் தலை முடி தானோ இழுத்தது என்ன பூவிழி தானோ ஆண் : எள்ளுக்கும் ராசி பத்திப் பேசிப் பேசி தீராது உன்பாட்டுக்காரன் பாட்டு உன்ன விட்டுப் போகாது .......! --- செண்பகமே செண்பகமே ---
3 months 2 weeks ago
ஞாயிறு 20 ஏப்ரல் GMT நேரப்படி முற்பகல் 10:00 மணிக்கும் பிற்பகல் 2:00 மணிக்கும் இரு போட்டிகள் நடைபெறவுள்ளன. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே: 37) ஞாயிறு 20 ஏப்ரல் 10:00 am GMT முலான்பூர் - பஞ்சாப் கிங்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் PBKS எதிர் RCB 05 பேர் பஞ்சாப் கிங்ஸ் அணி வெல்லும் எனவும் 18 பேர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர். பஞ்சாப் கிங்ஸ் ஈழப்பிரியன் பிரபா செம்பாட்டான் எப்போதும் தமிழன் அகஸ்தியன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் வசீ அல்வாயன் வாத்தியார் வீரப் பையன்26 நிலாமதி சுவி சுவைப்பிரியன் கந்தப்பு வாதவூரான் ஏராளன் ரசோதரன் நுணாவிலான் தமிழ் சிறி கிருபன் குமாரசாமி நந்தன் புலவர் கோஷான் சே இப்போட்டியில் போட்டியில் யாருக்கு புள்ளிகள் கிடைக்கும்? 38) ஞாயிறு 20 ஏப்ரல் 2:00 pm GMT வேங்கடே - மும்பை இந்தியன்ஸ் எதிர் சென்னை சூப்பர் கிங்ஸ் MI எதிர் CSK 12 பேர் மும்பை இந்தியன்ஸ் அணி வெல்லும் எனவும் 11 பேர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர். மும்பை இந்தியன்ஸ் ஈழப்பிரியன் வீரப் பையன்26 பிரபா செம்பாட்டான் கந்தப்பு தமிழ் சிறி குமாரசாமி எப்போதும் தமிழன் நந்தன் புலவர் கோஷான் சே அகஸ்தியன் சென்னை சூப்பர் கிங்ஸ் வசீ அல்வாயன் வாத்தியார் நிலாமதி சுவி சுவைப்பிரியன் வாதவூரான் ஏராளன் ரசோதரன் நுணாவிலான் கிருபன் இப்போட்டியில் போட்டியில் எவருக்குப் புள்ளிகள் கிடைக்கும்?
3 months 2 weeks ago
ராகுல் டிராவிட் கை, கால் ஏலாவிட்டால் வீட்டில் இருப்பதற்கு ஏன்தான் மைதானத்திற்கு வருகிறாரோ தெரியவில்லை! கடைசி இரண்டு மட்ச்களை தோற்றதற்கு அவரே காரணம்! அன்று ராணாவை அனுப்பாமல் பராக்கை அனுப்பினார்! இன்று ஹெட்மயரை அனுப்புவதற்கு பதிலாக ஜுரேலை அனுப்பி தோற்றார்! சாம்சனும் ட்ராவிட்டும் இல்லாவிட்டால் ராஜஸ்தான் இலகுவாக வெல்லலாம்! ஏலத்திலும் பட்லரை எடுக்காமல் வாய்பார்த்தார்கள்!
3 months 2 weeks ago
பிறந்த நாள் வாழ்த்துகள் நிலாமதி அக்கா. நான் யாழில் இணைந்தவுடன் என்னை தனிமடலில் வரவேற்ற பாசக்கார உறவு நிலாமதி அக்கா!
3 months 2 weeks ago
ஐபிஎல் 2025இன் இன்று நடந்த முதலாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் வீரர்கள் எவரும் அரைச் சதங்கள் அடிக்காவிட்டாலும் வேகமாக அடித்தாடியதால் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 203 ஓட்டங்களை எடுத்தது. அவர்கள் அடித்த வேகத்திற்கு இன்னும் 20 - 30 ஓட்டங்கள் கூட எடுத்திருக்க வாய்ப்பிருந்தது, ஆனால் இறுக்கமான இறுதி ஓவர்களினால் அதிக ஓட்டங்களை எடுக்கமுடியவில்லை. பதிலுக்குத் துடுப்பாடிய குஜராத் டைட்டன்ஸ் அணியின் வீரர்களான சாய் சுதர்சன், ஆட்டமிழக்காமல் 97 ஓட்டங்கள் எடுத்த ஜொஸ் பட்லர் ஆகியோரின் மிகவேகமான ஆட்டத்தால் வெற்றி இலக்கை நோக்கி விரைவாக முன்னேறி 19.2 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 204 ஓட்டங்களை எடுத்து இலக்கை அடைந்தது. முடிவு: குஜராத் டைட்டன்ஸ் அணி 7 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது குஜராத் டைட்டன்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 17 பேருக்கு மாத்திரம் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 06 பேருக்குப் புள்ளிகள் இல்லை! இன்று நடந்த இரண்டாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் வீரர்களான எய்டன் மார்க்கம், ஆயுஷ் படோனி ஆகியோரின் மின்னல் வேக அரைச் சதங்களுடனும் அப்துல் சமட்டின் நான்கு சிக்ஸர்களின் உதவியுடனும் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 180 ஓட்டங்களை எடுத்தது. பதிலுக்குத் துடுப்பாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் 14 வயது வீரரான வைபவ் சூரியவன்ஷி முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்து ஐபிஎல் தொடரில் உள்நுழைந்தார். யஷஸ்வி ஜெய்ஸ்வாலின் வேகமான 74 ஓட்டங்களுடனும், ரியான் பராக்கின் 39 ஓட்டங்களுடன் வெற்றி இலக்கை நோக்கி முன்னேறியபோதும் 18 வது ஓவரில் இருவரும் விக்கெட்டைப் பறிகொடுத்தமையாலும், இறுதி ஓவரை ஆவேஷ் கான் ஹெட்மயரின் விக்கெட்டை எடுத்ததோடு ஓட்டங்களைக் கொடுக்காது மட்டுப்படுத்தியதாலும் இறுதியில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 178 ஓட்டங்களையே எடுத்து வெற்றி வாய்ப்பை நழுவவிட்டது. முடிவு: லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி 2 ஓட்டங்களால் வெற்றியீட்டியது லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த ஐவருக்கு மாத்திரம் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 18 பேருக்குப் புள்ளிகள் இல்லை! இன்றைய போட்டிகளின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்:
3 months 2 weeks ago
லக்னோவுக்கு லக் ........ ராஜஸ்தானை 2 ஓட்டங்களால் வென்று விட்டது ........! 😂
3 months 2 weeks ago
பதின்நாலு வயது பாலகனின் அதிரடி ஆட்டம்!! 👏
3 months 2 weeks ago
மும்மூர்த்திகளும் சுகமா?
3 months 2 weeks ago
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், அன்னாபெல் லியாங் பதவி, பிபிசி 19 ஏப்ரல் 2025, 11:25 GMT நீங்கள் பயன்படுத்தும் அனைத்து ஐபோன்களிலும் கலிஃபோர்னியாவில் வடிவமைக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டிருக்கும். நேர்த்தியான செவ்வக வடிவில் உள்ள இந்த செல்போன்கள் இன்று பலரின் வாழ்வில் தவிர்க்க முடியாததாகிறது. இவை அமெரிக்காவில் வடிவமைக்கப்படுகின்றன என்பதை மறுக்க முடியாது. ஆனால் அங்கிருந்து ஆயிரக்கணக்கான மைல்கள் தொலைவில் உள்ள சீனாவில் இவை தயாரிக்கப்படுகிறது. இதே சீனாவுக்கு எதிராகத்தான் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிகப்படியான வரிவிதிப்பு தாக்குதல்களைத் தொடுத்துள்ளார். சீனாவிலிருந்து இறக்குமதியாகும் சில பொருட்களுக்கு 245 சதவிகிதம் வரை அமெரிக்கா வரி விதிக்கிறது. ஆப்பிள் நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 22 கோடிக்கும் (220 மில்லியன்) அதிகமான ஐபோன்களை விற்பனை செய்கிறது. இவற்றில் உத்தேசமாக 10ல் ஒன்பது போன்கள் சீனாவில் உற்பத்தி செய்யப்படுகிறது. பேட்டரி முதல் திரை வரை ஆப்பிளின் உதிரிபாகங்கள் இங்கு தயாரிக்கப்படுகிறது மற்றும் பெறப்படுகிறது. பின்னர் அவை ஆப்பிள் நிறுவனத்தின் பல்வேறு தயாரிப்புகளான ஐபோன்கள், ஐபாட்கள், மேக் புக்-ஆக ஒன்றிணைக்கப்படுகின்றன. ஆப்பிளின் மிகப்பெரிய சந்தையான அமெரிக்காவுக்கு இங்கிருந்து ஏற்றுமதி செய்யப்படுகின்றன. ஆனால் அதிர்ஷ்டவசமாக ஸ்மார்ட் போன்கள், கணினிகள் மற்றும் சில மின்னணு சாதனங்களுக்கு வரி விதிப்பிலிருந்து கடந்த வாரம் டிரம்ப் விலக்கு அளித்தார். ஆனால் இந்த நிவாரணம் தற்காலிகமானதுதான். மேலும் சில வரிவிதிப்புகள் வர உள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். தமது சமூக வலைத்தள பக்கமான ட்ரூத் சோஷியலில் ,"யாரும் பிடியிலிருந்து தப்ப முடியாது" என எழுதியுள்ள அவர் "செமிகண்டக்டர் மற்றும் எலக்ட்ரானிக் விநியோகச் சங்கிலி" குறித்த விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். உலகளாவிய விநியோகச் சங்கிலியை ஆப்பிள் நிறுவனம் தன்னுடைய வலிமையாக கூறி வந்த நிலையில், அதுவே தற்போது பலவீனமாக மாறியுள்ளது. உலகின் இருபெரும் பொருளாதார நாடுகளான அமெரிக்காவும் சீனாவும் ஒன்றை ஒன்று சார்ந்து இயங்குபவை. ஆனால் டிரம்ப்பின் வரிவிதிப்பு அறிவிப்புகள் இந்த உறவை ஒரே இரவில் தலைகீழாக மாற்றி விட்டன. எனவே இது "இருவரில் அதிகம் சார்ந்திருப்பது யார்?" என்ற கேள்வியை எழுப்புகிறது. ஐன்ஸ்டீன் செய்த 3 'தவறுகள்' அறிவியல் உலகையே மாற்றிய கதை19 ஏப்ரல் 2025 இந்தியாவில் உயர் தர சேவையால் ஓலா, ஊபருக்கு சவால் விட்ட 'ப்ளூஸ்மார்ட்' வீழ்ந்தது எப்படி?ஒரு மணி நேரத்துக்கு முன்னர் K2-18b கோளில் உயிர்கள் இருக்க வாய்ப்புள்ளதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்தது எப்படி? - ஆய்வை வழிநடத்தும் நிக்கு மதுசூதன் யார்?18 ஏப்ரல் 2025 ஒரு உயிர்காக்கும் இணைப்பு அச்சுறுத்தலாக மாறியது எப்படி? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,2008ஆம் ஆண்டு, பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டிகளை நடத்திய அதே ஆண்டில், ஆப்பிள் தனது முதல் கடையை பெய்ஜிங்கில் திறந்தது. உலகின் மதிப்பு மிக்க நிறுவனங்களின் பொருட்களை ஒருங்கிணைக்கும் (அசெம்பிள்) பணிகளை செய்வதன் மூலம் சீனா பெரிய அளவில் பலனடைகிறது. தரமான தயாரிப்புகளை செய்வதற்கான ஆற்றல் தங்களுக்கு உள்ளது என இதன் மூலம் மேற்குலக நாடுகளுக்கு சீனா தன்னை முன்னிலைப்படுத்தியது. மேலும் உள்ளூர் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் அதிகரிக்கவும் இது உதவியது. 1990களில் மூன்றாம் தரப்பு விநியோகஸ்தர் மூலம் கணினிகளை விற்க ஆப்பிள் நிறுவனமானது சீனாவிற்குள் நுழைந்தது. 1997ம் ஆண்டில், சக போட்டியாளர்களை சமாளிக்க முடியாமல் திவாலாகும் நிலையில் இருந்த ஆப்பிள் நிறுவனம், இதற்கான உயிர்காக்கும் வழியை சீனாவில் கண்டுபிடித்தது. இளம் பொருளாதார நாடாக இருந்த சீனா, வெளிநாட்டு நிறுவனங்கள் உற்பத்தி தொழிற்சாலைகளைத் திறந்து வேலை வாய்ப்புகளை அதிகப்படுத்தும் வகையில் தனது சந்தையைத் திறந்தது. ஆனாலும் 2001ம் ஆண்டு வரையிலும் ஆப்பிள் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக சீனாவுக்குள் நுழையவில்லை. ஷாங்காயை அடிப்படையாகக் கொண்ட வர்த்தக நிறுவனம் மூலமாக சீனாவில் பொருட்களின் உற்பத்தியைத் தொடங்கியது. சீனாவில் இயங்கிய தாய்வானை சேர்ந்த ஃபாக்ஸ்கான் நிறுவனத்துடன் இணைந்து ஐபாட்கள், ஐமேக் மேலும் இதனைத் தொடர்ந்து ஐபோன்களையும் சீனாவில் தயாரிக்கத் தொடங்கியது. உலக நாடுகளுடன் பெய்ஜிங் வர்த்தகத்தை சீனா தொடங்கியது முதலே அமெரிக்காவின் ஊக்குவிப்பு எந்த விதத்திலும் குறைவானதாக இல்லை. உலக நாடகளின் தொழிற்சாலையாக மாறிக்கொண்டிருந்த சீனாவில் ஆப்பிள் தனது கால்தடங்களை பதித்துக் கொண்டிருந்தது. அந்நாட்களில் சீனா ஐ போன் தயாரிப்பை பிரதானமாகக் கொண்டிருக்கவில்லை. ஆனால், ஆப்பிள் தான் வளர்த்தெடுத்த விநியோகஸ்தர்களை ''உற்பத்திக்கான உச்ச நட்சத்திரங்களாக'' வளர உதவியது என்கிறார் விநியோகச் சங்கிலி நிபுணர் லின் ஜூபிங் கூறுகிறார். லின், பெய்ஜிங் ஜிங்டியாவோவை உதாரணமாகக் குறிப்பிடுகிறார். தற்போது அதிவேகமாக துல்லிய பணிகளை மேற்கொள்ளும் இயந்திரங்களை உருவாக்கும் முன்னணி நிறுவனமாகிய இது, அதிக செயல்திறனுடன் கூடிய மேம்பட்ட தொழில்நுட்ப கூறுகளை தயாரித்தது. தொடக்கத்தில் அக்ரிலிக் (பிளாஸ்டிக் போன்றது) வெட்டும் ஒரு சாதாரண நிறுவனமாக இருந்த இந்நிறுவனம், இயந்திர உற்பத்தியாளராகக் கருதப்படவில்லை. ஆனால் பின்னர், கண்ணாடி வெட்டும் இயந்திரங்களை உருவாக்கி, "ஆப்பிள் நிறுவன மொபைல் ஃபோன்களின் மேற்பகுதியை மேம்படுத்தும் துறையில் முக்கிய நட்சத்திரமாக" உருவெடுத்தது என்கிறார். 2008ஆம் ஆண்டு, பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டிகளை நடத்திய அதே ஆண்டில், ஆப்பிள் தனது முதல் கடையை அந்நகரில் திறந்தது. அப்போது சீனாவுக்கும் மேற்கு நாடுகளுக்கும் இடையே வலிமையான உறவு இருந்தது. அதன்பிறகு, 50 கடைகளை திறந்து இந்நிறுவனம் வேகமாக வளர்ச்சியடைந்தது. வாடிக்கையாளர்கள் இந்நிறுவனத்தின் பொருட்களை வாங்குவதற்காக வரிசையில் நிற்கத் தொடங்கினர். ஆப்பிளின் லாப வரம்புகள் அதிகரித்ததுடன், சீனாவில் அதன் உற்பத்தி நிறுவனங்களும் (அசெம்பிளி) விரிவடைந்தன. ஃபாக்ஸ்கான் நிறுவனம், உலகின் மிகப்பெரிய ஐபோன் தொழிற்சாலையை ஜெங்ஜோவிலில் இயக்கி வருகிறது. இது தற்போது "ஐபோன் நகரம்" என அழைக்கப்படுகிறது. வேகமாக வளர்ந்துவரும் சீனாவிற்கு, எளிமையான, ஆனால் தனித்துவமுடைய மற்றும் நேர்த்தியான தோற்றமுடைய மேம்பட்ட மேற்கத்திய தொழில்நுட்பத்தின் அடையாளமாக ஆப்பிள் மாறியது. இன்று, ஆப்பிளின் மதிப்புமிக்க ஐபோன்களில் பெரும்பாலானவை ஃபாக்ஸ்கான் மூலம் தயாரிக்கப்படுகின்றன. அவற்றை இயக்கும் மேம்பட்ட சிப்கள், உலகின் மிகப்பெரிய சிப் உற்பத்தியாளரான டிஎஸ்எம்சியால் தாய்வானில் தயாரிக்கப்படுகின்றன. நிகேஆசியா மேற்கொண்ட பகுப்பாய்வின்படி, 2024ஆம் ஆண்டில் ஆப்பிளின் முக்கியமான 187 விநியோகஸ்தர்களில் சுமார் 150 பேர் சீனாவில் தொழிற்சாலைகள் வைத்திருந்தனர். "எங்களுக்கு உலகம் முழுவதும் சீனாவைப் போன்ற முக்கியமான விநியோகச் சங்கிலி எதுவும் இல்லை" என்று ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி டிம் குக் கடந்த ஆண்டு ஒரு பேட்டியில் கூறினார். தானியங்கி கேமரா மூலம் அமேசான் பழங்குடிகளை கண்காணித்த ஆய்வாளர்களுக்கு காத்திருந்த ஆச்சர்யம்14 ஏப்ரல் 2025 ஜப்பான் தவிர, அமெரிக்க அணுகுண்டுகள் விழுந்த இன்னொரு நாடு எது தெரியுமா? என்ன நடந்தது?12 ஏப்ரல் 2025 மின்சாரம், கார் எதுவுமே வேண்டாம் என இந்த தீவு மக்கள் தவிர்ப்பது ஏன்?6 ஏப்ரல் 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஆப்பிள் நிறுவனத்தின் செயல் நிர்வாக அதிகாரி டிம் குக் வரி அச்சுறுத்தல் - கற்பனையா அல்லது லட்சியமா? டிரம்பின் முதல் பதவிக் காலத்தில், சீனாவின் மீது அவர் விதித்த இறக்குமதி வரிகளில் இருந்து ஆப்பிள் விலக்குகளைப் பெற்றது. ஆனால் இந்த முறை, சில எலக்ட்ரானிக் பொருட்கள் மீதான வரிகளை மாற்றுவதற்கு முன்பு, டிரம்பின் நிர்வாகம் ஆப்பிள் நிறுவனத்தை ஒரு உதாரணமாக உருவாக்கியுள்ளது. அதிக வரிகளை விதிப்போம் என்ற அச்சுறுத்தலால், நிறுவனங்கள் அமெரிக்காவிலேயே பொருட்களை உருவாக்கத் தொடங்கும் என்று டிரம்பின் நிர்வாகம் நம்புகிறது. "மில்லியன் கணக்கான மக்கள் ஐபோன்களை உருவாக்க உழைக்கிறார்கள். அந்த வகையான உற்பத்தி அமெரிக்காவிற்கு வரப்போகிறது" என்று வர்த்தகச் செயலாளர் ஹோவர்ட் லுட்னிக் இந்த மாத தொடக்கத்தில் ஒரு பேட்டியில் கூறினார். "செமிகண்டக்டர்கள், சிப்கள், ஸ்மார்ட்போன்கள் மற்றும் மடிக்கணினிகள் போன்ற முக்கியமான தொழில்நுட்பங்களை உற்பத்தி செய்வதற்கு அமெரிக்கா சீனாவை நம்ப கூடாது என்பதை அதிபர் டிரம்ப் தெளிவுபடுத்தியுள்ளார்"என வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் கரோலின் லீவிட் கடந்த வாரம் மீண்டும் கூறினார். மேலும் "அதிபரின் வழிகாட்டுதலின் பேரில், இந்த நிறுவனங்கள் விரைவில் அமெரிக்காவில் தங்கள் உற்பத்தியை மாற்றுவதில் மும்முரமாக உள்ளன."என்றும் கூறினார். - இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cwyqpexwp22o
3 months 2 weeks ago
சதுரங்க வேட்டை.....
3 months 2 weeks ago
-ஐ.வி.மகாசேனன்- “நாம் வரலாற்றை மாற்ற முடியும். ஆனால் புவியியலை மாற்ற முடியாது. நம் நண்பர்களை மாற்ற முடியும். ஆனால் நம் அண்டை வீட்டாரை மாற்ற முடியாது” -அடல் பிஹாரி வாஜ்பாய்- இலங்கை அரசியலிலும், ஈழத்தமிழரசியலிலும் இந்தியா தவிர்க்க முடியாததொரு காரணியாகும். தனிப்பட்ட விருப்பு – வெறுப்புக்கள் ஒவ்வொருவரிடமும் காணப்படினும், பிராந்திய அரசாக இந்தியாவின் தாக்கம் இலங்கை அரசியலிலும் ஈழத்தமிழர் உரிமைப் போராட்டத்திலும் ஆழமான கவனத்தை பெற்றுள்ளது. இந்தப் பின்னணியிலேயே இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் இலங்கைக்கான விஜயம் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியது. எனினும் இந்தியப் பிரதமரின் விஜயம் வரலாற்றை திசைதிருப்பியுள்ளதாக சுட்டிக்காட்டப்படுகிறது. குறிப்பாக இலங்கை -இந்திய பண்பாட்டு உறவு தமிழக – ஈழத்தமிழர்கள் பண்பாட்டு உறவை மையப்படுத்தியே கடந்த காலங்களில் விபரிக்கப்பட்டது. இந்திய – இலங்கை அரசியலும் அதன்வழியே நிர்மாணிக்கப்பட்டது. எனினும் அண்மைக்காலத்தில் தமிழக – ஈழத்தமிழர் உறவில் விரிசல் ஏற்படுத்தப்படுகிறது. இது தொடர்பில் கடந்த வார இப்பத்தியில் விபரிக்கப்பட்டிருந்தது. அதேவேளை நரேந்திர மோடியின் விஜயத்தில், கொழும்பு-புதுடெல்லி பௌத்த பண்பாட்டினை மையப்படுத்திய உறவை வலுப்படுத்தியுள்ளமையை இனங்காணக்கூடியதாக உள்ளது. இக்கட்டுரை கொழும்பு – புதுடெல்லி உறவு, பௌத்த பண்பாட்டால் பாதுகாக்கப்படுவதை தேடுவதாகவே உருவாக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் மூத்த அரச இராஜதந்திரியான கௌடில்யர், அண்டை நாட்டு வெளியுறவுக் கொள்கையில் அதிக கவனத்தை குவித்துள்ளார். இந்திய அரசாங்கங்களின் வெளியுறவுக் கொள்கை உருவாக்கங்களிலும் கௌடில்யரின் சிந்தனைகள் ஆழமான செல்வாக்கை செலுத்துகின்றது. ஒரு அரசின் பாதுகாப்பு, அரசுகளின் வலையமைப்பிற்குள் அதன் நிலைப்பாட்டால் தீர்மானிக்கப்படுகிறது என்றும், அதன் உடனடி அண்டை நாடுகள் ‘இயற்கை எதிரிகள்’ என்றும், அவர்களின் அண்டை நாடுகள் ‘இயற்கை கூட்டாளிகள்’ என்றும் கௌடில்யர் விபரிக்கின்றார். இப்பின்னணியில் உடனடி அண்டை நாடுகள் மீது இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை கரிசனை தொடர்ச்சியாக உயர்வாகவே நிலைபெற்று வந்துள்ளது. ஆட்சியாளர்களின் எண்ணங்களில், அணுகுமுறைகளில் மாற்றங்களை அவதானிக்கின்ற போதிலும், இந்தியா உடனடி அண்டை நாடுகளின் மீது அதிக கவனக்குவிப்பை பேணி வந்துள்ளது. இந்தியாவின் பாரதீய ஜனதாக் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் பிரதமருமான அடல் பிஹாரி வாஜ்பாய் 1999 ஆம் ஆண்டு பாகிஸ்தானின் லாகூருக்கு ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க விஜயத்தின் போது, இரண்டு தெற்காசிய நாடுகளும் தங்கள் நீண்டகால பகைமையை ஏன் வெல்ல வேண்டும் என்பது குறித்து பேசினார். அதில், “நாம் வரலாற்றை மாற்ற முடியும். ஆனால் புவியியலை மாற்ற முடியாது. நம் நண்பர்களை மாற்ற முடியும், ஆனால் நம் அண்டை வீட்டாரை மாற்ற முடியாது” எனக் குறிப்பிட்டிருந்தார். இது இந்தியா – பாகிஸ்தான் உறவை மட்டும் வெளிப்படுத்துவதில்லை. பொதுவான அரசியல் வரலாற்றையும், புவிசார் அரசியலையும் எதார்த்தபூர்வமாக விபரிக்கின்றது. இந்திய பிரதமரின் 2025 ஆம் ஆண்டு இலங்கையின் அநுராதபுர விஜயமும், காட்சிகளும், உரையாடல்களும் இலங்கை – இந்திய உறவின் வரலாற்றை மாற்றுவதாகவே அமைகின்றது. இலங்கை -இந்திய உறவின் ஆதாரத்தை நட்புக் காரணியை மாற்றுவதாகவே அறிய முடிகின்றது. நீண்டகாலமாக இந்தியா – இலங்கை பண்பாட்டு உறவு, தமிழகம் மற்றும் ஈழத்தமிழர் பண்பாட்டு தொடர்ச்சியாகவே அணுகப்பட்டிருந்தது. எனினும் நரேந்திர மோடியின் அனுராதபுர பயணம் இந்திய – இலங்கையின் பௌத்த பண்பாட்டு சுவடுகளை புதுப்பித்துள்ளதுடன், தமிழகத்தை ஆக்கிரமிப்பு சக்தியாக வேறுபடுத்துகின்றதா என்ற சந்தேகங்களை உருவாக்குகின்றது. இலங்கைக்கான விஜயத்தில் நரேந்திர மோடி இலங்கையின் புராதன இராச்சிய நகரான அநுராதபுரத்திற்கு சென்று இந்தியாவிற்கும் இலங்கைக்குமிடையிலான ஆழமான பௌத்த பண்பாட்டின் அடையாளமான புனித ஸ்ரீ மகாபோதி மரத்தில் பிரார்த்தனை செய்தார். மேலும், பண்டைய அனுராதபுர நகரத்திற்குள் உள்ள அட்டமஸ்தானம் அல்லது எட்டு புனித தலங்களில் ஒன்றான ‘உட மலுவ’ வுக்கு விஜயம் செய்து, எட்டு பெரிய பௌத்த ஆலயங்களின் தலைமை பிக்கு (அட்டமஸ்தானாதிபதி) மற்றும் நுவரகலவியவின் தலைமை சங்கநாயக்கர் அதி வணக்கத்திற்குரிய டாக்டர் பல்லேகம ஹேமரதன நாயக்க தேரரை சந்தித்து ஒரு சுமுகமான கலந்துரையாடலை மேற்கொண்டார். நரேந்திர மோடியின் அனுராதபுரத்திற்கான விஜயமும், அதன்வழி கட்டமைக்கப்படும் இலங்கை – இந்திய பௌத்த பண்பாட்டு உறவின் ஆழத்தை நுணுக்கமாக அவதானித்தல் அவசியமாகின்றது. முதலாவது, இலங்கையின் ஆதிக்க சக்தியாக பௌத்த மதமும் அதனை நெறிப்படுத்தும் பௌத்த சங்கங்களே காணப்படுகின்றமை நிதர்சனமாகும். இலங்கையின் அரசியலமைப்புக்கும் உயர்வாக பௌத்த சங்கங்களின் விருப்புகளும் எண்ணங்களுமே காணப்படுகின்றமையை அறியக்கூடியதாக அமைகின்றது. 1987 ஆம் ஆண்டு இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் மூலம் அரசியலமைப்பினூடாக இலங்கையில் செல்வாக்கு செலுத்த முனைந்த போதிலும், கடந்த 30 ஆண்டுகளில் அது எதிர்பார்த்த இலக்கை பூர்த்தி செய்ய போதுமானதாக அமையவில்லை. எனினும் சமீப காலமாக சீன அரசு இலங்கையின் பௌத்த பண்பாட்டை முன்னிறுத்தி உறுதியான உறவை கட்டமைத்து வருகின்றது. குறிப்பாக இலங்கை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் சீன விஜயத்தின் போது, இரு நாட்டுத் தலைவர்களின் இணக்கங்கள் தொடர்பில் சீன மக்கள் குடியரசின் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “புத்த மதப் பரிமாற்றங்களின் பிணைப்பைக் கட்டமைக்கவும், மக்களிடையேயும் சகோதர நகரப் பரிமாற்றங்களை ஆழப்படுத்தவும் இரு தரப்பினரும் தயாராக உள்ளனர்” என்றவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கை -சீனாவிற்கு இடையிலான பௌத்த பண்பாட்டு உறவு வலிந்து உருவாக்கப்படுவதாகும். எனினும் இந்திய -இலங்கை பௌத்த பண்பாட்டிலான உறவு இயற்கையானதாகும். இதனை மீளப்புதுப்பிக்கும் உரையாடலையும் செயற்பாட்டையுமே மோடியின் இலங்கை விஜயம் வெற்றிகரமாக நகர்த்தியுள்ளது. இரண்டாவது, அனுராதபுரத்தில் காணப்படும் புனித ஸ்ரீ மகாபோதி மரம் இலங்கை – இந்திய பௌத்த பண்பாட்டு உறவின் அடித்தளங்களில் ஒன்றாகும். இலங்கைக்கு பௌத்தம் இந்தியாவிலிருந்தே இலங்கையில் தேவநம்பிய தீசன் காலத்தில் இந்தியப் பேரரசர் அசோகனால் அனுப்பப்பட்டிருந்ததாக வரலாறு கூறுகின்றது. இங்கு ஆழமான செய்தி மறைக்கப்படுகின்றது. அசோகப் பேரரசிற்குள் இலங்கை சிற்றரசு காலனித்துவப்படுத்தப்பட்டு, பௌத்த மதம் திணிக்கப்பட்டு என்பதே வரலாறாக அமையக்கூடியதாகும். இப்பின்னணியிலேயே தேவநம்பியதீசனுக்கு அசோகப்பேரரசின் தூதர் அசோகனின் மகன் மகிந்த தேரரால் ‘தீசன்’ எனும் பட்டப்பெயரும் வழங்கப்பட்டுள்ளது. மேலும், இந்தியாவின் பிரதமர் தரிசித்திருந்த புனித ஸ்ரீ மகாபோதி மரம் இந்திய மரத்தின் கிளையில் உருவாக்கப்பட்டதாக நம்பப்படுகின்றது. இலங்கையில் இறுக்கமாகப் பாதுகாக்கப்படும் மகாபோதி மரம், இந்தியாவில் போத்கயாவில் புத்தர் 2,500 ஆண்டுகளுக்கு முன்பு ஞானம் பெற்றதாக நம்பப்படும் மரத்தின் கிளையிலிருந்தே கொண்டு வரப்பட்டதாக கூறப்படுகிறது. இந்தியாவில் போத்கயாவில் போதி மரத்திலிருந்து எடுக்கப்பட்ட மரக்கன்று, பேரரசர் அசோகரின் மகள் தேரி சங்கமித்தாவால் கொண்டு வரப்பட்டு, கோயிலின் வளாகத்தில் நடப்பட்டதாக நம்பப்படுகின்றது. இப்பின்னணியில் இந்திய – இலங்கை பௌத்த பண்பாட்டு உறவுகளில் புனித ஸ்ரீ மகாபோதி மரமும் சிறப்பு முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது. இந்தியப் பிரதமர் இலங்கையின் பௌத்தத்தின் ஆதாரமாக இந்தியாவை நினைவூட்டுவதாக மகாபோதி மர தரிசனம் அமைகின்றது. மூன்றாவது, இந்தியாவில் இந்து மதத்தின் கூறாக பௌத்தத்தை உள்வாங்கியுள்ள நிலையில், இந்தியா இலங்கையை பௌத்தத்தின் சிற்றரசாக ஏற்றுக்கொள்கின்றதா என்ற சந்தேகங்களை நரேந்திர மோடியின் அனுராதபுர விஜயத்தின் உரையாடல்கள் உருவாக்கியுள்ளது. அனுராதபுர பயணத்தில் இலங்கையில் பௌத்தத்தின் ஆரம்பகால வரலாற்றிலும் தேரவாத பௌத்தத்தின் பரவலிலும் முக்கியத்துவம் வாய்ந்த உடமலுவவுக்குச் சென்றிருந்த நரேந்திர மோடி, 1960 களில் தனது சொந்த மாநிலமான குஜராத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் புத்தரின் நினைவுச்சின்னங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக உடமலுவ அட்டமஸ்தானாதிபதியிடம் பகிர்ந்து கொண்டார். இலங்கையில் இந்த புனித நினைவுச் சின்னங்களை காட்சிப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து இலங்கை ஜனாதிபதியுடன் விவாதிப்பதாகவும் தெரிவித்தார். மேலும், போத்கயாவை ஆன்மீக நகரமாக மேம்படுத்துமாறு அட்டமஸ்தானாதிபதி விடுத்த வேண்டுகோளுக்கு பதிலளித்த பிரதமர் மோடி, ஜனாதிபதி திசாநாயக்கவுடன் கலந்துரையாடிய பின்னர் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதாகவும், அதை நனவாக்குவதற்கு பாடுபடுவதாகவும் உறுதியளித்தார். எனினும் போத்கயா விவகாரம் இந்தியாவில் வேறுபட்ட முரண்நிலையை கொண்டுள்ளது. இந்தியாவின் போத்கயா இந்துக்களின் ஆதிக்கம் நிறைந்த பிரதேசமாகவே காணப்படுகின்றது. 1891 ஆம் ஆண்டு இலங்கையைச் சேர்ந்த அநகாரிக தர்மபாலா தலையீட்டினாலேயே மகாபோதி சங்கம் உருவாக்கப்பட்டு, பௌத்த கரிசனை உள்வாங்கப்பட்டது. எனினும் சுதந்திர இந்தியா அரசில் 1949 ம் ஆண்டு உருவாக்கப்பட்ட போத்கயா கோவில் சட்டம் மூலமாக பௌத்தர்களுக்கும் இந்துக்களுக்கும் சமபங்கு (50-50) நிர்வாக உரிமை வழங்கப்பட்டது. எனினும் தலைமை இந்துக்களிடம் பாரப்படுத்தப்பட்டது. இவ்விவகாரம் இன்றுவரை பௌத்த பிக்குகளின் போராட்டத்திற்கு ஆதாரமாகி உள்ளது. இவ்வாறான பின்னணிச் சூழலிலேயே இந்துவான நரேந்திர மோடி இலங்கையில் பௌத்த பிக்குவிடம் மண்டியிட்டு வணங்கியுள்ளார். மோடியின் செயற்பாடுகளும் உரைகளும் இந்தியாவை புனித இந்துப் பிரதேசமாக பேணுவதுடன், தென்னிலங்கையர்களின் மகாவம்ச மனோநிலையில் இலங்கையை புத்தரால் ஆசிர்வதிக்கப்பட்ட பௌத்த பூமியாக ஏற்பதாகவே அமைகின்றது. நான்காவது, அனுராதபுரம் வட இந்தியாவின் அசோகப் பேரரசு மற்றும் பௌத்தத்தின் வழிபாட்டு உறவை இறுகப் பிணைக்கின்ற போதிலும், தென்னிந்திய ஆதிக்க சக்தியாக அனுராதபுர இராசதானியின் வீழ்ச்சிக்கு காரணமாகின்ற வரலாற்றையும் பகிர்கின்றது. 1,300 ஆண்டுகளாக செழித்து வளர்ந்த இலங்கையின் அரசியல் மற்றும் மத தலைநகரான அனுராதபுரம், கி.பி 993 இல் தென்னிந்திய சோழப் படையெடுப்பிற்குப் பிறகு கைவிடப்பட்டது. சோழர்கள் தலைநகரை அனுராதபுரத்திலிருந்து பொலநறுவைக்கு மாற்றியதுடன், சைவப் பண்பாட்டையும் ஆரம்பமாக நிறுவினார்கள். இன்றும் பொலநறுவையில் சோழர்கால சிவாலயம் இனங்காணக்கூடியதாக அமைகின்றது. சோழ ஆக்கிரமிப்பால் சிதைக்கப்பட்ட தேரவாத பௌத்தத்தின் பண்பாட்டு இராச்சியமான அனுராதபுரம் பல ஆண்டுகளாக அடர்ந்த காட்டில் மறைக்கப்பட்டது. இப்பின்னணியில் நரேந்திர மோடியின் அனுராதபுரத்திற்கான விஜயம், இலங்கையின் பௌத்தத்தை ஏற்றுக்கொண்டு, இன்றைய இலங்கை ஏற்றுக்கொண்டுள்ள இந்தியாவின் அசோகப் பேரரசின் ஆக்கிரமிப்பு காலத்துடன், இலங்கையும் இந்தியாவும் இணங்கிப் போகும் சூழமைவே வெளிப்படுத்துகின்றது. இது இலங்கையின் ஆதிக்க சக்தியாக காணப்படும் பௌத்த பண்பாட்டால் நிகழ்த்தப்பட்டுள்ளது. எனவே, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் விஜயம் இலங்கை -இந்திய உறவை பௌத்த பண்பாட்டினூடாக மீளகட்டுமானம் செய்கின்றது. வரலாற்றில் இலங்கை மீதான தென்னிந்திய ஆக்கிரமிப்பையும், நிகழ்காலத்தில் ஈழத்தமிழர்கள் மீதான கரிசனையையும் நிராகரித்து, புதுடெல்லி -கொழும்பு அசோகப்பேரரசு கால பௌத்த பண்பாட்டு உறவை மீளப் புதுப்பிப்பதை அரசியல் அவதானிகள் நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்தில் சுட்டிக்காட்டுகின்றனர். இந்தப் பயணம், பகிரப்பட்ட பாரம்பரியத்திற்கான இந்தியாவின் மீள புதுப்பிக்கப்பட்ட அர்ப்பணிப்பை எடுத்துக்காட்டுகிறது. இதனை அடையாளப்படுத்தும் வகையிலேயே இந்தியப் பிரதமரின் வருகை தொடர்பான இலங்கை ஜனாதிபதி அலுவலகத்தின் செய்திக் குறிப்பில், ‘பிரதமர் மோடியின் வருகை, நூற்றாண்டுகளின் நட்பு, வளமான எதிர்காலத்திற்கான அர்ப்பணிப்பு என்ற கருத்தை மேலும் வலுப்படுத்துகிறது, இது இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான ஆழமான கலாசார மற்றும் ஆன்மீக உறவுகளை அடையாளப்படுத்துகிறது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியப் பிரதமரின் சமூக வலைத்தளப் பதிவும், “இந்த வருகை நமது இரு நாடுகளுக்கும் இடையிலான ஆழமான கலாசார, ஆன்மீக மற்றும் நாகரிக உறவுகளை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது” என்றவாறு அமையப் பெற்றுள்ளது. இந்தப் பின்னணியில் இந்தியாவின் இந்து மதமும் இலங்கையின் பௌத்தமும் தமக்குள் நிலங்களை பங்கு போட்டுள்ளதா? என்ற சந்தேகமே இந்திய பிரதமரின் இலங்கை விஜயம் தொடர்பான ஈழத் தமிழர்களின் வினாவாக அமைகின்றது. https://thinakkural.lk/article/317034
3 months 2 weeks ago
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சகோதரி . ........ !
3 months 2 weeks ago
சிறப்பான கருத்தைச் சொல்லும் அருமையான கதை . ......... ! 😁
3 months 2 weeks ago
பிறந்தநாள் வாழ்த்துக்கள் நிலாமதி அக்கா, வளத்துடன் வாழ்க.
3 months 2 weeks ago
Published By: DIGITAL DESK 2 19 APR, 2025 | 05:42 PM வன்னிப் பகுதிகளில் காணப்படும் காணி விடயங்களிலுள்ள சிக்கல் நிலமைகள் மற்றும், வன்னிப் பகுதியிலுள்ள சில அபிவிருத்தி விடயங்கள் தொடர்பாக வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதனாயகனிடம் எடுத்துரைத்துள்ளார். யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள வடக்குமாகாண ஆளுநரின் அலுவலகத்தில் சனிக்கிழமை (19) இடம்பெற்ற சந்திப்பிலேயே பாராளுமன்ற உறுப்பினர் ரவிகரன் வடக்கு ஆளுநருக்கு இந்த விடயங்களை எடுத்துரைத்துள்ளார். இந்நிலையில் தம்மால் எடுத்துரைக்கப்பட்ட விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்துவதாக ஆளுநர் இதன்போது தெரிவித்ததாக ரவிகரன் தெரிவித்துள்ளார். இச் சந்திப்புத் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் ரவிகரன் கருத்துத் தெரிவிக்கையில், முல்லைத்தீவு, மன்னார்,வவுனியா மாவட்டங்களில் அதாவது வன்னியில் காணப்படும் சில குறைபாடுகள் தொடர்பாக வடக்கு மாகாண அளுநர் நாகலிங்கம் வேதநாயகனை சந்தித்து கலந்துரையாடியிருந்தேன். குறிப்பாக வன்னிப் பகுதியில் காணிவிடயங்களில் இருக்கின்ற சிக்கல் நிலமைகள் தொடர்பிலும், அபிவிருத்தியுடன் தொடர்பான விடங்கள் தொடர்பிலும் கலந்துரையாடியிருந்தேன். அளுநரிடம் என்னால் சுட்டிக்காட்டப்பட்ட வன்னிப் பகுதி காணிகள் தொடர்பான சிக்கல் நிலமைகள், வன்னி அபிவிருத்தியுடன் தொடர்பான விடயங்களில் கவனம் செலுத்துவதாகத் தெரிவித்தார். அந்தவகையில் இச்சந்திப்பு திருப்திகரமாக அமைந்தது என்றார். https://www.virakesari.lk/article/212387
3 months 2 weeks ago
19 APR, 2025 | 05:50 PM தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு வாக்களிக்காது போனாலும் மற்றொரு தமிழ் கட்சிக்கே வடகிழக்கு தமிழ் மக்கள் வாக்களிக்குமாறு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வன்னி மாவட்ட முக்கியஸ்தர் எஸ்.தவபாலன் தெரிவித்துள்ளதுடன் தேசிய மக்கள் சக்தி என்ற மாயையை வடகிழக்கில் இருந்து விரட்டியடிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வவுனியா மாநகர சபைக்கான பிரச்சார கூட்டம் வவுனியா பொங்கு தமிழ் தூபியில் இன்று சனிக்கிழமை (19) ஆரம்பமாகியது. அதன்பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், தமிழர் தாயகம் மிகப்பெரிய நெருக்கடிக்குள் அல்லது மாய வலைக்குள் சிக்கியுள்ள நேரத்தில் இந்த தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. தாயகத்தை ஆக்கிரமித்திருக்கிற ஜே.வி.பி. என்ற இனவாத கட்சி இம்முறையும் எமது வாக்குகளை சூறையாட நினைக்கும் நிலையில் அதற்கு தமிழ் மக்கள் நல்ல பாடம் புகட்டுவார்கள் என்பதை இங்கு கூறிக்கொள்கிறேன். ஆட்சிக்கு வந்து ஏழு மாதங்கள் கடக்கின்ற நிலையில் அவர்கள் கூறியது எல்லாம் பொய் என்று வெளிப்பட்டு நிற்பதை அனைவரும் உணர்ந்துள்ளனர். எமது நிலத்தில் எமது மொழியை பயன்படுத்த முடியாத அளவிற்கு அரச அதிகாரம் பயன்படுத்தப்பட்டிருப்பதை ஆனையிறவு உப்பு விடயத்தில் அறிந்துகொள்ள முடியும். அத்தோடு தையிட்டி சட்டவிரோத விகாரையில் இவர்களது ஆட்சிக்காலத்தில் தான் புதிதாக தியான மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கடந்த அரசாங்கங்கள் எவற்றை பின்பற்றியதோ அதைவிட மோசமான முறையில் பல பொய்களை சொல்லி ஆட்சியமைத்த இந்த அரசாங்கம் மீளவும் தமிழ் மக்களை ஏமாற்றவே உள்ளூராட்சி தேர்தல் மூலம் வந்து நிற்கிறது. எனவே தமிழர் கிராமங்களிலும் வேரூன்ற நினைக்கின்ற ஜே.வி.பி.யினுடைய என்.பி.பி. என்ற மாயை இந்த மண்ணில் இருந்து கலைக்க வேண்டியவர்களாக தமிழ் மக்கள் இருக்கின்றனர். இன்று தேர்தல் விதிமுறைகளை முற்றாக மீறிய ஒரு கட்சியாக இது இருக்கிறது. மன்னார் மாவட்டத்தில் அண்மையில் ஜனாதிபதி பங்கேற்ற கூட்டம் ஒன்றில், சர்வாதிகாரப் போக்கிலே தனது வார்த்தைகளை பிரயோகித்துக் கொண்டிருக்கின்றார். ஒரு ஜானாதிபதியாக இருந்துகொண்டு இவ்வாறு செயற்படுவதானது உச்சக்கட்ட தேர்தல் விதி மீறலாகவே அமைந்துள்ளது. எனவே வடகிழக்கு மக்கள் நேர்மையான அரசியலை முன் நகர்த்திச்செல்பவர்கள் என்ற அடிப்படையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியை இந்த தேர்தலில் பலப்படுத்த வேண்டும். அதன் மூலமே என்.பி.பி. என்ற மாயையை வடகிழக்கில் இருந்து அகற்ற முடியும். உள்ளூராட்சி மன்றங்களில் மாற்றம் ஒன்றை நிகழ்த்துவதற்கு எமது அரசியல் இயக்கம் தயாராக இருக்கிறது. அத்துடன் இந்த நெருக்கடிகளில் இருந்து மக்கள் விடுபட வேண்டுமாக இருந்தால் எமது அரசியல் இயக்கத்திற்கு வாக்குகளை செலுத்தாவிடிலும் நிச்சயமாக ஏதாவது ஒரு தமிழ் கட்சிக்கே உங்கள் வாக்குகளை அளிக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்றார். https://www.virakesari.lk/article/212394
3 months 2 weeks ago
RESULT 35th Match (D/N), Ahmedabad, April 19, 2025, Indian Premier League PrevNext Delhi Capitals 203/8 Gujarat Titans (19.2/20 ov, T:204) 204/3 GT won by 7 wickets (with 4 balls remaining) INNINGS BREAK 36th Match (N), Jaipur, April 19, 2025, Indian Premier League Lucknow Super Giants (20 ov) 180/5 Rajasthan Royals LSG chose to bat.Stats view Current RR: 9.00 • Last 5 ov (RR): 59/2 (11.80) Win Probability: LSG 37.51% • RR 62.49%
3 months 2 weeks ago
19 APR, 2025 | 01:11 PM (எம்.மனோசித்ரா) புலம்பெயர் ஈழத்தமிழர்களை மகிழ்ச்சிப்படுத்த வேண்டுமெனில் கருணா அம்மான் மற்றும் பிள்ளையான் தண்டிக்கப்பட வேண்டும். வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்றுக் கொள்வதற்காக அரசாங்கம் அரங்கேற்றியிருக்கும் நாடகமே பிள்ளையானின் கைதாகும் என முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். களுத்துறை பிரதேசத்தில் சனிக்கிழமை (19) ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், கருணா அம்மான் மற்றும் பிள்ளையான் வெளியேறியதால் தான் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு வீழ்ச்சியடைந்தது. வேலுப்பிள்ளை பிரபாகரன் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் போராட்டங்களுக்கு தலைமை வகிக்கவில்லை. விஜேவீரவைப் போன்று அவரும் தலைமறைவாகவே இருந்தார். இந்நிலையில் போராட்டத்தை வழிநடத்திய ஒருவரே கருணா அம்மான். அவரது மிக முக்கிய சகாவாக பிள்ளையான் இருந்தார். ஆணையிறவு உட்பட 14 இராணுவ முகாம்களை சுமார் 4 நாட்களில் புலிகள் அழித்தனர். இந்த அனைத்து தாக்குதல்களையும் கருணா அம்மானே மேற்கொண்டார். கருணா அம்மானின் மாற்றத்தினாலேயே கிழக்கு மாகாணத்தை புலிகள் இழந்தனர். கருணா இருந்திருந்தால் இராணுவத்தினரால் ஒருபோதும் தொப்பிகலவை கைப்பற்றியிருக்க முடியாது. இந்திய இராணுவம் கூட தொப்பிகலவுக்குச் செல்ல அஞ்சியது. கருணா அம்மான் வழங்கிய தகவல்களின் அடிப்படையிலேயே தொப்பிகலவையும் கைப்பற்ற முடிந்தது. கருணா அம்மான் மற்றும் பிள்ளையான் புலிகளிலிருந்து பிரிந்த பின்னரே என்றுமே கைப்பற்றப்ப முடியாது என பிரபாகரன் சவால் விடுத்திருந்த தோராபோரா மலையைக் கூட கைப்பற்ற முடிந்தது. அது மாத்திரமின்றி கிழக்கு இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்ட பின்னரே ஆயுத பரிமாற்றமும் நிறுத்தப்பட்டது. எதிர்காலத்தில் தாம் பாதுகாக்கப்படுவோம் என்று நம்பியே கருணாவும் பிள்ளையானும் அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு வழங்கினர். அவ்வாறிருக்கையில் அரசாங்கம் அவர்களைக் காட்டிக் கொடுத்தால் அது நியாயமற்றது. இதன் ஊடாக வடக்கு புலம்பெயர் தமிழர்கள் ஊடாக தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்றுக் கொள்வதே அரசாங்கத்தின் நோக்கமாகும். கருணா மற்றும் பிள்ளையான் கைது செய்யப்படுவது புலம்பெயர் ஈழத்தமிழர்களை மகிழ்ச்சிப்படுத்துவதற்காகும். இதனை நோக்கமாகக் கொண்டே அரசாங்கம் இந்த நாடகத்தை அரங்கேற்றியிருக்கிறது. கருணா, பிள்ளையான் கொல்லப்படும் நாளே புலம்பெயர் ஈழத்தமிழர்கள் மிகவும் மகிழ்ச்சியடையும் நாளாகும். கலாநிதி என்.எம்.பெரேரா கூறியதைப் போன்று இன்று எதிரியின் எதிரியை நண்பனாக்கியிருக்கின்றனர். விடுதலைப் புலிகளின் எதிரி கருணா அம்மான். கருணா அம்மானின் எதிரி புலம் பெயர் ஈழத்தமிழர்கள். புலம் பெயர் ஈழத்தமிழர்களின் நண்பன் ஜே.வி.பி. ஆகும். இது வரலாற்று பேரழிவுக்கு வழிவகுக்கும் என்றார். https://www.virakesari.lk/article/212369
3 months 2 weeks ago
சிமான் கட்சியே எப்படியும் தோற்கத்தானே போகிறது. அப்ப கட்சியையே பாடையில் ஏற்றி மாலை போடுவாரா? 😂😂😂😂
Checked
Fri, 08/08/2025 - 03:39
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed