3 months 2 weeks ago
தாக்குதலில் கொல்லப்பட்ட் காயமடைந்த வர்களுக்கு உதவுவதற்காக வத்திக்கான் பாப்பாண்டவரால் மல்கம் ஆண்டகைக்கு அனுப்பப்படட பெருந்தொகை பணம் அரச நிர்வாகத்துக்கூடாக வர வேண்டுமென்று அவர்களிடம் கொடுத்து விடடார். அவர்கள் சரிவர கொடுக்கவேயில்லையென ஒரு தகவல் உலாவியது .
3 months 2 weeks ago
ஆழ்ந்த இரங்கல்கள்.
3 months 2 weeks ago
கலெக்ஷன் காசுக்கு என்ன நடந்தது ரவி ...சபாவிடமா ? இனிய பள்ளி நினைவுகளை மீட்பதில் ஒரு சுகம்.
3 months 2 weeks ago
என் பிறந்த தினத்தை வாழ்த்தி இனிய வார்த்தைகளைப் பகிர்ந்த யாழ் கள உறவுகள் , தமிழ் சிறீ ஈழப்பிரியன் ரசோதரன் யாயினி நந்தன் நுணாவிலான் கிருபன் குமாரசாமி கந்தையா அல்வாயன் ஆகியோருக்கும் இனி வாழ்த்த இருப்பவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.
3 months 2 weeks ago
வாக்குப்போடுவது மக்கள். யார் என்ன சொன்னாலும் மக்கள் பார்த்துக்கொள்வார்கள்.
3 months 2 weeks ago
இவரின் கூற்றை கேட்டால் சிரிப்பாக வருகிறது. நியூசிலாந்து பள்ளிவாசலில் நடைபெற்ற தாக்குதலுக்கு இலங்கை தமிழர் கத்தோலிக்க தேவாலயத்தில் பழிவாங்கப்பட்டனராம். முழங்காலுக்கும் மொட்டைத்தலைக்கும் முடிச்சுப்போட இவரால் மட்டுந்தான் முடியும். தாக்குதல் நடத்தியவர்கள் சொல்லாத காரணத்தை இவர் ஏன் வலிந்து திணிக்கிறார்? அப்போ இவரும் சூத்திரதாரியே! கோத்தாவை ஆட்சிக்கு கொண்டுவரவும் கர்தினால் முன்னின்றவர். கள்ளனிடமே திறப்பை கொடுத்தவர் தான் அவர். கோத்தபாயவாலும் ஏமாற்றப்பட்டார் மல்கம்! ஆடு நனையுதென்று இந்த ஓநாய் இவ்வளவு காலமுமில்லாமல் இப்போ அழுகுது. அனுராவின் அறிக்கை இன்னும் வரவில்லை, குண்டுத்தாக்குதலுக்கான காரணமும் அவர்களால் வெளிப்படுத்தவில்லை. இவர் ஏன் அரசியல் நோக்கத்திற்காக நடத்தப்படவில்லை, நியூசிலாந்து தாக்குதலுக்கு பழிவாங்கல் என்று விசாரணையை திசை திருப்புகிறார்? நியூசிலாந்துக்கும் இலங்கைத்தமிழருக்கும் கத்தோலிக்கருக்கும் என்ன தொடர்பு? இவரையும் கைது செய்து விசாரிக்க வேண்டும், தாங்களாகவே வாயை கொடுத்து பொறியில் மாட்டப்போகிறார்கள். ஒருத்தர் முந்திக்கொண்டு ஆஜர் ஆகிறார். இவர் விசாரணையை திசை திருப்புகிறார், தாக்குதலுக்கு முன், தாக்குதலாரிகள் பேசிய காணொளி ஒன்று பின்னாளில் வெளிவந்தது. அதில் அவர்கள் சொல்லாத காரணத்தை சரத் வீரசேகர சொல்கிறார். ஆகவே இதைப்பற்றி விமர்சனம் செய்யும் யாவரும் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்படவேண்டும்.
3 months 2 weeks ago
எண்பது வயதைக் கடந்த முதியவர் ஒருவர் தம் மனைவியைத் தாம் செல்லும் இடங்களுக்கெல்லாம் கையைப்பிடித்து அழைத்துச் சென்று கொண்டிருந்தார். ஆனால், அவரோடு சென்ற அவரின் மனைவியோ அடிக்கடி அங்குமிங்கும் வேடிக்கை பார்த்துக்கொண்டு நடக்காமல் நின்றுவிடுவதையும், அந்த முதியவர் அப்பெண்மணியின் கவனத்தைத் திருப்பித் தம்மோடு விடாமல் அழைத்துச் செல்வதையும் தொடர்ந்து கவனித்துவந்தார் அப்பகுதியைச் சேர்ந்த மனிதர் ஒருவர். அவர் ஒருநாள் அந்த முதியவரைப் பார்த்து, “பெரியவரே! உங்கள் மனைவி ஏன் உங்களோடு நடக்காமல் இடையிடையே நின்றுவிடுகிறார்? ஏன் அங்குமிங்கும் மிரண்டு பார்க்கிறார்?” என்று வினா எழுப்பினார். அதற்கு அந்த முதியவர், “தம்பி! என் மனைவி மறதிநோயால் (Alzheimer's disease) பாதிக்கப்பட்டிருக்கிறாள்; அதனால்தான் அவள் இப்படி நடந்துகொள்கிறாள்” என்று பதில் சொன்னார். அதைக்கேட்ட அந்த மனிதர், ”மறதிநோயால் பாதிக்கப்பட்டிருக்கும் உங்கள் மனைவிக்கு உங்களையும் அடையாளம் தெரியாதுதானே?” என்று கிண்டலாகக் கேட்கவே, அதனை ஆமோதித்த அந்த முதியவர், ”உண்மைதான்! என் மனைவி நான் அவள் கணவன் என்பதை மறந்து(ம்) பல ஆண்டுகள் ஆகிவிட்டன” என்று சொன்னார் சற்று வருத்தத்தோடு. வினாத் தொடுத்தவர் அத்தோடு நிறுத்தவில்லை. ”அப்படியானால் நீங்கள் உங்கள் மனைவியை நடுவழியில் விட்டுச்சென்றாலும் அவர் அதைப்பற்றிக் கவலைப்படப் போவதில்லை; பின்பு ஏன் நீங்கள் செல்லுமிடமெல்லாம் அவரை விடாது அழைத்துச் செல்கின்றீர்கள்?” என்று நக்கலாகக் கேட்க, எரிச்சலூட்டும் அவ்வினாவைக்கூடச் சிறுபுன்னகையோடு எதிர்கொண்ட அந்த முதியவர், ”தம்பி! என் மனைவிக்கு வேண்டுமானால் என்னை அடையாளம் தெரியாமல் போயிருக்கலாம்; ஆனால், அவள்தான் என் மனைவி என்பதும், என் வாழ்க்கைக்கு இனிமை சேர்த்தவள் அவளே என்பதும் எனக்குத் தெரியுமே” என்று பதிலளித்தார். அதைக்கேட்டதும் வினாத்தொடுத்தவரின் முகம் தொங்கிப்போனது; தம்முடைய பண்பாடற்ற வினாவுக்காக முதியவரிடம் மன்னிப்புக் கேட்டுவிட்டு அங்கிருந்து நடையைக் கட்டினார் அந்த மனிதர். நண்பர்களே, உறவுகள் நமக்குப் பயன்படும் நிலையில் இருக்கும்போது மட்டும் அவர்களிடம் அன்புகாட்டுவதும் இல்லையெனில் தூக்கியெறிந்துவிட்டுச் செல்வதும் மனிதத்தன்மையற்ற செயல்கள். பின்னாளில் அவர்கள் எந்த நிலையில் இருந்தாலும் அவர்களிடம் அன்பு காட்டுவதும், கைவிடாது அரவணைப்பதுமே உறவுக்கு நாம் செய்யும் உண்மையான மரியாதை; அதனைத் தம் செயலால் நிரூபித்திருக்கும் அந்த முதியவரைப் போற்றுவோம்!🙏 [About That Street (ATS) எனும் முகநூல் பக்கத்தில் நான் படித்த ஆங்கிலக் கதையின் தமிழாக்கம் இது.] Megala Ramamourty
3 months 2 weeks ago
அப்போ, எதற்காக சந்திரகாந்தன், வி. முரளிதரன் தண்டிக்கப்படவில்லை? எதற்காக அவர்களுக்கு பதவிகள் வழங்கப்பட்டன? அவர்கள் நாட்டுக்காக, உயிரையும் அர்ப்பணித்து சேவை செய்தார்கள் என்று புகழாரம் சூட்டினார்கள்? புலிகளுடனான யுத்தத்தில் வெற்றி பெற இராணுவத்தினருக்கு பாரிய பங்களிப்பை செய்த வி. முரளிதரனுக்கு விசேட விருது கொடுக்கப்பட வேண்டுமென, தாய் நாட்டுக்கான இராணுவத்தினரின் அமைப்பின் இணைப்பாளர் அஜித் பிரசன்னா வலியுறுத்தினார், அவ்வாறு கொடுக்கப்படாவிட்டால் பொன்சேகாவுக்கு கொடுக்கப்பட்ட பீல்ட் மார்ஷல் பட்டத்தை மீளப்பெற வேண்டுமென வலியுறுத்தினார். அப்போ ஏன் இந்த சரத் பொன்சேகா அதற்கு எதிராக கருத்து தெரிவிக்கவில்லை? கேள்வி கேட்கவில்லை? மஹிந்தா இவர்களுக்கு பதவி, பணம் கொடுக்கும்போது தடுக்கவில்லை? இப்போ இவர்கள்தாங்கள் செய்த துரோகத்தை நினைத்து கண்டிப்பாக புலம்புவார்கள், புலம்புகிறார்கள். என்ன பயன்? பெயர் வைத்து, புகழ் கொடுத்த தலைவனை காட்டிக்கொடுத்த துரோகம் இப்போ இவர்களுக்கெதிராக. அதே துரோகிகளால் அழிவை சந்திப்பார்கள்.
3 months 2 weeks ago
சஜித் வெற்று பெற்றிருந்தால் சஜித் தான் தையிட்டி விகாரைக்கு காரணம் என கூறி இருப்பார். ஆரிய குளத்தை மணிவண்ணன் மேயராக இருந்த போது சுத்தப்படுத்தி அழகுற செய்த போது நாக விகாரைக்கு வரும் சிங்களவர் வந்து இளைப்பாறவே மணிவண்ணன் அதை செய்தார் என்று பத்திரகையாளர் சந்திப்பில் பெஈரங்கமாக இனவாதம் பேசியவரே இந்த கஜேந்திரகுமார்.
3 months 2 weeks ago
வாக்குக்காக ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டுகிறார்கள்.
3 months 2 weeks ago
அதுவரை எமக்கு ஒரு அரசியல் தீர்வை பெற்றுத்தர விரும்ப மாட்டார்கள். ஆனாலும் நாங்க முயற்சி செய்யாமல் இருக்கலாமா? தமிழர்கள் என்ன தமிழீழமா கேட்கிறார்கள்? ஒரு சிங்களவன் எப்படி என்ன உரிமையுடன் வாழ்கிறானோ அதே உரிமையுடன் தமிழனும் வாழ வேண்டுமென்று தானே கேட்கிறான்.
3 months 2 weeks ago
தேசிய மக்கள் சக்தியின் போலிமுகம் தையிட்டி திஸ்ஸ விகாரையில் அம்பலம்! [Saturday 2025-04-19 06:00] தொல்பொருள் சான்றுகள் எவையும் கண்டறியப்படாத யாழ். தையிட்டியில் திஸ்ஸ விகாரையை நிர்மாணிப்பதற்கு நாம் ஆரம்பத்திலிருந்தே எதிர்ப்பை வெளிப்படுத்திவந்தோம். அதற்கு முரணாக அவ்விகாரை சட்டவிரோதமான முறையிலேயே நிர்மாணிக்கப்பட்டது என்ற உண்மை சகலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. அவ்வாறிருக்கையில் நாம் பாதிக்கப்பட்ட மக்களுடன் இணைந்து நீதிக்காகப் போராடுவதை இனவாதம் என ஜனாதிபதி கூறுவாராயின், அவரது அரசாங்கமும் கடந்தகால இனவாத அரசாங்கங்களைப் போன்றுதான் செயற்படப்போகிறது என்பதே அர்த்தம் என தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். யாழ்ப்பாணம் கிட்டு பூங்காவில் வியாழக்கிழமை (17) நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, 'திஸ்ஸ விகாரை பிரச்சினைக்குத் தீர்வு காண்பது இலகுவானதாகும். இருப்பினும் இந்தப் பிரச்சினையை மையப்படுத்தியதாக நிலவும் வடக்கு மற்றும் தெற்கு அரசியல் அகலவேண்டும். அரசியல்வாதிகள் தான் திஸ்ஸ விகாரை பிரச்சினைக்குத் தீர்வுகாண இடமளிப்பதில்லை. அவர்களுக்கு இனவாதம் தேவை. எங்கேனும் தொல்பொருள் சின்னங்கள் கிடைக்கப்பெற்றால் அவற்றை தொல்பொருள் மரபுரிமை அடிப்படையில் நோக்கவேண்டுமே தவிர, அது இந்துக்களுக்கு உரியதா அல்லது பௌத்தர்களுக்கு உரியதா என இன, மத அடிப்படையில் நோக்கக்கூடாது' எனக் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து கருத்து வெளியிட்ட கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தற்போதைய அரசாங்கம் இதற்கு முன்னர் ஆட்சியிலிருந்த தமிழர் விரோத இனவாத அரசாங்கங்களைப் போன்றதா? அல்லது உண்மையில் நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான ஆரம்பப்புள்ளியா? என்ற விடயம் இதனூடாக வெளிப்பட்டுள்ளது எனச் சுட்டிக்காட்டினார். 'யாழ் தையிட்டியில் திஸ்ஸ விகாரை அமைக்கப்பட்டுள்ள இடத்தில் தொல்பொருள் சார்ந்த எந்தவொரு சான்றுகளும் கிடைக்கப்பெறவில்லை. மாறாக அது தனியார் காணியில் சட்டவிரோதமாகக் கட்டப்பட்ட விகாரை என்பதை சகலரும் ஏற்றுக்கொண்டிருக்கின்றனர். குறிப்பாக அவ்விகாரையை நிர்மாணிப்பதற்கு அடிக்கல் நாட்டப்பட்டு இரண்டு நாட்களுக்குள் நடைபெற்ற யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டத்தில் நாம் இவ்விடயம் தொடர்பில் எடுத்துரைத்ததுடன், இந்த சட்டவிரோத விகாரை நிர்மாணம் உடனடியாக நிறுத்தப்படவேண்டும் என ஏகமனதாகத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. பொலிஸார், இராணுவத்தினர், பிரதேச செயலாளர் உள்ளடங்கலாக சகல தரப்பினராலும் குறித்த விகாரை நிர்மாணம் சட்டவிரோதமானது என ஏற்றுக்கொள்ளப்பட்டே அத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. எனவே அந்த விகாரையை நிர்மாணிக்கும் வரை அமைதியாக இருந்துவிட்டு, நிர்மாணப்பணிகள் முடிவடைந்ததன் பின்னர் நாம் எதிர்ப்புத் தெரிவிப்பதாகக் கூறப்படும் சகல கருத்துக்களும் அப்பட்டமான பொய்கள் மாத்திரமே' எனவும் கஜேந்திரகுமார் தெரிவித்தார். மேலும் உண்மைப் பின்னணி இவ்வாறிருக்கையில் தாம் பாதிக்கப்பட்ட மக்களுடன் இணைந்து நீதிக்காகப் போராடுவதையும், அவர்களுக்கு ஆதரவாக நிற்பதையும் இனவாதம் என ஜனாதிபதி கூறுவாராயின், அவரது அரசாங்கமும் கடந்தகால இனவாத அரசாங்கங்களைப் போன்றுதான் செயற்படப்போகிறது என்பதே அர்த்தம் என்றும் அவர் குறிப்பிட்டார். 'ஏனெனில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தான் தமிழ் மக்கள் தமக்கு வாக்களித்ததாகக் கூறியது. அவ்வாறிருக்கையில் இவ்விவகாரத்தில் சுமுகமான தீர்மானமொன்றை எடுக்காமல், ஒவ்வொரு காரணத்தைக் கூறிக்கொண்டிருப்பது ஏன்? தேசிய மக்கள் சக்தி முழுவதுமாக மக்கள் விடுதலை முன்னணியின் கைகளுக்குள்ளேயே இருக்கிறது. மக்கள் விடுதலை முன்னணி என்பது நீண்டகாலமாக தமிழர் விரோத கொள்கையுடன் இனவாத அடிப்படையில் செயற்பட்டுவந்த அமைப்பாகும். எனவே தேசிய மக்கள் சக்தியின் போலி முகம் இந்த தையிட்டி திஸ்ஸ விகாரை விடயத்தில் அம்பலமாகியிருக்கிறது' எனவும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சுட்டிக்காட்டினார். https://seithy.com/breifNews.php?newsID=332204&category=TamilNews&language=tamil
3 months 2 weeks ago
யுக்ரேனிய படை வீரர்கள் சரணடைகிறார்கள். அவர்களை வழி நடத்த தலைமை இன்மையால் அடுத்து என்ன செய்வது என தெரியாமல் தடுமாறுகிறார்கள். Forcefully conscripted soldier, basically kidnapped off the street is not an asset on the frontline but a liability. தெருவில் கடத்தப்பட்ட, கட்டாயமாக இராணுவத்தில் சேர்க்கப்பட்ட சிப்பாய், போர்முனையில் ஒரு சொத்தாக இல்லை, மாறாக ஒரு பொறுப்பாகவே கருதப்படுகிறார்.
3 months 2 weeks ago
ரஜ லுணுவும் ஆனையிறவு உப்பும் வை.ஜெயமுருகன் சமூக அபிவிருத்தி ஆய்வாளர் ஆனையிறவு உப்பளத்தில் புதிதாக பூத்த மறு உற்பத்தியாகும் ‘ரஜ லுணு’ வின் அறிமுகம் பலர் மத்தியில் ஒரு விவாத நிலையை உருவாக்கியுள்ளது. ‘ரஜ லுணு’ வின் பெயர் தான் இங்கு விவாதப்பொருள். ‘ஆனையிறவு உப்பு’ என்பதுதான் பொருத்தமான பெயர் என்றும் பல குரல்கள் வருகின்றன. மிக முக்கியமான உப்பு உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்தல் முன்னெடுப்பு புதிதாக உருவாகும் போது, இவ்வாறான விவாதங்கள் ஒரு பின்னடைவைத் தரும் எனக் கருதுவோரும் உண்டு. விவாதங்கள் நல்ல முன்னெடுப்புக்களை கொண்டுவரும் என்று எண்ணுவோரும் உண்டு. உண்மையில், புதிதாக உருவாகிய உற்பத்தி ‘ரஜ லுணு’ வும் அதற்குரிய பெயராக முன்மொழிந்துள்ள ‘ஆனையிறவு உப்பு’ என்னும் சொற்கள் வேறுபாடுடையனதான். ஆனால் இவை இரண்டும் சுட்டும் நுகர்வுக்குரிய பொருள் ‘உப்பு’ தான். ஆனால், நுகர்வோர்கள் இதனைப் பார்க்கும் விதம், அதை அடையாளம் கொள்ளும் விதம் முற்றிலும் வேறுபடும். இது ஒரு சந்தைப் பொருளின் வர்த்தகப் பெயர் என்று குறுக்கிவிட முடியாத ஒரு வர்த்தகப் பெயர். இரு பெயர்களுக்கும் இடையில் நீண்ட அகன்ற பள்ளம் உள்ளது. பெயருக்கிடையிலான வலுவான மையம் கொள்ளும் நுண் அரசியல் மறைந்துள்ளது. குறியில் அறிவுத்துறை மூலம் இந்த இரண்டு பெயர்கள் கொள்ளும் வலுவான நுண் அரசியல் மற்றும் அரசியல் பொருண்மிய மையங்களை உடைத்துப் பார்க்கலாம். குறி அறிவியலில் (In semiotics), ஓர் “அடையாளத்தின் இடம்” என்பது குறிப்பானுக்கும் (the signifier) குறிக்கப்பட்டதற்கும் (the signified) இடையிலான உறவின் மூலம் புரிந்து கொள்ளப்படலாம். குறிப்பான் என்பது ஒரு சொல் அல்லது படம் போன்ற இயற்பியல் பிரதிநிதித்துவத்தை குறிக்கும். அதேநேரத்தில், குறிக்கப்பட்டது என்பது குறிப்பானின் கருத்தையும் அல்லது பொருளையும் குறிப்பிட்டுச் சுட்டும். இந்த இரண்டுக்கும் இடையிலான உறவே குழு அடையாளங்களை உருவாக்கவும் வெளிப்படுத்தவும் விளங்கிக் கொள்ளவும் பயன்படுத்தலாம். ‘ஆனையிறவு உப்பு’ என்னும் குறிப்பானுக்கும் அது உருவாக்கும் கருத்து அல்லது பொருளை விளங்கிக்கொண்டால், அண்மையில் வெளிக்கிளம்பிய ‘ரஜ லுணு’ க்கும், ‘ஆனையிறவு உப்பு’ என்னும் இரு பெயர்களுக்கிடையிலான விரிவான தெளிந்த விவாதத்தை முன்வைக்கலாம். ‘ரஜ லுணு’ என்பது ஓர் அடையாளத்தை நீர்த்து கரைக்கும் நிலை நோக்கிய மேலாதிக்கப் போக்கின் குறிப்பானாக அமைகிறது. ‘ஆனையிறவு உப்பு’ என்னும் குறிப்பான் தன் சுய அடையாளத்தை பேணவும், தன் வளமான பொருளாதார ஆதாரத்தின் இட அமைவை வலியுறுத்தும் ஒரு முனைப்பாகவும் பார்க்க முடிகிறது. அதனுடாக, ஒரு வலுவான ஓர் இன இருப்புக்கான ஆதாரத்தை பேணுவதற்குமான, தன் அரசியல் பொருண்மிய அடையாளத்தை விட்டுக்கொடுக்காத, ஒரு முனைப்பின் வலுவான குரல் எனவும் நோக்க முடியும். 2. பெயர் மாற்றம்: அதன் நுண் அரசியலும் அதனுள்ள ஒருத்தலுக்கான ஒத்திசைவும் இலன் பப்பே ஆய்வுகளின் பிரகாரம் பெயர் மாற்றம் மீதான நுண் அரசியலும் அதனுள்ள இருத்தலுக்கான ஒத்திசைவுகளும் மிகவும் ஆராயப்பட்டுள்ளன. (The Ethnic Cleansing of Palestine , September 1, 2007,by Ilan Pappe). பட்டிப்பளை ஆறு கல் ஓயா ஆகவும், திருகோணமலை முதலிக்குளம் மொரவெவ எனவும் மணல் ஆறு இன்று வெலிஓயா எனவும் மாற்றம் கொண்ட கள அனுபவங்களின் தளத்தில் நிதானமாக பார்க்கையில் பெயர் மாற்ற நுண் அரசியலின் வகிபாகத்தை நன்கு அசைபோடலாம். இந்நிலையில், போரின் பின்னரான கால கட்டத்தில் புதிய பெயர்களின் வருகை என்பது அதுவும் குறிப்பாக பொருண்மிய உற்பத்தியின் அடைமொழியாக வருவதென்பது ஒரு பிரதேசத்தின் பொருண்மிய அடையாளங்களை ஒரு நீர்த்து, கரைத்து, உலர்த்தும் ஒரு தூர நோக்கின் வெளிப்பாடு தானோ என்பதன் பின்னணியில் ‘ரஜ லுணு’ க்கும் ‘ஆனையிறவு உப்பு’ க்கும் இடையிலான ஒரு ஆழமான பார்வை தேவையாக உள்ளது. பெயரிடுவது மற்றும் பெயர் மாற்றம் செய்வது என்பது சாதாரணம். ஆனால், ‘ஆனையிறவு உப்பு’ ‘ரஜ லுணு’ வாக மாறுவது பெயர் மாற்றம் அல்ல; இது, ஒரு சந்தைக்குரிய பொருளின் பெயர் மாற்றம் அல்ல. இதன் பின் ஒரு வலுவான அரசியலும் அரசியல் பொருளாதாரத்துக்கான ஆபத்தும் மறைந்துள்ளது. ஒரு வலுவான அடையாள இருப்பின் அவசியம் என்பது ஒரு சமூக அரசியல் மற்றும் கலாசார விழிப்புநிலைக்கு தள்ளப்பட்ட மக்களுக்கு மிக அவசியமானது. ஒரு இருப்பிட அடையாள உணர்வின் அவசிய தேவை என்பதை பிந்தைய பின் நவீனத்துவ கருத்தாடல்களில் மிக நுண்ணியமாகக் காணலாம். 3. இலங்கையின் உப்பு சார் தொழில்துறை வளர்ச்சியில், வடக்கு மாகாணத்தின் வளமான உப்புத்தளங்கள் இலங்கையின் உப்பு சார் தொழில் துறை வளர்ச்சியில், வடக்கு மாகாணத்தின் பங்கு மிக கணிசமானது. வட மாகாணத்தின் வளமான உப்புத்தளங்கள் அதன் பலம் பொருந்திய வலுவான பொருளாதார மையங்கள். மேலும், அதன்மீது கட்டக்கூடிய பல பொருளாதார வாய்ப்புகளை கொண்டுள்ளன. உப்பளங்களின் பிரகாசமான எதிர்காலம் என்பது உப்பு சார் ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க முன்னெடுப்புகளில் தங்கியுள்ளன. கடலும் தரையும் இணைந்து தரும் வளமான உப்பு ஒரு உணவு, மருந்து. இரசாயன தொழில் சார் துறையில் அடிப்படைக்கு ஆதாரம். வட மாகாணத்தின் தற்போதுள்ள உப்பு நிலங்கள் உகந்த கடல் காற்றைக் கொண்டுள்ளன. மேலும் ஆண்டு முழுவதும் சூரிய ஒளியின் மிகுதியானது உப்பை அதிகமாக உருவாக்கும் திறனைக் கொண்டுள்ளது. நிலத்தின் உப்புக்கான புவியியல் திறன் என்பது வட மாகாணத்தின் கொடை என கொள்ளலாம். உப்பு சார் அபிவிருத்திக்கு சூரிய சக்தி மற்றும் காற்றாலைகளில் முதலீடு, மனித வள அபிவிருத்தி மற்றும் சுற்றுச்சூழல் அக்கறை என்பன இத்துறையின் முழுமையான ஆற்றலைக் வெளிக்கொணரும். வட மாகாண அபிவிருத்தியின் பிரகாசமான பக்கங்களை இது வெளிக்காட்டும். உப்பு உற்பத்தி மட்டுமே கவனம் கொள்ளும் காலம் போய்விட்டது. உப்பின் மூலம் பல பெறுமதிசார் புதுமைகளை வெளிக்கொணர வேண்டும். உப்பு சார்ந்த துறை பல துறைகளுக்கு அடிப்படை. கடல் உப்பு தரக்கூடிய வாய்ப்புகள் முடிவற்றவை. உப்புசார் உற்பத்திகள் ஏற்றுமதிச் சந்தையில் நுழைவதற்கும் உள்ளூர் தொழில்களை வலுப்படுத்துவதற்கும் பல வாசல்களை திறக்கும் சூழ்நிலையை உருவாக்கி வருகின்றது. மருந்து தயாரிப்பில் உப்பு ஒரு மூலப்பொருளாக பயன்படுத்தப்படுகிறது. இது கண் மற்றும் காது சொட்டுகள் மற்றும் உமிழ்நீரை உருவாக்க பயன்படுகிறது. உயர்தர பற்பசை உற்பத்தியும் உயர்தர உப்பைப் பயன்படுத்துகிறது. உப்பு உற்பத்தியின் மற்றொரு துணைத் தயாரிப்பு மீன் தீவனம், ஆர்டீமியா (உப்பு இறால்), உள்ளூர் சந்தைக்கு தேவைகள் அதிகமாகும். இலங்கையில் வளர்ந்து வரும் ஏற்றுமதி மீன் தொழிலில் ஆர்ட்டெமியா ஒரு அத்தியாவசிய உணவுப் பொருளாகும். மேலும், மசாலா ஏற்றுமதியாளர்கள் உயர்தர உப்பை ஒரு பாதுகாப்புப் பொருளாகப் பயன்படுத்துகின்றனர். இது அவர்களின் தயாரிப்புகளுக்கு மதிப்பு சேர்க்கிறது. இலங்கையின் உள்ளூர் தொழில் முயற்சியாளர்களுக்கு பல வாய்ப்புக்கள் உள்ளன. உப்பளங்களின் எதிர்கால வளர்ச்சி பல பிரகாசமான சாத்தியங்களை கொண்டுள்ளது; நாம் பெரிய அளவில் சாதிக்க உதவும். 4. இலங்கையில் உப்பு உற்பத்தி செய்யப்படும் உப்பளங்களின் தற்போதைய நிலை. தற்போது, எல்லா உப்பளங்களும் அரசுக்கு சொந்தமானவை. இலங்கை மக்களுக்கு சொந்தமானவையாக இருந்ததை 1956 ஆம் ஆண்டு பண்டாரநாயக்க அரசாங்கம் ஒரு தேசியமயமாக்கல் கொள்கையை அமுல்படுத்தி அதன் மூலம் பெரும்பாலான பொது பயன்பாட்டு அமைப்புகள் மற்றும் அத்தியாவசிய தொழில்கள் தேசியமயமாக்கப்பட்டன. அவை அரசாங்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டன. 1957 ஆம் ஆண்டின் 49 ஆம் எண் அரச தொழில்துறை கழக சட்டம் இயற்றப்பட்டது. அதன் கீழ் பல பொது நிறுவனங்கள் நிறுவப்பட்டன. அவற்றுள் தேசிய உப்பு கூட்டுத்தாபனம் டிசம்பர் 3, 1957 இல் நிறுவப்பட்டது. கைத்தொழில் அமைச்சின் கீழ் இயங்கிய இக்கூட்டுத்தாபனம் இலங்கையில் உப்புத் தொழிலைக் கைப்பற்றியது. உப்பு உற்பத்தி செய்யப்படும் உப்பளங்கள் அரசின் வசமாகின. 1977 க்குப் பிறகு தேசியமயமாக்கலில் இருந்து தனியார்மயமாக்கலுக்கு கொள்கை மாற்றம் ஏற்பட்டதால், பெரும்பாலான நிறுவனங்கள் புது வடிவம் பெற்றன. தனியாரிடம் இணைந்த ஒரு வகை மாற்றம் பெற்றன.1990 இல் இணைக்கப்பட்ட லங்கா சால்ட் லிமிடெட், தெற்கில் உள்ள ஹம்பாந்தோட்டை, புந்தல மற்றும் பலதுபான ஆகிய மூன்று உப்பளங்களை நிர்வகிக்கிறது.மாந்தை உப்பு லிமிடெட் 2001 ஆகஸ்ட் மாதம் மன்னார் மற்றும் யாழ்ப்பாணத்தின் செம்மணியில் உள்ள உப்பளங்களை கைப்பற்றுவதற்காக உருவாக்கப்பட்டது. 2004 டிசம்பரில் ஏற்பட்ட சுனாமியால் தெற்கில் உப்பு உற்பத்தி தடைப்பட்டது. அதேவேளையில், வடக்கு உப்பளங்களில் உற்பத்தியானது உள்நாட்டுக் குழப்பங்களால் மோசமாகப் பாதிக்கப்பட்டு செயல் நிலையற்ற நிலை உருவானது. வடக்கு – கிழக்கு மாகாண உப்பளங்கள் இலங்கையின் வளமான உப்பு உற்பத்திப் பொருளாதார வலயங்களாகும். 1970 களில் நாட்டின் உப்புத் தேவையில் ஐம்பது சதவீதத்திற்கும் மேல் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண உப்பளங்கள் வழங்கின. இருப்பினும், உப்பு உற்பத்தியை வளர்ப்பதற்கான உந்துதல் இன்னும் முழுமையாக வளரவில்லை எனலாம். கிழக்கு மாகாணத்தில் கும்புறுப்பிட்டி, நிலாவெளி உப்பளங்களும் வடமாகாணத்தில் ஆனையிறவு மற்றும் மன்னார் (மாந்தை) உப்பளங்களும் வளமான, வளரக்கூடிய சாத்தியமான பகுதிகளாகும். ஆனையிறவு உப்பளமானது நாட்டிலேயே மகத்தான உப்பு மையமாகும். இருப்பினும், உப்பு உற்பத்தியை வளர்ப்பதற்கான உந்துதல் இன்னும் முழுமையாக வளரவில்லை எனலாம். ஆனையிறவு உப்பளமானது நாட்டிலேயே மகத்தான உப்பு மையமாகும். இது உப்பளங்களின் அரசன் எனலாம். இலங்கையில் உப்பு கைத்தொழில் தனியார்மயமாக்கலுக்குப் பிறகு, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உப்பு உற்பத்தி எதிர்மறையாகப் பாதிக்கப்பட்டதால் உற்பத்தி கணிசமாக குறைந்தது. தெற்கில் குறிப்பிடத்தக்க இரண்டு உப்பளங்களான ஹம்பாந்தோட்டை மற்றும் புத்தளம் உப்பளங்கள் இயங்கி வருகின்றன. இருப்பினும், உள் சவால்களை, அரசியல் தலையீடு காரணமாக இரண்டும் நட்டத்தில் நடை போடுகின்றன. உப்புத் திணைக்களம் 1966 இல் தேசிய உப்புக் கூட்டுத்தாபனமாக மாற்றப்பட்டது. 1990 ஆம் ஆண்டுக்கு முன்னர் இலங்கையில் உள்ள அனைத்து உப்பு மையங்களும் கூட்டுத்தாபனத்தின் கீழ் இருந்தன. அந்த ஆண்டு, உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் கடன் வழங்கு நிபந்தனையின் கீழ் பொது நிறுவன சீர்திருத்த ஆணையத்தின் (PERC) மேற்பார்வையில் இலங்கை அரசாங்கம் லங்கா உப்பு நிறுவனத்தை உருவாக்கியது. இத்திட்டத்தின் கீழ், மன்னார் உப்பளம் தனியாக எடுக்கப்பட்டு மாந்தை உப்பு லிமிடெட் என மறுசீரமைக்கப்பட்டது. வடக்கு, கிழக்கு பகுதிகளில் உள்ள அனைத்து உப்பளங்களையும் தனியார்மயமாக்குவதை PERC மேற்பார்வையிட முடியாததால், இவை 1990 இல் மாந்தை உப்பு லிமிடெட்டின் கீழ் கொண்டு வரப்பட்டன. மன்னார் நகரில் அமைந்துள்ள மாந்தை உப்பு லிமிடெட், 1991 மற்றும் 92 ஆம் ஆண்டுகளில், போர் காரணமாக ‘கம்பெனி’ உற்பத்தியை நிறுத்த வேண்டியிருந்தது. அக்டோபர் 2001 , அரசாங்கம் அந்த நிறுவனத்தை கைத்தொழில் அமைச்சின் கீழ் கொண்டு வந்தது. இலங்கையில் உப்பு உற்பத்தியில் நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ள மாந்தை உப்பு லிமிடெட் / நேஷனல் சால்ட் லிமிடெட்டின் தூர நோக்கு, வடக்கில் உப்பு சார்ந்த நிறுவனங்களை உருவாக்குதல், மற்றும் அதன் மூலம் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தலாகும். மாந்தை உப்பு லிமிடெட், சாதாரண உப்பு, அயோடின் கலந்த, நொறுக்கப்பட்ட மற்றும் தொழில்துறை உப்பு ஆகியவற்றை உற்பத்தி செய்கிறது. முக்கிய உற்பத்திப் பகுதிகள் மன்னார் மற்றும் ஆனையிறவு (கிளிநொச்சி) மாவட்டத்திலும், அதன் நிர்வாக அலுவலகம் கொழும்பிலும் உள்ளது. இலங்கையில் உப்புத் துறை 1938 இல் தொடங்கப்பட்டது. ஜூன் 2021 இல், இது நேஷனல் சால்ட் லிமிடெட் என மறு பெயரிடப்பட்டது. நாட்டின் மற்றொரு பகுதியில் அறுவடை செய்யப்பட்ட நிறுவனத்தின் உப்புடன் ஒப்பிடும்போது, வட மாகாணத்தின் உப்பு தரத்தில் சிறந்ததாக (96% NaCl) அங்கீகரிக்கப்பட்டுள்ளது. தற்போது, மன்னார் உப்பளத்தில் 6,000 மெட்ரிக் தொன் கச்சா உப்பும், ஆனையிறவு உப்பளத்தில், ஆண்டுக்கு 17,000 மெட்ரிக் தொன் உப்பும் உற்பத்தி செய்யப்படுகிறது. தற்போது இதில், 64 நிரந்தரப் பணியாளர்கள் உள்ளனர். மேலும் சுமார் 250 பருவகால பணியாளர்கள் நிறுவனப் பணி புரிகின்றனர். அரசு நிறுவனமாக, 2007 ஆம் ஆண்டின் கம்பெனி சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது. தயாரிப்புத் தரத்தை உறுதி செய்வதற்காக இலங்கை தரநிலை நிறுவனத்தால் சான்றளிக்கப்பட்டது. மார்ச் 29, 2025 அன்று, தொழில்கள் மற்றும் நிறுவன மேம்பாட்டு அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி, ஆனையிறவில் ஒரு புதிய மேசை உப்பு உற்பத்தி நிலையத்தை அதிகாரபூர்வமாகத் திறந்து வைத்தார். இது மணிக்கு 5 மெட்ரிக் டன் “ரஜ லுணு” உப்பை உற்பத்தி செய்யும் திறன் கொண்டது. உப்புப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்து வேலைவாய்ப்பை உருவாக்கும் நோக்கில் இப்புதிய முயற்சி துவங்கியது. ஆனையிறவு உப்பள உப்பு 29-03-2025 தொடக்கம் ‘ரஜ லுணு’ Raja Salt (Elephantpass) என்ற பெயரில் அரசாங்க உப்பு விற்பனைக்கு வந்துள்ளது. இங்கிருந்துதான், ஆனையிறவு உப்பின் பெயருக்கான குரல்கள் வெளிவந்தன. 5. ஆனையிறவு – உப்பு தலைநகரம் 1990 க்கு முன், ஆனையிறவு மற்றும் குருஞ்சத்தீவு உப்பளங்கள் 1000 ஏக்கருக்கு மேலான பரப்பளவான மிகப்பெரிய உப்பளங்களைக் கொண்டவை. ஆண்டுக்கு 85,000 மெட்ரிக் தொன் உப்பு உற்பத்தி செய்யப்பட்டது. இந்த உற்பத்தியானது இலங்கையின் அனைத்து உப்புத் தேவைகளையும் பூர்த்தி செய்ததுடன், ஏற்றுமதிக்கு போதுமான உபரியை விட்டுச் சென்றது. போரின் போது அழிக்கப்பட்ட இந்த உப்பளங்கள், புனரமைக்கப்பட்டு (2003) மொத்த கொள்ளளவில் 15%க்கு உப்பு உற்பத்தி செய்யப்பட்டது. 1990 முதல் 2000 ஆம் ஆண்டு வரையில் யுத்தம் ஆனையிறவு மற்றும் குருஞ்சதீவில் உள்ள உப்பளங்களை காவுகொண்டன. உப்பளங்கள் கவனிப்பாரற்று போகின. 2000 அளவில், புலிகளின் கட்டுப்பாட்டின் கீழ் வந்த பகுதியுடன் தி எகனாமிக் கன்சல்டன்சி ஹவுஸ் (The Economic Consultancy House- TECH) என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனம், 35 ஆண்டுகால உப்புத் தொழிலில் அனுபவம் வாய்ந்த எஸ். வேலாயுதபிள்ளை அவர்களின் உதவியுடன் அழிக்கப்பட்ட உப்புத் தொட்டி அமைப்பை மறுசீரமைப்பதற்கும் மேற்பார்வையிடுவதற்கும் முயன்றது. வெற்றிகரமாக புதிய உப்பு உற்பத்தி நிலையத்தை உருவாக்கியது. ஆனையிறவில் உப்பு உற்பத்தியை இயந்திரமயமாக்கி மேம்படுத்தும் முயற்சிகள் நடந்தன. ஆராய்ச்சி ஆய்வகத்திற்கான உபகரணங்கள், ஆலைக்கான ஜெனரேட்டர்கள் மற்றும் உப்பு ஏற்றுவதற்கும், இறக்குவதற்கும் துணைக்கருவிகள் கொண்ட புதிய டிராக்டர் ஆகியவை இந்தியாவில் இருந்து நிதியுதவியுடன் இறக்குமதி செய்யப்பட்டன. யுனிசெஃப் ரூ. 10 மில்லியன் வழங்கி உதவியது. 2003 இல் தி எகனாமிக் கன்சல்டன்சி ஹவுஸ் (TECH) ஆனது இரண்டு இடங்களிலும் தொடர்ந்து உப்பு உற்பத்தியை அதிகரித்தது. குருஞ்சதீவு உப்பளத்தில் மூன்று கூடுதல் உப்புத் தொட்டிகளை நிர்மாணித்து, சுமார் 115 பேருக்கு வேலைவாய்ப்பை வழங்கியது. இந்தத் தொழிலகத்தில் 300 பேர் நிரந்தரமாக வேலை செய்ய முடியும். தற்காலிக மற்றும் பருவகால பணியாளர்களை சேர்த்தால், உப்பு செயல்பாட்டின் வேலை வாய்ப்பு 1000 ஐ தொடும். ஆனையிறவு உப்பளம் ஒரு பொருளாதார குறியீடு. அரசாங்க நிருவாகத்தின் போதும், இல்லாத போதும் இயங்கிய பெருமை ஆனையிறவு உப்பளத்தை சாரும். தரமான உப்பின் விளைநிலம் ஆனையிறவு. இலங்கையில் குறிப்பாக வடமாகாணத்தின், கிளிநொச்சியின் உப்பின் அடையாளம் மற்றும் உப்புத் தலைநகரம் ஆனையிறவு உப்பளம் எனலாம். ஆனையிறவு உப்பளம் இலங்கையின் பெருமை. ‘ஆனையிறவு உப்பு’ என்பது ஒரு வர்த்தக அடையாளம். Tokyo Cement போல. நெய்தலின் பெருமை ஆனையிறவு. ஆனையிறவு என்னும் இடப்பெயர் ஒரு அடைமொழியாக வருவது என்பது உப்பு உற்பத்தியின் பெருமை. இலங்கையின் உப்பு பொருளாதாரத்துக்கு மகுடம் கொள்ளும் பெயர் ஆனையிறவு உப்பு. உள்ளூர் உற்பத்தியும் உள்ளூர் பொருளாதாரமும், மண் பொருண்மிய அடையாளங்கள், எப்போதும் நெருக்கமாக இணைந்தவை; பிரிக்கமுடியாதவை. ஏனெனில், உள்ளூர் உற்பத்தி அடையாள உணர்வு என்பது ஒரு கலாசாரப் பாரம்பரிய அடையாளத் தளத்தின் உயிர். இது ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் போன்றது. உள்ளூர் உற்பத்தி அடையாள உணர்வு என்பது ஒரு கலாசார பாரம்பரியத்தின் அடையாள தளத்திலிருந்து கட்டமைக்கப்படுகிறது. வளர்க்கப்படுகிறது. அதேநேரத்தில், வலுவான உள்ளூர் பொருளாதாரம் மற்றும் அதன் உற்பத்திகள் சமூகத்தின் தனித்துவமான தன்மையை வலுப்படுத்துகிறது. மேலும், பொருளாதார அடையாளம் என்பது அமைவிட அடையாளம் தான். அத்துடன், அவ்விடத்துக்குரிய மக்களின் அடையாளத்தையும் உள்ளடக்கியது. இந்த இரண்டு அம்சங்களும் பின்னிப் பிணைந்தவை, ஒன்றோடொன்று இணைந்திருப்பவை. ஒரு நீடித்த நினைவக நிலப்பரப்பின் ஒரு இறுக்கமான உருவாக்கம் எனவும் கருதலாம். இதனால், பொருளாதார அடையாளம் பிராந்தியத்திற்கு சொந்தமானது. பிரதேசத்துக்கு சொந்தமானது என்பது ஒரு உணர்வு நிலை. கொண்டாடப்படவேண்டிய ஒரு வாழ்வியல் முறைமை. உள்ளூர் அடையாளமும் தேசிய அடையாளமாக ஒரு புள்ளியில் இணையும் நிலை, ஒரு கூட்டு அடையாள நிலை கொள்கிறது. ஆனையிறவு உப்பள பிரதேச பொருண்மிய அமைவிட அடையாளம் என்பது ஒரு கூட்டு நிலையின் நிலை. இந்த நிலையில்தான் ஆனையிறவு உப்புக்கு ‘ஆனையிறவு’ என்னும் அடைமொழியின் அவசியம் பற்றிய கோரிக்கை அணுகப்படவேண்டும். இது ஒரு அரசியல் கோஷம் இல்லை. ஒரு அரசியல் பொருண்மியத்தின் அடையாள கோஷம். விட்டுக்கொடுக்கமுடியாத நிலை. உள்ளூர் சமூக பொருண்மிய கலாசார அடையாளம் மற்றும் அதன் பொருளாதாரத்தை ஊக்குவிப்பது என்பது பல நன்மைகளை வழங்குபவை. தொழில்மயமாக்கல் மற்றும் உலகமயமாக்கல், கலாசார ஒருமைப்படுத்தலுக்கு (homogenization) வழிவகுத்துள்ளன. இதன் மூலம் உள்ளூர் மரபுகள் சார் உற்பத்தி மற்றும் வணிகங்களை குறைமதிப்பிற்கு உட்படுத்துகின்றன என்பதை அங்கீகரிப்பதில் இருந்து இந்த அணுகுமுறை உருவாகிறது. உள்ளூர் அனுபவங்கள், தயாரிப்புகள் மற்றும் சேவைகளில் கவனம் செலுத்துவதன் மூலம், சமூகங்கள் தங்கள் மீள்தன்மையை வலுப்படுத்த முடியும்.மேலும், சந்தைப் பொருண்மியத்தின் வலுவான இருப்பையும் தக்கவைக்க, அதனுடன் இணைய, வழிசமைக்கும். உலகில், சமூகங்கள் தங்கள் அடையாளங்களை வடிவமைப்பதில் மிக கவனம் கொள்கின்றன. இதில், தங்கள் கலாசாரத்தின் பங்கைப் புரிந்துகொண்டு அடையாளங்களை வடிவமைத்தார்கள். தற்போது, உள்ளூர் உற்பத்தி அடையாளங்களும் ஒரு வலுவான இன அடையாளங்களுடன் இணைக்கின்றன. இந்த நுண்ணறிவு மிக்க அடையாள பெறுமதியாக்க செயல்முறைமை என்பது ஒரு வணிக அல்லது நிறுவன சூழலில் “மாற்றத்திற்குப் பிந்தைய கட்ட” (The “post-transformative phase”) முறைமைக்கு மிக அருகில் வருவது. “மாற்றத்திற்குப் பிந்தைய கட்டம்” என்பது ஒரு குறிப்பிடத்தக்க மாற்றம் அல்லது மாற்றத்திற்குப் பிந்தைய காலகட்டத்தைக் குறிக்கிறது. இதன் போது கவனம் அந்த மாற்றங்களைத் தக்க வைத்துக்கொள்வது, புதிய நடைமுறைகளை உட்பொதிப்பது மற்றும் நீண்டகால வெற்றியை உறுதி செய்வதில் மாறுகிறது. இந்தப் போக்கு உள்ளூர் தனித்துவத்தை பெறுமதி கொள்ள, செழிக்க மற்றும் வளர்க்க உதவுகிறது. உள்ளூர் அடையாளம், பிராந்தியத்தின் வரலாறு மற்றும் நிலப்பரப்பில் ஆழமாக வேரூன்றியுள்ளது. வலுவான கூட்டுப் பெருமையை உருவாக்குகிறது. இது சுய அடையாளத்தின் ஒரு பகுதியாகக் காணப்படுகிறது. இது ஒரு குறிப்பிட்ட பகுதிக்கான தனிப்பட்ட சிறப்பை பிரதிபலிக்கிறது. கூடுதலாக, பிராந்திய அடையாளம் என்பது ஒரு சமூகம் அதன் சுற்றுப்புறங்களை நோக்கி கொண்டிருக்கும் நேர்மறையான உணர்வுகளை உள்ளடக்கியது. தங்கள் நிலப்பரப்பின் மீதான ஒவ்வொரு பகிரப்பட்ட அனுபவங்களும் ஒவ்வொரு தனிமனிதர்களுடையவை என்னும் நிலை கொள்கின்றன. கடந்த கால அனுபவங்கள் மற்றும் செயல்கள் மூலம், தங்கள் பிராந்தியம் மீதான கவனம் கொள்ளப்படுகின்றது. இதனால், ஒரு பிராந்திய பொருளாதார சமூகத்தை உருவாக்குவதோடு, ஒரு பெறுமதியான பொருளாதார அடையாளம் ஒன்றுக்கான திரள் நிலையும் உருவாகின்றது. இது தான் உப்பளப் பூக்களின் பொருண்மிய நிலை. ஆனையிறவு உப்பள பிரதேச பொருண்மிய அமைவிட அடையாளமாக புலரும் நிலை. போரின் காலத்துயர் அனுபவங்கள் பல்பரிமாண நிலை கொண்டவை. அவரவர் அனுபவ நிலை சார்ந்தது. அதேபோல, போர்க்கள அமைவிடம் ஒரு குறிப்பிட்ட கள நிலை அனுபவம். அக்கள நிலை, தன்னுள் கொண்ட தந்திரோபாய மதிப்பு என்பது அதன் அமைவிட ‘பொருள் நிலை’ கொண்டது. அவ் அமைவிடத்துக்காக கொடுக்கப்பட்ட விலை என்பது தன்னுள் கொண்ட தந்திரோபாய மதிப்பின் பெறுமதியை தருவது. ‘ஆனையிறவு’ என்பது காலனியத்துவ காலம் முதல் இன்று வரை ஒரு இடத்தின் பெயர் மட்டும் அல்ல; ஒரு வரலாற்றின் பொதிவிடம்; பொக்கிஷம் மற்றும் அடையாளம். போரின் பிந்திய சமூகங்களின் உணர்நிலை எப்போதும் ஒரு வகை பதட்டநிலைக்குரியது; சந்தேகம் கொண்ட திரள் நிலை. அதனால் தான் போருக்கு பிந்திய சமூகங்களின் பொருளாதார திட்டமிடலில் சமூகத்தின் உணர்நிலை பற்றிய ஒரு பூரண அறிவு நோக்குநிலை எப்போதும் தேவையான முன்நிபந்தனையாக உள்ளது. (Post war /conflict political economic and cultural sensitivities). போரின் பாதிப்பின் பின்னாலான சமூக – பொருளாதார கட்டமைப்பில் பாதிக்கப்பட்ட பகுதிகளின் அரசியல் சமூக மற்றும் பொருளாதார கலாசார மற்றும் பிராந்திய அடையாளங்கள் மீதான கவனம் அவசியமானதாக கருதப்பட வேண்டும். போரின் மீள் கட்டுமானம் என்பது உள்ளூர் மக்களின் இடம் மற்றும் அவர்களின் பொருளாதார அடையாளங்கள் இரண்டையும் உள்ளடக்கியது. அவை ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ளன. இந்த ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட தன்மை என்பது அப்பகுதிக்குரிய பிராந்தியத்திற்கு சொந்தமானது. ஒரு இடத்தின் பெயர் அடை மொழியாக வருவதற்கு காரணம் அவ்விடம் ஒரு நீடித்த நினைவக நிலப்பரப்பின் ஒரு பகுதிதான். ஒரு காலத்தின் சாட்சிதான். பகுதியில் வசிப்பவர்களுக்கு தங்கள் நினைவு மண்டலத்தின் பிரிக்கமுடியாத பகுதி. பிராந்திய அடையாளம், பிராந்தியத்தின் வரலாறு மற்றும் நிலப்பரப்பில் ஆழமாக வேரூன்றியுள்ளது. கூட்டுப் பெருமையின் வலுவான உணர்வை உருவாக்குகிறது. இது ஒரு குறிப்பிட்ட பிராந்தியத்துடனான தனிப்பட்ட தொடர்பை பிரதிபலிக்கும் சுய அடையாளத்தின் ஒரு அம்சமாக கருதவேண்டும். பிராந்திய அடையாளம் ஒரு தளம். சதா பகிரப்படும் பிரதிபலிக்கும் அனுபவ மற்றும் செயல்கள் கொள்ளும் தளம். தனிநபர்கள் சமூக ஒற்றுமையை வளர்த்து, ஒரு பிராந்திய பொருளாதார சமூகத்தை உருவாக்குவதற்கு இத்தளம் அவசியம் தேவை. பொருளாதார அடையாளம் ஓர் இனத்தின் இருப்பின் அடித்தளம். சமூக உள்ளடக்கத்தின் புவியியல் அம்சத்தை இணைக்கும் ஒரு பாலம். பிராந்திய பொருளாதார அடையாளம் மற்றும் வரலாற்று உணர்திறன்களைக் கருத்தில் கொள்ளாமல், பிராந்திய பொருளாதார உற்பத்தி உணர் நிலையை கவனம் கொள்ளாது வேண்டுமென்றே மறுபெயரிடப்பட்டால், அது பிராந்திய அடையாளத்தின் இருத்தலியல் அச்சுறுத்தல் உணர்வுகளைத் தூண்டி, ஒற்றுமையின்மைக்கு வழிவகுக்கும். ஒரு மாறு கால சமாதான காலகட்டத்தில் மேலும் பல சந்தேகங்களையும் அவநம்பிக்கைகளையும் விளைவிக்கும். இலங்கையின் வளர்ச்சியில் கிராம பொருளாதாரங்களின் வளர்ச்சி பெரும்பங்கு வகிக்கின்றன. இதனால் கிராமங்களில் உற்பத்தியாகக் கூடிய தனித்துவமான பொருட்களின் சிறப்புகளை நாம் மேம்படுத்தி காட்டுவது மிகவும் அவசியமாகிறது.எனவே புவிசார் குறியீடு என்பது ஒரு அங்கீகாரம் மட்டுமல்ல, அது நாட்டின் வளர்ச்சிக்கான ஒரு திறவுகோல். ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பில் தனித்துவமாக உற்பத்தியாகும் பொருட்களுக்கு குறிப்பாக தமிழ்நாடு புவிசார் குறியீடு வழங்கி அங்கீகரிக்கிறது. அந்த வகையில் தற்போது அதிகமான பொருட்களுக்கு புவிசார் குறியீடுகளை பெற்றிருக்கும் மாநிலங்களில் தமிழ்நாடு முதலிடத்தில் இருக்கிறது. மல்லி, திண்டுக்கல் பூட்டு, காஞ்சிபுரம் பட்டு, ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா, சேலம் சுங்குடிச் சேலை, பழனி பஞ்சாமிர்தம் உள்ளிட்ட தமிழ்நாட்டில் உற்பத்தியாகும் 45 பொருட்கள் புவிசார் குறியீடுகளை பெற்றிருந்தன. புவிசார் குறியீடு என்றால் என்ன? ”உணவு பொருட்கள், வேளாண் பொருட்கள், கைவினை மற்றும் கைத்தறி பொருட்கள், இயற்கை பொருட்கள் என ஐந்து வகையான உற்பத்தி பொருட்கள்” புவிசார் குறியீட்டு அங்கீகாரம் பெறுவதற்கு தகுதியானவை.தனித்துவமான பொருட்களின் தரத்தை நம்பிக்கைக்குரிய முறையில் உறுதிப்படுத்தி, அதனை உலகளவில் எடுத்துச் செல்வதற்கு இந்த புவிசார் குறியீட்டு அங்கீகாரம் உதவுகிறது” என்கிறார் உயர்நீதிமன்ற அரசு வழக்கறிஞரும், அறிவுசார் சொத்துரிமை அட்டர்னி கழகத் தலைவருமான சஞ்சய் காந்தி. (https://www.bbc.com/tamil/articles/c72vjlg4212o) . ‘ஆனையிறவு உப்பு’ என்பது புவிசார் குறியீடு உடையது. ‘ரஜ லுணு’ என்னும் வர்த்தக பெயர் என்பது ‘ஆனையிறவு உப்பு’ என்பதற்கு ஈடாகாது. அமைவிடம் கருதாது; உப்பு உற்பத்தியின் வரலாறு கருதாது ஏதோ ஒரு அவசரத்தில் ‘ரஜ லுணு’ உப்பு எனப் பெயரிட்டது ஒரு வித ஒவ்வாமையாக உள்ளது. ‘ஆனையிறவு உப்பு’ என்பது ஒரு சந்தையில் மிக மதிப்புக்கொண்ட பொருள். ஆகவே ‘ஆனையிறவு உப்பு’ என்று வருவது தான் மிகப்பொருத்தம். காங்கேசன்துறை சிமெண்ட், பரந்தன் கெமிக்கல் என்பது போல ‘ஆனையிறவு உப்பு’ என்பது தான் மிகப்பொருத்தம். இடம் சார் பொருண்மிய உற்பத்தி பெயருக்கு வலுக்கொடுக்க வேண்டும். ‘ஆனையிறவு உப்பு’ என்றால் ஆனையிறவுக்கும் உப்புக்கும் பெருமை. இலங்கைக்கும் பெருமை. https://thinakkural.lk/article/316956
3 months 2 weeks ago
18 வயதின் கீழ் ஆசிய மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் வரலாற்றில் இலங்கைக்கு அதிசிறந்த பெறுபேறுகள்; ஒரு தங்கம், 3 வெள்ளி, 4 வெண்கலப் பதக்கங்கள் Published By: VISHNU 19 APR, 2025 | 01:18 PM (நெவில் அன்தனி) சவூதி அரேபியாவின் தமாம் விளையாட்டரங்கில் பெரிய வெள்ளிக்கிழமை (18) இரவு நிறைவுக்கு வந்த 6ஆவது 18 வயதுக்குட்பட்ட ஆசிய மெய்வல்லுநர் சம்பியன்ஷிப்பில் ஒரு தங்கம், 3 வெள்ளி, 4 வெண்கலப் பதக்கங்களை இலங்கை வென்றெடுத்தது. 18 வயதுக்குட்பட்ட ஆசிய மெய்வல்லுநர் சம்பியன்ஷிப்பின் 10 வருட வரலாற்றில் வரலாற்றில் இலங்கையின் அதிசிறந்த பேறுபெறு இதுவாகும். போட்டியின் கடைசி நாளான பெரிய வெள்ளிக்கிழமையன்று தருஷி அபிஷேகா பேமசிறி 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் (2:14.86) வென்றெடுத்த தங்கப் பதக்கத்துடன் மேலும் ஒரு வெள்ளிப் பதக்கம், 3 வெண்கலப் பதக்கங்கள் கிடைத்தன. பெண்களுக்கான கலவை தொடர் ஓட்டப் போட்டியில் இலங்கைக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது. கலவை தொடர் ஓட்டப் போட்டியை 2 நிமிடங்கள், 14.25 செக்கன்களில் நிறைவுசெய்து வெள்ளிப் பதக்கத்தை வென்ற இலங்கை அணியில் தனஞ்சனா செவ்மினி பெர்னாண்டோ, சன்சலா ஹிமாஷனி செனவிரத்ன, தருஷி அபிஷேகா, டில்கி நெஹாரா ஆகியோர் இடம்பெற்றனர். அப் போட்டியில் சீனா (2:11.11) தங்கப் பதக்கத்தையும் தாய்லாந்து (2:15.00) வெண்கலப் பதக்கத்தையும் வென்றன. இதனைவிட இலங்கைக்கு மேலும் 3 வெண்கலப் பதக்கங்கள் கிடைத்தன. ஆண்களுக்கான உயரம் பாய்தலில் பவன் நெத்ய சம்ப்பத் (2.03 மீற்றர்), பெண்களுக்கான முப்பாய்ச்சலில் டில்கி நெஹாரா (12.35 மீற்றர்), ஆண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் ஷவிந்து அவிஷ்க (1:53.41 நி.) ஆகியோர் வெண்கலப் பதக்கங்களை வென்றெடுத்தனர். முதலாம் நாளன்று ஆண்களுக்கான முப்பாய்ச்சலில் ஜனித் லக்ஷான் ஜென்கின்ஸ் (15.10 மீற்றர்) வெள்ளிப் பதக்கத்தையும் இரண்டாம் நாளன்று பெண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் தனஞ்சனா செவ்மினி பெர்னாண்டோ (11.92 செக்.) வெள்ளிப் பதக்கத்தையும் ஆண்களுக்கான 1500 மீற்றர் ஓட்டப் போட்டியில் லஹிரு அச்சின்த (3:59.47) வெண்கலப் பதக்கத்தையும் வென்றிருந்தனர். https://www.virakesari.lk/article/212336
3 months 2 weeks ago
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், சாரதா வி பதவி, பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் உலக கல்லீரல் தினம் ஏப்ரல் 19-ஆம் தேதி அனுசரிக்கப்படும் வேளையில் கல்லீரல் ஆரோக்கியம், கல்லீரலுக்கும் குடல் ஆரோக்கியத்துக்கும் இருக்கும் தொடர்பு குறித்து கல்லீரல் மற்றும் கணைய புற்றுநோய் அறுவை சிகிச்சை மருத்துவர் பாலமுருகன் ஶ்ரீநிவாசன் பிபிசி தமிழிடம் பேசினார் . அவருடனான நேர்காணலின் சில பகுதிகள் இங்கே தொகுத்து வழங்கப்பட்டுள்ளன. கல்லீரலை பாதுகாக்க நாம் செய்ய வேண்டிய முதல் விசயம் என்ன? உடலில் உள்ள எல்லா உறுப்புகளின் செயல்பாடும் நமக்கு தெரியும். ஆனால், கல்லீரல் குறிப்பாக என்ன செய்கிறது என்று பலருக்கு தெரியாது. ஏனென்றால் கல்லீரல் உடலில் 500 வகையான வேலைகளை செய்கிறது. நாம் சாப்பிடும் உணவை வடிகட்டுகிறது, புரதம் உற்பத்தி செய்கிறது, எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. எனவே நாம் சாப்பிடும் சாப்பாட்டை கவனமாக எடுத்துக் கொண்டாலே கல்லீரலை பாதுகாக்கலாம். பட மூலாதாரம்,SPECIAL ARRANGEMENT படக்குறிப்பு,கல்லீரல் மற்றும் கணைய புற்றுநோய் அறுவை சிகிச்சை மருத்துவர் பாலமுருகன் ஶ்ரீநிவாசன் கல்லீரல் பாதிப்புக்கு பொதுவாக மது பழக்கமே காரணம் என்று கூறப்படுகிறது. அது உண்மையா? அப்படி இல்லை. முழு உடல் பரிசோதனை செய்யும் போது, பலருக்கும் ஃபேட்டி லிவர் (Fatty-Liver) இருப்பது தெரியவருகிறது. இதில் கிரேட் 1, கிரேட் 2, கிரேட் 3, கிரேட் 4 என்று நான்கு நிலைகள் உள்ளன. இப்போதுள்ள சூழலில் தமிழ்நாட்டில் 30-40% பேருக்கு கிரேட் 1 ஃபேட்டி லிவர் இருக்கும் என்று கூறலாம். ஆனால் அவர்களில் சுமார் 18% பேர் மட்டுமே குடிப் பழக்கம் கொண்டவர்களாக இருப்பார்கள். மற்றவர்கள் அந்த பழக்கம் கிடையாது. Nonalcoholic steatohepatitis என்ற வகையிலான, குடிப் பழக்கம் அல்லாத காரணங்களினால் கல்லீரல் பாதிப்புகள் அதிகமாகி வருகின்றன. இதற்கு காரணம் நமது மந்தமான வாழ்க்கை முறை. நாம் உடலின் தேவைக்கு அதிகமாக சாப்பிடுகிறோம். சைவ உணவுகளை மட்டும் சாப்பிடுகிறேன் என்று சொல்பவர்கள் சிலர் அதிகமாக குளிர்பானங்கள் குடிக்கலாம், இனிப்புகள் எடுத்துக் கொள்ளலாம், பஜ்ஜி போண்டா போன்ற எண்ணெய் பதார்த்தங்களை சாப்பிடலாம். இவை எல்லாம் ஃபேட்டி லிவருக்கு இட்டுச் செல்லும். ஃபேட்டி லிவர் என்பது பலர் நினைத்துக் கொள்வது போல கொழுப்புச் சத்து அல்ல. ஃபேட்டி லிவருக்கு முக்கிய காரணம் கார்போஹைட்ரேட் எனும் மாவுச் சத்து தான். மாவுச்சத்தை கொழுப்பாக மாற்றும் திறன் கல்லீரலுக்கு உண்டு. எனவே அதிக மாவுச் சத்து, அதிக சர்க்கரை, இவை எல்லாமே கொழுப்பாக மாறி கல்லீரலில் சேரும். மிக எளிமையாக இதை சொல்ல வேண்டும் என்றால் - எந்த உணவாக இருந்தாலும் அது முதலில் கல்லீரலில் தான் சேரும். கல்லீரல் தான் உடலுக்கு தேவையான நல்ல உணவை வடிகட்டி அதை மட்டும் இருதயத்துக்கு அனுப்பும். இருதயம் அதனை உடல் முழுவதும் பகிர்ந்து கொடுக்கும். பட மூலாதாரம்,GETTY IMAGES விளைநிலத்தில் யானைகள் நுழையாமல் தடுக்கும் தேனீக்கள் - பல ஆண்டு ஆய்வில் தெரியவந்த ரகசியம்25 மார்ச் 2025 ஆனைமலை நெல்லி, காட்டு காபி, காட்டு ஆப்பிள் - அழியும் ஆபத்தில் தமிழ்நாட்டின் 25 பூர்வீக தாவரங்கள்25 மார்ச் 2025 ஆரோக்யமற்ற உணவு பழக்கத்தினால் மட்டுமே கல்லீரல் பாதிப்பு ஒருவருக்கு ஏற்பட வாய்ப்பு உண்டா? 100% வாய்ப்பு உள்ளது. கல்லீரல் பாதிப்பில் தொடங்கி, கல்லீரல் செயல்பாடு முற்றிலும் முடங்கிப் போய் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலையும் சில நோயாளிகளுக்கு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக சர்க்கரை நோயாளிகள் உணவு கட்டுப்பாடுடன் இருக்கவில்லை என்றால் மிக விரைவில் கிரேட் 4 வரை அவர்களின் கல்லீரல் பாதிப்பு தீவிரமாகலாம். உயர் ரத்த அழுத்த நோயாளிகளுக்கும் இது பொருந்தும். அவர்கள் மாதத்துக்கு ஒரு முறை குடிப்பவர்களாக இருக்கலாம். ஆனால் அவர்களின் கல்லீரல் பாதிப்புக்கு குடிபழக்கத்தை காரணம் சொல்ல முடியாது. சொல்லப்போனால், குடிப்பழக்கம் அல்லாத காரணங்களினால் ஏற்படும் கல்லீரல் பாதிப்புகள் அதிகரிக்கும் சதவிகிதம் வேகமாக உயர்ந்து வருகிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES கொரோனாவுக்கு பிறகு கல்லீரல் பாதிப்புகள் அதிகரிக்கும் விதத்தில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டுள்ளதா? வாழ்க்கை முறை மாறியுள்ளது. அலுவலகத்துக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வேலை பார்ப்பவர்கள் அதிகமாகியுள்ளனர். குறிப்பாக ஐடி துறையில் இருப்பவர்கள் இரவு நேரங்களில் வேலை பார்க்கும் போது, பசித்த உடன் உணவு டெலிவரி ஆப் மூலம் உடனடியாக ஆர்ட செய்து சாப்பிடுகின்றனர். அந்த உணவை எப்படி சமைக்கிறார்கள், அது என்ன மாதிரியான கடை என்றெல்லாம் பார்ப்பதில்லை, அருகில் இருப்பது எது என்று மட்டுமே பார்க்கிறார்கள். இவை எல்லாம் பாதிப்புகளை அதிகப்படுத்துகிறது. மோதியை விமர்சிப்பவர்கள் விரும்பும் ஈலோன் மஸ்கின் 'க்ரோக்' எவ்வாறு இயங்குகிறது?23 மார்ச் 2025 மனிதனுக்கு முன்பே விண்வெளிக்குச் சென்ற 'லைக்கா' நாய் எவ்வாறு இறந்தது?22 மார்ச் 2025 இரவு நேரத்தில் சாப்பிடுவதால் கல்லீரல் பாதிப்புக்கான வாய்ப்புகள் அதிகரிக்குமா? யார் அதிக நாட்கள் வாழ்கிறார்களோ அவர்கள் ஆரோக்யமானவர்களாக கருதப்படுகிறார்கள். அப்படி பார்க்கும் போது கொரியா, ஜப்பான் போன்ற நாடுகளில் சராசரி வாழ்நாள் 85 ஆண்டுகள் ஆகும். நம்மை விட 20 ஆண்டுகள் அதிகம். அவர்களின் உணவுப் பழக்கத்தின் முக்கிய அம்சம் – இரவு உணவை அவர்கள் மாலை 6.30 மணிக்கு சாப்பிட்டுவிடுவார்கள். நாம் இரவு 10மணி, 11 மணிக்கு கூட சாப்பிடுவோம். இப்போது இரவு 2 மணி, 3 மணிக்கு கூட பிரியாணி கிடைக்கிறது. வயிறு முட்ட பிரியாணி சாப்பிடும் போது உடலில் தேவைக்கு மீறிய கலோரிகள் சேர்கின்றன. அவ்வளவு உணவை சாப்பிட்டு விட்டு, உடனே தூங்கிவிடுவார்கள், எந்த வேலையும் செய்ய போவதில்லை. அந்த உணவு நமது கல்லீரலில் தான் சென்று தங்கும். இரவு நேரத்தில் சாப்பிடும் போது உணவு செரிக்க நேரமாகும். அவை குடல் பகுதியிலேயே தங்கிவிடும். அப்போது பாக்டீரியாக்கள் செயல்பாடு அதிகரிக்கும். அதாவது பாலை பயன்படுத்தாமல் வைத்திருந்தால் அது கெட்டுபோய்விடும் இல்லையா, அதே போல தான். உணவு செரிக்காமல் அதே இடத்தில் நீண்ட நேரம் தங்கியிருந்தால் அதுவும் கெட ஆரம்பித்துவிடும். அதனால் தான் பலருக்கு Irritable Bowel Syndrome போன்ற சிக்கல்கள் ஏற்படுகின்றன. பாக்டீரியாக்கள் அதிகமாகும் போது அவை வாயு உற்பத்தி செய்யும். அந்த வாயு குடலை விரிக்கும். குடலை விரிக்கும் போது கழிப்பறைக்கு செல்லும் உந்துதல் ஏற்படும். பட மூலாதாரம்,GETTY IMAGES சோவியத்தை முந்தி, அமெரிக்கா நிலவில் முதலில் கால் பதிக்க வித்திட்ட 'ஹிட்லரின் விஞ்ஞானி'23 மார்ச் 2025 குடிநீர் பாட்டிலை எத்தனை நாளைக்கு ஒருமுறை, எவ்வாறு கழுவ வேண்டும்?24 மார்ச் 2025 கல்லீரல் ஆரோக்கியத்துக்கு குடல் ஆரோக்கியம் (gut health) எவ்வளவு முக்கியம்? கல்லீரலும் குடல் கிட்டத்தட்ட ஒரே உறுப்பு போல தான். நாம் சாப்பிடும் உணவில் உள்ள பாக்டீரியா, அவை உடலில் சென்ற பிறகு எப்படி வளர்கின்றன, அவற்றுடன் நமது உறவு எப்படி உள்ளது இவை எல்லாம் பற்றி பேசுவது தான் குடல் ஆரோக்கியம். முப்பது நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு ஒரே சமையலறையிலிருந்து சமைத்த உணவை தான் ஒவ்வொருவரும் சாப்பிட்டு வந்தனர். காலை உணவு வீட்டில் சாப்பிடுவோம், மதிய உணவு வீட்டிலிருந்து எடுத்துச் செல்வோம், இரவு உணவையும் வீட்டில் தான் சாப்பிடுவோம். வீட்டில் உள்ள அனைத்து உறுப்பினர்களுக்கும் இதே வழக்கமாக இருக்கும். அப்போது நமது உடலில் உள்ள பாக்டீரியாக்களுக்கும் நமக்குமான தொடர்பு சீராக இருக்கும். ஆனால் இப்போது வெவ்வேறு வேளைகள் வெவ்வேறு இடத்திலிருந்து சாப்பிடுகிறோம். உடலில் பல்வேறு வகையான பாக்டீரியாக்கள் செல்கின்றன. அவை ஒன்றோடு ஒன்று சண்டையிடுகின்றன. அப்போது வாயு உற்பத்தியாகும். இவை எல்லாம் குடலுக்கு உகந்தது அல்ல. கவர் போடாத செல்போன் கீழே விழுந்தால் திரை உடையுமா? பிபிசி செய்தியாளரின் ஒரு மாத பரிசோதனை அனுபவம்16 ஏப்ரல் 2025 டைப்-5 நீரிழிவு: இந்தியாவில் இளம் வயதினரையும் பாதிக்கும் புதிய வகை நீரிழிவு யாருக்கெல்லாம் வரும்?16 ஏப்ரல் 2025 மன அழுத்தம், கல்லீரல், குடல் ஆரோக்கியம் இவற்றுக்கான தொடர்பு என்ன? சாலையில் நீங்கள் நடந்து செல்லும் போது திடீரென ஒரு லாரி உங்கள் மீது இடிப்பது போல வந்து, நின்றுவிட்டது என்று வைத்துக் கொள்ளலாம். "எனக்கு வயிறு கலக்கிவிட்டது" என்று கூறியிருப்பீர்கள். பதட்டமடையும் போது ஏன் வயிறு கலக்கிறது? நாம் பதட்டம் அடையும் போது வெளியாகும் சில சுரப்பிகள் குடலில் மாற்றங்களை உண்டாக்கும். நிறைய பேருக்கு தற்போது வேலை சூழல் மன அழுத்தம் நிறைந்ததாக இருக்கிறது. அவர்களது உடலில் அதிகபடியான சுரப்பிகள் வெளியாகின்றன. அவை குடலை பாதிக்கும். குடல் சாப்பாட்டை உடனே வெளியேற்றிவிட வேண்டும் என்று நினைக்கும். எனவே தான் சிலருக்கு சாப்பிட்ட உடன் கழிவறை பயன்படுத்த வேண்டிய உந்துதல் ஏற்படும். இவை எல்லாமே மன அழுத்தம் தொடர்பானது தான். பாராசிட்டமால் அதிகமாக சாப்பிட்டால் கல்லீரல் பாதிப்பு ஏற்படுமா? பட மூலாதாரம்,GETTY IMAGES பாராசிட்டமாமல் தேவைக்கு அதிகமாக எடுத்துக் கொள்ளும் போது கண்டிப்பாக கல்லீரல் பாதிப்பு, சில நேரங்களில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலையும் ஏற்படலாம். குழந்தைகளில் பாராசிடாமல் பாய்சனிங் (paracetamol poisoning) அதிகம் காணப்படுகிறது. குழந்தைகளுக்கு காய்ச்சல் குறையவில்லை என்ற காரணத்தினால் பெற்றோர்கள் அறியாமையினால் மருத்துவர் கூறியதை விட அதிகமாக கொடுப்பார்கள். அதனால் கல்லீரல் பாதிப்பு கண்டிப்பாக ஏற்படுகிறது. மருந்துகள் கொடுத்து நிலைமை சீராகவில்லை என்றால், கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்வதை தவிர வேறு வழியில்லை. ஒவ்வொருவரும் எவ்வளவு பாராசிடாமல் எடுத்துக் கொள்ளலாம் என்பது ஒவ்வொருவரின் உடல் நிலையை பொருத்தது. ஏற்கெனவே குடிபழக்கத்தினால் கல்லீரல் பாதிப்பு ஏற்படத் தொடங்கியுள்ள நபருக்கு ஒரு சில மாத்திரைகள் கூட ஆபத்தாக இருக்கலாம். ஆரோக்யமாக இருப்பவர்களுக்கு ஒரு நாளுக்கு பல மாத்திரைகள் சாப்பிட்டால் கூட பாதிப்பு இருக்காது. கல்லீரல் பாதிப்பு நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சைகளுக்கு பிறகு வலியை குறைக்கக் கூட பாராசிடாமல் கொடுப்பதை மருத்துவர்கள் தவிர்த்துவிடுவோம். அந்த அளவுக்கு பாராசிட்டமாலும் கல்லீரல் பாதிப்பும் ஒன்றுக்கொன்று தொடர்புடையது. அதே போன்று உடல் எடை குறைப்பதற்கான பவுடர்களை உட்கொள்வதால் தீவிர கல்லீரல் பாதிப்புகள் ஏற்படுகின்றன. எனக்கு தெரிந்த இரண்டு மருத்துவர்கள் அதனை எடுத்துக் கொண்டனர். ஒருவர் இறந்துவிட்டார் . மற்றொருவருக்கு தீவிர பாதிப்பு ஏற்பட்டு தற்போது மெல்ல குணமாகிவருகிறார். அந்த பவுடரை எடுத்துக் கொள்ளும் போது திருப்தியாக சாப்பிட்ட உணர்வு கிடைக்கும். எனவே அந்த நாளில் நமக்கு தேவையான சத்துக்கள் எதையும் நாம் உட்கொள்ள மாட்டோம். அந்த பவுடரால் உடல் எடை குறையும். ஆனால் கல்லீரல் பாதிப்பை ஏற்படுத்தும். இது குறித்து பல ஆய்வுகள் உள்ளன. உலக கல்லீரல் தினம்: கல்லீரலை நாம் ஏன் ஆரோக்கியமாக வைத்து கொள்ள வேண்டும்? குடிப்பழக்கம் உள்ளவர்களுக்கு ஏற்பட்ட கல்லீரல் பாதிப்பு குடிக்காதவர்களுக்கும் ஏற்படுவது ஏன்? உடலில் 500 பணிகளைச் செய்யும் கல்லீரலை பாதுகாப்பது எப்படி? 'டாட்டூ' ஆபத்தா? கொழுப்பு கல்லீரல்: மதுப் பழக்கம் இல்லாதவர்களுக்கும் ஏற்படுவது ஏன்? பாதிப்படைந்த கல்லீரல் முழுவதும் பழைய நிலைக்கு திரும்ப வழி உண்டா? கல்லீரல் நமது உடலின் மிக அற்புதமான உறுப்பாகும். கிரேக்க புராணங்களில் வரும் ப்ரோமதியஸ் என்பவருக்கு உடலிலிருந்து வெளியே தொங்கிக் கொண்டிருக்கும் கல்லீரலை காகம் ஒன்று தினமும் வந்து சாப்பிட்டுச் செல்லும். ஆனால் காகம் ஒவ்வொரு முறை வரும் போதும், கல்லீரல் பழைய நிலையில் வளர்ந்திருக்கும். கல்லீரலுக்கு மீண்டு வளரும் திறன் உள்ளது, ஆரோக்யமாக இருப்பவரின் கல்லீரலில் 70% வெட்டி எடுத்துவிட்டாலும், அந்த 30% கல்லீரல் அடுத்த ஆறு மாதங்களில் கிட்டத்தட்ட 80% ஆக வளர்ந்திருக்கும். குடிபழக்கத்துக்கு அடிமையானவர்கள், அந்த பழக்கத்தை அடியோடு விட்டுவிட்டால் அப்போது வரை ஏற்பட்டிருந்த பாதிப்புகள் நீங்கி கல்லீரல் மீண்டும் பழைய நிலைக்கு மீண்டும் திரும்பிவிடும். ஆனால் இதை தான் குடிப்பவர்கள் சிலர் தவறாக பயன்படுத்திக் கொள்கின்றனர். குடிப் பழக்கத்துக்கு அடிமையான எனது நோயாளி ஒருவர், அதிகமாக குடிக்கும் போது கண்கள் மஞ்சள் ஆகின்றன, தனக்கு மஞ்சள் காமாலை ஏற்படுகிறது என்று அவருக்கு தெரியும். ஒரு வாரம் சாப்பிடாமல் இருந்தால் சரியாகிவிடும் என்று கூறி கூறி குடித்துக் கொண்டே இருந்தார். இப்போது உயிரிழந்துவிட்டார். கல்லீரல் மீண்டு வளரும் திறன் கொண்டது என்றாலும் அதை தவறாக பயன்படுத்தினால் ஆபத்து ஏற்படும். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cwy7n54q4pyo
3 months 2 weeks ago
மத்தியிடம் இருந்தாலே உள்ளூராட்சிக்கு நிதி என ஜனாதிபதி பொய்யுரைப்பதால் அதிகாரப் பகிர்வு, உள்ளூராட்சி தத்துவம் கேலிக்குள்ளாக்கப்படுகின்றது உள்ளூராட்சி மன்றங்கள் மத்தியில் ஆளும் கட்சியின் ஆளுகைக்குள் உள்ளூராட்சி மன்றங்கள் இருந்தால் மட்டுமே மக்களுக்கான அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்க முடியும் எனவும் தாம் நிதி ஒதுக்க முடியும் எனவும் தேர்தல் மேடைகளில் ஜனாதிபதி பேசுவதனால் அவர் அதிகாரப் பகிர்வையும் ஜனநாயக ரீதியில் உள்ளுராட்சி தத்துவத்தையும் மீறுகின்றார் என வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார். உள்ளூராட்சி மன்றங்களின் நிதி விடயத்தில் அந்தந்த சபைகளின் தலைவர்களுக்கே அதிகாரம் காணப்படுகின்றது. உள்ளூராட்சி மன்றங்கள் மத்தியில் தங்கி வாழும் நிறுவனங்கள் அல்ல. உள்ளூராட்சி என்பது ஆட்சி முறைமை. அது வரிகளையும் வருமானங்களையும் திரட்டுவதற்கும் தீர்மானிப்பதற்கும் செலவிடுவதற்கும் அதிகாரம் பொருந்திய சட்ட ரீதியான ஆட்சி அலகாகும். உள்ளூராட்சி மன்றங்கள் உலகளவில் வரலாற்று ரீதியில் உருவாக்கப்பட்ட ஆட்சி முறை என்ற அடிப்படையில் மத்திய அரசாங்கத்திடம் இருந்து அதிகாரப்பகிர்வைப் பெற்றுள்ளன. ஐனநாயக மற்றும் சட்ட ரீதியிலான அந்தஸ்தாக உள்ளூராட்சி மன்றங்கள் அதிகாரங்களைப் பெற்றுள்ளன. இலங்கையிலும் அரசியலமைப்புச் சட்ட சரத்துக்களின் ரீதியில் உருவாக்கப்பட்ட சட்டங்களினால் அதிகாரத்தினைப் பெற்றுள்ளன. சட்டரீதியில் உள்ளராட்சி மன்றங்கள் சோலைவரி, மாற்றம் ஆதனப் பெயர்மாற்றங்களின் போதான முத்திரைத் தீர்வை, நீதிமன்ற குற்றப்பணம், சேவைகளுக்கான அறவீடுகள், தண்டப்பணங்கள் என பல மில்லியன்களுக்கு உரித்தாளர்களாகவுள்ளன. வசதிக்குறைவான உள்ளூராட்சி மன்றங்களும் காணப்படுகின்றபோதும் அவ்வாறாக வசதிக்குறைவுக்கு மத்திய அரசின் எடுபிடியாக அல்லது ஆதிக்கத்தினுள் உள்ளூராட்சி மன்றங்கள் இருப்பது தீர்வல்ல. மத்திய அரசாங்கம் சர்வதேசத்திடம் பெறும் அதிக உதிவிகள் மக்களின் நலன்புரி விடயங்களை மையமாகக் கொண்டுள்ளன. அந் நிதி உதவிக்கான முன்மொழிவுகள் உள்ளூராட்சி மன்றங்களுக்கு குறித்தொதுக்கப்பட்ட சேவைப்பரப்புக்களாகக் காணப்படுகின்றன. மத்திய அரசாங்கம் உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி உள்ளிட்ட பல்வேறுபட்ட சர்வதேச தாபனங்களிலும,; நாடுகளிலும் இருந்து மானியங்களைப் பெறுகின்றது. அவ் உதவிக் கோரிக்கையில் உள்ளூராட்சி மன்றங்கள் செய்ய வேண்டிய சேவைப்பரப்புக்களை காரணங்காட்டியே உதவிகள் பெறுகின்றன. அவ்வாறு அரசாங்கம் பெறும் உதவிகளை ஜனாதிபதி தனது கட்சிக்காரரின் சபைக்கு மட்டும் தான் கொடுப்பேன் எனக் கூற முடியாது. அவ்வாறு ஜனாதிபதி செய்தால் உதவிகளை சர்வதேசம் வழங்காது. அப்படி அரசாங்கம் செயற்பட்டால் இலங்கைக்கு உதவி வழங்கும் சர்வதேச கொடையாளர்களின் கவனத்திற்கு நாம் கொண்டு செல்ல முடியும். அதனால் நாட்டிற்கான சர்வதேச உதவிகளே தடைப்பட்டுவிடும்;. சர்வதேச உதவி தடைப்பட்டால் அது மத்திய அரசாங்கத்தின் இருப்புக்கே ஆபத்தாக மாறிவிடும். வெளிநாட்டு உதவிகளை ஜனநாயக ரீதியில் தெரிவு செய்யப்பட்ட சபைகளுக்கு தேவை முன்னுரிமை அடிப்படையில் அரசாங்கம் பகிர்ந்தே ஆகவேண்டும். உள்ளுராட்சி மன்றங்களின் ஆளணியினருக்கான சம்பள விடயங்கள் மத்திய அரசு சார்ந்திருந்த போதும் அவற்றிற்கான மானிய உதவியை இன்றைய ஜனாதிபதி நினைத்தால் மாத்திரம் நிறுத்திவிட முடியாது. உத்தியோகத்தர்களின் நியமனம் மற்றும் சேவை அடிப்படையில் நியமனம் பெற்ற உத்தியோகத்தர்களுக்கு சட்டப் பாதுகாப்பும் தொழில் உரிமையும் உள்ளது. ஆகவே அரசாங்கம் போதையில் பேசுகின்ற தெருச் சண்டியர்கள் போல விலாசம் எழுப்பக்கூடாது என வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார். https://thinakkural.lk/article/317108
3 months 2 weeks ago
19 APR, 2025 | 01:12 PM மன்னாரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் உரையாற்றிய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, தேசிய மக்கள் சக்திக்கு அதிகாரம் இல்லாத உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு நிதி வழங்குவதற்கு முன்னர் 'பத்து தடவைகளுக்கு மேல்' சிந்தித்தே தீர்மானிக்கப்படும் எனக் கூறியிருந்தார். வெசாக் மாதத்தில் நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஆளும் கட்சிக்கு வாக்குகளைப் பெறுவதற்காக, நிதியமைச்சர் பதவியை வகிக்கும் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் பிரச்சார மேடைகளில் மீண்டும் மீண்டும் வெளியிடும் கருத்துகள் கடுமையான விமர்சனங்களை தோற்றுவித்துள்ளது. ஆளும் கட்சி அதிகாரத்தைப் பெறும் உள்ளூராட்சி மன்றங்களின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு எந்தப் பொறுப்பும் இல்லாமல் மத்திய அரசு நிதியளிக்கும் என்ற தேர்தல் வாக்குறுதிகள் அரசியல் வற்புறுத்தல் மற்றும் அச்சுறுத்தல் என கண்டனங்கள் வெளியாகியுள்ளன. ஏப்ரல் 17ஆம் திகதி மன்னாரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் உரையாற்றிய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, தேசிய மக்கள் சக்திக்கு அதிகாரம் இல்லாத உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு நிதி வழங்குவதற்கு முன்னர் 'பத்து தடவைகளுக்கு மேல்' சிந்தித்தே தீர்மானிக்கப்படும் எனக் கூறியிருந்தார். "முன்மொழிவுகள் பிரதேச சபையிடமிருந்து வர வேண்டும். அந்த முன்மொழிவுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்குகிறது. ஆனால், நிதியை ஒதுக்குவதற்கு முன்னர், யார் முன்மொழிவை அனுப்புகிறார்கள் என்பது பார்க்கப்படும். மன்னார் நகர சபை தேசிய மக்கள் சக்தியின் கைகளில் இருந்தால், மத்திய அரசுக்கு அனுப்பப்பட்ட முன்மொழிவு கண்களை மூடிக்கொண்டு அங்கீகரிக்கப்படும். ஆனால் அது மற்றவர்களின் கைகளில் இருந்தால், அவர்களின் முன்மொழிவு 10 தடவைகளுக்கு மேல் பார்க்கப்படும். அவர்களை நம்ப முடியாது". ஏப்ரல் 12 ஆம் திகதி, மன்னார் மாவட்டத்தின் முசலி தேர்தல் தொகுதியில் உள்ள சிலாவத்துறை பேருந்து நிலையத்திற்கு அருகில் பெரும்பான்மையான முஸ்லிம் மக்கள் கலந்து கொண்ட பொதுக் கூட்டத்தில் பங்கேற்ற, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, பாதீட்டில் இருந்து ஒதுக்கப்பட்ட நிதியை 'சரியாகப் பயன்படுத்த' தனது குழுவிற்கு பிராந்திய அதிகாரம் அவசியம் என எச்சரிக்கை விடுத்திருந்தார். "இப்போது நாம் கிராமத்தை சுத்தம் செய்ய வேண்டும். கிராமத்தை சுத்தம் செய்து தாருங்கள். பின்னர் பாதீட்டில் இருந்து நாங்கள் ஒதுக்கிய நிதியை உங்களுக்கு பயனளிக்கும் வகையில் வேலை செய்ய பயன்படுத்தலாம்." மற்ற கட்சிகளின் பிராந்திய அரசியல் தலைமையை திருடர்கள் என ஜனாதிபதி குறிப்பிட்டார். வடக்கிற்கு வந்தபோது ஆளும் கட்சி அளித்த நிதி வாக்குறுதியை 'அச்சுறுத்தல்' என நாடாளுமன்றத்தில் உள்ள முக்கிய தமிழ் கட்சி கண்டித்துள்ளது. "இந்த வகையான தேர்தல் பிரச்சாரம் ஒரு அச்சுறுத்தல். பிராந்திய அபிவிருத்திக்கு நிதி ஒதுக்குவது அரசாங்கத்தின் பொறுப்பு. எங்களுக்குத் தெரிந்தவரை, இந்த பிராந்தியம் ஒரு தனி மாநிலம் அல்ல," என இலங்கை தமிழ் அரசு கட்சி (ITAK) நாடாளுமன்ற உறுப்பினர் பத்மநாதன் சத்தியலிங்கம் ஊடக அறிக்கை ஒன்றின் ஊடாக அறிவித்துள்ளார். மத்திய அரசுக்கு 'அத்தகைய அதிகாரம் இல்லை' உள்ளூராட்சி நிதியைப் பறிப்பதும் வாக்குகளைப் பலவந்தப்படுத்துவதும் நிறைவேற்று அதிகார உரிமை அல்ல என்பதைச் சுட்டிக்காட்டி, நல்லாட்சி அரசாங்கத்தின் மூன்று முன்னாள் ஆளுநர்கள் ஒரு கூட்டு ஊடக அறிக்கையை வெளியிட்டுள்ளனர், அதில் ஒரு உள்ளூராட்சி நிறுவனத்தின் வருவாயை தடுக்க ஜனாதிபதி, அமைச்சரவை அல்லது ஆளுநருக்கு எவ்வித அதிகாரமும் இல்லை எனக் கூறினர். "அதாவது, அரசு சாரா அரசியல் கட்சி அல்லது சுயேட்சைக் குழுவால் வெற்றிகொள்ளப்பட்ட மாநகர சபை, நகர சபை அல்லது பிரதேச சபைக்கு நிதியை தடுக்கும் அதிகாரம் அரசாங்கத்திற்கு இல்லை." "உள்ளூராட்சி சபை தேசிய மக்கள் சக்தியின் கைகளில் இருந்தால், மத்திய அரசுக்கு அனுப்பப்பட்ட முன்மொழிவை கண்களை மூடிக்கொண்டு அங்கீகரிக்கப்படும். ஆனால் அது மற்றவர்களின் கைகளில் இருந்தால், அவர்களின் முன்மொழிவு 10 தடவைகளுக்கு மேல் பார்க்கப்படும்", என ஜனாதிபதி அல்லது வேறு எவரேனும் கூறுவது முற்றிலும் அரசியல் வற்புறுத்தல் என, மூன்று முன்னாள் ஆளுநர்களான ஜனாதிபதி சட்டத்தரணி மைத்ரி குணரத்ன, அசாத் சாலி மற்றும் ரஜித் கீர்த்தி தென்னகோன் ஆகியோர், ஏப்ரல் 17 அன்று வெளியிட்ட ஒரு ஊடக அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளனர். "மன்னாரில் நடந்த ஒரு பொதுக் கூட்டத்தில் இரண்டாவது முறையாக இந்த அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இது வாக்கு மோசடி. இது மக்களை தவறாக வழிநடத்துகிறது. இது எந்த அடிப்படையும் இல்லாத அறிவித்தலும் கூட". மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் குழுக்களுக்கு உள்ளூராட்சி மன்றங்களை சுதந்திரமாக ஆட்சி செய்யும் நிலைமை இருக்க வேண்டும் எனக் கூறும் மூன்று முன்னாள் ஆளுநர்கள், ஆட்சிக்கு வந்த பின்னர் எதிர்க்கட்சியில் இருந்தபோது தெளிவாகத் தெரிந்த ஜனநாயக விழுமியங்களை அழிக்கும் அதிகாரம் அரசாங்கத்திற்கு இல்லை என்பதை தற்போதைய ஆட்சியாளர்களுக்கு நினைவூட்டியுள்ளனர். "அரசியலமைப்பு மற்றும் சட்டங்களால் அவருக்கு வழங்கப்பட்ட பொறுப்புகளை நிறைவேற்ற ஜனாதிபதி கடமைப்பட்டுள்ளார். வாக்கு வற்புறுத்தல் நிறைவேற்று அதிகாரம் அல்ல." தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பிரச்சாரம் தொடர்பான தேர்தல் சட்டங்களை எவ்வாறு மீறியுள்ளது என்பதையும் மூவரும் தங்கள் ஊடக அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளனர். "தேசிய மக்கள் சக்தியால் அச்சிடப்பட்டு விநியோகிக்கப்பட்ட துண்டுப்பிரசுரத்தில், 'பிரதேச சபை தற்போதுள்ள அரசாங்கத்திடமிருந்து நிதி கிடைக்கின்றது. பிரதேசத்திற்காக மற்றொரு கட்சி ஆட்சிக்கு வந்தால், ...........' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இது ஒரு அப்பட்டமான பொய். பிரச்சாரம் தொடர்பான தேர்தல் சட்டங்களை மீறுவதாகும்." நாடாளுமன்றத்தில் அதிகாரம் வைத்திருக்கும் குழு உள்ளூராட்சி அரசாங்கத்திலும் அதிகாரத்தை வைத்திருக்க வேண்டும் என்பது ஒரு மோசமான அரசியல் நடைமுறை என, மூன்று முன்னாள் ஆளுநர்களும் கருதுகின்றனர், மேலும் இது மக்களின் இறையாண்மையை மீறுவதாகும் என அவர்கள் கூறுகிறார்கள். "உள்ளூர் அரசாங்கங்கள் மக்கள் வாக்குகளால் உருவாக்கப்படுகின்றன. அதன் பிரதிநிதிகளுக்கு இருக்கும் அதிகாரம் அமைச்சரவை அமைச்சர்களுக்குக் கூட இல்லை. மக்கள் வாக்குகளால் தெரிவு செய்யப்பட்ட எந்தவொரு நிறுவனத்திலும் எந்த நாகரீக ஆட்சியாளரும் நிதிக் கட்டுப்பாடுகளை உருவாக்க முடியாது. உள்ளூராட்சி அரசாங்கம் என்பது மக்களின் அன்றாட வாழ்க்கைக்கு மிக முக்கியமான வசதிகள் வழங்கப்படும் இடமாகும். அது அரசியலிலிருந்து விடுபட்டு மக்களின் நலனுக்காக மாத்திரமே இருக்க வேண்டும். நாடாளுமன்றத்தில் அதிகாரம் வகிக்கும் குழு உள்ளூராட்சி மன்ற அரசாங்கத்திலும் அதிகாரத்தை வைத்திருக்க வேண்டும் என்பது ஒரு மோசமான அரசியல் நடைமுறை. இது மக்களின் இறையாண்மையை மீறுவதாகும்." உள்ளூர் அரசாங்க நிறுவனத்திற்குச் சொந்தமான முத்திரை வரி மற்றும் பிற நிதிகள் தடுக்கப்பட்டால், அவ்வாறு செய்யும் அதிகாரிக்கு எதிராக அழைப்பாணை பெற முடியுமென, நல்லாட்சி அரசாங்கத்தின் மூன்று முன்னாள் ஆளுநர்களும் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பொது நிதி குறித்து தீர்மானம் எடுப்பவராக ஜனாதிபதி வெளியிட்ட கருத்து, 'வாக்காளர்கள் மீது தேவையற்ற தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்' என தேர்தல் கண்காணிப்புக் குழு ஒன்று தெரிவிக்கின்றது. "தேசிய மக்கள் சக்திக்கு அதிகாரம் இல்லாத உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு நிதி வழங்கப்படமாடடாது என நேரடியாகக் கூறப்படவில்லை என்றாலும், அது உள்ளூராட்சித் தேர்தல்கள் கட்டளைச் சட்டத்தின் பிரிவு 82 ஐ மீறுகிறது. தேவையற்ற செல்வாக்கு இருப்பதாகத் தெரிகிறது, அதாவது, வாக்காளரின் சுயாதீனமான தெரிவில் தாக்கம் செலுத்துகிறது" என, சுதந்திரமானதும் மற்றும் நியாயமானதுமான தேர்தல்களுக்கான மக்கள் செயற்பாடு (PAFFREL) வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் ஜனாதிபதி இதுபோன்ற கருத்துக்களை வெளியிடமாட்டார் என, அந்த அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி, நம்பிக்கை தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/212366
3 months 2 weeks ago
Fixing என்று இல்லை. ஒரு வித, கொடுக்கல் வாங்கல் என்ற தொனியில்தான் எழுதியிருக்கிறார். ஊகம்தான். ஆகா. அந்தக் குரங்குப் படமே மிச்சக் கதையைச் சொல்லுது. சாராம்சத்துக்கு நன்றி.
3 months 2 weeks ago
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பு திகதிகளில் மாற்றம் எதிர்வரும் 22 ஆம் திகதி ஆரம்பமாகவிருந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பு சில தினங்களுக்கு பிற்போடப்பட்டுள்ளது. இதன்படி 24ஆம் மற்றும் 25ஆம் திகதிகளில் உள்ளூராட்சி மன்றங்களுக்கான அஞ்சல் மூல வாக்களிப்புகள் நடைபெறும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. முன்னதாக 22ஆம், 23ஆம் திகதிகளில் அஞ்சல் மூல வாக்கெடுப்பு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த போதும், நிராகரிக்கப்பட்ட வேட்பு மனுக்கள் தொடர்பான தீர்ப்பின் நிமித்தம், அந்தத் திகதிகளில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. எனினும் அஞ்சல் மூல வாக்களிப்புக்காக ஒதுக்கப்பட்ட மேலதிக நாட்களான 28ஆம் மற்றும் 29ஆம் திகதிகளில் மாற்றம் ஏற்படுத்தப்படவில்லை என்றும் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. https://thinakkural.lk/article/317118
Checked
Fri, 08/08/2025 - 03:39
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed